All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மௌனமாய் நீ காதலாய் ...
 
Notifications
Clear all

மௌனமாய் நீ காதலாய் நான்..!! - (Story Thread)

Page 3 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 16
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1784177780-IMG-20260716-WA0002.jpg
 
 
மௌனம் - 17
 
வேதவல்லியின் இரண்டாவது மகன் ராஜேந்திரன் ரகோத்தமன் போல் குணம் கொண்டவன் இல்லை. எளிதாக சொல்வது என்றால் வேதவல்லியின் ஆண் உருவம் என்று சொல்லலாம்.. 
 
 
தனக்குத் தேவை என்றால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய ரகம். இந்த உலகில் தன்னை பற்றி மட்டுமே கவலை கொள்ளும் ஜீவன்.
 
 
அவர்கள் இருப்பதோ திரைத்துறை. எல்லாம் எளிதாக கிடைக்கக்கூடிய இடம்.. ஒரு சிலர் எந்த எல்லைக்கும் சென்று தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ளக்கூடிய துறை.
 
 
ரகோத்தமன் எப்படி இந்த விஷயத்தில் கொஞ்சமும் சறுக்காமல் இன்றுவரை தன் வாழ்க்கையை சீராக கொண்டு செல்கிறாரோ.. அதற்கு நேர் எதிரான வாழ்க்கை முறை தான் ராஜேந்திரனுடையது.
 
 
மது, மாது என்று அவன் தனி ஒரு உலகில் சஞ்சரித்துக் கொண்டு இருக்க.. ஆரம்பத்தில் இதெல்லாம் நமக்கு சரிவராது என்று சொல்லி திருத்த முயன்ற ராதாகிருஷ்ணன் கூட அவன் இனி திருந்தாத பிறவி என்று புரிந்து ஒதுங்கிக் கொள்ளும் நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருந்தான்.
 
 
அதிசயத்திலும் அதிசயமாக ஊரில் உள்ள அத்தனை பேரையும் குறை சொல்லிக் கொண்டு இருக்கும் வேதவல்லி தன் இளைய மகனை இந்த விஷயத்தில் கண்டிக்கவே இல்லை. ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான் போகப் போக சரியாகிவிடும், இல்லை அவனுக்கென ஒரு வாழ்க்கை அமைந்தால் தானாக மாறி விடுவான் என்று அக்மார்க் அம்மாவாக மாறி உளறிக் கொண்டிருந்தார்.
 
 
இது எந்த நிலைக்குச் சென்றது என்றால் தன் தேவைக்கோ இல்லை வேறு வழி இல்லாமலோ வாய்ப்புக்காக வளைந்துக் கொடுக்கும் நடிகைகளில் தொடங்கி பின் தன் நிறுவனத்தில் நடிக்க வேண்டும் என்றாலே தன்னை தனியே கவனிக்க வேண்டும் என்று நடிகைகளை நிர்பந்திக்கும் நிலைக்கு மாறி இருந்தார் ராஜேந்திரன்.
 
 
இதெல்லாம் அரசல் புரிசலாக தெரியவந்த போது ரகோத்தமன் கண்டிக்க முயல.. அவரை துளியும் மதிக்காமல் வார்த்தைகளில் வரைமுறையில்லாமல் அவன் பேசியதில் வெறுத்து ‘உன் வாழ்க்கை, உன் விருப்பம்’ என்பது போல் எப்படியோ போ என்று ஒதுங்கிக் கொண்டு விட்டார் ரகோத்தமன்.
 
 
இந்த நிலையில் தான் மலையாளத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த காவ்யாவை ரகோத்தமன் தன் அடுத்த படத்தின் நாயகியாக தேர்வு செய்திருந்தார்.
 
 
இருபது வயதேயான இளம் பெண். கேரள மண்ணுக்கே உரிய பொலிவும் அழகும் காவ்யாவினிடத்தில் கொட்டிக்கிடந்தது. முதல் படம் நடித்து முடிப்பதற்கு முன்பே தமிழில் அவருக்கு நான்கு படங்கள் முன்பதிவு ஆகி இருந்தது.
 
 
அந்த அளவு அழகும் திறமையும் உள்ள நடிகை காவ்யா. பெண் என்று ஒரு பொம்மைக்கு சேலை கட்டி நிற்க வைத்தாலே இமைக்காமல் அதை பல மணி நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜேந்திரன் இத்தனை அழகு பதுமையாக தங்கள் நிறுவனத்தில் ஒரு பெண் நடித்துக் கொண்டிருக்கும் போது சும்மாவா இருப்பார்..
 
 
ஆனால் உலக மகா அதிசயமாக யாருமே எதிர்பார்க்காத வகையில் இங்கு அவரின் ஆசை அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மாறி இருந்தது. இருவருக்கும் கிட்டத்தட்ட பனிரெண்டு வயது வித்தியாசம் இருந்தது.
 
 
அதில் அடிக்கடி காவ்யாவை படப்பிடிப்பு தளங்களிலோ இல்லை தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு வரும் போதோ சந்தித்து ராஜேந்திரன் பேச.. ரகோத்தமனின் தம்பி என்ற முறையிலும் அவரும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருப்பவர் என்ற முறையிலும் இயல்பாகவே பேசி பழகத் தொடங்கினார் காவ்யா.
 
 
இப்படியே சில நாட்கள் செல்ல.. ராஜேந்திரன் தன் விருப்பத்தை காவ்யாவிடம் தெரிவிக்க.. அவரோ பெரும் திகைப்போடு அடுத்த நொடியே அதை மறுத்தார். ஏனெனில் மலையாள திரை உலகின் துணை இயக்குனராக வளர்ந்து கொண்டிருக்கும் ஜிதின் என்பவனை காதலித்துக் கொண்டிருந்தார் காவ்யா.
 
 
இதை அறிந்த நொடி கோபமாக காவ்யாவை பார்த்த ராஜேந்திரன் “உனக்கு விருப்பமான்னு எல்லாம் நான் கேட்கலை, நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க நினைக்கறேன்.. நம்ம கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்கும் அவ்வளவுதான்..” என்று சிறு மிரட்டலாகவே சொல்லிவிட்டு செல்ல.. திரைத்துறையில் இது போலான பல இடைஞ்சல்களை சந்தித்துக்கொண்டிருந்த காவ்யா இதையும் அது போல் ஒன்றாகத்தான் அப்போது பார்த்தார்.
 
 
ஆனால் நாளாக ஆக ராஜேந்திரனின் தொந்தரவு அதிகமாக தொடங்கியதில் ரகோத்தமனிடம் சென்று தன் நிலையை விளக்கினார் காவ்யா. இதில் அவரை கவலைப்பட வேண்டாம் எனக் கூறிய ரகோத்தமன் தன் தம்பியை அழைத்து கண்டிக்க முயல.. “என் வாழ்க்கையில் நீ தலையிடாதே.. உன் வாழ்க்கையை நீ பார்த்துக்கிட்ட இல்லை, அதேபோல என் வாழ்க்கையை பார்த்துக்க எனக்கு தெரியும்..” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லிச் சென்று விட, ராதாகிருஷ்ணனுக்கு விவரத்தை தெரிவித்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் ரகோத்தமன். 
 
 
தன் கணவன் மூலம் விவரம் அறிந்த வேதவல்லி மகனை கூப்பிட்டு விசாரிக்க.. “அதெல்லாம் எதுவும் இல்லை ம்மா.. எல்லா நடிகைகளையும் போல தான் கொஞ்ச நாள் பழகிட்டு நான் கழட்டி விட்டுடுவேன்.. ஆனா இவ ஓவர் சீன் போடுறா, அதான் கொஞ்சம் நானும் விளையாடி பார்க்கறேன்..” என்று அவர் சொல்லிச் சென்றிருக்க.. அதை உண்மை என்று நம்பிக் கொண்ட வேதவல்லியும் அதன் பின் ராஜேந்திரனை கண்டு கொள்ளவில்லை. 
 
 
இதில் நாளுக்கு நாள் ராஜேந்திரனின் தொல்லை அதிகமாகிக் கொண்டே செல்ல.. செய்வதறியாது திகைத்த காவ்யா ரகோத்தமன் நிறுவனத்தில் நடிக்கும் படம் முடிவடைந்த உடனேயே தன் காதலனை கேரளாவில் மணந்து கொண்டிருந்தார்.
 
 
யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென கோவிலில் வைத்து நடந்து முடிந்து இருந்த திருமணத்தைப் பற்றிய செய்தியை கண்ட நொடி ராஜேந்திரன் பெரும் ஆத்திரத்திற்கு ஆளானார். 
 
 
இதுவரை அவரின் விருப்பத்திற்கு வளைந்து கொடுத்த நடிகைகளை மட்டுமே அதிகம் பார்த்திருந்த ராஜேந்திரனுக்கு காவ்யாவின் மறுப்பே பெரும் கோபத்தை தூண்டி விட்டிருக்க.. அதில் தான் ‘உன்னை என் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து காண்பிக்கிறேன் பார்..!’ என்கிற ரீதியில் அதன் பின்னான அவரின் அத்தனை செயல்களும் இருந்தது.
 
 
இதில் இப்போதே வாழ்க்கையில் சாதிக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒன்றும் இல்லாத ஒரு துணை இயக்குனரை காதலித்து தன்னை வேண்டாம் என்று காவ்யா மறுத்தது ராஜேந்திரனின் தன்மானத்தை சீண்டி விட்டிருந்தது. ‘தன் பண பலம் என்ன..? பின்புலம் என்ன..? தன்னை ஒருத்தி வேண்டாம் என்பதா..!’ என்ற கண்மண் தெரியா ஆத்திரமே காதல் என அவரை நம்ப வைத்திருந்தது. 
 
 
அதில் காவ்யா மறுக்க எந்த வகையிலும் அவகாசமோ வாய்ப்போ கொடுக்கவே கூடாது என்று நினைத்து தன்னை சுற்றி இருப்பவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என அனைவரிடமும் காவ்யா தான் தன் வருங்கால மனைவி என்று வேண்டுமென்றே அவர் பரப்பிக் கொண்டிருக்க.. அதற்கு காவ்யாவின் இந்த பதிலடி அவர் கொஞ்சமும் எதிர்பாராததாக இருந்தது.
 
 
இதில் உண்டான அவமானத்தில் அடுத்தவரை எப்படி எதிர்கொள்வது என தெரியா மனநிலையோடு ராஜேந்திரன் அறைக்குள்ளேயே முடங்கிக் கொள்ள.. இத்தனை நாள் அவர் போட்ட ஆட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களும், இவனுக்கு இப்படி ஒரு நிலையா என்று நினைத்தவர்களும், இவனுக்கு இதெல்லாம் நல்லா வேண்டும் என சந்தோஷித்தவர்களும் மாறி மாறி அவரை அலைபேசியில் அழைத்து அக்கறையாக பேசுவது போலும் நலம் விசாரிப்பது போலும் இதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்க.. இது தன் வாழ்நாளில் மிகப்பெரிய கரும்புள்ளி என்று நினைத்த ராஜேந்திரன் முட்டாள்தனமாக முடிவெடுத்து அன்று தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டிருந்தார்.
 
 
அவருடையது காதலும் இல்லை அதில் அவர் தோல்வி அடையவும் இல்லை என்று தெரியாமலேயே தன் மூர்க்க தனத்திற்கும் முட்டாள் தனத்திற்கும் அவர் உயிரை பலி கொடுத்திருக்க.. மானஸாவின் போதாத நேரமாக அன்று தான் அவள் பிறந்திருந்தாள்.
 
