All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

உயிரே நீ என்ன செய்க...
 
Notifications
Clear all

உயிரே நீ என்ன செய்கிறாய்..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
1789135801-IMG-20260911-WA0000.jpg
 
 
ஹாய் டியர்ஸ் 
 
 
உயிரே நீ என்ன செய்கிறாய் கதை இன்று முதல் ரீரன் செய்யப்படுகிறது... கதையை தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள்..
 
 
கதை முடிந்தவுடன் மறுநாள் லிங்க் ரிமூவ் செய்யப்படும்..
 
 
புரிதலுக்கு நன்றி❤️
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
 கவி சந்திரா 

This topic was modified 2 weeks ago by Kavi Chandra
This topic was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 1
 
 
ஓம் ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா
நாள்தோறும் உன்னையே நான் பாட வேண்டும்
நான் பாட உந்தன் அருள் ஆசி வேண்டும்
 
 
முழுதாகப் பத்து வருடங்களுக்குப் பிறகு இந்திய மண்ணில் கால் பதித்தவன் தனக்குப் பின்னால் கேட்ட ஒலியில் திரும்பி பார்க்க...
 
 
வயதானவர் ஒருவரின் அலைபேசி அவருக்குத் தன் இருப்பை நினைவுபடுத்த அதை ஆன் செய்தவர், “ஆமா கண்ணு... டெல்லி வந்து இறங்கிட்டேன்...” என அந்தப் பக்கமிருந்த யாரோடோ பேசியபடி வந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அதைக் கண்டவனின் மனதில் ‘இந்திய மனம்’ என்ற எண்ணம் தோன்றிய நொடி முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது. அதேநேரம் வேறு ஏதோ நினைவு எழுந்ததில் முகம் ஒரு நொடி கசங்கியது. உடனே இத்தனை வருட அனுபவத்தில் அதை மறைத்தபடி கம்பீரமான தன் வேக நடையைத் தொடர, பத்திரிகையாளர்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள முயலவும், நொடியில் அவனுடைய பாதுகாவலர்கள் ஒரு பாதுகாப்பு அரண் போல் சுற்றி நின்று யாரும் அருகில் வராமல் தடுத்தனர்.
 
 
அவன் பிசினஸ் டைகூன் அபய் வரகுணன், தன் தொழில் சாம்ராஜியத்தை இந்திய மண்ணிலும் நிலை நாட்ட தன் ஜாகையைத் தற்போதைக்கு இந்தியாவிற்கு மாற்றிக் கொண்டு இங்கு வந்துள்ளான்.
 
 
தன்னைத் தொடர்ந்தபடி கேள்விக்கணைகளைத் தொடுத்துக் கொண்டு இருந்த பத்திரிகையாளர்களின் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் விறுவிறுவெனச் சென்று கொண்டிருந்தவன் தன் பின்னாலேயே கேள்வி கேட்டபடி ஓடி வந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு, “கமான் க்விக்... ஷார்ட்டா கேளுங்க... " என நின்றான்.
 
 
"திடீரென்று நீங்க இங்கே தொழில் தொடங்க என்ன காரணம்...?!" எனக் கேட்கபட,
 
 
"இது என் தாய் நாடு... அது தான் காரணம்... " என்று ஒரு சிறு புன்னகையோடு கூறினான்.
 
 
"இத்தனை வருஷமா இங்கே வராம இருந்த நீங்க இப்போ வந்திருக்கறதில் எதாவது உள்நோக்கம் இருக்கா...?"
 
 
“அப்படி என்ன இருக்கும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க...?” என்று கேள்வியை அவர்கள் பக்கம் திருப்பியவன், "நேரம் தான் காரணம்... அப்போ கிடைக்கலை... இப்போ கிடைச்சது..." என்றான். ஆனால் அவன் மனசாட்சியோ ‘அப்படியா...?!’ எனக் கேள்வி எழுப்பியது.
 
 
“ஒரு முறை நீங்க இந்தியா வர மாட்டேன்னு சொன்னதா நியூஸ் வந்ததே...?” என ஒருவர் கேட்க, தன் ரேபான் கிளாஸை ஒற்றைக் கையால் கழற்றி அவரைப் பார்த்தவன், "வர மாட்டேன்னு தான் சொன்னேன்... வரவே மாட்டேன்னு சொல்லலையே..." என்றவன் கண்ணாடியை கண்ணுக்கு கொடுத்தபடியே தன் வேக நடையோடு டெல்லி ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினான்.
 
 
அன்று இரவு தான் தங்கியிருந்த அந்த நட்சத்திர உணவு விடுதியில் இரவு உணவுக்கான ஆர்டரை கொடுத்து விட்டு தன் கையில் இருந்த போனில் கண்களைப் பதித்து இருந்த அபய்யின் கவனத்தைப் பக்கத்து மேஜையில் இருந்து வந்த மழலை குரல் கலைத்தது.
 
 
அதில் நிமிர்ந்து அங்குப் பார்க்க, குண்டு குண்டு கண்களும் புசுபுசு கன்னங்களுமாக ஒரு மூன்று வயது அழகிய தேவதை அமர்ந்து கொண்டு தனக்கு எதிரில் அமர்ந்திருந்த தன் தாயிடம் ஏதோ சந்தேகங்கள் கேட்பதும் அதைப் பற்றித் தானே ஆராய்ச்சி செய்வதுமாக தன் மழலை மொழியில் மிழற்றிக் கொண்டிருந்தது.
 
 
தற்செயலாகத் திரும்பி பார்த்த அபய்யால் அதன் பிறகு அந்த ஏஜ்சலின் மேல் பதித்த பார்வையைத் திருப்ப முடியாமல் போக, ஒரு சின்னச் சிரிப்போடு அதன் சேட்டைகளைத் தன்னை மறந்து ரசித்திருந்தான்.
 
 
"வாட் ஹப்பேண்ட் அபய்... இந்தியாவில் கால் வெச்சதும் அடுத்தவங்களை வேடிக்கை பார்க்கற பழக்கம் உனக்கும் வந்துடுச்சா...?!" எனத் தனக்குள்ளேயே கேட்டு கொண்டவன், பார்வையைத் திருப்ப முயன்றாலும் அந்தச் சின்னச் சிட்டு அதற்கு விடவில்லை.
 
 
அந்த அழகிய பட்டாம்பூச்சியை ரசிப்பதற்கு அதற்கு முன்பு அமர்ந்திருந்த அவரின் தாய் தடையாக இருக்க... தன் இருக்கையைச் சற்று பின்னோக்கி இழுத்து போட்டு குட்டி தேவதையை ரசிக்கும்படி வாகாக அமர்ந்து கொண்டான் அபய்.
 
 
ஆங்கிலம் இந்தி தமிழ் என்று மூன்று மொழி கலந்து அது மிழற்றுவதைக் காண காண திகட்டவில்லை அபய்க்கு, "மம்மா..." என அந்தக் குட்டி அழைக்கவும், "ம்ஹூம் அம்மா..." என அதன் தாய் திருத்த,
 
 
‘பரவாயில்லையே இப்போது கூடத் தாய் மொழியை விடாது இருக்காங்களே...!’ என்ற ஆச்சரியமும் அப்பெண்ணின் மேல் ஒரு நல்ல எண்ணமும் தோன்றியது.
 
 
"ஹான்... ஹான்... ஒகே ஒகே..." என்ற குட்டி, மேஜை மேல் இருந்த தன் தாயின் போன் ஒலிப்பதை பார்த்து "அம்மா போன்..." எனப் போன் அழைப்பதை சுட்டி காட்டியது. 
 
 
அதை எடுத்து ஆன் செய்தவர், "ஆமா டின்னர் தான் சாப்பிடறோம்... இல்லை வொர்க் இருந்தது அதான்..." எனப் பேசிக் கொண்டு இருந்தவர், "அதானே பார்த்தேன்... இன்னும் கேட்கலையேன்னு நினைச்சேன், இந்தா உன் பேபியையே நீ கொஞ்சு..." என்றபடி போனை நீட்ட, அதற்காகவே காத்திருந்த சிட்டு பாய்ந்து அதைப் பறித்துக் காதில் வைத்து "பப்பா..." என்றது குதுகலத்தோடு.
 
 
இருவரும் ஏதேதோ பேசி கொண்டு இருக்க, "நோ பப்பா... மம்மா தான்..." எனத் தொடங்கிய குட்டி "ம்ம்..." என அதன் தாய் போலியாக முறைக்கவும், நாக்கை கடித்து முகத்தைச் சுருக்கி, "அம்மா..." எனத் திருத்தி கொண்டே தன் பேச்சை தொடர்ந்தது.
 
 
அதனிடம் சொல்லி கொண்டு அதன் தாய் கை கழுவ எழுந்து செல்லவும், குட்டி போனை வைத்தவுடன் அதன் முன் சென்று நின்றிருந்தான் "ஹாய்..." என்ற அழைப்போடு அபய்.
 
 
அவனை நிமிர்ந்து ‘யார் நீ?’ என்பது போலப் பார்த்து விட்டு மீண்டும் சாப்பிட, "உங்க பேர்..." எனக் கேட்டவனை கண்டு முகம் சுருக்கி கோபத்தோடு பார்த்தவாறே,
 
 
"ஸ்டேன்ஜர்ஸ்கிட்ட எல்லாம் பேசக்கூடாதுன்னு எங்க மம்மா சொல்லியிருக்காங்க..." எனச் சொல்ல, "அம்மா..." எனத் திருத்தியவனை, ‘உனக்கெப்படி தெரியும்!’ என்பது போல் பார்த்து வைத்தது.
 
 
மனதிற்குள் அவரை நினைத்து மெச்சி கொண்டவன், "ஆனா எங்க அம்மா அப்படியெல்லாம் எனக்குச் சொல்லி தரலை... ஐம் அபய்... அபய் வரகுணன்..." என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு அதன் முன் கைகளை நீட்ட, ‘நீ யாரா வேணா இருந்துட்டு போ...’ என்பது போல முகத்தைத் திருப்பிக் கொண்டது.
 
 
அதன் செய்கையில் புன்னகை வர, இதுவரை தன்னைக் கண்டதும் வியப்பதும், மேலே விழுந்து பழகத் துடிப்பதுமாகவே பார்த்து பழகியவனுக்கு இந்தக் குழந்தையின் செயல் மிகவும் சுவாரசியமாக இருந்தது. ஏனோ அந்த ஏஜ்சலை கண்ட நொடியிலேயே அவனுக்கு அவ்வளவு பிடித்துப் போனது. ஏதோ ஒன்று அவனை அந்தக் குழந்தையை நோக்கி இழுத்தது.
 
 
அப்போது அந்தக் குட்டி தேவதையின் அம்மா திரும்பி வர, அவருக்கு வழி விட்டு ஒதுங்கியவன், அவர் முகம் கண்டு மெலிதாக அதிர்ந்தான். ஆம் அங்கு நின்று கொண்டு இருந்தது மிர்னாலினி, அவனின் மினி.
 
 
இங்கு இப்படி ஒரு சந்திப்பை இத்தனை வருடங்கள் கழித்துச் சற்றும் எதிர்பார்த்திராதவன் ஒரு நொடி செய்வதறியாது திகைத்து நின்றாலும் பின் தன்னை மீட்டுக் கொண்டு வேகமாக அங்கிருந்து விலகி சென்றுவிட்டான்.
 
 
தன் இடத்தில் சென்று அமர்ந்தவனுக்கு மீண்டும் அந்தப் பக்கம் பார்க்க சற்றும் எண்ணம் இல்லை. ஆனால் தன்னையும் மீறி தன் கண்கள் அந்தப்பக்கம் பாய முயல்வதைத் தடுக்க எண்ணியவன், அந்த மேஜையின் மற்றொரு இருக்கையில் அவர்கள் அமர்ந்திருந்ததற்கு நேர் எதிர்ப்புறமாகப் பார்த்தபடி அமர்ந்து கொண்டான்.
 
 
மனம் முழுவதும் இருந்த அதிர்வும் திடுக்கிடலும் நீங்கிய பிறகே அந்த வித்தியாசம் அபய்யின் மனதில் பதிந்தது. ஆம் ஒரு நொடியே ஆனாலும் தனக்கு எதிர்ப்பாராமல் அவளைக் கண்டதும் எழுந்த அதிர்வு அவளுக்கு ஏன் எழவில்லை என்பது தான் அது.
 
 
ஒருவேளை தன்னைக் கவனிக்கவில்லையா...?! என்று என்னும் போதே, ‘இல்லை தான் விலகி வழி விடக் காத்து நின்றிருந்தாளே அப்போது நிச்சயம் பார்த்து தான் இருப்பாள்...’ என்ற எண்ணம் எழுந்தது.
 
 
‘மறந்துவிட்டு இருப்பாளோ...?!’ என நினைத்தவனுக்கு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. ‘அத்தனை எளிதில் மறக்கக் கூடிய உறவா இது...?! நீண்ட நெடிய பத்து வருடங்கள் தான் என்றாலும், நிச்சயம் மறந்து இருக்க வாய்ப்பில்லை’ என்கிற ரீதியில் எண்ணம் செல்ல, அதையே சிந்தித்துக் கொண்டு இருந்தவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகியது.
 
 
‘தன்னைப் போல் அவள் எதிர்ப்பாராமல் தன்னைக் காணவில்லை, இதற்கு முன்பே தன்னைப் பார்த்து விட்டு இருக்கிறாள்...!” எனச் சரியாகக் கணித்தான்.
 
 
நிஜமும் அது தான், அபய் இந்தியாவில் தொழில் தொடங்க போவதாக அறிவித்ததெல்லாம் மிர்னாவிற்குத் தெரியாது தான், ஆனால் இன்று காலை வந்து இறங்கியவனைச் சுடசுட பேட்டி கண்டு அத்தனை தொலைக்காட்சிகளும் ஒளிப்பரப்பியதை கண்டவள்,
 
 
இந்தியாவில் வேறு ஏதாவது மாநிலத்தில் இருந்தாலாவது இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு எனலாம், ஆனால் இருவரும் டெல்லியில் இருக்கும் போது எதிர் எதிரே எப்போது வேண்டுமானாலும் சந்திக்க வேண்டி வரலாம் என்று புரிந்து ஓரளவிற்குத் தன்னை அதற்குத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டாள்.
 
 
ஆனால் அப்படி ஒரு சந்திப்பு இன்றே நிகழும் என்பதும் இருவரும் தங்கி இருப்பது ஒரே ஹோட்டல் என்பதும் அவளுமே எதிர்ப்பாராதது தான்.
 
 
அவளும் அவளின் குட்டி தேவதை சுபிக்ஷாவும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் தான் ரெஸ்டாரண்ட்னுள் நுழையும் அபய்யை கண்டாள் மிரு.
 
 
முதலில் சற்று திடுக்கிட்டவள், காலை முதலே ஓரளவு தயார்ப்படுத்தி வைத்திருந்த மனதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டாள். முன்பு இருந்தது போல அபய்யை கண்டதும் கோபம் கொள்ளவோ இல்லை சண்டையிடவோ இப்போது தோன்றவில்லை அவளுக்கு. இங்கு இப்படி ஒருவன் இருப்பது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளாமல் கடந்து போகவே எண்ணி இருந்தாள்.
 
 
உணவகத்தில் இருக்கும் எத்தனையோ நபர்களில் இவனும் ஒருவன் என்றே எண்ணி அதைச் செயல்ப்படுத்த நினைத்து இருந்தவள் கொஞ்சமும் எதிர்ப்பாராதது அபய் சுபிக்ஷாவிடம் பேசிக் கொண்டு இருந்தது.
 
 
அதைக் கண்டு அதிர்ந்தவள், அபய் தன் குழந்தையிடம் பேசுவதை விரும்பாமல் அதைத் தடுப்பதற்காகவே அவசரமாக அவர்களை நெருங்கினாள்.
 
 
அதே நேரம் தன்னை எதிர்ப்பாராமல் கண்டதும், அபய்யின் கண்களில் வந்த திடுக்கிடலை கண்டு கொண்டவளின் மனம் திருப்தியாக உணர்ந்தது.
 
 
அந்த உணர்வு எதனால் வந்தது என்று அவளுக்குமே ஒரு தெளிவு இப்போது வரை இல்லை... அபய் இன்னும் தன்னை மறக்காமல் இருக்கிறான் என்பதனால் வந்த உணர்வா...?! இல்லை தன்னைக் கண்டதும் அதிரும் அளவிற்கு அவனைப் பாதித்து இருக்கிறோம் என்ற நினைவு தந்த திருப்தியா...?!
 
 
அது எதுவாகவாவது இருந்து விட்டு போகட்டும், ஆனால் வெகு வருடங்களுக்குப் பிறகு மிருவின் மனம் ஒரு நிம்மதியை உணரத்தான் செய்தது.
 
 
அபய் என்னதான் அவர்கள் பக்கம் பாய முயன்ற பார்வையைப் பெரும்பாடுபட்டுத் தடுத்தாலும் அவர்களை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கும் மனதை அவனால் தடுக்க முடியவில்லை.
 
 
இந்தியா செல்வது என்ற முடிவை எடுத்த போதே சில பல நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது, சிலரை நேரில் சந்திகும் நிலை வரலாம் என்று .எண்ணி அப்படி வரும் போது அதை எப்படி எதிர் கொள்ளவது என்றெல்லாம் மனதை போட்டு அலட்டிக் கொள்ளாமல் அப்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்றே நினைத்து இருந்தவன் வந்த அன்றே அதுவும் இவளையே நேரில் சிந்திப்போம் என்று கனவிலும் எண்ணவில்லை..
 
 
அதுவும் இப்படி ஒரு சூழ்நிலையில், குழந்தையோடு இருக்கும் அவளைப் பார்க்கும் போது மனதில் ஒரு பக்கம் ஏதோ ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாலும் இன்னொரு பக்கம் லேசாக ஏதோ ஒன்று கனமாக அழுத்துவது போல இருந்தது.
 
 
இது தான் அவனின் ஆழ்மன எண்ணமாகவும் ஆசையாகவும் இத்தனை நாட்களாக இருந்தது என்றாலும், அதை நேரில் காணும் போது ஏனோ மனம் சற்று கனக்க தான் செய்தது.
 
 
அவளின் நினைவுகள் மணலில் எழுதிய எழுத்துக்கள் அல்லவே காற்று வந்து கலைத்து விட்டுச் செல்ல, கரும்பலகையில் கிறுக்கிய கிறுக்கல்களும் அல்லவே துணியைக் கொண்டு துடைத்து அழித்து விட, அது அவனின் மனமென்னும் கல்வெட்டில் செதுக்கிய சிற்பம் அல்லவா...! அத்தனை எளிதாக அழிக்கவோ மறக்கவோ முடியாது.
 
 
ஆரம்பத்தில் தன்னைத் துரத்தும் அவளின் நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவித்தவன் தன்னைத் துரத்தும் அந்த நினைவுகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அதிகம் ஓடி ஓடி உழைக்கத் தொடங்கினான்.
 
 
அதோடு சேர்ந்து வேறு ஒரு வைராக்கியமும் அவனை உழைத்து முன்னேற வேண்டும் என்ற வெறியை கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டதில், மினியின் நினைவுகள் சற்று இல்லை ரொம்பவே பின்னுக்குத் தள்ளப்பட்டது என்னவோ உண்மை தான்.
 
 
பிறகு உண்மையிலேயே வேலைகளில் மூழ்கி அவளை மறக்க துவங்கியிருந்தவனுக்கு இல்லையில்லை அப்படி எண்ணி இருந்தவனுக்கு ஓய்வாக அமரும் ஒரு சில நிமிடங்கள் கூட மனதின் ஓரம் மின்னி மறையும் அந்த முகம் அது அத்தனை எளிதல்ல என்பதைப் படம் பிடித்துக் காட்டியிருந்தது.
 
 
மனதோடு நடத்திய பல வருட போராட்டத்திற்குப் பிறகு அவளுக்கு என்று ஒரு வாழ்க்கை அமைந்து சந்தோஷமாக வாழ மாட்டாளா என்ற ஏக்கமும் கவலையும் மனதை அறிக்கத்தான் செய்தது. அப்படி அமைய வேண்டும் என்பதும் தான் அவன் ஆசையாக இருந்தது.
 
 
ஆனால் அப்படி நடந்து தான் இருக்கிறது என்பது நிதர்சனமாய்க் கண் முன் தெரிய வர, அதைக் கண்டு சந்தோஷத்தில் குதுகலிக்க வேண்டிய மனமோ, கொஞ்சம் ஏதோ ஒரு புரியாத உணர்வில் துவள தான் செய்தது.
 
 
‘இப்போ ஏன் இப்படி இருக்க...?! வேற நீ என்ன எதிர் பார்த்த உனக்காகப் பத்து வருஷமா கிழக்கே போகும் ரயில் ராதிகா போல ரயில் பின்னே எழுதாம பிளைட் பின்னே எழுதி அனுப்பிக் காத்து இருக்கணும்னு நினைச்சியா...?!’ என அவன் மனசாட்சி நக்கல் செய்ய,
 
 
‘சேச்சே... அவளுக்கு நல்ல வாழ்கை அமையணும்னு தான் நான் நினைச்சேன்...’ என அதற்குப் பதிலளித்துக் கொண்டு இருந்தவனை,
 
 
“ஹே... பப்பா...” என்ற அந்தக் குட்டி தேவதையின் குரல் கலைத்தது. அதில் தன் வைராக்கியத்தை எல்லாம் விட்டு ஆர்வமும் படபடப்புமாகத் திரும்பி அவர்களைப் பார்த்தான் அபய்.
 
 
அங்கு இருபத்தி எட்டு வயதிற்குள் மதிக்கக் கூடிய ஒரு அழகிய இளைஞன் வட இந்திய தோற்றத்தோடு நின்றிருந்தான். அந்தச் சின்னச் சிட்டு அவன் மீது தாவி குதித்து ஏறி முகமெங்கும் முத்தமழை பொழிய... அதைக் கண்ட அபய்யின் மனமெங்கும் ஏக்கம் அலை அலையாகப் பரவியது.
 
 
‘ரோஹித்... வாட் அ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்...” என்று சின்னவளுக்குக் குறையாத குதுகலத்துடன் பெரியவளும் குதுகலிக்க... அதைக் கண்ட அபய்யின் கண்களில் ஒரு சிறு வலியும மனதில் வெறுமையும் படர்ந்தது.
 
 
“உங்க ஞாபகமாவே இருந்தது அதான்...” என்றவாறே ரோஹித் அங்கிருந்து போகலாமா என்பது போலத் தலையசைப்பில் கேட்க, பதிலுக்குத் தலையசைத்துத் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்ட மிரு,
 
 
“உங்கன்னு பொய் சொல்லாத, உன் பேபி ஞாபகம்னு சொல்லு...” என நொடித்துக் கொண்டாள்.
 
 
“ஹே நிஜமா பெரிய பேபி ஞாபகமும் தான் டா... கிளம்பி போய் நாலு நாள் ஆச்சே...” என்று கூறிக் கொண்டு வந்தவன் ஒரு சிறு இடைவெளி விட,
 
 
அவனை நம்பாத பார்வை பார்த்த மிரு போலியாக முறைக்க, “எங்க யாருகிட்ட வம்பு இழுத்து வெச்சு இருக்காளோன்னு ஒரே பக்கு பக்குன்னு இருந்ததா... அதான் அடிதடி வரை போறதுக்குள்ள கிளம்பி வந்துட்டேன்...” என்று சிரிக்காமல் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டு இருந்தாள் மிரு.
 
 
“சுஷு... உங்க அம்மா காளி அவதாரம் எடுக்கறதுக்குள்ள நாம எஸ் அகிடுவோமா...?” என்று குழந்தையிடம் பேச்சு வார்த்தை நடத்தி கொண்டு இருந்தவனையும் அவர்களுக்குள் இருந்த அன்னியோனியத்தையும் உணர்ச்சி துடைத்த கண்களோடு பார்த்துக் கொண்டு இருந்தான் அபய்.
 
 
இதற்கு மேல் அங்கு இருக்கவோ அதைப் பார்க்கவோ விரும்பாதவன் அவள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பாது விலகி செல்ல முயல, அத்தனை நேரம் அவனுக்கு எதிராகப் பேசிய மனசாட்சியோ, ‘உன்னை நினைவு இல்லாதது போல நடந்து கொண்டவளை அப்படியே விட்டு விட்டா செல்வது...?’ என்று கேள்வி எழுப்பியது.
 
 
அதை ஒதுக்கி தள்ளி எழுந்து வெளியே செல்ல முயன்றவனின் கால்கள் அவன் அனுமதி இல்லாமல் அவர்களை நோக்கி சென்றது. அதற்குள் அபய்யின் இயல்பு குணம் தலை தூக்கி இருக்க...
 
 
கதவை நோக்கி நகர்ந்தவர்களின் வழியை மறித்தது போல வந்து நின்றவன், “ஹாய் டார்லிங்...” எனக் கண்களில் டன்டன்னாகக் குறும்பும் இதழில் விரிந்த புன்னகையுமாகக் கூற, இதைக் கொஞ்சமும் எதிர்ப்பார்த்திராத மிரு அதிர்ந்து நின்றவள், ஒரு திடுக்கிடலோடு ரோஹித்தை திரும்பி பார்த்தாள்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 2
 
 
“ஹாய் டார்லிங்...” என இப்படித் திடிரெனத் தன முன் வந்து அபய் நிற்பான் எனக் கொஞ்சமும் எதிர் பார்த்திராதவள், உச்சபட்ச அதிர்வோடு திரும்பி தன் அருகில் இருந்த ரோஹித்தை பார்க்க...
 
 
அவனும் அதிர்வும் குழப்பமுமாக அபய்யை தான் புரியாத பார்வை பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான். என்ன செய்வது எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் விழித்தவள், ‘என்ன நடந்தாலும் அபய்யை யார் என்றே தெரியாது எனச் சமாளித்து விட வேண்டும்... ரோஹித்திற்கு மட்டும் என் கடந்த கால வாழ்க்கை தெரிந்தது அவ்வளவு தான், நான் செத்தேன்...’ என்ற ரீதியில் யோசித்தவள்,
 
 
‘அவன் அப்படி அழைத்து குழந்தையை என்று சொல்லி சமாளித்துவிடலாமா...?’ எனச் சட்டெனத் தோன்றிய எண்ணத்தோடு, திரும்பி அபய்யை பார்க்க... அந்த விடாகண்டனோ மிருவிற்கு அந்த வாய்ப்பை கூட அளிக்காமல் அவளையே இமைக்காமல் பார்த்தப்படி நின்று கொண்டு இருந்தான்.
 
 
அதில் இருந்த ஒரு வாய்ப்பும் தவறிப் போனதில் ‘வடை போச்சே’ என்பது போல மிரு முழிக்க, அதற்குள் அபய் “ஹொவ் ஆர் யூ மினி டார்லிங்...” என வேறு கேட்டு இருந்தான்.
 
