All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 39

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 39

 

பல வண்ண நிறங்களில் இருந்த கோப்புகளைக் கையில் எடுத்துக் கொண்டு, மேஜையில் இருந்த பென் ஸ்டாண்டையும், பேப்பர் வெயிட்டையும் அதனதன் இடம் வைத்து விட்டு, மேஜையில் இருந்த குட்டிப் பிள்ளையார் சிலைக்கு முன்,

 

 'எனக்கு டயமில்ல. உங்களுக்கு இருந்தா இத எடுத்து மாலையா கோர்த்து போட்டுக்கோங்கோ.' என்பதுபோல் சில மலர்களைத் தூவி விட்டுவிட்டு நிமிர்ந்தவளுக்கு மூச்சு வாங்கியது.

 

"ச்ச! பீஏ வேல கஷ்டமா இருக்கு. ரொம்ப டென்ஷனாவும் இருக்கும். வந்தோமா கொஞ்ச நேரம் வீடியோ கன்டன்ட் க்ரியேட் பண்ணோமா,‌ நமக்குன்னு இருக்குற கஸ்டமரோட இன்ஸ்டா பக்கத்துல போட்டோமா, சந்தோஷமா வீடு திரும்பினோமான்னு இருந்தேன். பட், விதி விடல.’ எனப் புலம்பியபடியே தன் ராஜமாதாவின் பின்னே சென்றாள் கோகோ. 

 

பீஏ வாக இந்த அலுவலகத்தில் கோகோ வெற்றிகரமாக ஒரு வாரத்தை ஓட்டி விட்டாள். 

 

பீஏ!!

 

"ஆமாங்க. ரிபேக்கா மேமோட பீஏ இனி நாந்தா. பதவி உயர்வு கிடைச்சிருக்குன்னு நினைக்காதிங்க. அது ஒருமாறியான ஒன்னு. அத விளக்கிச் சொல்ல ஒரு வாரத்துக்கு முன்னுக்க போகனும். சும்மா தான இருக்கோம், மேம் கூட மீட்டிங்க போறதுக்கு முன்ன, வாங்க போய்டு வந்திடுவோம்."

 

அது, ப்ரஜித்தின் show roomமிற்கு சென்று வந்த மறுநாள். 

 

துகிரா, தான் எடுத்த சில வீடியோக்களை அனுப்ப, பார்த்துக் கொண்டிருந்தாள் கோகோ. 

 

அவளுக்கு ஸ்கேட்டிங், அதான் காலில் சக்கரங்களைக் கட்டிக் கொண்டு சறுக்கி விளையாடுவது. அதன், மேல் ஒரு மோகம். 

 

'இந்தச் சத்யா கூட ஜாகிங் போகும் தான் பாத்தேன். சின்னச் சின்னப் பசங்க கூட, கால்ல சக்கரத்தக் கட்டிக்கிட்டு, நா தீவிரமா ஜாக்கிங் போகும்போது குறுக்கா மறுக்கா வருவாங்க.  

 

 நா ரொம்ப இம்ரஸ் ஆகிட்டேன். அது மாறி வித்த காட்டலன்னாலும், ஒரு நூறு மீட்டராவது பத்திரமா போட்டு வரனும் அடிக்கடி சத்யாட்ட சொல்லிட்டே இருப்பேன்.' என்றவளுக்கு, 

 

இன்று, ப்ரஜித்தின் இடம் தோதாய் அமைய, ஆசையுடன் அணிந்து கொண்டாள். 

 

அவளுக்கு உதவ பலர் முன்வந்தாலும், 'எங்கே விழுந்து விடுவோமோ!' என்று கம்பியைப் பிடித்துக் கொண்டு நகர மாட்டேன் என்று அவள் நடுங்கிய நடுக்கத்தைத் தான் துகிரா வீடியோ எடுத்து அவளுக்கே அனுப்பி வைத்திருக்கிறாள். 

 

வீடியோ பார்த்துக் கொண்டிருந்த கோகோவின் முன் ரிபேக்காவை வந்து நிற்க வைத்தது அதில், கேட்ட ப்ரஜித்தின் குரல். 

 

"என்னோட கைய பிடிச்சுக்க கோகோ. நீ விழாம நா தாங்கிப் பிடிச்சிக்கிறேன்." என்று இடையே கேட்ட அவனின் குரல் ரிபேக்காவை எட்டிப் பார்க்க வைத்து, கோபத்துடன் ஃபோனை பிடுங்கவும் வைத்தது. 

