All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 41

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 41

 

லிஃப்டின் கதவுகள் சரியாக மூடும் நேரம் வேகமாகக் கையசைத்தபடி நடந்து வந்தாள் கோகோ. 

 

அது என்ன பேருந்து நிறுத்தமா? செல்லும் பேருந்தை ஹோல்டவுன் என்று கைக்காட்டிய நிறுத்தி ஏற. 

 

இல்லை அல்லவா! அதனால் அவளை விட்டு விட்டுச் சென்று விட்டது. 

 

"ச்ச... போய்டுச்சி. என்ன விட்டுப் போன அந்த லிஃப்ட் படார்னு கீழ விழு... கரண்டு கட்டாகி பாதில நின்னு போக..." என அந்த லிஃப்டிற்கு சாபம் கொடுக்க, 

 

"ஆடி அசஞ்சி வராம, ஓடி வந்திருந்தா இன்னேரம் அதுக்குள்ள ஏறிருப்ப." 

 

"ஓடியா! இந்தப் புடவைய கட்டிட்டு நடக்குறதே கஷ்டமா இருக்கு, இதுல ஓடி வந்தா லிஃப்டுக்குள்ள வர முடியாது. ஹாஸ்பிட்டலுக்குள்ள தான் போயிருக்க முடியும்."

 

"ம்... கரெக்டு... உன்ன சக்கரம் வச்ச பெட்ல படுக்கப் போட்டுத் தள்ளிட்டு போயிருப்பாங்க." என்றுத் தனக்குப் பின்னால் இருந்து ஏற்ற இயக்கத்துடன் வந்த கவுண்டர் குரல் யாருடையது என்று அறிந்தும் திரும்பிப் பார்க்கவில்லை. 

 

அந்தக் குரல், உடலின் லட்சம் மின்னதிர்வை தந்து மயிர்க் கால்களை எழச்செய்தன.  

 

படிக்கட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். 

 

"எட்டு மாடி. சேல வேற கட்டிருக்க. ஏற முடியுமா? இல்ல லிஃப்ட் குடுத்து தூக்கிட்டு போகவா!?" என்றவனின் குரலில் குறும்பு கூத்தாட, எங்கிருந்து நகர்ந்தாளோ அந்த இடத்திலேயே மீண்டும் வந்து நின்று கொண்டு, மின் தூக்கிக்காகக் காத்திருந்தாள். 

 

கடிவாளம் கட்டிய குதிரைபோல் பார்வையை பூட்டியிருக்கும் கதவில் அவள் வைக்க, சஜித்தும் அதே நிலையில் தான் இருந்தான். கதவைப் பார்த்தபடி அல்ல, கோகோவை ரசித்தபடி.

 

முதல் முறை அவளைச் சேலையில் பார்க்கிறான். அதுவும் கண்ணாடியால் நெய்யப்பட்டது போன்ற மெல்லிசான டிசைனர் புடவை அது. 

 

அவனின் கண்கள் லேசரை விடக் கூர்மையாக அவளுள் பாய்ந்து அளவிடத் தொடங்கின. 

 

முழங்கைகள்வரை மூடியிருந்த கையும்,‌ போட் நெக் என்று கழுத்தை நெறிக்கும் அளவிற்கு இருந்த டிசைனர் ப்ளவுஸ்ஸும் அவளின் அங்கங்களை இறுகப் பற்றி அணை போட்டிருந்தது. ஆனால் ஒற்றை முந்தானையிட்டு அணிந்திருந்த சேலை மறைத்திருந்தாலும், முன் அழகை எடுத்துக் காட்ட தவறவில்லை. அது கவனத்தை ஈர்த்ததென்றால் உயர்த்தி தூக்கி கொண்டையிட்டதன் மூலம் ஆழமாக இறக்கி, இரு மெல்லிய கயிறு கொண்டு முடிச்சிட்டார் போல் தைக்கப்பட்ட ரவிக்கை, பளிங்கு முதுகின் அழகை விருந்தாக்கியது ஆடவனின் கண்களுக்கு.  

