All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 5

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 19
Topic starter  

அத்தியாயம்: 5

 

ஆஜித்ரேவன் என்ற மனிதரால் பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது தான் JET industry. ஆரம்பிக்கும் போது சாதாரண ஸ்டீல் தொழிற்சாலையாக விதை போடப் பட்டது. இன்று அது விருட்சமாக வளர்ந்து பல கிளைகளாக பல நாடுகளில் பல நிறுவனங்களாக வேரூண்றி வளர்ந்து கொண்டே இருக்கிறது. 

 

ஆஜித்ரேவன் தன் இரு மகன்களான இந்தர், மனோ. (இருவர் பின்னும் ஜித்ரேவன் என்ற பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள். அது அவர்களின் குடும்பப் பெயர்.) இருவரின் உதவியுடனும், தன் உடன்பிறப்புக்கள், நண்பர்களின் உதவியுடனும் தொழிலை விஸ்தரித்ததுடன், பல புதிய தொழில்களில் கால் தடம் பதித்து வெற்றிகரமாக நடத்திச் செல்கிறார். 

 

இந்தர், தந்தையின் உதவியுடன் பல புதிய நிறுவனங்களை தொடங்க, மனோஜித் தன் கல்லூரிப் படிப்பை வெளிநாட்டில் முடித்து விட்டு தொழிலில் இறங்காது காதல் என்று வந்து நின்றார். 

 

அவர்கள் குடும்ப வழக்கம் பழக்கம் என பலவற்றைப் பேசி அந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. அதனால் அனைத்தையும் உதறிவிட்டு தான் காதலித்த வெள்ளைக்கார மங்கையைத் திருமணம் செய்து கொண்டு, தன் மகன் சஜித்ரேவனுடன் வெளிநாட்டில் ஆனந்தமாக வாழ்ந்து வந்தார். பத்தாண்டுகள் அந்த ஆனந்தத்தில் திளைத்தவரை ஆஜித்ரேவனின் தொழில் சரிவு இழுத்து வந்து தந்தையிடம் விட்டது. 

 

தன் குடும்பத்திற்கு தன் தேவை உள்ளதை உணர்ந்து தொழிலில் இறங்கிய மனோஜித்தின் வருகை, தொழிலை விஸ்வரூபம் வளர்ச்சி காண வைத்து. 

 

அண்ணன் தம்பி என இருவரும் தங்களுக்குள் போட்டி போடாது, தடம் பதிக்கும் அத்தனை தொழிலும் வெற்றி கண்டனர். 

 

அப்போது பெரும் இடியாக வந்து அமைந்தது மனோஜித்தின் இறப்பு. 

 

ஒரு விமான விபத்தில் தாயையும் தந்தையும் இழந்து நின்ற பதின்ம வயது சஜித்திற்கு இந்தரின் மனைவி சித்தாரா தான் தாயாகிப் போனார். 

 

இந்தர் சித்தாராவின் மூத்த மகன் தான் ப்ரஜித்ரேவன். 

 

இருவருக்கும் தாயான சித்தாரா சுய ஒழுக்கத்தை தான் முதலில் போதித்தார். இப்போது வரை இருவருமே தொழிலிலுக்காக எது வேண்டுமானாலும் செய்தாலும், மாதுவின் பழக்கம் கிடையாது. அதிலும் சஜித்தை நெருங்கும் பெண்களின் நிலை என்பது அனலை நோக்கி வந்து மடிந்து போகும் விட்டில் பூச்சியின் கதையாகிப் போகும்.  

 

அண்ணன் தம்பி என இருவரும் நண்பர்களாக சில காலம் மட்டுமே இருந்தனர். பின் இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றனர்.

 

அதிலும் வளர்ந்த பின் அண்ணன் தம்பி பங்காளிகளாகிப் போனது தான் சோகம். 

 

இருவருக்குமே தொழில் யுத்திகளை போதித்தது ஆஜித்ரேவன் தான். அதில் ப்ரஜித்தை காட்டிலும் மூன்று வயது குறைந்த சஜித் பல படிகள் முன்னே இருந்தான். 

 

தன் தந்தையின் இழப்பிற்கு பின் தன் பதினைந்தாவது வயதிலேயே அந்த ஸ்டீல் தொழிற்சாலையில் கடை நிலை ஊழியராக பணியில் சேர்ந்தான் சஜித். 

