About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 6
"ஓட்ஸ் ஏ சூடா இல்ல?. எக் வொய்ட் எங்க? மிக்ஸிடு வெஜிடபிள்ஸ் மூனு வேளையும் கட்டாயம் அவங்க சாப்பிடனும். எங்க அது?. வீட்டு முழுக்க டஸ்ட்டா இருக்கு. அவங்களுக்கு தூசி ஆகாதுன்னு தெரியும் தான்?. இது தா நீங்க கவனிக்கிற லட்சனமா. " என மேஜையில் படிந்திருந்த குறுமணலை விரலால் எடுத்துக் காட்டி வேலையாட்களை கண்ட படி ஏசிக் கொண்டிருந்தாள் ரிபேக்கா.
"ஸாரி மேம்... " என அவர்கள் கூறும் விளக்கம் எதுவும் ரிபேக்காவின் காதில் விழவில்லை.
ரிபேக்கா calm and composed person. அதிகம் பேச மாட்டாள். அமைதியாக இருந்தாலும் அவளுக்கு அவளின் வேலை நடந்தே ஆகவேண்டும் என்ற கரார் பேர்வழி. அமைதியாக இருந்து தன் காரியத்தை சாதித்துக் கொள்வாள்.
மெல்லிய இருமல் ஓசைக் கேட்டு படுக்கை அறைக்குள் வந்தவள்,
"சித்தும்மா நா கம்ப்ளீட்டா எல்லாரையும் மாத்தப் போறேன். ஒருத்தருக்கு கூட உங்க மேல அக்கறை இல்ல. எல்லாரும் நடிக்கிறாங்க." என்றபடி சித்தாராவின் படுக்கையை சரி செய்து, தலையணையை வாகாக அவரின் முதுகிற்கு வைத்து, உணவு உண்ண ஏதுவாய் அவரின் முன் டேபிளைப் போட்டு ஓட்ஸ்ஸையும் வைத்தாள்.
"உன்ன மாறியேவா எல்லாரும் இருப்பாங்க.? அன்பா அக்கறையா?" என நக்கலாக கேட்டபடி வந்தான் ப்ரஜித்.
"குறைகள மட்டுமே தேடித் தேடி பாக்குறவங்களுக்கு எல்லாமே நிறைவில்லாத மாறி தா தெரியும்." என்ற ப்ரஜித் ஓட்ஸ்ஸை தன் தாய்க்கு ஊட்டி விடத் தொடங்கினான்.
அணல் கக்கும் விழிகளால் அவனை முறைத்துப் பார்த்தவள், உள்ளுக்குள் அவனுக்கு அக்னி அபிஷேகம் செய்தாள்.
ஸ்டோக் என்ற பக்காவாதம் அவரை பாதித்து மூன்றாண்டுகளாகி விட்டது. சரியாகச் சொல்லவேண்டுமென்றால் இரு மகன்களும் சண்டையிட்டது, பின் சஜித்தின் வெளியேற்றம் அதற்கு காரணமாக அமைந்தது.
கைகளும் கால்களும் பிஸியோதெரபிஸ்ட்டால் அசைக்கும் நிலைக்கும், எழுந்து பிறரின் உதவியின்றி நடக்கவும் வந்தாலும் வலுப் பெறவில்லை.
ஊட்டி முடித்தவன் டிஸ்யூ கொண்டு இதழில் ஒட்டியிருந்த உணவை துடைத்தெடுத்து, நீர் பருகச் செய்தான்.
தாயின் கண்கள் மகனை ஆசையுடன் வருடி, "கண்ணா... " என்ற படி மகனை நோக்கி கரம் நீட்ட, நீட்டிய கரத்தில் தன் கன்னத்தை புதைத்தான் அவன்.
அவர் எப்பொழுதும் இரு மகன்களை பார்த்தும் இரு கைகளயும் நீட்டுவார். சஜியை முந்திக் கொண்டு ப்ரதிஜ் அதில் சரணடைய சின்னச் சிரிப்புடன் தூர நின்று பார்ப்பான் சஜித். அவனுக்கு தன் ஆசியை கண்களால் வழங்குவார் அவர்.
இன்றும் அந்த கண்கள் ப்ரஜித்தை தாண்டி சஜித்தைத் தேடி சோர்ந்து போக, "பக்கத்துல இருக்குறதுனாத தா என்னோட அருமையும் உங்களுக்கு தெரியலயோ.? நானும் அவன மாறி எங்கையாது சொல்லிக்காம போய்டவா.?" என்றபோது கண்ணீர்த் துளிகள் அவனின் பேச்சை நிறுத்தியது.
"மாம்... என்னதிது சின்னக் குழந்தை மாறி. " என கண்களை துடைத்தெடுத்தவனிடம்.