 
மருத்துவமனையில் குடும்பத்தோடு அனைவரும் காத்திருக்க.. உள்ளே இருந்து பெண் குழந்தை பிறந்திருப்பதாக நர்ஸ் வந்து சொல்லிய அதே நேரம் இங்கு ராதாகிருஷ்ணனின் அலைபேசி அலறியது. அதை எடுத்தவர் தன் அலுவலக அறையிலேயே ராஜேந்திரன் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தியை கேட்டறிந்து அங்கேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்து விட்டார்.
 
 
தன் வளர்ப்பு இங்கு சரியில்லாமல் போனதின் பலனாக ராஜேந்திரன் உயிரை மாய்த்துக் கொண்டதை புரிந்து கொள்ளாத வேதவல்லி முட்டாள்தனமாக மானஸா பிறந்த நேரம் தன் ஆருயிர் மகன் இந்த உலகை விட்டு சென்று விட்டதாக மூடத்தனமாக நம்பினார்.
 
 
அதோடு ராதாகிருஷ்ணனும் நெஞ்சு வலியில் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட, தன் மகனையும் கணவனையும் ஒரே நாளில் பலி கொடுக்க பிறந்தவள் மானஸா என்று ஒன்றுமறியா அந்தப் பிஞ்சின் மேல் பழியை சுமத்தி அவளை இல்லாத கொடுமைகள் எல்லாம் செய்யத் தொடங்கினார் வேதவல்லி.
 
 
சின்ன குழந்தை என்றும் பாராமல் வார்த்தைகளால் தினமும் மானஸாவை வேதவல்லி வதைக்க தொடங்கி இருக்க.. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ரகோத்தமன் கோபமாக வேதவல்லியை கத்திவிட்டு இருந்தார்.
 
 
இதுவரை தன்னை இப்படியெல்லாம் பேசாத மகன் இன்று தனக்கு எதிராக நின்று குரலை உயர்த்தி பேசுவது கூட இவள் பிறந்த நேரம் தான் என்று புரிந்து கொண்ட வேதவல்லி மூச்சை பிடித்துக் கொண்டு பெருங்குரல் எடுத்து கத்தியதில் மூர்ச்சையாகி கீழே விழுந்தார்.
 
 
அதில் பதறி அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி கொண்டு வரவே பத்து நாள் போராட்டமாகிப்போனது. அப்போதே தம்பியையும் அதன் பின் அந்த கவலையிலேயே தந்தையையும் இழந்து இருந்த ரகோத்தமனுக்கு அடுத்து அன்னையையும் இழந்து விடுவோமோ என்ற பயம் மனதில் பரவ.. மருத்துவர்கள் சொல்லியிருந்தது போல் அவர் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் பின் வாயையே திறக்காமல் இருக்க பழகிக் கொண்டார். 
 
 
முன்பே சித்ராவும் புஷ்பாவும் வேதவல்லியின் முன் அப்படித்தான். இப்போது அந்த பட்டியலில் ரகோத்தமனும் இணைந்து கொள்ள.. தன்னைக் கேட்க இனி யார் என்ற பெரும் திமிரோடு வேதவல்லியின் அராஜகமும் அதிகாரமும் அங்கு கோள்ளோச்ச தொடங்கியது. 
 
 
இதில் அப்போதே நடைப்பழகத் தொடங்கி இருந்த குழந்தை தன் எதிரில் வந்தாலே அவளை அபசகுணம் தன் உயிரையும் எடுக்க பார்க்கிறாள் என்றெல்லாம் தினமும் அவர் பேசிக்கொண்டே இருந்ததை கேட்க முடியாமல் மானஸாவை ஊட்டி கான்வென்டில் கொண்டு போய் சேர்த்து விட்டிருந்தார் ரகோத்தமன்.
 
 
இதில் புஷ்பாவுக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால் இப்படியே குழந்தை தினமும் அவரின் வெறுப்பை எதிர்கொண்டு வளர்வது சரி இல்லை என்று புரிய வைத்து, புஷ்பாவை எப்படியோ சம்மதிக்க வைத்திருந்த ரகோத்தமனுக்கும் சிறு பிள்ளையை இப்படி விட்டுப் பிரிந்து இருக்க வேண்டியதை எண்ணி வருத்தமாகத்தான் இருந்தது. 
 
 
ஆனால் அவருக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. இதில் பள்ளிப் பருவம் முழுக்க மானஸா விடுதியில் தங்கி தான் படித்தாள். எப்போதாவது விடுமுறைக்கு வரும் நாட்களில் கூட அவளுக்கு வீடு என்பது பெரும் நரகம் தான். 
 
 
சிறுவயதில் புரியாமல் தானாக வேதவல்லியின் முன் சென்று நின்று பலமுறை அவரின் வெறுப்பையும் தீயில் தோய்த்தது போலான வார்த்தைகளையும் வாங்கிக் கொண்டு காரணமே புரியாமல் அழுது கொண்டிருந்தவளுக்கு ஓரளவு வளரத் தொடங்கிய பின் காரணம் புரிந்ததில் வேதவல்லியின் முன் வருவதையே முழுவதுமாக தவிர்க்க தொடங்கி விட்டாள் மானஸா.
 
 
அவள் வீட்டில் இருந்தால் பெரும்பாலும் தன் அறைக்குள்ளேயே தான் முடங்கி கிடப்பாள். எங்காவது கிளம்பி செல்ல வேண்டும் என்றால் மட்டுமே அறையில் இருந்து வெளியில் வருபவள், அப்போதும் கூட புஷ்பாவிடம் வேதவல்லி வரவேற்பறையில் இல்லை என்பதை பத்து முறையாவது கேட்டு உறுதி செய்து கொண்ட பிறகே வருவாள்.
 
 
அப்படியே நாட்கள் செல்ல.. பள்ளி படிப்பை முடித்துவிட்டு இதோ கல்லூரியில் அவள் சேர்ந்த பிறகும் தன் தந்தையிடம் கேட்டது வெளியூரில் கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும்படி தன்னை சேர்த்து விடுமாறு தான்.. ரகோத்தமனுமே அப்படித்தான் நினைத்திருந்தார். ஆனால் புஷ்பா தான் இந்த முறை இது வேண்டாமென்று முடிவாக நின்றார். 
 
 
இன்னும் மூன்று நான்கு வருடங்கள் மட்டுமே மகள் தங்களோடு இருக்கப் போகிறாள். அதன் பின் திருமணம் செய்து இன்னொரு வீட்டிற்கு தான் அனுப்ப வேண்டும்.. அதுவரையாவது அவள் என்னோடு என் வீட்டில் இருக்கட்டும் என புஷ்பா கேட்கும் போது அதை ரகோத்தமனால் மறுக்க முடியவில்லை.
 
 
ஆனால் மானஸா மறுத்தாள். அவளுக்குமே தன் பெற்றோரோடு தன் வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைகள் நிறையவே இருந்தாலும் அதையும் மீறி வேதவல்லியை பற்றிய பயம் தான் நிறைய இருந்தது. அதில் அவள் மறுக்க புஷ்பா கெஞ்ச என்று பல நாட்கள் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தன் பெற்றோரின் ஆசைக்காக இங்கு இருக்க சம்மதித்தாள் மானஸா.
 
 
பெரும்பாலும் விடுதியிலேயே தங்கி இருந்ததால் அவளுக்கு அபிராமி பற்றியோ விநாயக் பற்றியோ தெரிய வராமலே இருந்தது. மானஸா பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது விடுமுறைக்கு வந்திருந்த நேரத்தில் ரகோத்தமனோடு அவள் வெளியில் சென்றிருக்க.. அங்கு அபிராமியும் விநாயக்கும் வந்திருந்தனர். 
 
 
அவர்களை சற்று தள்ளி மறைவாக நின்று பெரும் நெகிழ்வோடு ரகோத்தமன் பார்த்துக் கொண்டிருக்க.. ‘யார் இவர்கள்..?’ என்று புரியா குழப்பத்தோடு அவர் அருகில் நின்றிருந்தாள் மானஸா.
 
 
அந்த நேரத்தில் அபிராமி கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்து தேறி வந்திருந்தார். அதில் லேசாக உடல் மெலிந்து கிட்டத்தட்ட பல மாதங்களுக்குப் பிறகு அன்று வெளியில் வந்திருந்தவரை கண்ட ரகோத்தமன் பெரிதாக உணர்ச்சி வசப்பட்டு இருந்ததின் விளைவாக அவரின் கண்கள் கூட லேசாக கலங்கி இருந்தது.
 
 
இதில் “யாருப்பா அவங்க..?” என மானஸா அவர்களையே பார்த்தபடி கேட்டு விட்டு இருக்க.. “உனக்கு தெரியாது இல்லை, அது தான் உன் அண்ணா.. இது உன் பெரியம்மா..” என்று அறிமுகம் செய்து வைத்தார் ரகோத்தமன். “என்ன அண்ணாவா..! எனக்கு நிது அண்ணா மட்டும் தான்..” என அவள் தொடங்கவும் “இல்லை, இவன் தான் பெரியவன் நிதினுக்குமே இவன் அண்ணா தான்..” என்றவரை அவள் குழப்பமாக பார்க்க.. “இன்னொரு நாள் அப்பா உனக்கு விளக்கமா சொல்றேன்..” என்று கூறியிருந்தார் ரகோத்தமன்.
 
 
மகள் விடுமுறைக்கு வரும் நேரங்களில் புஷ்பா எங்காவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே மானஸாவை வீட்டில் இருக்க அனுமதிப்பவர், மற்ற நேரங்களில் பெரும்பாலும் தன்னோடு தயாரிப்பு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்.
 
 
அங்கு அவளுக்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது.. தன் மனம் போல் ஏதாவது வரைந்து கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டு நேரத்திற்கு சாப்பிட்டு அங்கேயே உறங்கிக் கொண்டிருப்பவளை மாலை தான் வீட்டிற்கு அழைத்து வருவார் ரகோத்தமன். 
 
 
அந்த வார இறுதியில் அதேபோல் மீண்டும் மகளை அவர் அழைத்துக் கொண்டு செல்ல.. எதிரில் தன் இரு சக்கர வாகனத்தில் விநாயக் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் மானஸா ரகோத்தமனை அழைத்து “அப்பா அங்கே பாருங்க அண்ணா..” என்று காண்பிக்க.. “எங்கே..?” என்று ஆர்வமாக திரும்பி பார்த்தார் ரகோத்தமன். 
 
 
ஒரு நொடியில் வேகமாக அவர்களை அவன் கடந்து சென்று விட்டிருந்தாலும் இன்று அவனை இந்த நொடி பார்த்ததே போதும் என்பது போல் அவர் முகம் மலர்ந்து இருந்தது. அதை கண்டு “உங்களுக்கு அண்ணாவை ரொம்ப பிடிக்கும் இல்லைப்பா..” என மானஸா கேட்டிருக்க.. அவள் தலையை ஆதூரமாக பிடித்து அசைத்தவர் “என் குட்டி பொண்ணுக்கு இவ்வளவு தெரியுதா..!” என்றார்.
 
 
“உங்க குட்டி பொண்ணுக்கு அவங்க அப்பாவை நல்லா தெரியும், அவருக்கு எது பிடிக்கும்னு என்னால் புரிஞ்சுக்க முடியும்..” என்று அவள் சொல்லவும் தன் தோளோடு சேர்த்து மகளை பிடித்துக் கொண்டவர், அன்று அலுவலகத்தில் வைத்து தான் அவர் வாழ்வில் நடந்தவை பற்றி எல்லாம் அவள் வயதுக்கு எவ்வளவு சொல்ல வேண்டுமோ.. எவ்வளவு சொன்னால் புரியுமோ அதை மட்டும் பகிர்ந்து கொண்டிருந்தார். 
 