 
அபய்யின் வாய் மொழியில் விளிக்கப்படும் இந்த மினி டார்லிங் என்ற வார்த்தைகளுக்காக ஒரு காலத்தில் காத்திருந்ததும், அப்படி அவன் விளிக்கும் போது வண்ணத்துப் பூச்சியைப் போல் அவன் முன் சென்று நிற்பதும் மனதில் நிழலாட, அதற்கு நேர்மாறான இன்றைய நிலையின் நிதர்சனம் புரிய, மிரு பதில் அளிப்பதற்குள்
 
 
ரோஹித், “மினி... சாரி இவங்க மினி இல்லை மிர்னா...” என நீ யாரையோ நினைத்துக் கொண்டு தவறாகப் பேசறீங்க என்று அபய்யிடம் விளக்கம் அளிக்க முயன்றான்.
 
 
‘அட விளக்கெண்ணெய்... ஆளு தான் மீசை தாடியெல்லாம் இல்லாம சும்மா நெய் குழந்தை மாதிரி இருக்கான்னு பார்த்தா... ஆளும் பச்சை புள்ளையா இருக்கியேடா...!!’ என மனதிற்குள் ரோஹித்தை கழுவி ஊற்றியவன் பதில் அளிப்பதற்குள், ரோஹித் எடுத்துக் கொடுத்த பாயிண்ட்டை பிடித்துக் கொண்ட மிரு,
 
 
“எஸ்... நீங்க வேற யாரையோ நினைத்து என்கிட்டே பேசறீங்கன்னு நினைக்கறேன் மிஸ்டர்...” எனவும், “எக்சாட்லி... நானும் அதைத் தான் அவருக்குப் புரிய வைக்க நினைத்தேன் பேபி...” எனக் கூறியவாறே ரோஹித் மிருவை பார்த்து புன்னகைத்தான்.
 
 
அவனின் அந்தப் பேபி என்ற அழைப்பு மேலும் அபய்யை கடுப்பாக்க, “நோ... நோ... ஷி ஸ் மை லவ்... இது லவ்வர்ஸ் கோரல், உங்களுக்குப் புரியாது... மேடம் என் மேல கோபமா இருக்காங்க, அதான் என்னை யாருன்னே தெரியாதுன்னு சொல்றாங்க... டோன்ட் வொர்ரி நான் பார்த்துக்கறேன்... நீங்க கொஞ்சம் அப்படி ஓரமா ஒதுங்கி நின்னு வேடிக்கை பாருங்க... மேடம் வாயாலேயே ஒத்துக்க வைக்கறேன்...” என்றவன் மிருவை நோக்கி இரண்டடி எடுத்து வைக்க,
 
 
மிரு இரண்டடி பின்னால் நகர்ந்தால் மிரட்சியோடு, அபய்யை பற்றி நன்கு அறிந்தவள் என்பதால் அவன் ஒரு முடிவுக்கு வந்து விட்டால் அதிலிருந்து பின்வாங்க வைப்பதோ சமாளிப்பதோ அவ்வளவு எளிதல்ல என்பது புரிய, இப்போது ஏன் இந்த அதிரடி என்று புரியாமலும் எப்படித் தப்பிப்பது எனத் தெரியாமலும் வேறு வழியின்றி ரோஹித்தை பார்த்தாள்.
 
 
அதுவரை இருவரையும் குழப்பத்தோடு மாறி மாறி பார்த்தப்படி நின்றிருந்த ரோஹித் “பாஸ்... வெய்ட், வெய்ட்... வாட், லவ்வர்ஸா... ஹா ஹா ஹா...” என வாய் விட்டு சிரித்தவன், “அப்போ நிச்சயமா இந்தப் பீஸ் நீங்க நினைக்கற ஆள் இல்லை... அதுக்கு நான் கேரண்டி, பிகாஸ் மேடமுக்கு லவ்னாலே பிடிக்காது...” எனப் பேசிக் கொண்டு சென்றான்.
 
 
பின் மிருவின் பக்கம் திரும்பி “அது என்ன சொல்லுவ அடிக்கடி, “ஆஹான்... லவ் எனக்கு ஆல் லாங்குவேஜ்லையும் பிடிக்காத ஒரே வார்த்தை... ஆஆங்ங்...” எனக் கூறி சிரித்தான்.
 
 
‘இப்போ இது ரொம்ப முக்கியம், நீ தனியா வா...’ என மனதிற்குள் பல்லைக் கடித்தப்படி ரோஹித்தை அர்சித்துக் கொண்டு நின்றிருந்தாள் மிரு.
 
 
“ஒன்பது வருஷமா இவ கூட இருக்கேன் பாஸ்... என் லவ்வை சொன்ன அன்னைக்கு விட்டா பாருங்க ஒரு அடி, இப்போ வரை வலிக்குது... அதுல இருந்தே நான் டூ ஸ்டேப் பேக் தான்...” எனக் கன்னத்தைத் தடவியபடி பேசியவனை முறைத்த மிரு, ‘இவன் வேற மானத்தை வாங்கறான்...’ என எண்ணினாள்.
 
 
“ஆனா அப்பவும் நீங்க விலகினது போலத் தெரியலையே...?!” என அபய் ஒரு மாதிரியான குரலில் ரோஹித் கையில் இருந்த சுபிக்ஷாவையும், அவனை நெருங்கி நின்றிருந்த மிருவையும் பார்த்தப்படி கேட்கவும், “அதெப்படி சார் விலக முடியும், ஐந்து வருஷ காதலாச்சே... இவ கைல கால்ல விழுந்து சம்மதம் வாங்கறதுக்குள்ள எங்க ஸ்டேரைட்டா அறுபதாம் கல்யாணம் தானோன்னு நான் நினைச்சுப் பயந்தது எனக்குத் தானே தெரியும்...” என்றவன்,
 
 
சற்று தயங்கி “உங்களை ஒண்ணு கேட்கலாமா சார்...?” எனவும், “ம்ம்..” என அபய் ஆமோதிக்க, “நீங்க அபய்வரகுணன்... அம் ஐ ரைட்...” என ஒரு வித தயக்கத்தோடு கேட்க, “இதைக் கேட்கவா இவ்வளவு யோசிச்சிங்க... எஸ், ஐ ம் அபய்... ப்ளீஸ் டூ மீட் யூ...” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனுக்குக் கொஞ்சமும் ரோஹித்தின் மேல் கோபம் எல்லாம் இல்லை...
 
 
மினிக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்து விடாதா என்ற எதிர்ப்பார்ப்பு மட்டுமே பல நாட்கள் அவன் உறக்கத்தைத் தடை செய்து கொண்டு இருந்தது. அது இன்று கண் முன் சாத்தியமாகி இருப்பதைக் கண்டு அலைபுறுதலோடு இருந்த மனம் சற்று ஆசுவாசம் அடைந்ததென்னவோ நிஜம் தான்.
 
 
ஆனால் ஏதோ ஒன்றை தவறவிட்டது போன்ற ஒரு தவிப்பும் மனம் முழுவதும் படரத் தொடங்கி இருந்தது. இப்போதைக்கு அதைப் பற்றி எல்லாம் எண்ணாமல் ஓரம் தள்ளியவன், அங்கிருத்து நிச்சயம் விலகி தான் சென்று இருப்பான்.
 
 
அவள் வாழ்க்கைக்கு இடயூறாகவோ தடையாகவோ இருந்து விடக் கூடாது என்று..! ஆனால் அது அவனின் மினி குறைந்த பட்சம் அவனைக் கண்டதும் ஓடி வந்து பேசும் அளவிற்கு இப்போது இருவருக்குள்ளும் சூழ்நிலை சரி இல்லை என்றாலும், இயல்பாக ஒரே ஒரு பார்வை பார்த்திருந்தாலுமே போதும், அவள் வெளிப்படுத்திய அந்த அந்நிய பார்வை தான் அவனைப் பெரிதும் சீண்டிவிட்டது.
 
 
அதுவே அவளின் கண்களைச் சில நொடிகளாவது தன்னைப் பயத்தோடும் பதட்டத்தோடும் பார்க்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் தர, அதை உடனே செயல்ப்படுத்தினான்.
 
 
இது தான் அபய், தனக்குத் தோன்றுவதை வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் செயல்ப்படுத்துவான்.
 
 
சிறு குழந்தைகள் தனக்கு மிகவும் பிடித்த பொம்மையைச் சற்று வளர்ந்த பிறகு விளையாடாமல் அப்படியே வைத்து இருப்பர், சில வருடங்களில் வீட்டில் இருப்பவர்கள் வேறு யாருக்காவது கொடுத்து அதை அவர்கள் கையில் வைத்து விளையாடுவதைப் பார்க்கும் போது தன்னை மீறி அதன் மேல் உரிமை உணர்வு எழுமே...!!
 
 
அது போலத் தான், தான் பிரிந்து விட்டோமே அவள் வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும், என நினைத்தவன் தான். ஆனால் தன் பொருள் கை விட்டு போனதன் வலி இன்னும் அவனுக்கு மனதில் பதியவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் இப்போது அமையவில்லை, எனவே சாதரணமாகப் பேசி விட்டு செல்லவே முனைந்தான்.
 
 
இல்லை நல்லவேளை இதுவரை அப்படி ஒன்றை அபய் உணரவில்லை என்று நினைக்க வேண்டுமோ...? ஒருவேளை உணர்ந்து இருந்தால் சற்றும் யோசிக்காமல் மிருவை தூக்கிக் கொண்டு சென்றாலும் சென்றுவிடுவான்.
 
 
ஒரு சிறு அறிமுகத்திற்குப் பிறகு விடைப் பெற முயன்றவனை, “பாஸ் உங்க மினி...” எனத் தயக்கத்தோடு ரோஹித் இழுக்கவும், நக்கலான ஒரு பார்வையை மிருவை நோக்கி நொடிக்கும் குறைவான நேரம் பார்த்தவன்,
 
 
“நிச்சயம் இவங்க இல்லை...” எனப் பதிலளிக்க, “எப்படிச் சார் கண்டுபிடிச்சீங்க...?” என ஒரு ஆர்வத்தில் ரோஹித் கேட்டுவிட, ‘இப்போ அது ரொம்ப முக்கியம்...’ என்று மனதிற்குள் பல்லை கடித்தபடி நின்றிருந்தாள் மிரு.
 
 
இருவரும் பேசபேச, அவளுக்குத் தான் ரத்த அழுத்தம் எகிறியது. ஏனென்றால் அபய்யை பற்றி நன்கு தெரிந்தவள் என்பதால் அவன் எப்போது எப்படி நடந்து கொள்வான் என ஒரு முடிவுக்கு வர முடியாது என்று அறிந்து இருந்தவள்,
 
 
‘இதற்கு மேல் இவன் எதையும் பேசி சொதப்பிடும் முன் கிளம்பிவிட்டால் நல்லது’ என நினைத்து இருக்க, மிருவின் மனதின் தவிப்பை உணராது ரோஹித் மேலும்மேலும் அபிய்யிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு இருந்தான்.
 
 
“அது தான் இவங்க இல்லைன்னு தெரிஞ்சிடுச்சே அப்பறம் டிடேயில் எதுக்கு, வேண்டாம் விடுங்க...” எனக் குறும்பாகக் கூற, “எப்படின்னு ஒரு ஆர்வம் தான் சார்...” தெரிந்தே ஆக வேண்டும் போலக் குரலில் ரோஹித் கூற,
 
 
“ம்ம்... ஒகே...” எனத் தன் தோள்களை அசால்டாகக் குலுக்கியவன், மிருவின் மேல் தன அழுத்தமான பார்வையைப் பதித்தப்படி நெருங்க, மிருவிற்கு மனம் தடதடக்கத் துவங்கி இருந்தது. ‘இப்போ என்ன சொல்லப் போறானோ...?!’ என்ற கேள்வியோடு அவனைப் பார்த்தவளுக்கு அப்போது தான் அபய்யின் பார்வை தன் இதழின் மேல் நிலைத்து இருப்பது தெரிந்தது.
 
 
அதன் பின் மூச்சு விடக் கூட மறந்து துடிக்கும் தன் இதழ்களைக் கட்டுப்படுத்த போராடியவள், பற்கள் கொண்டு கீழ் உதட்டை கடித்து தன் பதட்டம் வெளியே தெரியாமல் மறைக்க முயல, அவளின் முயற்சியை நொடியில் கண்டு கொண்டவனுக்கு இதுவே போதுமானதாக இருக்க,
 
 
“இதோ இந்த ஆரஞ்சு பழத்தை வெட்டி வெச்சது போல இருக்கே இந்த லிப்ஸ் தான் காட்டிக் கொடுத்தது வித்தியாசத்தை, என் மினிக்கு அப்படியே செரி பழ நிறத்தில் அதே பளபளப்போடு இருக்கும்...” என்ற சத்தமாகக் கூறியவன், “சுவையும்...” என்றான் மெல்லிய முணுமுணுப்போடு அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்...!
 
 
ரோஹித்துமே இந்தப் பதிலை எதிர் பார்க்கவில்லை என்பதால் இதற்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் திகைத்து நிற்க, அதற்குள் தன்னை மீட்டுக் கொண்ட மிரு, “கிளம்புவோமா...?” என அபய்யின் மீதான தன் ஒட்டு மொத்த கோபத்தையும் வார்த்தைகளில் காண்பித்தவள், ரோஹித்தை இழுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
 
நகர்வதற்கு முன் அபய்யை ‘நீயெல்லாம் திருந்தவே இல்லையா...?!’ என்பது போல ஒரு வெறுப்பான பார்வை பார்த்து விட்டு செல்ல, அவனோ அதற்க்கெல்லாம் அசருபவனா என்ன...?! அசால்ட்டாக மிருவை பார்த்துக் கண்சிமிட்டினான்.
 
 
மூவரும் அங்கிருந்து செல்வதையே பார்த்தப்படி நின்றிருந்த அபய்யின் கண்களில், அப்போதே ரோஹித் தோள்களில் தொத்தியபடி அவன் கழுத்தை கட்டி கொண்டு தன்னையே பார்த்தப்படி செல்லும் சுபிக்ஷா பட, அவளை நோக்கி யோசிக்காமல் ஒரு பறக்கும் முத்தத்தைப் பறக்கவிட்டான்.
 
 
ஏனோ அவர்கள் இருந்த வரை தெரியாத ஒரு தனிமை உணர்வும் ஏக்கமும், அவர்கள் விலகிய அடுத்த நொடி மெல்ல படர தொடங்கி இருந்தது.
 
 
தன் அறையை நோக்கி நடக்கத் தொடங்கியவனை ஓட்டமும் நடையுமாக வந்து எதிர் கொண்டான் விக்டர். அபய்யின் அந்தரங்க உதவியாளன், அபய் கையால் இட்ட வேலையை தலையால் செய்து முடிப்பவன், கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக அபய்யோடு இருப்பவன்,
 
 
அபய் ஒன்றும் இறுக்கமானவனோ உணர்வுகளை வெளிப்படுத்த தெரியாதவனோ கிடையாது. எப்போதும் அவன் இருக்கும் இடம் கலகலப்பிற்குப் பஞ்சம் இல்லாமல் இருக்கும், ஆனால் அவனையும் எப்போதும் கலகலப்பாக வைத்து இருப்பது விக்டர் தான்.
 
 
இந்த ஒரு குணத்திற்காகவே அவனைத் தன்னோடு சேர்த்துக் கொண்டான் அபய். தன் தனிமையை விரட்ட, அனைவரும் இருந்தும் யாருமற்று இருப்பது அத்தனை எளிதல்ல.
 
 
கிட்டதட்ட பத்து வருடங்களாக அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருப்பவனுக்குத் தவிர்க்க முடியாத சில நேரங்களில் தன்னைச் சார்ந்தவர்களை மனம் தேடும், அந்தத் தவிப்பை கூட வெளிகாட்டிக் கொள்ள விரும்பாதவன் அதைத் தனக்குள் மறைத்துக் கொண்டு இன்னும் அதிகமாக அந்த நேரங்களில் வேலையில் மூழ்கி விட முனைவான்.
 
 
ஆனால் அபய்யின் நிழலாக இருப்பவனுக்குப் புரியாதா அவன் மனது. மெல்ல தன் குரங்கு சேட்டையும் கோணங்கி தனமுமான செயல்களால் அபய் மனதை திசை திருப்பித் தொடர்ந்து தன்னைத் திட்டுவது போல எதையாவது செய்து, அதில் அவனைப் பிஸியாக்கி விடுவான்.
 
 
அபய்க்கும் விக்டரின் இந்தச் செயல் தெரிந்தாலும், தெரிந்து கொண்டது போலக் காண்பித்து கொள்ள மாட்டான். ஆனால் அவன் மேல் உள்ள பிடித்தம் இன்னும் அதிகமாகும்.
 
 
இப்போது கூடத் தான் கொடுத்த வேலையைச் செய்து முடிக்கத் தான் சென்று விட்டு வந்து இருக்கிறான் எனத் தெரிந்தாலும், “வாங்க சார்... நான் வந்து பன்னிரண்டு மணி நேரம் ஆகுது... இப்போ தான் என்னைப் பார்க்க உங்களுக்கு டைம் கிடைத்ததா...?!” என வம்பிழுத்துக் கொண்டே நடந்தான்.
 
 
“ஏன் கேக்க மாட்டீங்க... பாஸா இருக்கறது ரொம்ப ஈஸி ஜி... ஆனா அவருக்குப் பிஎவா இருக்கறது அவ்வளவு ஈஸி இல்லை தெரிஞ்சுக்கோங்க... அது நெம்பக் குஷ்டம், இங்க தொழில் தொடங்க போற நீங்க கூட இன்னைக்குத் தான் வந்து இருக்கீங்க... உங்களுக்கு வாக்கப்பட்ட ஒரே காரணத்துக்காக இந்த வேலையைப் பார்க்க நான் இங்கே வந்து இருபது நாள் ஆகுது... என்னைப் பார்த்து, இந்தக் கடமை கண்ணாயிரத்தை பார்த்து ரொம்ப அசால்டா கேக்கறீங்க கேள்வி...” என மாடுலேஷனோடு பேசியவன்,
 
 
“என்னை என்ன உங்களைப் போல உட்கார்ந்த இடத்தில இருந்து ஈஸியா வேலை பார்க்கற ஆளுன்னு நினைச்சீங்களா...? பறந்து பறந்து பல வேலைகளை செய்றவன், இதுல நடுவுல நடுவுல பொதுச் சேவை வேற...” எனத் தன் புகழை பாடியப்படி வந்து கொண்டு இருந்தவனை, அபய் நக்கலாக ஒரு பார்வை பார்த்தவன், “யாரு நீ பொதுச் சேவை...” என்றான்.
 
 
லிப்ட்டில் இருந்து வெளியே வந்து கொண்டு இருந்தவனின் முன் வந்து வழி மறிப்பது போல நின்றவன், “நம்பலையா நீங்க..?” எனவும், “வழியை விடுடா...” என அதற்குப் பதில் அளிக்காமல் தன் அறையை நோக்கி சென்றவனின் பின்னால் ஓடியவன்,
 
 
“நிஜம் பாஸ்... நானும் சேவை எல்லாம் செய்வேன்...” என்றான் என்னை நம்புங்க என்பது போன்ற பாவமான குரலில், “எது இந்த சாப்பிடற சேவை தானே... அதாவது நல்லா இருக்குமா..? இல்ல, அதுவும் நீ செய்யற வேலை போல தான் இருக்குமா...?!” என்றான்.
 
 
அதில் அழும் பாவனையோடு முகத்தை வைத்து கொண்டு, “பாஸ்ஸ்ஸ்..” என்றான் விக்கி. அதற்குள் தன் அறைக்குள் நுழைந்தவன், “சரி, சரி... அழாதே, நம்பறேன்... என்ன செஞ்ச... இன்னைக்கு நீ எந்தக் குழந்தைகிட்ட இருந்தும் ஸ்நாக்ஸ் பிடுங்கி சாப்பிடலையா...?!” என்றான்.
 
 
“பாஸ்... நான் எவ்வளவு பெரிய காரியம் செஞ்சுட்டு வந்து இருக்கேன்... நீங்க இப்படி கலாய்க்கறீங்க...” என முகத்தைத் தூக்கியவன், “ஒரு பெண்ணோட வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுத்துட்டு வந்து இருக்கேன்...” என்றான்.
 
 
அதில் இரு புருவத்தையும் வியப்பாக உயர்த்தியவன், “எங்க...? என்ன ஆச்சு...? ஏதாவது அக்ஸிடன்ட்டா...” எனக் கேட்க, “அதெல்லாம் இல்லை பாஸ்... பேங்க்ல தான்...” என்றவன், “இருங்க இருங்க... திருட்டு, கொள்ளை எல்லாம் எதுவும் இல்லை...” என அவனே சேர்த்து சொன்னான்.
 
 
‘அப்போ வேறென்ன...?!’ என்பது போலப் பார்த்து இருந்தவன், வாயை திறந்து எதுவும் கேட்கவில்லை. “என்னன்னு கேட்டா என்னவாம்...? பொறாமை...” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தவன்,
 
 
“இன்னைக்கு மதியம் பேங்க்ல ஒரு லேடி டெபாசிட் செய்ய வந்து இருந்தாங்க... அவங்களுக்கு என்ன ப்ரேச்சனையோ இல்லை யாருக்கு என்ன தேவையோ பாவம், அவங்க வீட்டுக்காரரை டெபாசிட் செய்ய முயற்சி செஞ்சாங்க...” எனக் கதை சொல்லி கொண்டு இருக்க,
 
 
“ஹே... அவங்க வீட்டுக்காரருக்கு டெபாசிட் செய்ய வந்தாங்களா...?” என இடையிட்டவனைப் போலியாக முறைத்தவன், “என்ன பார்த்தா அவ்வளவு முட்டாள் போலவா இருக்குப் பாஸ்... அந்தம்மா அவங்க வீட்டுக்காரரை தான் டெபாசிட் செஞ்சுது பாஸ்...
 
 
ONE HUSBAND AND EIGHTY RUPEES ONLYன்னு எழுதி வெச்சிட்டு எனக்கு முன்னாலே தான் லைன்ல நின்னுக்கிட்டு இருந்தது... பார்த்ததும் பாவமா போச்சு... அதான் அக்கா உங்களுக்கு என்ன ப்ரச்சனைன்னு எனக்குத் தெரியலை, ஆனா ஒரு தம்பியா நினைச்சு சொல்றேன்...
 
 
உங்க வீடுகாரரை டெபாசிட் செய்றதுக்குப் பதிலா அடகு வெச்சா இன்னும் லாபம் அதிகம், சரி ஒரு வீட்டுகாரரை தான் டெபாசிட் செஞ்சிட்டீங்க... மத்தவங்களையாவது என்ன செய்யறதுன்னு நல்லா யோசிச்சு முடிவு செய்ங்கன்னு சொல்லிட்டு வந்தேன்...” எனச் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல அபய்யோ புரை ஏறும் வரை வெடித்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 3
 
அபய் சிரித்துக் கொண்டே இருந்ததில் முகமெங்கும் சிவந்து போய்க் காட்சியளித்தவனை ஒரு தாயின் வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தான் விக்டர்.
 
 
சற்று நேரத்திற்கு முன் ரெஸ்டாரண்டினுள் இருந்து வெளியில் வந்தவனின் முகத்தில் சிந்தனை ரேகைகளைக் கண்ட நினைவு விக்டருக்கு வந்து போனது.
 
 
அதை மாற்ற எண்ணியே அபய்யிடம் பேசியவன் இப்போது அவனின் முகத்தில் பூத்த புன்னகையைக் கண்டு அமைதியானான். (நல்ல வேலை பாஸ்க்குப் பார்வேர்ட் மெசேஜ்ஸ் படிக்கற பழக்கம் இல்லாததால நான் தப்பிச்சேன்... இதை வெச்சு தான் என் பொழப்பு ஓடுதுன்னு அவருக்குத் தெரியாம பார்த்துக்கணும்...)
 
 
“கே பாஸ்... எனக்கு நேரமாச்சு உங்களுக்கு நான் இருக்கறது போல எனக்கு வேலை செய்ய யாரும் இல்லை... நான் தான் என்னோட வேலைகளைச் செஞ்சு ஆகணும், காலையில் சீக்கிரம் எழுந்திருக்கணும் நான் போய்த் தூங்க போறேன்...” என்றபடியே கதவை திறந்தவனை நிமிர்ந்து பார்த்த அபய், எதிரில் தெரிந்த காட்சியில் ஒரு கணம் அப்படியே அசையாது இமைக்காமல் கூடப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
இவர்களுக்கு எதிரில் இருந்த அறையின் கதவை சரியாக அதே நேரம் திறந்து கொண்டு இரவு உடையான ட்ராக் பாண்ட் டி-ஷர்ட் அணிந்திருந்த ரோஹித் கையில் இருந்த போனில் யாருடனோ பேசியபடி வெளியே வருவதும் அவன் பின்னே சுபிக்ஷா ஓடி வருவதும் தெரிந்தது.
 
 
இவர்கள் இருவரையும் புன்னகையும் வாஞ்சையுமாகப் பார்த்தபடி இரவு உடையுடன் மிர்ணா நின்று கொண்டிருப்பதும் தெரிய, ‘இவங்க இங்கே தான் இருக்காங்களா...?’ என, எதிர் அறையிலேயே இருப்பார்கள் எனக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவன் மனதிற்குள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டான்.
 
 
கையில் இருந்த அலைபேசியில் கவனமாக ரோஹித் நடந்து சென்று விட, அவன் பின்னால் பேண்ட்டை பற்றியபடி நடந்து கொண்டிருந்த சுபிக்ஷா, எதிர் அறையில் இருந்த அபய்யை கண்டப்படியே இரண்டடி முன்னால் நடந்தவள், ரோஹித்தின் கால்களைத் தாண்டி மீண்டும் மெல்ல எட்டிப்பார்க்க, அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் அபய்.
 
 
அவர்கள் கண்ணில் இருந்து மறைந்த பிறகே பார்வையைத் திருப்பியவனுக்கு அப்போதே மினி தன்னைப் பார்த்தபடி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
இருவரும் சில நொடிகள் நேருக்கு நேராக எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாத பார்வையோடு பார்த்துக் கொண்டிருக்க, முதலில் முகத்தைத் திருப்பிக் கொண்டு கதவை அடைத்து இருந்தாள் மிர்னா.
 
 
அபய் தொழில் தொடங்கப் போவது டெல்லியில் அல்ல, மும்பையில் அங்கே தான் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதேபோல அவன் தங்குவதற்கான வீடும் மிகப் பிரம்மாண்டமாகக் கோடிகளில் புரளுபவர்கள் மட்டுமே தங்கும் பகுதியில் தயாராகக் காத்திருந்தது அபய்யின் வரவிற்காக...
 
 
டெல்லியில் தொழில் சம்பந்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தையை முடிக்கவும், அரசாங்கத்திடம் சில ஒப்புதல்களை வாங்குவதற்காகவுமே ஒரு வாரம் இங்குத் தங்கும் திட்டத்தில் வந்திருந்தான் அபய்.
 
 
இப்போது எண்ணிப் பார்க்கையில் மினியும் இங்கு அறை எடுத்து தங்கி இருப்பதைக் கண்டவனுக்கு அவளும் இந்த ஊரில் வசிப்பவள் இல்லை என்பது தெளிவாக, அடுத்து எங்கு இருக்கிறாள் என்ன செய்கிறாள் என அறிந்து கொள்ள எண்ணம் சென்றது.
 