 

அவனின் கூர்பார்வையில் நெளிந்தவள், முந்தானையால் மூடியும் பயனில்லை. 

 

"கலண்டுடுச்சின்னா அசிங்கமாகிடாது." என்று அணியும்போதே அலறினாள் தான். 

 

ஆனால் இந்தத் துகிரா தான் விடாது அணத்தி அம்மாதிரியான உடையை அணிய வைத்தாள்.

 

இன்று ஒரு சக்சஸ் பார்ட்டி. பெரிய இடத்தில் நடப்பதால் அதற்கு ஏற்றார் போல் உடை அணிய வேண்டும் என்று துகிரா அவளை அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்று தயார் செய்தாள். 

 

சகல அலங்காரத்துடன் கண்ணாடியில் அவளை அவளே பார்க்கும் போதே, ஏனோ பக்கத்தில் இல்லாத சத்யாவின் நினைவும், இதுவரை கூடாது என்று அடக்கி வைத்த இளமைக் கனவும் வந்து நாணித் தலைகுனிய வைத்தன. 

 

அவனின் கண்ணில் சிக்கி விடக் கூடாது என்று அவள் வேண்டிக் கொள்ள, அந்த வேண்டுதல் விரையமாகி பார்ட்டி முடித்துவிட்டு திரும்பும்போது அவனை நேருக்கு நேர் கண்டுவிட்டாள். அவனை நேருக்கு நேர் எதிர் கொள்ளும் துணிவு அவளிடம் இந்த ஒரு வாரமாகவே இல்லை.

 

குனிந்த நிலையிலேயே நின்றிருந்தவளை நெருங்கி வந்தவன், 

 

"எனக்குக் கேம்ஸ் பிடிக்கும் கோகிலா. அதுவும் கண்ணுக்குச் சிக்கக் கூடாதுன்னு ஒளிஞ்சிக்கிற கண்ணாமூச்சி விளையாட்டு ரொம்ப பிடிக்கும்." என்று அவளுக்குக் கேட்கும் வண்ணம் காதருகே குனிந்து சொல்ல, அவனின் மூச்சுக்காற்று கழுத்தை வருடி அவளுக்கு வியர்வை ஊற்றெடுத்தது. 

 

கூடவே அவளின் பெயரை அவன் இரண்டாவது முறையாக உச்சரிக்கிறான்.

 

மில்லி மீட்டர் இடைவெளி இருந்த ஆடவனின் உதடுகள் எப்பொழுது வேண்டுமானலும், படபடவென ஏறி இறங்கிய தோள்ப்பட்டையை தொட்டுவிடும் என்ற நிலையிலிருக்க, நல்லவேளையாக மின்தூக்கி வந்தது. அவனிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து அதற்குள் வேகவேகமாக ஏறிக் கொண்டாள். 

 

பட்டனை தட்டிவிட்டு விட்டு, சுற்றில் சாய்ந்து கொண்டு இருகரத்தையும் கட்டியபடி நின்றவளின் பார்வை வட்டத்திற்குள், ஷூ அணிந்த ஆடவனின் வலிய நெடிய கால்கள் லிஃப்டின் உள்ளே அதுவும் அவளை நெருங்கி வருவது தெரிந்தது. கூடவே லிஃப்ட்டின் கதவுகள் மூடிக்கொள்ள, இதயம் அதன் கூட்டிற்குள் படபடவென அடித்துக் கொண்டது. 

 

இடமே இல்லாதவன் போல், இரு கரத்தையும் விரித்து, மூலையில் ஒடுங்கி நின்றவளை சிறை வைத்தவன், காதிலிருந்த நீளத் தொங்கட்டானை ஊதி, ஊஞ்சலாடச் செய்தான். 

 

தேகம் சிலர்க்க நின்றவளிடம், "ஒரு வாரமா நீ விளையாண்ட கண்ணாமூச்சி ஆட்டத்துல, உன்ன கண்டுபிடிச்சி நான் வின் பண்ணிட்டேன்." என்றவனை ஏறெடுக்க முடியவில்லை. 

