All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 5 / 5
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
1787854030-IMG-20260827-WA0000.jpg
 
 
மௌனம் - 32
 
விநாயக் தன் காரை வந்து நிறுத்திய இடத்தை கண்டு லேசாக திகைத்தாலும் அவனிடம் எதுவும் கேட்கவில்லை நந்தினி.
 
 
லேசாக அவள் முகத்தை திரும்பிப் பார்த்தவன் அங்கு வித்தியாசமாக எதுவும் தெரியாததில் “வா உள்ளே போகலாம்..” என்று விட்டு இறங்க.. அவளும் அமைதியாகவே அவனுடன் இறங்கி நடந்தாள்.
 
 
அதேநேரம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த ரகோத்தமன் இவர்களை பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் வேகமாக பார்வையை சுழற்றியபடி அவசரமாக எழுந்து அங்கே வந்தார். 
 
 
‘நேற்று இவர்களை அந்த விழாவில் கண்டதில் தொடங்கி இப்போது வரை வேதவல்லி அத்தனை ஆத்திரத்தோடு பேசிக்கொண்டு இருக்க.. இந்த சூழ்நிலையில் மீண்டும் இவர்களை இங்கே கண்டால் என்ன ஆகுமோ..?’ என்ற பதட்டம் அவரின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
 
 
அதோடு சற்று நேரத்திற்கு முன்பே நிதின் மற்றும் வேதவல்லிக்கு இடையே மிகப்பெரிய வாக்குவாதம் ஒன்று நடந்து முடிந்திருக்க.. அவனும் கோபத்தோடு வெளியே கிளம்பி சென்று விட்டிருந்தான்.
 
 
இதையெல்லாம் மனதில் வைத்தே, இப்போது அடுத்த பிரச்சனையும் தொடங்க வேண்டாம் என்ற எண்ணத்தோடு அவர்களை நெருங்கியவர் “வினய், என்ன இது..? எதுக்காக இப்போ இங்கே வந்து இருக்கே..? எதுவா இருந்தாலும் நாம அப்புறமா பேசிக்கலாம், இல்லைனா நேரா ஆபீஸ்க்கு வாங்க.. அங்கே வெச்சு பேசிக்கலாம்..” என்று அவசரமாக அவர் பின்னே திரும்பி பார்த்தபடியே சொல்லவும், அவரின் பதட்டத்திற்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லா நிதானத்தோடு “எனக்கு உங்க கூட பேச எதுவுமே இல்லை, நான் பேச வந்த ஆளே வேற..” என்றான் விநாயக்.
 
 
அவன் இங்கு வந்த போதே அவருக்கும் அது ஓரளவுக்கு புரிந்து தான் இருந்தது என்றாலும் அதை தடுக்க நினைத்தே அவர் பேசத் தொடங்கவும் அதை முற்றிலும் மறுப்பது போல் பேசியவன் நந்தினியை கை பிடித்து அழைத்தப்படி உள்ளே நுழைய முயல.. “வினய் ப்ளீஸ் இப்போ தான் இங்கே ஒரு பிரச்சனை நடந்து முடிஞ்சுருக்கு, மறுபடியும் இன்னொன்று வேண்டாம்..” என்றார் ரகோத்தமன்.
 
 
“உங்க குடும்ப பிரச்சனை பற்றி தெரிஞ்சுக்க நான் இங்கே வரலை..? நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்பிடுவேன்..” என்றவன் ‘நான் வந்த விஷயத்தை பேசி முடிக்காமல் செல்ல மாட்டேன்..’ என்ற உறுதியோடு பதிலளித்துக் கொண்டிருக்க.. அதற்குள் ரகோத்தமன் இவ்வளவு வேகமாக வெளியில் செல்வதை கவனித்து எட்டிப் பார்த்திருந்த புஷ்பாவும் இவர்களை கண்டதில் உண்டான திகைப்போடு அப்படியே நின்று விட்டிருந்தார்.
 
 
அதே நேரம் புஷ்பாவை கவனித்திருந்த சித்ரா என்னவென பார்க்க வெளியில் வர, அவருக்கும் இவர்கள் இருவரையும் இப்போது இங்கு கண்டது பெரும் பதட்டத்தை கொடுத்தது.
 
 
ஏனெனில் சித்ராவுக்கு நேற்று விழாவில் நடந்த எதுவும் தெரியாது. அதோடு திரைத்துறை சம்பந்தப்பட்ட எந்த ஒரு தகவலையும் தெரிந்து வைத்துக் கொள்ளும் ஆர்வமும் அவரிடம் கிடையாது என்பதால் தொலைக்காட்சியையும் அவர் பார்த்திருக்கவில்லை.
 
 
ஆனால் விழா முடிந்து வீடு திரும்பியதில் இருந்து வேதவல்லி சித்ராவை கூட விட்டு வைக்காமல் அவ்வளவு பேசியிருந்தார். நந்தினி வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டது தவறு தான். அதை இல்லை என சித்ராவும் மறுக்கவில்லை. 
 
 
ஆனால் மகள் மீதுள்ள பாசத்தில் அவருக்கு மற்றதெல்லாம் பின்னுக்குச் சென்று அவளின் நல்வாழ்வு மட்டுமே முக்கியமாக இருக்க.. நந்தினியை மனதார ஏற்றுக் கொண்டிருந்தார் சித்ரா. 
 
 
அப்படி வேதவல்லியும் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்றாலும் தன் சொந்த பேத்தி என்றும் நினைக்காமல், பெற்ற பெண்ணையே இத்தனை கீழிறக்கி பேசுகிறோம் என்ற எண்ணமும் இல்லாமல், இருவரையும் அனாதைகள் அடுத்த வேலை சாப்பாட்டுக்கு வழி இல்லாமல், தன்னிடம் அடைக்கலம் தேடி வந்து அவர் போட்ட பிச்சையில் இன்று வரை வாழ்ந்து கொண்டிருக்கும் இருவரும் அந்த நன்றி கூட கொஞ்சமும் இல்லாமல், அவருக்கு பிடிக்காத குடும்பத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கும் துரோகிகள் என்று ஏதேதோ பேசி விட்டிருந்தார். 
 
 
இதில் நிஜமாகவே சித்ரா மனதளவில் பெரிதும் அடிபட்டு போனார். கணவனை இழந்து சொத்து சுகம் எதுவும் இல்லாமல் ஒற்றைப் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு அவர் நின்ற போது ராதா கிருஷ்ணன் தான் மகளை தன்னோடு அழைத்து வந்திருந்தார்.
 
 
பெரும்பாலும் இது நம் குடும்பங்களில் வழக்கமாக இருக்கும் ஒன்று தானே..! கணவனை இழந்து நிற்கும் பெண்ணை புகுந்த வீட்டினர் நிற்கதியாக விட்டுவிட்டால், பிறந்த வீட்டினர் தான் அரவணைத்து தாங்கி பிடித்து பாதுகாப்பார்கள். அப்படித்தான் அவருக்கும் எல்லாம் இங்கே நடந்தது. 
 
 
இத்தனைக்கும் இன்று வரை இந்த வீட்டில் பிறந்த பெண் என்ற முறையிலோ ராதாகிருஷ்ணனின் மகள் என்ற முறையிலோ எந்த உரிமையையும் சித்ரா எடுத்துக் கொண்டதே இல்லை.
 
 
ஆனால் இப்படி வேதவல்லி அவர்களுக்கு சாப்பாடு போட்டது முதல் கொண்டு சொல்லிக் காண்பிப்பதை எண்ணும் போதே மனம் வெறுத்துப் போனது. அதில் அவரும் இரவெல்லாம் தன் நிலையை எண்ணி அழுது கொண்டு தான் இருந்தார்.
 
 
இப்போது மீண்டும் இவர்கள் இருவரும் இங்கு வந்து நிற்பதை காணும் போது நிச்சயம் வேறு பிரச்சனைகள் பெரிதாக வெடிக்கும் என்ற பயமும், தன் மகளின் மேல் வெறுப்பும் ஆத்திரமும் கொண்டிருக்கும் வேதவல்லி நெருப்புத் துண்டுகளாய் வார்த்தைகளை வீசி விடக் கூடாதே என்ற தவிப்பும் அவருக்கு உண்டாக.. அவசரமாக வேதவல்லியின் அறையை திரும்பிப் பார்த்தபடியே வாயிலை நோக்கி ஓடினார் சித்ரா.
 
 
தினமும் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு சித்ராவை நேரில் கண்ட நந்தினி, அன்போடு “ம்மா..” அழைத்தபடி அருகில் வரவும், பெற்றத் தாயாய் சித்ராவுக்கு மற்றதெல்லாம் மறந்து போக.. நந்தினியின் முகத்தை பாசத்தோடு வருடி “எப்படிடா இருக்கே..?” என்று தான் கேட்கத் தோன்றியது.
 
 
“நான் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க..?” என நந்தினி கேட்கவும், சித்ரா லேசான சோகம் முகத்தில் படிய மெல்ல தலையசைத்து பதில் சொல்வதற்குள், “அவளுக்கு இங்கே என்ன குறைச்சல்..? வருஷகணக்கா இங்கேயே உட்கார்ந்து தண்டசோறு சாப்பிட்டுட்டு கொஞ்சம் கூட நன்றியே இல்லாம நல்லாத்தான் இருக்கா..” என்று பின்னே இருந்து அத்தனை எகத்தாளத்தோடு வேதவல்லியின் குரல் ஒலித்தது. 
 
 
இதில் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் திரும்ப.. மகளின் கையை அழுத்தமாக பிடித்த சித்ரா “இங்கே இருந்து போயிடு நந்து, பிரச்சனை வேண்டாம்..” என்று மெல்லிய குரலில் கெஞ்சுதலாக கேட்கவும், அவரை செய்வதறியாது பார்த்தாள் நந்தினி. 
 
 
விநாயக் இங்கே ஏதோ ஒரு முடிவோடு வந்திருப்பது அவனின் இறுக்கமான முகத்தில் இருந்தே அவளுக்கு புரிந்திருக்க.. இதில் அவளால் இப்போது வேறு எதுவும் செய்ய முடியாது என சித்ராவிடம் சொல்ல தயங்கி நந்தினி நின்றிருக்க.. அதற்குள் நந்தினியை பார்த்து “நன்றி கெட்ட நா**, எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கே வருவே..? போடி வெளியே..” என்று வேதவல்லி கத்திக்கொண்டே அங்கு வர, அதற்குள் நந்தினியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த வரவேற்பறை சோபாவில் அமர்ந்து விட்டிருந்தான் விநாயக்.
 
 
இதில் அவனை எதுவும் சொல்ல முடியா தவிப்போடு ரகோத்தமன் பின்னே வர, அதற்குள் நந்தினி சட்டென எழுந்து நின்று விட்டிருந்தாள். அவளைக் கேள்வியாக திரும்பி பார்த்தாலும் விநாயக் மீண்டும் அமருமாறு வற்புறுத்தவில்லை. 
 
 
தன் பேச்சை மீறி உள்ளே நுழைந்தவனை கண்டு உண்டான ஆத்திரத்தோடு அவனை சரமாரியாக திட்டி தீர்த்துக் கொண்டே விநாயக் எதிரில் வந்து நின்றார் வேதவல்லி.
 
 
அவரை நிதானமாக நிமிர்ந்து பார்த்தவன், “நான் இங்கே பேசிட்டு போலாம்னு வந்திருக்கேன்.. இல்லை உன்னை மாதிரி கத்திட்டு தான் இருக்கணும்னா உனக்கு மேலே சத்தம் போட்டு என்னாலும் கத்த முடியும் பார்க்கிறாயா..?” என்றான் விநாயக்.
 
 
“என்னடா பேச போறே..? என்ன பேச போறே..? என்கிட்ட பேசற அளவுக்கு உனக்கு தகுதி இருக்கா..?” என்று நக்கலாக வேதவல்லி கேட்டவாறை அமர்ந்தார்.
 
 
“அதென்னவோ சரிதான், நான் வந்து பேசற அளவுக்கு உனக்கு தகுதி இருக்கான்னு நானும் யோசிச்சு பார்த்தேன்.. இல்லை தான், ஆனா சில விஷயங்களை பேசி தான் ஆகணும்.. அதனால் தகுதி பற்றியெல்லாம் யோசிக்காம நான் கிளம்பி வந்துட்டேன்..” என்று அவன் கூறியதில், ஆரம்பத்தில் விநாயக் என்ன சொல்ல வருகிறான் என புரியாமல் விழிகளை சுருக்கியவருக்கு அதன் பின்பே அதில் உள்ள அர்த்தம் புரிய.. “என் வீட்டுக்கே வந்து என்னையே கேவலமா பேசறியா..? வெளியே போடா நா**..” என்று கத்தினார் வேதவல்லி.
 
 
ஆனால் அதை கொஞ்சம் கண்டு கொள்ளாமல் சித்ராவின் பக்கம் திரும்பி “என்ன அத்தை, முதல் முறையா உங்க வீட்டுக்கு ஜோடியா வந்திருக்கேன்.. இப்படி வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க.. ஸ்பெஷல் கவனிப்பெல்லாம் இல்லையா..?” என்றவன், வேதவல்லி இடையிட்டு கோபமாக ஏதோ சொல்ல வரவும் “நீங்க யதுவோட அம்மா, அதனால் தான் அத்தைன்னு கூப்பிட்டேன், வேற எந்த உறவிலும் இல்லை..” என்றான் அழுத்தம் திருத்தமான குரலில் விநாயக்.
 
 
தனக்கு எந்த வகையிலும் அடங்காமல் இருப்பவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்திருந்த வேதவல்லியின் கோபம் இப்போது சித்ராவின் பக்கம் திரும்பியது.
 
 
“அதான் உன் மாப்பிள்ளை வந்து இருக்காரே.. முறையா நீ கவனிக்க வேண்டியது தானே..!” என்று சித்ராவை பார்த்து நக்கலாக வேதவல்லி சொல்லவும், “அதையெல்லாம் அவங்க பார்த்துப்பாங்க, அந்த கவலை உனக்கு வேண்டாம்.. நாம பேச வேண்டியதை இப்போ பேசுவோமா..?” என்றான் விநாயக்.
 
 
“அப்படி என்னடா பேசப்போறே..?” என்று எரிச்சலோடு வேதவல்லி கேட்கவும், “யதுவுக்கான உரிமையை, எங்கேயும் எப்போதும் நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்னு நேத்தே உங்க எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும்.. அதை திரும்ப ஒருமுறை உறுதியா சொல்லிட்டு போக தான் வந்திருக்கேன்.. இனி யது தொடர்ந்து ஆர் கே ப்ரொடக்ஷனுக்கு வருவா..” என்றான் விநாயக்.
 
 
“நீ யாருடா அதை சொல்ல..?” என்று எகத்தாளமாக வேதவல்லியின் குரல் ஒலிக்கவும், “அவ புருஷன்..” என்றிருந்தான் சிம்பிளாக விநாயக். “நீ எவளுக்கு புருஷனா இருந்தா எனக்கென்ன..? என் வீட்டில் வந்து எங்க கம்பெனியை பத்தி முடிவு செய்ய நீ யாரு..?” என்று அவர் எரிச்சலோடு கத்தவும், “புதையலை பூதம் காக்கறது போல மொத்த சொத்து மேலேயும் நீ தானே ஏறி உட்கார்ந்துட்டு இருக்கே.. அப்போ உன்கிட்ட தானே சொல்லணும்..” என்றால் விநாயக்.
 
 
“எனக்கு உரிமையானதை நான் பாதுகாக்கறேன், அதில் உனக்கு எங்கேடா வலிக்குது..?” என அவர் கேட்கவும் “எனக்கு ஏன் வலிக்குது..? இனி உனக்கு தான் வலிக்க போகுதுன்னு சொல்ல வந்தேன்.. என் மனைவிக்கு சொந்தமான எதையும் விட்டுக் கொடுக்க நான் அனுமதிக்கவே மாட்டேன்.. அவளை கம்பெனிக்குள்ளே வரக்கூடாதுனு சொல்லவோ அவளுக்கு சொந்தமானதை கொடுக்காம மறுக்கவோ உனக்கு எந்த உரிமையும் இல்லை..” என்றான் விநாயக். 
 
 
“என்னது அவளுக்கு சொந்தமானதா..? ஆமா அவங்க செத்துப்போன அப்பன் சம்பாதிச்சு மூட்டை கட்டி வெச்சுட்டு போயிருக்கான்.. அவளுக்கு சொந்தமானதை தூக்கி கொடுக்க..” என்று அவர் முகத்தை வெறுப்போடு திருப்பிக் கொள்ளவும் “அப்போ இதெல்லாம் செத்துப்போன உங்க அப்பா சம்பாதிச்சதா..?” என்றான் நக்கலான குரலில் விநாயக்.
 
 
“டேய் என்ன திமிரா..? இதெல்லாம் என் புருஷன் சம்பாத்தியம், இதில் எனக்குத்தான் முழு உரிமையும் இருக்கு..” என்று அவர் முகத்தில் பெருமையோடு பேசிக் கொண்டிருக்க.. “தாத்தா சொத்தில் பேரன் பேத்திகளுக்கு தான் முழு உரிமை இருக்குன்னு சொல்லுவாங்க கேள்விப்பட்டிருக்கியா கிழவி..?” என்றவனின் அந்த கிழவி என்ற விளிப்பில் கோபமாக திரும்பி முறைத்தவரை கண்டு கேலியாக சிரித்தபடியே “அப்படிப் பார்த்தா..” என்று எதையோ மேலும் பேசத் தொடங்குவதற்குள், வேகமாக அவனை இடையிட்டு இருந்த வேதவல்லி “என் புருஷன் சொத்தில் ஒரு பைசா கூட அவளுக்கு கொடுக்க மாட்டேன்.. நான் இத்தனை வருஷமா சோறு போட்டு வளர்த்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம ஓடிப்போனவளுக்கு சொத்து கேட்குதோ..? சொத்து..! அப்போ இதுக்கு திட்டம் போட்டு தான் அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு நீயே தானா வந்து ஒத்துக்கிட்டே அப்படித்தானே..!” என்று எதையோ பெரிதாக கண்டுபிடித்த பாவனையில் பேசினார் வேதவல்லி.
 
 
இதையெல்லாம் சுற்றி நின்ற அத்தனை பேரும் கைகளை பிசைந்தபடி செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தனர். வேதவல்லியும் அவருக்கு எதிரில் விநாயக்கும் மட்டுமே அங்கே அமர்ந்திருந்தனர்.
 
 
“நான் சொன்னது உனக்கு சரியா புரியலை கிழவி, இந்த சொத்து முழுக்க உன் புருஷன் சொந்தமா சம்பாதித்தது இல்லை.. அவங்க அப்பா ராகவ் பிரசாத் சம்பாதிச்சு உருவாக்கி வெச்ச சாம்ராஜ்யம் இது.. அதை ஒரு மகனா உன் புருஷன் ராதாகிருஷ்ணன் வளர்த்தாரு.. அதுக்கு அடுத்து அடுத்தடுத்த தலைமுறை அப்படியே அதை கொண்டு போயிட்டு இருக்காங்க.. 
அப்படி பார்த்தா ராகவ் பிரசாத்தின் பேரன் பேத்திகளுக்கு தான் இந்த சொத்தில் முழு உரிமையும் இருக்கு.. அதாவது எங்க அத்தைக்கு..” என்று அவன் சித்ராவை திரும்பிப் பார்த்தபடியே நிதானமாக சொல்லவும் வேதவல்லிக்கு திக்கென்று இருந்தது.
 
