About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
கன்னம் தீப்பிடித்ததைப் போல் எரிந்தது துகிராவிற்கு. அவளுக்குப் பரிதாபம் பார்க்கும் நிலையில் இளவேந்தன் இல்லை.
இளாவால் ஏற்க முடியவில்லை அவளின் பேச்சை.
"என்ன சொன்ன! மயக்க மருந்து, போத மாத்திரயா! அதத் தந்து தா உன்ன நா அனுபவிக்க வேண்டிய அவசியமே இல்ல. என்னோட பலம் போதும் உன்ன அடக்கி ஆள. உன்ன பலவந்தமாக அடையுறது ஒன்னும் கஷ்டமான காரியம் இல்ல. ஆனா எனக்கு அது தேவையில்ல. இது நாள் தப்பா எண்ணத்துல என்னோட விரல் கூட உம்பக்கம் வந்தது இல்ல. நா உன்ன லவ் பண்றேன். I love only you. மயக்க மருந்தாம் ச்ச..." என்றபடி சோஃபாவை எட்டி உதைத்தவனுக்கு ஆத்திரம் மட்டும் அடங்கவில்லை. அவளின் கன்னம் பற்றியவன்,
"டில்லில தான்டி உன்ன முதல் முறை பார்த்தேன். பாத்த அன்னைக்கே இந்தக் காதல் உம்மேல வந்திடுச்சி. உன்னத் தேடி தா மும்பைகே வந்தேன். உன்னால தா இந்தக் கம்பெனிக்கு வந்தேன். உனக்காகத் தான் இத்தன வர்ஷமும் கிடைச்ச மத்த வேலையெல்லாம் விட்டுட்டு, என்னோட அப்பாம்மாவ கூடப் பாக்காம இங்க இருக்கேன்.
மகேந்தர் குடும்பத்துலயே நீ ஒருத்தி மட்டும் தான் ஸ்டேடஸ் தகுதி தராதாரம்னு பாக்காம வித்தியாசமா இருக்கன்னு நினைச்சேன். ஆனா இல்ல. நீயும் அப்படித்தான்னு அன்னைக்கே தெரிஞ்சிக்கிட்டேன். தப்பு உம்பேர்ல இல்ல. நீயும் ஸ்மித்தா பொண்ணு தானா. அப்படித்தா இருப்ப.
கிளம்பு. இனி ஒரு செக்கேண்ட் கூட நீ என்னோட வீட்டுல இருக்க கூடாது. கெட் அவுட். இந்தத் திங்ஸ் எல்லாத்தையும் எடுத்த இடத்துலயே வச்சிட்டு வெளிய போ." என ஆத்திரத்துடன் துரத்தினாலும், அவளைப் பத்திரமாக வீட்டில் விட்டு விட்டுத்தான் வந்தான்.
ஏனோ அன்று இரவு அவனுக்கு நல்ல தூக்கம் வந்தது. அன்று மட்டுமல்ல அதன் பின்னும் தான்.
தன் காதலை சொல்லவே முடியாது, தன்னுள்ளேயே புதைந்து போய்விடுமோ என்ற பயத்தில் இருந்தவனுக்கு, துகிராவிடம் தன் மனதை வெளிப்படையாகக் கூறியது மனதில் இருந்த பாரமே இறங்கியது போல் இருக்க, வெகுநாட்களுக்குப் பின் ஆழ்ந்த நித்திரை கிடைத்தது.
ஆனால் அவன் இறக்கிய பாரத்தை துகிராவின் மீது ஏற்றி விட்டான் என்பது தான் உண்மை.
அவளுக்கு ஓர் கசப்பான அனுபவம் உண்டு.
பள்ளிக்காலத்தில் நண்பனாகப் பல வருடம் உடன் பழகியவனால் கிடைத்தது. எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருந்தவனுக்கு அவனின் பிறந்தநாள் விழா தோதாக அமைய, அவள் குடித்த பானத்தில் போதை மருந்தைக் கலந்து விட்டான்.
