All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 19

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

அத்தியாயம்: 19

 

அது டென்னிஸ் கோர்ட். 

 

உடலில் உள்ள ஆற்றல்கள் அனைத்தும் வியர்வையாக ஊற்றி ஒழுகியது ப்ரஜித்திற்கு. ஆனாலும் விடாது பந்தை ஓடி ஓடி அடித்துத் தன் எதிரில் இருந்தவனை தோற்கடித்து வெற்றி வாகை சூடிய மகிழ்வுடன் தன் லாக்கெட்டை தோளில் போட்டுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தான் அவன்.

 

ப்ரஜித்திற்கு விளையாட்டுகளின் மீது ஈடுபாடு அதிகம். தினமும் காலை மாங்கு மாங்கென்று உடற்பயிற்சியெல்லாம் செய்யமாட்டான். மாறாக ஒரு மணி நேரம் தொடர்ந்து விளையாடுவான். அது எந்த விளையாட்டு என்ற பாகுபாடெல்லாம் அவனுக்குக் கிடையாது. எல்லாம் விளையாடுவான்.

 

அவனுக்கு இருந்த விளையாட்டு மோகம் தான் sportswear என்ற விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் company யை ஆரம்பிக்கத் தூண்டியது. 

 

Infinity sportswear Ltd அது ப்ரஜித்தின் விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் பெயர். cosz அது தான் அவன் உற்பத்தி செய்யும் பொருட்களின் மேல் அச்சிடப்படும் brand இன் பெயர். உள்நாடு மட்டுமல்லாது வெளி நாடுகளிலும் அந்த ப்ரான்டின் பெயர் பிரபலமானது. 

 

காலில் அணியும் ஷூ முதல் கிரிக்கெட் பேட், பந்து, கைப்பந்து, கால்பந்து, சைக்கிள், ஸ்கேட்டிங், ஸ்லிம் பிட் ஸ்விம்ங் சூட் என அவன் நிறுவனத்தின் தயாரிப்புகள் ஏராளம். 

 

சஜித்திற்கு எப்படி அந்த ஸ்டீல் நிறுவனத்தின் மீது காதலோ! ப்ரஜித்திற்கு இதன் மீது காதல். அந்தக் காதல் அவனைக் கை விடாது இந்தியாவின் நம்பர் ஒன் sportswear நிறுவனமாக உச்சிக் கொம்பில் நிற்க வைத்தது.

 

இன்று தன் பயிற்சியை முடித்து விட்டு வீடு திரும்பியவன் ரிபேக்காவின் கார் அங்கு நிற்பதை கண்டான். 

 

கூடவே அவனின் அன்னையின் குரல்‌ கார்டனில் கேட்டது. எட்டிப் பார்த்தபோது, சிறிய கல் மேடையில் சித்தாரா அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ரிபேக்கா அதைப் புன்னகை மாறி முகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். 

 

சித்தாராவிற்கு பேசப் பிடிக்கும். அவருக்கு ஈடுபாடு அதிகம் உள்ளதைப் பற்றிப் பேசினால் அவரின் முகத்தில் புது பொலிவு உண்டாவதை காண முடியும். ஆனால் அந்தப் பொலிவை நித்தமும் தரப் பக்கத்தில் யாரும் இருப்பதில்லை. கணவன் மகன்கள் என அனைவரும் பிஸ்னஸ் என்று சென்று விடுவர். 

 

சமையலைத் தவிர்த்து அவருக்கு ஓவியம் வரைதல் போன்ற கலைகளில் ஆர்வம் அதிகம். 

 

வார்லி ஓவியம் கேள்வியுற்றதுண்டா? அது ஒரு பழைமைத்துவமான ஓவியமுறை. அது மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் குகைகளில் வரையப்படும் அது தொன்மையான முறையாகும். அதைக் கற்றுத் தேர்ந்தவர் சித்தாரா. பாரம்பரிய முறைப்படி பல ஓவியங்களைக் கற்று பல சித்திரங்களை வரைந்து வைத்திருக்கிறார். 

 

நம்மூர் தஞ்சாவூர் பெங்ண்டிங் முதல் வட மேற்கு இந்தியாவில் பிரபலமான மதுபானி ஓவியம், கலம்காரி, பட்டச்சித்ரா, ஃபாட் ஓவியம் எனப் பல ஓவியங்கள் அத்துப்படி அவருக்கு. 

