All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நின்னு நின்னுகா பிர...
 
Notifications
Clear all

நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!! - (Story Thread)

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
1793968990-IMG-20261106-WA0000.jpg
 
 
ஸ்ரீநிவாசா கோவிந்தா
ஸ்ரீவேங்கடேசா கோவிந்தா
பக்த வத்சலா கோவிந்தா
பாகவத ப்ரிய கோவிந்தா
நித்ய நிர்மலா கோவிந்தா
நீலமேகஸ்யாம கோவிந்தா
புராண புருஷா கோவிந்தா
புண்டரீகாக்ஷா கோவிந்தா
கோவிந்தா ஹரி கோவிந்தா
கோகுல நந்தன கோவிந்தா
 
 
மெல்லிய ஒலியில் கசிந்து கொண்டிருந்த பாடலோடு சேர்த்து அங்குக் கம்பீரத்தோடு நின்று இருந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும் ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
புதன்கிழமையின் அந்தக் காலை நேரத்தில் அதிகக் கூட்டம் இல்லாததால் எந்த அவசரமோ பதட்டமோ இல்லாமல் பார்த்தசாரதியின் முன் பொறுமையாகக் கை கூப்பி நின்று இருந்தவனின் மனதில் அப்படி ஒரு அமைதி.
 
 
ஏனோ ஒவ்வொரு முறையும் இந்த பார்த்தசாரதியை காணும் போதெல்லாம் அவனுள் கடவுளை காணும் நிறைவுக்குப் பதில் தன் குடும்பத்து பெரியவரை காணும் ஒரு நிறைவே ஏற்படும். அந்த முறுக்கி விடப்பட்ட மீசையும் அதில் படிந்திருக்கும் வெண்மையும் அவர் நிற்கும் தோற்றமும் எனக் காண்போருக்கு அப்படித் தோன்றுவதில் தவறே இல்லையே..!
 
 
அப்படியே அவரைக் கண் குளிர ரசித்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரிதாக எந்த வேண்டுதலோ கோரிக்கைகளோ இல்லை. அவரைக் காண்பதே போதுமென்பது போன்ற ஒரு நிறைவே இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவரை காண்கிறான்.. கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து பார்க்கும் போது விட்டு போன சொந்தத்தை பார்ப்பது போல் தோன்ற அப்படியே இமைக்க மறந்து நின்று விட்டான் ஸ்ரீராம்.
 
 
வெகு நேரத்திற்கு பின் இன்று இங்குப் பணி மாற்றலாகி வந்து இருப்பவன் என்பதால் அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என விழி மூடி தன் வேண்டுதலை அந்த பார்த்தசாரதியின் பாதத்தில் வைத்து விட்டு விழிகளைத் திறக்கவும், சரியாக அதே நேரம் திருமாலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அவனுக்காகவே அந்த ஆராதனை எடுத்தது போல் இருக்க.. ஸ்ரீராமின் மனதில் அப்படி ஒரு நிறைவு.
 
 
அதைக் கண்ணார கண்டு விட்டு மன நிறைவோடு வெளியில் வந்தவன் பிரகாரத்தைச் சுற்றி வந்து வேதவல்லி தாயாரை வணங்கி விட்டு அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து கொண்டான் ஸ்ரீராம்.
 
 
அதேநேரம் தன் படை பரிவாரங்களோடு கோவிலுக்குள் நுழைந்தாள் ஷ்ராவனி. பட்டுப்பாவாடை தாவணியில் இடை வரை நீண்டிருந்த கூந்தலை மேலே மட்டும் கிளிப் செய்து படர விட்டு மல்லி சரம் இரு தோள்களிலும் ஊஞ்சலாட கையில் அர்ச்சனை தட்டுடன் நடந்தவளை கடந்து செல்பவர்களின் பார்வை அவள் மேல் சில முறை படிந்தே மீண்டது.
 
 
அந்த விசேஷம் எதுவுமற்ற சாதரான வார நாளில் வழக்கமாக வரும் வயதானவர்களையும் பெண்களையும் தவிரப் பெரிதாக எந்தக் கூட்டமும் அங்கில்லை. கொடி மரத்திடம் தேங்காய் உடைத்துக் கற்பூரம் ஏற்றி வணங்கி விட்டு அர்ச்சனை சீட்டோடு உள்ளே சென்றவள் தான் வாங்கி இருந்த துளசி மாலையைக் கொடுத்து பூஜையை முடித்துக் கொண்டு வெளியில் வரவும், அதுவரை உடன் வந்த ஷ்ராவனியை அங்கு காணாது திகைத்தனர் தோழிகள்.
 
 
“நம்ம கூடத் தானே டி வந்தா..? அதுக்குள்ளே எங்கே போனா..?” என்று ஸ்வேதா கேட்கவும், ‘அந்த பெரிய உண்டியலின் பின்னே ஏதாவது வேண்டி கொண்டு நிற்கிறாளா..?’ என மலர் சென்று தேட.. அங்கும் அவள் இல்லாததை கண்டு அனைவரும் திருதிருக்க.. “இரு வரேன்..” என்றவாறு முன் பக்கம் சென்ற காயத்ரியின் எண்ணத்தைக் கொஞ்சமும் பொய்யாக்காமல் அங்கிருந்த சொர்கவாசலின் மூடப்பட்ட பெரிய கதவின் முன் தரையில் சம்மணமிட்டு அமர்ந்து தன் மடியில் இருந்த பிரசாத பொட்டலங்களைக் கண்கள் மின்ன பிரிக்க முயன்று கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
“தெரியும்டி நீ இங்கே தான் இருப்பேன்னு..” எனப் பல்லை கடித்த காயத்ரி, அவள் எதிர்பாராத நேரத்தில் சட்டென ஷ்ராவனியின் கையில் இருந்த வடையைப் பறித்துக் கொண்டு ஓடினாள்.
 
 
ஆசையோடு வாயின் அருகில் கொண்டு சென்று சாப்பிட இருந்த நேரத்தில் காயூ இப்படிச் செய்யவும் அதில் கடுப்பானவள், “ஹே.. காயூ நில்லு டி.. ஒழுங்கா பார்சலை கொடுத்துடு.. கையில் சிக்கின அடி பின்னிடுவேன்..” எனத் தன் பிரசாதம் வாங்கிச் சாப்பிடும் திட்டம் தடைப்பட்டதில் உண்டான கடுப்போடு தாவணியைத் தூக்கி பிடித்தப்படி விரட்ட.. “முதலில் மற்ற சன்னிதானம் வந்து எங்க கூடச் சாமி கும்பிடு.. அப்பறம் எல்லாருமே சேர்ந்து போய்ச் சாப்பிடலாம்..” என்று திரும்பி பார்க்காமலேயே சொல்லியவாறு ஓடினாள் காயத்ரி.
 
 
கோவிலுக்குள் நுழைந்ததிலிருந்து வாசனை காலை கட்டி இழுத்தாலும் அந்தப் பக்கம் போகத் துடித்த கால்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு வந்த வேலையை முடித்துக் கொண்டு இங்கு ஓடி வந்து விட்டிருந்த ஷ்ராவனி, சூடான புளியோதரையும் நெய் மணக்கும் சக்கரை பொங்கலையும் மிளகு வடையும் சாப்பிட எண்ணியிருந்த தன் கனவை தடை செய்பவளின் மேல் உண்டான ஆத்திரத்தோடு வேதவல்லி தாயாரின் சன்னிதானத்தின் படிகளை ஏறிக் கொண்டிருந்தவளின் கவனம் முழுவதும் காயூவின் மேலேயே இருந்ததின் பலனாகப் படி இறங்கி கொண்டிருந்த ஸ்ரீராமை கவனிக்கத் தவறினாள் ஷ்ராவனி.
 
 
அதில் பலமாக அவன் மேல் மோத.. ஷ்ராவனியின் கையில் இருந்த பாதிப் பிரித்தும் பிரிக்காமலும் இருந்த சக்கரை பொங்கல் மொத்தமும் ஸ்ரீராமின் மேல் விழுந்து சிதறியது.
 
 
மேல் படியில் இறங்க கால் வைக்கும் போதே ஓடி வரும் காயத்ரியை கண்டு விட்டிருந்தவன் ஓரமாக நின்றுக் கொள்ள.. அவளின் கவனம் பாதையில் இருந்ததால் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் போனது. அதில் மீண்டும் தன் நடையைத் தொடர்ந்தவன், இரண்டு படி இறங்குவதற்குள் அடுத்து வந்தவளின் இத்தகைய மோதலை எதிர்பார்க்கத்தோடு தன் வெள்ளை சட்டையின் மேல் விழுந்த பிரசாதத்தைக் கண்டு உண்டான அதிர்வோடு “தேவுடாஆஆ..” என்றிருந்தான்.
 
 
தான் ஒருவன் மேல் மோதி இருக்கிறோம் என்பதை விட.. தன் சக்கரை பொங்கல் வீணாகி போன கடுப்பில் மேலும் ஓட துவங்கியவளின் காதில் ஸ்ரீராமின் இந்த வார்த்தைகள் விழவும், அது அவளுக்கு தவறான அர்த்தத்தில் புரிய.. திரும்பி ‘பளார்’ என ஸ்ரீராமை அறைந்திருந்தாள் ஷ்ராவனி.
 
 
தன் சட்டையில் கொட்டியிருந்த பிரசாதத்தைத் தட்டி விட்டு கொண்டிருந்தவன் ஷ்ராவனியின் இந்தச் செயலில் திகைத்து நிமிர.. “ராஸ்கல்.. என்ன சொன்னே..? தைரியம் இருந்தா மறுபடியும் சொல்லு..?” என்றவாறே மீண்டும் அவனை அடிக்க முயன்றவளின் கையைப் பற்றி நிறுத்தியிருந்தான் ஸ்ரீராம்.
 
 
தன்னை கேவலமாக திட்டியதோடு கையை வேறு பிடித்திருந்தவனை ஆத்திரத்தோடு முறைத்தவள் “ஹவ் டேர் யூ.. கையை விடு மேன்..” என்றவளை அவளுக்கும் மேல் முறைத்துக் கொண்டு நின்றிருந்தவனின் பிடியில் இருந்த அழுத்தம் வலியை கொடுக்க.. “ச்சீ.. கையை விடு, எவ்வளவு திமிரு இருந்தா கோவிலில் நின்னுட்டு இப்படி ஒரு வார்த்தையைப் பேசி இருப்பே..? இதில் என் கையை வேற பிடிக்கற..!” என்றாள் எரிச்சலும் வெறுப்புமாக.
 
 
“நான் என்ன சொன்னேன்..?” என்று பல்லை கடித்துக் கொண்டு ஸ்ரீராம் கேட்கவும், “ஏன் உனக்குத் தெரியாதா..? அதை நான் வேற சொல்லணுமா..?” என ஆத்திரத்தோடு அவள் சொல்லவும், ஷ்ராவனியின் தோழிகள் அவளருகில் வரவும் சரியாக இருந்தது.
 
 
“ஷ்ரவு.. என்னடி இதெல்லாம்..? விடு..” என அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல அவர்கள் முயல.. “சும்மா இருங்க டி.. இவன்.. இவன் என்ன சொன்னான்னு தெரியுமா..? ராஸ்கல் இவனை எல்லாம் சும்மா விடக் கூடாது.. இப்போவே போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லலை..” என்று தன் கைபேசியை கொடுக்குமாறு ஸ்வேதாவிடம் சைகையில் சொன்னவாறே எகிறியவளை எப்படிச் சமாளிப்பது எனத் தெரியாமல் அவளின் தோழிகள் திணறி கொண்டிருந்தனர்.
 
 
ஆனால் அதே நேரம் ஷ்ராவனியின் ஆத்திரத்திற்குக் கொஞ்சமும் குறையாத ஆத்திரத்தோடு கண்கள் சிவக்க இன்னும் அவளின் கையைப் பற்றி இருந்த பிடியை விடாமல், இன்னும் அழுத்தம் கொடுத்து “நான் என்ன சொன்னேன்னு கேட்டேன்..” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ராஸ்கல் என்னைப் பார்த்தா எப்படி இருக்கு உனக்கு..? நீ சொன்னதே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன், இதில் நான் வேற அதை மறுபடியும் சொல்லணுமா..?” என்றாள் அவனிடம் சிக்கி இருக்கும் தன் கைகளை விடுவிக்க முயன்றவாறே ஷ்ராவனி.
 
 
“அதான் கேட்கறேன்.. அப்படி நான் என்ன சொன்னேன்..?” என்று மீண்டும் கடித்த பற்களுக்கு இடையே கேட்டான் ஸ்ரீராம். அதில் அவன் தாடை இறுகுவதில் இருந்தே அதீத கோபத்தை ஸ்ரீராம் கட்டுபடுத்த முயல்வது தோழிகளுக்கு புரிய.. ஷ்ராவனியை எப்படியாவது அங்கிருந்து இழுத்து செல்ல முயன்றனர். 
 
 
ஆனால் அது புரிய வேண்டியவளோ சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு அவனிடம் குதித்து கொண்டிருக்க.. அவளின் அத்தனை அலைப்பறையையும் தன் ஒற்றை பிடியில் கட்டுபடுத்தியவாறு அசையாமல் நின்று இருந்தான் ஸ்ரீராம்.
 
 
அதற்குள் இவர்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடி விட்டிருக்க.. “நீ நினைக்கறது போலத் தம்பி தப்பா எதுவும் பேசலைம்மா..” என்றிருந்தார் அங்கு வெகு நேரமாக அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர்.
 
 
அதில் அவரைத் திரும்பி முறைத்தவள், “உங்களுக்கு ஏன் அது தப்பா தெரிய போகுது.. அவன் பெண்களைத் தானே கேவலமா பேசினான்..” என்று அடுத்து அவரிடம் சண்டைக்குத் தயாரானாள் ஷ்ராவனி.
 
 
“இல்லை பாப்பா.. நாங்க ரொம்ப நேரமா இங்கே தான் இருக்கேன்.. நீ அவர் மேலே இடிச்சும், அவரோட சட்டையைப் பாழாக்கியும் கூட அவர் உன்னை எதுவுமே சொல்லலை..” என்று அவரோடு அமர்ந்திருந்த மற்றொரு பெரியவரும் சொல்ல.. “எது..? எதுவும் சொல்லலையா..? இதை விடக் கேவலமா வேற என்ன சொல்லணும்..?” என்றவளை “அதான் கேட்கறேன்.. நான் அப்படி என்ன சொன்னேன்..?” என்ற ஸ்ரீராமின் அதே உணர்வற்ற குரல் அவளின் பேச்சை இடையிட்டு இருந்தது.
 
 
“இப்போ என்ன நான் என் வாயால சொல்லணும்.. அதானே..! ஓகே சொல்றேன், நல்லா கேட்டுக்கோ, நீ.. நீ என்னை.. என்னை பார்த்து தே.. தே..” என்று அதீத உணர்ச்சிவசத்தில் தடுமாறியவளை “தேவுடா.. தே.. வு.. டா.. கேட்டுச்சா..? தேவுடா.. இட் மீன்ஸ் ஓ மை காட்.. ஜஸ்ட் எமோஷன்ல வர ஒரு வர்ட்.. அவ்வளவு தான்.. புரிஞ்சுதா..?” என அவளை அதற்கு மேல் பேச விடாமல் இடையிட்டு தானே பேசி முடித்து அதே வேகத்தில் ஷ்ராவனியின் பிடித்திருந்த கையை ஒரு வேகத்தோடு உதறி விட்டுச் சென்றிருந்தான் ஸ்ரீராம்.
 
 
அவன் சொல்லி சென்ற வார்த்தைகளில் “தே.. வு.. டான்னா.. கடவுளேவா..?” என்று ஒருமுறை தனக்குள்ளேயே சொல்லி பார்த்து கொண்டவள், பார்வையை அருகில் இருந்த பெரியவரின் பக்கம் திருப்ப.. ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தனர் பெரிதாக நாமம் போட்டிருந்த அவர்கள் இருவரும்.
 
 
“ஓ..” என்ற சிறு தோள் குலுக்கலோடு அதை விட்டவள், “ம்ப்ச்.. என் பொங்கல் எல்லாம் வேஸ்டா போச்சு..” என்று படியில் சிதறி இருந்தவற்றைப் பார்த்தவாறே புலம்பி விட்டு திரும்பி இப்போது அது தான் முக்கியம் என்பது போல காயூவை முறைக்க.. அவளோ ‘இப்போதிருக்கும் இந்த மனநிலையில் இவளிடம் சிக்கினாள் ஒரு வழியாக்கி விடுவாள்..!’ எனப் புரிந்து “ஷ்ரவு நீ வா நாம பிரெஷா மறுபடி பிரசாதம் வாங்கிக்கலாம்.. தீர்ந்துட போகுது.. வா.. வா..” என அவளின் கையைப் பற்றி அதற்கு மேல் யோசிக்க விடாமல் இழுத்துக் கொண்டு செல்ல.. மற்றதை எல்லாம் மறந்து கண்கள் மின்ன அவள் பின்னே சென்றாள் ஷ்ராவனி.
 
 
********************
 
 
கோவிலில் இருந்து வந்து தன் உடையை மாற்றிக் கொண்டு கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி. மெல்ல எதுவோ ஒரு பாடலை முணுமுணுத்தவாறே தலைவாறி கொண்டிருந்தவளையே கன்னத்தில் கை வைத்தப்படி பார்த்துக் கொண்டிருந்தனர் அவளின் தோழிகள்.
 
 
‘சற்று நேரத்தில் அங்கு வைத்து எவ்வளவு அமர்க்களம் செய்து விட்டாள்..!’ என்ற எண்ணமே அவர்களின் மனதில் ஓடி கொண்டிருக்க.. அதற்குக் காரணமானவளோ அதைப் பற்றிய எண்ணமே துளியும் இல்லாமல் தன் போக்கில் ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தாள்.
 
 
இன்று ஷ்ராவனியின் பிறந்தநாள்.. அதற்குத் தான் காலையிலேயே குளித்துத் தயாராகி நல்ல பிள்ளையாகக் கோவிலுக்குச் சென்றிருந்தாள். சாமி கும்பிடவெல்லாம் இல்லை.. அவளின் தந்தையின் கட்டளையின் படி உடை அணிந்து கோவிலின் முன் நின்று படம் எடுத்து அவருக்கு அனுப்பி வைக்க தான்.. ஆனால் அங்கு இப்படி ஒரு கலவரத்தை இவள் உண்டாக்குவாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
 
 
இது மட்டும் முன்பே தெரிந்திருந்தால் ‘நீ ஒரு ஓரமா உட்கார்ந்து புளியோதரையையே சாப்பிடுமா..’ என அவளைத் தொல்லை செய்திருக்கவே மாட்டாள் காயத்ரி. அப்படிச் செய்ததின் பயனாக மற்ற தோழிகளிடம் முறைப்பை பெற்றுக் கொண்டது தான் மிச்சம்.. இந்த நிமிடம் வரை பிறந்தநாள்காரி ஒரு ஐம்பது பைசா சாக்லேட்டை கூடக் கண்ணில் காண்பிக்கவில்லை.
 
 
ஆனால் ஷ்ராவனி இந்த நேரத்தில் இப்படித் தான் நடந்து கொள்வாள் என யாராலேயும் கணிக்கவே முடியாது.. அது அவளைப் படைத்த பிரம்மனுக்கே பிரம்ம பிரயத்தனம் தான்..’ என்று எண்ணியவளுக்கு நேற்று இரவு நடந்தது மனதில் ஓடியது.
 
 
அந்த அறையே இருளில் மூழ்கி இருக்க.. மெல்ல ஒரு மெழுகுவர்த்தி மட்டும் திடீரென உயிர்பெற்றது. அப்படியே அது அசைந்து வர.. ஆங்காங்கு இருந்து மூன்று உருவங்கள் எழுந்து வந்து இருளில் ஒரு கட்டிலின் அருகில் குழுமியது.
 
 
‘ஆரம்பிக்கலாமா..?!’ என்பது போல் ஒரு தலையசைப்போடு நால்வரும் தலை முதல் கால் வரை போர்த்திக் கொண்டு உறங்கி கொண்டிருந்த உருவத்தின் போர்வையைப் பிடித்து இழுக்க.. அந்த மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில் முகம் மலர்ந்து விசிகிக்க உறங்கி கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
“ஹாப்பிப் பர்த்டே..” என்று கோரஸாக நால்வரும் குரல் கொடுத்தவாறே அவளை எழுப்ப முயல.. அவளோ இந்த உலக நினைவே இல்லாதது போல் வெட்க புன்னகையோடு இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.
 
 
அதில் கடுப்பானவர்கள் அவளைப் பிடித்து உலுக்கி எழுப்பவும், “ஹே ஹாண்ட்சம்.. என்னை விட்டு எங்கே போறே..?” என்று கையை காற்றில் துழாவியவாறு உளறிக் கொண்டிருந்தவளை பிடித்து எழுப்பி அமர வைக்க முயல.. அவளோ விழியை கூட திறக்காமல், “ஹே ஹேண்ட்சம் உன் பேர் என்ன..?” எனக் கொஞ்சல் குரலில் கேட்க.. அவள் காதில் “ஊஊஊ..” என கோரசாகக் கத்தினர் நால்வரும். அதில் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்தாள் ஷ்ராவனி.
 
 
தன் கனவு கலைந்த எரிச்சலில் சுற்றிலும் அமர்ந்திருந்தவர்களைக் கண்டு கடுப்பானவள், “எங்கே இருந்து தான் எனக்குன்னு வந்து சேருவீங்களோ..! ஊருல இருக்க மொத்த வில்லிங்களும் என் ரூம்ல தான் இருக்காளுங்க.. இப்போதான் என் ஹேண்ட்சம் எனக்கு லவ்வை சொன்னான்.. அப்படியே ஜாலியா அவன் கூடக் கொஞ்ச நேரம் இருக்க விடறீங்களா..? அவன் பேர் கூடத் தெரியலை.. முகத்தைக் கூடப் பார்க்கலை..” என்று அருகில் இருந்த தலையணையை எடுத்து அவர்களை அடிக்கத் துவங்கினாள் ஷ்ராவனி.
 
 
“ஏன் டி சொல்ல மாட்டே.. எங்கே பன்னிரண்டு மணிக்கு தூங்கிடுவோமோ இல்லை கேம் விளையாடி டைம் மிஸ் ஆகிடுமோன்னு எல்லாம் யோசிச்சு உனக்குச் சத்தம் கூடக் கேட்க கூடாதுன்னு வைப்ரேட்ல நாங்க அலாரம் வெச்சு எழுந்து வந்தா.. இவ நல்லா குறட்டை விட்டு தூங்கி கனவு கண்டுட்டு நம்மளை வில்லிங்கறா..” என்று மலர் குறைபட்டுக் கொண்டாள்.
 
 
“வாங்கடி நாம போய்த் தூங்குவோம்.. அவ நிம்மதியா கனவு காணட்டும்..” என்று ஸ்வேதா எழுந்து கொள்ள முயல.. “அடியேய் மெண்டலுங்களா.. இப்போ அரைத் தூக்கத்தில் கனவு மயக்கத்தில் இப்படிப் பேசறவ நாளைக்கு அப்படியே மாற்றி சரியான நேரத்துக்கு விஷ் கூடச் செய்யலை நீங்க எல்லாம் என்ன பிரெண்ட்னு கேட்டு காதுல ரத்தம் வர அளவுக்கு அடுத்த வருஷ பர்த்டே வரைக்கும் பேசுவா.. இதெல்லாம் நமக்குத் தேவையா..?” என்று ரேஷ்மா எச்சரிக்கவும், மற்ற மூவரும் அங்கேயே திகைப்போடு நிற்க.. அது என்பது போல நால்வரையும் கெத்தாகப் பார்த்துக் கொண்டே கேக் மேல் இருந்த மெழுகுவர்த்தியை ஊதினாள் ஷ்ராவனி.
 
 
அதன் பின் ஒருவழியாகக் கொண்டாட்டத்தை முடித்து விட்டு அமர்ந்தவர்களுக்குத் தன் கனவை ஷ்ராவனி விவரிக்க.. வாயை பிளந்து கேட்டுக் கொண்டிருந்தவர்கள், “ஆள் எப்படி இருந்தாரு மச்சி..?” என்றனர்.
 
 
“ம்ப்ச்.. எங்கே அந்த இடம் முழுக்க இருட்டா இருந்தது.. பிரபோஸ் செஞ்ச அப்பறம் என் கையைப் பிடிச்சு நடக்கும் போது தான் அந்த ஹான்ட்சம் முகத்துல லேசா வெளிச்சம் விழற நேரமா பார்த்து என்னைச் சரியா நீங்க எழுப்பிட்டீங்க..” என்று குறைபட்டு கொண்டாள் ஷ்ராவனி.
 
