All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 4

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 19
Topic starter  

அத்தியாயம்: 4

 

"ஐ நோ அத்தான். உங்க மனசுல துரும்பு சைஸ்க்கு கூட நா இல்லன்னும் எனக்கு நல்லாவே தெரியும். ஆனா யாரோ மலையளவுக்கு பெருசா உங்க மனசுல இருக்காங்கன்னும் தெரியும். நீங்க பண்ணிட்டு இருக்குறது ஒன் சைட் லவ்வுன்னும்‌ தெரியும். 

 

அவங்கள நீங்க கரெக்ட் பண்ணவும், நா ரிபேக்கா மேம் கிட்ட வேல பாக்கவும் இது தா சரியான நேரம். கல்யாணத்தப் பத்தி பேசி யாரும் நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க. 

 

அப்படி ஒரு வர்ஷத்துல நீங்க அந்த பொண்ண கரெக்ட் பண்ண முடியலன்னாலும், கவலயேப் படாதிங்க. நமக்குள்ள கல்யாணம் நடக்காது. ப்ரேக் அப் ன்னு சொல்லி கண்ணீர் விட்டு கதறிடுறேன். 

 

என்னோட அண்ணே பொண்டாட்டி என்ன அதோட தம்பிக்கிட்ட தள்ளி விட ப்ளான் போட்டு நேத்து தா அம்மாக்கிட்ட பேசிட்டு இருந்தாங்க. படிப்பு வேற முடிஞ்சிடுச்சி அத்தான், இனி சொல்ல எங்கிட்ட காரணம் இல்ல. வெளியூருக்கு படிக்கவே அனுப்பாதவிங்க எப்படி வெளி மாநிலத்துக்கு போய் வேல பாக்க விடுவாங்க. சொல்லுங்க.

 

உங்க பேர சொன்னாத்தா என்ன மும்பைக்கு விடுவாங்க. ப்ளிஸ் அத்தான். அங்க உங்கள நா டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். நீங்க யாரோ! நா யாரோ.! ஆஃபிஸ்ஸு, அதுக்கு போற ரூட்டு, தங்க ஒரே ஒரு இடம்‌ இத மட்டும் எனக்கு ஏற்பாடு பண்ணிக் குடுத்திட்டு உங்க பாதைல நீங்க போகலாம். ப்ளிஸ் அத்தான். அண்ணே எம்பேச்ச கேக்க மாட்டேங்கிறான். அடி வாங்குற வயச நா தாண்டிட்டேன்." என கெஞ்ச, 

 

"நா மும்பைல தா வேல பாக்குறேன்னு உனக்கு யாரு சொன்னா?"

 

"இல்லயா. ஆனா..." என அவள் குழம்பிப் போய் பார்க்க,

 

"சரி ஒரு வர்ஷம் வேல பாக்குற ஓகே. அதுக்கு அடுத்து என்ன பண்ணி சமாளிப்ப." 

 

"ஐந்தாண்டு திட்டமெல்லாம் போட்டு வச்சிட்டு இறங்க நா ஒன்னும் ஒன்றிய அரசு கிடையாது அத்தான். இப்போதைக்கி ஓராண்டு திட்டம் தான். இத வெற்றிகரமா செயல் படுத்திட்டு அப்றம் வர்றத அப்றமா பாத்துக்கலாமே." என்றவளுக்கு அப்போது தான் அவனின் மறைமுக சம்மதம் உரைத்தது. 

 

வேகமாக அவனை நெருங்க, அவன் டிராபிக் போலிஸ் போல் கை நீட்டினான். நீட்டிய கரத்தை அடி குழாயாக மாற்றி பிடித்து குளுக்கியவள்,

 

"தேங்க்ஸ் அத்தான். என்னோட லட்சியத்துக்கான முதல் படிக்கு வழி காட்டுனதுக்கு. You are the best. " என்றவள் சந்தோஷத்தில் குதிக்க. 

 

"நா ஒன் சைடா லவ் பண்றேன்னு உனக்கு யாரு சொன்னா?" எனக் கேட்டான் புன்னகையுடன். அவளின் சந்தோஷம் அவனையும் தொற்றியிருக்க வேண்டும்.  

 

"நீங்க தா"

 

"நானா! நா எப்ப சொன்னேன்."

 

"சொல்லல. ஆனா தெரியுது. முகத்துல. " என்றவள் அவனை நெருங்கி வந்து விரலால் கண்களை சுட்டிக் காட்டி, 

 

"எவ்ளோ வொர்க் டென்ஷன் இருந்தாலும் உங்க கண்ல டல்னஸ்ஸ நா பாத்தது இல்ல. இப்ப கொஞ்ச நாளா அது தெரியுது. கருவளையம்லாம் வந்திருக்கு. க்ளீன் சேவ் பண்ணி வலுவலுன்னு இருக்குற கன்னத்துல புல்லு மொளைச்ச மாறி தாடி, வாட்ஸ்அப்ல ஒன் சைட் லவ் ஃபீல் பண்ணி ஸ்டேட்டஸ், அப்பப்ப கைய 'எல்லாம் அவன் செயல்'ங்கிற மாறி வானத்த நோக்கி காட்டுறீங்க. உதட்டுல சிரிப்பு முழுசா இல்ல. பாதில நிக்கிது. பசலை நோய் வந்த மாறி கழுத்துல எலும்பு தூக்கிட்டு இருக்கு. அப்றம். " என்றபோது அவன் போதும் என்பதுபோல் சமிக்ஞை செய்ய,

 

"நா இன்னும் சொல்ல வேண்டியது இருக்கே."