 

அவளின் நாடியை உயர்த்தி, "வின்னருக்கு ப்ரைஸ் கிடையாதா.?" என்றவன் குரலில் இருந்தது, முழுக்க முழுக்க தாபம். 

 

புதிது... புதிது... 

 

நடக்கும் அனைத்தும் புதிது. 

 

கனவோ...

 

இல்லை... நிஜம்... நாடியை பதிந்திருக்கும் அவனின் விரலும் நிஜம், மூச்சுக் காற்றுப்படுமளவு பக்கம்வந்து, அவன் பேசும் வார்த்தைகளும் நிஜம். 

 

சஜித் இத்தனை வார்த்தைகள் கோர்வையாகப் பேசியது புதிதென்றால், அவள் பேசாது இருப்பது அதைவிட புதிது. அவனின் முகம் பார்க்காதது புதிது. அவளின் கன்னக்கதுப்புகளின் சிவப்பு புதிது. தானாக நெருங்கி வந்த சஜித்தின் செயலும் புதிது.

 

என்ன நடக்கிறது... அவள் ஏன் சஜித்துடன் கண்ணாமூச்சி விளையாட வேண்டும் என்பதை அறிய ஒரு வாரத்திற்கு முன் ரிபேக்காவின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். 

 

அவர்களுக்குக் கிடைத்த வெளிநாட்டு வாடிக்கையாளருடன் மாலைப் பொழுதில் ஒரு சந்திப்பு. 

 

"கோகோ ஈவ்னிங் எல்லா அரேஜ்மெண்ட்டும் பக்காவா இருக்கனும். டின்னருக்கு இப்பவே ஃபுட் ஆர்டர் பண்ணிடு. டேபிள்ல உக்காரும்போது டின்னர் ரெடியா இருக்கனும். காத்திருக்குற சூழ்நிலை வரக் கூடாது. புரியுதா?" என்ற ரிபேக்காவிற்கு திருதிருவென்ற முழியையே பதிலாய் தந்தாள். 

 

"என்னாச்சி?..." 

 

"நத்திங் மேம். எவ்ரித் திங் இஸ் ஓகே." என்றவளை பார்த்தால் எதுவோ சரியில்லை என்று தான் தோன்றியது. 

 

அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு ரிபேக்கா செல்ல, கோகோ வேகமாக இளவேந்தனுக்கு ஃபோன் செய்தாள். 

 

"அத்தான், தப்பு பண்ணிட்டேன். இன்னைக்கு பாரின் க்ளைண்ட் கூட ஒரு மீட்டிங். டின்னருக்கு நல்ல ரெஸ்டாரன்ட்டா பாத்து டேபிள் புக் பண்ணச் சொன்னாங்க. நானும் பண்ணேன். ஆனா பண்ணல." என்று படபடவெனப் பொரிய, 

 

"என்ன உளறுற.?"

 

"அத்தான்... அது..." என்றவள் அவள் செய்து வைத்த பிழையைக் கூறினாள்.

 

ரிபேக்கா தந்த மெனு வகைகளை ஹோட்டலில் ஆர்டர் செய்தவள், ஒரு மேஜையின் நம்பரைச் சொல்லித் தயார் நிலையில் வைத்திருக்கச் சொல்ல, 

 

"மேம், அந்த டேபிள் நீங்கச் சொல்ற ஆள் பேர்ல புக் ஆகலயே." என்றான் கடையாள், 

 

"வாட்... நா ரெண்டு நாளுக்கு முன்னாடி தான புக் பண்ணேன்." என்றபடி முன் பதிவு செய்திருந்த மின்னஞ்சலைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சி, 

 

'அது ஒன்னுமில்லாங்க... நாள் மாசம் ஆண்டுன்னு(dd/mm/yyyy) போட்டிருந்த இடத்துல, மாசம் நாள் ஆண்டுன்னு(mm/dd/yyyy) நினைச்சி புக் பண்ணிருக்கேன். அதாவது 7வது மாசம் 8ம் தேதிக்குப் பதிலா 8வது மாசம் 7ம் நாள்னு அடுத்த மாசத்துக்கு புக் பண்ணி வச்சிருக்கேன்.' தன் தவறை உணர்ந்தவள்,

 

"இப்ப டேபிள் கிடைக்குமா?" என்றதற்கு சாரி என்று ஒற்றை வார்த்தை கிடைக்க, வழக்கம்போல் தன் சைன் ஃபோர்டிடம் வந்தாள். 

