All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-4

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 3 months ago
Posts: 12
Topic starter  

                                   அத்தியாயம்-4

ரணவேந்தன் தன் ஆர்.வி ஃபைனான்ஸ் லிமிடட் கம்பெனியில் தன்னுடைய அறையில் இருந்தவாறே கண்ணாடியூடே அந்த பரந்து விரிந்த சென்னை சிட்டியை இமைக்காமல் வெறித்துக்கொண்டிருந்தான். சுமார் 29 வயதுடைய ரணவேந்தனின் இந்த வளர்ச்சி அபாரமானது. தன்னுடைய 24வயதில் எம்பிஏவை முடித்தவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிப்பது தான் கனவு. அதுவும் சாதாரணமாக ஆரம்பிக்க நினைக்கவில்லை அவன். எடுத்ததும் பெரிய அடியாக எடுத்து வைக்க தான் ஆசைக்கொண்டான்.

அதன்படிதான் அவன் ஆரம்பித்தது இந்த ஆர்,வி ஃபைனான்ஸ் லிமிடட் கம்பெனி. இதனை ஆரம்பித்த புதிதில் இருந்து இன்றுவரை இந்த பிஸ்னஸ் அவனை கால் வாறியதே இல்லை. அவன் கால் வாற விட்டதில்லை என்று தான் கூற வேண்டும்.இயற்கையிலையே அசாத்திய மன வலிமையையும், உடல் வலிமையையும் ஒருங்கே பெற்றவன் தான் ரணவேந்தன். இந்த நிறுவனத்தை ஆரம்பித்த புதிதில் இவன் தோற்றத்தை பார்த்து பயந்தவர்களை விட இவன் வயதை பார்த்து ஏமாற்ற நினைத்தவர்கள் தான் அதிகம்.

ஆனால் அதற்கு கொஞ்சமும் ரணவேந்தன் விட்டதில்லை.ஆரம்பத்தில் தனக்கென்று மேனேஜரையோ, பாடிகாட்களையோ இவன் வைத்துக்கொண்டதில்லை. இவனே தான் கடனை கொடுக்கவும் செல்வான், வாங்கவும் செல்வான். இவனிடம் கடனாக பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்ற முயன்றவர்களை கை, கால்களை உடைத்தே இந்த நிலைக்கு வந்தான். இன்னொன்று என்னவென்றால் இவன் எந்த அளவிற்கு வட்டியை வசூலிப்பதில் கறாரோ அதே அளவிற்கு நியாயமானவனும் கூட.

தான் ஒருவருக்கு கடனாக கொடுக்கும் போது என்ன வட்டிக்கு பணம் கொடுப்பானோ அதே வட்டிதான் திரும்ப தரும்வரைக்கும். மற்றவர்களை போல கொடுக்கும்போது ஒரு வட்டியும் வாங்கும்போது ஒரு வட்டியும் வாங்கும் கேப்மாறித்தனம் இவனிடம் இல்லை.அதாவது என்னதான் வட்டி தொழில் செய்தாலும் நியாயமான முறையில் செய்கின்றான் அவ்வளவே.

ஆனால் யாராவது இவனை ஏமாற்ற நினைத்தால் அவ்வளவே ரணவேந்தன் ரணம் உண்டு செய்துவிட்டு தான் அடுத்த வேலையே பார்ப்பான். அவன் செய்யும் தொழிலுக்கு கறார் அவசியம் தானே.

இப்படியாக ரணவேந்தன் கண்ணாடியூடே வெளியே வெறிக்க.. அந்நேரம் அவன் அறையின் கதவு தட்டப்பட்டது. அதில் பார்வையை விலக்காமல்.. “எஸ் கமின்.” என்றவன் தனக்கான சேரில் கை ஊன்றியவாறே பார்வையை அகற்றாமல் இருந்தான்.