 

"ஒவ்வொரு தொழிலாளியும் நம்ம நிறுவனத்த கட்டமைக்க உதவுற அடிக்கல். கட்டிடம் வலுவா இருக்க, அந்த அடிக்கல்ல கவனமா தேர்ந்தெடுத்து, நமக்கு விஸ்வாசமானவங்களா மாத்தனும்‌. விஸ்வாசம் அவ்ளோ ஈசியா வந்திடாது. அவங்களோட நம்பிக்கைய சம்பாதிக்க, அவங்களோட வலியும் கஷ்டமும் என்னென்னு நமா தெரிஞ்சிருக்கனும். " என்ற ஆஜித்ரேவனின் அறிவுரைகளால் அந்தப் பணியில் இரண்டாண்டுகள் இருந்தான். 

 

பின் படிப்பு என மேல்நாடு சென்றபோதும் அங்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சென்று தொழிலைத் திறன்பட கற்றான். 

 

அது ஆஜித்ரேவனுக்கு அடுத்து சஜித் தான் என்ற பெயரையும் புகழையும் வாங்கித் தந்தது. சஜித், அவரின் தொழில் வாரிசு என்று பேசப்பட்டான். 

 

தொழிலாளர் மத்தியில் வளர்ந்ததன் விளைவு அவர்களின் கஷ்டத்தை போக்கும் வழியறிந்திருந்தான் சஜித். 

 

இரும்பு உற்பத்தி செய்யும் ஆலைக்கு iron ore என்பது தான் மூலப் பொருள். அதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, சிறு சிறு கல் வடிவில் இருக்கும் அதை பொடித்து, மற்ற உலோகங்களின் கலவைகளில் இருந்து சலித்து, பிரித்து, கிட்டத்தட்ட 2000 டிகிரி செல்சியஸ் தீயில் இட்டு, திட நிலையில் இருக்கும் இரும்புத் துகள்களை திரவ நிலைக்கு மாற்றி, அச்சில் ஊற்றி இரும்பு லாடுகள் செய்யப் படும். 

 

பின் அந்த லாடுகள் மீண்டும் உருக்கப்பட்டுத் தேவையான வடிவத்திற்கு மாற்றப்படும். 

 

100 டிகிரி அடிக்கும் வெயிலை சமாளிக்கவே நாம் படாத பாடு படும் போது 2000 டிகிரி வெப்பத்தில் மனிதனின் உதவியில்லாது இரும்பு கிடைப்பதில்லையே. 

 

இரும்பின் முக்கியத்துவம் நாம் அறிந்ததே. எங்கு எதைத் தொட்டாலும் அதில் இரும்பின் தேவை இருக்கும். 

 

இரண்டு ஆண்டுகள் அந்த வெப்பத்தின் தாக்கத்தை உணர்ந்த சஜித், அப்படிப் பட்ட வெப்பத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளத்தையும் தாண்டி நிறைய செய்தான். 

 

பணி இடத்தில் அவர்களுக்கு சௌகர்யங்களை ஏற்படுத்திக் குடுத்தான், உடல் வெப்பத்தை குறைக்கவென. 

 

மருத்துவம் பரிசோதனை மட்டுமல்லாது 24/7 மருத்துவக்குழுவையும் தொழிற்சாலைக்குள் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டான்.   

 

அவர்களின் சத்தான உணவிற்கு அடித்தளமிட்டவன், அவர்கள் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டி தொழிற்சாலைக்கு அருகிலேயே குடில் கட்டித் தந்தான். 

 

அவர்களுக்கு சாலை, பேருந்து, குடி நீர் தொடங்கி அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சிறிய கிராமம் உருவாக்கப்பட்டது.  

 

ஒரு கோயிலை மையமாக வைத்து ஊர்கள் விரிவடைவது போல் அந்தத் தொழிற்சாலையை மையப்புள்ளியாகக் கொண்டு அந்த கிராமம் இயங்கத் தொடங்கியது. 

 

அது தொழிலாளர்களிடையே சஜித்தின் மீது நம்பிக்கையை உருவாக்கியது. இன்றும் சஜித் அழைத்தான் என்றால் வந்து வேலை செய்ய அங்கு கிழவன் கூட தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு தயாராகி வருவான். 

 

ப்ரஜித்தையும் இவ்விடம் குறையாக கூறி விட முடியாது. அவனும் திறமையானவன் தான். சஜித்திற்கு பல துறை என்றால் ப்ரஜித்தும் சில நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு தான் இருக்கிறான். 

 

தோல்வி காணாததே பெரிய வெற்றிதான். 

 

இருவரும் இரு திசையில் தனித்து இருக்க, அவர்களை தலைமையை அடையப் போவது யார் என்ற கயிற்றால் கட்டி எதிர் எதிர் திசையில் ஓட விட்டுள்ளது விதி. 

