All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 22

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

அத்தியாயம்: 22

 

டம் டிம் என்ற சத்தம் கோகோவின் வீட்டிலிருந்து கேட்டது. 

 

"நா சொன்னப் போ நீ நம்பலேல. கேளு... நல்லாக் கேளு... யாருமே இல்லாத வீட்டுல இருந்து சத்தம் மட்டும் எப்படி வரும்." எனக் கதவில் காதை வைத்துக் கொண்டு பேச, 

 

'வழி விடு. நா போய்ப் பாக்குறேன்.' என்பது போல் அவளை விலக்கி விட்டுக் கதவைத் திறக்கப் போக,

 

"சத்யா ஒரு நிமிஷம்..." என்றவள் அவனின் வீட்டிற்குள் சென்று அடிப்பதற்கு ஏதுவாய் எதாவது கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தாள். 

 

பூச்‌சாடியைத் தவிர அனைத்தும் காஸ்லியாகத் தெரிந்தன. அதனால் அதையே கையில் எடுத்துக் கொண்டு அவனின் பின்னால் வீராங்கனை போல் நின்று கொண்டு, "இப்பத் திற." என்றாள். 

 

அவன் கதவில் கை வைத்ததும், "பாத்து சத்யா. உள்ள இருக்குற திருடன் உன்ன அடிச்சிடப் போறான். அடி தாங்குவியா! நீயும் கைல எதாவது எடுத்திருக்கலாம். இரு நா போய் இன்னொரு ப்ளவர் வாஷ்ஷ எடுத்திட்டு வர்றேன்." எனத் திரும்பி அவனின் வீட்டிற்குள் செல்ல எதானிக்க, இவன் தோளை உலுக்கியவாரே உள்ளே சென்றான். 

 

அது காலை நேரம்.

 

அப்போது தான் தன்‌ ஜாக்கிங்கை முடித்து விட்டுக் குளித்து விட்டு வந்திருந்தான். 

 

வழக்கம்போல் குழாயைத் திறந்து விட்டு விட்டுக் கோகோ பால்கனியில் கோழித் தூக்கம் போட, சமையலறையிலிருந்து சத்தம் வந்தது. 

 

"எதாவது விழுந்திருக்கும்." என அசால்ட்டாக நினைத்தபடி உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழையும்போது நிழல்போல் ஒன்று கடந்த செல்வதும் அசைவதுமாகத் தெரிய, அத்தனை நேரம் சொட்டு நீர் பாசனத்தால் நிரம்பியிருந்த வாளியை தட்டி விட்டு விட்டு அலறிக் கொண்டே வந்து விட்டாள் சஜித் வீட்டுக் கதவைத் தட்ட.

 

உள்ளே வந்த சஜித் சமையலறை பாத்ரூம் பால்கனி ஏன் அவளின் சோஃபாவிற்கு அடியில் கூடப் பார்த்தான். 

 

ஆனால் பாவம் அங்கு இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

 

'யாரையுமே காணுமே.' என மெல்லத் திரும்பி அவளைப் பார்த்தான். 

 

"சத்தியமா சொல்றேன் சத்யா, கிச்சன் இருந்து சத்தம் கேட்டது. யாரோ நடமாடுன மாறி நிழல் கூடக் கடந்து போச்சி. நம்பு சத்யா." என்றபடி அவனை நெருங்க, அப்போது மீண்டும் சமையலறைக்குள் இருந்து சத்தம். 

 

அது பாத்திரங்கள் உருளும் சத்தமல்ல, அது காதிற்கு இனிமையான ம்யாவ் சத்தம்‌.

 

எட்டிப் பார்த்தால்.... 

 

அவளின் சமயலறையைக் குத்தகைக்கு எடுத்திருந்தன மூன்று பூனைக் குட்டிகள். 

 

பிறந்து சில தினங்களே இருக்கும். எங்கேயோ ஈன்று விட்டு, வாயில் கல்விக் கொண்டு கோகோ விட்டில் தஞ்சமடைந்துள்ளது. சரியாக நிற்க முடியாத போதும் தவண்டு தவண்டு அடுப்படிக்கு கீழ் உள்ள இடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தன. 

