All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

உயிரே நீ என்ன செய்க...
 
Notifications
Clear all

உயிரே நீ என்ன செய்கிறாய்..!! - (Story Thread)

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 15
 
தன் நெருக்கத்திலும் வார்த்தைகளிலும் கன்னம் சிவந்த நின்றிருந்த மிருவை கண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அவளை நெருங்கிய அபய், மெல்ல தன் மூக்கின் நுனி கொண்டு அந்தச் சிவந்திருந்த கன்னத்தை வருடிக் கொடுக்க... அதில் மிருவின் உடல் சிலிர்த்து அடங்கியது.
 
 
தன்னருகில் அவளின் ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கிக் கொண்டு இருந்த அபய் “ஹே லட்டு, எங்கடி உன் லட்டுக் கன்னத்தைக் காணோம்... டயட்ல இருக்கீயா என்ன...!?” என மெல்ல கிசுகிசுப்பான குரலில் கேட்கவும், அபய்யின் இந்த நெருக்கமும் குரலும் அவளை ஏதோ செய்ய... பதில் அளிக்க முடியாமல் தடுமாறி தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள மிரு முயன்றாள்.
 
 
அதில் மிருவின் மற்றொரு பக்க கன்னம் அபய்க்கு காட்சிக்குக் கிடைத்தது. அவளின் முயற்சிகள் எதற்கென்று புரிய, ஆனால் அந்த முயற்சி அவளுக்குப் பயனளிக்காமல் போனதும் தனக்கு வாய்ப்பாக அமைந்ததையும் கண்டு குறும்பாக மெல்ல புன்னகைத்த அபய், “கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா...” எனக் குறும்பு குரலில் கூறவும், அவனை ஏறிட்டு பார்க்க முடியாமல் நாணம் தடுக்கவும் தழைந்த பார்வையோடு அங்கிருந்து விலக நினைத்து அதற்கான முயற்சிகளை மிரு மேற்கொள்ள நினைக்கும் போதே அவளின் எண்ணம் புரிந்தவன் அதற்குச் சற்றும் வாய்ப்பளிக்காமல் இன்னும் அழுத்தமாக அவளை நெருங்கி நின்றிருந்தான்.
 
 
அபய் இடைவெளி இல்லாத நெருக்கத்தில் நெருங்கி நின்றிருந்ததில் தலை குனிந்து நின்றிருந்தவளின் உச்சந்தலை அபய்யின் மார்பில் பதிந்து இருந்தது. மெல்ல தன் விரல் கொண்டு அவள் முகத்தை நிமிர்த்தியவன் கண்களில் ஆசையையும் ஏக்கத்தையும் தேக்கி மிருவை பார்க்க... ஏற்கனவே அவனின் அருகாமையிலும் வார்த்தைகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக நிலைதடுமாறிக் கொண்டு இருந்தவள் அந்தப் பார்வையின் வீச்சை தாங்க முடியாமல் தவிப்போடு அல்லி மலர் போன்ற தன் விழிகளை மூடிக் கொண்டாள்.
 
 
விழிகளை மூடி கொள்வதற்கு முன்பாக அந்தச் சில நொடி பார்வையிலேயே அவளின் தன்னிடமான எதிர்பார்ப்பை சரியாகப் படித்திருந்த அபய் சற்றும் தாமதிக்காமல் தன் முத்திரையை வெகு வருடங்களுக்குப் பிறகு ஆசையும் காதலும் உரிமையும் கலந்து அவள் விழிகளில் அழுத்தமாகப் பதிய செய்தான்.
 
 
அதன் பிறகு மெல்ல காலை பனியில் பூத்திருக்கும் பூக்களை வருடும் மென்மையோடு மிருவின் நெற்றி, கண், கன்னம், மூக்கு, எனத் தன் இதழ்களைத் தூரிகையாக்கி மென்மையாக வருடிக் கொண்டு வந்தவன், அவளின் இதழ்களை நெருங்கிய நொடி அவனின் இதழ்கள் தன் இணையைக் கண்டு கொண்ட பேராவலோடு அவற்றோடு சங்கமிக்கும் நோக்கத்துடன் அவனின் கட்டுப்பாட்டையும் மீறி பந்தயக் குதிரையின் வேகத்தோடு அதை நெருங்க...
 
 
அதுவரை அபய்யின் செய்கையில் அவனின் கரங்களில் உருகிக் கரைந்து கொண்டிருந்தவள், விழிகள் மூடியபடியே ஒரு எதிர்பார்ப்போடு தன் குங்குமம் எனச் சிவந்த முகத்தை அபய்யின் செய்கைகளுக்கு உடன்பட்டு சற்று தன்னையும் அறியாமலேயே உயர்த்தி இருந்தாள்.
 
 
அதுவரை ஆசையும் ஆர்வமும் எதிர்பார்ப்புமாக மிருவை நெருங்கிய அபய், அவளின் இந்தச் செய்கையில் ஒரு நொடி தாமதித்து ரசனையோடு அவளின் இந்தச் செய்கையை உள்வாங்கிக் கொண்டே அவளின் மதி முகத்தைத் தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருக்க...
 
 
அந்தச் சில நொடி தாமதத்தைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் எதிர்பார்ப்போடு காத்திருந்தவள் ‘எங்கே அன்று போலத் தன்னை அப்படியே விட்டு விட்டு விலகிச் சென்று விட்டானோ!?’ என்ற எண்ணம் மனதில் தோன்ற ஏமாற்றம் கவிழ்ந்த முகத்தோடு தன் விழிகளைத் திறந்து பார்த்தவள், அங்கு அபய் ரசனையான பார்வையோடு நின்றிருப்பதைக் கண்டு திகைத்தாள்.
 
 
அந்தப் பார்வையை எதிர் கொள்ள முடியாது நகர முயன்றவள் முயற்சிகளுக்குத் தடை விதிப்பது போல் நின்றிருந்தவனின் செய்கையில் விருப்பத்தோடு கூடிய ஒருவகைச் சளிப்பு எழ, “ம்ப்ச்” என மீண்டும் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியாமல் தடுமாற்றத்தோடு பார்வையை இங்கும் அங்கும் அலைய விட்டபடியே நின்றிருந்தாள் மிரு.
 
 
மிருவின் இந்த ஒவ்வொரு செயலையும் அவளின் நாணமும் தவிப்புமான செய்கைகளையும் ரசித்துக் கொண்டு இருந்தவனை அவளே அறியாமல் அடியோடு கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்த்துக் கொண்டிருந்தாள் மிரு.
 
 
அவன் அறிந்த மிரு படபடப் பட்டாசு, குறும்பு குற்றாலம், அனைவருக்கும் செல்ல தேவதை ஆனால் இப்போது அவன் முன் இருக்கும் இவள் முற்றிலும் வேறு மாதிரியாக அவன் கண்களுக்குக் காட்சி அளித்துக் கொண்டிருந்தாள். ஆம் இப்போது அவன் பார்க்கும் இந்த மிரு ஆளுமையும் அழகும் கம்பீரமும் கலந்த கலவை, எதற்கு எடுத்தாலும் மற்றவர் உதவியை நாடும் குழந்தை மனம் கொண்டவள் அல்ல இவள் என்று முன்பே அறிந்து கொண்டு இருந்தவன் கண்களுக்கு இந்த நிமிடம் காதல் தேவதையாக, தன் ஆசைகளை எதிர்பார்ப்புகளை உணர்த்தவும் உணர்ந்து கொள்ளவும் கூடியவளாகவும் மட்டுமே அவனுக்குத் தெரிய... அந்தக் கண்களில் ரசனையையும் காதலையும் தாண்டி வேறொரு பாவம் குடியேறியது.
 
 
என்னதான் நிமிர்ந்து அபய்யை நேருக்குநேர் பார்க்காவிட்டாலும் அவனின் முக உடல் அசைவுகளை மட்டுமல்ல பார்வையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கூட அவளால் பார்க்காமலே உணர்ந்து கொள்ள முடிந்தது.
 
 
அதில் முகத்தோடு சேர்ந்து உடலும் சிவந்து போக, எப்படியாவது அவனை விலக்கி விட்டு அங்கிருந்து ஓடி விடவே நினைத்தவள் அங்கிருந்து நகர முயன்ற நொடி அவளின் மலர் முகத்தைத் தன் இரு கரங்களில் ஏந்தியிருந்தான் அபய்.
 
 
அதில் மனம் படபடக்க இதழ்கள் மெல்ல நடுங்க அவற்றைத் தடுக்கும் வழி தெரியாமல் தன் அரிசி பற்களைக் கொண்டு அழுந்த கடித்து அவற்றின் துடிப்பை தடுத்து நிறுத்த முயன்று கொண்டிருந்தவளின் முயற்சிகளைத் தடுத்து பற்களிடையே சிறைப்பட்டிருந்த இதழ்களை அபய் தன் வலது கையின் கட்டை விரல் கொண்டு விடுவித்த நொடி “அம்மா... அம்மா...” என்ற சுபியின் மழலையோடு கூடிய குரலோடு அறை கதவு தட்டப்பட்டது.
 
 
அதில் பட்டென விழிகளைத் திறந்தவளின் கண்களில் அப்பட்டமாக ஏமாற்றம் பிரதிபலிக்க... ஆனால் அவளை விட அதிகமான ஏமாற்றத்தோடு அவளிடம் நெருங்கவும் முடியாமல் அந்த நொடி உடனே விலகவும் முடியாமல் நின்றிருந்தவனைக் கண்டவளுக்குத் தன்நிலை கூடப் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
 
 
அவனின் துயரை எப்படித் துடைப்பது என ஒரு நொடி விழிகளைத் தழைத்து யோசித்தவள் மீண்டும் விழிகளை உயர்த்தி அபய்யை பார்ப்பதற்குள் துணி கொண்டு துடைக்கப்பட்டது போல நிர்மலமான முகத்துடன் நின்று இருந்தான் அவன்.
 
 
நொடியில் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தவனை அவள் வியப்பாகப் பார்க்கவும், அவள் செல்வதற்காக வழி விட்டு நகர்ந்தவன் “போ... போய்ப் பேபியை பாரு மினி...” எனக் கரகரப்பான குரலில் கூறியிருந்தான். அவனின் அந்தக் குரலே மிருக்கு அனைத்தையும் உணர்த்த போதுமானதாக இருந்தது.
 
 
அபய்க்கு எந்தப் பதிலும் கூறாமல் கதவைத் திறந்து அங்கு நின்று கொண்டிருந்த சுபியை அள்ளி அணைத்து தூக்கிக் கொண்டவள் அங்கிருந்து வெளியேறும் முன் மெல்ல தயக்கத்தோடு அவனைத் திரும்பிப் பார்க்க, அங்கு அபய் தன் தலையை அழுந்த கோதி கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டுவர போராடிக் கொண்டிருப்பது தெரிந்தது. தனக்காகத் தன் உணர்வுகளைச் சற்று நேரத்திற்கு முன்பு மறைத்துக் கொண்டு பேசியவனின் நிலை புரிந்து ஒரு பொருள் விளங்கா பார்வையை அவன் மேல் பதித்தபடியே அங்கிருந்து வெளியேறினாள்.
 
 
சுபியைக் தூக்கியபடி மிருவும் அவள் பின்னே அபய்யும் வருவதைக் கண்டு ஒரு தர்மசங்கடமான முகத்தோடு ரோஹித் அபய்யிடம் பேச்சுச் சுவாரஸ்யத்தில் குழந்தையைக் கவனிக்காமல் விட்டு விட்டதாகக் கூறி மெல்லிய குரலில் மன்னிப்பு கேட்க, அவனுக்குப் பதில் ஏதும் அளிக்காமல் மெல்ல ஒரு புன்னகையோடு கூடிய தலையசைப்பையே பதிலாகத் தந்தவன் அமைதியாக அமர்ந்து விட, இவையெல்லாம் கண்களில் விழுந்தாலும் அவற்றைக் கண்டு கொண்டது போலக் காட்டிக் கொள்ளாமல் குழந்தையோடு பேசுவதே தன் முக்கிய வேலை என்பது போல அமர்ந்திருந்தாள் மிரு.
 
 
மெல்ல அனைவரின் கவனமும் பாயல் பக்கம் திரும்ப, அவளோ தனக்கும் இவர்கள் இதுவரை பேசிக் கொண்டிருந்ததற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்ற ஒரு பாவனையிலேயே அமர்ந்திருந்தாள். ரக்ஷனும் ரோஹித்தும் ஓர் எதிர்பார்ப்போடு அபய்யை திரும்பிப் பார்த்து கண்களாலேயே ‘நீங்க பேசுங்க’ என்று கூற, அவர்களுக்கு விழி அசைவிலேயே ஆமோதிப்பை பதிலாகத் தந்தவன்,
 
 
“பாயல் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.
 
 
அதில் தயக்கத்தோடு அபய்யை நிமிர்ந்து பார்த்தவள் “சொல்லுங்க” எனக் கூற, “இல்ல நான் உங்ககிட்ட தனியா பேசணும்...” என மீண்டும் கூறியவனைக் கண்டு “சாரி நீங்க என்ன பேச போறீங்கன்னு எனக்குத் தெரியும், இதைப் பற்றி நாம் பேசாமல் இருப்பதே நல்லது” எனத் திட்டவட்டமான குரலில் பாயல் பதிலளித்தாள்.
 
 
“இங்க பாருங்க பாயல், எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரு முடிவை எடுத்து விட்டு அணுகினோம்னாலே அந்த விஷயம் நமக்கு ஆயிரம் மடங்கு நன்மை தரக் கூடியதாக இருந்தாலும் கூடத் தவறாகத் தான் தெரியும்... அதைப் பற்றி ஆராய்ந்து அறிந்த பிறகு முடிவை எடுப்பது தான் எப்போதும் நன்மையாக அமையும்... நீங்க கொஞ்சம் அமைதியா யோசிங்க...” என அவளுக்கு எப்படியாவது புரிய வைக்க முயன்றவனைக் கண்ட நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக எழுந்து அறைக்குள் செல்ல தொடங்கினர்.
 
 
அதுவே ‘நீ பேச தனிமை கொடுக்கவில்லை என்றால் என்ன? நாங்கள் உனக்குத் தனிமை கொடுப்போம்” என்று சொல்லாமல் சொல்ல... அமைதியாகத் தலை குனித்து அமர்ந்து இருந்தாள் பாயல்.
 
 
அபய் அவர்களை நன்றியோடு பார்த்துக் கொண்டு இருக்க, கடைசியாக அறைக்குள் நுழைய இருந்த ரக்ஷனா நின்று திரும்பி அபய்யை பார்த்து, ‘பாயலின் வாழ்க்கை எங்களுக்கும் முக்கியம்’ எனச் சைகையில் அவனுக்குக் கூறிவிட்டு “ஆல் தி பெஸ்ட்” என இதழசைவில் கூறியவள் உள்ளே சென்றுவிட்டாள்.
 
 
பாயலின் பக்கம் திரும்பி அபய் பேச்சை துவங்கும் முன், “அண்ணா ப்ளீஸ் இந்தப் பேச்சு வேண்டாமே” எனக் கெஞ்சுதலோடு கூடிய குரலில் பாயல் கேட்டு இருந்தாள்.
 
 
அதில் வியப்பாக அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான் அபய். அவளின் கெஞ்சுதல் ஒரு புறம் என்றால் அந்த அழைப்பு ஒரு புறம் அவனை வியப்பில் ஆழ்த்தியது.
 
 
அவனின் வியப்பை கண்டு, “எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன் அண்ணா, நான் உங்களை அப்படிக் கூப்பிட கூடாதா..? எனக்கு அந்தத் தகுதி இல்லைன்னு நினைக்கறீங்களா..?!” என்றவளுக்கு, “இல்லை மா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை, தாராளமா நீ என்னை அண்ணான்னே கூப்பிடலாம், ஆனா..” என்று ஏதோ சொல்ல முயன்றவன், பின் அதைப் பாதியில் விட்டுவிட,
 
 
“டோன்ட் ஒர்ரி அண்ணா, உங்க மினி நிச்சயம் கோவிச்சுக்க மாட்டா... இப்போ உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே, நான் அப்படிக் கூப்பிடலாம் தானே..” எனவும், பதில் எதுவும் சொல்லாமல் ஆச்சர்யமான பார்வையோடு அவளைப் பார்த்தான்.
 
 
“என்ன அண்ணா அப்படி ஆச்சர்யமா பார்க்கறீங்க..” எனக் கேட்கவும், “சும்மா தான்” என்றவனின் மனமோ ‘வந்த ஒரே நாளில் தங்களுக்குள் உள்ள உறவை கவனித்து இருக்கிறாளே..” என நினைத்து வியந்தது.
 
 
அதையும் அபய் முகத்தில் இருந்து கண்டு கொண்டவள், “உங்களுக்குள்ளே இருக்கும் உறவோ ப்ரச்சனையோ பற்றி எனக்கு எதுவும் தெரியாது அண்ணா, ஆனா நீங்க மிருவுக்கு நெருக்கமானவர்னு மட்டும் நல்லா தெரியும்... உங்களை வேணுமானால் எனக்குத் தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவளை எனக்குப் பத்து வருஷமா தெரியும், அவ்வளவு சீக்கிரம் யாரையும் கிட்ட நெருங்க விட மாட்டா... நீங்க இவ்வளவு சீண்டியும் வம்பு செஞ்சும் அவ உங்களை எதுவும் சொல்லலை இது ஒண்ணே சொல்லாமல் சொல்லுதே அவளுக்குப் நீங்க எவ்வளவு முக்கியம்னு...” என்று நீளமாக விளக்கியவளை கண்டு அன்பாகப் புன்னகைத்தவன் “கிளவர்” என்றான் ஒற்றைச் சொல்லாக.
 
 
அதே போல் இந்தி கலந்து கிள்ளை மொழியில் அவள் அழைக்கும் அந்த அண்ணா என்ற உச்சரிப்பும் அபய்யை வெகுவாகக் கவர்ந்தது. அவளிடம் இப்போது இருக்கும் இந்த இலகு தன்மையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த அபய், “பாயல் நான் சொன்ன விஷயத்தைப் பற்றி நீங்க ஏன் யோசிக்கக் கூடாது..!” என மெல்ல மீண்டும் பேச்செடுக்கவும், “எனக்கு விருப்பம் இல்லை அண்ணா, ப்ளீஸ்..” என்று மீண்டும் தன் கூட்டுக்குள் புகுந்து கொள்வது போல அவளின் குரல் உள் இறங்கி போனது.
 
 
பாயலுக்குப் பதில் அளிக்க அபய் முயன்ற நொடி “அதான் ஏன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?” என்ற குரல் வாசல் புறம் இருந்து வந்தது. அதில் இருவரும் வாசல் பக்கம் பார்வையைத் திருப்ப, அங்கு உதய் வாசல் கதவில் கைகளைக் கட்டியபடி சாய்ந்து நின்று கொண்டு இருந்தான்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 16
 
இந்தப் பேச்சுவார்த்தையை எப்படித் தவிர்ப்பது எனத் தவித்துக் கொண்டிருந்த பாயல், பேச்சுவார்த்தைக்குச் சொந்தக்காரனே அந்த நிமிடம் நேரில் வந்து நிற்பான் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
 
 
திடீரென இப்படி உதய் வந்து நின்று நேரடியாகக் கேட்கவும், அதிர்ந்து விழித்தவள், சற்று நேரத்திலேயே நிதானத்திற்கு வந்து அங்கிருந்து எழுந்து சென்றுவிட முயல, அதற்குள் பாயலை நெருங்கி இருந்த உதய்,
 
 
“உங்ககிட்ட பேச தான் வந்திருக்கிறேன், உக்காருங்க...” என்று சற்று அழுத்தமான குரலில் கூறவும், அவனிடம் நேரடியாக மறுக்க முடியாமல் அபய்யை பாவமாகப் பார்த்து வைத்தாள் அவள்.
 
 
அவள் கண்கள் காட்டிய பாவனையில் தோன்றிய பரிதாபத்தோடு அவளைப் பார்த்த அபய், “உட்காருமா எப்படியும் இதைப் பற்றி நீ பேசி தான் ஆகணும், ஓடி ஒளிவதனால் என்ன பிரயோஜனம் சொல்லு... என்னதான் சொல்றான்னு கொஞ்சம் காது கொடுத்துக் கேளேன்..” என சிறு குழந்தைக்குப் புரிய வைக்கும் குரலில் பொறுமையாக அவளுக்கு எடுத்துக் கூறவும் ஒரு தயக்கத்தோடு அந்த இருக்கையின் நுனியில் அமர்ந்தாள் பாயல்.
 
 
பாயல் அமர்வதற்காகவே காத்திருந்த உதய்யும் அவளின் எதிரில் இருந்த இருக்கையில் அமர, இருவரும் தனிமையில் பேசிக் கொள்ளட்டும் என்று எண்ணிய அபய், அங்கிருந்து விலகி செல்ல எண்ணி எழ முயன்றவனை உதய்யின் கரங்கள் தடுத்து நிறுத்தியது.
 
 
“இல்ல மாமா, நீங்க இருங்க” என்று உதய் கூறவும், “நோ, உதய் நீங்க பேசுங்க” எனச் சம்பந்தப்பட்ட இருவரே பேசி முடிவெடுப்பது தான் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் கூறியவன் மீண்டும் நகர முயல,
 
 
“இல்ல மாமா நீங்க இருந்தா தான் உங்க புதுத் தங்கை நான் பேசுறதை கவனிப்பாங்க... இல்லன்னா நான் வேற எதுக்கோ வந்தது போலப் பயந்து அழுதுருவாங்க” எனக் கூறியவன் குரலில் சிறு கேலி எட்டிப்பார்த்தது.
 
 
அபய்க்கும் உதய் கூறுவதில் இருக்கும் உண்மை புரிய, நிச்சயமாக இப்போதிருக்கும் மனநிலையில் அவள் அடுத்து அழத்தான் துவங்குவாள் என்று புரிந்தவன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
 
 
சில நொடிகள் அமைதியாக இருந்தவன், தன் தொண்டையைக் கணைத்து சரி செய்து கொண்ட உதய், “உங்களுக்கு ஏன் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?” என நேரடியாகப் பாயலை பார்த்து தன் கேள்வியை முன் வைக்க...
 
 
முதலில் பதில் கூறத் தயங்கினாலும் சற்று நேரத்திற்குப் பிறகு தயக்கத்துடன் கூடிய மெல்லிய குரலில் “எனக்குக் கல்யாணம் வேண்டாம்” என உதய்யை நிமிர்ந்தும் பார்க்காமல் தலை குனிந்தபடியே கூறியிருந்தாள்.
 
 
“அதுதான் ஏன்னு கேக்குறேன்...?” என அழுத்தமாக உதய் கேட்கவும், “இது என்ன கேள்வி? எனக்குக் கல்யாணமே வேண்டாம்” சிறு குழந்தையின் பிடிவாதத்தோடு கூடிய அதே மெல்லிய குரலில் தலை குனிந்தவாறே மீண்டும் பதிலளித்தவளை சில நொடிகள் இமைக்காது பார்த்தவன்,
 
 
“இங்கே பாருங்க, இந்தக் கல்யாணம் உங்களுக்காக இல்ல... சுபிக்காக, அவளுடைய வாழ்க்கையையும் நலனையும் முன்னிறுத்தி தான் இந்தக் கல்யாண ஏற்பாடு துவங்கி இருக்கு” என அமைதியான குரலில் கூறி சற்று இடைவெளி விட்டு மீண்டும்
 
 
“அவளை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவ ஏன் தந்தை இல்லாத குழந்தையா வளரணும், வாழணும்... கொஞ்சம் யோசிச்சு பாருங்க, அடுத்த வாரத்திலிருந்து அவளுக்குப் பள்ளி என்ற புதிய கதவு திறக்குது, இனி அவள் வாழ்க்கையில் எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு படிக்கும் இதுதான் முதல் படி... இங்கே இப்போதே அவள் மற்றவர்களின் கண்ணுக்குக் காட்சிப் பொருளாகவும் கேள்விக்குறியாகவும் இருக்கணுமா..? அவளை ஏன் எல்லாரும் அப்பா இல்லாத குழந்தையா பார்க்கணும்... என் குழந்தையா பார்க்கட்டுமே..!” என்றான்.
 
 
சட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் “அவளோட அப்பா பேரு விஸ்வநாதன்... அவ அப்பா பேரு தெரியாத குழந்தை இல்லை, அப்பா இல்லாத குழந்தை..” என கண்ணீர் குளம் கட்டிய விழிகளோடு கரகரத்த குரலில் பதில் அளித்தாள்.
 
 
“நல்லாவே தெரியும், நான் ஒன்னும் சுபியின் பிறப்பை தப்பு சொல்லலையே... அவள் ஏன் அப்பா இல்லாத குழந்தையா இருக்கணும்னு தானே கேட்கிறேன்?! அவ அப்பாவா நான் இருக்கேன்..” என்று அழுத்தம் திருத்தமாக மீண்டும் உச்சரித்தான்.
 
 
அவனை அதற்கு மேல் நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலை கவிழ்ந்து கொண்டாள் பாயல். உதய் மிர்னாவுக்குக் கொஞ்சமும் சளைக்காத வகையில் அழகும் கம்பீரமும் கொண்டவன், அழகு, வசதி, படிப்பு, அந்தஸ்து என எதிலும் தான் அவர்களுக்குக் கொஞ்சமும் தகுதியானவள் இல்லை என்று அவளுக்கு நன்றாகவே தெரியும்...
 
 
அப்படியிருந்தும் எதற்காக இந்தத் திருமணப் பேச்சு என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை, மிருவோடு பழகத் தொடங்கிய காலத்தில் இருந்தே அவளின் ஒவ்வொரு அசைவிலும் மிளிரும் செல்வ செழிப்பை பாயல் பலமுறை கண்டிருக்கிறாள், ஆனால் மிரு இவர்களுக்கு அறிமுகமானது தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் படியான ஒருத்தியாகத் தான்.
 
 
ஆனால் எந்த ஒரு இடத்திலும் எந்த ஒரு வேலையையும் செய்ய அவள் ஒருபோதும் முகம் சுளித்ததே கிடையாது. இதுவே பாயலை முதலில் மிருவிடம் நட்போடு பழகவும் நெருக்கம் காட்டவும் வைத்தது.
 
 
இப்போது அபய்யையும் அவன் உயரத்தையும் கண்ட பிறகு, மற்ற நண்பர்களின் மூலம் அபய் கூறியதாக உதய்யை பற்றி அறிந்துக் கொண்டவள் இவற்றையெல்லாம் யோசித்துப் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் தன் நண்பர்களால் உதாசீனப்படுத்தப்பட்ட உதய் ஒரு இடத்தில் கூடத் தன் உயரத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தவில்லை.
 
 
இத்தனை வருடங்களாகியும் ஒவ்வொரு முறையும் பதில் கூடப் பேசாமல் திரும்பி சென்றவன் தான் உதய். அப்படிப்பட்டவனின் உண்மையான சமூக உயர அறிந்து மிரண்டு போய் இருந்தவள், இப்படி அவனோடு திருமணத்திற்கு நண்பர்கள் பேசுவதை எண்ணி நிஜமாகவே அதிர்ந்துதான் போனாள்.
 
 
‘இவர்களுக்கு என்ன மூளை தான் குழம்பி விட்டதா...?!’ என்ற ரீதியில் தான் இப்போதும் அவளின் எண்ணங்கள் சென்று கொண்டிருந்தது. இதே யோசனையில் உழன்று கொண்டிருந்தவளின் முன் சொடுக்கிட்டு அவளின் நினைவை தன் பக்கம் திருப்பிய உதய், “நாம பேசிட்டு இருந்தோம், நினைவிருக்கா...?” எனவும் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
 
 
பாயல் விஷயம் அறிந்ததில் இருந்து தன் மனதில் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியை உதய்யிடம் கேட்டே விட்டாள். “உங்களுக்கு என்ன அவசியம் என்னைப் போலக் குழந்தையோடு இருக்கும் பெண்ணை மணந்து கொள்ள, உங்கள் உயரத்திற்கு எத்தனையோ கோடீஸ்வரர்கள் அவர்கள் வீட்டுப் பெண்ணை மணமுடித்துக் கொடுக்க வரிசையில் காத்திருப்பாங்க... ப்ளீஸ் இந்தப் பேச்சு வேண்டாமே..” எனத் தன் மனதையும் முன்னிறுத்தி தான் கேட்க நினைத்த கேள்வியையும் அதில் சேர்த்து கேட்டவளை சில நொடிகள் விழிகளால் ரசனையோடு வருடியவன்,
 
 
“ஆனால் எனக்குப் பிடிக்கணுமே..” எனப் பதிலளிக்க, அதில் கேள்வியாக உதய்யை பாயல் நிமிர்ந்து பார்க்கவும், ‘சுபியை பிடித்த அளவுக்கு வேறு யாரையும் பிடிக்கும்னு தோணலை” என்று கூறினான்.
 
 
“இது முழுக்க முழுக்கக் குழந்தைக்காக நடக்கற கல்யாணம்தான்... அதுக்காக உங்களை மனைவியா ஏத்துக்க விருப்பமில்லைன்னு அர்த்தம் இல்ல... முதலில் பச்சிளம் குழந்தையாய் அறிமுகமான சுபியை பார்த்த போதே இவளுக்கா இந்த நிலைனு மனம் துடிக்க அவள் மேல் நான் கொண்ட பாசம் தான் ஒரு கட்டத்தில் எப்போது என்று என்னையுமறியாமலே அவளுக்கு நான் தான் தந்தையென உறுதியாய் எண்ண வைத்தது..” என்ற உதய்யின் வார்த்தைகளில் இடையிட்டு,
 
 
நீங்களா நினைத்ததுக்கெல்லாம் நான் எதுவும் செய்ய முடியாது, இதில் எங்கும் என் தவறு இல்லை..” எனப் படபடவெனப் பதில் அளித்தாலும் அதிலும் ஒரு மென்மையோடு பேசியவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவன்
 
 
“தப்பு தான், எனக்கு சுபி வாழ்க்கை மேல இருக்கிற அக்கறை உங்களுக்கும் இருக்கும்னு எதிர்பார்த்தது என் தப்பு தான்..” எனவும், ‘என்னையா அப்படி நினைத்து விட்டாய்?’ என்பது போல ஒரு அடிபட்ட பார்வையோடு உதய்யை நிமிர்ந்து பார்த்தவளை கொஞ்சமும் தன் பார்வையில் எந்த மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
 
 
“உங்களுக்கு உங்க வாழ்க்கையைப் பற்றி மட்டும் தான் கவலை இல்லையா..?” எனவும், “நிச்சயமா இல்லை, எனக்குன்னு ஒரு வாழ்க்கை இனி இல்லை... என் பொண்ணு வாழ்க்கைதான் எனக்கு முக்கியம், அதுக்காகத்தான் நான் இப்போ அவளைக் கூடப் பிரிந்து இருக்கேன்... அவ கூட இல்லாம தூரமா இருக்கிறது எவ்வளவு கஷ்டம்னு உங்களுக்குத் தெரியுமா?! ஆனால் அவளுடைய வளமான வாழ்க்கைக்காகத் தான் நான் இதையெல்லாம் தாங்கிக்கிட்டு இருக்கேன், எங்களுக்குன்னு யாரும் இல்லை, அவளை நான்தான் பாத்துக்கணும்... அவளுக்குத் தேவையான எல்லாம் நான் தான் செய்யணும், என்னால் முடிந்த அளவு எந்தக் குறையும் இல்லாம... அதுக்காகத் தான் ஓடிக்கிட்டு இருக்கேன்..” எனத் தன் பாசத்தைக் குறை கூறி விட்டானே என்ற தவிப்பில் அழுது கொண்டே பேசியவளை கொஞ்ச நேரம் அழவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தவன்,
 
 
“இதோ இப்ப நீங்க சொன்னீங்களே இந்தக் கஷ்டங்கள் தான் வேண்டாம்னு சொல்றேன், அவளுக்கு ஒரு வளமான வாழ்க்கை காத்துட்டு இருக்கு... எதுக்கும் அவ கஷ்டப்படாம ஒரு இளவரசியைப் போல என் உள்ளங்கையில வெச்சு பாத்துக்க நான் தயாரா இருக்கேன்... ஆனா அதை நீங்க கொஞ்சமும் யோசிக்காமல் நிர்தாட்சண்யமா தட்டி விடுறீங்க, உங்க பொண்ணு மேல உங்களுக்கு நிஜமான அக்கறையும் அன்பும் இருந்தால் இதைச் செய்வீங்களா...?” எனக் குரலில் கொஞ்சம் கூடக் கோபத்தை வெளிப்படுத்தாமல் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தவனின் வார்த்தைகளை உச்சரித்த விதமே அந்த அப்பாவி பெண்ணின் மனதை கூர்மையான வாள் போல் நேராகச் சென்று தாக்கியிருந்தது.
 
 
“எப்போவும் அடுத்தவங்க பணத்தில் வாழணும், கஷ்டப்படாம எதுவும் கிடைக்கணும்னு நான் நினைத்தது இல்ல... என்னால என்ன முடியுமோ என் வசதிக்குள் என்ன சாத்தியமோ அதில் எந்தக் குறையும் இல்லாம என் குழந்தையை வளர்க்க வேண்டியது தான் என்னுடைய எண்ணம், ஈசியா கிடைக்குது என்று நமக்கு உரிமை இல்லாத விஷயத்துக்கு நாம உரிமை கொண்டாடவும் ஆசைபடவும் முடியாது இல்லையா..!” எனத் தன் வழக்கத்திற்கு மாறாகச் சற்று நீண்ட பதிலை அளித்தாள்.
 
 
அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “இப்ப கூடப் பாருங்க, நீங்க உங்களைப் பத்தி மட்டும் தான் யோசிக்கிறீங்க..!” என மீண்டும் அதே வார்த்தைகளை உதய் உச்சரிக்கவும், நிஜமாகவே பாயலுக்குப் புரியவில்லை தன் யோசனையில் எந்த இடத்தில் தவறு இருக்கிறது என, ஆனால் உதய் இங்கு ஒரு தொழில் அதிபராக அவனின் மதி நுட்பத்தை அழகாகப் பயன்படுத்திக் கொண்டு இருந்தான் என்பது பாவம் அந்தப் பேதைக்குப் புரியவில்லை.
 
 
ஒரே வார்த்தையை மீண்டும் மீண்டும் பேசி, அவளின் எண்ணமே தவறு என அவளையே நம்ப வைத்து குழப்பி, அந்தக் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே முயன்று கொண்டு இருந்தான் அந்தப் பல வருடங்களாக அவள் மேல் காதல் கொண்டு காத்திருந்த கள்வன்.
 
 
அவன் எதிர் பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் பாயல் தனக்குள்ளேயே யோசனையில் மூழ்க, “இங்கே பாருங்க, ஒரு அம்மாவா நிச்சயம் உங்க குழந்தைக்கு நல்லது நடக்க நீங்க தடையா இருக்க விரும்ப மாட்டீங்கன்னு எனக்குப் புரியுது, அப்படியும் நீங்க இவ்வளவு யோசிக்கறீங்கன்னா... அது எனக்கு மனைவியா இருக்க விரும்பாம தான்னு எனக்கு நல்லாவே புரியுது...” என உதய் பேசி கொண்டு இருக்கும் போதே,
 
 
அதுவரை உதய்யின் பேச்சையையும் அவனின் முயற்சியையும் கண்டு உள்ளுக்குள் அதன் பின் இருக்கும் தந்திரம் புரிந்து மனதிற்குள் வியந்து உதய்யை பாராட்டியவாறே வெளியே எதையும் வெளிபடுத்திக் கொள்ளாத முகத்துடன் அமர்ந்து இருந்த அபய், இந்த அந்தரங்கமான பேச்சிற்கு இடையே இருவருக்கும் இடையில் நந்தியாக இருக்க விரும்பாமல் மெல்ல தண்ணி குடிப்பது போலப் பாவனைச் செய்து கொண்டு எழுந்து சமையல் அறையில் நுழைந்து கொண்டான்.
 
 
“உங்க விருப்பம் இல்லாம என் விரல் நுனி கூட உங்க மேலே படாது, நீங்களா என்னை ஏத்துக்கும் வரை நான் காத்திருப்பேன்... ஆனா ரொம்பக் காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் வராதுன்னும் எனக்குத் தெரியும்...” எனக் குறும்பு குரலில் கூறியவன்,
 
 
என் வாழ்க்கையில் மனைவின்னு ஒருத்தி வந்தா அது நீங்க மட்டும் தான், என் மேல் நம்பிக்கை வைத்து இந்த முடிவுக்குச் சம்மதம் சொல்லுங்க, சுபி வாழ்க்கையை மனதில் வைத்து, அவளின் நலனுக்காகச் சம்மதம் சொல்லுங்க...” என்று கூறியவனின் வார்த்தைகளில் ஏற்கனவே குழம்பிய நிலையில் இருந்தவள்,
 
 
‘ஒருவேளை நானே என் குழந்தையின் நல்வாழ்க்கைக்குத் தடையாக இருக்கிறேனோ...! எதை எண்ணி தயங்கி தடுமாறி பயந்தேனோ, அதையே என் விருப்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டாரே... இனியும் ஏன் தயங்கி சுபியின் சந்தோஷத்தை கெடுக்க வேண்டுமா...?! அவளுக்காகச் சம்மதிக்கலாமா...?!’ என்கிற ரீதியில் சிந்தித்தவளின் மனமோ,
 
 
‘அப்போ நீ அவருக்கு நியாயம் செய்யலைன்னு உனக்குத் தோணலையா...?’ எனக் கேள்வி எழுப்ப, அதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தலை கவிழ்ந்து அமர்ந்தவளை, கண்டவனுக்கு அவளின் மனதின் எண்ணம் புரிய,
 
 
அவள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஏதேதோ பேசி தெளிவாக அவளை யோசிக்க விடாமல் குழப்பி, இது தான் குழந்தைக்குச் சரியான முடிவு என அவளை முழுதாக நம்ப வைத்து, ஒரு வழியாகச் சம்மதிக்க வைத்து இருந்தான் உதய்.
 
 
இந்த விஷயம் உடனடியாக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளப் பட, எல்லாம் சந்தோஷித்துக் குதூகலமாகக் கொண்டாடி தீர்த்துவிட்டனர். சுபி பள்ளிக்குச் செல்வதற்கு முன் திருமணம் நடக்க வேண்டுமென்பதே உதய்யின் எண்ணம் என்பதால் இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு வரும் நல்ல நாளில் திருமணம் செய்வது என உதய் முடிவு செய்து வைத்து இருந்த நாளிலேயே திருமணம் என்று உறுதியானது.
 
 
பாயல் ஆர்பாட்டம் எதுவும் வேண்டாம் என்று திட்டவட்டமாகக் கூறி விட, கோவிலில் வைத்து அதிகப் பேரை அழைக்காமல் நடத்த முடிவானது. நகரின் முக்கியப் பகுதியில் இருந்த பெரிய கோவிலில் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொறுப்பை அபய் ஏற்றுக் கொண்டான்.
 
 
திருமணத்தன்று காலை அனைவரும் கிளம்பி அங்குச் சென்று அதன் பின் அனைத்தும் செய்து முடிப்பது சிரமம் என்பதால் ரக்ஷனின் பெற்றோர் அங்கு அருகிலேயே வசிப்பதால் முதல் நாளே அனைவரும் அங்குச் சென்று தங்குவது என்றும் முடிவானது.
 
 
இதில் அபய்யும் மிருவும் மட்டும் அவர்களோடு கலந்து கொள்ள முடியாத நிலை, ஏனெனில் அபய் தயாரிக்கும் படத்தின் அறிமுக விழாவும் படக் குழுவிற்கென ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பார்டியும் அன்று மாலை தான் நடப்பதாக இருந்தது.
 
 
அதைக் கூறிய அபய், தான் காலை வந்து கலந்து கொள்வதாகத் தன்னோடு வந்து கோவிலுக்கு அருகில் அறை எடுத்துத் தங்குமாறு அழைத்த உதய்யிடம் கூறிவிட, அவனும் அபய் கூறுவதில் உள்ள உண்மை புரிய, எந்த மறுப்புமின்றி அதற்கு ஒத்துக் கொண்டான்.
 
 
மிருவும் இதையே காரணம் காட்டி கூறவும், அதில் இவளின் பங்கு பற்றி அறிந்தவர்கள் சம்மதம் தெரிவிக்க, பிரணப் மிருவை உடன் இருந்து அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.
 
 
அதன்படி திருமண நாளை நோக்கி அனைவரும் கிளம்பி விட, இவர்கள் இருவரும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் பிஸியாகச் சுழன்று கொண்டு இருந்தனர்.  
 
 
பிரணப்பின் தந்தை வழி பாட்டி சீரியஸாக இருப்பதாகச் செய்தி வரவும், சிறுவயது முதல் தாயில்லாத பிள்ளையான தன்னைக் கண்ணில் வைத்து வளர்த்தவரை காண மனம் பதைபதைக்கக் கிளம்பியவன், கிளம்புவதற்கு முன் தன் நிலையைக் குறித்து நண்பர்களுக்கு விளக்கி, மிருவை அழைத்துச் செல்லும் பொறுப்பை அபய்யிடம் ஒப்படைத்துவிட்டு நாளை நடக்க இருக்கும் விபரீதம் புரியாமல் கிளம்பி சென்றான்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 17
 
அன்று காலை அனைவரும் திருமண வேலைகளை முன்னிருந்து கவனிப்பதற்காகக் கிளம்பவும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டான் உதய். அவன் தனியாகத்தான் அங்கு அறை எடுத்து தங்க போகிறான் என்றாலும் அந்தப் பயணத் தூரத்தை பாயலோடு சேர்ந்து கழிக்கும் எண்ணத்தில் நண்பர்கள் குழு கிளம்பும் போதே அவனும் வந்திருந்தான்.
 
 
‘கிளம்பும் தருணத்திலாவது மிரு தனக்கு வாழ்த்து சொல்வாளா!?’ என ஏக்கத்தோடு அவன் பார்வை தங்கையையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. முன்பு எப்படி அவனிடம் பாராமுகம் காட்டினாளோ இப்போதும் அதே போலத்தான் அவனிடம் நடந்து கொண்டாள் அவள்.
 
 
தங்கை வாழ்க்கை இன்னும் கேள்விக்குறியாக இருக்கும் தருணத்தில் தனக்கு வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் எண்ணம் உதய்க்கு கொஞ்சமும் கிடையாது. இப்போது கூட அபய் திரும்ப வராமல் இருந்திருந்தால் அவன் இந்தத் திருமணப் பேச்சை எடுத்து இருப்பானா என்பது சந்தேகமே. அதிலும் இன்னும் அபய்யும் மிருவும் இணையாத இந்தச் சமயத்தில் அவன் திருமணம் செய்து கொள்வது உண்மையிலேயே சுபியின் நல்வாழ்க்கைக்காகத்தான்.
 
 
அவனுக்கு நிச்சயமாகத் தெரியும் திருமணமான ஒரே காரணத்திற்காகத் தன்னுடன் பாயல் உடனே வாழ்க்கையைத் துவங்கப் போவதில்லை என்பது, அதனாலேயே கொஞ்சமும் தயக்கமும் உறுத்தலும் இன்றி இந்தத் திருமண வேலைகளில் அவனால் ஈடுபட முடிந்தது.
 
 
அனைவரும் பயணப் பொதிகளோடு காரில் ஏறும் சமயம் அபய்யும் வந்து சரியாக வழி அனுப்புவதில் இணைந்து கொண்டான். மிரு பாயலை மீண்டும் கட்டி அணைத்து முத்தமிட்டு வழியனுப்பி வைக்க... அவளை ஏக்கத்தோடு பார்த்திருந்த உதய் ஒரு முறையாவது என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தேன் எனக் கண்களாலேயே கெஞ்ச... அவளோ இப்படி ஒருவன் இந்தக் கூட்டத்தில் இருக்கிறான் என்பது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
அவரவர் கிளம்பும் பரபரப்பில் இருக்க, அபய் மட்டும் உதய்யை கவனித்து அவன் தோளில் ஆதரவாகத் தட்டி “எல்லாம் சீக்கிரம் மாறும்... நம்பிக்கையோடு இரு” என மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறவும், “அந்த ஒரே நம்பிக்கையோடு தான் இருக்கேன் மாமா...” என நா தழுதழுக்கப் பதிலளித்தவன் இன்னும் சற்று நேரம் அங்கேயே நின்று இருந்தால் எங்கே கண்கலங்கிவிடுமோ என அவசரமாகச் சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.
 
 
தன் காரில் அமர்ந்திருந்த உதய் பாயல் மற்றவர்களோடு செல்லாமல் தன்னோடு வரவேண்டுமே என்ற எதிர்பார்ப்பில் அவள் மேலேயே கவனத்தைப் பதித்து இருக்க... அவள் அதைக் கவனிக்கத் தவறி இருந்தாலும் ரக்ஷனா சரியாக அதைக் கவனித்துவிட்டு சுபியுடன் உதய்யின் காரில் பின்பக்க கதவை திறந்து யாரும் எதிர்பாராத தருணத்தில் சட்டென்று ஏறி அமர்ந்து கொண்டவள், “பாயு” என அவளைத் தன்னோடு வருமாறு கையசைத்துச் சப்தமாக அழைத்தாள்.
 
 
மற்றவர்கள் முன்னிலையில் அதை மறுத்து தேவை இல்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்ற விரும்பாத பாயலும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் பின்பக்க கதவை திறந்து ரக்ஷனா அருகில் அமர்ந்து கொண்டாள்.
 
 
தன் அருகில் இருந்த முன் இருக்கையில் அவள் அமர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மனம் முழுவதும் உதய்க்கு இருந்த போதும் இத்தனை சீக்கிரம் அவள் அப்படியெல்லாம் செய்யக் கூடியவள் இல்லை என்பதையும் அறிந்து இருந்தவன் எந்த மறுப்பும் சொல்லாமல் அவள் இந்தக் காரில் வர சம்மதித்ததே பெரிய விஷயம் என்பது புரிய தன் மன ஆசைகளை விழியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாகி விட்டான்.
 
 
இதைக் கண்ட நண்பர்கள் குழுவிற்கு ரக்ஷானாவின் முயற்சி எதற்கு என்று புரிய, அமைதியாக அவரவர் பணியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மிருவோ இவற்றையெல்லாம் கவனித்தது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
உதய்யின் கார் முதலில் நின்று கொண்டிருந்ததால் அதுவே முதலில் கிளம்ப வேண்டியிருந்தது. அவன் தன் வாழ்க்கை தொடங்கப் போகும் இந்தப் பயணத்தைத் தன் தங்கை எதிரில் வந்து தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினான். அது அவர்கள் வீட்டில் பல வருடங்களாகக் கடைபிடிக்கப்படும் ஒரு பழக்கம். மிருவை வீட்டிற்கு வந்த மகாலட்சுமியாகவே கொண்டாடியவர்கள் எந்த ஒரு நல்ல காரியத்திற்குக் கிளம்பும் போதும் அவளை எதிரில் வர செய்வர். இப்போதும் அதே பழக்கத்தில் அவன் எதிர்பார்ப்போடு அவளைப் பார்த்துக் கொண்டிருக்க...
 