பாஸ்.. பாஸ்..”என்று அவனின் மேனேஜர் சர்வா ஓடிவர.. அதில் ரணவேந்தனின் இறுக்கமான உதடுகள் விரிந்தது. “என்ன சர்வா.. அந்த ரெட்டி ஓடி வந்துருக்கானா..”என்றான் கம்பீரமாக

அதில் ஒரு நிமிடம் அசந்து போன சர்வாவோ.. “ஹவ் பாஸ் ஹவ்..”என்று வடிவேல் மாடுலேஷனில் கேட்க. அதில் ரணவேந்தன் அவனை திரும்பி முறைத்தான். அந்த முறைப்பில் சர்வாவோ கப்சிப் என்று ஆக. “அவனோட புது ப்ராஜெக்ட்டோட பேஷ்மென்ட் எத்தன டேமேஜ் ஆகிருக்கு..”என்றான் அவன்

அது நாலு வீடு இருக்கும் பாஸ்.. அதுக்கு அப்புறம் நீங்க ஸ்டாப் பண்ண சொல்லிட்டீங்க..”என்றான் சர்வா பொறுப்பாக

ம்ம் யா யா அந்த நாலு மேஷ்மென்ட் உடைச்சதுனால தான் அந்த ரெட்டி குட்டி மாதிரி தவழ்ந்து வந்துருக்கான்...”என்று நக்கலாக கூற அவனின் நக்கலில் சர்வாவின் உதடுகளும் புன்னகையில் விரிந்தது. “ம்ம் நீ என்ன பண்ற சுமார் நாலு மணி நேரம் அந்த ரெட்டிய வெய்ட் பண்ண வைக்கிற.. அந்த நாலு மணி நேரத்துலையும் ஒவ்வொரு வீடோட பேஸ்மென்ட்டும் செங்கல் செங்கலா சிதையனும்..”என்றான் அதுவரை இருந்த இலகு தன்மை காணாமல் போக ஒருவித இறுக்கமும், அதே நேரம் வெறியும் கூடிய முகமாக.

ரணவேந்தனின் வெறிக்கொண்ட முகம் சர்வாவை மிரள தான் செய்தது. அவன் அப்படியே பயந்த பார்வை ரணவேந்தனை பார்க்க. சர்வாவிடம் இருந்து எந்த பதிலும் வராததை உணர்ந்தவனாக தன் பார்வையை கண்ணாடியில் இருந்து மாற்றி சர்வாவை பார்க்க. இப்போது அவன் பார்வை அவனை மிரட்டியது. “ஹா… ஹான் பாஸ் நீங்க சொன்னதையே நான் செய்றேன்..”என்றவனோ ஒரே ஓட்டமாக வெளியில் ஓடிவிட்டான்.

அப்போதும் ரணவேந்தனின் முகம் மாறாமல் இறுக்கமாகவே இருக்க.. அங்கோ அவன் சொன்னது போல அந்த பிரபல கட்டுமான கம்பெனியின் வில்லா டைப் வீடுகளின் இப்போது தான் கட்டப்பட்டுக்கொண்டிருந்த பேஸ்மென்ட்கள் புல்டவுசர் கொண்டு இடிக்கப்பட.. ஏற்கனவே இடிக்கப்பட்ட பத்து வீடுகளின் நிலையை கண் கூடாக பார்த்துவிட்டு ரணவேந்தனின் கையில் விழ ஓடிவந்தவறோ… "நான் உடனே மிஸ்டர் ஆர்.விய பாக்கனும்..”என்று மூச்சிறைக்க ஓடி வந்திருக்க..

அவரை பார்த்து நக்கலாக புன்னகைத்த சர்வாவிற்கோ தன் பாஸின் அறிவை கண்டு அந்நேரத்திலும் மெச்சாமல் இருக்க முடியவில்லை.. “பாஸ் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்காரு.. இப்போதைக்கு அவர பாக்க முடியாது வெய்ட் பண்ணுங்க..”என்று ரணவேந்தன் கூறியது போல அவரை வாசலில் காக்க வைத்தான்.