 

"சோ க்யூட் கிட்டன்..." என அதைத் தொட்டுத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தாள் அவள். 

 

"எப்படி சத்யா இது வீட்டுக்குள்ள வந்திருக்கும்?." 

 

ஏதோ அவனே கதவைத் திறந்து விட்டு இவளின் அடுப்படியில் வசிக்கச் சொன்னது போல் கேள்வி கேட்டாள். 

 

"பைன்... இப்ப உனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல." என்றபடி அவன் திரும்பிச் சென்றான். அப்போது குட்டிகளை ஈன்றெடுத்த தாய் வந்தது. 

 

சும்மா வரவில்லை. காலை உணவாக ஒரு எலியை வாயில் கவ்விக் கொண்டு வந்தது. ரத்தம் சொட்டச் சொட்ட வந்து நின்ற அதைக் கண்டவள் மீண்டும் அலறிய படி சத்யாவின் வீட்டு வாசலைத் தஞ்சமடைந்தாள். 

 

"அத... விரட்டி விடு சத்யா. அத துரத்தி விடு. பூன... பூன... அதுவும் பெரிய சைரஸ் பூனை… வாயெல்லாம் ரத்தம். உவாக்… அந்த எலிய ராவ்வா சாப்பிடும் போல. ப்ளீஸ் சத்யா." என அலறியவளுக்காக மீண்டும் வந்தான். 

 

அவன் துரத்தியும்‌ பெரிய பூனை செல்லவில்லை. குட்டிகளை விட்டு அது செல்லாது என்பதால், "நீயே அதுக்கு சாப்பாடு குடுத்து வளக்குறது பெஸ்ட்." 

 

"முடியாது. குட்டிய வேண்ணா ஓகே. ஆனா அம்மா வெல்லலாம் நாட் ஓகே. எலியப் போய்... ச்சீ..." என அஷ்ட கோணத்தில் முகத்தை வைத்தவள் வீட்டிற்குள்ளேயே வரவில்லை. 

 

'அதைத் துரத்தியபின் கூப்பிடு' என்பதுபோல் வெளியேயே இரு கரம் கட்டிக் கொண்டு நின்றாள். 

 

ஒரு பெட்டியில் குட்டிகளை எடுத்து வைத்துக் கொண்டு சஜித் செல்ல, அவனின் காலைச் சுற்றிய படியே தாய் பூனையும் அவளின் வீட்டை அப்போதைக்கு காலி செய்தது. 

 

அது வெளியேறியபின் உள்ளே சென்றவள் தரையில் கிடந்த எலியையும் ரத்தத்திட்டகளையும் பார்த்து, 'இதை என்ன செய்வது...' என்ற யோசனையில் நின்றாள்.

 

பால்கனி வழியே தூக்கி எறிந்தால் மராத்தி பஞ்சாயத்து கன்ஃபார்ம் என்பதால் ஒரு கவரில் எடுத்துப் போட்டு நிமிரும்போது நேரமாகிவிட்டது.

 

கவிழ்ந்து கிடந்த வாளியில் தண்ணீரை நிரப்ப இன்னும் ஒரு மணி நேரம் வேண்டும். ஏது அவ்வளவு நேரம்.?

 

கவரை எடுத்துக் கொண்டு வெளியே வரவும், சஜித் வரவும் சரியாக இருந்தது. 

 

"சத்யா இத கீழ போட்டுட்டு பத்து நிமிடம் கழிச்சி வா." என உத்தரவிட்டவள், உடைகளை எடுத்துக் கொண்டு அவனின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

"Excuse me. வாட்ஸ் திஸ்."

 

"கவர்..."

 

'எனக்குத் தெரியாதா?.' என்பது போல் அவள் பார்க்க. 

 

"டயமாச்சி சத்யா. கீழ இறங்கிப் போய் டஸ்பின் பாக்ஸ்ல போட்டுட்டு வர்ற அளவுக்கு நேரமில்ல." என்றவள் அவனின் குளியல் அறைக்குள் சென்று கதவடைக்க,

 

"ஹேய்... அது என்னோட பாத்ரூம்." என்றவனுக்கு நிச்சயம் அதிர்ச்சி. 