 
அவளோ அதைச் செய்வது போல் தெரியவில்லை. உதய் எதிர்ப்பார்ப்பு என்னவென்று அறிந்த அபய் அலைபேசியில் உரையாடிக் கொண்டே சற்றுத் தொலைவில் போய் நின்றபடி அங்கிருந்து மிருவை அழைத்து, “உங்ககிட்ட ஏதோ ஒரு டவுட் கேட்கணுமாம்...” என அங்கிருந்தே பேசியை நீட்டினான்.
 
 
அவளுக்குமே காலை முதல் மாலை நடக்கும் விழா தொடர்பாக அழைப்புகள் வந்து கொண்டே இருந்ததால் எந்தச் சந்தேகமும் தோன்றாமல் விரைந்து சென்று அதை வாங்கி அதற்குப் பதில் அளிக்கத் தொடங்கியவளை சற்று நகர்ந்து இந்தப் பக்கம் வந்து நின்றபடி “இப்படி வழி விட்டு நில்லு..” என்று அவள் சற்று நகர்ந்து வர இடம் விடுவது போல அபய் அழைக்கவும், அவளும் பேச்சில் கவனமாக இருந்தால் அபய் கூறியவாறே அவன் பின்னே நகர்ந்து செல்லத் துவங்கினாள்.
 
 
இதைக் கண்டு ஆனந்தத்தில் நன்றியோடு உதய் அபய்யை பார்க்க... அவனோ ஒரு குறும்பான கண்சிமிட்டலுடன் ‘கிளம்பு’ என்பது போல விழியாலே மச்சானை வழியனுப்பி வைத்தான்.
 
 
இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரக்ஷனா “ஹப்பப்பா மாமனுக்கும் மச்சானுக்கும் இடையில செம சிங் போலிருக்கே..” எனச் சிலாகித்துக் கூறியவள் “ஆனா அவங்கவங்க ஜோடியோடு விழி வழியே பேசுறீங்களோ இல்லையோ... நீங்க இரண்டு பேரம் செமையா பேசுறீங்கபா” என்று கலாய்க்கும் குரலில் கூறினாள்.
 
 
அதில் வாய் விட்டு சிரித்த உதய், “நான் என்ன பேசமாட்டேனா சொல்றேன்...” என்று பதிலளித்தவாறே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க... அதுவரை இவர்களின் அத்தனை நாடகத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த பாயல் உதய்யின் இந்த வார்த்தைகளில் சட்டெனத் தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள்.
 
 
வழிநெடுகிலும் தன் முன்னால் இருந்த சிறு கண்ணாடியின் வழியே பாயலையே அவ்வப்போது பார்த்துக் கொண்டே வாகனத்தைச் செலுத்தி கொண்டிருந்தவனுக்கு அவள் விழிகளிலும் உடல் மொழியிலும் தெரிந்த தவிப்பு நன்றாகவே எதற்கு என்று புரிந்தது.
 
 
என்னதான் குழந்தைக்காக என்று அவள் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்து இருந்தாலும் நாளை திருமணம் என்ற நிலையில் அதற்காகக் கிளம்பி செல்கையில் அவளுக்குள் பல்வேறு எண்ணங்கள் வந்து அலைக்கழிக்கத் தொடங்கியிருந்தது.
 
 
அதன் பலனாகவே அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அதைப் புரிந்திருந்த ரக்ஷனாவும் அவளைத் தொல்லை செய்யாமல் குழந்தையை அவள் மடியில் வைத்து விளையாட்டுக் காட்டி வழிநெடுகிலும் ஏதேதோ பேச்சு கொடுத்தபடியே வர, அவளோ தன் எண்ணங்களில் மூழ்கி அப்படியே எங்கோ பார்வையைப் பதித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
 
 
இங்கு மிரு அலைபேசியில் கவனமாக இருந்தாலும் உதய்யின் கார் வெளியேறியவுடன் தன் பார்வையைத் திருப்பி அந்த வாகனத்தைச் சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகள் பாசத்தில் பனிக்கதான் செய்தது.
 
 
அபய் அதை அருகிலிருந்து கவனித்தாலும் கவனித்தது போல் காண்பித்துக் கொள்ளவில்லை. அப்படிக் காண்பித்துக் கொள்ளும் பட்சத்தில் அது அவளிடம் வீராப்பாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்பது புரிய, அந்த வீராப்பை அவள் நாளை திருமணத்தில் காண்பித்து விடக் கூடாது என்பதற்காகவே தன் கவனம் அவள் மேல் இல்லை என்பது போல நின்றிருந்தான்.
 
 
நாளை திருமணம் என்ற நிலையில் அதை நோக்கிய பயணத்தில் இருந்த உதய்யின் மனம் முழுவதும் தன் 10 வருட காதல் நிறைவேறி நாளை பாயல் தன் மனைவியாகப் போகும் தருணத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருந்தது.
 
 
ஆம் பாயலைப் உதய்க்கு மிரு எப்போது இங்குத் தனியே தங்கிப் படிக்க வந்தாலோ அப்போதில் இருந்தே தெரியும். ஆரம்பத்தில் மிரு இங்கு வந்த சூழ்நிலையின் காரணமாக அவள் மேல் மட்டுமே கவனத்தை வைத்து அவளைக் காண மட்டுமே வந்து கொண்டிருந்தான், அவள் தன்னைப் பலமுறை திட்டி சண்டையிட்டு உதாசீனப்படுத்திய போதும் அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை.
 
 
அவளின் பாதுகாப்பு அவளின் தேவை என்ற விஷயத்திலேயே அவன் எண்ணம் இருந்தது. ஆனால் அவளுக்குத் தான் உதவி செய்வது பிடிக்காமல் “இதற்கு மேல் ஏதாவது செய்ய முனைந்தால் நான் எங்கு இருக்கிறேன் என்று கூடத் தெரியாத இடத்திற்குக் கண் காணாமல் போய்விடுவேன்” என்று மிரு அவனை என்று மிரட்டினாலோ அதன் பிறகு தன் இருப்பை அவன் நேரிடையாகக் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
தன் உதவிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற காரணத்திற்காகவே அவள் சொன்னதைச் செய்து காட்டும் பிடிவாத குணம் மிருவுக்கு உண்டு என்று தெரிந்து வைத்து இருந்தவன், அடுத்த மாதம் தன் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல வேண்டி இருப்பதால் அதையும் மனதில் கொண்டு மிருவின் பாதுகாப்பிற்காக அவளுக்குத் தெரியாமலேயே சில ஏற்பாடுகளைச் செய்து விட்டு அவளின் ஒவ்வொரு நிகழ்வும் தனக்குத் தெரியுமாறு ஊர்ஜிதப்படுத்திக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
 
 
ஆனால் அப்போதும் கூட ‘தங்கையைத் தனியே இங்கு விட்டுவிட்டு இந்தச் சூழ்நிலையில் வெளிநாடு போய்த் தான் ஆக வேண்டுமா...?’ என்ற எண்ணம் அவனுக்கு இருக்கத்தான் செய்தது. ஆனால் சிறுவயதிலிருந்து இது தன் கனவு என்றும் இதற்காக எத்தனை நாள் எவ்வளவு ஆசையோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்தான் என்றும் அறிந்திருந்த மிரு, எல்லாம் சரியாகி ஒருநாள் தன்னோடு பேச துவங்கிய பிறகு தன் பொருட்டுத் தன் காரணமாகத்தான் தமையன் அவனின் மிகப்பெரிய கனவை நனவாக்காமல் இருந்திருக்கிறான் எனத் தெரிய வந்தால் அவளே அவளை மன்னித்துக் கொள்ள மாட்டாள் என்று தெரிந்திருந்தால் இதையும் தங்கைக்காகத் தான் செய்ய முனைந்தான் அந்த அன்பு அண்ணன்.
 
 
எனவே அந்தச் சமயத்தில் பாயல் மேல் சாயத் துவங்கியிருந்த தன் மனதை அவளின் வயது மற்றும் படிப்பின் காரணமாக வெளிக்காட்டாமல் மறைத்தவன், ‘அதற்கு என்று ஒரு நேரம் வரும் போது அதைப் பார்த்துக் கொள்ளலாம் இப்போது தங்கை இருக்கும் இந்தச் சூழலில் இது தனக்குத் தேவையில்லை’ என முடிவெடுத்து தன் வாழ்க்கையின் முக்கியப் படியில் காலை வைத்தான்.
 
 
ஆனால் அது தன்னைத் தொழிலில் அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லுமே தவிர, வாழ்க்கையில் அல்ல என்று அந்த நிமிடம் பாவம் அவனுக்குத் தெரியாமல் போனது. இல்லை என்றால் தங்கையைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் தனக்குத் தெரியவருமாறு ஏற்பாடு செய்திருந்தவன் அவளைப் பற்றியும் அப்படிச் செய்யாமல் போயிருக்க மாட்டான்.
 
 
ஆனால் அப்படி அவளைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் அறிந்து கொள்ள, அவள் தனக்கு எந்த வகையிலும் நெருக்கமும் உரிமையும் இல்லாதவள் என்பதும் ஒரு காரணமாக இருந்தது. இன்னும் தன் மனதை அவரிடம் திறக்கவில்லை அவளின் மனது என்னவென்றும் அறியவில்லை... அப்படி இருக்கையில் இன்னொருவரின் மகளின் மேல் எந்த உரிமையில் இந்தச் செயல்களில் ஈடுபட முடியும் என்று எண்ணியே அவன் அதைச் செய்யவில்லை.
 
 
ஒருவேளை அப்படிச் செய்திருந்தால் பாயலின் வாழ்க்கையும் இத்தனை இன்னல்களைச் சந்திக்காமல் அமைதியும் அழகும் காதலுமாக மலர்ந்து இருக்குமோ என்னவோ...!!
 
 
இரண்டு வருடங்களுக்குப் பிறகு உதய் திரும்ப வந்த போது பாயல் வேறு ஒருவரின் காதலியாக இருந்தாள். இதைச் சற்றும் எதிர்பாராமல் கண்டு முதலில் அதிர்ந்து நிலைகுலைந்து போனவன் பின் அவர்களுக்குள் இருக்கும் காதலின் ஆழம் புரிய அமைதியாக விலகி நின்று கொண்டான்.
 
 
இரண்டு வருடங்களாக அவளைத் தன் மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் அவளிடம் தன் காதலை சொல்லி மணந்து கொள்ளப் போகும் ஒரு அழகிய தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவனுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் இருந்தது.
 
 
நீ யாரை காதலித்தால் எனக்கென்ன ஆனால் நீ என் மனைவியாகத் தான் ஆகவேண்டும் என்று அவளைக் கடத்தி கொண்டு போய்க் கட்டாயத் தாலி கட்ட அவன் என்ன வில்லனா...?! அழகிய தங்கையின் அன்பு அண்ணன் ஆயிற்றே... ஒரு பெண்ணின் மனதை முன்னிறுத்தி யோசித்தவன், அவள் மனதிற்கு விஸ்வநாதன் தான் பிடித்தவராக இருக்கிறார் என்றால் அவரோடே அவள் வாழ்க்கை சந்தோசமாக அமையட்டும் என்று தன் கவனம் முழுவதையும் தொழில் பதிக்கத் தொடங்கினான்.
 
 
அவ்வப்போது தங்கையைக் காண வரும் போதெல்லாம் பாயலை சந்திக்க நேரிட்டால் மனம் துடிக்கத் தான் செய்யும், இருந்தும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு விலகி விடுவான் உதய்.
 
 
‘இவளையே நினைச்சுகிட்டு வாழ்ந்துட போறீயா...? கல்யாணம் செஞ்சுக்கப் போறது இல்லையா...?’ என அவ்வப்போது கேள்வி எழுப்பும் மனசாட்சிக்கு ‘தெரியல பார்ப்போம்... என் மனதில் இருந்து அவள் என்னைக்கு  விலகுகிறாளோ அப்போ நிச்சயம் கல்யாணம் செஞ்சுக்குவேன்... அது எப்போ எவ்வளவு நாளாகும்னு எல்லாம் எனக்குத் தெரியாது, ஆனால் மனதில் இவளை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை மணப்பது நான் அந்தப் பெண்ணுக்கு செய்யும் துரோகம்...’ என்ற எதார்த்தத்தை யோசித்தவன் வேறு எதைப் பற்றியும் சிந்தித்து வாழ்க்கையைக் குழப்பிக் கொள்ளவும் இல்லை.
 
 
விஸ்வநாதன், இவர்கள் கல்லூரியின் துணை முதல்வர் ஸ்தானத்தில் இருந்த ஒரு இளம் ப்ரபஸர். அந்த இளம் வயதிலேயே அவரின் திறமையின் காரணமாக அடுத்தடுத்துப் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். எந்தப் புள்ளியில் இருவருக்கும் காதல் அரும்பியது என்று கேட்டால் இருவருக்குமே சொல்லத் தெரியாது.
 
 
அமைதியும் நிதானமுமான விஸ்வநாதனை அனைவருக்கும் பிடித்தது போல பாயலுக்கும் பிடித்துத்தான் இருந்தது. திடீரென ஒருநாள் அவளிடம் அவர் தன் மனதை வெளிப்படுத்த, கொஞ்சமும் தயக்கமோ குழப்பமோ இன்றி அவளும் அந்த நிமிடமே அவருக்குச் சம்மதம் தெரிவித்திருந்தாள்.
 
 
விஸ்வநாதன் தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த மும்பையில் இரண்டு தலைமுறைகளாக வசித்து வரும் சற்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் பாயலோ வட இந்திய ஏழ்மையான குடும்பப் பின்னணியில் நான்கு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் மூத்த மகளாக இருப்பவள்.
 
 
அவளின் படிப்பே ஸ்காலர்ஷிப் மற்றும் சில பல டிரஸ்ட்டின் உதவி மூலமே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சாஸ்திரம், சம்பிரதாயம் என ஊறிப் போய் இருந்த விஸ்வநாதனின் குடும்பத்தினர் முழுமூச்சாக இவர்களின் காதலை எதிர்க்க... அவர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்ளப் பாயலின் படிப்பு முடிந்த பின்னும் இரண்டு வருடங்களாகக் காத்திருந்தவர்கள் இனியும் அது கிடைக்காது என்று தெரிந்த பிறகு நண்பர்களின் உதவியோடு மணந்து கொண்டனர்.
 
 
விஸ்வநாதனின் வருமானம் இவர்கள் குடும்பம் நடத்தப் போதுமானதாக இருக்க, வேறு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அழகாக ஆரம்பமாகியது இவர்களின் வாழ்க்கை. சொத்துக் குடும்பப் பெயர் என எதை எதையோ காட்டி விஸ்வநாதனை பயமுறுத்தி இந்தத் திருமணத்தைத் தடுக்க நினைத்த அவர்களின் குடும்பத்தாருக்கு இந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.
 
 
எனவே “பெண்ணை நீ சரியாக வளர்க்கவில்லை” எனப் பாயலின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்தவர்கள் முன் வீதியில் நின்று அவர்களின் குடும்பத்தைத் தாறுமாறாகப் பேசி அசிங்கப்படுத்தித் தன் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள முனைந்தனர் விஷ்வநாதனின் பெற்றோர்.
 
 
இதில் அவமானம் தாங்காமல் பாயலின் குடும்பத்தினர் இரவோடு இரவாக அந்த ஊரை விட்டே சென்று இருந்தனர். அவர்கள் இப்போது வரை எங்கு இருக்கிறார்கள் என யாருக்குமே தெரியாது.
 
 
அத்தோடு நிற்காமல் விஸ்வநாதனின் தாய் அடுத்து செய்தது தான் மாபாதகம். அவரின் இறை நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி ஒவ்வொரு கோவிலாகச் சென்று பாயல் நன்றாக வாழ கூடாது என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அவர் பல பூஜைகள் வேண்டுதல்கள் அனைத்தையும் செய்து கொண்டிருந்தார்.
 
 
தன் மகனை தன்னிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றவள் நன்றாக வாழ கூடாது என்பதிலேயே தன் கவனத்தைப் பதித்திருந்தவர் தன் மகனின் வாழ்க்கையும் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறது என யோசிக்க மறந்து போனார்.
 
 
அதன் பலனாக அளவில்லா காதலோடு தங்கள் வாழ்க்கையைத் துவங்கியிருந்த அந்த இளம் ஜோடிகளின் வாழ்க்கை  இரண்டு மாதங்களுக்குள்ளேயே சிதறி சின்னாபின்னமானது.
 
 
ஒரு நாள் மாலை பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விஸ்வநாதன் எதிர்பாராத வகையில் ஒரு கனரக வாகனம் மோதியதில் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே இப்பூவுலகில் இல்லாமல் போனார்.
 
 
இதைக் கேள்விப்பட்ட நிமிடத்தில் உயிர் உறைந்தவள் தான் பாயல். அதன்பிறகு யாரிடமும் பேசவில்லை வெறித்த பார்வையோடு அப்படியே அமர்ந்துவிட்டாள்
 
 
இந்தச் செய்தி கேள்விப்பட்ட நிமிடத்தில் நண்பர்கள் அனைவரும் தோழிக்காகத் துடிப்பதா தங்களின் அன்பு ஆசானுக்காகத் துடிப்பதா எனத் தெரியாமல் வருந்தி பதறி பின் தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு இப்போது பாயலுக்குத் துணை நிற்க வேண்டும் அதே முக்கியம் எனப் புரிந்து அவளுக்குத் துணை நின்று அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர்.
 
 
அதன் பின்பும் பாயல் சகஜ நிலைக்குத் திரும்பவே இல்லை. அதை அறிந்து ஒருவர் மாற்றி ஒருவர் அவளோடு இருந்து அவளைத் தேற்றி அவளுடன் பேசி என எத்தனை முயற்சிகள் எடுத்தும் பாயலை பழைய நிலைமைக்குக் கொண்டு வர முடியவில்லை.
 
 
அதன் பிறகு தான் மருத்துவரிடம் கவுன்சலிங் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்து அவளை அங்கு அழைத்துச் செல்ல இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. அப்போதே மருத்துவரின் உதவியோடு பாயல் கருவுற்றிருக்கும் விஷயம் அவர்களுக்குத் தெரிய வந்தது.
 
 
இது பாயலுமே அறிந்திராத ஒரு விஷயம் தான். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காதவர்கள் அடுத்து என்ன எனத் தெரியாமல் விழித்து நிற்க. இனி எதுவும் செய்ய முடியாது அதற்கான காலம் கடந்து விட்டது எனக் கையை விரித்திருந்தார் மருத்துவர்.
 
 
அதன் பிறகு மருத்துவரிடம் பாயலை ஆள் மாற்றி ஆள் அழைத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய நிலைக்குக் கொண்டு வர முயன்றபடி அந்தத் திருமணமாகாத ஐவரும் பாயலுக்கும் அவளின் பிள்ளைக்கும் தாயாய் மாறி சேயாய் தாங்கினார்.
 
 
மருத்துவர் கூறி இருக்கவில்லை என்றாலும் அவர்களுக்குக் குழந்தை வேண்டாம் என்ற எண்ணம் எல்லாம் கொஞ்சமும் இல்லை. இது அவர்கள் எதிர்பாராத ஒரு விஷயம் என்பதனாலேயே திகைத்தவர்கள் அந்தக் குழந்தை பிறந்த பிறகு தந்தை இல்லை என்ற ஏக்கம் எங்கும் வரக் கூடாது என்று யோசித்தே அனைவரும் தாயும் தந்தையுமாக மாறினார் அந்தக் குழந்தைக்கு.
 
 
இவையெல்லாம் தெரிய வந்த உதய் தன் உயிரானவளின் இந்த இக்கட்டான நேரத்தில் உடனிருந்து ஆறுதல் கூட அளிக்க முடியாமல் தவித்துத் துடித்துப் போனான். அவளை இப்போது நெருங்குவது மற்றவர்கள் பார்வையில் தவறான ஒரு எண்ணத்தை விதைக்கும் என்பதோடு அவளுக்குத் தன்னைப் புரிய வைப்பதற்கான நேரமும் இதுவல்ல என உணர்ந்து அதற்காகக் கால அவகாசத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கத் துவங்கினான்.
 
 
இரண்டு மாதங்களில் முடிந்து போன அவளின் மண வாழ்க்கையை அப்படியே விட்டுவிட அவனுக்கு மனமில்லை. நிச்சயம் அவளின் வாழ்க்கை புதுப்பொலிவுடன் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.
 
 
அது தன்னோடு தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை வேறு யாருடன் அமைந்தாலுமே கூட அவளின் வாழ்க்கை சந்தோஷமாக அமைய வேண்டும் என்று எண்ணியிருந்தவன் அந்தச் சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தால் மகிழ்ச்சி என்றே நினைத்திருந்தான்.
 
 
இப்படிப் பத்து வருடங்களாக அவனைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாத அவனின் காதல் நாளை நிறைவேற போகிறது என்ற சந்தோஷம் மனம் எங்கும் வியாபித்து இருக்க, அதன் பொலிவு அவனின் முகத்திலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 18
 
நண்பர்கள் குழு கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் பிரணவ்வின் பாட்டிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகச் செய்தி வரவும், அவன் மிருவின் பொறுப்பை அபய்யிடம் ஒப்படைத்து விட்டு நண்பர்களிடமும் அலைபேசியில் தன் நிலையைப் பகிர்ந்து கொண்டவன் முடிந்தவரை நாளை காலை திருமணத்திற்கு வந்துவிட முயற்சிக்கிறேன் என்று கூறிவிட்டு கிளம்பி சென்று விட்டான்.
 
 
அன்று மாலை அபய்யின் படத் துவக்க விழா இருப்பதால் அடுத்த வாரத்தில் நடக்கவிருந்த டாப் மாடல்களுக்கான ஃபேஷன் ஷோவில் உடை வடிவமைப்புச் சம்பந்தமாகச் சில வேலைகளைச் செய்து முடிப்பதற்கான காலை 10 மணி அளவில் கிளம்பி சென்ற மிரு வழியில் கடத்தப்பட்டாள்.
 
 
திடீரென இப்படி வந்து தன்னைக் கடத்திச் செல்ல கூடும் எனக் கொஞ்சம் யோசித்திறாதவள் தன் போக்கில் தன் வேலைகளைப் பற்றிய யோசனையோடு பயணித்துக் கொண்டிருக்க... ஒரு தனிமையான இடத்தில் நான்கு தடி தடியான ஆட்கள் சூழ்ந்து கை கால்களைக் கட்டி வாய் பொத்தி தன்னைக் கடத்திச் செல்வது ஏன் எதற்கு எனப் புரியாமல் திகைத்து அவர்களோடு போராடவோ கத்தி உதவி கேட்கவோ முடியாமல் செயலற்ற நிலையில் இருந்தாள் மிரு.
 
 
ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு ஒரு மாளிகை போல் இருந்த வீட்டிற்குள் அவளை அழைத்து வந்த அந்த வாகனம் நுழைந்து வீட்டின் பின்பக்கமாகச் சென்று அந்த வீட்டின் அவுட் ஹவுஸ் போல் இருந்த ஒரு கட்டிடத்திற்குள் தன்னைக் கடத்தி வந்தவர்களால் தூக்கிச் செல்லப்பட்டாள் மிரு.
 
 
மிருவிடம் அத்தனை நேரம் இருந்த தைரியம் அந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்ற நொடி விடைபெற்றுச் சென்று விட, மலங்க மலங்க விழித்தபடி பார்வையைச் சூழற்றியவளுக்கு ‘தன்னை இங்குத் தூக்கி வந்ததன் காரணம் என்னவாக இருக்கும்...?! யார் இப்படிச் செய்திருக்கக் கூடும்...?! தன்னை என்ன செய்யப் போகிறார்கள்...?!’ என அடுக்கடுக்காகக் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.
 
 
கடத்தப்பட்டவுடன் முதலில் பயந்து பதறினாலும், அதன்பிறகு தன் கை கால்களைப் பிரிக்கும் நொடிக்காக மிரு முழு மூச்சுடன் காத்திருக்கத் தொடங்கினாள். இவர்கள் நாலு பேரை தன் பலம் கொண்டு சமாளிப்பது மிகக் கடினம் தான் என்றாலும் சில சாதுரியமான யுக்திகளையும் தான் கற்றிருந்த தற்காப்புக் கலைகளையும் தேவைப்படும் போது பயன்படுத்திக் இவர்களிடம் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும் என்ற தைரியத்தில் இருந்தவள் தான் ஒரு வீட்டுக்குள் அதுவும் அவுட் ஹவுஸ் போல் இருந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்லப்படுவது கண்ட நொடி நிஜமாகவே பயந்து போனாள்.
 
 
இந்த வீட்டில் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் தெரியாது, இவர்கள் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என்றும் தெரியாது, அதேபோல் என்ன செய்யக் காத்து இருக்கிறார்கள் என்றும் தெரியாது... இப்படிப்பட்ட ஒரு சூழலில் அசட்டுத்தனமான தைரியம் கூட ஆபத்தில் தான் முடியும் என அறிந்திருந்ததால் அடுத்து என்ன என்ற கேள்வியோடு சுற்றுப்புறத்தை கவனிக்கத் தொடங்கினாள்.
 
 
அங்கிருந்த ஒரு அறைக்குள் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்ட மிருவுக்கு மனம் பயத்தில் படபடவென அடித்துக் கொள்ள... அதை வெளியில் காட்டாமல் மறைத்தபடியே பார்வையைச் சுழற்றியவளுக்கு இங்கிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல என்று நன்றாகப் புரிந்தது
 
 
அவளைத் தூக்கி வந்த தடிமாடுகள் நான்கு பேரும் மிருவைச் சுற்றி நின்று கொண்டனர். அவர்களின் அந்தச் செயல் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போலத் தோன்ற... .மிருவும் படபடக்கும் இதயத்தோடு அந்த அறையின் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்க்காமல் அடுத்த ஐந்து நிமிடத்தில் இதே போல இன்னும் இரண்டு தடிமாடுகள் பின்னோடு வர அறைக்குள் நுழைந்தான் அவன்.
 
 
விலையுயர்ந்த பிராண்டட் ட்ராக் பேண்ட் மற்றும் டீ சர்ட் அணிந்து லேட்டஸ்ட் மாடல் ஐ-போனை விரல்களில் அலட்சியமாகச் சுழற்றியபடி பான்னை வாயில் போட்டு குதப்பியபடியே உள்ளே நுழைந்தவனைக் கண்டவளுக்கு அதுவரை அதோ இதோ என ஒட்டிக் கொண்டிருந்த தைரியம் கூடச் சில்லு சில்லாகச் சிதறிப் போனது.
 
 
இந்த மதிய வேளையிலேயே அவனின் கண்கள் காட்டிய போதையைக் கண்டவளுக்கு அனைத்து கெட்ட பழக்கங்களும் எனக்கு வெகு பரிச்சயமே என அது கட்டியம் கூற.... உள்ளுக்குள் இருந்த நடுக்கத்தை முயன்று முகத்திலும் கண்களிலும் தெரியாமல் பார்த்துக் கொண்டவளுக்குத் தான் இங்கிருந்து தப்பிப்பது இயலாத காரியம் எனத் தெளிவாகத் தெரிந்து போனது.
 
 
ஆனால் தன் பயமே எதிராளிக்குப் பலம், அது நிச்சயம் அவனுக்கு மமதையைக் கொடுக்கும் என அறிந்திருந்தவள் அதை மட்டும் முயன்று வெளியில் தெரியாமல் மறைக்கப் பெரும்பாடுபட்டுக் கொண்டு இருந்தாள்.
 
 
அதற்குள் அவளின் எதிரில் வந்து நின்றிருந்தவன் அவளைத் தலை முதல் கால் வரை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து “நீ தானா அந்த உலகப் பேரழகி” என நக்கல் வழியும் குரலில் கூறியவன், ஆட்களுக்கு ஜாடை காட்ட மிருவின் வாயில் ஒட்டப்பட்டு இருந்த பிளாஸ்டர் அகற்றப்பட்டது.
 
 
“ஏய் இங்க பாரு உன் மேல செம்ம காண்டுல இருக்கேன்... நான் கேக்குறதுக்கு ஒழுங்கா பதில் சொன்னா, உனக்குச் சேதாரம் குறைவாக இருக்கும்... இல்ல உடம்பு தான் புண்ணா போயிடும்...” என அவள் முகத்தருகே குனிந்து எச்சரிக்கும் தொனியில் கூறினான்.
 
 
அவன் எதைப் பற்றிப் பேசுகிறான் எனப் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தை இன்னும் நெருங்கி “யார் அவன்?” எனக் கேட்கவும், யாரைப் பற்றிக் கேட்கிறான் என்ற புரியா பாவனை விழிகளில் வந்து போக அதை அவள் கேள்வியாகக் கேட்கும் முன்பே,
 
 
“ஏய்... ஏய்... நடிக்காத உனக்காக அன்னைக்கு அடித்தவன் யார்...?” என்று அவளின் மோவாயை பற்றி அழுத்தி கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்கவும், அவன் பற்றி அழுத்திய இடம் வலி எடுக்க அதில் லேசாக வார்த்தைகள் தடுமாற “யார்..? யாரை.... அடிச்சா...?” என அவள் புரியாமல் கேட்டாள்.
 
 
“இங்க பாரு செல்லம், உன்னுடைய இந்த ஆக்டிங் எல்லாம் என்கிட்ட வேலைக்காகாது... அன்னைக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு நல்லா தெரியும், எங்க அப்பா வேணும்னா யோசிக்காம போய் இருக்கலாம்.. ஆனால் ஊர்ல இருந்து வந்த அப்புறம் நான் அங்க நடந்த அத்தனையும் சிசிடிவி கேமரால செக் பண்ணிட்டேன்.... கடைசியா அவர் உன்னைத் தான் *கூப்பிட்டாரு... அதுக்குப் பிறகு தான் அவருக்கு அடி பட்டிருக்கு, உனக்காக அடிச்சது யாரு...” அவளுடைய மோவாயை பற்றி அழுத்திய கையை விலக்காமல் மேலும் மேலும் அதன் அழுத்தத்தைக் கூட்டி அப்படியே அவன் பேசவும் தான், இவன் அந்த முகர்ஜியின் மகன் என்பது மிருக்குப் புரிந்தது
 
 
அன்று தன்னிடம் தவறாகப் பேசியதற்காக அபய் அவனை அடித்துப் படுக்க வைத்தது நினைவு வர, என்ன ஆனாலும் சரி அவரைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் அந்தத் தைரியத்தை முகத்தில் கொண்டு வந்து விழிகளிலும் பிரதிபலிக்க...
 
 
அதைக் கண்டு கொண்ட சுதீப்புக்கு ஆத்திரம் வெங்காய விலையைப் போல நொடியில் சர்ரென மேலே ஏறியது. ஒரு கை அவளின் மோவாயை பிடித்து அழுத்திக் கொண்டிருக்க... மற்றொரு கையின் ஆள்காட்டி விரலை கொண்டு அவளின் முகத்தைச் சுற்றி வட்டம் போட்டபடி “அவனைப் பத்தி பேசின உடனே பல்ப் எரியுதே... முகத்துல ஒரு தைரியமும் திமிரும் வருதே, அவ்வளவு பெரிய அப்பாடக்கரா அவன்... நான் இப்போ அவனைப் பார்த்தே ஆகணும், வர சொல்லு...” என்றான்.
 
 
“அப்படியெல்லாம் எதுவுமில்லை, நாங்கள் அவருடைய நிலைமைக்கு எந்த வகையிலும் காரணமில்லை...” என அழுத்தத்தோடு பதில் அளித்த மிருவை கண்டு “என்னைப் பாத்தா என்ன கேனை கிறுக்கன் மாதிரி இருக்கா. எங்க அப்பாவை நீங்க முட்டாளாக்கி இருக்கலாம்.... ஆனா என்னை..” என்று ஒரு மாதிரி குரலில் இழுத்து பல்லைக் கடித்தவன் “அன்னைக்கு அவருக்கு நடந்தது. எல்லாம் உன்னால தான்... உனக்காகத் தான் எவனோ செஞ்சான், எனக்கு அது நல்லாவே தெரியும்” என்றான்.
 
 
“உன்னைக் கூப்பிட்டதுக்கே அவரு மேல கைய வெச்சான் இல்ல... இதோ இப்போ நான் உன் மேல கையை வைக்கப் போறேன், என்ன பண்றான்னு பாக்கலாமா... சொல்லு பாக்கலாமா...” என்று கோணலாகச் சிரித்தான்.
 
 
இன்னும் அவள் முகத்தை நெருங்கி, “இல்ல நீ தான் சொல்லு பார்ப்போம்.... என்ன செய்வான் உன் ஆளு...” என்று எள்ளல் வழியும் குரலில் கேட்கவும், “அதை என்கிட்ட கேளு மச்சான் நான் சொல்றேன்” என்ற குரல் திடீரென ஒலித்தது.
 
 
அதில் கவனம் கலைந்து நிமிர்ந்த சுதீப் தன் பின்னால் திரும்பி பார்க்க, அங்கு யாரும் இல்லாமல் வெற்றிடமே காணக் கிடைத்தது. அருகில் இருந்த தன் ஆட்களுக்கு விழியாலே யாரென்று சென்று பார்க்குமாறு கட்டளையிட... மூன்று பேர் அந்த அறையிலிருந்து வெளியேறினர்.
 
 
ஆனால் அவர்களுக்கு இருந்த குழப்பம் மிருக்கு இல்லை போலும் குரலை கொண்டே வந்தது யார் என அறிந்து கொண்டவளின் முகத்தில் அத்தனை நிமிர்வும் திமிரும் வந்து குடி அமர்ந்திருந்தது.
 
 
குழப்பமான முகத்தோடு வாயிலையே பார்த்துக் கொண்டிருந்த சுதீப் பார்வையைத் திருப்ப, அதில் மிருவின் முகத்தில் புதிதாக வந்து அமர்ந்திருந்த பொலிவைக் கண்டு யோசனையாகக் கண்களைச் சுருக்கியவன் “இவன் தான் உன்னோட அந்த ஹீரோவா...?” என்று கேட்டுப் பெரிதாக ஹாசியத்தைக் கேட்டது போல வாய்விட்டுப் புன்னகைத்தான்.
 
 
“எங்க அப்பா போல என்ன நினைச்சு எலி தானா வந்து பொறியில சிக்கிக்கிச்சு..” என்று கூறி மீண்டும் சத்தமாகச் சிரித்தவன் “உன்னை தொடணும்னு சொன்னதுக்கே எங்க அப்பா மேல கை வச்சான் இல்ல... இப்போ அவன் கண்ணு முன்னாடியே உன்னைத் தொட போறேன்... என்னை என்ன செய்யறான்னு பார்க்கலாமா...” என்று எகத்தாளமாகக் கேட்டான்.
 
 
அறையிலிருந்து வெளியே வந்த தடியன்கள் அங்கு யாரையும் காணாமல் திகைத்து சுற்றும் முற்றும் பார்க்க.... பக்கத்து அறையில் இருந்து மெல்ல சாய்வு நாற்காலி அசையும் சத்தம் கேட்டது அதில் ஒருவரை ஒருவர் எச்சரிக்கை பார்வையோடு பார்த்துக் கொண்டவர்கள் எதிரிகளைத் தாக்கும் முன்னெச்சரிக்கையோடு முதலில் சென்றவன் கையில் துப்பாக்கியோடு செல்ல... மற்ற இருவரும் தாக்குதலுக்குத் தயாராக அவனின் பின் அந்த அறைக்குள் நுழைந்தனர்.
 
 
ஆனால் இவர்களுக்கு இருந்த தற்காப்பு குணமும் முன்னெச்சரிக்கை தனமும் உள்ளே இருந்தவனுக்கு இல்லை போலும் அந்தச் சாய்வு நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி அசால்ட்டாக அமர்ந்து அதை ஆட்டிக் கொண்டு வேறு இருந்தான் அபய்.
 
 
அபய்யை சிலபல மிரட்டல் வார்த்தைகளால் பயம் காட்டி பணிய வைக்க முயன்றவர்கள் அவனிடம் அதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாமல் போக, துப்பாக்கியை காட்டி மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் இறங்க.... அதற்கும் அவனிடமிருந்து ஒரு எகத்தாளமான பார்வையே பரிசாகக் கிடைத்தது.
 
 
இதில் சற்று கடுப்பானவன் துப்பாக்கியை அபய்யை நோக்கி சுடுவது போலக் குறிவைக்க... “ஒழுங்கா சுட தெரியுமா...? நீ பாட்டுக்கு சட்டைல கிட்டைல ஓட்டை போட்டுடாத மேன்... பிராண்ட் ஷர்ட்” எனச் சட்டையை அங்கும் இங்கும் தூசியைத் தட்டுவது போலத் தட்டி விட்டுக் கொண்டே பேசிய அபய்யை கண்டு கடுப்பானவன் இவனை சுட்டுத் தள்ளுவது என்ற முடிவுக்கு வந்து நெஞ்சை பார்த்து குறி வைத்து சுடவும், துப்பாக்கி ஏந்தி இருநந்தவனின் கையை லேசாகச் சுண்டுவது போன்று தோன்றியதில் அந்தக் கை அதன் பிறகு செயலற்றுப் போய்க் கீழே தொங்க, துப்பாக்கி உருண்டு போய் அபய்யின் காலடியில் விழுந்தது.
 
 
அந்தத் தடியன் என்ன நடந்தது என உணரும் முன்பே அனைத்தும் நடந்து முடிந்திருக்க, உதவிக்குத் தன்னோடு வந்த மற்ற தடியனை திரும்பிப் பார்த்தவன் விழிகள் அதிர்ச்சியில் அப்படியே நிலைகுத்திப் போய் நின்றது. தனக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் கழுத்து ஒரு பக்கம் திரும்பி இருக்க வாய் ஒரு பக்கம் கோனி கீழே விழுந்து கிடந்தனர்.
 
 
அதைக் கண்டு அதிர்ச்சியில் பார்வையை நிமிர்த்திய தடியனுக்கு அப்போதே தன் அருகில் மலைபோல நின்றிருந்த இருவர் பார்வையில் விழ, அவர்களின் உருவத்தைக் கண்டு அவர்களின் இடைவரை மட்டுமே இருந்தவன் மிரண்டு பயத்தில் அவர்களைப் பார்க்க... சருகை தட்டுவது போல அவனைத் தட்டி விட்டவர்களைக் கண்டு நிதானமாக எழுந்து “குட் ஜாப் கைய்ஸ்” எனக் கூறிய அபய் அடுத்த அறையை நோக்கி சென்றான்.
 
 
அங்கு நிலைமை பாவம் அதைவிட மோசமாக இருந்தது. இதே போல் மலை போல் இருந்த இரண்டு பேர் அங்கு இருந்த மூன்று தடியன்களை அடித்துச் சாய்த்து இருக்க... சுதிப்போ அந்த இருவரின் கைப்பிடியில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தான்.
 
 
பார்த்த நொடியிலேயே இன்னும் சுதீப் மேல் மட்டும் இவர்கள் கை வைக்கவில்லை என்று புரிந்து கொண்டவன், தன் அனுமதிக்காக அவர்கள் காத்திருப்பதை அறிந்து ஒரு பாராட்டுதலான பார்வையை அவர்களை நோக்கி செலுத்தியவன் மெல்ல எந்தப் பதட்டமும் அவசரமும் இல்லாமல் நீதான நடையுடன் நடந்து சென்று மிருவின் கைகால்களை இணைத்திருந்த கயிறுகளை அவிழ்த்து விட்டான்.
 
 
“கொஞ்ச நேரத்துக்கு முன்னே என் லட்டு பேபிகிட்ட என்னமோ கேட்டுட்டு இருந்தியே என்ன மாமூ அது..” என்று படு நக்கலான குரலில் சுதீப்பை பார்த்து கேட்டவன், அவன் பதிலளிக்கும் நிலையில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு “ஆமா இவங்க அப்பா பெரிய தியாகி, அவனுக்கு அநியாயம் நடந்துச்சுன்னு நியாயம் கேட்க கிளம்பி வந்துட்டாரு இந்த உத்தமர்...” என்றவன், சிறு இடைவெளி விட்டு,
 
 
“ஆமாடா நான் தான் உங்க அப்பாவை அடிச்சேன், அதுக்கு இப்போ என்ன.... அதுவே குறைவுன்னு ஃபீல் செஞ்சுக்கிட்டு இருக்கேன் லேசான அடியோடு நிறுத்திட்டேன்னு, இனி அதைப் பத்தி யோசிக்க வேண்டிய அவசியமில்லை அந்தப் பேலன்ஸ்ஸை உன்னை வச்சுத் தீர்த்துக்கலாம்..” என்றவன் விக்கியை பார்த்து
 
 
“சாருக்கு எந்தக் குறையும் இல்லாத மாதிரி நல்ல நிறைவா சிறப்பா கவனிச்சுடு..” என்று விட்டு வெளியில் செல்வது போலத் திரும்பியவன் நின்று பின் ஒற்றைக் காலை மட்டும் அவன் பக்கம் திருப்பி ஸ்டைலாக ஒரு பார்வை பார்த்து “ஹேய் உனக்குப் பையன் யாராவது இருக்காங்களா டா..?!” என்று கேட்டு ஒற்றைப் புருவத்தை விரல் கொண்டு கீறுவது போலச் செய்தான்.
 
 
“ஏன் கேக்கறேன்னா... இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு ஏய் எதுக்குடா என் தாடியை அச்ச அப்படின்னு மூக்கொழுக கேட்டுகிட்டு யாரும் வந்து நிக்கக் கூடாது பாரு... எதுவா இருந்தாலும் இன்னைக்கே இங்கேயே இப்பவே கிளியர் ஆகணும்..” என்றதும், “சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகலை பாஸ்... ஆனா தினம் தினம் **முகூர்த்தம் கொண்டாடுவார்...” என்று நக்கலாகப் பதிலளித்தான் விக்கி. அதைக் கேட்டு ஆச்சர்யமும் வியப்பும் கலந்த பாவனையில் புருவத்தையும் விழிகளையும் உயர்த்திய அபய் விக்கியை பார்த்து விழிகளாலேயே கட்டளையிட,
 
 
அவன் சொல்ல வருவதைச் சரியாகப் புரிந்து கொண்ட விக்கி சரி என்பது போன்ற பாவனையில் அபய்க்கு தலை அசைத்தவன் பீமசேனன்கள் போல் நின்றிருந்த தங்கள் ஆட்கள் பக்கம் திரும்பி, “சாருக்கு ஒரு குடும்பக்கட்டுப்பாடு பார்சல்ல்ல்ல்ல்” என்று குரல் கொடுத்தான்.
 
 
அதில் அதிர்ந்து மிரண்ட சுதீப் அபய்யை பார்த்து “ஆம்பளையா இருந்தா ஒத்தைக்கு ஒத்த மோதுடா... இப்படிக் கட்டி போட்டு வீரத்தை காட்ற” என்று குரல் கொடுக்க... அதைக் கேட்டுக் கேலியாக இடி இடி எனச் சிரித்த அபய் “அதைப் பத்தி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லடி மாமூ... ஒரு பொண்ணை நாலு தடி மாடுகளை வைத்து கட்டிப் போட்டு மிரட்டின நீ எல்லாம் இதைப் பத்தி பேசவே கூடாது.. ஒருவேளை என்கிட்ட இருந்து ஒரு பைட் சீன் நீ எதிர்பார்த்து இருந்தேனா, வெரி சாரி நான் எல்லாம் அடிக்கற அளவுக்கு நீ ஒர்த் இல்ல பேபி” என்றான்.
 
 
அதுவரை அறைக்குள் நுழைந்து நொடியில் தடிமாடுகளைக் கண் சிமிட்டுவதற்குள் அடித்திருந்த மலைமாடுகளையே விழி விரிய நம்பமுடியாமல் பார்த்துக் கொண்டிருந்த மிருவை நெருங்கி “போலாமா பேபி” என்று கேட்டு அவளின் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ளவும், அவனை முறைத்தவள் அவனிடமிருந்து விலக நினைக்க,
 
 
அப்போதே அவளின் கன்னங்களில் அழுந்த பதிந்திருந்த விரல் தடங்களைக் கண்டு கண்கள் சிவந்தவன், திரும்பி இரு பீமசேனன்களின் பிடியில் சிக்கி தப்பிக்க வழியில்லாது மருண்டு போய் ஊசலாடிக் கொண்டிருந்த சுதீப்பின் வலதுகையைப் பார்த்து “விக்கி அந்தக் கைக்கு ஒரு நல்ல பரிசாகக் கொடுத்துடு என் சார்பில்...” என்றவன், “இது உனக்கு நான் குடுக்கும் கிப்ட்டுடி செல்லம்...” என்று சுதீப்பை பார்த்து கொஞ்சலாகக் கூறினான்.
 
 
“நமக்கு நிறைய வேலை இருக்கு லட்டு... நாம இருக்க வரைக்கும் சாருக்குப் பரிசுகள் கொடுக்கத் தாமதமாகும், நாம கிளம்புவோம்...” என்றவாறு அவளை அணைத்து பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான்.
 
 
காரில் அமர்ந்த பிறகும் அமைதியாக இருந்த மிருவை கேள்வியாகப் பார்த்தவன் ”பயந்துட்டியா பேபி... உன் மாமூ இருக்கும் போது நீ எதுக்குடா பயப்படணும்...” என்று அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
 
 
“வாயை மூடுடா...” என்று அவன் மேல் பாய்ந்தவள் “எல்லாம் உன்னால... உன்னை யாரு அவங்க அப்பாவை அடிக்கச் சொன்னது...” என்று எகிறவும், “ஹ்ம்ம்... அடிக்காமல் வேற என்ன கொஞ்சவா முடியும்...” என்று நக்கல் செய்தவன்
 
 
“அன்னைக்கு அவனை அடித்தது என்னைப் பொருத்த வரைக்கும் ரொம்பக் குறைவுதான்..” என்று விட்டு தன் கவனத்தை வாகனத்தைச் செலுத்துவதில் காண்பித்தான்.
 
 
“ஆமா இவர் வந்து காப்பாத்துவான்னு தான் நாங்க காத்துக்கிட்டு இருக்கோம்... இத்தனை வருஷம் நீயா வந்து என்னைக் காப்பாத்துன, என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியாது...” எனச் சிடுசிடுத்தவள் “தப்பெல்லாம் உன் மேல தான், நீ அன்னைக்கு அப்படிச் செய்யலைனா இன்னைக்கு இப்படி ஒரு பிரச்சனையே வந்திருக்காது... இத்தனை வருஷம் நிம்மதியா தான் இருந்தேன், என்னைக்கு நீ திரும்ப வந்தியோ அப்போ தான் எனக்குப் பிரச்சனையே தொடங்குச்சு...” என்று கோபப்பட்டாள்.
 
