All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 48 (pre-final)

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 5 months ago
Posts: 145
Topic starter  

அத்தியாயம்: 48

 

ப்ரஜித், "நீ மனோஜித் அங்கில் பையன் இல்லன்னு எப்ப தெரியும்?" என்றவனுக்கு அதிர்ச்சி.

 

“இந்தியா கூட்டீட்டு வரும்போதே மனோப்பா ‘நீ ரேவன் வாரிசு கிடையாது’ன்னு சொல்லிதா அழைச்சிட்டு வந்தாரு."

 

"அந்த வயசுல எப்படி அத அக்சட் பண்ண முடிஞ்சது உன்னால? ஷாக்கா இல்ல?" 

 

"இல்ல. ஒருத்தரோட பிறப்பு அவன அநாதையாக்காது. அவனுக்குன்னு யாருமே இல்லாம வளர்றது தான் அநாதையாக்கும். இத ஆஜித் தாதா தா சொன்னாரு. ரேவன் குடும்பம் இருக்குற வர நீ அநாதை இல்லன்னும் சொன்னாரு. 

 

ஆனா உண்மன்னு ஒன்னு இருக்கு‌. அத மாத்த முடியாது. நா எவ்ளோ தூரம் போனாலும் அப்பாம்மா இல்லாத அநாதங்கிற பேர் எங்கூட வந்திட்டே தா இருக்கும். அதுனால அத அக்சப்ட் பண்ணிக்கிட்டேன்." என்றவனை வந்தணைத்தான் ப்ரஜித். 

 

"தாதா சொன்னது சரி தான். நாங்க இருக்குற வர நீ அநாத கிடையாது." என்றவன் அந்த உண்மையை அப்போது வெளியே கொண்டுவர விரும்பாது, பதவிக்கு ஆசைப்பட்டுகிறாய் என்று குற்றம் சாட்டி சண்டை போட்டு அவர்களின் திட்டத்தைத் தொடங்கி வைத்தான். 

 

எல்லாம் அவர்கள் திட்டப்படி தான் நடந்தது. 

 

ப்ரஜித், "ப்ளான் கொஞ்சம் முன்னப் பின்ன ஆனாலும். நினைச்சத சாதிச்சாச்சி." எனக் கரம் உயர்த்த, அதில் தட்டி தங்களின் வெற்றியைக் காட்டினான் சஜித். 

 

அதைப் பார்த்த சித்தாரா உணர்ச்சி வெள்ளத்தில் இருந்தார். தன் வளர்ப்பு தவறாகிவிட்டதே என்ற வேதனையில் இருந்தவருக்கு, இருவரும் தோளில் தட்டி பேசிச் சிரித்தது நிம்மதியை தந்தது. 

 

இந்தரின் கையில் சஜித் தந்தது, போதை மருந்து தயாரித்த அந்த நிறுவனம் அரசால் மூடப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டதற்கான செய்தி. 

 

அதை ஆஜித்ரேவன் புகைப்படத்திற்கு முன் வைக்க வேண்டுமென்று சித்தாரவை அழைத்துக் கொண்டு இந்தர் செல்ல, கோகோ ப்ரஜித்தை முறைப்படி நின்றாள். 

 

"ஏன் குலாப் முறைக்கிற?"

 

"நீங்கச் சத்யாவ மாட்டிவிடனும்னு ப்ளான்ல இல்லாதது நிறைய பண்ணிருக்கிங்க."  

 

"அது என்ன சத்யா? எப்படா பேர மாத்தின.?" எனச் சஜித்தை பார்க்க, அவன் குறுநகையுடன் 'விளக்கத்தை அவளிடமே கேள்.' என்பது போல் பார்த்தான். 

 

"முதல்ல நீங்க ஏ ப்ளான்ல இல்லாதத பண்ணிங்க?"

 

"நானா!" ப்ரஜித்.

 

"ஹாங்... துகிராக்கு மேரேஜ் ஏற்பாடு பண்றது தான் ப்ளான். ஆனா நீங்கச் சத்யா கூட ஏற்பாடு பண்ணி வச்சிருக்கிங்க."