 

"நான் அத்தன சொல்லியும் நீ அவனப் போய்ப் பாத்திருக்க, அவெங்கூட ஊர் சுத்திருக்க." என்று ஆத்திரத்தில் கத்த, 

 

"மேம், இது டூ மச். ப்ரஜித் சார் உங்க பர்ஷ்னல். எனக்கு அவர பர்ஷ்னலா தெரியாது. தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. அவர் ஒரு பிஸ்னஸ் மேன். அவர நம்ம க்ளைன்ட்டா மாத்திக்க ட்ரெய் பண்றேன். அவ்ளோ தான்."

 

"அவ்ளோ தானா?" என்றாள் ரிபேக்கா கோபம் குறையாத குரலில்.

 

"மேம், நீங்க ஏன் இவ்ளோ எமேஸ்னல் ஆகுறிங்க?. பிஸ்னஸ்ஸையும், பர்ஷ்னல் லைஃப்பையும் ஒன்னு சேத்து குழப்பிக்க கூடாதுன்னு நீங்கக் கூட ‘டயம் ஆஃப் இண்டியா’ல சொல்லிருப்பிங்க. சோ ப்ளிஸ் மிஸஸ் ப்ரஜித்ரேவனா யோசிக்காம, ரிபேக்கா சனாம்மா யோசிங்க." என்று கோகோவே அறிவுரை வழங்கினாள். 

 

மிஸஸ் ப்ரஜித்ரேவன்... 

 

இந்த வார்த்தையை ப்ரஜித் கூறும்போதெல்லாம் கடுப்புடன் கத்துவாள். 

 

கோகோ சொன்னதும், 'எஸ் நான் மிஸஸ் ப்ரஜித் தான். மிஸஸ் ப்ரஜித்ரேவன் தான்.' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. 

 

எம்மாறியான உணர்வைத் தான் உணர்க்கிறோம் என்று புரியவே இல்லை.

 

காதல், காமம், கல்யாணம் இவைகளை கடந்து விட்டதாக நினைத்துக் கர்வம் கொண்டவளுக்கு, இல்லை அவளின் உன்‌ மனதில் காதல் உள்ளதென்று நெற்றிப் பொட்டில் கூறியது அந்த மிஸஸ் ப்ரஜித்ரேவன் என்று வார்த்தை.

 

அவளின் பார்வை, 'நா எந்தத் தப்பும் செய்யல.' என்பது போல் தெணாவட்டாக நின்றிருந்த கோகோவின் மீது அழுத்தமாய் பதிந்தது‌.

 

'ஆமா, ஏற்கனவே ஆறு மாசம் முடியப்போது. மீதி ஆறு மாசத்துல வேலை உறுதியா! இல்லையான்னு ஊஞ்சலாடிட்டு இருக்குறதுக்கு. ரெண்டுல ஒன்னு பாத்திடலாம். வந்தா மலை, போனா கூந்தல்.' என்ற தெணாவட்டு அவளிடம் இருந்தது. 

 

"பிஸ்னஸ், பர்ஷ்னல் ரெண்டும் தனித்தனி இல்லையா.?" என்க,

 

'எஸ். அதுல என்ன சந்தேகம்!.' என்பது போல் பார்த்தாள் ‌கோகோ.

 

"அப்பக் கூட்டீட்டு வா. பிஸ்னஸ் பேசலாம். உன்னோட அஞ்சாவது க்ளைண்ட்ட உன்னோட வேலைய உறுதி பண்ணிக்க கூட்டீட்டு வா."

 

"நிஜமாவா!" என்றதும் கோகோவின் கண்கள் பிரகாசித்தது. 

 

ப்ரஜித்தின் அலுவலகத்தில் பேசி எப்படியோ சந்திப்பை உறுதி செய்துவிட்டாள். 

 

பத்து மணிக்கு ஏற்பாடு செய்த மீட்டிங்கிற்கு, ரிபேக்காவின் பொறுமையை சோதித்து ப்ரஜித் வந்து சேர்ந்தது என்னமோ பதினொரு மணிக்குத் தான். 

 

இருவரும் எதிரி நாட்டு மன்னர்களைப் போல் எதிர் எதிரே அமர்ந்து கொண்டனர். 