 
“ஏய் என்ன ஏதேதோ இங்கே வந்து உளறிட்டு இருக்கே..? முதலில் எழுந்து வெளியே போடா..” என்று அவர் பதட்டமாக பேசவும் “ஏன் இவ்வளவு பயப்படறே..? இத்தனை வருஷமா நாம அதட்டி உருட்டி மிரட்டி இவங்களை எல்லாம் அடிமையா வெச்சுருந்தது இனி நடக்காதுன்னு பதட்டமா இருக்கா..? 
 
 
ஐயோ பாவம், ராகவ் பிரசாத் சொத்தில் அவருடைய ஒரே மகனான ராதாகிருஷ்ணனுக்கு முழு உரிமை இருக்கு.. அடுத்து ராதாகிருஷ்ணனுடைய மூன்று வாரிசுகளுக்கும் சரிசமமா அந்த சொத்தில் பங்கும் இருக்கு, இப்போ அது இரண்டு பங்கு, அதில் ஒரு பகுதியை வித்து தான் என் மாமனாருடைய கடனை ராதாகிருஷ்ணன் அடைச்சு இருக்கார்..
 
 
அதுக்காக எல்லாம் இனி சொத்தில் பங்கே இல்லைன்னு சொல்லிட முடியுமா..? ஏன் உன் சின்ன பையன் பொண்ணுங்க பின்னே சுத்தி அழிச்சதை விடவா என் மாமனார் அதிகமா அழிச்சுட்டார்..! ஆனாலும் விவரம் தெரியாத சின்னப் பையன் வாழ்க்கையை அழிச்சதா இப்போ வரைக்கும் ஒண்ணுமறியாத ஒருத்தவங்க மேலே வீண் பழியை சுமத்தி அவங்க வாழ்க்கையையே அழிச்ச ஆள் தானே நீ..!” என்றான் விநாயக். 
 
 
ஏதோ வீம்புக்காக பேச வந்திருந்தால் கூட எதை எதையோ சொல்லி கத்தி ஆர்பாட்டம் செய்து அவனை விரட்டி விடலாம். ஆனால் இப்படி துல்லியமாக புள்ளி விவரங்களோடு வந்து பேசுபவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிய வேதவல்லி, “நீ கண்டதையும் தேவையில்லாமல் யோசிச்சுட்டு வந்து உளறதுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது..” என்றார்.
 
 
“உன்கிட்ட நான் பதிலும் கேட்கலையே..! என் மனைவிக்கு சொந்தமான ஒன்றை மறுக்கும் உரிமை உனக்கு இல்லைன்னு சொல்ல தான் வந்தேன்.. உனக்கு பிடிக்கலை, உனக்கு அடிமையா இல்லைன்னு எல்லாம் அவங்களுக்கு சொந்தமானதை நீ மறுக்க முடியாது..” என்றான் அழுத்தமான குரலில் விநாயக். 
 
 
‘இவனிடம் மட்டும் தான் தோற்றுக் கொண்டே இருப்பது போலும், இவனிடம் எல்லாம் தோற்க வேண்டி இருக்கிறதே..!’ என்ற கோபத்திலும் எப்படியாவது விநாயக்கை நோகடித்து விட வேண்டும் என்ற முடிவோடு “ஒழுக்கம் இல்லாத ஒருத்திக்கு முறையற்று பிறந்த நீ எல்லாம் என்னை வந்து கேள்வி கேட்பே.. உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எனக்கு இல்லைடா,என் தகுதிக்கு நீ எல்லாம் தூசுக்கு சமம்..” என்று அருவருப்போடு முகத்தை சுழித்தபடியே கூறினார் வேதவல்லி.
 
 
அதில் “ம்மா..” என்று அவ்வளவு நேரம் சும்மா நின்றிருந்த ரகோத்தமன் வேகமாக ஏதோ சொல்ல வரவும், அவர் பக்கம் பார்வையை திருப்பியவன், தன் கையசைவில் அமைதியாக இருக்கும் படி கூறியவிட்டு “இத்தனை வருஷமா எப்படி கண்ணிருந்தும் பார்க்காம, வாய் இருந்தும் பேசாம இருந்தீங்களோ அப்படியே இப்போவும் இருங்க.. என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்று விட்டு நிதானமாக திரும்பி வேதவல்லியை பார்த்தவன், “இங்கே பாரு வேதவில்லி..” என்று தொடங்கியவன், அவர் முறைக்கவும் “ஓ வேதவல்லி இல்லை.. இன்னும் என்னை அந்த பத்து வயசு சின்ன பையனாவே நினைச்சுட்டு இருக்கறதை எப்போ மாத்திக்க போறே..? 
 
 
அன்னைக்கு நீ பேசினதை எல்லாம் கேட்டு மனசு வருந்தி அழுதுகிட்டே ஓடின அந்த சின்ன பையனை மறந்துட்டு இப்போ நிதர்சனத்துக்கு வா.. நீ எவ்வளவு தான் வார்த்தைகளை விஷத்தில் முக்கி என் மேல் வீசினாலும் என் மனைவிக்கும் அவங்க அம்மாவுக்கும் சேர வேண்டிய உரிமையை அவர்களுக்கு மீட்டுக் கொடுக்காம நான் அமைதியாக மாட்டேன்..” என்றான் விநாயக். 
 
 
“இத்தனைக்கு பிறகும் அசராமல் பேசுபவனை முறைத்தபடியே அந்த நன்றி இல்லாத நா*களுக்கு எல்லாம் என்னால் எதுவும் கொடுக்க முடியாது..” என திட்டவட்டமான குரலில் வேதவல்லி கூறவும் “யாரு யாருக்கு நன்றியோடு இருக்கணும்..? யாருக்கு நன்றி இல்லை..!” என்று கோபமாக தன் அருகில் இருந்த இருக்கையை தட்டியவன், “நன்றி.. நன்றி.. எதுக்கு நன்றி..? நீ பெத்த பிள்ளையை நீ பார்த்துக்கிட்டதுக்கு நன்றி எதுக்கு..? பாசம் இருந்தா போதாதா..! 
 
 
மூச்சுக்கு முந்நூறு முறை என் மாமனார் நஷ்டமானதை பற்றியே பேசறியே, ஏன் உன் குடும்பத்தில் எடுத்த எந்த படமும் இதுவரைக்கும் நஷ்டமானது இல்லையா..? ஊர் உலகத்தில் கணவனை இழந்தோ.. இல்லை கணவனால் கைவிடப்பட்டோ வர மகளையும் பேரன் பேத்திகளையும் எந்த குடும்பமும் தாங்கி பிடிக்கிறதே இல்லையா..? 
 
 
அவங்க எல்லாம் இப்படித்தான் நான் தான் உன்னை பாத்துக்கிட்டேன், என் தயவில் தான் நீ வாழறேன்னு தினமும் சொல்லி காட்டிட்டே இருந்தாங்களா..? இங்கே உரிமையா வரவும், தங்கவும் என் மாமியாருக்கும் என் மனைவிக்கும் சகல உரிமையும் இருக்கு.. 
 
 
அதனால் தான் ராதாகிருஷ்ணன் அவங்களை இங்கே கூட்டிட்டு வந்தார், ஏன் உனக்கு தைரியம் இருந்தா அப்போவே அவர்கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே, இவங்க இங்கே வரக்கூடாது.. என்னால் இவங்க பொறுப்பை ஏற்றுக்க முடியாதுன்னு..” என்றவன் சிறு இடைவெளி விடவும், வேதவல்லி அமைதியாகவே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார்.
 
 
“அப்போ நீ சொல்லி இருக்கே.. அப்படி தானே…! அதுக்கு அவர் சரியான பதிலையும் உனக்கு கொடுத்திருப்பார் இல்லையா..?” என்று சிறு கேலியோடு கேட்டவன் “இப்போ புரியுது உன் புருஷன் ஏன் அப்படி ஒரு உயிலை எழுதி வெச்சுட்டு போனாருன்னு..” என்றதும் திடுக்கிட்டு நிமிர்ந்தார் வேதவல்லி. 
 
 
‘இது.. இந்த விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்..?’ என்று வேகமாக அவரின் மனதில் ஓட, “இப்போ நீ தங்கி இருக்க இந்த வீடும் கடற்கரை ஓரமா இருக்கும் ஷுட்டிங்கிற்காக வாடகைக்கு விடும் இரண்டு பங்களாக்களும், அதிலிருந்து வரும் வருமானமும் மட்டும் தான் உனக்குன்னு தெளிவா எழுதி வைச்சுருக்கார்.. மீதி எல்லாம் சரிசமமா பிரிச்சு அவருடைய மகனுக்கும் மகளுக்கும் எழுதி வச்சுட்டு தான் போயிருக்கார்..
 
 
அவங்களுக்கு சொந்தமான சொத்தை அவங்களுக்கு கொடுக்காம இத்தனை வருஷமா ஏமாற்றறி அதில் முழு உரிமையும் உனக்கு இருக்கறது போல நீ எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இருந்திருக்கே.. இப்போ சொல்லு யார் யார்கிட்ட நன்றியோடு இருக்கணும்..? 
 
 
நன்றி நன்றின்னு மூச்சுக் விடாம பேசறியே, அந்த நன்றி உனக்கு கொஞ்சமாவது அவங்க மேலே இருக்கா.. உன்னை உட்கார வைச்சு இத்தனை வருஷமா சமைச்சு போட்டு பார்த்திருக்காங்க.. நீ கொஞ்சமும் நம்பாம இருந்தாலும் கம்பெனியில் பொறுப்பை எடுத்து இத்தனை வருஷமா அதை லாபகரமா நடத்திக் கொடுத்திருக்கா.. இதுக்கெல்லாம் நீ அவங்ககிட்ட நன்றியோடு என்னைக்காவது நடந்திருக்கியா..? இல்லை அன்பா தான் பேசி இருக்கியா..?” என்றான் விநாயக். 
 
 
‘என் தயவில் என் வீட்டுக்குள்ளே வாழற அவங்க எனக்கு வேலை செய்யறதில் என்ன தப்பு இருக்கு..? அதுக்கு நான் நன்றி வேற சொல்லணுமோ..!” என இடக்காக வேதவல்லி கேட்கவும், “இதோ இப்போ கூட எல்லாம் உன்னோடது, அவங்களுக்கும் இதுக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை.. 
 
 
உன் தயவில் தான் அவங்க வாழறாங்கன்னு கூசாம சொல்றியே இதுவே முதல் பொய்.. உனக்கு எப்படி இங்கே எல்லா உரிமையும் இருக்கோ, அதே உரிமை அவங்களுக்கும் இருக்கு.. இன்னும் சொல்லப் போனா நீ அவங்களுக்கு நீ எதுவும் செய்யலை.. அவங்க தான் இத்தனை வருஷமா உனக்கு செஞ்சுட்டு வந்துருக்காங்க.. 
 
 
ஆனா தினம் இப்படி நீ பேசி பேசியே இந்த வீட்டுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இங்கே இருக்க எந்த ஒரு விஷயத்திலும் அவங்களுக்கு உரிமை இல்லைன்னு அவங்க மனசில் நல்லா பதிய வெச்சுருக்க.. உன் நோக்கமும் அதுவா தான் இருந்திருக்கு, அதில் நீ வெற்றியும் பெற்று இருக்கே.. ஆனா அது இப்போ எங்கே தெரியுமா வந்து நிற்குது..? 
 
 
இங்கே இத்தனை வருஷமா இப்படியே வாழ்ந்து பழகின இவ, என்கிட்ட கூட எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன்றா.. அவ வீட்டில் கூட உரிமையா எதையும் செய்ய மாட்டேன்றா.. எல்லா விஷயத்துக்கும் அனுமதி கேட்டு தயங்கி நிற்கறா.. இதை நாம கேட்கலாமா..? இதை நாம செய்யலாமா..? இதுக்கு நமக்கு அனுமதி இருக்கான்னு அவளுக்குள்ளே ஒரு சந்தேகம் எப்போவும் தூங்காம விழித்துக்கொண்டே இருக்கு..
 
 
நீ இதுக்கெல்லாம் தகுதியானவ இல்லைன்னு பேசி பேசியே அவளையும் நீ நம்ப வெச்சுருக்க.. அப்படியே அவளும் வளர்ந்துட்டா, அந்த முட்டாளுக்கு இன்னும் புரியலை இது எல்லாமே அவளுக்கு உரிமையானது.. அவ உரிமை கொண்டாட வேண்டியது, அவ தான் புரிஞ்சுக்காம தள்ளி நிற்கறான்னு..” என்றவன், இறுதி வார்த்தைகளை உச்சரிக்கும் போது நந்தினியை அழுத்தமாக பார்த்து வைக்க.. அவளோ பார்வையை தழைத்துக் கொண்டாள்.
 
 
“அவளுக்கே அவ இடம் எதுன்னு தெரிஞ்சுருக்கு..” என்று கேலி புன்னகையோடு வேதவல்லி சொல்லவும், அவன் இத்தனை சொல்லியும் கொஞ்சமும் அதை புரிந்து கொள்ளாமல் பேசிக் கொண்டிருப்பவரை எரிச்சலோடு பார்த்தவன், “உன்னை எல்லாம் இந்த ஜென்மத்தில் திருத்த முடியாது, உன்னை திருத்துவதும் என் வேலைற கிடையாது.. என் மனைவிக்கான உரிமையை நான் எங்கேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.. அவர் நாளையிலிருந்து கம்பெனிக்கு எப்போவும் போல உரிமையா போவா..” என்று சொல்லி ஒரு இடைவெளி விட்டவன், “இனி யாருடைய அனுமதியையும் கேட்டு அங்கே அவ வேலை பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை.. அவ பொறுப்பில் இருக்கும் ஆர்கே புரொடக்ஷன்ஸ் கம்பெனியில் அவள் எடுக்கும் முடிவு தான் இனி இறுதியானதா இருக்கும்..” என்றவனை மறுப்பான தலையசைப்போடு பார்த்து வேதவல்லி ஏதோ சொல்ல வர,
 
 
“இல்லை முடியாது நான் பிரச்சனை தான் செய்வேன்னு நீ சொன்னா அதுக்கும் நான் தயார்.. இதை எங்கே எப்படி கொண்டு போய் எனக்கு சாதகமா முடிச்சுக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. விரைவில் கோர்ட்டில் சந்திக்கலாம்..” என்றவன், இதோடு உன்னுடனான என் பேச்சு முடிந்தது என்பது போல் எழுந்து நின்றவன், சித்ராவின் பக்கம் திரும்பி “இதுக்கு மேலும் இங்கே நீங்க இருக்க வேண்டாம்னு எனக்கு தோணுது, எங்க கூட வந்துடுங்க..” என்றான்.
 
 
இதை நந்தினியே எதிர்பார்க்கவில்லை. சிறுத்திகைப்பும் அத்தனை நெகிழ்வுமாக அவனை நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. மற்றவர்களும் அவனை அப்படித்தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
 
“நீ கூப்பிட்டா அவ வந்துடுவாளா..?” என்று தன் அதிர்வை மறைத்துக் கொண்டு வேதவல்லி அப்போதும் குரல் எழுப்ப.. அதே நேரம் ‘சரி’ என்பதாக தலையசைத்து சித்ரா இரண்டடி முன்னே எடுத்து வைத்திருந்தார். 
 
 
இதை கண்டு உண்டான கோபத்தோடு ஆத்திரமாக எழுந்து நின்றிருந்த வேதவல்லி “ஏன்டி மானங்கெட்டவளே அவன் கூப்பிட்டா உடனே போயிடுவியா..? உனக்கும் உன் பொண்ணுக்கும் கொஞ்சம் கூட மான ரோஷமே கிடையாதா..!” என்று பேசிக் கொண்டே இருக்க.. அவரின் பேச்சை கொஞ்சமும் மதிக்காமல் விநாயக் மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு வாயிலை நோக்கி நகர்ந்தான்.
 
 
நேற்றைய வேதவல்லியின் பேச்சுக்கு பிறகு ‘இத்தனைக்கு பின்னும் இங்கே இருக்க தான் வேண்டுமா..? ஏதாவது கோவிலோடு சேர்ந்த மடத்தில் சென்று சேர்ந்து விடலாமா..?’ என்ற யோசனை இரவு முழுக்க சித்ராவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. 
 
 
அதனாலேயே இப்போது விநாயக் அழைத்ததும் வேறு எந்த யோசனையும் இல்லாமல் கிளம்பி விட்டார் சித்ரா. இதை கண்டு ஆத்திரம் தாங்காமல் கத்திய வேதவல்லி “இப்போ நீ இந்த வீட்டு வாசப்படியை தாண்டினே, இதுக்கு பிறகு எப்போவும் இந்த வீட்டுக்குள்ளே வரவே கூடாது.. நான் செத்தா கூட நீ வந்து என் முகத்தை பார்க்க கூடாது..” என்று தன் இறுதி ஆயுதத்தை சித்ராவை நோக்கி எய்து பார்க்க.. அவரோ திரும்பியும் பார்க்காமல் விநாயக்குடன் சென்று விட்டிருந்தார்.
 
 
இதில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ரகோத்தமன் பக்கம் திரும்பி முறைத்தவர் “என்ன நடக்குது இந்த வீட்டில்..? அவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான், இங்கே இருந்து ஒவ்வொருத்தரையும் பிரிச்சு கூட்டிட்டு போறானா..? இது தான் அவன் பல வருஷ திட்டமா..!” என்று கத்திக் கொண்டிருக்க.. எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தன் அறையை நோக்கி நகர்ந்தார் ரகோத்தமன்.
 
 
அது வேறு அவரை ஆத்திரத்தில் கொந்தளிக்க செய்ய.. “என்ன ரகு நான் பேசிட்டே இருக்கேன் நீ எனக்கென்னன்னு போறே..? அவ்வளவு மரியாதை இல்லாம போச்சோ..!” என்று மீண்டும் அவர் கோபமாக குரல் எழுப்பவும், “என்னை என்ன செய்ய சொல்றீங்க ம்மா.. என் பொண்ணு இந்த வீட்டில் இருந்து போகும் போதே என்னால் எதுவும் செய்ய முடியலை, இப்போ சித்ராவை மட்டும் என்னால் தடுக்க முடியும்னு நினைக்கறீங்களா.. அவங்க இரண்டு பேரும் இந்த வீட்டில் அனுபவிச்சதுக்கு அவங்க எடுத்த முடிவு என்னை பொறுத்த வரைக்கும் சரிதான்.. அன்னைக்கு நான் எப்படி மௌன சாட்சியாக இருந்தேனோ, இன்னைக்கும் அப்படியே இருந்துக்கறேன்..” என்று விட்டு நகர்ந்தார் ரகோத்தமன்.
 
 
அடுத்து புஷ்பாவும் அவரின் பின்னேயே சென்றுவிட, அந்த வீட்டில் தனித்து விடப்பட்டது போல் உணர்ந்தார் வேதவல்லி.
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
1787854314-IMG-20260827-WA0001.jpg
 
 
மௌனம் - 33
 
விநாயக் சித்ராவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய.. அவரை வெகு இயல்பாகவே அன்போடு வரவேற்றார் அபிராமி. அந்த நொடி முடிவெடுத்து விநாயக்குடன் கிளம்பி வந்து விட்டிருந்தாலும் வரும் வழியெல்லாம் சித்ராவுக்கு மனதில் லேசான ஒரு சஞ்சலம் இருந்து கொண்டே இருந்தது.
 