 
“நான் இல்லாத போது நீ உன்னைப் பார்த்துகிட்டது வேற டா... ஆனால் நான் வந்ததுக்குப் பிறகும் நீ பார்த்துகிட்டேனா...?” என்று கேள்வியாக நிறுத்தியவன் அந்த வார்த்தையை முடிக்கவில்லை. ஆனால் அவன் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொண்டவள் “ஆமா ரொம்பத்தான் அக்கறை..” என்று சிறு முக சுழிப்போடு திரும்பி கொள்ள, “நிச்சயமா அக்கறை தான் லட்டு... உன் மேல எனக்கு...” என்றவன், உல்லாசமாக விசில் அடித்தபடியே கூறவும், அவனை முறைத்துப்பதற்காகத் திரும்பியவளின் மனதில் ஏதோ தோன்ற “நீ எப்படி அங்க சரியா வந்தே...? என்னை ஆள் வெச்சு பாலோ பண்றீயா” எனக் கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
 
 
“நான் உன்னைப் பாலோவா... அவ்வ்வ்வா இல்லவே இல்ல பா..” என்று குழந்தை போல முகத்தை வைத்துக் கொண்டு கூறியவனை நம்பாமல் பார்த்தவளின் பார்வையைக் கொஞ்சம் கூட எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் எதிர்கொண்டவன் “நிஜம் லட்டு... நான் உன்னைப் பாலோ எல்லாம் பண்ணல” என்றான்.
 
 
“அப்போ எப்படி நீ அங்கே வந்தே...? அதுவும் இவ்வளவு சீக்கிரமா...?” என்று கூர்மையாக அவன் கண்களையே பார்த்துக் கொண்டு மிரு கேட்கவும், “அது உன்னை அந்த நாலு தடிமாடுங்க கிட்னப் பண்ணாங்க இல்ல, அந்த டைம்ல அந்த ரோட்ல விக்கி வந்துட்டு இருந்து இருக்கான்... அவன் தான் பார்த்துட்டு எனக்கு கால் செஞ்சான், நான் உன்னைத் தூக்கிட்டு போற வண்டியை பாலோ செய்யச் சொல்லி அவன்கிட்ட சொல்லிட்டு... அவன் மூலமா இடத்தைத் தெரிஞ்சுகிட்டு வந்துட்டேன்” என்று வெகு சாதாரணமாகக் கோர்வையாகப் பதிலளித்தவனை நம்பாத பார்வையைப் பார்த்து வைத்தாள் அவனின் லட்டு.
 
 
அவள் பார்வையைக் கண்டு உள்ளுக்குள் பொங்கிய குறும்புப் புன்னகையைத் தனக்குள்ளேயே நாக்கை சுழற்றி மறைத்துக் கொண்டவன், “சச்” என அப்பாவியாக முகத்தை வைத்தபடியே கழுத்தில் இரு விரல்களைப் பதித்துக் கூறவும், அவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்து விட்டு தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மிரு.
 
 
அதைக் கண்டு மெல்ல புன்னகைத்தவன், என்று முகர்ஜியின் மேல் கை வைத்தானோ அந்த நிமிடத்தில் இருந்தே தன் ஆட்களை அவளுக்கே தெரியாமல் அவளின் பாதுகாப்பிற்கு நியமித்திருந்தான்.
 
 
அதற்குக் காரணம் அவர்கள் மேல் இருந்த பயம் அல்ல, இத்தனை வருடங்களாகத் தொழிலில் கோலோச்சி கொண்டு இருப்பவர்கள் நிச்சயம் திரைமறைவு வேலைகளிலும் ஈடுபட வாய்ப்புண்டு என்பதனாலேயே சிறிது காலம் வரை எதற்கும் தயாராக இருப்பது நல்லது என்று நினைத்தே அப்படி செய்தான்... அவனின் நினைப்பு கொஞ்சமும் பொய்யாகாமல் நடந்திருந்தது.
 
 
காரில் இருந்து இறங்கிய மிரு, தன் வீட்டை நோக்கி தட் தட் எனக் காலை உதைத்துக் தன் கோபத்தை நடையில் காட்டியபடியே சென்று வீட்டிற்குள் நுழைய... அவள் பின்னேயே நுழைந்தவனைக் கண்டு “எதுக்கு நீ இங்க வந்தே...?” என்று சிடுசிடுக்க “உன் பாதுகாப்புக்கு தான்” எனப் பதிலளித்தபடியே சோபாவில் அமர்ந்தான் அபய்.
 
 
“ஒரு டாஷும் தேவையில்லை... நீ முதல்ல கிளம்பு..” என் ஆத்திரமாக .மிரு பேசவும், “அவ்வ்வ்வ்” என வாயில் கை வைத்து கொண்டவன், “அப்படி எல்லாம் போக முடியாது... உன்னை என்னோட பொறுப்பில விட்டுட்டுப் போயிருக்காங்க உன் உயிர் நண்பர்கள், இன்னைக்கு நடந்தது எல்லாம் அவங்ககிட்ட சொல்லு... அவங்க சொல்லட்டும், நான் இங்க இருந்து போறேன்...” என்று கூறியவாறே தன் மேல் சட்டையின் இரு பட்டன்களைக் கழட்டி சட்டையைச் சற்று தளர்த்தியவன் தன் கால்களை எதிரிலிருந்த டீபா மேல் போட்டு ஓய்வெடுக்கும் தினுசில் சாய்ந்து அமர்ந்தான்.
 
 
இவனைத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரமும் கழிவிரக்கம் அலைக்கழிக்க அவனையே முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் மிரு.
 
 
“நான் உன் மாமூ தான் பேபி.... எப்போ வேணும்னாலும் என்னைச் சைட் அடிக்கலாம், இப்போ கொஞ்ச நேரம் போய் ரெஸ்ட் எடு... ரொம்பச் சோர்வா தெரியற பாரு, இன்னைக்கு வேற ஃபங்ஷன் இருக்கு” என்று அக்கறையாகக் கூறியவனைக் கண்டு கோபம் கொப்பளித்தாலும் தான் பேசப் பேச அவன் இப்படியே தான் பேசிக் கொண்டு இருப்பான் என்பது புரிய அறைக்குள் நுழைந்த மிருவிற்கு காலையில் இருந்து சாப்பிடாததும் இப்போது நடந்ததும் எல்லாம் சேர பசியில் மயக்கம் வரும் போல இருந்தது.


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 19
 
சரியாக அதே நேரம் சொல்லி வைத்தார் போல விக்கி மிருக்குப் பிடித்த உணவு பார்சலோடு வீட்டிற்குள் நுழைந்தான். “நீங்க சொன்னது எல்லாம் இதுல இருக்குப் பாஸ்” என்றபடி அங்கிருந்து உணவு மேஜை மேல் அதை வைத்தவன்,
 
 
“நான் கிளம்புறேன் ஈவ்னிங் பங்ஷனுக்குத் தேவையான அரேஞ்ச்மெண்ட்ஸ் எல்லாம் டன்... ஆனாலும் நான் கூட இருந்து எல்லாம் சரியா நடக்குதான்னு பாக்கணும்” என்று கூறியவன் அபய்யிடம் விடை பெற்று சென்று விட்டான்.
 
 
எப்போதும் போல இப்போதும் தன் தேவை அறிந்து அதைத் தான் வாய்விட்டு சொல்லாமலே செய்து முடித்திருந்தவனைக் கண்டு நெகிழ்ந்த மனதை ‘இதில்லாம் சொல்லாமலே செய்யத் தெரிந்தவனுக்கு அன்று ஏன் அது புரியாமல் போயிற்று’ என்ற எண்ணம் தோன்றவும், மெல்ல நெகிழ தொடங்கிய மனதை இழுத்துப் பிடித்து நிறுத்தியவள் எவ்வளவு பசித்த போதும் சென்று சாப்பிடாமல் அமர்ந்திருந்தாள்.
 
 
வழக்கம் போலச் சிலபல கெஞ்சல்கள் கொஞ்சல்களுக்குப் பிறகு அதற்கு அவளிடம் இருந்து சில பதில் அடிகள் என நடந்து இறுதியில் தான் நினைத்த காரியத்தைச் செய்தே பழக்கப்பட்ட அபய் இப்போதும் அவளை உணவருந்த வைத்துவிட்டு தான் ஓய்ந்தான்.
 
 
உணவருந்தி விட்டு சென்று படுத்த மிருவும் இருந்த அலைச்சலிலும் அசதியிலும் உடனே உறங்கி போனாள். இங்குச் சோபாவில் படுத்த அபய்யும் அப்படித்தான் வெகு விரைவாகவே உறங்கிப் போனான்
 
 
வெகு நேரத்திற்குப் பிறகு உறக்கம் கலைந்து புரண்ட மிரு மணியைப் பார்க்க... அது ஐந்து மணியைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்டு பதறி எழுந்தவளுக்கு மாலை செல்ல வேண்டிய விழா நினைவுக்கு வர “எப்படி இத்தனை நேரம் உறங்கினோம்!?’ என்று தன்னையே கடிந்து கொண்டு தயாராக முனைந்தவள், ஏதோ தோன்ற ஹாலில் சென்று எட்டிப் பார்க்க... அவள் எதிர்பார்த்தபடியே அங்கு அபய் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அவனை எழுப்பினாள்.
 
 
அவனுமே உடனே நிலைமை புரிந்து அவளிடம் எந்தச் சீண்டல்களையும் வைத்துக் கொள்ளாமல் அவசரமாகத் தயாராக அவன் வீட்டிற்குச் சென்றான். இருவருக்குமே தன்னை மறந்த ஒரு ஆழ்ந்த தூக்கம், பல வருடங்களுக்குப் பிறகு இன்றுதான் கிடைத்திருந்தது. அதுவே இருவர் மனதிலும் உடலிலும் ஒரு புத்துணர்ச்சியை உண்டு செய்ய... அதே உற்சாகத்தோடு தயாராகத் தொடங்கினர்.
 
 
அரைமணியில் தயாராகிய அபய் மிரு தயாராகிவிட்டாளா எனப் பார்க்க வீட்டிற்குள் நுழைய...
 
 
அந்த இளம் பாசி வண்ண லெஹங்காவில் அழகாகத் தயாராகி வந்து நின்றவளின் மேல் பதித்த பார்வையை அபய்யால் விலக்கிக் கொள்ளவே முடியவில்லை.
 
 
இமைக்க மறந்து அவளையே பார்த்திருந்தவனின் கண்கள் அந்த லெஹங்காவின் இடைவெளியில் வெளிப்பட்ட பட்டு போன்ற அவளின் இடையிலேயே பதிந்து இருந்தது. கண்கள் அறிந்த அதன் மென்மையை அறிந்து கொள்ளக் கைகள் துறுதுறுத்த போதும் தன்னைப் பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டிருந்தான் அபய்.
 
 
அவனை மேலும் பொறுமை இழக்க செய்வது போல அந்த இடையில் அலங்காரத்திற்காகப் போடப்பட்டிருந்த முடிச்சு அவ்வப்போது உரசிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு அந்த முடிச்சின் மேல் அத்தனை பொறாமையாக இருந்தது. தனக்கே தனக்கான உரிமையை அது எடுத்துக் கொள்வது போல எண்ணம் தோன்றியவுடன் இப்போதே அதை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று ஒரு வெறியே எழுந்தது அவனுள்.
 
 
அந்த முடிச்சை அவிழ்த்து எறிய வேண்டும் என்ற பொறாமையோடு முறைத்துக் கொண்டிருந்தவனின் மனசாட்சி ‘அதற்காகவா ராசா...? நீ முடிச்சை அவிழ்க்க நினைக்கறே...?!’ எனக் கேள்வி கேட்க ‘ஆமா... ஆமா...’ என்று வீம்பாக அதற்கு மனதிற்குள்ளேயே பதிலளித்துக் கொண்டிருந்தான். இதற்கு மேல் தாமதிக்க முடியாது என்ற ஒரு நிலையில்...
 
 
வேகமாக அவளை நெருங்கி அந்த மெல்லிடையைத் தன் வன்மையான கரங்களைக் கொண்டு அழுந்த பற்றி இழுத்து வளைத்து இருந்தான் அபய். இதைக் கொஞ்சமும் எதிர்பாரால் கிளம்புவதற்கான மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மிர்னா மலர் சரங்களைப் போல் அவன் மேல் மோதி திகைத்து விழித்து நின்றாள்.
 
 
இடையின் மென்மையை அறிந்தவன் அடுத்து அவளின் இதழின் மென்மையை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு அந்தப் பட்டு இதழ்களை அவள் சமாளித்து நின்று தன்னிடம் இருந்து விலகும் முன் நொடியும் தாமதிக்காது சிறை செய்திருந்தான்.
 
 
திடீரென அபய் அணைத்ததால் திகைத்து அவன் மேல் மோதி நின்றிருந்த மிர்னா அவனிடமிருந்து விலக எண்ணி அவன் தோள்களில் கைகளை வைத்து தள்ளிக் கொண்டு இருந்தவளின் மலர்க் கரங்கள் அடுத்து அவன் செய்த செயலில் அப்படியே நின்றது.
 
 
அவனின் அதிரடியான பல தாக்குதல்களை மட்டுமே அறிந்தவள் அவள், அதிலும் இந்தச் சில நாட்களாகத் தொடர்ந்து அவனின் அதிரடிகளைப் பார்த்துக் கொண்டே இருப்பவளுக்கு இப்போதைய அவனின் மென்மையும் ரசனையுமான அணுகுமுறை அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்வசம் இழக்க செய்து கொண்டிருந்தது.
 
 
அதில் அவனை விலக்க எண்ணி அதற்கான முயற்சிகளில் இறங்கி இருந்தவளின் மலர் கரங்கள் அவளையும் அறியாமல் அவனை இறுக அணைத்து அவனின் செயல்களுக்கு எதிர்வினையாற்ற செய்திருந்தது..
 
 
தனக்குள் அவளின் அருகாமையில் பேயாட்டம் போடும் உணர்வுகளின் தாக்கத்தினால் அவளை அணைத்து இதழ்களைச் சிறை செய்து விட்டானே தவிர, அவளின் விருப்பமின்றி இப்படி நடந்து கொண்டதை எண்ணி தன்னையே நொந்து கொண்டவன் அவளிடமிருந்து விலக எண்ணிய நொடி தன் செயல்களுக்கு எதிர்வினையாற்ற தொடங்கியிருந்த மிர்னாவை கண்டு இன்பமாக அதிர்ந்தவன் மேலும் அவளுள் மூழ்கத் தொடங்கியிருந்தான்.
 
 
10 வருடங்களுக்கு முன் காதலித்து இருந்தாலும் முத்தம் வரை எல்லாம் சென்றதில்லை அபய். அவனிடம் எப்போதுமே இருக்கும் நேர்மையான குணமும் ஒழுக்க நெறியும் அவனை காதல் என்பதை அழகாகக் கையாள வைத்ததைத் தவிர அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல தூண்டியது இல்லை.
மிர்னாவுமே தன்னவன் மேல் தளும்பத் தளும்பக் காதல் கொண்டு இருந்தாலும் அன்று இருந்த சூழல் அவளை அதை வேறு எதையும் உணரச் செய்யவில்லை.
 
 
எனவே இதுவே இருவருக்கும் இதில் முதல் அனுபவம். வாழ்வின் முதல் இதழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இருவராலும் அவ்வளவு எளிதாக விலக முடியவில்லை. அவன் தன் உரிமைக்கும் உணர்வுக்குமான தேடலை அவளிடம் நடத்திக் கொண்டிருக்க... அவளோ தன் தனிமைக்கும் தவிப்புக்குமான தேடலை அவனிடம் நடத்திக் கொண்டிருந்தாள்.
 
 
இதில் மிருவின் இடையில் அழுந்த பதிந்திருந்தவனின் கரங்கள் மேலும் மேலும் தன் அழுத்தத்தைக் கூட்டி அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டே செல்ல... அவளோ தன் இடது கரத்தை அவனின் கழுத்தில் பதித்து வலதுகரம் கொண்டு அவன் கேசத்தில் அழுத்தத்தைக் கூட்டி மேலும் அவனைத் தன்னுள் புதைத்துக் கொள்ள முனைந்தாள்.
 
 
பாவை அவளின் இடையின் மென்மையை உணர்ந்தவனின் கரங்கள் அவளின் ஒட்டுமொத்த மென்மையையும் அறிந்து கொள்ள எண்ணி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது.
 
 
நிச்சயமாக இருவரும் அவர்களாக விலகப் போவதில்லை என்பது தெரிந்தது போலும் திடீரென வெளியில் படார் என்ற சத்தத்துடன் ஏதோ விழ, அதில் தன் உணர்வு பெற்றவர்கள் சட்டென விலகவும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத அளவுக்குத் தயக்கமும் தடுமாற்றமும் எழுந்து அவர்களைத் தவிர்க்க செய்தது.
 
 
மூச்சுக் காற்றுக்கு ஏங்கிய போது கூட விளங்க வேண்டும் என்ற எண்ணமில்லாமல் ஒருவர் மற்றவருக்கு மூச்சை கொடுத்துத் தங்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு இப்போது தான் செய்த, செய்யத் துணிந்த செயல் என்னவென்று விளங்க அபய்க்கு தன் செயலை எண்ணி எந்த ஒரு வெட்கமும் அசிங்கமும் ஏற்படவில்லை.
 
 
காரணம் தன்னவளிடமே தான் உரிமை எடுத்துக் கொண்டது அவனுக்குத் தவறாகத் தோன்றவில்லை. ஒருவேளை அவளின் சம்மதம் இல்லாமல் அதிரடியாகச் செயல்பட்டது வேண்டுமென்றால் தவறாக இருக்கலாம் ஆனால் அவள் தன்னை விலக்காது, தனக்குப் பதில் அளித்தது அவன் மனதில் எந்தவித குற்றவுணர்வும் இன்றி ஒரு உல்லாசத்தைக் கொண்டு வரவே செய்தது.
 
 
ஆனால் மிரு அதற்கு முற்றிலும் நேர் எதிரான ஒரு மனநிலையில் இருந்தாள். என்னதான் அவன் மேல் மலையளவு காதல் மிருவின் மனதில் இருந்தாலும் தன்னை வேண்டாம் என்று விட்டு விலகிச் சென்றவனிடம் இப்படிக் காதலோடு சரணடைந்ததை அவளால் அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
அவன் அருகாமையும் நெருக்கமும் நிச்சயம் தன்னை இது போலத் தடுமாற்றங்களைக் கொண்டு வர செய்யும் என்று தெரிந்து தான் ஆரம்பம் முதலே அவனை தன்னை நெருங்க விடாமல் சிடுசிடுத்து தூர நிறுத்திக் கொண்டிருந்தாள்.
 
 
இன்று அதையெல்லாம் மீறி இப்படி நடந்து கொண்டதில் வெட்கித் தலை குனிந்தவள் அபய்யை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாமல் தன்னைப் பற்றி அவன் என்ன நினைத்திருப்பான் என்ற எண்ணம் தோன்றவும் கழிவிரக்கத்தில் அவளுக்கு கண்கலங்க தொடங்கியது.
 
 
அவள் கூறவில்லை என்றாலும் தன் உயிரானவளை புரிந்துக் கொள்ள முடியாதவனா அபய். சொல்லாமலே அவள் நிலை என்ன என்று புரிந்தவன் அதற்கு மேல் அங்கு நின்று மீண்டும் அவளைச் சங்கடப்படுத்த விரும்பாமல் தான் கீழே காத்திருப்பதாகக் கூறிவிட்டு வெளியேறி விட்டான். அபய் சென்ற திசையையே சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவளின் கண்களில் காதலும் வலியும் சேர்ந்து வந்தது.
 
 
ஒருவாராக இருவரும் அவரவர் நினைவுகளில் மூழ்கியபடி விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். கோலாகல கொண்டாட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கைக் கண்டு அதன் பிரமாண்டத்தையும் அங்கு வருகை தந்திருந்த பெரிய மனிதர்களின் அணிவகுப்பிலும் மலைத்து தான் போனாள் மிர்னா.
 
 
படத் துவக்க விழா மற்றும் நாயகன் நாயகியின் அறிமுகம் இயக்குனரின் அறிமுகம் படத்தைப் பற்றிய வந்திருந்த விருந்தினர்களின் சிறு புகழாரம் மற்றும் அபய்யை புகழ்ந்து பேசுவது என இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக விழா தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
 
எங்குத் திரும்பினாலும் பிரபலங்கள்... பிரபலங்கள்... பிரபலங்கள்.... அவ்வளவு எளிதாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத மிகப்பெரிய பிரபலங்கள் கூட வந்திருந்து விழாவை சிறப்பித்தது அபய்யின் உயரத்தை பறைசாற்றுவது போல இருந்தது.
 
 
ஒரு சிலர் இந்தப் படத்தைப் புகழ்வது போல அவனிடம் தங்களுக்கு அடுத்தப் படத்தில் வாய்ப்புக் கொடுக்கக் கோரி பேசிவிட்டு செல்ல... ஒரு மென்னகையோடு அனைத்தையும் கேட்டுக் கொண்டு அமர்ந்து இருந்தானே தவிர அவன் முகத்தில் கர்வமும் திமிரும் எங்குமே தென்படவில்லை.
 
 
அவளுமே இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறாள் என்றாலும் தொழில் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைத் தவிர வேறு எதிலும் கலந்து கொள்ள அவள் சம்மதிப்பது இல்லை என்பதனால் இத்தனை பிரபலங்களைப் அவள் ஒன்றாக ஒரே இடத்தில் பார்த்ததில்லை. அதிலும் அனைவரும் அவனிடம் காட்டும் மரியாதை அவளை மலைக்க வைத்தது.
 
 
தன்னை மீறி ஒரு ரசனையான பார்வையோடு அபய்யையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் மனமோ அவனின் இந்த இயல்பான புன்னகையை வெகுவாக ரசித்து ‘இது தான் மாமூ உன்னோட ஸ்பெஷல்’ எனக் கொஞ்சிக் கொண்டது.
 
 
ஒருவழியாக இவை அனைத்தும் முடிய இரவு 8 மணிக்கு மேல் ஆகியிருந்தது. இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குப் பின்புறமாக இரவு உணவும் பார்ட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கிருந்து அனைவரும் அங்குச் சென்று ஆடல் பாடல் எனக் கொண்டாட்டமாக இருக்கத் துவங்கினர்.
 
 
தன் பணி பட விழாவோடு முடிவடைந்தது என்பதனால் ‘இத்தோடு வீட்டிற்குக் கிளம்பி விடலாமா!?’ என்று மிரு எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் கதாநாயகன் அவளைச் சாப்பிட வருமாறு அழைக்க என்ன சொல்வது எனத் தெரியாமல் தயங்கியவள் அவனோடு அங்குச் சென்றாள்.
 
 
பார்ட்டி ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் எனக் கலை கட்டிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் ஜரூராக உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அனைத்தையும் பார்வையிட்டவள் ஒரு ஓரமாக நின்று கதாநாயகனோடு பேசிக் கொண்டிருந்தாள்.
 
 
அப்போது மதுக் கோப்பைகளோடு அவளை நெருங்கிய பேரரிடமிருந்து தவிர்க்க முடியாமல் வழக்கம் போல ஒரு கிளாசை எடுத்துக் கொண்டாள் மிரு. மற்றவர்களோடு பேசி கொண்டு இருந்தாலும் மிருவின் மேல் ஒரு கண்ணைப் பதித்திருந்த அபய் இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
 
 
விழா நடந்த வரை சரி, அதன் பிறகு அபய் எப்போது இங்கு உள்ளே வந்தானோ அந்த நிமிடத்தில் இருந்து இனிப்பை மொய்க்கும் ஈயாக மாறி அங்கிருந்த பெண்கள் அனைவரும் அவனைச் சூழ்ந்து கொள்ள... அவனும் தவிர்த்து விலக முடியாத சூழ்நிலையில் அவர்களோடு சிரித்துச் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான்.
 
 
இவற்றையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மிரு வழக்கமாக மற்றவர்களின் கண்ணை உறுத்தாமல் யாரும் கேலி பேசாமல் இருப்பதற்காகப் பார்ட்டி நடக்கும் சமயங்களில் ஒரே ஒரு மதுக் கிண்ணத்தைக் கையில் வைத்துக் கொண்டு அந்தப் பார்ட்டி முழுவதும் சிப் செய்வது போலச் சமாளித்து விடுபவள் தனக்குச் சொந்தமான ஒன்றை தான் உரிமை கோர முடியாத நிலையில் தள்ளி இருப்பதையும் யார் யாரோ சொந்தம் கொண்டாடிக் கொண்டு இருப்பதையும் தாளமுடியாமல் கையில் இருந்ததை ஒரே மடக்காகக் குடித்து முடித்திருந்தாள்.
 
 
அபய் அத்தோடு சும்மா இருந்திருந்தால் அவளும் அத்துடன் நிறுத்தி இருப்பாளோ என்னவோ...! ஆனால் விதியின் விளையாட்டால் அவனைப் பெண்கள் தங்களோடு நடனமாட அழைக்க, அவனும் அந்த அழைப்பை ஏற்று ஆடத் தொடங்கியிருந்தான். நான்கு பெண்கள் அவனைச் சுற்றி நின்று ஆட...
 
 
சாரி கே பால் ஸா கபி மேட்ச் கியா ரே
கபி சோடு தியா தில் கபி கேட்ச் கியா ரே...
 
 
என்று ஹை டெசிபலில் பாடல் ஒலிக்க, அதே அளவு உற்சாகத்தோடு ஆடத் துவங்கி இருந்தான் அபய். அனைவரும் ஒன்று சேர்ந்து ஆடி முடித்ததும், அடுத்து ஓருவர் மாற்றி ஒருவர் அவனோடு ஆட முற்பட... இல்லை போதுமெனத் தவிர்க்க நினைத்தவனின் பார்வை சற்றுத் தொலைவில் நின்று பொறாமையில் பொசுங்கி கொண்டிருந்த மிருவை பார்த்ததும் உல்லாசத்தில் துள்ள... அவளை வெறுப்பு ஏற்றுவதற்கு என்றே மீண்டும் அவர்களோடு சேர்ந்து தனித்தனியாக ஆடத் தொடங்கினான்.
 
 
இப்போது நான்கு பெண்களோடு சேர்ந்து அபய் நடுவில் நின்று ஆடுவது மாயக்கண்ணன் போல அந்த டிஜேவுக்குத் தோன்றியதோ என்னவோ...!? பாகுபலியில் வரும் கண்ணா நீ தூங்கடா என்ற பாடலை அவன் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மாறிமாறி ரீமிக்ஸ் செய்து ஒலிக்க விட, அதற்கு ஏற்ற அசைவோடு ஒவ்வொரு பெண்ணும் அவனோடு சேர்ந்து இணைந்து ஆடத் தொடங்கினார்கள்.
 
 
இதைக் காண காண தன் பொருள் தன் கண்முன்னேயே பறி போவதை பொறுக்க மாட்டாமல் மேலும் அருகில் இருந்த டேபிளில் இருந்த மதுக் கிண்ணங்களை எடுத்து 2... 3... 4... எனக் காலி செய்து கொண்டிருந்தாள் அவள் அறியாமலேயே...!!
 
 
ஒரு கட்டத்தில் அவள் அளவுக்கு மீறி மதுவை குடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு இதற்கு மேல் அவளோடு விளையாட நினைக்காமல் போதும் என்பது போல அனைவரிடமும் கைகாட்டி சிரித்துக் கொண்டே அங்கிருந்து இறங்கி வந்த அபய் மிருவிடம் டான்ஸ் என்று கூறி கையை நீட்ட...
 
 
அவளும் சென்றமுறை போல மறுத்து ஏதும் பேசாமல் உடனே அந்தக் கையைப் பற்றிக் கொண்டு மேடை ஏறி இருந்தாள். இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அபய் ஒரு புன்னகையோடு அவளை அணைத்துப் பிடித்தபடி டிஜேவை பார்த்துத் தமிழ் சாங்ஸ் என்று கூற... அவர்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருந்தது போல அந்தப் பாடல் ஒலிக்கத் துவங்கியது
 
 
ஓ... குளிரும் பனியும் என்னைச் சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
 
 
மிருவின் பின்னால் அபய் நின்று கொண்டு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி அந்தப் பாடலுக்கு ஏற்ப இருவரும் ஒரே விதமாக உடலை மட்டும் அசைக்க...
 
 
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
 
 
இருவரும் கைகளைப் பிணைந்தபடி பறவை போல ஒரே நேரத்தில் வலது கையையும் இடது கையையும் மாறிமாறி அசைத்துப் பறப்பது போலச் செய்து, பின் மெல்ல குனிந்து நிமிர்ந்து ஆடிக் கொண்டிருக்க...
 
 
நீராகினால் நான் மழையாகிறேன்
நீ வாடினால் என் உயிர் தேய்கிறேன்...
 
 
இந்த இடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டென ஆடிக் கொண்டிருந்தவளை குனிந்து தன்னோடு இறுக்கி பிடித்துத் தூக்கியவன் அவளை அந்த ‘தேய்கிறேன்ன்ன்ன்ன்’ என்ற வார்த்தையில் வரும் இசைக்கு ஏற்ப சுழற்ற தொடங்கவும் ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.
 
 
என் ஆயுள் வரை உந்தன் பாயில் உறவாட வருகிறேன்
ஓ... காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்
என் வார்த்தை உன் வாழ்க்கையே
மழையில் நனையும் பனி மலரை போல
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
 
 
மெல்ல தன் கரங்களில் இருந்தவளை சுழற்றி முடித்த அபய் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னோடு சேர்த்து அணைத்தபடியே கீழே இறக்கவும், அப்படியே அவனின் பரந்த மார்பில் சாய்ந்து அணைத்துக் கொண்டே மிரு அந்த வரிகளுக்கு ஏற்ப அவன் மேல் சாய்ந்தவாறு ஆடத் துவங்கியவளை இன்னும் இறுக்கமாகத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி அபய்யும் அவளின் அசைவுகளுக்கு ஏற்ப ஆடினான்.
 
 
ஓ.ஓ.ஓ . உலகை தழுவும் நள்ளிரவை போலே
என்னுள்ளே பரவும் ஆருயிரும் நீயே
என்னை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்...
 
 
அவள் மனதில் இருப்பதை அந்த வரிகளின் மூலம் மிரு நடனத்தில் வெளிப்படுத்திவிட, அடுத்து தன் மனதில் இருப்பதை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துவது அபய்யின் முறையானது.
 
 
இப்போது ஒரு குழந்தையைத் தன் கையில் ஏந்தும் பாவனையில் இரு கரங்களில் அவளைத் தூக்கி தன் முகத்தோடு முகம் தேய்க்க அணைத்தபடி ஆடியவன் மெல்ல அவளின் உடலை கரங்களில் வைத்தபடியே இரண்டாக மடிப்பது போல மடித்துப் பின் விரித்து என ஆடி முடிக்கவும், அங்குச் சந்தோஷக் கூச்சல் எழுந்து அடங்க வெகு நேரம் ஆனது.
 
 
அந்தச் சத்தத்திலேயே தன் உணர்வு வரப் பெற்ற மிரு மெல்ல தான் செய்து கொண்டிருக்கும் செயல் உணர்ந்து அங்கிருந்து விலகி வெளியே செல்லத் துவங்கினாள்.
 
 
மிரு செல்வதைக் கவனித்த அபய்யும் ஒரு புன்னகையையும் தலை அசைப்பையும் மெல்ல தந்தவாறே அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பி அவளின் பின்னோடு ஓடி வந்து இணைந்து கொள்ள... அவனை ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள் தன் போக்கில் நடக்கத் துவங்கவும் அவளைக் காருக்கு அழைத்து இந்த நேரத்தில் ஒரு வாக்குவாதத்தை நடத்த விரும்பாதவன் அளக்காக அவளைத் தூக்கிச் சென்று காரில் அமர வைத்திருந்தான்.
 
 
அதைத் தடுக்கவும் வெறுக்கவும் முடியாத அளவிற்கு அவளின் உள்ளே சென்றிருந்த மது தன் வேலையைக் காட்டத் துவங்கி இருக்க அமைதியாகக் கண்மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள் மிரு.
 
 
வீடு வந்த பிறகும் கண்மூடி தன் நினைவின்றிக் கிடந்தவளை தன் கரங்களிலேயே ஏந்திக் கொண்டு அவனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் கதவில் இருந்த பூட்டை திறப்பதற்காக மிருவை இறக்கி தன்னோடு அணைத்துப் பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கதவைத் திறக்க முயன்று கொண்டிருக்க... அதில் விழி திறந்து பார்த்த மிரு மேலும் அவனோடு ஒன்றி நின்று கொண்டாள்.
 
 
அவளின் அந்தச் செய்கையில் பழைய மிரு அவனின் கண்முன் தெரிய ஒரு புன்னகையோடு அவளை அணைத்துக் கொண்டு தன் வீட்டிற்குள் அழைத்துச் சென்றான் அபய். உள்ளே நுழைந்ததும் கதவை அடைத்துவிட்டு அவளைப் படுக்கை அறையில் கொண்டு விட நினைத்து அழைத்துச் சென்றவனைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தியவள்
 
 
“ஏன் இப்படிச் செஞ்ச மாமூ..?” எனத் துக்கமும் வேதனையுமாக அவன் முகம் பார்த்து கேட்கவும், தன் மார்பில் சாய்ந்து நின்றபடி கேட்பவளின் இந்தக் கேள்வி எதைக் குறித்து எனப் புரியாமல் திகைத்தவன்
 
 
“நான் என்ன செஞ்சேன் லட்டு..?” என்றான் புரியாமல், “உனக்கு நிஜமா எதுவுமே புரியலையா...?! இல்ல நீ புரிஞ்சுக்க விரும்பலையா...?!” என்றவளின் வேதனை அப்பட்டமாக அவள் முகத்தில் தெரிய,
இப்போது அவள் எதைப் பற்றிப் பேசுகிறாள் என்று புரிந்து கொண்டவன் “இப்போ எதுக்கு இந்தப் பேச்சு லட்டு... ரெஸ்ட் எடு வா..” என அவளை அங்கிருந்து நகர்த்திக் ,கொண்டு போக முயன்றான். அதற்கு வாய்ப்பளிக்காமல் அவன் கைகளைப் பிடித்துத் தடுத்தவள் “உனக்கு என்னைப் பிடிக்குமா...?” என்று கேட்டாள்.
 
 
“எனக்கு என் லட்டுவ ரொம்பப் பிடிக்கும்டி..” என்று கூறியவன் மெல்ல அவளின் நெற்றியில் தன் இதழ் பதிக்க... “பொய்... பொய் சொல்ற மாமூ உனக்குப் பிடிச்சிருந்தா அப்படி நீ செஞ்சிருக்க மாட்ட மாமூ..” என்றவளின் கண்கள் வேதனையில் கலங்க தொடங்கியது.
 
 
அவளின் கண்ணீரை பார்க்கும் சக்தி அவனுக்கு இல்லாது போக, “அது அப்படி இல்லைடி.... அன்னைக்கு அப்படி நான் போனதற்கான காரணம் வேற...” என்றவன், அதை இப்போது விளக்கக் கூடிய நிலையிலும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையிலும் அவள் இல்லை என்று உணர்ந்து “அதை விடு, இப்ப நீ ரெஸ்ட் எடு..” என்று மீண்டும் நகர முயன்றான்.
 
 
“இல்ல எனக்கு நல்லா தெரியும், உனக்கு என்னைப் பிடிக்காது... உன் மனசுல நான் இல்லை... அப்படி இருந்திருந்தா நிச்சயம் நீ இப்படிச் செஞ்சுருக்க மாட்டே மாமூ, நான் கொஞ்சம் கூட அழகா இல்லையா..? சொல்லு மாமூ என்கிட்ட என்ன குறை, ஏன் உனக்கு என்னை பிடிக்காம போச்சு...?” என்றவள் அவன் மார்பில் முகம் புதைத்துத் தேம்பத் தொடங்கினாள்.
 
 
“பேபி... பேபி... நீ என் உயிர் டி, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் டி... உன்கிட்ட எந்தக் குறையும் இல்லை, தப்பு எல்லாம் என் மேலதான்... தப்பு செஞ்சவன் நான்தான் பேபி..” என்றவனின் கண்களும் கலங்கத்தான் செய்தது.
 
 
அபய்யின் வார்த்தைகளில் மெல்ல விழி உயர்த்தி அவனைப் பார்த்தவள், “நிஜமாவே உனக்கு என்னைப் பிடிக்குமா மாமூ...?” என்று கேட்க, அந்தச் சிறு குழந்தை போன்ற பாவனையில் தன்னைத் தொலைத்தவன் “ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி அவள் கண்களிலும் கன்னத்தில் முத்தமிட்டான்.
 
 
“எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி அவனை இறுக அணைத்துக் கொண்டாள் மிரு.
அப்படியே அவனை அணைத்து பிடித்தபடியே நெற்றியை பற்றிக் கொண்டவள் “எனக்கு ஒரு மாதிரி இருக்கு மாமூ” என்று முகம் சுழித்தப்படி கூறியவளை கண்டு போலியாக முறைத்தவன் “உன்னை யார் குடிக்கச் சொன்னது...?” என்று கடிந்து கொண்டான்.
 
 
“உன்னை யாரு அவங்க கூட ஆட சொன்னது...?” எனத் திரும்ப அவளும் அவனைக் கடிந்து கொண்டாள். “அப்போ நீ வந்து ஆட வேண்டியது தானே...” என்று செல்லமாக அவளோடு சண்டையிடவன், மிருவை படுக்கை அறைக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்தவன் அவளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்க எண்ணி நகர,
 
 
அவனது கைகளைப் பற்றித் தடுத்தவள், ”பார்த்தியா நீ பொய் தானே சொன்னே...?” என்று கேட்டபடி உதடு பிதுக்கி அழ தயாராகவும் என்ன பொய் எனப் புரியாமல் புருவம் சுருக்கிய அபய்யை கண்டு “என்னைப் பிடிக்கும்னு பொய் தானே சொன்னே” எனக் கேட்டபடியே அழ தயாரானவளின் செய்கை சிறுகுழந்தையின் செய்கை போலத் தோன்றவும் ஒரு சிறு புன்னகையோடு அவளின் அருகில் அமர்ந்தான்.
 
 
“நிஜமாவே உன்னை எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்று கூறி நெற்றியில் அழுந்த தன் முத்திரையைப் பதிக்கவும் அவன் அமர்வதற்காகவே காத்திருந்தவள் போலச் சட்டெனத் தாவி அவனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் புதைத்து அவனை அணைத்தபடி அவனோடு இழைந்தவாறே படுத்துக் கொண்டாள் மிரு.
 
 
அவளின் இந்தச் செய்கையில் வாஞ்சையான ஒரு புன்னகை தோன்ற, நிச்சயமாக உறங்கும் வரை அவளின் இந்தச் சிறுபிள்ளைத்தனமான செய்கைகள் தொடரும் என்று புரிந்து கொண்டவன் இது எல்லாம் அவளின் உள்ளே சென்றிருக்கும் அந்த அரக்கனின் அட்டகாசம் என்பது புரிய, முதலில் இவளை உறங்க வைப்பது தான் சரி வரும் என்று எண்ணி மெல்ல அவள் முதுகை தடவிக் கொடுத்து உறங்க வைக்க முயன்றான்.
 
 
“அப்போ காட்டு” என்ற குரல் திடீரென ஒலிக்கவும், “என்ன காட்டணும்...?” என்றவனின் கேள்விக்கு விழியை மட்டும் உயர்த்தியவள், ”உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு காட்டு” என்றாள்.
 
 
“நாளைக்குக் காட்றேன் இப்போ தூங்கு..” என்று அபய்யை கண்டு சிணுங்க துவங்கியவள், “ம்ஹும்..  இப்பவே காட்டு, நீ காட்டினால் தான் தூங்குவேன்..” என்று கூறவும், ‘இது என்னடா வம்பாப் போச்சு’ என மானசீகமாகத் தலையில் கை வைத்த அபய், “மினி பேபி குட் கேர்ள் தானே... இந்த மாமூ சொன்னா கேட்பா தானே.... இப்போ நல்ல பிள்ளையா தூங்குவாளாம் காலையில மாமூ அவளை எனக்கு எவ்ளோ பிடிக்கும்ன்னு காட்டுவேணாம் சரியா” என்று தாடையைப் பற்றிச் சிறு குழந்தையைக் கொஞ்சுவது போலக் கொஞ்சி அவளுக்குப் புரிய வைக்க முயன்றான்.
 
 
“நான் குட் கேர்ள் தான்... ஆனா நீதான் பேட் பாய், அதான் நான் கேட்கிற எதையும் செய்யவே மாட்டேன்றே..” என்று அவள் குறைபட்டுக் கொள்ள...
 
 
“என்ன அப்படி நீ கேட்டு நான் செய்யாம போயிட்டேன்..?!” என்று அபய் சற்றுக் கோபம் கொள்ளவும் “அப்படியா எல்லாமே செஞ்சீயா...?” என்று ஏற்ற இறக்கத்தோடு புருவம் மற்றும் விழிகளை அசைத்து கேட்டவளை ரசித்துக் கொண்டே “கண்டிப்பா செய்வேன்” என்றான்.
 
 
“அப்போ கிஸ் மீ” என்றாள் மிரு. அதில் திகைத்தவன் “என்னது?” என்று மறுபடியும் கேட்க, “கிஸ் மீ மாமூ... நீ தான் எல்லாமே செய்வே இல்லை, கிஸ் மீ” என்றாள்.
 
 
‘அடியே உன்னை’ என்று மானசீகமாகப் பல்லைக் கடித்தான் அபய். மாலை கொடுத்த இதழொற்றலில் தொடங்கி அதன் பிறகு ஆடிய நடனம் இப்போது வரை அவள் தன்னோடு இழைந்து கொண்டு இருப்பது எனக் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தன் வசம் இழந்து தடுமாறிக் கொண்டே இருந்த போதும் அவளின் இந்த நிலையை மனதில் கொண்டு தன்னை வெகுவாகச் சிரமப்பட்டுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டிருந்தவன் அவளின் கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தடுமாறிப் போனான்.
 
 
அவனுக்கு நன்றாகவே தெரியும் தன் மேலான அவளின் காதல் தான் இத்தனை வருடங்களாக உள்ளுக்குள்ளேயே பொத்தி பொத்தி வைக்கப்பட்டிருந்தது எல்லாம் இன்று தன்னை மறந்த நிலையில் அவளையும் மீறி வெளியில் வந்து கொண்டிருக்கிறது என்று...! ஆனால் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள அவன் தயாராக இல்லை.
 
 
அபய் அவன் நினைவுகளில் மூழ்கியிருக்க, மெல்ல விசும்பலோடான அழுகை சத்தம் கேட்டு தன் பார்வையைத் திருப்பியவன் அங்கு மிரு அழுது கொண்டிருப்பதைக் கண்டு பதறிப் போனவன் அவளைச் சமாதானம் செய்ய முயலவும், “உனக்கு என்னைப் பிடிக்கல...” என மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்துக் கடைசியாக முடிக்கும் போது “அதனாலதான் எனக்குக் கிஸ் பண்ண மாட்டேன்ற...” என்று கூறி முடித்திருந்த நொடி அவளின் இதழ்கள் மிக வேகமாகச் சிறை எடுக்கப்பட்டிருந்தது.
 
 
மிருவின் அழுகையையும் வேதனையையும் பொறுக்க முடியாமலே அவள் கேட்டதைக் கொடுத்து விட்டால் அவள் உறங்கி விடுவாள் என்ற எண்ணத்தில் இதைத் தொடங்கியிருந்த அபய் பின் விலக நினைக்க... ஆனால் அதற்கு வாய்ப்பளிகாத மிரு அவனை மேலும் மேலும் தன்னோடு சேர்த்துக் தனக்குள் புதைத்துக் கொள்ளத் தொடங்கினாள்.
 
 
இன்னும் மன்னிக்கப் படாமலும் பேசித் தீர்க்கப் படாமலும் இருந்த அவர்களின் பிரச்சனை அனைத்தும் அப்படியே இருக்க... வாழ்க்கை மட்டும் அடுத்தக் கட்டத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றிருந்தது.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 20
 
தன் மார்பில் முகம் புதைத்து உறங்கிக் கொண்டிருந்த மிருவை கை வளைவில் அணைத்துப் பிடித்தபடி மெத்தையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனின் பார்வை, மிருவின் முகத்திலேயே பதிந்திருந்தது.
 
 
அவனுக்கு உறக்கம் வரும் போலத் தெரியவில்லை, அவளையே இமை கூடச் சிமிட்ட மறந்து பார்த்து, இல்லை.. இல்லை... ரசித்துக் கொண்டிருந்தவனின் மனதில் சற்று முன்பு நடந்ததை நினைத்துக் கொஞ்சம் கூட வருத்தமோ குற்ற உணர்ச்சியோ எழவே இல்லை.
 
 
தன்னவளிடமே தான் உரிமை எடுத்துக் கொண்டதை அவனால் தவறு என்று ஒரு நிமிடம் கூட நினைக்க முடியவில்லை. ஆனால் மிரு இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ என்று எழுந்த எண்ணம் மட்டும் அவனின் மனதை சற்றுச் சஞ்சலப்படுத்த தான் செய்தது.
 
 
தன்னையோ தன் உடனான உறவையோ அவள் மறுக்கக்கூடும் வெறுக்கக்கூடும் என்று எண்ணி எழுந்த சஞ்சலம் இல்லை அது, அது முழுக்க முழுக்க இன்றைய அவளின் நிலையைக் குறித்தே இருந்தது.
 
 
அவள் தன்னிலையில் இல்லாத இந்தச் சூழலில் இப்படி ஒரு நிகழ்வை எண்ணி மனம் லேசாகக் குறுகுறுக்கத் தான் செய்தது. ஆனாலும் அவளின் இந்த நிலையை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே அப்படிப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணமும் அவனுக்கு இல்லையே.
 
 
இன்று இந்த நிமிடம் நடந்ததற்கு முழுக்க முழுக்கக் காரணம் மிரு மட்டுமே, அது அவனுக்கு நன்றாகவே தெரியும். தன் மேலான அவளின் காதலும், உரிமையும், கோபமும், ஆசையும் பத்து வருடங்களாக மற்றவர் அறியாமல் பொத்தி பொத்தி வைக்கப்பட்டிருந்தது எல்லாம் ஒரே நாளில் அவள் அறியாமல் தன் நிலையற்று அவள் இருந்த வேளையில் வெடித்து வெளியே வர...
 
 
அது அவளின் கேள்விகளுக்கான விடையைத் தேடி அலைந்து போராடி தன் தேடலை தெரிந்து கொள்ள முயன்றதன் விளைவே இது என்று சரியான கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு இதை மிரு எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாளோ என்பதே மிகப் பெரிய கேள்வியாக இருந்தது.
 