அது தெரியாது அதைப் பருகி, அதீத போதையில் தலை சுற்றத் தொடங்கியதும் பயம் வந்து விட, சஜித்திற்கு தான் அழைத்தாள்.
"ப்ரஜி, பார்ட்டிக்கு வந்தேன். தலை சுத்துது. கூடவே ரூமும் சேந்து சுத்துது." என யாருடன் பேசுகிறோம் என்று கூடத் தெரியாது கண்டபடி பிணாத்த,
"எங்க இருக்க நீ?"
"மேனன் வீட்டுல. கரெக்டா சொல்லனும்னா பாத்ரூம்ல இருக்கேன். வாமிட் வர்ற மாறி இருக்கு. கால் நடக்க முடியல. உடம்பெல்லாம் காத்துல பறக்குது." என்றவளை கதவைப் பூட்டிக் கொள்ளச் சொல்லி உத்தரவிட்ட சஜித் தான் அன்று அவளைக் காத்தது.
அதன் பின் அவள் ஆண் நண்பர்களை முற்றிலும் தவிர்த்தாள். பழக என்ன பேசக் கூடப் பயந்தாள்.
பார்ட்டி என்று எங்குச் சென்றாலும் ஆல்கஹாலை உபயோகிக்காதவளுக்கு முதலில் கிடைத்த நல்ல பாய் ஃப்ரெண்ட் என்றால் அது இளவேந்தன் தான். அந்த ஜித்ரேவன் வகைறாக்களைத் தவிர்த்து.
இளவேந்தனும் அந்த மேனன் போலவா என அடிக்கடி சோதிக்க போதையுடன் இருப்பதுபோல் நடிப்பாள்.
அது எச்சரிக்கை உணர்வு என்பதையும் தாண்டி, பழக்கமாக மாறி விட்டது. இன்றும் அதே சந்தேகத்தில் பேசி அடி வாங்கியவளுக்கு இளவேந்தன் கூறிய அவனின் காதல் சிலிர்ப்பைத் தந்தது.
அவன் தான் அவளைக் காதலிக்கிறேன் என்று அனுகிய முதல் ஆண். மற்றவர்கள் அவளின் பணத்திற்காகவும் ஸ்மித்தாவின் அறிவுறுத்தலாலும் வந்தவர்கள். அவளிடம் காதலை மட்டும் எதிர்பார்த்து பழகியவன் இளவேந்தன் என்ற உண்மை புரிந்தது.
அவன் வெட்டி எரிந்த காதல் செடி இவளுள் நடப்பட்டு வேர் விடத் தொடங்கியது.
மறுநாள் அலுவலகம் சென்றவளுக்கு விவரிக்க இயலாத ஒரு கோவம் மூண்டது.
எப்பொழுதும் நாய்க்குட்டி போல் தன்னை தொடர்ந்து கொண்டே இருக்கும் அவனின் பார்வை கிடைக்காததும், அவளை அவாய்ட் செய்து பேசாமல் இருப்பதும் ஆத்திரத்தை தந்தது.
அந்த ஆத்திரத்திற்கு துபாம் போடுவது போல் இன்று கோகோவிடம் பேசும் போதிருந்த அவனின் சிரித்த முகம் அமைந்தது.
அந்த ஆத்திரம் அவன்மீது திரும்பாது அவன் சிரித்து சிரித்து பேசிய கோகோவின் மீது திரும்பியது தான் பரிதாபம்.
எத்தனை முறை திருகியும் கதவு திறக்கவில்லை.
'அடுத்தவன் வீட்டுக் கதவு உனக்காக எப்படி கோகோ திறக்கும். லூசா நீ.' என மனசாட்சி சாட்டையால் அடித்தபின், சஜித்தின் கதவை விட்டு விட்டுத் தன் வீட்டுக் கதவில் சாவியை கொடுத்துக் திருகினாள்.
உள்ளே வந்தவள் சோர்வுடன் கட்டிலில் கவிழ்ந்தாள். இன்றைய நாள் அவளுக்கு மோசமான நாளாக அமைந்தமையால் அந்தச் சோர்வு.