 
மகளையும் திருமணம் செய்து கொடுத்து விட்டு அந்த வீட்டிற்கே வந்து தங்கும் தன் சூழ்நிலையை எண்ணி வருந்தியவர், இதை அபிராமி எப்படி எடுத்துக் கொள்வாரோ என்றெல்லாம் நினைத்து பயந்து கொண்டே இருந்தார்.
 
 
ஏனெனில் அபிராமியை பற்றி பெரிதாக சித்ராவுக்கு எதுவும் தெரியாது. இதுவரை நேராக பேசி பழகியது கூட இல்லை. இதில் பெரும் தயக்கத்தோடே அங்கு வந்து சேர்ந்தவர், அபிராமி தன்னை வரவேற்று உபசரித்த விதத்தையும் இயல்பாக பேசிக் கொண்டிருந்ததையும் கண்டு நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்தார். 
 
 
நந்தினியின் நிலையும் கிட்டதட்ட அப்படித்தான் இருந்தது. அந்த வீட்டில் இருந்து ஒவ்வொருவராக இங்கு வந்து தங்குவது அபிராமிக்கு பிடிக்குமோ இல்லையோ என்ற சஞ்சலமும், மானஸா கூட ரகோத்தமனின் மகள் அந்த உறவிலும் உரிமையிலும் அவளை மனதார ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சித்ரா அப்படி இல்லையே..! ஒரு சம்பதியாக அவரை எப்படி பார்ப்பாரோ என்ற லேசான தயக்கமும் அவளுக்கு இருந்தது.
 
 
இத்தனை நாட்களில் அபிராமியோடு நன்றாக பழகி அவரின் குணத்தைப் பற்றி அறிந்து கொண்டிருந்தாலும், ஏனோ சற்று முன் விநாயக் சொன்னது போல இயல்பாக உரிமையோடு அவளால் அத்தனை எளிதாக எதையும் செய்து விட முடியவில்லை. 
 
 
ஆனால் அதையெல்லாம் புறம் தள்ளி அபிராமி சித்ராவோடு பேசி பழகி இயல்பாக அவரை வைக்க முயன்று கொண்டிருப்பதை தான் மனம் நெகிழ பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் நந்தினி. அதேநேரம் அங்கு வந்த மானஸா சித்ராவை இங்கு கண்டு “ஹை அத்தை எப்போ வந்தீங்க..?” என்று துள்ளி குதித்துக் கொண்டு அவரின் அருகில் சென்று அணைத்து கொண்டாள்.
 
 
அவரும் அன்போடு அவளை அணைத்து முத்தமிட்டு “நான் நல்லா இருக்கேன்டா, நீ எப்படி இருக்கே..?” என்று விசாரிக்க.. இருவரும் அப்படியே பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் அனைவருக்கும் சாப்பிட எடுத்து வைத்தார் அபிராமி.
 
 
விநாயக் காலை இங்கே இருந்து கிளம்புவதற்கு முன்பே வேதவல்லியை பார்க்க செல்வதாகவும் திரும்ப வரும் போது சித்ராவை இங்கேயே தங்குவதற்கு அழைத்து வர இருப்பதாகவும் சொல்லிவிட்டே சென்று இருந்தான்.
 
 
அவன் சித்ராவை இங்கே அழைத்து வருவதில் எல்லாம் அபிராமிக்கு எந்த ஒரு மறுப்பும் இல்லை. ஆனால் ஏன் வேதவல்லியை பார்க்கச் செல்ல வேண்டும்..? என்று தான் கவலையாக இருந்தது.
 
 
அதையும் மனதிற்குள் வைத்து மறுகாமல் மகனிடமே அவர் கேட்டுவிட, “யதுவுக்கான உரிமையை அவளுக்கு வாங்கி கொடுக்கணும் ம்மா.. அவளா எதுவும் கேட்க போறது இல்லை, அவங்களா கொடுக்க போறதும் இல்லை.. இப்படி வெளியே போய் வேலை தேட வேண்டிய அவசியம் அவளுக்கு என்ன..?
 
 
இத்தனை வருஷம் அவ உழைப்பை அந்த கம்பெனியில் போட்டு இருக்கா, அது அவளுக்கு உரிமையானதும் கூட.. அப்போ அது அவள் கைக்கு வந்து சேருவது தானே சரியா இருக்கும்..!” என்றவன் வார்த்தைகளில் உள்ள உண்மை புரிந்து அமைதியாகிவிட்டார் அபிராமி. 
 
 
அதனாலேயே அவன் திரும்பி வருவதற்குள் சித்ரா தங்குவதற்கு என தனி அறையை அவர் ஏற்பாடும் செய்து வைத்திருந்தார். அவரை அங்கு அழைத்துச் சென்று தங்க வைத்த அபிராமி, “உங்களுக்கு என்ன வேணும்னாலும் தயங்காம நந்துகிட்டேயே கேளுங்க.. இது அவ வீடு தான்..” என்று விட்டு வெளியேற, “உன் மாமியார் ரொம்ப நல்லவங்க நந்தும்மா.. இப்படி ஒருத்தரோட அருமை புரியாம எங்க அம்மா தான் தவறு செஞ்சுட்டாங்கனா.. அண்ணா எங்கே தவறினார்னு எனக்கு இப்போ வரைக்கும் புரியலை..” என்றார் உணர்ந்து புரிந்த குரலில் நந்தினியிடம் சித்ரா.
 
 
அவளுமே அதை ஏற்றுக் கொண்டது போல் அமைதியாக தலையசைக்க.. “இத்தனை துரோகம் அவங்களுக்கு நடந்தும், அந்த வீட்டில் இருக்கும் யார் மேலேயும் அவங்களுக்கு எந்த ஒரு கோபமும் இல்லை பாரேன்.. எனக்கெல்லாம் அவங்க இதை செய்யணும்னு எந்த அவசியமும் இல்லை..” என்று சித்ரா சொல்லவும் நந்தினிக்கும் அது நன்றாகவே புரிந்தது.
 
 
மேலும் சில நொடிகள் அங்கு அமர்ந்து பேசிக்கொண்டு இருந்து விட்டு தன் அறைக்கு வந்தவள், வெளியில் செல்ல விநாயக் தயாராகிக் கொண்டிருப்பதை கண்டு அவன் முன் சென்று தயக்கத்தோடு நின்றாள் நந்தினி.
 
 
அதில் ‘என்ன..?’ என்பது போல் அவன் நந்தினியை திரும்பி பார்க்கவும், “அது.. அம்மா.. அம்மாவை.. இங்கே.. கூட்டிட்டு வந்ததுக்கு.. ரொம்ப தேங்க்ஸ்.. இதை நான்.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. இதுக்கு நான்.. எப்படி நன்றி..” என தயங்கி தயங்கி அவள் பேசவும், தலையை லேசாக சாய்த்து புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தவன் “நன்றி தானே.. தாராளமா சொல்லு, நான் வேண்டாம்னு சொல்லவே இல்லையே..!” என்றான் விநாயக்.
 
 
அதில் அவனை புரியாமல் விழிகளை உயர்த்தி நந்தினி பார்க்கவும், அவனும் என்ன என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றான். “இல்லை.. எப்படி..?” என அவள் இழுக்கவும், “என்ன எப்படி..?” என்றான் அவள் கேட்க வருவது புரியாதது போல் விநாயக்.
 
 
“அதான் நன்றி..” என்றவள் “சரி தேங்க்ஸ், ரொம்ப தேங்க்ஸ்..” என மீண்டும் பேசவும், அவள் இதழ்களில் தன் ஒற்றை விரலை வைத்தவன் “எனக்கு உன் தேங்க்ஸ் இப்படி வார்த்தைகளில் வேண்டாம்..” என்றான். 
 
 
“ஆங்.. அப்போ எப்படி..?” என அவள் லேசான திகைப்போடு பார்க்கவும், “சரி உனக்கு நன்றி சொல்ல விருப்பம் இல்லைனா பரவாயில்லை விடு..” என்று சோகம் போல் முகத்தை வைத்துக்கொண்டு பேசிவிட்டு அவன் நகர.. சட்டென எம்பி விநாயக்கின் கன்னத்தில் இதழ் பதித்திருந்தாள் நந்தினி.
 
 
வழக்கம் போல் அவள் தயங்கிக் கொண்டே இருப்பாள் என்று எண்ணி இருந்த விநாயக்கே இதை எதிர்பார்க்கவில்லை.. அதில் விழிகள் விரிய லேசான திகைப்போடு அந்த நொடியை உணர்ந்து அவன் திரும்பி பார்ப்பதற்குள் நந்தினி அங்கிருந்து ஓடி விட்டிருந்தாள்.
 
 
‘ஹ்ம்ம், பரவாயில்லையே.. கொஞ்சம் கொஞ்சமா மேடம் கூட்டிலிருந்து வெளியே வர ஆரம்பிச்சுட்டாங்க..’ என்று உல்லாசமாக சொல்லிக் கொண்டவாறே வெளியில் கிளம்பினான் விநாயக்.
 
 
*****
 
 
மறுநாள் காலை தயாரிப்பு நிறுவனத்திற்கு செல்ல கிளம்பி கொண்டிருந்தாள் நந்தினி. இப்போதும் அவள் மனம் முழுக்க தயக்கமே சூழ்ந்து இருந்தாலும், இன்று நீ சென்றே ஆக வேண்டும் என்றிருந்தான் விநாயக்.
 
 
“நீ தயங்கி தள்ளி போட்டுக்கொண்டே இருந்தா, நாட்கள் தான் வீணாகுமே தவிர உனக்கு அங்கே போகணும் என்ற எண்ணமே வராது.. அதனால் இதற்கு மேலும் நாட்களை வீணாக்காமல் அங்கே உனக்காக காத்திருக்கும் வேலைகளை போய் பார்..” என்று காலையில் திட்டவட்டமாக சொல்லிவிட்டு அவன் கிளம்பி இருக்க.. அதைப்பற்றிய யோசனையோடே தயாரானாள் நந்தினி.
 
 
கம்பெனியில் வேதவல்லியின் தொந்தரவு இருக்காது. ரகோத்தமனும் பெரிதாக பிரச்சனை எதுவும் செய்ய மாட்டார்.. பிடிக்கவில்லை என்றால் அமைதியாக ஒதுங்கிக் கொள்வார், அங்கு இருக்கும் ஒரே பிரச்சனை நிதின் மட்டுமே..! ‘அவனை எப்படி சமாளிக்க போகிறோமோ..?’ என்று நினைக்கும் போதே அவளுக்கு பதட்டமானது..
 
 
ஆரம்பத்தில் இருந்தே விநாயக் விஷயத்தில் நிதின் பிரச்சனை செய்து கொண்டு தான் இருக்கிறான். இதில் இப்படி வீட்டிற்கு தெரியாமல் திருமணம், அதன் பின்னான விஷயங்கள்.. இப்போது அடமாக கம்பெனிக்குள் செல்வது என எல்லாம் அவள் மனதில் வந்து நிற்க.. நிதினை எண்ணி உண்டான கவலையோடே கீழே இறங்கி வந்தாள் நந்தினி.
 
 
அங்கு உணவு மேஜையில் அபிராமியும் சித்ராவும் இவளுக்காக காத்திருக்க.. மூவரும் சேர்ந்து காலை உணவை முடித்துக் கொள்ள இருவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் நந்தினி. 
 
 
அபிராமி “ஆல் தி பெஸ்ட் நந்து, பார்த்து போயிட்டு வாம்மா..” என்றதோடு முடித்துக் கொள்ள.. சித்ராவுக்கு தான் எதையெதையோ எண்ணி மனம் கவலையாக இருந்தது. அதில் வாயில் வரை மகளைச் சென்று வழி அனுப்பியவர் “நிதின் கோபமா ஏதாவது பேசினாலும் கொஞ்சம் பொறுத்துக்கோடா..” என்று மெல்லிய குரலில் கூறவும், “எனக்கு இப்படி பொறுத்துக்கறதெல்லாம் பழக்கம் தானேம்மா.. புதுசா என்ன..?” என்றிருந்தாள் நந்தினி. 
 
 
இது சித்ராவை மனதளவில் சுருக்கென தைக்க.. அடுத்து எதுவும் பேச முடியாமல் அவர் அமைதியாகிவிட, அதை கவனித்திருந்த நந்தினி சித்ராவின் கையைப் பிடித்துக் கொண்டு “நான் சாதாரணமா தான் சொன்னேன் ம்மா..” என்றாள். “எனக்கு தெரியும்டா ஆனா எனக்கு வலிக்குது..” என சித்ரா சொல்லவும் “சாரிம்மா..” என்றாள் வருத்தத்தோடு நந்தினி.
 
 
“மன்னிப்புன்னு ஒண்ணு கேட்கணும்னா நான் தான் உன்கிட்ட கேட்கணும் நந்து.. தெரிஞ்சே இத்தனை நாள் உன்னை வலிக்க விட்டு இருக்கேன்..” என்று சித்ரா சொல்லவும், “இந்த பேச்சு இப்போ ஆரம்பிச்சா முடிவே இல்லாம போகும்மா, வேண்டாம் நாம இதை நிறுத்திக்கலாம்..” என்ற நந்தினி விநாயக்கின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
 
 
காலை அவன் கிளம்பி செல்வதற்கு முன் அவளிடம் சாவியை கொடுத்து “இனி இது உன் கார், தேவையில்லாம தயங்கிட்டு இருக்காம ஒழுங்கா எடுத்துட்டு கிளம்பு..” என சற்று மிரட்டலாகவே சொல்லிச் சென்றிருக்க.. அதை எண்ணி சிரித்தபடியே அலுவலகத்திற்கு சென்றாள் நந்தினி.
 
 
அலுவலகம் வரை எப்படியோ வந்து விட்டவளுக்கு உள்ளே செல்ல லேசான தயக்கம் உண்டானது. ஆனாலும் எப்படியும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு இறங்கி உள்ளே நுழைந்தவள், நிதின் அறை இருந்த பக்கம் கூட திரும்பாமல் நேராக தன் அறைக்குச் சென்று கதவை திறக்க.. அங்கு இவள் அமர வேண்டிய இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்தான் நிதின்.
 
 
அவனை அங்கு கண்ட அதிர்வில் அப்படியே நந்தினி கதவை பிடித்துக் கொண்டு நின்று விட, “என்ன உள்ளே வர ஐடியா இல்லையா..?” என்றான் சிறு கேலி குரலில் நிதின்.
 
 
“ஹாங் இதோ..” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தபடியே நந்தினி உள்ளே நுழைய.. “ஏன் முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..? ஓ என்னை இங்கே நீ எதிர்பார்க்கலையோ..!” என்று கேட்டவாறே எழுந்து நின்றவனுக்கு, “அதெல்லாம் இல்லை..” என்று எப்படியோ தன்னை சமாளித்துக் கொண்டு பதில் சொல்லி இருந்தாள் நந்தினி. 
 
 
ஏதோ புது நபரிடம் பேசுவது போல அவள் தயங்கி தயங்கி ஒவ்வொரு வார்த்தையையும் உதிர்த்துக்கொண்டு இருக்க.. நிதின் லேசாக தலை சாய்த்து நந்தினியை பார்த்தான். 
 
 
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியவள், “என்ன..?” எனவும், “அதே தான் நானும் கேட்கறேன், என்ன இன்னைக்கு ரொம்ப வித்தியாசமா தெரியறே..?” என்றான் நிதின்.
 
 
‘அதை நான் சொல்லணும், இன்னைக்கு நீ தான் எனக்கு வித்தியாசமா தெரியறே..’ என மனதிற்குள் நினைத்தவாறே மெல்ல விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவள் “நீ என்ன இங்கே..?” எனவும் “நீ இன்னைக்கு ஆபீஸ் வருவேன்னு அப்பா சொன்னாங்க.. அதான் உன்னை வெல்கம் செய்யலாம்னு வந்தேன்.. வெல்கம் பேக் மேடம்..” என அவன் இடை வரை குனிந்து அவளை வரவேற்க, வித்தியாசமாக நிதினைப் பார்த்தாள் நந்தினி. 
 
 
“நீ என்னை சீக்கிரமாவே வந்து பார்ப்பேன்னு நினைச்சேன்..” என நிதின் சொல்லவும், குழப்பமாக அவனைப் பார்த்தவள் “நானா..! எதுக்கு..?” என்றாள். 
 
 
“எதுக்கா தேங்க்ஸ் சொல்ல தான்..” என்றபடியே அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தவன், அவளையும் இழுத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்டு “இந்த ஆபீஸ்க்கு நீ வரலை.. உன்னால் வீட்டுக்கும் வர முடியாது, வேற எங்கேயாவது மீட் செய்ய கூப்பிடுவேன்னு நினைச்சேன்.. அட்லீஸ்ட் ஒரு போன் செஞ்சு பேசி இருக்கலாம், ஆனா எதுவுமே காணோம்.. உன் காதல் கை சேர்ந்த குஷியில் 
 
 
உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி
என் கண்கள் ஓரம் நீா்த்துளி
உன் மாா்பில் சாய்ந்து
சாகத்தோணுதேன்னு
 
 
பாடிட்டு அவன் பின்னே சுத்தவே சரியா இருந்திருக்கும் அப்படித்தானே..!” என்றான் கிண்டலாக நிதின். 
 
 
‘அவன் கோபமாக பேசுகிறானா..! இல்லை விளையாட்டாக பேசுகிறானா..?’ எனப் புரிந்து கொள்ளவே அவளுக்கு முடியவில்லை. அதில் பதிலேதும் சொல்லாமல் நிதின் முகத்தையே ஆராய்ச்சியாக நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. “என்ன..?” என்றான் அவளின் பார்வை புரியாமல் நிதின். 
 
 
“நீ என் மேலே கோபமா இருப்பேன்னு நினைச்சேன்.. நான் இங்கே வந்தா திட்டுவேன்னு நினைச்சேன், ஆனா நீ..” என்று நந்தினி தயங்கி இழுக்கவும், “கோபமா..?” என்றவன் பின், “நேத்து வீட்டுக்கு போய் நீங்க பேசினதுக்கா..!” என்றான் நிதின். 
 
 
“அதுக்கும் தான், அப்புறம்..” என அவள் தயங்கி நிறுத்த, “நீ கம்பெனிக்கு வரக்கூடாது, பொறுப்பை எடுத்துக்க கூடாதுன்னு எல்லாம் நான் என்னைக்குமே சொன்னதில்லை.. இனி சொல்லவும் மாட்டேன், இந்த கம்பெனியில் எனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ.. அதே அளவு உரிமை உனக்கும் இருக்கு..” என்றான் நிதின். 
 
 
இதற்கு முன்பும் விநாயக் விஷயத்தில் இருவருக்கும் சிறு உரசல்கள் வந்திருக்கிறதே தவிர, கம்பெனி விஷயத்தை பொறுத்தவரை நந்தினியை எப்போதும் எதற்கும் அவன் தடுத்ததே இல்லை? அதில் உண்டான புரிதலோடு தலையசைத்தவள் “உனக்கு என் மேலே கோபமே இல்லையா..?” என மெல்லிய குரலில் கேட்கவும், “என்ன சொல்ல வர..? எனக்கு புரியலை நந்து, தெளிவா பேசு..” என்றான் நிதின்.
 