 

"உ அத்தான் கூடப் பண்ணிருக்கனுமோ.?" என்ற சஜித்தை முறைத்தாள் கோகோ. 

 

"அதான! லவ் பண்ற பொண்ணுக்கு சம்பளம் வாங்காத பாடி கார்ட்டா வேல பாக்குறவனுக்கு எப்படி கட்டி வைக்கிறது?" எனப் ப்ரஜித்தும் இளவேந்தனின் காலை வார, அத்தனை நேரம் துகியின் கரத்தைப் பற்றியிருந்தவன் அதை விடுத்து விலகி நின்று,

 

'இவனுங்களுக்கு எப்படி தெரியும் இது.?' என்பது போன்ற பார்வையை இருவர் மீதும் வைத்தான். 

 

சஜித், "எங்க ஆஃபிஸ்க்கு க்ளீனிங் வேல பாக்க ஆள் இருக்கு வேந்தன்." எனத் துகிராவின் நினைவாக அவளின் உடையிலிருந்து விழும் சிறிய கல்லைக் கூடப் பத்திரப்படுத்தியதை குறிப்பிட, 

 

ப்ரஜித், "துகிக்கு மட்டும் அந்த வேலைய நீ ஸ்பெஷ்லா பண்ணா! தெரியாமப் போய்டுமா." என்க, இளா அசடு வழிந்தான். 

 

ரிபேக்கா, "இவன் துகிட்டா வழியுறது ஆஃபீஸ்க்கே தெரியும்‌. ஆனா துகிக்கு தெரியாது." 

 

சஜித், "Pathetic...(பரிதாபம்)"

 

ப்ரஜித், "இது சரிப்பட்டு வராதுன்னு தா உங்கூட கோர்த்து விட்டேன். நல்லாத்தான்டா ஒர்க்கவுட் ஆச்சி. ரெண்டு பேரும் முறைக்கிறதும். துகி உசுப்பேத்த இவன் பண்ணதும் ஆபிஸே கலகலன்னு இருந்தது." 

 

"அது மட்டும் தா காரணமா?" என்ற சஜித்தின் பக்கம் திரும்பியவன், 

 

"உன்ன பழி வாங்கவும் தான்." 

 

கோகோ, "ஏ?"

 

"என்னோட மேரேஜ்ஜ எப்படி நடத்தி வச்சான்னு தெரியுமா?. ப்ளைட்ல இருந்து இறங்கினதும் தூக்கிட்டு வந்து உன்னோட ராஜமாதாக்கு என்ன பலி குடுத்தான். அவன் 100 செஞ்சான், நா திருப்பி 10 கூடச் செய்யமாட்டேனா?"  

 

ரிபேக்கா, "அநாத அது இதுன்னு சொல்லி மொத்தமாவே செஞ்சிட்டியே." எனக் கோபமாக தன் நண்பனுக்காகப் பேசினாள்.

 

"கரெக்ட்டு... என்னதா இருந்தாலும் நீங்கச் சத்யாவ அப்படி சொல்லிருக்க கூடாது. அதுவும் அத்தன பேர் முன்னாடி என்னோட சத்யாவ..." எனக் கண்ணில் நீருடன் சஜித்தின் மார்பில் சாய்ந்து கொள்ள, அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான் சத்யா.

 

"குலாப், அது உனக்காகத் தான் பண்ணேன்." என்க, ரிபேக்காவும் கோகோவும் அவனை எரித்தனர். 

 

"ஹோட்டல் வாசல்ல உன்ன கதற விட்டான்ல, அப்றம் உன்ன கண்டுக்காம பின்னாடி அழைய வேற வச்சான்ல. அதுக்கு தான் இது. என்னால உன்னோட அழுகைய தாங்கிக்க முடியல குலாப்." என்றவன் சொன்னது நிஜம். 

 

சஜித்தின் காருக்குப் பின்னால் கத்திக்க கொண்டே ஓடி வந்தவளுக்காகவும்‍ ஓட விட்டவனின் திமிரை அடக்கவும் செய்தான். 