அவருக்கு நன்றாக தெரிந்து போனது தான் செய்த அவமரியாதைக்கு தான் ரணவேந்தன் திருப்பி கொடுக்கின்றான் என்று. “அய்யோ அப்டி சொல்லாதீங்க மிஸ்டர் சர்வா.. நான் உடனே மிஸ்டர் ஆர்.பிய பாக்கனும்.. கொஞ்சம் என்னை உள்ள அலோவ் பண்ணுங்களேன்..”என்று வயது வித்தியாசம் பார்க்காமல் கெஞ்ச

சர்வாவோ அவரை ஏற்ற இறக்கமாக பார்த்தவன்.. “நீங்க போன்ல பேசுனத கேட்டப்போ இவ்ளோ பணிவு இல்லையே மிஸ்டர் ரெட்டி.. அப்போ உங்க பணிவு எங்க போய் இருந்துது. லண்டன்ல ஈஃபில் டவர்ல விட்டு வச்சிருந்தீங்களா, இல்ல அங்க இருந்து தான் கொண்டு வந்தீங்களா இந்த பணிவ..”என்று சர்வா நக்கலாக கேட்க.

அதில் ரெட்டிக்கு கோவம் எகுறியது. “ஏய் வார்த்தைய அளந்து பேசு..”என்று அவர் எகுற

ம்ம் கண்டிப்பா அளக்கனும் ஆனா நீங்க சொன்ன மாதிரி என் வார்த்தைய இல்ல எங்க பாஸ் இடிக்க சொன்ன உங்க கனவு ப்ராஜெக்டோட அஸ்திவாரத்த..”என்றான் நக்கலாக

அதில் ரெட்டியின் மொத்த தைரியமும் மண்ணில் கவிழ.. “ம்ச்..”என்று தன் தலையில் அடித்துக்கொண்டவர் இப்போது தான் எகுறுவது முக்கியம் இல்லை இங்கு இவர்களிடம் எப்படியாவது பேசி அடுத்த கட்டிடம் இடிக்கப்படாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். பின்னே இதுவரை ரணவேந்தனால் இடித்து தரைமட்டம் ஆன பேஸ்மென்ட்களின் நஷ்டமே பல கோடிகளை நெருங்கிவிட்டதே.. இப்போது அமைதியை தாக்கு பிடித்து ரணவேந்தனை தடுக்க வேண்டும். அவரால் போலீஸிற்கு கூட செல்ல முடியாது. ஏனென்றால் அவர் கட்டிக்கொண்டிருக்கும் இடம் விவசாயிகளிடம் மிரட்டி ஆட்டையை போட்ட இடமாயிற்றே. தேவை இல்லாமல் அந்த இடத்தினை பற்றி ஒரு தகவல் போலீஸிடம் சென்றாலும் பிரச்சனை அவருக்கு தான். அதனால் திருடனுக்கு தேள் கொட்டும் நிலைதான் அவருக்கு.

ரணவேந்தனுக்கு அந்த ரெட்டியை பற்றி அனைத்தும் தெரியும் அவனை எப்படி லாக் செய்வது தொடங்கி அவன் போலீஸிற்கு இதனை கொண்டு செல்லமாட்டான் என்பது வரை. அப்படி போலீஸிற்கே சென்றாலும் ரணவேந்தனால் அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்க முடியும். பின்னே இத்தனை வருடம் இந்த தொழிலில் இருப்பவனுக்கு எப்படி கையாளுவது என்று தெரியாதா என்ன.