 
“நான் இப்படி திடீர்னு கல்யாணம்..” என அவள் இழுக்கவும், அவளையே விழிகளை சுருக்கி ஒரு நொடி பார்த்தவன், பின் பக்கென சிரித்து விட்டான். அந்த சிரிப்பில் குழம்பி நிதினையே நந்தினி புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க.. “அப்போ உனக்கு இன்னும் எதுவும் தெரியாதா..! உன் காதல் கணவன் எதையும் சொல்லலையா..?” என்று ராகம் போட்டு இழுத்து கேட்டவாறே மீண்டும் சிரித்தான் நிதின்.
 
 
“என்ன தெரியாது..? எதை சொல்லணும்..! அவர்.. அவருக்கு..” என்று தெளிவில்லாமல் குழம்பி துண்டு துண்டாக நந்தினி கேள்விகளை முன்வைக்க.. “எனக்கு உண்மையை சொல்லு, உங்களுக்குள்ளே ஏதாவது பிரச்சனையா..?” என்றான் நிதின். 
 
 
அதில் திடுக்கிட்டவள் “பி.. பிரச்சனையா..? எங்களுக்கா..! அதெல்லாம் ஒண்ணுமில்லையே..!” என்று அவசரமாக நந்தினி சொல்லவும், “உன் இந்த வேகமே எனக்கான பதிலை தெளிவா சொல்லிடுச்சு..” என்றான் புன்னகையோடு நிதின். 
 
 
“ம்ப்ச் என்ன விஷயம் நிது..?” என்று இப்போது பொறுமை இல்லாமல் நந்தனி கேட்கவும் “இதை நான் சொல்லலாமான்னு தெரியலை, ஆனாலும் சொல்றேன்..” என்றவன், “உன் இந்த அவசர கல்யாணத்துக்கு காரணமே நான் தான்..” எனவும், நந்தினிக்கு விழிகள் தெறித்து வெளியில் வந்து விழும் அளவுக்கு மாறிப்போனது. 
 
 
“என்னது..?” என அவள் அதிர்வு மாறா குரலில் கேட்கவும், “ஹ்ம்ம், அப்பாவுக்கு உன்னை எனக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு ஆசை.. அதை பத்தி வேதாம்மாகிட்ட பேச சரியான நேரத்தை எதிர் பார்த்து காத்திருந்தாங்க.. நீ இங்கே இல்லாத இந்த இரண்டு மாசத்தை பயன்படுத்தி அவங்ககிட்ட பேச ஆரம்பிக்க.. 
 
 
முதலில் முடியாதுன்னு தான் சொன்னாங்க வேதாம்மா.. ஆனா உங்க மாமா விடாம ஏதேதோ பேசி, எப்படியோ சொத்து வெளியே போகாம இருக்கும்.. கம்பெனியை பொறுப்பா பார்த்துக்குவான்னு எல்லாம் சொல்லி சொல்லி சம்மதிக்க வெச்சுட்டார்..” என்றதும் திகைத்துப் போனாள் நந்தினி.
 
 
இது அவளுக்கு புது தகவல். மலேசியாவில் இருந்து திரும்பிய பிறகு அவள் வீட்டிற்கும் செல்லவில்லை, இந்த அவசர கல்யாணத்தின் பின் பெரிதாக எதையும் யாரிடமும் கேட்டும் தெரிந்து கொள்ளவுமில்லை என்பதால் அங்கு நடந்த எதுவுமே அவளுக்கு தெரிய வராமல் போயிருந்தது.
 
 
“இதெல்லாம் நிஜமா..?” என்று அவள் திகைப்போடு கேட்கவும், “இதுக்கே இவ்வளவு ஷாக்கானா எப்படி..? இதை விட பெரிய விஷயம் ஒண்ணு இருக்கு..” என்றவன், “நீ மலேசியாவில் இருந்து வந்ததும் அந்த வார கடைசியில் நமக்கு நிச்சயம் செய்வதற்கு கூட ஏற்பாடு செஞ்சுருந்தாங்க..” எனவும் “அய்யய்யோ..” என அலறினாள் நந்தினி.
 
 
“ஹலோ மேடம், இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை.. இப்போ தான் அது நடக்கலையே, அப்புறம் எதுக்கு இப்படி ஒரு சவுண்ட்..?” என அவன் போலி கோபத்தோடு கேட்கவும் “நடக்கலை சரி, நடந்திருந்தா..!” என்று அப்போதும் அதே திகைப்போடு நந்தினி கேட்கவும், “அது எப்படி நடக்கும் உன் ஆளு தான் நடக்க விட்டுடுவானா என்ன..?” என்றான் நிதின். 
 
 
இப்போது அவளுக்கு மற்றதெல்லாம் பின்னுக்குச் சென்று நிதினே அவனைப் பற்றி இத்தனை அமைதியாக நல்ல விதமாக பேசுவது வியப்பை தர.. “முதலில் எனக்கு இதை சொல்லு.. நீ என்ன இப்படி எல்லாம் பேசறே..? உனக்கு தான் அவரை பிடிக்காதே..!” என்றாள் நந்தினி. 
 
 
அதில் சில நொடிகள் தன் கைவிரல்களை பார்த்தபடியே எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தவன், பின் ஒரு சிறிய பெருமூச்சோடு நிமிர்ந்து நந்தினியை பார்த்து “இப்போவும் பிடிக்காது தான்..” எனவும் அவனை நம்ப முடியாமல் பார்த்தாள் நந்தினி. 
 
 
“வாழ்க்கை முழுக்க எல்லா விஷயத்திலும் நீ இரண்டாவது இடத்திலேயே இருந்தா.. முதல் இடத்தில் இருக்கறவனை உனக்கும் காரணமே இல்லாம பிடிக்காம போகும், அப்படித்தான் எனக்கும் அவனை பிடிக்காது.. சின்ன வயசில் விவரம் தெரியாம வேதாம்மா சொன்னதை உண்மைன்னு நம்பி நான் அவனை ரொம்பவே அசிங்கப்படுத்தி பேசக்கூடாததை எல்லாம் பேசிட்டேன்..
 
 
அன்னைக்கு எனக்கு என் ஃபேவரிட் அப்பாவை என்கிட்ட இருந்து திருடிட்டு போக வந்த ஒருத்தனா மட்டும் தான் விநாயக் தெரிஞ்சான்.. வேதாம்மா சொன்னதை நம்பி அவங்க அம்மா தப்பானவங்க, தப்பான முறையில் அப்பா வாழ்க்கையில் வந்து அதில் பிறந்தவன் தான் இந்த விநாயக்குன்னு நினைச்சு நான் நிறைய பேசிட்டேன்.. ஆனா உண்மை தெரிஞ்ச பிறகு என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப் பாரேன்..” என்றவன், சிறு இடைவெளி விடவும் வருத்தத்தோடு அவனைப் பார்த்தாள் நந்தினி. 
 
 
அங்கு அதில் கனமான ஒரு அமைதி நிலவியது. மெல்ல விழிகளை உயர்த்தி அவளை பார்த்தவன், “எனக்கு உண்மை தெரிஞ்சது போல அவனுக்கும் ஒரு கட்டத்தில் உண்மை தெரிஞ்சுருக்கும் தானே..! அன்னைக்கு நான் பேசும் போது முதலில் அப்படியெல்லாம் இல்லைன்னு வாதாடி, பின் அதிர்ச்சியில் அழுது.. எதுவும் பேச முடியாம கண்ணீரோடு அங்கே இருந்து கிளம்பிப் போன ஒருத்தன்.. உண்மை தெரிஞ்ச பிறகு என்ன செய்யணும்..? என்னை தேடி வந்து என் சட்டையை புடிச்சு நீ பேசின வார்த்தைகள் எல்லாம் எனக்கு இல்லைடா, உனக்கு தான் பொருந்தும்னு தானே கேட்கணும்..? 
 
 
நீயே சொல்லு சாதாரணமா ஒருத்தன் அதைத்தானே செய்வான்.. ஆனா இவன் இன்னைக்கு வரைக்கும் அதை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை பேசலை, இதுவே எனக்கு எவ்வளவு வலிக்குது தெரியுமா..? அவன் வாழ வேண்டிய வாழ்க்கையை அவனுக்கு பதில் அதே உரிமையுடன் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. அவன் எல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு விலகிப் போயிட்டே இருக்கான்..
 
 
இதில் அவனை நான் அவ்வளவு வலிக்க செஞ்சுருக்கேன், சரி இதைப்பற்றி தான் பேசலை.. அதுக்கு பிறகு என்னை எங்கேயாவது பார்க்கும் போது முறைச்சு கோபமா பார்த்திருந்தா கூட என் மனசு கொஞ்சமாவது சமாதானமாகி இருக்கும்..
 
 
ஆனா அவன் என்னை ஒரு பொருட்டாவே நினைக்கலை, அது எனக்கு இன்னும் வலியை தான் கொடுத்தது.. அதனால் தான் நான் அவனை பார்க்கும் போதெல்லாம் சீண்டிட்டே இருந்தேன்.. ஏதாவது ஒரு இடத்தில் அவன் பொறுமை காணாமல் போய் என்னை திட்டிட மாட்டானா.. ஏன் இரண்டு அடி அடிச்சாட்டா கூட பரவாயில்லைன்னு தோணுச்சு.. 
 
 
ஆனா அவன் கடைசி வரைக்கும் அப்படி ஒண்ணை செய்யவே இல்லை.. நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும், நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லைன்னு அவன் கடந்து போக போக நான் இன்னும் குற்ற உணர்ச்சியிலேயும் அவன் அளவுக்கு என்னால் நடந்துக்க முடியலைன்ற கழிவிரக்கத்திலும் கூனிக்குறுகிப் போனேன்.. அப்போ தான் நீ அவனை விரும்பற விஷயம் எனக்கு தெரிய வந்தது.. அதுக்கு பிறகு கவனிக்கும் போது அவன் உன்னை விட அதிகமாக உன்னை காதலிக்கறான்னு எனக்கு புரிஞ்சது..
 
 
இதை எனக்கு கிடைச்ச ஒரு துறுப்புச்சீட்டா தான் நினைச்சேன்.. உன் விஷயத்தில் அவனுக்கு எதிரா நின்னு, உன்னை நான் கல்யாணம் செஞ்சுக்க போறது போல நடந்துகிட்டா.. அதுக்காகவாது அவன் என்கிட்ட சண்டைக்கு வருவான்னு நினைச்சேன்.. ஆனா அவனுக்கு உன் மேலேயும் உன் காதல் மேலேயும் அவ்வளவு நம்பிக்கை..
 
 
ஒரு இடத்தில் கூட என் பேச்சை நம்பவோ.. என்னை முறைக்கவோ, என்கிட்ட சண்டைக்கு வரவோ செய்யலை.. இங்கேயும் நான் தான் அவன்கிட்ட தோற்று போனேன்.. அப்பாவுக்கு எப்போவுமே அவன் தான் முக்கியம், என் கூடவே அவர் இருந்தாலும் எப்போவும் அவனை பத்தி மட்டுமே நினைச்சு பேசிட்டு இருப்பார்.. 
 
 
அம்மாவுக்கு அவங்க வாழ்க்கையை தட்டி பறிச்ச குற்ற உணர்வு.. அதில் அவங்களும் மூத்த மகன் அவன் தான்னு அப்பாவோட சேர்ந்து அப்படியே வாழப் பழகிக்கிட்டாங்க.. உனக்கும் அவன் தான் முக்கியம், அப்போ நான் யாருக்குத்தான் முக்கியமா இருப்பேன் நந்து..? நீயே சொல்லேன், யாருக்குமே நான் முக்கியமானவனா இல்லைன்றது எவ்வளவு வலியை கொடுக்கும்னு தெரியுமா..! இப்போ தான் எனக்கு தெரிய வந்தது நம்ம மானுவுக்கு கூட அவனை தான் பிடிச்சுருக்கு..
 
 
வீட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்து இருக்கு, ஆனா அவ என்கிட்ட வந்து நிற்கலை, அவன்கிட்ட போய் நின்னு இருக்கா..” எனும் போதே அவன் குரல் தழுதழுத்தது. 
 
 
இதில் நிதினின் கையை நந்தினி இறுக்கமாக பிடித்துக் கொள்ள.. அவன் சில நிமிடங்கள் விழிகளை கூட உயர்த்தாமல் அப்படியே தலையை குனிந்தபடி அமர்ந்திருந்தான். 
 
 
நிதின் மனநிலை புரிய, அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவனுக்கு குடிக்க கொடுத்தாள் நந்தினி. வேகமாக அதை வாங்கி குடித்தவன் “அப்பாவுக்கு ஆர்.கே புரொடக்ஷன்ஸ் அவன் கைக்கு போகணும்னு ஒரு ஆசை.. அதனால் தான் அதை எனக்கு கொடுக்காமல் ஆர்ஆர் ஸ்டுடியோஸ் பொறுப்பை என்கிட்ட கொடுத்தார்.
 
 
இன்னைக்கு இல்லைனாலும் எப்போவாவது அவனை சமாதானம் செஞ்சு எல்லாரும் ஒரே குடும்பமாக வாழணும்னு மனக்கோட்டை கட்டிட்டு இருக்கார்.. இதெல்லாம் சாத்தியம் இல்லைன்னு அவருக்கு புரியலை, அதனால் நானும் எதுவும் கண்டுக்கலை..
 
 
இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம், அவங்களை பொறுத்த வரைக்கும் வீட்டில் பெரியவங்க முடிவு செஞ்சுட்டாங்க.. நீ வந்து இறங்கினதும், உன்கிட்ட சொல்லி மணமேடையில் உட்கார வெச்சுடலாம்னு நினைச்சுட்டு இருந்தாங்க.. 
 
 
நீ ஒருத்தனை காதலிப்பே.. அவன் இப்படி மொத்த குடும்பத்திற்கும் எதிரானவனா இருப்பான்னு எல்லாம் அவங்களுக்கு கொஞ்சம் கூட தோணலை.. நாம சொன்னா அவ கேட்டுப்பான்ற எண்ணம் மட்டும் தான் எல்லாருக்கும் இருந்தது.. 
 
 
இந்த கல்யாணம் வேண்டாம்னு வீட்டில் நான் பேச நினைச்சுட்டு இருந்த நேரத்தில் தான், எனக்கு ஒரு விஷயம் தெரிய வந்தது.. அது நம்ம தாத்தா எழுதி வெச்சுருந்த உயில், இந்த சொத்தில் உனக்கும் எனக்கும் மட்டுமில்லை விநாயகிற்கும் அவர் சரி பாதி பங்கு கொடுத்திருந்தார்.. இதையெல்லாம் முன்னேயே தெரிஞ்சு வெச்சுருந்த வேதாம்மா சொத்து கையை விட்டு போகாம இருக்க இந்த கல்யாணத்தை நடத்தி முடிச்சு, விநாயக் பேரில் இப்படி ஒரு சொத்து இருக்கும் விஷயத்தையே அவனுக்கு தெரியா மறைச்சுட திட்டம் போட்டாங்க..
 
 
இந்த சூழ்நிலையில் நானும் நீயும் கல்யாணம் வேண்டாம்னு சொல்லி இருந்தா, அவங்க வழக்கம் போல வேற ஒரு குள்ளநரித்தனம் செஞ்சுருப்பாங்க.. அதை செய்யவும் அவங்க பெரிய திட்டத்தோட இருந்தது எனக்கு தெரிய வந்தது.. அதனால் தான் அவசரமா விநாயக்கை சந்தித்து பேசினேன்..” என்று நிதின் நிறுத்தவும், ‘தனக்கு தெரியாமல் இவ்வளவு நடந்து இருக்கிறதா..?’ என்ற திகைப்போடு அவனைப் பார்த்தாள் நந்தினி. 
 
 
“நான் என்னமோ பெரிய ஹீரோ மாதிரி போய் காதலிக்கும் பொண்ணை கூட காப்பாத்திக்க முடியலைனா நீ எல்லாம் எதுக்குடா காதலிக்கறே.. அவளுக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்யறாங்க தெரியுமான்னு கேட்டா.. அவன் நம்ம நிச்சயதார்த்த தேதி முதல் கொண்டு எல்லாத்தையும் விவரமா சொல்றான்..” என்றான் நிதின். 
 
 
“அவங்களுக்கு எப்படி இதெல்லாம்..?” என நந்தினி அதிர்வு மாறாமல் கேட்கவும், “அதை போய் உன் புருஷன்கிட்டேயே கேளு, பதில் சொல்லுவான்..” என்றவன், “அவன் எல்லாம் தெரிஞ்சே சரியான நேரம் பார்த்து தான் காத்திருந்தான்.. இன்னும் சொல்லப்போனா உங்க இந்த ரிஜிஸ்டர் மேரேஜுக்கு தேவையான உன் பர்சனல் டாக்குமெண்ட்ஸ் எல்லாம் வீட்டில் இருந்து எடுத்துக் கொடுத்தது நான் தான்..” என்றான் நிதின். 
 
 
“ஆனா இதில் எனக்கே ஷாக் கொடுத்தான் பாரு உன் ஆளு, அது தான் நான் கொஞ்சமும் எதிர்பார்க்காதது..” என அவன் சொல்லவும், “என்னாச்சு..?” என்றாள் நந்தினி. “ரிஜிஸ்டர் மேரேஜ் இவங்க முடிவு செஞ்சு இருந்த நிச்சயத்துக்கு முதல் நாள் செய்வதாக தான் திட்டம்.. நானே சாட்சி கையெழுத்து போட வரேன்னு கூட சொல்லி இருந்தேன்.. திடீர்னு நீ ஊரிலிருந்து வந்த அன்னைக்கே ஏன் ஏற்பாடு செஞ்சான்னு எனக்கு புரியலை..” என்றான் நிதின்.
 
 
“ஓ..” என்று அவள் இழுக்கவும் “எனக்கு நீ சந்தோஷமா இருந்தா போதும் நந்து.. நாமெல்லாம் ஒரே வீட்டில் ஒண்ணா வளர்ந்தவங்க, உன் மேலே எனக்கு வேற எந்த எண்ணமும் எப்போதுமே வந்ததில்லை.. மானு மாதிரி தான் எனக்கு நீ, உனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சுருக்கு.. எப்போவும் சந்தோஷமா இரு, அதே மாதிரி இந்த கம்பெனி பொறுப்பும் இனி உன்னோடது.. முறையா எல்லா டாக்குமெண்ட்ஸையும் நான் தயார் செய்ய சொல்லி இருக்கேன்.. தயாரானதும் சொத்தை சரி பாதியா பிரிச்சு எழுதிடலாம்..” என்றான் நிதின். 
 
 
“அய்யய்யோ இப்போ அதெல்லாம் எதுக்கு.? வேண்டாம்..” என நந்தினி மறக்கவும் “இல்லை, இதுக்கு மேலேயும் இதை தள்ளி போடறது சரி இல்லை.. இதை பத்தி வீட்டில் வேதாம்மா கூட நடந்த பிரச்சனையில் நான் வீட்டை விட்டே வந்துட்டேன்..” என்று நிதின் சொல்லவும் ‘இது வேறா..?’ என்பது போல் திகைத்துப் போய் அவனை பார்த்தாள் நந்தினி. 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
PRE FINAL 
 
MNKN - 32&33
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
1787946666-IMG-20260829-WA0001.jpg
 
 
மௌனம் - 34
 
மனம் எங்கும் ஆனந்த ஆர்ப்பரிப்போடு வீடு வந்து சேர்ந்திருந்தாள் நந்தினி. மீண்டும் மீண்டும் நிதின் பேசிய வார்த்தைகளே அவள் மனதிற்குள் எதிரொளித்துக் கொண்டு இருந்தது. 
 