 
“ஓ.. வாவ்.. உன் இத்தனை வருஷ கனவு நிறைவேற போகுது மச்சி.. மறுபடி படுத்து தூங்கு.. கனவுல வர ஹீரோ யாரு என்னன்னு சரியா தெரிஞ்சுக்கோ.. முக்கியமா பேர் என்னன்னு கேளு..? அப்பறம் ஆள் எங்கே இருந்தாலும் நாம தட்டி தூக்கிடலாம்..” என்று மலர் கூறவும், “எஸ் பேபிஸ்.. காதலிச்சு தான் கல்யாணம் செய்வேன்ற என் லட்சியம் கூடிய சீக்கிரம் நிறைவேற போகுது.. காத்துல கலந்து எங்கேயோ இருந்த மை ஹாண்ட்சம் என்னைத் தேடி என் கனவுல வர துவங்கிட்டான்.. இனி அதை நிஜமாக்குறது தான் நம்ம அடுத்த டார்கெட்.. பை பேபிஸ்.. என் ராஜகுமாரன் எனக்காக கனவில் வெயிட்டிங்..” என்று விட்டு மீண்டும் போர்வைக்குள் அடைக்கலமானாள் ஷ்ராவனி.
 
 
“அவனவன் எவ்வளவு பெரிய லட்சியத்தை வெச்சுட்டு வாழ்ந்துட்டு இருக்கான்.. இந்தப் பக்கிக்கு லட்சியத்தைப் பார்த்தீயா..” என்று கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்தனர் அவளின் தோழிகள்.
 
 
அதை எண்ணி பார்த்து கொண்டிருந்த காயத்ரியை “என்னடி கனவா..?” என்று பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் ஷ்ராவனி. “யாருக்கு எனக்கா..?” என முறைப்போடு துவங்கியவள், முழுதாகத் தயாராகித் தன் முன் நின்றிருந்தவளை அதிசயமாகப் பார்த்தவாறு திரும்பி நேரத்தை பார்க்க.. அது அவர்கள் வழக்கமாகக் கிளம்பும் நேரத்திற்கு இன்னும் அரைமணி நேரம் இருக்கு என்றது.
 
 
“என்னடி அதிசயமா இருக்கு வழக்கமா நாங்க தான் ரெடி ஆகிட்டு உன்னைக் கிளம்புடின்னு கெஞ்சணும்.. இன்னைக்கு என்ன புதுசா..?” என்றாள் காயத்ரி. “அது.. இன்னைக்கு என் ஹேண்ட்சம் என் கண்ணில் படலாம் இல்லையா..! அதான்.. சரி, சரி.. சீக்கிரம் வாங்க நேரமாகுது..” என்றவளை கொலைவெறியோடு பார்த்தவர்கள் “ஏன் இன்னைக்கு நேரில் வந்து உன்னைப் பார்க்கறேன்னு உன்கிட்ட கனவில் சொன்னாரா..?” என்றனர்.
 
 
“இல்லையே..!” எனத் தோள் குலுக்கியவளை முறைத்தவர்கள், “அப்பறம் என்ன நம்பிக்கையில் டி கிளம்பறே..?” எனவும், “இவ்வளவு நாளா எங்கே இருக்கான்னே தெரியாம இருந்த என் ஆளு இன்னைக்குன்னு பார்த்து என் கனவில் வந்து இருக்கான்னா என்ன அர்த்தம்..?” என்று கேட்டு இடைவெளி விட.. அவளையே அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தனர் நால்வரும்.
 
 
அவர்களிடமிருந்து பதில் வரும் என எதிர்பார்த்தவள், அப்படி எதுவும் வராமல் போகவும், “சுத்த வேஸ்ட் டி நீங்க.. இத்தனை நாள் வராத கனவு இன்னைக்கு ஏன் வரணும்..? அதுவும் இன்னைக்கு என்ன நாளு..?” என்று எடுத்து கொடுக்க.. “உன் பர்த்டே..” என்றிருந்தாள் ரேஷ்மா.
 
 
“ஹ்ம்ம் உன் தலை.. இன்னைக்கு பிப்ரவரி 14.. இன்னைக்குன்னு என் கனவில் வந்து லவ் சொல்லி இருக்கான்னா என்ன அர்த்தம்..?” எனவும், அப்போதும் அவர்கள் அமைதியாகவே இருக்க.. “என் கனவு கண்ணன்.. காதல் நாயகன்.. நேரில் வர போறான்னு தானே அர்த்தம்.. பிப்ரவரி 14ல் பிறந்துட்டு எங்கே காதலே இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டி வருமோ..!
 
 
எங்கே என் லட்சியம் நிறைவேறவே ஏறாதோன்னு பயந்துட்டு இருந்தேன்.. ஆனா என் கனவை எல்லாம் நினைவாக்க எனக்காகவே பிறந்தவன் வந்துட்டான்..” என்று கண்கள் மின்ன பேசி கொண்டிருந்தவளை கண்டவர்கள் அவளின் சந்தோஷத்தை கேள்விக்குறியாக்க விரும்பாமல் அவளோடு இணைந்து கொள்ள.. எதிர்பார்ப்பும் துள்ளலுமாகக் கல்லூரிக்கு கிளம்பினாள் ஷ்ராவனி.
 
 
***********************
 
 
இங்குப் புயல் வேகத்தில் கோவிலில் இருந்து வீடு திரும்பி இருந்த ஸ்ரீராமின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. வேலை மாற்றலாகி சென்னை வந்திருப்பவன், முதல் நாளை அவனுக்கு விருப்பமான பார்த்தசாரதியை தரிசித்து விட்டு மன நிறைவோடு துவங்க நினைத்திருக்க.. மனநிம்மதியையே கெடுப்பது போல் ஒரு நிகழ்வு நடந்திருந்தது.
 
 
‘எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது அவளைப் பார்க்கும் வரை..! அதன் பின்..?’ என்று எண்ணும் போதே ஷ்ராவனியின் முகம் நினைவுக்கு வர.. ஆத்திரத்தோடு “ராக்காஷி.. பிச்சி ராக்காஷி..” (ராட்சசி.. பைத்தியம் பிடிச்ச ராட்சசி) என்றான் பல்லை கடித்துக் கொண்டே.
 
 
கொஞ்சம் கூட நிதானமோ புரிந்து கொள்ளும் தன்மையோ இல்லாமல் அவள் நடந்து கொண்ட விதமும் யோசிக்காமல் அறைந்திருந்ததும் ஆத்திரத்தை உண்டாக்க.. இறுதியாக அவன் மேல் தவறில்லை என்று தெரிந்த பின்னும் அவள் குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கூடக் கேட்கவில்லை என்பது நினைவுக்கு வர.. “தத்தம்மா..” (யூஸ்லெஸ்) என வெறுப்போடு சொல்லியவாறு குளியலறைக்குள் நுழைந்தான் ஸ்ரீராம்.
 
 
மனதின் கோபமும் வெறுப்பும் தணியும் வரை அப்படியே உடையைக் கூட மாற்றாமல் ஷவருக்கு அடியில் நின்றிருந்தான் ஸ்ரீராம். தன் மேல் அனைத்தையும் கொட்டியும் விட்டு அறைந்தும் இருந்தவளை அந்த நொடியே கன்னம் பழுக்கத் திரும்பக் கொடுத்திருப்பான் தான்.. ஆனாலும் ஒரு பெண்ணிடம் தன் கோபத்தைக் காண்பிக்கக் கூடாதென்றே முயன்று பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
ஆனால் அவனின் பொறுமையைச் சோதிப்பதை போல் மேலும் மேலும் அவள் பேசிக் கொண்டே இருக்க.. இதற்கு மேல் தாங்காது இனி ஒரு நொடி அங்கு நின்றாலும் எங்கே அடித்து விடுவோமோ என்றே வேகமாக அங்கிருந்து விலகி வந்திருந்தான் ஸ்ரீராம்.
 
 
தன் முதல் நாளை மட்டுமல்ல அன்றைய மொத்த நாளையும் பாழாக்கியவளை மனதிற்குள் திட்டி தீர்த்தவாறே ‘இனி வாழ்வில் அவளைப் பார்க்கவே கூடாது..!’ என்ற உறுதியான எண்ணத்தோடு உடை மாற்றிக் கொண்டு கிளம்பினான் க்ரைம் பிராஞ்ச் அசிஸ்டெண்ட் கமிஷனராக இங்கு மாற்றலாகி வந்திருக்கும் ஸ்ரீராம சந்திர அல்லூரி.


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
 
பிரேமம் – 2
 
இவர்கள் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு மாணவிகள்.. கல்லூரிக்கு வந்த பின் அவர்களுக்கே உரிய விதத்தில் கழிந்தது இக்குழுவின் நேரம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் இதற்கிடையில் கொஞ்சம் வகுப்பு எனச் செல்ல.. உணவு இடைவெளிக்கு முந்தைய வகுப்பு அவர்களுக்கு ப்ரீயாக இருந்தது.
 
 
அதை எடுத்துக் கொண்டிருந்த பெண் பேராசிரியர் பேறுகால விடுமுறையில் செல்ல.. அதற்குப் பதில் யாரோ புதிதாக வருவதாக இருந்தது. ஒரு வாரமாகவே இதைப் பற்றிய பேச்சு ஓடிக் கொண்டு தான் இருந்தது.
 
 
“ஹே.. நம்ம தீபு மேம் இடத்துக்கு யார் வந்தாலும் அவங்களைப் போல வராது.. எவ்வளவு பிரெண்ட்லி அவங்க..” என்பது போன்ற பசங்களின் புலம்பல்களும் “வேணும்னா மேம்க்குப் பதில் ஹேண்ட்சமா யாராவது சார் வந்தா அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம்..” என்பன போன்ற பெண்களின் ஆர்வங்களும் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன.
 
 
அப்போது தன் ஐடிகார்ட் தொலைந்து போனதால் மற்றொன்றை வாங்க அலுவலக அறை வரை சென்றிருந்த ஸ்வேதா உற்சாகமாக ஓடி வந்து வகுப்பின் முன்னே நிற்க.. அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
 
 
“அழகான மேம்மா.. இல்லை ஹேண்ட்சமான சாரான்னு நீங்க சண்டை போட்டுக்கவே வேண்டாம்..” என்று அவள் தொலைக்காட்சி தொகுப்பாளினி போலப் பேச துவங்கவும், “ஏன் யாருமே வர போறது இல்லையா..?” என்றனர் கோரசாக அனைவரும்.
 
 
“அதான் இல்லை.. செம்ம சூப்பரா ஒரு மேமும், அதை விடச் செம்மையா ஒரு சாரும் வந்து இருக்காங்க..” என்றாள் விழிகள் விரிய.. “என்ன இரண்டு பேரா..? அதெப்படி..?” என்று பல குரல்கள் எழவும், “நம்ம அந்தோணி சார் ரிசைன் செஞ்சுட்டாராம்..” என்றாள் ஸ்வேதா.
 
 
“என்ன..? ஏன்..? எதுக்கு..? ஓ அதான் அவர் மூணு நாளா வரலையா..?” என்றெல்லாம் அங்கங்கே குரல்கள் கேட்க.. “என்ன விஷயம் ஏன் எதுக்குன்னு எல்லாம் எனக்குத் தெரியாது டார்லிங்க்ஸ்.. இப்போ நமக்குப் புதுசா இரண்டு ப்ரபசர்ஸ் வந்து இருக்காங்க.. இரண்டு பேருமே பார்க்க செமையா இருக்காங்க.. அவ்வளவு தான்..” என்றவள் தன் இடத்தில் சென்று அமர.. வகுப்பில் சலசலவெனப் பேச்சுக்கள் எழுந்தது.
 
 
அதேநேரம் ஷ்ராவனியின் அருகில் வந்து அமர்ந்த ஸ்வேதா, “மச்சி.. நீ தேடின டிரீம் பாய் உன்னைத் தேடி வந்தாச்சுன்னு நினைக்கறேன்..” என்றாள் கிசுகிசுப்பான குரலில்.
 
 
“என்னடி உளர்றே..?” என ஷ்ராவனி கேட்கவும், “நீ உன் ட்ரீம்ல வந்தவனைப் பற்றிச் சொன்னியே.. அதே போலச் செம ஹேண்ட்சம் புதுச் சார்.. அதுவும் நீ சொன்ன மாதிரியே வாலன்டைன்ஸ் டே அன்னைக்கு சரியா இங்கே வந்து இருக்காரு.. யோசிச்சு பாரு..” என்று கூறி கண் சிமிட்டினாள் ஸ்வேதா.
 
 
அதன் பின் விழிகள் பளபளக்க தோழிகளைப் பார்த்த ஷ்ராவனி, “அப்படியும் இருக்குமோஓஓ..” என ராகம் போட்டு இழுக்க.. “இருக்குமேஏஏஏ..” என்றனர் அவர்களும் அவளைப் போலவே.
 
 
இவர்களால் அலுவலகம் சென்று பார்க்க முடியாது என்பதால் இங்கு வர போகும் புதிய பேராசிரியரை காணும் ஆவலோடு ஷ்ராவனி காத்திருக்கத் துவங்கினாள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்திருந்த நபர் வருவதற்குப் பதில் மதிய உணவு இடைவேளை தான் வந்தது.
 
 
கல்லூரி கேன்டீனில் கூடி இருந்தது ஷ்ராவனி கேங். ஒருவரை ஒருவர் கேலி செய்து வம்பு இழுத்துக் கொண்டு அமர்ந்து இருந்தவர்களை விட்டு சற்று தள்ளியே மற்றவர்கள் அமர்ந்து இருந்தனர்.
 
 
அது மரியாதையா இல்லை பயமா என அவர்களே சொன்னால் தான் உண்டு. அது ஷ்ராவனியின் பிறந்தநாளுக்கான டிரீட்.. பல ஐட்டங்கள் அணிவகுத்து இருக்க.. அனைத்தையும் கலந்து கட்டி உண்டுக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
அவளை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவர்கள் “இந்த டிரீட் எங்களுக்கா.. இல்லை உனக்கா டி..?” எனக் கேட்க.. “ஹிஹி.. இதில் என்னடி சந்தேகம்.. எனக்குத் தான்..” என்றவளை அடிக்க மற்றவர்கள் பாய.. “ஹே.. ஹே.. வெயிட்.. வெயிட்.. எனக்குத் தான் பர்த்டே.. ஆனா டிரீட் உங்களுக்குத் தான்னு சொல்ல வந்தேன்..” என்று கூறி சமாளித்தாள் ஷ்ராவனி.
 
 
“வாய்.. வாய்..” என ஷ்ராவனியின் அருகில் இருந்த மலர் அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவாறு சொல்லவும், “அதான் மச்சி ஷ்ரவு ஸ்பெஷல்..” என்றாள் ரேஷ்மா.
 
 
“எது வாயா..?” என்று கேலியாக ஸ்வேதா கேட்கவும், “ஆமா.. இல்லைனா இப்படி ஒரு கனவும், அதில் அப்படி ஒரு ஹீரோவும் வந்து இருப்பாரா..” என காயூ சொல்லவும் “அதுவும் அப்படி ஒரு சீன்.. அவ்வ்வ்...” என அனைவரும் கோரசாகக் குரல் கொடுத்ததில் அந்த இடமே அவர்களைத் திரும்பி பார்த்தது.
 
 
“ஷ்ஷ்.. சும்மா இருங்கடி..” என விழிகளை உருட்டி ஷ்ராவனி அவர்களை அடக்க முயலவும், அவளின் அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. அதில் தன் அன்னை பூரணியின் எண்ணை பார்த்ததும் உடனே எடுத்திருந்தவள், “ஹ்ம்ம் சொல்லு தாய்கிழவி.. இப்போ தான் நீ பெத்த மகராசி நியாபகம் உனக்கு வருதா..?” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து வெளியில் சென்று மரத்தின் கீழ் நின்று பேச துவங்கினாள் ஷ்ராவனி.
 
 
“என்ன பாப்பா இப்படிப் பேசுற.. உன் பொறந்த நாளுக்குப் பூஜைக்கும் அன்னதானத்துக்கும் அப்பா கொடுத்து இருந்தாங்க.. அதான் லேட்டாகிடுச்சு..” என்றவரின் குரலில் இருந்த வருத்தத்தைக் கண்டவள், “ம்மாஆஆ.. சும்மா சொன்னா கூட உடனே பிலீங்க்ஸ் ஆப் இந்தியாவா மாறிடாதே..” என்று ஷ்ராவனி கண்டிப்பு குரல் எழுப்பவும், “இல்லை.. இல்லை..” என்று உடனே தணிந்து வந்தார் ஷ்ராவனியின் அன்னை.
 
 
அதன் பின் அவரிடம் பேசிக் கொண்டிருந்தவள் எந்தக் கோவிலுக்குச் சென்றார்கள் அன்னதானத்தில் என்னவெல்லாம் போட்டார்கள் என்பதில் துவங்கி அவளின் அன்னை உடுத்தி சென்ற புடவையின் நிறம் வரை விசாரித்து அதில் சில குறைகள் சொல்லி பேசி கொண்டிருக்க.. அனைத்திற்கும் அவரும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.
 
 
“பாப்பா.. அப்பா பேசணுமாம்..” என்ற அன்னையின் குரலில் அவ்வளவு நேரம் இருந்த குரல் அப்படியே மாற அலைபேசி கை மாறியதை உணர்ந்தவள் “ப்பா..” என்றாள் மரியாதையுடனான குரலில். “நல்லா இருக்கீயா பாப்பா.. பொறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போனீயா..?” என்று வரிசையாக இப்போது ரத்னவேல் கேள்வி கேட்க துவங்கி இருக்க.. “இருக்கேன் பா.. போனேன் பா.. போட்டோ கூட உங்களுக்கு..” எனத் துவங்கவும், “ஹ்ம்ம்.. ம்ம்.. பார்த்தேன்.. பூஜைக்குக் கொடுத்தீயா..?” என்று அவர் குறுக்கு விசாரணை செய்ய.. அனைத்திற்கும் ஒற்றை வார்த்தையிலேயே பதில் அளித்துக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
அவரிடம் பேசிக் கொண்டே திரும்பியவளின் பார்வையில் தூரத்தில் வருண் நிற்பது தெரியவும், மனதில் உண்டான ஒரு சிறு எதிர்பார்ப்போடு அவனையே ஷ்ராவனி பார்த்துக் கொண்டிருக்க.. அவளின் கவனம் பேச்சில் இல்லாமல் எதிரில் இருப்பவனின் மேல் மொத்தமாகத் திரும்பியது.
 
 
அதேநேரம் மகளின் குரலை கொண்டே அவள் ஏதோ பிசியாக இருப்பதைப் புரிந்து கொண்ட வேலு “சரி பாப்பா.. அப்பா அப்பறமா பேசறேன்.. நீ உடம்பை பார்த்துக்கோ..” என்று விட்டு இணைப்பை துண்டிக்கவும் வருண் மேல் பதித்த பார்வையைத் துளியும் அகற்றாமல் நின்று இருந்தவள் அவனை வேகமாக நெருங்கும் பவித்ராவையும் அவளைக் கண்டதும் முகம் மலர.. எதையோ பேசியவாறே தன் கையில் இருந்த பையை அவளிடம் கொடுப்பவனையும் கண்ட நொடி ஷ்ராவனியின் மனதில் லேசாக எழுந்த வலி கண்களைக் கலங்க செய்ய.. இருக்கும் இடம் உணர்ந்து அதை வெளியே வர விடாமல் தடுத்தவள் அப்படியே கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு வருணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
அதற்குள் அவளைத் தேடிக் கொண்டு அவளின் படைகள் அங்கு வந்து விட.. தன் பார்வையை வேகமாகத் திருப்பிக் கொண்டவள், எதையும் காண்பித்து கொள்ளாமல் அவர்களோடு பேசியப்படியே அங்கிருந்து நகர்ந்தாள் ஷ்ராவனி.
 
 
ஷ்ராவனி வெகு நேரமாக எதிர்பார்த்திருந்த அவளின் புதிய பேராசிரியரான சூர்யா இவர்களின் வகுப்பிற்கு வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள.. அவனைக் கண்ட நொடி இமைக்கக் கூட மறந்து தன் கனவில் பார்த்த உருவத்தோடு நேரில் நிற்பவனை ஒப்பிட்டு பார்த்து கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
முகமோ நிறமோ கனவின் இருளில் தெரியவில்லை என்றாலும் அந்த உயரம் உடற்கட்டு பொறுமையும் மென்மையுமாகப் பேசும் விதம் என இருவருக்கும் பல ஒற்றுமைகள் தெரிந்தன. அப்போது தான் சூர்யா தன் பெயரை சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டிருக்க.. கனவில் காதலை சொன்னவன் தன் விரல்களில் அணிவித்த SS என்ற எழுத்துப் பொறிக்கப்பட்ட மோதிரம் நினைவுக்கு வர.. சடாரென நிமிர்ந்து அமர்ந்தாள் ஷ்ராவனி.
 
 
“SS.. அப்படினா ஒரு எஸ் ஷ்ராவனி.. இன்னொரு எஸ் சூர்யா..” என்று மெல்லிய குரலில் ஷ்ராவனி சொல்ல.. சரியாக அவள் பக்கம் திரும்பி பார்த்தான் சூர்யா. அதில் சட்டெனத் தன் பார்வையைத் தழைத்து கொண்டவள் அப்படியே அமைதியாக அமர்ந்திருக்க.. ஒரு புன்னகையோடு திரும்பி கொண்டான் சூர்யா.
 
 
**********************
 
 
இரவு களைத்து போய் வீடு திரும்பிய ஸ்ரீராம் சோர்வோடு அப்படியே சோபாவில் சாய்ந்தான். ஆசைப்பட்டு விரும்பி சேர்ந்திருந்த வேலையில் இத்தனை வருடத்தில் இப்படி ஒரு மோசமான நாளை ஸ்ரீராம் பார்த்ததே கிடையாது.
 
 
எவ்வளவு சிக்கலான வழக்காக இருந்தாலும் அசால்ட்டாகக் கையாள்பவன், ஆனால் இன்று ஒரு சிறு பிரச்சனையின் நுனியை கண்டுபிடிக்க ஒரு நாள் முழுமையாகச் செலவானது.
 
 
சாப்பிடவோ ஓய்வெடுக்கவோ நேரமில்லாமல் முதல் நாள் முதல் வேலையையே முடிக்காமல் கிளம்பக் கூடாது என்ற எண்ணத்தோடு அதை முடித்து விட்டே கிளம்பி இருந்தான் ஸ்ரீராம்.
 
 
அந்தக் களைப்பும் சோர்வும் தீர அப்படியே விழிகள் மூடி பின்னால் சரிந்தவன், “நா ஜீவிதம்லோ சால செட்ட ரோஜு..” (என் வாழ்க்கையிலேயே ரொம்ப மோசமான நாள்) என ஸ்ரீராம் சொல்லும் போதே காலையில் பார்த்த பெண்ணின் முகம் அவனுக்கு நினைவுக்கு வந்தது.
 
 
எவ்வளவு அழகாக அமைதியாகத் துவங்கிய நாள் என்று எண்ணும் போதே அதை மொத்தமாகக் கெடுத்தவளின் மேல் ஆத்திரம் பொங்கியது. அதே அமைதியான மனநிலையோடு கிளம்பி சென்று இருந்தால் ஒருவேளை அனைத்தையும் எளிதாகக் கையாண்டு இருப்பானோ என்னவோ..! காலையிலேயே மொத்தமாக மூட் அவுட் ஆனதனால் தான் இது எனப் புரிய.. “ராக்காஷி.. பிச்சி ராக்காஷி..” என்றான் பல்லை கடித்துக் கொண்டே ஸ்ரீராம்.
 
 
அதன் பின் இதே யோசனையில் இருக்க விரும்பாமல் வேகமாக எழுந்து குளிக்கச் சென்றான் ஸ்ரீராம். திரும்ப வந்து அந்த முன் இரவின் குளிர் காற்றை ரசித்தவாறு பால்கனியில் நின்றிருந்தவனின் மனதை லேசாக்குவது போல் அவனைப் பார்த்துச் சிரித்தது அங்குப் பூத்திருந்த சின்னச் சிகப்பு ரோஜா.
 
 
அதைக் கண்டு விட்டவனின் மனதின் களைப்பெல்லாம் காணாமல் போக... இதழில் தவழ்ந்த மென்னகையோடு மெல்ல அதை வருடி கொடுத்தான் ஸ்ரீராம். அதன் அழகும் நிறமும் அவனைக் கொள்ளை கொள்ள.. ரசனையோடு அதை விரல் கொண்டு வருடியவனின் மனதில் தன் வீட்டின் நினைவு உலா வர துவங்கியது.
 