 
நிச்சயம் அவள் கண் விழித்தவுடன் அனைத்திற்கும் தன்னையே குற்றவாளியாக்கி நிறுத்துவாள் என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் தன் மேலான காதலை ஒத்துக் கொள்வாள் என்று மட்டும் ஒரு சதவிகிதம் கூடத் தோணவே இல்லை.
 
 
அபய் இங்கு வந்த இத்தனை நாளில் தன்னையும் தன் அருகாமையும் விலக்கவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் அவள் தடுமாறிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
 
 
அவளின் கோபம் வெறுப்பு எல்லாம் எதற்கு என்று அறிந்திருந்ததனாலேயே அவளாகக் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி தன்னை முழுமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று காத்திருக்கிறான் அபய்.
 
 
இல்லையெனில் தன் அதிரடியால் மிருவை தன்னிடம் கொண்டு வர அபய்க்கு ஒரு நொடி போதும். ஆனால் அவனுடைய தேவை அது அல்ல, மிரு தன்னைத் தனக்காகவே தன் மேல் கொண்டுள்ள காதலுக்காகவே முழுமனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும் வேறு எதற்காகவோ யாருக்காகவோ எந்தக் கட்டாயத்தினாலோ ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நினைத்துதனாலேயே மெல்ல மெல்ல அவளை நெருங்க தொடங்கியிருந்தான்.
 
 
அதிலும் ஆங்காங்கு அதிரடியை காட்டினால் தான் அவள் விஷயத்தில் சரிபட்டு வரும், அதுவும் இல்லை என்றால் அவள் உச்சாணிக்கொம்பில் அல்லவா ஏறி அமர்ந்துக் கொள்வாள். அவனுக்குத் தெரியாதா அவனின் லட்டுவை பற்றி...!
 
 
அவளை மலை இறக்குவது என்பதெல்லாம் ஆகாத காரியம் என்று..! அதனாலேயே அவள் எதிர்பாராத தருணங்களில் அவளை அதிரடியால் நெருங்கி தடுமாறச் செய்து அவள் சமாளித்து விலகும் முன்பு தான் நினைத்ததை ஒவ்வொரு இடத்திலும் செயல்படுத்திக் கொண்டே இருந்தான்.
 
 
இப்படி எல்லாம் செய்வதனால் அவன் முன்பு செய்த தவறு இல்லை என்று ஆகிவிடுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று அவனுக்குமே தெரியும். ஆனால் அவன் இப்படிச் செய்யக் காரணமே தன் மேல் உள்ள கோபத்தில் தன்னை அவளோடு தனிமையில் பேசவும் தான் செய்த தவறுக்கு விளக்கம் சொல்ல கூட அனுமதிக்க மாட்டாள் என்பதனாலேயே அவள் வழியிலேயே சென்று அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
 
 
நிச்சயம் மிருவிடம் அனைத்தையும் பேசி, அவளுக்குத் தன் மேல் உள்ள கோபத்தை ஒன்றுமில்லாமல் செய்து, அதன் பிறகு ஒரு அழகிய புதிய வாழ்க்கையைத் தொடங்க எண்ணி இருந்தவன் தான் அபய். அதை நோக்கிய அவனின் பயணத்தில் தான் திடீரென இடைப்பட்ட உதய் பாயலுடனான தன் திருமணத்தைப் பற்றிப் பேசி அதற்கு உதவியும் கோர... அது உடனடியாக நடந்து முடிய வேண்டிய அவசியத்தை அறிந்தவனும் முதலில் அவர்களின் வாழ்க்கையை நேர் செய்வது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
 
 
பாயல் மற்றும் உதய் திருமணம் நடந்து முடிந்த பிறகு ஒரு நல்ல தருணத்தில் மிருவிடம் தன்னிலை விளக்கம் அளித்து அவளின் மன்னிப்பை கோற காத்திருந்தவன், இன்று இப்படி ஒரு சூழலில் அடுத்து என்ன என்று புரியாமல் இதை எப்படி அவள் எடுத்துக் கொள்ளப் போகிறாள் என எதுவும் தெரியாமல் ஒரு முடிவுக்கு வர முடியாத வெறுமையான மனநிலையிலேயே இப்போது இருந்தான் அபய்.
 
 
இதற்கு முன்பு மிருவுக்கு அவன் மேல் இருந்தது கோபம் அதைக் குறைக்கவும் ஒன்றும் இல்லாமல் செய்யவும் வழி தெரிந்திருந்தவனுக்கு இன்றைய நிலையில் அடுத்து என்ன செய்வது என்று சுத்தமாகப் புரியவில்லை. அதற்குக் காரணம் மிருவின் மனநிலை அடுத்து என்ன எனத் தெரியாததே...!?
 
 
மிருவின் மனநிலை தெரிந்த பிறகே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க முடியும் என்பதனால் அவளின் உறக்கம் களைந்து உதிர்க்க போகும் வார்த்தைகளுகாகவும் நடந்து கொள்ளப் போகும் முறைக்காகவும் எதிர்பார்த்து காத்திருந்தவன், அவள் எப்படி நடந்து கொண்டாலும் அதை எதிர் கொண்டு தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் வல்லமை பெற்றவனே என்பதனால் மிருவை சமாளித்துச் சமாதானம் செய்து விட முடியும் என்ற நம்பிக்கை அளவுக்கு அதிகமாகவே இருந்தது அவனிடம்.
 
 
உறக்கம் கலைந்து எழுபவள் ஆற்றும் எதிர்வினை என்னவாக இருக்கும், அழுவாளா...?! கோபப்படுவாளா..?! சண்டையிடுவாளா...?! தன்னைக் குற்றம் சுமத்துவாளா...?! என்ன செய்யக் காத்திருக்கிறாள், இந்தச் சிறகில்லாத அழகிய தேவதை என்ற எண்ணத்தோடு இரவெல்லாம் அமர்ந்திருந்தவன் ஒரு நொடி கூட உறங்கவில்லை.
 
 
உதய்யின் திருமணத்திற்காக விரைவாகத் தயாராக வேண்டி இருந்ததனால் விடிவதற்கு முன்பே இருள் பிரிய தொடங்கிய நேரத்தில் மெல்ல மனதில் தோன்றிய ஒரு சிறு படபடப்போடு மிருவை எழுப்பினான் அபய்.
 
 
இரவு தாமதமாக உறங்கியது மற்றும் புதிதாக நேற்று உள்ளே சென்றிருந்த திரவம் என எல்லாம் சேர்ந்து கொள்ள, மிருவால் விழிகளைத் திறக்கவே முடியவில்லை. அசைந்து அசைந்து மேலும் அபய்யின் மார்போடு ஒண்டிக் கொண்டு உறங்க முயன்றவளை எழுப்ப அவனுக்கு மனதே இல்லை என்றாலும் அவள் எழுந்தே ஆகவேண்டிய அவசியம் இருப்பதால் மீண்டும் மீண்டும் அவளின் உறக்கத்தைக் கலைத்து விட முயன்று கொண்டிருந்தான் அபய்.
 
 
அதில் ஒரு சிணுங்கலுடன் தன் உறக்கம் தடைபட்ட எரிச்சலும் சேர்ந்து கொள்ள, மெல்ல இமைகளைத் தட்டித்தட்டி விழித்தவள் வெகு அருகில் அபய்யின் முகத்தைக் கண்டு... ஒரு சலிப்போடு முகத்தைச் சுழித்தபடி மீண்டும் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டு உறங்க முயல,
 
 
“மினி... வேக் அப், டைம் ஆகுது...” என்ற குரல் காதின் ஓரம் ஒலிக்கவும், அதுவரை அதை வழக்கம் போலக் கனவு என்று நினைத்து தன் உறக்கத்தைத் தொடர முயன்றவள், திடுக்கிட்டு விழிகளைத் திறந்து எழுந்து அமர்ந்து, தன் பார்வையைச் சுழற்ற... ‘நடந்தது என்ன?’ என்பது தெள்ளத் தெளிவாக அதில் அவளுக்குப் புரிந்து போனது.
 
 
அதை “ஓ” என்ற ஒற்றைச் சொல்லோடு உள்வாங்கியவள், சில நொடிகள் எடுத்துத் தன்னைச் சமன் செய்தபடி அங்கிருந்து வெளியேற முயன்றாள்.
 
 
அவள் அசைய தொடங்கியதிலிருந்து அவளின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டிருந்தவன் அவளிடமிருந்து வெளிப்பட்ட பாவம் அதற்குப் பிறகான அவளின் செய்கையும் என்னவென்று புரியாமல் திகைத்து விழி சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க... அவளோ எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அறையில் இருந்து வெளியேற போனாள்.
 
 
அதைக் கண்டு அவளைத் தடுப்பது போல அவளின் முன் வந்து அறையின் வாயிலை மறைத்தபடி நின்றவனை ‘என்ன?’ என்பது போலக் கேள்வியாகப் பார்த்தாள் மிரு.
 
 
கண் விழித்தவுடன் அதிர்வாள், சண்டையிடுவாள், அழுவாள், கோபப்படுவாள், என்று ஏதேதோ எதிர்பார்த்து இருந்தவன் அவளிடமிருந்து அப்படி எதுவும் வெளிப்படாது மட்டுமின்றி இங்கு நடந்ததைப் பற்றிக் கூட அவள் என்ன நினைக்கிறாள் என்று புரியாத அளவில் ஒரு குழப்பத்தோடே அவளின் முன் வந்து நின்றவன், ‘நடந்தது என்னவென்று அவளுக்குப் புரியாமல் எல்லாம் இல்லை’ என்பது நிச்சயமாக ‘என்ன பேசுவது...? எப்படிப் பேசுவது...? எனத் தெரியாமல் தயங்கி,
 
 
“மினி... அது... நான்... நீ... நாம... அது... நேத்து...” என்று தடுமாற்றத்தோடு என்னவென்று விளக்கம் அளிப்பது என்று கூடப் புரியாமல் ஒரு குழப்பத்தோடே பேசிக் கொண்டிருந்தவனின் மனமோ ‘நடந்தவைகள் அனைத்திற்கும் நீதான் பொறுப்பு’ என ஒட்டுமொத்தமாக அவள் மேல் குற்றம் சாட்டி விட்டு ஒதுங்கிக் கொள்ளக் கொஞ்சமும் எண்ணவில்லை.
 
 
நிஜம் அதுதான் என்றாலும் அதை அவளின் முன் கூற அவனுக்கு மனம் வரவில்லை. எந்தப் பெண்ணாக இருந்தாலும் இதைத் தன்னவன் வாயால் கேட்க விரும்ப மாட்டாள் என்பதோடு அதை அவளால் தாங்கிக் கொள்ளவும் முடியாது என்று உணர்ந்து கொண்டவன் அப்படி ஒன்றை தன் உயிரானவளை நோக்கி எப்படிப் பேசுவான்.
 
 
அனைத்திற்கும் நான் தான் காரணம் என்று கூறவும் அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை. இப்போது என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் எப்படி என்னவென்று வார்த்தைகளை விட, அதற்கு அவன் தயாராகவும் இல்லை... இதுவே நாளைக்கு வேறு மாதிரி திரும்ப வாய்ப்பு இருக்கிறது என்பதனால் மனதில் எழுந்த பல்வேறு குழப்பங்களுடன் அவன் வார்த்தைகளுக்காகத் தடுமாற...
 
 
ஆனால் அவளோ “அது ஏதோ ஒரு வீக் மொமென்ட், விடுங்க மிஸ்டர் அபய்...” என நடந்தது எல்லாம் எனக்குப் பெரிய விஷயமே இல்லை என்பது போல ஒரு சாதாரணக் குரலில் கூறி விட்டு நகர முயல, அதில் அதிர்வோடு மேலும் அவளின் வழியை மறித்தது போல நின்றவன், ‘தன் காதில் விழுந்தது சரிதானா...?!’ என ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள எண்ணி “பாடர்ன்” என்று அவளைக் கூர்மையாகப் பார்த்தபடி கேட்டான்.
 
 
“எஸ்... வீக் மொமென்ட்டில் நடந்ததைப் பற்றி இனி பேசி பெரிசு பண்ண வேண்டாம்... லீவ் இட்...” என முகத்திலும் குரலிலும் ஒரு சலிப்பை கொண்டு வந்து மிரு அவனுக்குப் பதில் அளித்துக் கொண்டிருக்கையிலேயே அபய் தன் அழுத்தமான கரங்களில் அவளின் முகவாயை இறுக பற்றி அழுத்தியதில் மிருவின் வார்த்தைகள் பாதியிலேயே நின்றது.
 
 
‘ஒரு வார்த்தை... இனி ஒரு வார்த்தை பேசினாலும் உன்னை என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...” என்று கண்கள் சிவக்க அவளை எச்சரித்தவனின் குரலில் அத்தனை ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு இருப்பதற்கான அடையாளங்கள் அத்தனையும் தென்பட்டன.
 
 
தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர கொஞ்சமும் முயலாமல், இருந்த ஆத்திரத்திலும் கோபத்திலும் “என்னடி சொன்ன... வீக் மொமென்ட்டா...!? எங்க என்னைப் பார்த்து சொல்லு, இதே இடத்தில என்னைத் தவிர வேறு யார் இருந்திருந்தாலும் இதே பதிலைத்தான் நீ சொல்லியிருப்பீயா...?” என்று கேட்கவும்,
 
 
அதுவரை அபய் தன்னைப் பற்றி அழுத்தியதில் இருந்து வெறுமையான விழிகளோடு அவனைக் கொஞ்சமும் பயமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவளின் விழிகளில் மெல்ல ஒரு வலி வந்து அமர்ந்து கொண்டது.
 
 
அதைக் கண்ட நொடி அபய், “நான் கேட்டது இப்போ இந்த நொடியை பத்தி மட்டும் தான்” என்றவனின் குரலில் என்ன இருந்தது எனப் பிரித்தறிய முடியாத ஒரு பாவனையோடு பேசவும், அந்த நொடி அவனை வேறு ஒரு பாவனையோடு வருடியது அவளின் விழிகள்
 
 
அந்த விழிகளைப் பார்த்துக் கொண்டே “இதோ இது சொல்லுதடி, நீ சொல்லாத உண்மையை எல்லாம்... ஆனா நீ சொல்ல மாட்டே... திமிரும் ஆணவமும் தான் இங்கே கொட்டிக்கிடக்கே.... நீ சொல்ல மாட்டே...” என்றவன் ஆத்திரத்தோடு அவளை உதறி தள்ளி விட்டு அந்த அறையிலிருந்து வெளியேறி இருந்தான்.
 
 
அதுவரை முகத்திலும் விழிகளிலும் எதையும் காட்டாது இறுகிப் போய் இரும்பாய் நின்றிருந்தவள் அபய் சென்ற திசையையே விழிகளில் தேங்கிய நீரோடு வெறித்தபடி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
 
 
சரியாக ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அசுர வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த அந்தக் காரில் குண்டூசி விழுந்தால் கூடக் கேட்கும் அளவிற்கான அமைதியோடு இரு வெவ்வேறு மனநிலையில் பயணித்துக் கொண்டிருந்தனர் அபய்யும் மிருவும்.
 
 
இருவரும் மறந்தும் கூட ஒருவரை ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொள்ளவே இல்லை. அபய்யின் கவனம் முழுவதும் சாலையில் பதிந்திருப்பது போலத் தெரிந்தாலும் அவன் மனம் உலைகலனாகக் கொதித்துக் கொண்டிருந்தது.
 
 
சற்று முன்பு நடந்தது எல்லாம் இம்மியும் பிசகாமல் நினைவு வந்து அவனை எப்போது வேண்டும் என்றாலும் வெடிக்கும் எரிமலையாக மாற்றிக் கொண்டு இருந்தது.
 
 
ஆனால் மிருவின் மனமோ ஆழ்கடல் அமைதி போல, எங்கு ஆழம் எங்கு ஆபத்து என்று கணிக்க முடியாத ஒரு மனநிலையோடே தனக்கு முன் இருந்த சாலையை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
 
 
சரியான நேரத்திற்குக் கோவிலை வந்தடைந்தவர்கள் இருவரும் பிரபலமான அந்தக் கோவிலில் மிகச் சிறப்பாக ஆடம்பரம் எதுவும் இன்றி ஆனால் அழகாகவும் அருமையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணத்திற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்டுக் கொண்டே இருக்க...
 
 
மிருவின் மனமோ சற்று முன் கோவில் வாயிலில் காரை கொண்டு வந்து நிறுத்தி விட்டு இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பது போன்ற நினைவு கூட இல்லாதது போல இறங்கி படாரெனக் கதவை சாத்திவிட்டு சென்றவனின் செயலையே நினைத்துக் கொண்டிருந்தது.
 
 
இப்படியெல்லாம் நடந்து கொள்ளக் கூடியவன் இல்லை அபய். இன்று அவனின் இந்த நடவடிக்கைகளுக்கும் காரணம் தானே என்று நன்கு அறிந்து இருந்தவளால் அதை ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை.
 
 
‘நான் உன்னிடம் எப்படி நடந்தால் என்ன...? நீ என்னிடம் சரியாக நடந்து கொள்ள வேண்டியது தானே...? கோபப்பட எனக்கு மட்டுமே உரிமை உண்டு...’ என்று அவள் மனம் முரண்டியது.
 
 
தான் அவனிடம் கோபப்படலாம், சண்டை இடலாம், ஏன் ஒதுங்கி கூடச் செல்லலாம்... ஆனால் அவற்றைத் திரும்ப அபய் செய்யும் போது அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தது அவளின் நேச நெஞ்சம்.
 
 
இப்போதும் மனதில் தோன்றிய ஒரு சிறு எதிர்பார்ப்போடு திரும்பி மிரு அவனைப் பார்க்க... அவனோ நடந்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றி மிகத் தீவிரமாக நண்பர்கள் குழுவோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான்.
 
 
அதைக் கண்டு முகமும் மனமும் சுருங்க, தன் பார்வையைத் திருப்பிக் கொண்டவளுக்கு அழுகை வரும் போல இருந்தது. கலங்கிய கண்களை வெகு சிரமப்பட்டுக் கட்டுக்குள் கொண்டு வந்தவள் ‘சுபகாரியம் நிகழும் நேரத்தில் கண் கலங்குவது சரி இல்லை’ எனப் புரிந்து முயன்று தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தாள்.
 
 
திருமண வேலைகளைக் கவனிப்பது, பாயல்லை தயார் செய்வது, யாராவது ஏதாவது கேட்டால் ஓடிச் சென்று எடுத்து தருவது என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பிஸியாக இருந்ததால் மிருவின் இந்த அமைதியை அவர்கள் கவனிக்கத் தவறினார்கள்.
 
 
முகூர்த்த நேரம் நெருங்க, அழகிய பட்டு வேஷ்டி பட்டுச் சட்டை அணிந்து கம்பீரமாக அழகிய ரோஜா மாலையோடு புன்னகை முகமாக உதய் வந்து நிற்கவும், அவனின் பின்னோடு தயக்கமும் தடுமாற்றமும் சூழ, ஒரு சிறு படபடப்போடும் பயத்தோடும் சர்வாலங்கார பூஷிதையாக இல்லாமல் அழகிய வெண்பட்டு உடுத்தி கண்ணை உறுத்தாத அளவுக்கு மெல்லிய நகைகள் அணிந்து வந்தவளை இமை கூடச் சிமிட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தான் உதய்
 
 
இந்த மூன்று நாள் பழக்கமாகச் சுபி உதய்யோடு சென்று ஒட்டிக் கொள்ள... அவளை வாரி அணைத்து முத்தமிட்டபடியே தன் அருகில் வந்து நின்றவளை பார்வையாலேயே அவன் விழுங்கி கொண்டிருக்க, ஆனால் பாவம் அவளோ நிமிர்ந்து அவனைப் பார்க்க தயங்கிக் கொண்டே தலை கூட நிமிராமலேயே நின்று இருந்தாள்.
 
 
அதில் சற்று மனம் சுனங்கினாலும் அவளின் நிலை புரிந்து இருந்தவன் என்பதனால் இது போன்ற சிறு சிறு விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தினால் அது வாழ்க்கைக்கு உதவாது என்று அறிந்து அவளுக்காக அவளின் மனம் மாறும் அந்த நாளுக்காக முழுமனதாகக் காத்திருக்க எண்ணினான்.
 
 
அப்போது பண்டிதர் மாலைகளைக் கொண்டு வரவும், ரோஹித் உதய்யின் கைகளில் இருந்த சுபியை வாங்கிக் கொண்டான். மாலைகளைத் தன் கைகளில் வாங்கிக் கொண்ட உதய் மனமெங்கும் சந்தோஷத்தோடும் பூரிப்போடும் பாயல் தயக்கத்தோடும் தடுமாற்றத்தோடும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ள முயலுகையில்...
 
 
“தம்பி உதய்... சீனியர் நான் இருக்கும் போது ஜூனியர் உனக்கு என்ன அவ்வளவு அவசரம்...? தோடி தேர் கேலியே, தைரியே ரக்கே பாய்...” (கொஞ்ச நேரம் காத்திரு தம்பி) என்று அபய்யின் குரல் இடையிட்டது.
 
 
அதில் விலங்கா பார்வையோடு அனைவரின் விழிகளும் அபய் பக்கம் திரும்ப... அதே நேரம் தன் கையில் இருந்த மாலையை மிருவின் கழுத்தில் அணிவித்துக் கொண்டிருந்தான் அபய். அவளும் அடுத்து அதே போல அணிவிக்க... என்ன நடக்கிறது எனப் புரியாமல் சுற்றியிருந்தவர்கள் அனைவரும் திகைத்து விழித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்து பண்டிதர் கொடுத்த மாங்கல்யத்தை வாங்கி மிருவின் கழுத்தில் கட்டியிருந்தான் அபய்.
 
 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவளும் எந்த ஒரு தடையும் சொல்லாமல் அமைதியாக அதற்கு உடன்பட்டு நின்றது தான். இதை நம்பியும் நம்பமுடியாமலும் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவருக்குமே உள்ளம் எங்கும் சந்தோஷம் ஊற்றெடுத்தது.
 
 
நம்பமுடியாத ஆனந்த அதிர்ச்சியில் விழி விரிய உறைந்து போய் நின்றிருந்தவர்களின் பக்கம் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பி பார்த்தவன், “இது தான் அழகுல மயங்கி பார்க்கிறதா...?! அடுத்து இன்னொரு ஜோடி வெயிட்டிங், இப்படியே நீங்க எங்களைச் சைட் அடிச்சுகிட்டே இருந்தா, தம்பி உதய் கடுப்பாகிடுவான்...” என்று சிறு கேலி குரலில் கூறினான்.
 
 
புன்னகையும் சிரிப்புமாக அனைவரின் கவனமும் உதய்யின் பக்கம் திரும்பியது. அடுத்து பண்டிதரிடமிருந்து மாங்கல்யத்தை வாங்கி முன்பு இருந்ததை விடப் பல மடங்கு நிம்மதியோடும் சந்தோஷத்தோடும் தன் மனதிற்கினியவளை மணம் முடித்துக் கொண்டான் உதய்.
 
 
அங்கிருந்த யாராலுமே நடப்பவற்றை நம்ப முடியவில்லை தான். ஆனால் கண் முன்னால் நடந்து கொண்டிருப்பது நிஜம் என்பதும் புரிய, ‘இது எப்படிச் சாத்தியம்...?’ என்ற கேள்வி மட்டும் அனைவரின் மனதிற்குள்ளும் எழுந்தது.
 
 
இருவரின் மனதிலும் ஒருவர் மேல் மற்றவருக்கு அளவில்லாத நேசம் இருப்பது ஐயத்திற்கு இடமில்லாத உண்மை என்று அறிந்திருந்த போதும் அதை அபய் வெளிப்படையாகப் பலமுறை காண்பித்து இவர்கள் கண்டிருந்த போதும் மிரு ஒரு போதும் அதை வெளிப்படுத்தக் கூடாது என்பதில் முனைப்போடு மறைத்ததையும் அறிந்தே இருந்தவர்கள் என்பதனால் ‘இப்படி அமைதியாக அபய்யே மணம் முடிக்க மிரு சம்மதிக்கும் அளவிற்கு அப்படி ஒரே நாளில் என்ன நடந்திருக்கும்...?!’ என்பது அங்கிருந்தவர்களின் மனதை அறித்துக் கொண்டிருந்தது.
 
 
அவர்களைத் தனியே விட்டுவிட்டு வந்ததும் நன்மைக்கே என்று என்ன தொடங்கினார்கள் அனைவரும். ஏனெனில் மிருவின் பிடிவாத குணம் அவர்களுக்கு வெகு பரிச்சயம்... அவள் அனுமதி இல்லாமல் அவளிடம் இருந்து ஒரு வார்த்தையைக் கூட வாங்க முடியாது.
 
 
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சற்று வயதான தம்பதிகளிடம் பாயலை அழைத்துச் சென்ற உதய் “அப்பா... அம்மா... ஆசிர்வாதம் வாங்கிக்கோ..” என்று கூறி பாதத்தைத் தொட குனியவும், இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவள் அதிர்ச்சியோடு உதய்யை பார்க்கும் போதே அவன் குனிந்துவிட, சற்றும் தாமதிக்காமல் அவளும் குனிந்து ஆசி பெற்றாள்.
 
 
அவர்கள் இருவரும் மனதார மணமக்களை ஆசீர்வதித்தனர். பின்னர் உதய்யின் தாய் சாந்தலட்சுமி பாயல்லை அன்போடு அணைத்துக் கொண்டு எப்பவும் சந்தோஷமாய் இரு மா...” என்று கூற,
 
 
அதுவரை உதய்யின் பெற்றோர்களைப் பற்றி எல்லாம் எதுவும் அறிந்திராதவள் திடீரென உதய் அவர்களை அறிமுகப்படுத்தியதும் முதலில் அதிர்ந்து நின்றாலும் சில நொடிகளிலேயே தன் நிலையைப் பற்றி எண்ணி அதிலேயே உழன்று கொண்டு அவனின் குடும்பத்தைப் பற்றிக் கூட யோசிக்கவோ கேட்கவோ தோணாமல் இருந்து விட்டதை, எண்ணி தனக்குள் குன்றியவள், தன்னைப் பற்றி இவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் என்ற எண்ணம் தோன்றவும்,
 
 
‘தன்னை ஒரு குழந்தையோடு எப்படி ஏற்றுக் கொள்வார்கள்...? அவர்களின் அணுகுமுறை எப்படி இருக்கும்...?’ என அந்தச் சில நொடிகளிலேயே பயந்து தவித்துப் போனாள். ஆனால் அதற்கெல்லாம் எந்த ஒரு அவசியம் இல்லை என்பது போல் இருந்தது அவர்களின் அன்பும் அனுசரணையுமான அந்த அணுகுமுறை.
 
 
உதய்யின் தாயுடைய செயலில் நிஜமாகவே மனம் நெகிழ்ந்து கண்கள் கலங்கியது பாயலுக்கு, அதைப் போல ஆறுதலாக அவள் கைகளைத் தன் கைகளோடு கோர்த்து அதில் இறுக்கத்தைக் கூட்டி ‘எதற்கும் கவலைப்படாதே நான் இருக்கிறேன்’ என்பது போல அவர் அழுத்திக் கொடுத்ததிலேயே ‘இது அன்பால் உருவான குடும்பம்’ என்று புரிந்ததும் சற்று மனதளவில் தெளிய தொடங்கினாள் பாயல்.
 
 
அடுத்து சாந்தலட்சுமியின் பார்வை மிருவின் பக்கம் திரும்ப, அபய் ஒரு புன்னகையோடு அவர்களை நோக்கி நகரத் தொடங்கிய நொடி அவன் கரங்களோடு தன் கரங்களைக் கோர்த்து பிடித்த மிரு, அங்கிருந்து அவனை அழைத்துக் கொண்டு நகரத் தொடங்கினாள்.
 
 
“மினி” எனச் சற்று மெல்லிய குரலில் அழுத்தத்தைக் கூட்டி கண்டிக்கும் படி அபய் அழைத்ததில் பார்வையை மட்டும் திருப்பி அவனைப் பார்த்தவள், “என்ன...? இப்போ என்ன சொல்லி மிரட்டி பணிய வைக்கப் போற...? இனி எதுவும் வேலைக்கு ஆகாது... உனக்கு உன் பொண்டாட்டி வேணும்னா என் கூட வா...” என்று அவளும் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறிவிட்டு அவனை இழுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 21
 
அபய்யை அழைத்துக் கொண்டு இல்லை... இல்லை... இழுத்துக் கொண்டு செல்லும் மிருவையே விழிகளில் இருந்து வழிய முயன்ற கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்த சாந்தலட்சுமியின் முகத்தில் அத்தனை வேதனை படர்ந்து இருந்தது.
 
 
அவருக்குக் கொஞ்சமும் குறையாத வகையில் அவர் அருகில் நின்றிருந்த மிருவின் தந்தை கதிரேசன் முகத்திலும் துக்கமும் வேதனையும் அப்பட்டமாகத் தெரிந்தது.
 
 
இத்தனை வருடங்களாகச் செல்ல மகளைப் பிரிந்து அவர்கள் படும் வேதனை அவர்கள் மட்டுமே அறிந்தது. ஆரம்பக் காலத்தில் எத்தனையோ முறை அவளைச் சமாதானப்படுத்த முயன்றவர்கள் அது முடியாமல் தொடர்ந்து தோற்றுக் கொண்டே போக, அவ்வப்போது வந்து அவளைப் பார்த்து அவளுக்குத் தேவையானதை செய்ய முயன்ற போது மிரு விடுத்த எச்சரிக்கையே அவர்களைப் பயத்தோடு தள்ளி நிற்க வைத்தது.
 
 
அவளின் பிடிவாத குணத்தைப் பற்றி அறிந்து இருந்தவர்கள் என்பதனால் எங்கே அவள் சொன்னது போல ‘கண் காணாத இடத்திற்குச் சென்று விடுவாளோ...?!!’ என்ற பயம் மனதை அழுத்த, அருகில் இல்லையென்றாலும் தொலைவில் நின்றாவது மகளின் நலனை அறிந்து கொள்ள முடிவு செய்து அவளிடம் இருந்து விலகியே இருந்தனர்.
 
 
ஆரம்பத்தில் இதே பயத்தில் தான் தள்ளி நின்ற உதய்யும் கூடத் தன் மேற்படிப்பை முடித்துக் கொண்டு வெளிநாட்டில் இருந்து சில வருடங்களுக்குப் பிறகு வந்த போது உடல்மொழியிலும் வார்த்தைகளிலும் இல்லாவிட்டாலும் மிருவின் கண்களில் தன் மேலான பாசத்தையும் தவிப்பையும் கண்டு கொண்ட நொடி, அவள் தன்னை மனதளவில் தேடி இருக்கிறாள் என்பது புரிய, எப்போதும் ப்ரச்சனையோ துக்கமோ வந்தால் தன் தோள் சாயத் தேடுபவள், இங்குத் தனிமையில் தவித்துக் கொண்டு இருப்பாள் மனதளவில் என்பது புரிய, இனி தன்னை எவ்வளவு திட்டினாலும் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்த பிறகே மிருவை அடிக்கடி காணச் சென்றான்.
 
 
அவனின் செல்ல தங்கை உதய்யின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் அவன் சென்ற ஒவ்வொரு முறையும் ‘ஏன் வந்தாய்?’ என்று கேட்டுக் கோபப்பட்டுச் சண்டையிட்டு சென்றாலும் அவள் கண்கள் காட்டும் பாச மொழி அந்த அன்பு அண்ணனுக்கு நன்கு புரியவே செய்தது.
 
 
சிறுவயதில் மொத்த குடும்பமே செல்லம் கொஞ்சினாலும் தன்னிடம் ஒரு சலுகையான பாசத்தை நாடி நிற்கும் அந்தக் குழந்தையாகவே இன்றும் அவன் கண்ணுக்கு தெரிந்த தங்கையைக் கண்டு மனம் நிறைந்தவன் அவளின் மேல் உள்ள பாசத்தினால் யார் முன்பு வேண்டுமானாலும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவளிடம் திட்டு வாங்க தயாராகவே இருந்தான்.
 
 
இதோ இன்றும் கூட மகனின் திருமணத்தை ஒரு சாக்காக வைத்து மகளை அருகிலிருந்து பார்க்கப் போகும் அந்த நிமிடத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த சாந்தலட்சுமியும் கதிரவனும் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் அன்று காலை அபய்யிடமிருந்து வந்த அலைபேசி அழைப்பு அவர்களைச் சந்தோஷத்தில் ஆழ்த்தியது.
 
 
இன்று மிருவை கோவிலில் வைத்து தான் மணந்து கொள்ள இருப்பதாக அபய் கூறிய நொடி, எப்படி உணர்கிறோம் என வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு உணர்வில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர் அந்தப் பெற்றோர்.
 
 
அந்த நிமிடம் அவர்கள் மனதில் இருந்ததெல்லாம் ‘இனிமேல் எல்லாம் சரியாகிவிடும், தங்கள் மகள் தங்களுக்குத் திரும்பக் கிடைத்து விடுவாள்... இனி அவளின் கோபம் எல்லாம் குறைந்து விடும்...’ என்று என்னென்னவோ ஆசைகளோடு இங்கு வந்து காத்திருந்தவர்கள் மிரு கோவிலின் உள்ளே நுழைந்த நொடி முதல் அவளையே ஆசையும் எதிர்பார்ப்புமாகப் பார்த்துக் கொண்டிருக்க...
 
 
ஆனால் அவளின் கவனம் முழுவதும் இப்படி இருவர் தனக்காகக் காத்துக் கொண்டு தவம் இருக்கிறார்கள் என்று கூட அறிய முடியாத நிலையில் இருந்தது.
 
 
மிருவின் மனம் முழுதும் அவள் மேலிருந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் தன்னைக் கண்டு கொள்ளாமல் இருந்தவனின் மேலேயே இருந்தது. இனி எல்லாம் சரியாகி தங்கள் மகள் மீண்டும் தங்களுக்குக் கிடைத்து விடுவாள் என்ற எதிர்பார்ப்போடு நன்றிருந்த அவளின் பெற்றோர்கள் திருமணம் முடியட்டும் என எண்ணி அமைதியாகக் காத்திருந்தனர்.
 
 
திருமணம் முடிந்த பிறகு மகளை நோக்கி அவர்கள் நகரத் தொடங்கிய நொடி தான் உதய் தன் மனைவியோடு ஆசீர்வாதத்திற்கு அவர்களை நெருங்கி இருந்தான். மகளை மட்டுமே எண்ணி மகனை விட்டுவிட முடியுமா என்ன...?! அவனையும் அவன் மனைவியையும் மனதார ஆசீர்வதித்தவர்கள் அடுத்து மகளிடம் பேச எண்ணியிருக்க... அவளோ, ‘இப்போதும் மனம் இறங்க நான் தயாராக இல்லை...’ என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டு தன் கணவனோடு வெளியேறி இருந்தாள்.
 
 
இதைக் கண்டு கலங்கி நின்று இருந்தவர்களை நெருங்கிய உதய், ஆதரவாக அவர்களின் தோளை அணைத்தபடியே “கவலைப்படாதீங்க மாம்... இனி எல்லாம் மாமா பாத்துக்குவார், இன்னைக்கு இங்கே இப்படி ஒரு திருமணம் நடக்கும்னு நாம யாரும் எதிர் பார்த்தோமா...? எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவளை இதுக்குச் சம்மதிக்க வைக்கத் தெரிந்த மாமாவுக்கு நிச்சயம் அவளை வழிக்குக் கொண்டு வரவும் தெரியும், நம்பிக்கையோட இருங்க...” என்று ஆறுதலான குரலில் எடுத்துக் கூறவும் அதில் இருந்த உண்மை புரிந்து ஆமோதித்தார்கள்.
 
 
அபய்யோடு வீடு வந்து சேர்ந்த மிரு, நேராக அபய்யின் வீட்டுக்குள்ளேயே தெரிந்தோ தெரியாமலேயோ நுழைந்தாள். அதுவரை அவளோடு அமைதியாக வந்தவன், வீட்டிற்குள் நுழைந்த நொடி “மினி நீ பண்றது கொஞ்சம் கூடச் சரியில்லை... இப்படித்தான் உன்னைப் பெத்தவங்களை அவமானப்படுத்திட்டு வருவியா...? கொஞ்சமாவது அவங்களோட நிலையிலிருந்து யோசிச்சு பார்த்தியா...?” என்று கோபமாகக் கேட்கவும்,
 
 
“நான் ஏன் அவங்களைப் பத்தி யோசிக்கணும்...? அவங்க அன்னைக்கு என்னைப் பத்தி யோசிச்சாங்களா...? இல்லையே...” என்று அதே கோபத்தோடு திரும்பப் பதிலளித்தவள், “இங்கே பாருங்க உங்களுக்குத் தேவைனா அவங்க கூடக் கொஞ்சி குலாவுங்க... ஆனா இனி என்கிட்ட அவங்களைப் பத்தி எதுவும் பேச வேண்டாம், பெரிய சமாதான புறாவா மாறி எங்களைச் சேர்த்து வைக்க எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம்... நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்...” எனப் படபடவெனப் பொரிந்து விட்டு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள்.
 
 
அவள் பேசி சென்ற பிறகும் அபய் மூடி இருந்த அறை வாயிலேயே சில நொடிகள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன் சோஃபாவில் தோய்ந்து அமர்ந்து தன் இரு கைகளால் தலையைத் தாங்கிக் பிடித்து யோசனையில் ஆழ்ந்தான்.
 
 
மினியின் பிடிவாத குணம் அவனுக்கு வெகு பரிச்சயமே...!! அவளைக் கட்டாயப்படுத்திக் கண்டிப்பாக எந்த ஒரு செயலையும் செய்ய வைக்க முடியாது, அப்படி இருக்கையில் அவளாக இந்த விஷயத்தில் மாறினால் தான் உண்டு என்பது புரிய ஒரு பெருமூச்சோடு எழுந்து தன் பணிகளைக் கவனிக்கத் தொடங்கினான்.
 
 
திருமணம் முடிந்த கையோடு கிளம்பி அபய்யோடு மிரு வீடு வந்து சேரவே நேரம் மதியத்தைக் கடந்து இருந்தது. இன்னும் நண்பர்கள் குழு இங்கு வந்து சேரவில்லை, இரண்டு நாட்கள் அங்கு இருப்பதாகத் தான் அவர்களின் திட்டம்.
 
 
அவ்வளவு ஏன் மிருவுமே அப்படித்தான் திட்டமிட்டிருந்தாள் நேற்று வரை, திருமணம் முடிந்த பிறகு அங்கேயே இருப்பதாக. ஆனால் இடையில் ஏதேதோ நிகழ்ந்து அபய்யோடு திருமணம் முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதன் விளைவாக இப்போது அபய்யோடு மிரு தனியாக அவள் மட்டும் இங்கு வர வேண்டிய சூழ்நிலை.
 
 
மாலை மங்கிய நேரத்தில் தன் வழமையான இரவு உடையான டிராக் பேண்ட் டீசர்ட்டிற்கு மாறி அபய்யின் படுக்கையறை பால்கனியில் இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தவளின் மனம் காலையில் அபய்யோடு நடந்த உரையாடலை அசை போட்டது.
 
 
*******
 
 
அபய் கோபத்தோடு தன்னை உதறித் தள்ளிவிட்டு செல்லவும், அவனின் உதாசீனம் மனதை வெகுவாகத் தாக்க... பொங்கி வந்த அழுகையை அங்கு வெளிக்காட்ட விரும்பாதவள் தன் வீட்டிற்குள் நுழைந்து குளியலறையில் கொட்டும் நீருக்கு அடியில் நின்று தன் கண்ணீரையும் அதோடு சேர்த்து கலக்க விட்டு தன் கண்ணீரை அந்தத் தண்ணீருக்கு கூடத் தெரியாமல் மறைக்க முயன்று கொண்டிருந்தாள்.
 
 
ஆனால் வெகு நேரம் அழுத போதும் கண்ணீர் நின்ற பாடாக இல்லை. தன் அழுகை நிற்கும் வரை தண்ணீருக்கு அடியிலேயே நின்றிருந்தவள், ஒருவாறாகத் தன்னைத் தேற்றிக் கொண்டு திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில் அவளின் வீட்டின் அழைப்பு மணி தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
 
 
அந்தப் பொறுமை இன்றி ஒலி எழுப்பிய விதமே கதவிற்கு அந்தப் பக்கம் நிற்பவன் யார் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூற, மீண்டும் அவனை எதிர் கொள்ள மனதில் வலிமை இன்றித் தவித்தவள், மறுபடியும் வெளிவரத் துடித்துக் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு அவனைத் தவிர்ப்பது இயலாத காரியம் என்பது புரிந்தாலும் தைரியத்தோடு எதிர் கொள்ள முடியாத சோர்வுடன் அபய் திருமணத்திற்குச் செல்ல தயாராகி விட்டு, தான் தயாரா எனப் பார்ப்பதற்காகத் தான் இப்படிப் பொறுமையின்றி அழைப்பு மணியை அழுத்துவதாக எண்ணியவள் இன்னும் சில நிமிடங்களில் தயார் ஆகி விடுவதாகக் கூறி சமாளித்து அபய்யை உடனடியாக இங்கிருந்து அனுப்பி விட நினைத்தவாறே சென்று கதவைத் திறக்க... அங்கு அவனோ காலையில் தன்னிடம் கோபப்பட்டு விட்டு எப்படிச் சென்றானோ இன்னும் அப்படியே நின்றிருந்தான்.
 
 
அதைக் கண்டு மிரு திகைத்து விழித்துக் கொண்டு இருக்கையிலேயே, அவளைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவன் “ஹே லுக், இன்னைக்கு அங்கே உதய்க்கு மட்டுமல்ல உனக்கும் எனக்கும் கூடக் கல்யாணம்...” என்று தீர்க்கமான குரலில் கூறவும், இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் அதிர்ந்து விழித்தவள் “என்ன விளையாடுறீங்களா...?’ எனத் தன் துக்கம் சோர்வு அழுகை என அனைத்தையும் மறந்து கோபத்தில் குரலெழுப்பினாள்.
 
 
“உன் கூட விளையாட்டு...?!’ என ஒரு இகழ்வான உதட்டு சுழிப்போடு ஒரு மாதிரியான குரலில் கேட்டவன் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு “எனக்குத் தேவையில்லாத கதையெல்லாம் பேச நேரமில்லை, இன்னும் கொஞ்ச நேரத்தில் நமக்குக் கல்யாணம் அவ்வளவு தான்... அதுக்குத் தகுந்தது போலத் தயாராகு...” என்று விட்டு தன் கையில் இருந்த பார்சலை அங்கிருந்த சோபாவில் வைத்து விட்டுத் திரும்பிச் செல்ல முயல,
 
 
“முடியாது” எனத் திட்டவட்டமாக உரைத்தவள் தன் கைகளை இறுக கட்டிக் கொண்டு நிமிர்ந்து நிற்க, தலையை மட்டும் திருப்பி அவளைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்தவன் ‘நான் உன்கிட்ட பர்மிஷன் கேட்டது போல எனக்கு ஞாபகம் இல்லையே... நான் சொன்னது ஜஸ்ட் அ இன்பர்மேஷன், அதுவும் அங்கு வந்து தேவையில்லாமல் நீ சீன் கிரியேட் பண்ணாமல் இருக்க மட்டும் தான்... நான் நினைத்தபடி இந்தக் கல்யாணம் நடந்தே தீரும் அட் எனி காஸ்ட்...” என்றான்.
 
 
“ஓ... இன்ஃபர்மேஷன்...” என அவனுக்குக் கொஞ்சமும் குறையாத நக்கல் குரலில் ஏற்ற இரக்கத்தோடு கேட்டவள், “நானும் தான் பார்க்கிறேன் இந்தக் கல்யாணம் எப்படி நடக்குது என்னுடைய பர்மிஷன் இல்லாமன்னு...” என்று திமிராகவே பதிலளித்தாள்.
 
 
ஒரு கிண்டல் புன்னகையோடு அவளை நோக்கி சரியாகத் திரும்பி நின்றவன் “நடக்கும் மிர்னாலினி மேடம், நிச்சயம் நடக்கும்... நீங்களும் பார்க்கத்தானே போறீங்க...” என்று விட்டு ஒரு சிறு இடைவெளி விட்டவன் “இந்தக் கல்யாணம் நடக்கலைனா, இன்னைக்கு அங்கே வேற எந்தக் கல்யாணமும் நடக்காது...” என்றதும் அவனை மிரு புரியா பார்வை பார்க்க... “இன்னும் புரியலையா...?!” எனப் போலியாகப் பரிதாபப்படுவது போலப் பேசியவன் “லெட் மீ எக்ஸ்பிளைன்... உங்க உயிர்த்தோழி பாயலின் கல்யாணமும் நடக்காது... இல்லை... இல்லை... நடக்க விடமாட்டேன், நிறுத்திடுவேன்...” என்றதும் அதிர்ந்து திகைத்தவள்
 
 
“என்ன விளையாடுறீங்களா...? இதுக்கும் பாயல் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கு...?” எனச் சண்டையிட துவங்கவும், “சம்பந்தம் தான் என் மச்சான் இருக்கானே, நான் சொன்னா அவன் கேட்பான்... இந்தக் கல்யாணம் நடக்காது...” என்று ரொம்பவே சாதாரணமாகவே கூறியவனை அசால்டாகப் பார்த்தவள் “ஓகே அப்படியே இருக்கட்டும், அதனால எனக்கு என்ன பிரச்சனை...?” என்று அவளும் அதே அசால்ட்டான குரலில் தோளை குலுக்கியபடி சொல்லி விட்டு திரும்பி நின்று கொண்டாள்.
 
 
“அது சரிதான் பிரச்சனை உங்களுக்கு இல்ல மேடம்... உங்க தோழிக்கு தான், அவங்க வாழ்க்கை இனி என்னாகும்னு யோசிச்சீங்களா...? இதுவரை அவங்களுக்கு இன்னொரு வாழ்க்கையைப் பற்றிய எண்ணம் கொஞ்சமும் இல்லை... இப்போ கூட மகளுக்காகத் தான் திருமணம் வரைக்கும் வந்து இருக்காங்க... மணமேடையில் திருமணம் நின்னு போனா அவங்க நிலை என்னாகும்...?! இனி அவங்க வாழ்க்கை என்னாகும்...?!” என ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவெளி விட்டு நிதானமான குரலில் கூறியவன்,
 
 
“ஆனால் இதைப்பற்றி எல்லாம் உங்களுக்கு என்ன கவலை...? உங்களுக்கு உங்க திமிரு முக்கியம், உங்க அகம்பாவம் முக்கியம், வேறு எதைப் பற்றியும் நீங்க தான் என்னைக்கும் கவலைப்பட்டது இல்லையே... உங்க பெத்தவங்க கூடப் பிறந்தவங்க பற்றியே கவலைப் படாதவங்க தோழியைப் பற்றியா யோசிக்கப் போறீங்க...?! நான்தான் தப்பு கணக்குப் போட்டுட்டேன் தாராளமா அவங்க கல்யாணத்தை நிறுத்திட்டு சந்தோஷமாயிருங்க மேடம்...” என்று அபய் பேசிய பிறகு தான் நிலைமையின் வீரியம் புரியத் துவங்கியது மிருவுக்குமே...!!
 