 

"சொன்ன வரைக்கும் போதும். போ." என விரட்டியவன் உதட்டில் கசந்த புன்னகை. 

 

"அத்தான். அக்கா யாரு?" 

 

"உனக்கு எதுக்கு அது?." 

 

"நீங்க யாருன்னு சொல்லலன்னாலும் நானே கண்டு பிடிப்பேன்‌‌. Don't worry. நா மும்பைக்கி வர்றது என்னோட அக்காவ உங்க கைல சேக்கத்தான். சிங்கிளா இருக்குற என்னோட அத்தான நா மிங்கிள் பண்ணி வைக்கிறேன்." எனக் கத்தி விட்டுச் சென்றாள் கோகோ. 

 

"அது உன்னால முடியாது கோகோ. ரொம்ப லேட்டாகிடுச்சி. ரொம்ப தூரம் போய்ட்டா. இனி அவா எனக்கு கிடைப்பான்னு எனக்கு நம்பிக்க இல்ல. எனி வே உன்னோட ஆசையாது நிறைவேறட்டும்." என்றவன் கூட்டமாக கத்திக் கொண்டிருந்த குடும்பத்திடம் சென்று கோகோவை மும்பை அழைத்துச் செல்வது குறித்து பேசினான். 

 

மின்னஞ்சல், அடுத்த மாதம் வந்து சேரச் சொல்லி வந்திருந்ததால் கோகோ கேட்டது போல் தங்க இடம், எங்கே வேலை என்பது உள்ளிட்டவை ஒரு பார்வை பார்த்து விட்டு சொல்வதாகவும், அதன் பின் 'நீ ரயில் ஏறி வா' என்று விட்டு இரு நாட்களில் தன்‌ பணிக்குத் திரும்பியிருந்தான்.

 

இருவரின் திருமணப் பேச்சிற்கும் அது கமா புள்ளியாக மாறி அடுத்த வார்த்தைகள் எழுத இடமளித்தது. அந்த வார்த்தைகள் இவர்களின் வாழ்க்கைத் துணையின் பெயராக இருக்குமா அல்லது புள்ளியாக மாறி இவர்களையே ஜோடி சேர்த்து வைக்குமா? பார்க்கலாம். 

 

 

JET Industry.... 

 

கொட்டை எழுத்தில் எழுதியிருந்த அது மகாராஷ்டிரா மாநிலத்தின் சிறிய கிராமம் என்று சொல்லும் அளவிற்கு பறந்து விரிந்திருந்தது. 

 

கால்நடையாக, இடையிலே ஓய்வெடுக்காது அதை சுற்றிப் பார்க்கும் போது அந்த நிறுவனத்தை முழுதாக சுற்றி வர மூன்று நாட்களுக்கு மேல் பிடிக்கும்.

 

இப்போது நாம் இருப்பது ஸ்டீல் பேக்டரியில். 

 

அதன் அலுவலக மாடியில் H என்ற எழுத்தை பெரிதாக எழுதி அதை சுற்றி வட்டம் போட்ட ஒரு ஹெலிப் பேர்ட் இருந்தது. வரைந்து வைத்திருந்த அந்த ஆங்கில எழுத்தில் அழகாய் வந்து அமர்ந்தது ஒரு ஹெலிகாப்டர். 

 

டபடபவென சத்தம் குடுத்த அதன் இறக்கைகள், மெல்ல மெல்ல செயலிழந்தது தன் சுற்றலை குறைத்துக் கொண்டிருக்க, அதன் கதவை திறந்து கொண்டு ஒரு இளைஞன் இறங்கி வந்தான்.

 

"குட் மார்னிங் ஸார்." என ஓரமாக நின்றிருந்த கூட்டம் அவனுக்கு வணக்கம் வைக்க, புன்னகையுடன் பதில் வணக்கம் வைத்தபடி தன் வேகமாக நடையால் அங்கிருந்த லிஃப்ட்டில் நுழைந்தான்.

 

அவன் ப்ரஜித்ரேயன்... 

 

அவனின் வரலாற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாம். இப்போது அந்த இரும்பு ஆலை அவனின் கவனிப்பின் கீழ் உள்ளது‌. 

 

நான்கு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் தரைத் தளத்தில் அவனை இறக்கி விட்டது மின் தூக்கி. 

 

கிட்டத்தட்ட அவனை ஓடிச் சென்று பிடிக்கும் நிலையில் இருந்தனர் அவனின் மூன்று பிஏக்கள். 

