All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 18

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

அத்தியாயம்: 18

 

பம்பாய் படத்தை கிட்டத்தட்ட இருபது முறையாவது பார்த்திருப்பாள் கோகோ.‌ அதன் பாடல் வரிகள் பை ஹார்ட் என்று சொல்லும் அளவிற்கு மனப்பாடம்.

 

எல்லாம் ஏன் என்று தெரியுமா?. 

 

மணிரத்தினத்தின் தீவிர விசிறியா? என்றால் கிடையாது. ஏஆர் ரகுமானின் பக்தையா? என்றால் பாதிக்கு பாதி உண்மை என்பாள். அரவிந்த் சாமி தான் அவளுடைய க்ரெஸ்ஸா என்றால் கிடையாது. 

 

இப்போது அவருக்கு முகத்தில் சில கோடுகள் விழுந்து விட்டது அதனால் க்ரெஸ் என்ற பதவியில் இருந்து துரத்தி விட்டு, பிடிக்கும் என்ற லிஸ்டில் வைத்திருக்கிறாள்.

 

பின் ஏன் இருபது முறை பார்க்க வேண்டும். அதிலும் ஏன் பூவுக்கென்ன பூட்டு என்ற குல்லா குல்லா பாட்டை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும்?. 

 

அதில் gata way of India என்றுச் சொல்லப்படும் கட்டிடத்தின் முன் கூடியிருக்கும் புறாக் கூட்டத்தின் மத்தியில் ஒடி வரும் இரு குழந்தைகளை ரசிக்க. 

 

அந்தக் குழந்தைகள் போல் பறவைக் கூட்டத்திற்கு மத்தியில் அதை விரட்டியபடி ஓடி ஆட வேண்டும் என்று யாருக்குத் தான் ஆசை இருக்காது. 

 

நம்‌ கோகோவிற்கும் அது உண்டு. இப்போது அந்த ஆசை இளவேந்தனால் நிறைவேறியும் விட்டது. 

 

கையில் இருக்கு தானியத்தை அவைகளுக்கு வீசி, அதை கலைத்து பறக்க வைத்தது, அதற்கு உணவு குடுப்பது போல் தன் கரத்தை நீட்டி, அதில் இருக்கும் தானியத்தைக் கொத்தித் தின்ன வரும் புறாவை அருகில் ரசித்து என சனிக்கிழமையை அற்புதமாகக் கழித்துக் கொண்டிருக்கிறாள். 

 

"அத்தான் புறாக்குப் போட கோதும தீந்திடுச்சி. வாங்கிட்டு வாங்க." எனத் துரத்த, 

 

"போதும் வா." என்றவனோடு நடக்கவில்லை அவள். மாறாக இழுத்துச் செல்லப்பட்டாள். 

 

"இன்னும் கொஞ்ச நேரம் அத்தான். என்னோட கைல இருக்கு கோதுமைய அது கொத்தும் போது அத்தோட அலகு என்னோட கைய குத்துச்சி. ஆனாலும் எனக்கு வலிக்கவே இல்லை. நல்லா இருந்தது." 

 

"நீ பாட்டுக்கு அதுக்கு சாப்பாட போட்டிட்டு போய்டுவ. அது அதத் தின்னிட்டு கண்ட இடத்த நாஸ்தி பண்ணி வைக்கும்." 

 

"அது வாழ்ற இடத்துல நாம வாழ்றோம். அப்ப அனுசரிச்சு தா இருக்கனும். அதுக்காக சாப்பாடு குடுக்காம இருக்கலாமா?. தப்பு. அது செத்துப் போய்டும்." என இளவேந்தனை கொலைகாரனாக சித்தரித்து பேசியபடியே அவனின் இழுப்பிற்கு சென்றாள்.

 

'இவா ஒருத்தி ஒரு தேரம் சாப்பாடு குடுத்ததுனால தா இத்தன பறவையும் உயிர் வாழுதுன்னு நினப்பு.' என முணுமுணுத்தாலும் எதுவும் சொல்லாது ஊரை வளம் அழைத்துச் சென்றான்.  