 
இதுவரை அபய் மேல் உள்ள கோபத்தில் மட்டுமே இந்த விஷயத்தைப் பார்த்தவளுக்கு இப்போதே பாயலும் அவளின் நிலையும் நினைவுக்கு வர, இங்கு உதய் பத்து வருடங்களாக அவள் மேல் காதல் கொண்டு இருப்பது அறியாத மிரு, ‘இன்று அவளுக்குத் திருமணம் ஆகவில்லை என்றால் நிச்சயம் இனி இன்னொரு வாழ்க்கைக்கு அவள் சம்மதிக்கப் போவதில்லை... அவளுக்கும் சுபிக்கும் அமையப் போகும் வளமான வாழ்க்கை தடைபடத் தானே காரணமாக அமைவதா...?!’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவளின் மனதில் ‘குழந்தை பிறந்த பிறகே ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு தன்னிலை மீண்டவள் அந்த நிமிடத்தில் இருந்து எப்படி நேரத்தை வீணாக்காது உழைக்கிறாள்... அதுவும் அதே குழந்தையின் அருகாமையைக் கூட ரசிக்க முடியாத வகையில்...’ என்பதெல்லாம் நினைவு வர,
 
 
அவளின் யோசனையான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன், “ஒரே ஆப்ஷன்... நடந்தா இரண்டு கல்யாணமும் நடக்கணும் இல்ல, இரண்டு கல்யாணமும் நடக்காது... அதே போல அங்கு வந்து தேவையில்லாத டிராமா எதுவும் கல்யாணத்தின் போது செய்ய ஐடியா வெச்சு இருந்தா...! அதை இங்கேயே இப்பவே டிராப் செஞ்சுடுங்க மேடம், இதனால் பாதிக்கப்படப் போவது உங்க உயிர் தோழியோட வாழ்க்கை மட்டும் தான்...” என்று அவளைப் பற்றி நன்கு அறிந்து இருந்தவன் என்ற முறையில் கூறிவிட்டு கதவை அடித்துச் சாத்திவிட்டு வெளியேறி விட்டான் அபய்.
 
 
மிருவோ செய்வதறியாது திகைத்து வெகுநேரம் அமர்ந்து இருந்தவளின் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தாலும் பாயல் மற்றும் சுபியின் வாழ்க்கை என்று வரும் போது அவர்களை முன்னிறுத்தி யோசித்தவள் சட்டென அபய்யை திருமணம் செய்து கொள்வது என்ற முடிவை எடுத்து அதற்குத் தயாராகச் சென்றாள்.
 
 
மிருவின் குணத்திற்கு இப்படி எதையோ யாரையோ காண்பித்து எல்லாம் மிரட்டி அவ்வளவு எளிதாக அவளைப் பணிய வைத்து விட முடியுமா என்ன...!? பாயலையும் சுபியையும் மட்டுமே மனதில் வைத்து இந்த முடிவை எடுத்தாளோ இல்லை வேறு எதை மனதில் கொண்டு மிரு இந்த முடிவுக்கு வந்தாளோ அது அவளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.,,!!
 
 
மிரு இங்கு இவற்றையெல்லாம் சிந்தித்துக் கொண்டு அமர்ந்திருக்க... அங்கோ இதற்கு நேர்மாறாகக் காட்சி இருந்தது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரோடு சேர்ந்து அழகும் அமைதியும் ஆசீர்வாதமாகக் கழிந்தது உதய் மற்றும் பாயலின் அன்றைய நாள். அனைவருக்குமே மிருவும் அபய்யும் கூட இல்லையே என்ற குறை ஒன்று மட்டுமே இருந்ததே தவிர மற்றபடி மனநிறைவோடு சந்தோஷத்தில் இருந்தனர்.
 
 
இப்படியே அன்றைய நாள் முழுவதும் தனிமையோடும் தன் மன எண்ணங்களோடு போராடிக் கொண்டும் ஏதேதோ யோசனைகளில் உழன்று கொண்டிருந்த மிருவுக்குத் தான் எதிலோ தோற்றுவிட்ட ஒரு உணர்வு மனதை வெகுவாக அழுத்தி அவளை வேதனை கொள்ளச் செய்து கொண்டிருந்தது.
 
 
ஒருவேளை நண்பர்களோ குழந்தையோ இருந்திருந்தால் அவர்களிடம் பேசி மனதை வேறு எதிலாவது திசை திருப்பி இருப்பாளோ என்னவோ...?! அப்படி ஏதும் இல்லாமல் போக, தன்னை வேறு எந்த முடிவையும் எடுக்க முடியாத வகையில் கார்னர் செய்து அபய் திருமணம் செய்து கொண்டதாக எண்ணி அவன் மீது கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்தவளுக்கு இத்தனை வருடங்களில் நடந்து முடிந்த எதற்கும் அபய் இதுவரை அவளிடம் விளக்கமோ மன்னிப்போ கேட்காமல் இருப்பது வேறு மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்ய... அவன் விருப்பதிற்குத் தன்னை அபய் ஆட்டு வித்ததாக நினைத்தவள், இறுதியில் அவனிடம் தான் படு மோசமாகத் தோற்று விட்டதாகவே எண்ணினாள்.
 
 
இப்படி அன்று காலையிலிருந்து நடந்த ஒவ்வொன்றையும் யோசித்து அபய்யையே அதற்குக் குற்றம் சாட்டிக் கொண்டு மனதை குழப்பிக் கொண்டிருந்தவளுக்கு அதற்கான மொத்த கோபமும் அபய்யின் மேல் திரும்பிய நொடி இதைப் பற்றி எல்லாம் ஏதும் தெரியாமல் அப்போதே வீட்டுக்குத் திரும்பியிருந்த அபய் அந்த அறைக்குள் நுழைந்தான்.
 
 
மிரு அவ்வளவு நேரமும் இருந்தது அவனின் படுக்கையறை, படுக்கையில் தலையணையை முதுகுக்குக் கொடுத்து சாய்ந்து அமர்ந்தபடி ஏதேதோ சிந்தனைகளில் அவனின் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டு தன் கைவிரல்களை இப்படியும் அப்படியுமாக மடக்கி நிமிர்த்திப் பார்த்தபடியே அமர்ந்து கொண்டிருந்தவள், அறைக்குள் அப்போதே நுழைந்த அபய்யை கோபமாக முறைக்கவும்,
 
 
அபய் இருந்த களைப்பில் இதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூடக் கவனிக்காமல், நேராக உடைமாற்றும் அறைக்குள் நுழைந்து உடையை மாற்றிக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தான்.
 
 
அவனையே கோபமாக முறைத்துக் கொண்டு இருந்தவள் கொஞ்சம் கூடத் தன்னைக் கண்டு கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பவனைக் கண்டதும் மேலும் ஆத்திரம் அதிகரிக்க... எப்போது அதை அவனின் மேல் கூட்டி கவிழ்ப்பது என்பது போலக் காத்திருக்கத் தொடங்கினாள்.
 
 
ஆனால் இதை எதையும் அறியாத அபய் குளியலறையில் இருந்து வெளிப்பட்டுப் படுக்கையை நோக்கி வரவும், “வாங்க சார்... வாங்க, எந்த உரிமையும் இல்லாத போதே நேத்து என்கிட்ட உரிமை எடுத்துகிட்ட நீங்க இதோ இன்னைக்கு இதை என் கழுத்தில் கட்டின பிறகு எப்படிச் சும்மா இருப்பீங்க...” என்று அவனை நோக்கி கேலியும் கிண்டலுமாக வார்த்தைகளை உதிர்த்து தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த புத்தம்புது மாங்கல்யத்தைத் தூக்கி காண்பித்து அலட்சியமாக விசிறவும், அவள் விசிறிய வேகத்தில் அது அவள் கழுத்திலேயே பென்டுலம் போல இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது.
 
 
அவளையே அதுவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அபய், அவளின் செய்கையில் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த மாங்கல்யத்தின் மீது ஓர் உணர்வில்லா பார்வையைப் பதித்தவன் படுக்கைக்கு அருகில் இருந்த மேசை மேலே இருந்த தன் மடிகணினியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர முயன்ற நொடி, அபய் தனக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் செல்லவும் அவன் தன்னை வெகுவாக அவமானப்படுத்தி விட்டதாக நினைத்த மிரு “என்ன நான் உண்மையைக் கண்டுபிடிச்சுட்டேன்னு ரொம்ப நல்லவன் மாதிரி நடிக்கறியா...?” என்று மீண்டும் சீண்டலாக வார்த்தைகளை விட,
 
 
அவளுக்கு எதிர்பக்கம் இருந்த சோபாவில் தன் மடிக்கணினியை திறந்து மடியில் வைத்து படி அமர்ந்து கொண்டவன், ஒரு சிறு புன்னகையோடு “நடிச்சு...?” எனத் தன் புருவத்தை அழகாக உயர்த்தவும், இப்போது என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் தடுமாறி நிற்பது மிருவின் முறையானது.
 
 
தன் தடுமாற்றத்தை அவனுக்குக் காண்பிக்காமல் சட்டென மறைத்தவள், “நேற்று போல உன் காரியத்தைச் சாதிக்கப் பார்ப்ப...” என்று அவன் மீது குற்றம் சுமத்திவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
 
 
“ஹா ஹா ஹா...” என வாய்விட்டு சிரித்தபடி அங்கிருந்து எழுந்து மிருவை நோக்கி வந்தவன் “அதுக்கு நான் ஏன் நடிக்கணும்னு பேபி... அதுக்குக் கொஞ்சமும் அவசியமில்லைனு நினைக்கிறேன்...” என்றவாறே அவளை நெருங்கினான்.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவள் அவனை நெருங்கவிடாமல் இரண்டடி பின்னால் வைக்க முயன்று அங்கு அதற்கு வாய்ப்பில்லாமல் படுக்கை இருக்கவே அதன் மேலேயே சாய... அவள் மேல் அ[ப்படியே சாய்வது போல இரண்டு பக்கமும் கைகளை ஊன்றி குனிந்தவன் “நான் நடித்துத் தான் காரியம் சாதித்து ஆகணுமா என்ன...?” என்று கேட்டபடி அவளைப் பார்வையாலேயே வருட,
 
 
அந்தப் பார்வையும் அபய்யின் இந்த அருகாமையும் மனதிற்குள் ஏற்படுத்திய படபடப்பை வெளியில் காட்டாமல் மறைத்தவள் ஓர் கோபத்தோடு அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு எழுந்து நின்றவாறே “ச்சீ... இவ்வளவு கேவலமா இருப்பீங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை...” என்று சீறினாள்.
 
 
“கேவலமா...?! எது பொண்டாட்டியை ரசிக்கிறதா...?! இல்ல பொண்டாட்டிகிட்ட உரிமை எடுத்துக்கறதா...? இல்ல நெருங்கிவரதேவா...?” என்று எனக்குப் புரியாததை நீயே புரியவை என்பது போல வியப்பாக முகபாவனையைக் காட்டியபடியே அபய் கேட்கவும்,
 
 
மீண்டும் தன் வார்த்தைகளைக் கொண்டே தன்னைச் சீண்டி கொண்டிருந்தவனைக் கண்டு ஆத்திரம் அதிகரிக்க, மேலும் மேலும் அவனிடம் தான் தோற்றுக் கொண்டே போவது போல் எழுந்த எண்ணத்தோடு “செஞ்ச தப்பை எல்லாம் மறைச்சுட்டு எதுவுமே நடக்காதது போல் எப்படி உங்களால இவ்வளவு அழகா நடிக்க முடியுது... ஏதோ நீங்க எனக்கு வாழ்கை கொடுத்தது போல எல்லார் முன்னேயும் என்ன ஒரு நடிப்பு... தப்பு எல்லாம் உங்க மேலே, செஞ்ச தப்பை மறைக்க நீங்க போட்ட நாடகத்தை மத்தவங்களும் நம்பி ஏமாந்துட்டு இருக்காங்க...” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.
 
 
“தப்பா...? எதை நீ தப்புன்னு சொல்றேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...?” என்று மிரு எதைப் பற்றிப் பேசுகிறாள் எனத் தெரிந்தே, அவள் கண்களையே கூர்மையாகப் பார்த்தபடி கேட்டவனுக்குக் கொஞ்சமும் அவன் எண்ணத்தைப் பொய்யாக்காமல் பதிலளித்தாள் மிரு.
 
 
“எந்த உரிமையில் நேற்று என்கிட்ட அப்படி நடந்துகிட்டீங்க... நான் தான் சுயநினைவில் இல்லை, ஆனா நீங்க அப்படி இல்லையே... நீங்க நினைச்சு இருந்தா அதைத் தவிர்த்து இருக்கலாமே.... கொஞ்சமும் உறுத்தலே இல்லாம என்கிட்ட உரிமை எடுத்து இருக்கீங்களே வெக்கமா இல்லையா உங்களுக்கு...” என்று அவன் மேல் குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காகவே தான் பேசுவது சரி இல்லை என்று தெரிந்தாலும் பேசி கொண்டே சென்றாள் மிரு.
 
 
“எந்த உரிமையில்...?!” என்று அவள் கேட்டதையே ஒரு பொருள் விளங்கா பாவனையில் கூறியபடியே உதட்டை பிதுக்கியவன், “இதோ இப்போ கொஞ்சம் முன்னே நீ பிடித்து ஆட்டி காட்டினீயே இதை உன் கழுத்தில் கட்டபோறேன் என்ற உரிமையில் நிச்சயமா இல்லை...” என்றவன்,
 
 
மிரு சற்றும் எதிர்பாராத நேரத்தில் உரிமையோடு அவளின் கழுத்தில் கை பதித்து எப்போதும் அவள் கழுத்தோடு அணிந்து இருக்கும் அந்த மெல்லிய லாங் செயினை வெளியில் எடுத்தவன், அதன் நுனியில் மற்றவருக்குத் தெரியாமல் பத்திரமாகப் பதுங்கி இருந்த மாங்கல்யத்தைச் சுட்டி காட்டி, “இதோ இதை உன் கழுத்தில் கட்டியவன் என்ற உரிமையில், பத்து வருஷம் ஆகியும் இன்னும் இது உன் கழுத்தில் இருக்குன்ற உரிமையில், இதுக்குச் சொந்தக்காரன் நான் என்ற உரிமையில், இதுக்கு நீ கொடுக்கும் மரியாதை கண்ணால் பார்த்தவன் என்ற உரிமையில்... இதுகெல்லாம் மேலே நீ என் பொண்டாட்டி என்ற உரிமையில், எனக்கு உன்னிடமும் உனக்கு என்னிடமும் மட்டுமே தோன்ற கூடிய உணர்வுகளை வெளிபடுத்த கொஞ்சமும் தயங்கவோ யோசிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை என்ற உரிமையில்...” என்று வரிசையாக அடுக்கிக் கொண்டே செல்ல... தன் இத்தனை வருட குட்டு வெளிப்பட்ட அதிர்ச்சியில் திகைத்து நின்றிருந்தாள் மிரு.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 22
 
கோபமாக மிருவிடம் தன் உரிமைகளின் அளவையும் அதன் பட்டியலையும் கொடுத்துக் கொண்டிருந்தவன், “நான் உன்கிட்ட உரிமை எடுத்துக்கக் காரணம் நீ சொன்னது போல வீக் மொமெண்ட் இல்லை... எனக்கான உரிமைய தான் நான் எடுத்துக்கிட்டேன், அது போல தான் நீ என்கிட்ட அன்னைக்கு அப்படி நடந்துக்கவும், அவ்வளவு உரிமை எடுத்துக்கவும் கூட அதான் காரணம்... நீ சொன்னது போல வீக் மொமென்ட் இல்லை... நாம பிரிஞ்சு இருந்த இந்தப் பத்து வருஷத்தில் இப்படிப்பட்ட சமயம் சந்தர்ப்பம் நமக்கு அமையாமலா இருந்து இருக்கும்... அப்போ எல்லாம் வராத வீக் மொமென்ட் நமக்குள்ள மட்டும் தான் நடக்குமா என்ன...?! நிச்சயமாக இல்லை, இதுக்கெல்லாம் காரணம் நான் சொன்ன அதே உரிமை தான், நமக்கு மட்டுமே சொந்தமான உரிமை...” என்றவனைப் பார்த்து அலட்சியமாக ஏதோ சொல்ல மிரு வாயைத் திறக்கவும்,
 
 
“என்ன இன்னும் இல்லைன்னு சொல்லி மறுக்கப் போறியா...? எங்க என் கண்ணைப் பார்த்து சொல்லு, அந்த மது மயக்கத்திலும் நீ உன்னை மறந்து இருந்த நிலையிலும் இந்த அளவுக்கு நெருக்கமா உன்னால வேற யார் கூடவாவது இருக்க முடியுமா...? இல்ல வேற யாரையாவது நெருங்க தான் விட்டு இருப்பீயா...?” என்று அழுத்தமாக அவள் கண்களையே பார்த்துக் கொண்டு அபய் கேள்வி கேட்டான்.
 
 
அதற்கு நேரிடையாகப் பதில் அளிக்க முடியாமல் திணறியவள், இப்படி அபய் தன் வார்த்தைகளைக் கொண்டே தன்னை மடக்குவதையும் கேள்வி கேட்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்தக் கோபத்தையும் அவன் மேலேயே காண்பிக்கத் தொடங்கினாள்.
 
 
“ஆமாம் உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நியாயம், தர்மம், நேர்மை தானே... நீங்கள் எப்போவாவது வாழ்க்கையில் தப்பு செஞ்சிருக்கீங்களா...?! இல்லையே, தப்புனா என்னன்னு கூட உங்களுக்குத் தான் தெரியாதே...?!” என்று ஏற்ற இறக்கத்தோடு அவனைப் பார்த்து கண்களிலும் முகத்திலும் கிண்டலோடான பாவனையோடு மிரு பேசிக் கொண்டே சென்றாள்.
 
 
“நான் அப்படிச் சொல்லலை... நான் செஞ்சது தப்பு தான்... அதைச் சரி செய்யத் தான் முயற்சி செஞ்சுகிட்டு இருக்கேன்... அது உனக்குப் புரியலையா...?” என்று ஆற்றாமையோடு கேட்டான் அவன்.
அதில் அவளுக்கு மேலும் கோபமும் அழுகையும் முட்டிக் கொண்டு வர, தன்னைக் கட்டுப்படுத்த போராடியவாறே கிண்டலான குரலில், “தெரியாம செஞ்ச தப்பை தான் சரி பண்ண முடியும்.. ஆனா நீங்க தான் தெரிஞ்சே செஞ்சிங்களே... அதை எப்படிச் சரி செய்யப் போறீங்க...” என்றாள் அழுகையை வெகு சிரமப்பட்டுக் கட்டுப் படுத்திக் கொண்ட குரலில்.
 
 
“முடிஞ்சு போனதை என்னால் மாற்ற முடியாது மினி... ஆனால் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்து பாரு, எல்லாத்தையும் சரி பண்றேன்…” என வெகு தன்மையான குரலில் கூறியபடியே மிருவின் கன்னங்களைத் தன் கைகளில் தாங்க முயன்றவனின் கையைத் தட்டி விட்டு தள்ளி நின்றாள் மிரு.
 
 
“என்ன சரி பண்ண போறீங்க, உங்களுக்குப் புரியலையா இல்லை புரிஞ்சுக்க நீங்க தயாரா இல்லையா...?!” எனக் கோபமாகவே கேட்டவள் அபய்யின் குழப்பமான முகத்தைக் கண்டு “இன்னும் உனக்குப் புரியலை இல்லை... ஏன் மாமூ இந்த விஷயத்தில் மட்டும் நீ இப்படி இருக்க...” என ஆற்றாமையோடு கேட்டவள், இனி என்னால் கட்டுப்படுத்த முடியாது என்பது போல் கண்களில் இருந்து கரகரவெனக் கண்ணீர் வழிய தன்னையும் மீறி அழுகையோடு பேசியவளை ‘நிஜமாகாவே அவள் என்ன சொல்ல வருகிறாள்...?’ எனப் புரியாமல் திகைத்து விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அபய்.
 
 
ஆனால் அதன் பிறகு மிருவிடம் இருந்து எந்த வார்த்தைகளும் வராமல் போக, அவள் தனக்குள்ளேயே போராடியபடி கண்ணீரை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருப்பதைக் கண்டவன் “மினி...” என அன்பு வழியும் குரலில் அழைத்து அவளின் முகவாய் பற்றி நிமிர்த்தி, “எனக்கு ஒரு சான்ஸ் குடுடா... நான் எல்லாத்தையும் சரி பண்ணிடறேன்...” என அவளுக்கு எப்படியாவது தன்னைப் புரிய வைத்து விட எண்ணி பேசவும், அவன் கைகளை ஒரு சலிப்போடு கூடிய முகப் பாவனையோடு தட்டிவிட்டவள் அங்கிருந்து நகர முயல, அவள் கைகளைப் பற்றி நிறுத்தினான் அபய்.
 
 
“என்ன தான் டி உன் பிரச்சனை, தெரியாம தப்புப் பண்ணிட்டேன்... நான் இல்லைன்னு சொல்லலையே, நானும் மனுஷன் தானே... தப்பு பண்ணாத மனுஷன் எங்கேயும் இருக்க முடியாதுடி... ஆனா அவன் பண்ணின தப்பை திருத்திக்க ஒரு சந்தர்ப்பம் கொடுக்கணும், கொடுத்துப் பார்த்தா தானே தெரியும், நான் ஒண்ணும் தப்பு செய்யலைன்னு சொல்லி தப்பிச்சுக்கப் பார்க்கலையே... அதைச் சரி செய்யத் தான் முயற்சி செஞ்சுட்டு இருக்கேன்...” என்று அத்தனை நேரம் இருந்த பொறுமை எல்லாம் காற்றில் பறக்க கோபமாகக் கேட்கவும்,
 
 
“நீங்க... நீங்கதான் மாமூ என் பிரச்சனை...” என்று அழுத்தம் திருத்தமாகப் பதிலளித்தாள்.
 
 
“மறுபடியும் மறுபடியும் தப்பை சரி செய்ய முயற்சி செய்யறேன்னு சொல்றீங்களே... எங்கே உங்க மனசை தொட்டு சொல்லுங்க, நீங்க செஞ்ச தப்பை உணர்ந்து என்னைத் தேடியா இங்கே வந்தீங்க... அப்படி எதுவும் இல்லையே, வந்த இடத்தில் எதிர்பாராமல் என்னைப் பார்த்த பிறகு தானே இப்போ என் வாழ்க்கையையே உங்க இஷ்டத்துக்கு வளைக்கப் பாக்கறீங்க... அதுக்கு முன்னே உங்க நினைவில் கூட நான் வரலை தானே... நீங்க வேண்டாம்னு தூக்கி போட்டுட்டு போறதுக்கும் வேணும்னா வந்து எடுத்து விளையாடவும் நானும் என் வாழ்கையும் உங்களுக்கு என்ன பொம்மையா...?” என்று அழுகையும் ஆற்றாமையுமமாகக் கேள்வி கேட்டவளுக்கு என்ன பதிலளிப்பது எனத் தெரியாமல் திகைத்து நின்றான் அபய்.
 
 
நிஜம் தானே அவன் அவளைத் தேடி இங்கு வரவில்லையே, வந்த இடத்தில் தானே இவை அனைத்தும் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் மினி சொன்னது போல அவள் நினைவு இல்லாமலோ அக்கறையற்றோ என்றுமே இருந்ததில்லை அபய். ஒவ்வொரு நாளும் ‘அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருப்பாளா...!?’ என்ற எண்ணம் தான் அவனை வெகுவாக அலைக்கழிக்கும்.
 
 
அப்போதெல்லாம் ‘அவளுக்கு என்ன குறை நிச்சயம் அவளுக்கு ஒரு நல் வாழ்க்கை அமைந்திருக்கும்’ என்று தன்னையே தேற்றிக் கொண்டு மனதை சமாதானப்படுத்திக் கொள்வான். ‘ஒரு நாளும் இப்படிப் பத்து வருடங்களாகத் தனிமையில் தவித்து இருப்பாள் தனக்காகக் காத்திருந்து இருப்பாள் என்று அவன் எண்ணியதில்லை. அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு இருந்திருந்தால் எப்போதோ அவளைத் தேடி ஓடி வந்திருப்பான். அன்று அவன் விலகிச் சென்றது கூட அவளுக்காகத் தானே, அவள் வாழ்க்கையை எண்ணி விலக நினைத்தவன் தனக்காக இன்னொரு வாழ்க்கையை அவள் தேடிக் கொள்ளவில்லை என்று தெரிந்திருந்தால் தேடி வந்து இருக்க மாட்டானா என்ன...?’
 
 
மிருவின் தன் மீதான கோபத்திற்கான காரணம் இதுவே என்று இப்போது தான் அவனுக்கே புரிந்தது. இதுவரை இப்படி ஒரு விதத்தில் அவன் யோசித்துப் பார்த்தது கூடக் கிடையாது. நிச்சயம் அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்திருக்கும் என்றே அவன் அவளைத் தேடி வரவில்லை என்று அவனுக்கு மட்டுமே தெரியும்... அவன் இத்தனை வருடங்களாக இந்தியா வராததற்கான காரணமும் அவளே தான் என்று...!
 
 
தன்னால் அவள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று நினைத்தே விலகி சென்றவனுக்கு அவளை வேறொரு வாழ்க்கையில் பொருத்தி மனதளவில் கற்பனை செய்து கூடப் பார்க்க இயன்றது இல்லை. எத்தனையோ முறை குழந்தை குடும்பம் என மிரு செட்டில் ஆகி இருப்பாள் என்ற எண்ணம் செல்லும் போதே அதை அதற்கு மேல் எண்ணத்தில் கூடத் தொடர முடியாமல் தவித்தவனுக்கு அப்போது அதற்கான காரணமும் அவன் மனமும் தெளிவாகப் புரியவில்லை.
 
 
என்னதான் அவள் வாழ்விற்காக என்று எண்ணி விலகிச் சென்று இருந்தாலும் சராசரி ஆண்மகனாக அவன் மனதில் அவள் தன்னவள் என ஆழ புதைத்து வைத்திருந்த எண்ணம் அவனுக்குப் பல வருடங்களாகத் தெரியாமலே போனது தான் இதில் சோகம். அந்த எண்ணங்கள் தான் அவனை இந்தியாவின் பக்கமே வர விடாமலும் செய்திருந்தது.
 
 
என்றாவது எங்காவது அவளைக் கணவனோடும் குழந்தையோடும் பார்க்க நேர்ந்தால் அதைத் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்ற ஆழ்மனதின் தாக்கமே அவனை இங்கு வர விடாமல் தடை செய்து இருந்தது என்பதை அவன் இங்கு வரும் வரை கூடப் புரிந்துக் கொள்ளவே இல்லை.
 
 
அவ்வளவு ஏன் இப்போதும் கூட ஒரு மிகப் பெரிய தொழில்முறை ஒப்பந்தத்தை முடிவு செய்து கொண்டு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே இந்தியா வர வேண்டிய நிலை ஏற்பட்ட போது கூடத் தன் தொழிலை தமிழ்நாட்டில் தொடங்கக் கூடாது என்பதற்காகவே மும்பையை அதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தான்.
 
 
தமிழ்நாட்டில் என்றால் என்றாவது மிருவை எங்காவது சந்திக்க நேரிடும் என்பதே அதன் காரணம் என்பதைக் கூட இப்போது இந்தியா வந்த பிறகு புரிந்துக் கொண்டவனுக்கு எப்படித் தெரியும் இவளின் இந்த எண்ணங்களைப் பற்றி...?!
 
 
கொஞ்சமும் எதிர்பாராமல் வந்த அன்றே மிருவை சந்தித்த அன்று அவளுக்கென்று ஒரு குடும்பம் அமைந்திருக்கிறது என்று ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மனது வலிக்கத்தானே செய்தது. அதன் வலியை அபய் உணர்வதற்கு முன்பே தன்னைக் கண்டு கொள்ளாமல் மிரு சென்றது அவனைச் சீண்டி விட, அவளைத் தன்னைக் கவனிக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே மிருவை விளையாட்டாக நெருங்கியதாக நினைத்துக் கொண்டு இருந்தவனுக்குப் பிறகே மிருவின் வாழ்கையைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ள நேர்ந்த பின்பே உண்மை புலப்பட்டது.
 
 
அதன் பிறகு இத்தனை நாள் தன் மனதை பிசைந்த குழப்பங்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகி செல்வதை உணர்ந்துக் கொண்டவனுக்குத் தன் மனதின் எண்ணங்கள் தெள்ளத் தெளிவானது.
 
 
தன் மனதை அறிந்து கொண்டவன் மினியின் மனம் என்னவென்று தெரியாமல் அடுத்த அடியை எடுத்து வைக்கச் சற்று தயங்கி கொண்டிருந்த வேளையில்தான் பத்து வருடங்களுக்கு முன் தான் அணிவித்த மாங்கல்யம் இன்னும் மினியின் கழுத்தில் இருப்பதை அபய் காண நேர்ந்தது.
 
 
எதிர்பாராமல் இதைக் காண நேர்ந்த போது இன்பமாக அதிர்ந்து அப்படியே உறைந்து நின்றுவிட்டவனின் இதயம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. தனக்காகவே தன்னவள் இத்தனை வருடங்களாகக் காத்திருப்பதைக் கண்டு எப்படி உணர்கிறோம் என்று தெரியாத ஒரு உணர்வில் தத்தளித்தவன் அவளோடான தன் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நொடியும் தாமதிக்காது இறங்கினான்.
 
 
ஆனால் இறங்கியதற்குப் பிறகே அது அத்தனை சாதாரணமானது இல்லை என அறிந்து கொண்டவன் அவளின் பிடிவாத குணம் அறிந்து அவளைச் சீண்டி வம்பிழுத்து தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டிருந்தான். இவற்றையெல்லாம் கூறி மினியை சமாதானப்படுத்த எண்ணி திரும்பியவன், அவள் தன் அருகில் இருந்த ஒற்றைச் சோஃபாவில் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்து இருப்பதைக் கண்டு உள்ளம் பதற, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் மிருவின் முகத்தைத் தன் இரு கரங்களில் தாங்கி பிடித்து உயர்த்தவும், தாங்க முடியாத வலியோடு அவளின் விழிகள் மேகமாய் மாறி மழையைப் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு துடிதுடித்துப் போனவன் “என்னடாஆஆ...?” என உயிரும் உள்ளமும் துடிக்கக் கேட்கவும்,
 
 
“உனக்கு ஏன் மாமூ என்னைப் பிடிக்கலை..” என்று துக்கமும் சுய பச்சாதாபமும் போட்டிப்போட பொங்கி வந்த அழுகையோடு கேட்டவளை கண்டு அவளுக்கு இணையாக அவனும் துடித்தவன்,
 
 
“உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும் லட்டு...? என்று கூற, “பொய் சொல்ற மாமூ... நீ பொய் சொல்ற, உனக்கு என்னைப் பிடிக்காது...” என்று மீண்டும் அவள் தன் கூற்றிலே உறுதியாக நின்று பேசினாள்.
“இல்லடா மா... நீனா எனக்கு உயிர்டா என் லட்டு குட்டி...” என்று எப்படியாவது அவளுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்பதற்காகவே குழந்தைக்குக் கூறுவது போன்ற குரலில் அவளிடம் அபய் பேசிக் கொண்டிருக்க,
 
 
அதுவரை அழுகையிலும் சுய பச்சாதாபத்திலும் உழன்று கொண்டிருந்தவள் சட்டென்று அபய்யின் சட்டையை எக்கி பிடித்து உலுக்கியவாறே “அப்போ ஏன் என்னை விட்டுட்டு போன...? ஏன் போன சொல்லு, பிடிச்சிருந்தா நீ போய் இருப்பியா...?! பிடிக்காததனால் தானே போனே...?” என்று கேட்டபடியே அழுகையில் வெடித்துச் சிதறியவள் அவன் மார்பிலேயே ஒன்றிக் கொள்ள... அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு, மெல்ல மிருவின் முதுகையும் தலையையும் ஆதரவாய் தடவிக் கொண்டிருந்தவனுக்கு அன்று சரியாகத் தோன்றிய தன் முடிவு இன்று எத்தனை தவறாகிப் போனது எனப் புரிந்தது.
 
 
ஆனால் அன்றும் கூட இதை மிருவையும் அவளின் வாழ்க்கையையும் மனதில் வைத்தே செய்தான் என்பதை எப்படிச் சொல்லி அவளுக்குப் புரிய வைப்பது என்று தான் அபய்க்கு தெரியவில்லை. அதைப்பற்றிப் பேசினால் புரிந்து கொள்ளக் கூடிய மனநிலையில் இப்போது அவள் இல்லை என்பது மட்டும் புரிய, இப்போது அவளைத் தேற்றுவதே முக்கியம் என்று உணர்ந்து, மெல்ல பின்பு பேசி அவளைத் தன் அன்றைய நிலையைப் புரிய வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தவனின் மனம் அன்றைய நாட்களுக்குப் பயணித்தது.
 
 
கோயம்புத்தூரை பூர்வீகமாகக் கொண்ட ஸ்ரீநிவாசன் பத்மாவதி தம்பதியருக்கு ஒரே மகள் சாந்தலட்சுமி. அந்த ஊரில் மிகப் பெரிய தனக்காரர்கள் குடும்பம் இவர்களுடையது. பத்மாவதி குடும்பத்தில் கடந்த ஐந்து தலைமுறைகளாக ஒரே ஒரு பெண் வாரிசு மட்டுமே பிறந்து கொண்டிருந்தது. அந்த வரிசையில் பத்மாவதிக்கும் சாந்தலட்சுமி ஒற்றை வாரிசாகி போனதில் அவர் செல்வ செழிப்போடு சேர்த்து ரொம்பவே செல்லமாகவும் வளர்க்கப்பட்டார்.
 
 
பூர்வீகம் கோயம்புத்தூராக இருந்த போதும் ஸ்ரீனிவாசன் சென்னையில் மிகப்பெரிய ஆடை நிறுவனம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்ததால் அவர்கள் வசிப்பிடம் சென்னை மற்றும் கோயம்பத்தூர் என்றாகிப் போனது. படிப்புத் தொழில் என்று இங்குச் சில மாதம் அங்குச் சில மாதம் என்று சென்று கொண்டு இருந்தது அவர்கள் வாழ்கை.
 
 
ஸ்ரீநிவாசன் பத்மாவதி இருவருமே அன்பும் அமைதியுமான மனிதர்கள், தங்களிடம் பணியில் இருப்பவர்களைக் கூட அதிகாரத்தின் மூலம் பணிய வைக்க முயல மாட்டார்கள், எப்போதும் அன்பே அவர்களின் வழி அவரது வாரிசான சாந்தலட்சுமியும் அப்படித்தான் வளர்ந்தார்.
 
 
இப்படிச் சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் சாந்தலட்சுமியின் பதினான்காவது வயதில் யாரும் எதிர்பாராத வகையில் பத்மாவதி மீண்டும் கருவுற்றார். ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகான இந்த இரண்டாவது வாரிசு தன் குடும்பத்துக்குக் கடவளின் வரமாக எண்ணி மகிழ்ந்தவர்கள், அந்தக் குழந்தையின் வரவை வெகு ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
 
 
பெற்றோர்கள் மட்டுமல்லாமல் சாந்தலட்சுமியும் கூட அளவுக்கதிகமான ஆசையும் எதிர்பார்ப்புமாகக் காத்திருக்க... அவர்களின் அத்தனை அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகவாக அபய் வரகுணன் பூமியில் அவதரித்து இருந்தான்.
 
 
ஐந்து தலைமுறைகளுக்குப் பிறகு பிறந்த இரண்டாவது வாரிசு என்பது அவர்கள் எதிர்பாராத ஒன்று என்றால் அதிலும் ஆண் வாரிசாக அமைந்து போனது ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது அனைவருக்கும்.
 
 
ஒருவர் மாற்றி ஒருவர் உள்ளங்கையில் வைத்து தாங்கி வளர்க்க தொடங்கினர். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா என அனைவரின் பாச மழையிலும் தழைத்து வளரத் தொடங்கி இருந்தான் அபய். அபய்யை பொறுத்தவரை சாந்தலட்சுமி அவனுக்கு மற்றுமொரு தாய் தான். அவருமே அப்படிக் கண்ணுக்குள் வைத்து தான் தம்பியை பார்த்துக் கொண்டு இருந்தார்.
 
 
இந்நிலையில்தான் சாந்தலக்ஷ்மிக்கு பதினெட்டு வயதாகும் போது ஸ்ரீனிவாசனின் அக்காள் மகனான கதிரவனுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அபய் வீட்டிலிருந்து சாந்தலட்சுமி திருமணம் முடிந்து குடி போன வீடு 15 நிமிட தூரத்தில் தான் இருந்தது.
 
 
அதனால் அக்காவின் பாசத்தில் வளர்ந்தவன் என்பதால் தினமும் அங்குதான் அதிக நேரத்தைக் கழிப்பான். அதிலும் ஸ்ரீனிவாசன் தொழில் காரணமாகச் சென்னையில் சிறிது நாட்கள் சொந்த ஊரில் சிறிது நாட்கள் எனக் கழிக்க வேண்டி வரும் போதெல்லாம் பத்மாவதியும் அவருடன் சென்று விடுவார், அப்போதெல்லாம் அபய் சாந்தலட்சுமி வீட்டிலேயே தங்கிக் கொள்வான்.
 
 
இந்நிலையில்தான் சாந்தலட்சுமிக்கு உதய் பிறந்தான். தன் அன்பு அக்காவின் மகன் என்பது மட்டுமல்லாமல் அவர் தன்னை எப்படிப் பார்த்துக் கொள்வாரோ அதே போல அபய்யும் உதய்யை பார்த்துக் கொள்ளத் தொடங்கினான். சொந்தத் தாய்மாமன் என்பதைக் கடந்து வயதிலும் நெருக்கத்திலும் அவர்களுக்குள் ஒரு பாசப் பிணைப்பு உருவாகி இருந்தது.
 
 
உதய்க்கு எதுவாக இருந்தாலும் அபய்யின் வழிகாட்டுதலும் உதவியும் வேண்டும், அனைத்திற்கும் அவனைத்தான் தேடுவான். உதய் பிறந்து மூன்று வருடங்களுக்குப் பிறகு பிறந்தவள் தான் ஒட்டு மொத்த குடும்பத்தின் செல்லப்பிள்ளை மிர்னாலினி.
 
 
துருதுரு கண்களும் குண்டு குண்டு கன்னங்களுமாய் அழகிய ரோஜா நிறத்தில் புசுபுசுவெனப் பிறந்திருந்தவளை பார்த்ததும் அபய்க்கு அவ்வளவு பிடித்துப் போனது. அவளைக் கொஞ்சம் கூடக் கீழே விடாமல் கைகளுக்குள்ளேயே பொத்தி வைத்துக் கொள்வான் அந்தப் பாசக்கார மாமன்.
 
 
அந்தப் புசுபுசு கன்னங்களுக்காகவே அபய் அவளுக்கு வைத்த பெயர் தான் லட்டு குட்டி. ஆசையாக அவன் அவளை அப்படித்தான் கூப்பிட்டுக் கொஞ்சுவான், ஒவ்வொரு முறையும் அவளை இறுக்கி அணைத்து அவளின் கன்னத்தில் தன் மூக்கை வைத்து அபய் உரசிக் கொஞ்சும் போது மிரு தன் பொக்கை வாய் மலர்ந்து சிரிப்பதை வெகுவாக ரசித்திருப்பான் அபய்.
 
 
உதய்யும் பிறந்ததில் இருந்தே மாமனின் பின்னால் சுற்றுவதும் மேலும் இவர்களின் கைகளிலேயே வளர்ந்ததனாலும் அவளுக்கு எப்போதும் அன்பிற்கும் பாசத்திற்கும் உதய் வேண்டுமென்றால் பாதுகாப்பிற்கும் சலுகைகளுக்கும் உரிமை கொண்டாடவும் அபய் வேண்டும். இப்படியே எந்த ப்ரேச்சனையோ இடையூறோ இன்றி அன்பும் பாசமும் கொஞ்சலும் குதூகலமுமாகச் சென்று கொண்டிருந்தது அவர்களின் வாழ்க்கை.
 
 
தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், மாமன் என அத்தனை பேரின் அன்பிலும் பாசத்திலும் வளர்ந்ததனாலேயோ என்னவோ மிருவிடம் சிறுவயதிலிருந்தே ஒரு பிடிவாத குணமும் பொசசிவ்னஸ்ஸும் அதிகமாக உண்டு. தன் பொருள் தனக்கு மட்டும்தான் என்பதில் ரொம்பவே குறியாக இருப்பாள் அதை மற்றவர் தொடுவது அல்ல பார்த்தால் கூட அவளுக்குப் பிடிக்காது.
 
 
மிரு ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது அபய் தான், கல்லூரி முடிந்து வீடு திரும்பும் வழியில் அவளை அழைத்துச் செல்ல வருவான். அப்போதெல்லாம் தன்னோடு படிக்கும் தோழிகள் அபய்யை பார்க்கவும் அவனிடம் பேசவும் ஆர்வம் காட்டத் தொடங்கியதைக் கண்டவளுக்கு அது சுத்தமாகப் பிடிக்காமல் போனது.
 
 
எம்பிஏ படித்துக் கொண்டு ஆணழகனாக இருந்தவனிடம் நின்று சிறிது நேரம் பேசுவதை அப்பெண்கள் அந்த வயதிற்கே உரிய ஒரு வித ஆவலோடும் ஆசையோடும் எதிர்பார்த்துக் காத்திருக்க... அபய்யோ அவர்களைத் தங்கள் வீட்டு சிறுமியின் நிலையிலேயே வைத்து மிருவின் தோழிகள் என்பதற்காகவே நின்று பேசி விட்டுச் செல்வான்.
 
 
தங்களோடு நின்ற அபய் பேசியதைப் பற்றி அந்தப் பெண்கள் தங்களுக்குள் குதுகலித்துப் பேச தொடங்கவும் தான் அதுவரை மனதுக்குள் ஏதோ முனுமுனுவென்று இருந்த கோபம் மிருவுக்கு எரிச்சலாக மாறத் துவங்கியிருந்தது.
 
 
சிலமுறை அதைத் தன் செயல்களில் அபய்யிடம் காட்டுபவள் ஒரு சில நேரங்களில் வாய் விட்டே கூறி இருக்கிறாள். அவர்களோடு பேச வேண்டாம் என்று முறைத்துக் கொண்டே...
 
 
“ஏன் லட்டு குட்டி...?” என்ற கேட்டவனுக்கு, “எனக்குப் பிடிக்கலை” என்ற ஒற்றை வரியிலேயே பதிலளித்தவளின் குணம் அறிந்தவனும் அதன் பிறகு அவர்களோடு பேசுவதைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டான்.
 
 
அடுத்த வருடம் நடந்த பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சிக்காக முதல் முதலாக மிரு சேலை கட்டிக் கொண்டு வந்து நின்ற போதுதான், இத்தனை வருடங்களாகத் தான் குழந்தையாகவே பார்த்துக் கொண்டிருந்த தன் லட்டு குட்டி வளர்ந்துவிட்டாள் என்பதே அபய்க்குப் புரிந்தது.
 
 
“ஓய் யாருடா இது நமக்குத் தெரியாமல் ஒரு லேடி வீட்டுக்குள் நுழைந்து இருக்காங்க...” என்று கூறி அவளைக் கலாய்த்தவன், அதன் பிறகு அவளை “மினி லேடி” என்று விளையாட்டாக அழைக்கத் தொடங்கி இருந்தான்.
 
 
அதற்குச் சிணுங்கி அழுது கோபப்பட்டு என மிரு எத்தனை வகையில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் அவளைச் சீண்டி விளையாடுவதையே விரும்பி செய்பவன், அதை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தொடர்ந்து அப்படியே அழைத்துக் கொண்டிருந்தான்.
 
 
ஒரு முறை வீட்டினர் முன்பும் அப்படியே அபய் அழைத்து விட, அதில் கோபம் கொண்டவள் “இனி அப்படி அழைத்தால் பேச மாட்டேன்” என்று முறைத்துக் கொண்டு கோபம் கொள்ளவும், அந்த லேடியை மட்டும் வெட்டி விட்டு மினி என்று அழைக்கத் தொடங்கினான்.
 
 
அதற்கும் மிரு முறைப்பும் மறுப்பும் தெரிவித்தாலும் கொஞ்சமும் அதைச் சட்டை செய்யாத அதைக் கணக்கில் கூடக் கொள்ளாத அபய், அது அவளின் பெயரின் சுருக்கம் என்று கூறி அவளை நம்ப வைத்தான்.
 
 
அந்த வயதில் அதையும் உண்மை என்று நம்பிய அந்த அப்பாவி ஜீவன், யாரும் இதுவரை அழைக்காத செல்ல பெயராக வைத்து தன் மாமன் அழைப்பதாக எண்ணி மகிழ்ந்து போனாள்.
 
 
இப்படிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தங்கள் தொழிலை அபய் கையில் எடுக்க இருந்த சமயத்தில் அவற்றைப் பற்றி இன்னும் கற்றுக் கொண்டு முழுமையாக இறங்குவதாகக் கூறி, மேற்படிப்புக்காக இரண்டு வருடங்கள் வெளிநாட்டிற்குச் செல்ல முடிவெடுத்தான் அபய்.
 
 
அமைதியாகவும் அழகாகவும் சென்று கொண்டு இருக்கும் தன் வாழ்க்கையைத் தானே சிக்கலாக்கி கொள்ளப் போகிறோம் என்று தெரியாமலேயே...!!!
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 23
 
அபய் படிப்பை தொடர சென்ற அதே வேளையில் அவன் மனதில் சில தொழில் சார்ந்த திட்டங்களும் இருந்ததினால் தன் தந்தையின் தொழிலை முன்னெடுத்துச் செல்வது மட்டுமல்லாமல் தனக்கென்று தன் திறமையைக் கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்பதும் அவனின் எண்ணமாக இருந்தது.
அதற்கான முயற்சிகளிலும் இறங்க எண்ணியிருந்ததன் முதல் படியாக ஒவ்வொன்றையும் தான் படித்துத் தெரிந்து கொள்வதும் மற்றவர்களின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்வதுமாக இல்லாமல் தானே சுய அனுபவத்தின் மூலம் சிலவற்றைத் தெரிந்து கொள்ள எண்ணியவன் முதல்முறையாகக் குடும்பத்தைவிட்டு அவர்களின் அன்பு பாசம் அக்கறை கவனிப்பு என எதுவும் இல்லாமல் செல்லும் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவெடுத்து இருந்தான்.
 