 

ஒரு தொண்டு நிறுவனத்திற்கு நிதி வேண்டித் தன் ஓவியங்களைக் காட்சிப் படுத்தி விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காகத் தன் மருமகளை அழைத்துள்ளார் சித்தாரா.

 

ராஜஸ்தானில் புகழ் பெற்ற ஒரு ஓவியக் கலையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் மகனின் வருகையைக் கண்டு பேச்சை நிறுத்தி விட்டுப் புன்னகைத்தார். 

 

தாயை நேசத்துடன் பார்த்தாலும், ப்ரஜித்தின் பார்வை ரிபேக்காவை துளையிட்டு, 'உன்ன யாரு இங்க வரச் சொன்னது.' என்ற கேள்வியை எழுப்பியது. அதைப் புரிந்து கொண்டவள்,

 

"சித்தும்மா எங்கிட்ட அப்பார்ட்மெண்ட் இருக்கு. ஒரு மணி நேரம் உங்க கூட நா ஸ்பென்ட் பண்ண அங்கில் கிட்ட அத கேட்டு வாங்கிருக்கேன். " என்றாள் ப்ரஜித்தின் முகம் பார்க்காது. 

 

அன்று அவன் கூறியதற்கு பின்னும், மீண்டும் விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பிய பின்னும் அந்த வீட்டிற்குள் உரிமையுடன் நுழைய அவளின் மனசாட்சி இடம் தரவில்லை. அதனால் சித்தாராவிடமிருந்து அழைப்பு வந்ததும் இந்தரிடம் முன்னனுமதி வாங்கி விட்டுத் தோட்டத்தில் அமர்ந்து கொண்டாள். 

 

சித்தாரா, "கண்ணா என்னோட ட்ராயிங்க ஆர்ட் கேலரில வைக்கலாம்னு ரிபேக்கா ஐடியா குடுத்திருக்கா. ஒவ்வொரு ஆர்ட்டும் நல்ல விலை போகும்னு சொல்றா. நம்ம க்ளப்புக்கு அத குடுக்கலாம்னு இருக்கேன்." 

 

"இப்ப எதுக்கும்மா இதெல்லாம். க்ளப்புக்கு வேணும்னு கேட்டா நாங்க குடுக்கப் போறோம்." என்றவனிடம்,

 

"நீங்கக் குடுத்தா அது உங்க உழைப்பா இருக்கும். இது என்னோடது டா. எனக்கு மனநிறைவா இருக்கனும்னா அது என்னோட உழைப்புல வர்ற பணத்ததா குடுக்கனும். " 

 

"அதாவது பாவத்துல கூடப் பங்கு தர்றேன், ஆனா புண்ணாயத்துல தர மாட்டேன்னு சொல்றிங்க. " என்றவனை அடிக்கக் கை ஓங்க, அதிலிருந்து வாகாகத் தப்பித்தவன், பதார்த்தங்களை ஏந்தி வந்து கொண்டிருந்த மஞ்சுமாவிடம், 

 

"எத்தன மணிக்கு இவங்க அப்பாய்ண்மெண்ட் முடியுது." என்றான். 

 

"5 டூ 6 தம்பி." என்ற உடனேயே தன் கைக் கடிகாரத்தை பார்த்தான். 

 

அது ஆறைத் தொட முயன்று பதினொன்றிற்கும் பன்னிரெண்டிற்கும் இடையில் நின்றது. 

 

திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்த்தான்‌. 

 

'மணி முள் ஆறைத் தொட்டதும் நீ இவ்விடம் விட்ட அகன்றிருக்க வேண்டும்.' என்று அந்தப் பார்வையின் பொருள் அறியாத அளவிற்கு ரிபேக்கா ஒன்றும் விவரமறியாதவள் அல்லவே. 

 

அலட்சியப் பார்வையுடன் திரும்பிக் கொண்டாள். 

 

திருமணம் முடிந்த நாள் முதல் ப்ரஜித் தாய் தந்தையுடன் வசிக்காது அந்தக் காலனியிலேயே தனித்து ஒரு வீட்டில் மனைவியுடன் வசித்தான். 