 
‘ச்சே, இது நான் நினைச்சது போல பழிவாங்க நடந்த கல்யாணம் இல்லை.. அச்சோ, அவசரப்பட்டு என்னென்ன பேசிட்டோம்.. அவங்க சொல்ல வந்ததையும் கேட்கலை..’ என்று மானசீகமாக தலையில் கை வைத்துக் கொண்டவள், நொடிக்கு ஒருமுறை வாயிலேயே பார்த்தபடி விநாயக் வரவை எதிர் பார்த்து காத்திருந்தாள்.
 
 
அவளின் எதிர்பார்ப்பை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்க விட்டே வீடு திரும்பினான் விநாயக். படுக்கையில் அமர்ந்தவாறு அவனையே நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. அவளின் பார்வையை உணர்ந்தாலும் என்னவென்று கேட்காமல் தன் போக்கில் சென்று குளித்து வேறு உடைக்கு மாறி வந்தவன், அலங்கார கண்ணாடியின் முன் நின்று தன் தலையை கோதிவிட்டுக் கொண்டிருக்க.. அவன் அருகில் வந்து நின்றாள் நந்தினி.
 
 
தன் பார்வையால் அவனையே தொடர்ந்து கொண்டிருந்தால் என்னவென்று கேட்பான், அப்படியே பேச்சை தொடங்கி விடலாம் என்று எதிர்பார்த்து காத்திருந்தவள், அவன் அப்படி எதுவும் கேட்காததில் யோசனையாகி பின் மெல்ல தானே அவன் அருகில் சென்று நிற்க.. அப்போதும் என்னவென்று எதுவும் கேட்கவில்லை விநாயக்.
 
 
சில நொடிகள் கைகளை பிசைந்து கொண்டு நின்றவள், அவனாக கேட்கப் போவது இல்லை என புரிந்து மெல்லிய குரலில் “சாரி..” எனவும் ஒற்றை புருவத்தை கேள்வியாக உயர்த்தி அவளைப் பார்த்தான் விநாயக். 
 
 
“அது.. அது வந்து..” என்று அவள் தயங்கி வார்த்தைகளைத் தேடிக் கொண்டு இருக்கவும் “எது வந்து..?” என்றான் விநாயக். அதில் ஆழ்ந்த பெருமூச்சை இழுத்துவிட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “சாரி நான் உங்களை தப்பாக புரிஞ்சுக்கிட்டேன்..” என்றாள் நந்தினி.
 
 
அதில் புரியா முக பாவத்தோடு விநாயக் அவளை பார்க்கவும், அவனை எதிர்கொள்ள முடியாமல் பார்வையை தழைத்துக் கொண்டவள் “அது.. நம்ம கல்யாணம்.. நான் உங்களை தப்பா.. சாரி..” என்று கோர்வையாக பேச முடியாமல் அவள் தடுமாறி நிற்க.. வியப்பான முகபாவனையோடு கைகளை கட்டிக்கொண்டு அவளை பார்த்தவன் “மேடம் எந்த போதி மரத்தடியில் போய் இந்த ஞானத்தை வாங்கிட்டு வந்தீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..?” என்றான். 
 
 
இதற்கு உடனே பதிலளிக்க முடியாமல் தடுமாறிய நந்தினி மெல்லிய குரலில் “அது.. நிது தான் சொன்னான்..” எனவும் “ஓ அப்போவும் உனக்கா புரியலை..” எனவும் பதில் சொல்ல முடியாமல் தவித்தவள், வேகமாக விநாயக் கையை பிடித்து மன்னிப்பு கேட்க முயல.. சட்டென தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவன், “என்னை புரிஞ்சுக்க உனக்கு இன்னொருத்தன் உதவி தேவைப்படுதில்லை போடி..” என்று விட்டு அறையில் இருந்து வெளியேறி இருந்தான் விநாயக். 
 
 
அதில் அவன் சென்ற திசையை கண்கலங்க பார்த்தவள், அப்படியே படுக்கையில் சோர்வாக அமர்ந்தாள். இது முழுக்க தன் தவறு தான் எனப் புரிந்தாலும் விநாயக்கின் இந்த புறக்கணிப்பை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
சில வருடங்களாகவே அவளை தள்ளி வைத்து ஒதுங்கி சென்றவன் தான் என்றாலும் திருமணமான நாளிலிருந்து அவளிடம் விநாயக் அப்படி நடந்து கொண்டதே இல்லை. இது மேலும் மனதை வலிக்க செய்ய.. முகத்தை மூடிக்கொண்டு அழுதே விட்டாள் நந்தினி.
 
 
ஆனால் அதன் பிறகே அவளின் விலகலும் இத்தனை நாள் அவனை அப்படித்தானே வலிக்க செய்திருக்கும் என்று புரிய.. சட்டென நிமிர்ந்தவள் இனி என்ன நடந்தாலும் விநாயக் எவ்வளவு கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை அவனை எப்படியாவது சமாதானம் செய்து விட வேண்டும் என்ற முடிவோடு எழுந்து முகம் கழுவி விட்டு வெளியில் வந்தாள். 
 
 
அந்த முடிவோடே கீழே இறங்கி வந்தவள், அவன் சோபாவில் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருப்பதை கண்டு விநாயக் எதிரில் சென்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்சுதலான பார்வையோடு நின்றாள்.
 
 
ஆனால் விநாயக் அவளை கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை. தன் போக்கில் காபியை குடித்து முடித்து அவன் எழுந்து செல்ல.. விடாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றவள், விநாயக் எங்கே சென்றாலும் அங்கு சென்று அவன் முன் நின்று கெஞ்சுதலாக பார்த்து வைத்தாள். 
 
 
அவன் சாப்பிட அமர்ந்தால், நான் பரிமாறுகிறேன் என்று வேகமாக வந்து நின்றாள். அவன் எதையாவது தேடுவது தெரிந்தால் இதோ இதுவா என்று தானாக சென்று எடுத்துக் கொடுத்தாள்.. அவன் அமர்வதற்கு நாற்காலியை இழுத்துப் போடுவதில் தொடங்கி குளிக்க செல்வதற்கு முன் ஹீட்டர் போட்டு துண்டு எடுத்து வைப்பது வரை எல்லாமே அவள் செய்து கொண்டு அவன் பின்னேயே சுற்றி வர, இது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
 
 
இத்தனை நாள் தானாக ஒதுங்கிச் சென்றவள் இப்போது தன்னையே சுற்றி வருவதை மனதிற்குள் வெகுவாக ரசித்தபடியே அவளை மேலும் சுற்றலில் விட்டுக் கொண்டிருந்தான் விநாயக். அவன் இதை ரசித்துக் கொண்டு இருப்பதை புரிந்து கொள்ளாமல் “ப்ளீஸ், ப்ளீஸ் சாரி.. தெரியாம செஞ்சுட்டேன், இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன்.. இந்த ஒருமுறை நீங்க என்னை மன்னிச்சிடுங்க.. அதேபோல நீங்க என்ன தப்பு செஞ்சாலும் நான் உங்களை மன்னிச்சுடறேன்..” என பேரம் பேசிக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
இப்படியே இரண்டு நாட்கள் தொடர்ந்தது. இதை கவனித்திருந்த மானஸா “என்னாச்சு இந்த அண்ணிக்கு..?” என்று கேட்க “உங்க அண்ணன்கிட்ட தான் அதை கேட்கணும்..” என்றார் சித்ரா. 
 
 
“அதெல்லாம் வேண்டாம், இது அவங்களுக்குள்ள ஏதாவது பர்சனலா இருக்கும்..” என்று சொல்லிவிட்டு மானஸா சென்றுவிட, அர்த்தம் பொதிந்த பார்வையோடு அபிராமியும் சித்ராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
 
 
முதல் நாள் நந்தினி இப்படி எல்லாம் செய்ய தொடங்கிய உடனேயே அவர்களுக்குள் ஏதோ சின்ன ஊடல் என்று இருவருக்கும் புரிந்து இருந்தது. அதோடு விநாயக் முகத்தில் கோபம் கொஞ்சமும் தெரியவில்லை என்பதையும் கவனித்திருந்தவர்கள், அவர்களே சீக்கிரம் சரியாகி விடுவார்கள் என்று நினைத்து எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை.
 
 
மூன்றாம் நாள் இத்தனை தூரம் அவனையே சுற்றி வந்து மன்னிப்பு கேட்டும் விநாயக் கொஞ்சமும் இறங்கி வராததில் உண்டான சோர்வோடு நந்தினி வரவேற்புரை சோபாவில் கன்னத்தில் கை வைத்தபடி சோகமாக அமர்ந்திருக்க.. வேறு பேசி அவளை திசை திருப்பிக் கொண்டிருந்தார் அபிராமி.
 
 
அப்போது சித்ரா கோவிலில் இருந்து வீடு திரும்பியவர், அனைவருக்கும் பிரசாதம் கொடுத்துவிட்டு அங்கே அமர்ந்து கொள்ள.. “ஒரு நிமிஷம்..” என்று விட்டு உள்ளே எழுந்து சென்ற அபிராமி ஒரு சாவியை கொண்டு வந்து சித்ராவிடம் கொடுத்தார்.
 
 
என்னவென்று புரியாமலே அவரைப் பார்த்த சித்ரா சாவியை வாங்கிக் கொள்ள.. “நமக்கு டீ நகரில் ஒரு பிளாட் இருக்கு.. நீங்க அங்கே தங்கிக்கோங்க சித்ரா..” என்ற அபிராமி சொல்லவும், சித்ராவும் எந்த கேள்வியும் மறுப்பும் இல்லாமல் “சரிங்க அண்ணி..” என்று சொல்லிவிட, நந்தினிக்கு தான் முகம் வாடி போனது. 
 
 
அதை கவனித்த அபிராமி நந்தினியின் தலையை மெல்ல வருடி “அம்மா இங்கே இருக்கறது பிடிக்காம நான் இப்படி சொல்லலைடா.. அவங்களுக்கும் மனசுக்குள்ளே ஒரு உறுத்தல் இருந்துட்டே இருக்கும், உன்னை கல்யாணம் செஞ்சு கொடுத்த இடத்தில் இருக்கோமேன்னு அது எவ்வளவு முயற்சி செஞ்சாலும் தவிர்க்க முடியாத ஒன்று.. 
 
 
அதே நேரம் ஒவ்வொரு திருமணமான பொண்ணுக்கும் அம்மா வீடுன்னு ஒண்ணு கண்டிப்பா இருக்கணும்.. எவ்வளவு தான் புகுந்த வீட்டில் சந்தோஷமும் நிம்மதியுமா வாழ்ந்தாலும் தலைவலி ஜுரம்னா போய் மடி சாய நமக்குன்னு ஒரு இடம் இருந்தா தான் நல்லது..
 
 
புகுந்த வீடும் பிறந்த வீடும் ஒண்ணா இருந்தா அது எந்த அளவுக்கு நன்மையோ, அதே அளவுக்கு தீமையும் கூட.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுன்னு சொல்லுவாங்க இல்லை.. அது போல தான் இதுவும், உனக்கு வேலை அதிகமா இருக்கும் நேரங்களில் மனமும் உடலும் சோர்ந்து போகும் போது அம்மா வீட்டில் போய் ஒரு இரண்டு நாள் அமைதியா ஓய்வெடுத்துட்டு வரலாம்னு தோணும்.. 
 
 
அவங்களுக்கும் நாம யாருக்கும் பாரமா இல்லை, தன் பிள்ளைக்கு தேவையான நேரத்தில் கை கொடுக்க எப்போவும் தயாரா இருக்கோம்ன்ற எண்ணமே தனி ஒரு தைரியத்தை அவங்களுக்கு கொடுக்கும்.. இதையெல்லாம் யோசிச்சு தான் நான் இப்படி ஒரு முடிவை எடுத்தேன்..” என்று அவர் விளக்கமாக சொல்லவும், தவறு செய்து விட்டது போல் முகத்தை வைத்துக் கொண்ட நந்தினி ஏதோ பதில் சொல்ல வருவதற்குள் இடையிட்டு இருந்த சித்ரா “அவ சின்ன பிள்ளை அண்ணி, ஏதோ புரிஞ்சுக்காம தப்பா நினைச்சுட்டா, ஆனா எனக்கு உங்க மனசு நல்லாவே புரியுது.. 
 
 
வாழ்க்கை முழுக்க அம்மா வீட்டில் இருந்தவ நான், புகுந்த வீட்டில் இருந்து ஓய்வுக்கு அம்மா வீடு வரும் போது தான் அது சொர்க்கமா தெரியும்.. அம்மா வீட்டிலேயே வாழ்க்கை முழுக்க இருக்கறது நரகம்..” என்றவர் “நீங்க கவலைப்படாதீங்க, அவ புரிஞ்சுக்குவா.. இல்லை இப்போவே புரிஞ்சுகிட்டா..” என்றார் மகளின் முகத்தை நன்றாக பார்த்து சித்ரா. 
 
 
நந்தினியும் ஆமோதிப்பாக தலையசைத்து “சாரி அத்தை, உங்களை பத்தி தெரிஞ்சும் சட்டுன்னு முகம் மாறிட்டது..” என்று கூறவும் “நாமெல்லாம் மனுஷங்கடா, ரோபோ இல்லை.. முகம் மாறாம இருக்க, மனசில் இருக்கறதை பேசி தீர்த்துக்கணும் இல்லைனா பிரச்சனைகள் உள்ளேயே இருந்து புரையோடி போய் ஒரு நாள் பூதாகரமா வெடிக்கும்.. அதுக்கு இப்படி தினம் சின்ன சின்ன உரசல்கள் வரது தப்பே இல்லை..” என்றார் அபிராமி. 
 
 
ஆரம்பத்தில் இங்கு வந்த போது அபிராமியை எப்படி அழைப்பது என தெரியாமல் தயங்கிய சித்ரா ஒரு கட்டத்தில் தானே முடிவெடுத்து அண்ணி என்று அழைக்க.. அதற்கு மறுப்பாக தலையசைத்த அபிராமி “என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க.. அப்படி எல்லாம் வேண்டாம்..” என்றார். 
 
 
அந்த வார்த்தையை சொல்லும் போது அபிராமியின் முகம் அமைதியாகவே தெரிந்தாலும் அவர் உள்ளுக்குள் எத்தனை வலியோடு இதை சொல்லி இருப்பார் என சித்ராவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமல் மறுத்த சித்ரா “நான் வேற எந்த உறவையும் வெச்சு உங்களை அண்ணின்னு கூப்பிடலை, என் மாப்பிள்ளையோட அம்மா.. பொண்ணை கொடுத்து இருக்கேன், சம்பந்தியை பேர் சொல்லியா கூப்பிட முடியும்..? 
 
 
அதனால் தான் அண்ணின்னு கூப்பிட்டேன்.. நீங்க பெரியவங்க, என்னை பேர் சொல்லியே கூப்பிடுங்க..” என்று சொல்லி இருந்தார்.
 
 
அதிலேயே இப்படி அழைக்க ஒத்துக் கொண்டிருந்த அபிராமி, மேலும் சில நொடிகள் அங்கு இருவரோடும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்து விட்டு வேலைகளை கவனிக்க எழுந்து சென்றார். 
 
 
*******
 
 
நேற்று தான் சித்ராவை அந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று குடி வைத்து விட்டு வந்திருந்தனர்.
 
 
இதைப் பற்றி நிதினிடம் பகிர்ந்து கொண்டவள் “நேத்து அம்மா முகத்தில் ஒரு அமைதியும் சந்தோஷமும் புதுசா பார்த்தேன் நிது.. இத்தனை வருஷத்தில் இப்படி ஒண்ணை நான் அம்மா முகத்தில் பார்த்ததே இல்லை..” என்று அவள் கூறவும், ஏதோ புரிந்தது போல் தலையசைத்து சிரித்தான் நிதின். 
 
 
“என்ன எதுவும் சொல்ல மாட்டேன்ற..?” என அவள் கேட்கவும் “எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போல வாழறது ரொம்ப கொடுமை நந்து.. இன்னைக்கு எனக்குன்னு ஒரு இடம், நான் யாரை சார்ந்தும் இல்லைன்ற எண்ணம் அவங்களுக்கு மனதில் தோன்றி இருக்கும்.. அது கொடுத்த அமைதியும் சந்தோஷமும் தான் அந்த முகத்தில் வந்து இருக்கு.. ஹ்ம்ம் சும்மா சொல்லக்கூடாது, உங்க மாமியார் வேற லெவல் தான்.. எல்லாரை பத்தியும் யோசிக்கறாங்க, எல்லாருக்கும் நல்லது செய்யறாங்க..” என்றவனை பார்த்து அவளும் சந்தோஷமாக தலையசைத்து சிரிக்கவும் “ரொம்ப நல்லவங்களா இருக்கறதும் சில நேரங்களில் பிரச்சனை தான்.. மத்தவங்களுக்கு நல்லது செய்ய நினைச்சு, நமக்கு நல்லது செஞ்சுக்காம போயிடுவோம்.. அவங்களும் இப்போ அப்படித்தான்..” என்றான் நிதின்.
 
 
இவ்வளவு தூரம் அபிராமியை பற்றி யோசித்து அவன் பேசுவது நந்தினிக்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், இப்போது அவள் என்ன பேசினாலும் அது அவனை மனதளவில் காயப்படுத்தும். ஏனெனில் அது அவன் குடும்பம் சார்ந்த விஷயமாக மாறி போகும் என புரிந்து அமைதியாகவே இருக்க.. மெல்ல அவளின் தலையை லேசாக கலைத்து விட்டவன் “மேடம் இப்போ எல்லாம் ரொம்ப மெச்சூர்டா நடந்துக்குறீங்க போல..!” என்றான் கேலிக்குரலில் நிதின்.
 
 
அதற்கு அசடு வழிய நந்தினி சிரிக்கவும் “சரி வேலையை பார்ப்போம்..” என்று விட்டு அவன் எழுந்து சென்றிருந்தான். அதன் பின் அன்று முழுக்க வேலையே சரியாக இருக்க.. மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள், நிதின் அறைக்குச் சென்று பார்க்க.. அவன் அரை மணி நேரம் முன்பே கிளம்பி விட்டிருப்பது தெரிந்தது. 
 
 
இன்று காலை ஒரு வேலையாக விநாயக் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி இருந்ததால், நந்தினி அபிராமியின் காரில் டிரைவரோடு தான் இங்கு வந்து இறங்கி இருந்தாள். அதனால் மாலை நிதினோடு சென்று வீட்டில் இறங்கிக் கொள்ளலாம் என நினைத்திருந்தவள், அவன் ஒரு மீட்டிங்கிற்காக அவசரமாக கிளம்பிச் சென்றதை அறிந்து சோர்வோடு கேப் புக் செய்ய முயன்றவாறு வெளியில் வந்தாள்.
 
 
அங்கே அவளுக்காக காத்திருப்பது போல் காரில் சாய்ந்து விநாயக் நின்று இருப்பதை கண்டதும் நந்தினியின் விழிகள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் விரிந்தது. 
 
 
கிட்டத்தட்ட நான்கைந்து நாட்களாக அவன் பின்னேயே சுற்றி வந்தும் கொஞ்சமும் விநாயக் கண்டுகொள்ளாமல் இருப்பதில், எப்படி அவனை சமாதானம் செய்வது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தவள், இன்று தன்னை பார்க்க அவன் வந்து நின்று இருப்பதில் குஷியாகி வேகமாக அவன் அருகில் வந்த நிற்க.. சிறு புன்னகையோடு காரில் ஏறி அமர்ந்திருந்தான் விநாயக். 
 