 
ஆனால் அதற்கே அத்தனை திகைப்போடு அமர்ந்து விட்டிருந்தாள் மானஸா. இவ்வளவிலும் அவள் மனதில் பதிந்தது விநாயக் தன் பெரிய அண்ணன், தந்தைக்கு மிகவும் பிடித்தமானவன், தன்னைப்போலவே வேதவல்லிக்கு விநாயக்கையும் பிடிக்காது, தன்னை போலவே தந்தையை விட்டு பிரிந்து வளர்கிறான் என்பது மட்டுமே..!
 
 
இப்படியே நாட்கள் செல்ல.. எப்போதாவது எங்காவது வெளியில் செல்லும் போது ஓரிருமுறை தூரத்தில் இருந்து விநாயக்கை பார்த்திருக்கிறாள் அவ்வளவுதான்..
 
 
அடுத்த வருடம் அவள் விடுமுறையில் வந்திருந்த போது அவளின் பள்ளி தோழி ஸ்ரீக்கு பிறந்தநாள். தன்னோடு விடுதியில் தங்கி படிக்கும் நெருங்கிய தோழி அவள், அதனால் அங்கு சென்றாக வேண்டும் என மானஸா நினைக்க.. பிறந்தநாள் பார்ட்டியோ இரவு எட்டு மணிக்கு தான் தொடங்குவதாக இருந்தது. 
 
 
அனைத்தும் முடிய பதினொரு மணிக்கு மேல் ஆகிவிடும் என ஸ்ரீ கூறவும், “அவ்வளவு நேரம் எல்லாம் என்னால் இருக்க முடியாது ஸ்ரீ, கேக் வெட்டி முடிக்கவும் கிப்ட் கொடுத்துட்டு நான் கிளம்பறேன்..” என்று மானஸா சொல்லவும், “அதெல்லாம் முடியாது, என் பார்ட்டிக்கு வந்துட்டு சாப்பிடாம போவியா நீ..? அப்போ உன் கிப்ட்டும் எனக்கு வேண்டாம்..” என அவள் கோபித்துக் கொள்ளவும் வேறு வழியில்லாமல் இறுதிவரை இருப்பதாக சம்மதித்தாள் மானஸா.
 
 
ஸ்ரீயின் தந்தை அரசியலில் பெரும் புள்ளி. பிறந்தநாள் விழாவும் மிகப் பெரிய அளவில் தான் ஏற்பாடாகி இருந்தது. அவரின் கடற்கரை பங்களாவில் பார்ட்டி நடந்து கொண்டிருக்க.. அதையெல்லாம் சற்று வியப்பாக தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா.
 
 
அவள் வீட்டில் இப்படி பிறந்தநாள் பார்ட்டி எல்லாம் கொண்டாடியது இல்லை. வசதிக்கு குறைவில்லை என்றாலும் கொண்டாட்டங்கள் அங்கு குறைவே..! சிறு வயதிலேயே விநாயக் தன் பிறந்த நாளை கொண்டாட விரும்பாமல் மறுத்து விட்டிருக்க.. அதன் பின் நிதினுக்கு மட்டும் அப்படி செய்வது சரியாக இருக்காது என்று நினைத்த புஷ்பா கோவிலில் பூஜை கொடுத்து விடுவார். 
 
 
மானஸாவின் பிறந்தநாளை எப்படியும் வேதவல்லி கொண்டாட விடமாட்டார்.. அதோடு அவளின் பிறந்தநாள் பெரும்பாலும் பள்ளி நாட்களில் வருவதால் ரகோத்தமனும் புஷ்பாவும் கிளம்பி சென்று அவளோடு இருந்து அங்கேயே பிறந்த நாளை சிறிய அளவில் கொண்டாடி விட்டு வருவார்கள்.. 
 
 
இதில் இத்தனை பெரிய மனிதர்களை அழைத்து பெரும் கொண்டாட்டமாக நடந்து கொண்டிருந்த பிறந்தநாள் பார்ட்டியை அவள் புதிதாக பார்த்துக் கொண்டிருக்க.. “ஹே சாரி மானு, உன்னை தனியா விட்டுட்டேனா..!” என்று வந்து நின்றாள் ஸ்ரீ. 
 
 
“அதெல்லாம் இல்லை ஸ்ரீ, நீ போ உன் கெஸ்ட்டை பார்.. நான் இங்கே ஓகே தான்..” என அனுப்பி வைத்தவள், தனக்கென கொடுக்கப்பட்ட பழச்சாறுடன் சற்று தள்ளி ஓரமாக ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
மானஸா இங்கு இன்று வர முக்கிய காரணமே பெரும்பாலும் வீட்டில் இருக்க அவள் விரும்புவதில்லை என்பதாலேயே..! வேறு வழியில்லாமல் தவிர்க்க முடியாத தருணங்களில் மட்டுமே வீட்டில் இருப்பாள். அவளின் மிக நெருங்கிய தோழி ஸ்ரீ, அவளின் பிறந்தநாள் விழாவுக்கு வரவில்லை என்றால் நன்றாக இருக்காது என்பதோடு, அவளுக்கும் சில மணி நேரங்கள் அந்த வீட்டில் இருந்து வெளியில் இருக்க கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பு இது.. 
 
 
அதனாலயே நேற்று ரகோத்தமனிடம் கேட்ட போது கூட அவர் “என்ன அவ்வளவு நேரமா..?” என்று திகைத்தவர், “கேக் வெட்டி முடிச்சதும் கிளம்பி வந்துடு கண்ணா..” என்றார். 
 
 
“இல்லைப்பா ஸ்ரீ கோவிச்சுக்குவா.. நான் அங்கேயே இருந்துட்டு வரேன்..” என்றதும் “வீட்டில் தானே இருப்பீங்க..!” என அப்போதும் ரகோத்தமன் கேட்க “வேற எங்கேப்பா நான் போக போறேன்..? வீட்டுக்குள்ளே தான் பார்ட்டி, அது முடியவும் நான் போன் செய்யறேன்.. இல்லைனாலும் நீங்க பத்து மணிக்கு மேலே டிரைவர் அங்கிளை அனுப்புங்க, நான் கிளம்பி வந்துடறேன்..” என்று அவள் வாக்கு கொடுத்து விட்டு வந்திருந்தாள். 
 
 
இதையெல்லாம் யோசித்தப்படி அவள் அமர்ந்திருக்க.. திடீரென அங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. யாரோ முக்கிய அரசியல் பிரமுகர் வருகை தந்திருக்க.. குறிப்பிட்டு இருந்த நேரத்தை விட அரை மணி நேரம் முன்பாகவே கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்படவும், ஒவ்வொருவராக பரிசு பொருட்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். 
 
 
அதன் பின் அங்கங்கு சிறு சிறு குழுக்களாக தனக்குத் தெரிந்தவர்களோடு விருந்தினர்கள் ஒதுங்கிவிட, பெரியவர்கள் எல்லாம் கீழ்தளத்திலும் இளைஞர்களை எல்லாம் மேல் தளத்திலும் என்று தானாகவே ஒதுங்கிக் கொண்டனர்.
 
 
இதில் பல பெரிய வீட்டு பார்ட்டிகளில் நடக்கும் அத்தனையும் பரிமாறப்பட, அதை தவிரவும் கட்டுப்பாடின்றி வளரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளைப் போல வளர்ந்திருந்த ஸ்ரீயின் அண்ணனும் அவன் நண்பர்களும் மற்றவர் அறியாமல் எடுத்திருந்த போதை பொருள் அவர்களை வேறு ஒரு உலகத்தில் சஞ்சரிக்க செய்திருந்தது.
 
 
அப்படியே பேசி சிரித்து அமர்க்களம் செய்தபடி வெளியில் வந்தவர்களின் பார்வை அங்கு மற்றவர்களிடமிருந்து ஒதுங்கி தனியே அமர்ந்திருந்தவளின் மேல் பதிந்தது. பதினேழு வயதுக்கே உரிய அழகோடு இன்று புஷ்பா தனி கவனம் எடுத்து மகளை அலங்கரித்து அனுப்பி இருந்த வெங்காய சருகு நிற லெஹங்காவில் அழகு பதுமையாக இருந்தவளை கண்டவர்கள், ரசனையோடு பார்க்க தொடங்கி பின் அது ஆர்வமாகி, தங்களை மறந்த நிலையில் இருந்த அந்த ஐவர் குழுவை அவளை நோக்கி ஈர்த்தது.
 
 
அதேநேரம் கீழே யாரோ வந்திருப்பதாக ஸ்ரீயை அவள் அன்னை அழைத்திருக்க.. அவளும் இறங்கி சென்று விட்டிருந்தாள். அதில் மெல்ல அவளிடம் சென்று அவர்கள் பேச்சுக் கொடுக்க.. அவளோ இப்படி சட்டென யாரோடும் பழகிவிடும் குணம் உடையவள் இல்லை என்பதால் லேசாக ஒதுங்கி செல்ல தொடங்கினாள்.
 
 
அவளின் அந்த ஒதுக்கம் அவர்களை சீண்டிப் பார்த்தது. அதில் மானஸாவை வம்பு இழுக்க தொடங்கினர். அது அவளுக்கு சங்கடத்தை கொடுக்க.. மெல்ல அங்கிருந்து விலகிச் சென்றாள் போதும் என்ற உணர்வோடு வேகமாக எழுந்தவள், பதட்டத்திலும் அவசரத்திலும் வீட்டிற்குள் செல்லும் படியில் இறங்குவதற்கு பதிலாக வீட்டிற்கு வெளியில் செல்லும் வழியில் இறங்கி இருந்தாள்.
 
 
அது வீட்டின் பின்பக்க வாயிலாக இருந்தது மேலும் சோதனையாகி போக.. பயத்தில் மருண்டு விழித்தவள், ஆள் அரவமற்ற இடத்தில் தன்னைப் பின்தொடர்ந்து வருபவர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்க எண்ணி அங்கிருந்து வேகமாக மானஸா ஓட, அவளின் செயல்கள் எல்லாம் அவர்களுக்கு சுவாரஸ்யத்தை கொடுத்ததில் போதை தலைக்கேற என்ன செய்கிறோம் என தெரியாமல் அவளை வீதியில் விரட்டிக் கொண்டு சென்றனர்.  
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1784177976-IMG-20260716-WA0003.jpg
 
 
மௌனம் - 18
 
இதுவரை தனியே வெளியே சென்றே பழக்கம் இல்லாத மானஸாவின் முதல் அனுபவமே மிக பயங்கரமாக இருந்தது. பயம், பதட்டம், இருள் இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்க போகிறோம் என்ற கலக்கம் எல்லாம் ஒன்று சேர, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வழி எந்தப் பக்கம் என்று கூட தெரியாமல் சந்து சந்தாக ஓடிக்கொண்டிருந்தாள் மானஸா.
 
 
அவர்களும் விடாமல் பெரும் சிரிப்பும் கேலியாமாக சத்தமாக கத்தியப்படி அவளை விரட்டிக் கொண்டிருக்க.. பயத்தில் அவளுக்கு ஏதேதோ செய்தது. “கடவுளே கடவுளே..!” என்று முணுமுணுத்தபடியே எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து மீண்டு விட வேண்டும் என்ற எண்ணத்தோடு கண்ணீர் வழிய அவள் ஓடிக் கொண்டிருந்தாள்..
 
 
இன்று இங்கு வந்து இருக்கவே கூடாது, நல்லபடியாக வீடு போய் சேர்ந்து விட்டால் போதும் என்றெல்லாம் மனதிற்குள் எண்ணிக்கொண்டிருந்தவள், இருளான ஒரு சந்தில் ஓடிக்கொண்டிருக்க.. கால் இடறி அவள் கீழே விழவும் அந்த வீதியைக் கடந்து விநாயக் நடந்து செல்வது தெரிந்தது.
 
