About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 17
வழக்கம் போல் மணி ஆறைத் தொட, மொட்டென இருந்த தன் கண் மணிகளை, விழித்திரையை விலக்கி மலரச் செய்தாள் கோகோ.
"ஆண்டவா! இந்த நாள் இனிய நாளாக இருக்கட்டும்." என முணுமுணுத்தவளின் கைகள் தானாக குழாயைத் திறந்து விட, கால்கள் பால்கனிக்குச் சென்றது.
கரம் விரித்து சோம்பல் முறித்தவள், "சத்யா எத்தன மணிக்கு எழுவான்னு தெரியலயே?" என்று நேற்று போல் இன்றும் சத்யாவின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் அவனின் வீட்டுப் பால்கனியை நோட்டமிட, அது ஆரவாரமின்றி கிடந்தது.
அப்போது அவளின் திண்டில் இரவு சஜித்திற்கு அவள் குடுத்த டிப்பன் பாக்ஸ் இருந்தது. அவள் கேட்டுக் கொண்டது போல் சுத்தம் செய்திருந்தான்.
அந்த டப்பாவிற்குள் அவள் எழுதிய கடிதமும் இருந்தது.
"என்ன லெட்டர திரும்பி குடுத்திருக்கான்." என காகிதத்தை முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்தவள்,
" ஓ!! பின்னாடி எதோ எழுதிருக்கான். என்னதது?" என்றபடி அதை வாசிக்கத் தொடங்கினாள்.
(அவன் இங்கிலீஷ்ல எழுதி வச்சத நான் தமிழ்ல மொழி பெயர்த்து சொல்றேன்)
" ஃபுட் வேஸ்ட் பண்ணக்கூடாதுக்கிற உன்னுடைய கொள்கை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. பட் அந்தக் கொள்கைய ஃபாலோ பண்ணனும்னா தயவுசெய்து உன்னுடைய வீட்டுல இருக்குற சமையலறைக்கு சீல் வச்சிடு. அது தான எல்லாருக்கும் நல்லது." என்று எழுதியிருக்க, அவளுக்கு மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்கத் தொடங்கியது.
அவளின் கைமணத்தை அவன் குறை சொல்லியதால் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.
அவளின் புஷ்வாண மூச்சிக்குக் காரணம். அந்தக் கடிதத்தை எழுதியவனின் கையெழுத்து.
"இங்கிலீஸ்ல டயிப் பண்ணும் போது font ஒன்று இருக்கும். அதுக்கு பேரு என்னென்னா billy argel. அந்த ஸ்டெயில்ல அச்சடிச்ச மாறி எழுதி வச்சிருக்கான்!.
பொதுவா பசங்க கையெழுத்து இன்க்ல விழுந்து எந்திரிச்சிப் போன ஈ யாட்டம் தான இருக்கும். இளாத்தான் கையெழுத்து கூட அப்படித்தான். இவனோடது இவ்ளோ!! அழகா இருக்கு. அதுவும் என்னித விட அழகா இருக்கே." என்ற வயிற்றெரிச்சல் தான் அவளின் குழாயடி மூச்சிற்கு காரணம்.
லெட்டரை மடித்து வைத்து பத்திரப்படுத்தியவள் கண்களுக்கு அந்தக் கையெழுத்தின் சொந்தக்காரன் ஜாக்கிங் முடித்து விட்டு அப்பார்ட்மெண்ட்டை நெருங்கும் காட்சி தெரிந்தது.
"சத்யா!… ஓய் சத்யா!!…" என அவளும் கத்திக் கத்தி கை ஆட்டிப் பார்க்க, எட்டாவது மாடியில் இருக்கும் அவளின் கீச்சுக் குரல் காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு ஓடி வந்த சஜித்தை சென்றடையவில்லை.