 
அவன் நினைத்தால் அதை அரை மணி நேரத்தில் தெரிந்து கொள்ள முடியும், இருந்தாலும் சரியாகச் சென்று கொண்டிருக்கும் அவள் வாழ்க்கையில் தன்னால் எந்த வித குழப்பமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று எண்ணியவன் அந்த எண்ணத்தைக் கைவிட்டவனாக அடுத்தடுத்து தன் வேலைகளைப் பற்றிச் சிந்திக்கத் துவங்கி இருந்தான்.
 
 
மிர்னா வளர்ந்து வரும் மிகச் சிறந்த ஆடை வடிவமைப்பாளர், ஹிந்தி திரைப்பட உலகில் இரண்டு வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருப்பவள். அதற்கு முன்பு ஃபேஷன் ஷோக்கள் விளம்பரப் படங்கள் என்று அதில் மட்டும் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டிருந்தவளை இரண்டு வருடங்களுக்கு முன்பு அவள் பொறுப்பேற்று நடத்திய ஒரு பெயர் சொல்லும் அளவிலான மிகப்பெரிய ஃபேஷன் ஷோ வேறு தளத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.
 
 
அந்த ஷோவில் வாய்ப்பு கிடைப்பதே பெரிய விஷயம் என்ற நிலை இருக்க, அதில் அணிவகுத்த அனைவருக்கும் ஆடை வடிவமைத்தாள் மிர்னா. அதோடு மட்டுமல்லாமல் ஷோஸ்டாப்பராக நடை பயின்ற இந்தி திரை உலகின் கனவுக் கன்னி என்று அனைவராலும் பாராட்டப்படும் சுஷ்மா ராவ் என்ற பிரபலமான நடிகைக்கு ஆடை வடிவமைக்கும் வாய்ப்பு மிர்னாவுக்கு அமைந்தது.
 
 
தனக்குக் கிடைத்த வாய்ப்பை எப்போதும் போல மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் மிரு. தன் பல வருட கனவு நினைவாவதற்கான வாய்ப்பை தவற விட அவள் தயாராக இல்லை.
 
 
அதில் தன் திறமை அனைத்தையும் காட்ட, அந்த ஷோ அப்படிப் பிரபலமடைந்தது. அதே போல அவளின் ஆடை வடிவமைப்பும் பிரபலமாகத் தொடங்கியிருந்தது.
 
 
அந்த ஷோவில் சுஷ்மா அணிந்திருந்த ஆடை அவளுக்கு மிகவும் பிடித்துப் போக, அந்த மாதம் நடைப்பெற இருந்த விருது வாங்கும் விழாவிற்குத் தனக்கென்று பிரத்யேகமாக ஒரு ஆடையை வடிவமைத்துக் கொடுக்கச் சொல்லி மிர்னாவிடம் கோரிக்கை வைத்தாள் சுஷ்மா.
 
 
அதன்படி வெகுவாக அக்கறை எடுத்து தன் தொழில் மேல் எப்போதும் இருக்கும் காதலால் மிர்னா வடிவமைத்துக் கொடுத்த ஆடை, அந்த வருடத்திற்கான மிகப் பெரிய விருது வழங்கும் விழா எந்த அளவிற்குப் பேசப்பட்டதோ அதே அளவிற்குச் சுஷ்மா அணிந்திருந்த ஆடையும் பேசப்பட...
 
 
அதன்பிறகு இதுவரை யாரும் மிர்னாவை திரைப்படத்துறையில் பயன்படுத்தவில்லை என்பதை அறிந்து கொண்ட சுஷ்மா, தனக்கெனப் பிரத்தியேக வடிவமைப்பாளராக மிர்னாவை நியமித்துக் கொண்டாள்.
 
 
சுஷ்மாவுக்கு என்று ஒரு தனிப் பெயரும், ரசிகர் வட்டமும் எப்போதும் உண்டு என்பதால் அவள் கேட்பதை செய்து கொடுக்கத் தயாரிப்பாளர் பக்கம் எப்போதும் தயாராகவே இருந்தார்கள்.
 
 
இப்போது சுஷ்மாவிற்காகத் திரைப்படங்களில் மிர்னா ஆடை வடிவமைப்பாளராக இரண்டு வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். இப்போதும் கூட ஒரு படப்பிடிப்புச் சம்பந்தமாகத் தான் அனைவரும் இங்கு வந்து தங்கி இருக்கின்றனர்.
 
 
இது ஒரு ராஜா காலத்து கதை, அதில் இளவரசியாகச் சுஷ்மாவை உருமாற்றிக் காட்டிக் கொண்டிருந்தாள் மிர்னா. அவளின் கை திறமையினால் இந்தப் படம் நிச்சயம் மிர்னாவின் வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைய அத்தனை சாத்தியங்களும் கொண்டு இருந்தது.
 
 
படப்பிடிப்புத் தளத்திலேயே கூட உடன் பணிப்புரிபவர்களால், ஒவ்வொரு காட்சிக்கும் அதற்கெனத் தனித் தீம் வைத்து அவள் வடிவமைத்து கொடுத்த ஆடைகளும் அணிகலன்களும் மிகப் பெரிய பாராட்டுதல்களைக் குவித்துக் கொண்டு தான் இருந்தன.
 
 
அந்தப் படப்பிடிப்புச் சம்பந்தமாகத் தான் படக்குழுவினர் அனைவரும் இந்த ஹோட்டலில் தங்கி இருக்கின்றனர். அதிலும் அபய் தங்கி இருக்கும் அதே தளத்தில் கதையின் நாயகன் நாயகி இயக்குனர் தயாரிப்பாளர் என அனைவரும் இருப்பது அவன் அறியாத ஒன்று.
 
 
மறுநாளில் இருந்து ரோஹித்தும் சுபிக்ஷாவும் அவன் கண்களில் படவே இல்லை. அவ்வப்போது மினி எதிர் படுவதோடு சரி, ஆனால் அபய்யும் அவளைக் கண்டுக்கொள்ளவில்லை... அவளும் அதே போலத்தான்.
 
 
தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டு அவரவர் வழியில் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் இந்தி திரைப்பட உலகின் பெயர் சொல்லக்கூடிய அளவில் பெரிய மனிதராக இருக்கும் முகர்ஜி அபய் .இந்த ஹோட்டலில் தங்கி இருப்பதை அறிந்து அவனைச் சந்திப்பதற்கு நேரம் கேட்க, முதலில் அவர் யார் எனத் தெரியாமல் தயங்கிய அபய், விக்டர் கூறியதற்குப் பிறகு ‘பெயர் சொல்லும் அளவிலான ஒரு பெரிய மனிதரை தேவையில்லாமல் மனம் நோக செய்ய வேண்டாம்...’ என்ற எண்ணத்தில் அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்கினான்.
 
 
ஆனால் அதன்பிறகு எதற்காக நேரம் கொடுத்தோம் என நொந்து போகும் அளவிற்கு அவனைப் படுத்தி எடுத்துவிட்டார் அவர். எப்படியாவது அவனை திரைத்துறையில் முதலீடு செய்ய வைத்துத் தனக்குத் தொழிலில் பங்குதாரராக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பது போன்ற ரீதியிலேயே இருந்தது அவர் பேச்சு.
 
 
திரைத்துறையைப் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது இந்தத் துறையில் ஆர்வம் இல்லை என்றெல்லாம் நாசூக்காக அபய் எவ்வளவோ தடுத்து பார்த்துவிட்டான்.
 
 
ஆனால் அபய்யின் பெயர், புகழ், வசதி பற்றி நன்கு அறிந்திருந்தார் என்பதால் அத்தனை எளிதாக அவரால் அபய்யை விட்டு விட முடியவில்லை. அதனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இடையிடையே வந்தும், அபய்யைக் காணும் இடங்களில் எல்லாம் இதையே மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசிக்கொண்டிருந்தார் முகர்ஜி.
 
 
அப்போது கூட அபய்க்கு இவரிடம் தான் மிர்னா பணி புரிவது என்று எல்லாம் தெரியாது. இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது, கடைசிக் கட்ட படப்பிடிப்பிற்காக வந்து இருந்தவர்களின் பணி 95 சதவீதம் முடிவடைந்த நிலையில் மிச்சம் இருக்கும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தனர் அவரவர் துறையைச் சார்ந்தவர்கள்.
 
 
அன்று காலை தொழில் துறை மந்திரியை சந்திப்பதற்காக அபய்யும் விக்டரும் ஹோட்டலில் இருந்து வெளிவரும் பாதையில் நடந்து வந்து கொண்டிருக்க...
 
 
எதிராக மிர்னாவும் மற்றொரு அழகிய மங்கையும் ஹோட்டலுக்குள் வந்து கொண்டிருந்தனர். கிட்டதட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறான் அபய்.
 
 
முட்டியை விடச் சற்று நீண்டிருக்கும் முக்கால் பேண்ட் எனப்படும் ஜெக்கிங்ஸ் வகைப் பேண்ட்டும், இளம் மஞ்சள் நிறத்தில் பனியன் துணியும் வலை துணியும் இணைந்தது போன்று ஒரு தோற்றத்திலான கையில்லாத மேலாடையும் அணிந்து, கொண்டை என்றும் சொல்ல முடியாத தலை விரித்து விடப்பட்டு இருக்கிறது என்றும் கணிக்க முடியாத வகையிலான ஒரு வகையான கலவையான தலை அலங்காரத்தில் மிகப் பெரிய கருப்பு நிற வளையங்கள் காதில் ஆட என வந்து கொண்டு இருந்தவளை இதுவரை அபய் இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்திராததால், எதிரில் வந்து கொண்டிருந்தவளை எதேச்சையாகப் பார்த்தவனின் கண்கள் அதன் பிறகு அவள் மேல் இருந்து நகர மறுத்தது.
 
 
வெகு அலட்சியமாக அவள் ஆடை அணிந்து இருப்பது போன்று தோன்றினாலும் அது அவளுக்கு அத்தனை வாகாகவும் பாந்தமாகவும் அழகாகவும் பொருந்தியிருந்தது. அதிலும் அந்த மேலாடைக்கும் அவள் அணிந்திருந்த பேண்ட்டும் இடையே இரண்டு இன்ச் அளவிற்கு இடைவெளி இருக்க அந்த மேலாடை இடையை இருக்கப் பிடித்திருந்த பேண்ட்டை தொட்டும் தொடாமல் பட்டும் படாமல் அவ்வப்போது உரசி சென்று கொண்டிருந்தது. அந்த இடைவெளியில் அவளின் எலுமிச்சை நிற இடை அழகாகக் காட்சியளித்தது அபய்க்கு...
 
 
நடந்து வந்து கொண்டிருந்தவன் அப்படியே நின்று இமைக்க மறந்து அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, அவளோ இங்கு ஒருத்தன் இருப்பதைக் கூட உணராதது போலத் தன் கூட வந்து கொண்டிருந்தவளிடம் ஏதோ பேசி சிரித்தபடியே சென்றுவிட்டாள்.
 
 
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அபய்க்கு ஏதோ ஒன்று உறுத்த திரும்பி தன் அருகில் நின்றிருந்த விக்டரை பார்த்தான். அவன் உறுத்தல் சரியே என்பது போலக் கண்கள் மின்ன திறந்த வாய் மூடாமல் ஆவெனப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்டரும். அதைக் கண்டதும் அபய்க்குக் கண்மண் தெரியாத அளவிற்குக் கோபம் பொங்கியது. ஏன் இத்தனை கோபம் என்று அவனுக்குமே தெரியவில்லை.
 
 
ஆனால் விக்டர் அப்படிப் அவளைப் பார்த்ததை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை, “விக்டர்...” எனப் பல்லைக் கடித்தபடி அபய் அழைக்கவும், அதில் தன் உணர்வு பெற்று திரும்பியவனுக்கு அபய் தன் மேல் கோபமாக இருப்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.
 
 
எப்போதும் “விக்கி” என்று அழைப்பவன் கோபமாக இருக்கும் நேரங்களில் மட்டுமே தான் இப்படி விக்டர் என்று முழுப் பெயர் சொல்லி அழைப்பான். அசடு வழிந்தபடியே திரும்பியவன் “சாரி பாஸ்” என்றபடி நடையைத் தொடர முயல,
 
 
ஆனால் அபய் நின்ற இடத்திலிருந்து நகராமல் விக்டரை உக்கிரத்துடன் பார்த்தபடி நின்றிருந்தான். அதில் மீண்டும் அபய்யை நெருங்கிய விக்கி “சாரி பாஸ்... நான் அவங்க ஃபேன் ஆகிட்டேன் பாஸ்...” என அசடு வழிந்தபடியே வாயெல்லாம் பல்லாகக் கூறினான்.
 
 
“இப்படித்தான் ஒரு பெண்ணைப் பார்க்கிறதா...?” என்று கேள்வி கேட்க, “அதான் சொன்னேனே பாஸ்... இந்தியா வந்ததுக்குப் பிறகு தான் இவங்களைப் பத்தி எனக்குத் தெரியும், பொழுது போகாம தான் அந்தப் படத்தைப் பார்த்தேன்... ஆனா அவங்க அழகு, நளினம், நடிப்பு எல்லாம் சேர்ந்து மொத்தமாகப் பிளாட் ஆகிட்டேன் பாஸ்...” கனவு உலகில் மிதப்பது போலக் கூறியவனைப் புரியாமல் பார்த்தவன்,
 
 
“அவ சினிமால நடிக்கிறாளா...?”
 
 
“ஆமா பாஸ் உங்களுக்குத் தெரியாதா...?! அவங்கதான் இப்போ கரண்ட்ல இருக்க இளைஞர்களின் கனவுக்கன்னி...” என்றவன், “சுஷ்மா ராவ்... பேருக் கூட எவ்வளவு அழகா இருக்குல்ல பாஸ்...” என்றதில், அவ்வளவு நேரம் ‘மினி திரைப்படத்தில் நடிக்கிறாளா...?!’ என்ற அதிர்வோடு நின்றிருந்தவன்,
 
 
‘அப்போதே இவன் வேறு யாரையோ பற்றிக் கூறுகிறான்’ எனப் புரிய, “ஏய் யாரை பத்தி சொல்றே...?”
 
 
“அதான் பாஸ்... இப்ப போனாங்களே ரெட் கலர் டிரஸ்ல, அப்படியே ஊட்டி தக்காளி மாதிரி...” என்று கூறியவன் அவங்கதான் இந்தி பட உலகில் நம்பர் ஒன் ஹீரோயின் பாஸ்... அவங்களுக்கு வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயசுலயும் ரசிகர்கள் இருக்காங்க... அதுல நானும் ஒருத்தன்...” என்று பெருமையுடன் கூறிக் கொள்ள, தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது அபய்க்கு,
 
 
‘சற்று நேரத்தில் ஏதேதோ யோசிக்க வைத்து வயிற்றில் புளியைக் கரைத்து விட்டானே’ என்பது போல ஒரு போலி முறைப்பை அவனை நோக்கி செலுத்தியவன், “நட...” என்றபடியே தன் நடையைத் தொடரவும், அப்போதே ‘விக்கி சொன்ன சுஷ்மா ஒரு நடிகை என்றால் அவளோடு இத்தனை நெருக்கமாக மிர்னாவுக்கு என்ன வேலை...? இவள் யார் இங்கு...?’ என்று கேள்வி மனதில் எழ,
 
 
“கூட வந்த அந்தப் பொண்ணு யாரு...?”
 
 
“சாரி பாஸ் கூட யார் வந்தாங்கன்னு எனக்குத் தெரியாது... என் கண்கள் என் சுஷ்மாவை தவிர வேறு யாரையும் பார்க்காது... நான் இந்த விஷயத்தில் ராமர் மாதிரி...” எனத் தன் மனைவியை மட்டுமே பார்ப்பேன் என்பது போன்ற பாவனையில் கூறியவனைக் கொலைவெறியோடு பார்த்தவன்,
 
 
“இப்போ உன்னோட சுஷ்மா உடன் வந்த பொண்ணு யாருன்னும் எதுக்காக அவங்களோட இருக்கான்னும் எனக்கு அஞ்சு நிமிஷத்துல டீடெயில்ஸ் வேணும்... டீடெயில்ஸோட வந்து சேரு...” என அழுத்தமான குரலில் கூறியவன் தன் வேக நடையுடன் கார் இருந்த பக்கமாகச் சென்றுவிட்டான்.
 
 
“ஹீரோயினை பத்தி என்னை தெரிஞ்சுக்கச் சொன்னால் கூடப் பரவால்ல, கூடப் போற ஏதோ ஒரு எடுப்பு பத்தி தெரிஞ்சு எனக்கு என்ன ஆகப்போகுது...” எனப் புலம்பியவாறே ரிசப்ஷன் நோக்கிச் சென்றான். அங்கு இருந்த பெண்ணிடம் தன் நகைச்சுவை பேச்சின் மூலம் தேவையான தகவல்களைக் கேட்டு அறிந்து கொண்டு அடுத்த நான்காவது நிமிடம் அபய்யின் காரில் அவனருகில் அமர்ந்து இருந்தான்.
 
 
“கூடப் போன எடுப்பு பேரு...” என்று தொடங்கியவன், அபய் ஓர் உக்கிர பார்வையைச் செலுத்தவும், கப்பென வாயை மூடிக் கொண்டு “கூடப் போனாவங்க பேரு மிர்ணா பாஸ்... அவங்கதான் என் செல்லத்தோட காஸ்டியூம் டிசைனர்... இதில் இன்னொரு கொடுமை தெரியுமா பாஸ், என் செல்லம், டைரக்டர், புரொடியூசர் அத்தனை பேரும் நீங்க தங்கியிருக்கிற அதே ப்ளோர்ல தான் இருக்காங்க... இது முதலேயே தெரிஞ்சிருந்தா நான் எனக்கும் அதே ப்ளோர்ல ஒரு ரூம் போட்டு இருப்பேன், நமக்கு செலவா முக்கியம் பாஸ்....” சுஷ்மா இருக்கும் தளத்தில் தங்குவதே பாக்கியம் என்கிற தோரணையில் பேசிக கொண்டே சென்றவனின் மற்ற வார்த்தைகள் எதுவும் அபய்யின் காதில் விழ கூட இல்லை.
 
 
‘நான் பேஷன் டெக்னாலஜி படிக்கணும், அதில் நிறையப் புதுமையைக் கொண்டு வந்து சாதிக்கணும் மாமு...’ என்ற கண்கள் மின்ன பேசிய முகமும் கண்களும் மனக் கண்ணில் வந்து போனது.
 
 
‘உன் ஆசை நிறைவேறியது சந்தோஷமா இருக்கு மினி...’ என்று எண்ணிக் கொண்டவனுக்குப் பாவம் தெரியவில்லை, அதற்கு அவள் பட்ட துன்பங்களும் வலிகளும், ஒருவகையில் அதற்கெல்லாம் தானே காரணமாக இருந்ததும்,
 
 
மிர்னாவை பற்றி மட்டும் அறிந்து கொண்டவன் யோசனை முழுவதும் அவளையே சுற்றி வந்து கொண்டிருந்தது. சட்டென ஏதோ தோன்ற “அப்போ அந்த நம்மளை தினமும் டார்ச்சர் கொடுக்கும் ப்ரொடியுசர்...?” எனக் கேள்வியாக அதை நிறுத்த,
 
 
“ஆமா பாஸ் அவர் தான் இந்தப் படத்தோட புரொடியூசர்...”
 
 
“ஓ...” என்றவன், சில நொடிகள் தீவிர யோசனைக்குப் சென்ற பிறகு “அவர் ஏதோ பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கிறதா நம்மளை இன்வைட் பண்ணி இருந்தாரே, அது எப்போ...?” என்றான்.
 
 
“இன்னைக்குத் தான் பாஸ்... நீங்க தான் போக வேண்டாமுன்னுச் சொல்லிட்டீங்களே, நான் எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா சுஷ்மா கூட நின்னு ஒரே ஒரு செல்பி எடுக்கணும்னு, என் கனவுல லட்சியத்தில மண்ணள்ளிப் போட்டு இருக்கீங்க நீங்க...” என மனவருத்தத்தோடு, விட்டால் அழுது விடுபவன் போன்ற முகப் பாவனையோடு விக்கி பேசிக் கொண்டே சென்றான்.
 
 
“ஈவ்னிங் பார்ட்டி எத்தனை மணிக்கு...?”
 
 
“ஏழு மணிக்கு பாஸ்...” எனத் தன் போலி அழுகையை நிறுத்திவிட்டு வியப்பாக அபய்யை பார்த்தவனுக்கு, அபய் இத்தனை கேள்விகள் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கிறான் என்றால் அதில் ஏதோ இருப்பது தெளிவாக, தன் விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டவன்,
 
 
“நாம பார்ட்டிக்கு போக வேணுமா...?” எனக் குரலில் ஒரு தீவிரத்தைக் கொண்டு வந்து கேட்கவும்,
 
 
அவனைத் திரும்பி கூடப் பார்க்காமல் “எஸ்” என்றவன், “ஆமா உன்னுடைய ஆசையை லட்சியத்தை நிறைவேத்தலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்... உனக்காக இது கூட செய்யலைனா எப்படி.. நீ உன் ஆசைப்படியே எத்தனை செல்பி வேணும்னாலும் எடுத்துக்கோ...” என்றபடியே காரை செலுத்த தொடங்கினான்.
 
 
“நம்பிட்டேன் பாஸ்... நம்பிட்டேன்...” என நம்பா பார்வையோடு சொன்னவன், அன்று மாலைக்குள் தங்கள் வேலைகளை முடிக்க அவசரமாகத் திட்டத்தை மாற்றி அமைத்தவன், “பார்ட்டிக்கு செல்ல வேறு ஏதாவது ஏற்பாடு செய்ய வேணுமா பாஸ்...?” என்றும் கேட்டு தெரிந்து கொண்டான். இது தான் விக்கி எத்தனை குறும்பு தனம் இருந்தாலும் வேலையில் கில்லி, இல்லையென்றால் எப்போதோ அபய் அவனைத் துரத்தி விட்டு இருப்பான்.
 
 
அழகிய கரிய நிற டீ ஷர்ட் வெளிர் நீல நிற ஜீன்ஸ் அணிந்து பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்தவனை வரவேற்றது வாயெல்லாம் பல்லாக இருந்த முகர்ஜி மட்டுமல்ல, வாயிலுக்கு நேரெதிராகக் கருப்பு நிற முட்டி வரை மட்டுமே நீண்டிருந்த பளபள குட்டை ஆடையில் கையில் வைன்னுடன் நின்றிருந்த மிர்னாவும் தான்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிரே - 4
 
அபய் அந்தப் பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததைக் கண்டு வாயெல்லாம் பல்லாக வரவேற்ற முகர்ஜியை கண்டு ஒரு புன்னகையோடு கூடிய தலையசைப்போடு உள்ள நுழைந்தவனின் பார்வை நேரெதிரே நின்றிருந்த மிர்னாவின் மேலேயே நிலைத்து இருந்தது.
 
 
முட்டிவரை மட்டுமே தொட்டுக் கொண்டிருந்த கையில்லாத கருப்பு நிற வழுவழுப்பான பார்ட்டிகளுக்கென்றே தயார் செய்யப்பட்டது போன்ற உடையில் நின்று இருந்தவளின் வெண்மை நிறம் அந்தக் கருப்பு நிற உடையில் சற்று தூக்கலாகவே தெரிந்தது.
 
 
லூஸ் ஹேர் விட்டு அந்த மாலை நேரத்து மின்விளக்கு ஒளிக்கு ஏற்றார் போலக் கண்ணை உறுத்தாத வகையிலும் அதே நேரம் மனதை கவரும் வகையிலும் அவள் செய்து கொண்டிருந்த மேக்கப் அவளுக்கு அத்தனை அழகைத் தந்தது. எப்போதுமே அவள் அழகுதான் இப்போது அது இன்னும் அதிகரித்துக் காட்சியளித்ததாள்.
 
 
மிர்னாவின் உடை சிறியதாக இருந்தாலும் தன்னுடைய அழகை வெளிச்சம் போட்டு காட்டும் வகையிலும் இல்லை முகம் சுளிக்க வைக்கும் வகையிலும் இல்லை ரசிக்கும்படியாகத் தான் இருந்தது. அங்கிருந்த மற்றவர்களும் இது போலான ஆடை அலங்காரத்தில் தான் இருந்தார்கள் என்றாலும் அவர்களின் அழகு மற்றவர்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது என்னவோ உண்மை.
 
 
இதற்குமுன் இப்படிப்பட்ட உடையில் எல்லாம் அபய் அவளைப் பார்த்ததில்லை என்பதனால் தலை முதல் மெல்ல ஒரு ரசனையான பார்வையைப் படர விட்டுக் கொண்டிருந்தவனின் கண்களில் அப்போதே மிர்னாவின் கைகளில் இருந்த ஒயின் கிளாஸ் பட்டது. இதில் கண்களைச் சற்று கூர்மையாக்கி அவளைப் பார்க்க அவளோ தன் அருகில் இருந்தவர்களோடு மிகச் சாதாரணமாகச் சிரித்துப் பேசியபடி ஒவ்வொரு சிப்பாக அதைப் பருகி கொண்டிருந்தாள்.
 
 
வியப்பான பார்வையை அவள் மேல் செலுத்தியபடி புருவங்களைக் கேள்வியாக உயர்த்தியவனின் பார்வை அந்த ஹால் முழுவதும் சுற்றிச் சுழன்றது. அந்த வட்டத்திற்குள் ரோஹித்தும் சுபிக்ஷாவும் விழாமல் போக ‘எங்கே போனாங்க இவங்க...?’ என்ற கேள்வி மனதிற்குள் எழ, மீண்டும் அவள் மேல் தன் பார்வையைக் கூர்மையாகச் செலுத்தியபடி தன்னோடு நின்று பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு ஓரிரு வார்த்தைகளில் மட்டும் பதில் அளித்துக் கொண்டிருந்தவன் அணிந்திருந்த கருப்பு கண்ணாடி அவனின் பார்வை சென்ற இடத்தை மற்றவர்கள் அறியாமல் காத்துக் கொண்டிருந்தது.
 
 
அவன் அருகில் நின்றிருந்த விக்கியோ இது போல எந்தத் திரைமறைவு வேலையும் செய்யாமல் நேராகவே அவனின் கனவுக்கன்னியை தான் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
 
 
தோள்களைத் தொடாமல் மார்பிலிருந்து தொடங்கும் படியான பளபளக்கும் பொன்னிறத்தில் ஆங்காங்கே வைரங்களைச் சிதறி விட்டது போல ஜொலித்துக் கொண்டிருந்த ஆடையை அணிந்து நின்றிருந்தவள் தேவலோக மங்கையோ என்பது போல விக்கியின் கண்களுக்குக் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள்.
 
 
அவளையே வாயைப் பிளக்காத குறையாக ரசித்துக் கொண்டிருந்தவனின் பார்வை தலை முதல் மெல்ல கீழே இறங்கி வரவும் தான் உடை பாதம் வரை தொட்டுக் கொண்டு இருந்தாலும் தொடையிலிருந்து இருபுறமும் கிழித்து விடப்பட்டது போல இருந்த உடையில் அவளின் காலின் அழகு அனைவருக்கும் வெட்ட வெளிச்சமாகி கொண்டிருந்தது.
 
