All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..?, தேடல் - 5.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

 

 

தேடல் - 5

 

தன் இஷ்டம் போல் குளித்து முடித்து ஜீன்ஸ் மற்றும் ஷர்ட் அணிந்து கொண்டு கண்ணாடி முன் வந்து நின்று தலையை டிரையர் கொண்டு உலர்த்திவிட்டு சிறிய ஒப்பனையில் தன்னை அழகுப்படுத்தி சரியாக இருக்கிறதா என்று கண்ணாடியை கண்டவளோ “இதழி அழகுடி நீ.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு..” என்று தனக்கு தானே பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டு குளிர் கண்ணாடியை சட்டையில் தொங்கவிட்டு வண்டி சாவியை கையில் சுழட்டியவாறு அறையை விட்டு வெளியே வர,

 

கீழ அவளின் தந்தை சதாசிவமோ மனைவிடம் “பாப்பா ரெண்டு பேரும்.. எங்கடி” என்று தான் கேட்டதற்கு முறைக்கும் மனைவியை கண்டு “இப்போ எதுக்குடி முறைக்குற”

 

“பின்ன ஒருத்தி குளிச்சே.. உங்க சொத்த கரைக்குறா இன்னொருத்தி மேக் அப் போட்டே கரைக்குறா.. ரெண்டு பொண்ணுங்கள பெத்து வச்சிருக்கோம்ன்னு கொஞ்சமாவது தோணுதா.. ரெண்டு பேரையும் ஒருநாள் மேய்ச்சி பாருங்க அப்போ தான் என் கஷ்டம் உங்களுக்கு புரியும்”

 

“அதான் ஒருத்திய மாமியார் வீட்டுக்கு பேக் அப் பண்ண போறோமே.. அதுவரை அப்பா வீட்டுல தான இப்படி இருக்க முடியும்.. இருந்துட்டு போகட்டும் விடு.. நான் சொத்து சேக்குறதே என்னோட பொண்ணுங்க ராணி மாதிரி இருக்கணும் தான்.. அவங்களுக்கு இல்லாத உரிமையா” என்று கூறி கொண்டிருக்க, 

 

அப்போது படியிறங்கி வந்தவளோ தந்தை பேசுவதை கேட்டு, அவரருகில் அமர்ந்து “அப்பான்னா அப்பா தான்” என்று கூறி கன்னம் கிள்ளி கட்டிக் கொண்டு, முறைக்கும் அன்னையை கண்டவளோ “சரி சரி முறைக்காத.. நான் போனது அப்புறம் அப்பாவ கட்டிபிடிச்சுக்க”

 

“என்னோட புருஷன கட்டிப்பிடிக்க உன் பெர்மிஷன் தேவை இல்லடி.. நீ போனதுக்கு அப்புறம் என்ன இப்போவே பிடிப்பேன்” என்று கூறி கணவன் அருகில் அமர்ந்து தோல் சாய்ந்து கொள்ள,

 

“எம்மா.. உனக்கு கொஞ்சம் கூட விவேஸ்தையே இல்லயா.. பக்கத்துல வயசு பிள்ளைய வச்சிட்டு நட்ட நடு ஹால்ல ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க” என்று தான் கூறியதை கேட்டு சுற்று முற்றி பார்வையை சுழலவிட்டதை கண்டு “என்னம்மா தேடுற”

 

“அது ஒன்னும் இல்லடி.. இங்க வயசு பிள்ள யாரோ இருக்காங்கன்னு சொன்னியே.. அதான் யாருன்னு தேடுறேன்” என்று கூற,

 

அதை கேட்டு முச்சிரைக்க முறைக்கும் மகளை கண்டு புன்னகைத்தவாறே “அவள விடுமா.. இன்னைக்கு காலேஜ் லீவ் தான மார்னிங்கே எங்க கிளம்பிட்ட”

 