 

அவனின் மற்ற முறைப் பெண்களைக் காட்டிலும் கோகோவின் மீது அவனுக்கு பிரியம் அதிகம். நட்பும் நெருக்கமும் உண்டு. 

 

சிட்டியில் வளர்ந்த அவனுக்கு மங்கைகளுடன் பேசுவதும் பழகுவதும் சில சமயம் உரியையோடு கரம் பற்றுவதும் தவறாகப் பட்டதே இல்லை. 

 

கோகோவை தவிர்த்து மற்ற ஐவரிடம் அவன் பேசச் சென்றாலே வயிற்றில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டு விட்டு முகத்தை வெட்கம் படுகிறேன் என்று கவிழ்த்துக் கொள்வர். அத்தோடு அவர்களின் உடல் மொழிகளும் ஒரு ஆணிடம் பேசுகிறோம் என்ற நாணத்தை காட்டும். 

 

அத்தை மகன் என்ற அசௌகரியத்துடனும் கூச்சத்துடனும் எதிர்கொள்ளும் பழக்கமெல்லாம் கோகோவிற்கு கிடையாது. அத்தோடு அவளின் அண்ணனிடம் கிடைக்காத பாசத்தையும் பிரிவையும் எதிர் பார்த்தே இளவேந்தனிடம் அவளின் பழக்கம் இருக்கும். அவனின் தீண்டல் ஒரு நாளும் அவளுள் ஹார்மோன்கள் மாற்றத்தை தந்தது இல்லை. அதுவே அவனுக்கு கோகோ மீதிருக்கும் நட்பை அதிகப்படுத்தியது. 

 

'அவள் உன்னை மனிதனாகக் கூட மதிக்கவில்லை என்பதெல்லாம் வேறு விசயம்.'

 

குயின்ஸ் நெக்லஸ் என்று அழைக்கப்படும் மும்பை கடற்கரை பகுதியில் அமர்ந்து கொண்டு, மாலை மங்கிய பொழுதில் விழாக்கோலம் பூண்டு நின்ற கடற்கரை ரம்மியமாக இருக்கும் காட்சியை ரசித்துக் கொண்டிருந்தனர். 

 

"ஒன் வீக்காச்சி நீயும் மும்பைவாசியா மாறி. How is your working experience?" 

 

"Not bad அத்தான். முதல் ரெண்டு நாள் தான் அந்த வனிஷா எனக்கு எதையும் சொல்லிக்குடுக்காம, நா என்ன பண்ணனுங்கிற இன்ட்ரெக்ஷன் தராம. காம்பஸ் ஃபாக்ஸ்ல இருக்குற டிவைடர் மாறி என்ன வச்சிருந்தா. பட் நா விடலயே. நா போய் ரிபேக்கா மேம் கிட்டயே ஸ்டெயிட்டா கேட்டுட்டேன். 'என்ன எதுக்கு ஆஃபீஸ்ல வச்சிருக்காங்க'ன்னு." என்று அலுவலகத்தில் நடந்ததைக் கூறினாள் கோகோ. 

 

இரு தினங்கள் எதுவுமே செய்யாமல் லேப்டாப்பில் கேம் விளையாடிக் கொண்டும், தன் இன்ஸ்டாவிற்கு கன்டென்ட் தயார் செய்து கொண்டு இருந்தவளின் முன் ரிபேக்கா வந்து நின்றாள். 

 

"யாருக்காக இந்த கன்டென்ட்.? என்ற கேள்வியுடன். 

 

"என்னோட இன்ஸ்டாக்காக." என்ற போது ரிபேக்காவிற்கு கோவம் வந்து விட்டது. அவள் திட்ட வாய் திறக்கும் முன், 

 

"நா என்ன பண்ணனும்னு யாருமே இன்ட்ரெக்ஷன் குடுக்க மேம். ரெண்டு நாளா நானே வெட்டியாத் தா இருக்கேன். எனக்கே என்ன நினைச்சி கொஞ்சம் வெட்கமாத்தா இருக்கு. உங்க கிட்ட சம்பளம் வாங்கிட்டு உங்களுக்காக வேல செய்யாம என்னோட சொந்த வேலைய பாத்திட்டு இருக்குறது. ஆனா என்ன பண்ணறதுன்னு தெரியலன்ன என்ன பண்ண முடியும்னு சொல்லுங்க?.