"கொய்யால கூப்பிடுறேன். என்னென்னு நிமிந்தா பாக்க மாட்டேங்கிற!." எனக் கருவியவள் அவள் வீட்டில் அனாமத்தாக வளர்க்கப்பட்டிருந்த செடியில் இருந்த கற்களை எடுத்து தன் ரப்பர் பேண்டை கவணாக மாற்றி வீசினாள்.
இது தான் முதல் முறை. எதுவென்றால் குறி பார்த்து எரிவது.
அருகில் இருக்கும் குப்பைத் தொட்டியில் கூட கசக்கிய காகிதத்தைச் சரியாக தூக்கி வீசத் தெரியாதவள், எரிந்தாள். சஜித்தின் மீது எரிகிறேன் என்று அவனின் அருகில் வந்து கொண்டிருந்தவரின் மீது சரியாக தவறாக எரிந்து விட,
அவரோ தலையை சுற்றிச் சுற்றி பார்த்தார், யார் எதை எரிந்தது என்று. நல்ல வேலையாக கல்லின் அளவு சிறியதாக இருந்து அவளை காப்பாற்றியது. இல்லையேல் பஞ்சாயத்து கூட்டப்பட்டிருக்கும். அதுவும் மராட்டியில் பேசி தீர்ப்பு வழக்கப்பட்டிருக்கும். என்ன தண்டனை என்று புரியாமலேயே அதை அனுபவித்திருப்பாள். தப்பித்து விட்டாள்.
அவர் தலை தூக்கிய போதே இவள் தலைமறைவாகி விட்டாள். வேகவேகமாக குளித்து உடை மாற்றியவள், "இன்னைக்காது கரெக்ட் டயத்துக்கு போய் ரிபேக்கா மேம் கிட்ட திட்டு வாங்காமா பாத்துக்கனும்." என்ற சபதத்தை ஏற்றபடி தோலில் பேக்கை மாட்டிக் கொண்டு ஓடினாள்.
"சத்யா!… ஓய் சத்யா!…" என அதிகாலையில் அவள் அழைத்தது கேட்கவில்லை. ஆனால் இப்போது கேட்டது.
அது அவனின் நடையை நிறுத்தி திரும்பி பார்க்கவும் வைத்தது.
"சத்யா இங்க." எனக் கரம் உயர்த்தி காட்டி, வருமாறு அழைத்தாள் கோகோ.
" நா உம்பேர காலைல இருந்து கத்திட்டு இருக்கேன். கூப்பிட்டா திரும்பி பாக்க மாட்டியா?" என மிரட்ட,
"கேட்டிருந்தா கண்டிப்பா திரும்பி பார்த்திருப்பேன். எப்ப கூப்ட. "
"நீ ஜாக்கிங் போய்ட்டு வீட்டுக்கு வந்திட்டு இருந்தப்ப. ஆமா எத்தன மணிக்கு எந்திரிப்ப.? ஆறு மணிக்கு ஜாக்கிங்க முடிச்சிட்டேன்னா! அஞ்சி மணிக்கே ஓட ஆரம்பிச்சிடுவியா?" என சந்தேகம் கேட்டவள்,
"நைட் பத்து மணிக்கி வீட்டுக்கு வர்ற. அங்க ரெண்டு, இங்க அஞ்சி. ஆக மொத்தம் ஏழு மணி நேரம் தான் தூங்குற. சரியா?
இப்படியே இருந்தா உன்னோட ஹெல்த் பாதிக்கப்படும். நல்லா தூங்கி எழு சத்யா. இந்தா இத சாப்பிடுறியா. நா சமைக்கல. நம்பி வாய்ல வைக்கலாம். நம்ம மாஸ்டர் சுட்ட இட்லி. " என தன் தட்டில் இருந்த இட்லியை நீட்ட, அவன் முறைத்தான்.
"உனக்கு இட்லி பிடிக்காதா. இட் ஓகே. மாஸ்டர் ஸ்பெஷல் தோசா. " எனச் சஜித்திற்கு உணவு ஆர்டர் செய்தாள்.