 

"வேற ஹோட்டலுக்கு ட்ரைய் பண்ணியா.?"

 

"எல்லாத்துக்கும் பண்ணிட்டேன். நாளைக்கி இந்த ஊர்ல ஏதோ ஃபெஸ்டிவல்லாம். எல்லாம் புக் ஆகிடுச்சி. இப்ப என்ன பண்ண அத்தான்." 

 

"ஆர்டர் பண்ண புட்ட ஆஃபிஸ்க்கு வர வச்சி டின்னர முடிச்சிடு."

 

"ரிபேக்கா மேம் என்ன முடிச்சிடுவாங்க." 

 

"அப்ப வேற இடம் யோசி." என்றபோது அவளுக்குச் சஜித்தின் சாக்லேட் பேக்கரி நினைவு வந்தது. 

 

உடனே அவளுக்கு அழைத்தவள், அவனைப் பேசவே விடாது, "சத்யா... சத்யா... ப்ளீஸ்... ப்ளீஸ்..." என இறைஞ்சத் தொடங்கிவிட்டாள். 

 

"அந்த ரெண்டு வார்த்தைய விட்டுட்டு அடுத்த வார்த்தைய சொல்லு. என்ன பண்ணனும்"

 

"ஒரு ரெண்டு மணி நேரம் உன்னோட ஷாப்ப, ரெஸ்டாரன்ட் மாத்தி எனக்குக் கடனா தரமுடியுமா சத்யா. இது என்னோட வேலை சம்மந்தப்பட்டது சத்யா. மாட்டேன்னு மட்டும் சொல்லிடாத." என்றவளுக்கு சரியென்க, 

 

"நா ஆர்டர் பண்ண புட்ட உன்னோட இடத்துக்கு அனுப்பச் சொல்றேன். தேங்க்ஸ் சத்யா... உம்மா..." என்று வழக்கமான முத்தத்தைத் தந்து வைத்தாள்.

 

"இந்த இடத்துல ரெஸ்டாரன்ட்டா.? கோகோ என்ன பண்ணி வச்சிருக்க?" எனக் கோபமாகக் கேட்ட ரிபேக்காவிடம், 

 

"என்ன நம்புங்க மேடம். ஏமாத்திட மாட்டேன்." என்று ஏதேதோ சொல்லி வாடிக்கையாளருடன் வந்து சேர்ந்தாள். 

 

சஜித்தின் நேத்தியான கவனிப்பால் எவ்வித வித்தியாசமும் தெரியாது ரெஸ்டாரன்ட்டாக மாறியிருந்தது கடை. 

 

வந்திருந்த அனைவரும் உணவில் திருப்தி கொண்டனர். அதிலும் கடைசியாகப் பரிமாறப்பட்ட சாக்லேட் திரமிசூ(chocolate tiramisu)வில் மெய் மறந்துபோயிருந்ததனர். 

 

'யார் செய்தது இத' என்று வினவியவர்களுக்கு சஜித்தை கோகோ கைக்காட்டினாள். 

 

அதுவரை கடையாட்கள் பரிமாறியதால் சஜித் வெளியே வரவில்லை. இனிப்பைப் பற்றிக் கேட்டதும், கோகோ உள்ளே சென்று அழைத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்தாள்.  

 

"இது தான் சத்யா. இந்த ஸ்வீட் இவனோட ரெசிபி." என்றவள் அவனின் கரத்தை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு

நிற்க, ரிபேக்காவிற்கு ஏகப்பட்ட அதிர்ச்சி. 