 
பிறந்தது முதலே தங்கத்தட்டில் வைத்து தாங்க படுவதால் தனக்குச் சில அனுபவங்கள் தொழில் தொடங்குவதற்கு முன்பு தேவை என்று எண்ணியவன், கல்லூரி நேரம் முடிந்த பிறகு பகுதி நேர வேலையாக ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான்.
 
 
ஆரம்பத்தில் அவன் மனதில் இருந்த தொழில் சார்ந்த திட்டங்களுக்காகப் பலதரப்பட்ட மனிதர்களோடு பேசி பழகி அவர்களின் எண்ணங்களைத் தெரிந்து கொள்வது அவசியம் என்று எண்ணியும் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரோடும் பழகுவதற்குக் கிடைத்த வாய்ப்பாகவும் கருதியே இப்படி ஒரு வேலையில் சேர்ந்து இருந்தான்.
 
 
ஆனால் முதல் மாத ஊதியத்தை அதுவும் தன் உழைப்பிற்குக் கிடைத்த சன்மானத்தைக் கைகளில் தொட்ட போது அவன் உணர்ந்த அந்த உணர்வு ஏதோ அரிய பெரிய சாதனையை நிகழ்த்தியது போல அபய்யை எண்ண வைத்தது.
 
 
இதுவே அடுத்தக் கட்டத்திற்கு அவனை யோசிக்கவும் வைத்தது. ‘இந்த வருமானத்தைக் கொண்டே ஏன் இங்கு இருக்கும் வரை தன் செலவுகளைத் தான் பார்த்துக் கொள்ளக் கூடாது’ என்று எண்ணியவன் அதைச் செயல் ஆக்கும் முயற்சியில் உடனே இறங்கி அதை வீட்டினருக்குத் தெரியபடுத்த, மிரு உட்பட வீட்டில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு வகையில் அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் வலுவாக வந்து சேர்ந்தது.
 
 
இதற்கெல்லாம் அசந்து விடுபவனோ அசைந்து கொடுப்பவனோ இல்லையே அபய். அவன் நினைத்ததைச் சாதித்துப் பழக்கப்பட்டவன் என்பதனால் அவரவருக்குத் தகுந்தபடி ஒவ்வொருவரிடமும் கொஞ்சி கொஞ்சி மிஞ்சி என்று தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டான்.
 
 
அதற்குப் பிறகு அவனின் வருமானத்தைக் கொண்டே அங்கு வாழ்க்கையை நடத்தத் துவங்க, அவனோடு படித்தவர்களில் சிலர் ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க வந்தவர்களாக இருப்பதனால் அவர்களும் இதுபோல வேலை பார்த்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்தனர். அதனால் இது யாருக்கும் பெரிய விஷயமாகத் தெரியவில்லை.
 
 
அவனின் குணத்திற்கும் அவனின் பழகும் முறைக்கும் வெகு விரைவாகவே நிறைய நண்பர்கள் விரைவில் நண்பனாகி போயினர். அதிலும் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் கொண்ட குழு வெகு விரைவில் நெருங்கிய நண்பர்கள் என்ற வட்டத்திற்குள் வந்து சேர்ந்திருந்தனர். அனைவரும் ஒரே பிரிவை எடுத்துப் படிக்கவில்லை என்றாலும் வேறு வேறு பிரிவுகளில் இருந்தாலும் இந்தியா என்ற உண்டு அவர்களை ஒன்றிணைக்கப் போதுமானதாக இருந்தது.
 
 
அபய், சிக்கந்தர், பிரதாப், குமரன், ரோஹினி என்ற அந்தக் குழுவில் குமரனும் ரோகிணியும் ஸ்காலர்ஷிப் மூலம் படிக்க வந்தவர்கள் அவர்களும் பகுதி நேர வேலையைத் தேடிக் கொண்டு அப்படியே தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர்.
 
 
அவரவர் அவரவர் பணிகளிலும் படிப்பிலும் தொடர்ந்து பிசியாக இருப்பதால் வார இறுதி நாட்களில் அனைவரும் ஒன்று கூடி வெளியில் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இப்படியே நாட்கள் செல்ல, கிட்டத்தட்ட ஆறு மாதம் கடந்து இருந்த நிலையில் அபய்யின் அழகிலும் ஸ்டைலிலும் கம்பீரத்திலும் ஈர்க்கப்பட்டு ரோஹினி அவனிடம் தனது காதலைத் தெரிவித்தாள்.
 
 
அதுவரையிலும் அபய்க்கு அப்படி எல்லாம் எந்த ஒரு எண்ணமும் கொஞ்சமும் இல்லை. ஆனால் ரோஹிணி தன் காதலை தெரிவித்த போது உடனே மறுப்பு ஏதும் கூறாமல் யோசித்துப் பதில் அளிப்பதாகத் தெரிவித்துவிட்டு வந்திருந்தான்.
 
 
அன்றைய நாள் முழுவதும் இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவனுக்கு ரோஹிணியை மறுப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை எனத் தோன்றவே எப்படியும் ஒன்று இரண்டு வருடங்களில் வீட்டில் தனக்குத் திருமண ஏற்பாடுகள் செய்யப் போவது உறுதி, அது ஏன் இவளாக இருக்கக் கூடாது என்றே தோற்றியது.
 
 
அவளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் தான், வீட்டில் தன் மனதை தெரிவித்தால் எப்பிடியும் மறுக்கப் போவதில்லை என்பதும் உறுதி, என்றெல்லாம் யோசித்தவன் மறுநாள் ஒரு முடிவுக்கு வந்து ரோஹினியிடம் தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
 
 
அபய்க்கு காதல் கடிதம் வருவதோ பெண்கள் காதல் சொல்வதோ ஒன்றும் புதிதல்ல. அவன் இளங்கலை படிப்பில் சேர்ந்த நாள் முதலாக எத்தனையோ இது போல நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் சம்மதிக்கவோ அதைப் பற்றிச் சிந்திக்கவோ கூட அபய்க்கு தோன்றியதில்லை.
 
 
ஒருவேளை அதற்குக் காரணமாக இருந்தது அன்றைய அந்த அழகான பாச கூட்டுக்குள் அபய் இருந்ததோ என்னவோ...! ஒட்டுமொத்த குடும்பத்தின் பாசத்தில் திளைத்துக் கொண்டிருந்தவன் என்பதாலோ வெளியில் தனக்கென ஒரு உறவையோ பாசத்தையோ தேடிக் கொள்ள அவனுக்குத் தோன்றாமல் போனது .
 
 
ஒவ்வொரு முறையும் தன்னிடம் காதல் சொன்னவர்களுக்கு நாசுக்கான பதிலையே இத்தனை வருடங்களாகத் தெரிவித்தவன் இப்போது தன் பாச கூட்டிலிருந்து பிரிந்து தனியாக இருப்பதனால் அந்த அன்புக்கும் பாசத்திற்கும் மனம் அவனையே அறியாமல் ஏங்கி தவித்ததோ என்னவோ...?! இங்குத் தனக்கென ஒரு துணை என வந்த போது அதை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தான். ஆனால் இங்கு எதற்கு வந்தோமோ அதுதான் முதல் என்பதில் உறுதியாக இருந்தவன் ரோஹினியிடம், இப்போதைக்கு இதைப்பற்றி வேறு யாரிடமும் கூறவேண்டாம் படிப்பு முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறிவிட்டான்.
 
 
அவளும் அதற்குச் சம்மதித்தாள். இருவரும் வேறு வேறு பிரிவில் படித்துக் கொண்டிருந்ததோடு இருவரும் படிப்பு முடிந்த பிறகு பகுதிநேர பணிக்கு செல்ல வேண்டியது என அடிக்கடி சந்தித்துக் கொள்ளவும் பேசி பழகிக் கொள்ளவும் அதிக நேரம் கிடைக்கவில்லை. எதிர்படும் தருணங்களில் சில நிமிட பேச்சு என்பதோடு முடிந்துவிடும். வார இறுதிகளில் நண்பர்களோடு இணைந்து வெளியே செல்வது என்று நாட்கள் சென்று கொண்டிருந்தது.
 
 
ரோஹினிக்கோ அபய்யோடு சேர்ந்து தனியாக வெளியில் செல்லவும் அவனோடு நேரம் செலவிடவும் ரொம்பவே ஆசை. ஆனால் அதற்கு அபய் சம்மதிக்கவே இல்லை. காரணம் கிடைக்கும் கொஞ்ச நேரமும் நண்பர்களோடு செலவிடச் சரியாக இருக்கிறது, அதைத் தவிர்த்து இவர்கள் இருவரும் தனித்துப் போனால் என்ன ஏது என்று கேள்வி வரும் பிறகு அது கேலி கிண்டலில் தொடங்கி அப்படியே படிப்பு முடியும் வரை தொடர வாய்ப்பிருக்கிறது என்று அறிந்தே தன் மனைவியாகப் போகிறவளை யாரும் தன்னோடு சேர்த்தே என்றாலும் இது போலக் கேலி கிண்டல்களில் இறங்குவதில் அவனுக்கு விருப்பமில்லை.
 
 
அதே போல அரிதாக எதிர் பாராமல் கிடைக்கும் சில சந்தர்ப்பங்களில் அபய்யோடு சற்று நெருக்கமாக இருக்க அவள் முயலும் போதெல்லாம் அதற்கும் அவன் இடம் கொடுத்ததில்லை. காரணம் அவன் வளர்ந்த முறை ஒரு பக்கம் என்றால் இருவரும் இங்குத் தனிமையில் இருக்கும் இந்த நிலையில் முதலில் வெறும் அணைப்பு இதழ்வொற்றல் மட்டும் தானே எனத் தொடங்குவது கட்டுப்பாடு அற்ற நிலையைப் பயன்படுத்தி அடுத்தடுத்த நிலைக்குப் போக வாய்ப்பு அதிகம் என்பதே...! இதையும் மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் அபய் அவளிடம் தெளிவாகவே எடுத்துரைத்து இருந்தான்.
 
 
அதுமட்டுமின்றி, அவனின் குடும்பத்திற்கென்று இருக்கும் பெயரும் அந்தஸ்தும் அவனால் எந்த வகையிலும் குன்றக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தான். ரோஹினியிடம் தன் குடும்பப் பின்னணி பற்றி மட்டும்தான் கூறவில்லையே தவிர, குடும்பத்தில் இருப்பவர்களைப் பற்றி எல்லாம் நிறையவே பேசி இருந்தவன், தங்கள் தொழில் அந்தஸ்து என்பதைப் பற்றி மட்டும் எதுவும் பேசவில்லை.
 
 
அவளிடம் தான் பேசவில்லையே தவிரத் தன் குடும்பத்தாரிடம் ரோஹிணியைப் பற்றி எல்லாவற்றையும் பேசி இருந்தான் அபய். அவர்களும் அபய்யின் விருப்பத்திற்கு மறுப்பு ஏதும் கூறாமல் படிப்பு முடிந்து வந்த பிறகு மற்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம் என்று சந்தோஷமாகவே சம்மதித்து இருந்தனர்.
 
 
அங்கு ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அபய்க்கு இருக்க, அதற்கான முயற்சிகள் தேடல்கள் தகவல்களைச் சேகரிப்பது எனப் படிப்பு முடிய இருந்த கடைசி மூன்று மாதங்களில் ரொம்பவே பிசியாகி போனான். அபய் நண்பர்களோடு வெளியில் செல்லும் அந்த ஒரு நாளும் அவனுக்கு அடிக்கடி கிடைக்காமல் போகும்... சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது மட்டும் அவர்களோடு இணைந்து கொள்வான். தன் முயற்சிகளைப் பற்றி அவன் ரோஹினியிடம் கூறாததற்குக் காரணம் அனைத்தையும் செய்து முடித்து அவளை இன்ப அதிர்ச்சியில் மூழ்கடிக்கவே.
 
 
படிப்பு முடிந்து இந்தியா திரும்ப இருந்த அனைவரும் ஒரே நாளில் டிக்கெட் எடுத்து இருந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ரோகினிக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணியவன், குடும்பத்தினரோடு கலந்து பேசி அவளைத் தன்னோடு வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவதாக ஒரு திட்டத்தை உருவாக்கி அவளுக்கே தெரியாமல் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருந்தான். இவை எதுவும் இந்தியா சென்று இறங்கும் வரை ரோஹினிக்கு தெரியாமலும் பார்த்துக் கொள்ள எண்ணி இருந்தான்.
 
 
இன்னும் இரண்டு நாளில் அனைவரும் இந்தியா திரும்ப வேண்டி இருந்ததால் அவரவர்க்குத் தேவையானவற்றைத் தேடி வாங்குவதிலும் பொருட்களை எடுத்து வைப்பதிலும் பிஸியாக இருந்தனர். படிப்பும் முடிந்து விட்டபடியால் அவ்வப்போது சந்தித்துக் கொள்ள நிறைய நேரம் கிடைத்தது. அன்று மாலை நண்பர்களோடு தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள திறந்தவெளி உணவகத்தில் அமர்ந்து அபய் பேசிக் கொண்டிருந்த போது அங்குச் சிக்கந்தரோடு மணக்கோலத்தில் வந்து நின்றாள் ரோகிணி.
 
 
இது அங்கிருந்த யாருமே எதிர்பார்க்காத ஒன்று தான் என்றாலும் அபய்க்குப் பேரதிர்ச்சி. அவன் திகைத்துப் போய்ப் பார்க்க... அவளோ கொஞ்சமும் குற்ற உணர்வு எதுவுமின்றி அவனை வெகு சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் யோசனையாக இடுங்கியது அபய்யின் கண்கள், சிக்கந்தர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அவன் போக்கில் தங்கள் காதல் கதையைக் கூறிக் கொண்டிருந்தான்.
 
 
அபய் மட்டுமே அமைதியாக இருக்க, மற்றவர்கள் இதை நம்ப முடியாமல் என்ன? ஏது? என்று தங்கள் விசாரணையை நடத்திக் கொண்டிருந்தார்கள். இங்கு வந்து உடனே சிக்கந்தர் சில நாட்களிலேயே ரோகினியை காதலிக்கத் தொடங்கி விட்டதாகவும், அவளிடம் அதைப் பலமுறை எடுத்துக் கூறியும் முதலில் காதலில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி மறுத்தவள் தன் காதலின் சக்தியினால் அதன் ஆழத்தை புரிந்து கொண்டு திடீரென மூன்று மாதங்களுக்கு முன் மனம் மாறி தன்னைக் காதலிக்கத் தொடங்கி விட்டதாகவும் கூற... ஒரு விரக்தியான புன்னகையோடு கேட்டுக் கொண்டு இருந்தானே தவிர இடையில் எதுவும் குறுக்கிடவில்லை அபய்.
 
 
அதெல்லாம் சரி அதற்கு எதற்கு இந்த அவசர திருமணம் என மற்றவர்கள் கேள்வியை முன் வைக்க...! “எங்கள் குடும்பம் ரொம்பவே பாரம்பரியமான குடும்பம், காதல் திருமணத்திற்கும் கலப்புத் திருமணத்திற்கும் சம்மதிக்க மாட்டாங்க, அதான் என்ன செய்யறதுன்னு தெரியாம நான் குழம்பிப் போயிருந்த நேரத்தில்தான் ரோஹினி இப்படி ஐடியா கொடுத்தா... அவங்ககிட்ட சம்மதம் கேட்டால் தானே சம்மதிக்காமல் போறதுக்கு, நாம் திருமணமே செய்து கொண்டு போய் நின்னா... அவங்களால இதை மறுக்க முடியாதே முதலில் கோவப்பட்டாலும் அப்புறம் ஏத்துக்குவாங்கன்னு சொன்ன பிறகு தான் எனக்கு இதுவும் சரின்னு தோணுச்சு... அதனாலதான் இந்தியா கிளம்பும் முன்னே கல்யாணத்தை முடிச்சுக்கப் பிளான் செஞ்சோம்...” என்று விளக்கினான்.
 
 
இங்குத் திருமணம் செய்து கொள்வது என்றால் அதற்கு எத்தனை நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது, அதற்கு எத்தனை நாள் இவர்கள் இதெல்லாம் செய்து முடிக்கத் தேவைப்பட்டிருக்கும் என அபய்யின் மனதில் மனக்கணக்கு எழவும் அவனுக்கு இத்தனை நாட்களாக முட்டாள் அடிக்கப்பட்டு இருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்து போனது.
 
 
ரோஹினி இவனை ஏமாற்றினாள் என்பதைவிட, அவளைக் கவனிக்கவும் சந்தேகப்படவும் அவனுக்குத் தோன்றவில்லை என்பது தான் உண்மை. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் என்ற எண்ணத்தில் இருந்ததனாலேயே அவளைப் பற்றி என்ன செய்கிறாள் ஏது செய்கிறாள் எங்குச் செல்கிறாள் என்பது போன்ற கேள்விகள் எல்லாம் கேட்க வேண்டும் அதைக் கவனிக்க வேண்டும் என்றெல்லாம் அபய்க்கு தோன்றியதில்லை, இயல்பாகத் தான் அவன் நடந்து கொண்டான்.
 
 
“அதெல்லாம் சரி எங்ககிட்ட இருந்து ஏன் மறைச்சீங்க...?” என்று அருகிலிருந்தவர்கள் சிரித்துக் கொண்டே குறைபட்டுக் கொள்ளவும் அதற்கும் லேசாக அசடு வழிந்தவன், “நான் சொல்லலாம்ன்னு தான் சொன்னேன்... இப்போ எதுவும் சொல்ல வேண்டாம், நம்மளை வைத்து கிண்டல் பண்ணுவாங்கன்னு ரோஹி தான் வெட்கப்பட்டாள்..” என்று பதிலளித்தவனையும் ரோஹினியும் ஒரு பார்வை திரும்பி பார்த்தவனுக்குத் தான் ரோகிணியிடம் சொன்ன பதில் தான் ஆனால் அதன் பொருள் மாறி வேறு இடத்தில் இருந்து வருவது வேடிக்கையாக இருந்தது.
 
 
ஒருவழியாக அவர்களைக் கிண்டல் செய்து வாழ்த்து தெரிவித்து டீரீட் கேட்டு என அன்றைய பேச்சை முடித்துக் கொண்டு நண்பர்கள் கலைந்து சென்றனர். மற்றவர்களைப் போல் நண்பர்களோடு சேர்ந்து தங்காமல் தனியாக ஒரு வீட்டில் தங்கியிருந்தான் அபய். அவனுக்காக அவன் தந்தை வாங்கிக் கொடுத்திருந்த வீடு அது. இரண்டு வருடம் அவன் அங்குத் தங்கி படிக்கப் போகிறான் என்றவுடன் அவர் இந்த ஏற்பாடுகளை எல்லாம் மகனுக்காக செய்து கொடுத்திருந்தார். ஆனால் மற்றவர்களைப் பொறுத்தவரை அது அவனின் சொந்த வீடு என்பது யாருக்கும் தெரியாது.
 
 
அதற்குக் காரணம் கதிரேசனின் சித்தப்பா மகன் பிரபு அப்போது அங்குத் தான் வேலை செய்து கொண்டிருந்தார். அபய் இங்கு வரும் நேரம் அவரும் வீடு மாற்றுவதற்காக அலைந்து கொண்டிருப்பதாகக் கேள்விபட்ட அபய்யின் தந்தை அவனோடே தங்கிக் கொள்ளக் கூறிவிட்டார்.
 
 
அங்குச் சில வருடங்களாக இருப்பவனுடன் வசிப்பது அபய்க்கும் துணையாக இருக்கும் என்று எண்ணியே அவர் அப்படிக் கூறியிருந்தார். ஆனால் அதுவே மற்றவர்களின் பார்வையில் பிரபு வேலைக்குச் சென்று கொண்டிருந்ததால் அது அவன் வீடு என்றும் அங்கு அபய் உறவுக்காரன் என்ற முறையில் தங்கி கொண்டிருக்கிறான் என்றும் பதிவானது.
 
 
இது ஆரம்பத்தில் அபய்க்குத் தெரியாமல் இருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் தெரிய வந்த போது மறுத்து கூறி தன் வசதியை அந்தஸ்தை பற்றியெல்லாம் விளக்கமளிக்க விரும்பாதவன் அதனால் என்ன அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
 
 
அவர்கள் எப்படி நினைத்துக் கொண்டால் அதனால் தனக்கு என்ன பங்கம் வரப் போகிறது என்று எண்ணியிருந்தான். ஆனால் அதுவே அவன் வாழ்க்கையில் எடுத்த ஒரு முக்கிய முடிவை தவறு எனப் புரிய வைக்கக் காரணமாக அமைய போகிறது என்று அப்போது அவனுக்குத் தெரியவில்லை.
 
 
மாலை நேரத்தில் எங்கும் வெளியில் செல்ல மனம் விரும்பாததால் அமைதியாக அமர்ந்து ஏதோ சிந்தனைகளில் மூழ்கி இருந்தவனைக் காண ரோஹினி தனியாக வந்தாள். அபய் அவளை என்ன என்பது போல ஒரு பார்வை பார்த்தபடி மட்டும் அமர்ந்து இருந்தானே தவிர எந்தக் கேள்வியும் அவளிடம் கேட்கவில்லை.
 
 
அதற்கு எந்த அவசியத்தையும் கொடுக்காமல் ரோஹினியே “இங்க பாரு அபய் நான் மன்னிப்பெல்லாம் கேட்க வரலை, அதுக்கு எந்த அவசியமும் இருக்கறதா எனக்குத் தோணலை... கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சு பாரு, நான் செஞ்சதில் எந்தத் தப்பும் இல்லைன்னு உனக்குப் புரியும்... இந்தியால இருந்து நீ இங்கே படிக்க வந்ததற்கு என்ன காரணம், அங்கே விட இங்கே பெட்டர் சாய்ஸ் அதானே... அதே போலத்தான் இதுவும்...” என்றாள்.
 
 
அபய் அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் அதே பார்வையோடு தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “சிக்கந்தர் ஆரம்பத்திலிருந்தே என் பின்னாடி சுத்தினான் தான், ஆனால் அவனைவிட எனக்கு உன்னைத் தான் பிடிச்சது... அதனால தான் உன்கிட்ட காதலை சொன்னேன், ஆனால் இந்த ஒன்றரை வருஷத்துல நீ எனக்காக என்ன செஞ்சுருக்கே...? என்னை எங்கே கூட்டிட்டு போய் இருக்க...? எனக்கு என்ன வாங்கிக் கொடுத்து இருக்க...? எதுவுமே இல்ல எப்பவும் உன் கவனம் எல்லாம் உன் வேலை இல்லைனா பிரெண்ட்ஸ்னு தான் இருக்கும், என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணனும் என்னைக்காவது உனக்குத் தோணி இருக்கா...
 
 
ஆனா உன்னையும் குத்தம் சொல்ல முடியாது, உன்னோட நிலைமை அப்படி நீ ஓடி ஓடி சம்பாதிச்சா தான் உன் வாழ்க்கை ஜீவனம் ஓடும்... எனக்கு அது புரிஞ்சாலும் என்னால அதை ஏத்துக்க முடியலை, இந்த மன உளைச்சலில் நான் இருந்த போது தான் சிக்கந்தர் மறுபடியும் மறுபடியும் வந்து அவனோட காதலை என்கிட்ட சொல்லிட்டே இருந்தான்... தொப்பையயோடும் லேசா வழுக்கை தலையோடும் இருக்கிறவனை எனக்கும் பிடிக்கலை தான், ஆனால் யோசிச்சுப் பாத்தேன் உன்னை விட அவன் எல்லா வகையிலும் வாழ்க்கைக்குப் பெட்டர் சாய்ஸ்... நல்ல வசதியான குடும்பத்தில் இருந்து வந்திருக்கான், படிச்சு முடிச்சதும் இங்கேயே பிசினஸ் தொடங்கப் போறான்...
 
 
என்னை ரொம்பக் காதலிக்கிறான், எனக்காக என்ன செய்யவும் தயாரா இருக்கான்... நான் அவனுக்குச் சம்மதம் சொல்றதுக்கு முன்னாடியே அவன் எனக்கு எவ்வளவு கிப்ட் வாங்கிக் கொடுப்பான் தெரியுமா...!? சம்மதித்த பிறகு இந்த மூணு மாசமா என்னோட மொத்த செலவும் அவன்தான் பார்த்தான்... பிராக்டிகலா யோசிச்சு பாரு ஒரு பொண்ணுக்கு இதைவிட வேற என்ன வேணும், உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னா நம்ம வாழ்க்கை இப்படியேதான் போகும், நீ ஒரு பக்கம் வேலை வேலைனு ஓடிக்கிட்டு... நான் ஒரு பக்கம் வேலைன்னு ஓடிக்கிட்டு...
 
 
நாம எப்ப தான் சந்தோஷமா வாழறது, அதே சிக்கியை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேனா ஓடி ஓடி உழைக்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை... உட்கார்ந்த இடத்திலிருந்து அதிகாரம் செய்யலாம்... நான் இருக்கிற இடத்துக்கு என்னைத் தேடி எல்லாம் வரும்... எல்லா வகையிலும் உன்னோடான வாழ்க்கையை விட எனக்குப் பெட்டரா ஒரு வாழ்க்கை அமையும் போது அதைத் தேர்ந்தெடுப்பது தான் புத்திசாலித்தனம்... நான் அதைத்தான் செய்தேன்...” என்று கொஞ்சம் கூடத் தயக்கமும் வருத்தமும் இல்லாமல் பேசிக் கொண்டே சென்றாள் ரோஹினி.
 
 
அப்போதும் கூட அவளை அமைதியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்து இருந்தானே தவிர, அவளுக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. எப்போது சிக்கந்தர் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து கொள்ள ஐடியா கொடுத்ததே ரோகிணி தான் என்று கூறினானோ, அப்போதே தனக்கு ஒரு காரியம் நடக்க வேண்டும் என்றால் அதற்காக மற்றவர்களைப் பற்றிக் கொஞ்சமும் சிந்திக்காமல் எந்த எல்லைக்கும் செல்வாள் எனப் புரிந்து கொண்டிருந்தான் அபய்.
 
 
அதேபோலத் தன்னிடம் காதலைச் சொன்னவள் ஒன்றரை வருடங்கள் தன்னோடு பழகிக் கொண்டிருப்பவள் மூன்று மாதங்களாகச் சிக்கந்தரோடும் அவனின் காதலை ஏற்றுக் கொண்டு பழகியதை எண்ணும் போதே அவனின் மனம் கசந்து போனது.
 
 
இப்படி ஒருத்தியையா வாழ்க்கைத்துணை என்ற அளவில் முடிவு செய்து வைத்திருந்தோம்...! இவளைப் பற்றியா வீட்டில் அத்தனை உயர்வாகப் பேசி அவர்களின் சம்மதத்தையும் வாங்கினோம், அவசரப்பட்டு விட்டோமோ என்றெல்லாம் மனதிற்குள் எண்ணங்கள் முட்டிமோத அதே சிந்தனையோடு தான் தனிமையில் அமர்ந்து கொண்டிருந்தான் அவன்.
 
 
அதற்கு ஏற்றார்போல அவன் எண்ணம் 100 சதவிகிதம் உண்மை என்பது போல் தான் இருந்தது இப்போது தன்னைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பவளின் இந்தப் பேச்சும். சிக்கந்தர் அந்தஸ்து குடும்பம் அவனின் தொழில் பற்றி அத்தனை பெருமையாகக் கூறுபவளுக்கு அவனைவிட அனைத்து வகையிலும் பல மடங்கு தான்தான் உயர்ந்தவன் என அபய் கூற ஒரு நொடி போதும் இருந்தாலும் அதைப் பற்றிப் பேசவும் விளக்கவும் அவன் தயாராக இல்லை.
 
 
“இத்தோடு இது எல்லாத்தையும் மறந்துடு அபய், என்னை நினைச்சுட்டு வாழ்க்கையைப் பாழாக்கிக்காதே... அதேபோல நாம ரெண்டு பேர் பழகினது பத்தி சிக்கந்தர்கிட்ட சொல்லி என் வாழ்க்கையில் ப்ரச்சனை செய்யலாம்னும் நினைக்காதே... சிக்கி நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டான், உன்னை விட அவன் என்னை மட்டும் தான் நம்புவான் புரிஞ்சுக்கோ...” என்று மறைமுக எச்சரிக்கையையும் விட்டுவிட்டு சென்று விட்டாள். அவ்வளவு நேரம் அவள் பேசியதை கூட எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் உதிர்த்து விட்டுச் சென்ற கடைசி வரிகளில் கேலியான ஒரு புன்னகையோடு சென்றவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 24
 
அவர்களோடு சேர்ந்து பயணம் செய்ய விரும்பாத அபய், ஒரு நாள் முன்பாகவே இந்தியாவிற்குக் கிளம்பி சென்று விட்டான். வீட்டிற்கும் அவன் வரும் தகவல் எதுவும் தெரிவிக்கப்படாததால் திடீரென வந்து நின்றுவனைக் கண்டு அனைவரும் சந்தோஷத்தில் திகைத்தனர்.
 
 
பிறகு ரோஹினியை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்விக்கு அவன் எந்தப் பதிலும் கூறவில்லை. அவன் முகமும் அதிலிருந்த சோர்வும் அதற்கு மேல் அவனை எந்தக் கேள்வியும் கேட்க விடாமல் மற்றவர்களைத் தடைசெய்தது. ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் அடுத்த நாள் அவனே முன்வந்து அனைத்தையும் கூறி முடித்திருந்தான்.
 
 
அவற்றையெல்லாம் அறிந்தவர்கள் அபய்யை நினைத்து கவலை கொண்டனர். அவனை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தங்களால் முடிந்த அளவு ஆறுதலாக இருக்க முயன்றனர். இப்படியே ஒரு மாதம் செல்ல, தன் யோசனைகளிலேயே மூழ்கியிருப்பது அதிகம் வெளியில் செல்லாமல் யாரோடும் பேசாமல் அமர்ந்திருப்பதுமாகவே இருந்தான் அபய்.
 
 
எப்போதும் சிரிப்பும் சந்தோஷமுமாக இருக்கும் அவனின் இந்த நடவடிக்கைகள் குடும்பத்தினரை வெகுவாகக் கவலையில் ஆழ்த்தியது. இந்த நிலையில் தான் ஒரு மாதம் கடந்து இருந்த நேரத்தில் அமெரிக்காவில் தொழில் தொடங்க முடிவெடுத்திருப்பதாகத் தன் பெற்றோரிடம் தெரிவித்தான்.
 
 
அவன் மனதில் அப்படி ஒரு திட்டம் இருக்கிறது என முன்பே தெரிந்து இருந்தவர்கள் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய அனுமதி அளித்தனர். அபய்க்கு ஆரம்பத்தில் உடனடியாக அங்குத் தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டம் எல்லாம் கொஞ்சமும் இல்லை.
 
 
முதலில் இங்கு வந்து தந்தையின் தொழிலில் காலூன்றிய பிறகு அவன் தன் தொழிலை தொடங்க எண்ணியிருந்தான். ஆனால் இப்போதிருக்கும் மனநிலையில் அவனுக்கு எதிலாவது தன்னை ஆழ்த்துக் கொண்டு மற்ற நினைவுகள் நெருங்காமல் இருக்க ஒரு காரணம் தேவைப்பட்டது. புதிதாகத் தொடங்கப்படும் தொழில் என்றால் அதற்கு நிறைய நேரங்களைச் செலவிட வேண்டியிருக்கும் என்பதனாலேயே உடனடியாக அந்த வேலைகளில் இறங்கினான். அவற்றையெல்லாம் ஏற்பாடு செய்ய அலைந்து திரிந்து கொண்டிருந்தாலும் மகனின் முகத்தில் இருந்த பழைய புன்னகையைக் காண ஏங்கிய பெற்றோர் இன்னும் ஒரு வாரத்தில் அபய் கிளம்புவதாக இருந்த வேளையில் அவனிடம் திருமணத்தை முடித்துக் கொண்டு செல்லுமாறு கோரிக்கை வைக்க... அவனோ கொஞ்சமும் யோசிக்காமல் அதை மறுத்து விட்டான்.
 
 
தான் இப்போதிருக்கும் மனநிலையில் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று கூறினாலும் ஏனோ திருமணம் என்ற ஒன்றே வேண்டாம் என்பது போலத்தான் அவனின் மனம் நினைக்கத் துவங்கியிருந்தது. தன் தொழில் குடும்பம் என்று மட்டும் இருந்துவிடக் எண்ணி இருந்தவன் அதை இப்போது சொல்லி தன்னை நினைத்து ஏற்கனவே கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களை மேலும் கவலையில் ஆழ்த்த விரும்பவில்லை.
 
 
ஆனால் அவன் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன அவனின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தத்தைப் புரிந்துக் கொள்பவர்களாயிற்றே அவன் மனம் செல்லும் போக்கை எளிதாகப் புரிந்து கொண்டவர்கள் இப்போது விட்டால் இதற்குப் பிறகு அவனைப் பிடிக்க முடியாது எனச் சரியாகக் கணித்து அவனிடம் எப்படி எப்படியோ பேசி அவன் மனதை மாற்ற முயன்று கொண்டிருந்தனர்.
 
 
ஆனால் அத்தனைக்கும் பலன் என்னவோ பூஜ்யமாகத் தான் இருந்தது. இந்த நிலையில்தான் இன்னும் இரு தினங்களில் அபய் அமெரிக்கா செல்ல இருந்த நேரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் பத்மாவதி அம்மாள் அவனைப் பற்றிய கவலையிலேயே சரியாகச் சாப்பிடாமல் உறங்காமல் இருந்த காரணத்தினால் உடல்நிலை சரி இல்லாமல் இருந்தவர் லோ பிபி காரணமாக உடல் நிலை மேலும் பாதிக்கப்பட்டு மாடிப்படிகளில் இருந்து உருண்டு விழுந்தார்.
 
 
இதில் தலையிலும் முதுகிலும் பலத்த அடிபட்டு சுயநினைவின்றி அனைவரையும் தவிக்க விட்டவர் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு கண் விழித்தவுடன் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். கண்கலங்க தன்னைத் தவிப்போடு பார்த்துக் கொண்டிருந்த மகனிடம் “உன் கல்யாணத்தைப் பார்த்துட்டு போற பாக்கியத்தை எனக்குக் கொடுப்பீயா என...?” அவர் இறைஞ்சும் குரலில் கேட்டது அவனை அசைத்துப் பார்க்க...
 
 
ஆனாலும் திருமணம் என்ற ஒன்றில் பெரிதாக விருப்பம் இல்லாது இருந்தவன் “என்னையும் என் மனதையும் புரிஞ்சு எல்லாம் தெரிஞ்சும் என்னை ஏத்துக்கும் பெண் கிடைச்சா பார்க்கலாம்... அப்படி ஒருத்தியை தேடி வைங்க, நான் வந்து கல்யாணம் பண்ணிக்கிறேன்...” என்று கூறினான்.
 
 
“இல்லை நீ கல்யாணத்தை முடிச்சிகிட்டு எங்கே வேணாலும் போ...” என்று அவரும் நான் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பது போலக் கறாராகக் கூறிவிட்டார்.
 
 
“அம்மா விளையாடாதீங்க இன்னும் இரண்டு நாள்ல நான் கிளம்பணும், அதுக்குள்ள நீங்க எங்கே போய்ப் பெண் தேடுவீங்க... நீங்க பொறுமையா தேடி வைங்க நிச்சயம் மூணு மாசத்தில் வந்து கல்யாணம் பண்ணிக்கறேன்...” என்று அவருக்கு எவ்வளவோ சமாதானம் கூற அவன் முயன்றதெல்லாம் கடலில் கறைத்த உப்பு போலானது.
 
 
“உனக்கு என்ன உன்னைப் புரிஞ்சிக்கிட்டு எல்லாம் தெரிஞ்சும் அனுசரிச்சு நடந்துக்க ஒருத்தி வேணும் அவ்வளவு தானே... அப்படி ஒருத்தியை நான் கண்டுபிடிக்கிறேன், நீ கல்யாணம் பண்ணிக்கோ... கையோட கூட்டிட்டு போகணும் கூட இல்ல, ஒரு மூணு மாசத்துக்குள்ள அதற்கான ஏற்பாடுகளை முடிச்சு வந்து கூட்டிட்டு போ... ஆனால் நீ கிளம்பறதுக்கு முன்னாடி கல்யாணம் மட்டும் முடிஞ்சு இருக்கணும்...” என்ற அவரும் திட்டவட்டமாகக் கூறி விட, தன் கவலையால் அவர் வருந்துவதை விரும்பாத அபய் வேறு வழி இல்லாமல் ‘இரண்டு நாட்களில் அப்படி ஒருத்தி கிடைக்கப் போகிறாளா என்ன..!?’ என்ற எண்ணத்தோடு சம்மதித்தான்.
 
 
நிறைய முடிக்க வேண்டிய வேலைகள், செய்ய வேண்டிய ஏற்பாடுகள் என இருக்க... ஒரு பக்கம் தாயின் உடல்நிலையும் அதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என மறு பக்கமுமாக அலைந்து திரிந்து கொண்டிருந்தவனை அன்று மாலை அழைத்த அவனின் பெற்றோர் அவன் எதிர்பார்த்தது போல ஒரு பெண்ணைக் கண்டுபிடித்து விட்டதாகவும் நாளை காலையில் எளிமையான முறையில் நம் வீட்டில் வைத்தே திருமணம் என்றும் கூற, இரண்டு நாட்களில் இதையெல்லாம் செய்து முடித்து விடுவார்கள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்காத அபய் அப்போதும் கூடப் பெண் யார் என்ன என்று கேட்கத் தோன்றாமல் என்னைப் பற்றி எல்லாம் சொல்லியாயிற்றா தெரிந்தும் சம்மதித்தாளா என்றுதான் கேட்டான்.
 
 
இதனால் பின்னால் அவர்களின் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினையும் வருவதை அவன் விரும்பவில்லை. திருமணம் என்பது பெற்றோருக்காகச் சம்மதித்த ஒன்றாக இருந்தாலும் காலமெல்லாம் வாழப் போவது அவர்கள் இருவரும் தானே அதனால் அதில் தெளிவாக இருக்க நினைத்தவன் அதை மட்டுமே கேள்வியாக முன்வைக்க... “உன்னைப் பத்தி எல்லாமே தெரியும், கொஞ்சமும் நீ கவலைப்பட அவசியமே இல்ல... எல்லாம் தெரிஞ்ச பிறகு தான் சம்மதம் சொல்லி இருக்கா...” என்று ஆரம்பித்துப் பெண்ணைப் பற்றி அவர்கள் கூற இருந்த நேரத்தில் அபய்க்கு அவசரமாக அலைபேசியில் அழைப்பு வரவும் “அப்ப சரி, உங்க விருப்பம்...” என்று மட்டும் கூறி அந்தப் பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறி விட்டான் அபய். அதற்குப் பிறகும் அவனுக்கு யார் என்ன என்று விசாரிக்க வேண்டும் என்று தோன்றவில்லை. தன் குடும்பத்தினரின் மேல் அவன் வைத்து இருந்த நம்பிக்கை அப்படிப்பட்டது.
 
 
அதேபோல மற்ற ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் பெண்ணைப் பற்றிக் கூற நேரமில்லை. இப்படியே மறுநாள் பொழுதும் விடிய, சிறிய அளவில் வீட்டில் தான் என்றாலும் தங்களின் ஒரே வாரிசுக்கு நடக்கும் திருமணம் என்பதால் எந்தக் குறையும் இல்லாத வகையில் புரோகிதரை வரவழைத்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து எளிமையாகவே திருமணத்தை முடித்துக் கொள்ள நினைத்தவர்கள் மூன்று மாதத்திற்குப் பிறகு அபய் தன் மனைவியை அழைத்துச் செல்ல வரும் போது ஒரு திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
 
 
மணவறையில் வந்து அமர்ந்திருந்த அபய் புரோகிதரின் சொல்படி அனைத்தையும் செய்து கொண்டிருக்க... இன்னும் உடல்நலம் சரியாகாத பத்மாவதி அம்மா வீல் சேரில் அமர்ந்தபடி அருகில் இருந்து அனைத்தையும் மனநிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பத்மாவதியின் கணவரும் அருகில் இருந்து அனைத்தையும் முன்னின்று செய்து கொண்டிருக்க... மணமகள் அழைத்து வரப்பட்டு அபய்யின் அருகில் அமர வைக்கப்பட்டாள்.
 
 
இந்தத் திருமணம் பெற்றோருக்காகத் தான் என்றாலும் கூடத் திருமணத்திற்குச் சம்மதித்து விட்ட பிறகு முழுமனதோடு அவளை மனைவியாக ஏற்றுக் கொள்ள எண்ணியே மணவறையில் அமர்ந்தவன், தனக்குக் கிடைத்திருக்கும் மூன்று மாத அவகாசத்திற்குள் அனைத்தையும் சரி செய்து கொண்டு விட வேண்டும், முழுமனதாக அவளோடு வாழ இந்த மூன்று மாதத்திற்குள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டே மாங்கல்யத்தைத் தன் அருகில் அமர்ந்திருந்தவளின் கழுத்தில் அவளின் முகத்தைக் கூடப் பார்க்காமல் பார்க்கும் ஆர்வமும் ஆசையும் இப்போது தோன்றும் மனநிலையில் கூட இல்லாமல் அணிவித்து முடித்திருந்தான்.
 
 
நெற்றியில் குங்குமம் இட அவளைச் சுற்றி கரங்களைக் கொண்டு சென்று முகத்தை நிமிர்த்திக் குங்குமம் இட்டு முடித்த வேளையில் தான் அங்கு அமர்ந்திருந்தவளின் முகத்தைக் கண்டவன் தீயை மிதித்தார் போலப் பதறி எழுந்து நின்றிருந்தான். ஒரு சதவிகிதம் கூட இந்த இடத்தில் அவன் மிருவை எதிர்பார்த்து இருக்கவில்லை. இது அபய்யை பொருத்தவரை மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது
 
 
அவன் அப்படி எழுந்து நின்றதை கண்டு பதறியவர்கள் என்னவென்று விசாரிக்க அவனை நெருங்கி வருவதற்குள், அனைவரையும் ஒரு தீ பார்வை பார்த்தபடி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான். அபய்யின் இந்தச் செயல்களுக்குக் காரணம் புரியாமல் அவன் பின்னாடி அனைவரும் சென்றுவிட, மணவறையில் தனித்து விடப்பட்ட மினியின் மனம் எல்லையில்லா வேதனையோடு கதறித் துடித்துக் கொண்டிருந்தது. அதுவும் அபய் அப்படி உதறித்தள்ளி விட்டுப் போனது போல எழுந்து சென்றது மினியை வெகுவாகப் பாதித்திருந்தது.
 
 
“கொஞ்சமாவது அறிவிருக்கா உங்களுக்கெல்லாம்... அவ எனக்கு வொய்ப்பா...? யாரைக் கேட்டு இந்த முடிவுக்கு வந்தீங்க, நீங்க இவதான் பொண்ணுன்னு சொல்லியிருந்தா நான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தே இருந்திருக்க மாட்டேன்...” என்று தொடங்கி அவன் கோபத்தின் காரணமாக ஏதேதோ பேசிவிட்டு யாரும் சொல்ல தொடங்கிய சமாதானத்தை என்ன என்று கூடக் கேட்காமல் வெளியேறிவிட, மற்றவர்களைத் தேடி கொண்டு மாடி அறைக்கு வந்த மினியின் காதுகளில் அனைத்தும் ஒரு எழுத்து விடாமல் தெளிவாக விழுந்திருந்தது. கோபத்தோடு செல்லும் வேகத்தில் கதவின் ஓரம் நின்றிருந்த மினியை அபய் கவனிக்கவில்லை.
 
 
மதியத்திற்கு மேல் வீடு திரும்பியவன், வீடு நிசப்தத்தில் மூழ்கி இருப்பதையும் அவரவர் அறைகளில் முடங்கிக் கிடப்பதையும் கண்டு யாரையும் தேடிச் செல்லவோ அவர்களிடம் பேசவும் எண்ணாமல் தன் பொருட்களை எல்லாம் சேகரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டான்.
 
 
அவன் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்து அதன் முடிவுக்காகக் காத்திருக்கும் பெண்ணைத் தனக்குத் திருமணம் செய்து வைத்ததை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அதிலும் தன் கைகளில் வளர்ந்தவள் தனக்கு மனைவியா...!? என்ற எண்ணமே மனமெங்கும் இருக்க அவனின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்ததை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை.
 
 
எத்தனை கனவுகளோடு அவள் காத்திருக்கிறாள் என்று அவனுக்குத் தானே தெரியும். சிறுவயதிலிருந்து அவனோடே ஒட்டிக் கொண்டு திரிபவளின் ஆசைகளை ஒவ்வொரு முறையும் அவள் கண்கள் மின்ன பேசுவதைக் கேட்டபோதெல்லாம் எப்படியாவது அவளுக்கு அதை நிறைவேற்றித் தர வேண்டும் என்ற எண்ணம்தான் அவனின் மனமெங்கும் இருக்கும்.
 
 
இதோ இப்போதும் கூட அவளின் கனவான பேஷன் டிசைனிங்கில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதன் முதல் படியில் காலை வைக்க டெல்லியில் இருக்கும் மிகப்பெரிய இன்ஸ்டியூட்டில் அப்ளிகேஷன் போட்டுவிட்டு ஆவலோடு காத்திருக்கிறாள். அவளைப் போய் என்ன சொல்லியோ மிரட்டியோ கெஞ்சியோ இதற்கு எப்படிச் சம்மதிக்க வைத்தார்கள் என்று தெரியவில்லையே என மனமெங்கும் கோபத்தோடு இருந்தவன் தான் அமெரிக்கா கிளம்புவதைக் கூட வீட்டினருக்குத் தெரிவிக்காமல் கிளம்பிச் சென்றுவிட்டான்.
 
 
அங்குச் சென்று மூன்று மாதங்கள் எதிர்பார்த்தபடியே தன் தொழிலைத் தொடங்கி அதில் எதிர்பார்த்ததற்கும் முன்னரே வலுவாகக் காலூன்ற தொடங்கியவனின் தொழில் ஏறுமுகத்தில் ஜெட் வேகத்தில் செல்ல தொடங்கியது.
 
 
எந்த நினைவுகளை எண்ணங்களை மறப்பதற்காகத் தொழில் தொடங்கி அதில் மூழ்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தானோ அந்த எண்ணங்களும் நினைவுகளும் அவனுக்கு ஒரு சதவிகிதம் கூட வரவில்லை என்பது தான் ஆச்சர்யம். அதற்குப் பதில் வேறு நினைவுகள் அவனை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. வேறு ஒருத்தி அந்த இடத்தில் நிலை பெற்று இருந்தாள் முழுக்க முழுக்க... கிடைக்கும் ஒரு சிறு தருணத்தில் கூட அவளின் எண்ணங்கள் மட்டும்தான் அபய்யை மூழ்கடித்துக் கொண்டிருந்தன.
 