 
அதில் தன் ஒட்டுமொத்த சக்தியையும் ஒன்று திரட்டி “அண்ணாஆஆஆ..” என்று பெருங்குரல் எடுத்து மானஸா கத்தி இருக்க.. அலைபேசியில் பேசியவாறு நடந்து சென்று கொண்டிருந்தவன் யாரோ அழைத்தது போலான குரலில் நின்று திரும்பிப் பார்த்தான்.
 
 
அவன் பின்னே யாரும் இருப்பது போலே தெரியவில்லை. அதில் மேலும் அவன் நடக்க தொடங்கவும், அருகில் இருந்த சந்தில் இருந்து சிலர் சிரிப்பும் கேலியுமாக பேசிக்கொண்டு ஓடிவரும் சத்தம் கேட்டது. 
இதில் நெற்றியை சுருக்கியவன் சற்றுமுன் ஒரு பெண் குரல் கேட்டது போல் இருந்ததை எண்ணி, அப்படியே நான்கடி பின்னுக்கு நகர்ந்து சந்திற்குள் பார்க்க.. அங்கு மானஸா விழுந்த இடத்தில் இருந்து எழுந்து கொள்ள முயன்று கொண்டிருப்பது தெரிந்தது.
 
 
அதேநேரம் இருளில் ஒரு சிலர் அவளை நெருங்குவதும் தெரிய, நொடியில் சூழ்நிலை புரிய.. வேகமாக அங்கு விரைந்தவன் மானஸாவை கை கொடுத்து தூக்க.. அவனைக் கண்டதில் உண்டான நிம்மதியோடும் தைரியத்தோடும் “அ.. அண்ணா.. ஆஆ..” என்று மீண்டும் அவனை அழைத்தபடி இறுக விநாயக்கை அணைத்துக் கொண்டிருந்தாள்.
 
 
அவளின் அழைப்பும் இந்த அணைப்பும் அவனை திகைக்க செய்திருக்க.. அதை அப்போதைக்கு புறம் தள்ளி வைத்து விட்டு அவளை நோக்கி ஓடி வந்தவர்களை முறைப்பாகப் பார்த்தவன் “என்னடா செஞ்சுட்டு இருக்கீங்க..?” என்றான். 
 
 
“ஹாங் பார்த்தா தெரியலை, ஓடி பிடிச்சு விளையாடறோம்..” என அதில் ஒருத்தன் நக்கலாக சொல்லவும் “ஓஹோ, ஓட கால் இருக்கணும் இல்லை.. ஓட விட்டு வெளுத்துடுவேன் ஜாக்கிரதை..” என்றான் அழுத்தமானக் குரலில் அவர்களை முறைத்துக் கொண்டே விநாயக்.
 
 
“ஹை தோடா..!” 
 
 
“நாங்க அப்படியே பயந்துட்டோம்..!” 
 
 
“இவர் பெரிய..” என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையை படு நக்கலாக சொல்ல.. இறுதியாக பேசியவன் ‘பெரிய’ என்று சொல்லி அடுத்து என்ன சொல்ல வந்தானோ அதற்குள் விநாயக்கின் முஷ்டி அவன் வாயை உடைத்து இருந்தது.
 
 
ஓங்கி ஒரே குத்து தான் விட்டிருந்தான். அதற்கே அவன் வாயில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் வெளிவந்திருக்க.. நான்கு பற்கள் வேறு கீழே உடைந்து விழுந்து இருந்தது. இதை கண்டு மற்றவர்கள் மிரண்டு நின்றிருக்க.. “உங்களைப் போல வாய் வீராப்பு பேசறவன்னு நினைச்சுட்டீங்களா..! வாயை உடைச்சுட்டு தான்டா பேசுவேன்..” என்று அவன் கர்ஜித்த விதத்தில் அவர்களுக்குள் குளிர் பரவியது. 
 
 
“எவ்வளவு திமிரு இருந்தா, ஒரு பொண்ணை இப்படி பப்ளிக்கா விரட்டிட்டு வருவீங்க.. இதில் அத்தனை பேரும் போதையில் வேற இருக்கீங்க.. போலீஸ்காரன்கிட்டேயே உங்க வேலையை காட்டறீங்களா..?” என்று இதழ் மடித்து ஒருவித ஆத்திரத்தை அடக்கிய குரலில் அவன் பேசிக் கொண்டே செல்ல.. “என்னது போலீசா..?” என அங்கிருந்தவர்கள் மிரண்டனர்.
 
 
அதுவரை அவன் கைவளைவில் பாதுகாப்பாக இருந்த மானஸா கூட ‘போலீசா..!’ என்ற அதிர்வோடு தான் விநாயக்கின் முகத்தை லேசாக நிமிர்ந்து பார்த்திருந்தாள்.
 
 
அடுத்த நொடி நால்வரும் சிதறி ஒவ்வொரு திசையில் ஓட பார்க்க.. அதற்கு வாய்ப்பே அளிக்காமல் மானஸாவை சற்று தள்ளி நிறுத்தி இருந்தவன், புயல் வேகத்தில் சுழன்று ஒவ்வொருவரையும் அடித்து சாய்த்து இருந்தான். எல்லாம் இப்போதே கல்லூரிக்குள் அடி எடுத்து வைத்திருக்கும் சின்ன பிள்ளைகள். 
 
 
இவனின் முறுக்கிய தேகத்தின் வேகத்திற்கு முன் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதோடு அவர்கள் போதையிலும் வேறு இருக்க.. வெகு சீக்கிரமாகவே விநாயக் தன் வேலையை முடித்துக் விட்டிருந்தான். 
 
 
வலி தாங்காமல் வீதியில் சுருண்டு ஒவ்வொருவரும் முனகிக் கொண்டிருக்க.. “பொறு** ராஸ்க** இந்த வயசுலேயே இதெல்லாம்..” என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவன், பார்வையில் கோழிக்குஞ்சாக நடுங்கி இருளில் நின்றிருந்த மானஸா விழவும், அப்படியே தன் வார்த்தைகளை உள் இழுத்துக் கொண்டவன், தன் அலைபேசியை எடுத்து காவல் நிலையத்திற்கு அழைத்தான். 
 
 
அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்து தன்னை முறைப்படி அறிமுகம் செய்து கொண்டவன், இங்கு இப்படி ஒரு சூழ்நிலை என்பதை சொல்லி வந்து இவர்களை அள்ளிச் செல்லுமாறும், இது சம்பந்தமாக வேறு ஏதேனும் அவன் எழுதி கொடுக்கவோ, சாட்சி சொல்லவோ வேண்டி இருந்தால், நாளை காலை காவல் நிலையத்திற்கு வருவதாகவும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன், சுற்றும் முற்றும் பார்க்க.. அங்கு ஒரு வீட்டின் கட்டுமான பணி நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. 
 
 
வேகமாக அங்கே சென்று எதையோ தேடியவன், நீண்ட ஒரு கயிறை எடுத்துக் கொண்டு வந்தான். நால்வரையும் எழுந்து ஓட முடியாதபடி அங்கு இருந்த மரத்தோடு சேர்த்து கட்டி வைத்தவன், அதன் பின்பே மானஸாவின் பக்கம் திரும்பினான். 
 
 
அவளோ உடல் நடுக்கம் இன்னும் கொஞ்சமும் குறையாமல் அழுகையோடு அப்படியே அருகில் இருந்த சுவரைப் பிடித்தபடி நின்றிருக்க.. அந்த நிலையில் அவளைக் கண்டவனின் மனம் ஏதோ செய்தது. 
 
 
அதில் இரண்டு எட்டில் அவளை நெருங்கியவன், “ஹேய் பேபி கேர்ள் ரிலாக்ஸ், எல்லாம் ஓவர்.. யூ ஆர் இன் சேஃப் ஹான்ட்ஸ்..” என்றவனை அவள் மீண்டும் தாவி அணைத்துக் கொள்ள.. சிறு திகைப்போடு அவளை பார்த்தான் விநாயக்.
 
 
இந்த நொடி வரை அவள் உடல் நடுங்கி கொண்டிருக்கவும், சின்ன பெண் அளவுக்கு அதிகமாக பயந்து இருக்கிறாள் என புரிய.. ஆதரவாக அவளின் தலையை வருடியவன், “ஒண்ணுமில்லைமா.. பயப்படாதே, நான் உன் கூட இருக்கேன்.. உன் வீடு எங்கே இருக்கு..?” என்று மென்மையான குரலில் பேசினான் விநாயக்.
 
 
“வீ.. வீ.. அ.. அ.. ண்.. ணா..” என அவள் திக்கி திணற பயந்து போய் இருப்பதில் பேச முடியாமல் சிரமப்படுவதாக நினைத்தவன் “உனக்கு வீடு பக்கத்துலேயா..?” என்றான். 
 
 
இதுவரை அவள் வாழ்நாளில் பார்த்தே இல்லாத ஒரு அதிர்வை கண்டிருந்ததில் உண்டான அதிர்வு லேசாக நீங்கி, தன்னை சார்ந்த ஒருவனை பார்த்து விட்ட நிம்மதி மெல்ல அவளுள் படர தொடங்கி இருக்க.. அவனுக்கு தன்னை யார் என்றே தெரியவில்லை என புரிந்த நொடி அவளுக்கு மேலும் அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது. 
 
 
சிறுவயதில் இருந்து தேள் கொடுக்குப் போலான வார்த்தைகளை மட்டுமே கேட்டு வளர்ந்து இருந்தது.. அனைவரும் வீட்டில் இருக்க, இவள் மட்டும் விடுதியில் இருந்தது எல்லாம் சேர்ந்து யாருக்கும் தன்னை பிடிக்காது யாருக்கும் தான் முக்கியம் இல்லை என்ற எண்ணமே அவளின் தன்னம்பிக்கையை வெகுவாக அசைத்துப் பார்த்திருந்தது. 
 
 
அதில் மேலும் அவள் அடுத்த வார்த்தை பேச முடியாமல் திணற.. “ஒண்ணுமில்லைமா, ஏன் இவ்வளவு பயப்படறே..? எல்லாம் சரியாகிடுச்சு, முதலில் இங்கே இருந்து நாம கிளம்புவோம் வா..” என்று அவள் அங்கு நின்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மேலும் பயப்படுகிறாளோ என நினைத்து விநாயக் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
அவனுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவளும் உடன் செல்ல.. நடக்கத் தொடங்கியவுடன் லேசாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து நிறுத்த விநாயக் முயல.. அவளோ மேலும் அவனோடு இறுக்கமாக ஒன்றி கொண்டாள். 
 
 
இதில் ஒற்றைப் புருவத்தை கேள்வியாக உயர்த்தியவன் “உன் பேர் என்ன..?” எனவும் “மா.. மா..” என்று அவள் திணற.. “இன்னும் என்ன பயம் உனக்கு..?” என ஏதோ கேட்க முயன்றவனுக்கு, அப்போதே ‘அவளுக்கு பேசும் போது இப்படியாகும் பிரச்சனை இருக்குமோ..!’ எனத் தோன்றியது.
 
 
வேறு எதுவும் அதை பற்றி கேட்காமல் “உன் வீடு எங்கே..?” எனவும் சிறு தயக்கத்திற்கு பிறகு அவள் வீடு இருக்கும் பகுதியை கூறினாள் மானஸா. அதில் அவன் நடை அப்படியே நிற்க.. “அவ்வளவு தூரமா..! அப்போ இங்கே இந்த நேரத்தில் என்ன செய்யறே நீ..?” என்றவனின் குரலில் லேசாக கடுமை சேர்ந்து இருந்தது. 
 