ரெட்டி பலமுறை சர்வாவிடம் கெஞ்சி பார்த்துவிட்டார் ஆனால் அவனோ உள்ளே விடுவதாக இல்லை. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ரெட்டிக்கு போன் வந்த வண்ணம் இருக்க.. அந்த ஒவ்வொரு காலிலும் அவரின் புது ப்ராஜெக்ட் தரைமட்டம் ஆகும் செய்திதான் வந்த வண்ணம் இருந்தது. “அய்யோ..”என்று நெஞ்சை பிடித்துக்கொண்டு அதிர்ச்சியில் துடிக்க அதனை சிசிடிவி வாயிலாக தன்னுடைய அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த மானிட்டரில் பார்த்துக்கொண்டிருந்த ரணவேந்தனுக்கோ மனம் அவ்வளவு அமைதியாகி இருந்தது. அவன் கண்களிலோ அவ்வளவு திருப்தி.

ரெட்டிக்கு போன் செய்தவர்களில் பாதி பேர் அவரிடம் வீடு கட்டி தருமாறு பல லட்சங்களை தூக்கி கொடுத்த அவரின் கஸ்டமர்கள் தான். “வாட்ஸ் கோயிங் ஆன் மிஸ்டர் ரெட்டி.. நாங்க புக் பண்ணுன வில்லாவோட பேஸ்மென்ட் எல்லாமே இடிஞ்சி கிடக்கறதா தகவல் வருதே.. அங்க என்னதான் நடக்குது..”என்று ஒவ்வொரு பணக்கார க்ளைன்ட்களும் போன் செய்து அவரை டார்ச்சர் செய்தனர்.

இல்ல சார் அப்டிலாம் எதும் இல்ல.. உங்க வீடுக்கு ஒன்னும் இல்ல..”என்று ரெட்டி தடுமாற்றத்துடன் கூற.

அப்போ எங்களுக்கு வந்த வீடியோ விட்னஸ் பொய்னு சொல்றீங்களா..”என்று பட்டென்று உடைத்தார்கள் அவர்கள். இதுவும் ரணவேந்தனின் வேலை தான் என்பதை நன்றாக புரிந்து போனது அவருக்கு. பல்லை கடித்து கோவத்தை அடக்கிக்கொண்டவறோ "இல்ல மிஸ்டர் அகர்வால் அது ஒரு சின்ன மிஸ்டேக் அதுனால தான் அந்த பேஸ்மென்ட இடிக்க வேண்டியதா போச்சி...”என்று அவர் இழுக்க..

ஓஓஓ கிட்டதட்ட ஒன்றை கோடி உங்ககிட்ட கொடுத்துருக்கேன் அட்வான்ஸா.. அந்த ஒன்றை கோடிக்கு தான் இந்த பேஸ்மென்ட்னு சொன்னீங்க.. அப்போ ஒன்றை கோடி கொடுத்து கட்டுன பேஸ்மென்ட் இடிக்கிறது உங்களுக்கு சின்ன மிஸ்டெக் இல்லையா..”என்றார் அவர்.. அவரின் இந்த நியாயமான கேள்வி ரெட்டியை மிரள வைக்க.. “அப்டி.. இல்ல மிஸ்டர் அகர்வால்..”என்று ஏதோ கூற வர.. “ஷட் அப் மிஸ்டர் ரெட்டி.. ஐ டோன்ட் வான்ட் டு நோ யுவர் சில்லி ரீசன்.. ஐ வான்ட் மை ட்ரீம் ஹவுஸ். அன்ட் இனி பேஸ்மென்ட்கான பணத்த நான் தரமாட்டேன்.. சரியா கட்டாதது உங்க மிஸ்டேக் அத சரி செய்ங்க.. இன்னும் சிக்ஸ் மந்த்ல கான்ட்ராக்ட் சைன் பண்ண மாதிரி எனக்கு வீடு ஃபினிஸ் ஆகி வரனும்.. இல்லனா ஐ ஃபைல் தி சூட் அகைன்ஸ்ட் யூ..”என்றவர் வேறு எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் போனை கட் செய்ய… ரெட்டி தான் போன் வருவதற்கேல்லாம் பதில் சொல்லி சொல்லி டயர்ட் ஆகி போனார்.