 

அநாதை என்று அவன் சொல்லவில்லையென்றாலும் என்றாவது ஒருநாள் இது வெளியே வந்து தான் தீருமென்பதால் சஜித்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. வழமை போல் இரும்பாகவே இருந்தது இதயம்.

 

"நீங்க எதுக்கு என்னோட கண்ணீரப் பாத்து வேதனப்படனும்." எனக் கோபமாக மொழிய ப்ரஜித் புன்னகைத்தான்.

 

சஜித், "அவன் படாம வேற யாரு படுவா.?" என்றதும் கோகோ மட்டுமல்லாது அனைவருமே அவனின் முகம் பார்த்தனர். 

 

"உன்ன மும்பை வரவச்சதே அவன் தான். நீயும் நானும் பக்கத்து பக்கத்து ப்ளாட், உன்னோட ஜாப், ஏ உன்ன நடு ரோட்டுல இறக்கி விட்டுட்டு வந்த டாக்ஸி டிரைவர் கூட இவனோட ஆளு தா." என்க, கோகோவின் விழிகள் அதிர்ச்சியைக் காட்டின. 

 

ரிபேக்கா, "அப்ப நா சந்தேகப்பட்டது சரி தான. இந்த டாலர் இவ குடுத்தது தான." எனக் கோபமாகி விரல் நீட்டிக் கேட்க, அதைப் பற்றி இதழ் பதித்தவன், அவளைத் தன்மேல் சாய்த்துக் கொண்டான்.

 

'எது இவனா! ஆனா எதுக்கு?' எனக் கேள்விகளை எழுப்பிய இளவேந்தனிடம்,

 

"நா காஞ்சிபுரம் போனது இல்ல வேந்தன். ஆனா தமிழ்நாட்டுக்கு வந்திருக்கேன். நாங்க மீட் பண்ணது... சரியா எந்த இடம்னு தெரியல." என்றுவிட்டு,

 

"இந்த டாலருக்கான அர்த்தம்." எனத் தன் கழுத்தில் இருந்த டாலரை கோகோவிடம் கழற்றித்தர, அதை அவள் ப்ரேஸ்லெட்டுடன் இணைத்தபோது 'Forever my brother' என்று எழுதியிருந்தது. 

 

அதே போன்றதொரு டாலர் இளவேந்தனிடமும் உண்டு. உங்களின் சகோதரத்துவத்தை நாடுகிறேன் என்ற அர்த்தத்தில் பரிசளிக்கப்பட்டது. 

 

கோகோ, கல்விச் ‌சுற்றுல்லாவிற்கெனச் சென்றிருந்த சமயம், ஒரு கோவிலின் வாசலில் பேருந்து நிறுத்தப்பட்டது. தரிசனம் செய்து முடிக்கச் சில நிமிடங்களை ஒதுக்கி, அனைவரையும் இறக்கி விட்டனர் பேராசிரியர்கள்.  

 

அனைவரும் கோவிலுக்குச் செல்ல, நம் கோகோ மட்டும் கடைகள் நிறைந்திருக்கும் வீதியில் நடக்கத் தொடங்கினாள். 

 

ரக்ஷா பந்தனை முன்னிட்டு இளவேந்தனுக்கு ராக்கி கட்டி விட, ஒரு ப்ரேஸ்லெட்டை பேரம் பேசி வாங்க, அப்போது ப்ரஜித் சாலையைக் கவனிக்காது கடக்க முயன்றுகொண்டிருந்தது தெரிந்தது. 

 

லாரியின் சக்கரத்திற்கு அடியில் சிக்கியிருப்பான், கோகோ அவனின் கரம்பற்றி இழுக்காது விட்டிருந்தால். 

 

"சார்... சார்... என்ன சார் இது?. ரோடு க்ராஸ் பண்ணும்போது கவனமா இருக்க வேண்டாமா!." என்றவள் அவனின் முகத்தில் என்ன கண்டாளோ,

 

"வாங்க..." என்று அருகில் இருந்த கடைக்கு அழைத்துச் சென்று ப்ளாக் காபியை ஆர்டர் செய்தாள். 