மறுக்காது அந்தத் தட்டை வாங்கிக் கொண்டவன், தட்டை ஏந்தியவாறே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டு அவளுடன் சேர்ந்து உண்ணத் தொடங்கினான்.
இரு இட்லி தான். ஆனால் அவள் வாங்கிய சட்னிக்கு விலைப் போட்டால் நிச்சயம் மூன்று இலக்கத்தைத் தாண்டித் தான் பணம் குடுக்க வேண்டி வரும்.
கெட்டியான சட்னியில் சின்னச் சின்னதாக இட்லியை பிட்டு, நம்மூர்களில் பஜ்ஜியில் வாழைக்காயே தெரியாத படி மாவில் அமிழ்த்தி எண்ணெயில் போடுவது போல், இட்லியே தெரியாத அளவிற்கு சட்னிக்குள் உருட்டி எடுத்து ரசித்து உண்டு கொண்டிருந்தவளின் மீது சஜித்தின் பார்வை ரசனையுடன் விழுந்தது தான் ஆச்சர்யம்.
எதிர் எதிரே இருந்த பெஞ்சில் அமர்ந்திருந்தனர். உயர்த்திக் கட்டிய போணிட்டைல் குட்டை முடி வைத்திருப்பவர்களுக்கு ஓர் அழகு தரும் என்றால் இடை வரை நீண்ட கூந்தலைக் கொண்ட நம் கோகோவிற்கு வேறு அழகைத் தந்தது. நெற்றியில் புரண்டோடாது முடிக் கற்றையை க்ளிப் கொண்டு அடைத்திருந்தாள்.
அந்த முடிக்கற்றைக்குள் பிறை நிலவாய் தெரிந்தது அவளின் நெற்றி. அடர்ந்த புருவங்களுக்கு மேலும் கருமை நிறத்தை தர நவீன அலகு சாதனத்தை உபயோகித்திருக்க வேண்டும். அவளின் இதழ்கள் பிஸியாக இருப்பதால் திருத்தப்பட்ட ட்ரிம் செய்யப்பட்ட நுதல் அசைந்து மொழி பேசியது.
கண்கள், அதில் இருந்து மை எடுத்தால் ஓராயிரம் குழந்தைகளுக்கு திருஷ்டிப் பொட்டு வைக்கலாம். அத்தனை அடர்த்தி. ஆனால் எனக்கு இது போன்ற செயற்கைப் பூச்சிக்கள் தேவையே இல்லை என்று சொல்வது போல் இருந்தது அவளின் அதரங்கள்.
மெல்லிய இளம் சிவப்பு நிறத்துடன் மெல்லியதாக இருந்தது அது. கன்னங்கள் மட்டுமல்ல கிள்ளிக் கொஞ்சத் தூண்டும் அளவிற்கு செழுமையாய் இருந்தது நாடி.
வெண்கழுத்தில் சின்னதாய் ஒரு தங்கச் சங்கிலி. அது அவளின் மார்பை தொட முயன்று தன் வளர்ச்சி பத்தாது எட்ட நின்று ரசிக்கும். கழுத்து இடைவெளியில் லேசாக தூக்கிக் கொண்டிருந்தது எலும்புகள்.
இரு மலை முகடுகளுக்கு இடையே தார்ச் சாலை அமைத்தது போல்
தான் அவள் தன் ஒன் சைடு பேக்கை அணிந்திருந்தாள்.
அந்த முகடுகளும் பிறர் கண் படாதாபடி துப்பட்டா கொண்டு மூடப்பட்டிருந்தது. லூசான காப்பிக் கலர் பட்டியாளா பேண்ட் அணிந்து, ஆரஞ்சு நிற சல்வாரில் இருந்தவளை ‘இன்ச் இன்சாக ரசித்துக் கொண்டிருக்கிறாய் நீ’ என அவனின் மனம் சொல்ல, பட்டென எழுந்து விட்டான்.