இதனை இதழ்கள் விரிய ரசித்த ரணவேந்தனோ.. “இந்த ஆர்.விக்கிட்ட வச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு புரிஞ்சிக்கனும் ரெட்டி… இப்போ புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..”என்றவன் சரியாக நான்கு மணி நேரம் கழித்தே ரெட்டியை உள்ளே அழைத்தான். அந்த நான்கு மணிநேரமும் ரெட்டிக்கு மினி ஹார்ட் அட்டேக்கே வந்து போனது.

மே ஐ கம்மின் மிஸ்டர் ஆர்.வி"என்று ரெட்டி கதவினை தட்ட.. ரணவேந்தனோ முதலில் அதனை காதில் வாங்காமல் அலட்சியம் செய்தவன் ஐந்து நிமிடம் கதவிற்கு அருகிலே ரெட்டியை பாடாய் படுத்தினான். ரெட்டி வந்த கோவத்திற்கு வேகமாக கதவினை தட்ட. அப்போது தான் காதில் வாங்குவது போல. “எஸ் கம்மின்.”என்றான் கம்பீரமான ஆளுமை குரலில். ரெட்டிக்கு அவனின் ஆளுமையான குரல் கொஞ்சம் கலவரப்படுத்தியது தான். ஏனடா இவனிடம் வைத்துக்கொண்டோம் என்று தன்னையே திட்டிக்கொண்டவாரே உள்ளே வந்தார்.

ரெட்டி ரணவேந்தன் மீது இருக்கும் கோவத்தை காட்டாமல் மறைத்தவாறே பதறிக்கொண்டு உள்ளே வர.. ரணவேந்தனோ தன்னுடைய சேரில் கம்பீரமாக உட்கார்ந்தவன் கால் மீது கால் போட்டுக்கொண்டு சாவகாசமாக சேரினை ரோலிங் செய்துக்கொண்டிருந்தான். ரெட்டிக்கு ரணவேந்தனின் முகத்தில் தோன்றிய நக்கல் சிரிப்பை கண்டு வெறி ஏற ஆனால் அதனை வெளிக்காட்டாமல்… "என்ன ஆர்.வி நீங்க இப்டி திடுதிப்புனு பேஸ்மென்ட் எல்லாத்தையும் இடிக்கிறீங்க.. என் கஸ்டமெர்ஸுக்கு என்னால பதில் சொல்ல முடில..”என்று அவர் கதறாத குறையாக கத்த…

அதில் ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்துடன் தன் காதை குடைந்தவன்.. “ரெட்டி ப்ளீஸ் காம் டவுன் இப்போ என்ன நடந்ததுனு இப்டி கதறுறீங்க..”என்று ஒன்னும் நடவாததை போல இல்லை இல்லை ஒன்றையும் நடத்தாதை போல ரணவேந்தன் கூலாக பேச.. ரெட்டிக்கு தான் ஆத்திரம் அதிகமாகியது. “ப்ளீஸ் ஆர்.வி இதுக்கு மேல என் ப்ராஜெக்ட் மேல உங்க ஆளுங்கள கை வைக்க வேணாம்னு சொல்லுங்க..”என்று மெல்லிய குரலில் கூற..

ஹாஹாஹா… அது எப்டி ரெட்டி சொல்ல முடியும்.. இன்னும் உங்ககிட்ட இருந்து எனக்கான அமெவுன்ட் வரலையே..”என்றான் தன் சேர்ட்டை அட்ஜெஸ்ட் செய்தவாறே.. அவனின் கூலான நிலை அவருக்கு அவன் மீது வன்மத்தை கூட்ட.. உடனே தன் கோர்ட் பேக்கெட்டில் இருந்து செக் புக்கை எடுத்தவர் அதில் அவனுக்கு அசலுடன் கூடிய வட்டியையும் எழுதி அவனிடம் வேகமாக கொடுக்க… அவனோ அதனை வாங்காமல் தன் போனை எடுத்தவன்.. “சர்வா கம் டு மை ரூம்..”என்று கம்பீரமாக அழைத்தவன் ரெட்டி நீட்டிய செக்கை பார்க்க கூட இல்லை.