 

"குழப்பமா இருக்கும்போது இதக் குடிச்சா அது காணாமப் போய்டும்." என்க, அவனைப் போலவே சிந்தித்தவளின் பேச்சு கவர்ந்தது. 

 

"தேங்க்ஸ்... உம் பேரென்னா.?"

 

"பேர் சொன்னாத்தா காஃபி குடிப்பிங்களா?" எனக் கேள்வி கேக்க, சிரித்தான் அவன். 

 

"ஓகே... பேர் வேண்டாம். நா குழப்பமா இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?." 

 

"கவனமில்லாம ரோடு க்ராஸ் பண்றவங்க குடிகாரனா இருக்கும், இல்ல சின்னப் பசங்களா இருக்கும், இல்ல ஃபோன் நோட்டிட்டு போற பேக்குகளா இருக்கும். நீங்க அந்தக் கேட்டகிரில இல்ல. அப்படித்தான் கண்டு பிடிச்சேன்." என்க, அவளின் பேச்சில் லயித்தபடி காபியை எடுத்துப் பருகினான் ப்ரஜித். 

 

சஜித், ஜனார்த்தனனை இப்பொழுது ஒன்றும் செய்ய வேண்டாம் என்றதால் உண்டான ஆத்திரத்தில் காரில் எங்குச் செல்கிறோம் என்று தெரியாது சுற்றித் திரிந்தவனின் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது கோகோ. 

 

“அப்படி என்ன சார் குழப்பம் உங்களுக்கு?”  

 

“ஒரு டெத். மனசுக்கு நெருக்கமான ஒருத்தர் இறந்திட்டாங்க. அதுக்கு காரணம் யாருன்னு தெரியும். ஆனா இப்ப எதுவும் பண்ண வேண்டாம், நம்மல நம்பியிருக்குறவங்களுக்கு நாம தேவன்னு சொல்றான் ஒரு யூஸ்லஸ்.”

 

“சரியாத்தான சொல்லிருக்காரு. அவர எதுக்கு யூஸ்லஸ்னு திட்டுறீங்க." என்றபோது ப்ரஜித்திற்கு சுவாரசியம் கூடியது.

 

"இப்ப பழி வாங்குறது எப்பனாலும் வாங்கிக்கலாம். ஆனா நம்மல நம்பி இருக்குறவங்கள கை விட்டுறது தப்பில்லயா.? இது மாறிச் சூச்சுவேசன் ஒரு கம்பெனிக்கும் வந்திருக்கு. அவங்க என்ன பண்ணாங்கன்னா...” என்றவளின் பேச்சுகளில் கலங்கிய உள்ளம் தெளிவடைவதைப் போல் ஓர் உணர்வு. 

 

"டயமாச்சி சார். என்னோட பஸ் கிளம்பிடும். பாய் சார்." எனக் கதையை முடிக்கும் முன்னரே எழுந்து ஓட, மேஜையில் விட்டு விட்டுச் சென்ற கவரை எடுத்துப் பார்த்தான் அவன். 

 

"அது என்னோட அத்தானுக்கு." என்றபடி அவனின் முன் வந்து கவருக்காகக் கரம் நீட்டினாள். 

 

அதை அவளுக்கு உடனே தராது காந்தத்தால் செய்யப்பட்ட அதன் டாலரின் ஒரு பகுதியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு, 

 

"ஒருவேளை நாம மறுபடியும் மீட் பண்ற வாய்ப்பு கிடைச்சா! இது என்ன உனக்கு ஞாபகப்படுத்தும். மீதி கதைய சொல்லனும்ல." என்றவன் எடுக்கும் கொள்ள, அவனிடம் சண்டை கூடப் போட நேரமில்லாது ஓடினாள் கல்லூரி பேருந்திற்குள். 