 

என்னோட திறமையப் பாத்து தான் எனக்கு வேலை குடுத்ததா ரெண்டு நாளைக்கி முன்னாடி கூப்பிட்டு வச்சி சொன்னிங்க. பட் அத காட்டவே வாய்ப்பு குடுக்கலயே நீங்க." என

 

 'என்னைப் போல் ஓர் திறமைசாலியிடம் வேலை வாங்கும் திறமை உங்களுக்கு இல்லை.' என்ற ரீதியில் பேசினாள் கோகோ. 

 

'ஒரு மணி நேரம் லேட்டா வந்ததுக்கு ஒன்ற நிமிஷமாவா அட்வைஸ் பண்ணுவிங்க. ஹிம்... ' என அன்று பேசிய ரிபேக்காவிற்கு ரிவென்ச்சாக பேசியவளை கூர்ந்து நோக்கியவள் இனி இதுபோல் நடக்கக் கூடாது என வனிஷாவை எச்சரித்தாள்‌. 

 

பின் கோகோவை தன்னுடன் வருமாறு பணித்து விட்டு கேபினுக்குள் சென்றாள். 

 

நிழல் போல் ரிபேக்காவின் பின் சென்ற கோகோவிடம், "சோ உன்னோட டெலன்ட்ட காட்ட நா வாய்ப்பு தரல. ஆம் ஐ கரெக்ட்?. " என சில ஏற்ற இறக்கங்களுடன் கேட்க, மற்ற யாராக இருந்தாலும் 'தப்பு தாங்க. மன்னிச்சுக்கங்க.' என சரணடைந்திருப்பர். 

 

ஆனால் அவளின் முன் நிற்பது யாரு? நம்ம கோகோ இல்லயா! அதனால்,

 

"எஸ் மேம். எனக்கான ஆப்பர்சூனிட்டியத் தேடித்தா வந்தேன். பட் அது கிடைக்கவே கிடைக்காது போலே." 

 

"ஃபைவ் க்ளைண்ட்ஸ்.‌"

 

"ஹாங்.. "

 

"இந்த கம்பெனிக்காக அஞ்சி பெரிய கம்பெனியோட மார்கெட்டிங் டீல்ஸ்ஸ உன்னால கொண்டு வர முடிஞ்சா ஒத்துக்கிறேன் நீ திறமையானவ தான்னு."

 

"அஞ்சி என்ன மேம். நா....." என்றபோது இடைமறித்தாள் ரிபேக்கா. 

 

"என்னோட க்ளைண்ட் வெர்த் என்னென்னு தெரியுமா?. மினிமம் 1 கோடிக்கு கீழ மூலதனம் இருக்குற எந்த ஒரு கம்பெனிக்கும் நா இதுவரை மார்க்கெட்டிங் பண்ணது இல்ல. சோ நீயும் அந்த மாறியான க்ளைண்ட தா கூட்டீட்டு வரனும். Without using my name." 

 

'எது ஒரு கோடியா!!. ஒரு கோடி ரூபா போட்டு தொழில ஆரம்பிக்கவன்ட்ட போய் நா பேசி மார்க்கெட்டிங் பண்ணித்தாறேன், வாங்கன்னு கூட்டீட்டு வரனுமா?. சரி வருவோம். ' என தலையசைத்து வைத்தாள். 

 

"உனக்கு நா ஆறு மாசம் டயம் தர்றேன். அதுக்குள்ள டார்கெட்ட கம்ப்ளீட் பண்ணிட்டா வேலைல கன்டின்யூ பண்ணலாம். இல்லன்னா.... புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஹாங் டார்கெட் வேற உன்னோட ஆஃபிஸ் ஒர்க் வேற. ரெண்டையும் கவனிச்சாகனும். நோ எஸ்க்யூஸ். யூ மே கோ நௌ." என்று துரத்தி விட்டாள்.