 
இது சற்று விக்கியை முகம் சுளிக்கத் தான் செய்தது, “மேலே பாதியை காணோம் கீழே பாதியை காணோம்... இது என்ன டிரஸ்...” என முணுமுணுத்தவன் கிட்டதட்ட ஏழு வருடங்களுக்கு மேலாக அமெரிக்காவில் வசித்தவன் என்பதை வசதியாக மறந்து போனான்.
 
 
அங்கு இதைவிட அபாயகரமான உடைகளை எல்லாம் கூடத் தினம் தினம் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் என்றாலும் ஒருவேளை அங்கு இது சகஜம் என எண்ணியவனின் மனதில் இங்கு இதை அத்தனை சகஜமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ என்னவோ...!
 
 
அபய்யின் பார்வை மிர்னா மேலே மட்டுமே படிந்திருக்க... அவளோ இப்படி ஒருவன் உள்ளே நுழைந்ததைத் தெரிந்தது போலக் கூடக் காட்டிக் கொள்ளாமல் தன் போக்கில் நின்றிருந்தாள். ஆனால் உள்ளே நுழையும் போதே அவள் அபய்யை பார்த்துவிட்டுத்தான் இருந்தாள்.
 
 
இதை அபய்யுமே நன்கு அறிவான், இருந்தாலும் அவள் மீது ஒரு ஆராய்ச்சி பார்வையைச் செலுத்தியபடி நின்று கொண்டிருந்தவனின் மனம் அவளிடம் புதிதாகத் தோன்றியிருந்த மாற்றங்களிலேயே உழன்று கொண்டிருந்தது.
 
 
அப்போது திடீரென அந்த இடமே பரபரப்பாக ஒரு அழகிய புன்னகையைத் தவழ விட்டபடி அங்கு நுழைந்து கொண்டிருந்தான் அந்தப் படத்தின் கதாநாயகன் மிதுன். இன்றைய இளம் பெண்களின் கனவு நாயகன் எனச் சுருக்கமாகச் சொல்லலாம்... அவ்வளவு ரசிகைகள் அவனுக்கு...!
 
 
இப்போது தான் வளர்ந்து வரும் நாயகனாக இருந்தாலும் இது அவன் நடிக்கும் ஐந்தாவது படமாக இருந்தாலும் கூடத் தன் அழகு நடை உடை அலங்காரம் பழகும் விதம் நடிப்பு என அனைத்து வகையிலும் ரசிகைகளைக் குவித்து வைத்திருந்தான்.
 
 
திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் கூட மிதுன் பழகுவதற்கு இனிமையானவனே...! அனைவரிடமும் நட்போடும் அன்போடும் பழகக் கூடியவன், அவனோடு பேசிக் கொண்டிருப்பதைப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் விரும்புவார்கள்... அத்தனை இனிமையாகப் பழகத் தெரிந்தவன் மிதுன்.
 
 
அதுவரை ஆர்வத்தோடும் ஏக்கத்தோடும் ஒரு எதிர்பார்ப்போடும் அபய்யின் மேல் பார்வையைப் பதித்திருந்த பெண்கள் அனைவரும் நொடியில் மிதுனின் பக்கம் தன் பார்வையைத் திருப்பியதோடு மட்டுமல்லாமல் ஓடிச்சென்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
 
 
அவர்களைப் பொறுத்தவரை தங்கள் செயலுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாத அபய்யை விடத் தங்களோடு இனிமையாகப் பேசி சிரித்து மகிழும் மிதுனோடு நேரம் செலவழிக்க விரும்பியே தங்கள் கவனத்தை அவன் பக்கம் திருப்பி இருந்தனர்.
 
 
அழகிய பெண்கள் அனைவரும் வந்து சூழ்ந்து கொண்டதில் கோபியர்களுக்கு இடையே இருக்கும் கோகுல கண்ணனாகக் காட்சி அளித்தான் மிதுன். அவனையே பொறாமையில் பொசுங்கும் விழிகளோடு விக்கி பார்த்துக் கொண்டிருக்க... அவனோ தன் பார்வையைச் சுஷ்மா மற்றும் மிர்னா மேல் செலுத்தியபடி வசீகரமாகப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
 
 
அங்கு நடக்கும் அத்தனையையும் கூர்மையாகப் பார்த்தபடி கவனித்துக் கொண்டிருந்தான் அபய் சற்று நேரத்தில் பார்ட்டிக்கே உரித்தான இசை ஒலிக்கத் துவங்கியது.
 
 
அதற்குத் தகுந்தாற்போல் ஒவ்வொருவரும் ஜோடி ஜோடியாக ஆடத் துவங்கியிருந்தனர்... ஒரு அழகிய மோகன புன்னகையுடன் அவற்றை ரசித்தபடி கையில் மது கோப்பையுடன் நின்றிருந்தவனை நெருங்கிய சுஷ்மா அபய்யை தன்னோடு ஆட வருமாறு மயக்கும் பார்வை பார்த்தபடி அழைக்க...
 
 
‘விருப்பம் இல்லை’ எனச் சொல்லி அவளின் அழைப்பை மறுக்க நினைத்தவனின் பார்வை தன் எதிரில் இருந்த மிர்னாவின் மேல் பதியவும் அங்கு மிதுன் மிர்னாவை தன்னோடு ஆட வருமாறு அழைத்துக் கொண்டிருந்தான்.
 
 
மிர்னாவும் எந்த மறுப்பும் கூறாது, ஒரு அழகிய புன்னகையைச் சிந்தியபடி அவனோடு செல்ல... இதைப் பார்த்துக் கொண்டிருந்த அபய்யால் அவளின் செயல்களைக் கொஞ்சமும் நம்ப முடியவில்லை...
 
 
இந்த மிர்னா அவனுக்கு முற்றிலும் புதிது... அவன் அறிந்த மிர்னாவில் இருந்து இவள் ரொம்பவே மாறுபட்டு தெரிந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவனைச் சுஷ்மா மீண்டும் அழைக்க...
 
 
சற்றும் யோசிக்காமல் அவளோடு சேர்ந்து ஆட மேடை ஏறி இருந்தான் அபய். தன் கனவுக்கன்னியோடு தன் பாஸ் செல்வதைக் காதில் புகை வர பார்த்தபடி நின்றிருந்தான் விக்கி.
 
 
வேகமாகச் சுழன்று ஆடும் வகையில் ஒலிக்கப்பட்ட இந்திப் பாடலுக்கு அபய் சுஷ்மாவோடு சுழன்று ஆடிக் கொண்டிருந்தாலும் பார்வை என்னவோ சுஷ்மாவின் மேல் ஒரு நொடி கூடப் பதியவில்லை...! அவனின் மொத்த கவனமும் மிர்னாவின் மேல் மட்டுமே இருந்தது.
 
 
ஆனால் அதற்கு நேர் எதிராக மிர்னாவின் பார்வை ஒரு நொடி கூட அபய்யின் மேல் பதியவே இல்லை, தன்னோடு ஆடிக்கொண்டிருந்த மிதுனை பார்த்து புன்னகைத்தவாறே அவன் ஆட்டத்திற்கு ஏற்றது போலச் சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள்.
 
 
மற்றவர்களுக்குத் தெரியாமல் போனாலும் அபய்யின் ஒவ்வொரு அசைவும் தெரிந்த விக்கிக்குத் தெரியாமல் போகுமா என்ன அவன் பார்வை போகும் திசை..?!
 
 
‘பாஸ் என்ன இது...? பிப்டி கேஜி தாஜ்மஹாலை கையில் வெச்சுட்டு எங்கேயோ பாத்துட்டு இருக்கீங்களே...! இது கொஞ்சம் கூடச் சரி இல்ல பாஸ், அது கல்யாணமான புள்ள, ஒரு பிள்ளை கூட இருக்கு... மாற்றான் தோட்டத்து மல்லிகை மேலேயா உங்கள் கவனம் பதியணும்...’ என்று தனக்குள்ளேயே புலம்பித் தீர்த்தவன்,
 
 
‘அப்படிப்பட்ட ஆள் இல்லையே பாஸ் நீங்க... இது என்னன்னு ஒண்ணும் புரிய மாட்டேங்குது, கேட்டா சொல்லுவாருனும் தோணலை... என்னமோ நடக்குது பார்ப்போம்...’ எனத் தனக்குள்ளேயே குழம்பிய பிறகு ஒரு தீர்மானத்திற்கு வந்து இருந்தான்.
 
 
ஒருகட்டத்தில் ஆடிக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் தங்களோடு ஆடிய ஜோடியை மாற்றி ஆடத் துவங்கவும், சுஷ்மா மிதுனோடு ஆட சென்றுவிட... அங்கு இருந்து நகர முயன்ற மிர்னாவிடம் தன்னோடு ஆட அழைப்பது போல அவள் முன் அபய்கையை நீட்டினான்.
 
 
“நோ... ரொம்ப டயர்டா இருக்கு, போதும்...” என மற்றவர்களுக்குத் தவறாகத் தெரியாத வகையில் களைப்பாக இருப்பதைக் காரணமாகக் காட்டி அவள் மறுக்க... ஆனால் அவள் மறுத்ததன் காரணம் அறிந்தவனின் முகமோ இறுகிப் போனது.
 
 
அவள் மறுத்ததும் அப்படியே விட்டால் அவன் அபய் இல்லையே...! தன்னோடு ஆடுவதைத் தவிர்ப்பதற்காகவே இவ்வாறு கூறுகிறாள் எனப் புரிந்தவன், “டோன்ட் ஓர்ரி பேபி... உனக்குக் கொஞ்சமும் டையர்ட் ஆகாதபடி நான் பார்த்துக்கறேன்...” என்றவன் நொடியில் மிர்னாவின் இடையை வளைத்து அவளைத் தன் கைகளில் ஏந்தி இருந்தான்.
 
 
இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள் முதலில் அதிர்ந்து பின் தன் அதிர்வுகள் நீங்கி பதில் பேசும் முன் அவளைக் கைகளில் ஏந்தியவாறு ஆடத் துவங்கிய இருந்தவனிடம் அனைவரின் முன்பும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் மெல்லிய குரலில் பல்லைக் கடித்தபடி “லெட் மீ டவுன்...” என்றாள்.
 
 
அது தன் காதில் விழுந்தது போலக் கூடக் காட்டிக் கொள்ளாமல் ஆடுவதிலேயே கவனமாக இருந்தான் அவன். அபய் மிர்னாவை ஏந்தியபடி ஆடுவதைப் பார்த்து மற்றவர்களும் தங்களோடு ஆடிக் கொண்டிருந்த இணையைக் கைகளில் ஏந்தியபடி ஆடத் தொடங்கவும் அனைவரும் ஒன்று போல் ஆடியது மற்றவர் கண்ணுக்கு வித்தியாசமாகத் தெரியாமல் போனது.
 
 
ஆனால் மிர்னாவுக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை, பொங்கிய ஆத்திரத்தை இங்கு வெளிப்படுத்தி அனைவரின் கண்களுக்கும் காட்சிப்பொருளாக விரும்பாமல் மெல்லிய குரலில் தன் எதிர்ப்பை அவனிடம் தெரிவித்தபடி இருந்தவளை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை அபய்.
 
 
இசை நின்றதும் இறுதியாக ஆடி களைத்து முடித்தவன் தன் கைகளில் இருந்தவளை மெல்ல இறக்கி விடவும் ஆத்திரத்தோடு அவனை முறைத்தவாறே ஏதோ கூற தொடங்கிய மிர்னாவுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை கூட அளிக்காமல் அழகிய கண்சிமிட்டலோடு “நான் கேட்டதும் ஒத்துக்கிட்டு இருந்தா இப்படி என் கையில் இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது பேபி... என்ன பத்தி தெரிஞ்சுட்டே மறுத்துப் பேசினா, இப்படி தான் ஆகும், புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்...” என்றவன், ஒவ்வொரு முறையும் நீ விலக நினைத்தால் அதை விட அதிகமக நெருங்கி வருவாய் என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் காதோடு ரகசியம் பேசியவன் அங்கிருந்து எதுவுமே நடவாதது போல விலகிச் சென்று விட்டான்.
 
 
அவன் செய்கையிலும் பேச்சிலும் எழுந்த கோபமும் ஆத்திரமும் ஒன்றோடு ஒன்று போட்டி போட, அவன் சென்ற திசையையே கண்களில் கோபத்தை வெளிப்படுத்தாமல் பல்லை கடித்தவாறு பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் மனம் உலைகளனாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
 
 
ஒரு மணி நேரம் கழித்துப் பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராகக் கலைந்து செல்ல தொடங்கினர். மிர்னா அனைவரிடமும் விடைபெற்று வெளியே செல்ல முயல்கையில் முகர்ஜி அவளைச் சைகையில் தன் அருகில் வருமாறு அழைக்கவும், அவரைப் புன்னகையோடு நெருங்கியவள் ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
 
 
“இன்னைக்கு நைட் உன்னோட ரூமுக்கு நான் வரேன்... ரூம் டோர் லாக் பண்ணிடாத பேபி, வெய்ட் பண்ணு...” என அருவருப்பான ஒரு பார்வையை மிர்னாவின் உடல் எங்கும் மேய விட்டபடி முகர்ஜி கூறவும்,
 
 
அவரின் வார்த்தைகளில் கோபம் கொள்ளாமல் ஒற்றைப் புருவத்தை வியப்பாக உயர்த்தியபடி புன்னகை முகம் மாறாமல் அவரைப் பார்த்தவள் “நீங்க என்னோட ரூமுக்கு வந்துட்டா அப்போ உங்க ரூமுக்கு யார் போவாங்க சார்...” எனக் கோபத்தை கொஞ்சமும் வெளிப்படுத்தாத குரலில் அவருக்கு மட்டும் கேட்கும்படி மெல்ல கிசுகிசுத்தாள்.
 
 
அதில் ஆத்திரம் கொண்டவர், “ஹேய் என்ன பேசறே...?” எனத் தன்னை மறந்து கத்தவும் “உன் வீட்டு பொண்ணுனா வலிக்குதாடா...?! அடுத்த வீட்டு பொண்ணுனா அவ்வளவு இளக்காரமா போச்சா...? உன்னோட இந்த வேலை எல்லாம் என்கிட்ட காட்டாத, அவ்வளவு தான் மவனே...” என நாக்கை மடித்தபடி லோக்கல் ஹிந்தியில் ‘இத்தனை நேரம் அவ்வளவு மாடர்னாக இருந்தவகளா இவள்...?!’ என எண்ணும் அளவிற்கு அவனுக்கு மட்டுமே புரியும்படி புன்னகை முகத்தோடு மிரட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினாள் மிர்னா.
 
 
ஒரு அலைபேசி அழைப்பு வந்ததனால் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கி தனியாகப் பேச எண்ணி இருந்த அபய் இவர்கள் அருகில் இருந்த தூணுக்குப் பின் நின்றிருந்ததை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை.
 
 
இவர்கள் இருவரும் பேசியதைக் கேட்டவனின் கண்கள் சிவந்து ஆத்திரத்தில் ரத்தம் கொதிக்க... முகர்ஜியை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
அடுத்த நாள் காலை அனைத்து பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது, முகர்ஜி கை கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தி.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 5
 
 
அன்று அனைவரும் மும்பை திரும்புவதாகத் திட்டம், அதற்கான ஏற்பாடுகளில் இருந்த மிர்னாவின் கவனத்தைத் தொலைக்காட்சியில் இருந்து வந்த செய்தி கலைக்க அதிர்வோடு தொலைக்காட்சியைப் பார்த்தாள் அவள்.
 
 
“நேற்று இரவு பிரபல தயாரிப்பாளர் முகர்ஜி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்... இதில் அவரின் கை கால்கள் இரண்டும் உடைக்கப்பட்டு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்...” என மீண்டும் மீண்டும் இந்தச் செய்தி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்க... கை கால்கள் இரண்டிலும் கட்டோடு நினைவு இன்றி முகர்ஜி படுத்துக் கொண்டு இருந்த ஒரே ஒரு புகைப்படம் பின்னணியில் மீண்டும் மீண்டும் காட்சி படுத்தபட்டுக் கொண்டிருந்தது.
 
 
அதைக் கண்டு திகைத்து நின்ற மிர்னாவுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை, இரவில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுவதை நினைத்துப் பார்த்தவளுக்கு மனம் வேக வேகமாகக் கணக்கிட துவங்கவும் தான் என்ன நடந்து இருக்க முடியும் என்பது புரிந்தது. சற்றும் யோசிக்காமல் புயல் போலத் தன் அறையிலிருந்து புறப்பட்டு எதிர் அறையின் கதவை தட்டி கொண்டிருந்தவளின் மனம் புதிதாக வாங்கிய அடுப்பை போல் ஜெகஜோதியாக எரிந்து கொண்டிருந்தது.
 
 
உள் அறையில் இருந்து வந்து திறப்பதற்குள் மீண்டும் மீண்டும் கதவு தட்டப்படவும் ‘யார் அது பெல் இருக்கும் போது கொஞ்சம் கூட இங்கீதம் இல்லாமல் இப்படித் தட்டுவது... வருவதற்குள் அப்படி என்ன அவசரம்...’ என்ற நினைவோடு வந்தவனுக்குக் கதவு தொடர்ந்து தட்டப்பட்டுக் கொண்டிருந்ததால் எழுந்த எரிச்சல் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய... கதவைத் திறந்தவன், அங்கு நின்றிருந்த மிர்னாவை கண்டு முதலில் ஆச்சரியமாக விழி விரித்தான்.
 
 
பின் தன் நிலை மீண்டு அவளை “வா” என உள்ளே அழைப்பதற்குள் அதற்கெல்லாம் காத்துக் கொண்டு இருக்காமல் அபய்யை தள்ளிக் கொண்டு மிர்னா அறைக்குள் நுழைந்தாள். அவளின் செய்கையில் வியப்பாகப் புருவத்தை உயர்த்தி ஒரு புன்னகை சிந்தியவன் கதவை சாத்திவிட்டு அவளைப் பின் தொடர்ந்தான்.
 
 
அவன் வருவதற்காகவே காத்திருந்தது போலக் கண்களில் கனலோடு நின்றிருந்தவள் அபய் வந்ததும் “உங்களை யார் இதெல்லாம் செய்யச் சொன்னா...?” எனக் கேட்க,
 
 
மிர்னா கதவை தட்டுவதற்கு முன் வெளியில் கிளம்பத் தயாராகிக் கொண்டு இருந்தவன் மேல் சட்டை அணிந்து அதன் பட்டன்களைப் போட்டுக் கொண்டிருந்த போது தான் அதை முழுதாக முடித்து விட்டுச் செல்லும் அளவிற்குக் கூட அவகாசம் கொடுக்காமல் தொடர்ந்து கதவு தட்டப்பட்டுக் கொண்டிருந்ததால் கீழே இருந்து மூன்று பட்டன்கள் மட்டும் போடப்பட்டிருந்த நிலையில் சென்று கதவை திறந்தவன், மற்ற பட்டன்களைப் போடும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க... இப்படி ஒரு கேள்வியை அவள் கேட்டதும் கைகள் அப்படியே வேலை நிறுத்தம் செய்ய...
 
 
“பட்டன் போட்டுகிட்டு இருக்கேன் பேபி... ஏன் நீ போட்டு விடணும்னு ஆசைப்பறீயா...?! கமான்” என இரு கைகளையும் விரித்து அவளை வா என அழைக்கவும், ஏற்கனவே இருந்த ஆத்திரத்தோடு அவனின் இந்தப் பேச்சும் சேர்ந்து அவளைக் கொதிக்கச் செய்தது.
 
 
இரண்டு எட்டில் பாய்ந்து அவனை நெருங்கியவள் சட்டை காலரை பற்றிக் கொண்டு “என்ன நக்கலா...? என்னைப் பாத்தா எப்படித் தெரியுது...?” எனவும், “இவ்வளவு பக்கத்துல இருந்தா அவ்வளவு சரியா தெரியல பேபி... கொஞ்சம் அப்படித் தள்ளி நில்லு பார்த்து சொல்றேன்...” என எதற்கும் அசராமல் கூலாகப் பதிலளித்தவனைக் கண்டு “யூ... யூ...” எனப் பல்லாய் கடித்தாள் மிர்னா.
 
 
“யூக்கு அப்புறம் வி டா செல்லம் மறந்துட்டியா... இதுக்குத் தான் படிக்கும் போது ஒழுங்கா படிக்கணும் இல்லைனா இப்படித் தான் எல்லாம் மறந்து போகும்...” என்று மீண்டும் அசராமல் அடித்தான் அபய்.
 
 
அவனின் குணம் நன்கு தெரிந்தவள் தன்னை வேண்டுமென்றே சீண்டி வம்பிழுக்கிறான் என்பது புரிய, இன்று முழுவதும் இப்படியே தான் பேசிக் கொண்டிருப்பான் என்பதும் தெளிவாகத் தான் வந்த விஷயத்தைப் பேசி விட எண்ணியவள்,
 
 
“முகர்ஜியை என்ன செஞ்சீங்க...” என்று கோபத்தைக் கட்டுப்படுத்திய குரலில் பல்லைக் கடித்துக் கொண்டு மிர்னா கேட்கவும், “முகர்ஜியையா...!? நானா...!?” எனப் போலியாக ஆச்சரியப்பட்டவன், அதிர்ச்சியான குரலில் “சீச்சீ... அவரை நான் எதுவும் செய்யலை... உவ்வக் நான் அப்படிப்பட்ட ஆளும் இல்ல... அவர் அப்படிப்பட்ட ஆளா...” என முகத்தைச் சுழிப்பது போல வைத்து தனக்குள் யோசித்தவன், “அவனா அவன்...” என்றான், மிர்னாவை பார்த்துக் கேலியாக ஒன்றும் தெரியாதது போல.
 
 
“நடிச்சது போதும், எதுக்காக முகர்ஜியை அடிச்சு கையைக் காலை உடைச்சு போட்டீங்க...? உங்களை யார் இதெல்லாம் செய்யச் சொன்னது...?” ஆத்திரத்தில் கொந்தளிக்கும் குரலில் கேட்டவளை பார்த்தவன் “நோ.. நான் அதெல்லாம் செய்யலை... நான் ஏன் செய்யணும்...” என அசால்ட்டாகக் கூறியவனைக் கொஞ்சமும் நம்பாமல் பார்த்தாள்,
 
 
“உன்னைத் தவிர இதை வேறு யாரும் செஞ்சு இருக்க முடியாது...” என மிர்னா அழுத்தத்தோடு கூறவும், உதட்டை பிதுக்கி அப்படியா என்பது போல முகத்தை வைத்துக் கொண்டவன் “ஆனால் நான் ஏன் இதைச் செய்யணும்... எனக்கும் அவனுக்கும் என்ன வாய்க்கா வரப்பு தகராறா இருக்கு..” என்றபடி அங்கிருந்து நகர முயல, அவனை வழிமறிப்பது போல் வந்து நின்றாள்,
 
 
“பொய் சொல்லாதே... ஐ நோ யூ...” என்றவளை பார்த்து “என்னடி வர வர மரியாதை தேயுது...” என வந்ததில் இருந்து ஒருமையில் பன்மையிலும் மாறி மாறி பேசியதை கண்டு கோபம் போல் காட்டிக் கொண்டவனின் குரலில் போலியாகக் கூடக் கோபம் தென்படவில்லை. ஆனால் அதைக் கவனிக்காமல் மிர்னா “ஆமா இப்போ மரியாதை ஒண்ணு தான் குறைச்சல்...” என மெல்ல பல்லைக் கடித்து முணுமுணுத்தவள் “எல்லாம் உனக்கு இது போதும்...” என்றாள் அவனிடம்....
 
 
“எனக்கு இது போதும்னா அப்போ மேடம் வேற யாருக்கு மரியாதை கொடுப்பீங்க... உங்க ரோஹித்துக்கு மட்டும் தானா...?!” என ஏற்ற இறக்கத்துடன் மிர்னாவின் முகத்தைப் பார்த்தபடியே அபய் கேட்கவும், சட்டெனப் பார்வையை அவன் முகத்தில் இருந்து திருப்பிக் கொண்டவள் “உன்னை யாரு முகர்ஜியை அடிக்கச் சொன்னது...” என மீண்டும் கோபத்தோடு பேச்சை மாற்றுவது போலக் கேட்கவும்,
 
 
“நான் தான் அடிக்...” எனத் துவங்கியவனை முடிக்க விடாது “நான் தான் எனக்குத் தெரியும்னு சொல்றேன்ல... நான் ஸ்கூல் படிக்கும் போது என் பின்னாடி தட்டினவனோட கையை உடைச்சவன் தானே நீ... உன்ன பத்தி எனக்குத் தெரியாதா...” என விரல் நீட்டி எச்சரிக்கும் குரலில் இதற்கு மேல் பொய் சொல்லாதே என்பது போல வார்த்தைகளை மிர்னா உச்சரிக்கவும்,
 
 
தலை சாய்த்து ஒரு குறும்பு புன்னகையுடன் அவளைப் பார்த்து “அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா பேபி...” என்று கேட்டவனின் குரல் அத்தனை மென்மையோடு குழைந்து ஒலித்தது.
 
 
அதில் அவனை முறைத்தபடி “ஆமா, எதையும் நான் மறக்கலை... எல்லாமே, எல்லாமேஏஏஏ நல்லா ஞாபகம் இருக்கு...” என்று கூர்மையாக அவன் கண்களைப் பார்த்தபடி பேசியவள், அந்த எல்லாமேவில் அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து உச்சரிக்கவும், அவள் சொல்ல வந்த செய்தி தவறாமல் அபய்யை போய்ச் சேர்ந்தது.
 
 
அதில் சில நொடிகள் முகம் இருள தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டவன் சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு “சோ, நீ இன்னும் இன்னும் என்னை மறக்கலை... ரைட்...” என்றான் கண் சிமிட்டியபடியே.
 
 
அபய்யின் கேள்வியில் ஒரு கசந்த புன்னகையை இதழ்களில் தவழ விட்டவள் “நிச்சயமா மறக்கலை... எதிரிகளைக் கூட மறந்துடலாம், ஆனால் துரோகிகளை என்னைக்கும் மறக்கவே கூடாது... அவங்க செஞ்ச துரோகத்தையும் சேர்த்து தான்...” என்று அழுத்தம் திருத்தமாக அவன் முகத்தைப் பார்த்தபடியே உச்சரித்தாள்.
 
 
இனி இங்கு நிற்பது வீண் என்பது போல அங்கிருந்து விலகி வெளியேற முயன்றவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தவன் “அந்த முகர்ஜியை சுக்கல் சுக்கலா மூஞ்சி முகரையைப் பெத்தது நான் தான்...” என்றான் படு ஸ்டைலாக.
 
 
ஏற்கனவே அப்போது தான் குளித்துவிட்டு வந்து சரியாகத் துவட்டாமல் தலையில் ஈரம் கூடக் காயாமல் வெளியே கிளம்புவதற்காக அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் மேல் இரண்டு பட்டன்களைப் போடாமல் இருக்க... திறந்த மார்புடன் உடற்பயிற்சியின் உதவியால் அந்த 38 வயதிலும் அழகான உடற்கட்டோடு ஆணழகனாக நின்றிருந்தவனின் இந்தச் செய்தியும் அதைக் கூறியபடியே அருகில் இருந்து ஸ்டைலாக எடுத்து அணிந்த குளிர் கண்ணாடியும் சேர்ந்து அவனைப் பேரழகணாகக் காட்ட... ஒரு நொடி தன்னையே மறந்து அந்த அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் மிர்னா.
 