"நா சஜிய பாக்கனும் கண்ணா." என்றார் சின்னக் குரலில்.
"அவனுக்கு தா உங்க மேல அக்கறையே இல்லயே.? இத்தன வர்ஷமா வளத்த பாசம் அவனுக்குள்ள இருந்திருந்தா உங்களுக்கு ஸ்டோக் னு தெரிஞ்ச அடுத்த நொடி உங்க கண்ணு முன்ன வந்து நின்னிருப்பான். இரும்பு பேக்டரில வொர்க் பண்ணி அவனும் இரும்பாவே மாறிட்டான். உணர்ச்சி இல்லாத ஜடமா!" என்க.
"உன்னால அவன எம்முன்னாடி கூட்டீட்டு வர முடியாதா.?"
"மாம்... " என அவரை உற்று நோக்க.
"சரி கண்ணா." என்றவர் எதுவும் சொல்லாது படுத்துக் கொண்டார்.
அவர் பேசாது முகம் திருப்பியது மகனுக்கு கஷ்டமாகிப் போனது.
தனக்கு இது வேண்டும் என்று அவர் வாயைத் திறந்து கேட்டது மிகவும் குறைவு. கேட்கும் ஒன்றிரண்டை மகன்கள் போட்டி போட்டு அடித்து பிடித்து நிறைவேற்றி வைப்பர்.
அது இந்தர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சுற்றுல்லா சென்றிருந்த சமயம்.
விமானத்தில் பிஸ்னஸ் க்ளாஸில் பயணம் செய்யும் போது தாயின் முகத்தில் உண்டான பூரிப்பை கண்டனர் மகன்கள்.
ப்ரஜித் சொகுசு விமானத்தை வாங்கி தாயிக்குப் பரிசளித்தான் என்றால் சஜித் அந்த நிறுவனத்தையே தாயின் பெயருக்கு மாற்றி இருந்தான்.
இருவருக்கும் இடையே தலைமைக்கும் மட்டுமல்ல தாயின் அன்புக்கு தான் பயங்கர போட்டி உள்ளது.
அவரின் கழுத்து வரை போர்வையால் போர்த்தியவன்.
"உங்களுக்கு அவன பாக்கனும். அவ்ளோ தான. இன்னும் எட்டே மாசத்துல உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பான். கொஞ்சம் முன்னப் பன்ன ஆகலாம் தா. பட் அடுத்த வர்ஷம் இந்த நாள் இங்க இருப்பான். இல்லன்னாலும் பிடிச்சிழுத்திட்டு வர்றேன். ப்ராமிஸ். போதுமா!. நிம்மதியா தூங்குங்க." எனத் தம்பியை அழைத்து வருவதாக சத்தியம் செய்துவிட்டுச் சென்றான்.
அவனின் பின்னாலேயே வந்த ரிபேக்கா.
"ஏ ராங் ப்ராமிஸ் பண்ற?. உன்னால சஜி எங்க இருக்கான்னு கண்டு பிடிக்கவே முடியாது. நீ பேசுனதுக்காக ஒன்னும் சஜி வீட்ட விட்டு வெளில போகல. அவனாத்தா போயிருக்கான். சோ, அவனா வந்தாத்தா உண்டு. உன்னால அவன இழுத்திட்டு வரலாம் முடியாது. வீணா பொய் சத்தியம் செஞ்சி சித்தும்மாவ ஏமாத்தாத. "
"ஒன் மினிட். ஒன் மினிட். சித்தும்மாவா!!. யாருக்கு யாரு அம்மா?. எந்த உறவு முறைல நீ அவங்க சித்தும்மான்னு கூப்பிடுற?. " என குரல் உயர்த்த அவள் அமைதியாகிப் போனாள்.
"ஃபஸ்ட்டப்பால் நீ யாரு? எதுக்கு இங்க வந்த?. உனக்கும் இந்த வீட்டுக்கும் என்ன சம்மந்தம்?. ஹாங். கெஸ்ட்டா அம்மாவ பாக்க வந்தியா? அப்ப வெய்டிங்க ரூம்ல வெய்ட் பண்ணனும். கெஸ்ட்டுக்கு பெட் ரூம் வரைக்கும் போக அனுமதி கிடையாது. யூ காட் இட். " என்றவன்.
"மஞ்சும்மா... " என உரத்த குரலில் அங்கிருந்த தலைமை வேலையாளை அழைக்க, அவர் அவனின் முன் வந்து நின்றார்.
"இனி இவங்க இங்க, அதாவது வீட்டுக்குள்ள வரைக்கும் வரக் கூடாது. அப்பாயின்மெண்ட் வாங்காம வெய்டிங் ரூம்க் குள்ள கூட விடாதிங்க. " என்க, அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காத ரிபேக்கா தன் வேக நடையில் வெளியேற, அவளை சொடக்கிட்டு அழைத்தான்.