 

இதயம் காதலை உணரத் தொடங்கினாலும், அதை உறுதி செய்யாத மூளை அவனை முறைத்துப்‌ பார்க்க வைத்தது.

 

அவன், கண்களுக்குக் கருப்பு திரை போட்டார் போல் கண்ணாடியில் எதையும் கணிக்க முடியாத நிலையில் இருந்தான்.

 

கோகோ தான் இரு நாட்டிற்கும் கிடைத்த ஒரே தூதர். 

 

கிடைத்தட்ட பல மணி நேரம், என்னென்ன செய்து ப்ரஜித்தின் பொருட்களை விளம்பரப்படுத்த உள்ளோம் என்ற யோசனைகள் சொல்ல, அவனின் தலையசைப்பு திருப்தியைக் காட்டி, சில மாதங்களுக்கென ஒப்பந்தம் கையெழுத்தாகியது.  

 

பீஏ வேலை, கோகோவுடனான ப்ரஜித்தின் சந்திப்பைத் தடுக்க கொடுக்கப்பட்டது. 

 

‘என் அனுமதி இல்லாது இருவரும் பார்த்துக் கொள்ள முடியாது.’ என்பதற்கு மட்டுமல்ல, வேறுசில காரணங்களும் இருந்தது.  

 

இதுவரை அவளுக்கெனத் தனிப்பட்ட உதவியாளர் என்று யாருமே கிடையாது. வெளிநாட்டு நிறுவத்துடன் கைக்கோர்த்ததிலிருந்து தலைக்கு மேல் பணி. 

 

அதைப் பங்கிட்டுக் கொள்ள திறமையும் நம்பிக்கையுமான ஒரு ஆள் வேண்டும். 

 

அந்த ஆளாகக் கோகோவைத் தேர்ந்தெடுத்தாள் ரிப்பேக்கா. 

 

கோகோவிற்கு ரிபேக்காவிடம் கற்றுக் கொள்ள அநேக விடயங்கள் இருந்ததால், அவளுடன் சந்தோஷமாகவே பயணிக்கத் தொடங்கிவிட்டாள்.  

 

இப்போது இருவரும் இருப்பது ஒரு கலந்தாய்வு கூட்டம். 

 

அதில், ரிபேக்கா அடக்கப்பட்ட கோபத்துடன் தான் இருக்கிறாள். அவளுக்கு எதிரில் இருந்த சிலரின் செயல்கள் அவளைக் கடுப்பேற்றிக் கொண்டு இருந்தது. நாகரிகம் கருதி வார்த்தைகளை ழுழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

என்ன நடக்கிறது என்பதை கண்ணாடி கதவுகளுக்குப் பின் நின்ற கோகோ எட்டி எட்டி பார்த்தபடி இருந்தாள். 

 

அப்போது அவளின் அலைபேசி இசைத்தது.

 

"குட் ஆப்டர்னூன் ப்ரஜித் ஸார்." என்றாள் உற்சாகமாக.

 

"குட் ஆப்டர்னூன் குலாப்." என்றான் சந்தோஷமாக. 

 

இது வாடிக்கையான ஒன்றாகிப் போனது. மனைவியின் தினசரி நடவடிக்கைகளை அவனிடம் ஒப்பிக்கும் டேப் ரெக்கார்டராக கோகோவை மாற்றி விட்டான்.

 

'இவங்க ரெண்டு பேர் ஜோடி சேர, நா அணிலா மாறிச் சேவ செய்றதுல ஹப்பி.' என்றதால் அவன் அழைக்காமலேயே ரிபேக்காவின் நடவடிக்கைகளைக் கூறிவிடுவாள்.   

 

"என்னோட கண்ணம்மா என்ன பண்றா?." 

 

"உங்க கண்ணம்மா செம்ம ஹாட்டா இருக்காங்க." என ரகசியக் குரலில் சொல்ல, அவன் ஓட்டிக் கொண்டிருக்கும் காரைச் சடன் ப்ரேக் போட்டு நிறுத்தும் ஓசை கேட்டது. 

 

"ஹாட்டா!!!" அதிர்ச்சியாக வந்தது குரல்,

 

"ம்ஹிம்... நீங்க நினைக்கிற மாறி ஹாட் இல்ல. தண்ணீ ஊத்துனா புஷ்ன்னு சத்தம் வருமே அந்த ஹாட். சூடு... சூடு..."