 
ஸ்ரீராமுக்குச் செடிகள் வளர்ப்பதில் தனி ஆர்வம் உண்டு. அவனின் பொழுதுகள் பெரும்பாலும் செடி கொடிகளோடு தான் போகும்.. அங்கு வைசாக்கில் அவர்கள் வீட்டை சுற்றி நிறைய இடங்கள் இருப்பதால் அவன் விருப்பம் போல் பல வித வண்ணங்களில் மலர்களை வைத்துப் பராமரித்துக் கொண்டிருந்தான்.
 
 
அதை எண்ணும் போதே இங்குக் கிளம்புவதற்கு முன் தன் அன்னையோடு நடந்த உரையாடல் ஸ்ரீராமின் நினைவிற்கு வந்தது.
 
 
**********
 
 
கண்முன் பல வண்ணங்களில் பூத்து குலுங்கி கொண்டிருந்த மலர்களை ரசித்தவாறே அதற்குப் பூவாளியில் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் ஸ்ரீராம். அனைத்தும் முடிந்து வீட்டிற்குள் நுழைய முயன்றவனின் பார்வையில் முழுதாக மலராமலும் அதே நேரம் மொட்டாக இல்லாமலும் இடை நிலையில் இருந்த சிகப்பு நிற ரோஜாவும் அதன் மேல் பன்னீர் தெளித்தது போல் ஆங்காங்கே படிந்து இருந்த தண்ணீரும் பட.. அதன் அழகு அவனைக் கவர்ந்து இழுத்தது.
 
 
மெல்ல அதன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன், அதை ஒரு ரசனையோடு மெதுவாக வருடி கொடுத்து ரசித்துக் கொண்டிருக்க.. “ஒர்ரி நா தேவுடா.. இப்புடைனா நா புத்ருடுக்கு பிரேமா வச்சிந்தே..” (ஹப்பா ஆண்டவா.. இப்போவாவது என் பிள்ளைக்குக் காதல் வந்ததே) என்று நிம்மதி பெருமூச்சோடு நெஞ்சில் கை வைத்தவாறே அங்கு வந்து நின்றார் ஜானகி.
 
 
அவரைச் சிறு புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தவன், பதிலேதும் சொல்லாமல் திரும்பி கொள்ள.. “அரேய் ஏன்ட்டிரா இ நவ்வு.. (டேய்.. என்ன இப்படிச் சிரிப்பு) (இவர்கள் இருவரிடையே நடக்கும் பேச்சுகள் மொத்தமும் தெலுங்கில் இருப்பதால் அதைத் தமிழில் நாம் பார்க்கலாம்) அப்போ அப்படி எதுவும் இல்லையா..?” என்றார் ஜானகி.
 
 
“ஏன்ட்டம்மா இதி.. (என்னமா இது) பூவை ரசிக்கக் காதல் வரணும்னு என்ன மா அவசியம்.. ரசனை இருந்தா போதாதா..!” என்றான் ஸ்ரீராம். “அப்போ ஒண்ணுமே இல்லையா..?” என்று சிறு பிள்ளை போல் கேட்டவரை கண்டு “ம்ஹும்..” என்றான் புன்னகையோடு.
 
 
“ஒர்ரி நா மலையப்ப ஸ்வாமி.. (திருப்பதி மலையில் இருக்கும் ஏழுமலையான்) என் பிள்ளைக்கு எப்போ தான் நல்ல புத்தி வருமோ..” என்று வானத்தைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவரை லேசாக முறைத்தவன் “அப்போ உங்க பிள்ளைக்குப் புத்தியே இல்லைன்னு சொல்றீங்களா..” என்றான்.
 
 
“நான் எப்போடா அப்படிச் சொன்னேன்..? நல்ல புத்தி இல்லைன்னு தானே சொன்னேன்..” என்று சலிக்காமல் மகனை வம்புக்கு இழுத்தார் ஜானகி. “ஓஹோ.. உங்க பார்வையில் எது நல்ல புத்தி மா..” என்று ஸ்ரீராம் கேட்கவும், “வெளியே போய்ப் பாரு பாபு.. உன் வயசு பசங்க எல்லாம் வாழ்க்கையை எப்படி என்ஜாய் செய்யறாங்கன்னு.. இருபத்து நாலு மணிநேரமும் கையில போன்.. கேர்ள் பிரெண்ட் கூட ஊர் சுத்தறதுன்னு.. நீ என்னடான்னா வேலை வேலைன்னு ஓட வேண்டியது.. இல்லைனா இதோ இப்படிச் செடி கொடின்னு இருக்க வேண்டியது.. எனக்கும் என் பிள்ளை குழந்தை குட்டின்னு குடும்பமா இருக்கறதை பார்க்கணும்னு ஆசை இருக்காதா நயினா.. இந்த மே வந்தா உனக்கு முப்பது ஆகப் போகுது..” என்று கேலியில் துவங்கினாலும் ஜானகியின் குரலில் அப்படி ஒரு வருத்தம் எட்டி பார்த்தது.
 
 
அதைச் சரியாகப் புரிந்து கொண்டவன் ஜானகியை தன்னோடு சேர்த்து பிடித்தப்படி “என்ன மா இது.. நீங்க சொல்றதை பார்த்தா நான் எண்ணமோ கல்யாணம் வேண்டாம்னு சொல்றது போல இருக்கு..? நான் செஞ்சுக்கறேன்னு தானே சொல்றேன்.. நீங்க தானே லேட் ஆக்கறீங்க..” என அவரின் மனநிலையை மாற்ற முயன்றான்.
 
 
“அதே பாபு நா பாத.. (என் வலி) நீ பொறுப்பை என்கிட்ட கொடுத்துட்ட.. ஏன்னே தெரியாம தட்டி போகுது.. அதான் நீயா ஒரு பொண்ணைக் காதலிக்கறேன்னு கையை மட்டும் காட்டுயா.. பெல்லின்னி எலா தாம் தூமனி சேஸ்தான்னு சூடு..” (கல்யாணத்தை எப்படித் தூள் கிளப்பறேன்னு பாரு) என்றார் ஜானகி.
 
 
“இ கதநே ஒது.. (இந்தக் கதையே வேண்டாம்) நீங்க ஒரு பொண்ணைக் கையைக் காட்டுங்க.. நான் அவளைக் கல்யாணம் செஞ்சுட்டு அப்பறமா எப்படி காதலிக்கறேன்னு பாருங்க.. எனக்கு லவ் எல்லாம் செட் ஆகாது மா..” என்று செல்லமாக அன்னையின் கன்னத்தில் தட்டி விட்டு சென்றவனைக் கவலையும் குழப்பமுமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜானகி.
 
 
அவரும் இரண்டு வருடமாகத் தன் ஒரே மகனுக்கு வரன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். ஆனால் ஏனோ தெரியவில்லை சரியாக எதுவுமே அமையவில்லை. அழகும் கம்பீரமாகவும் இருக்கும் தன் மகனுக்கு எதில் குறை..! பணம் இல்லையா..? படிப்பில்லையா..? அனைத்தும் இருந்தும் ஏன் இப்படித் தட்டி செல்கிறதெனப் புரியா திகைப்பே ஜானகியினுள்.
 
 
ஸ்ரீராம் என்று தனக்குப் பெண் பார்க்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தானோ அன்றிலிருந்து இவரின் பொறுப்பு கூடி போனது. அவனுக்கு எல்லா வகையிலும் பொருத்தமான பெண்ணைத் தேடி கண்டு பிடிப்பதற்குள் ஓய்ந்து போனார் ஜானகி.
 
 
இன்றைய காலக் கட்டத்தில் தான் பார்த்துக் கை காண்பிக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் தாலி கட்ட மகன் தயாராக இருப்பது அவன் தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையையும் மரியாதையையும் உணர்த்த.. அதற்கு ஏற்றது போல் ஒரு மனைவியை மகனுக்குத் தேட எண்ணியவர், இதுவரை அவர்களின் சுற்று வட்டாரத்தில் தேடாத இடமில்லை.
 
 
ஜானகி எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களோடும் பெண் கிடைப்பது கடினமாக இருந்தது. அப்படியே கிடைத்தாலும் ஜாதகப் பொருத்தம் ஒத்து வராமல் போனது.
 
 
அதோ இதோவென ஒவ்வொன்றையும் தட்டி கழித்ததில் இரண்டு வருடங்கள் ஓடி போய் இருக்க.. ஜானகியின் மனதிலோ கவலை மேகங்கள். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டு தன் செடிகள் உண்டு என ஸ்ரீராம் என்னவோ எந்தக் கவலையும் இல்லாமல் தான் இருக்கிறான்.
 
 
இதனாலேயே ஸ்ரீராமாகப் பார்த்து யாரை அழைத்து வந்தாலும் சரியெனத் தலையாட்டும் அளவிற்கு இறங்கி வந்திருந்தார் ஜானகி. ஆனால் அவரின் மகனோ தன் மனையாளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தன் அன்னைக்கே என்பதில் பிடிவாதமாக இருந்தான்.
 
 
காலங்கள் செல்வதை எண்ணி கவலையும் மகனுக்குப் பொறுத்தமான பெண் அமைய வேண்டுமே என்ற வேண்டுதலும் தினமும் அவரை வருத்தி கொண்டிருக்க.. கோவிலுக்குச் சென்று மனதார வேண்டிக் கொண்டு வீடு திரும்பியவரின் முன் சென்னைக்கான மாற்றல் பற்றிய தகவலோடு வந்து நின்றான் மகன்.
 
 
“எனக்கு என்னமோ உன் மனைவி சென்னையில் தான் இருக்கான்னு தோணுது பாபு..” என மகனின் பிரிவை எண்ணி கலங்குவதை விடத் தன் வேண்டுதல் அங்காவது அப்படியாவது நிறைவேறுமோ என்ற எதிர்பார்ப்பே ஜானகியிடம் பிரதானமாக இருந்தது.
 
 
“அப்படி இருப்பான்னு தோணினா என் கூடவே வந்து தேடி கொடுங்க..” என அவரின் எண்ணத்திற்கு முற்று புள்ளி வைத்தான் ஸ்ரீராம். “ஒர்ரி நா தேவுடா.. எக்கடன்ச்சி ஒச்சி நாக்கு புட்டாவுரா.. நா பாபோய்..” (எங்கிருந்து எனக்குன்னு வந்து பிறந்தடா யப்பா..) எனத் தலையில் அடித்துக் கொண்டு நகர்ந்தார் ஜானகி.
 
 
*************************
 
 
இன்று அதெல்லாம் நினைவுக்கு வரவும், ஒரு புன்னகையோடு தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு அன்னையிடம் பேச சென்றான் ஸ்ரீராம். அப்படியே நேரம் செல்ல.. அன்னையிடம் பேசி விட்டு சாய்ந்து படுத்தவன் அப்படியே உறங்கி போனான்.
 
 
பதினொரு மணியளவில் ஆழ்ந்த உறக்கத்திற்குச் செல்ல விடாமல் பசி வயிற்றைக் கிள்ள.. எழுந்து அமர்ந்தவன் எதையாவது ஆர்டர் செய்ய நினைக்க.. பல பெரிய ஓட்டல்களில் ஆர்டர் எடுப்பது முடித்துக் கொள்ளப்பட்டு இருந்தது. அதில் மேலும் சோர்ந்து போனவன் பாலை காய்ச்சி குடிக்க நினைக்கப் பசியோ இப்போது தான் தன் விஸ்வரூபத்தைக் காண்பிக்கத் துவங்கியது.
 
 
அப்போதே காலையில் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது நினைவுக்கு வரவும், யோசிக்காது அருகில் இருக்கும் ஏதேனும் கையேந்திபவனைத் தேடி கிளம்பி விட்டான் ஸ்ரீராம்.
 
 
அவன் வசிப்பது பெசன்ட் நகரில் கடற்கரையைப் பார்த்தது போல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் என்பதால் சுற்றிலும் சாலையோர உணவகங்களுக்குப் பஞ்சமே இல்லை. அதில் ஒன்றில் சென்று தன் இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தவன் அங்கிருந்த போக்குவரத்து காவலரின் அருகில் மூன்று பெண்கள் நிற்பதை கண்டு யோசனையானான்.
 
 
கிட்டத்தட்ட பன்னிரெண்டரை மணியை நெருங்கும் நேரத்தில் இருளில் நிழலுருவமாய்த் தெரிந்தவர்களை ஸ்ரீராம் நெருங்கவும் அவர்கள் காவலரோடு ஏதோ வாக்குவாதத்தில் இருப்பது புரிய.. வண்டியை அவர்கள் அருகில் நிறுத்தினான் ஸ்ரீராம்.
 
 
அப்போதே அந்தக் காவலரை காலையில் தான் பார்த்த வழக்கு சம்பந்தமாக சந்தித்தது நினைவுக்கு வர.. “ஏதாவது பிரெச்சனையா குமார்..?” என்றான் ஸ்ரீராம். நடு இரவில் வந்து ரகளைச் செய்து கொண்டிருந்தவர்களிடம் உண்டான எரிச்சலோடு குரல் வந்த திசையில் திரும்பியவன், அங்கு ஸ்ரீராமை கண்டதும் சட்டென உண்டான பணிவோடு, “டிரங்க் அண்ட் டிரைவ் சார்.. வண்டியை என் மேலேயே கொண்டு வந்து இடிச்சுட்டாங்க..” என்றார்.
 
 
அதேநேரம் வீதியில் செல்லும் எவனோ கதை கேட்க வந்திருப்பதாக நினைத்து திரும்பி பார்க்காமலேயே “வந்துட்டானுங்க.. என்னாச்சு.. மண்ணாச்சுன்னு..” என்று தனக்குள்ளேயே சொல்லியவாறு பல்லை கடித்த ஷ்ராவனி, குமாரிடம் இழுத்து பிடித்த பொறுமையோடு “தண்ணி எல்லாம் எதுவும் இல்லைண்ணா.. லேசா ஸ்லிப் ஆகிடுச்சு..” என்றாள்.
 
 
அந்தக் குரலில் யோசனையானவன் அதுவரை காவலர் மேல் இருந்த கவனத்தை இருளில் நின்றிருந்தவளின் மேல் திருப்பிக் கூர்மையாகக் கவனிக்க..
 
 
“ஏய்.. யாரை பார்த்து குடிகாரின்னு சொல்றே..?” என்று அங்கிருந்த இரு சக்கர வண்டியில் சாய்ந்து நின்றிருந்த ஒரு பெண் குழறலோடும் தள்ளாட்டத்தோடும் இவனை பார்த்து கேட்கவுமே, குமார் சொல்வதில் உள்ள உண்மை ஸ்ரீராமுக்குப் புரிந்தது.
 
 
“தண்ணியைப் போட்டுட்டு வண்டியை ஓட்டிட்டு வந்துட்டுக் கலாட்டா செய்துங்க சார்..” என்றார் குமார் சலிப்பாக. அதில் வண்டியை ஸ்டாண்ட் போட்டு இறங்க முயன்ற ஸ்ரீராமின் பார்வை குமார் அருகில் இருந்தவளின் மேல் பதிய.. அதே நேரம் லேசாக முகம் திருப்பியவளின் மேல் தெரு விளக்கின் வெளிச்சம் பட்டதில் அவளை அடையாளம் கண்டவன், “ராக்காஷி...” என்றான் மெலிதான முணுமுணுப்போடு.
 
 
அதில் ஸ்ரீராம் எதுவோ தன்னிடம் கேட்பதாக நினைத்து குமாரின் கவனம் மொத்தமாக அவன் பக்கம் திரும்ப.. “தண்ணி கேஸ் தான்.. டவுட்டே வேண்டாம்.. லேட் நைட் நீங்க ஹாண்டில் செய்யாதீங்க, லேடி காப்பை வர சொல்லுங்க..” என்று விட்டு வண்டியை விருட்டென்று கிளப்பிக் கொண்டு கிளம்பினான் ஸ்ரீராம்.
 
 
ஸ்ரீராமின் அந்த வார்த்தையில் ஆத்திரத்தோடு “எவன்டா அவன்..?” எனத் திரும்பியவள் கண்டது வேகமாகப் புல்லட்டில் செல்பவனின் முதுகை தான். “மவனே நீ மட்டும் என் கையில் சிக்கின கைமா தான் டா..” என்று முணுமுணுத்தவாறு, இருளில் மறைந்தவன் சென்ற திசையையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஷ்ராவனி.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
 
பிரேமம் – 3
 
ஷ்ராவனி புல்லட்டில் செல்பவனைத் திரும்பி முறைத்துக் கொண்டிருந்த இடைவெளியில் குமார் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து விட்டிருந்தான்.
 
 
குடித்து விட்டு எல்லாம் வண்டி ஒட்டவில்லை என கூறி, தங்களைப் போக விடுமாறு ஷ்ராவனி வாதாடி கொண்டிருக்க.. இரண்டு பெண் காவலர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். “ஏய்.. வாயை மூடிட்டு வண்டியில் ஏறுங்க..” என்று அந்த நாற்பதுகளில் இருந்த அனுபவம் மிக்கப் பெண் காவலர் இவர்களை எப்படிக் கையாள வேண்டும் என அறிந்து அதட்டலோடு துவங்கினார்.
 
 
“வண்டியிலேயா... ஏன்..? எதுக்கு..? நாங்க என்ன செஞ்சோம்..?” என்றாள் ஷ்ராவனி. “செய்யறதையும் செஞ்சுட்டுக் கேள்வி வேற.. அதுவும் அதிகாரமா..! ஏய் ச்சீ.. வண்டியில் ஏறு..?” என்று கூட வந்த மற்றொரு பெண் காவலர் லேசாக அடிப்பது போல் கையை ஓங்கி கொண்டு வரவும், “ஹலோ என்ன ரொம்ப ஓவரா போறீங்க.. எங்களுக்கும் சட்டம் தெரியும்..” எனக் கொஞ்சமும் பயப்படாமல் பதிலுக்கு முறைத்தாள் ஷ்ராவனி.
 
 
“ஓஹோ சட்டம் தெரிஞ்சதனால் தான் இப்படி நடு ராத்திரியில் குடிச்சுட்டு வண்டியில் வந்து போலீஸ் மேலேயே இடிச்சீங்களா..?” என்றார் நக்கலாக அந்தப் பெண் காவலாளி.
 
 
“நாங்க இடிக்கலைன்னு சொல்லலையே.. ஆனா நீங்க நினைக்கறது போலத் தண்ணியைப் போட்டு எல்லாம் ஓட்டலை.. அது நடுவில் ஒரு நாய் ஓடி வந்ததில் லேசா ஸ்லிப் ஆகிடுச்சு.. அவ்வளவு தான்..” என்றாள் ஷ்ராவனி.
 
 
அதற்குக் கேலி புன்னகையோடு “பார்த்தாலே தெரியுது..” என்றார் அங்கு லேசான தள்ளாட்டத்தோடு நின்றிருந்த ஸ்வேதாவை பார்த்தவாறு. “ஏய்.. என்னடி நீயும் இதுங்களுக்குச் சரிக்கு சரியா பேசிட்டு.. நாலு போட்டு இழுத்துட்டு வா.. ஸ்டேஷனில் வாயை திறக்கறாங்களா பார்ப்போம்..” என்று மற்றொருவர் எரிந்து விழவும், “இங்கே பாருங்க.. அப்படி எல்லாம் நீங்க கூப்பிட்டதும் உங்க பின்னாடி வர முடியாது.. என்ன சார்ஜ்.. டிரங்க் அண்ட் டிரைவ்னா.. அது முழுக்கத் தப்பு, ஏன்னா வண்டியை ஓட்டினது நான்.. இது அந்தப் போலீஸுக்கும் தெரியும், நான் குடிக்கலை.. எந்த டெஸ்ட்டுக்கு வேணும்னாலும் நான் தயார்.. அடுத்து நாங்க வந்து இடிச்சதனால் இதோ இவருக்குப் பெருசா எந்த அடியும் படலை.. ஏன் அவர் கீழே கூட விழலை.. வண்டியை வளைச்சுத் திருப்பிட்டேன்.. அவர் உடம்பில் ஒரு கீறல் கூட இல்லை.. அப்பறம் எதை வெச்சு எங்களைப் போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போவீங்க..?” என்றாள் ஷ்ராவனி.
 
 
ஷ்ராவனி இப்படி பாயிண்ட்டாக பேசுவது எரிச்சலை தர.. “அப்போ டிரிப்பில்ஸ் வந்ததும் தப்பில்லைன்னு சொல்றியா..?” என்றார் அந்த பெண். “நாங்க டிரிப்பில்ஸ் எல்லாம் வரலை.. நாங்க இரண்டு பேரு தான் வந்தோம், அவ நடந்து தான் வந்தா..” என்றாள் ஷ்ராவனியும் கொஞ்சமும் பயமும் தடுமாற்றமும் இல்லாமல்.
 
 
இங்கு போக்குவரத்து காவலர்கள் எப்போதும் இருப்பார்கள் என தெரிந்தே வீதி முனையிலேயே ரேஷ்மாவை இறக்கி விட்டு வந்திருந்தவள், தைரியமாக வாதாட.. அதில் கேள்வியாக அவர்கள் திரும்பி குமாரை பார்த்தனர்.
 
 
அவரோ ஒரு மார்க்கமாக எல்லாப் பக்கமும் தலையை அசைத்தார். ஆனாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாமல் ஷ்ராவனியை வாயை ஊத சொல்லி எல்லாம் சோதித்தவர்கள் அவள் குடிக்கவில்லை என்று புரிய.. “அப்போ இவங்களுக்கு என்ன சொல்ல போறே..?” என்றனர்.
 
 
“அது உங்களுக்குத் தேவையில்லாதது.. அவங்க குடிக்கறாங்களோ இல்லை அதிலேயே குளிக்கறாங்களோ.. அதைப் பற்றி உங்களுக்கு என்னங்க பிரச்சனை.. ஊரில் இருக்கறவங்க எல்லாம் உங்ககிட்ட பர்மிஷன் வாங்கிட்டா குடிக்கறாங்க.. இப்போ நடந்த பிரச்சனையைப் பற்றி மட்டும் பேசுங்க.. எங்க சாவியை எடுத்து வெச்சு இருக்கார், அதைக் கொடுக்கச் சொல்லுங்க.. இல்லைனா நான் மீடியாக்கு போக வேண்டி இருக்குமெனத் தன் அலைபேசியை எடுத்து இன்ஸ்டாவில் லைவ் போகத் துவங்கியவளை கண்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், ‘ஒரு சாதாரண வழக்கிற்காகப் பேச போய்ப் பெரிதாக எதிலும் சிக்கி கொண்டு பெயரை கெடுத்து கொள்வதை விட.. இதை அப்படியே விட்டு விடுவதே சரி..’ என்று புரிய.. ஷ்ராவனியை சட்டென அமைதிப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
 
 
******************
 
 
வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்ரீராமின் மனமோ ‘ச்சே.. எக்கட போயினா இ ராக்காஷியே..’ (எங்கே போனாலும் இந்த ராட்சசியே) என்று எரிச்சலோடு முணுமுணுத்தது.
 
 
இவ்வளவு நேரத்திற்குப் பிறகு இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராக வந்ததோடு குடித்து விட்டு வேறு வந்ததும் இல்லாமல் அங்குப் பணியில் இருந்த காவலரிடம் அவள் பிரச்சனை செய்து கொண்டிருந்ததை எல்லாம் கண்டு காலையில் வெறும் அவசர குடுக்கை என்றும் மரியாதை தெரியாதவள் என்றும் மட்டுமே நினைத்திருந்தது எல்லாம் மாறி அவளின் பழக்க வழக்கங்கள் முதல் நடவடிக்கை வரை எல்லாம் சேர்ந்து ஸ்ரீராமை முகம் சுழிக்க வைத்தது.
 
 
‘யாரை இனி பார்க்கவே கூடாது என்று கொஞ்ச நேரத்திற்கு முன் உறுதியாக நினைத்தானோ..!’ அவளையே மீண்டும் கண்டதில் மனதினோரம் எழுந்த எரிச்சலோடு வீடு திரும்பினான் ஸ்ரீராம்.
 
 
***********
 
 
தாங்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் ஷ்ராவனியும் அவளின் இரு தோழிகளும். தன் பின்னால் முழுப் போதையில் அமர்ந்திருந்த ஸ்வேதாவை தோளில் சாய்த்துக் கொண்டு உள்ளே அழைத்துச் சென்றவள் அவளைப் படுக்கையில் தள்ள.. வேகமாக இவர்களின் பின்னே வந்து நின்றாள் ரேஷ்மா.
 