 
ரோஹினி என்று ஒருத்தியை சந்தித்த அளவு கூட அவன் மனதில் அவள் நினைவுக்கு வரவில்லை. தான் மறக்க நினைத்தது அவளைப் பற்றிய நினைவுகளை அல்ல, அவள் அவ்வளவு எளிதாக ஏமாற்றும் அளவும் தான் இருந்து இருக்கிறோம் என்பதைத் தான் என்றே வெகு தாமதமாகத் தான் அபய் புரிந்து கொண்டான். இதுவே தன்னை இத்தனை நாட்களாக இம்சித்தது என்பதையும் சேர்த்து.
முழுக்க முழுக்கக் கிடைக்கும் சிறு இடைவெளிகள் கூட மினியை பற்றிய எண்ணங்களாக மாறி அவனைச் சுற்றி சூழ்ந்து கொள்ள... அவளின் வாழ்க்கையைப் பாழாக்கி விட்டதாக எண்ணி அந்தக் குற்ற குறுகுறுப்பு தான் இது என்று நினைத்துக் கொண்டான்.
 
 
ஆனால் இந்தத் திருமணம் நடந்தது தங்கள் குடும்பத்தாரை தவிர வெளி உலகிற்கு யாருக்கும் தெரியாது. தான் அங்கிருந்து விலகி வந்து விட்ட நிலையில் நிச்சயம் அவளுக்குப் பிடித்த துறையில் படித்து நல்ல நிலையில் சாதித்த பிறகு அனைவரும் சேர்ந்து அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள் என்று நம்பி தன் மனதை தேற்றிக் கொள்ள முயன்றவன் அப்படி நடக்க வேண்டும் என மனதார தினமும் வேண்டிக் கொள்ளத் துவங்கினான்.
 
 
அப்படி எண்ணும் போதெல்லாம் அவன் மனதின் ஓரம் ஒரு சிறு வலி எழ தான் செய்தது. அதைக் கூடத் தன் கைகளில் வளர்ந்த அந்தச் சிறு பெண்ணுக்குத்தான் செய்துவிட்டு வந்த துரோகத்தினால் எழும் வலி என்று எண்ணி கொண்டவனுக்கு அதற்கு மேல் அதைப் பற்றி யோசிக்கத் தோன்றவே இல்லை. அதுதான் இங்கு அபய் செய்த தவறு, முழுக்க முழுக்கத் தன் மினியின் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது, இருவருக்கும் இருக்கும் வயது வித்தியாசம் முதற்கொண்டு அனைத்தையும் சிந்தித்தவன் தன்னைப் பொருட்டு மற்றவர்கள் அவளை வற்புறுத்தி இதற்குச் சம்மதிக்க வைத்து இந்த வாழ்க்கையை அவளுக்குத் திணிக்கக் கூடாது என்று எண்ணியே விலகிச் சென்றவன் ஒரு நாளும் வேறு கோணத்தில் இதைப் பற்றி யோசிக்கவில்லை.
 
 
அன்றைய நிலை அவன் யோசிப்பதற்கு 100% ஒத்துப் போகவே அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்றுதான் எண்ணிக் கொண்டு இருந்ததனால் அவளைத் தேடி வர வேண்டும் என்றோ அவள் தனக்காகக் காத்துக் கொண்டிருப்பாள் என்றோ அவன் எண்ணவே இல்லை.
 
 
இதற்கிடையில் அபய் அங்குச் சென்ற ஒரு வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராமல் ரோஹினியும் சிக்கந்தரையும் காண நேர்ந்தது. தன் தொழில்முறை பேச்சுவார்த்தைக்காக ஒரு அலுவலகத்திற்குச் சென்று இருந்த போது அங்கு அவர்கள் இருவரும் பணி செய்வதைக் கண்டு வியந்தவன் என்னவென்று விசாரிக்க, சிக்கந்தரின் வீட்டில் இருவரையும் ஏற்றுக் கொள்ளாததோடு அவர்களின் திருமணத்தையும் ஏற்றுக் கொள்ள மறுத்துச் சொத்தில் பங்கு தர முடியாது என்று விரட்டி விட்டு விட்டதாகக் கூறி வருந்தினான் சிக்கந்தர்.
 
 
அதனாலேயே இங்கு வேலை செய்வதாகத் தெரிவித்தவன், ரோஹினி வீட்டில் அப்படி எல்லாம் விரட்டி விடவில்லை என்றாலும் அவர்களுடையது சாதாரண மத்திய தரக் குடும்பம் என்பதனால் அங்கு இருப்பதை விடத் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை தேடிக் கொண்டு இங்கு இருப்பதே பெட்டர் சாய்ஸ் என்று ரோஹினி கூறியதாக அவன் தெரிவித்த போது ஒரே ஒருமுறை ரோஹினியின் மேல் தன் பார்வையைப் பதித்து விலக்கிக் கொண்டான் அபய். அந்தப் பார்வை இதுதான் உன் மேட்டர் சாய் வாழ்க்கையா எனக் கேட்காமல் கேட்டது போல இருந்தது ரோஹினிக்கு.
 
 
ஆனால் அப்போதும் கூட அபய் தன்னைப் பற்றியும் தன் தொழிலை பற்றியும் எதுவும் அவர்களுக்குக் கூறவில்லை. அடுத்தடுத்து அவன் அங்கு வர நேர்ந்த போது அங்கு அவனுக்குக் கிடைக்கும் மரியாதை பார்த்து விசாரித்துத் தெரிந்து கொண்டவர்கள், அவனின் அந்தஸ்தை எண்ணி வியந்து போயினர்.
 
 
இதைச் சிக்கந்தர் ஒருமுறை அபய்யை சந்தித்த போது மனதிற்குள் வைத்துக் கொள்ளாமல் கேட்டுவிட, தான் அப்போது என்ன நினைத்து அப்படி ஒரு முடிவில் இருந்தேன் என்பதையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் அபய் தெளிவுபடுத்தி விட்டான். இதில் அதிகம் அதிர்ந்து போனது ரோஹினி தான், அவசரப்பட்டுத் தான் எடுத்த முடிவினால் எப்படிக் கையில் கிடைத்த சொர்க்கத்தைத் தவறவிட்டு இருக்கிறோம் என்ற தன்னுடைய முட்டாள் தனத்தை அவளால் வெளியில் சொல்லி கொள்ளக் கூட முடியாமல் திருடனுக்குத் தேள் கொட்டியது போல உள்ளுக்குள்ளேயே புழுங்கி தவிக்கத் தொடங்கினாள்.
 
 
சிறிது நாட்கள் கழித்து அபய்யை சந்திக்கத் தனியாக வந்திருந்த ரோஹினி அபய் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருப்பதிலேயே அவன் தன் மேல் கொண்டிருந்த நேசம் எவ்வளவு என்பதை அப்போதுதான் அவளுக்குப் புரிவதாகக் கூறி அவனுக்குச் சம்மதம் என்றால் சீக்கிரம் சிக்கந்தரை விவாகரத்துச் செய்து விட்டு வருவதாகவும் உண்மை நேசத்தை இப்போதுதான் புரிந்து கொண்டேன் என்றும் அதைத் தவற விட்டதை எண்ணி வருந்துகிறேன் என்றும் கூறிக் கண்ணீர் வடித்தாள்.
 
 
அவள் திருமணம் செய்து கொண்டு தன்னை விட்டு விட்டுச் சென்ற போது கூட அவள் மேல் தோன்றாத கோபமும் அருவருப்பும் இந்த நிமிடம் அபய்க்கு தோன்றியது.
 
 
ஆனால் அதை அப்படியே வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டவன் நக்கலான சிரிப்போடு “நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க மை டியர் எக்ஸ்...” என்று ஒரு சிறு இடைவெளிவிட்டு “பிரண்ட்... நீங்க எப்படி மிஸஸ் சிக்கந்தரோ அதைப் போல நானும் மிஸ்டர் மிர்னாலினியாகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகுது... நான் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கணும் சொல்லுங்க... என் மனைவி படித்துக் கொண்டு இருப்பதனால் அங்கு இருக்கிறாள், கூடிய விரைவில் என்னோடு இங்கு வந்து விடுவாள்...” என்று ஏதோ நடைமுறையில் இருக்கும் ஒரு விஷயத்தை விளக்குவது போல மிகச் சாதாரண ஒரு குரலிலேயே பதிலளித்தான்.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்த ரோஹினி அவனை நம்ப முடியாத ஒரு பார்வை பார்த்தபடி அமர்ந்திருக்க... “நான் பொய் சொல்லலை...” என்று வேண்டும் என்றே அந்த வார்த்தைகளில் அதிக அழுத்தம் கொடுத்தவன், தன் அலைபேசியில் இருந்த வால் பேப்பரில் சேமித்து வைத்திருந்த மினியின் படத்தைக் காட்டினான். அதில் மினியின் பிறந்த நாளின் போது எடுத்த இருவரும் புன்னைகை முகமாக இருக்கும் செல்பி புகைப்படம் இருத்தது.
 
 
அதில் அவர்களுக்குள் இருக்கும் அன்னியோன்யம் தெரிய, கன்றிய முகத்தோடு எழுந்து சென்று விட்டாள் ரோஹினி. ஆனால் பாவம் இதில் அவள் அறியாதது ஒன்று உண்டு என்றால் அது அவள் வருவதற்குச் சிறிது நேரத்திற்கு முன் அபய்யை காண வந்த சிக்கந்தர் தனக்கு ஏதாவது இங்கு வேலை இருந்தால் தருமாறு கேட்டு பேசிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ரோஹினி அவனைக் காண வந்திருக்கும் செய்தியும் சந்திக்கக் காத்திருக்கும் செய்தியும் அபய்க்குத் தெரிவிக்கப்பட்டது.
 
 
அப்போதும் கூடச் சிக்கந்தர் தன்னைப் போலவே அவளும் ஏதாவது வேலை கேட்டு தான் வந்திருப்பாள் என்ற எண்ணத்தோடு தான் இங்கு இருப்பது அவளுக்குத் தெரிய வேண்டாம் கடைசியாக அவள் பேசி முடித்த பிறகுதான் வந்து இணைந்து கொள்வதாகச் சொல்லி அங்கிருந்த மற்றொரு அறையில் சென்று அமர்ந்து கொண்டான். பாவம், அவனுக்கு அவளின் இன்னொரு முகம் தெரியாததே.
 
 
திருமணம் முடிந்ததில் இருந்தே இருவருக்கும் ஒவ்வொரு சிறு சிறு விஷயத்திற்கும் கூடச் சண்டை வருவதும் தினம் தினம் பிரச்னையாக மாறுவதுமாகவே இருந்தது.
 
 
இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அவர்களின் பணத் தேவை தான். எந்தவொரு பின்புலமும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையை அவர்களின் வருமானத்தைக் கொண்டே எடுத்துச் செல்ல வேண்டி இருந்ததால் அவர்களின் வருமானத்திலேயே அனைத்தையும் பார்க்கும் நிலையும் சமாளிக்கும் நிலையும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.
 
 
அதனால் எதற்கும் ஆசைப்படவோ நிறைவேற்றிக் கொள்ளவோ இருவராலுமே முடியவில்லை. அனைத்தும் ஆண்டு அனுபவித்து வளர்ந்திருந்த சிக்கந்தருக்கு இது மிகப்பெரிய கஷ்டமாக இருந்ததால் கோபத்தில் வார்த்தைகளை விட, அவளோ தன் குடும்பத்தின் மூலம் இதுவரை அனுபவிக்காத எல்லாம் இனி கிடைக்கும் என்று எண்ணி தேர்ந்தெடுத்த வாழ்க்கை தன்னை இதற்கு முன்பு இருந்ததைவிடக் கீழே இறக்கிக் கொண்டு இருப்பதைத் தாங்க முடியாமல் அவளும் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கத் தொடங்கியிருந்தாள்.
 
 
இப்படித் தினம் தினம் போராட்டமாகவே கழிந்த வாழ்க்கையில் ரோஹினிக்கு அபய்யின் மூலம் வரும் அதிக வருமானத்தைக் கொண்டு ஏதாவது செய்யமுடியுமா என்று எண்ணியே வேலை கேட்டு வந்திருந்த சிக்கந்தர் உள்ளறையில் இருந்து அவள் பேசுவதை அத்தனையும் கேட்க நேர்ந்தது.
 
 
ரோஹினி பேச்சு துவங்கும் போதே அவளின் எண்ணம் செல்லும் போக்கை புரிந்து கொண்ட அபய் அவளைப் பேச விடாமல் தடுக்க எத்தனையோ முயன்று தான் பார்த்தான். ஆனால் அவள் என்று யாரைப் பற்றிக் கவலைப்பட்டு வைக்கிறாள், அவளுக்கு அவள் நினைப்பது நடந்தால் போதும்... அதே மனநிலையோடு இன்றும் தான் சொல்ல வந்ததை மட்டுமே மனதில் நிறுத்தி சுற்றுப்புறத்தை பற்றிக் கொஞ்சமும் யோசிக்காமல் பேசி விட்டு நிறுத்த, இதற்கு மேல் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றான பிறகு அபய்யும் அவ்வாறு பதிலளித்தான்.
 
 
ரோஹினி வெளியேறிய பிறகு அபய்யின் அருகில் வந்த சிக்கந்தர் “எனக்கு உங்களுக்குள்ளே இப்படி ஒரு விருப்பம் இருப்பது தெரியாது... தெரிந்திருந்தால் நான் இடையில் வந்திருக்கவே மாட்டேன், என்னைத் தவறாக நினைக்காதே அபய்...” என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் அபய்’ சொல்ல வருவதைக் கூடக் கேட்காமல் வெளியேறி விட்டான்.
 
 
அவளோடு பேசிய அந்த நிமிடத்தில் கூட மினி தன் மனைவி என்று அவ்வளவு இயல்பாக அறிமுகப்படுத்தியதை பற்றி ஒரு நிமிடம் அபய் யோசித்துப் பார்த்து இருந்தால் கூட அவனது மனம் அவனுக்குப் புரிந்து இருக்கும், ஆனால் அபய் அதைச் சாதாரணமாகக் கூறினானே தவிர அதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை.
 
 
அப்போதே அபய் தன் மனதைத் தெளிவுபடுத்திக் கொண்டு இருந்தால் இத்தனை பிரச்சினைகள் வந்தே இருக்காது, ஒருவேளை தெரியப்படுத்திக் கொண்டிருந்தாலும் மினியின் வாழ்க்கை சீர் செய்யப்பட்டு இருக்கும் என்று எண்ணி வராமலேயே இருந்திருப்பானோ என்னவோ...!?
 
 
மினிக்கு அவளுக்கு ஏற்ற வரனாகப் பார்த்து மணம் முடித்து இருப்பார்கள் என்ற நினைத்திருந்தவன் இப்படி அவள் இத்தனை வருடங்களாகக் காத்திருப்பாள் என்று கோசம் நினைத்திருக்கவில்லை. மினி அனைவருக்கும் எத்தனை செல்லம் என்று அவனுக்குத் தெரியும், தனக்காக அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தது போல் எப்படியும் அவளை மறுமணத்திற்கும் சம்மதிக்க வைத்திருப்பார்கள் என்று எண்ணினான்.
 
 
ஆனால் திரும்ப வந்து அவளைக் கண்ட போது அவளுக்கு ஒரு குடும்பம் அமைந்து இருக்கிறது என நினைத்து அவன் மகிழ்ந்ததை விட மனதளவில் துடித்ததே அதிகம். அப்போதும் அவன் அவளின் வாழ்வில் குறுக்கிட்டு இருக்க மாட்டான் தான் என்றாலும் அந்த வலியே அவனுக்கு அவனின் மனதை எடுத்து கூறியது. அதற்குப் பிறகு உண்மை புரிந்து அவளைத் தன்னவளாக ஆக்கிக் கொள்ள முயன்றுக் கொண்டும் போராடிக் கொண்டும் இருக்கிறான்.
 
 
இவற்றையெல்லாம் அசை போட்டு முடித்தவன், தான் இங்கிருந்து சென்றதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்று தான் புரியாமல் குழம்பிப் போனான். ஏன் மினி அனைவரின் மேலும் இவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்று அவனுக்கு இப்போது வரை புரியவில்லை. ஒருவேளை வற்புறுத்தி தன்னை மணந்து கொள்ள வைத்ததற்காக வா என்று கூட யோசித்தவன் அவள் இன்னும் தன் மாங்கல்யத்தைச் சுமந்து கொண்டிருப்பதே இதற்கான விடை அது அல்லவோ என்று எண்ண வைத்தது.
 
 
அது எதுவாகவோ இருந்து விட்டுப் போகட்டும் ஆனால் அதைக் கூட மினியின் மூலமே தெரிந்து கொள்ள விரும்பியே மற்றவர்களிடம் கேட்கும் எண்ணம் அவனுக்குக் கொஞ்சமும் இல்லை. தன் நினைவு கலைந்து பார்வையைத் திருப்பியவன் அப்போதே தன் மடியில் அமர்ந்தபடி நெஞ்சில் முகம் பதித்துக் கழுத்தை இறுக கட்டிக் கொண்டு உறங்கிக் கொண்டு இருப்பவளை கண்டான்.
 
 
அதைக் காண காண கொஞ்சமும் திகட்டவில்லை அவனுக்கு, அவளின் சிறு வயதில் உருங்குவதைப் போலக் கொஞ்சமும் மாற்றம் இல்லாமல் உறங்கிக் கொண்டு இருந்தவளின் இந்தத் தோற்றத்தை ஒரு மாமனின் பார்வையில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தவனின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக மாமனின் ரசனையில் இருந்து கணவனின் ரசனையாக மாறியது.
 
 
மெதுவாக அவளின் உறக்கம் கலையாத வகையில் அவளைத் தூக்கிக் கொண்டு சென்று படுக்கையில் கிடத்தியவன், இரவு விளக்கை ஒளிரவிட்டு மினியின் கழுத்து வரை போர்த்தி விட்டு நகர முயல, அவனின் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டிருந்தாள் மினி.
 
 
உறக்கத்திலும் கூடத் தன் கைகளை விடாமல் பற்றிக் கொண்டிருந்த அவளை விலக்கி விட்டு செல்ல மனம் இல்லாதவன் அவளின் அருகில் சாய்ந்து அமர்ந்து கொண்டு மெல்ல தலையை வருடி கொடுக்க... அதில் சுகமாகப் புரண்டு வந்து அவனின் வயிற்றில் முகத்தைப் புதைத்தபடி தன் உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் அவனின் பட்டு.
 
 
இந்தப் பிடிவாதகாரியின் மனதை மாற்ற இன்னும் எவ்வளவு போராட வேண்டி இருக்குமோ அவனுக்கு...?!
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 25
 
மறுநாள் காலை எழுந்தது முதல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்த மிருவைச் சுற்றி சுற்றி வந்து அவளைப் பேச வைக்க முயன்றது எதையும் அவள் காது கொடுத்து கேட்க கூடத் தயாராக இல்லை. இப்படி ஒருவன் இங்கு இருக்கிறான் என்பது போலக் கூடக் காண்பித்துக் கொள்ளாமல் தன் போக்கில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.
 
 
தன் அன்றாட வேலைகளைச் செய்தவாறே படப்பிடிப்புத் தளத்திற்குக் கிளம்ப வேண்டி அவசர அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள் மிரு. அவளின் பிடிவாத குணம் அறிந்தவன் என்பதால் இதற்கு மேல் அவளை எவ்வளவு முயன்றாலும் இப்போது பேச வைக்க முடியாது என்று புரிந்து இருந்தவன் அவனும் தயாராகச் சென்றான்.
 
 
அதே நேரம் அபய்யை காண அங்கு வந்து சேர்ந்தான் விக்கி. விக்கியை கண்டதும் அவனை வைத்துப் பேச்சை துவக்க எண்ணியவன், அவனைச் சாப்பிட்டு விட்டு தங்களோடே கிளம்புமாறு கூறியவன், மிருவையும் உபசரிக்கும் படி கூற, அவளும் தன் கோபத்தை அடுத்தவர் முன் காண்பித்துக் கொள்ள விரும்பாமல் “சாப்பிட்டுட்டு போ விக்கி...” என்று உபசரிப்புக்கு கூறிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
 
 
காலையிலிருந்து வாயை திறக்காமல் சத்தியாகிரகம் செய்து கொண்டு இருந்தவள், இப்போது இதற்காகவாவது பேசியதை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ந்தவன் இதையே பயன்படுத்தி மேலும் மேலும் அவளிடம் பேச்சுக் கொடுக்க முனைந்தான்.
 
 
ஆனால் மறுபடியும் தன் வாய்க்குப் பூட்டை போட்டுக் கொண்ட மிரு அவனிடம் எதுவுமே பேசவில்லை. முடிந்த வரை அபய் தன் சாம, தான, பேத, தண்டம் என அனைத்தையும் முயன்றாலும் பலன் என்னவோ புஜியம் தான்.
 
 
பல வருடங்களாகத் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டோ இல்லை உணவகத்தில் சாப்பிட்டு கொண்டோ இருக்கும் விக்கிக்கு இன்று வீட்டு சாப்பாடு, அதுவும் மனதளவில் அபய்யை அண்ணனாகவும் மிருவை அண்ணியாகவும் நினைத்து இருப்பவனுக்கு இது ஏதோ சொந்த வீட்டில் உரிமையாகப் பரிமாறப்படும் உணவு போலவே தோன்ற தன் ஆர்வத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் “என்ன சமையல் பாஸ்...” என்று கேட்டான்.
 
 
ஏற்கனவே தன் முயற்சி தோல்வியடைந்த கடுப்பில் இருந்த அபய் “போய் உன் அண்ணிகிட்டயே கேளு...” என்று சிடுசிடுக்கவும் ‘ரொம்பத் தான்...’ என்று மனதுக்குள் நொடித்துக் கொண்டவாறே சமையலறையை நோக்கி எழுந்து சென்றான்.
 
 
அங்கு அடுப்பில் சமையல் ஒரு பக்கம் தயாராகிக் கொண்டிருக்க... அவற்றையே பார்த்தபடி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மிரு. கையில் கரண்டியுடன் நின்றிருந்தவளை கண்டு, “என்ன அண்ணி பலத்த சிந்தனையில் இருக்கீங்க... இந்தக் கொழுந்தனுக்கு என்ன எல்லாம் சமைச்சு போட்டு எப்படி எல்லாம் அசத்தலாம்னு தீவிர யோசனையா...?” என்று கேட்டவாறே அவள் அருகில் வந்து நின்றவனை மேல் இருந்து கீழாக ஒரு பார்வை பார்த்துட்டு அமைதியாகத் திரும்பிக் கொண்டாள் மிரு.
 
 
அடுப்பில் தயாராகிக் கொண்டிருந்த உணவில் இருந்து வந்த வாசனை மூக்கைத் துளைக்க ஆழ்ந்து அதை உள்ளிழுத்து அனுபவித்தவாறு “என்ன யோசிக்கறீங்க...?” என மீண்டும் கேட்டான் விக்கி.
 
 
“அது ஒண்ணும் இல்ல பனீர் பட்டர் மசாலால நாலு ஸ்பூன் சக்கரை தான் போட்டேன், அது போதுமா போதாதான்னு யோசிச்சிட்டு இருக்கேன்...” என்றவுடன் “என்னதுஊஊஊ...” என்று அதிர்வோடு நிமிர்ந்தவன், மிருவையே பார்த்துக் கொண்டிருக்க... “சப்பாத்திக்கு அஞ்சு ஸ்பூன் மிளகாய் தூள் ஓகே தானே...?!” என்றாள் அவனைப் பார்த்துக் கேள்வியாக.
 
 
அதில் மேலும் மிரண்டவன் ‘ஆள விடுங்கடா சாமி’ என மனதிற்குள் முணுமுணுத்தவாறே அங்கிருந்து ஓட முயல, அவன் சமையலறையின் வெளியே கால் வைப்பதற்குள் பின்னாலிருந்து அவன் சட்டையைப் பற்றி இழுத்து நிறுத்திய மிரு, “எங்க போற...? டிபன் ரெடி... இருந்து சாப்பிட்டுட்டு போ...” என்றாள் அத்தனை அக்கறையைக் குரலில் கொண்டு வந்து.
 
 
“ஆத்தா மகமாயி என்னை விட்டுடுமா... வீட்டுக்குள்ள வந்த உடனேயே உங்க இரண்டு பேருக்குள்ளே ஏதோ பிரச்சனைன்னு புரிஞ்சு போச்சு... அப்போவே ஓடி இருக்கணும்னு கொஞ்சம் லேட்டா தான் புத்தி வேலை செய்யுது... அதுக்காக எல்லாம் என்னை வெச்சு விளையாடிடாதே மா தாயே...” என்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டால் அழுது விடுபவன் போல் கெஞ்சியவனைக் கண்டு அடக்கமாட்டாமல் பொங்கிய புன்னகையைத் தனக்குள்ளேயே புதைத்தவள், அவன் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்று உணவு மேசையில் அமர வைத்தாள்.
 
 
அதில் மிரண்டு திருத்திருவென விழித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் திரும்பி அபய்யை ஒரு பார்வை பார்த்துவிட்டு பரிமாறத் தொடங்கவும், அதுவே ‘இப்போ நீ வரப் போறியா இல்லையா...?’ என்று தன்னைக் கேட்காமல் கேட்பது புரிய, அபய் உடனே எழுந்து வந்து சாப்பிட அமர்ந்து இருந்தான்.
 
 
தன் தட்டில் பரிமாறப்பட்ட சப்பாத்தி பன்னீர் பட்டர் மசாலாவை ரசித்து ருசித்துச் சாப்பிடு தொடங்கியிருந்தான் அபய். அவன் சாப்பிடுவதையே நம்பியும் நம்பமுடியாமல் பாவமான ஒரு பார்வையோடு பார்த்தபடி தன் தட்டில் இருந்ததைத் தொட கூடப் பயந்தபடியே அமர்ந்திருந்தான் விக்கி.
 
 
உள்ளே நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கேட்டிருந்த அபய், தன்னையே பாவமாகப் பார்த்துக் கொண்டிருந்த விக்கியை கண்டு எழுந்த புன்னகையைக் கூடத் தனக்குள்ளேயே மறைத்துக் கொண்டான். தன் மீது கோபமாக இருந்தவளை இதோ இப்போது புன்னகை முகமாக இருக்க வைத்ததற்கே விக்கிக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது போன்ற மனநிலையில் தான் இப்போது அவன் இருந்தான்.
 
 
ஆனாலும் அவள் அவனோடு விளையாடிக் கொண்டு இருப்பதைத் தான் தடை செய்தாலோ விக்கியிடம் உணவின் ருசி பற்றி ஏதாவது பேசி அவனைச் சாப்பிட சொல்ல நினைத்தாலோ மேலும் தன் மீது அவளின் கோபம் திரும்ப அதிகமாய் வாய்ப்பு இருப்பதைப் வானிலை அறிக்கையை விடத் துல்லியமாக அறிந்து கொண்டவன் தனக்கும் இங்கு நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போலத் தன் வாய்க்கும் கைக்கும் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருந்தான்.
 
 
இன்னும் விக்கி சாப்பிடாமல் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்னாச்சு விக்கி...? சக்கரை பத்தலையா...?! இன்னும் கொஞ்சம் போட வா...?” என்றபடி சர்க்கரை வைத்திருந்த குடுவையை அவன் அருகே நகர்த்தி அதைத் திறக்க மிரு முயல, அவனின் கண்களில் மரணபயம் வந்து போனது.
 
 
‘இதிலிருந்து எனக்கு விமோசனமே இல்லையா...?! என்னை யாராவது காப்பாற்ற மாட்டீங்களா...?!’ என்பது போலச் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றியபடியே அவன் அமர்ந்திருக்க... இப்போது அவனின் நிலையைக் கண்டு வாய் விட்டு சிரித்த மிரு “சும்மாதான் சொன்னேன், சாப்பிடு...” என்று இயல்பான குரலில் கூறவும் ‘உன்னை நம்பலாமா...?’ என்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் விக்கி.
 
 
பின் மெல்ல தயங்கி தயங்கி ஒரு வாய் ருசி பாத்தவன், அதன் சுவையில் மயங்கி 6 சப்பாத்தியை காலி செய்துவிட்டு அங்கிருந்து எழுந்திருந்தான்.
 
 
காரில் மூவரும் படப்பிடிப்புத் தளத்தை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கையில் வெகு நாளைக்குப் பிறகு தன் குடும்பத்தை நினைவு படுத்தியதாக மிருவின் சமையலை பற்றிக் கூறியவனின் முகம் நெகிழ்ந்து இருந்ததில் இருந்தே அவன் சற்று உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறான் என்பது இருவருக்கும் புரிந்து போனது.
 
 
விக்கியின் குணத்திற்கு அவ்வளவு எளிதில் உணர்ச்சிவசப்படுபவன் அவன் இல்லை, எதையும் சற்று இயல்பாக எடுத்துக் கொள்ளக் கூடிய குணம் உடையவன். எதிர்பாராமல் நடந்த ஒரு குடும்பத் தகராறில் ஒரே நேரத்தில் தாய் தந்தையை இழந்து பணம் வசதி இருந்தும் அனாதை ஆகிப் போன தன் நிலையை அபய்யிடம் மட்டுமே கூறியிருக்கிறான் என்பதனால் அவனின் இன்றைய ஏக்கமும் நெகிழ்வும் அபய்க்கு நன்றாகவே புரிந்தது.
 
 
ஆனால் மிருவுக்கு இது எதுவும் புரியவில்லை என்றாலும் அவனின் குரலில் இருந்த ஏதோ ஒன்று மிருவை கொஞ்சமும் யோசிக்காமல் “இனி தினமும் மூன்று வேளையும் இங்கே தான் உனக்குச் சாப்பாடு...” என்று சொல்ல வைத்திருந்தது.
 
 
மிருவை படப்பிடிப்புத் தளத்தில் இறக்கிவிட்டு விட்டு சிறிது நேரம் அங்கு நடக்கும் பணிகளைக் கவனித்து முடித்த அபய் விக்கியோடு சேர்ந்து அலுவலகத்திற்குச் சென்று விட்டான்.
 
 
இதற்கிடையில் தன் பாட்டியின் உடல்நிலை ஓரளவு தெரிய பிரணப் ஊர் திரும்பி இருந்தவன், கொஞ்சமும் எதிர்பாராத மிருவின் திருமணச் செய்தியை கேட்டு முற்றிலும் அதிர்ந்து போனான்.
 
 
அவனுக்கு மிருவை ஆரம்பத்தில் கல்லூரியில் பார்த்த போதே ரொம்பப் பிடித்துப் போயிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவளோடு பழகி நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் வந்த பிறகு காதல் என்ற வார்த்தையின் மேலும் திருமணம் என்ற வார்த்தையின் மேலும் அவளுக்கு இருக்கும் கோபமும் வெறுப்பும் அவனுக்குத் தெரிய வந்தது.
 
 
அதற்கான காரணம் என்னவென்று அவனுக்குத் தெரியாவிட்டாலும் கூட அவளுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை பேசி அதைச் செய்யச் சொல்லி வற்புறுத்தி அவள் மனதை கஷ்டப்படுத்தவும் அதனால் தங்களுக்கு இடையே இருக்கும் இந்த இனிமையான உறவை கெடுத்துக் கொள்ளவும் அவன் விரும்பவில்லை.
 
 
ஒருநாள் இந்த நிலை நிச்சயம் மாறும் என்று நினைத்திருந்தான். ஆனால் மாற்றம் இப்படி அமையும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆரம்பம் முதலே அபய் மிருவிடம் சற்று அதிகப்படியான உரிமை எடுத்துக் கொள்வது போல அவனுக்குத் தோன்றவே தான் அவனிடம் அவ்வப்போது சிடுசிடுப்பான்.
 
 
மிருவின் மனம் வருந்தக் கூடாது என்றும் அவள் எதனாலும் கவலை கொள்ளக் கூடாது என்றும் நினைத்ததனாலேயே தனக்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்றாலும் உதய்யிடம் ஒவ்வொரு முறையும் அவன் கோபம் காட்டியது.
 
 
அவன் மனதில் வேறு ஒரு திட்டமும் கூட இருந்தது அது மிரு எப்போதாவது மனம் மாறி திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தால், அவள் ஆசையோடு வளர்க்கும் சுபியை சட்டப்பூர்வமாகத் தத்து எடுத்துக் கொள்ளக் கூட நினைத்திருந்தான். இதன் மூலம் பாயலுக்கு வேறொரு வாழ்க்கை அமைவது என்பதும் அவனின் எண்ணமாக இருந்தது.
 
 
ஆனால் எல்லாம் இப்படித் திடீரெனத் தலைகீழாக மாறும் என அவன் கனவிலும் நினைக்கவில்லை. நண்பர்களிடம் மெல்ல விசாரித்தவனுக்கு முன்பே இருவருக்கும் அறிமுகம் இருக்கும் எனக் கணித்ததைக் கூறியவர்களுக்கு இந்த எதிர்பாராத திருமணத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை. என்றனர்.
 
 
அதைக் கொண்டு இருவரும் முன்பே காதலித்துப் பிரிந்தவர்களாக இருப்பார்கள் என யோசித்தவன் மனதில், ‘அதான் விட்டுட்டு போய்டானே இப்போ எங்கிருந்து வந்து குதிச்சான்...’ என்ற எண்ணம் தான் தோன்றியது.
 
 
மேலும் ஒரு வாரம் சென்றிருந்தது... தினமும் இதே போலத்தான் நடந்து கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் மிருவை இயல்பாக அவனோடு பேச வைக்க முடியவில்லை. அனைத்து வேலைகளையும் கவனிப்பது சமைப்பதில் தொடங்கி அவனுக்குத் தேவையானது வரை என்று பார்த்து பார்த்து செய்பவள் அவளோடு இயல்பாகப் பேசிப் பழக மட்டும் கொஞ்சமும் செய்யவே இல்லை.
 
 
ஒரு நாள் தன் பொறுமை காற்றில் பறக்க, “என்ன தான்டி நினைச்சுகிட்டு இருக்கே...” என்று தான் பேச பேச கொஞ்சமும் காதில் வாங்காமல் தன்னைக் கடந்து செல்ல முயன்றவளை கைகளைப் பிடித்துத் தடுத்து நிறுத்தி அபய் கோபத்தோடு படபடத்தான்.
 
 
அதில் மிரு கோபத்தோடு அபய்யை முறைக்க, “பேசுவீயா...? மாட்டியா டி...?” என்றவனை ஒரு பார்வை பார்த்து விட்டு “மாட்டேன்...” என்றாள் திட்டவட்டமான குரலில்.
 
 
“மாட்டே...?”
 
 
“மாட்டேன்...”
 
 
“மாட்டே...?”
 
 
“மாட்டேன்...”
 
 
“மாட்டே...?” என வேறு வேறு மாடுலேஷனில் அபய் கோபத்தோடு கேட்டுக் கொண்டே செல்ல, அதற்கு ஏற்ற குரலில் அதே போலப் பதில் அளித்துக் கொண்டே வந்தவள், இறுதியாக அவன் பல்லை கடித்தபடி கேட்ட விதத்தில் லேசாக மனதில் தோன்றிய பயத்தை மறைத்தவறே “மாட்டேன் இப்போ என்ன...?” என்று பதிலுக்கு அவளும் எகிறினாள்.
 
 
அதற்குச் சற்றும் யோசிக்காமல் “அப்போ ஒகே நான் பேசிட்டு போறேன்...” என்று அபய் வெகு சாதரணமான குரலில் கூறவும், நிச்சயம் கோபப்படுவான், சண்டையிடுவான், என்றெல்லாம் எண்ணி இருந்தவள் அவனின் இந்தப் பதிலில் திகைத்து நின்றாலும் இதழின் ஓரம் புன்னகையில் துடித்தது.
 
 
அதை வெளிக்காட்டாமல் மறைத்தபடியே மிரு அபய்யை முறைக்க முயன்று கொண்டு இருக்க, “அதான் சிரிப்பு வருதே லட்டு பேபி, சிரிச்சிடு... மாமூ வேணும்னா திரும்பி நின்னுக்கறேன்...” என அவளின் கன்னத்தைக் கிள்ளி விட்டு மிரு பத்ரகாளி அவதாரம் எடுப்பதற்குள் அங்கிருந்து ஓடிவிட்டான் அபய்.
 
 
இப்படியே விதவிதமாக அவளை வம்பிழுப்பதையே தன் முழு நேர வேலையாக வைத்திருந்தான் அபய். ஆனால் மிரு இது எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.
 
 
ஒரு நாள் படபிடிப்புத் தளத்திற்குச் சென்றிந்த அபய்யிடம் படத்தின் இயக்குனரின் தங்கை அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கவும், மற்றவர்கள் எல்லாம் தங்கள் வேலையில் பிஸியாக இருக்கவும் அபய்யும் இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தான்.
 
 
அதன் பிறகு அவர்களுக்குள் நல்ல ஒரு நட்பு உருவாகி இருந்தது. அபய் அங்குச் செல்லும் நேரங்களில் எப்போதாவது அவளும் வர நேர்ந்தால் இருவரும் சற்று அதிக நேரம் பேசிக் கொண்டு இருப்பார்கள்.
 
 
இது எல்லாம் சும்மாவே ஆடிக் கொண்டு இருந்த மிருவின் காலில் சலங்கை கட்டி விட்டதைப் போல ஆகியது. மிருவின் கண்களில் தெரிந்த பொறாமையை எதிர்பாராமல் கண்ட அபய், அதைத் தூண்டிவிட்டே அவளைத் தன் வழிக்குக் கொண்ட வர திட்டமிட்டான்.
 
 
அன்றும் அதே போலத் தான் இருவரும் பேசிக் கொண்டு இருக்க, காட்சி மாறி இவர்கள் அமர்ந்து இருந்த இடத்தில் காட்சி படமாக்க பட இருந்ததால் இருவரும் எழுந்து சற்று தள்ளி சென்று நின்று கொண்டு தங்களின் பேச்சை தொடர்ந்தனர்.
 
 
அபய் கிளம்ப வேண்டி இருந்ததால் வேறு எங்கும் சென்று அமரவோ, கேர வேனுக்குள் செல்லவோ இல்லாமல் அப்படியே நின்று இருக்க, இதைக் கண்ட மிருவுக்கு மனதின் ஓரம் ஒரு படபடப்பு ஏற்படத் தொடங்கி அது தவிப்பாக மாறியது.
 
 
புன்னகை முகமாக இருவரும் பேசிக் கொண்டு இருப்பதையும், இயல்பான நெருக்கத்தோடு நின்று இருப்பதையும் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்களுக்கு அருகில் போவதும் பின் நெருங்கி போக முடியாமல் பின் வாங்குவதுமாகவும் மிரு நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தாள்.
 
 
அப்படி ஒரு முறை மீண்டும் நெருங்கி வந்து விட்டு திரும்பி செல்ல முயன்றவளின் கையைப் பின்னால் இருந்து ஒரு சுழற்று சுழற்றி தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்து அவளின் தோளில் கை போட்டு கொண்ட அபய், “இன்னுமா லட்டு மாமன் மேலே சந்தேகம்... நான் உன் ப்ராபர்டி டா லட்டு...” என அவளின் செவியில் மெல்ல கிசுகிசுத்தான்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 26
 
மேலும் நாட்கள் இப்படியே சென்று கொண்டு இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் மிருவின் அபய் மீதான கோபத்திற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை, அவளை வாயை திறக்க வைக்கவும் முடியவில்லை.
 
 
மிருவின் தன் மேலான பொசசிவ்னஸ் பற்றித் தெரிந்தவன் அதைத் தூண்டியாவது அவளைத் தன்னை நெருங்க வைக்க எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் தான் முடிந்தது.
 
 
அபய் ஒவ்வொரு முறையும் மிருவின் பொசசிவ்னஸை தூண்ட வேறு யாரோடாவது நெருக்கமாகப் பேசிக் கொண்டோ பழகிக் கொண்டு இருப்பது போலக் காட்சிப்படுத்த முயன்றதற்கு எல்லாம் அவளிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் தென்படவே இல்லை.
 
 
இப்படி எல்லாம் செய்தால் கோபப்படுவாள், தன்னோடு சண்டை போடுவாள் அப்படியாவது தன்னிடம் உரிமை எடுத்துக் கொண்டு பழைய அவனின் லட்டு வெளி வருவாள் என்று அபய் காத்திருக்க... அவளோ ஆரம்பத்தில் வெளிப்படுத்திய சிறு பதட்டம் கூட இப்போது இல்லாமல் வெகு இயல்பாக இப்படி ஒரு காட்சியைத் தன் கண்கள் பார்த்தது போலக் கூடக் காட்டிக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து கொண்டு இருந்தாள்.
 
 
இதில் அதிகம் குழம்பிப் போனது அபய் தான். எத்தனையோ பிரச்சினைகளைத் தொழில்முறை சிக்கல்களை அனாயாசமாகக் கையாண்டவன் தான், ஆனால் தன் கைகளில் தவழ்ந்த இந்தக் குட்டி புயலின் முன் செயலற்று பிரமித்து நிற்க செய்து கொண்டிருந்தாள் அவனின் லட்டு ராட்சசி.
 
 
பாவம் இந்தக் குழப்பத்திற்கு எல்லாம் அவசியமே இல்லை அவளின் இந்த அமைதி இங்கு மட்டும்தான் என்று தெரியாமல் போனது அபய்க்கு. அதே நேரம் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அவளின் கோபத்தை எல்லாம் வகை வகையாக டிசைன் டிசைனாக அபய்யின் மேல் வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் அவனின் செல்ல பொண்டாட்டி.
 
 
அவன் சாப்பாட்டில் மட்டும் அதிகக் காரத்தைக் கொட்டி வைப்பது, உறங்க தயாராகுபவனின் மேல் தெரியாமல் கொட்டுவது போலக் குளிர்ந்த நீரை ஊற்றுவது, குளிக்க அவன் செல்லும் நேரம் பார்த்துத் தண்ணீர் வரும் வால்வை மூடி வைப்பது, அன்று அணிவதற்காக அபய் எடுத்து வைக்கும் உடையைக் கொண்டு சென்று வாஷிங்மெஷினில் ஊறவைப்பது என்று அடுக்கடுக்கான தண்டனைகளை மூன்று நாட்களாக வேறு வேறு வகையில் தொடர்ந்து மிரு கொடுத்துக் கொண்டிருக்க... நம்பி நிம்மதியாக வீட்டிற்குள் தண்ணீர் குடிக்கக் கூட முடியாமல் அபய்க்கு பயந்து பயந்து வந்தது.
 
 
இவற்றால் அபய் பெரும் அவதிக்கு ஆளானாலும் ஒருமுறை கூட மிருவிடம் அவன் தன் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. அதற்காக இவற்றால் கோபம் வரவில்லை என்பது இதற்கு அர்த்தமல்ல, சில நேரங்களில் உச்சபட்ச கோபத்திற்குக் கூட ஆளாகி இருக்கிறான்.
 
 
ஆனால் அதை அவன் அவளிடம் வெளிக்காட்டாமல் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டதற்குக் காரணம் அப்படியாவது தன்மேலான அவளின் கோபம் குறையுமா என்ற ஒரு சிறு எதிர்பார்ப்புதான்.
 
 
எத்தனை முறை கேட்டும் எவ்வளவோ முயற்சித்தும் என்ன கோபம் எதற்கு இந்தக் கோபம் என்று தான் கூறவில்லை இப்படியாவது அவளின் கோபத்தைத் தணித்துக் கொள்ளட்டும் என்று அமைதியாகி விட... ஒவ்வொரு முறையும் அபய்யின் செயல்களுக்கு இப்படி மட்டுமே எதிர்வினை ஆற்றி கொண்டிருந்தாள் மிரு.
 
 
இங்கு இப்படிச் சென்று கொண்டிருக்க... அங்கு உதய் பாயல் வாழ்க்கையிலோ மெல்ல மெல்ல அழகிய மாற்றம் உருவாகத் தொடங்கியிருந்தது. ஆரம்பத்தில் உதய்யிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தவளால், அவனின் பெற்றோரிடம் அப்படியிருக்க ஒரு சதவீதம் கூட முடியவில்லை.
 
 
உதய்யின் கரங்களால் மாங்கல்யம் ஏறிய அடுத்த நொடி தன்னை மகளாக அரவணைத்துக் கொண்ட அந்த இரு அன்பு உள்ளங்களின் பாசத்தில் நெகிழ்ந்து தான் போனாள் அவள்.
 
 
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் அன்பான குடும்பத்தில் வளர்ந்து இருந்தவளுக்கு இப்போது சில வருடங்களாகத் தன் குடும்பம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத ஒரு அனாதரவான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு இப்படி ஒரு அன்பான தாய் தந்தை மாமியார் மாமனார் ரூபத்தில் எதிர்பாராமல் கிடைத்ததில் அவர்களின் மகளாகவே மாறிப் போனாள்.
 
 
அவர்களோடு பேசி பழகிய சில நாட்களிலேயே அவர்களின் பண வளமும் குடும்பப் பாரம்பரியமும் என அனைத்தையும் அவ்வப்போது ஏற்படும் சில பல பேச்சுக்களின் மூலம் அறிந்துக் கொண்டவளுக்கு முற்றிலும் திகைப்பாக இருந்தது.
 
 
எந்த ஒரு மன சுணக்கமும் இல்லாமல் தன்னை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் தன் குழந்தையை அவர்களின் பேர குழந்தையாகக் கொஞ்சி கொண்டாடுவதைக் கண்டு எப்படி இப்படி இவர்களால் இருக்க முடிகிறது என இந்த இடைப்பட்ட நாட்களில் அவள் யோசிக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இருந்தது அவளின் நாட்கள்.
 
 
எத்தனையோ பெரிய மனிதர்கள் அவர்களின் மகளை உதய்க்குத் திருமணம் முடிக்கத் தயாராக இருப்பதை அறிந்து கொண்டவள், அதெல்லாம் வேண்டாம் என மறுத்து உதய் தன்னை ஏன் மணக்க வேண்டும்...? என்ற கேள்வி எழாமல் இல்லை. சுபிக்காக என்று வைத்துக் கொண்டாலும் கூடச் சுபியின் மேல் இவ்வளவு பாசம் வர என்ன காரணம் என்பதும் அவளின் மனதை பெரிதாகக் குழப்பிக் கொண்டிருந்த ஒரு கேள்வி
 
 
உதய்யின் பெற்றோர்கள் கூடத் தன்னை ஏற்றுக் கொண்டது அவர்கள் பிள்ளையின் விருப்பத்திற்காகத் தான் என்று புரிந்து இருந்தாலும் அதையும் அவர்கள் மனதார செய்திருந்தது அவர்களின் ஒவ்வொரு செயலிலும் தெரிந்துக் கொண்டுதான் இருந்தது. தன் கேள்விக்கான விடை அவர்களிடமும் இருக்காது எனத் தெரிந்து கொண்டவள், அதற்கான விடையைத் தேடி அதற்குரியவனின் முன் சென்று நின்றாள்.
 