 
ஆனால் நொடியில் உண்மை நிலவரம் உரைக்க, தன்னை மீட்டுக் கொண்டவள் எங்கே தன்னைக் கண்டு கொண்டு விடுவானோ என்று எண்ணி அந்தக் கோபத்தையும் சேர்த்து அவன் மீதே காட்டியபடி கோபமாக அவனை வேகத்துடன் நெருங்கியவள்
 
 
“ஏன்...? நான் கேட்டேனா... உங்ககிட்ட வந்து கேட்டேனா...? இதெல்லாம் செய்யச் சொல்லி...” என்றபடி ஒவ்வொரு வார்த்தைக்கும் வேகமாக அபய்யை நெருங்கவும், சட்டென இரண்டடி பின்னுக்கு நகர்ந்தவன் “பேபி... நான் மட்டும் இப்போ நகர்ந்து இருக்கலைனா...” என்றபடி கண்களால் அவர்கள் இருவரையும் காட்ட... அப்போதே தான் செய்து கொண்டிருந்த காரியம் மிர்னாவின் புத்தியில் உரைத்தது.
 
 
அதில் முகம் இருள தலை கவிழ்ந்து நின்றவளின் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன் “உன்னை அப்படி விட்டுடுவோமா பேபி... சும்மா பார்த்தாலே மூஞ்சை பேத்துருவேன்... இவனை இத்தோடு விட்டு இருக்கக் கூடாது, இனி இருக்கு இவனுக்கு...” என்று முகர்ஜியை பற்றிப் பேச ஆரம்பிக்கும் போது அந்த வெண்ணிற முகம் செந்தனலாய் ஜொலிக்கப் பற்களைக் கடித்தபடி அபய் கூறினான்.
 
 
அது வரை தன் செயலை எண்ணி தனக்குள்ளேயே குறுகிக் கொண்டு இருந்தவள், அபய்யின் இந்த வார்த்தைகளில் வெகுண்டு எழுந்து வேகமாக அவனின் கைகளைத் தட்டி விட்டவள் “ஒரு மண்ணும் நீ ****, இத்தனை வருஷம் என்னைப் பார்த்துகிட்ட எனக்கு இனியும் என்னைப் பார்த்துக்கத் தெரியும்... இவ்வளவு நாள் எவன் வந்தான் என்னைப் பாதுகாக்க, புதுசா எங்கிருந்து வந்துச்சு இந்த அக்கறை... நீ தீடீர்னு வந்து குதிச்சதும் அய்யாசாமி என்னை நீங்க தான் காப்பாத்தணும்னு காலில் வந்து விழுவேன்னு நினைச்சியா..?! போடா...” என்றபடி அலட்சியமாகக் கூறிவிட்டு வேகமாகக் கதவை திறந்து கொண்டு வெளியேறினாள் மிர்னா.
 
 
மிர்னா உதிர்த்து விட்டுச் சென்ற வார்த்தைகளில் யோசனையாக நின்றவன் அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு இருந்தான் வெகுநேரம். ‘இவள் ஏன் தனியே அனைத்தையும் சமாளித்து இருக்க வேண்டும்...?’ என்ற எண்ணமே பிரதானமாய் இருந்தது.
 
 
தன் அறைக்குள் சென்று அமர்ந்தவளுக்கு மனம் கொதித்துக் கொண்டிருந்தது. ‘இத்தனை வருடங்களாக இல்லாத அக்கறை இப்போது எங்கிருந்து வந்தது... இன்னைக்குத் தீடீர்னு இவன் வந்து குதித்து அவனை அடித்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா... இல்லை இத்தனை வருஷமா நான் பட்ட துன்பங்கள் தான் இல்லாமல் போய்விடுமா...?!’ என்றெல்லாம் மனம் நினைக்க ஏதேதோ நினைவுகள் எழுந்து அவளை அலை அலையாகச் சூழ்ந்தது.
 
 
எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ திடீரெனப் பிரத்தியேகமான சத்தத்துடன் ஒளிபரப்பப்படும் முக்கியச் செய்திகளுக்கான ஓசை மீண்டும் மீண்டும் காதில் விழவும் தன் கவனத்தைத் தொலைக்காட்சியின் பக்கம் திருப்பயவளின் கண்கள் அங்குக் கண்ட காட்சியில் ஆச்சர்யத்தில் விரிந்தது.
 
 
காரணம் அங்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முகர்ஜியை காண, துக்கமான முகத்துடன் கையில் பூச்செண்டோடு சென்று கொண்டிருந்தான் அபய். அதைத்தான் பரபரப்பாகத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.
 
 
“பிஸினஸ் ஐகான் அபய் வரகுணன் பிரபல தயாரிப்பாளர் முகர்ஜியை காண மருத்துவமனைக்கு வருகை...” என மீண்டும் மீண்டும் முக்கியச் செய்தியாக இதுவே ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்க... பின்னணியில் அபய் கவலைபடிந்த முகத்தோடு நடந்து சென்று முகர்ஜியின் அறையில் நுழையும் காட்சி தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
 
 
“அடப்பாவி அடிச்சும் போடுவே... ஹார்லிக்ஸும் வாங்கித் தருவீயாடா நீ... உலக நடிப்புடா சாமி...” என மெல்ல முணுமுணுத்தவள் அங்குத் தெரிந்த அபய்யையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
பத்து நிமிடங்களில் வெளியில் வந்தவனைச் செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள... ஒவ்வொருவரும் கேள்விகளைக் கேட்டு முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டவன் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக “ரொம்பக் கவலையா இருக்கு... எனக்கு இவரைச் சமீபமாகத் தான் தெரியும்... ரொம்ப நல்ல மனிதர், (“அவர் ஒரு சோக்காலி... சீக்காலி இல்லை...” என மயில்சாமி குரலில் சொல்வது போலவே மிர்னாவுக்குக் கேட்டது)
 
 
இவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்க வேண்டாம்... காவல்துறை இந்த நிலைக்குக் காரணமானவங்க யாருன்னு விரைவில் கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பாங்க என்ற நம்பிக்கை எனக்கு ரொம்பவே இருக்கு... மிஸ்டர் முகர்ஜி விரைவில் குணமாக இறைவனை வேண்டுகிறேன்...” என்றபடி அங்கிருந்து விடைபெற முயன்றவனைத் தடுத்தவர்கள்
 
 
“சார் உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா...? யார் அவரைத் தாக்கியதுனு ஏதாவது தெரிய வந்ததா...” எனக் கேட்க, ‘அடிச்சவர்கிட்டேயே ஆள் அட்ரஸ் கேக்கறீங்களேடா...’ என்று விக்கி மனதிற்குள் பேசியவாறு முகத்தை அப்பாவியாக வைத்தபடி நின்று இருந்தான்.
 
 
“இல்ல... பாவம் அவருக்கு அது எதுவும் நினைவில்லை... கடைசியாகப் பார்ட்டி முடிந்து லிப்ட்டில் ஏறியது வரைக்கும் தான் அவருக்கு நினைவு இருக்குன்னு சொன்னார்...” என்று கவலை குரலில் பதில் அளித்து விட்டு நகர்ந்தவனின் மனக்கண்ணில் அன்று மிர்னா முகர்ஜியை சத்தம் போடாமல் மிரட்டி விட்டுச் சென்றதும் அங்கேயே அவனை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டும் என எழுந்த ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டவன் இப்போது தான் இந்தியாவில் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறோம்...
 
 
தான் இவன் யார் என்னவென்று முழுதாகத் தெரியாமல் கை வைக்கப் போக, அது ரோஹித்தோடு ஒரு அமைதியான வாழ்க்கையில் இருப்பவளை எந்தப் பிரச்சினையிலும் சிக்க வைக்க கூடாது என எண்ணி நொடியில் விக்கிக்குக் கண்களைக் காண்பித்துத் தனியாக அழைக்கவும் அபய்யின் ஒவ்வொரு செய்கையையும் புரிந்து வைத்திருந்தவன் உடனே அதற்குக் கட்டுப்பட்டு யாரும் தன்னைக் கவனிக்காத வகையில் தனியாக ஒதுங்கி அபய்யின் கட்டளைகளைக் கேட்டு அதை நிறைவேற்றினான்.
 
 
அவனின் திட்டத்தின் பேரில் அந்தத் தளம் முழுவதும் இருந்த சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கபட்டு, கார் பார்க்கிங்கில் இருப்பதும் அவ்வாறே செய்யப்பட, எந்த ஒரு தடையமும் இல்லாமல் லிப்ட்டுக்குள் நுழைந்த முகர்ஜியை அதே லிப்ட்டின் வழியாக அண்டர் கிரவுண்டில் இருந்த கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றவன் அவனைத் தன் கோபம் தீரும் மட்டும் பின்னி எடுத்துவிட்டான்.
 
 
இவை எதுவும் முகர்ஜிக்கு நினைவு இல்லாமல் போகக் காரணம் அவர் முன்பே அதிகப் போதையில் இருந்ததோடு மட்டுமல்லாமல் லிப்ட்டிற்குள் நுழைந்த அடுத்த நொடி முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்யப்பட்டதும் தான். இரண்டும் சேர்ந்ததில் பாவம் அவருக்கு என்ன நிகழ்ந்தது...!? ஏன் நிகழ்ந்தது...!? என்பது கூட இந்த நிமிடம் வரை தெரியவில்லை.
 
 
ஆனால் வலது கையின் எலும்பு பல துண்டாக உடைந்து இருந்தது. அறுவை சிகிச்சை மூலம் எவ்வளவு தான் அதைச் சரி செய்ய முயன்றாலும் கூட மீண்டும் பழையபடி அதைச் செயல்பட வைக்க முடியாது என மருத்துவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
 
 
அதே போலத் தான் ஸ்டிக்கின் உதவி இல்லாமல் இனி அவரால் நடக்கவே இயலாது, இவை அனைத்தையும் மருத்துவரின் வாய்மொழி மூலமே கேட்டு அறிந்து கொண்ட அபய் உள்ளுக்குள் பொங்கிய சந்தோஷத்தோடும் இதழில் பூத்த ரகசிய புன்னகையோடும் மருத்துவமனையிலிருந்து வெளியேறினான்.
 
 
மீண்டும் தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்குள் திரும்பிய அபய்யை ரிசப்ஷனில் வைத்து மிர்னா “இங்கேயும் வந்துட்டியா நீ...? உன்னை யார் இங்க வர சொன்னது... என்னை நிம்மதியாக வாழவே விடக் கூடாதுன்னு முடிவோடு இருக்கீயா...?” என உதயச்சந்திரனை லெப்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்த காட்சியே வரவேற்றது.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 6 
 
 
மிர்னா உதயச்சந்திரனிடம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டு தன் நடையை நிறுத்திய அபய் அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்க... மிர்னாவின் இத்தனை திட்டுகளுக்கும் ஒரு வார்த்தை கூடப் பதில் அளிக்காமல் உதயச்சந்திரன் அமைதியாகவே நின்றிருந்தான்.
 
 
 
அவளே கத்தி கத்தி ஓய்ந்து போய் “உன்கிட்ட எல்லாம் பேசுறது சுத்த வேஸ்ட்...” எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட, அப்போதும் கூட அவள் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தவன் மிர்னாவின் பின்னேயே வெளியேறினான்.
 
 
அவர்கள் இருவரும் கார் பார்க்கிங் செல்லும் வழி காண பாதையை நோக்கி அவர்களின் அருகில் இருந்த கதவின் வழியே வெளியேறியதால் இருவருமே அபய் அங்கு வந்ததைக் கவனிக்கவில்லை.
 
 
ஆனால் தான் வந்ததில் இருந்து அனைத்தையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தவனின் புருவங்கள் யோசனையோடு சுருங்கியது. அவற்றைப் பற்றிச் சிந்தித்தபடியே தன் அறைக்குள் நுழைந்தவன் தன்னோடு வந்த விக்கியை பார்த்து திரும்பவும்,
 
 
“புரியுது பாஸ்... அவனுடைய பேரு முதல் கொண்டு எல்லாத் தகவல்களையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்க முன்னே கொண்டு வந்து வைக்கிறேன்...” எனக் கற்பூரமாகப் பதிலளித்தவனை ஒரு நக்கலான பார்வை பார்த்தவன்,
 
 
“ஒரு ஆணியும்...” என்றபடியே அபய் விக்கியை பார்த்துச் சைகை செய்ய... இஞ்சி தின்றது போலானது விக்கியின் முகம். “அவன் பேரு உதயச்சந்திரன் என்பதில் இருந்து அவன் யாரு என்ன என எல்லா வெங்காயமும் எனக்குத் தெரியும்... ஓவர் ஸ்மார்ட்டா இருக்காதே விக்கி, அது உனக்குச் சூட்டாகாது... நான் சொல்றதை மட்டும் செய்...” என்றவன்,
“கிட்டத்தட்ட நான்கு நாட்களாக ரோஹித்தும் சுபி குட்டியும் என் கண்ணில்படவே இல்லை... அவங்க எங்கே என்னன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகணும்...” என்று கூறிவிட்டு குளியலறைக்குள் போக,
 
 
“ஒருத்தன் அறிவாளியா இருந்தா உங்களுக்கு எல்லாம் பொறுக்காதே... அவனை இப்படி மொக்கை செய்ய வேண்டியது... பொறாமை பாஸ், உங்களுக்கு என் மேலே...” எனத் தனக்குள் முணுமுணுத்துக் கொண்ட விக்கியின் கண்கள் அபய் சென்ற திசையைப் பார்த்து தன் தாடையை யோசனையாகத் தடவி கொண்டே ஏதோ சிந்தித்தபடி சில நொடிகள் நின்றிருந்தவன் உடனே அங்கிருந்து வெளியேறினான்.
 
 
அடுத்தப் பத்து நிமிடத்தில் அபய் முன் வந்து அவன் கேட்ட விவரங்களோடு நின்றான் விக்கி.
 
 
“அவங்க ரெண்டு பேரும் மூணு நாள் முன்னே மும்பை கிளம்பி போயிட்டாங்களாம் பாஸ்... நம்ம ஹோட்டலில் இருந்து தான் கேப் புக் செஞ்சு கொடுத்து இருக்காங்க ஏர்போர்ட் போக...” என்று தான் சேகரித்த தகவலை கூறியவனை அபய் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன்,
 
 
“புரியுது பாஸ், அதுக்குள்ளேயா இவ்வளவு தகவலை சேகரிச்சேன்னு தானே பார்க்கறீங்க...” எனப் பெருமையோடு தலையைக் கோதிக் கொண்டவன்,
 
 
“நான் கூட வெளியில் போய் அலைய வேண்டி இருக்கும்னு நினைச்சேன்... ஆனா ரிசப்ஷன்ல இருக்க நம்ம ஆளுகிட்ட சும்மா ஒரு பிட்டுப் போட்டேன்... அப்போ தான் நான் வெளியே போய்க் கஷ்டபட எந்த அவசியமும் இல்லைன்னும் அவங்களுக்குக் கேப் புக் செஞ்சு கொடுத்ததே நம்ம லட்டு குட்டி தானும் தெரிய வந்தது...” என ரொம்பவே தன்னைப் பெருமையாகப் பேசிக் கொண்டு சென்றவனை, எதுவும் பேசாமல் அபய் பார்த்துக் கொண்டு இருக்க... என்ன பாஸ் என்பது போல விபுரியாமல் விக்கி பார்த்தான்.
 
 
“இந்த இரண்டு லைன் தெரிஞ்சுக்கிட்டு வர உனக்கு டென் மினிட்ஸ்...” என்று கேட்கவும், விக்டருக்கு சப்பென்று போனது. அதானே உங்களைத் திருப்தி படுத்தவே முடியாது... இதை நான் ஒரு நிமிஷத்துல செஞ்சு முடிச்சு இருந்தாலும் இதுக்கா ஒரு நிமிஷம்னு கேட்கிற ஆளாச்சே...” என வாய்விட்டே புலம்பினான்.
 
 
“அப்போ நீ அவ்வளவு லேட்டா ஒவ்வொரு வேலையும் செய்றேன்னு அர்த்தம்...” என விக்கிக்கு கொஞ்சமும் சலிக்காமல் சாதாரணமாகப் பதில் அளிப்பது போலவே கவுண்டர் கொடுத்துக் கொண்டிருந்தான் அபய்.
 
 
அதில் போலியாக அபய்யை முறைத்தவன், “இப்போவே இந்த அவமானத்தைத் துடைக்க, மும்பாயில் இருக்க ரோஹித் வீட்டு விலாசத்தில் இருந்து அத்தனை துண்டு துக்கடா சமாச்சாரங்களையும் அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்க முன்னே கொண்டு வந்து வைக்கலை... என் பேரு விக்கி தி கிரேட் இல்ல...” என்று தொடையைத் தட்டி சபதம் செய்து விட்டு நகர முயன்றவனைச் சொடுக்கிட்டு நிறுத்தினான் அபய்.
 
 
“நான் கேட்டேனா...? உனக்கு எதுக்கு இந்தத் தேவை இல்லாத வேலை... ஆல்ரெடி சொன்னது தான்...” என்றவனை என்ன என்பது போல விக்கி பார்க்க... “டோர் கிளோஸ்...” என்பது போலச் சைகை செய்தான்.
 
 
“வேண்டாம் பாஸ்... வேண்டாம், இதுக்கு மேலே அசிங்கப்பட நான் தயாரா இல்லை...” எனக் கோபமாக நடப்பது போல வேகமாகக் கதவை நோக்கிச் சென்றவன்
 
 
“மதிய நேரம் ஆயிடுச்சு... இன்னும் லஞ்ச் ஆர்டர் செய்யலையா பாஸ்...” எனக் கேட்டபடி அங்கிருந்து மெதுவாக அவனைப் பார்க்கவும், அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த புன்னகையை வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான் அபய்.
 
 
“இவ்வளவு தானாடா உன் ரோஷம்...? சாப்பாடை பார்த்தா மத்ததெல்லாம் காணாமல் போய்டுமா...?” என்றபடியே எழுந்தவன், ‘நீயே ஆர்டர் செய்” என்பது போலச் சைகையில் சொல்லிவிட்டு சென்று விட்டான்.
 
 
“பின்னே சோறு தான் முக்கியம் பாஸ்... எனக்கும் பசிக்கும்ல...” என மெல்ல முணுமுணுத்தபடி மெனு கார்டில் ஆர்டர் செய்தான் விக்கி.
 
 
அன்று திட்டமிட்டபடி படக்குழு மொத்தமும் மும்பை கிளம்பி விட்டு இருந்தனர். அபய்க்கு வேலைகள் இன்னும் இங்கு இருந்ததால் நான்கு நாட்கள் கழித்தே அவன் மும்பைக்குக் கிளம்பினான்.
 
 
மும்பை சென்று இறங்கியவனுக்கு அவன் தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளைச் சரியாக இருக்க, அதற்கு நடுவில் மிர்னாவை பற்றியோ அவளைப் பார்க்க வேண்டும் என்றோ எந்த எண்ணமும் இல்லாமல் போக, தன் போக்கில் தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் அவன்.
 
 
ஒரு மாதம் சென்றிருந்த நிலையில் ஒரு நாள் மாலை தன் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அபய் சிக்னலுக்காகக் காத்திருந்த போது எதிர்பாராமல் அவன் கண்களில் எதிரில் இருந்த ஷாப்பிங் மாலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த ரோஹித்தும் அவனை அணைத்துப் பிடித்தபடி உடன் வந்து கொண்டிருந்த பெண்ணும் கண்ணில் பட்டனர்.
 
 
சற்றும் எதிர்பாராமல் தான் கண்ட அக்காட்சியில் சில நிமிடங்கள் அதிர்ந்து உறைந்த அபய். பின் தன்னை நிதானித்துக் கொண்டு தான் கண்டது நிஜம் தானா...?! எனத் தெரிந்து கொள்ள எண்ணி மீண்டும் அங்குப் பார்க்கவும், அங்கு யாரையும் காணவில்லை.
 
 
தன் பார்வையைச் சுழல விட்டவனுக்குச் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு காரில் ரோஹித்தும் அந்தப் பெண்ணும் ஏறுவது தெரிந்தது. தன் காரை எதிர் பக்கமாக வளைத்துத் திருப்பிக் கொண்டு அந்தக் காரின் அருகில் செல்ல எண்ணி அபய் முயலுகையில் அதற்குள் ரோஹித் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான்.
 
 
அதைப் பின் தொடர்ந்து அந்த மாலை நேரத்து போக்குவரத்தின் காரணமாகச் சற்று இடைவெளி விட்டே தொடர்ந்தவன் ரோஹித்தும் அப்பெண்ணும் ஒரு ஹோட்டலுக்குள் நுழைவது தெரிய, சற்றும் யோசிக்காமல் அவனும் அங்கு உள்ளே நுழைந்தான்.
 
 
நட்சத்திர உணவகங்களுக்கே உரிய முறையில் இருள் கவிழ்ந்து மெல்லிய ஒளி மட்டும் சிந்திக் கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அந்த உணவு விடுதியில் தானும் சென்று ஒரு ஓரமாக இருந்த இருக்கையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்து அபய், அவனுக்கு இரண்டு மேஜைகளில் தள்ளி அமர்ந்திருந்த ரோஹித்தையும் அப்பெண்ணையும் கண்காணித்ததில் அவர்கள் இருவருக்குள்ளும் அத்தனை நெருக்கமும் அன்பும் இருப்பது ஐயம் இன்றி தெளிவாகியது.
 
 
அதிலும் அப்பெண்ணை ரோஹித் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்வதிலும் அவளுக்கு உணவு பரிமாறுவதிலும் இருந்த காதலை அபய்யால் நன்கு உணர்ந்து கொள்ள முடிந்தது.
 
 
ரோஹித்துக்குக் கொஞ்சமும் குறையாத வகையில் அப்பெண்ணும் அவனிடம் அதே காதலோடு இருப்பதும் அபய்க்கு பார்க்கும் போதே புரிந்தது. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கண்கள் கோபத்தில் சிவந்து போக... கை முட்டிகள் இறுக அமர்ந்து இருந்தவனுக்கு ரோஹித்தின் முகத்தை அடித்து உடைக்க வேண்டும் என்ற அளவுக்கு வேகமும் வெறியும் எழுந்தது.
 
 
கண்முன்னே மிர்னாவுக்கு ரோஹித் இழைத்துக் கொண்டிருந்த துரோகத்தைக் காண முடியாதவன் இதற்கு மேல் இங்கு ஒரு நொடி தாமதித்தாலும் நிச்சயம் ரோஹித்தின் உயிர் அவன் உடலில் தங்காது என்பது புரிய... இது மிர்னாவிற்கு வேறு வகையில் துன்பத்தை அளிக்கும் என்ற ஒரே காரணத்திற்காக அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
 
 
காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவனின் மனம் உலைகளனாகக் கொதித்துக் கொண்டிருந்தது. கண்முன்னே நடக்கும் துரோகத்தைக் கண்டும் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டு வந்ததை அவனால் கொஞ்சமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
இவன் மேல் கை வைத்தால் மிர்னா வருந்துவாள் என்ற ஒரே காரணம் மட்டுமே அங்கு அவனைத் தடுத்து நிறுத்தி இருந்தது. இதே யோசனைகளோடு வீடு சென்று சேர்ந்தவனுக்கு இரவெல்லாம் தூக்கம் என்ற ஒன்று இல்லாமல் தூர போனது.
 
 
மனம் முழுவதும் ஏதேதோ எண்ணங்கள் அலைக் கழிக்க இரவு முழுவதும் அறையின் நீள அகலங்களைத் தன் நடையால் அளந்து கொண்டிருந்தான். ஒரு துளி கூடத் தூக்கம் இல்லாமல் கழித்த இரவு கூட அவனுக்கு எரிச்சலை தரவில்லை, மனம் முழுவதும் மண்டிக் கிடந்த கோபமும் வெறுப்பும் அதைக் காட்ட முடியாத துயரமும் அவன் மிர்னாவுக்கு இழைக்கும் துரோகத்தைக் கண்ணார கண்ட பின்னும் கைகளைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய நிலையும் சேர்ந்து ஒரு வித எரிச்சலையும் ஆத்திரத்தையும் உண்டு செய்ய... பாவம் வேலை செய்பவர்கள் அனைவரையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான்.
 
 
‘இன்று நிச்சயம் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்’ என்ற எண்ணத்தோடு அலுவலகம் கிளம்பி சென்று கொண்டிருந்தவனின் பார்வையில் மீண்டும் பட்டனர் ரோஹித்தும் அப்பெண்ணும்.
 
 
ரோஹித்தின் காரில் இருந்து இறங்கி செல்லும் பெண்ணுக்கு காரின் உள்ளே அமர்ந்தபடி ரோஹித் பறக்கும் முத்தம் ஒன்றை அளிப்பதும் அதைக் கண்டு அப்பெண் நாணி சிவப்பதுவாக நின்றிருந்த காட்சி கண்களில் பட...
 
 
அது இப்போதிருக்கும் ஆத்திரத்தை மேலும் எரிமலையாக்க எங்கே வெடித்துச் சிதறி விடுவோமோ என்ற அளவிற்கு ஆனது அபய்யின் நிலை. இப்போது ரோஹித்தை நேருக்கு நேர் சந்தித்தால் அது எத்தகைய விளைவில் கொண்டு சென்று விடும் எனக் கொஞ்சம் யோசிக்க முடியாதவன், அப்பெண்ணிடம் பேசி பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான்.
 
 
அவளை “இன்னொரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாட கொஞ்சமும் அசிங்கமாக இல்லையா உனக்கு... நீயும் ஒரு பெண் தானே, எப்படி இப்படிச் செய்ய மனம் வந்தது...” எனக் கேட்க துடித்த நாவை கட்டுப்படுத்த விரும்பாமல் ரோஹித் கிளம்புவதற்காகக் காத்திருந்தவன், பின் அந்த அழகிய பொட்டிக் முன் சென்று தன் காரை நிறுத்தி விட்டு இறங்க முயல்கையில் அவ்வழியே சென்ற காரில் மிர்னா அமர்ந்திருப்பது தெரிந்தது.
 
 
முதலில் மிர்னாவிடம் இதைப் பற்றிக் கூற வேண்டும் என்ற எண்ணமே அப்போது தான் அவனுக்குத் தோன்றியது. நேற்று பார்த்த காட்சியிலேயே மனம் உழன்று கொண்டிருந்ததில் இதைப் பற்றி மிர்னாவிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. உடனே மிர்னாவை தொடர்ந்து சென்றான் அபய்.
 
 
பத்து நிமிட பயணத்தில் வந்த மூன்றடுக்கு வளாகத்தில் சென்று காரை நிறுத்தியவள் இறங்கி உள்ளே செல்வதைக் கண்டு அவளைப் பின் தொடர்ந்து முதல் மாடிக்கு சென்றவன், ஒரு அலுவலகத்திற்குள் அவள் நுழைவதை கண்டு அவளைப் பின்தொடர்ந்தான்.
 