 
அவளைத் திரும்பி முறைத்துக் கொண்டு நின்ற ஷ்ராவனியை கெஞ்சுதலாகப் பார்த்த ரேஷ்மா, “சாரி.. சாரி.. தெரியாம..” எனக் கெஞ்சுதலாகத் துவங்கவும், “என்னடி தெரியாம.. இல்லை என்ன தெரியாமன்னு கேக்கறேன்.. சின்னக் குழந்தைங்களா நீங்க..? உங்க வாயை திறந்து ஊத்திவிட்டாங்களா யாராவது..! பார்ட்டிக்கு போறீங்கன்னு தெரியுதில்லை, எதுவா இருந்தாலும் அளவா நிறுத்திக்க வேண்டியது தானே..!” என ஆத்திரபட்டாள் ஷ்ராவனி.
 
 
“அது.. அது அப்படியே அன்பிளானட்டா பேச்சு ஸ்வாரஸ்யத்தில் இப்படி..” எனத் தயங்கி இழுத்தவளை முறைத்தவள், “என்ன கருமமோ.. சரி ஓவரா ஆச்சு இல்லை.. அப்படியே ஒரு கேப் புக் செஞ்சுட்டு வீடு வந்து சேர வேண்டியது தானே.. எதுக்கு என்னைக் கூப்பிட்டீங்க.. பாரு, நைட் டிரெஸ் கூட மாற்றாம ஓடி வந்து உங்களை இழுத்துட்டு வீடு வந்து சேருவதற்குள் ஹப்பா.. அந்தப் போலீஸ்காரன் ஒரு தொல்லைனா.. எவன்னே தெரியாத ஒரு பக்கி நான் குடிச்சு தான் இருக்கேன்னு சர்டிபிகேட் கொடுத்துட்டுப் போறான்.. இதெல்லாம் எனக்குத் தேவையா..” என்று எரிந்து விழுந்தாள் ஷ்ராவனி.
 
 
“சாரி மச்சி.. உன் வண்டியை அங்கேயே விட்டுட்டு வர முடியாதே அதான் உன்னைக் கூப்பிட்டேன்..” என்று ரேஷ்மா சமாதானம் செய்ய முயலவும், “ஏய்.. யாரை பார்த்துடா குடிகாரின்னு சொல்றே..” என உளறலோடு திடுமென ஸ்வேதா எழுந்து அமர்ந்தாள்.
 
 
அதில் உண்டான கடுப்பில் சட்டென அந்த அறையில் இருந்து வெளியேறி தன் அறைக்குள் நுழைந்தாள் ஷ்ராவனி. இவர்கள் அனைவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடெடுத்து தங்கி உள்ளனர். அறைக்கு இருவராகத் தங்கி இருந்தனர்.
 
 
ஷ்ராவனி மட்டும் தனி அறையில் இருந்தாள். ஏனெனில் மகளின் ஆசைக்காக இந்த வீட்டை பார்த்து ஏற்பாடு செய்து தங்க வைத்திருந்தது ரத்னவேலு. அவளுக்குக் கல்லூரியில் தங்கி இருப்பது பிடிக்காமல் போனதால் இரண்டாமாண்டு துவக்கத்தில் இருந்து இந்த ஏற்பாடை செய்திருந்தார் வேலு.
 
 
முதலில் ஷ்ராவனியும் காயூவுமே இங்கிருக்க.. இந்த வருடமே மற்ற மூவரும் இவர்களோடு வந்து இணைந்து இருந்தனர். தன் அறைக்குள் வேகமாக வந்து நுழைந்தவளின் பார்வையில் பாதியில் நிறுத்தபட்டிருந்த ஓவியம் படவும், அப்படியே சோர்ந்து போய் அமர்ந்தாள் ஷ்ராவனி.
 
 
இன்று வீட்டில் அவளைத் தவிர யாரும் இல்லை.. ரேஷ்மாவும் ஸ்வேதாவும் அவர்களின் பள்ளி தோழிக்கு திருமணம் நிச்சயமாகி இருப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்காகச் சென்றிருக்க.. மற்ற இருவரும் அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் பெற்றோரை காண கிளம்பி வீட்டுக்கு சென்று இருந்தனர்.
 
 
வார இறுதி நாட்களை அவர்களோடு கழிக்க இரண்டு வாரத்திற்கு ஒருமுறை இப்படிச் செல்வது அவர்களின் வழக்கம். தனியே அமர்ந்திருந்தவள், தன் கனவில் பார்த்த உருவத்தை ஓவியமாக்கும் முயற்சியில் இறங்கி இருந்தாள் ஷ்ராவனி.
 
 
கிட்டத்தட்ட பதினொரு மணியை நெருங்கும் நேரத்தில் பாதி ஓவியம் வரைந்து கொண்டிருக்கும் போது தான் ரேஷ்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
 
 
ரேஷ்மா மற்றும் ஸ்வேதா இருவரும் பள்ளி தோழிகள் என்பதால் அவர்களோடு படித்த தோழிகளோடு பார்ட்டிக்கு சென்று இருந்தனர். பார்ட்டிக்கு கிளம்பும் போது கேப் கிடைக்காததால் அவசரத்திற்கு ஷ்ராவனியின் வண்டியையும் எடுத்துக் கொண்டு சென்று இருந்தனர்.
 
 
அதனாலேயே ரேஷ்மா அழைத்த போது இரவு இவ்வளவு நேரம் கடந்திருந்ததையும் யோசிக்காமல் கிளம்பி விட்டிருந்தாள் ஷ்ராவனி. ஆனால் அவள் நினைத்தது போல் அனைத்தும் சுமுகமாக முடியவில்லை.
 
 
தேவையில்லாத வாக்குவாதம்.. அவர்களோடு பிரச்சனை என அன்றைய நாளே எரிச்சலும் சலிப்புமாக முடிந்திருந்தது.
 
 
************
 
 
மறுநாள் காலை விடுமுறை என்பதால் பொறுமையாக எழுந்து குளித்து விட்டு தனக்கான காபியை தயாரித்துக் கொண்டு வந்து அமர்ந்திருந்தவளை நேருக்கு நேர் பார்க்க தயங்கியவாறு அவளருகில் வந்தமர்ந்தாள் ஸ்வேதா.
 
 
அவளைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ஷ்ராவனி தன் போக்கில் காபியை அருந்தி கொண்டிருக்க.. “ஷ்ரவுவுவு..” என்று மெல்ல இழுத்தாள் ஸ்வேதா.
 
 
அப்போதும் அவள் பக்கம் திரும்பாமலேயே ஷ்ராவனி இருக்க.. “சா.. சாரி.. அது ஏதோ தெரியாம..” என்றவளுக்கு எப்படி என்ன சொல்லி இவளை சமாதானம் செய்வது எனச் சுத்தமாகப் புரியவில்லை.
 
 
அவளின் பேச்சை தடுத்து நிறுத்துவது போல் ஷ்ராவனி திரும்பி ஒரு பார்வை பார்க்க.. அவள் வார்த்தையில் கேட்கவில்லை என்றாலும் ஷ்ராவனியின் இந்தப் பார்வை ஸ்வேதாவுக்கு அவள் கேட்க வருவதைப் புரிய வைத்திருக்க.. சட்டெனத் தலை குனிந்தாள் ஸ்வேதா.
 
 
அவளுக்கே நடந்ததில் பாதிக்கு மேல் நினைவில் இல்லை என்றாலும் லேசாக நினைவில் இருந்ததை வைத்து ரேஷ்மாவிடமும் விசாரித்து அறிந்து கொண்டவள் ஷ்ராவனி இவர்கள் இருவர் மீதும் கோபமாக இருப்பதை அறிந்தே இங்கு வந்திருந்தாள்.
 
 
ஆனாலும் என்ன சொல்லி இதை நியாயபடுத்துவது எனப் புரியாமல் விழித்தவளை காப்பது போல் “ஸ்வே நேற்று அவ எக்ஸ்ஸை பார்த்தா.. அதுவும் எங்க க்ளோஸ் பிரெண்ட்டோட பியான்சியா.. அதான், கொஞ்சம் ஓவரா போயிட்டா.. என்னாலேயே அந்த ஷாக்கை தாங்க முடியலை, இதில் இவ எப்படி..? அதான் என்னாலேயும் அவளை அங்கே அப்போ தடுக்க முடியலை ஷ்ரவு.. பிளீஸ்.. புரிஞ்சுக்க..” என்றாள் ரேஷ்மா.
 
 
அதில் சோர்ந்து போய் விழிகளை மூடியவளுக்கும் நிலைமை ஓரளவு புரிந்தது. இதில் அவர்கள் மேல் இருந்த கோபம் லேசாகக் குறைய.. “அவன் தான் போயிட்டான் இல்லை.. அப்பறம் ஏன் அவனை நினைச்சு நீ பீல் செஞ்சுட்டு இருக்க.. என்னை விட்டுட்டு போனா அது உனக்குத் தான் நஷ்டம் போடான்னு அடுத்த வேலையைப் பார்க்காம..” என்றாள்.
 
 
“நானும் அப்படித் தான் நினைச்சேன் ஷ்ரவு.. ஆனா அவனை நேரில் அதுவும் என் க்ளோஸ் பிரெண்ட் பியான்சியா பார்த்த பிறகு என்னால நார்மலா இருக்க முடியலை.. அந்தக் கோபத்தில் தான்..” எனத் தலை குனிந்தவளின் மனம் புரியா ஆறுதலாக அவளை அணைத்து கொண்டாள் ஷ்ராவனி.
 
 
*****************
 
 
மூன்று நாட்கள் கடந்திருக்க..
 
 
அந்தச் சாலையோர இளநீர் கடையில் தன் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்து இளநீர் அருந்திக் கொண்டிருந்த ஸ்ரீராமுக்கு அருகில் இருந்த கரும்புசாறு கடையில் நின்றிருந்த இளைஞர்கள் சிலர் பேசுவது செவியைத் தீண்டியது.
 
 
“வாவ்.. செம்ம பிகர்..”
 
 
“ஆமா மச்சி என்னமா இருக்கா இல்லை டா.. ஒரு லைவ்லினஸ் இருக்குடா அவகிட்ட.. என்னமோ ஒரு அட்ராக்ஷன் இருக்கு இல்லை..”
 
 
“ஆமா மாப்பிள்ளை.. வெறும் அழகு மட்டுமில்லை.. அதையும் கடந்து ஏதோ ஒண்ணு.. ஒரு எனர்ஜி இருக்கு இல்லை..”
 
 
“இப்படி ஒருத்தி எல்லாம் நம்மளுக்குக் கிடைப்பாளாடா..?” என்று மற்றொருவன் சொன்னதும் உடன் நின்று இருந்த அனைவரின் பார்வையும் அவன் மேல் திகைப்போடு பதிந்தது.
 
 
“டேய்.. நீயா டா பேசினது..?” என ஆச்சர்யம் தாங்காமல் ஒருவன் கேட்டுவிட.. “ஏன் நான் பேச கூடாதா..? என்ன..?” என்றான் முதலில் பேசியவன், “அடேய் நீ தான் முரட்டு சிங்கிள் ஆச்சே டா..” என்று மற்றவர்கள் குரல் கொடுக்கவும், “இப்படி ஒருத்தி கிடைப்பானா சிங்கிளாவது..! அங்கிளாவது..! எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு மிங்கிள் ஆகிட்டு போயிட்டே இருக்கணும் மச்சி..” என்று கூறி புன்னகைத்தான் அவன்.
 
 
இவையனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீராமுக்கு இதழ்களில் சிறு புன்னகை உண்டானது. பெண்களைத் தவறாகப் பார்ப்பதோ தவறாகப் பேசி கேலி செய்து சீண்டுவதோ எப்போதுமே அவனுக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருந்தது அப்படி அல்ல.
 
 
‘ஒரு சின்ன ரசிப்பு அதைப் பற்றிய சிறு நண்பர்களுக்குள்ளான உரையாடல்.. இது கூட இல்லையென்றால் இந்த வயதில் என்ன சுவாரசியம் இருக்கிறது.. இத்தகைய பேச்சும் பார்வையும் அப்பெண்களுக்குத் தொல்லையாக அமையாமல் இருக்கும் வரை எதுவுமே தவறில்லை..! இவையெல்லாம் ரசிப்புத்தன்மையில் தான் வரும்..’ என நினைத்தவன்.. ‘யாரு அந்தப் பொண்ணு..?!’ என்பது போலப் பார்வையைத் திருப்பினான்.
 
 
எதிர்பக்கம் இருந்த மெக்கானிக் கடையில் தன் ஹோண்டா டியோவை ரிப்பேர் செய்ய விட்டு விட்டு அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு நின்றிருந்த பெண் ஸ்ரீராமின் பார்வையில் விழுந்தாள்.
 
 
இளம் நீல நிறத்தில் அடர் சிவப்பு நிற பூக்களை வாரி இறைத்தது போன்ற லாங் ஸ்கர்ட்டும் அதே சிகப்பு நிறத்தில் இடைவரை இருந்த மேலாடையும் அதன் மேல் அதே நீல நிறத்திலான ஷார்ட் கோர்ட்டும் அணிந்து கொண்டு இடைவரை இருக்கும் கூந்தலை விரித்து விட்டவாறே பார்வையை வண்டியின் மீதே வைத்தப்படி இங்கும் அங்குமாக நடந்தவாறே சிறு துள்ளலோடு பேசிக் கொண்டிருந்தவள் இந்தப் பக்கம் திரும்பவும் “அப்போய்.. ஈ அம்மாயியா..?” (ஆத்தாடி இவளா..?!) என அவளைக் கண்டு அதிர்ந்தான் ஸ்ரீராம்.
 
 
உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு இளநீருக்கான பணத்தைக் கொடுத்தவனைக் கடந்து சென்ற அந்த இளைஞர்கள் ”ஹ்ம்ம்.. நமக்கில்லை.. நமக்கில்லை.. இவளை கல்யாணம் செஞ்சுக்கப் போற அந்த அதிர்ஷ்டசாலி எவனோ தெரியலை..” என்று தங்களுக்குள்ளேயே கேலி செய்தவாறு அங்கிருந்து செல்வது கேட்கவும், ‘என்னது அதிர்ஷசாலியா..! எவன் சிக்கப் போறானோ..?!’ என எண்ணிக் கொண்டவன் இன்னும் சில நாட்களில் அவளிடம் சிக்கப் போவது தானே எனத் தெரியாமல் வண்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து வேகமாக கிளம்பினான் ஸ்ரீராம்.
 
 
அன்று மாலை வழக்கம் போல் மகனை அழைத்திருந்த ஜானகி, சிறிது நேரம் போல் பேசி விட்டு “அடுத்த வாரம் தமிழ் நாட்டுக்கு வரலாம்னு இருக்கேன் பாபு..” என்றார். அதில் தன்னைப் பார்க்க வர போவதாக எண்ணி மகிழ்ந்த ஸ்ரீராம், “அடுத்த வாரம் நான் கொஞ்சம் பிசிமா.. நீங்க இந்த வாரமே வாங்களேன்..” என்றான்.
 
 
“நான் சென்னைக்கு வரலை பாபு.. என் சொந்த ஊருக்கு போறேன், உன் கல்யாணம் ஏன் இப்படிக் காரணமே இல்லாம தள்ளிட்டு போகுதுன்னு கவலையா இருந்தது.. அப்போ தான் நம்ம சகுந்தலா அத்தை சொன்னாங்க ரொம்ப நாளா குல தெய்வ கோவிலுக்குப் போகலைனா கூடக் குல தெய்வ தோஷம் எதுவும் இருக்க வாய்பிருக்கு, அதைச் சரி செஞ்சுடுன்னு.. அதுக்குத் தான் அங்கே போறேன்..” என்றார் ஜானகி.
 
 
அதற்கு ஏன் தமிழ் நாட்டிற்கு வர வேண்டும் என ஸ்ரீராமிற்குச் சுத்தமாகப் புரியவில்லை. “ம்மா.. நாம தான் ஒவ்வொரு வருஷமும் குடும்பத்தோடு போய்ப் பொங்கல் வைக்கறோமே.. அப்பறம் என்ன..?” என்றான்.
 
 
“அது இங்கே உங்க அப்பா வீட்டு குல தெய்வம்.. நான் சொல்றது என் பிறந்த வீட்டு குல தெய்வம் ரா பாபு..” என்று அவர் விளக்கவும் தான் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
 
 
“ம்மா நீங்க தனியாவா போகப் போறீங்க.. அதெல்லாம் வேண்டாம், அடுத்த மாசம் நானே உங்களைக் கூட்டிட்டு போறேன்.. கொஞ்சம் பொறுமையா இருங்க.. இப்போ எனக்குக் கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு..” என ஒரு மகனாய் தன் அன்னையின் நலனை எண்ணி கவலைப்பட.. “நான் தனியா போகலைரா பாபு.. வதின என் கூடத் தான் வராங்க.. என்ன இருந்தாலும் அவங்களுக்கும் அது தானே குல தெய்வம்.. இத்தனை வருஷமா அவங்களும் போகவே இல்லையே..” என்றவர் தங்களின் திட்டத்தைப் பற்றி விளக்க.. அதில் தனக்குத் தோன்றிய சந்தேகங்களை எல்லாம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டவன், அமைதியாகச் சம்மதித்தான்.
 
 
அதன்படி ஜானகியும் அவரின் அண்ணன் வரதராஜனின் மனைவியான சுதாவும் அடுத்த வாரத்தில் தென் தமிழகத்தில் இருக்கும் தன் சொந்த ஊருக்கு வருவதும் அதன் பின் அப்படியே சென்னை வந்து ஸ்ரீராமோடு சில நாட்கள் தங்குவதும் உறுதி செய்யப்பட்டது.
 
 
************
 
 
அடுத்த நாள் மாலை.. 
 
 
ஒரு புகழ்பெற்ற கடற்கரையோர ரிசார்ட்டில் ஒரு வழக்கு சம்பந்தமான விசாரணைக்காகச் சென்றிருந்தான் ஸ்ரீராம். அங்கு தன் புல்லட்டை நிறுத்தி விட்டு ஸ்ரீராம் இறங்கி செல்வதை எதேச்சையாகப் பின்னால் வந்த ரேஷ்மா கவனித்தாள்.
 
 
யோசனையாக அந்த வண்டியையும் அவன் முதுகையும் மாறி மாறி பார்த்தவளுக்குச் சட்டென அன்று இரவு இருளில் பார்த்த அவன் உருவம் நினைவுக்கு வரவும், வேகமாக ஷ்ராவனியை தேடிக் கொண்டு விரைந்தாள் ரேஷ்மா.
 
 
இன்று அவர்களின் கல்லூரி தோழனின் பிறந்த நாள் பார்ட்டிக்காக இங்கு வந்திருந்தனர் அனைவரும். தோழிகள் கூட்டத்தோடு நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளை தனியே இழுத்து வந்த ரேஷ்மாவை “எதுக்கு டி இப்படி இழுத்துட்டு வரே..?” என்று முறைத்தாள் ஷ்ராவனி.
 
 
“ஒரு முக்கியமான விஷயம் ஷ்ரவு.. அன்னைக்குத் தேவையில்லாம ஆஜர் ஆகி நம்மளை போலீசில் மாட்டி விட்டு போனவன் மட்டும் கையில் சிக்கினா கைமா தான்னு சொல்லிட்டு இருந்தீயே.. அவன் இங்கே வந்து இருக்கான்..” என வேகமாகச் சொல்லி முடித்தவளை ஆச்சர்யமாகப் பார்த்தவள், “அவனை எப்படிடி உனக்குத் தெரியும்..?” என்றாள்.
 
 
“அவன் வண்டியை வெச்சு தான் டி, அன்னைக்கே பார்த்தேன்.. முகம் தான் இருட்டில் சரியா தெரியலை.. இன்னைக்கு அவனைப் பார்த்ததும் சட்டுன்னு ஞாபகம் வந்துடுச்சு.. தெருவில் போறவன் சும்மா போக வேண்டியது தானே, எதுக்குத் தேவையில்லாம வந்து நம்ம விஷயத்தில் தலையிடணும்.. அன்னைக்கே அவனை நாலு கேள்வி நறுக்குன்னு கேக்கணும்னு தோணுச்சு.. ஆனா அப்போ இருக்கப் பிரச்சனையில் இது வேற வேண்டாம்னு தான்.. அமைதியா இருந்தேன்.. இன்னைக்கு இங்கே வந்து இருக்கான் ஷ்ரவு, அவனைச் சும்மா விடலாமா..?!” என வீர வசனம் பேசியவளை கண்டவளுக்கும் அதே அளவு ஆத்திரம் உள்ளுக்குள் இருக்க.. ரேஷ்மாவோடு சேர்ந்து ஸ்ரீராமை தேடிக் கொண்டு கிளம்பினாள் ஷ்ராவனி.
 
 
தான் தேடி வந்த ஆளை சந்திக்க முடியாமல் போகவே அவரை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றவாறு சென்று கொண்டிருந்தவனைக் கண்டு பிடித்த ரேஷ்மா ஷ்ராவனிக்கு அடையாளம் காண்பிக்க.. அப்போதும் அவனின் முதுகே இவர்களுக்குத் தெரிந்தது.
 
 
வேகமாக அவனை ஷ்ராவனி பின் தொடர்ந்து செல்ல.. ரேஷ்மாவுக்கு அலைபேசி அழைப்பு வர.. அப்படியே அங்கு பேசிக் கொண்டு நின்றாள். பேசி கொண்டே நடந்து கொண்டிருந்த ஸ்ரீராம் அங்கிருந்த நீச்சல் குளத்தின் அருகில் சென்று நிற்க.. அவனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவள், ஒரு கையைப் பேண்ட் பாக்கெட்டில் வைத்தவாறு ஸ்டைலாக மற்றொரு கையில் அலைபேசியைப் பிடித்தவாறு நின்று பேசி கொண்டிருந்ததைக் கண்டடு, “அங்கே எங்களை வம்பில் மாட்டிவிட்டுட்டு இங்கே உனக்கு ஸ்டைல் கேக்குதா ஸ்டைல்..” எனப் பல்லை கடித்தாள் ஷ்ராவனி.
 
 
அதே ஆத்திரத்தோடு இவனை என்ன செய்யலாம் என்பது போலச் சுற்றும் முற்றும் பார்த்தவள், அங்கு யாருமில்லாமல் இருப்பதைக் கண்டதும் உண்டான திட்டத்தோடு அப்படியே பின்னால் இருந்து அவனை பிடித்துத் தண்ணீரில் தள்ள எண்ணி வேகமாக நெருங்கியவள், ஸ்ரீராமை தள்ள முயன்ற நொடி அவன் பேச்சினூடே நகர்ந்து விட... ஷ்ராவனி தடுமாறி நீருக்குள் விழ போனாள்.
 
 
சட்டென திரும்பி யாரோ தவறி நீருக்குள் விழுவதாக எண்ணி கை கொடுத்து அவளை விழாமல் பிடித்திருந்தான் ஸ்ரீராம். அதேநேரம் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க.. “நீயா..?” “நுவ்வா..?” என்றனர் இருவரும் ஒரே நேரத்தில்.
 
 
“அப்போ நீ தான் அன்னைக்கு எங்களைப் போலீஸில் போட்டு கொடுத்ததா..? ஓஹோ அன்னைக்கு அடிச்சதுக்கு ரிவன்ஞா.. முதலிலேயே நீதான்னு தெரிஞ்சு இருந்தா உன்னை.. தண்ணீக்குள்ள மட்டும் தள்ளி விடப் பிளான் செஞ்சு இருக்க மாட்டேன்.." என்றாள் முறைத்துக் கொண்டு.
 
 
அப்போதே இவள் தவறி விழவில்லை தன்னைத் தள்ளி விட வந்திருக்கிறாள் எனப் புரிய.. தன் கை பிடியில் கிட்டத்தட்ட நீரின் மேல் ஊசலாடி கொண்டிருக்கும் போதே இப்படிப் பேசுபவளை விழிகளைச் சுருக்கி ஒரு பார்வை பார்த்த ஸ்ரீராம் அப்படியே தன் கையை விலக்கி கொள்ள.. தொபீரெனத் தண்ணீருக்குள் விழுந்தாள் ஷ்ராவனி.


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
 
பிரேமம் - 4
 
பேச்சுச் சுவாரஸ்யத்தில் ஷ்ராவனியை தவற விட்டிருந்த ரேஷ்மா இவர்களைத் தேடி கொண்டு இங்கு வந்து சேரவும், ஸ்ரீராம் தன் கையை விலக்கி கொண்டு ஷ்ராவனியை தண்ணீரில் விழ செய்யவும் சரியாக இருந்தது.
 