 
 நந்தினியும் வேறு எதுவும் பேசாமல் அவன் அருகில் ஏறி அமர்ந்து கொள்ள.. அமைதியாகவே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் விநாயக். ஆனால் அவள் மீண்டும் மீண்டும் விநாயக் முகத்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே வர, அவன் கொஞ்சமும் அவள் பக்கம் திரும்பவே இல்லை. 
 
 
இதில் தன்னை அழைத்துச் செல்ல வந்ததை எண்ணி, விநாயக் சமாதானம் ஆகி விட்டானோ என்று குதூகலித்துக் கொண்டிருந்த மனம் இப்போது சோர்ந்து போக.. அமைதியாக பார்வையை திருப்பிக் கொண்டு அமர்ந்துவிட்டாள் நந்தினி. அதன் பின் ஒரு மணி நேரம் கடந்து கார் நின்ற பிறகே பார்வையை உயர்த்தியவள், கடற்கரை பங்களாவிற்கு முன் வந்து நின்றிருப்பதை கேள்வியாக பார்த்தாள் நந்தினி.
 
 
அதற்குள் காரில் இருந்து இறங்கி இருந்தவன், அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு “என்ன இங்கேயே இருக்க போறியா..?” என்றான் விநாயக். 
 
 
அதில் வேகமாக நந்தினி இறங்கி நிற்கவும், தன்னிடம் இருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தவன், தன் போக்கில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்க.. அவனை புரியாமல் பார்த்தபடியே நின்று இருந்தாள் நந்தினி. 
 
 
சில நிமிடங்களுக்குப் பிறகே அவள் பக்கம் திரும்பியவன் “ஏன் அங்கேயே நிற்கறே..? கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகு..” என்றான். அதில் நேரத்தை திரும்பி பார்த்தவள் எட்டு மணியை கடந்து கொண்டிருப்பதை கண்டு “நாம எப்போ கிளம்புவோம்..?” என்றாள் நந்தினி. 
 
 
“நாம இன்னும் இரண்டு நாள் இங்கே தான் இருக்க போறோம்..” என அவன் கூறவும், “என்னது..? ஏன்..?” என்றாள் திகைப்போடு நந்தினி. “ஹ்ம்ம் நான் ஓய்வே இல்லாம மூணு மாசமா ஓடிட்டே இருந்துட்டேன்.. இப்போ ஒரு சின்ன கேப் கிடைச்சு இருக்கு.. 
 
 
இந்த இரண்டு நாளை விட்டா திரும்ப எப்போ இப்படி ஒரு கேப் கிடைக்கும்னு தெரியலை, அதான் எந்த தொந்தரவும் இல்லாம ஓய்வெடுக்க இங்கே வந்தேன்..” என அவன் சொல்லவும் “ஓ, அதுக்கு நான் ஏன் இங்கே..?” என்றாள் நந்தினி. 
 
 
“ஹாங் நீதானே எனக்கு சமீபமா எல்லா உதவியும் செய்யறே.. அதான் இங்கேயும் உதவி தேவைப்படும்னு உன்னை கூட்டிட்டு வந்தேன்..” என்றவனின் வார்த்தைகள் இப்போதும் புரியாமல் “ஓ சரி..’ என்றாள் நந்தினி.
 
 
அதில் அவளைப் பார்த்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் ‘இவளையெல்லாம் வெச்சுட்டு..!’ என லேசாக முனக “ஏதாவது சொன்னீங்களா..?” என்று அவனை திரும்பி பார்த்தாள் நந்தினி. “ஹ்ம்ம் ரொம்ப டயர்டா இருக்கு, குளிக்கணும் ரூமில் எல்லாம் தயாரா இருக்கான்னு பாரு..” என அவன் சொல்லவும், சரி என தலையசைத்து விட்டு உள்ளே சென்று வழக்கம் போல் அனைத்தையும் சரி பார்த்து விட்டு நந்தினி வெளியில் வர, அறைக்குள் நுழைந்தான் விநாயக்.
 
 
“எல்லாம் எடுத்து வெச்சுட்டேன், வேற எதுவும் வேணுமா..?” என்று நந்தினி கேட்கவும், குளியலறைக்குள் நுழைய இருந்தவன் அப்படியே நின்று அவளை திரும்பிப் பார்த்து “முதுகு தேய்க்கணும் வரியா..?” என்றான். “ஆங்..” என திகைத்து நந்தினி அவனைப் பார்க்கவும், அவளை கண்டு கொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்தான் விநாயக். 
 
 
அடுத்து என்ன செய்வது என தெரியாமல் நந்தினி அங்கேயே அமர்ந்திருக்க.. சில நிமிடங்களில் குளித்து முடித்து வெளியே வந்தவன் அவளை வித்தியாசமாக பார்த்தவாறே “நீயும் ரொம்ப டயர்டா தெரியறே, குளிச்சிட்டு கீழே சாப்பிட வா..” என்று விட்டு சென்றான்.
 
 
அவளும் அதே போல் அடுத்த சில நிமிடங்களில் குளித்து முடித்து கீழே வர, இலகுவான ஷார்ட்ஸ் கையில் இல்லாத ஆர்ம்கட் பனியன் அணிந்து சமையலறையில் ஏதோ செய்து கொண்டிருந்தான் விநாயக். 
 
 
“இங்கே என்ன செய்றீங்க..?” எனக் கேட்டப்படியே நந்தினி அங்கு வந்து நிற்கவும், “நைட் சாப்பிடணுமே, அதுக்கு தான் சமைச்சுட்டு இருக்கேன்..” என்றான் விநாயக். “அச்சோ நீங்க ஏன் இதையெல்லாம் செய்யணும்..? கொடுங்க நான் செய்யறேன்..’ என்று அவள் வாங்க முயல..
 
“அதெல்லாம் வேண்டாம், அமைதியா நில்லு..’ என்றவன் அங்கே இருந்த பழங்கள் அடங்கிய சின்ன மூங்கில் கூடையை அவள் பக்கம் நகர்த்தி “இந்தா பசிச்சா இதை சாப்பிடு, டின்னர் சீக்கிரம் ரெடியாகிடும்..” என்றான்.
 
 
முதலில் இதெல்லாம் வேண்டாம் என்றவள் பின் அங்கிருந்த ஸ்ட்ராபெரியை எடுத்து வாயில் வைக்கவும், அந்தப் பக்கம் திரும்பி நின்றிருந்த விநாயக் அவளிடம் ஏதோ கேட்கவும் சரியாக இருந்தது.
 
 
அதில் ஸ்ட்ராபெரியை வாயில் வைத்தபடியே நந்தினி பதில் சொல்ல.. அவள் குரலில் இருந்த வித்தியாசத்தில் திரும்பிப் பார்த்தான் விநாயக்.
லேசாக இதழ் குவிந்து பாதி ஸ்ட்ராபெரி உள்ளேயும் மீதி வெளியேவும் வைத்தபடி தன் அருகில் நின்றிருந்தவளை பார்த்த நொடி அவனுக்கு மற்றதெல்லாம் மறந்து போக.. அவளை நெருங்கியவனை கண்டவள் அசையாமல் விழி விரிய அப்படியே நின்று விட்டாள்.
 
 
இதில் நிதானமாக அந்த சிவந்திருந்த இதழ்களை தன் நிறத்தால் மேலும் சிவந்து அழகாக்கி கொண்டிருந்த பழத்தையும், அதை கடிக்காமல் லேசாக பிடித்துக் கொண்டிருந்த இதழையும் ரசனையோடு விழிகளால் வருடியவன், மெல்ல அந்த பழத்தை நெருங்க.. நந்தினியோ அந்த விழிகளின் தாக்கத்தை தாங்க முடியாமல் விழிகளை மூடி கொண்டாள்.
 
 
அதை கண்டு உண்டான புன்னகையோடு மேலும் அவளை நெருங்கியவனின் மூச்சு காற்று முகத்தில் மோத.. நந்தினி தன்னையும் அறியாமல் லேசாக இதழ் விரிக்க.. அங்கு அதுவரை அம்சமாக இருந்த ஸ்ட்ராபெரி கீழே விழுந்திருந்தது.
 
 
இதில் திகைத்து நந்தினி விழிகளை திறக்கவும், சற்று ஏமாற்றமாக அவளை பார்த்தவன், அப்போதும் நகராமல் அவளையே பார்த்தபடியே மேலும் நெருங்க.. இதில் நந்தினிக்கு படபடப்பு அதிகமானது. அவளின் நிலையை உணர்ந்து மெல்ல புன்னகைத்துக் கொண்டவன், நந்தினியின் இதழ்களை தன் இதழ்களால் லேசாக உரசினான்.
 
 
இது அவளின் உயிர் வரை தீண்டி செல்ல.. மீண்டும் அதே போல் மெதுவாக அன்று போலவே அவளின் இதழோடு ஓட்டி உறவாடாமல் தன் இதழ் கொண்டு தொட்டும் தொடாமல் அவன் விளையாடிக் கொண்டிருக்க.. நந்தினிக்கு இது அன்றைக்கு போலவே பெரும் தவிப்பை விதைத்தது.
 
 
சில நிமிடங்கள் இப்படியே கடக்க.. நந்தினிக்கு உடலும் மனமும் நெகிழ்ந்து தளர்ந்தது. அவளின் நிலை அவனுக்கு நன்றாக புரிய.. மேலும் அவளை தகிக்க செய்துக் கொண்டிருந்தவனின் விளையாட்டை இதற்கு மேல் தாங்கி கொள்ள முடியாமல் வேகமாக அவனை பிடித்து இழுத்து தானே இதழ் பதித்தாள் நந்தினி.
 
 
இதற்காகத்தானே அவனும் காத்திருந்தான்.. இதைத்தானே அவனும் எதிர் பார்த்தான்.. எதை எண்ணி அவளின் பொறுமையை சோதித்து கொண்டு இருந்தானோ அதுவே கிடைத்துவிட்ட சந்தோஷத்தோடு சட்டென அவள் செயலை தனதாக்கிக் கொண்டிருந்தவன், நந்தினியின் இடை பற்றி தூக்கி அந்த சமையல் மேடைமேல் அமர வைத்து நிறுத்தி நிதானமாக அவள் இதழ்களில் கவி பாட தொடங்கி இருந்தான்.  
 
 
உறக்கம் கலைந்து திரும்பி படுக்க முயன்ற நந்தினி அசைய முடியாததில் லேசாக விழிகளை திறக்க.. விநாயக் கழுத்து வளைவில் இருந்த தன் முகத்தை விலக்கி கொள்ள மனமில்லாமல் மீண்டும் அழுத்தமாக நந்தினி தன் முகத்தை அங்கேயே புதைத்துக் கொண்டாள்.
 
 
அதில் உண்டான புன்னகையோடு விநாயக்கின் கரம் அவளை இடையோடு சேர்த்து இறுக்கி கொண்டது. அவனும் விழித்துக் கொண்டு இருப்பது புரிந்து பார்வையை தழைத்து கொண்டவள், விநாயக் கையில் இருந்த அந்த பிரேஸ்லெட்டை கண்டு சட்டென அதை இழுத்து பார்க்க.. அதன் உள் பக்கம் YD என போட்டிருந்தது.
 
 
இதில் வேகமாக திரும்பி அவனை பார்த்தவள் “இது.. நான் கொடுத்தது தானே..?” எனவும் “ஆமாம்..” என்றான் எந்த சமாளிப்பும் இல்லாமல் விநாயக். “இது.. இது.. எப்படி உங்ககிட்ட..?” என படபடத்தவளை நிதானமாக பார்த்தவன் “எனக்கு தானே கொடுத்தே..?” என்றான்.
 
 
“அதை தான் வேண்டாம்னு தூக்கி போட்டுட்டீங்களே..!” என அவள் முகத்தை சுருக்கவும், “அன்னைக்கு நான் இருந்த மனநிலை அப்படி, ஆனாலும் சில நிமிடங்களிலேயே இதை நான் வந்து எடுத்துட்டு போயிட்டேன்..’ என்று விநாயக் கூறவும், அவனை திகைப்போடு பார்த்தவள், “அதை நீங்க தான் அன்னைக்கு எடுத்தீங்களா..?’ என்றாள்.
 
 
அதில் விழிமூடி நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்டவன் “நான் அன்னைக்கு அப்படி செஞ்சு இருக்க கூடாது, ஆனா என் அன்றைய மனநிலை.. அதை என்னால் இப்போ சரியான வார்த்தைகளில் சொல்ல கூட முடியலை.. முதலில் நீ அந்த குடும்பத்தை சேர்ந்தவன்னு தெரிஞ்சுப்போ எனக்குள்ளே ஏமாற்றம், கோபம், ஆத்திரம், இதையெல்லாம் விட உன்னை இழந்துடுவேனோன்ற தவிப்பு, இந்த காதல் விஷயம் வேதவல்லிக்கு தெரிய வந்தா எப்படி எல்லாம் சூழ்நிலை மாறும்..? திட்டமிட்டே நான் ஏதோ உன்னை ஏமாற்றின மாதிரி பேசுவாங்க.. திரும்ப அம்மாவை அசிங்கப்படுத்துவாங்க, இந்த குடும்பத்தோட எந்த ஒரு உறவு வேண்டாம்னு நான் எடுத்திருந்த முடிவு..
இதெல்லாம் சேர்ந்து ஒரே நாளில் என்னை மொத்தமா புரட்டி போட்டது.. 
 
 
அந்த நேரத்தில் நீ இப்படி ஒரு பரிசோட என் எதிரில் வந்து நிற்கும் போது என்னால் வேற என்ன செய்ய முடியும்..? அந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு கோபமான வார்த்தையையும் உன்னை நோக்கி வீசிடக் கூடாதுன்னு நான் அவ்வளவு கவனமா இருந்தேன்.. ஆனா நீ ஏமாற்றமா பார்த்த அந்த ஒரு பார்வை அதை என்னால் தாங்கிக்கவே முடியலை.. அதனால் உனக்கு புரிய வைக்கணும் நினைச்சு தான் திரும்ப நான் அங்கே வந்தேன், நீ அப்போ அங்கே இல்லை.. அந்த பரிசு மட்டும் தான் இருந்தது.. 
 
 
இந்த காதல் எல்லாம் வேண்டாம்னு என்னை நானே சமாதானம் செஞ்சுக்க எவ்வளவு முயற்சி செஞ்சும், என்னால் முடியலை.. திரும்பத் திரும்ப இந்த மனம் உன்னை மட்டுமே சுற்றி வந்து, நீ தான் வேணும்னு நின்றது..   
 
 
அதுக்குப் பிறகு உன்கிட்ட தெளிவா இதையெல்லாம் பேச நினைச்சு நான் முயற்சி செஞ்ச போது தான் உனக்கு வேதவல்லி மேலே இருக்க பயமும் அவங்க உன்னை நடத்தும் முறையும் எனக்கு தெரிய வந்தது.. அதோட நீ கொஞ்சம் அவசர குணம் உள்ள ஒரு ஆள்..
 
 
பின் விளைவுகளை பற்றி யோசிக்காம அந்த நிமிஷம் என்ன தோணுதோ அதை பேசவும் செய்யவும் கூடியவன்னு புரிஞ்ச பிறகு நிதானமா உன்னை கையாள நினைச்சேன்.. என்னை போலவே நீயும் மனம் முழுக்க என்னை சுமந்துட்டு தவிக்கிறது எனக்கு புரிஞ்சது.. நிச்சயம் உன்னால் உன் மனசை மாத்திக்க முடியாது, என்னை போலவே.. அதனால் தான் அவ்வளவு தைரியமா விலகி இருந்தேன்.. 
 
 
உன்னை விட்டுக் கொடுக்க என்னைக்கும் நான் நினைச்சது இல்லை, எப்படி விடாம பிடிச்சுக்கணும்னு தான் யோசிச்சு ஒவ்வொரு அடியா எடுத்து வெச்சுட்டு இருந்தேன்..” என்றவனின் வார்த்தைகளில் உள்ள உண்மை புரிந்து அமைதியாக இருந்தவள், அப்போதே நினைவு வந்தவளாக “ஆமா உங்களுக்கு அந்த வீட்டில் நடக்கறது எல்லாம் எப்படி தெரியும்..? ஸ்பை எதுவும் வெச்சிருக்கீங்களா..!” என்றாள்.
 
 
“அதெல்லாம் போலீஸ்காரங்களுக்கு நிறைய இடத்தில் ஆளுங்க இருப்பாங்க, சில ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்..” என்றவன் “நாம இங்கே பேசி நேரத்தை வீணாக்கவா வந்திருக்கோம்..” என்று மீண்டும் அவளை தன் கைவளைவிற்கு கொண்டு வந்து, தன் காதலை அவளுக்கு வேறு வகையில் புரிய வைக்க தொடங்கினான்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
1787947006-IMG-20260829-WA0002.jpg
 
 
மௌனம் - 35
 
அவ்வளவு பெரிய வீட்டில் தனியே அமர்ந்து இருந்தார் வேதவல்லி. வேலையாட்கள் வீடு முழுக்க இருந்தாலும் அவருக்கு தனித்து விடப்பட்டது போல் இருந்தது.
 
 
சித்ரா மட்டுமல்ல புஷ்பாவும் வீட்டை விட்டு வெளியேறி விட்டிருந்தார். நிதினுக்கும் வேதவல்லிக்கும் இடையில் நடந்த பிரச்சனையில், நந்தினி மற்றும் விநாயக்கிற்கு எதையும் பிரித்து கொடுக்க மாட்டேன் என வேதவல்லி அடமாக இருக்க.. அவர்களுக்கு சேர வேண்டியதை கொடுத்தேயாக வேண்டும் என நின்றான் நிதின்.
 
 
மொத்த சொத்தையும் நான்காக பிரித்து நால்வரின் பேரிலும் எழுதிவிட ரகோத்தமனிடம் நிதின் சொல்ல.. “எந்த ஓடு**க்கோ பிறந்தவனுக்கும் அவன் கூட ஓடிப் போனவளுக்கும் நான் எதுவும் கொடுக்கவே மாட்டேன்..” என்றார் திமிராக வேதவல்லி. 
 
 
“இதை சொல்லும் உரிமை உங்களுக்கு கிடையாது, தாத்தா எழுதி வெச்ச உயிலின் படி சொத்தை பிரிச்சு தான் ஆகணும்..” என்று நிதின் பேச.. இதில் தான் பிரச்சனை தொடங்கியது. 
 
 
காலையில் அவன் சொத்தை பற்றி வந்து பேசிவிட்டு சென்றதற்கு பின் மாலையில் இவன் அதையே பேசுவது வேதவல்லிக்கு ஆத்திரத்தை கொடுக்க.. வார்த்தைகளில் வரம்பே இல்லாமல் மொத்த குடும்பத்தையும் எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு இருந்தார்.
 
 
அதில் உண்டான கோபத்தோடு “கொஞ்சம் கூட மரியாதையோ மனிதாபிமானமோ இல்லாத பணம் மட்டுமே முக்கியம்னு நினைக்கும் உங்களை மாதிரி ஒரு கேவலமான ஆள் இருக்கும் இடத்தில் இனி எனக்கு இருக்க விருப்பமில்லை.. இந்த வீடு உங்க பேரில் தாத்தா எழுதி வெச்சது நீங்களே இங்கே இருந்துக்கோங்க.. ஆனா இங்கிருந்து போனதுக்காக இதை எல்லாம் நிறுத்திடுவேன் மட்டும் நினைக்காதீங்க.. நான் நினைச்சதை நடத்தி முடிச்சுட்டு தான் ஓய்வேன்..” என்று கறாராக பேசிவிட்டே வெளியில் சென்று இருந்தான் நிதின்.
 