 

'எது ஆஃபீஸ்ல வேலையும் பார்த்து, க்ளைண்டும் பிடிக்கனுமா!! ஹவ்... ' என்று புலம்பினாலும் சாவலை ஏற்று விட்டு வழக்கம் போல் தன் sign board-டின் முன் நிற்கிறாள்.

 

"ஆனாலும் உனக்கு இந்த வாய்க்கொழுப்பு மட்டும் குறையவே செய்யாதுல. எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா அவ. அவட்ட போய் சவுடாலா பேசி சவால் விட்டுட்டு வந்திருக்க." இளவேந்தன். 

 

கையில் பாவ் பஜ்ஜி தட்டை ஏந்திய படி வந்து அருகில் அமர்ந்தான். 

 

" ஆமா யார் இருக்காங்கிற தைரியத்துல நீயெல்லாம் சவால் விடுற?."

 

"நீங்க இருக்குற தைரியம் தான் அத்தான். இத்தன வர்ஷமா இங்க வேலை பாக்குறிங்க. உங்களுக்கு தெரியாத ஆள் இருப்பாங்களா! பெரிய பெரிய ஆளுங்கள்லாம் உங்களோட கைக்குள்ளன்னு எனக்கு தெரியும்." என்க, கடுப்பாகிப் போனது அவனுக்கு.

 

" நீ சொல்ற அத்தன பொய்யவும் மெய்னு மைக் பிடிச்சி சொல்ற அளவுக்கு நா வெட்டியெல்லாம் கிடையாது. எனக்கு‌ வேற வேலை இருக்கு. அத்தோட எனக்கு யாருக்கிட்டயும் உதவின்னு கேட்டு பழக்கம் இல்ல."

 

" இட்ஸ் ஓகே. Only lonely tigress ஆ நா க்ளைண்ட்ட கூட்டீட்டு வந்து இது வாய்ச்சவுடால் இல்லன்னு நிறுபிப்பேன். அப்பத் தெரியும் இந்த கோகோ யாருன்னு." என தட்டை வாங்கிக் கொண்டு திரும்பிக் கொண்டாள். 

 

" ஓய்... உனக்கு மட்டுமில்ல. எனக்கும் தான். குடு அத." என அவளின் கையில் இருந்த தட்டில் அவனுக்கும் பங்கு உள்ளது என்பது போல் பாதி பன்னை பிடுங்கிக் கொண்டான் இளவேந்தன். 

 

"அத்தான்... " என சிணுங்கினாள் கோகோ. 

 

"வாங்கித் தந்ததே ஒரு ப்ளேட். அதுல பங்கு கேக்குறது ரொம்ப தப்பு. வேணும்னா உங்களுக்கு ஒன்னு வாங்கிக்கங்க." 

 

"வாங்கிக்கலாம். ஆனா நைட் டின்னருக்கு நல்ல ஹோட்டல்ல டேபில் புக் பண்ணிருக்கேன். இத வச்சி வயித்த அடச்சிட்டேன்னா தாஜ் ஹோட்டல தர்ற‌ டின்னருக்கு இடம் இருக்காது."

 

"தாஜ் ஹோட்டலா!!"

 

"ம்..."

 

"அந்தா இருக்கே அதுவா!!" என கரம் நீட்டி கேட்க, அவன் ஆம் என தலையசைத்தான். 

 

"வாவ்... சூப்பர் மேட்டர் அத்தான். " என்றபடி அவனை அணைக்கப் போக, வழக்கம் போல் அவன் ட்ராஃபிக் போலிஸ்ஸாகிப் போனான்‌. 

 

அத்தனைப் பிரம்மாண்டமான ஹோட்டல் அது. 

 

அதன் அழகையும் கலைத்திறனையும் வியந்த படி வந்தவளை கீழே விழுந்து விடாமல் காப்பாற்றி அழைத்து வந்தான். 

 

அந்த ஹோட்டலின் வாடிக்கையாளராக இருவரயும் அந்த ஹோட்டல் ஊழியர்கள் ராஜ மரியாதை தந்து சிறப்பாக கவனித்துக் கொண்டனர்.