 
முதல் முறையாகத் தன்னைத் தேடித் தன் முன் வந்து நின்றவளை ஆச்சரியம் கலந்த சந்தோஷத்தோடு பார்த்தவன் எதுவாக இருந்தாலும் அவளே பேசட்டும் எனக் காத்திருக்க... தன் கேள்விகளை எல்லாம் ஒன்று விடாமல் கடகடவென அவன் முன்வைத்தவள், ஒரு எதிர்பார்ப்போடு கூடிய குழப்பம் சுமந்த முகத்தோடு உதய்யின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
 
 
அதிலேயே அவளின் மனநிலையை முழுதாகப் புரிந்துக் கொண்டவன் அவளின் கரங்களைப் பற்றி அழைத்துச் சென்று தன் அருகில் அமர வைத்துக் கொண்டு ஆரம்பத்தில் அவளைப் பார்த்ததில் தொடங்கி அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான்.
 
 
உதய்யின் வார்த்தைகளைக் கேட்டு நம்ப முடியாமல் திகைத்து உறை நிலையில் அமர்ந்திருந்த பாயலுக்கு அவனின் காதலும் அதில் இருந்த பிரதிபலன் எதிர்பாராத காத்திருப்பும் இதோ இந்த நிமிடம் வரை தன்னை மனைவியாக்கிக் கொண்ட பிறகும் அவன் காக்கும் கண்ணியமும் தன் மனதிற்கு அளிக்கும் மதிப்பும் என ஒன்றன் பின் ஒன்றாக மனதிற்குள் ஓடியதில் வார்த்தைகள் அற்றுச் சிலையாகிப் போனாள் பாயல்.
 
 
உதய்யின் காதல் அவளைப் பிரமிப்பின் உச்சத்தில் நிறுத்தியிருந்தது. சிறு இடைவெளிக்குப் பிறகு உதய் பாயலின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியவன், “இதற்காக எல்லாம் உன்னை நீயே கஷ்டபடுத்திக் கொண்டு என்னோடான வாழ்க்கைக்குத் தயாராக வேண்டிய எந்த அவசியமும் இல்லை...” என்று கூறியவன்,
 
 
“நீ என்ன முடிவு எடுத்து இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாயோ, அதன்படியே இரு... சுபியின் வாழ்க்கை தான் நமக்கு முக்கியம், உனக்கே எப்போ என்னைக் கணவனாகப் பார்க்க மனம் எண்ணுகிறதோ அப்போ நம் காதல் வாழ்க்கையைத் தொடங்கலாம்... இல்லை என்றாலும் இப்படியே சுபியின் தாய் தந்தையாக நம் வாழ்க்கைப் பயணம் என் வாழ்நாள் முழுக்கத் தொடரும்...” என்று கூறி அவளுக்குத் தைரியம் அளித்து விட்டுச் சென்றுவிட்டான் உதய்.
 
 
அதன் பிறகு இரண்டு மூன்று நாட்கள் எடுத்துப் பொறுமையாக அனைத்தையும் யோசித்துப் பார்த்தவளுக்கு நிதர்சனம் என்பது என்னவென்று புரிய, உதய்யோடான வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல தன்னைத் தன் மனதை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டவள் அதற்கான முயற்சிகளில் முழுமனதாக இறங்கும் முடிவுக்கு வந்து இருந்தாள்.
 
 
இதற்கெல்லாம் சற்று நாள் எடுக்கும் தான், அனைத்தையும் மறந்து ஓர் இயல்பான வாழ்க்கையை வாழத் தொடங்க வேண்டுமனால் அது அத்தனை கடினம் ஒன்றும் இல்லை என்பது சில நாட்களிலேயே அவளுக்குப் புரிந்து போனது... விரைவில் அவர்களின் வாழ்க்கை வண்ணமயமாக மாறும்.
 
 
வழக்கம் போல ஒரு நாள் மாலை அபய், மிரு, விக்கி மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் அபய்யோடுதான் காலையும் மாலையும் பயணித்துக் கொண்டிருந்தாள் மிரு.
 
 
அதை ஒரு நாளும் அவள் வேண்டாம் என்று கோபத்தில் கூட மறுக்கவில்லை. இதற்கு முன்பு தானே தனியாகப் பயணித்துக் கொண்டிருந்தவள் தான் என்றாலும் ஏனோ இப்போது அப்படிப் போவதாக வார்த்தைக்குக் கூட அவனிடம் ஒரு நாளும் அவள் சொல்லவில்லை. இது எல்லாமே அவளின் மனதை தெள்ளத் தெளிவாக ஒவ்வொரு நாளும் அபய்க்கு உணர்த்திக் கொண்டே தான் இருந்தது.
 
 
ஆனால் இதை அனைத்தையும் மீறி தன் மேல் அவள் கோபமாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் வழக்கம் போல அவளை அவ்வப்போது சீண்டிக் கொண்டே தான் இருந்தான் அபய்.
 
 
அப்படியாவது தன் இறுக்கத்தை விட்டு வெளிவந்து மிரு மனதை திறக்க மாட்டாளா என்ற எதிர்பார்ப்போடு. அதே போலத்தான் இன்றும் அவளை அபய் சீண்டிக் கொண்டிருக்க... பொறுத்து பொறுத்து பார்த்தவள் கோபமாக முகத்தைச் சுழித்து அபய்யை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் திரும்பி கொண்டாள்.
 
 
இதுதான் சந்தர்ப்பம் என்று எண்ணியவன் மேலும் மேலும் மிருவிடம் வம்பிழுத்து அவளை வெறி ஏற்றிக் கொண்டு இருக்க... பின்னால் அமர்ந்திருந்த விக்கிக்கு சில நாட்களாக வாட்ஸ்-அப்பில் அதிகம் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு காமெடி வீடியோ தான் நினைவுக்கு வந்தது. “ஒரே தாலி லைப் டோட்டல் காலி...” என்று அந்த நினைவில் மெல்ல முணுமுணுத்துக் கொண்டான் விக்கி.
 
 
ஆனால் பாவம் அவனின் போதாத நேரம் அவன் முணுமுணுத்தது முன்னால் இருந்த இருவரின் காதுகளிலும் தெளிவாக விழ, மிரு திரும்பி ஒரு முறைப்பான பார்வை பார்த்து வைத்தாள் என்றால் அபய்யோ கூலாக ஜனகராஜ் மாடுலேஷனில் “ஆமாம்பா ஆமாம்...” என்று கூறியிருந்தான்.
 
 
அதில் ஆரம்பம் முதலே அவனால் கடுப்பின் உச்சத்தில் இருந்த மிரு ஆத்திரத்தில் அவனின் இடது கையில் பட்டென ஒரு அடி கொடுத்து இருந்தாள். அதில் அபய் கையே உடைந்து போனது போல ஆவென அலறி சீன் கிரியேட் செய்ய...
 
 
“அடங்கப்பா சாமி என்னால இந்தக் கொடுமையெல்லாம் பாக்க முடியல டா... என்னை எங்கேயாவது பாலைவனத்துல கூட்டிட்டு போய் விட்டுடுடங்கடா...” என்று சத்தமாகவே புலம்பினான் விக்கி.
 
 
அதில் விக்கியை திரும்பி மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்தாளே தவிர மிரு வேறு எதுவும் பேசவில்லை. அபய்யோ “உனக்கு என்னடா பிரச்சனை...” எனச் சிடுசிடுத்தான். “பின்னே என்ன பாஸ் சும்மா எங்க அண்ணி சும்மா தொட்டதுக்கே ஓவர் சீன் போட்டுட்டு இருக்கீங்க... இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா...?” என்று குறைபட்டுக் கொள்ளும் குரலில் விக்கி மிருவின் பக்கமாகப் பேசவும்,
 
 
“எது சும்மா தொட்டாளா...?! ஒரு அடி வாங்கிப் பாருடா அப்ப தெரியும்... அடியா அது இடிடா இடி...” என்று அபய் அழுவது போன்ற குரலில் பதிலளித்தான்.
 
 
“ஆமா... ஆமா... இப்போ கொஞ்ச நாளா டைல்ஸ்ல வெச்சுத் தேச்சா கடப்பாரையே தேஞ்சு போயிடும்ன்னு சொல்லி ஆட்ன்னு ஒண்ணைப் போட்டு ஊரை ஏமாத்திட்டு இருக்கானுங்களே அந்தக் கதையா இருக்கு இது... அவங்க அந்தப் பஞ்சு போல இருக்கு கையில அடிச்சதுல இந்தத் தினமும் ஜிம்மிலேயே 2 மணிநேரம் உட்கார்ந்து முறுக்கேற்றி இருக்கிற உடம்பு வலி எடுக்கத்தான் செய்யும்...” என்று நொடித்துக் கொண்டு வெளி பக்கம் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டான் விக்கி.
 
 
அவன் பேசிய ஸ்டைலிலும் சொன்ன வார்த்தையிலும் அவ்வளவு நேரம் இருந்த கோபம் கூட மறைந்து லேசாக இதழ்களில் புன்னகை எட்டிப் பார்க்கத் தொடங்கியது மிருவுக்கு, அதைப் பார்த்தும் பார்க்காதது போல அபய் வாகனத்தைச் செலுத்துக் கொண்டிருந்தான்.
 
 
“ஆனா பாஸ் இந்தக் கொஞ்ச நாள்ல எனக்கு ஒரு உண்மை தெளிவாகி இருக்கு...” என்று எதுவோ ஞானோபதேசம் பெற்றது போன்ற ஒரு குரலில் விக்கி திடீரெனத் தொடங்கவும் இவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்பது போல ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அபய் விக்கியை திரும்பிப் பார்க்க... “நிஜம்தான் பாஸ்...” என்று மீண்டும் அதே குரலில் பதிலளித்தான் விக்கி.
 
 
“அப்படிச் சாருக்கு என்ன உண்மை புரிஞ்சுதுன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா நல்லா இருக்கும்...” என்று அபய் கேட்கவும், அவன் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல விக்கி “சிங்கிள் தான் கெத்துப் பாஸ், அந்த உண்மை எனக்கு இப்போ கொஞ்சம் கூடச் சந்தேகம் இல்லாமல் தெளிவா புரிஞ்சிடுச்சு...” என்று முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கூறவும், அவன் தன்னைத்தான் கலாய்க்கிறான் என்று தெளிவாகப் புரிந்து கொண்ட அபய் தன் எதிரே இருந்த கண்ணாடியின் வழியே அவனை முறைக்கத் தொடங்கவும், எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டான் விக்கி.
 
 
சற்று தாமதமாகவே மிருவுக்கு விக்கி சொன்ன வார்த்தைகளில் இருந்த பொருள் புரிய, “இப்போ அவன் என்ன சொன்னான்...?” என்று அதற்கும் அபய்யிடமே முறைத்துக் கொண்டு பற்களை நரநரத்தவாறே கேள்வியை அவள் கேட்க தொடங்கவும் ‘இது தேவையா...?!’ என்பது போன்ற ஒரு பார்வையை விக்கியை நோக்கி அபய் செலுத்த, வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாலும் அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த விக்கி ஏதும் அறியாத பாவனையோடு “ஏதோ புருஷன் பொண்டாட்டி பிரச்சினை போல, நமக்கு எதுக்கு ஊர் வம்பு... நாம வழக்கம் போல ஒரு நல்ல பிரஜையா நாம உண்டு நம்ம சோஷியல் சர்வீஸ் உண்டுன்னு காலத்தை ஓட்ட வேண்டியதுதான்...” என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்வது போலச் சத்தமாகவே கூறியவன் “கொஞ்சம் வண்டியை ஸ்லோ பண்ணுங்க பாஸ்...” என்றான்.
 
 
விக்கியின் இது போன்ற சேட்டைகளை எல்லாம் பல வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருப்பவன் என்பதனால் அபய்க்கு இவை எல்லாம் வித்தியாசமாகத் தோன்றவில்லை. இப்போதும் கூட ‘எதற்காக வண்டியை மெதுவாக ஓட்ட சொல்கிறான் ஒருவேளை எகிறி குதித்து வெளியே ஓட போகிறானோ...?!’ என்று தான் தோன்றியது.
 
 
விக்கி எப்போது என்ன செய்வான் என்று அவனுக்கே தெரியாத போது அபய்க்கு எப்படித் தெரியும். ஆனால் அபய் யோசித்தது போல எல்லாம் விக்கி எதுவும் செய்யாமல் தான் அமர்ந்திருந்த பக்கம் இருந்த கதவின் கண்ணாடியை கொஞ்சமாகக் கீழே இறக்கியவன் தங்களுக்கு அருகில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தைப் பார்த்து “ஹலோ மேடம், ஸ்டாண்ட்... ஸ்டாண்ட்...” என்று கூறவும் அந்த வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணோ இவனைத் திருதிருவெனப் புரியாத பாவனையோடு பார்த்து முழிக்க... அதில் கொஞ்சம் சத்தமாக “ஸ்டாண்ட்...” என்று அவளை நோக்கி கைகளை நீட்டி விக்கி மீண்டும் சொல்லவும், அவனைப் பார்த்து முழித்தபடியே ஒரு மெல்லிய தலை அசைப்பை விக்கிக்கு பதிலாகத் தந்தவாறே வாகனத்தைச் செலுத்திக் கொண்டே எழுந்து நிற்க தொடங்கியிருந்தாள் அவள்.
 
 
அதில் விக்கி ‘ஙே’ என விழிக்க அவ்வளவு நேரமும் இவனின் செயல்களை எரிச்சலோடு புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மிரு அடக்கமாட்டாமல் சத்தம் போட்டு சிரித்து இருந்தாள். அதில் மேலும் விக்கியின் முகம் பல்பு வாங்கியது போல ஆகியது.
 
 
தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு விக்கியின் முகத்தைப் பார்த்து மேலும் விழுந்து விழுந்து சிரித்தவள் அபய்யின் பக்கம் திரும்பி “இந்தப் பொண்ணோட அட்ரசை உடனே தேடி கண்டுப்பிடி மாமூ... இவ தான் இவனுக்குச் சரியான ஆளு, அந்தப் பொண்ணைப் பிடிச்சு எப்படியாவது இவன் தலையில கட்டி வெச்சா தான் இவன் போடற ஆட்டமும் ஓவரா பேசற வாயும் கொஞ்சமாவது அடங்கும்...” என்று வெகு சாதாரணமாக அபய்யிடம் தன் கோபத்தை எல்லாம் மறந்து பேசிக் கொண்டே சென்றாள்.
 
 
“கருணையில்லா வஞ்சகம் சூழ் உலகு... நல்லது செய்யப் போய் ஒரு சின்னப் பையன் பல்பு வாங்கி இருக்கானே, அவனுக்காக வருத்தப்படுவோம்னு இல்லாமல் அவன் வாழ்க்கை ஃபுல்லா பல்பு வாங்குறதுக்கு வழி தேடுறாங்க... இவங்களையெல்லாம் நம்பி ஒரு சின்னப் பையன் எப்படி இந்த உலகத்துல தனியா நிம்மதியாக வாழ முடியும்...” எனத் தனக்குத்தானே புலம்புவது போலத் தன்னை நினைத்தே வருத்தப்பட்டு விக்கி பேசிக் கொண்டே சென்றான்.
 
 
“சின்னப் பையனா அந்த வண்டியில் அப்படி யாரும் இருந்தது போலத் தெரியலையே விக்கி... உன் ஆள் மட்டும் தனியா தானே போச்சு...” என அவன் சொல்ல வருவது புரியாதது போலவே மிரு அப்பாவியான குரலில் கேட்டாள்.
 
 
அதில் அபய்யும் அவளோடு இணைந்து கொண்டு விக்கியை கலாய்க்க தொடங்கவும் நிலைமை சற்று இயல்புக்குத் திரும்பி ஒரே சிரிப்பும் சந்தோஷமுமாக முடிந்தது அந்தப் பயணம்.
 
 
இதே மனநிலை அவர்கள் வீடு திரும்பி மிரு இரவு உணவு சமைத்து மூவரும் சாப்பிட்டு முடித்து விட்டு விக்கி அங்கிருந்து கிளம்பும் நேரம் வரும் வரையிலும் கூட நீடித்தது.
 
 
சரியாக விக்கி வீட்டிற்குக் கிளம்ப இருந்த நேரத்தில் அபய்க்கு ஒரு அழைப்பு வர அதைப் பேசிவிட்டு வைத்தவன், விக்கியோடு சேர்ந்து அதைப் பற்றிக் கலந்தாலோசிக்கத் தொடங்கியிருந்தான். அதைக் கேட்கக் கேட்க அது வரை இருந்த மனநிலை முற்றிலுமாக மாறி கொஞ்சம் கொஞ்சமாகக் கொதி நிலைக்குச் சென்று கொண்டிருந்தாள் மிரு.
 
 
விஷயம் இதுதான் அபய் தன் தொழில் சம்பந்தமாக முன்பே கையெழுத்திட்டு இருந்த ஒப்பந்தத்தின்படி பதினைந்து நாள் பயணமாக யூரோப் செல்ல வேண்டியிருந்தது. அதைப் பற்றிய பேச்சு வார்த்தையைத் தான் விக்கியோடு அபய் நடத்திக் கொண்டிருந்தான்.
 
 
தாங்கள் என்னென்ன ஏற்பாடுகள் செய்து முடித்து இருக்கிறோம் என்பதில் தொடங்கி இன்னும் என்னென்ன தேவைகள் எவற்றைத் தயார்படுத்த வேண்டும் அங்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டு இருந்தவாறு எல்லாம் தயாராக உள்ளதா... என்றெல்லாம் பேசி முடித்து விக்கியை வழியனுப்பி விட்டு அபய் கதவை அடைத்த மறு நொடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி கொண்டிருந்தாள் பத்திரகாளியாக மாறி இருந்த அவனின் மனையாள்.
 
 
“எப்போடா என்னை விட்டுட்டு தூரமா ஓடிப் போகலாம்னு நேரம் பார்த்துட்டு இருப்பியா நீ...?” என்று கேட்டபடி அபய்யின் சட்டையைப் பிடித்து அவள் உலுக்கியதில் முதலில் விஷயம் புரியாமல் திகைத்தவன் பிறகு அவள் கூற வருவது புரிந்து “லட்டு அப்படி இல்லடா...” என்று தொடங்கிச் சமாதானம் செய்ய எடுத்த முயற்சி எல்லாம் பலனளிக்காமல் தான் போனது.
 
 
“என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டியா மாமூ நீ...! அன்னைக்கும் புரிஞ்சுக்கல இன்னைக்கும் புரிஞ்சுக்கல...! எப்போதான் என் மனசு உனக்குப் புரியும் மாமூ...? என்னையும் என் மனசையும் புரிஞ்சிக்கவே மாட்டியா மாமூ...?!” என்று உயிர் உருக்கும் குரலில் கேட்டபடி மடிந்து அமர்ந்து அழுது கொண்டே இருந்தவளை கண்டு திகைத்து நின்றிருந்தான் அபய்.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 604
Topic starter  
உயிர் – 27
 
திடீரெனத் தன் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்டபடி மிரு அழுகத் தொடங்கவும் முதலில் புரியாமல் திகைத்த அபய் பிறகு “பேபி இது இப்போ இல்லடா, எட்டு மாசத்துக்கு முன்னே முடிவு பண்ணி இருந்தது...” என்று விளக்கம் அளிக்க நினைத்து வாயை திறந்து நொடி தான் மிரு ‘என்னை நீ புரிந்து கொள்ளவே மாட்டாயா...?!’ என்று கோபத்தோடு கேட்டபடி மடிந்து அமர்ந்து அழ தொடங்கியிருந்தாள்.
 
 
அதில் அபய்க்கு வார்த்தைகள் கூட வெளிவராமல் அப்படியே நின்று போனது. அவளின் வார்த்தைகளில் இருந்த பொருள் என்னவென்பதை வேகவேகமாக மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவன் மிருவின் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி “மினி... பேபி... நீ... என்னை... லவ்... செஞ்சியா...” என்று குனிந்து அழுதுக் கொண்டிருந்தவளின் முகத்தை இரு கரங்களில் ஏந்தியவாறு தான் புரிந்து கொண்டது சரிதானா என்று தெரிந்து கொள்ளும் பரபரப்பிலும் தன் மனம் எண்ணியது சரிதானா என நம்ப முடியாத திகைப்பிலும் வார்த்தைகள் கூட வேகமாக உச்சரிக்க முடியாமல் கேள்வி எழுப்பினான்.
 
 
அவனை நிமிர்ந்து ஒரு குற்ற பார்வை பார்த்த மிரு, “இன்னும் இதுல உனக்குச் சந்தேகமா...?” என்று பொங்கி வந்த அழுகையை அடக்கியவாறு கேட்கவும் “இல்லடா... நான் கேட்கிறது இப்போ இல்ல, பாஸ்ட் செஞ்சியான்னு புரியுதா நான் கேட்கிறது...” என்று வேறு விளக்கம் அளிக்க முயன்று கொண்டிருந்தான்.
 
 
அதில் ஒரு வேகத்தோடு எழுந்து அவனைப் போலவே மண்டியிட்டு அமர்ந்து அபய்யின் சட்டையைப் பற்றி உலுக்கியவள் “இன்னுமா டா உனக்குப் புரியலை... நல்லா கேட்டுக்கோ, எனக்குப் பாஸ்ட் பிரசன்ட் பியூசர்ன்னு எல்லாம் எதுவும் கிடையாது.... நான் அப்பவும் சரி, இப்பவும் சரி, எப்பவும் சரி உன்னை லவ் பண்ணிட்டு தான் இருந்தேன்... இருக்கேன்... இருப்பேன்... புரியுதா இப்பவாவது உன் மரமண்டைக்கு இதெல்லாம் புரியுதாடா...” என்று ஆத்திரத்தோடு அவனை உலுக்கியவாறே தன் மனதில் இருந்ததை எல்லாம் கோபத்தோடும் வேகத்தோடும் கொட்டியவளை நம்ப முடியாமல் திகைத்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான் அபய்.
 
 
அவன் இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை, தங்களின் திருமணம் கூட இருவரின் பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் நடந்ததாகவே தான் இத்தனை வருடங்களாக நினைத்துக் கொண்டு இருப்பவனுக்கு மிருவின் இந்தக் காத்திருப்பும் கூட அவளின் மரபுவழி வந்த ஒரு செயலாகவோ இல்லை அவள் கழுத்தில் ஏறிய மாங்கல்யத்திற்கு அவள் கொடுக்கும் மரியாதையாகவோத்தான் இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு இது மிகப் பெரிய சம்மட்டி அடியாக மனதில் விழுந்திருந்தது.
 
 
அவளுக்காக அவளின் வாழ்க்கைக்காக என்று எண்ணி இத்தனை வருடங்களாக விலகி நின்றது எல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போன்று ஆனது மட்டுமல்லாமல் அப்படியே தலைகீழாக மாறி விலகி நின்றது தான் தவறு என்று தெள்ளத்தெளிவாகத் தலையில் அடித்துப் புரிய வைத்தது போல இருந்தது.
 
 
“நீ... நீ... இதை ஏன் பேபி என்கிட்ட முன்னமே சொல்லலை... சொல்லியிருந்தா இத்தனை பிரச்சனைகள் நமக்குள்ள வந்திருக்காதே, இத்தனை வருஷம் நம்ம வாழ்க்கையும் வீணாகி இருக்காதே...” என்று ஆற்றாமையோடு தன் தவறை தன்னாலேயே பொறுத்துக் கொள்ள முடியாமல் அபய் வார்த்தைகளில் வெளியிடவும்,
 
 
அவன் சட்டையைப் பற்றியபடியே தலை குனிந்து அவன் மேலேயே சாய்ந்து கொண்டு இருந்தவள் பட்டென நிமிர்ந்து ஒரு அக்னி பார்வையை அவனை நோக்கி வீசியபடியே “எனக்கே புரியாததை உனக்கு எப்படி விளக்க முடியும்...” என்று கோபமாகக் கத்த தொடங்கி இருந்தாள்.
 
 
அதில் மேலும் திகைத்து நிற்பது இப்போது அபய்யின் முறையானது. ‘என்ன சொல்கிறாள் இவள்...?! காதலித்தேன் என்கிறாள்...! அது தனக்கே தெரியாது என்கிறாள்...?!’ என அவளையே ஒரு புரியா பாவனையோடு பார்த்துக் கொண்டிருக்க... மிரு மெல்ல தன் மனதை திறக்கத் தொடங்கி இருந்தாள்.
 
 
ஆரம்பத்தில் இருந்தே அபய் என்றால் மிருவுக்குத் தனி விருப்பம் உண்டு தான். அவனின் அருகாமை, அவனிடம் கிடைக்கும் சலுகைகள் என்று அபய்யிடம் அவள் செல்லம் கொஞ்சிக் கொண்டே தான் இருப்பாள். பிறந்ததிலிருந்து கூடவே இருப்பவன் என்பதோடு தனக்குப் பிரியமான மாமன் என்பதனால்தான் இதெல்லாம் என்று அவளின் வீட்டாரை போலவே அவளுமே நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அபய் தன் படிப்பிற்காக வெளிநாடு கிளம்பி செல்ல வேண்டி இருந்தது.
 
 
அவனின் அந்தப் பிரிவை அவளால் அவ்வளவு எளிதாகக் கடந்து விடவே முடியவில்லை. எதையோ இழந்த ஒரு தவிப்பு மனம் ஏங்கும் பரவி தினம் தினம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. ஆனால் அடிக்கடி அவளை அழைத்து நலம் விசாரித்து அபய் பேசும் போதெல்லாம் அந்தத் தவிப்பும் இழப்பும் எங்குதான் மாயமாக மறைந்து போகுமோ என்று தெரியாத அளவிற்கு அந்த இடத்தில் உற்சாகமும் துள்ளலும் வந்து அமர்ந்து கொள்ளும்.
 
 
இந்த நேரத்தில்தான் அபய் தன் நேசத்தைப் பற்றி வீட்டில் பகிர்ந்து கொண்டதும் அது உடனே மிருவுக்குத் தெரிய வந்தது. ஏனோ முகம் தெரியாத அவளின் மீது அப்படி ஒரு கோபமும் வெறுப்பும் மிருவின் மனம் எங்கும் பரவி அந்தப் பெயரைக் கேட்டாலே தானாக அழுகை வரும் அளவுக்கு மாறிப் போய் இருந்தாள் மிரு.
 
 
அவளின் ஒவ்வொரு அசைவையும் பற்றி அறிந்திருந்த அவள் குடும்பத்தினர் மிருவின் முகத்தைக் கண்டு பதறி என்னவென்று விசாரிக்கும் போது எல்லாம் என்னவென்று சொல்லி விளக்க கூடத் தெரியாத ஒரு நிலையே அவளுக்கு, அதனால் மற்றவர்களுக்குத் தெரியாமல் தன் தவிப்பை மறைத்துக் கொள்ளத் தொடங்கிவிட்டாள் அவள்.
 
 
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று அபய்யின் இந்தியா திரும்பும் செய்தி மிருவை வந்தடைய அதில் மீண்டும் தன் மாமூ தன்னிடம் வந்து சேர போவதை எண்ணி அவள் குதூகலிக்கத் தொடங்குவதற்குள் அடுத்தச் செய்தியாக அவனின் திருமணம் நிச்சயிக்கப்பட இருந்த செய்தியும் அவளுக்குத் தெரிய வர முற்றிலுமாக மனதிற்குள் உடைந்து போனாள் அவள். ஏதோ தன் கைப்பொருள் தன் கையை விட்டுப் போனது போன்ற ஒரு தவிப்பு அவளுக்கு.
 
 
இப்படியே நாட்கள் சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் அபய் இந்தியா திரும்பியதும் அங்கு நடந்தவற்றைப் பற்றி அறிய நேர்ந்ததும் நடந்தது. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் அபய்யின் மூலம் அறிய நேர்ந்த செய்தி மிருவை பொருத்தவரை கற்கண்டிலேயே குளித்தது போல அத்தனை இனிமையாகத் தான் இருந்தது.
 
 
இத்தனை நாள் தனக்குள்ளேயே இருந்த தவிப்புகள் அனைத்தும் மறைந்து பழைய மிருவாக உலா வர தொடங்கியிருந்தாள். அவ்வப்போது அமைதியே உருவாகவோ இல்லை ஏதோ சிந்தனையோடோ அமர்ந்திருக்கும் அபய்யை காண நேரும் போதெல்லாம் அவளின் மனமும் தவிக்கத்தான் செய்யும் ஆனால் தொலைந்து போன அவன் காதலுக்காக அல்ல தன் மாமூவிற்காகத் தான்.
 
 
அப்போதுதான் ஒரு நாள் மீண்டும் அபய் திரும்ப ஊருக்கு செல்வதைப் பற்றிய பேச்சு அவள் காதில் விழவும் மீண்டும் மனம் தவிக்கத் தொடங்கியிருந்தது. ஆனால் அது என்ன வகையான தவிப்பு என அவளால் அப்போது பிரித்தறிய முடியவில்லை, அவளின் வயது அப்படி. புதிதாக வேறு ஒருவரின் மீது அவளுக்கு நேசம் பூக்க தொடங்கி இருந்திருந்தால் ஒருவேளை அவளால் அதை எளிதாகக் கண்டறிந்து இருக்க முடியுமோ என்னவோ...! அவளுக்கு வந்திருந்ததோ பிறந்ததிலிருந்தே உடன் இருந்த அவளின் மாமூவின் மேல். அதனால் அந்த நேசத்தைப் பாசமாக நினைத்துக் கொண்டு இருந்தவளால் அதைப் பிரித்தறிய முடியவில்லை.
 
 
யாரும் எதிர்பாராமல் அப்போது அபய்யின் அம்மாவுடைய உடல்நலம் குன்றவும், தன் பாட்டிக்காக அழுது கரைந்து கொண்டிருந்தவளுக்கு மற்ற எதுவும் அப்போது மனதிற்குப் பெரிதாகத் தோன்றவே இல்லை.
 
 
மறுநாளே பாட்டியும் அம்மாவும் அவளை அழைத்து அபய்யை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி கேட்கவும், அந்த நிமிடம் வரை திருமணம் வாழ்க்கையின் அடுத்த நிலை என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் இருந்தவளுக்கு அதற்கு என்ன பதில் அளிப்பது என்று கூடத் தெரியவில்லை.
 
 
ஒன்றும் பதிலளிக்க முடியாமல் முதலில் திகைத்துதான் விழித்துக் கொண்டிருந்தாள் மிரு. அப்போதும் கூடத் தன் படிப்பை தான் காரணமாகக் காட்டி கேள்வி கேட்க அவளுக்குத் தோன்றியது, “அப்போ என் படிப்பு...” என்று அப்பாவியாகத் தன் கேள்வியை அவள் முன் வைக்க...
 
 
‘யாரைடி கல்யாணம் பண்ணிக்கப் போறே... உன் மாமனை தானே அவனே உன்னை நீ ஆசைப்பட்டதை எல்லாம் படிக்க வைக்க மாட்டானா என்ன...?!” என்று மிருவின் பாட்டி அவள் மறுக்கவில்லை என்ற சந்தோஷத்தோடும் பாசத்தோடும் பேத்தியை வம்புக்கு இழுக்கவும் சட்டென ஒத்துக் கொள்ளவே தோன்றியது மிருவுக்கு, அது தன் கைப்பொருள் தன் கையை விட்டுப் போகாமல் தன் கையிலேயே இருக்கும் என்ற எண்ணத்தினாலேயே தானே தவிர அவளுக்கு அதற்கு மேல் வேறு எந்த எண்ணமுமில்லை. அந்த நிமிடமும் தன் கைக்குள் வைத்திருக்க நினைத்ததன் காரணத்தை ஆராய்ந்து அறிய அவளுக்குத் தோன்றவில்லை.
 
 
அதன்பிறகு திருமணமும் முடிந்து அபய் அவளை அப்படியே விட்டுவிட்டு சென்று விட, அது மேலும் அவளின் மனதில் பலத்த அடியாக விழுந்தது. அவன் விரும்பிய பெண்ணுக்காகத் தான் தன்னை ஒதுக்கி விட்டு சென்றுவிட்டான் என்று அன்றிருந்த மனநிலையில் அதையே உண்மை என்று நம்பியவள் அபய் பேசுவதைக் கேட்டுவிட்டு தன் அறையில் போய் அமர்ந்தவள் தான் அதன் பின் யாரோடும் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவரவர் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர். அபய் பேசிச் சென்ற அதிர்ச்சியிலிருந்து மீளவே சில மணி நேரங்கள் ஆகி இருந்தது. அதன் பிறகு மிருவை கவனிக்கத் தொடங்கியவர்கள் அவள் இருந்த நிலை கண்டு பதறிப் போயினர்.
 
 
அழுது கரையவில்லை ஆத்திரப்படவில்லை சண்டையிடவில்லை தன் அறையில் படுக்கையில் இரு கால்களைக் கட்டிக் கொண்டு அதில் முகத்தைச் சாய்த்தபடி எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.
 
 
யார் என்ன கேட்டாலும் அதற்கு அவளிடம் இருந்து பதிலும் வரவில்லை. எத்தனையோ சமாதானப்படுத்த முயன்றும் அதற்குப் பலன் கொஞ்சமும் இல்லை. தன் உடமைகளை எடுத்துக் கொண்டு செல்ல அபய் வீட்டிற்குத் திரும்பிய போது அனைவரும் மிருவின் அறையில்தான் அவளோடு இருந்து அவளைப் பேச வைக்கத் தான் முயன்று கொண்டிருந்தனர்.
 
 
ஒரே ஒருமுறை அவன் அனைவரிடமும் சொல்லிவிட்டு போக முயன்று இருந்தாலோ இல்லை மிருவை பார்க்கவோ அவளிடம் பேச அவளின் மனதை அறிய முயன்று இருந்தாலோ அனைத்தும் அன்றே சரியாகி இருக்கும்.
 
 
அவ்வளவு எல்லாம் கூடத் தேவையில்லை ஒரே ஒருமுறை கிளம்புவதற்கு முன் அபய் அவள் இருந்த நிலையைப் பார்த்திருந்தால் கூடப் போதும் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்குமே செல்லாமல் அங்கேயே இருந்துவிட்டு இருப்பான் அவன்.
 
 
ஆனால் அவனின் போதாத காலமோ...! இல்லை அவளின் போதாத காலமோ...!! இல்லை இருவருக்குமே அப்போது வாழ்க்கையைத் தொடங்க நேரம் வரவில்லையோ...! என்னவோ...!!! இது எதுவுமே அமையாமல் போனது.
 
 
ஏதோ கோபப்பட்டு விட்டு வெளியே சென்றிருக்கிறான், கோபம் குறைந்ததும் வீடு திரும்பிவிடுவான் அப்போது அவனுக்குத் தாங்கள் எடுத்த முடிவையும் எதற்காக இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டி வந்தது என்றும் பேசி புரிய வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு மறுநாள் ஆகியும் அபய் வீடு திரும்பாததால் எழுந்த பதற்றத்தோடு அவனைத் தொடர்பு கொள்ள அவர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் தான் முடிந்தது.
 
 
அது வேறு அவர்களுக்குப் பதட்டத்தைக் கொடுக்க, மிருவின் நிலையைக் கண்டு ஒரு பக்கம் கவலைப்படத் தொடங்கியவர்கள் தங்களாலான முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தத்தில் அபய் கிளம்பிச் சென்று இருந்த செய்தி தான் அவர்களுக்குக் கிடைத்தது.
 
 
இது அவர்களை மேலும் நிலைகுலைய செய்திருந்தது. அபய் இப்படிச் செய்வான் என்று அவர்கள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை. அவன் கோபப்பட்டுக் கூட அவர்கள் அதிகமாகப் பார்த்ததில்லை. ஏதோ அன்று அவன் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் நடந்து முடிந்த திருமணத்தினால் தான் இந்தக் கோபம் என்று எண்ணி இருந்தவர்கள் கூடச் சொல்லாமல் கொள்ளாமல் அபய் கிளம்பிச் சென்றது ஒருவேளை அவனின் பழைய நேசத்தை மறக்க முடியாததால் தானோ என்று எண்ணத் தொடங்கி இருந்தனர்.
 
 
அவர்களே அப்படி எனில் அபய்யின் மனையாளின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். தன் மனதைப் பற்றியும் தன் வலிகளைப் பற்றியும் யாரிடமும் வாயைத் திறக்காமல் அமர்ந்திருந்தவளின் மனம் உள்ளுக்குள் தண்ணீரில் இருந்து வெளியே விழுந்த மீனாய் துடிதுடித்துக் கொண்டிருந்தது.
 
 
அடுத்து வந்த பத்து நாட்களும் கூட இப்படிதான் கழிந்தது. இப்படி அபய் சொல்லாமல் கொள்ளாமல் தன்னைப் பற்றிக் கொஞ்சமும் கவலை இல்லாமல் விட்டுவிட்டு சென்றதற்குக் காரணம் அவனின் மனதில் இருக்கும் பெண்ணிற்காகத் தான் என்று எண்ணி எண்ணி தன்னையே வருத்திக் கொண்டிருந்தவள் இதைப் பற்றியெல்லாம் அறிந்து இருந்தும் அபய்யின் வாழ்க்கைதான் முக்கியம் என்று எண்ணி தன்னை அவனுக்கு மணமுடித்து வைத்த தன் குடும்பத்தினரின் மீது கோபத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தாள்.
 
 
மனதளவில் அவனின் வாழ்க்கை முக்கியமாகத் தோன்றியவர்களுக்குத் தன் வாழ்க்கையைப் பற்றிய கவலை இல்லை என்கிற ரீதியில் யோசனை செல்ல நடந்தவற்றையெல்லாம் இணைத்துப் பார்த்து தன் எண்ணம் தான் சரி என்ற முடிவுக்கு வந்தவள் அதையே உண்மை என்று நம்பவும் செய்தாள்.
 
 
அப்போதும் கூடத் தன்னை விட்டுவிட்டு சென்றவனின் மேல் கோபத்தை வளர்த்துக் கொள்ளாமல் இவர்களின் மேல்தான் கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்தாள் அவள் மனதை அறியாமலேயே...! அந்த நிமிடம் தன்னை யாரும் இந்தத் திருமணத்திற்கு வற்புறுத்தவுமில்லை, நிர்பந்திக்கவுமில்லை என்பதையும் தன் விருப்பத்தையும் சம்மதத்தையும் கேட்டே அனைத்தையும் செய்தார்கள் என்பதையும் வசதியாக மறந்து போனாள்.
 
 
தன்னைப் பற்றிச் சிந்திகாத்தவர்களிடம் இனி தனக்கு என்ன வேலை என்று யோசித்து டெல்லியில் கிடைத்திருந்த பேஷன் டிசைனிங் படிப்பை அங்குச் சென்று தொடர்வது என்று முடிவுக்கு வந்தவள், இனி இவர்கள் யாரின் உதவியும் துணையும் இல்லாமல் வாழ வேண்டும் என்ற உறுதியோடு அவர்கள் அனைவரின் மறுப்பை எல்லாம் மீறி சிறுவயதிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தன்னுடன் படித்த தோழியும் குடும்ப நண்பருமான ராஜேஷின் மகளுமான சித்ராவின் உதவியுடன் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ந்து அங்கேயே தங்கி படிக்கத் தொடங்கியவள் பகுதிநேர வேலையையும் தனக்காகத் தேடிக் கொண்டாள்.
 
 
ஆனால் அதை வைத்து மட்டும் அவளின் செலவுகளையும் படிப்பு செலவையும் கவனித்துக் கொள்ள முடியாது என்பதை அறிந்தவள், அவரின் மூலமே வங்கியில் கடனுக்கும் ஏற்பாடு செய்து கொண்டாள். இதில் மிரு இப்போது வரை அறியாத விஷயம் ஒன்று உண்டு என்றால் அது ராஜேஷ் கடைசி வரை வங்கியில் எந்தக் கடனும் வாங்காமல் மிருவின் பெற்றோரிடமிருந்து பணம் வாங்கியே அனைத்தையும் செய்தார் என்பதை. கொஞ்சம் கொஞ்சமாகக் கடனை அடைப்பதற்காக மிரு கொடுத்த பணத்தை எல்லாம் அவளின் பெயரிலேயே தனியாக ஒரு கணக்கு தொடங்கி அதில் தான் சேமித்துக் கொண்டிருந்தார் அவர்.
 
 
பெற்றோரின் மேல் மிருவுக்கு இருந்த கோபம் வேண்டுமென்றால் தன்னைப் பற்றிச் சிந்திக்காமல் அபய்யோடு திருமணத்தை ஏற்பாடு செய்ததற்காக இருக்கலாம்... ஆனால் உதய்யின் மேல் அவளுக்கு இருந்த கோபமே வேறு. அபய்யை அவன் செலவிட்டு இருக்கக் கூடாது என்றே நினைத்தாள் மிரு.
 
 
எப்போதும் தனக்கு ஒன்று என்றால் முன்னால் வந்து நின்று அதற்காகக் குரல் எழுப்புபவன் தன்னை எப்போதும் பாதுகாப்பாகவே அரவணைத்து பார்த்து பழக்கப்பட்டவளுக்கு அன்று உதய் அமைதியாக இருந்ததை அத்தனை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
 
‘அப்போது தன்னை விட அவனுக்கு மாமன் தான் முக்கியமாகப் போய்விட்டானா...?!’ என்று தோன்றவே... பெற்றோருக்கும் அவர்களின் தம்பி தான் முக்கியம் இவனுக்கும் அவனின் மாமன் தான் முக்கியம் என்றால் அப்போது நான் இவர்களுக்கு எல்லாம் அத்தனை முக்கியமற்றவளாகப் போய் விட்டேனா...?!’ என்றெல்லாம் சிந்தித்துத் தன்னைத்தானே குழப்பிக் கொண்டதால் தான் என்னை முக்கியமாக நினைக்காதவர்கள் எனக்கும் தேவையே இல்லை என்று அவளின் பிறப்பு குணமான பிடிவாதத்தினால் அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவெடுத்து இருந்தாள்.
 
 
இப்படியே தனக்குள்ளேயே ஏதேதோ யோசனையில் குழம்பிக் கொண்டிருந்தவளின் மனதை அவளுக்கே தெளிவுபடுத்துவது போல் நடந்த நிகழ்வுதான் அவளின் நண்பர்களுக்குள் வந்த காதல். பாயலின் காதலையும் ரோஹித் ரக்ஷானாவின் காதலையும் அருகிலிருந்து பார்க்க நேர்ந்த போது தான் அவர்களுக்குள் எழும் உரிமை உணர்வும் சிறு சிறு சண்டைகளும் தனக்குக் கொடுக்கப் படவேண்டும் என்கிற முக்கியத்துவத்தைப் பற்றி அடிக்கடி பேசுவதும் என அனைத்தும் சேர்ந்து அவளின் மனதை அவளுக்குத் தெளிவாக உணர்த்தியது. அப்போதே தனக்குத் தன் மாமன் மேல் இருந்தது வெறும் பாசம் மட்டும் அல்ல அது நேசம் என்பதும் அவளுக்குத் தெளிவானது.
 
 
இந்தச் சமயத்தில்தான் எதிர்பாராமல் ஒரு நாள் வழக்கம் போல இவளை தொலைவில் இருந்து பார்க்க வந்திருந்த பெற்றோர் பேசிக் கொண்டிருப்பதை மிரு எதிர்பாராமல் கேட்க நேர்ந்தது. எப்படியாவது மிருவை சமாதானப்படுத்தித் தங்களோடு அழைத்துச் சென்று அவளுக்கு வேறொரு வாழ்க்கையை அமைத்துத் தரவேண்டும் எனப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டவள் தன் மனம் முழுவதும் இருக்கும் மாமனை விடுத்து இன்னொருவருடன் வாழ்வதா என்ற எண்ணமே அருவருப்பைத் தருவதாக இருக்க... இவர்களோடு சென்றால் தானே அதற்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறது அப்படி ஒன்று நடக்கக் கூடாது என்றால் அவர்களை அருகிலேயே சேர்க்காமல் தூர நிறுத்துவதுதான் அதற்கு ஒரே சிறந்த வழி என முடிவெடுத்து அதன்படி தான் இன்று வரை நடந்து கொண்டிருக்கிறாள்.
 
 
இதோ இப்போது திருமணத்தன்றும் கூட அபய் அவர்களிடம் ஆசி வாங்க முயன்ற போது ‘தங்களைப் பிரிக்க நினைத்தவர்களிடம் ஆசி வாங்குவதா...?’ என்று கோபத்தில் தான் அவனைத் தடுத்து இழுத்துக் கொண்டு சென்றாள்.
 
 
மிருவின் மூலம் அனைத்தையும் அறிந்து கொண்ட அபய்க்கு தன் இழப்பு எத்தனை பெரியது எனத் தெளிவாகப் புரிந்தது. தான் அவளுக்கு நல்லது என்று நினைத்து ஒன்றை செய்யப் போக அதுவே அவனவளுக்கு எத்தனை கெடுதலாக முடிந்திருக்கிறது என்று புரிந்து கொண்டான்.
 
 
இடையில் கூட ஒருமுறையும் அபய் அவளைப் பற்றி அறிந்து கொள்ள முயலாததற்குக் காரணம் அப்படி ஒரு செய்தியை காதால் கூடக் கேட்க விரும்பாததால் தான் என்பது இப்போது இங்கு வந்த பிறகே அவனுக்கும் தெளிவாகியது.
 
 
மிருவை போல் எல்லாம் அவன் இவள் மேல் அப்போதிருந்தே நேசம் என்றெல்லாம் எதுவும் இல்லை தான் என்றாலும் அவளின் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறின் மேஜிக் அழகாகத் தன் வேலையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டத் தொடங்கியிருந்ததை அவன் அப்போது உணர்ந்து கொள்ளவில்லை. இங்கு வந்து மிருவை குழந்தையோடு கண்ட போது அவன் மனம் துடித்த துடிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும் அப்போதே அவனின் மனமும் அபய்க்குப் புரிந்தது.
 
 
ஒருவழியாக மிருவை கொஞ்சி கெஞ்சி சமாதானம் செய்து அன்று அந்த நிமிடம் தான் அப்படி நடந்து கொண்டதற்கான காரணத்தையும் அவளுக்கு விளக்கி புரிய வைத்தவன், அவள் நினைத்துக் கொண்டிருப்பது போல் எல்லாம் எதுவும் இல்லை என்று திட்டவட்டமாக மிரு தெளிவாகும் வகையில் பேசி புரிய வைத்து இருந்தான்.
 
 
ஆரம்பத்தில் அப்படி எல்லாம் நினைத்து வருந்தி தன் மனதைக் குழப்பிக் கொண்டு இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல மிருவுக்குமே ஓரளவு அவன் சொன்னதில் இருந்த பொருள் புரிய தான் தொடங்கியிருந்தது.
 
 
ஆனாலும் மனம் தான் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள மறுத்து, ‘அப்போது ஏன் இப்போது வரை தன்னைத் தேடி வரவில்லை...!?’ என்று சண்டித்தனம் செய்து கொண்டிருந்தது. இன்று அபய்யின் வாய் வழியே அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் கேட்டதில் ஓரளவு சமாதானம் ஆகியிருந்தாள் மிரு.
 
 


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page