 
இதுவரை எதிர்பாராமல் எப்படியோ அவர்களிடம் சிக்கிக் கொண்டாள் என நினைத்திருந்தவன், ‘ஒருவேளை தெரிந்தே விரும்பி அவர்களோடு வந்திருப்பாளோ..!’ என்று நினைத்து குரலில் கடுமையைக் கொண்டு வந்திருக்க.. “ப்.. ப்.. ரெ.. ண்.. ட்.. பர்த்.. டே..” என்று தொடங்கி எப்படியோ நடந்த அனைத்தையும் அவள் சொல்லி முடித்திருக்க.. அவனுக்கு பாவமாக போனது. 
 
 
கோழிக் குஞ்சாக தன் கரங்களில் நடுங்கிக் கொண்டிருப்பவளை காணும் போதே ஏதோ ஒரு உணர்வு அவனை அசைத்துக் கொண்டிருக்க.. ‘இந்த நேரத்தில் அவன் மட்டும் இந்த பக்கம் வராமல் போயிருந்தால், அவள் நிலை என்னவாகி இருக்கும்..?’ என்று தான் அவனுக்கு அந்த நொடி தோன்றியது.
 
 
இங்கு இருக்கும் துஷ்யந்த்தின் பீச் ஹவுஸில் நண்பர்கள் எல்லாம் இன்று கூடியிருந்தனர். சமீபமாக துஷ்யந்த் நடித்த ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. அதை கொண்டாட மாலையிலிருந்து அனைவரும் இங்கு இருக்க.. இன்று நண்பர்களே சேர்ந்து சமைக்கலாம் என்ற விபரீத முடிவு எடுத்து அதற்கான வேலைகளில் இறங்கி இருக்க.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகை உணவு செய்ய முனைந்ததில் சில பொருட்கள் தேவைப்பட்டது.
 
 
அதை வாங்குவதற்காகவே வெளியில் வந்திருந்தான் விநாயக். இரண்டு தெரு தள்ளி இருந்த சூப்பர் மார்க்கெட் செல்ல வந்திருந்தவன், தர்ஷனும் உடன் வருவதாக சொல்லி தன் காரை எடுக்க முயலவும் “வண்டியெல்லாம் வேண்டாம், நான் அப்படியே ஒரு வாக் போய் வாங்கிட்டு வரேன், அதுக்குள்ளே நீ இங்கே இருக்க பஞ்சாயத்தை பார்..” என தன் இருசக்கர வாகனத்தை கூட எடுக்காமல் காலாரா நடந்து வந்து கொண்டிருந்த போது தான் மானஸாவை கண்டான். 
 
 
ஒருவேளை தர்ஷனுடன் காரில் சென்றிருந்தால் இவளை பார்த்து இருக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்திருக்காது. அப்போது இந்த பெண்ணின் நிலை என்னவாகி இருக்கும் என்று தான் அவன் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.
 
 
அதில் லேசாக மானஸா அவன் சட்டையை பிடித்து இழுக்க.. ‘என்ன..?’ என்பது போல் அவள் முகத்தை திரும்பிப் பார்த்தான் விநாயக். “உங்களுக்கு என்னை தெரியலையா..? “ என்று அவள் கேட்க.. விழிகளை சுருக்கியவன் “என்ன..?’ எனவும் “நா.. நான் சொன்னேனே, நீங்கள் கவனிக்கலையா..?” என்று மீண்டும் அவள் கேட்கவும் “என்ன சொன்னே..?” என்றான் விநாயக்.
 
 
“நா.. நா.. இ.. ல்.. லை.. நீ.. நீங்க..” என்று அவன் பார்வை தன் மேல் கூர்மையாக பதிந்திருப்பதில் உண்டான தடுமாற்றத்தோடு அவள் அடுத்த வார்த்தை வராமல் அவனை தயக்கமாக பார்க்கவும், “அவசரப்படாம.. பயப்படாம.. பொறுமையா பேசு..” என்றான் அப்போதும் மென்மையாகவே விநாயக்.
 
 
அதில் உண்டான தைரியத்தோடு “நான் உங்க தங்கச்சி தான், என்னை உங்களுக்கு தெரியலையா..?” என்று மானஸா கேட்டிருக்க.. “தங்கச்சி..?” என்று புரியாமல் விழிகளை சுருக்கினான் விநாயக். அவனின் செயலில் மேலும் மனதளவில் அடிப்பட்டு போனவள், “அப்.. அப்பா.. அப்பா தான்.. நீங்க அண்ணான்னு..” என்று திணற “யாரு உங்க அப்பா..?” என்றான் கூர்மையாக அவளையே பார்த்தப்படியே குரல் இறுக விநாயக்.
 
 
அதுவரை அவன் தன்னிடம் இருந்த விதத்திற்கும் இந்த கேள்வியை கேட்கும் போது பார்த்த விதத்திற்கும் உள்ள வித்தியாசம் மானஸாவுக்கு தெளிவாக புரிந்தது.
 
 
அதில் உண்டான பெரும் தயக்கத்தோடு “ர.. ரகோ..” என்று அவள் சொல்லிக் கூட முடிக்கவில்லை வேகமாக அவளை உதறி கொண்டு தள்ளி நின்றிருந்தான் விநாயக். 
 
 
இதில் பயந்து போய் மானஸா அவனை பார்க்க.. கோபமாக அவளை முறைத்துப் பார்த்தவன், வேறு எதுவும் பேசாமல் வேகமாக அங்கிருந்து செல்ல முயல.. இதை கொஞ்சமும் எதிர்பாராமல் திகைத்து நின்ற மானஸா அழுகையோடு அவனை பின்தொடர்ந்தாள்.
 
 
வீதி முனைவரை சென்றவன், அவள் தன் பின்னே வருவதில் உண்டான எரிச்சலோடு நின்று திரும்பிப் பார்த்து “கொஞ்ச நேரத்துக்கு முன்னே அவங்க வாங்கினதை பார்த்தே இல்லை, இன்னொரு அடி எடுத்து என் பின்னே வெச்சே.. உனக்கும் அதே மாதிரி விழும்..” என்று விரல் நீட்டி எச்சரித்து விட்டு செல்ல.. மானஸாவுக்கு பயத்தில் உடல் நடுங்கியது. 
 
 
ஆனால் இது அவளுக்கு கொஞ்சமும் பழக்கம் இல்லாத இடம். இங்கு அவனைத் தவிர அவளுக்கு வேறு யாரையும் தெரியாது. ஸ்ரீ வீடு இப்போது எந்த பக்கம் என்று கேட்டால் கூட அவளுக்கு சொல்லத் தெரியாது. அப்படி இருக்க..இருளில் எவ்வளவு நேரம் தனியே நின்றிருக்க முடியும்..? இதற்கு விநாயக் அடித்தால் கூட பரவாயில்லை என்று எண்ணி அவன் பின்னே மானஸா செல்ல முயல.. அவன் பொறுமை பறந்தது. 
 
 
“ஏய் என்ன உங்க அப்பா சொல்லி இந்த ட்ராமா எல்லாம் நடக்குதா..? என்னை வெச்சு விளையாடறீங்களா..!” என அவன் கோபமாக கத்த.. “இல்.. இல்லையில்லை அண்ணா..” என்றவள் அவனின் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தி “இல்லை..” என்று வேகமாக தலையசைக்க.. “பொதுவாவே எனக்கு பொறுமை கொஞ்சமும் இல்லை.. அதை சோதிக்காதே..!” என்று விட்டு அவன் மீண்டும் செல்ல.. அழுகையோடும் தயக்கத்தோடும் பல அடிகள் இடைவெளி விட்டே அவனை மீண்டும் பின்தொடர்ந்தாள் மானஸா.
 
 
இதில் ஆத்திரத்தில் திரும்பி விநாயக் அவளை அடிப்பது போல் கையை ஓங்கிக் கொண்டு வர, மானஸா பயத்தில் அப்படியே மடிந்து அங்கு அமர்ந்துவிட்டாள். அதே நேரம் தர்ஷனிடம் இருந்து விநாயக்கிற்கு அழைப்பு வந்தது. 
 
 
அதை எடுக்காமல் அவன் தவிர்க்க.. மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டே இருந்ததில் எரிச்சலானவன் எடுத்து “என்னடா..?’ என்று பல்லை கடிக்கவும் “ஏன் மச்சி பக்கத்தில் இருக்க சூப்பர் மார்க்கெட் தானே போறேன்னு சொன்னே..! ஃபேக்டரிக்கே போயிட்டியோ..?” என்றான் இவன் மனநிலை புரியாமல் அவன் கேலியாக.
 
 
“மரியாதையா சொல்றேன் போனை வைச்சுடு..” என அவன் இருக்கும் ஆத்திரத்தில் வார்த்தைகளை அழுத்தத்தைக் கூட்டி சொல்லவும், மறுவார்த்தை பேசாமல் அழைப்பை துண்டித்திருந்த தர்ஷனுக்கு எதுவோ சரியில்லை என்று மட்டும் புரிந்தது.
 
 
ஆனால் விநாயக் தன் வேலையில் கவனமாக இருக்கும் போது யாராவது தொந்தரவு செய்தால் இப்படித்தான் பேசுவான் என்பதால் பெரிதாக வேறு எதையும் யோசிக்காமல் அவன் தன் நண்பர்களிடம் சென்று “இங்கே இருக்கறதை வைச்சு செஞ்சுடுவோம், அவன் இப்போதைக்கு வரமாட்டான்..” என்றிருந்தான்.
 
 
இங்கு தன் கோபத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை காணும் போதே அவனுக்கு மனம் ஏதோ செய்தது. சற்று முன் நடந்ததில் இருந்து இப்போது வரை மீண்டிடாதவளை தன் கோபம் வேறு பயம் கொள்ள செய்திருப்பது புரிந்து, தன்னை முயன்று அமைதிப்படுத்திக் கொண்டவன் “இங்கே பார், யார் என்ன சொன்னாலும் அப்படியே நம்பாம, கொஞ்சமாவது யோசி.. இத்தனை வருஷமும் இல்லாத சொந்தம் இப்போ எப்படி வரும்..? புரியுதா உனக்கு..!” என பல்லை கடித்துக்கொண்டு கேட்கவும், பதிலின்றி அவனைப் பார்த்து அழுகையில் தேம்பிக் கொண்டு இருந்தாள் மானஸா.
 
 
யார் மேலோ உள்ள கோபத்தில் இந்த சின்ன பெண்ணை வருத்துவது புரிய, நெற்றியை தேய்த்து விட்டுக் கொண்டவன், அவள் அருகில் மண்டியிட்டு அமர.. அவளோ அழுதால் கூட திட்டுவானோ என்று பயந்து தன் இரு கரங்களைக் கொண்டு வாயை இறுக்கமாக பொத்திக் கொண்டாள். 
 
 
தன்னைக் கண்டு அவள் பயப்படுவது மேலும் அவனுக்கு வருத்தத்தை கொடுக்க.. சற்று முன் தன்னிடம் அத்தனை உரிமையாக அவள் நின்றிருந்த நிலை நினைவுக்கு வரவும், “லுக்..” என்று தொடங்கியவன் பின் “உன் பெயர் என்ன..?” என்றான். 
 
 
“மா.. மான்..” என்றவள் அழுகையுடன் பேசியதில் ‘ஸா’ வெளியில் வராமலே போனது. அதில் உண்டான புன்னகையோடு “மான்..! புள்ளி மானா நீ..?” என்று தன்னை மீறி அவன் கேட்டு விட்டிருக்க.. ‘ஹாங்..’ என்று மருண்டு விழித்தாள் மானஸா.
 
 
அதில் தன்னையே ஆச்சரியமாக நினைத்தவன், ‘எப்படி இவ்வளவு கோபத்திலும் இவளிடம் தன்னால் புன்னகையோடு பேச முடிகிறது..?’ என்று மனதிற்குள் யோசித்தவாறே “மானு இங்கே பாரு..” என்றவன், நீண்ட ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு “நேரமாகுது வீட்டுக்கு போ..” என்றான். 
 