திரும்பிப் பார்க்க அவளின் சுயமரியாதை இடம் தராத போதும், கால்கள் நின்று விட்டது.
"உம்ஃப்ரெண்ட் என்ன மந்திர வாதியா. உலகத்த விட்டு திடீர்னு மறைஞ்சி போக. இங்க தா எங்கையாது ஒழிஞ்சிட்டு இருப்பான். பொந்துக்குள் மறைஞ்சிருக்குற பாம்ப எப்படி வெளில தலை நீட்ட வைக்கனும்னு எனக்கு நல்லவே தெரியும். இப்பவும் நா அவனுக்கு அண்ணேந்தான். எல்லா விதத்துலயும் மூத்தவன் தான். " என்க,
'உன்னால முடிஞ்சா செய்.' என்ற சவால் பார்வையை விட்டுச் சென்றாள் அவனின் மனைவி.
ஆம், ரிபேக்கா ப்ரஜித்தின் மனைவி.
சஜித்தின் தோழி.
சஜித், ரிபேக்கா இருவருக்குமான நட்பு பள்ளிப் பருவத்தில் பதின்ம வயதில் தோன்றியது.
இருவரின் குணமும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருந்ததால் உயிர்த் தோழர்களாகிப் போயினர்.
"வீட்டுல கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி டான்சர் பண்றாங்க சஜி." என்றவளை விட்டு பிரிய மனமில்லாது ப்ரஜித்தின் தலையில் கட்டியது சஜித் தான்.
சிறு வயதில் (அது நட்பாக இருந்த காலம்), "உன்னோட லைஃப் பார்ட்னர நாந்தா டிசைட் பண்ணுவேன். என்னோட லைஃப் பார்ட்னர நீ தேர்ந்தெடு. நீ சொல்ற பொண்ணத்தா நா கல்யாணம் பண்ணிப்பேன்." என ப்ரஜித் கூறிய வார்த்தைகளை வைத்து,
"எம்ஃப்ரெண்ட்ட கல்யாணம் பண்ணிக்க." என்றான்.
அதுவும் அப்போது தான் ப்ரஜித் சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்திறங்கியிருந்தான்.
அவனின் திருமணத்தைத் தகவலாக அவனுக்கு அறிவித்து விட்டு அப்படியே தூக்கிச் சென்று மணமேடையில் அமர வைத்து தாலியை கையில் குடுத்தான். கட்டுவதை தவிர வேறு வழியே இல்லை ப்ரஜித்திற்கு.
சித்தாரா வேறு கையில் அட்சதையுடன், 'கட்டுப்பா நா அட்சத தூவனும்.' என்ற ரீதியில் பூரிப்புடன் நிற்க, திருமணம் இனிதே நடந்தேறியது.
ரிபேக்காவும் செல்வ சீமாட்டி தான். தொழில் ரீதியாக அவளின் தந்தைக்கும் இந்தருக்கும் நல்ல நட்பு இருந்தது. பெரிதாக எந்த எதிர்ப்பும் இல்லை. ஆறு மாதங்கள் இருவரும் கணவன் மனைவியாக இருந்தனர்.
ஆனால் அதன் பின்...
ஒரு விபத்தில் ஆஜித்ரேவன் இறந்து போனார். இவர் தான் அடுத்த தலைமை என்று அறிவிக்கப் படாத நிலையில் நான் நீ என போட்டி நிலவியது.
அடித்து பிடித்து யார் யாரோ முன்னுக்கு வர, அவர்களை சமாளித்து சஜித் அதில் அமர்த்தப்பட்டான். அதுவும் அவனின் முடிவு அல்ல பங்குதாரர்கள் மற்றும் மேனேஜிங் டேரெக்ட்ர்களின் முடிவு.
நிறுவனத்திற்காக என்று கூறினாலும் ப்ரஜித்தால் அதை ஏற்க முடியவில்லை. ஏற்க நினைத்தாலும் விட வில்லை ஸ்மித்தா.
அவனின் அத்தை முறை தான். இந்தரின் தங்கை முறை.
"உனக்குன்னு எந்த மதிப்பையையும் உன்னோட குடும்பத்துல குடுக்கல. ‘உனக்கு கல்யாணம்’னு முதல் நாள் தா உனக்கே தெரியப் படுத்திருக்காங்க. இதுல இருந்தே உன்னோட மரியாத அந்த வீட்டுல எந்த அளவுக்கு இருக்குன்னு நல்லாவே தெரியுது.