 
அவன் வீட்டை விட்டு சென்றதிலிருந்து அழுது கொண்டே இருந்த புஷ்பா மறுநாள் காலை தீர்க்கமான ஒரு முடிவை எடுத்து விட்டு ரகோத்தமன் முன் சென்று நின்றார். “நான் நிதின் கூடவே போயிடலாம்னு இருக்கேன், எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை..” என அவர் சொல்லவும், ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்காமல் சோர்வாக புஷ்பாவை பார்த்தார் ரகோத்தமன். 
 
 
“என் மகள் கூட தான் என்னால் இனி இருக்க முடியலை.. மகனையும் இழக்க நான் விரும்பலை, ஒருவேளை நாங்க இரண்டு பேரும் தனியா இருக்கறது தெரிஞ்சு மானுவும் திரும்ப எங்ககிட்ட வந்தாலும் வரலாம்..” என்று புஷ்பா சொல்லவும் “உன் விருப்பம்..” என முடித்துக் கொண்டார் ரகோத்தமன்.
 
 
ஏனெனில் நேற்றைய நிதினுடனான வாக்குவாதத்தின் போது எப்போதும் பேசுவது போல் அபிராமியையும் விநாயக்கையும் மட்டுமல்ல, புஷ்பாவையும் அவரின் இரு பிள்ளைகளையும் கூட மோசமாகத்தான் பேசி இருந்தார் வேதவல்லி.
 
 
அபிராமியின் வாழ்க்கையில் புகுந்து அந்தக் குடும்பத்தை கெடுத்து புஷ்பா குடும்பம் குழந்தையென இங்கு சொகுசாக வாழ்வதாகவும், இதில் யோசிக்காமல் யாருக்கோ சொத்தைத் தூக்கி கொடுக்க அவரின் பிள்ளை நினைப்பதாகவும் பேசிவிட.. இதில் உண்டான கோபத்தோடும் யாரையும் எப்போதும் விட்டு வைக்காமல் இப்படி வார்த்தைகளில் விஷம் தடவி பேசுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பதை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் தான் வீட்டை விட்டு நிதின் கிளம்பி இருந்தான்.
 
 
அதையெல்லாம் மனதில் வைத்து இரவெல்லாம் அழுது கொண்டிருந்த புஷ்பா தன் மகனோடு செல்ல எடுத்த முடிவு சரிதான் என்றே ரகுத்தமனுக்கும் தோன்றியது. அதில் அவர் அமைதியாகவே இருந்து விட, புஷ்பா கிளம்பி வெளியில் வரும் போது தான் வேதவல்லிக்கு விஷயமே தெரிந்தது.
 
 
அப்போதும் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “இப்படி எல்லாம் பிளாக் மெயில் செஞ்சு என்னை சம்மதிக்க வைக்க நினைச்சா உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்.. நீ வெளியே போனா எனக்கென்ன..? பிச்சை எடுத்தா எனக்கென்ன..? இந்த சொத்தில் இருந்து ஒரு ரூபா கூட யாருக்கும் நான் கொடுக்க மாட்டேன்..” என்று திமிராகவே வேதவல்லி பேச, அதை எல்லாம் நின்று கேட்க கூட விரும்பாமல் வெளியேறி விட்டிருந்தார் புஷ்பா.  
 
 
ஆனால் அதுவரை அமைதியாகவே இருந்த ரகோத்தமன் பின் மெதுவாக வேதவல்லியின் பக்கம் திரும்பி “இப்போ இந்த நிமிஷம் புஷ்பா கூடவே வெளியே போக எனக்கு ஒரு நொடி போதும் ம்மா.. ஆனா நானும் போயிட்டா நீங்க இங்க அனாதையாகிடுவீங்க.. உங்களுக்கு எப்படியோ, ஆனா எனக்கு பெத்த கடன்னு ஒண்ணு இருக்கு.. 
 
 
இதுவே உங்க சின்ன பிள்ளை உயிரோடு இருந்திருந்தா யோசிக்காம நான் கிளம்பி போய் இருப்பேன்.. அவனும் இல்லை, இனி சித்ராவும் உங்க பக்கமே வரமாட்டா.. நானும் போயிட்டா உங்க நிலையை யோசிச்சுப் பாருங்க.. அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் நான் இந்த வீட்டில் இருக்கேன்.. 
 
 
ஆனா இது கூட உங்க சொத்தை ஏமாற்றி வாங்க தான் இங்கே இருக்கேன்னு நீங்க நினைச்சா தாராளமா நினைச்சுக்கோங்க.. எனக்கு அதை பத்தி எந்த கவலையும் இல்லை, இன்றிலிருந்து நான் இங்கே சாப்பிட கூட மாட்டேன்..” என்ற விட்டு அவர் உள்ளே சென்றுவிட, “என்னடா ஆளாளுக்கு மிரட்டி பார்க்கறீங்களா..? நீங்க போயிட்டா என்னால் வாழவே முடியாதா என்ன..? நான் ராணிடா, என்னைக்கும் நான் தான் இந்த வீட்டுக்கு ராணி.. யார் இருந்தாலும் போனாலும் எனக்கு எந்த கவலையும் கிடையாது..” என்ற திமிராகவே பேசியவர், அடுத்த ஒரு வாரத்திலேயே அந்தத் தனிமையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து போனார்.
 
 
எப்போதும் மொத்த குடும்பத்தையும் தன் பிடியில் வைத்தே பழகி விட்டிருந்தவர், இப்போது அதிகாரம் செய்யக்கூட யாரும் இல்லாமல் ராஜ்ஜியத்தை இழந்த ராணி போல் அமர்ந்திருந்தார். அவர் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்க வேலையாட்கள் தயாராகவே இருந்தாலும் அனைவரிடமும் எரிந்து விழுந்து கத்தி தீர்த்துக் கொண்டே இருந்தார் வேதவல்லி.
 
 
எல்லா வேலைகளிலும் குற்றம் சொல்லிக்கொண்டு எதிலும் திருப்தி அடையாமல் அவர் சொல்வதையே சமைத்துக் கொண்டு வந்து கொடுத்தாலும் அதில் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து என வேதவல்லி செய்து கொண்டிருந்த அமர்க்களத்தில் வேலை ஆட்களும் வெறுப்பாகினர்.
 
 
வேதவல்லிக்கு வேலையாட்கள் சமைத்துக் கொடுப்பது எப்போதுமே பிடிக்காது. வீட்டினர் தான் சமைக்க வேண்டும் என்பதில் எப்போதுமே பிடிவாதமாக இருப்பார். சித்ராவும் அத்தனை பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வைப்பார். 
 
 
வேதவல்லியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு எது ஒத்துக்கொள்ளும், எது ஒத்துக்கொள்ளாது.. எது பிடிக்கும், எது பிடிக்காது என்று அறிந்து செய்வதோடு மற்றவர்களுக்கும் அவர்களுக்கு பிடித்தது போல் அத்தனை வகையை செய்து மேஜையை நிரப்பி விடுவார். 
 
 
இன்று இவருக்கென சமைக்கப்பட்ட ஒற்றை உணவு மட்டும் மேஜையில் சாப்பிடாமல் காய்ந்து கொண்டிருந்தது. வேதவல்லி கேட்டிருந்தது போலத்தான் சமையல் செய்பவரும் செய்து கொடுத்திருந்தார். ஆனால் இவருக்குத்தான் அதன் ருசி கொஞ்சமும் பிடிக்கவில்லை. 
 
 
இதில் பசி ஒரு பக்கம், கோபம் ஒரு பக்கம் என்று தனித்து அமர்ந்திருந்தவருக்கு “ஓ இப்படி எல்லாம் என்னை எல்லா பக்கமும் கார்னர் செஞ்சு, உங்க வேலைய முடிச்சுக்க பார்க்கறீங்களா..? அது ஒரு நாளும் நடக்காது, சிங்கம் வயசானாலும் சிங்கம் தான்..!’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அமர்ந்திருந்தார் வேதவல்லி.
 
 
**
 
 
இரண்டு மாதம் கடந்திருந்தது..
 
 
அன்று அபிராமி கோவிலுக்குச் சென்று இருந்தார். பெரும்பாலும் மற்றவர் பார்வையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மதிய நேரத்தில் கோவிலை மூடும் சமயமாக பார்த்து தான் செல்வது அபிராமியின் வழக்கம். 
 
 
அன்றும் அப்படியே சென்றிருந்தவர், மன நிறைவோடு பூஜையை முடித்துக் கொண்டு பிரகாரத்தில் அமர்ந்திருக்க.. அவரை காண அங்கு வந்தார் புஷ்பா. தன்முன் வந்து நின்றவரை அமைதியாக அபிராமி பார்க்க.. “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றார் தயக்கத்தோடு புஷ்பா.
 
 
“சொல்லுங்க..” என அபிராமி மென்மையான குரலிலேயே கேட்கவும், அவருக்கு எதிரில் அமர்ந்த புஷ்பா “மானு எப்படி இருக்கா..?” என தொடங்கவும் “ஹ்ம்ம் நல்லா இருக்கா.. ஏன் நீங்க அவ கூட பேசலையா..?” என்றார் அபிராமி.
 
 
“இல்லை, பேசிட்டு தான் இருக்கேன்.. இத்தனை வருஷமா என் கூட இருந்த போது இல்லாத சந்தோஷமும் அமைதியும் அவள் குரலிலும் முகத்திலும் இப்போ நிரந்தரமா இருக்கு..” என புஷ்பா சொல்லவும், ஆமோதிப்பாக அபிராமியிடம் இருந்து ஒரு தலையசைப்பு மட்டுமே வந்தது.
 
 
அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் புஷ்பா அமைதியாக.. அங்கு ஒரு சங்கடமான மௌனம் நிலவியது. பின் மெல்ல நிமிர்ந்து அபிராமியை பார்த்தவர், “இப்போ நானும் நிதினும் கூட அந்த வீட்டில் இல்லை, தனியா தான் இருக்கோம்..” எனவும் ‘தெரியும்’ என்பது போல் அதற்கும் அபிராமியின் தலை அசைந்தது. 
 
 
“மானுவை எங்க கூட வந்துட சொல்லி கூப்பிட்டேன்..” என்று மெல்லிய குரலில் புஷ்பா சொல்லவும், அவளின் பதில் என்னவாக இருக்கும் என்று புரிந்து அமைதியாகவே இருந்தார் அபிராமி. ஆனாலும் ஒரு பேச்சை தொடங்கி விட்டு சொல்லாமல் இருக்க முடியாது என்பதால் “இல்லை, நான் இங்கேயே இருக்கேன்னு மானு சொல்லிட்டா..” என்றார் புஷ்பா.
 
 
அதற்கும் சரி என்பது போல் அபிராமி தலையசைக்க.. “என் கூட இருக்கிறதை விட உங்க கூட இருக்க அவ விரும்புறது கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.. ஆனா நிதின் அவளுக்கு பிடிச்ச மாதிரி இனியாவது வாழட்டும் ம்மா விடுங்கன்னு சொன்னான்..” எனவும் ஒரு மென்மையான புன்னகை அபிராமியின் முகத்தில் வந்தது.
 
 
அடுத்து “நானே உங்களை வந்து சந்திக்க நினைச்சு இருந்தேன்..” என்ற புஷ்பாவை எதற்காக என்பது போல அபிராமி பார்க்க.. “இப்போ எதிர்பாராம இங்கே உங்களை பார்க்கவும் உங்களுக்கு நன்றி சொல்லிட்டு போகலாம்னு தான் வந்தேன்..” என்றார் புஷ்பா. 
 
 
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அபிராமி “இதுக்காக எல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியம் எதுவுமில்லை.. மானு நல்ல குழந்தை, அவ என் கூட இருக்கறது எனக்கும் சந்தோஷம் தான்.. அவளை எந்த குறையும் இல்லாம நான் பார்த்துப்பேன்..” என்று அமைதியான குரலிலேயே கூறினாலும் அதில் ஒரு உறுதி தொனித்தது.
 
 
அதை புரிந்து கொண்ட புஷ்பாவுக்கு அடுத்து என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அதில் மெல்ல சிறு தலைசைப்போடு எழுந்து கொண்டவர், “கிளம்புறேன்..” என்று விட்டு நகர முயல.. “ஒரு நிமிஷம்..” என்ற அபிராமியின் குரல் அவரை தடுத்து நிறுத்தியது.
 
 
புஷ்பாவும் என்ன என்பது போல் என்று திரும்பிப் பார்க்க.. “நாம இது போல இனி சந்திச்சு பேசிக்க வேண்டாம்னு எனக்கு தோணுது.. இதுவரை எப்படி இருந்தோமோ, அப்படியே விலகி இருக்கிறது தான் இரண்டு பேருக்குமே நல்லது..” என்றார் அபிராமி. 
 
 
அந்த குரலிலோ முகத்திலோ கோபம் துளியும் இல்லை என்றாலும் அவர் சொல்லிய வார்த்தைகளை மறுக்க முடியாத அளவிற்கு அதில் ஒரு அழுத்தம் இருந்தது. இதில் என்ன பேசுவது என தெரியாமல் புஷ்பா அப்படியே நின்று இருக்க.. “உங்களுக்கும் எனக்கும் இடையில் இருக்க ஒரே விஷயம் மானஸா..” என்று அந்த ஒரே என்பதில் அழுத்தத்தைக் கூட்டிக் கூறியவர், “உங்க மகளா அவ எனக்கு அறிமுகம் ஆகலை, என் மகனோட தங்கையா தான் எனக்கு அறிமுகமானா.. என் மகனோட தங்கை எனக்கு மகள், அப்படித்தான் அவளை பார்த்துப்பேன்.. 
 
 
இனி மானு சம்மந்தமா என்ன பேசறதா இருந்தாலும் நீங்க நந்துகிட்டேயோ இல்லை சித்ராகிட்டேயோ பேசிக்கோங்க.. அவங்களுக்கு தெரியாம எங்க குடும்பத்தில் எதுவும் நடக்க போறது இல்லை.. அவங்களே உங்களுக்கு வேண்டிய தகவலை சொல்லிடுவாங்க.. நாம எவ்வளவு தான் முதிர்வோட நடந்துக்க முயற்சி செஞ்சாலும், சில விஷயங்களை மூடி மறைச்சு இயல்பா பேசி பழக முடியாது.. 
 
 
இதோ இப்போ நீங்க என்கிட்ட பேசணும்னு வந்து நின்ற போதும், என் மகனை நான் வயிற்றில் சுமந்துட்டு இந்த கோயிலுக்கு வந்த போது இதே போல வந்து நீங்க நின்றது தான் எனக்கு ஞாபகம் வந்தது.. அதில் இப்போவும் என்கிட்ட இருந்து என்ன கேட்கப் போறீங்களோ..? எதை எடுத்துப்பீங்களோன்னு தான் என் அடிவயிறு கலங்கியது.. 
 
 
எவ்வளவு தான் கடந்து செல்ல முயற்சி செஞ்சாலும், சில விஷயங்களை மறந்து செல்ல முடியாது.. புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்..” என்றிருந்தார் அபிராமி.
 
 
கோபப்படவில்லை, முகம் திருப்பவில்லை, ஆனால் அத்தனை முதிர்ச்சியாக இனி என் கண்ணு வந்து விடாதே என்ற வார்த்தைகளை அவர் சொல்லிய விதமும் அதில் பொதிந்திருந்த பொருளும் புஷ்பாவுக்கு அத்தனை அவமானத்தை கொடுத்தது.
 
 
சமீபமாகத்தான் நிதின் கூட அவரோடு இதைப்பற்றி விளாவாரியாக பேசி இருந்தான். “ஒரு அத்தை மகனா நீங்க அவரை விரும்பினதில் தவறே இல்லைம்மா.. ஆனா அவருக்கு திருமணமானது தெரிஞ்ச பிறகும் அவர் தான் வேணும்னு பிடிவாதமா நின்றது ரொம்ப தப்பு..
 
 
அதை தப்புன்னு கூட சொல்ல கூடாது, துரோகம்.. இன்னைக்கு நாம இன்னொருத்தர் வாழ்க்கையை திருடி வாழ்ந்துட்டு இருக்கோம்..” என அவன் சொல்லவும், தன் தரப்பை சொல்ல புஷ்பா முயல.. 
 
 
“நீங்க எவ்வளவு விளக்கம் கொடுத்தாலும் செஞ்ச தப்பு மாறிடாது.. வீட்டு பெரியவங்க ஆயிரம் சொல்லி இருப்பாங்க, அதைக் கேட்டு நடக்கணுமா வேணாமான்னு நாம தான் தெளிவா ஒரு முடிவு எடுக்கணும்.. நீங்க அங்கே சுயநலமா யோசிச்சுட்டீங்க, இன்னைக்கு அதனால் கல்யாணம் செஞ்சும் அவங்க தனியா வாழறாங்க.. அப்பா இருந்தும் விநாயக் ஒதுங்கி வளர்ந்தான்..
 
 
ஆனா அதை பத்தி எல்லாம் கவலையே இல்லாம நாம இங்கே சந்தோஷமா குடும்பமா வாழ்ந்துட்டு இருக்கோம்.. இது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா..?” என்று அவன் சொல்லிய பிறகு பல வருடங்களாக அவருள் இருந்த குற்ற உணர்ச்சி மேலும் அதிகமாகி இருந்தது.
 
 
ஒரு அன்னையாக தன் மகனிடம் இருந்து கேட்க கூடாத வார்த்தைகள், தன் தவறை புரிய வைக்கும் விதத்தில் வார்த்தைகளை தேர்ந்தெடுத்தே நிதின் பேசி இருந்தாலும் அதிலிருந்த உண்மை புஷ்பாவை அவமானமாக உணர வைத்தது.  
 
 
இன்று அதை பல மடங்கு அதிகரிப்பது போல் ‘உன்னை பார்த்தாலோ, நீ என் முன் வந்து நின்றாலோ என்னிடமிருந்து எதை பறித்துக் கொள்வாயோ என்று தான் எனக்குத் தோன்றுகிறது..!’ என அபிராமி பேசியிருந்தது வேறு அதிக வலியை கொடுக்க.. வேறு எதுவும் பேசாமல் கண் கலங்க தலையசைத்து விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட்டார் புஷ்பா.
 
 
**
 
 
நிதின் சொல்லி இருந்தது போலவே பிடிவாதமாக என்று வேதவல்லியை எதிர்த்து அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் நிற்க வைத்து மொத்த சொத்தையும் நான்கு பாகமாக பிரித்து எழுத முயல.. வேதவல்லியை சமாளிப்பதற்காக எல்லா வகையிலும் முன்னே வராமல் பின் இருந்தே உதவி கொண்டு இருந்த விநாயக், சொத்தை நான்காக பிரிப்பதற்கு மட்டும் கொஞ்சமும் சம்மதிக்கவில்லை. 
 
 
தனக்கு அதில் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று அவன் உறுதியாக சொல்லிவிட, “அது எப்படி உனக்கு சேர வேண்டியதை கொடுத்து தானே ஆகணும்..?” என்று சண்டைக்கு நின்றான் நிதின்.
 