 
அதில் திகைத்து அப்படியே ஒரு நொடி நின்றவள், பின் பதறிக் கொண்டு ஷ்ராவனியை நோக்கி ஓடவும் ஸ்ரீராம் திரும்ப வெளிபக்கம் வரவும் சரியாக இருக்க.. “ஏய் பைத்தியமா உனக்கு..? எவ்வளவு திமிர் இருந்தா இப்படிச் செஞ்சு இருப்பே..?” எனக் கோபமாகக் குரல் எழுப்பினாள் ரேஷ்மா. அதில் தன் வேக நடையை நிறுத்தி அவளை ஒரு பார்வை பார்த்தவன், பதிலேதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
இதில் அவனைத் திட்டி கொண்டே தண்ணீரை ரேஷ்மா நெருங்கவும், திடீரென உள்ளே விழுந்த அதிர்விலிருந்து மீண்டு ஷ்ராவனியே நீந்தியவாறு மேலே வரவும் சரியாக இருந்தது.
 
 
“ராஸ்கல்.. காட்டுமிராண்டி..” என்றெல்லாம் தன் முகத்தில் வழிந்த நீரை துடைத்தபடியே வசைபாடி கொண்டே வந்தவளை வேகமாக நெருங்கினாள் ரேஷ்மா.
 
 
இப்போது இவளிடம் ஏதாவது கேட்டால் அவன் மேல் உள்ள கோபம் முழுக்க தன் மேல் திரும்பும் என்றுணர்ந்து அமைதியாகவே ஷ்ராவனியை அழைத்து கொண்டு சென்றாள் ரேஷ்மா.
 
 
ஏற்கனவே தன் விசாராணை சம்பந்தமாக வந்த வேலை முடியாமல் கடுப்பில் இருந்தவனைத் தன் பங்குக்கு வேறு கொஞ்சம் எரிச்சல்படுத்தி இருந்தாள் ஷ்ராவனி. “இ பிச்சி ராக்காஷி எந்துக்கனி நா வெண்ட்ட படுத்துன்னாயோ..?” (இந்தப் பைத்திய ராட்சசி எதுக்கு என் பின்னால் வருது..?) என்ற கேள்வியோடு சென்று தன் புல்லட்டில் ஏறியவனுக்கு அதன் பின் அதைப் பற்றி யோசிக்கக் கூட நேரமே இல்லாமல் போனது.
 
 
**************
 
 
கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்திருந்தது..
 
 
காலை வழக்கம் போல் தயாராகிக் கொண்டிருந்தவனை அவனின் அலைபேசி அழைக்க.. அதை எடுத்து பார்த்தவனின் முகம் யோசனைக்குச் சென்றது.
 
 
“என்ன காலையிலேயே கமிஷனர் கூப்பிடறார்..?” என்றெண்ணியவாறே எடுத்து “ஹலோ..குட்மார்னிங் சார்..” என்றான் ஸ்ரீராம்.
 
 
“குட்மார்னிங் மிஸ்டர் ராம்.. உங்ககிட்ட மினிஸ்டர் பேசணுமாம்..” என எடுத்தவுடன் அவர் விஷயத்திற்கு வரவும், “ஒகே சார்..” என நிலைமை உணர்ந்து உடனடியாகப் பதிலளித்து இருந்தான் ஸ்ரீராம்.
 
 
சில நொடிகளில் அவரும் இணைப்பில் இணைக்கப்பட.. “ம்க்கும்” என ஒரு சிறு கணைப்போடு பேச்சை துவங்கினார் மத்திய அமைச்சர் மாணிக்கவேல். “குட் மார்னிங் சார்..” என்று மரியாதையாகத் துவங்கினான் ஸ்ரீராம்.
 
 
“ஹ்ம்ம்.. உங்களுக்கு வேணும்னா இது குட் மார்னிங்கா இருக்கலாம், ஆனா எனக்கு இல்லை மிஸ்டர் ஸ்ரீராம்..” என்ற கவலை தோய்ந்த மாணிக்கவேலின் குரலில் மற்ற இருவரிடமும் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவியது.
 
 
“இன்னையோட முப்பது நாள் ஆகுது.. வீட்டில் பூஜைக்கு எல்லா ஏற்பாடுகளும் நடக்குது.. மனசெல்லாம் அப்படி ஒரு வலி.. கோபம்..” என்றவரின் குரலே அவரின் மன வருத்தத்தைப் புரிய வைக்க.. “இன்வஸ்டிகேஷன்.. போயிட்டு இருக்கு சார்..” என்றார் கமிஷனர்.
 
 
“ப்ளீஸ் மிஸ்டர் பாஸ்கரன்.. எல்லார்கிட்டேயும் சொல்ற அதே பதிலை என்கிட்டேயும் சொல்லாதீங்க.. எனக்குத் தேவை ரிசல்ட்..” என்றார் மாணிக்கவேல்.
 
 
“பிராஸஸ் போயிட்டு இருக்கு சார்.. சீக்கிரம் நீங்க எதிர்பார்த்த ரிசல்ட் உங்களைத் தேடி வரும்..” என்றான் ஸ்ரீராம். “இதைச் சொல்லவா உங்களை என் இன்ப்ளூயன்ஸ் யூஸ் செஞ்சு ஸ்பெஷல் பெர்மிஷனோட இங்கே வர வெச்சேன்.. உங்க டிபார்ட்மெண்ட்ல நீங்க தான் ஸ்பீட் அண்ட் பெஸ்ட்னு எல்லாம் சொன்னாங்க.. ஆனா நீங்க வந்து இத்தனை நாள் ஆச்சு இன்னும் எந்த ஒரு தகவலும் எனக்கு வரலை.. இதுக்கா உங்களை வர வெச்சேன்..” என்றார் எரிச்சலோடு மாணிக்கவேல்.
 
 
அவரின் அந்த வார்த்தையில் சட்டெனக் கோபம் எழ.. “நேனா அடிகினா..” (நானா கேட்டேன்) எனத் துவங்கி அப்படியே நிறுத்தி “நான் உங்களை டிரான்ஸ்பர் செய்யச் சொல்லி கேட்கலை.. உங்க தேவைக்கு நீங்க செஞ்சதுமில்லாம இப்போ இதைச் சொல்லி என்னை அதிகாரம் வேற செய்யறீங்களா..?” என்றான் ஸ்ரீராம்.
 
 
அதில் அந்தப் பக்கமிருந்து ஒரு ஆழ்ந்த அமைதியே நிலவ.. கமிஷனருக்கு தான் தர்ம சங்கடமாய்ப் போனது. ஏனெனில் அவர் தான் மாணிக்கவேலிடம் ஸ்ரீராமின் பெயரை பரிந்துரைத்தது.
 
 
சில நிமிடங்களுக்கு மூவரிடமும் மௌனமே நீடிக்க.. “அருமை பெருமையா பெற்று வளர்த்த ஒரே மகளை இப்படி அல்பாயுசில் துள்ள துடிக்க அள்ளி கொடுத்துட்டு இருக்க வலியில் ஏதோ பேசிட்டேன் தம்பி.. மன்னிச்சிடுங்க.. இன்னைக்கு என் மகளுக்கு முப்பது கும்பிடறாங்க.. காலையில் இந்தக் கன்னத்தில் முத்தம் கொடுத்துட்டு கிளம்பி போன பொண்ணு இராத்திரி எல்லாம் திரும்ப வரவே இல்லை..
 
 
தேடி அலைஞ்சு கலைச்சு போன நேரம் பொணமா வந்து சேர்ந்தா.. ஒரு அப்பாவா என் மனநிலை எப்படி இருக்கும் தெரியுமா..? அந்த வலியில்.. காலையில் இருந்து கதறிட்டு இருக்க என் மனைவியைப் பார்த்த வருத்தத்தில் ஏதோ பேசிட்டேன்.. மனசில் வெச்சுக்காதீங்க.. வலி தம்பி வலி.. புத்திர சோகம் போல ஒரு வலி வேற எதுவுமில்லை.. எனக்கு அரசியலில் ஆயிரம் எதிரிங்க.. ஆனா இத்தனை வருஷம் இல்லாம இப்போ ஏன்..? யாரு..? எதுக்கு..?
 
 
இப்படிச் செஞ்சாங்கன்னு எனக்குத் தெரியணும்.. அதான் உங்களை இங்கே வர வெச்சேன்.. கோபத்திலும் வருத்தத்திலும் ஏதாவது தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்கங்க.. உங்களால தான் இது முடியும்னு தான் உங்களை இங்கே வர வெச்சேன்.. எப்படியாவது என் மகளுக்கு எமனானவனை மட்டும் என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திடுங்க தம்பி..” என்றார் அதீத வலியோடான குரலில்.
 
 
அதில் அவர் முன்பு பேசியதில் உண்டான கோபம் மெல்ல குறைய.. “முடிஞ்ச இடத்தில் இருந்து துவங்க கூடாது சார்.. முதலில் இருந்து துவங்கணும்.. அதான் லேட் ஆகுது.. ஆனா ரிசல்ட் சரியா வரும் சார் டோன்ட் ஒர்ரி..” என்றிருந்தான் ஸ்ரீராம்.
 
 
“அது போதும் தம்பி எனக்கு..” என்றவர் அழைப்பை துண்டித்து விட.. அவர் தன்னை அப்படி ஒருமையில் அழைத்துப் பேசியது ஸ்ரீராமுக்கு துளியும் பிடிக்கவில்லை என்றாலும் இன்றைய அவரின் மனநிலையை மனதில் வைத்தே அமைதி காத்தான்.
 
 
*********
 
 
கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த ஷ்ராவனியின் பார்வையில் அவள் வரைந்து வைத்த ஓவியம் பட்டது. அதில் அன்று அவள் கனவில் கண்டிருந்ததை அப்படியே வரைந்திருந்தாள். சிறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் முகம் தெரியாமல் வரி வடிவமாய்த் தெரிந்ததைக் கொண்டு வரைந்திருந்தவளுக்கு ஏனோ அன்று வந்தது ஒரு சாதாரணக் கனவு என நினைத்து அதை கடந்து போக முடியவில்லை.
 
 
அன்று தன் கரம் பற்றிக் காதலை சொன்னவன் குரலில் இருந்த காதலும் மென்மையும் அன்பும் அப்படிக் கடந்து போக விடாமல் ஷ்ராவனியை தொல்லை செய்து கொண்டிருந்தது. காலமெல்லாம் நம்மோடு வாழ போகும் ஒருவன் பெரியோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முன் பின் தெரியாதவனாக இருப்பதை விட.. ஒருவரையொருவர் புரிந்த காதல் திருமணமாக இருந்தால் அது வாழ்க்கையை அழகாக்கும் என்பது ஷ்ராவனியின் எண்ணம்.
 
 
அதனாலேயே காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவளுள் ஆழ பதிந்து போய் இருந்தது. ஆனால் ஏனோ இதுவரை அவள் மனதை கவர்வது போல யாரையுமே அவள் பார்க்கவில்லை.
 
 
சில கதாநாயகர்களையும் மாடல்களையும் பார்க்கும் போது இளம் பெண்களுக்கே உண்டாகும் க்ரஷ் அவளுக்குமே உண்டு தான்.. ஆனால் அதைக் கடந்து யாரும் ஷ்ராவனியின் மனதை கவரவில்லை.
 
 
அப்படியிருக்கையில் ‘கனவில் வந்த ஒருவன் சொன்ன வார்த்தைகளும் காதலும் இந்த அளவிற்கு மனதை அசைத்து பார்க்குமா..!’ என்ற கேள்வி இத்தனை நாட்கள் கடந்தும் இன்றும் அவளுள் பெரிதாக இருந்தது.
 
 
அன்று வந்தவன் பேசியதெல்லாம் எழுத்து மாறாமல் மனப்பாடமாக இன்றும் மனதில் அப்படியே நிலைத்து நிற்குமளவிற்கு அவன் தன் மனதில் ஆழ பதிந்து போய் இருப்பது புரிய... ‘இதெல்லாம் சாத்தியமா..?!’ என்ற வியப்பே அவளுள் பெரிதாக இருந்தது.
 
 
இதே நினைவோடு நின்றிருந்தவளின் விரல்கள் தன் கையில் இருந்த முதுகு புறம் மட்டுமே தெரியுமளவிற்கான ஓவியத்தை மென்மையாக வருடி கொண்டிருக்க.. அவளின் தோழிகள் வந்து கல்லூரிக்கு நேரமாவதாக அறையின் கதவை தட்டி அழைக்கவும் ஓவியத்தைச் சட்டென மறைத்து வைத்து விட்டு கதவை திறந்தாள் ஷ்ராவனி.
 
 
அன்று சூர்யா வந்ததிலிருந்து அவள் சொல்லி இருந்தது எல்லாம் அவர்களை பொறுத்தவரை அவனோடு பொருந்தி போகவே அவனையே ஷ்ராவனியின் கனவு காதலனாக எண்ணி அவளின் தோழிகள் கேலியும் கிண்டலுமாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி கொண்டிருந்தனர்.
 
 
அதை முழுதாக ஏற்றுக் கொள்ளவும் முடியாமல்.. இல்லை என ஒதுக்கவும் முடியாமல்.. இடைப்பட்ட ஒரு நிலையில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
சில நேரங்களில் இவன் தான் அவன் என்று உறுதிபடுத்துவது போல் தோன்றினாலும் இன்னும் சில நேரங்களில் அப்படி இல்லையோ என்ற சந்தேகமும் ஷ்ராவனியை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது. அவளின் இந்தக் குழப்பமான மனநிலை புரியாமல் இருவரையும் சேர்த்து வைத்து பேசுவதே அவளின் தோழிகளின் முக்கிய வேலையாக இருந்தது.
 
 
இதை அவ்வபோது சூர்யாவும் கவனித்துக் கொண்டு தான் இருந்தான். வகுப்பிலும் படிப்பிலும் எவ்வளவு தான் கவனமாக இருந்தாலும் ஷ்ராவனியின் குறும்பு தனங்களைப் பற்றி அறிந்திருந்தவனுக்கு அவளின் அவ்வபோதான இந்த குறுகுறு பார்வைக்கான அர்த்தம் தான் புரியவில்லை.
 
 
ஆர்வமாகவும் ஆராய்ச்சியாகவும் தன் மேல் படியும் அவளின் பார்வைக்கான காரணம் புரியாமல் யோசனையானான் சூர்யா. அதேநேரம் சூர்யா இங்கு வேலையில் சேர்ந்த போது உடன் சேர்ந்த பெண் பேராசிரியையான சீதாவுடன் ஷ்ராவனி குழுவினருக்கு ஒரு அழகான நெருக்கம் உருவாகி கொண்டிருந்தது.
 
 
அமைதியும் அழகுமாக அளவான மேக்கப்போடு மடிப்புக் கலையாமல் காட்டன் சேலை அணிந்து வரும் சீதாவை மொத்த கல்லூரிக்குமே பிடிக்கும். அதிர்ந்து பேச தெரியாதது போல் அவர் எடுக்கும் வகுப்புகள் கூட மாணவர்களின் விருப்ப வகுப்புகளாக இந்தக் குறுகிய காலத்தில் மாறி போய் இருந்தது.
 
 
என்ன தான் புன்னகையோடு வலம் வந்தாலும் மலர்ந்து சிரிக்காத அவரின் இதழ்களும் ஏதோ சோகத்தைச் சுமந்து கொண்டிருப்பது போன்ற அவரின் விழிகளும் முதல் நாளே ஷ்ராவனியின் மனதை ஏதோ செய்ய.. அவளாகவே போய்த் தொடர்ந்து பேச்சு கொடுத்தே இந்த நட்பை உருவாக்கி இருந்தாள்.
 
 
முதலில் தவிர்க்க துவங்கிய சீதாவால் கூட ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் நட்பையும் நெருக்கத்தையும் தவிர்க்கவோ தடுக்கவோ முடியாமல் போனது.
 
 
பல வருடங்களுக்குப் பிறகான இது போன்ற நட்பும் கலகலப்பும் ஏதோ ஒரு வகையில் சீதாவின் மனதுக்கு அமைதியை கொடுக்க.. அவருமே இவர்களின் நெருக்கத்தையும் குறும்பையும் விரும்பத் துவங்கினார். சின்னச் சின்னக் கேலி கிண்டல்களோடு துவங்கி இவர்களுக்குள்ளான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.
 
 
*************
 
 
தன் சொந்த ஊரில் உள்ள பிறந்த வீட்டு வழியிலான குல தெய்வத்தை வணங்க தன் மச்சினன் மகன் ராஜீவ், தன்னுடைய அண்ணி சுதா மற்றும் அவர்களின் இரு மகள்களான சுரேகா மற்றும் பிரகதியோடு வந்திருந்த ஜானகி, முதல் நாளே ராஜீவ் மூலம் சிறப்புப் பூஜைக்குக் கொடுத்து விட்டு பூஜையை நிறைவாக முடித்துக் கொண்டு வந்து பிரகாரத்தில் அமர்ந்திருந்தார்.
 
 
இத்தனை வருடங்களுக்குப் பிறகு வந்தாலும் எந்தக் குறையும் இல்லாமல் நிறைவாக நடந்து முடிந்த பூஜை கொடுத்திருந்த மனநிறைவோடும் அதைப் பற்றிய பேச்சோடும் இவர்கள் அமர்ந்திருக்க.. பிரகதி வீடியோ காலில் ஸ்ரீராமை அழைத்துத் தாங்கள் வந்த வேலை சிறப்பாக முடிந்ததை எல்லாம் சொல்லி கொண்டிருக்க.. அதேநேரம் ரத்தினவேலும் பூரணியும் அவர்களுக்கு அருகில் பூஜையை முடித்துக் கொண்டு வந்து அமர்ந்தனர்.
 
 
“இன்னைக்கு நல்ல அலங்காரம் இல்லை பூரணி..? மனசே நிறைவா இருக்கு..” என்றவருக்கு ஆமோதிப்பாய் தலையசைத்த பூரணியும் அப்படியே மற்ற பணிகளைப் பற்றிப் பேசி கொண்டிருக்க.. அவருக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தாலும் வேலுவின் பார்வையும் கவனமும் எதிரில் இருந்த ஜானகியின் மீதே யோசனையாகப் பதிந்திருந்தது.
 
 
விழிகளைச் சுருக்கி நெற்றியை நீவி எல்லாம் யோசித்துப் பார்த்தவர், தன்னால் கண்டுபிடிக்க முடியாமல் போகவே ஒரு கட்டத்தில் “ஏத்தா நீ இந்த ஊரா.. எங்கேயோ பார்த்தது போல இருக்கு, யார் வீட்டுப் பக்கம் தாயி..?” என்று ஜானகியிடம் கேட்டே விட்டார்.
 
 
அதில் அவர் பக்கம் திரும்பிய ஜானகி, “இது தான் நான் பிறந்து வளர்ந்த ஊருங்க.. ஆனா ரொம்ப வருஷம் முன்னேயே ஆந்திரா பக்கம் போயிட்டோம்..” எனவும், “பொறந்த ஊரா.. யாரு வீட்டு பொண்ணுத்தா நீ..” என்றவரை கண்டு புன்னகைத்தவர் “அப்பா எல்லாம் நாப்பது நாப்பத்தி அஞ்சு வருஷம் முன்னேயே எங்களை விட்டு போயிட்டாங்க.. உங்களுக்குச் சொன்னாலும் ஞாபகம் இருக்குமா தெரியலை.. அப்பா பேரு ராமமூர்த்தி அம்மா பேரு கல்யாணி..” என்றார் ஜானகி.
 
 
அதைக் கேட்டதும் லேசாகப் பரபரப்பானவர், “வரதராஜன் தங்கச்சியாமா நீ..” என்றார் வேலு. அதில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் தங்களை நினைவு வைத்திருப்பவரை ஆச்சர்யமாகப் பார்த்தவாறே ஜானகி ‘ஆம்’ எனத் தலையசைக்க.. வேகமாக எழுந்து சென்று “அம்மா ஜானகி.. என்னைத் தெரியலையா உனக்கு..?” என்றார் வேலு.
 
 
அவரை யோசனையாகப் பார்த்தவருக்குச் சட்டென வேலுவை நினைவுக்கு வரவில்லை. “உங்க அண்ணன் வரதராஜன் எப்போவும் என் கூடத் தான் இருப்பான்..” என்று அவர் ஜானகிக்கு நினைவுபடுத்த முயல.. “வேலுண்ணா..” என ஆச்சர்யமும் ஆனந்தமுமாகக் குரல் கொடுத்திருந்தார் ஜானகி.
 
 
“நானே தான் ஜானுமா.. நீயே தானா இது.. உன்னை எல்லாம் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு.. எப்படி இருக்கே..? வரதா எப்படி இருக்கான்.. இப்போ எங்கே இருக்கீங்க..?” என்று இடைவிடாது பேசிக் கொண்டே சென்றார் வேலு.
 
 
பூரணியே இப்படி வாய் ஓயாமல் பேசும் தன் கணவனை அதிசயமாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். “ரொம்ப நல்லா இருக்கோம்ண்ணே.. நீ எப்படி இருக்கே..” எனத் துவங்கி சந்தோஷ பேச்சு நீள.. ஜானகி இங்கு வந்த காரணம் முதற்கொண்டு அனைத்தையும் கேட்டு அறிந்தவர், இங்கு யாரையும் தெரியாது தங்குவதற்கும் பெரிதாக வசதிகள் எதுவுமில்லை என்பதால் அவர்கள் போட்டிருந்த திட்டப்படி ஜானகி இப்போதே ஊருக்குக் கிளம்புவதாகக் கூற.. இத்தனை வருடங்களுக்கு பின் வந்திருக்கும் இவர்களை இப்படியே அனுப்பச் சம்மதிக்கவே முடியாது என ஒற்றைக் காலில் நின்றார் வேலு.
 
 
ஜானகியை சிறு வயதில் இருந்தே வேலுவிற்கு மிகவும் பிடிக்கும். தன் சொந்த தங்கை போலவே கவனித்துக் கொள்வார்.. வேலுவிற்கு உடன்பிறந்தவர்கள் என்று யாரும் கிடையாது.. வரதராஜனும் வேலுவும் சிறு வயது முதலே நெருக்கமான நண்பர்கள். ஒரு கட்டத்தில் வரதராஜனின் பெற்றோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்று விட.. தங்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முழுப் பொறுப்பும் வரதராஜனுடையதாகியது.
 
 
ஒரு கட்டத்தில் வரதராஜன் தன் வேலை விஷயமாக ஆந்திராவுக்குச் செல்ல வேண்டி வர.. தன் ஒரே தங்கையைத் தனியே விட்டு செல்ல விரும்பாமல் கூடவே அழைத்துச் சென்று விட்டார்.
 
 
அதன் பின் இங்கிருக்கும் நிலம் வீடு எனப் பார்க்க எப்போதாவது வரதராஜன் வந்து சென்று கொண்டிருந்தார். சில வருடங்களிலேயே அதையும் விற்று விட்டு சென்றவர் அதன் பின் வருவது குறைந்து போய் ஒரு கட்டத்தில் முற்றிலும் நின்றே போனது.
 
 
அப்போதெல்லாம் அலைபேசி இல்லாததால் தொடர்பும் பின் அப்படியே துண்டிக்கப்பட்டு நின்று போய் இருந்தது. இன்று இப்படி எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்ததை அப்படியே விட மனமில்லாமல் ஜானகியையும் வரதராஜனின் மகள் மற்றும் மனைவியையும் வற்புறுத்தி தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் வேலு.
 
 
ராஜீவ் அவர்களை வீடு வரை சென்று இறக்கி விட்டுத் தாங்கள் அருகில் இருந்த நகரத்தில் எடுத்திருந்த அறையில் தங்கி கொள்வதாகச் சொல்லி விட்டு கிளம்பி விட.. அவன் பழக்கம் இல்லா இடத்தில் தங்குவதற்குத் தயங்குவதைப் புரிந்து கொண்ட வேலுவும் ராஜீவ்வை தடுக்க முயலவில்லை.
 
 
***********
 
 
மந்திரி மாணிக்கவேலின் மகளான அனுஷாவின் வழக்கை தீவிரமாக விசாரித்துக் கொண்டிருந்த ஸ்ரீராம், இதைப் பற்றி இன்னும் தெளிவான விவரங்களைக் கேட்டறிய கமிஷனர் பாஸ்கரன் வீட்டிற்குச் சென்று இருந்தான்.
 