 

"தெரியும் சத்யா. லேட்டாகிடுச்சி. ப்ளீஸ்... இன்னைக்கி ஒரு நாள் மட்டும் நா இத யூஸ் பண்ணிக்கிறேன். ப்ளீஸ்..." எனத் தலையை நீட்டிக் கண்களைச் சுருக்கி கெஞ்ச, 'என்னமும் செய்.' என்பதுபோல் அவள் தந்த கவரும் நடக்கத் தொடங்கினான். 

 

"சத்யா... ஓய்... சத்யா..." என ஓடி வந்தவள். அவனின் தோளில் உரசி, "தேங்க்ஸ் சத்யா." எனக் கழுத்தை வளைத்துக் கண்களைச் சுருக்கி நன்றி கூறி விட்டு அவள் பாட்டுக்குச் சென்று விட்டாள். 

 

இங்கு முழித்தபடி நின்றது சஜித் தான். 

 

பிறந்ததில் இருந்தே யாரும் அவனுக்கு இதைச்‌ செய்யென உத்தரவுகள் போட்டது இல்லை. எந்த ஒரு பொருளையும் யாருக்கும், யாருடனும் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலையும் வந்தது இல்லை. 

 

எல்லாம் அவனுக்கெனத் தனியாக ஸ்பெஷலாக இருக்கும். 

 

ஏன் தொழிற்சாலையில் வேலை செய்யும்போது கூட முதலாளியின் மகனெனச் சில சலுகைகள் உண்டு. 

 

அப்படியிருக்க அந்த இல்லைக்களை எல்லாம் உண்டு என முதல் முதலாகப் பழக்கியது கோகோ தான்.

 

இன்று கவரை கையில் கொடுத்து விட்டுச் சென்றவள் தன் குளியலறையை உபயோகிப்பது, முக்கியமாக அவனின் தோளுரசிச் சென்றது, என உரிமையுடன் பழகும் இவளை எப்படி ஏற்பது என்று புரியாது முழித்தான். 

 

அவள் கேட்ட பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவள், வெளியே நின்றிருந்த சஜித்தின் தோளில் மீண்டும் உரசி விட்டு, "தேங்க்ஸ் சத்யா." என இமை சுருக்கிச் செல்ல அது அவனுள் எம்மாறியான உணர்வைத் தந்தது என்று அவனுக்குத் தான் தெரியும்.

 

வீடு மொத்தமும் அவளின் வாசம் நிறைந்திருப்பதைப் போல் ஓர் உணர்வு. சில நிமிடங்கள் தான். பின் பெயருக்குக் கதவைத் தட்டி விட்டு உரிமையுடன் உள்ளே வந்தவள், 

 

"என்ன நின்னுட்டு இருக்க!. உனக்கு வேலைக்கி லேட் ஆகலயா?. உன்னோட பாஸ் திட்டமாட்டாரா?. வா சாப்பிடுட்டு போகலாம். டயம் ஆச்சி. இன்னைக்கி ரிபேக்கா மேம் ஒரு மீட்டிங்ன்னு சொன்னாங்க. கம்." எனக் கரம்பற்றி இழுத்துச் சென்றாள். 

 

அலுவல் தொடங்க சில நிமிடங்களுக்கு முன் அலுவலகம் அடைந்திருந்தாள் கோகோ. ஆனால் அவளுக்கு முன்னே ரிபேக்கா அவளின் கேபினில் டென்ஷனுடன் யாரிடமோ ஃபோனில் பேசிக்கொண்டிருந்தாள். 

 

தன் ராஜமாதா படபடப்புடன் அடக்கப்பட்ட கோவத்துடன், முயன்று வரவழைக்கப்பட்ட அமைதியை முகத்தில் ஒட்டிக் கொண்டு எதிர் தரப்பினருடன் பேசுவதை பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது.