 

தன் தோழியின் அதிர்வை உணர்ந்தவன், கண்களால் ஏதோ சொல்ல, "நல்லா இருக்கு மிஸ்டர் சத்யா." என்று பாராட்டி விட்டு வெளியேறினாள். 

 

வரிசையாக ஒவ்வொருவரும் வந்த அவனின் டிஷ்ஷை பார்ட்டி விட்டுச் செல்ல, அவர்களுடன் சரளமாக ஆங்கிலத்தி பேசிக் கொண்டிருந்தவனின் மீது கோகோவின் பார்வை ரசனையுடன் படர்ந்தது. 

 

பேச்சில் வசிகரத்தையும், உருவத்தில் கம்பீரத்தையும் கொண்டவனின் பச்சை விழிகள் மட்டும் பிறரிடம் பேசிக் கொண்டிருந்தாலும், அவ்வபோது கோகோ என்ன செய்கிறாள் என்று நோட்டமிட்டது அவளுக்குப் பிடித்திருந்தது. 

 

தனக்கான ஒரு சில நிமிடங்களின் அவன் செய்த உதவிக்கு நன்றி சொல்ல அவனின் அருகில் வந்து நின்றாள். 

 

"நீயும் டின்னர் முடிச்சிட்ட, நாம சேந்து போகலாம். வெய்ட் பண்ணு. க்ளீன் பண்ணிட்டு..." பேச்சு நின்றிருந்தது.

 

அவளுடன் பேசியபடி மேஜைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தவனின் கன்னத்தில் தன் இதழ் பதித்து நன்றியைச் சொல்ல நினைத்துக் கால்களை உயர்த்தி, அவனின் கன்னம் எட்டும் அளவிற்கு எக்கியவள், சத்தியமாக அவன் திரும்புவான் என்று எதிர்பார்க்கவில்லை. 

 

அதன் விளைவு, முத்தம் கன்னத்தில் விழாது, அவனின் உதடுகளில் உரசி, இதழொற்றலாக நிறைவு பெற்றிருந்தது. 

 

விழிகளை விரித்து, விரல்களால் வாயை மூடியபடி, தான் செய்த காரியத்தை நினைத்து அதிர்ந்து, பின்னாலேயே நடந்தாள் கோகோ.

 

 இன்று நடக்கும் விநோதங்களை நினைத்துபடி உள்ளே வந்த ரிபேக்கா, கோகோ சஜித்திற்கு தந்த முத்தத்தில் மீண்டும் அதிர்ந்து போயிருந்தாள். ரிபேக்காவின் மீது மோதித் தடுமாறி, அங்கிருந்து ஓடியே விட்டாள் கோகோ.‌

 

"இங்க என்ன நடக்குது?. எப்பரு இருந்தா சத்யாவா மாறுன? சஜி நீ இத்தன நாளா இங்க தா இருக்கியா.?"

 

"நாள் இல்ல வர்ஷம்." என்றான் கோகோ சென்ற பாதையைப் பார்த்தபடி, 

 

"நீ கோகோவ லவ் பண்றியா.?" என்றவளுக்கு இதழ் விரித்துப் புன்னகை சிந்த,

 

பாவம் அவளுக்கு இன்று அதிர்ச்சி மேல் மேல் அதிர்ச்சி.

 

"நா யாருன்னு அவளுக்குத் தெரியாது. அதப் பத்தி கவலயும் அவளுக்குக் கிடையாது. நம்மல அப்படியே முழுசா விரும்புற லவ் கிடைக்கிறது கஷ்டம். அந்த வகைல. ஐ ஆம் லக்கி." என்றவனின் மனம் முழுவதும் கோகோ வியாபித்திருந்தாள். 

 

"நீ இங்க இருக்குறது..."

 

"இப்போதைக்கி வேண்டாம்." என்றவன் வேகம் வெளியே வந்தபோது கோகோ இல்ல. 

 

அன்று தொடங்கிய அந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில், இன்று அவளை கண்டு பிடித்து விட்டான். 

 

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 42

https://kavichandranovels.com/community/postid/1338/


   
ReplyQuote

You cannot copy content of this page