 

"ஸார்.. ஸார்... " என மொய்த்தபடி வந்தவர்கள் பேசியதை காதில் வாங்கியவன் அவர்கள் காட்டிய கோப்புகளில் கையெழுத்துப் போட்டான். மற்ற இருவரும் சென்று விட,

 

"ஸார் படிச்சிப் பாத்து சைன் போடுங்க." என்றபடி கோப்புகளை நீட்டினான் இளவேந்தன். அவனின் பீஏ. அவனிடம் தான் வேலை செய்கிறான். 

 

"அப்றம் நீ எதுக்கு இருக்கு. " என்றான் ப்ரஜித்.

 

"என்ன இருந்தாலும் நீங்க தா உடைமைப் பட்டவங்க. நீங்க கவனிக்கலன்னா... " என இழுக்க.

 

"லாஸ் வந்திடும். சரியா. வந்தா வந்திட்டு போட்டும். உனக்கு என்ன வந்தது. கமான். " என்றவன் இளாவின் கையில் இருந்த கோப்பில் கையெழுத்தை பதிக்க, அப்போது அபாய மணி அடித்தது. 

 

என்னானது என்று வேகமாக இவர்கள் ஓடிச் செல்லும் முன்னே ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அனுப்பப்பட்டான் ஒரு தொழிலாளி. ப்ரொடெக்ஷன் யூனிட்டில் விபத்து நடந்துள்ளது. இயந்திரத்திற்குள் ஒருவர் கை சிக்கிக் கொண்டதால் கரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் உண்டான கூச்சலும் குழப்பமும் அவ்விடத்தை சந்தைக்கடையாக மாற்றியது.

 

"என்ன நடக்குது இங்க?" என்ற கேள்வியை யூனிட் மேனேஜரிடம் ப்ரஜித் கேட்க, நடந்ததை விளக்கினார் அவர்.

 

அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூச்சலிட்டு, நிர்வாகத்திற்கு எதிராக கத்த.

 

"எல்லாரையும் வேலைய விட்டு எடுத்திடு." என்று உத்தரவிட்டு விட்டு சென்றான் அவன். 

 

அவனின் பின்னாலேயே சென்ற இளா, "ஸார் நமக்கு முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் நிறைய இருக்கு. இப்ப இவங்கள வேலைய விட்டு தூக்கிட்டா, டயத்துக்குள்ள நம்மால டெலிவரி எடுக்க முடியாது. மத்த யூனிட்ல இருக்குறவங்களும் பிரச்சன பண்ணுவாங்க. ஸ்டெக் வரும். "

 

"வரட்டும். அதுனால என்ன?" என்ற முதலாளியை உற்று பார்ப்பதை தவிர அவனுக்கு வழியில்லை. 

 

"கவலப்படாத, உனக்கு நல்ல வேலை கிடைக்கும்‌. நானே ரெக்கமண்ட் பண்றேன்." என்றவனை பார்த்தவாரே இளா நிற்க, 

 

" என்னாச்சி மிஸ்டர் இளவேந்தன்.?"

 

"நீங்க பண்றது எனக்கு சரியா படல ஸார். இந்த கம்பேனில ஆறு வர்ஷமா வேல பாக்குறேன். அந்த உரிமைல சொல்றேன். இது தப்பான முடிவு. அவங்கள கூப்பிட்டு வச்சி என்ன பிரச்சினன்னு கேக்காம வெளில துரத்தி விடுறது கம்பெனியோட எதிர்காலத்துக்கு நல்லது இல்ல." என்றான் இளா தைரியமாக. 

 

"விஸ்வாசம். ம்... சம்பளம் குடுக்குற முதலாளிக்கு விஸ்வாசமா இருக்குறது தா தொழிலாளியோட முதல் கடமை. குட். இப்ப நாந்தா உனக்கு முதலாளி. அப்ப உன்னோட விஸ்வாசம் எனக்கானதா இருந்திருக்கனும். ஏ இல்ல.?"

 

"ஸார்... "

 

"என்னோட பிஏ ஏன் எனக்கு மட்டும் பிஏ வா இல்லாம அவனோட முன்னாள் முதலாளிக்கு பிஏ வேல பாக்குறான்னு கேக்குறேன்."

 

"நா உங்களோட தம்பிக்கு பிஏ வேலை பாக்கல. சில வர்ஷமா என்னோட பாஸ் நீங்க தான்." என்றவனை ஏற இறங்க பார்த்தவன். 

 

"சரி போ... போய் அவனுங்கள கூப்பிட்டு பேச்சு வார்த்த நடத்திட்டு வா. " என்றுவிட்டு கிளம்பிச் செல்ல, இளாவிற்கு மூச்சு முட்டியாது. 

 

தம்பி வசம் இருந்த பல பொறுப்புகள் இப்போது அவனின் அண்ணனா ப்ரஜித்தின் கைக்கு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டதால் உண்டான ஆத்திரத்தில் ப்ரஜித் அந்த கம்பெனியை அலட்சியமாக கையாண்டு கொண்டி

ருக்கிறான். 

 

அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் நடக்கும் யுத்தம் அது.

 

அவர்கள் யாரென அடுத்த அத்தியாயம் பார்க்கலாம்.

 

மயக்கம் தொடரும்... 


   
ReplyQuote

You cannot copy content of this page