 
அவரிடம் ஆரம்பம் முதல் நடந்தவற்றைப் பற்றிப் பல கேள்விகளைக் கேட்க வேண்டி இருந்தது. கமிஷ்னரும் இன்று தன் வீட்டில் யாருமில்லை என்பதால் இருவரும் எந்த தொந்தரவுமில்லாமல் அமர்ந்து பேச வசதியாக இருக்குமென்று வர வழைத்திருந்தார்.
 
 
இருவரும் அதைப் பற்றி மாடியில் இருந்த வரவேற்பறையில் அமர்ந்து பேசி கொண்டிருக்க.. ஒரு மணி நேரத்திற்கு பின் சூடாகக் குடிப்பதற்கு எதையாவது தயாரித்துக் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டு கமிஷனர் இறங்கி செல்ல.. தன் அன்னைக்கு அழைத்துப் பேசியவாறே எழுந்து சென்று பால்கனியில் நின்றான் ஸ்ரீராம்.
 
 
வாடா மச்சான்..
 
 
என அவன் பேசுவதையும் மீறி ஹை டெசிபளில் பாட்டு சத்தம் கேட்க.. பார்வையை எதிர் வீட்டின் பக்கம் திருப்பினான் ஸ்ரீராம்.
 
 
நம்ம கச்சேரிதான்
ரொம்ப உற்சாகமா
களக்கட்டுதடிச் செல்லமே
 
 
அங்குப் பல வண்ண விளக்குகள் மின்னி மின்னி மறைய ஒரு இளமை பட்டாளமே சேர்ந்து ஆடிக் கொண்டிருந்தது.
 
 
நானும் துச்சாதனா
ஹா இல்ல துரியோதனா
துயில் உறியட்டுமா உன்னையே
 
 
என ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தவர்களை அப்படியே பார்த்தவாறு தன் அலைபேசியை அணைத்தான் ஸ்ரீராம்.
 
 
நீ தொட்டதெல்லாம் ஹிட்டு
அட ஹிட்டாதான் நான் வட்டு
இனி நமக்கேது சென்சார் கட்டு
உன் பேச்சுச் சத்தம் கேட்டு
அட தானா விழும் ஓட்டு
நீ வாங்கிக்கோ காதல் சீட்டு
 
 
அதே நேரம் சூடான காபியோடு வந்த கமிஷனர் ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு மற்றொன்றை பருகியவாறு திரும்பியவர், ஸ்ரீராமின் கவனம் முழுக்க எதிர் வீட்டில் இருப்பதைக் கண்டு, “உனக்கு டிஸ்டர்ப்பா இருந்தா நாம இந்தக் கிளாஸ் டோர் கிளோஸ் செஞ்சுடலாம் ராம்..” என்றார்.
 
 
அட செட்டிநாடு சிக்கன்
உன்ன ருசிப்பார்க்கவா
தெனம் சேர்த்துவச்ச
ஆசையெல்லாம் தீரத்தீர
 
 
“இவ்வளவு சத்தம் உங்களுக்கு டிஸ்டர்ப் ஆகாதா சார்..?” என்றவனைச் சிறு புன்னகையோடு பார்த்தவர், “எனக்குப் பழகி போச்சு.. இந்தக் காலத்துப் பசங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தானே.. இப்போ எல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான் வாழ்க்கைன்னு நினைக்கறாங்க.. கொஞ்சம் கூட வாழ்கையைப் பற்றிய பயமோ கவலையோ யாருக்கும் இல்லை..” என்றார் கமிஷனர்.
 
 
ஏ வாடா வாடாப் பையா
என் வாசல் வந்துப்போயா
என் வாசல் தாண்டி வந்து
என் வாசம் வாங்கிப்போயா
 
 
கமிஷனர் தன் நெடு நாள் ஆதங்கத்தைக் கொட்ட ஆள் கிடைத்த எண்ணத்தில் பேசிக் கொண்டிருக்க.. 
 
 
ஸ்ரீராமின் கவனமோ
என் இராத்திரியின் நாவல்
நீ நட்சத்திரத்தூவல்
நீ நடமாடும் காமக்கோவில்
நீ ஆடைக்கட்டும் ஆப்பிள்
என் ஆசைகளின் சேம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
 
 
நீப்போடுப்போடு சக்கப்போடு
என்ன போத்திக்கடி தேகத்தோடு
அட வாடா ராஸ்கல் நேரத்தோடு
 
 
என்று ஆடி கொண்டிருந்த ஷ்ராவனியின் மேலேயே வெறுப்போடு பதிந்திருந்தது. 
 
 
இன்றோடு கல்லூரி முடிந்திருக்க.. நாளை முதல் பரீட்சைக்குப் படிப்பதற்கான விடுமுறை இவர்களுக்கு விடபட்டிருந்தது. நாளையில் இருந்து ஒவ்வொருவராக வீட்டிற்குச் செல்ல துவங்கி விடுவார்கள்.. 
 
 
இதன் பின் பரீட்சை அன்றே சந்திப்பார்கள் என்பதால் இந்த வருடம் முடிய போவதை கொண்டாடவே ஊருக்குக் கிளம்புவதற்கு முன் நண்பர்கள் எல்லாம் ஒன்று கூடி ஆடிக் கொண்டிருந்தனர். ஷ்ராவனியின் போதாத நேரமோ என்னவோ அவள் கையில் இருந்த கண்ணாடி கிளாசில் இருந்த பிஸ் (fizz) ஸ்ரீராமின் கண்களுக்கு வேறு மாதிரி தெரிந்தது..
 
 
***********
மறுநாள் காலை அலுவலகம் சென்று கொண்டிருந்த ஸ்ரீராம் ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்த.. அவன் அலைபேசி அழைத்தது. எடுத்து பார்த்தவன், தன் உயிர் நண்பன் ஸ்ரீனிவாச ராவ் ஆந்திராவில் இருந்து அழைக்கவும் ப்ளூ தூத்தில் இணைத்து பேச துவங்கினான்.
 
 
“ஹலோ மாவா..” (ஹலோ மச்சான்) என்று துவங்கி அங்கு இதே துறையில் பணியில் இருப்பதால் ஸ்ரீனிவாச ராவ் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வழக்கை பற்றிப் பேச.. அப்படியே அவர்களின் பேச்சு நீண்டது.
 
 
சிக்னல் மாறி வாகனங்கள் நகரத் துவங்க.. தானும் வண்டியை எடுத்தவன், சில அடிகளில் மீண்டும் வாகனங்கள் எல்லாம் அப்படியே நிற்பதை கண்டு ‘ஏமி ஐந்தி..?’ (என்ன ஆச்சு) என யோசனையானான்.
 
 
சில நிமிடங்கள் கடந்தும் கூட வாகனங்கள் நகர்வது போலத் தெரியாததால் மற்றவர்களைப் போல் இருந்த இடத்தில் இருந்தே புலம்பி கொண்டு இல்லாமல் இறங்கி சென்றவன் அங்கு ஷ்ராவனி ஒருவனின் சட்டையைப் பிடித்துச் சண்டை போட்டு கொண்டிருப்பதைக் கண்டு “அரே.. ஏன்டிரா இதி.. எக்கட போயினா இ அம்மாயினா..?!” (அட.. என்னடா இது.. எங்கே போனாலும் இந்தப் பொண்ணா..?) என்று அதிர.. 
 
 
ஸ்ரீராம் சொன்னது எழுத்து மாறாமல் அந்தப் பக்கம் இணைப்பில் இருந்தவனின் காதில் விழ.. “அம்மாயினா..! எவர்ரா அதி..?” (பொண்ணா..! யாருடா அது..?) என்று ஆர்வமாக வினவ.. “ஹாங்.. அதி ஒக்க பிச்சி ராக்காஷி..” (ஆங்.. அது ஒரு பைத்தியகார ராட்சசி) என்றவாறு இணைப்பை கடுப்போடு துண்டித்திருந்தான் ஸ்ரீராம்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
 
பிரேமம் – 5
 
இரவு வீடு திரும்பியவனின் அலைபேசி தன் இருப்பைத் தெரிவிக்க.. சோர்வாக எடுத்து பார்த்தவன் அழைப்பது ஜானகி என்றதும் உடனே அதை எடுத்திருந்தான்.
 
 
“வீட்டுக்கு வந்துட்டியா பாபு..?” என்று துவங்கியவரை எண்ணி புன்னகைத்து கொண்டவன், “என்ன இன்னைக்கு எங்க அம்மாக்கு ஒரே பையன் ஞாபகமா இருக்கு..?” என்றான்.
 
 
“ஏன் இல்லைனா மட்டும் உன்னை மறந்துட்டா இருக்கேன்..?” என அவர் கோபித்துக் கொள்ள.. “அப்படியில்லை.. வழக்கமா நானா தானே கூப்பிடுவேன், வேலை நேரத்தில் தொந்தரவா இருக்கும்னு அவசரம் எதுவும் இல்லைனா நீங்க கூப்பிட மாட்டீங்களே.. இன்னைக்கு என்ன இதோட மூணாவது போன்..? அதான் கேட்டேன்..” என்றான் சரியாகத் தாயை அறிந்த மகனாக.
 
 
“ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் பாபு..” என்றவரை சிரிப்போடு எதிர் கொண்டவன் “அதானே பார்த்தேன், என்ன சொல்லுங்க..?” என்றான். “என்ன பிள்ளைடா நீ, உங்க அம்மா இந்த வயசில் தனியே வெளி ஊருக்கு வந்து இருக்கேன்.. அவசரமா எதுவோ சொல்லணும்னு இத்தனை போன் செஞ்சு இருக்கேன்.. கொஞ்சம் கூடப் பதட்டபடாம அதான் என்னன்னு சிரிச்சுட்டே கேக்கறே இவ்வளவு சாவகாசமா..” என்றார் ஆதங்கத்தோடு ஜானகி.
 
 
அதற்கு வாய் விட்டே சிரித்தவன், “நீங்க முதல் போன் செஞ்சப்போவே நான் எடுத்தேன்.. நீ ப்ரீயா இருக்கீயா பாபுன்னு நீங்க கேட்ட விதமே அவசரம் எதுவுமில்லைன்னு எனக்குச் சொல்லிடுச்சு.. அடுத்து முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்னு நீங்க சொல்லும் போது உங்க குரலில் ஒரு ஆர்வம் மட்டும் தான் இருந்ததே தவிரப் பதட்டமோ படபடப்போ கொஞ்சமும் தெரியலை.. இதையெல்லாம் விடத் தினமும் நான் உங்க கூட இருக்க வாண்டுங்க கூட எல்லாம் பேசிட்டு தானே இருக்கேன்.. நீங்க தான் புதுசா கிடைச்ச உங்க அண்ணன் வீட்டில் சீராடிட்டு இருக்கீங்களாமே.. அப்பறம் என்ன.. வேணும்னா சொல்லுங்க உங்க புது அண்ணன் ஓவரா அன்பு தொல்லை கொடுக்கறாருன்னு முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே தள்ளிடவா..?” என்றான் புன்னகையோடு ஸ்ரீராம்.
 
 
“ஆனா அநியாயத்துக்கு நீ போலீஸா இருக்கரா பாபு..” எனத் தன் குரலில் இருந்தே இவ்வளவு தெரிந்து வைத்திருப்பவனை எண்ணி பெருமையோடு கூறினார் ஜானகி.
 
 
“இன்னும் நீங்க போன் செஞ்ச காரணத்தைச் சொல்லலை மிசஸ் ஜானகி தேவி.. ஆமா எப்படி இத்தனை நாள் அங்கே இருக்கீங்க, அப்படியெல்லாம் நீங்க இருக்க மாட்டீங்களே..” என்று வம்பிழுத்தான் ஸ்ரீராம்.
 
 
“இங்கே வேலு அண்ணா பொண்ணு லீவுக்கு வந்து இருக்கு ரா பாபு.. ரொம்ப நல்ல பொண்ணு, அமைதியா அழகா இருக்கு.. இப்படி ஒரு பொண்ணு வளைய வந்தா அது வீட்டுக்கே தனி அழகு தான்..” என உணர்ந்து கூறினார் ஜானகி.
 
 
“ஹ்ம்ம் அவ்வளவு பிடிச்சு இருந்தா உங்க அந்தத் திடீர் அண்ணன்கிட்ட கேட்டு அந்தப் பொண்ணை வேணும்னா தத்து எடுத்துக்கோங்களேன்..” என்று ஸ்ரீராம் கேலியில் இறங்க.. “காரியத்தையே கெடுத்தரா நயினா..” என அதிர்ந்தார் ஜானகி.
 
 
“அப்போ என்ன தான் மா சொல்ல வரீங்க..?” என ஓரளவு அவர் சொல்ல வருவதைப் புரிந்தே ஸ்ரீராம் கேட்க.. “அது.. அது.. இன்னைக்கு வேலு அண்ணா அவர் பொண்ணு ஜாதகத்தை எடுத்துட்டு ஜோதிடர் அம்பலவாணனை பார்க்க போனார்.. அப்போ உனக்கும் கல்யாணம் தள்ளிட்டே போகுதேன்னு உன் ஜாதகத்தையும் அவர்கிட்ட கொடுத்து பார்க்க சொல்லலாம்னு எனக்கும் தோணவே நானும் கிளம்பி போனேன்..” என்றார்.
 
 
இடையில் எதுவும் குறுக்கிடாமல் அவராகவே சொல்லட்டும் என அமைதியாகவே இருந்தான் ஸ்ரீராம். “அந்தப் பொண்ணுக்கு எதுவோ கண்டம் இருக்கும் போலச் சின்ன வயசில் இருந்து ஏதோ ஒரு பிரச்சனை வந்துட்டே இருந்து இருக்கு.. அதைப் பற்றித் தான் கேட்டாரு.. கூடிய சீக்கிரம் ஏதோ பெரிய கண்டம் இருக்காம்.. அதில் இருந்து அவ தப்பிக்கணும்னா உடனே அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யணுமாம்..” என்றவர் இடைவெளி விட.. அப்போதும் ஸ்ரீராமிடம் அமைதியே நிலவியது.
 
 
“ஏமிரா எதி செப்பனன்ட்டாவு..?” (என்னடா எதுவும் சொல்ல மாட்டறே..?) என்றார் ஜானகி. “தீன்ட்லோ நேனு ஏமிமா செப்பேதி.. நுவ் ஏமி செப்பாலன்னு ஒச்சாவோ தானி செப்பி முகின்ச்சு..” (இதில் நான் சொல்ல என்னமா இருக்கு.. நீ என்ன சொல்ல வந்தீயோ அதைச் சொல்லி முடி) என்றான் ஸ்ரீராம்.
 
 
அதில் ஒரு பெருமூச்சோடு மீண்டும் பேச துவங்கினார் ஜானகி. “அடுத்து உன் ஜாதகத்தைக் கொடுத்தேன்.. உனக்கு இப்போ கல்யாண யோகம் தான் நடக்குதாம்.. இன்னும் இரண்டு மாசத்துக்குள்ளே கல்யாணம் முடிக்கலைனா அடுத்த ஆறு வருஷத்துக்குக் கல்யாணமே நடக்காதாம்..” என்றார்.
 
 
“ஓஹோ.. நீங்க எதுவும் கவலைப்படாதீங்க மா.. நாம பொறுமையா ஆறு வருஷத்துக்கு அப்பறாமாவே பார்த்துக்கலாம்..” என்றான் இலகுவாக ஸ்ரீராம். “ஏன்ட்ரா பாபு..?” (என்னடா தம்பி..?) எனும் போதே ஜானகியின் குரல் கலங்கி போனது.
 
 
“பின்னே என்னமா.. யாரோ எதுவோ பொழுது போகாம சொன்னதுக்கெல்லாம் நீங்க ஏன் கவலைப்படறீங்க..?” என்றான் ஸ்ரீராம். கடவுளை மட்டுமே நம்புவான் ஸ்ரீராம்.. கடவுள் பேரை சொல்லி ஏமாற்றுபவர்கள் மேலோ ஜோதிடம் ஜாதகம் என ஏமாற்றுபவர்கள் மேலோ துளியும் கிடையாது.. ஆனால் அதில் எல்லாம் ஜானகிக்கு பெரிய நம்பிக்கை உண்டு.. தன் கருத்தை அவர் மேல் எப்போதும் திணிக்க மாட்டான் ஸ்ரீராம்.
 
 
“லேதுரா பாபு.. நீ நினைக்கறது போல அம்பலவாணன் சாதாரண ஜோசியர் இல்லை.. இங்கே சுற்று வட்டாரத்தில் அவரைத் தெரியாதவங்களே இல்லை.. இதுவே மூணு வாரம் முன்னே வேலு அண்ணன் பேசி நேரம் கேட்டு வெச்சு இருந்து தான் நாங்க இன்னைக்கு போனோம்.. நான் சின்ன வயசா இருக்கும் போதிலிருந்தே அவரை எனக்குத் தெரியும்.. அவர் சொன்னா சரியா இருக்கும்..” என விளக்கினார் ஜானகி.
 
 
“சரி அவர் நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு நானும் ஒத்துக்கறேன்.. இப்போ நான் என்ன செய்யணும் சொல்லுங்க..” என்றான் எதிர்த்து வாதிடாமல்.
 
 
“அது.. அது.. ஜோசியர்.. உங்க.. இரண்டு பேர் ஜாதமும் அடுத்தடுத்து பார்த்தாரா.. அத்தனை பொருத்தமும் அப்படியே பொருந்தி இருக்கு.. இவங்க ஒருத்தருக்காகவே ஒருத்தர் பிறந்தது போல இருக்குன்னு சொல்லி..” எனத் தயங்கி தயங்கி தான் சொல்ல வருவதை ஸ்ரீராம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமே என்ற கவலையோடு பேசிக் கொண்டிருந்தார் ஜானகி.
 
 
“மத்ததை எல்லாம் விடுங்க மா உங்களுக்கு அந்தப் பொண்ணைப் பிடிச்சு இருக்கா..?” என்று அவருக்கு இந்தக் கவலையே வேண்டாம் என்பதைப் போலச் சட்டெனக் கேட்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
“ஹாங்..” என மகனின் இந்த நேரடி கேள்வியில் ஒரு நொடி திகைத்தவர் “நச்சிந்தி.. சாலா நச்சிந்திரா பாபு..” (பிடிச்சிருக்கு.. ரொம்பப் பிடிச்சிருக்கு) என்றார் உற்சாகமாக.
 
 
“அப்பறம் என்ன மா.. மத்ததை எல்லாம் நீங்க பார்த்துக்கோங்க.. நான் எப்போ ஊருக்கு வரணும்னு மட்டும் சொல்லுங்க.. அதுக்கு ஒரு நாள் முன்னேயே வந்துடறேன்.. போதுமா..? இப்போ ஹாப்பியா..!” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ஆங்.. சந்தோஷமே பாபு.. ஆனா..” என மீண்டும் ஜானகி தயங்கி நிறுத்தவும், “இன்ங்கா ஏமி மா..?” (இன்னும் என்னமா) என்றான் களைப்போடு ஸ்ரீராம். 
 
 
“அது.. ஊருக்கு இப்போ போகலை பாபு..” என்றவரை திகைப்பாகப் பார்த்தவன், “மா.. நிஜமா சொல்லுங்க உங்க உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே..” எனப் பதறினான் ஸ்ரீராம்.
 
 
“அரே.. நீ கவலைபடற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமில்லை.. நான் நல்லா இருக்கேன்ரா பாபு.. இங்கே பெல்லி பணி அன்ந்தா..” (கல்யாண வேலை எல்லாம்) என்று நிறுத்தினார் ஜானகி.
 
 
“பெல்லி பணி..?” என்று கேள்வியாக நிறுத்தினான் ஸ்ரீராம். “ஆங்.. அது.. வேலு அண்ணாவுக்கு வேண்டுதல் இருக்காம்.. குல தெய்வ கோவிலில் வெச்சு தான் பொண்ணுக்குக் கல்யாணம் செய்யணுமாம்.. அதான் இங்கேயே..” எனவும், “ஓஹோ.. கானி இப்புடு தானி கோசம் ஏமம்மா அத்யாவசரமு..?” (இப்போ அதுக்கு என்னமா அவசரம்..?) என்றான் ஸ்ரீராம்.
 
 
“பாபு அதி.. வரும் ஞாயிறு அன்னைக்கு கல்யாணம் முடிவு செய்யலாம்னு இருக்கோம்..” என்று ஜானகி சொல்லி கூட முடிக்கவில்லை. வேலை முடிந்து வந்த களைப்பில் அன்னையிடம் பேசியவாறே படுக்கையைச் சரி செய்து அப்போதே படுக்கையில் சரிந்தவன், “ஏன்ட்டிடிடி..?” (என்ன) என நம்ப முடியா அதிர்வோடு துள்ளி கொண்டு எழுந்து அமர்ந்தான் ஸ்ரீராம்.
 
 
“கானி இப்புடு தினி கோசம் ஏமம்மா அத்யாவசரமு..?” (இப்போ இதுக்கு என்னமா அவசரம்..?) என ஸ்ரீராம் கேட்டு கூட முடிக்கவில்லை. “நாள் பொருந்தி வரலை பாபு.. உங்க இரண்டு பேர் ராசிக்கும் இந்தத் தேதி தான் சரிபட்டு வருது அதான்..” என்றார் ஜானகி.
 
 
இதற்கு ஸ்ரீராமிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் அமைதியே நிலவ.. “பாபு.. ஏன்ட்ரா..? என்றார் பதட்டமாக ஜானகி. “இப்போ.. இப்போ வர ஞாயிரா..?” எனக் காதில் விழுந்ததை நம்ப முடியாமல் ஸ்ரீராம் கேட்டிருக்க.. “ஆமா பாபு.. இன்னும் ஐந்து நாள் தான் இருக்கு, அதுக்குள்ள எல்லா ஏற்பாடும் செய்யணும்..” என்றிருந்தார் ஜானகி.
 
 
வழக்கம் போல அதுக்கென்னமா செஞ்சுடலாம் என்பது போன்ற பதிலை மகனிடமிருந்து எதிர்பார்த்து இருந்தவர், அவனிடமிருந்து ஆழ்ந்த அமைதியே பதிலாக வர.. “உனக்கு.. உனக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லையா.. நீ பார்த்து யாரை கையைக் காட்டினாலும் சரின்னு சொன்னே தானே.. இப்போ ஏன்ட்ரா இப்படிச் செய்யறே..?” என்றவரின் குரல் அவ்வளவு வருத்தம் எட்டி பார்த்தது.
 
 
“மா.. ஏன் இப்போ இப்படி எல்லாம் பேசறீங்க.. நான் என்ன கல்யாணம் வேண்டாம்னா சொன்னேன்..” என் ஸ்ரீராம் சொல்லவும், “அப்பறம் ஏன் அப்படி அமைதியாகிட்டே.?” என்றார் ஜானகி.
 
 
“எல்லாம் ஏனோ ரொம்ப அவசரமா நடக்கறது போல இருக்கு மா அதான்..” என்றான் தன் மனதில் உள்ளதை மறைக்காமல் ஸ்ரீராம். “அதான் காரணம் சொன்னேனே பாபு..” எனவும் “ஹ்ம்ம்..” என்றதோடு முடித்துக் கொண்டான் ஸ்ரீராம்.
 
 
“இங்கேயே வேலு அண்ணா சொல்றது போலக் கல்யாணத்தை முடிச்சுட்டு.. நம்ம சொந்தங்களுக்கு எல்லாம் ஊரில் ஒரு ரிசப்ஷன் வெச்சுடுவோம் பாபு.. சரியா..?” என்று ஆவலாகக் கேட்டவருக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் திகைத்தான் ஸ்ரீராம்.
 
 
“எனக்குப் புரியுது இவ்வளவு அவசரமா நடக்குதேன்னு தயங்கற.. ஆனா இவ்வளவு நாள் தள்ளி போனதுக்கெல்லாம் சேர்த்து தான் இவ்வளவு வேகமா நடக்குதுன்னு நினைச்சுகோயேன் கண்ணா..!” என்றவரை வருத்தப்பட வைக்க விரும்பாமல், “ஹ்ம்ம் சரி மா.. நீங்க மற்ற ஏற்பாடையெல்லாம் கவனிங்க.. ராஜீவ் வேற வேலை இருக்குன்னு ஊருக்கு கிளம்பிட்டானே.. மாமி பிரகதி சுரேகா எல்லாம் அங்கே எப்படி இவ்வளவு நாள் இருக்காங்க..” என்றான் நிஜமான கவலையோடு.
 