 
“எனக்கும் அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு முடிவு செஞ்சு இத்தனை வருஷமா நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.. இந்த சொத்தை மட்டும் நான் எப்படி வாங்கிப்பேன்..?” என விநாயக் கேட்க.. “நீ முடிவு செஞ்சுட்டா சம்மந்தம் இல்லாம போயிடுமா..? இன்னைக்கும் ரகோத்தமன் தான் உனக்கு அப்பா, ராதாகிருஷ்ணன் தான் உன் தாத்தா..!” என்றான் கோபமாக நிதின். 
 
 
“ஆனா அந்த உறவு தான் எனக்கு வேண்டாம்னு சொல்றேன்.. அதே போல அந்த உறவால் வர எந்த உரிமையும் எனக்கு வேண்டாம், சொத்தை மூன்று பங்கா பிரிங்க.. நான் எனக்கு இதில் பங்கு வேண்டாம்னு எழுதிக் கொடுத்துடறேன்..” என்று அவன் முடிவோடு சொல்லிவிட, நிறைய முறை வாதாடி பார்த்து விட்டு விட்டான் நிதின்.
 
 
அதில் நந்தினி பார்த்துக்கொண்டிருந்த தயாரிப்பு நிறுவனம் அவளுக்கே வருமாறு எழுதிக் கொடுத்தவன், தன் விளையாட்டுத்தனங்களையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு பொறுப்போடு தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள தொடங்கினான்
 
 
இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கும் போதே நிதினை நேரில் சந்தித்து இருந்த மானஸா “அண்ணா சாரி, நீங்க என் மேலே கோபமா இருக்கீங்கன்னு அம்மா சொன்னாங்க.. உங்ககிட்ட என் பிரச்சனையை சொல்ல கூடாதுனோ உதவி கேட்கக் கூடாதுனோ நான் என்னைக்குமே நினைச்சதே இல்லை.. 
 
 
ஆனா அந்த வீட்டில் நாம எல்லாரும் ஒரே நிலையில் தான் இருந்தோம், அவங்களை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு என் மனதில் அழுத்தமா பதிஞ்சு போயிருந்தது.. அதனால் தான் உங்ககிட்ட சொல்லி மட்டும் என்னாகப் போகுதுன்னு நான் சொல்லாமலே இருந்துட்டேன்..” என்றவளின் வார்த்தைகள் அவனுக்கு சரியாகப் புரிந்தது.
 
 
‘அதானே இத்தனை வருடம் கூடவே இருந்து அவளுக்கு என்ன செய்து விட்டேன்..? இப்போது செய்ய மாட்டேனா..! என்று நினைத்துக் கோபம் கொள்ள.. அவள் என்னிடம் சொல்லாததும் சரியாகத்தான் இருக்கிறது..’ என்று புரிந்து கொண்டவனாக “அதெல்லாம் பரவாயில்லைடா, இதுவரை எப்படியோ.. ஆனா இனி நீ என்கிட்ட எதையும் தயக்கமில்லாமல் பேசலாம், கேட்கலாம்.. இப்போ நான் அங்கே இல்லை, உனக்கு தெரியும் தானே..! என்னால் இனி எல்லாமே செய்ய முடியும்..” என்று புன்னகையோடு கூற.. அவளும் அதை புரிந்து கொண்டதாக தலையசைத்தாள்.
 
 
****
 
 
அந்த வார இறுதியில் ஒரு பட பிரமோஷனுக்காக சென்று இருந்த நந்தினி அங்கே மயங்கி விழ.. நிதின் தான் அவளை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். செல்லும் வழியிலேயே விநாயக்கிற்கு தகவல் கொடுக்க.. அவனும் அங்கே விரைந்து வந்தான்.
அதற்குள் அவளை பரிசோதித்து முடித்திருந்த மருத்துவர், நந்தினி தாயாக போகும் தகவலை சொல்ல.. சந்தோஷ அதிர்வில் பேச்சற்று நின்று விட்டான் விநாயக்.
 
 
அதே நேரம் இங்கு வந்தவுடன் விநாயக் பதட்டத்தோடு அபிராமிக்கும் சித்ராவுக்கும் அழைத்து சொல்லி இருக்க.. அவர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தனர். விஷயம் கேள்விப்பட்டு இருவரும் தங்கள் வயதை மறந்து துள்ளி குதித்தனர்.
 
 
அதன் பின் நந்தினியை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டாடி தீர்த்து விட்டனர். அதே போல் அவளுக்கு தேவையானதை செய்து, கண்ணும் கருத்துமாக பார்த்தும் கொண்டனர். 
 
 
அதேநேரம் எப்போதும் போல் அபிராமி தன் கோவில் கச்சேரியிலும், மானஸா தன் படிப்பிலும், நந்தினி தயாரிப்பு நிறுவனத்திலும், விநாயக் வழக்கம் போல் தன் பரபரப்பான வேலையிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தனர். 
 
 
எத்தனை வேலை இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பமாக எங்கேயாவது சென்று சந்தோஷமாக பொழுதை கழிப்பது அவர்களின் முக்கிய வழக்கமாக இருந்தது. அந்த நேரங்களில் சித்ராவையும் மறக்காமல் தங்களோடு சேர்த்துக் கொள்வார்கள்..
 
 
அன்று வெகு நாட்களுக்குப் பிறகு அப்படி கிடைத்த ஒரு நேரத்தை போக்க கடற்கரை பங்களாவுக்கு வந்திருந்தனர். அபிராமியையும் சித்ராவையும் ஏழு மாத வயிற்றோடு இருக்கும் நந்தினிக்கு அருகில் அமர வைத்துவிட்டு விநாயக் சமைத்துக் கொடுக்க.. மானு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அதை கொண்டு சென்று கொடுக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டாள்.
 
 
“அதெல்லாம் வேண்டாம், நீங்க ஏதாவது படம் பார்த்து சந்தோஷமா நேரத்தை போக்குங்க.. நாங்க சமைக்கிறோம்..” என சித்ரா சொல்லியும் “எல்லா நாளும் அதை தானே நீங்க செய்றீங்க..? ஒரு நாள் ஓய்வில் இருங்க..” என்றான் விநாயக். 
 
 
“நீங்க மட்டும் என்ன ஓய்வா வீட்டிலா இருக்கீங்க..? தொடர்ந்து வேலை செஞ்சுட்டு தானே வரீங்க.. உங்களுக்கும் ஓய்வு தேவை தானே..!” என்றார் சித்ரா.
 
 
“இது ஒரு நல்ல கேள்வி, ஆனா நீங்க எல்லா நாளும் செய்யும் அதே சமையலை இன்னைக்கும் செய்யறேன்னு சொல்றீங்க.. நான் அப்படி இல்லையே, இத்தனை நாள் செஞ்ச வேலை வேற.. அதிலிருந்து ஒரு மாற்றமா நான் இதை செய்யறேன்.. அதனால் எனக்கு இது சந்தோஷமா தான் இருக்கு..” என்று அவர்களை அமைதியாக்கி விட்டு அன்று முழுக்க அவனே அனைத்தையும் பார்த்துக் கொண்டான். 
 
 
இதெல்லாம் சித்ராவுக்கு அத்தனை சந்தோஷத்தை கொடுத்தது. இப்படி எல்லாம் அவர்கள் ஒரு நாளும் விடுமுறையை ரசித்து மகிழ்ந்தது இல்லை. எல்லா நாளையும் போல அதுவும் ஒரு நாள் போல தான் கழியும். அப்படியெல்லாம் கடினமான நாட்களை கடந்து வந்திருந்த தன் மகளின் சந்தோஷமான வாழ்க்கையை எண்ணி அவருக்கு பல நேரங்களில் மனம் நெகிழ்ந்து போகும்.
 
 
இன்றும் அப்படியே பெரியவர்கள் இருவரும் பிள்ளைகளைப் பற்றி பேசியபடி வெளியில் தோட்டத்தில் அமர்ந்திருக்க.. உள்ளே மானு ஏதோ படம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
விநாயக் நந்தினியை அழைத்துக் கொண்டு மெல்ல கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். இப்போதெல்லாம் பெரும்பாலும் இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இருப்பதில்லை. நந்தினியும் தன் மனதில் தோன்றுவதை தயக்கமில்லாமல் கேட்கவும் பேசவும் தொடங்கி இருந்தாள்.
 
 
இப்போதும் அதே போல தன் பங்காக வந்த சொத்தை பற்றி பேசியவாறு அதை எப்படி எங்கு இன்வெஸ்ட் செய்வது என அவள் கேட்க.. அவனும் தான் யோசித்து வைத்திருந்ததை அவளுக்கு விளக்கிக் கொண்டிருந்தான். 
 
 
ஒரு கட்டத்தில் இருவரும் அலைகளுக்கு மிக அருகில் அமர்ந்து கொள்ள.. “உங்களுக்கு எப்போ இந்த சொத்து பற்றி தெரிய வந்தது..?” என்றாள் நந்தினி. “ஹ்ம்ம் ஒரு அஞ்சு வருஷம் முன்னே இருக்கும்..” என அவன் கூறவும், “அப்போவே வா..?” என்றாள் திகைப்போடு நந்தினி. 
 
 
“ஆமா ராதாகிருஷ்ணனோட லாயர் கேசவன் என்னை வேற ஒரு வேலையா பார்க்க வந்தார்..” என அவன் தொடங்கவும், வலிக்காமல் அவன் வாயில் மெதுவாக அடித்தவள் “இதென்ன பெரியவங்களை பெயர் சொல்லி கூப்பிடற பழக்கம்..?” என்று கண்டிப்போடு சொல்ல.. உடனே மறுத்து எதுவும் பேசாமல் தழைந்து வந்தவன் “சரி உங்க தாத்தா..” என்று மீண்டும் தொடங்க.. “அதென்ன எனக்கு மட்டும் தாத்தா, உங்களுக்கு அவர் யாராம்..?” என்றாள் நந்தினி. 
 
 
“அவர் எனக்கு யாரும் இல்லை யது, அது உனக்கும் தெரியும்.. இப்போ வேற விஷயத்துக்கு போவோமா..?” என்று அவன் முறைக்கவும் “சரி சொல்லுங்க கேட்போம்..” என்றாள் நந்தினி. இப்படித்தான் இருவரும் மற்றவருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தும் அதை தொடர்வதெல்லாம் இல்லை.. உடனே மாற்றிக் கொண்டு புரிதலோடும் காதலோடும் தங்கள் வாழ்க்கையை அழகாக கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
 
 
“லாயர் கேசவனோட மகன் ஒரு மிகப்பெரிய கேஸில் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டிருந்தான்.. அந்த வழக்கில் மட்டும் அவன் உள்ளே போய் இருந்தா குறைந்தது பதினாலு வருஷம் வெளியே வந்து இருக்கவே முடியாது.. நான் எதுவும் செய்யலைன்னு என்கிட்ட சத்தியம் செஞ்சு பேசும் போது அவன் கண்ணில் தெரிஞ்ச உண்மையை மட்டுமே ஆதாரமா வெச்சு நான் சில விஷயங்களை தோண்டி பார்க்கும் போது தான் இது அவன் முன்னாள் மனைவியோட மிகப்பெரிய பழிவாங்கும் திட்டம்னு எனக்கு புரிஞ்சது..
 
 
அதிலிருந்து எந்த பிரச்சனையும் இல்லாம அவனை நான் தான் வெளியே வர உதவி செய்தேன்.. அந்த நன்றிக்கு தான் இந்த விஷயத்தை பற்றி கேசவன் என்கிட்ட சொன்னார், உங்க வேதவல்லி இந்த உயில் விஷயம் யாருக்கும் தெரிய கூடாதுன்னு இவரை மிரட்டி வெச்சிருந்து இருக்காங்க..” என்றவன்
 
 
“இதை பத்தி தெரிஞ்ச பிறகு தான் நான் இன்னும் உன் விஷயத்தில் கவனமா இருந்தேன்.. உங்க வேதாம்மாவுக்கு நீ என்கூட பேசறதோ பழகுறதோ லேசா தெரிஞ்சா கூட போதும் இன்ஸ்டன்ட் வில்லியா மாறி என்ன முடிவு வேணாலும் எடுப்பாங்க.. 
 
 
நான் சொத்து விஷயத்தில் சொல்லலை, என் வேலையை பற்றி உனக்கே நல்லா தெரியும்.. நான் எப்போ எங்கே இருப்பேன்னு தெரியாது, உன்னால் என்னை தொடர்பு கொள்ள முடியாத ஒரு நேரத்தில் அவங்க தன் வில்லத்தனத்தை அவிழ்த்து விட்டிருந்தா உன்னால் அதைத் தாங்கி இருக்கவே முடியாது.. 
 
 
சொத்து விஷயத்தில் அவங்க வேற மாதிரி, யாரையும் என்னவும் செய்ய தயங்க மாட்டாங்க.. நிதினை உனக்கு கல்யாணம் செஞ்சு வெச்சு இருப்பாங்கன்னு அப்போ எனக்கு தோணலை.. ஏன்னா என்கிட்ட அப்படி பேசுவானே தவிர நிதினுக்கு அப்படி ஒரு எண்ணமே உன் மேலே இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும்.. 
 
 
அதனால் என்ன செய்வாங்க, என்னன்னு நமக்கு தெரியாது.. ஒருவேளை அப்படி ஒரு சிக்கலில் நீ மாட்டி இருந்தா ரொம்ப மோசமாகி இருக்கும் நிலைமை.. நான் இங்கே இருந்தா அதை நடக்க விடமாட்டேன் தான்.. ஆனா ஒருவேளை இல்லைனா.. இதையெல்லாம் யோசிச்சு தான் உன் பக்கமே நான் திரும்பாம இருந்தேன்.. இது அவங்களுக்கு பயந்து இல்லை, ஆனா அம்மாவை மாதிரி வாய்ப்பு கொடுத்து மாட்டிக்காம சரியான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்..” என அவன் சொல்லவும், இது போல் ஒவ்வொரு தருணத்திலும் ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் அவன் தன்னை மட்டுமே யோசித்து தன்னிடம் இருந்து விலகி இருந்ததை புரிந்து கொண்டிருந்தவள், நெகிழ்வோடு விநாயக் தோளில் சாய்ந்தாள்.
 
 
*
 
 
அடுத்த மூன்றாம் மாதம் நள்ளிரவில் நந்தினிக்கு பிரசவ வலி எடுக்க.. விநாயக் அவளைக் கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினான். எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் என டிரைவரை அங்கேயே தங்க வைத்திருந்தார் அபிராமி. ஒருவேளை விநாயக் வீட்டில் இல்லாத நேரமாக பார்த்து அவளுக்கு வலி எடுத்தால் பயன்படுமென்று எண்ணியே அவர் இதை செய்திருந்தார்.
 
 
அதில் வேகமாக டிரைவர் காரை எடுக்க.. மொத்த குடும்பமும் நள்ளிரவில் மருத்துவமனை சென்று இறங்கியது. அடுத்த ஒரு மணி நேரத்தில் விநாயக் மஹாதேவ் - யது நந்தினி இருவரின் பெண்ணரசி இந்த பூமியில் ஜனித்து இருந்தாள்.
 
 
தனக்கு பேத்தி பிறந்ததை கேட்ட நொடி முதல் அபிராமியை கைகளில் பிடிக்க முடியவில்லை. நந்தினியோடு பிரசவ அறையிலேயே இருந்த விநாயக் குழந்தையை அங்கேயே கையில் வாங்கி, கொஞ்சி முதலில் நந்தினிக்கும் பின் குழந்தைக்கும் நெற்றியில் முத்தமிட்டு மகிழ்ந்தவன், தானே குழந்தையை வெளியே கொண்டு வர.. அபிராமிக்கும் சித்ராவுக்கும் சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை.
மானஸா அத்தை ஆகிவிட்ட சந்தோஷத்தை துள்ளி குதித்துக் கொண்டாடிக் கொண்டிருக்க.. மறுநாள் நிதின் மட்டும் குழந்தையை பார்க்க வந்திருந்தான்.
 
 
புஷ்பாவுக்கும் ரகோத்தமனுக்கும் கூட இங்கு வந்து குழந்தையை பார்க்க ஆர்வமாக தான் இருந்தது. ஆனால் தேவையில்லாத சங்கடங்களை தவிர்க்கவே அவர்கள் வராமல் இருந்து விட்டனர். 
 
 
இருவரும் பசியாறும் நேரம் மட்டுமே குழந்தையை நந்தினியிடம் கொடுத்து மற்ற நேரங்களில் கீழேயே விடாமல் தங்கள் கைகளிலேயே வைத்து பார்த்துக் கொண்டிருந்தனர். நந்தினி வீடு திரும்பிய பிறகும் கூட அப்படியே தான் தொடர்ந்தது. சித்ரா நந்தினியை பார்த்துக்கொள்ள.. குழந்தையை அபிராமி பார்த்துக் கொள்வார்.
 
 
மறுநாள் இது அப்படியே மாறி அபிராமி நந்தினியை பார்த்துக்கொள்ள.. சித்ரா குழந்தையை பார்த்துக் கொள்வார். விநாயக் வீட்டில் இருக்கும் நேரம் அவன் கைகளில் இருப்பாள் பெண்ணரசி.
 
 
“நீங்க இரண்டு பேரும் எங்கே வேணாலும் போங்க.. வேலைன்னு ஓடுங்க, என்ன வேணா செய்ங்க.. எவ்வளவு ஜாலியா வேணும்னாலும் இருங்க, இந்த குட்டி செல்லத்தை மட்டும் என்கிட்ட கொடுத்துடுங்க.. நான் வளர்த்துக்கிறேன்..” என்று அபிராமி தினம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
 
 
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது அத்தனை சந்தோஷம். தன் மகளுக்கு செய்து பார்க்க முடியாததை எல்லாம் பேத்திக்கு செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.. 
 
 
இதில் இரு பாட்டிகளின் செல்லமாக அவர்களின் கைகளில் சமத்தாக இருந்த மகளை நந்தினி தன் அறையிலிருந்து நெகிழ்வோடு பார்த்துக் கொண்டிருக்க.. அவள் அருகில் அமர்ந்திருந்த விநாயக் லேசாக நந்தினியின் தோளை இடித்து ‘என்ன..?’ என்று விழிகளால் வினவினான். 
 
 
“இந்த இரண்டு பாட்டிகளும் செய்யும் அமர்க்களம் இருக்கே.. என்கிட்டே பாப்பாவை இன்ஸ்டால்மெண்ட்ல தான் கொடுக்கறாங்க.. என்னால் பாப்பா கூட விளையாடவே முடியலை தெரியுமா..?” என அவள் மெல்லிய குரலில் குறைப்பட்டுக் கொள்ளவும், “அவ்வளவு தானே..! விடு, அவங்க அந்த பாப்பாவை வளர்க்கட்டும்.. நாம உன் கூட விளையாட இன்னொரு பாப்பாவை ரெடி செஞ்சுக்கலாம்..” என்று கண் சிமிட்டினான் விநாயக்.
 
 
அதில் செல்லமாக நந்தினி அவனை முறைக்கவும், அதற்கு நேர் மாறாக அவளை தன் கை வளைவில் கொண்டு வந்தவன், “உனக்கு டிவின்ஸ் ஓகேவா..?” என கிசுகிசுப்பாக கேட்டவாறே அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.
 
 
                                                           நிறைந்தது
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 576
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
FINAL 
 
 
MNKN - 34 & 35
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா


   
ReplyQuote
Page 5 / 5

You cannot copy content of this page