 

"ஹஹஹ... அப்ப யாரோ என்னோட கண்ணம்மாவ டென்ஷன் படுத்திருக்காங்க. யாரது.?"

 

"பேர் தெரியாது. ஆனா, குட்டையா ஒரு ஆள், ஒரே மணி நேரமா பேசுறான். அப்பப்ப மேடம் பக்கத்துல வேற வந்து நிக்கிறான். குனிஞ்சி அவங்க கிட்ட என்னமோ சொல்றான். ஒரு மாறி அசௌகரியமா ஃபீல் பண்றாங்கன்னு அவங்க முகம் பாத்தாலே தெரியுது." 

 

"லேக்கேஷன் அனுப்பு." என்றப் ப்ரஜித்தின் குரல்‌ மாறியிருந்தது. 

 

அவன் கேட்டதை அனுப்பி வைத்தவளின் முன் அடுத்த ஐந்தே நிமிடத்தில் வந்து நின்றான் ப்ரஜித். 

 

சந்தைப்படுத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டம் அது. அதன் உறுப்பினர்கள் அனைவரும் கூடியிருக்க, அதில், மனிஷ் முக்கிய உறுப்பினர். 

 

எப்பொழுது இருவருக்குள்ளும் பிரிவு என்ற செய்தி பரவியதோ, அப்பொழுதே பலர் தங்களின் உண்மை நிறத்தைக் காட்டத் தொடங்கியிருந்தனர். 

 

ரிபேக்காவிற்கு தொழில்ரீதியாவும், பாலியல் பாகுபாடுகள் ரீதியாகவும் பல எதிரிகள் உண்டு. தீயென ஜொலிக்கும் பார்வை பல ஆண்களை நெருங்க விடாத போதும், சிலர் தன் ஆசைக்கு மடிவாளா என அவ்வபோது பரிசோதித்துப் பார்த்துக் கொண்டே இருந்ததனர். அந்தச் சிலரில் மனிஷ்ஷும் ஒருத்தன்.

 

"இந்த முறை டைவர்ஸ் கிடைச்சிடும் தான? டைவர்ஸ் வாங்கலன்னாலும் எனக்கு ஓகே தா. என்னைக்கி வச்சிக்கலாம்?. எந்த இடமனாலும் சரி தான்." 

 

சொல்லவே நாக்கூசும் வார்த்தைகளை கூட்டத்தில் எழுந்து நின்று பேசும் போதே அவளின் காதுகளில் அவன் கூற, ரிபேக்கா பல்லைக் கடித்தபடி இருந்தாள். 

 

அவனின் கேள்விக்குக் கையால் பதில் சொல்ல ஒரு நொடி போதும். 

 

 ஆனால், சபை நாகரிகத்துடன் ரிபேக்கா அமையாகிவிட, அந்த நாகரிகமெல்லாம் நான் பார்த்தது இல்லை என்பது போல் அங்கு வந்தமர்ந்தான் ப்ரஜித். 

 

'இவன் எதற்குச் சம்மந்தமே இல்லாது இங்கு வந்திருக்கிறான்' என்று பலரின் மனதில் கேள்வி ஏழ, 

 

"Zeron-ல நானும் ஒரு பாட்னர் தான். தெரியாதா?. என்ன மிஸஸ் ரிபேக்கா? இதெல்லாம் நீங்கச் சொல்றது இல்லை. பேச்சு வார்த்த நடந்திட்டுத்தான இருக்கில்ல நமக்குள்ள." எனப் பொய்யை அழகாய் கூறி அவனின் மனைவிக்கு அருகில் அமர, அவனின் மிஸஸ் ரிபேக்காவில் உள்ளம் உவகையில் பூரித்துப் போனது. 

 

எந்த இடத்திலும் தன்னை விட்டுக் கொடுத்தது இல்லை. இவன் என் கணவன் என்ற கர்வம் காதலுடன் கணவனைப் பார்க்கத் தூண்டியது. 

 

'நீ வந்தா நா பயப்படனுமா. அதா அவள வேண்டாம்னு டைவர்ஸ் வாங்கப் போறியே. அப்றம் நா ட்ரெய் பண்றது உனக்கு என்ன வந்தது?' என்பது போல் அலட்டாது மீண்டும் அவன் ரிபேக்காவின் பக்கம் வர, அங்கிருந்த மேஜை நாற்காலிகளில் தூக்கி வீசப்பட்டான் ப்ரஜித்தால். 