 
“பிள்ளைங்களுக்கு இப்போ லீவு தானேரா பாபு.. அவங்க இங்கே ரொம்பச் சந்தோஷமா இருக்காங்க.. வதினக்கும் இந்த புது இடம் ரொம்பப் பிடிச்சு இருக்காம்.. எங்களுக்கு இங்கே எந்தப் பிரச்சனையும் இல்லை.. நாங்க நல்லா இருக்கோம், நீ புதன்கிழமை கிளம்பி வந்துடு.. மத்த ஏற்பாடை எல்லாம் வேலு அண்ணாவே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டாரு.. மாமா புதன்கிழமை இங்கே வந்துடுவாரு..” எனத் தன் திட்டத்தை அடுக்கி கொண்டே போக.. “புதன்கிழமையா..?!” எனத் திகைத்தான் ஸ்ரீராம்.
 
 
“அவுனுரா..” (ஆமாடா) என ஜானகி துவங்கும் போதே “ம்மா.. புதன்கிழமைக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. இங்கே எனக்கு முக்கியமான வேலை இருக்கு.. சனிக்கிழமை சாயந்திரமா தான் என்னால் வர முடியும்.. வேணும்னா வெள்ளிக்கிழமை நைட் வர பார்க்கறேன், அதுக்கு முன்னே முடியவே முடியாதுமா..” என்றான் திட்டவட்டமாக.
 
 
ஜானகிக்கும் அவன் வேலையின் நடுவே திடீரென அப்படி வருவது சரி வராது எனப் புரிய.. அப்படியே அமைதியானார். அழைப்பை துண்டித்து வெகு நேரம் ஆன பின்பும் கூட அப்படியே அமர்ந்திருந்தவருக்கு இந்தத் திருமணம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்ற கவலை மனமெங்கும் நிறைந்து இருந்தது.
 
 
ஸ்ரீராம் பெரிதாக எதிர்க்க போவதில்லை என்று அறிந்தே ஏற்பாடுகளை எல்லாம் துவங்கி விட்டு இருந்தாலும் கூட ஜானகிக்கு மனதின் ஓரம் லேசாக ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது.
 
 
அவனிடம் சொல்லாமல் ஏற்பாடுகளைத் துவங்கி விட்டோமே மறுப்பாக ஏதாவது சொல்லி விடுவானோ.. இல்லை இவ்வளவு சீக்கிரம் வேண்டாமென மறுத்து விடுவானோ என்றெல்லாம் பயந்து கொண்டே தான் இருந்தார்.
 
 
அதற்கேற்றார் போல் மூன்று முறை ஸ்ரீராமுக்கு அழைத்தும் கூட அவனோடு இதைப் பற்றிப் பேச முடியாமல் போனது வேறு அவருக்கு மனதில் சிறு குழப்பத்தைக் கொடுத்திருந்தது. எங்கே இந்த ஏற்பாடுகளில் ஏதேனும் தடை வருமோ என்ற பயம் மனமெங்கும் நிறைந்திருக்க, மகனிடம் பேசும் தருணத்திற்காக அன்று முழுவதும் காத்திருக்கத் துவங்கினார் ஜானகி.
 
 
ஸ்ரீராம் ஒரு வார்த்தையும் மறுப்பாகப் பேசாமல் ஒத்து கொண்டதே ஜானகிக்கு அவ்வளவு நிம்மதியை கொடுத்தது. ஏனெனில் அவர் ஸ்ரீராமிடம் சொன்னது போல ஷ்ராவனியின் ஜாதகத்தில் மட்டும் கண்டம் இல்லை.. ஸ்ரீராமின் ஜாதகத்திலும் பெரும் கண்டம் ஒன்று இருந்தது.
 
 
ஸ்ரீராமுக்கு இன்னும் ஒரு மாதத்தில் உயிருக்கே ஆபத்து வரும் அளவுக்கு ஒரு கண்டம் இருப்பதையும் அதைத் தவிர்க்க வேண்டுமென்றால் இந்தக் கல்யாணம் உடனடியாக நடந்தே ஆக வேண்டும் என்றும் அம்பலவாணன் எச்சரித்து இருந்ததன் விளைவே இந்த அவசர திருமணம்.
 
 
அதைச் சொன்னால் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாதவன் எங்கே விளையாட்டாக எடுத்துக் கொண்டு மறுத்து விடுவானோ என்று பயந்தே ஜோதிடர் சொன்ன ஒரு பாதியை மட்டும் கூறி இருந்தார் ஜானகி.
 
 
இவனுக்குச் சொன்னது போலவே தான் ஷ்ராவனிக்கும் சொல்லி இருந்தார் ஜோதிடர். இதில் ரொம்பவே பயந்து போய் இருந்தார் வேலு. அவர் முக்கியமாக ஜோதிடரை பார்க்க சென்றதே சிறு வயது முதல் அவளுக்கு ஏதோ ஒரு ஆபத்து வந்து கொண்டே இருப்பதால் தான்.
 
 
அம்பலவாணனை பார்ப்பது அவ்வளவு எளிதல்ல.. இவர்கள் ஊரில் இருந்து மூன்று மணி நேரம் பயணித்துச் சென்றால் தான் அவர் இருக்கும் ஊருக்கே செல்ல முடியும்.. அதிலும் அவரிடம் முன் அனுமதி வாங்கியே செல்ல வேண்டும்.. ஒரு நாளைக்கு இத்தனை நபரை மட்டுமே சந்திப்பது என்ற கட்டமைப்போடு இருப்பவர் அவர்..
 
 
இதற்கு முன்பு ஷ்ராவனியின் பதினைந்தாவது வயதில் ஒருமுறை அவரிடம் அனுமதி வாங்கி இருந்தார் வேலு. ஆனால் அப்போது பூரணியின் அன்னை தவறி விடவே செல்ல முடியால் போனது.. அடுத்து மூன்று வருடத்திற்குப் பின் மீண்டும் அப்படி ஒரு அனுமதி கிடைத்தது.. ஆனால் அப்போதும் செல்ல முடியாமல் ஷ்ராவனி கையை உடைத்துக் கொண்டு வந்து நின்றாள்.
 
 
இப்படித் தள்ளி கொண்டே போவதே வேலுவிற்கு மனதிற்குள் பெரிய பயத்தைக் கொடுத்திருந்தது. அதனாலேயே அம்பலவாணனை சந்திக்கத் தொடர் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தார். இடையில் இரண்டு வருடங்கள் உடல்நல குறைவு காரணமாக யாரையும் சந்திக்கவில்லை அம்பலவாணன்.
 
 
இப்போது அனுமதி கிடைத்து விட, ஒரு பதட்டத்தோடே சென்றவருக்கு அவர் பயந்ததற்கு ஏற்றது போலவே ஜோதிடரும் சொல்லிவிட.. நடுங்கியே போனார் வேலு. ஜானகியும் கிட்டத்தட்ட அதே நிலைமையில் தான் இருந்தார்.
 
 
இருவரையுமே அமைதிப்படுத்துவது போல அடுத்து அவர் கூறிய வழி தான் அந்த ஆபத்தை ஒன்றுமில்லாமல் செய்ய அதை விடப் பலமான ஜாதகம் உள்ள ஒருவராகப் பார்த்து எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மணம் முடித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்றது. 
 
 
முதலில் அவர் சொன்னதிலேயே சோர்ந்து போய் இருந்த இருவரும், இப்படி உடனடியாக அப்படி ஒரு ஜாதகத்திற்கு எங்கே செல்வது என்ற கவலையும் சேர்ந்து கொள்ள அவரிடமே ஆலோசனை கேட்டனர்.
 
 
இருவருக்குமே அவரவர்களின் ஒரே மகன் மற்றும் மகளின் வாழ்வை காப்பற்ற வேண்டுமே என்ற பதற்றமே பிரதானமாக இருந்தது. அதில் சில நிமிடங்கள் எடுத்து ஆழ்ந்த யோசனைக்குச் சென்ற ஜோதிடர், ஏதேதோ கணக்குகளைப் போட்டு பார்த்து மீண்டும் இருவரின் ஜாதகத்தையும் அலசி விட்டு, “உங்களுக்குள்ள என்ன உறவு..?” என்றார் இருவரையும் பார்த்து.
 
 
உடனே “கூடப் பிறக்கலைனாலும் என் தங்கச்சி மாதிரிங்க ஐயா..” என வேலு சொல்லி முடித்த நொடி “அப்போ யோசிக்காம இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பேசி முடிவு செய்ங்க.. இதை விடப் பொருத்தமான ஜாதகம் இவங்க இரண்டு பேருக்குமே கிடைக்காது..” என்றிருந்தார் ஜோதிடர்.
 
 
அதில் அதிர்வோடு ஒருவரையொருவர் திரும்பி பார்த்துக் கொண்டவர்கள், “ஆனா இவங்களுக்கே பிரச்சனைன்னு தானே சொன்னீங்க..?” என்றனர் குழப்பமாக.
 
 
“ஆமா.. ஆனா அது இவங்க தனித் தனியா இருந்தா தான்.. இவங்க சேர்ந்து இருந்தா.. இதை விடப் பலமான ஜாதகமே இல்லைன்னு சொல்லலாம்.. எத்தனை தடைகள் வந்தாலும் எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் ஒண்ணுமே இல்லாம செஞ்சுட்டு அமோகமா வாழ்வாங்க.. இது ஒருத்தருக்காகவே ஒருத்தர்னு படைக்கப்பட்ட ஜாதகம்.. கொஞ்சமும் யோசிக்காம முடிவு எடுங்க.. இதை விடப் பொருத்தமான வரனோ ஜாதகமோ இந்தக் குறுகிய காலத்துக்குள்ள அமையாது..” என்று தெளிவாகக் கூறி இருந்தார்.
 
 
அதில் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பியவர்களுக்கு வழியெங்கும் இதே யோசனை தான்.. ஏனெனில் இருவருக்குமே அதுவரை அப்படி ஒரு யோசனை துளியும் இல்லாததால் இது சரிபட்டு வருமா என்பதில் துவங்கி ஜோதிடர் சொன்ன அனைத்தையும் பொருத்தி பார்த்து வீடு போய்ச் சேருவதற்குள் பிள்ளைகள் இருவருக்கும் அவர் குறித்துக் கொடுத்த நாளில் திருமணம் செய்தே தீருவது என்ற முடிவுக்கு வந்திருந்தனர் இருவரும்.
 
 
அதன் பின் ஜானகி தன் வீட்டினரிடமும் வேலு தன் வீட்டினரிடமும் கலந்து பேசி இதை உறுதி செய்ய.. அடுத்து ஸ்ரீராமிடம் எப்படிப் பேசி புரிய வைப்பது என்ற கவலை ஜானகிக்கு உண்டானது.
 
 
*******************
 
 
இங்கு ஸ்ரீராம் அமைதியாகக் கையாண்ட அதே விஷயத்தை ஷ்ராவனி அங்கு ஆர்பாட்டத்தோடு எதிர்த்து கொண்டிருந்தாள்.
 
 
“ம்மாஆஆ.. என்னமா இதெல்லாம் இப்படித் திடீர்னு..” எனச் சிணுங்கியவளுக்குப் பேசி புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார் பூரணி. அவளோ “எனக்கு இன்னும் எக்ஸாம் கூட முடியலை மா.. இன்னும் ஒரு வருஷ படிப்பு வேற இருக்கு.. என்னால் இதுக்கு ஒத்துக்கவே முடியாது..” என்று கத்தி கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
அவளிடம் தன்னால் முடிந்த வரை புரிய வைக்க முயன்ற பூரணி, அவள் முரண்டு பிடித்து கொண்டே செல்லவும், “சரி எதுவா இருந்தாலும் நீ உங்க அப்பாகிட்ட பேசிக்கோ..” என்று எதைச் சொன்னால் ஷ்ராவனி அமைதியாவாளோ அதைச் சொல்லி மகளின் வாயை அடைத்தார் பூரணி.
 
 
“ம்மா நான் எப்படி..?” என்றவளை, அப்படியே பதிலேதும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் பூரணி. “என்னமா.. எதுவுமே சொல்லாம இருக்க.. என் பிரச்சனை உனக்குப் புரியுதா.. இல்லையா..?” எனப் படபடத்தவளை அதே அமைதியோடு எதிர் கொண்டவர் “நான் எப்போவாவது உங்க அப்பா பேச்சுக்கு எதிர் பேச்சு பேசி இருக்கேனா பாப்பா..” என்றார்.
 
 
அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிய.. என்ன செய்து இதைத் தடுப்பது என்று புரியாமல் கவலையானவள், சில நிமிடங்களுக்குப் பின் “ம்மாஆஆ..” என மீண்டும் ஷ்ராவனி எதையோ சொல்ல துவங்கும் போதே வேலுவின் குரல் அறைக்கு வெளியே கேட்க அப்படியே அமைதியானாள் ஷ்ராவனி.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 611
Topic starter  
 
பிரேமம் – 6
 
ஸ்ரீராம் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காகச் சென்று இருந்த இடத்தில் அதிரடி சோதனையில் இறங்க.. அங்கு யாரும் எதிர்பாரா வகையில் டன்டன்னாகக் கோகைய்ன் கிடைத்தது..
 
 
ஒரு கொலை சம்பந்தமான வழக்கின் விசாரணைக்காகத் தேடி கொண்டிருந்த ஒருவன், அங்கு ஒளிந்து கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தே சென்று இருந்தவர்கள் உள்ளே இருந்தவர்கள் சற்று திமிராகப் பேசி, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நடந்து கொண்டதால் தான் அதிரடியாக உள்ளே நுழைந்தார்கள்.
 
 
அங்கு அவன் தேடி வந்தவன் கிடைக்கவில்லை.. ஆனால் இவர்களே கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமாக மூட்டை மூட்டையாகக் கோகைய்ன் கிடைத்திருந்தது.
 
 
இத்தனை மூட்டைகளில் இவ்வளவு கோகைய்ன் கிடைத்தது இவர்களுக்கே எதிர்பாராத அதிர்ச்சி தான்.. அதுவும் இவ்வளவு பெரிய பெயர் பெற்ற துணி கடையில்.. சேலை மூட்டைகள் அடுக்கி உள்ள இடங்களில் எல்லாம் அதற்கு இடையில் கோகைய்ன் மூட்டைகள் மறைவாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்தது.
 
 
ஆரம்பத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் கண்டெடுத்தவர்கள், அதன் பின் முழுதாக அந்தக் கடையைச் சோதனையிட முயல.. அதற்கான முறையான அனுமதியை அவசரமாகப் பெற முயன்றவாறே ஸ்ரீராம் இங்கிருந்து யாரும் வெளியில் போகாமல் பார்த்துக் கொண்டிருக்க.. மகனுக்கு அழைத்திருந்தார் ஜானகி.
 
 
அவசரமாக எடுத்து பேசியவனை, “பாபு.. நீ கல்யாணத்துக்கு சரியா வந்துடுவ தானே..!” எனவும், “இது ஏன்ட்டம்மா கேள்வி..?” என்றான் ஸ்ரீராம் சோர்வாக. “பின்னே என்னை வேற என்ன கேட்க சொல்றே..? இன்னும் கல்யாணத்துக்கு நாலு நாள் தான் இருக்கு.. இப்போ வரைக்கும் கல்யாணம் செஞ்சுக்கப் போற பொண்ணோட பேரு கூட என்னன்னு உனக்குக் கேட்க தோணலை.. அவ எப்படி இருப்பான்னு பார்க்க கொஞ்சம் கூட ஆர்வமே உனக்கு இல்லை..” எனச் சரமாரியாகக் கேள்வி கேட்க துவங்கினார் ஜானகி.
 
 
அப்போதிருந்த வேலைக்கு நடுவில் அவருக்குப் பொறுமையாகப் பதில் சொல்ல முடியாமல் “இப்போ என்ன மா நான் உங்க மருமக பேரை கேட்கணும்.. அவ்வளவு தானே..! சொல்லுங்க தெரிஞ்சுக்கறேன்..” என்றான் ஸ்ரீராம்.
 
 
“பார்த்தீயா..! இப்போ கூட என் மருமகன்னு தான் சொல்றே..” என்று இங்கு ஸ்ரீராமின் அவசரம் புரியாமல் ஜானகி ஆதங்கப்படவும், “அரே.. இதெல்லாம் ஒரு விஷயமாம்மா.. சரி என் வருங்காலப் பொண்டாட்டி பேர் என்னமா..?” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ஹ்ம்ம்.. இப்போ தான் மன்ச்சி பின்னாடு.. (நல்ல பையன்) நீ பெல்லா பேரு (பொண்டாட்டி) ஷ்ராவனி..” என்றார் புன்னகையோடு ஜானகி. “ஹ்ம்ம் சூப்பர்..” எனப் பேச்சுக்கு சொல்லி வைத்தவனின் கவனம் சுத்தமாக அங்கில்லை.
 
 
அன்னையின் அழைப்பை அதுவும் வெளி ஊரில் உள்ள போது தவிர்ப்பது சரியில்லை என்றே அந்த அவசரத்திலும் எடுத்திருந்தான் ஸ்ரீராம். ஆனால் அவர் பேச துவங்கிய விஷயம் ஜானகியை பொறுத்தவரை மிகவும் முக்கியம் என்பதால் அவரை இடையிடவோ மறுத்து பேசவோ செய்யாமல் அவர் போக்கிலேயே சென்று பேசி சுமூகமாக இந்த அழைப்பை முடிக்க நினைத்தான் ஸ்ரீராம்.
 
 
ஏனெனில் அவனின் இந்தத் திருமணம் என்பதைப் பற்றி அவனுக்கு வேண்டுமானால் எந்தக் கனவோ கற்பனையோ இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் இதைப் பற்றியெல்லாம் ஜானகிக்கு எவ்வளவு ஆசை உண்டென அறிந்தவனாயிற்றே.
 
 
அதனாலேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பவரின் மனதை தன் வேலையின் காரணமாக உடைக்க விரும்பாமல் அவருக்கு ஏற்றவாறு பேசிக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
அதற்குள் இங்கு அவன் எதிர்பார்த்திருந்த அனுமதி கிடைத்து விடவே.. “ம்மா.. ஒரு முக்கியமான வேலை வந்து இருக்கு, நான் உங்களை அப்பறமா கூப்பிடறேன்..” என அவசரமாக அழைப்பை துண்டிக்க முயல.. “சரி.. சரி.. பொண்ணு போட்டோ அனுப்பறேன் பாரு.. நீயா கேப்பேன்னு பார்த்தா நீ அதையும் கேட்கவே மாட்ட போல..” என்றார் ஜானகி.
 
 
“ஹ்ம்ம் ஓகே மா.. டேக் கேர்..” என்று அழைப்பை துண்டித்தவன், தன்னுடன் பேச காத்திருந்த அதிகாரியை நோக்கி நகர.. அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலி வரவே பாக்கெட்டில் அலைபேசியை வைக்க முயன்றவன், சற்று நிதானித்து அதை எடுத்து பிரிக்க.. ஜானகி தான் மணப்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி இருந்தார்.
 
 
அதில் இயல்பாக அதைப் பார்க்க முயன்றவனுக்கு அவன் இருந்த கோடவுனுக்குள் சிக்னல் சரியாக இல்லாததால் புகைப்படம் சுற்றிக் கொண்டே இருக்க.. அதற்குள் இவர்கள் பிடித்து வைத்திருந்த ஆட்களில் ஒருவன் அங்கிருந்து தப்பித்து ஓட முயலவும், அப்படியே அலைபேசியை அணைத்துப் பாக்கெட்டில் போட்டவாறு அவனைப் பிடிக்க ஓடினான் ஸ்ரீராம்.
 
 
*******************
 
 
வெள்ளிக்கிழமை என்றது சனிக்கிழமையாகி.. அதற்காக ஜானகியிடம் திட்டுகளை வாங்கி கொண்டு சமாளித்து, ஸ்ரீராம் சனிக்கிழமை மாலை கிளம்பி வருவதாக இருந்தது.. அப்படியே தாமதமாகி இரவு பதினொரு மணியளவில் வேலுவின் ஊர் சென்று இறங்கினான் ஸ்ரீராம்.
 
 
எப்போது திருமணம் முடிவு ஆனதோ அப்போதே வேலுவின் வீட்டிற்கு அருகில் தனியாக இருந்த ஒரு வீட்டில் ஜானகி தன் குடும்பத்தாருடன் தங்கி கொள்ளத் துவங்கினார்.
 
 
நேராக அங்குச் சென்று இறங்கிய ஸ்ரீராமை வரவேற்க வேண்டி வேலு தன் குடும்பத்தாரோடும் உறவினர்களோடும் காத்திருந்தார். நாளை காலை திருமணம் எனும் நிலையில் நெருங்கிய உறவுகள் எல்லாம் கூடி இருக்க.. முறைப்படி ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை அவர்கள் வரவேற்றனர்.
 
 
“இவன் பெரிய மகா ராஜா.. காலையில் கல்யாணத்தை வெச்சுட்டு நடு இராத்திரியில் வந்து இறங்குவானாம்.. அதுக்கு நான் சாயந்திரத்தில் இருந்து சீவி சிங்காரிச்சுட்டுக் காத்திருக்கணுமாம், பரதேசி முன்னேயே வந்து இருந்தா அவனை மிரட்டி ஓட விடலாம்னு நினைச்சா.. இப்போ வரான்.. போலீஸ்னா இரண்டு கொம்பு முளைச்சு இருக்கு போல.. ஓவரா தான் சீன் போடறான்..” என ஸ்ரீராமை உள்ளே அறையில் தயாராகக் காத்திருந்த ஷ்ராவனி மனதார திட்டி தீர்த்து கொண்டிருந்தாள்.
 
 
பூரணியிடம் பேசி பயனில்லை என்றான பின் அடுத்து அவளுக்கு இருந்த ஒரே வழி மாப்பிள்ளையாக வர போகிறவனிடம் பேசுவது மட்டுமே.. அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து ஷ்ராவனி காத்திருக்க.. அவள் எதிர்பார்ப்பின் நாயகனோ வரும் வழியையே காணோம்..
 
 
இதைப் பற்றி யாரிடம் சென்று கேட்பது எனத் தெரியாமல் ஷ்ராவனி கண் முன் நடக்கும் ஏற்பாடுகளைத் தடுக்க வழி தெரியாது விழித்துக் கொண்டிருக்க.. வியாழன் அன்று தான் அவளுக்குத் தெரிய வந்தது அவளை மணந்து கொள்ள இருப்பவன், சனிகிழமை மாலை தான் வருவான் என்பதே..!
 
 
அதிலேயே பெரும் ஏமாற்றமாக உணர்ந்தவள், அவனின் அலைபேசி எண் கிடைக்குமா என நேரிடையாகக் கேட்க முடியாமல் மறைமுகமாகத் தன்னாலான முயற்சிகளை எல்லாம் செய்து கொண்டிருக்க.. அதுவோ கிடைக்கவே இல்லை பாவம்..
 
 
மற்றவர்களிடமெல்லாம் முயற்சிப்பது வீண் என்று தெரிந்த பின், எப்போதும் தன்னிடம் அன்பொழுக பேசும் ஜானகியிடமிருந்து எண்ணை எடுப்பது தான் எளிதெனத் திட்டமிட்டு அவரோடு பேசுவது போலச் சென்று அருகில் அமர்ந்து கொண்டவள், அவர் எழுந்து சென்ற நேரமாகப் பார்த்து வேகமாக ஜானகியின் அலைபேசியை எடுத்து தேட துவங்கினாள்.
 
 
ஆனால் அவளின் போதாத நேரமாக ஸ்ரீராம் என்ற பெயரில் தேடி பார்த்து அடுத்து ராம் என்ற பெயரில் தேடியும் கிடைக்காமல் வேறு என்ன செய்வது என யோசித்து அவள் முடிவெடுப்பதற்குள் ஜானகி மீண்டும் அங்குக் குளிர்பானத்தோடு வந்து விட்டார்.
 
 
அதில் ஒன்றுமே தெரியாதது போல அவரிடம் நடித்து விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தவளுக்கு ஜானகி தன் மகனின் பெயரை தான் பாசமாக விளிப்பது போலவே பாபு எனச் சேமித்து வைத்திருந்தது தெரியவில்லை பாவம்.
 
 
ஷ்ராவனிக்கு ஜானகியை முதல்முறை பார்த்ததுமே பிடித்து விட்டிருந்தது தான். அவரின் அமைதியும் அன்பும் புன்னகையோடு பேசும் விதமும் என எல்லாமே அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் அதற்காகவெல்லாம் அவரின் மகனை கல்யாணம் செய்து கொள்ள முடியாதே..!
 
 
பின் வேறு ஏதாவது வழி கிடைக்குமா என யோசித்து விட்டுப் பின் இறுதியாக வேறு வழியில்லாமல் அவனிடமே பேசி தன்னைப் பிடிக்கவில்லை.. இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என எதையாவது கூறி இதையெல்லாம் நிறுத்த சொல்ல வேண்டும் இதற்கு எப்படியாவது அவனைச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்து இறங்க போபவனுக்காகவே காத்திருக்கும் முடிவுக்கு வந்தாள் ஷ்ராவனி.
 