*அன்னைக்கே சொன்னேன்ல அக்காவோட நிச்சயதார்த்தம் போட்டோஸ் எதுவுமே நல்லா வரல.. நான் கல்யாணத்துக்கு வேற போட்டோகிராபர் பாத்து சொல்லுறேன் சொன்னேன்ல.. அவர பாக்க தான் போறேன்”

 

“சரி.. கன்பார்ம் பண்ணிட்டு சொல்லு.. அட்வான்ஸ் கொடுக்கலாம்”

 

“அவரு மதி ப்ரெண்ட் தான்பா.. அவர் எடுத்த போட்டோஸ் எல்லாம் மதி.. எனக்கு காட்டினாங்க சூப்பரா இருந்துச்சு சோ, அவரையே கன்பார்ம் பண்ணிட்டேன் ஜஸ்ட் அவர பாக்க தான் போறேன்” என்று கூற,

 

அவரோ புருவம் சுருக்கி “மதி?” என்று வினவ,

 

“மதிய மறந்துடீங்களாப்பா.. அன்னைக்கு பூமி கூட வீட்டுக்கு கூட்டிட்டு வந்து ப்ரெண்ட்ன்னு இன்றோடூஸ் பண்ணினான்ல.. அந்த மதியோட ப்ரெண்ட் தான்.. நான் செலக்ட் பண்ணின போட்டோகிராபர்”

 

“அட ஆமா.. மறந்தே போயிட்டேன்.. சரி அப்படியே.. அந்த பொண்ண கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணிடு”

 

 

“அதெல்லாம் இன்விட்டேஷன் கொடுத்துட்டேன்பா கண்டிப்பா வந்துருவாங்க.. சரி டைம் ஆயிடுச்சு கிளம்புறேன்.. நீங்க எனக்கு கொஞ்சம் அமௌன்ட் டிரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க அப்படியே அட்வான்ஸ் கொடுத்துடுவேன்” என்று கூறிய நொடி பணத்தை அனுப்பிவிட்ட தந்தையின் கன்னத்தில் இதழ் பதித்து “பாய்பா.. பாய்மா”

 

“ஏய் சாப்பிட்டு போடி”

 

“ரெஸ்டாரன்ட் தான் போறேன்.. அங்கயே சாப்பிட்டுக்குறேன்மா” என்று கூறி அங்கிருந்து விடை பெற்று சென்றாள்.

 

****************************

 

நண்பன் குளித்து முடித்து வருவதற்குள் அவனுக்கு பிடித்த உணவு அனைத்தையும் சமைத்து முடித்து சாப்பாடு மேஜையில் எடுத்து வைத்து அவனுக்காக காத்து கொண்டிருந்தாள்.

 

குளித்து தயாராகி சாப்பிட அமர்ந்தவனோ “வாவ்.. வாசனையே வேற லெவல்ல இருக்கே.. ஏய் டூப் லைட்டு உன்ன கட்டிக்க போறவன் ரொம்ப கொடுத்து வச்சவன்டி” என்று கூறிய, நண்பணின் மேல் கடுப்பு எழுந்தாலும் காரியமாக வேண்டுமென்று சிரித்தவாறே, அவனுக்கு உணவு பரிமாறினாள்.

 

தோழி பரிமாறிய உணவை ரசித்து சாப்பிட்டவனோ “சரிடி.. இப்போவாது சொல்லு.. அந்த பொண்ணு யாரு என்ன விஷயமா பாக்க போறோம்” என்று கேட்டதுமே, அவன் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து நண்பனின் மறுகையை பற்றி பவியமாக “டேய் ஹர்ஷா.. நான் இப்போ ஒரு புராஜக்ட் எடுத்து இருக்கேன்ல அது மட்டும் சக்சஸ்ஃபுல்லா முடிச்சா.. எனக்கு வொர்க் பெர்மனெண்ட் ஆயிடும் அதோட புரொமோஷன் கிடைக்கும்.. அதுக்கு நீ தான்டா எனக்கு ஹெல்ப் பண்ணனும்”