 

தன் ராஜமாதாவை டென்ஷனாக்கிய முகம் தெரியாத மனிதனைத் திட்டுக் கொண்டு அங்கிருந்த காஃபி மேக்கரில் ஒரு கோப்பையை நிரம்பிய படி அவளின் முன் சென்று அமர்ந்தாள். 

 

கங்கெனச் சிவந்திருந்திருந்தவளின் கவனத்தை எப்படி தன் பக்கம் திரும்பி இந்தக் காபியை தொண்டைக்குள் சரிக்கச் செய்வது என்ற யோசனையுடன் ரிபேக்காவின் முகம் பார்த்தபடி நின்றாள்‌. 

 

நாற்காலியில் அமர்ந்திருக்கும் ரிபேக்கா மறைந்து, அங்குக் கோகோ ஃபோனிலும் லேப்டாப்பிலும் பிஸியாக வேலை செய்வது போலும், சுற்றி சுவர் முழுவதும் அவள் வாங்கிய விருதுகள் அடுக்கப்பட்ட இருப்பது போலும் கற்பனையை ஓட்டிக்கொண்டிருந்தாள் கோகோ.

 

உன்னை வெகுநேரம் உறுத்து பார்த்துக்கொண்டு ஒருத்தி நிற்கிறாள் என்று ரிபேக்காவின் உள் மனம் சொல்ல, தலை தூக்கி புருவம் உயர்த்தினாள் அவள். 

 

"காஃபி மேம்." என்றபடி கப்பை அவளின் முன் வைக்க,

 

ரிபேக்கா, "உங்கிட்ட நா காபி கேட்டேனா?" என்றதும் வைத்த கோப்பையை மீண்டும் கரத்திற்குள் இடுக்கிக்கொண்டாள். 

 

"இல்ல மேம். நீங்க டென்ஷனா இருந்திங்க. அதான்.‌.."

 

"டென்ஷனா இருந்தா காஃபி குடிப்பேனா?" 

 

"குடிச்சா டென்ஷன் குறையும் மேம்‌." என்றவளை விழி இடுங்க பார்த்தாள் ரிபேக்கா. 

 

"ட்ரெஸ் மீ மேம். காபி நம்ம மைண்ட டிஸ்டாக் பண்ணும்‌. புத்துணர்ச்சியா ஃபீல் பண்ண வைக்கும். அத்தோட...."

 

"போதும். கெட் அட்." 

 

"ஓகே..." என்றவள் அவளுக்காகக் கொண்டு வந்த காபியை அவளின் மேஜையிலேயே வைத்து விட்டுச் செல்ல,

 

"மீட்டிங் ஹாலுக்கு போகாம இங்க ஏ வந்த.? உன்னோட வேலை எதுவோ அத மட்டும் பாரு. தேவையில்லாம எம்முன்னாடி வராத." எனக் கடுகடுக்க பாவம் நம் கோகோவின்‌ முகம் வாடி விட்டது.

 

கோகோவின் மலர்ந்த முகத்தை வாடச் செய்ததற்கான காரணம், அவளின் கணவன் ப்ரஜித். 

 

கோகோவை பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவளுக்கு அவளின் கணவனின் நினைவுகள் வந்து பேரலையாய் மோதியன. 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 23

https://kavichandranovels.com/community/topicid/296/

 


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 60
 

@vsv11 கோகோ பண்ற சேட்டையால தான் நம்ம சத்யா கவுந்து இருக்கார்னு சொல்லுங்க விழி சிஸ்.🤣🤣🤣😁😁😁

கோகோ புள்ளய பார்த்த ரிபேக்காக்கு ஏன் ப்ரஜித் ஓட நினைவு வரனும்..🙄🙄என்னமோ இருக்கு.

சூப்பர் எபிசோட் 😍👌👌👌


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

@vsv4 ஆமாம் சிஸ் இருக்கு என்னமோ. 🥰🥰🥰🥰😂


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 50
 

Ippadi urimaiya palagura pillaiya yaarukku thaan pidikkathu.. paiyan thaan sikki irukkan pola 🥰🥰😍😍sema ma 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 6 months ago
Posts: 146
Topic starter  

@vsv42 🥰🥰🙏


   
ReplyQuote

You cannot copy content of this page