 

இன்றும் இரவு உணவைத் தாயுடன் முடித்து விட்டு அந்த வீட்டில் தான் தங்குகிறான். மனைவி உடன் இல்லாத போதும் அங்குத் தான் வாசம்.

 

அவன் காலி செய்துவிட்டு சென்ற அறையில் இப்போதும் அவனின் உடைகள் இருக்க, விளையாடி முடித்து வந்த அலுப்பைப் போக்க, குளியலறைக்குள் நுழைந்தான். 

 

முழுமையாகத் துவட்டி கூட முடிக்காது ரிபேக்கா சென்று விட்டாளா என உடை மாற்றிக் கொண்டு பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தான். 

 

அப்போது ரிபேக்கா தன் ஒற்றை முந்தானையை இழுத்து பிடித்தபடி ஒய்யாரமாக நடந்து வந்துகொண்டிருந்தாள். அவளின் பார்வை சற்று உயர்ந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரஜித்தின் மீது விழுந்தது. 

 

அவனை விழி விலகாது நோக்கியபடியே முன்னேறி நடக்க, "முட்டக்கண்ணி..." என அவளுக்கு அவன் வைத்த பெயரை ப்ரஜித்தின் உதடுகள் முணுமுணுத்தது. 

 

அது காதில் விழாத போதும், அவன் எண்ண சொல்லியிருப்பான் என்று உணர்ந்த ரிபேக்கா இதழ்கள், "போடா..." என்றது. 

 

 'எது போடாவா! இரு டி வர்றேன்.' என்றுரைத்து விட்டு உள்ளே சென்றவன் சில நொடிகளில் திரும்பி வந்தான்.

 

அவன் கையில் இருந்தது கண்டு ரிபேக்காவின் விழிகள் அவன் வர்ணித்துப் போல் பெரிய முட்டையாக விரிந்தது. 

 

தன் வேக எட்டுக்களால் காரை அடைந்தவள், உள்ளே எறி அமர்ந்து கதவைச் சாத்தும் முன் அவளின் முந்தானை பிடித்திழுக்கப்பட்டது. 

 

ப்ரஜித்தின் கையில் இருந்தது ஒரு விதமான விசில். அதை ஊதும்போது உண்டாகும் ஓசை மனித காதுகளுக்குக் கேட்காது. ஆனால் மனிதனின் ஆதி காலம் தொட்டு நண்பனான நாய்க்குத் தெளிவாகக் கேட்கும். 

 

ரிபேக்காவின் முந்தானையை பிடித்திழுத்தது ப்ரஜித் வளர்க்கும் வேட்டை நாய் ரைசர். 

 

அதன் பிடியில் இருக்கும் தன் முந்தானையை எடுக்க முடியாது அவள் போராட அதைக் குதுகலச் சிரிப்புடன் கரம் கட்டி நின்று வேடிக்கைப் பார்த்தான் அவளின் கணவன். 

 

"மஞ்சும்மா... சித்தும்மா... யாராது வாங்களே... ஹெல்ப்... " என்றவளின் குரல் கேட்டுப் பலர் ஓடி வந்து அவளுக்கு விடுதலை தந்தாலும் அவளின் காஸ்லி புடவை லேசாகக் கிழிந்து விட்டு. 

 

அதன் ஓட்டை வழியே ப்ரஜித்தை பார்க்க, "இனி போடான்னா சொன்னா அந்தப் பல் தடம் சேலைல படாது. உன்னோட உடம்புல படும். ஜாக்கிரதை." என எச்சரிக்க, அவள் அவ்விடம் விட்டுச் சென்றாள். 

 

இதழ் கோணிய அவளின் முகத்திருப்பலை ரசத்தவன் அவளின் நினைவுகளைத் தாங்கிய படி மெத்தையில் அமிழ்ந்தான். 

 

அங்கு ரிபேக்காவும் அவனின் நினைவில் தான் காரை ஓட்டிக்கொண்டிருந்தான். 

 

அது இருவருக்கும் திருமணம் நடந்தேறிய சில மாதங்கள் இருக்கும்.