 

“அடியே டியூப் லைட்டு புரியுற மாதிரி சொல்லு.. உனக்கு புரொமோஷன் கிடைக்குறதுக்கும்.. இப்போ பாக்க போற பொண்ணுக்கும் என்னடி சம்மந்தம்”

 

“ஏன்னா எனக்கு புராஜக்ட்டே.. அவ அப்பா பத்தின இன்பர்மேஷன் கலெக்ட் பண்றது தான்.. ஹீ ஸ் பொழிடிசியன் அவரோட நெகடிவ் பேஜ் பத்தி தான் கலெக்ட் பண்றேன்”

 

“எல்லாம் ஓகே.. இதுல நான் என்ன உனக்கு உதவி பண்ணனும்”

 

“அது.. அது.. அது வந்து”

 

“அட ச்சீ.. என்ன இழவுன்னு சொல்லு”

 

“அவரோட முத்த பொண்ணுக்கு மேரேஜ் பிக்ஸ் பண்ணி இருக்காங்க.. ரெண்டாவது பொண்ணு ப்ரெண்ட் மூலமா பழக்கம்.. அவ தான் என் அக்கா நிச்சயதார்த்தம் போட்டோ நல்லாவே வரலன்னு புலம்பிட்டு இருந்தாளா.. நான் தான் உன்ன ரெகமெண்ட் பண்ணி நீ எடுத்த போட்டோஸ் எல்லாம் காமிச்சேன்.. நீ எடுத்த ஸ்டில்ஸ் அண்ட் அதவச்சி நீ பண்ணின எடிட்டிங் எல்லாமே புடிச்சிருக்குன்னு சொல்லிட்டா.. அதபத்தி பேச தான் போறோம்” என்று தான் கூறியதை கேட்ட நண்பனின் கோபப்பார்வை கண்டவளோ “நீ என் பெஸ்ட் பிரண்ட் தான ஹர்ஷா.. அவன் அவன் ப்ரெண்ட்காகா உயிர விடுறானுங்க.. நான் என்ன உயிரயா கேட்டேன்.. இந்த சின்ன உதவி கூட எனக்காக பண்ண மாட்டியா..”

 

 

“அடியே.. நான் எவ்வளவு பெரிய மாடலிங் போட்டோகிராபர்.. என்ன போய் மேரேஜ்கு போட்டோகிரபரா போக சொல்லுற.. என்னோட ரேஞ்ச் என்ன தெரியுமா.. இப்போ எனக்கு கீழ அசிஸ்டன்ட் வச்சி வேலை வாங்குற அளவு பெரிய ஆளு ஆயிட்டேன்..”

 

 

“டேய்.. நீ பெரிய பொசிஷன்ல வருறதுக்கு நானும் தான்டா ஹெல்ப் பண்ணிருக்கேன்.. பழச நினைச்சி எனக்காக பாத்து பண்ணுடா”

 

“சரி சரி அழாத பாவம் தான் இருக்கு.. முதல அந்த பொண்ணுகிட்ட பேசுவோம் அப்புறம் யோசிச்சு சொல்லுறேன்”

 

‘ஒரு புரொமோஷன்காக இவன்கிட்டலாம் கெஞ்ச வேண்டியதா இருக்கு.. காரியம் முடியட்டும் சேத்து வச்சி கும்முறேன்’ என்று நண்பனை மனதில் அர்ச்சித்துவிட்டு வெளியே மொத்த பற்களும் தெரிய சிரித்தவாறே “தேங்க்ஸ்டா ஹர்ஷா” என்று கூறி கொண்டிருக்கும் போது திறன்பேசியில் வந்த குறுஞ்செய்தி கண்டு பதில் அளித்துவிட்டு “சரிடா.. அந்த பொண்ணு வந்துட்டா போலடா.. வா சீக்கிரம் போகலாம்” என்று கூறி சாப்பிட்டு கொண்டிருக்கும் நண்பனை படாதபாடுபட்டு இழுத்து கொண்டு அவனின் வண்டியிலே ரெஸ்டாரன்ட் வந்து சேர்ந்தாள்.