 
“என.. க்கு.. எனக்கு.. வழி தெரியாது..” என அவள் சொல்லவும், “இங்கே எப்படி வந்தே..?” என்றான் விநாயக். “கா.. காரில்.. ஆ.. ஆனா.. டிரைவர் பத்து மணிக்கு தான் வருவாரு..” என அவள் திக்கி திணறி மெதுவாக பேசி முடிக்கவும், மணியை பார்த்தான் விநாயக். 
 
 
அது இப்போதே ஒன்பதை நெருங்கிக் கொண்டிருக்க.. மேலும் ஒரு மணி நேரம் அவள் காத்திருக்க வேண்டி வரும் என்று புரிந்து, “அப்போ கால் செஞ்சு சீக்கிரம் வர சொல்லு..” என்றான் விநாயக். 
 
 
“என் ஃபோன் அங்கே..” என அவள் திணறவும் கையில் பை எதுவும் இல்லாமல் அவள் இருப்பது அப்போதே புரிய.. “அந்த வீடு எங்கே இருக்கு..?” என்றான் விநாயக். ‘தெரியவில்லை’ என்பது போல் அவள் தலையசைக்க.. அவன் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறந்து கொண்டிருந்தது. 
 
 
ஆனாலும் சற்று சத்தமாக பேசினால் கூட அவள் மிரண்டு விடுகிறாள் எனப் புரிந்து வெகுவாக இழுத்து பிடித்த பொறுமையோடு தன் அலைபேசி எடுத்து அவளிடம் நீட்டினான் விநாயக்.
 
 
அதையும் அவள் வாங்காமல் அவனை பரிதாபமாக பார்க்க.. “இப்போ என்ன..?” என்றான் விநாயக். “எனக்கு.. எனக்கு யார் நம்பரும் தெரியாது..” என அவள் அழுகை எட்டிப் பார்க்கும் குரலில் சொல்லவும், விநாயக்கிற்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது.
 
 
 
இதில் நெற்றியை நீவி விட்டுக் கொண்டவன், தன் அலைபேசியில் இருந்து சட்டென நந்தினிக்கு அழைத்திருந்தான். ஆனால் அன்று பார்த்து அவள் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக அவனுக்கு தகவல் வரவும் யோசனையாக விழிகளை சுருக்கியவன், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் பின் வேறு யாருக்கும் அழைக்க பிடிக்காமல் அவளை யோசனையாக பார்க்க.. மானஸாவும் செய்வதறியாது அவனை பார்த்தாள்.
 
 
இரண்டு நிமிடம் தீவிரமாக யோசித்தவன் பின் “நான் உன்னை வீட்டில் விடட்டுமா..?” எனவும் வேகமாக சரியென அசைந்தது அவள் தலை. இதற்காகத்தான் அவன் பின்னே வந்திருக்கிறாள் எனப் புரிந்து “சரி எழுந்திரு..” என்றான் விநாயக்.
 
 
அவளும் சொன்னதை செய்யும் கிளிப்பிள்ளை போல் எழுந்து நிற்க.. அவளின் அந்த செயலில் லேசாக மென்னகை உண்டாக சிறு இடைவெளி விட்டு அவளோடு நடந்தவன், தர்ஷனுக்கு அழைத்தான். “சொல்லு மச்சி..” என்று அவன் கேட்கவும் “என் பைக் சாவி எடுத்துட்டு வெளியே வா..” என்று சொல்லி அடுத்து தர்ஷன் எதுவும் கேட்க கூட வாய்ப்பு கொடுக்காமல் அலைபேசியை அணைத்து இருந்தான் விநாயக்.
 
 
அதில் தன் காதில் இருந்த அலைபேசியை எடுத்து கேள்வியாக பார்த்த தர்ஷன் “என்னை என்னன்னு தான்டா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்..? “ என்று புலம்பியவாறு அவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து நிற்க.. அடுத்த மூன்று நிமிடங்களில் மானஸாவோடு அங்கு வந்தான் விநாயக். 
 
 
சிறு பெண்ணாய் அழகு பொம்மை போல் அவன் பின்னே நடந்து வருபவளையே யோசனையாக தர்ஷன் பார்க்க.. “அங்கே என்ன சிலை மாதிரி நிற்கறே..? சாவிய கொடு..” என்றான் விநாயக்.
 
 
‘யார்..? என்ன..?’ என்று கேட்கத் தோன்றினாலும் அவன் வேலை சம்பந்தமான ஏதோ ஒன்றாக இருந்தால் பதில் வராது என்று புரிந்து தர்ஷன் அமைதியாகவே சாவியை கொடுக்க.. மானஸாவை வண்டியில் ஏற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான் விநாயக்.
 
 
அடுத்த சில நிமிடங்களில் ரகோத்தமன் வீட்டிற்கு இரண்டு வீடு முன்னதாகவே விநாயக் தன் வாகனத்தை நிறுத்தி இருக்க.. மெல்ல இறங்கி அவன் முகம் பார்த்து “தேங்க்ஸ் அண்..” என்று தொடங்கியவள், அவன் பார்வையில் அப்படியே பேச்சை நிறுத்தினாள்.
 
 
‘கிளம்பு’ என்பது போல் அவன் தலையசைக்க.. ‘சரி’ என்ற தலையசைப்போடு அவளும் அங்கிருந்து நகர முயல, “ஒரு நிமிஷம்..” என்றவன் “முடிஞ்ச வரைக்கும் தனியா எங்கேயும் போகாதே.. வீட்டில் யாராவது இருந்தா துணைக்கு கூட்டிட்டு போ.. இல்லை கொஞ்சம் வளர்ந்த பிறகு தனியா போ..” என அவன் இறுக்கமான குரலிலேயே கூறினாலும் அதில் அவள் மேலான அக்கறை லேசாக ஒட்டிக்கொண்டு இருந்தது.
 
 
அதற்கும் மானஸா சரி என்று தலையை மட்டும் அசைக்க.. மீண்டும் ‘போ’ என்பது போல் அவன் விழியசைத்தான். அதில் மெல்ல அடிமேல் அடிவைத்து தன் வீட்டை நெருங்கியவள், கேட்டில் கை வைக்கச் சென்று பின் ஷாக் அடித்தது போல் வேகமாக அதை இழுத்துக்கொண்டு அப்படியே மதில் சுவர் பக்கம் ஒதுங்கி மறைவாக நின்றாள். 
 
 
தன் வண்டியை ஸ்டார்ட் செய்து விட்டு அவள் உள்ளே சென்ற பின் கிளம்ப நினைத்து காத்திருந்த விநாயக் மானஸாவின் செயல்கள் புரியாமல் விழிகளை சுருக்கி பார்க்க.. அவளோ உள்ளே லேசாக எட்டிப் பார்ப்பதும் பின் தன்னை மறைத்துக் கொள்வதுமாகவே நிற்க.. என்னவென்று புரியாமல் அவள் அருகில் சென்று அவன் வண்டியை நிறுத்தினான்.
 
 
அவனைக் கண்டு மேலும் மருண்டவள், ‘வேகமாக இங்கிருந்து போங்க..!’ என்பது போல் கையை அசைக்க.. எதற்கு என்று புரியாமல் விநாயக் விழிகளை சுருக்கும் போதே உள்ளிருந்து வேதவல்லியின் பெரும் குரல் கேட்டது. 
 
 
மானஸாவின் பயம் ஏன் என்று இப்போது புரிய.. “வா வண்டியில் ஏறு..” என்றான் சட்டென விநாயக். அவன் அப்படி சொல்வான் என்று எதிர்பாராத மானஸா திகைத்து விநாயக் முகத்தை பார்க்கவும் ‘வா’ என்பது போல் அவன் மீண்டும் விழியசைக்க.. யோசிக்காமல் சென்று அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் மானஸா. 
 
 
சற்று தள்ளி இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லர் அழைத்துச் சென்றவன், அங்கு அவளை அமர வைத்து ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து மெல்ல விசாரிக்க.. எந்த தயக்கமும் ஒளிவு மறைவுமின்றி அனைத்தையும் அழுகையோடு பகிர்ந்து கொண்டிருந்தாள் மானஸா.
 
 
இதையெல்லாம் கேட்டவனுள் அத்தனை ஆத்திரம் கனன்றது. ‘எத்தனை கொடூரமான பிறவி.?’ என்று வேதவல்லியை பற்றி அருவருப்பாக நினைத்தவன், ‘இந்த சின்ன பெண்ணை மனதளவில் எவ்வளவு நோகடித்து இருக்கிறார்..?’ என்று கோபத்தோடு எண்ணியவாறே அவளை சமாதானம் செய்தான். 
 
 
இந்த வார்த்தைகள் எல்லாம் அவளின் இத்தனை வருட வலியை ஒன்றுமில்லாமல் செய்து விடாது என்று புரிந்தாலும், தன்னைப் போலவே வேதவல்லியால் பாதிக்கப்பட்ட இன்னொரு ஜீவன் என்ற எண்ணமே மானஸாவை தனக்கு நெருக்கமானவளாக அவனை நினைக்க செய்திருந்தது.
 
 
 
 
 
 
 

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
MNKN - 17 & 18
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1784311419-IMG-20260717-WA0000.jpg
 
 
மௌனம் - 19
 
அன்று கல்லூரியில் ஒரு எக்ஸ்போ நடந்து கொண்டிருந்தது. எல்லாம் முடிய மாலை வெகு நேரமாகிவிடும். அதுவரை கல்லூரியில் இருக்க விரும்பாத மானஸா பதினொரு மணி அளவில் தன் தோழிகளோடு வீட்டிற்கு கிளம்பி விட்டிருந்தாள். 
 
 
ஆனால் கல்லூரி பேருந்து இப்படி இடையில் கிளம்பாது என்பதால் அவரவர் விருப்பத்திற்கு வெளியில் வந்து கேப் பிடித்து ஒவ்வொருவராக கிளம்பி விட்டிருக்க.. மானஸாவும் அவள் தோழி ரஞ்சனியும் ஷாப்பிங் சென்றிருந்தனர்.
 
 
ரஞ்சனியின் அக்காவுக்கு அடுத்த வாரம் திருமண நாள். அதற்குப் பரிசு கொடுக்க நினைத்த ரஞ்சனி இவளோடு சென்று தேவையானதை வாங்கி விட்டு வெளியில் வர, இரண்டு மணி ஆகிவிட்டிருந்தது.
 
 
இருவரும் கொஞ்சம் சோர்ந்து போய் இருந்தார்கள், பசி வேறு எடுத்தது. அதில் அருகில் உள்ள உணவகத்துக்கு செல்ல எண்ணி இருவரும் நடந்து வந்து கொண்டிருக்க.. ரஞ்சனிக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. 
 
 
அவளின் தாய் மாமா ஊரில் இருந்து விசேஷ பத்திரிக்கை கொண்டு வந்து இருப்பதாக தெரியவர, அவரைப் பார்த்து சில மாதங்களாகி இருந்த ரஞ்சனி, அவர் மாலை 5 மணிக்குள் கிளம்பி விடுவார் என்று தெரிந்து “ஹே மானு தப்பா எடுத்துக்காதே.. நான் இப்போ வீட்டுக்கு கிளம்பட்டுமா..” என்று தயக்கத்தோடு கேட்கவும் “அட இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு, நீ கிளம்பு..” என அவளை அனுப்பி வைத்திருந்தாள் மானஸா. 
 
 
கேப் புக் செய்து அது வரும் வரை காத்திருக்க விரும்பாத ரஞ்சனி, அந்த பக்கம் வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறி கிளம்பி விட்டிருந்தாள். அதன் பின் மானஸா கேப் புக் செய்ய நினைத்து அருகில் இருந்த மரத்தடியில் சென்று நின்று தன் அலைபேசியிலேயே கவனமாக இருக்க “ஹே மானுக்குட்டி..” என்ற குரல் அவள் சேவியை தீண்டியது. 
 