 

ப்ரஜித் ரிபேக்காவிற்காகத் தனி இல்லம் வந்து சேர்ந்தவள் நேராகப் படுக்கை அறைக்குள் சென்றாள். கதவைத் தான் திறந்தாள், ஆனால் திறந்த வேகத்தில் அதை மூடி விட்டு,

 

"ப்ரஜித்... What's this?" எனக் காட்டுக் கத்தலாகக் கத்தி கணவனை அழைக்க, அவனோட ஆமை வேகத்தில் கிச்சனிலிருந்து மனைவியின் கூக்குரலுக்கு ஓடி வந்தாள். 

 

'இவன விட்டா நால் நாளாகும் பெட் ரூமுக்கு வந்து சேர‌.' என முணுமுணுத்தபடியே அவனைத் தேடிச் சென்றாள்‌.

 

"என்ன ப்ரஜி இதெல்லாம்?" என்றாள் கோவம் குறையாத குரலில். 

 

"இது செமி சைட் ஆம்லேட். உனக்குக் கிடையாது." என்றவனின் கவனம் முழுவதும் தட்டில் இருந்த ஒரு பக்கம் மட்டும் வேக வைக்கப்பட்ட முட்டையில் இருந்தது. 

 

ஆம்லேட்டின் நடுவில் சரி வர வேகாது ஆடிக் கொண்டிருந்த மஞ்சள் கருவை உடைய விடக் கூடாதெனக் கவனத்தை அதில் வைத்துக் கொண்டு அவளைக் கடந்து சென்றவனின் முன் மீண்டும் வந்து நின்றாள்.

 

"பேப் மூவ்."

 

"யாருக்கு இது?." 

 

"நம்ம வீட்டுக்கு வந்திருக்குற புது கெஸ்டுக்கு." என்றான் கண் சிமிட்டி.

 

"அதா யாருன்னு கேட்டேன்?. "

 

"நீ யாரப் பாத்து அலறுனியோ அவனுக்கு."

 

"ப்ரஜி this is too much. எனக்குப் படிக்காதுன்னு தெரிஞ்சும் அந்த நாய கூட்டீட்டு வந்திருக்க. அதுவும் நம்ம பெட் ரூம்ல நம்ம பெட்ல கொண்டு வந்து படுக்க வச்சிட்டு ஆம்லேட் எடுத்திட்டு போறேனு சொல்ற."

 

"அது வாயில்லா ஜீவன் பேப். அதப் போய் வெறுக்குற. நீ ப்ளூ க்ராஸ்ல மெம்பர் தான."

 

"எஸ். ஆனா நா அத வளக்க விரும்பல. அதுக்குன்னு அர்பனேஜ் இருக்கு."

 

"பட் நா வளக்க விரும்புறேன். மூனு வேல கறி சோறு போட்டு, ஸ்பெஷல்லா ட்ரெயினிங் குடுத்து என்னோட இன்னொரு ப்ரதர் மாறி வளக்கப் போறேன்‌. ஹாங் அது என்னோட ப்ரதரன்னு சொல்றேன் அப்ப ரைசர சஜித் மாறி ஃப்ரெண்டா ஏத்திட்டு இதக் கொண்டு போய் ஊட்டி விடு பாப்போம்." எனத் தட்டை அவளின் முன் நீட்ட, அதைத் தட்டி விட்டாள்‌ ரிபேக்கா. 

 

"இங்க பாரு தேவையில்லாம சஜியையும் அந்த நாயையும் கம்பேர் பண்ணி பேசி என்ன கடுப்பேத்தாத. அது இங்க இருக்கக் கூடாது. துரத்தி விடு. இல்லன்னா நானே ப்ளூக் கிராஸ்க்கு கால் பண்ணி ஏதாவது காப்பகத்துக்குத் தூக்கிட்டு போகச் சொல்வேன்." என விரல் நீட்டி அவனை எச்சரிக்கைச் செய்து விட்டுச் சொல்ல, அவளை உற்றுப் பார்த்தபடி நின்றான் ப்ரஜித். 

 

அவள் கூறி அனைத்தையும் சூப்பர் ஸ்டார் பாணியின் சொல்ல வேண்டுமென்றால் 'நீ கூறிய அதே பதிலைப் புன்னகையுடன் கூறிப்பார். அப்போது அறிவாய் அதிலிருக்கும் இனிமை.' என்பது போல் கூறியிருந்தாள் ப்ரஜித் கேட்டிருப்பான்.