அவனின் கரம் பற்றியவள், "இன்னொன்னு சாப்டு போ. " என உரிமையுடன் சொல்ல, அது அவனுக்கு சித்தாராவை நினைவு படுத்தி இருக்க வேண்டும். வேகமாக அதை உதறித் தள்ளினான் சஜித்.
"யார் நீ?. எங்கிட்ட இப்படி பிகேவ் பண்ண உனக்கு என்ன அதிகாரம் இருக்கு? தயவுசெய்து இது ரிப்பீட் பண்ணாத." என்று விட்டு திரும்பியும் பார்க்காது சென்று விட்டான்.
அவனின் தனிமைக்குள் அவள் வலுக்காட்டாயமாக நுழைந்து அவனின் குடும்பத்தாரை நினைவுப் படுத்த முயல்வது அவனுக்கு எரிச்சலைத் தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
"சர்தான் போடா... ஏதோ தமிழ் பேசத் தெரிஞ்ச பம்பாய்க்காரனா இருக்கன்னு பழகுனா ரொம்பத்தான் கத்துறான். என்னோட இளாத்தான் எவ்ளோ மேல். இடியட். அவனோட வீடுல கிச்சனையே பாக்கலன்னு தான் சாப்பாடு குடுத்தேன். திமிர் பிடிச்சவன். முழு தோசையையும் முழிங்கிட்டு சாப்டதுக்கு காசு கூட குடுக்காம போய்டான். இனி உன்னப் பாத்தாலும் உங்கிட்ட பேச ட்ரெய் பண்ண மாட்டேன். முகத்த திரும்பிக்கிவேன். அரகன்ட் அயன் மேன். " இன்னும் பலவாறு திட்டியவள் வேகவேகமாக ரயில்வே ஸ்டேஷன் சென்று ட்ரெயினில் ஏறிக் கொண்டாள்.
அது பீக் ஹவர் என்பதால் கூட்டம் அலைமேதியது. தன் ஃபோனை நோண்டிக் கொண்டு வந்தவளுக்கு தூரத்தில் சஜித் தெரிந்தான் தான். ஆனால் சென்று பேசவில்லயே. திரும்பிக் கொண்டாள்.
எத்தனை நாளைக்கு என்று பார்த்து விடலாம்.
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 18
@vsv11 எத்தனை நாளைக்கு மேடம் நீங்க மூஞ்சை திருப்பிக்கிட்டு சுத்துவீங்கன்னு பார்க்கலாம்..🥴😜😜
ஓய் சத்யா ஏய் சத்யா நீ கூப்பிட்டு போகல்ல உன் பேர் கேகோக்கு பதிலா வேற மாத்திக்க 🤣😹 ரைட்டா?? 👌👌👌🥰
மூஞ்ச திருப்பிகிட்டு சுத்துற புள்ளைகிட்ட மும்பாய் காரன் சமாதனப்படுத்துவனா மாட்டானா பார்க்க 18 எபி வெயிட்டிங்கோ விழி சிஸ் 😍 😍 😍
இப்போ வர்ற எபிசோட் எல்லாம் ஃப்ளாஷ் பேக் தானே விழி சிஸ்
Super sis ❤️ ❤️.. paiyan ippo thaan vaai koduthu pesa start panninannu paaththa athukkula posukkunnu kovapadurane 😂😂
Koko mooncha thiruppikittu veembu eduthalum paththu nimisham mela thakku pidikkathunnu thaan thonuthu 😍😍
Waiting next epi sis ❤️ ❤️
@vsv4 ஆமாம் சிஸ். ரொம்ப விரைப்பாக இருக்குற ஐயன் மேனுக்குள்ள லவ் கொண்டு வந்து சொல்ல வச்சி அத நம்ம கோகோ வாயாலயே வேண்டாம்னு சொன்னது ஏன்னு தெரிஞ்சிட்டு இருக்கோம்.
நன்றி தேவிசை சிஸ்.. 🥰🥰🥰🥰💖🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Latest Post: மீள் நேசம் முகிழ்க்காதோ..!! - (Comment Thread) Our newest member: HorrorStryRdr Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page