 

உள்ளே அழைத்து செல்லும் முன்னே “டேய்.. பழைய பகை எதாவது நினைச்சி பலி வாங்குறன்னு என் வாழ்க்கைய முடிச்சிடாதடா”

 

அதை கேட்டு சிரித்தவனோ “ஏய் லூசு.. ஓவர் ஆக்டிங் பண்ணாம வா போகலாம்” என்று கூற, நண்பனை அழைத்து கொண்டு அவள் முன் வந்தவளோ “ஹாய் இதழிகா.. ரொம்ப நேரம் வெயிட் பன்றியோ”

 

“அப்படிலாம் இல்ல வந்து பத்து நிமிஷம் தான் இருக்கும்.. நீங்க உக்காருங்க”

 

“ஹான்.. இதான் என் ப்ரெண்ட் அண்ட் போட்டோகிரபர் ஹர்ஷவர்தன்” என்று கூறி தன் நண்பனை அறிமுகம் செய்ய,

 

இதழிகாவோ “ஹலோ வரதன்” என்று கரம் நீட்ட,

 

அவன் செவியில் விழுந்தால் தானே, அவன் தான் வந்ததுமே அவள் அழகில் விழுந்ததில், போட்டோகிராபர் என்பதால் புகைப்படம் எடுக்க தொடங்கிவிட்டான் கேமராவினால் அல்ல அவனின் விழிகளால் பெண்ணவளை புகைப்படம் எடுத்தான்.

 

நண்பனின் நிலையை கண்டு “ஆத்தி கண்ணலுலயே ஃபோட்டோ எடுக்கிறான்.. மொத்தமா பையன் பிளாட்.. அப்போ எனக்கு புரொமோஷன் கன்பார்ம்” என்று நினைத்துவிட்டு அவனின் கையை இடிக்க,

 

அதில் சுயநினைவு பெற்றவனோ, அவள் கரம் நீட்டியதை கண்டு “சாரி.. ஏதோ தின்கிங்ல இருந்தேன் கவனிக்கல..” என்று கூறி கைகுலுக்க,

 

அதை கேட்டு புன்னகைத்தவளோ “இட்ஸ் ஓகே.. நோ பிராப்ளம்.. மதி எல்லாம் சொல்லிருப்பாங்கன்னு நினைக்கேன்.. போட்டோஸ் எல்லாம் பக்காவா இருக்கணும்.. எங்கேஜ்மெண்ட் பிக் எடிட்டிங் எதுவுமே நல்லா வரல.. மதிகிட்ட சொன்னேன் அவங்க தான் உங்கள பத்தி சொல்லி நீங்க எடுத்த ஸ்டில்ஸ் எல்லாம் காட்டினாங்க செமயா இருந்துச்சு.. அப்புறம் உங்க ஜி பே நம்பர் கொடுத்துதீங்கன்னா அட்வான்ஸ் அமௌண்ட் சென்ட் பண்ணிடுவேன்.. மீதி பணம் போட்டோஸ் கொடுக்கும் போது வாங்கிக்கோங்க”

 

“யூ டோண்ட் வொர்ரி சூப்பரா பண்ணிடலாம்” என்று கூறி, அவனின் எண்ணை கொடுக்க, அவனுக்கு பணத்தை அனுப்பிவிட்டவளோ “ஓகே.. என்ன சாப்பிடுறீங்க” என்று கேட்க,

 

மதியோ “இல்ல இதழிகா.. நீ சாப்பிடு நாங்க கிளம்புறோம்” என்று கூற, 

 