"நோ நோ எனக்குச் சோர்வெல்லாம் கிடையாது. லட்சியத்த அடையுற வரச் சோர்வுக்கு இடமே கிடையாது." என்றபடி சமையலறைக்குச் செல்ல அவளுக்கு மட்டுமெனும்போது சமைக்கவே தோன்றவில்லை. வயிறு வேறு இரையை வேண்ட, கடைக்குச் சென்றாள்.
ஆனால் பாவம் அவளுக்கு எந்த உணவும் ஒவ்வவில்லை.
பாவ் பஜ்ஜி, சமோசா என மும்பை கடை வீதி உணவுகள் அவளின் வயிற்றை நிறைக்கவில்லை. வலியைத் தான் தந்தது.
சரி பெரிய கடைகளுக்குச் செல்லலாம் என்றால் அங்கும் உணவைத் தனியாகத்தான் சாப்பிட வேண்டும்.
கவலையுடன் வீடு திரும்பி விட்டாள்.
லிஃப்டில் ஏறியபின், "ஹாய் சத்யா." என உற்சாகம் பிறந்து விட்டது.
"மணி பத்தாகுது. இது தான் நீ வீட்டுக்கு வர்ற டயமா?" என அவனின் பொண்டாட்டி போல் கேள்வி கேட்க, அவன் பதில் சொல்லவில்லை. முகம் திரும்பவும் இல்லை. அவளை ஒரு பார்வைப் பார்த்த படி நின்றான்.
"மதியம் குடுத்த லன்ச்ச சாப்டியா.?" என்றவளின் கையில் டிப்பன் பாக்ஸை வைக்க, அது அவன் அதைத் திறந்து கூடப் பார்க்க வில்லை என்றது.
"உனக்கு லெமன் ரைஸ் பிடிக்காத. சரி நா நாளைக்கு வேற செய்றேன். என்ன பிடிக்கும் சத்யா உனக்கு?" என்றதும் அவனுக்குக் கோவம் வந்திருக்க வேண்டும்.
"இங்க பாரு..."
"கோகோ."
"எதுவா வேண்ணாலும் இருந்திட்டு போ. எனக்கு இதெல்லாம் பிடிக்கல. நீ காட்டுற அக்கற எனக்குத் தேவையே இல்லாததது. இனி இது மாறிப் பண்ணாத." எனக் குரல் உயர்த்தாது அடிக்குரலில் உறும, அவனின் கோபத்தில் விரிந்த கண்களில் மூழ்கிப் போனாள்.
சிறிய கண் தான் சஜித்திற்கு. ஆனால் அதை விரித்து அவன் மென்குரலில் மிரட்டும்போது பயம் தானா வந்து விடும். எத்தனையோ பேரை மிரட்டிய பார்வையும் பேச்சும் அது. ஆனால் அது அவளுக்குள் பயத்தை தரவில்லை.
"நீ ரெஸ்டாரன்ட்ல வேலை பாக்குறியா! அதான் சாப்பாடு வேண்டாம்னு சொல்ற. கரெக்ட்டா. இட்ஸ் ஒகே. லன்ச் இனி தரமாட்டேன். பட் டின்னர் எங்கூட தா.
உனக்கு ரொட்டி பிடிக்கும்ல. ரெடிமேட் ரொட்டி. இப்பத்தா வாங்கிட்டு வந்தேன். தொட்டுக்க பன்னீர் குருமா. எனக்குத் தெரிஞ்ச மாறிச் சமச்சி வைக்கிறேன். உனக்குக் காரம் கம்மியா போடனுமா இல்ல தூக்கலவா." எனக் கேள்விமேல் கேள்வி கேட்டபடி வந்தவளுக்கு தோள் குளுக்களை பதிலாகத் தந்து விட்டு அதன் வீட்டிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.
மூடும் முன் don't disturb என்று எழுதிய அட்டையைக் கதவில் தொங்க வேறு விட்டான்.