 

பாதி டாலரை இளவேந்தனுக்கு முடியாததால், அதே கடைக்குள் ஓடிச் சென்று அதே டிசைனில் மீண்டும் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள். 

 

அப்பொழுதே சஜித்திற்கு ஆதரவாக அவள் பேசியது அவனுக்குப் பிடித்திருந்தது.

 

அவளின் பயோடேட்டாவை அறிந்து, அவளைச் சஜித்திற்காக வரவழைத்தது அவன் தான். 

 

ப்ரஜித், "நாங்க சின்ன வயசு போட்டுக்கிட்ட ஒப்பந்தம் அது."

 

சஜித், "எனக்கான லைஃப் பார்ட்னர நீ செலக்ட் பண்ணு. உனக்கானத நா பண்றேன்னு."

 

"நா இவனுக்கு வைஃப்பா செலக்ட் பண்ணது உன்ன." என்று கோகோவைக் கைக் காட்டினான் ப்ரஜித். 

 

கோகோ வெட்கத்துடன் சஜித்தின் மார்பில் தலை சாய்க்க, அவன் கரத்தை இடையில் கொடுத்துத் தன்னோட சேர்த்துக் கொண்டான்.

 

"ஜனார்த்தனன் எங்க?" என்றாள் துகிரா சின்னக் குரலில். 

 

'ஸாரி, எங்களுக்குத் தெரியாது' என்பதுபோல் இருவரும் தோள்களைக் குளுக்கிக் கொண்டு தங்களின் ஜோடியுடன் நடக்க, இளவேந்தன் அவளின் தோளில் ஆறுதலாகக் கைப்போட்டான். 

 

“அவன் என்னோட அண்ணனெங்கிறதுக்காகக் கேக்கல வேந்தன். ஜஸ்ட் தெரிஞ்சுக்கலாம்னு தா கேட்டேன்.” என்றவளுக்கு தன் குடும்பத்தாரின் மீது இரக்கம் வரவில்லை. 

 

காணாது போன மகனைப் பற்றிக் கவலைபடாது, மகளைக் காரணமாக வைத்து ரேவன் குடும்பத்திற்குள் நுழைய முயற்சிக்கும் சுயநலத்தாயை ஒதுக்கிவிட்டாள். 

 

அவளின் வார்த்தைகள் செவியில் விழ, சென்று கொண்டிருந்தவர்கள் திரும்பி வந்தனர்.

 

சஜித், “அவனுக்கு நீச்சல் தெரியுமா?” சந்தேகமாகக் கேட்க, தெரியும் என்பதுபோல் தலையசைத்தாள் துகி. 

 

ப்ரஜித், “சீட் பெட்ல் போட்டுக் கார் சீட்ல உக்காந்திட்டே அரபிக் கடல்ல நீச்சலடிக்கிற அளவுக்குத் திறமையிருக்கா அவன்ட?” என்க, புரிந்துபோனது இருவரும் சேர்ந்து என்ன செய்துள்ளனர் என்று. 

 

ப்ரஜித், ‘எது ரெண்டு பேருமா! நா மட்டும் தான். ஜனார்த்தனன் என்னோட பரிசு. அவன நாந்தா தூக்கிப் போட்டு விளையாடினேன்.’  

 

அது தான் அவர்களின் ஒப்பந்தம். ஜனார்த்தனனை தன் விருப்பப்படி கொல்ல சஜித்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்தான். 

 

பின்வந்த நாட்களில் கார் விபத்தில் ஜனார்த்தனன் இறந்து விட்டதாகச் செய்தி கிடைத்தது. மகேந்தர், அனுஜித்தின் நிலை சிறை வாழ்க்கையால் பரிதாபமாக மாறியிருந்தது. ஸ்மித்தா அடைக்கிவிட்டார்.   

 

இல்லை அனைவரையும் தன் செயல்களால் அடக்கிவிட்டான், ஆளுமை நிறைந்த அந்த இரும்பு மனிதன்.

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 49 (Final)

 

https://kavichandranovels.com/community/postid/1454/


   
ReplyQuote

You cannot copy content of this page