 
அதன்படி தன் மேல் எந்தச் சந்தேகமும் வர கூடாது என்றே வேலு சொல்லும் எதையும் மறுக்காமல் செய்து கொண்டு நல்ல பிள்ளை வேஷம் போட்டு கொண்டிருந்தாள் ஷ்ராவனி.
 
 
ஆனால் மாலை என்பது இரவாகி நள்ளிரவை நெருங்கும் நேரம் வந்து சேர்ந்தவனை வரவேற்க வேண்டி வேலுவின் கட்டளைப்படி மாலை மூன்று மணியிலிருந்து முழு அலங்காரத்துடன் காத்திருந்து ரொம்பவே சோர்ந்து போய் இருந்தாள் ஷ்ராவனி.
 
 
இதற்குக் காரணமானவனை வாய் விட்டு கூடத் திட்ட முடியாதவாறு சுற்றிலும் உறவுகள் சூழ்ந்திருக்க.. ‘இன்னைக்கு ஒரு நாள் தானே.. சரி.. சமாளிப்போம், அவன் வரட்டும் எப்படியாவது பேசி இல்லை மிரட்டியாவது இதுக்குச் சம்மதிக்க வெச்சுடலாம்.. எப்படியும் கல்யாணம் நின்னுடும், நாளைக்கு இதையே காரணமா சொல்லி கவலையா இருக்கோம்னு ஒரு நடிப்பை போட்டு நல்லா இழுத்து போர்த்திட்டு தூங்கலாம்..’ என மனதிற்குள் திட்டமிட்டவாறு இழுத்து பிடித்த புன்னகையோடு அமர்ந்திருந்தாள் ஷ்ராவனி.
 
 
அப்போது தான் வெளியில் பரபரப்பு கேட்க.. இவளோடு இருந்தவர்கள் எல்லாம் எழுந்து வெளியில் சென்றனர். “ஹப்பா ஒரு வழியா வந்துட்டார் போல மகாராஜா..” எனச் சலித்துக் கொண்டவள், அப்படியே அமர்ந்திருக்க..
 
 
இங்கு வருங்கால மருமகனை வேலு ஆரவாரமாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார். அவரின் இந்த ஆர்பாட்டமெல்லாம் ஸ்ரீராமுக்கு சங்கடத்தையும் தயக்கத்தையும் கொடுக்க.. தான் எதிர்பார்த்து இருந்ததை விடப் பல மடங்கு உயர்வாக இருந்த ஸ்ரீராமை வெகுவாகப் பிடித்துப் போன சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் குதித்துக் கொண்டிருந்தார் வேலு.
 
 
பூரணிக்குமே அப்படித் தான்.. ஜாதகத்தை மட்டுமே வைத்துத் திருமணம் முடிவு செய்யப்பட்டு விட்டதே.. நல்ல குடும்பம் தான் என்றாலும் மாப்பிள்ளை போலீஸ் என்றவுடன் எப்படி இருப்பாரோ எப்படி நடந்து கொள்வாரோ என்றெல்லாம் ஒரு பயமும் பதட்டமுமே பூரணியின் மனதை பிசைந்து கொண்டிருந்தது.
 
 
ஆனால் அதெல்லாம் ஸ்ரீராமை நேரில் பார்த்த நொடி அவனின் அமைதியான நடவடிக்கையிலும் புன்னகை முகத்திலும் பெரியவர்களிடம் மரியாதையாக நடக்கும் பாங்கிலும் காணாமல் போய் இருக்க.. அவருக்குமே முழுத் திருப்தி.
 
 
இப்படியே நேரம் செல்ல.. “சரி.. இன்னும் மாப்பிள்ளைக்குப் பொண்ணைக் கொண்டு வந்து காட்டலையே.. சீக்கிரம் கூட்டிட்டு வாங்க.. அவங்களும் எவ்வளவு நேரம் தான் எதிர்பார்த்து காத்திட்டே இருப்பாங்க..” எனக் கூட்டத்தில் ஒருவர் குரல் கொடுக்க.. உள்ளே “ஆமா அந்த ஆணழகனை பார்க்க தான் இங்கே நான் தவம் இருக்கேன்..!” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஷ்ராவனி.
 
 
அன்று திருமணம் பற்றிப் பேசிய போது வேலு மாப்பிள்ளை எனக் கூறி ஒரு புகைப்படத்தை அவளிடம் கொடுத்து தான் இருந்தார். அவரிடம் நல்ல பிள்ளை போல் வாங்கிக் கொண்டிருந்தவள், அன்றிருந்த கடுப்பில் அதை அப்போதே அறையில் எங்கோ வீசி இருந்தவள் அதன் பின் அதைப் பற்றி மறந்தே போய் இருந்தாள்.
 
 
அதனால் இருவருக்குமே தான் மணக்க போவது இவர்களைத் தான் எனத் தெரியாது.. அதே நேரம் ஷ்ராவனியை அழைத்துச் செல்ல.. பூரணியும் ஸ்ரீராமின் மாமி சுதாவும் உள்ளே வந்தனர்.
 
 
உடனே முகபாவனையை வேகமாக மாற்றிக் கொண்டு தலை குனிந்து அமர்ந்தவள் அவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே செய்யத் துவங்கினாள்.
 
 
அதன்படி தலை குனிந்தவாறே வெளியே வந்தவள், அங்கு அமர்ந்திருந்தவர்களைக் கண்டு மரியாதையாக கைக் கூப்ப.. பட்டுச் சேலையில் மிதமான அலங்காரத்தோடு மல்லிகை சரம் தோளில் தவழ, அறையில் இருந்து வெளியில் வந்தவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
தலை குனிந்திருந்ததாலும் கேசம் கலைந்து முகத்தில் படர்ந்திருந்ததாலும் ஷ்ராவனியின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் அவளை எங்கோ பார்த்தது போன்ற யோசனையை ஸ்ரீராமுக்கு கொடுக்க.. நெற்றியை சுருக்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 
 
அதேநேரம் “ஏ.. ஆத்தா தலையை அப்படியே மண்ணுக்குள்ள புதைச்சுட்டு இருந்தா.. மாப்பிள்ளை தம்பி எப்படி உன்னைப் பார்க்கும்.. கொஞ்சம் நிமிர்ந்து தான் பாரேன்..” எனக் குரல் கொடுத்திருந்தார் ஸ்ரீராமை கவனித்து இருந்த ஒரு உறவுக்கார கிழவி.
 
 
அதில் பூரணி “நிமிர்ந்து பாரு பாப்பா..” என ஷ்ராவனியின் முகத்தை நிமிர்த்தி விட.. எதிரெதிராகப் பார்த்துக் கொண்ட இருவருக்குமே அப்படியொரு அதிர்வு.
 
 
ஷ்ராவனி சாசர் போல விரித்த விழியை இமைக்கக் கூட மறந்து அசையாமல் நின்று விட.. அதே அதிர்வு தந்த தாக்கத்தில் எழுந்தே நின்று விட்டிருந்தான் ஸ்ரீராம்.
 
 
இருவருக்குமே இது பேரதிர்வு.. துளியும் அவர்கள் வாழ்வில் எதிர்பாராத ஒன்று. இப்படியொரு அதிர்வில் வார்த்தை கூட வராமல் இருவரும் நின்று விட.. “மாப்பிள்ளைக்குப் பொண்ணு கூடத் தனியா பேசணும் போல வேலு..” என்று சிரித்தார் ஒருவர்.
 
 
அதில் “அதுக்கென்ன.. தாராளமா பேசட்டும்.. பாப்பா மாப்பிள்ளையை உள்ளே கூட்டிட்டு போம்மா..” என்ற வேலுவின் குரலிலேயே சுய உணர்வு பெற்றவள், நொடியும் யோசிக்காமல் அதற்குத் தயாரானாள்.
 
 
சற்று முன் இருந்த எப்படி எல்லாம் பேசி மிரட்டி வருபவனை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்ற திட்டமெல்லாம் தேவையே இல்லை எப்படியும் இருவருக்குமே இதில் பிடித்தம் இருக்கப் போவதில்லை எனத் தோன்றவும் உற்சாகமாக அறைக்குள் செல்ல திரும்பினாள் ஷ்ராவனி.
 
 
“வீடு பூரா சொந்தத்தை வெச்சுகிட்டு பேசுங்கன்னா என்னத்த பேசும்ங்க.. தனியா மாடிக்கு அனுப்பி விடு வேலு..” என வயதானவர் ஒருவர் குரல் கொடுக்கவும், அதுவரை செய்வதறியாது நின்றிருந்த ஸ்ரீராம் வேகத்தோடு வெளி வாயிலை நோக்கி நகர்ந்தான்.
 
 
அவன் சென்ற வேகத்தை வைத்துப் பெண்ணிடம் பேச அவ்வளவு ஆர்வமாக உள்ளதாக எண்ணி அங்குள்ளவர்கள் கேலியில் இறங்க.. “ஹிஹி.”. என சிரித்துச் சமாளித்தவாறே அவன் பின்னே சென்றாள் ஷ்ராவனி.
 
 
கிட்டத்தட்ட அங்கிருந்து ஓடி வருவது போல இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே ஏறி வந்தவன், தலையைப் பிடித்துக் கொண்டு இடுப்பு வரையே இருந்த மதில் சுவரில் சாய்ந்து நின்றான்.
 
 
நடந்து கொண்டிருப்பதை அவனால் கொஞ்சமும் நம்பவே முடியவில்லை.. யாரை வாழ்க்கையில் பார்க்கவே கூடாது என நினைத்தானோ அவளையே வாழ்க்கை துணையாகத் தன் அன்னை தேர்வு செய்திருப்பார் என்பதைக் கனவில் கூட நினைக்கவில்லை ஸ்ரீராம்.
 
 
“ஹப்பா.. இப்போ தான் நிம்மதியா இருக்கு, என்னடா இவ்வளவு லேட்டா வரானே லாஸ்ட் டைமில் எப்படிப் பேசி புரிய வெச்சு இதையெல்லாம் நிறுத்தறதுன்னு ரொம்ப டென்ஷனா இருந்தது.. இப்போ இல்லை புரியுது, நீயே இதை நிறுத்தற பிளான்ல தான் லேட்டா வந்தியா..? என்ன சொல்லி நிறுத்தறதுன்னு முடிவு செஞ்சுட்டீயா..?” என்றவாறே படிகளில் ஏறி வந்தாள் ஷ்ராவனி.
 
 
தலையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தவன், வேகமாகத் தன் அலைபேசியை எடுத்து ஜானகி அன்று அனுப்பிருந்த புகைப்படத்தைப் பார்க்க முயன்றான். தன் பேச்சை கவனிக்காமல் அப்படி என்ன செய்கிறான் என்பது போல அருகில் வந்து எட்டி பார்த்தவள், அப்போதே ஸ்ரீராம் அந்தப் புகைப்படத்தை டவுன்லோட் செய்வதைக் கண்டு அவனை ஒரு மாதிரியாகத் திரும்பி பார்த்தவாறே “இப்போ தான் என்னை நீ பார்க்கறீயா..?” என்றாள் திகைப்பாக.
 
 
“சூசி உண்ட்டே..” என வேகமாகத் துவங்கி விட்டு அப்படியே நிறுத்தியவன் “பார்த்து இருந்தா இங்கே வந்து இருப்பேனா..?” என்றான் வெறுப்பான குரலில்.
 
 
அதில் ஒரு நொடி அப்படியே நின்றவள், “அப்போ உனக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை அப்படித் தானே..?” என ஸ்ரீராமின் பேச்சுக்கு சம்பந்தமே இல்லா குரலில் உற்சாகத்தோடு விரல் நீட்டி கேட்கவும், “சுத்தமா இல்லை..” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ஹே.. எஸ்.. எஸ்..” என கையை மடக்கி எகிறி குதித்தவள், “அப்போ இந்தக் கல்யாணத்தை எப்படி நிறுத்த போறே..? என்றாள். அதில் அவளின் செயல்களை எல்லாம் ஒரு மாதிரியாகப் பார்த்து கொண்டிருந்தவன் “அது என்னால முடியாது..” என்றவாறே அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு பின்னால் சாய்ந்தான்.
 
 
“எது முடியாதாஆஆ..” எனத் திகைத்தவள்.. “ஏன்..? ஏன்..?” என்று எகிறிக் கொண்டு வர.. அவளை முறைப்பாகத் திரும்பி ஒரு பார்வை பார்த்தான் ஸ்ரீராம்.
 
 
அதில் இரண்டடி பின்னுக்கு நகர்ந்தவள், “என்ன முறைப்பெல்லாம் ஒரு மார்கமா இருக்கு.. ஏன் கல்யாணத்தை நிறுத்த மாட்டே..!” எனவும், ஸ்ரீராம் என்ன பதில் அளிப்பது எனப் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “என்ன அப்படிப் பார்க்கற..? ஓ.. என்னைப் பார்த்ததும் பிடிச்சு போச்சோ.. பிச்சுடுவேன் பிச்சு.. ஒழுங்கா கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடிடு..” என்று மிரட்டினாள் ஷ்ராவனி.
 
 
இப்போது தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றவன் தன் முன் அரைக்காய் படி அளவே இருப்பவளை ஒரு மாதிரியாகப் பார்த்து புன்னகைக்க.. அவனின் பார்வையிலிருந்தே தன் உயரத்தை கண்டு தான் சிரிக்கிறான் எனப் புரிய.. “ஏய் என்ன நக்கலா..?” என்றாள்.
 
 
“ஆமானா என்ன பண்ணவே..?” என ஸ்ரீராம் ஒற்றைப் புருவத்தை உயர்த்த.. சட்டென இப்படி அவன் கேட்கவும் என்ன சொல்வது எனப் புரியாமல் திகைத்தவள் மீண்டும் பேச துவங்குவதற்குள், “அப்படினா உனக்கும் இந்தக் கல்யாணம் வேண்டாம் ரைட்.. அப்போ நீயே அதை நிறுத்திடு..” என்றான்.
 
 
“எது நானா..?” என மீண்டும் ஷ்ராவனி திகைத்து விழிக்க.. “எஸ்.. நுவ்வே இப் பெல்லின்னி ஆப்புக்கோ..” (நீயே இந்தக் கல்யாணத்தை நிறுத்திக்கோ) எனவும் “என்னது பல்லிக்கு ஆப்பா..?” எனப் புரியாமல் திருதிருத்தாள் ஷ்ராவனி.
 
 
அதில் ஒரு கோப பெருமூச்சை வேகமாக வெளியிட்டவன், “ஐ மீன் நீயே இந்தக் கல்யாணத்தை நிறுத்திக்கோ..” என்றான். “அதான் ஏன்னு கேக்கறேன்.. உனக்கு வேண்டாம்னா நீ நிறுத்தலாம் இல்லை..” என எரிச்சலோடு ஷ்ராவனி சண்டைக்குத் தயாராக..
 
 
“அதையே நான் கேட்டா..?” என்றான் ஸ்ரீராம். “இங்கே பாரு.. இப்படியே ஏட்டிக்கு போட்டி பேசிட்டு இருந்தா எதுவும் நடக்காது.. நம்ம இரண்டு பேருக்குமே இந்தக் கல்யாணத்தில் இஷ்டமே இல்லை.. அதே போல நமக்கு நேரமும் இல்லை.. சீக்கிரம் எதையாவது செஞ்சு இதை நிறுத்த பாரு..” என்றாள் ஷ்ராவனி.
 
 
“நான் தான் சொல்லிட்டேன் இல்லை.. என்னால அதைச் செய்ய முடியாது..” என்று மீண்டும் ஸ்ரீராம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி முடிக்கவும், “யோவ்.. முடியாது முடியாதுனா என்ன அர்த்தம்.. ரத்னவேலு நிறையச் சொத்து சேர்த்து வெச்சு இருக்காரு.. பொண்ணும் மூக்கும் முழியுமா அம்சமா இருக்கா.. அப்படியே செட்டில் ஆகிடுவோம்னு பிளான் எதுவும் போட்ட.. மகனே பர்ஸ்ட் நைட்ல கொடுக்கற பாலில் விஷம் வெச்சுடுவேன் ஜாக்கிரதை..” என மிரட்டினாள் ஷ்ராவனி.
 
 
“இப்படி ஒரு பிசாசை கல்யாணம் செஞ்சா ஒரு சாம்ராஜ்யமே கிடைக்குதுனாலும் எனக்கு அது வேண்டாம்.. அப்பறம் மூக்கும் முழியுமாவா.. மீ இன்ட்லோ அத்தமே லேதா.. நேனு காவாலனா கோனி இச்சேதா..?” (உங்க வீட்டில் கண்ணாடியே இல்லையா.. நான் வேணும்னா வாங்கிக் கொடுக்கட்டுமா..?) என்றான் நக்கலாக.
 
 
“என்னது காவால கோணி விழுந்துடுச்சா..? எங்கே..? எப்போ..?” என்றவளுக்கு, ஸ்ரீராம் அதை தமிழாக்கம் செய்து கூற.. அவனின் கேலியில் திகைத்தவள் “அப்பறம் என்ன தான்யா கேடு வந்தது உனக்கு.. என்னையும் பிடிக்கலை.. எங்கப்பா சொத்தும் வேண்டாம்னா கல்யாணத்தைத் தான் நிறுத்தி தொலையேன்..” எனப் படபடத்தாள்.
 
 
“அது மட்டும் என்னால முடியாது.. எங்க அம்மா இந்தக் கல்யாணத்தை எவ்வளவு ஆவலா எதிர்பார்க்கறாங்கன்னு எனக்குத் தெரியும்.. அவங்க மனசை என்னால உடைக்க முடியாது.. இந்தக் கல்யாணம் நான் நிறுத்தினதா இருக்கக் கூடாது.. நீ என்ன வேணும்னாலும் செய், எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.. ஆனா இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கவே கூடாது..” என்றான் திட்டவட்டமாக.
 
 
அதில் “ஐயோ” எனத் தலையில் கை வைத்து கொண்டவள், “ஏன் யா இப்படி அம்மா சென்டிமென்ட் எல்லாம் கொண்டு வந்து சாகடிக்கறே..?” எனவும், “உனக்குத் தான் எந்தச் சென்டிமென்ட்டும் இல்லையே.. நீயே இதை ஈசியா செய்யலாமே.. உன்னை மாதிரி ரக்காஷிக்கெல்லாம் இதெல்லாம் கஷ்டமா என்ன..?” என்றான் ஸ்ரீராம்.
 
 
“ராகேஷ் யாரு..?” என்று விழித்தவள், அவனின் முறைப்பில் “என்னாலையும் அது முடியாது.. இல்லைனா நீ வர வரைக்கும் காத்திருப்பேனா நான்.. எப்போவோ எல்லாரையும் ஓட விட்டு இருக்க மாட்டேன்..” எனவும், “ஏன்..? உனக்கு அப்படி என்ன பிரச்சனை..?” என்றான் ஸ்ரீராம்.
 
 
“எங்க அப்பா..” என்பதோடு ஷ்ராவனி நிறுத்தி கொள்ள.. அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன், “உன்னைப் பார்த்தா அப்பாக்கு பயப்படற பொண்ணு மாதிரி தெரியலையே..” என்றான்.
 
 
“பயம்னு நான் சொன்னேனா.. எங்க அப்பா எது சொன்னாலும் நான் மறுத்து பேச மாட்டேன்.. அதான் உன்கிட்ட கேட்கறேன்..” எனவும், “இவ்வளவு தூரம் வந்த பிறகு எங்க அம்மாக்கு இதை நான் தான் நிறுத்தினேன்னு தெரிஞ்சா அதை அவங்களால் தாங்கிக்கவே முடியாது..” என்றான் ஸ்ரீராம்.
 
 
அடுத்து என்ன செய்வது என்பது போல இருவரும் நின்றிருக்க.. “இன்னும் பேசி தீரலையா.. வாழ்க்கை முழுக்கப் பேசிட்டே தானே இருக்கப் போறீங்க.. நேரமாகுது வாங்க வாங்க..” என்ற குரல் கேட்டது.
 
 
அதில் திரும்பி பார்த்தவர்கள் படியின் அருகே பூரணியும் அவரருகே இன்னொரு பெண்மணியும் இருப்பதைக் கண்டு அப்படியே அமைதியாக.. “பாப்பா அப்பா கூப்பிடறாங்க டா..” என்றார் பூரணி.
 
 
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் இருவரும் கீழே இறங்க.. வாயிலருகே தங்கள் வீட்டிற்குப் போகத் தன் சொந்தங்களோடு தயாராக நின்றிருந்தார் வேலு.
 
 
இரு குடும்பங்களும் விடைபெற்றுக் கொள்ள.. இருவரும் ஒருவரையொருவர் திரும்பி பார்த்தவாறே விலகி சென்றனர்.
மறுநாள் காலை குல தெய்வ கோவிலில் மணமேடையில் அமர்ந்திருந்த ஸ்ரீராம், தன்னருகே வந்து அமர்ந்தவளை ஒரு எதிர்பார்ப்போடு திரும்பி பார்க்க.. அதே போன்ற பார்வையை அவளுமே பார்த்து வைத்தாள்.
 
 
ஐயர் ஒவ்வொரு சடங்காகச் செய்து கொண்டிருக்க.. நேரம் கடந்து கொண்டே இருப்பதைக் கண்டு மெல்ல ஷ்ராவனியின் செவியருகே குனிந்தவன், “என்ன பிளான் வெச்சு இருக்கே..?” என்றான்.
 
 
அதில் திகைத்துப் போய்த் திரும்பி பார்த்தவள் “அப்போ நீ எதுவும் பிளான் செய்யலையா..?” எனவும், “விளையாடாதே.. அதுக்கு இது நேரமும் இல்லை.. சீக்கிரம்..” என்றான் ஸ்ரீராம் பல்லை கடித்துக் கொண்டே.
 
 
“யோவ் யாரு விளையாடறா நீயா..? நானா..?” என்று அதே போலப் பல்லை கடித்துக் கொண்டே ஷ்ராவனி கேட்கவும், “அடடா.. இன்னும் அஞ்சே நிமிஷம் தான் கொஞ்சம் பொறுத்துக்கங்கோ.. அப்பறம் காலம் முழுக்க ஆசை தீர பேசிட்டே இருங்கோ யாரு வேணாம்னா..” என்ற புரோகிதரின் குரலில் கலைந்தவர்கள், நிமிர்ந்து பார்க்க.. முகமெல்லாம் பூரிக்கத் தன் மகனின் மணக் கோலத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜானகியின் கண்களில் இருவரின் இந்த நெருக்கத்தைக் கண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தது.
 
 
அதைக் கண்டு செய்வதறியாது ஸ்ரீராம் பார்த்திருக்க.. அதே போன்ற நிலையிலேயே தன் தந்தை குழந்தையின் ஆர்வத்தோடு இங்கும் அங்கும் ஓடி தேவையானவற்றை ஏற்பாடு செய்து விட்டு அரக்க பறக்க மணமேடையை நோக்கி ஓடி வருவதையும் அவரின் இந்தத் திருமணத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கண்டு திகைத்திருந்தாள் ஷ்ராவனி.
 
 
அதே நேரம் புரோகிதர் மாங்கல்யத்தை எடுத்து ஸ்ரீராமிடம் நீட்ட.. அதை வாங்க தயங்கி நின்றவன் தன் அன்னையைப் பார்க்க.. தன் அனுமதிக்காகக் காத்திருப்பதாக எண்ணி புன்னகையோடு “தீஸ்கோ பாபு..” (வாங்கிக்கோ பாபு..) என்றார் நெருங்கி வந்து நின்றவாறு.
 
 
அதை மறுக்க முடியாமல் தயக்கத்தோடே கையில் மங்கல்யத்தை ஸ்ரீராம் வாங்கிக் கொள்ள, “குல தெய்வத்தைக் கும்பிட்டுட்டு மாங்கல்யத்தை வாங்கிக்கோ பாப்பா..” என்றார் வேலு.
 
 
அதில் ஷ்ராவனியின் கைகள் தானாகக் கடவுளை வணங்க.. தலையோ ஸ்ரீராமின் கையால் ஏற போகும் மாங்கல்யத்துகாக அவன் முன் குனிந்தது. நெருங்கிய உறவுகளின் ஆசியோடு குல தெய்வ சன்னிதானத்தில் வைத்து தன் சரிபாதியாக வாழ்வில் பாதியாக ஷ்ராவனியை ஏற்று கொண்டான் ஸ்ரீராம்.
 
 


   
ReplyQuote

You cannot copy content of this page