 
அதில் முகம் மலர நிமிர்ந்தவள், அங்கு காரின் கண்ணாடியை இறக்கி புன்னகைத்துக் கொண்டிருந்த விநாயக்கை பார்த்து மலர்ந்து சிரித்தவளின் விழிகள், அப்போதே பின் இருக்கையில் அமர்ந்திருந்த அபிராமியின் மேல் பதிய.. நொடியில் அந்த புன்னகை காணாமல் போனது.
 
 
“என்ன இங்கே நிற்கறே..?” என்று விநாயக் வெகு இயல்பாக கேட்க, “அது நான் இங்கே..” என்று அபிராமியை பார்த்ததில் உண்டான தடுமாற்றத்தோடு சரியாக பேச முடியாமல் திணறினாள் மானஸா.
 
 
அது பார்க்கிங் இடம் கிடையாது, வெகு நேரம் அந்த காரை நிறுத்தி இப்படி பேசவும் முடியாது என்பதால் அவளை கையசைத்து காருக்குள் வருமாறு அழைத்தான் விநாயக். அதில் தயக்கத்தோடு அபிராமியை பார்த்தபடி அவள் தயங்கி நிற்க.. “உள்ளே வாம்மா..” என அவரும் அழைத்திருந்தார். 
 
 
இதில் மறுக்க முடியாமல் ஏறி விநாயக் அருகில் அவள் அமர்ந்து கொள்ள.. “இன்னைக்கு காலேஜ் இல்லையா..? இங்கே தனியே நின்று என்ன செய்யறே..?” என விநாயக் கேட்க.. அவளும் அனைத்தையும் இரண்டே வரியில் சொல்லி முடித்திருந்தாள்.
 
 
“ஹ்ம்ம் அப்போ நீ இன்னும் சாப்பிடலை, அப்படித்தானே.!” என்றவன், அடுத்த இரண்டு நிமிட தூரத்தில் இருந்த ஒரு உணவகத்தின் முன் சென்று காரை நிறுத்தினான். அதைக் கண்டு அவள் “இல்லை, நான்..” என்று ஏதோ சொல்ல வர, “நாங்களும் இன்னும் சாப்பிடலை.. ஹோட்டலுக்கு தான் போயிட்டு இருந்தோம், இறங்கு..” என்று விட்டு விநாயக் முதலில் இறங்கி விட, லேசான தயக்கம் பதட்டம் எல்லாம் கலந்து அபிராமியை இயல்பாக எதிர்கொள்ள முடியா, மனநிலையோடே இறங்கினாள் மானஸா.
 
 
மூவரும் உள்ளே வர, அங்கிருந்த மேஜையில் அவர்களை அமர வைத்த விநாயக், மானஸா அருகில் அபிராமிக்கு எதிர்ப்புறம் அமர்ந்தான். சாதாரணமாகவே அத்தனை எளிதாக அவளிடம் இருந்து வார்த்தைகள் வெளிவந்து விடாது. இதில் அபிராமியை வேறு கண்டதில் உண்டான பதட்டமும் சேர்ந்து கொள்ள.. மானஸா வாயையே திறக்கவில்லை. 
 
 
சிறு புன்னகையோடு அவளை பார்த்தவன், ஏதோ பேச வருவதற்குள் அவன் அலைபேசி இடையிட்டு இருந்தது. அதை எடுத்தவன் யோசனையாக திரும்பி மானஸாவை பார்த்துவிட்டு அங்கிருந்து எழுந்து கொண்டான். 
 
 
“ம்மா ஒரு அர்ஜென்ட் கால், நான் பேசியே ஆகணும்.. நீங்க ஃபுட் ஆர்டர் கொடுத்துடுங்க..” என அபிராமியை பார்த்து கூறியவன், மானஸாவின் பக்கம் திரும்பி “உனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ தயங்க கூடாது, சரியா..” என அவள் தலையை செல்லமாக அசைத்து விட்டு அங்கிருந்து நகர, அவர்கள் இருவரையும் சிறு புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார் அபிராமி. 
 
 
விநாயக் இருந்தவரை கூட எப்படியோ சமாளித்து விட்டாள். இப்போது தனியே அபிராமியிடம் மாட்டிக்கொண்டது போல் அவள் திருதிருத்த விழிகளோடு தலையைக்கூட நிமிர்த்தாமல் அமர்ந்திருக்க.. அந்த நிலையைக் கண்டு உண்டான புன்னகையோடு “எப்படி இருக்கே மானஸா..” என்றார் அபிராமி.
 
 
அதில் சிறுத்திகைப்போடு விழிகளை உயர்த்தியவள், “ந.. நல்லா.. இ.. இருக்கேன்..” என்று தடுமாற, “ஹ்ம்ம் படிப்பெல்லாம் எப்படி போகுது..?” என்றார் அடுத்ததாக அபிராமி. அதற்கும் “ந.. நல்லா போகுது..” என அவள் மெல்லிய குரலில் தலையசைத்தபடியே பேசவும், “அம்மா, நிதின் எல்லாம் நல்லா இருக்காங்களா..?” என்றார்.
 
 
அதில் லேசாக விழி விரித்தாலும் அதற்குமே தலையசைத்து “ஹ்ம்ம்..” என்றாள் மானஸா. அவளின் அந்த பாவணையில் “என்னை பார்த்தா உனக்கு பயமா இருக்கா என்ன..?” என்றார் அபிராமி.
 
 
‘இல்லை’ என்று வேகமாக அவள் தலையசைக்க.. “அப்புறம் ஏன் இவ்வளவு பதட்டம்..?” என்று அபிராமி கேட்கவும், “இல்லை.. நான்..” என்றவளுக்கு அப்போதே தன்னை தெரிந்தது போல் அபிராமி பெயர் சொல்லி அழைத்துப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்கு புரிந்தது. 
 
 
இவ்வளவு நேரமும் அவளுள்ளிருந்த பயமே தன்னை யார் என தெரிந்தால் எப்படி நடத்துவாரோ என்பதாகத்தான் இருந்தது. முதன்முறை விநாயக் தன்னை யார் என தெரிந்து கொண்ட பின் நடந்த விதம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்து இருந்தது. 
 
 
அதில் அபிராமியும் கோபமாக ஏதாவது பேசி விடுவாரோ என்று நினைத்து அவள் இவ்வளவு நேரமும் பதட்டத்தோடு அமர்ந்திருக்க.. அவரோ அத்தனை இயல்பாக அவளை நடத்தினார்.
 
 
இதெல்லாம் மனதில் ஓட, யோசனையான முகத்தோடு அமர்ந்திருந்தவளை பார்த்திருந்த அபிராமி “அப்படி என்ன தான் அந்த குட்டி மண்டைக்குள்ளே ஓடுது..? சொல்லு நானும் தெரிஞ்சுக்கறேன்..” என்று மெல்லிய புன்னகையோடு கேட்க.. “இல்லை.. அது.. நான் யாருன்னு உங்களுக்கு தெரியுமா..?” என்று மானஸா ஓரளவு தெரிந்தே இருந்த கேள்விக்கு பதிலை தெரிந்துக் கொள்ள எண்ணி துண்டு துண்டாக கேட்டு விட்டிருந்தாள். 
 
 
“ஹாஹா, ஏன் தெரியாது..? நல்லா தெரியுமே, நீ மானுக்குட்டி..” என செல்லமான குரலில் கூறியவர், பின் “மிஸ் மானஸா ரகோத்தமன் சரியா..?” என்று அழுத்தம் திருத்தமான குரலில் கூறவும், அவளுள் அப்படி ஒரு அதிர்வு. ‘தன்னை இவருக்குத் தெரிந்தே இருக்கிறது, ஆனாலும் எந்த கோபமும் இல்லாமல் இத்தனை அன்பாக இயல்பாக பேசுகிறார்..!’ என்று உண்டான ஆச்சரியத்தோடு அவரை மானஸா பார்த்திருக்க.. “என்னடா..?” என்றார் அபிராமி.
 
 
“ம்ஹூம்..” என்று வேகமாக தலையசைத்தாலும் அபிராமி அதை நம்பாமல் பார்த்தார். அதில் அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை. “நான் யாருன்னு தெரிஞ்சா கோபப்படுவீங்கன்னு நினைச்சேன்..” என்று மானஸா சொல்லியே விட, மலர்ந்து புன்னகைத்தவர் “நீ என்னடா செஞ்சே..? நான் உன்னை பார்த்து கோபப்பட..” என்றார். 
 
 
“அது.. இல்லை..” என்று தொடங்கியவள், ‘என்ன சொல்வது..?’ என்று தெரியாமல் தடுமாறி அப்படியே நிறுத்த.. “நடந்து முடிஞ்ச எதுக்கும் நீ காரணம் இல்லை.. அதோட அதெல்லாம் நடந்தப்போ நீ பிறக்கவே இல்லையே..!” என்று இன்னும் புன்னகையோடு சொல்ல.. ‘இவரால் எப்படி இத்தனை வலிகளையும் கடந்து இப்படி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க முடிகிறது..?’ என்ற ஆச்சரியம் அவள் மனமுழுக்க நிறைந்திருந்ததில் அது அந்த முகத்திலும் அப்பட்டமாக தெரிந்ததோ என்னவோ..!
 
 
ஒரு நொடி அதை புரிந்து கொண்டது போல் அமைதியான அபிராமி, பின் “அப்புறம்..” என்று மீண்டும் புன்னனகையோடு அபிராமி பேச்சை தொடர முயல.. ‘ஒண்ணுமில்லை’ என்று வேகமாக அசைந்தது மானஸாவின் தலை. 
 
 
ஆனாலும் அவள் குட்டி மண்டைக்குள், ‘இவருக்கு தன்னை எப்படி தெரியும்..?’ என்ற கேள்வி ஓடிக்கொண்டே தான் இருந்தது. அதில் தயக்கமாக அபிராமியை அவள் நிமிர்ந்து பார்க்க.. ‘என்ன..?’ என்பது போல் அவரும் அவளை தான் பார்த்திருந்தார். 
 
 
“ஆனா அண்ணாவுக்கு என்னை தெரியலை..” என்று அவள் சொல்லவும் “ஹ்ம்ம், அவன் ஹாஸ்டலிலேயே இருந்துட்டான் இல்லை.. நீயும் ஹாஸ்டலில் இருந்ததில் இரண்டு பேரும் அதிகம் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வாய்ப்பே கிடைக்கலை..” என்றார் அவளுக்கு புரிய வைக்கும் விதமாக அபிராமி. 
 
 
அதில் திகைத்த மானஸா “அண்ணா ஹாஸ்டலில் இருந்தாங்களா..!” எனவும் “ஹ்ம்ம்..” என்று அபிராமி தலையை மட்டும் அசைக்க.. “ஆனா ஏன்..? அண்ணாவை யாருக்கு பிடிக்காது..?” என்று அவசரமாக அவள் கேட்டிருந்த விதத்தில், அபிராமிக்கு தான் மானஸாவை எண்ணி பாவமாக இருந்தது.
 