 

"இந்த ஹோட்டலோட மார்க்கெட்டிங் டீம் யாருன்னு தெரியுமா அத்தான்." 

 

"எதுக்கு? உனக்கு க்ளைண்டாக்கவா?" என்றவனிடம் ஆம் என்றவளின் வாயை மூடும் படி உணவு வகைகள் பறிமாறப்பட்டது. அனைத்தையும் நிதானமாக சுவைத்து முடித்து விட்டு, அங்கிருந்த காரிடாரில் காலார நடக்க,  

 

"என்ன மன்னிச்சிடுங்க அத்தான். உங்களுக்குள்ள இப்படி ஒரு கர்ணன் ஒழிச்சிருக்கான்னு தெரியாம உங்கள நா கண்ட படி திட்டிட்டேன். ஸாரி. " என கண்களால் கொஞ்சி மன்னிப்பை வேண்டினாள் கோகோ.

 

"எதுக்கு திட்டினா."

 

"அது லட்சத்துல சம்பளம் வாங்கியும் உங்க ரிலேட்டிவ்வான எங்களுக்கு இதுவர எதுவும் செஞ்சது இல்ல. ஏன் பாம்பேல இருந்து ஒரு பானிப் பூரி கூட வாங்கிட்டு வந்தது இல்லயா! அதா உங்க மனசு வெயில்ல காய வச்ச கருவாடு மாறி சுருங்கி ஈரமில்லாம போயிடுச்சின்னு.... " என்றவளை முறைக்கவும். 

 

"இப்ப ஒத்துக்கிறேன். உங்களுக்கு ஈரம் இருக்குன்னு. எவ்ளோ பெரிய ஹோட்டலு. எத்தன வகையான சாப்பாடு. எல்லாமே நல்லா சூப்பரா இருந்தது. ஆனா ஏன் இந்த திடீர் கரிசனம்.?" என்றாள் சந்தேகமாக.

 

"யார் கண்டா! நம்ம வீட்டாளுங்க முன்னாடி நீ ஒரு பொய் சொன்னியே. அது நடந்தாலும் நடந்திடும். அதா என்னோட வருங்கால மனைவிக்கு ஒரு ஸ்பெசல் ட்ரீட்." என்றவனை அடிக்க ஏதுவாய் எதாவது கிடைக்காத எனத் தேடல் தொடங்கி விட்டாள். 

 

"யூ.... மை ஹஸ்பெண்ட்... சான்ஸே இல்ல. என்னோட ட்ரீம் பாய்க்கான க்வாளிபிகேஷன் கொஞ்சோண்டு கூட கிடையாது உங்க கிட்ட. உங்க ஒன் சைடு லவ்வ திருப்பிப் போட்டு டபுள் சைடா ஆக்கலாம்னு பார்த்தா! நீங்களே அதுக்கு வில்லனா இருக்கிங்களே. நில்லுங்க அத்தான்." என அவள் ஆவேசமாக அவனை‌ துரத்த, அவன் ஓட என அந்த நாள் மட்டுமல்ல அடுத்த வந்த வார இறுதியும் சிறப்பாக கழிந்தது இருவருக்கும். 

 

பாவம் ஓடிப் பிடித்து விளையாடிய இருவரையும் ஒரு ஜீவன் முறைத்தபடி பின் தொடர்ந்ததை கவனிக்க வில்லை. 

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 19

https://kavichandranovels.com/community/topicid/246/

 

This topic was modified 2 days ago by VSV 11 – கள் விழி மயக்கம்

   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
 

@vsv11 வேற யாரு துகியா தான் இருக்கும் 😹😹😹😹 சூப்பர் 👌👌👌 எபி விழி சிஸ் 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

@vsv4 🥰🥰🥰🥰🥰🥰 thank you தேவிசை சிஸ்.


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 3 months ago
Posts: 29
 

Intha thugi enna avana follow pannittu irukkala.. ithula pesunathum pesittu possesive vera varuthu.. super sis 🥰🥰


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

@vsv42 நன்றி சகோ 🥰🥰🥰🥰🙏


   
ReplyQuote

You cannot copy content of this page