 
அங்கு அவளுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டபடியே ஒரு அறைக்குள் அவள் செல்வதையும் அந்த அறையின் கதவில் இருந்த பெயர் பலகையையும் கண்டவனுக்கு இது மிர்னாவின் அலுவலகம் என்பதே அப்போது தான் தெரிந்தது.
 
 
அடுத்த நொடி தன்னைத் தடுக்க வந்தவர்களைத் தள்ளி விட்டுவிட்டு அறைக்குள் புயலெனப் பிரவேசித்து இருந்தான் அபய். அப்போதே வந்து தன் இருக்கையில் அமர்ந்தவள் தீடீரென கேட்ட சத்தத்தில் நிமிர, தன் அறைக்குள் அபய் அனுமதி இன்றி நுழைந்ததும், அலுவலகத்தில் எடுபிடி வேலை செய்வதற்காக இருந்த பையன் அவன் பின்னே ஓடி வந்து நிற்பதும் தெரிய... அவனைப் போ என்பது போலச் சைகை காட்டியவள் ‘என்ன?’ என்பது போல அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
“உன்னைச் சுத்தி என்ன நடக்குதுன்னு கூடத் தெரியாம என்ன செஞ்சுட்டு இருக்கே நீ...?” என்று எடுத்த எடுப்பில் அபய் தன் கோபத்தை மிர்னாவிடம் காட்டவும், அதற்கு நேர்மாறாகக் கொஞ்சமும் கோபப்படாமல் அமைதியாக என்னைச் சுத்தியா...?! என்பது போலப் பார்வையைத் தன்னைச் சுற்றி சூழல விட்டவள், ‘இப்போ என்ன சொல்ல வர்ற...?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
“உனக்குத் துரோகம் நடக்குது மினி... உன்னை அவன் ஏமாத்திக்கிட்டிருக்கான்...” எனப் படபடத்தவனைக் கண்டு “எவன்...?” என்றாள் கொஞ்சமும் பதட்டம் இல்லாத அமைதியான குரலில்.
 
 
“எல்லாம் உன்...” என்று தொடங்கியவன், அதற்கு மேல் அந்த வார்த்தையைத் தொடர பிடிக்காமலா இல்லை தொடர முடியாமலா என்று அவனுக்கே தெரியாமல் சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “ரோஹித்” என்றான் பல்கலை கடித்தபடி.
ரோஹித் என்பதில் வியப்பாகப் புருவத்தை உயர்த்தியவள், “எப்படி...?” என்றாள் புரியாத குரலில், “ஆமா ரோஹித் தான்... உனக்குத் துரோகம் செஞ்சுட்டு இருக்கான்... குத்துக் கல்லாட்டம் நீ இருக்கும் போது இன்னொருத்தி கூடச் சுத்திட்டு இருக்கான்...” என மீண்டும் படப்படத்தவனைக் கண்டு ஒரு எள்ளல் புன்னகையைச் சிந்தியவள் “சோ” என்றாள்.
 
 
“வாட், சோ வா...? ஆர் யூ மேட்... மினி..” என அழைத்து மீண்டும் பேசத் துவங்கியவனைக் கை உயர்த்தித் தடுத்து நிறுத்தியவள், “என் பேரு மிர்னா... கால் மீ மிர்னா...” எனவும், “ஷிட்... இது இப்போ ரொம்ப முக்கியம்...” என எகிறியவனுக்கு, “எனக்கு முக்கியம் தான் மிஸ்டர்... மூணாவது மனஷன் எல்லாம் என்கிட்டே உரிமை எடுத்துக்க நான் அனுமதிக்க மாட்டேன்...” என்றாள்.
 
 
“யாரு நா... நான் மூணா...” என்று ஆத்திரத்தோடு கேட்டவனின் கேள்வியைக் கூட முடிக்க விடாமல், “ரோஹித் எனக்குத் துரோகம் பண்ணினா அது எங்க இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம்... இதில் நீங்க எங்கே வரீங்க மிஸ்டர்...” எனக் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் கேள்வி கேட்க,
 
 
“என்ன உளறல் மினி இது... உன்னுடைய வாழ்க்கை பிரச்சனை இது...” எனப் பேசத் துவங்கியவனை மீண்டும் கையுயர்த்தித் தடுத்தவள் “அதே தான் நானும் சொல்றேன்... இது என்னோட வாழ்க்கை, எதுவா இருந்தாலும் எனக்கு என் வாழ்க்கையை வாழ தெரியும்...
 
 
சம்பந்தமே இல்லாம இதில் நீங்க ஏன் நுழையறீங்க...? என்னைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட நீங்க யார் சார்...?” என ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து நிதானத்தோடு கேட்டவளை கண்டவனுக்கு இதற்கு என்ன பதில் அளிப்பது எனத் தெரியவில்லை.
 
 
‘புரிந்து பேசுகிறாளா...?! இல்லை புரியாமல் பேசுகிறாளா...?! என்ன உளறல் இது, என் மேல் இருக்கும் கோபத்தைக் காட்ட இதுவா நேரம்... அவளின் வாழ்க்கை இங்குப் பிரச்சனை ஆகி கொண்டிருக்கும் போது அதற்குரிய நடவடிக்கைகளில் இறங்காமல் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறாளே...!!’ என ஒரு வித சலிப்பு மனதிலே எழ,
 
 
“நான் சொல்ல வருவது உனக்குப் புரியுதா...! இல்லையா...?” என மீண்டும் படபடக்கத் துவங்கியவனை அதே நிதானத்தோடு எதிர்க் கொண்டவள், “நல்லாவே புரியுது மிஸ்டர், ரோஹியை ரக்ஷனா கூடப் பாத்திருக்கீங்க அவ்வளவு தானே... இப்போ என்ன அதுக்கு...” எனக் கேட்டவளை கண்டு திகைத்தவன்
 
 
“ரக்ஷனா... அந்தப் பொண்ணு பேரு ரக்ஷனா வா...?! அப்போ அவளைப் பத்தி உனக்கு முன்பே தெரியுமா...? தெரிஞ்சே அமைதியா இருக்கீயா...?! ஏன்டா அப்படி என்ன தேவை உனக்கு, இப்படி எல்லாம் சகித்துக் கொண்டு நீ வாழ வேண்டிய அவசியமென்ன...? நீ அப்படிப்பட்ட ஆள் இல்லையே, ஏன் இப்படி...
 
 
எதுவாயிருந்தாலும் உன் சுயமரியாதையை யாருக்காகவும் விட்டு கொடுக்கும் ஆளில்லையே... என்னடா நடக்குது உன் லைஃப்ல...” என நிஜமான கவலை தோய்ந்த குரலில் தன் மினியின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என அறிந்து கொள்ளும் கவலையோடு அவளை நெருங்கியவனிடம் இருந்து நாற்காளியோடு நகர்ந்தவள்,
 
 
“உங்கள் லிமிட்ல நீங்க இருங்க மிஸ்டர்... ஆபீஸ் உள்ளே என்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்ததே முதல் தப்பு... ஏதோ சமூகத்தில் பெரிய மனுஷன் என்ற பேர் இருக்கும் ஒரே மரியாதைக்காக உங்ககிட்ட பேசிகிட்டு இருக்கேன்... என்னோட வாழ்க்கையைப் பத்தி கேள்வி கேட்கவும் கவலைப்படவும் உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தா...? நீங்க இதில் தலையிடாதீங்க...” என்றவள்
 
 
மீண்டும் அவன் பேசத் துவங்கவும் அதைக் கேட்க விருப்பம் இல்லாமல் அங்கிருந்து எழுந்து வெளியில் செல்ல முயல, அவளின் கைகளைப் பற்றித் தடுத்தவன்
 
 
“மினி என் மேலே உனக்கு இருக்கிற கோபம் எனக்கு நல்லாவே புரியுது, அதை வெளிப்படுத்துவதற்கான நேரம் இது இல்ல டா... ப்ளீஸ் அண்டர்ஸ்டாண்ட் உன்னுடைய வாழ்க்கை இப்ப பிரச்சனையா இருக்கு, அதில் தான் இப்போ நம்ம கவனம் இருக்கணும்... உன் வாழ்க்கையை மறுபடியும் நாம மீட்டு எடுக்கணும்...” என்று புரிய வைக்க முயல,
 
 
“குட் ஜோக்... என் வாழ்க்கை பிரச்சனையாகிறது பத்தி நீங்க கவலைப்படாறீங்க...” என ஒரு கசந்த முறுவலுடன் பேசியவளின் வார்த்தையில் லேசாக ஒரு வலி எட்டிப் பார்த்ததோ என அவன் யோசிக்கும் முன்பே அந்த வலி காணாமல் போய் அவள் கண்களில் ஒரு திமிர் வந்து அமர்ந்திருந்தது.
 
 
மிர்னாவின் வார்த்தைகளைக் கேட்ட நொடி அபய்யின் முகம் சற்று இருண்டு தான் போனது. ஆனால் நொடியில் தன்னை மீட்டெடுத்து கொண்டவன் “ஆமா, நான்தான்... நான்தான் கவலைப்படறேன், உன்னைப் பற்றியும் உன் வாழ்க்கையைப் பற்றியும் கவலைப்பட அத்தனை அதிகாரமும் உரிமையும் எனக்கு இருக்கு...
 
 
இல்லைன்னு உன்னால மறுக்க முடியாது... விடு இப்ப அந்தக் கதையெல்லாம் எதுக்கு, ரோஹித் அந்தப் பெண்ணுடன் பழகுவது உனக்குத் தெரியுமா...? நீ பேசுறதை பாத்தா முன்பே தெரியும் போலத் தான் இருக்கு... சொல்லு தெரியுமா...?! தெரியாதா...?!” மேலும் நகர முயன்றவளை நகர விடாமல் தடுத்து பிடித்தபடி அபய் கேள்வி எழுப்பினான்.
 
 
அவனை நிதானத்தோடு எதிர்கொண்டவள் “தெரியும்” என்றாள் எங்கோ பார்வையைப் பதித்தபடி, மிர்னாவின் வார்த்தைகளிலிருந்து இதை முன்பே யூகித்து இந்தாலும் ஒரு நொடி திகைத்து நிற்க தான் செய்தான் அபய்.
 
 
“தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்க...?” எனக் கூர்மையாக அவள் முகத்தையே பார்த்தபடி கேட்கவும், “வேற என்ன செய்யணும்...?” என்று அவள் கேள்வி எழுப்பினாள்.
 
 
“இது என்ன கேள்வி மினி நிச்சயமாகச் சட்டை பிடித்து அவனைக் கேள்வி கேட்க உனக்கு அத்தனை அதிகாரமும் இருக்கு... அவனை நாலு போடு போட்டு கூடத் தடுத்து இருக்கலாம், இதெல்லாம் நீ ஏன் செய்யலை... கணவனே கண்கண்ட தெய்வம்னு அவன் கால்ல விழுந்து கிடக்கிற ஆள் நிச்சயமா நீ கிடையாது, அது எனக்கு நல்லாவே தெரியும்...
 
 
உனக்குத் துரோகம் செய்கிறான்னு தெரிந்தும் நீ அமைதியா இருக்க வேண்டிய அவசியம் என்ன...?” என்று கேட்டவனை ஒரு விரக்தியான பார்வையும் நக்கலான புன்னகையோடும் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவளின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தன் பார்வையை ஒரு நொடி அழைத்துக் கொண்டான்.
 
 
மீண்டும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவனை நேரிடையாக வந்து தாக்கியது மிர்னாவின் வார்த்தை “துரோகம்... பெண்ணோட வாழ்க்கை இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீங்க...!! அதுவும் என்னோட வாழ்க்கை எனக்கு ரோஹித்தால் இழைக்கப்பட்ட துரோகம்...” எனச் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் கூறி தலையை ஆட்டியபடியே ஏதோ யோசிப்பது போலச் செய்தவள்
 
 
“ஆனா இதையெல்லாம் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்குனு ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தீங்களா மிஸ்டர் அபய்...” என அந்த மிஸ்டரில் அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் கூட்டி கூறியவளின் கோபம் அந்த வார்த்தைகளின் மூலமே அபய்க்கு நன்கு தெரிந்தது.
 
 
“ஓ காட் நீ புரிஞ்சு பேசறீயா புரியாம பேசறீயா...?! விளையாடாதே உன்னுடைய கோபத்தை வெளியில் காட்டுவதற்கான நேரம் இது இல்ல, புரிஞ்சுக்கோ... நீ இப்பவே இதற்கான நடவடிக்கைகளில் இறங்கலைனா மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்... உனக்குன்னு ஒரு வாழ்க்கையே இல்லாமல் போகும்...” என மேலும் கூட ஏதோ சொல்ல முயன்றவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளியவள், அவனின் கைகளில் இருந்து விடுபட்டு வெளி வந்து, ஆத்திரமாக அவனை முறைத்தபடி
 
 
“ஷட் ஆப்... ஜஸ்ட் ஷட் ஆப்... என்னைப் பத்தி பேசறதுக்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது... என் வாழ்க்கையை எனக்குப் பார்த்துக்கத் தெரியும்னு எத்தனை முறை சொல்றது... ஆமா ரோஹித் அவளோட பழகுறது எனக்கு ரொம்ப நல்லா தெரியும், நல்லாவே தெரியும்... இப்போ அதுக்கு என்ன செய்யலாம்னு சொல்றீங்க,
 
 
எனக்கு அதுல எந்தப் பிரச்சனையும் இல்லை... நான் எதுக்குக் கோவப்படணும் நான் எதுக்கு ரோஹித்தை கேள்வி கேட்கணும்... பழகறாங்களா பழகிட்டு போகட்டும், எனக்குத் தெரியாம ஒன்னும் மறைக்கலையே எனக்குத் தெரிஞ்சே தான் இரண்டு பேரும் பழகுறாங்க...” என்று கோபமாகக் கத்தியவளைக் கண்டு திகைத்து நின்றான்.
 
 
‘இவளுக்குத் தெரிந்து இருவரும் பழகுகிறார்களா...?! அதை இவளும் அனுமதிக்கிறாளா...?!’ என மனதிற்குள் கேள்வி ஓட... மிர்னாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவனின் இயல்பு குணம் தலை தூக்கவும் அவ்வளவு நேரம் கோபத்திலும் ஆத்திரத்திலும் படபடப்பிலும் தனக்கு மிகவும் நெருக்கமானவளின் வாழ்க்கையைப் பற்றிய பயத்திலும் பதட்டத்திலும் பேசிக் கொண்டிருந்தவன்,
 
 
அதற்கு நேர்மாறான மனநிலையோடு “அப்போ ரோஹித் அவளோட பழகறதில் உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல... அவங்க இரண்டு பேர் பழகறது உனக்கு நல்லாவே தெரியும், ரைட்...” எனக் கேட்க,
 
 
அதற்கு எந்தப் பதிலும் அளிக்காமல் தன் கைகளை இறுக கட்டிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு நின்று கொண்டாள் மிர்னா.
 
 
அவளை ஒவ்வொரு அடியாக நெருங்கியவன், “அப்போ நீயும் யார் கூடப் பழகினாலும் ரோஹித்துக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காதுன்னு நினைக்கிறேன்... அப்படித் தானே பேபி...?!” எனவும், ‘இது என்ன புதுக் கதை’ என்பது போல முகத்தில் கேள்வியோடு அவளை ஏறிட்டுப் பார்க்க...
 
 
“அப்போ வாங்க பழகலாம்...” என ஒரு குறும்புப் புன்னகையோடு கூடிய கண் சிமிட்டலோடு கேட்டிருந்தான் அபய்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 7
 
“அப்போ வாங்க பழகலாம்…” என்றான் அவனின் பிறவி குணமான வெகு இயல்பான குறும்பு கூத்தாடும் குரலில்... அதில் திகைத்து “ஙே” என விழித்தாள் மிர்னா.
 
 
இதற்கு என்ன பதிலளிப்பது என்று கூடத் தெரியாமல் விழி விரிய அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை மேலும் நெருங்கியவன், “பழகுவதற்கு எதுக்குப் பேபி இவ்வளவு பெரிய ஷாக்... நான் இப்போ கொஞ்சம் வெட்டியா தான் இருக்கேன், மேடம் பயங்கரப் பிஸி என்று கேள்விப்பட்டேன்... சோ, இடத்தையும் நேரத்தையும் நீயே பிக்ஸ் பண்ணு... மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்...” என அவளின் கன்னம் தட்டிக் கூறியவன்,
 
 
மிர்னா அதை உணரும் முன்பாக அங்கிருந்து வெளியேறி இருந்தான். முகம் முழுக்கக் குறும்பு கூத்தாட வெளியேறியவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தவள், பிறகு தான் ‘அவனை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டோமே’ என்ற எண்ணம் தலை தூக்கத் துவங்கவும் “ஷிட்” என்றபடி காலை அபய்யின் மேல் உள்ள மொத்த கோபத்தையும் காண்பித்துத் தரையில் ஓங்கி உதைத்தாள்.
 
 
மிர்னாவின் இந்தக் கோபமான வார்த்தைகள் அறைக்கு வெளியே இருந்த அபய்யின் காதில் தெளிவாக விழ, அதில் அவனின் புன்னகை மேலும் விரிந்தது. அந்தப் பகுதியை கடக்கும் வரை அவனின் முகத்தில் இருந்த குறும்பும் புன்னகையும் அதற்குப் பின்பு துணி கொண்டு துடைப்பது போலக் காணாமல் போனது.
 
 
தீவிர சிந்தனையோடே விறுவிறுவெனப் படிகளில் இறங்கியவன் தன் அலைபேசியை எடுத்து விக்கிக்கு அழைத்தான். சில பல கட்டளைகளைப் பிறப்பித்தவாறே அலுவலகத்தை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டான்.
 
 
மிர்னாவிற்கு அபய் வந்தது, நடந்து கொண்டது என அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வந்து கொண்டே இருந்ததில் அவளால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லை. நிம்மதியற்று அறை முழுவதையும் நடந்து சுற்றுச் சுற்றி வந்தவள் ஒரு கட்டத்திற்கு மேல் அந்தக் கோபங்களைத் தனக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்ள முடியாமல் மேசை மேலே இருந்த பொருட்களை எல்லாம் கீழே இழுத்து தள்ளி தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள முயன்றாள்.
 
 
‘ஆனால் அந்தோ பரிதாபம் அதற்கெல்லாம் அடங்க மாட்டேன்...’ என அவளது கோபம் அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது. அங்கிருந்த சோபாவில் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டவளுக்கு மனம் முழுவதும் தந்தூரி அடுப்பாகக் கனன்று கொண்டிருந்தது.
 
 
வெகு நேரம் நெற்றியை தேய்த்தபடி மனதில் உலா வந்து கொண்டு இருந்த நினைவுகளைப் பின்னுக்குத் தள்ள போராடியவாறே அமர்ந்திருந்தவள், தனக்கு முன் இருந்த டீப்பாயில் இருந்த குளிர்ந்த நீரை எடுத்துக் கடகடவெனப் பருகத் தொடங்கினாள்.
 
 
அது அவளின் எரிந்து கொண்டிருந்த மனதிற்குச் சற்று ஆறுதலாக இருந்ததோ என்னவோ...! ‘இப்படியே அமர்ந்திருந்தால் இதே எண்ணங்களே மேலெழுந்து தன்னை அதிலேயே மூழ்கடித்து விடும்...’ என்று தோன்ற, வழக்கம் போலத் தன் மனதின் எண்ணங்கள் மேல் எழாமல் இருப்பதற்காகத் தான் பயன்படுத்தும் ஆயுதமான தன் வேலையை மீண்டும் கையில் எடுத்தாள்.
 
 
அதில் மூழ்க தொடங்கி விட்டால் அவளுக்கு வேறு எதுவும் நினைவு வராது... வராது என்பதை விட வராமல் அவள் பார்த்துக் கொள்வாள். ஏனெனில் அத்தனை காதலித்தால் அவள் தன் தொழிலை.
 
 
இதில் எப்படியாவது சாதித்துக் காட்ட வேண்டுமென்ற வெறியே அவளை இத்தனை வருடங்களாகச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இல்லையென்றால் இத்தனை வருடங்களில் அவள் என்னவாகி இருப்பாளோ...! என்னவோ...!
 
 
ஆனால் அதில் எல்லாம் மூழ்கிப் போய் விடாமல் தன் தொழிலே தன்னைக் காக்கும் கேடயமாக இருப்பதை அவள் நன்கு அறிவாள்... அதனாலேயே மீண்டும் அடுத்து வர இருக்கும் கான்சர்ட்டில் தன் கவனத்தைத் திருப்பினாள். அதற்கான ஆடைகளை வடிவமைப்பதில் முழுகியவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.
 
 
தன் மனதை திசை திருப்ப எண்ணி வேலையில் மூழ்கிய மிர்னாவை வேலை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொண்டதில் நேரம் சென்றதே அவளுக்குத் தெரியவில்லை... சற்றுக் களைப்பைப் போக்கிக் கொள்ளக் கைகளை முறுக்கியபடியே நிமிர்ந்தவள் கண்களில் அறையில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் படவும் தான் மாலை நெருங்கிக் கொண்டிருப்பதை அறிந்து பதட்டமாக எழுந்தாள்.
 
 
“அச்சோ...” எனத் தலையில் அடித்துக் கொண்டவளுக்கு அப்போதே பாயல் இன்று மாலை இரயிலில் பூனே கிளம்பி செல்வதும் அவளைத் தான் அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்து விட்டு வந்ததும் நினைவு வர, அவசர அவசரமாகத் தன் உடமைகளைச் சேகரித்துக் கொண்டு விரைவாக வெளியேறினாள்.
 
 
தன் காரில் பயணித்துக் கொண்டிருந்தவள் இதழ்கள் “எதுவுமே சொல்றதை கேட்க மாட்டா... எல்லாம் அவ இஷ்டத்துக்குத் தான் செய்வா, திடீர்னு வந்து நிப்பா திடீர்னு கிளம்புறேன்னுவா...” என முணுமுணுத்துக் கொண்டு இருந்தது.
 
 
பாயலை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தவளின் மனதில் தான் மும்பை திரும்பிய அன்று நடந்தது நினைவு வந்தது. மிர்னா டெல்லியிலிருந்து மும்பை திரும்பிய அன்று தன் வீட்டிற்குள் நுழையும் போது எதிர்பாராத அதிர்ச்சியாக அங்கு பாயல் அமர்ந்திருப்பதைக் கண்டதும் சந்தோஷத்தில் ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.
 
 
“எப்போடா வந்தே... சொல்லவே இல்ல...” எனக் குதுகலத்துடன் கேள்வி எழுப்பியபடியே அவளை அணைத்துக் கொண்டவளை கண்டு புன்னகைத்தவள் “நேற்று இரவு வந்தேன்...” என்று கூறவும், அவளை முறைத்துப் பார்த்த மிர்னா.
 
 
“நேற்று வந்து இருக்க, எனக்கு நீ சொல்லவே இல்லையே...” என்று அவளிடம் சண்டையிடத் துவங்கவும், “ஹே... இரு இரு...ரோஹித் தான் இன்னைக்கு நீ வந்துருவேன் சொன்னார், நான் மூணு நாள் லீவில் வந்து இருக்கேன் டா... மூன்று நாள் இங்கே தானே இருக்கப் போறேன், எப்படியும் நீ இன்னைக்கு வந்துடுவேன்னு தெரிஞ்ச அப்புறம் எதுக்கு உன்னை டிஸ்டர்ப் செய்யணும்ன்னு தான் சொல்லலை...” என்று சமாதானப்படுத்த துவங்கியவளை கண்டு “ஏதாவது ஒரு சாக்கு வெச்சு இருப்பீயே...” எனப் போலியா முறைத்த மிர்னா.
 
 
“ஆமா ரோஹித் எங்கே...? நீ என்ன தனியா உட்கார்ந்து இருக்கே, பேபி எங்கே...?” என அடுக்கடுக்காகக் கேள்விகளை முன் வைக்கவும் “இப்போ தான் இரண்டு பேரும் ஷாப்பிங் கிளம்பி போனாங்க...” என்றவள், “இரு இரு... அடுத்து என்ன கேக்கப் போறேன்னு எனக்கு நல்லா தெரியும், உன்னோட செல்ல பேபி சாப்பிட்டு தான் போனா... அவளுக்கு நான் சமைச்சு கொடுத்து ஊட்டியும் விட்டாச்சு... உனக்கும் சமைச்சு ரெடியா இருக்கு, பிரெஷ் ஆகிட்டு வந்து சாப்பிடு... அப்புறம் என்னை ஆசை தீர திட்டலாம்... மூணு நாள் இங்கே தான் இருக்கப் போறேன், எனக்கும் பொழுது போக வேண்டாமா...?!” என்று கிண்டலாகக் கூறியது நினைவு வந்தது.
 
 
‘சொல்லாம கொள்ளாம செய்யவேண்டியது எப்போவும் எதையும்...’ என மீண்டும் நினைத்தவள் “இப்போ அவசரமா ட்ரெயின்ல போகணும்னு என்ன இருக்கு... நாளைக்குக் காலையில் பொறுமையா பிளைட்ல போகலாம்ன்னு சொன்னா எங்கே கேக்கறா...” என்று திட்டி தீர்த்தபடியே வீடு வந்து சேர்ந்தாள்.
 
 
மிர்னாவிற்காகவே காத்திருந்தது போலத் தயாராக நின்றிருந்தாள் பாயல். தன் கைகளில் இருந்த சுபி குட்டியை இறுக அணைத்து அழுந்த முத்தமிட்டவள் அவளை அருகில் இருந்த சுரபியிடம் கொடுத்து விட்டு மிர்னாவை பார்த்து ‘போலாமா’ என்பது போலத் தலையசைக்க...
 
 
அவளும் எதுவும் பேசாமல் ஒரு தலையசைப்போடு அவளின் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடக்கத் துவங்கினாள். அமைதியாகத் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தவளின் மனநிலை மிர்னாவிற்கு நன்றாகப் புரிந்தது.
 
 
மெல்லப் பேசியபடியே இரு தோழிகளும் பாயல் முன்பதிவு செய்து இருந்த ரயில் பெட்டியின் அருகில் வரவும், எதேச்சையாகத் திரும்பிய மிர்னாவின் பார்வையில் அங்கு இருந்த அங்காடிக்கு அருகில் நின்றிருந்த உதயச்சந்திரன் பட்டான்.
 
 
அவனைக் கண்டதும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவள் “இங்கேயும் வந்துட்டானா...? இவனுக்கு வேற வேலையே இல்லை...” எனப் பல்லை கடித்தபடி முணுமுணுக்க... அதில் நிமிர்ந்து மிர்னாவின் பார்வை சென்ற திசையைப் பார்த்த பாயலுக்கு அங்கு உதயச்சந்திரன் நிற்பது தெரிந்தது.
 
 
“இப்போ எதுக்கு அவங்களைத் திட்டற...?” என அவளைக் கண்டிப்பது போலக் கேட்ட பாயல்லை திரும்பிப் பார்த்தவள், “பின்னே கொஞ்ச சொல்றீயா...?!” என்றாள்.
 