விழி இடுங்க கதவைப் பார்த்தபடி தன் வீட்டிற்குள் வந்தவள் கவரைப் பிரித்துச் சப்பாத்திகளை சுட்டு எடுத்தாள்.
கட்டிலை சோஃபாவாக மாற்றித் தட்டில் அதை வைத்தவளுக்கு அதை உண்ணும் மனம் வரவில்லை.
"கடைசி வரைக்கும் சாப்டானா இல்லயான்னு பதிலே சொல்லலயே. என்ன பண்ணலாம். " என யோசித்தவாரே சுவற்றில் காதை வைத்து ஒட்டுக் கேட்டாள்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் இருக்கும் மிகப் பெரிய குறை என்னவென்றால், நீங்கத் தனியாக இருந்தாலும் பிறரால் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.
நீங்கள் நடப்பது பேசுவது தொடங்கி அனைத்தும் பக்கத்து வீட்டுக்களுக்கு நன்கு கேட்கும்.
அதனால் சஜித்தின் நடமாட்டத்தை தெரிந்து கொள்ளும் ஆவலில் சுவற்றில் காதை வைத்தாள்.
"டீவி ஓடுது. வேற எந்தச் சத்தமும் கேக்கல. தூங்கிட்டானோ!" என்றபடி பால்கனியை எட்டிப் பார்த்தாள்.
அதில் தெரிந்த விளக்கின் ஒளி அவன் தூங்கவில்லை என்றது.
வேகமாகச் சென்று ஒரு டப்பாவில் சுட்டு வைத்த சப்பாத்தியையும் குருமாவையும் எடுத்துக் கொண்டு, பேப்பரயும் பேனாவையும் எடுத்து அதில் ஏதேதோ எழுதிக் கவரில் போட்டு, சஜித்தின் கதவில் தொங்க விட்டு விட்டு, காலிங் பெல்லை விடாது அழுத்தி விட்டு, தன் வீட்டிற்குள் ஒழிந்து கொண்டாள்.
அவன் கதவைத் திறக்கும் சத்தமும்… பின் கதவை மூடும் சத்தமும் தெளிவாகக் கேட்டது.
"கவர எடுத்துக்கிட்டானா இல்லையா?" என்ற கேள்வியுடன் மீண்டும் வெளியே வந்தவளுக்கு கவர் எடுக்கப்பட்டிருந்தது சந்தோஷத்தைத் தர, அதே சந்தோஷத்துடன் உறங்கிப் போனாள்.
உள்ளே, சஜித்தின் வலிய உதடுகள் குறுநகை பூத்திருந்தன.
சப்பாத்தியா! எங்கே அது என்று தேடும் நிலையில் இருந்ததை பார்த்தவனுக்கு குறுநகை புன்னகையாக மாறியது.
அது சிரிப்பாக விரிவடையச் செய்தது அவளால் எழுதப்பட கடிதம்.
"நா மட்டும் சமைச்சி சாப்பிட பிடிக்கல சத்யா. அதா உனக்கும் அதுல பங்கு குடுத்தேன். உனக்குப் பிடிக்கலன்னா பரவாயில்லை. உன்னோட கையாலயே அத தூக்கிக் குப்பத் தொட்டில போட்டிடு. என்னால உனக்குத் தராம இருக்க முடியாது.
பி.கு: இனி டப்பாவ திருப்பித் தரும்போது கொஞ்சம் க்ளீன் பண்ணித்தந்தா நல்லது. என்னால ஸ்மெல் தாங்க முடியல. அப்றம் don't waste the food. ஏன்னா சாப்பாடு கிடைக்காம எத்தன பேர் இருக்காங்க. கிடைச்ச சாப்பாட்ட வீணடிக்கக் கூடாது." என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது.
பாவம் அவள் சாப்பிடும் விஷத்தில் அவனுக்கும் பங்கு கொடுக்கிறாள்.
மயக்கம் தொடரும்...
மயக்கம் : 17
Latest Post: காற்றின் நிறம் கருப்பு - (Comment Thread) Our newest member: Ghanaselvi Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page