 

விதி என்பதை விட சிலரின் சதி என்றால் பொருத்தமாக இருக்கும்.

 

ஆஜித்ரேவன் தலைமைக்கு பின் அடுத்த தலைவர் யார் என்ற போட்டி அடுத்த தலைமுறை இடையே மூட்டி விட்டுள்ளனர். 

 

ஆரோக்கியமான முறையில் போட்டி போட்டுக் கொண்டு இருந்தவர்களின் மனதில் பொறாமை என்ற உணர்வை தூண்டி விட்டு, JET industry ஐ கைப்பற்ற வெளியாட்களுடன் சேர்த்து ஆஜித்ரேவனின் தம்பி குடும்பத்து ஆட்களும் முயன்று வருகின்றனர்.

 

அதில் அவர்கள் கிட்டத்தட்ட வெற்றியும் கண்டுள்ளனர். 

 

‘எங்களை அழிக்க வெளியாட்கள் தேவையே இல்ல. நாங்களே அடித்துக் கொள்கிறோம். பிறகு நீங்கள் வந்து அடியுங்கள்.’ என்பது போல் ப்ரஜித், சஜித் இருவரும் ஒரு மீட்டிங்கில் கட்டி உருண்டு சண்டை போட, அது இவர்களை வீழ்த்தும் எண்ணத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பாக அமைந்தது.

 

ப்ரஜித்துடன் உண்டான மனக்கசப்பில் அனைத்து தொழில்கள்களையும் விட்டுக் குடுத்து விட்டு சஜித் கடந்த மூன்று ஆண்டுகளாக பிஸ்னஸ்ஸை மட்டுமல்லாது வீட்டை விட்டும் மொத்தமாக விலகி நிற்கிறான். எங்கு சென்றான் என்று கூட யாருக்கும் தெரியாது.

 

________

 

‘பேலஸ் ஆஃப் ரேவன்’ என்ற எழுத்துகளைத் தாங்கி நின்றது அந்த காலனியின் நுழை வாயில். 

 

அந்தக் காலனியில் மொத்தம் இருபது வீடுகள் இருக்கும். அனைத்தும் ரேவன் குடும்பத்து உறுப்பினர்களுக்கானது. அவர்களுக்கு எனத் தனித் தனி வீடுகள் அருகருகே சில மீட்டர் இடைவெளியுடன் மரங்கள் செடிகள் என பச்சை பசேலுடன், அழகிய கலைநயத்துடனும் உண்டு. 

 

இந்தர் சித்தாரா தம்பதியினரின் வீடு அதில் சற்று பெரியது. 

 

வேகமாக தன் தாயின் வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்த ப்ரஜித்தின் முகம் கடுகடுத்து இருந்தது. 

 

"இன்னைக்கி பேக்ரில என்ன நடந்தது ப்ரஜித்.?" என்ற கேள்வி அவனின் தந்தையும் தற்போதைய CEO வாக உள்ள இந்தரஜித்திடன் இருந்து வந்தது. 

 

" ஆக்ஸிடென்ட். " என்றான் கூலாக. 

 

" நீ என்ன பண்ண?." 

 

" நா எதுவும் பண்ணல. ஆம்புலன்ஸ்ல ஏத்தி அவங்களே கூட்டீட்டு போய்ட்டாங்க. " என்றவனை சுடும் பார்வை அவர் பார்க்க, அவனோ அவரின் அருகில் நின்ற இளவேந்தனை முறைத்தான். 

 

"அதா புறா ஓலைய தூக்கிட்டு வந்திருக்குமே?. " என்றவன் இளாவை பார்த்து,

 

"டிட்டெயில்லா ஓலைல எழுதலயா நீ?" என்றான் நக்கலாக. 

 

"ப்ரஜித் நமக்கு எத்தன பிஸ்னஸ் இருந்தாலும் ஸ்டீல் இன்டஸ்டீஸ் தா நம்மோட பிரதானம்.‌ இப்பவும் அத கைப்பற்ற நா நீன்னு போட்டி போட்டுட்டு இருக்காங்க. நீ என்னடான்னா போட்டியே போடாதிங்க இந்தாங்கன்னு தூக்கி குடுத்திடுற மாறி பிகேவ் பண்ணிட்டு இருக்க. வாட் இட்ஸ் திஸ்." என்றவர் அவன் கையெழுத்திட்ட கோப்புகளை முன்னாள் வைத்தார் கோவமாக. 

 

" எனக்கு இந்த பேக்டரி மேல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு நா தெளிவா சொல்லிட்டேன். ஆனாலும் நீங்க நாந்தா அத எடுத்து நடத்தனும்னு எதிர்பார்த்தா எப்படி? இப்படித் தான் ஆகும்." 