 
“உனக்கு ஏன் அவங்க மேல இவ்வளவு கோபம்னு இப்போ வர எனக்குத் தெரியலை மிரு... ஆனா அவங்களுக்கு உன் மேல் உண்மையா இருக்கிற பாசம் மட்டும் எனக்கு ரொம்ப நல்லா தெரியுது...” என அவளுக்குப் புரிய வைக்க முயன்ற பாயல்லை தடுத்தவள்
 
 
“உனக்குப் புரியாது பாயு... விடு...” என மிர்னா அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயலவும் “இல்லை... உனக்குத் தான் புரியலை, பாசம் என்பதே கிடைக்காமல் போறவங்களுக்குத் தான் அதனுடைய அருமை புரியும்... ஒரு அண்ணனா தங்கையான உன் மேல் உண்மையில் அவர் வெச்சு இருக்க பாசம் தெளிவா எனக்குப் புரியுது...
 
 
ஆனா உனக்குத் தான் புரியலையா...?! இல்ல புரிஞ்சுக்க நீ தயாரா இல்லையான்னு தெரியலை...! உறவுகளோட அருமை அது கிடைக்காமல் போனவங்களுக்குத் தான் தெரியும்...” என்று கூறியவளின் கண்கள் லேசாகப் பனிக்கத் தொடங்கியது.
 
 
பாயல்லைக் கண்டு பதறிய மிரு, அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டு “இந்தப் பேச்சு இனி வேண்டாம்...” என்று அவளைச் சமாதானப் படுத்தும் குரலில் கூறவும், “நீ புரிஞ்சுக்கவே மாட்டீயா...?” என மீண்டும் அதே பேச்சிலேயே நின்றாள் அவள்.
 
 
“காலம் கடந்து கிடைக்கும் பாசத்திலும் தேவையான போது கிடைக்காத உறவிலும் கூடப் பெரிதாக அருமை இருக்க முடியாது... எதுவாக இருந்தாலும் அந்தந்த நேரத்தில் கிடைத்தா தான் அதற்கு மதிப்பு...” என விரக்தியான குரலில் கூறியவளை கேள்வியாக நோக்கிய பாயல்
 
 
“என்னன்னு கேட்டா மட்டும் சொல்லிடவா போறே...? இத்தனை வருஷம் சொல்லாததை இப்போவும் சொல்லப் போவது இல்லை...” என ஒரு சலிப்போடு கூறியபடி ஏறி தனக்கெனப் பதிவு செய்யப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவள் கைகளை ஜன்னல் வழியாகப் பிடித்தபடியே நின்றிருந்த மிரு மெல்ல ஆதரவாக அவளின் கைகளைத் தடவியபடியே “சில விஷயங்கள் என்னோடேயே போகட்டும் பாயு...” என மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.
 
 
அது தெளிவாக விழுந்தது பாயலின் செவிகளில், அதில் அமைதியாக மிருவை பார்த்துக் கொண்டிருந்தவளின் பார்வை உதயச்சந்திரன் மீது பாவமாகப் படிந்து மீண்டது.
 
 
மறந்தும் கூட மிர்னா அதற்குப் பிறகு உதயச்சந்திரனை திரும்பிப் பார்க்கவே இல்லை. ஆனால் உதயச்சந்திரனின் பார்வை மிர்னாவின் மேலேயே நிலைத்திருந்தது. அவளின் முகப் பாவங்களைக் கொண்டு அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டவனின் மனம் வேதனையில் துடிக்கத் தான் செய்தது.
 
 
அன்று தான் செய்த சிறுபிழை இந்த அளவிற்கு அவளை இறுகி போகச் செய்யும் தன்னை விட்டு தூர நிறுத்தும் என்று பாவம் அன்று அவனுக்குத் தெரியவில்லை. இன்று அதை எண்ணி லட்சம் கோடி முறையாக ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருந்தான் அந்தப் பாசக்கார அண்ணன்.
 
 
மிர்னாவை பாசத்தோடு தழுவிய உதயச்சந்திரனின் கண்கள் அவ்வப்போது பாயலின் மீதும் படிந்து மீண்டது. ஆனால் இதையெல்லாம் கவனிக்கும் மனநிலையிலும் பாயல் இல்லை என்றால் மிர்னா அவனைப் பார்க்கவும் இல்லை.
 
 
இங்கு அலுவலகம் வந்து சேர்ந்த அபய், முக்கிய வேலை காரணமாகப் பக்கத்து ஊர் வரை சென்றிருந்த விக்கிக்கு தான் திடீர் எனக் கொடுத்திருந்த பணியை முடித்துக் கொண்டு அவன் திரும்பக் காத்திருந்தான்.
 
 
முன் மாலை பொழுதில் அபய் கேட்ட அத்தனை தகவல்களோடும் வந்து நின்றிருந்தான் விக்கி. அமைதியாகத் தன் முன் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த சான்றுகளைக் கூர்மையான விழிகளோடு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தவளின் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே நிலை குத்தி நின்றது.
 
 
அதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் மீண்டும் மீண்டும் அதையே படித்தவனுக்குச் சொல்லொண்ணா ஆறுதல் மனதில் பரவுவதை அவனால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
 
 
எதனால் இந்த ஆறுதல்...!? எதற்காக இந்த அமைதி...?! என்று அவனுக்கு அப்போது புரியவில்லை. ஆனாலும் இத்தனை வருடங்களின் தவிப்பு அந்த ஒற்றை வரியில் அடங்கியது போல இருக்க... கண்மூடி அப்படியே தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவனின் மனதின் அமைதி முகத்திலும் அப்படியே வெளிப்பட முகம் சாந்தமாக மாறி இதழ்களில் ஒரு அழகிய புன்னகை தவழ்ந்தது.
 
 
இதை எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தபடியே பார்த்துக் கொண்டிருந்த விக்கிக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. அபய்யோடு இருக்கத் தொடங்கிய இத்தனை வருடங்களில் இப்படி ஒரு அமைதியும் சாந்தமும் சந்தோஷமும் தவழும் முகத்தை அவன் பார்த்ததே இல்லை.
 
 
இதற்கெல்லாம் காரணம் அந்த அறிக்கையில் இருக்கும் தகவல் என்று புரிந்து கொண்டவனுக்கு அப்போதே அபய் அவளைச் சுற்றி சுற்றி வந்தது எல்லாம் நினைவு வந்தது. அப்போதெல்லாம் நினைத்திருக்கிறான் என்ன இது ஒரு திருமணமான பெண்ணின் பின்னால் இப்படி இவர் போவது சரியாகப் படவில்லையே என்று...
 
 
ஆனால் அப்போதும் கூட ‘நம் பாஸ் அப்படிப்பட்டவர் இல்லையே இத்தனை வருடங்களில் எப்படி எப்படியான சூழ்நிலைகளிலும் கூடப் பெண்களின் பக்கம் தன் பார்வையைத் திருப்பாதவர் இன்று இப்படி நடந்து கொள்ள நிச்சயம் ஏதேனும் ஒரு வலிமையான காரணம் இருக்கக் கூடும்...’ என்று அவன் மேல் இருந்த நம்பிக்கையினாலேயே அவன் கேட்ட அத்தனையையும் செய்து கொண்டிருந்தவன் ஒருமுறையும் அபய்யிடம் தன் சந்தேகத்தைக் கேள்வியாக முன் வைக்கவில்லை.
 
 
அத்தனை நம்பிக்கை இருந்தது தன் பாஸின் மேல், ஒரு முறையும் இதுவரை பாஸாக விக்கியிடம் அபய் நடந்து கொண்டதில்லை... அவ்வப்போது சீண்டி விளையாடும் நண்பனாக இருந்து வருபவனின் நல்ல குணங்கள் விக்கிக்கு தெரியாதா என்ன...?!
 
 
மீண்டும் கண் திறந்தவன், தன் முன் அமர்ந்தபடி தன்னையே ரசனையோடு பார்த்துக் கொண்டு இருந்த விக்கியை கண்டு “ஏய் என்ன என்னைச் சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டியா... இப்போ கேர்ள்சை எல்லாம் சைட் அடிக்கிறதை நிறுத்திட்டியா என்ன...?” என்று புன்னகையும் கேலியுமாகக் கேள்வி கேட்க...
 
 
“உங்களைச் சைட் அடிச்சு...! அம்மன் ஜல்லிக்கு ப்ரோயோஜனம் ஆகுமா...?!” என்று முகத்தைச் சுழித்துக் கொண்டபடியே பதிலளித்த விக்கி “ஆனா உங்களைப் பார்க்க ரொம்பச் சந்தோஷமா இருக்கு பாஸ்....” என்றான் கனிவான குரலில்.
 
 
அதில் அவனை நிமிர்ந்து பார்த்து ‘புரிந்தது’ என்பது போல மெல்ல தலையசைத்த அபய் விக்கிக்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
 
 
“ஓகே விக்கி, நீ கிளம்பலாம்...” என்றவன், சிறு இடைவெளிவிட்டு “தேங்க்ஸ்” என்றபடியே தன் முன்னால் இருந்த அறிக்கையை மெல்ல தன் கைகளால் வருடிக் கொடுத்தான்.
 
 
அதிலேயே அவன் உரைத்த நன்றி எதற்கு என்று புரியவும், மீண்டும் தன் வால்தனம் தலைதூக்க “அப்போ பாஸ்... அந்தத் தொடுப்பு... ச்சீ சாரி... அதான் அந்த மேடமை நான் அண்ணியா ஃபிக்ஸ் பண்ணிக்க வா...?” என்று ‘இது உண்மைதானா...?’ என இத்தனை வருடங்களில் ஒரு பெண்ணைத் தன் பாஸ் கவனிக்கத் தொடங்கி இருக்கிறாரா என அறிந்து கொள்ளும் ஆவலோடு விக்கி கேட்கவும்,
 
 
அவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவன் “ஸ்ட்ராங்கா பிக்ஸ் பண்ணிக்கோ...” என்று மட்டும் கூறி கண் சிமிட்டினான். “ஆஹா... எனக்கு அண்ணி வந்தாச்சு...” என்றபடி ஒருமுறை துள்ளிக் குதித்தவன் “இனி நம்ம ரூட் கிளியர்...’என மெல்ல முணுமுணுக்க...
 
 
அதைக் கேட்டுப் போலியாக முறைத்த அபய்க்கு அவனின் சந்தோசம் உண்மை என்பது நன்றாகத் தெரியும். “சீக்கிரம் ஒரு நல்ல பாட்டு டீச்சரா பார்த்து பாட்டு கத்துக்கணும் பாஸ்...” என்றபடியே நகர முயல, “பாட்டா எதுக்கு...?” எனப் புரியாமல் கேட்டான் அபய்.
 
 
“என்ன பாஸ்... கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாம இருக்கீங்க... அப்போ தானே பாஸ், நாம மூணு பேரும் கையைக் கோர்த்துகிட்டு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை... லாலலான்னு பாட முடியும் என்று சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னவனை தன் முன்னே இருந்த சிறிய டேபிள் மேல் வைக்கும் காலண்டரை தூக்கி விசிறி எறிந்து “போடா அரட்டை... போய் வேலையைப் பாரு, ஆபீஸ் நேரத்தில் வெட்டி கதை பேசுவதே வேலையா போச்சு உனக்கு... கொஞ்சமும் பொறுப்பு இல்லை, அதுவும் பாஸ்கிட்டயே வெட்டி அரட்டை...” என்று போலி கோபத்தோடு மிரட்டினான்.
 
 
‘அச்சோ... இப்படி எல்லாம் மிரட்டாதீங்க பாஸ், அப்படியே பயந்துட்டேன்... சின்னப் புள்ள பாருங்க...” எனக் கவுண்டர் கொடுத்து விட்டே வெளியேறினான் விக்கி.
 
 
விக்கி சென்ற பாதையை முகமெங்கும் புன்னகை தவழ பார்த்துக் கொண்டிருந்தவனின் பார்வை மீண்டும் தன் கைகளில் இருந்த அறிக்கையில் பதிந்தது.
 
 
அதில் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டே இருந்தான் அபய். எத்தனையாவது முறை படிக்கிறான் என்று அவனுக்கே தெரியாது, அதிலிருந்த சாராம்சம் அவனது மனதிற்கு அத்தனை பிடித்திருந்தது.
 
 
அந்தப் பத்தியில் இருந்தது இது தான், ரோஹித்தும் ரக்ஷானாவும் கணவன் மனைவி என்பதும் அவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது என்பதும் சான்றோடு இருக்க...
 
 
அவர்கள் மொத்தம் ஆறு நண்பர்கள் அந்த அறுவரும் நண்பர்களாக மட்டுமல்லாது ஒரே குடும்பமாகப் பழகி வருவதும் ஒரே குடியிருப்பில் வசிப்பதும் அதில் விவரமாக விளக்கப்பட்டு இருந்தது.
 
 
அதில் மேலும் முக்கியமான ஒரு வரிதான் அபய்யின் முகத்தில் இத்தனை சந்தோஷத்தையும் புன்னகையையும் கொண்டு வர காரணமாக இருந்தது. அது மிர்னாவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற தகவலே...!
 
 
தன் கையில் இருந்த கோப்பை முழுமையாக மீண்டும் படித்து அந்த அறுவரை பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்து கொண்ட அபய்
‘எல்லாம் தெளிவாகிடுச்சு... யாரு, என்ன எப்படின்னு கிளியரா புரிஞ்சுருச்சு... ஆனால் இன்னும் புரியாத ஒன்று, நீ ஏன் தனியா இங்கே இருக்க...?’ எனத் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டவனின் புருவங்கள் யோசனையோடு சுருங்கியது.
 
 
அவனுக்கு அதற்கான விடை தான் கிடைக்கவில்லை, யாரிடம் சென்று கேட்பது என்று எண்ணியவனுக்கு இதற்கு விடையாக உதயச்சந்திரன் இருப்பான் என்றே தோன்றியது. அவனை அன்று டெல்லியில் கண்டதும் மிர்னா அவனைத் திட்டித் தீர்த்ததும் நினைவில் வர, ‘அவர்களுக்குள் என்ன பிரச்சனை இருக்கும்...? எதனால் மினி இங்குத் தனிமையில் இருக்கிறாள்...?’ என்று யோசனை நீண்டு கொண்டே சென்றது.
 
 
“எது எப்படி இருந்தாலும் நீ இன்னொருத்தருக்கு சொந்தமானவை இல்லை...” என்று சொல்லிக் கொண்டவனின் இதழ்கள் மெல்லப் புன்னகை பூக்க... ‘உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைந்து விட்டது என்று நினைத்த போதே உனக்காக எல்லா வகையிலும் உதவி செய்யத் தயாராக இருந்த நான் உன்னை எப்பவும் பாதுகாக்க முயன்ற நான், இப்போ எனக்கு மட்டுமே சொந்தமானவன்னு தெரிஞ்ச பிறகு உன்னை விட்டுடுவேனா...?!
 
 
நீ ஏன் தனியா இருக்கேன்னு எனக்குத் தெரியலை, தெரிஞ்சுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது... ஆனா இப்ப அதை விட உன்னுடைய பாதுகாப்பு உன்னுடைய சந்தோஷம் இது மட்டும் தான் எனக்கு முக்கியம்... இனி நீ தனி இல்லை மை டியர் லட்டு குட்டி... உன்னைத் தேடி உன் மாமூ வந்துகிட்டே இருக்கேன்...” என்று வாய்விட்டே கூறியவனின் மனதில் மிர்னாவை நெருங்குவதற்கான திட்டம் படிப்படியாக உருப்பெற்று முழுமையாகத் தயாராகிக் கொண்டிருந்தது.
 
 
ஆனால் பாவம் இது எதையும் அறியாத மிர்னா வழக்கம் போலத் தன் வேலை மட்டுமே தன் உலகம் என்று அதிலேயே தன் முழுக் கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தாள்.
 
 
அன்றிலிருந்து பத்தாவது நாள் மிர்னாவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தி கொண்டு இருந்தான் அபய்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 585
Topic starter  
 
உயிர் – 8
 
அழைப்பு மணி ஒலிக்கும் சத்தத்தில் வந்து கதவைத் திறந்த மிர்னா அங்கிருந்தவனை கண்டு அதிர்வில் விழி விரிய அப்படியே நின்று விட்டாள். அவளின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டிருந்தவன் அவளின் அதிர்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு வெளியில் ஒன்றும் தெரியாதது போல முகத்தை வைத்தபடி “வாங்க பழகலாம்” எனவும்,
 
 
“வாட்...” என்று கோபத்தோடு பற்களைக் கடித்துக் கொண்டு மிர்னா கேட்கவும், “வாங்க பழகலாம்ன்னு சொன்னேன்...” என அவள் புரியாது கேட்பதற்கு விளக்கம் அளிப்பது போன்ற பாவனையில் மீண்டும் அதே வார்த்தைகளை அழுத்தம் திருத்தமாகக் கூறி அவளின் பிபியை எகிற வைத்தான் அபய்.
 
 
அதில் வேகமாக அவனை ஏதோ சொல்ல முயன்றவள், பின் நிதானித்து ‘இவனிடம் எல்லாம் பேசுவது வேஸ்ட்...’ என முடிவு செய்து கதவை மீண்டும் தாழிட முயலவும், நொடியில் சுதாரித்துத் தன் காலை இடையில் விட்டு கதவை தாழிட முடியாமல் தடுத்தவன்... தன் பலம் அனைத்தையும் பயன்படுத்த எந்த அவசியமும் இல்லாமல் ஒற்றைக் கையைக் கொண்டே தள்ளியதில் கதவும் அதைப் பற்றிக் கொண்டிருந்த மிர்னாவும் பின்னுக்குச் செல்ல...
 
 
ஒரு கேலி பார்வையோடு அவளைப் பார்த்தவாறே வீட்டிற்குள் நுழைந்தான் அபய்.
“ஹேய்... என்ன நீ பாட்டுக்கு உள்ளே வரே...?! முதலில் வெளியே போ...” எனக் கோபத்தோடு கத்த துவங்கவும் அதை அவன் கொஞ்சமும் சட்டை செய்யாமல் அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்.
 
 
“சுத்த மரியாதை தெரியாத பொண்ணா இருக்கே... வீட்டுக்கு வந்தவங்களை வாங்க... உட்காருங்க... என்ன சாப்பிடறீங்கன்னு முகமெல்லாம் சந்தோஷத்தோட உபசரிக்கணும், வளர்ப்பு சரியில்லை… சரி இனி உனக்கு நான் சொல்லி தரேன்...” என்று அசால்டாக அமர்ந்தபடி அவளை மீண்டும் வெறுப்பேற்றும் வண்ணம் பேசிக் கொண்டே சென்றவனைக் கொலைவெறியோடு பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் கழுத்தை நெறிக்கும் வெறியோடு நெருங்க...
 
 
அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் அவன் மனைவியோடு ரோஹித். அபய்யை அங்கு எதிர்பாராமல் கண்டதும் முகமெங்கும் சந்தோசம் பொங்க... “வாங்க சார்...” என ஆர்ப்பாட்டமாக வரவேற்றபடி வந்து கை கொடுத்தவனைப் புன்னகை முகமாகவே எதிர்கொண்டான் அபய்.
 
 
“மை பெட்டெர் ஆப் சார்...” என்று ரக்ஷனாவை பார்த்து கூறவும், அவனும் அவளுக்கு இன் முகமாகவே பதில் அளித்துக் கொண்டிருந்தான். அபய்யை பற்றி அவள் முன்பே அறிந்திருந்ததும் ரோஹித் அன்று அவனைச் சந்தித்ததைப் பற்றித் தெரிவித்திருந்ததும் சேர, நன்றாகவே அவனோடு பேசினாள் ரக்ஷனா.
 
 
தான் ஒருத்தி இங்கு நிற்பதையே மறந்தது போல அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தது, மிர்னாவை வெறியாக்க... “ரோஹிஈஈஈ...” எனப் பல்லைக் கடித்துக் கொண்டு கத்தினாள்.
 
 
“உங்க ஃப்ரெண்ட் கூப்பிடுறாங்க... என்னன்னு கேளுங்க ரோஹித்...” என மிர்னாவை பார்த்தபடியே கூறியவனை, ‘இது உனக்கு எப்படித் தெரியும்...?’ என்பது போல மிர்னா விழி விரித்துப் பார்க்க... மற்றவர்கள் அறியாவண்ணம் அவளை நோக்கிக் கண் சிமிட்டயவனை இன்னும் திகைத்து விழித்தவளை கண்டு பொங்கிய புன்னகையைத் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டான் அபய்.
 
 
அவளைப் பற்றி நன்கு அறிந்தவன் ஆகையால் இப்போது தான் சிரித்து வைத்தால் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காகத் தயங்கி நிற்பவள் அதைக் கூட உதறித் தள்ளிவிட்டு தன் மீது கொலை வெறியோடு பாய்ந்து விடுவாள் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
 
 
அவளையும் அவள் தற்போது நிற்கும் தோற்றத்தையும் பார்த்தால் நிச்சயம் தன்னால் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்று உணர்ந்தவன் தன் முகத்தைத் திருப்பி வீட்டை பார்ப்பது போலப் பார்வையைச் சுழல விட்டான்.
 
 
“என்ன சாப்பிடுறீங்க சார்...?” எனக் கேட்டிருந்தாள் ரக்ஷனா. அதில் வியப்பாக ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தவன், “உங்களை ரொம்ப நல்லா வளர்த்து இருக்காங்க...” என்று மிர்னாவிற்கு மட்டும் புரியும் வகையில் சீண்டும் குரலில் கூறவும்,
 
 
கண் மூக்கு வாய் காது என எங்கெல்லாம் புகை விட முடியுமோ அப்படித் தன் கோபத்தை எல்லாம் புகையாக வெளியேற்றியவாறே இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் மிர்னா.
 
 
‘அபய் எதற்காகத் தன்னை இப்படிப் புகழ்கிறான்...?!’ என்று புரியாவிட்டாலும் அவன் வார்த்தைகளுக்குச் சிரிப்பையே பதிலாகத் தந்தாள் ரக்ஷனா. அவள் சமையல் அறையை நோக்கி நடக்கத் துவங்குவதைக் கண்ட ரோஹித் மெல்ல அபய் பக்கம் சரிந்து,
 
 
“யாரு இவளை நல்லா வளர்த்து இருக்காங்க... ஒரு முறை அடிவாங்கிப் பாருங்க தெரியும்...” என்று மெல்லிய குரலில் கூற, அதைக் கூறுவதற்கு முன் ரக்ஷனா இங்கிருந்து சென்று விட்டாளா என்று ஓர விழியால் பார்த்தபடியே கூறியதை கண்டு அடக்க மாட்டாமல் சிரித்து விட்டான் அபய்.
 
 
ஆனால் சிரித்துக் கொண்டே திரும்பியவன் அப்போதே தங்களுக்கு வெகு அருகில் ரக்ஷனா கோபத்தோடு ரோஹித்தை முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு மேலும் சிரிப்பு வர, அடக்கமாட்டாமல் சிரித்தவனின் சிரிப்பு ஒலியில் இருந்த வேறுபாட்டைக் கண்டு என்ன என்று புரியாமல் தன் பார்வையைத் திருப்பியவன் தன் அருகில் நின்றிருந்த ரக்ஷனாவை கண்டு அதிர்ந்து விழித்தான்.
 
 
அங்கிருந்து நகர்ந்து விட்டாளா என்பதை உறுதி செய்து கொண்டே அபய் பக்கம் திரும்பிப் பேசத் துவங்கியவன், அபய் என்ன பிடிக்கும் எனக் கேட்க மறந்து சென்ற ரக்ஷனா அங்கிருந்து திரும்ப வந்ததைப் பாவம் கவனிக்கத் தவறி விட்டான்.
 
 
ரக்ஷனாவை கண்ட ரோஹித் “உங்க டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா...?!” என யாரும் வந்து தன்னைச் சந்தேகத்தோடு கேள்வி கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் 32 பற்களும் வெளியில் தெரியும்படி இளித்துச் சமாளிக்க முயன்றான்.
 
 
“ஓஹோ... அப்போ வீட்டுக்கு வாங்க, என் வளர்ப்பு எப்படின்னு புரிய வைக்கிறேன்...” என்று கூறிய ரக்ஷனா விறுவிறுவென்று சமையலறைக்குள் நுழைந்துவிட... ஹட்ச் டாக் போல அவளின் பின்னாலேயே சென்றான் தவம் செய்யும் சித்தர்கள் இடைவிடாது முணுமுணுக்கும் கடவுளின் நாமத்தை போல ரக்ஷனா என்று உச்சரித்தபடியே.
 
 
யாருமற்ற அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் மற்றவர்களுக்குக் கேட்காத குரலில் பல்லைக் கடித்தபடியே மிர்னா, “உன்னை யார் இங்கே வர சொன்னது... மொதல்ல வெளியே போ...” என்று முணுமுணுக்கவும் தான்,
 
 
தங்களைப் பற்றிய முன் கதை சுருக்கம் எதுவும் மற்றவர்களுக்குத் தெரியாது என்று முன்பே அறிந்து இருந்த அபய், அதை இப்போதும் தெரிந்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு இதை வைத்தே அவளிடம் விளையாட வேண்டும் என்று நினைத்தவன்,
 
 
“நான் இங்கே வரவோ... உன்னைப் பார்க்கவோ... எனக்கு யாருடைய அனுமதியும் தேவை இல்ல பேபி...” எனக் கூறிய நொடி, அதற்கு மிர்னா பதில் அளிப்பதற்குள் “பாஸ்... நீங்க இங்க இருக்கீங்களா...?” என ஆரவாரமாக உள்ளே நுழைந்தான் விக்கி.
 
 
“பால் சொம்பு, பூ அப்பறம் நீங்க சொன்னது எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன்... வேற ஏதாவது வேணுமா...?” எனக் கேட்கவும், “மேடம்கிட்ட கேளு, அவங்களுக்கு வேற ஏதாவது வேணுமான்னு...” என்றான் அபய்.
 
 
அருகில் நிற்கும் விக்கியின் கையில் இருந்த பொருட்களையும் அபய்யையும் மாறி மாறி பார்த்தவள், “ஏய்... என்ன நக்கலா...?” என்று தன்னை மறந்து கத்த துவங்கவும்,
 
 
அவளின் குரலில் சமையலறையில் மன்னிப்புப் படலம் நடத்திக் கொண்டிருந்த ரோஹித்தும் அவனை மன்னிக்க மறுத்து என்ன தண்டனை தரலாம் எனத் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த ரக்ஷனாவும் விரைந்து வந்தனர்.
 
 
“என்ன சத்தம் மிரு...?” என்று இருவரையும் மாறி மாறிப் பார்த்து அவர்கள் திகைத்து நிற்க... “ஒண்ணும் இல்ல ரோஹித்... என் வீட்டுக்கு வர சொன்னேன், அதுக்கு மேடம் முடியாதுன்னு கத்தறாங்க...” என ரோஹித்திற்கு அபய் விளக்கமளிக்க, ‘இது என்ன புதுக் கதை...!’ என்பது போல மிர்னா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
‘இவள் எதற்காக அவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்...?’ என்ற கேள்வியோடு சமூகத்தில் அவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவனிடம் எப்படிச் சட்டெனக் கேட்பது எனப் புரியாமல் ஒரு தயக்கத்தோடு “எதுக்குச் சார்... மிரு உங்க வீட்டுக்கு...?!” என மெல்லிய குரலில் கேட்கவும்,
 
 
“பால் காய்ச்ச தான்...” என்றான் அசால்ட்டாக, “என்ன...? என்னைப் பார்த்தா எப்படி இருக்கு...?” எனக் கேட்டபடியே கோபத்துடன் இரண்டு அடி முன்னே வைத்து மிர்னா அபய்யை நெருங்கவும், பார்வையாலேயே தலை முதல் பாதம் வரை அவளை வருடியவன், “ம்ம்... சூப்பர்...” என்பது போல அவளுக்கு மட்டும் புரியும் வகையில் விழி வழியே பதிலுரைக்க...
 