இப்போது தான், அவள் பெயரை தோழி கூறியதை வைத்து அறிந்தவனோ ‘இதழிகா’ என்று கூறி பார்த்து ‘இதழ்’ என்று சுருக்கி கூறி பார்த்தவனின் பார்வையோ பெண்ணவளின் சிவந்த இதழில் பதிந்தில், அதை ருசிக்க ஆசை கொண்ட மனதிற்கு கடிவாளமிட்டு தலையை கோதி தன்னை சமன்செய்தவனின் காதில் இருவரும் மாறி மாறி பேசிய வார்த்தைகள் விழ, 

 

அதைக் கேட்டு தோழியிடம் “ஏய்.. அதான் இவ்வளவு தூரம் சொல்லுறாள.. ச்” என்று நாக்கை கடித்தவனோ “சாரி”

 

“இட்ஸ் ஓகே வரதன்.. உங்களுக்கு எப்படி கம்பட்டபிள்லா இருக்கோ அப்படியே கூப்பிடலாம்”

 

“தங் யூ” என்று கூறி மதியிடம் “அவ தான் சொல்லுறாள நம்ம தான் பிரேக்பாஸ்ட் இன்னும் சாப்பிடவே இல்லையே.. எனக்கும் செம பசியா இருக்கு.. சாப்பிட்டே போகலாம்..” என்று கூறி இதழிகாவிடம் “சேந்தே சாப்பிடலாம்.. நீ ஆர்டர் பண்ணு” என்று கூறியதை கேட்ட மதியிடம் “அட தீனி மூட்ட..” என்று நினைத்து நண்பனை ஒரு மாதிரி பார்க்க, அவனோ பக்கத்தில் அப்படி ஒருத்தி இருப்பதை மறந்து இதழிகாவை வச்ச கண் வாங்காமல் பார்த்தவாறே சாப்பிட்டான்.

 

சாப்பிட்டு முடித்து இருவரிடமிருந்து விடை பெற்று இதழிகா சென்றதும், தோழியின் மார்க்கமான பார்வை கண்டு அசடு வழிய,

 

அவளோ “டேய்.. மனுஷனாடா நீ.. நான் செஞ்ச எல்லா ஐட்டத்தையும் மிச்சம் வைக்காம முழுங்கிட்டு இப்படி சாப்பிடவே இல்லன்னு பொய் சொல்லுறியே.. இது உனக்கே அபத்தமா தெரியல”

 

“காதல் வந்தா பசியும் தானா வந்துரும்டி”

 

“எதே காதலா.. இப்போ தானடா பாத்த..”

 

“லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டி” என்று கூறி வெட்கப்பட்டவனை கண்டு “ம்.. நமக்குலாம் கண்டதும் காதல் வரமாட்டிக்கே”

 

“அந்த அளவு நீ வொர்த் பீஸ் இல்லடி” என்று கூறி ஓடுபவனை கண்டு “அடிங் கொய்யால.. ஓடுறியா ஓடு ஓடு கடைசில வாழ்கை பிச்சை கேட்டு என்கிட்ட வந்தாகனும்” என்று நண்பனை அர்ச்சித்தவளின் நினைவில், ஏதோ தோன்ற, தலையில் தட்டி “ஆமா.. ஏன் இப்படி தோணுது” என்று யோசித்து தோலை உலுக்கியவளுக்கு தன்னையறியாமலே புன்னகை அரும்பியது.

 

நண்பி வருகைக்காக வண்டியில் ஏறியமர்ந்து காத்திருந்தவன், கையிலிருந்த திறன்பேசியில் இதழிகாவின் எண்ணை இதழ் படமிட்டு சேமித்து வைத்ததில் கண்ணில் பெண்ணவளின் இதழ்

தோன்ற “லிப்ஸ்.. யூ டெம்ட் மீ” என்று தலை கோதி தன்னை சமன் செய்தவனோ, நண்பி வந்ததும் வீட்டை நோக்கி சென்றனர்.

 

இப்படிக்கு 

Vsv42😍😍

 

 

This topic was modified 4 months ago 2 times by VSV 42 – தீரா காதலின் தேடல்

   
ReplyQuote

You cannot copy content of this page