 

இனிமையெல்லாம் பல ஆண்டுகளாக ஆண்களை அடக்கி ஆளுமை செலுத்தி, தன் துறையில் தடம் பதித்துக் கொண்டிருக்கும் ரிபேக்காவிடம் ஏது?. எப்பொழுதும் அவளிடம் அதிகாரம் தூள் பறக்கும். அனைத்தும் ரெக்வெஸ்ட்டான வார்த்தை வாயில் இருந்து வராது. உத்தரவாகத் தான் வரும்.

 

அதிகாரமாக வரும் வார்த்தைக்கு நம் ப்ரஜித் பணிந்ததே இல்லை. அதிலும் விரல் நீட்டி அவள் கூறியது, ம்ஹிம்.... முடியாது முடியாது என்பது போல் இருக்க, அந்த விசிலை எடுத்தான். 

 

அந்த ஓசை நாய்க்கு மட்டும் தானே கேட்கும். 

 

அதனால், 'அத துரத்தி விட்டுடுட்டு என்ன கூப்பிடு.' என்பது போல் சோஃபாவில் அமர்ந்திருந்த ரிபேக்காவிற்கு கேட்கவில்லை. 

 

வந்த அது ஒரே தாவலாக அவளை நோக்கிப் பாய,

 

"ப்ரஜி... ப்ரஜி… அத எங்கிட்ட வரவேண்டாம்னு சொல்லு ப்ரஜி." எனக் கத்தியபடி சோஃபாவில் எழுந்து நின்றாள்... 

 

"எது… ப்ரஜியா... Who I am?"

 

"இப்ப அது முக்கியமா." 

 

"எனக்கு முக்கியம். சொல்லு Who I am‌?"

 

"ஆ…. இது கடிக்குமா?"

 

"எனக்குத் தெரியாது." 

 

"அப்ப நீ இதுக்கு தடுப்பூசி போட்டுக் கூட்டீட்டு வரலயா?"

 

"ஊசியா! அதெல்லாம் போடனுமா என்ன?"

 

"ப்ரஜித் ப்ளிஸ் அத கூப்பிடு." என்றபடி சுற்றுச் சுற்றி வந்தாள்.

 

"நீ சொல்றத நா கேக்கனுனா நா கேக்குறதுக்கு பதில் இன்னேரம் நீ சொல்லிருக்கனுமே."

 

"My husband. நீ என்னோட புருஷன். போதுமா.!" 

 

"போதும் போதும். என்ன எப்படிக் கூப்பிடனும்." 

 

"ஹனி, பேபி, டார்லிங், டியர், ஸ்வீட்ஹார்ட், செல்லம்.... " என அடுக்கிக் கொண்டே போக, 

 

"நீ எப்படி என்ன கூப்பிடுவ." 

 

"ப்ரஜி டியர்.”

 

“ஆஹா… கேக்கவே  

இனிமையா இருக்கு.” 

 

“என்ன காப்பாத்து டியர்.‍" என்றபடி வந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள். 

 

இதழ்களில் மலர்ந்த புன்னகையுடன் அவளை அணைத்து தூக்கியவன். "நீ பதில் சொல் நிறைய நேரம் எடுத்துக்கிட்ட. சோ..." என்றபோது அவன் என்ன செய்ய உள்ளான் என்பதை உணர்ந்து அவளின் பிடி அவனின் மீது இறுகியது. 

 

"ஒரு ரெண்டு நிமிஷம் மட்டும் கதறு." என அவளை விலக்கப் பார்க்க, அவள் அட்டையென ஒட்டிக் கொண்டதும் ஆடவனின் உதடுகள் அவளின் செவ்விதழை கவ்வி அதன் உயிரை உறிஞ்ச ஏதுவாய் அமைந்தது.

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் : 20

https://kavichandranovels.com/community/topicid/274/

 

This topic was modified 2 days ago by VSV 11 – கள் விழி மயக்கம்

   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 3 months ago
Posts: 29
 

Nalla irukke intha jodi kuda 🥰🥰😍


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

@vsv42 thank you 🙏🥰🥰🥰


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
 

@vsv11 ப்ரஜித் ரிபேக்கா கூட சூப்பர் தான் 👌👌👌

ஹேய் மேன் என்ன வேலை பாத்துருக்குற நீ..🙊🙊🏃‍♀️🏃‍♀️


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

@vsv4 thank you  தேவிசை சிஸ். 🥰🥰🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page