என்றவனிடம் எப்படிச் சொல்லி புரியவைப்பார். 

 

ஆஜித்ரேவனின் தம்பி வாரிசுகளான மகேந்திரன், ஸ்மித்தா ஆளுமைக்குக் கீழ் இந்த நிறுவனம் செல்லக் கூடாது என்று.  

 

காயம்பட்ட சிங்கம் எப்பொழுது வீழும், எப்பொழுது கொத்தித் தின்னலாம் என்று காத்திருக்கும் வல்லூருகளிடம் இருந்து காக்க வேண்டும். 

 

சஜித் இருந்த வரை எவ்வித பிரச்சனையும் இல்லை. அவன் சென்ற பின் இவன் முரண்டு பிடிப்பான் என அவர் எதிர் பார்க்கவில்லை. 

 

ஆனாலும் சிங்கம் வீழ்ந்து விடக் கூடாது. காயங்கள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டியவை என்பதால், 

 

“இந்த இடத்துல இப்ப சஜி இருந்திருந்தா!” என அவர் ஆரம்பிக்கும் போதே கடுப்பான ப்ரஜித்,

 

“அதா இல்லையே. எங்கயோ ஓடி ஒழிஞ்சிக்கிட்ட கோழைக்கி எதுக்கு பாராட்டு விழா.” என்றான் நக்கலாக்.

 

"சஜி, எந்த அளவுக்கு இந்த பிஸ்னஸ்ஸ நேசிச்சான்னு தெரியுமா? தன்னோட வாழ்நாள்ல பாதிய இந்த பேக்ரிலயே கழிச்சிருப்பான். அவனோட அற்பணிப்புக்காகவாது... " என்றபோதே மேஜையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் தட்டி விட்டு எழுந்தவன். 

 

"அவ்ளோ லவ் இருந்தா ஏ விட்டுடு போகனும். நாம யாரும் வேண்டாம்னு ஓடிப் போனவன் அவன். இன்னும் அவன பெருமையா பேசிட்டு. 

 

என்னாலலாம் எவனோ ஒருத்தேன் காதலச்சிட்டு கலட்டி விட்டு போன இடத்துல உக்காந்து வாழ்க்க குடுக்கு முடியாது. அவன வரச் சொல்லுங்க." என்றான் ப்ரஜித். 

 

"அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சிருந்தா இன்னேரம் இந்த சீட்ல அவன் தான் இருந்திருப்பான். " என்றவருக்கு வருத்தம். தன் தம்பி மகன் எங்கே இருக்கிறானோ என்ற கவலை ஒரு பக்கம். ஆலையை கைப்பற்ற நடந்து கொண்டிருக்கும் சதி வேலைகளை எப்படி தடுப்பது என்ற யோசனை ஒரு பக்கம் என நிறைய இருந்தது. 

 

" ஏந்தெரியாது?. இதோ நிக்கிறானே உங்க தம்பி மகனோட விஸ்வாசி. டாபர் மென் டாக் மாறி தன்னோட விஸ்வாசத்த எங்கையோ இருக்குற அவனுக்கு காட்டிட்டு. அவன்ட்ட கேளுங்க எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும். " என பேசிக் கொண்டே போக, எழுந்து நின்ற அவர்,

 

"சஜித் திரும்பி வருவான். அவன் வர்ற வர பேக்டரி உம்பொறுப்புல தா இருக்கும். நீ தா அத மேனேஜ் பண்ணித்தா ஆகனும். " என கட்டளையிட்டுச் சென்றார். 

 

கண்ணாடிக் கதவை திறந்தவர், "சஜித் இருந்திருந்தா இந்த பிரச்சனைகள நல்லாவே ஹன்டில் பண்ணிப்பான். உன்ன மாறி முட்டாள்த்தனமா முடிவெடுக்க மாட்டான். Be like Sajith. " என சஜித்தை போல் இரு என்று கூறி விட்டுச் செல்ல ஆத்திரமாக வந்தது ப்ரஜித்திற்கு. 

 

'அவன மாறி நா இருக்கனுமா?' என்ற கடுப்புடன் வந்தவனை, சித்தா

ராவின் வாசலில் நின்ற கார் மேலும் கடுப்பேற்றியது. 

 

"இவள யாரு இங்க வரச் சொன்னது? அடுத்த தலவலி." எனப் பொறுமிய படியே உள்ளே சென்றான்.

மயக்கம் தொடரும்...


   
ReplyQuote

You cannot copy content of this page