நீ தா மூத்தவன். ஆனா உன்ன விட சஜித்துக்கு தான் எல்லாத்துலயும் முதலிடம். பிஸ்னஸ்ல ஆரம்பிச்சி இப்ப உனக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறது வர எல்லாத்தையும் அவன் தான் முடிவு பண்றான். உங்க எல்லாரையும் செல்லாக்காசா மாத்தி மொத்தத்தையும் அவன் ஒருத்தனே ஆள நினைக்கிறான். இந்தர் அண்ணாவும் அவனுக்கு நிறைய இடம் குடுக்குறாரு. நீ வேண்ணா பாரு பெரிப்பாக்கு அப்றம் அவனே தலைமைய தல மேல தூக்கி வச்சிப்பான். " எனத் திருமணம் முடிந்த முதலே, சஜித்தை வெறுக்கும் படி ப்ரஜித்தை மூளைச் சலவை செய்ய, அதன் படியே நடந்தும் விட்டதால் ஒருவித கோபம் மூண்டது அவனுள்.
ஸ்மாத்தாவிற்கு ஏன் இந்த காண்டு என்றால், அவரின் மகள் துகிராவை ப்ரஜித்திற்கு திருமணம் செய்து நிர்வாகத்தில் நிரந்தர உரிமை கோர நினைத்தவரின் திட்டத்தை சஜித் முறியடித்து விட்டான். அது தெரியாது போனது ப்ரஜித்திற்கு.
ஆனால் ஸ்மித்தாவிற்கு தெரியும். அதனால் ப்ரஜித்தை வார்த்தைகளால் பேசிப் பேசி தன் வசம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.
ரிபேக்காவுடன் திருமணம் நடந்த சூழ்நிலை காரணமாக ஸ்மித்தாவின் விஷச் சொற்களுக்கு செவி குடுத்தவனை முழுதாக விஷமாய் மாற்ற நினைத்தார்.
அதற்கு ஏற்றார் போல் ஆஜித்ரேவனின் மரணமும் நிகழ்ந்து சஜித் CEO வாக அறிவிக்கப்பட்டான்.
"எப்படா சாவானு காத்திட்டு இருந்த மாறி இருக்கு நீ இந்த சேர்ல உக்காந்திருக்குறது. ஒரு வேல இந்த பதவிக்காக நீயே அவர கொல பண்ணிட்டியா?" என்ற சொல் அம்பு சஜித்தை அதிகமாக பாதித்தது.
அதன் பின் Board of directors meeting இல் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்டனர். அது அனைத்தையும் வேண்டாம் என உதறித் தள்ளி விட்டு சஜித்தை ஒட்டு மொத்தமாக விலகிச் செல்ல வைத்தது.
"நீ இன்னைக்கி பண்ணது ரொம்ப பெரிய தப்பு ப்ரஜி. உனக்கு அவன் மேல் பொறாம இருக்குன்னு எனக்கு தெரியும். ஆனா இன்னைக்கி நீ பண்ணது ரொம்ப பெரிய முட்டாள் தனம். சஜியோட அண்ணெங்கிற ஒரே காரணத்துக்காகத் தான் உன்ன நா கல்யாணமே பண்ணிக்கிட்டேன். இனி என்னால உங்கூட வாழ முடியாது." என்று விட்டு பெட்டி படுக்கையுடன் தாய் விட்டிற்குச் செல்ல,
' நீ என்ன என்ன வேண்டாங்கிறது. நா உன்ன தூக்கி எரியுறேன் என்னோட லைஃப்ல இருந்து.' என்றவன் டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பி விட்டான். ஆனால் அவள் தான், 'உனக்கு அத அவ்ளோ ஈசியா குடுக்க மாட்டேன் டா.' என்பது போல் தராது அடம்பிடிக்கிறாள் இரண்டரை ஆண்டுகளாக.
'25 வயதில் உனக்கு என்ன திறமை இருக்கிறது என்று இந்த பதவியில் அமர்கிறாய்.' எனக் கேட்ட ப்ரஜித்திற்கு சஜித் சென்ற ஆறே மாதங்களில் கண்கள் இருட்டத் தொடங்கிவிட்டது.
தலைமை என்பது சுலபமான பதவி அல்ல, எத்தனை அழுத்தமானது என்று புரிந்து கொண்டவன் நிறுவனத்தை சரிய விடாது காத்து வருகிறான்.
ஆனால் தூக்கி நிறுத்த சஜித் வேண்டும். அவனை அழைக்கவும் தேடவும் அவனின்
ஈகோ தடுத்தது.
இன்று தாயின் மூலம் அது கட்டளையாக கிடைக்க, பாம்பை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினான்.
வெற்றி கிடைக்குமா…
மயக்கம் தொடரும்....
Latest Post: மயக்கம் 6 Our newest member: Saranyakumar Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page