 

விழுந்த அடிகளால் சுருண்டு போனான் அவன். 

 

ஏற்கனவே மனீஷ் ரிபேக்காவிடன் இதுபோல் அநாகரிகமாக நடந்து கொண்டதால் அடி வாங்கியிருக்கிறான் என்பதை கேள்வியுற்றிருந்தான். இன்று சிக்கியது, வசமாய் அமைய வெளுத்து விட்டான்.

 

"ப்ரஜித் நீ தேவையில்லாம எங்க அசோசியேஷன் மீட்டிங் நடக்குற இடத்துல வந்து கலவரம் பண்ற." என அவனின் அல்லக்கைகள் பலர் பேச, அது முதலில் வாய்ச்சண்டையாக ஆரம்பித்துப் பின், செக்யூரிட்டி, பவுன்சர்ஸ் எனப் பலரின் வருகையால், 'உங்கள் அனைவரையும் மருத்துவமனையின் கட்டில் அன்போடு வரவேற்கிறது' என்று சொல்லுமளவிற்கு கைச் சண்டையாக மாற்றிவிட்டான். 

 

கோகோ ஓடிச் சென்று, "செம்ம பைட் ப்ரஜித் சார். இது நாள்வரை நா லைவ்வா இப்படியொரு சண்டைக் காட்சிய பாத்தது இல்லை. யூ ஆர் தா ரியல் ஹீரோ மெட்டிரியல்." எனக் கரம் பிடித்துக் குளுக்க, ரிபேக்கா அதை ஆத்திரத்துடன் தட்டி விட்டாள். 

 

'கையெல்லாம் குடுக்கனும்னு அவசியம் இல்ல... அதா வாயால பாராட்டிட்டேல்ல, போதும். தள்ளி நின்னு பாராட்டு.' என முணுமுணுத்தாள் அவள்.

 

குறுநகையுடன் மனைவியின் செயலை ரசித்தவன், வந்த வேலை முடிந்து என்பதுபோல் காரில் ஏறினான்.

 

சரியாகக் கார் அந்தக் கேட்டைத் தாண்டும்போது திரும்பி அவன் பார்த்த பார்வையில் ஓருயிரம் மின்னல் தாங்கிய உணர்வு அவளுள். 

 

இருபத்தி எட்டு வயதிலும் காதலை உணரமுடியுமா என்றிருந்தது அவளுக்கு. 

 

அடுத்தடுத்து வந்த நாட்கள் அனைத்திலும் தன்னை புதிதாக உணர்ந்தாள். 

 

அடுத்தடுத்த வாரங்களில், ப்ரஜித் தன் showroomமை பேலாப்பூரில் திறக்க உள்ளதால், தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சிக்காகவும், Zeron consultantடின் வாடிக்கையாளர் என்பதாலும் ப்ரஜித் ரிபேக்காவின் சந்திப்பு தினமும் நிகழ்ந்தது.

 

அப்பொழுதெல்லாம் ப்ரஜித்தை கணவனாக உரிமையுடன் சைட் அடித்துக் கொண்டிருந்தாள் ரிபேக்கா. 

 

ஆனால், உரிமை உன்னிடமிருந்து பிடுங்கப்படும் என்பது போல் வந்தது, இந்திய அரசின் முத்திரையைத் தாங்கி நோட்டிஸ். 

 

குடும்ப நல நீதிமன்றத்தில் இருந்து அவளின் கணவன் கேட்ட விவாகரத்திற்காக, இன்று வரச் சொல்லியது.

 

காரில் ஏறி அமர்ந்தவள் நீதிமன்றம் போகும் பாதையில் செல்லாது பேலஸ் ஆஃப் ரேவனுக்கு ஓட்டிச் சென்றாள்

 

மனம் அவன் மீதுள்ள தன் உணர்வைப் பகிரச் சொல்லி இறைஞ்சியது. 

 

எதையும் மறைத்து வைக்கத் தெரியாத ரிபேக்கா தன் காதலைச் சொல்ல ப்ரஜித்தைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறாள்.

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 40

https://kavichandranovels.com/community/postid/1313/


   
ReplyQuote

You cannot copy content of this page