ரெட்டி அவனிடம் தன் கையினை நீட்டிய வண்ணம் இருக்க.. அந்நேரம் சர்வா தான் வேகமாக கதவினை திறந்துக்கொண்டு வர.. “சர்வா மிஸ்டர் ரெட்டி நம்மகிட்ட வாங்குன கடன வட்டியோட திருப்பிக்கொடுக்கறாரு வாங்கிக்கோ..”என்று ரெட்டியை கேலியாக பார்த்தவாறே கூற ரெட்டிக்கு ஆத்திரம் அதிகமாகியது. ரணவேந்தனோ ரெட்டியை நக்கலாக பார்த்தவன் பார்வையில் "நீ என்னை ஏமாத்துவ. திரும்ப வந்து அதே ஏமாத்துன பணத்த தூக்கி கொடுப்ப அத வாயமூடிட்டு கைய நீட்டி வாங்க நான் என்ன அவ்ளோ கேவலமானவனா."என்ற அர்த்தம் இருக்க ரெட்டிக்கு உடல் ஒரு நிமிடம் நடுங்கியது அவன் பார்வையில்

சர்வா அவர் கையில் இருந்து செக்கை வாங்கிக்கொள்ள… "வெல் மிஸ்டர் ரெட்டி உங்களுக்கு தொழில் பக்தி மட்டும் இருந்தா பத்தாது கொஞ்சமாச்சும் நியாயம், நேர்மை வேணும்.. கடனா வாங்குன பணத்த கொடுக்காம அலைய விட்டுட்டு நீங்க குடும்பத்தோட லண்டன் போய் எஞ்சாய் பண்றதுக்கா நாங்க இங்க பட்டறைய போட்டு உட்கார்ந்திருக்கோம்.. அலட்சியம் தொழிலோட மிகப்பெரிய எதிரி.. அத புரிய வைக்க தான் இன்னிக்கி உங்களுக்கு சில டெமோ காட்ட வேண்டியது இருந்துச்சி. நீங்க என்னை அலைய விட்டதுக்கும், அலட்சியப்படுத்துனதுக்கும் உங்களுக்கான தண்டனை உங்களோட எட்டு வீடோட பேஸ்மென்ட் இடிச்சதுக்கான செலவ நீங்களே பண்றதுதான்...”என்றவன் புயல் வேகத்தில் எழுந்தவன் தன் கையை கூப்பியவன்.. “வெல்..."என்று இழுத்தவன்.. தன் கன்னத்து குழிகள் தெரிய புன்னகைத்தவன் "நன்றி மீண்டும் வருக..”என்றான் நக்கல் புன்னகையுடன்..

அந்த நக்கல் புன்னகையை வெறியுடன் பார்த்தவாறே தப்பித்தோம், பிழைத்தோம் என்று அங்கிருந்து சென்றார் ரெட்டி.. ரணவேந்தனின் முகமோ வெற்றியில் திளைத்தது. “ப்ளடி ஃபூல்..”என்று உதடுகள் முணுமுணுக்க அதே கம்பீரத்துடன் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

வசிகா தன் அறையின் பால்கனியில் உட்கார்ந்து பெங்களூர் சிட்டியின் இரவு அழகை வெறித்தவாறே உட்கார்ந்திருக்க.. அப்போது அவளின் போன் ஒலி எழுப்ப.. இந்நேரத்தில் யார் என்பதை அறிந்துக்கொண்டவளின் இதழ்களோ புன்னகையில் விரிந்தது.

 

(வட்டி, வசி)


   
ReplyQuote

You cannot copy content of this page