 
அதில் அதற்கு மேல் முன்னேறாமல் அவள் கால்கள் அங்கேயே நின்றது. அதற்குள் மீண்டும் எதுவும் பேசுவதைத் தடுப்பது போல ரக்ஷனா வந்து அவளைப் பிடித்துக் கொள்ள... மேலும் பேச துடித்துக் கொண்டு இருப்பவளை, இரு என்பது போலச் சைகை காண்பித்த ரோஹித்
 
 
“மிரு... எதுக்கு சார் உங்க வீட்டில்...?!” என்று தயங்கி தயங்கித் சற்றுத் தயக்கத்தை விட்டு ஒவ்வொரு வார்த்தையாக ரோஹித் கேள்வியை முன் வைக்க...
 
 
“எனக்குன்னு யாருமில்லை... ஒண்டி கட்டை...” என்றவன், எதிரில் இருந்த பிளாட்டைக் கை நீட்டி சுட்டி காட்டியவன், “அந்த வீடு நான் தான் வாங்கி இருக்கேன், புது வீட்டுக்கு குடி வந்தா பால் காய்ச்சணும் இல்ல... பெண்கள் மகாலட்சுமி போல அவங்க கையால் காய்ச்சினா சுபிக்ஷம்னு சொல்லுவாங்க எங்க பக்கம்...” என்று கோர்வையாகக் கூறவும்,
 
 
யோசனையோடு ரோஹித் அபய்யை பார்த்துக் கொண்டு இருக்க... “ஒரு உதவியா தான் சார்...” என விக்கி முந்தி கொண்டு பதிலளிக்கவும், அவ்வப்போது சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகள் மூலம் வெளி வந்து கொண்டு இருக்கும் தகவலின்படி அபய் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவன் என்று தெரிந்து கொண்டு இருந்தவனுக்கு அவர்கள் இது போலச் சில விஷயங்களை எப்போதும் கடைப்பிடிப்பார்கள் என்பது நினைவு வர... “போ மிரு...” என்று மிர்னாவிடம் பரிந்துரை செய்யத் துவங்கினான்.
 
 
எதிர் வீட்டுக்கு அபய் குடி வந்திருக்கிறான் என்று சொன்னதிலேயே திகைத்து நின்றிருந்த மிர்னாவின் மனதில் அப்போதே பத்து நாட்கள் முன் எதிர் வீட்டில் இருந்தவர்கள் திடீரெனக் காலி செய்து கொண்டு சென்றதும் அவசர அவசரமாக அந்த வீடு புதுப் பொலிவுடன் தயாரானதையும் குழப்பமாகப் பார்த்துக் கொண்டு இருந்தவளுக்குச் சொந்த வீட்டில் இருந்தவர்கள் எதுக்காக இப்படித் திடீர் எனக் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
 
 
இப்போது அதற்கான விடை கிடைக்க... ‘இதுக்கெல்லாம் நீ தானா காரணம்...’ என எண்ணியபடி நின்றிருந்தவள், ரோஹித் கூறியதை கேட்டு எழுந்த எரிச்சலில் அவனைத் திட்டுவதற்காக மெல்ல வாயைத் திறந்த நொடி,
 
 
அவளைப் பேசவிடாமல் அதற்குள் விக்கி முந்திக் கொண்டு “அதெல்லாம் வருவாங்க சார்... இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா சொல்லுங்க, இங்கே வந்ததே சின்னச் சின்னக் கொடுக்கல் வாங்கலோடு...” என மேலும் பேச போனவனை மிர்னா திரும்பி தீ பார்வை பார்க்க...
 
 
“தமிழ் நாட்டு பெண்களுக்கே எப்போதும் உதவி மனப்பான்மை அதிகம் சார்... எதிர் வீட்டில் இருக்கப் போறோம், ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருக்க மாட்டாங்களா...” எனச் சமாளிக்கும் குரலில் பேசி விக்கி சமாளித்தான்.
 
 
“எங்க பாஸ் அவருடைய வசதிக்குத் தனிப் பேலஸ் வாங்கிப் போகாம இங்கே இது போல மேல் தட்டு நடுத்தரக் குடும்பங்கள் வசிக்கும் இடமா பார்த்து வந்ததே இந்தக் காரணங்களுக்காகத் தான்... குடும்பம் என்று ஒன்று இல்லாத எங்களைப் போல உள்ளவங்களுக்கு நீங்க எல்லாம் தானே குடும்பம்...” என்றவன்,
 
 
ரோஹித்தின் மனதில் தோன்றிய வினவான ‘அபய் ஏன் இங்குக் குடி வர வேண்டும்...?’ என்பதற்கும் அவனின் யோசனையான முகத்தைப் பார்த்தே அதற்கும் சேர்த்துப் பதில் அளித்து இருந்தான்.
 
 
இத்தனையும் இவர்கள் கூறிய பிறகு வர முடியாது என மறுத்தால் அதற்கு ஏன்...? என்ன...? என்ற கேள்வி எழும், அதற்குப் பதிலளிக்காமல் மறுக்கவும் முடியாது, பதிலளிக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை என்பதனால் பல்லைக் கடித்துக் கொண்டு “சரி...’ எனச் சத்தமாகவும் “வந்து தொலைக்கிறேன்...” எனத் தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டாள்.
 
 
மற்றவர்கள் அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அபய் மிகச் சரியாக அவள் இதழ் அசைவை மொழி பெயர்த்திருந்தான். ‘பேபி நீ அங்கே தொலைக்க வேண்டியது எதுவும் இல்லை... ஆனால் கண்டுபிடிக்கவும் கற்றுக் கொடுக்கவும் நிறைய விஷயங்கள் இருக்கு...’ என எண்ணிக் கொண்டான்.
 
 
“நீங்க வந்தா மட்டும் போதும்...” என அவளுக்கு மட்டும் புரியும் வகையில் கண்களில் விஷமத்தோடு ‘வாங்க பழகலாம்’ என்பதற்கான இன்னொரு வாக்கியம் அது என்பதை உணர்த்தும் வகையில் அழுத்தி உச்சரித்தவன்,
 
 
“உங்கள் வரவை எதிர்நோக்கி ஒவ்வொரு நொடியும் காத்திருப்பேன்...” எனச் சாதாரணமாகக் கூறுவது போலக் கூறிவிட்டு எழுந்தவன் அவளைக் கடந்து செல்லும் போது அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “விக்கி கையில் இருந்த பொருட்களைப் பார்த்ததும் உன்னுடைய கற்பனை எங்கெங்கேயோ போச்சு போல... ரொம்பத்தான் உனக்கு அவசரம் செல்லோ... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ ஜமாய்ச்சிடலாம்...” என்று கிசுகிசுத்து விட்டு சென்றான்.
 
 
“அடேய்...” எனப் பல்லை கடித்தவளுக்கு அபய்யின் தலையில் எதையாவது தூக்கி போட்டு உடைக்க வேண்டும் போல வெறி எழுந்தது. ஆனால் அவளின் மனதின் எண்ணங்களை வார்த்தைகளில் மட்டும் இல்லை, முகத்தில் கூடக் காண்பிக்க முடியாத நிலை அவளுக்குப் பாவம்.
 
 
வெளியேறுவதற்காக அபய்யும் விக்கியும் வாயிலை நெருங்க... சரியாகச் சுபிக்ஷாவை தூக்கிக் கொண்டு விரிந்த புன்னகையோடு வீட்டிற்குள் நுழைந்தான் ரக்ஷன்.
 
 
“காலையிலேயே என்ன இங்க மாநாடு...” என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தவனைக் கேள்வியாக அபய் பார்க்க... அவனும் அபய்யை கவனித்து முதலில் திகைத்தாலும் பின் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், “ஹாய் சார்... ஐம் ரக்ஷன்...” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள முயன்றான்.
 
 
‘யார் நீ...?’ என்பது போன்ற பார்வையோடு நின்றிருந்தவனின் கண்களில் இருந்த கேள்வியைக் கவனித்து ரக்ஷன் பதிலளிக்கும் முன் அவன் தோள்களில் தோற்றுக் கொண்டிருந்த சுபி குட்டி “பப்பா...” என அவன் முகத்தைப் பற்றித் தன்னைப் பார்க்க செய்தவள் “அம்மா...” என மிர்னாவிடம் தான் செல்ல வேண்டும் என்பதைச் செயலில் காட்டினாள் தூக்கக் கலக்கம் முற்றிலும் கலையாத நிலையிலேயே...
 
 
அதில் அவளைக் கொண்டு சென்று மிர்னாவிடம் கொடுத்தவன் “மிரு பேபிக்கு பால் கொடு பசிக்குது அவளுக்கு...” என்றபடியே கொடுத்தவனை முறைத்த ரக்ஷனா “எருமமாடு குழந்தைக்குப் பால் வைத்திருந்தேனே நீ பார்க்கலையா...?!” எனக் கடிந்து கொள்ள...
 
 
“பார்த்தேன்... அதனால தான் எடுத்து குடிச்சிட்டேன்...” என அசால்ட்டாகக் கூறியவன், “பேபி தூங்கிட்டு இருந்தா... எனக்குப் பசியா இருந்தது, அதான்...” என்றவனை, “அரைமணி நேரத்திற்கு முன்னே தானே நான் கிளம்பும் முன் உனக்கும் போர்ன்விட்டா கொடுத்தேன்...” எனத் தலையில் குட்டியவள் தன் தலையிலடித்துக் கொண்டே...
 
 
“தீனி மாடு...” என அலுத்துக் கொண்டபடியே சமையலறைக்குள் நுழைய, சுபியை தன்னோடு அணைத்து பிடித்து முதுகை தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள் மிர்னா.
 
 
உறக்கம் கலையாத பிள்ளையை அழகாகக் கையாண்டு கொண்டிருந்தவளை மேலும் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் சில நினைவுகள் வர, அதில் வேதனையில் சில நொடிகள் முகம் கசங்கிய அபய் நொடியில் தன்னை நிதானித்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்..
 
 
அவன் பின்னாலேயே வீட்டிற்குள் நுழைந்த விக்கி “பாஸ்... இவன் யாருன்னு இப்போவே நான் கண்டுபிடிக்கிறேன் பாஸ்...” எனக் கூறவும் “அதான் அவங்களே சொன்னாங்களே... ரக்ஷன், ரக்ஷனாவோட ட்வின் பிரதர்... இவங்களோட கிளாஸ்மேட் அண்ட் கிளோஸ் பிரண்ட்...” என்று அவனுக்கு அசால்டாகப் பதிலளித்தவன், இவன் எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை என்பது போன்ற தோரணையில் பேசி விட்டுச் சென்றான்.
 
 
‘நாமளும் தான் அந்த ரிப்போர்ட்டை படிச்சோம்... நமக்கு இப்படிக் கனக்ட் பண்ணிக்கத் தோணலையே, அதனால தான் அவரு பாஸா இருக்காரு போல...’ எனச் சுயபரிசீலனையில் ஈடுபட்டவன் தன் போக்கில் அடுத்தடுத்த பணிகளைச் செய்யத் துவங்கினான்.
 
 
ரோஹித் மற்றும் ரக்ஷனாவின் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியில்லாமல் அவர்களிடம் உண்மையைக் கூற விரும்பாமல் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி விருப்பமே இல்லாமல் அபய் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தாள் மிர்னா.
 
 
உள்ளே நுழைய முயன்ற மிருவை “அண்ணி இருங்க...” என்ற விக்கியின் குரல் தடுத்து நிறுத்த, எல்லோரும் அவனின் அழைப்பை கேட்டு ‘என்ன’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதே புன்னகை முகமாக “அங்கேயே இருங்கன்னு சொன்னேன்...” என்றவனின் வார்த்தைகளை நன்றாகக் கவனித்து இருந்த மிரு, “எதுக்கு...?” என்றாள் வார்த்தைகளில் அழுத்தத்தைக் கூட்டி முறைத்துக் கொண்டே...
 
 
“முதல்முறையா வீட்டுக்குள்ள வரீங்க... வலது காலை எடுத்து வைத்து வந்தா எல்லாம் நன்மைக்குத் தானே... இதெல்லாம் நம்மளுடைய தமிழ் நாட்டில் பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கிற பழக்கம் தானே... என்ன சொல்றீங்க சார்...” என வட இந்தியாவில் பிறந்து வளர்ந்துவர்களிடம் பஞ்சாயத்தைக் கொண்டு செல்ல...
 
 
‘அவர்கள் இப்படியும் இருக்குமோ...!’ என்பது போலத் தலையசைத்தபடியே அனைவருமே வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைந்தனர். அதன் பின் அபய்யின் சாதுரியத்தால் பால் காய்ச்சுவது மட்டுமின்றிச் சாமிக்கு பூ வைப்பது முதற்கொண்டு விளக்கேற்றுவது வரை அனைத்தையுமே மிருவின் கையால் செய்து முடித்திருந்தான். அவளும் வேறு வழி இல்லாமல் அனைத்தையும் செய்து கொண்டு இருந்தாள் மனதில் அவனை அர்ச்சித்துக் கொண்டே.
 
 
அவள் தன் மேல் எந்த அளவு கொலை வெறியோடு இருக்கிறாள் என்று நன்றாகத் தெரிந்த போதும் அதைப் பற்றி எல்லாம் ஒரு துளி கூடக் கவலைப்படாமல் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்வதிலேயே குறியாக இருந்தவன் தனக்குள் பொங்கிய புன்னகையைக் கூட மறைத்துக் கொண்டு ஒவ்வொன்றையும் அவள் மூலம் செய்து கொண்டிருந்தான் இல்லை செய்ய வைத்துக் கொண்டிருந்தான்.
 
 
இதற்கே அவன் மேல் கொலைவெறியில் இருப்பவள் மாலை அவன் தனக்குத் தரப் போகும் அதிர்ச்சி பற்றித் தெரிந்தால் என்னவாகி இருப்பாளோ...! என்னவோ...!!
 
 
நல்லவேளை அவளுக்குத் தெரியவில்லை ஒருவழியாகக் கடமையே என அனைத்தையும் செய்து முடித்தவள், அங்கிருந்து எப்போதடா போகலாம் என்பது போலக் காத்திருந்து உடனே கிளம்பி விட்டாள். மற்றவர்கள் சிறிது நேரம் இருந்து விட்டு விடைப் பெற்றுத் தங்கள் வீட்டிற்குள் நுழைய...
 
 
அவர்களின் வருகைக்காகக் காத்திருந்தவள் போல் தயாராகி இருந்த மிர்னா, தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறி வெளியேறி விட்டாள். அதன் பிறகு சுபியை ரக்ஷனா அன்று தன்னோடு தன் பொட்டிக்குக்கு அழைத்துச் சென்று விட, மற்றவர்கள் அவரவர் பணியிடம் நோக்கி விரைந்தனர்.
 
 
மதியம் வரை நன்றாகத்தான் போனது, அவள் வேலையில் கவனமாக இருந்த மிர்னா அங்கு அவளைக் காண வந்த மிதுனை கண்டு ஆச்சர்யம் ஆனவள் அவனை வரவேற்று உபசரித்துப் பேசிக் கொண்டிருந்தாள்.
 
 
அப்போது தான் வந்த நோக்கத்தைப் பற்றிக் கூறியவன், புதிதாக மிகப் பெரிய ஒரு பட நிறுவனம் உதயமாகி இருப்பதாகக் கூறி அதில் அவர்களின் முதல் படத்தில் தான் கையெழுத்திட்டு இருப்பதாகத் தெரிவித்தவன், இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அவர்கள் புதிது என்பதனால் தன்னையே நல்ல தரமான டெக்னீஷியன்களைப் பரிந்துரைக்கக் கூறியதாகவும் தன் இரண்டாவது படத்தில் தன்னோடு பணிபுரிந்த இயக்குனர் பற்றிப் பரிந்துரைத்ததால் அவரின் கதையைக் கேட்டு ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் கூறியவன்.
 
 
அதுதான் இப்போது படமாக்கப்பட இருக்கிறது என்றும் மற்ற வேலைகளுக்கான ஆட்களையும் தானே தேர்ந்தெடுப்பதாகக் கூறியவன், அதற்குத் தான் ஆடை வடிவமைப்பாளராக மிர்னாவை தேர்ந்தெடுத்து இருப்பதாகக் கூறவும்,
 
 
‘கதாநாயகி யார்...?’ என்ற எண்ணத்தோடு மிர்னா கேள்வி கேட்க முயல, “இல்ல சுஷ்மா இல்ல... இவங்க புதுமுகம்...” என்றவன் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் காண்பிக்க... 20 வயதில் மிக அழகாகவும் மனதை மயக்கும் சிரிப்போடும் புகைப்படத்தில் இருந்தாள் ஒருத்தி. அவளைப் பார்த்தவுடன் அந்தப் பெண்ணின் உடல்வாகுகான ஆடைகள் எப்படி இருக்க வேண்டும் என மனக்கண்ணில் விரிந்து அந்த யோசனையில் இருந்தவளை கலைத்தது மிதுனின் வார்த்தைகள்.
 
 
“எனக்கும் நீதான் ட்ரஸ் டிசைன் பண்ணனும் மிரு... இரண்டு பேருக்கும் முடியும் தானே...” என்று, கேட்கவும் “உங்களுக்குமா...? என்ன திடீர்ன்னு...?!” என்று கேட்க, இது ஒரு சவுத் இந்தியன் கிராமத்துக் கதை சவுத் இந்தியான்ன உடனே எனக்கு உன்னுடைய ஞாபகம் தான் வந்தது... நீ செஞ்சா சரியா இருக்கும்னு தோணுது...” என்று அவன் கூறவும் தான்,
 
 
அவன் தன்னைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் விளங்க “சரி” என்று ஒத்துக் கொண்டவள், வேலைபளு அதிகரிக்கும் என்று புரிந்தாலும் தன் திறமையை நிரூபிக்கக் கிடைத்த மற்றொரு நல்ல வாய்ப்பு என்பதே பிரதானமாக இருந்தது.
 
 
அதனால் இதிலும் தன்னால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும் என்று எண்ணியவளை அந்தக் கம்பெனி புதிது என்பதால் அதற்கான கண்டிஷன்கள் கூடத் தானே எழுதியதாகக் கூறியவன் அதை மிர்னாவிடம் கொடுத்தான்.
 
 
அதை முழுதாக வாசித்துப் பார்த்தவளுக்குப் பெரிதாக எந்த வித்தியாசமும் தோன்றவில்லை, அனைத்து கம்பெனிகளிலும் இருப்பது போன்று தான் இருந்தது பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை...
 
 
ஆனால் இரண்டு வருடங்கள் தங்கள் கம்பெனியில் தயாரிக்கப்படும் அனைத்து படங்களிலும் வேலை செய்ய வேண்டும் என்பது போல அதில் குறிப்பிடப்பட்டிருக்கக் கேள்வியாக அவனைப் புரியாமல் பார்த்தாள்.
 
 
“புதுக் கம்பெனி இல்லையா... ஒவ்வொரு படத்துக்கும் டெக்னீசியன் தேடி அலையறது கஷ்டம் அதனால தான் இந்த ஏற்பாடு, ஒரு ரெண்டு வருஷம் ஒரே நிர்வனத்தில் இருப்பது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்ல... நீ வேறு எங்கேயும் வேலை செய்யக் கூடாதுன்னு அவங்க சொல்ல போறது இல்ல, அப்படி எதுவும் அங்க மென்ஷன் பண்ணல... நீ உன்னுடைய ஃபேஷன் ஷோ அதெல்லாம் கண்டினியூ பண்ணலாம்...” என்ற விளக்கம் அளித்தவனைக் கண்டு சிரித்தாள்.
 
 
‘புரியுது, அதுவும் சரி தானே... ஒவ்வொரு படத்திற்கும் அனைவரையும் தேடி அலைந்து ஒருங்கிணைப்பது புதிதாக வந்தவர்களுக்கு அத்தனை சாத்தியம் இல்லையே... அவர்கள் காலூன்றிய பிறகு அவர்களைத் தேடி பல பேர் வரக் கூடும் ஆனால் அதுவரை...’ என்ற எண்ணத்தோடும் புரிதலோடும் அதில் இருந்த அத்தனை நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவித்தவள் கையெழுத்திடும் முன்பாகத் தன் சம்பளத்தைப் பற்றிப் பேசவும் தவறவில்லை.
 
 
நட்பு வேறு, வேலை வேறு என்பதில் தெளிவாக இருந்தாள் அவள். ‘இது தானே இனி அவள் வாழ்க்கை...! இதற்காகத் தானே இத்தனை போராட்டம், இனி இது மட்டுமே தனக்கு...’ என்று தன் மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டிருந்தளுக்கு வேறு எதைப் பற்றிய கவலையும் எண்ணமும் இல்லை.
 
 
அதை விட மிதுனிடம் அவளுக்குச் சற்று நம்பிக்கை இருந்தது, கடந்த 6 மாதமாக இருவருக்குள்ளும் ஒரு நல்ல நட்பு இருந்தது. அந்தப் படத்தில் பணிபுரிய தொடங்கியதற்குப் பிறகு தான் இருவருக்கும் அறிமுகம் என்றாலும் அவனிடமிருந்த சில குணங்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் நட்பு பாராட்ட வைத்திருந்தது.
 
 
அனைத்தும் பேசி முடித்து விட்டு கிளம்பியவன், “இன்னும் பத்து நாட்களுக்குப் பிறகு வரும் ஒரு தேதியைக் குறிப்பிட்டு அன்று பூஜையோடு படம் தொடங்க இருப்பதாகக் கூறியவன் அதற்கான அழைப்பிதழையும் அவளிடம் கொடுத்து விட்டு இன்று மாலை இந்தப் படத்தின் தயாரிப்பாளரோடு உனக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது...” என்றான்.
 
 
“எது சம்பந்தமாக...?” எனக் கேள்வி எழுப்பியவளுக்கு :”அவருக்கு எப்படி என்ன முறையில் ஆடைகள் தேவைப்படும் என்பது பற்றியும் வேறு ஏதாவது உனக்குக் கோரிக்கைகளோ இல்லை தேவைகளோ இருந்தால் அவரிடம் தயங்காமல் பேசிக் கொள்ளவும் தான், இதை அவரே தான் கூறினார்... ஒவ்வொருவரிடமும் இது போலத் தனியாகச் சந்தித்து அவர் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்...” என்றும் சேர்த்து கூறினான்.
 
 
‘தன் வேலை சரியாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், தங்களிடம் பணி செய்பவர்களைப் பற்றிக் கவலைபடுவதில்லை என்பதால் இப்படியும் ஒரு தயாரிப்பாளரா...?!’ என்று மனதில் வியந்து கொண்டே ‘அவர் புதிதாக வந்திருப்பவர் என்பதனால் அனைத்தையும் சரியாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறாரோ என்னவோ..!?’ என்ற எண்ணத்தோடு “சரி அவர் ஆஃபீஸ் எங்கே இருக்கிறது...?” என்றாள். 
 
 
“இல்லை **** இந்த ஹோட்டலில் மாலை முதல் அவர் ஒவ்வொருவராகச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார், உனக்கு அவர் குறித்திருக்கும் நேரம் இரவு எட்டு மணி சரியாக அங்கே போயிடு...” என்று கூறிவிட்டு அவன் விடைபெற்றுச் சென்றான்.
 
 
மாலை தன் வேலைகளை முடித்துக் கொண்டு விரைவாகவே வீட்டிற்குத் திரும்பி சரியான நேரத்திற்குக் குளித்துத் தயாராகி அந்த ஓட்டலுக்குள் நுழைந்தாள் மீரு.
 
 
மிதுன் குறிப்பிட்டிருந்த எண் மேசையை நெருங்கி அங்கு அமர்ந்து இருப்பவரின் முன் சென்று நின்றவள், அங்கு அமர்ந்து இருந்த அபய்யை கண்டதும் அப்படியே நின்று விட்டாள்.
 
 
“சிட் டவுன் பேபி...” என இடதுகையை ஸ்டைலாக அசைத்தபடி மிர்னாவை எதிரில் இருந்த இருக்கையைக் காட்டி கூறியவனைக் கண்டு அப்படியே நின்றிருந்தவள் “இவனா...?” என முறைத்துக் கொண்டே அங்கு அமர கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் திரும்பி போகும் எண்ணத்தில் இருந்தாள்.
 
 
தங்களுக்கு அடுத்து இருந்த மேஜைக்கு உணவை எடுத்துக் கொண்டு வந்தவருக்கு வழி விட வேண்டி வேறு வழியில்லாமல் அந்த இருக்கையில் அமர வேண்டிய நிலை வந்தது.
 
 
அபய்யின் மேலிருந்த கோபம் ‘இங்கு இவனையா பார்க்க வந்தோம்...?’ என்று தன் மேலேயே இருந்த எரிச்சல் என அனைத்தும் சேர இருக்கையில் அமர்ந்தவளை ஒரு கேலியும் குறும்பும் கலந்த புன்னகையோடு எதிர் கொண்டான்.
 
 
அவளைக் கவனித்து “இப்போ எல்லாம் நீ தாவணி போடறது இல்லையா பேபி...?” என அதி முக்கியக் கேள்வியை முன் வைக்க... பல்லைக் கடித்தபடி ஏதோ பேச முன் வந்தவளுக்கு அதற்கு வாய்ப்பளிக்காமல் அவர்கள் அருகில் வந்து நின்றான் பேரர்.
 
 
அவர் முன் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் “தனக்கு எதுவும் தேவையில்லை...?” என்று மிர்னா மறுக்க...
 
 
“அவங்க கொஞ்சம் கோவமா இருக்காங்க டூட்... நான் கேட்டு சொல்றேன், நீங்க போங்க...” என்று பேரரை அனுப்பி வைத்தவன் மிர்னாவை பார்க்கவும், தங்களுக்குப் பின்னால் அந்தப் பேரர் மற்றொரு பேரரிடம் “லவ்வர்ஸ் கோரல்...” எனப் புன்னகையோடு கூறிவிட்டு நகர்வது கேட்டது.
 
 
அதில் எழுந்த ஆத்திரத்தோடு புசுபுசுவென மூச்சுவிட்டபடி மிர்னா அவர்களை முறைத்துக் கொண்டிருந்த காட்சியைக் கண்டு தன்னை மீறி வெளி வர துடித்த புன்னகையை உதட்டை கடித்து அடக்கிக் கொண்டவன் தன் பார்வையை அவளின் முகத்திலிருந்து திருப்பிக் கொண்டான்.
 
 
ஆனால் அதைச் சரியாகக் கண்டுக் கொண்டவள், மேஜை மேல் இருந்த கத்தியை அவனை முறைத்துக் கொண்டே கையில் எடுத்தாள்.
 
 


   
ReplyQuote

You cannot copy content of this page