 
அதில் “அப்படி எல்லாம் எதுவும் இல்லைடா, நான் அந்த டைம் படம் நடிச்சுட்டு இருந்தேன்.. தனியா அவன் அந்த வயசில் வீட்டில் இருக்கணும், அது அவனுக்கும் சேஃப் இல்லை.. அதே போல என்னால் நேரத்துக்கும் வீட்டுக்கு வர முடியாது.. ஷூட்டிங் சில நேரங்களில் வெளியூரில் வெளிநாட்டில் இருக்கலாம்.. இதையெல்லாம் யோசிச்சு தான் வினய் ஹாஸ்டலில் படிக்கட்டும்னு சேர்த்தேன்.. ஆனா நான் நடிக்கறதை நிறுத்தின பிறகு அவனை வீட்டுக்கு கூப்பிட்டும், இல்லை நான் இங்கேயே என் பிரண்ட்ஸோட படிக்கறேன்னு சொல்லிட்டான்.. அதனால் அவன் ஹாஸ்டல்னில் தான் அதிகம் இருந்தான்..” என்றார் அவளுக்கு புரியும் வகையான மெல்லிய குரலில் நிறுத்தி நிதானமாக அபிராமி.
 
 
அதற்குள் அங்கு ஆர்டர் எடுக்க பேரர் வந்து நின்றார். மெனு புக்கை மானஸாவின் பக்கம் நகர்த்தி வைத்தவர் “உனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியலை, நீயே இன்னைக்கு ஆர்டர் செய்..” என்றார். “ஹாங் அதெல்லாம் வேண்டாம், நீங்களே ஆர்டர் செய்ங்க பெ.. இல்.. ஆண்ட்..” என்று தொடங்கி எப்படி அவரை அழைப்பது என புரியா தடுமாற்றத்தோடு அனைத்தையும் பாதியில் நிறுத்தி விட்டாள் மானஸா.
 
 
ஏனெனில் இவ்வளவு நேரம் பேசியதில் இருந்து அவர் என்ன நினைக்கிறார் என அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. எல்லாம் பேசியவர் ஒருமுறை கூட ரகோத்தமன் பற்றி பேசவோ கேட்கவோ இல்லை என அவளுக்கு புரிந்தது. அவளின் தயக்கம் புரிந்தது போல் புன்னகைத்த அபிராமி அவளாக முன்வந்து எதையும் செய்யப் போவதில்லை என்று புரிந்து, “இது உனக்கு பிடிக்குமா..? சாப்பிடுவியா..! சொல்லட்டுமா..?” என தானே ஒவ்வொன்றாக கேட்டு ஆர்டர் செய்திருந்தார். 
 
 
பேரர் அந்தப் பக்கம் செல்லவும் “நான் யாருன்னு தெரியுமா..?” என்று அபிராமி கேட்க “ஹ்ம்ம்..” என்றாள் தலையை மட்டும் அசைத்து மானஸா. “அப்படியா என்ன தெரியும்..? எங்கே சொல்லு பார்க்கலாம்..!” என்று அவர் வேண்டுமென்றே அவளை பேச வைக்க முயல.. “நீங்க அண்ணாவோட அம்மா..” என்றாள் மானஸா.
 
 
“என்ன..?” என்று அவள் சொன்ன விதத்தைக் கேட்டு சட்டென அபிராமி சிரித்து விட ‘என்ன தப்பாக இப்போது சொல்லி விட்டோம்..!’ என்பது போல் அவரை திருதிருப்போடு பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா. அவள் சொல்லிய விதம் அதற்கு காண்பித்த பாவனை எல்லாம் அபிராமியை தன்னை மீறி புன்னகைக்க செய்திருக்க.. இப்போது வரை சிரிப்பை அடக்க முடியாமல் அவர் தன் கரம் கொண்டு இதழை மறைத்தபடி சிரித்துக் கொண்டிருக்க.. அங்கு வந்து சேர்ந்தான் விநாயக்.
 
 
அபிராமியை இப்படி பார்த்ததில் உண்டான கனிவோடு அவருக்கு எதிரில் அமர்ந்தவன் “அப்படி என்னம்மா சிரிப்பு..?” எனவும் “நீ.. நீயே.. நா.. நான்.. யா?? யாருன்னு கே.. கேளேன்..!” என அப்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாத குரலில் அவர் சொல்லிக் கொண்டிருக்க.. இருவரையும் புரியாமல் பார்த்தவன் “என்ன சொன்னனே அம்மாவை..? இப்படி அவங்க சிரிச்சு நிறைய நாள் ஆகுது..” என்றான் விநாயக்.
 
 
“நீ கேளேன்..” என்று அபிராமி மீண்டும் கூறவும், நன்றாக மானஸாவின் பக்கம் திரும்பி அமர்ந்தவன் “இவங்க யாரு மானுக்குட்டி..?” என்றான் விநாயக். அப்போது சாதாரணமாக சொல்லிவிட்டவளுக்கு இப்போது அபிராமி இப்படி சிரித்துக் கொண்டே மீண்டும் சொல்ல சொல்வதில் ஏதோ ஒரு தயக்கம் உண்டாக விநாயக்கை பாவமாக பார்த்தாள் மானஸா.
“என்னமா..?” என்று அவளின் பார்வையைக் கண்டு அதற்கு மேல் மானஸாவை வற்புறுத்த விரும்பாமல் அபிராமியின் பக்கம் திரும்பினான் விநாயக். “நான்..” என்றவர் மீண்டும் அடுத்து பேச முடியாமல் சிரிக்கவும் “அட அப்படி என்னதான்டா சொன்னே..?” என்றான் மானஸாவை பார்த்து விநாயக். 
 
 
அதில் பெரும் தயக்கத்தோடு “அண்ணா.. அண்ணாவோட அம்மா..” என அவள் சொல்லி முடிக்க.. “என்னது..?” என்று ஆச்சரியமாக அவளை பார்த்தவனுக்கும் சிரிப்பு பொங்கியது.
 
 
இதில் இருவரும் இப்படி சிரிக்கவும் பார்வையை தழைத்துக் கொண்டு முகம் சுருங்க மானஸா அமர்ந்து விட, “அம்மாவை இப்படித்தான் கூப்பிடுவியா நீ..?” என்றான் புன்னகை முகமாகவே அவளை பார்த்து விநாயக்.
 
 
“இல்லை, அது..” என மானஸா இழுக்க.. “சரி வேற எப்படி கூப்பிடுவே சொல்லு..” என்றான் விநாயக். அதில் உடனே பதில் சொல்ல முடியாமல் தயங்கியவள் மெல்லிய குரலில் “ஆண்ட்டி..” எனவும் “என்ன..?” என்று அவன் ஆச்சரியமாக பார்க்க “அ.. அப்படி சொல்லக் கூடாதா, சரி அப்போ எப்படி..?” என்றவளின் பார்வை அபிராமியை தொட்டு மீண்டது. 
 
 
அதற்கு விநாயக் அமைதியாகவே இருக்க.. “பெ.. பெரிய.. ம்மான்னு கூ.. கூப்பிட.. வா..” என கேட்டு ‘அபிராமிக்கு அப்படி அழைத்தால் பிடிக்குமோ..? பிடிக்காதோ..!’ என்று தொக்கி நின்ற கேள்வியோடு மானஸா வேறு எதுவும் பேசாமல் அப்படியே நிறுத்தி விட, “அம்மான்னு கூப்பிடு..” என்றிருந்தார் அபிராமி. 
 
 
இதை துளியும் எதிர்பார்க்காத மானஸா பெரும் திகைப்போடு திரும்பி அவரை பார்க்க.. “வினய் உனக்கு அண்ணானா.. நான் அம்மா தானே..! இதில் ஒன்றுவிட்ட அம்மா இரண்டு விட்டா அம்மா எல்லாம் கிடையாது புரியுதா..” என அவர் அதே புன்னகை மாறா முகத்தோடு சொல்லவும், மானஸாவுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது. 
 
 
இப்படி ஒரு வார்த்தையை சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவு நல்ல மனது இருக்க வேண்டும்..? இப்படிப்பட்டவரின் வாழ்க்கையை வேதவல்லி தெரிந்தே அழித்து இருப்பது அவளுக்கு வலியை கொடுத்தது. இப்படியே மெல்ல பேசிக்கொண்டு அவர்கள் சாப்பிட்டு முடிக்க.. மீண்டும் விநாயக்கிற்கு அழைப்பு வந்தது.
 
 
அதை எடுத்துக்கொண்டு அவன் வெளியே சென்று விட, இங்கே தானும் பேசி மெல்ல மானஸாவையும் பேச வைத்துக் கொண்டிருந்தார் அபிராமி. அவளும் விநாயக்கிடம் இருப்பது போலவே எல்லா தயக்கங்களையும் உதறி அபிராமியிடம் மெல்ல ஒன்ற தொடங்கினாள்.
மானஸாவின் கைகளை அன்போடு பிடித்துக் கொண்ட அபிராமி “எல்லாத்துக்கும் தயங்கி யோசிச்சு பேசாம இருக்கக் கூடாதுடா.. நமக்குத் தேவையான இடத்தில் நாம தான் பேசணும், யார் என்ன நினைச்சுக்குவாங்களோன்னு பார்த்துட்டு யோசிச்சுட்டே இருந்தா, நம்ம வாழ்க்கை நம்ம கையில் இருக்காது புரியுதா..!” என அவளின் குணம் புரிந்து அதை மாற்றும் விதமாக மெல்லிய குரலில் அவளுக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. 
 
 
அதே நேரம் அங்கு வந்த விநாயக் “எனக்கு தெரியாம என்ன ரகசியம் நடக்குது இங்கே..?” என்றான். “அது எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும், அதை எதுக்கு உன்கிட்ட சொல்லணும்..?” என அபிராமி கேட்க.. “ஏன் சொல்லக்கூடாது..? உங்களுக்குள்ளே ஆயிரம் இருந்தா அதில் ஒரு நூறோ, இருநூறோ எனக்கு சொல்லலாமே..!” என்றான் விநாயக்.
 
 
அதற்கு அபிராமி ஏதோ பதில் சொல்ல.. விநாயக் வம்பிழுத்து பேச என்று அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பை பார்க்க பார்க்க, மானஸாவுக்கு திகட்டவில்லை. 
 
 
தன் பிறந்த நாளை அவர் கொண்டாட நினைப்பது பிடிக்காமல் மட்டுமே அபிராமியிடம் தன் கோபத்தை காண்பிப்பான் விநாயக். மற்றபடி இருவரும் நண்பர்கள் போலத்தான் பேசிக்கொள்வார்கள்..
 
 
தன் வருத்தம் அழுகை எல்லாமே அவன் இல்லாத நேரத்தில் தனிமையில் மட்டுமே அபிராமி வெளிப்படுத்துவார். மகன் முன்பு எதையும் காண்பித்துக் கொள்ள மாட்டார். அதில் அவர்களுக்குள் இருக்கும் பிணைப்பை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா. 
 
 
ஏனெனில் இதுவரை புஷ்பா நிதினிடமோ இவளிடமோ இப்படி எல்லாம் பேசியதே இல்லை. அதேபோல் தான் சித்ராவும் நந்தினியிடம் இப்படி எல்லாம் பேசி அவள் பார்த்தது இல்லை. இருவருமே அவரவர் பிள்ளைகளிடம் அன்பாக அக்கறையாக இருப்பார்கள்.. தேவையானதை எல்லாம் செய்து கொடுப்பார்கள்.. 
 
 
அதை தவிர வேறு எதுவும் இருக்காது, இன்னும் சொல்லப்போனால் வேதவல்லியின் முன் இதெல்லாம் வேலைக்கும் ஆகாது.. அதில் உண்டான அதிசயம், ஆச்சர்யம் என்று எல்லாம் கலந்த உணர்வோடு அவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மானஸா.
 
 
*****
 
 
சிறையில் இருந்த நிர்மலா மற்றும் சுரேஷிற்கு விநாயக்கின் புண்ணியத்தில் சிறப்பான கவனிப்புகள் நடந்து கொண்டிருந்தது. சுரேஷை அவனே தன் கைகளால் கவனிக்க.. நிர்மலாவை கவனிக்கும் பொறுப்பு அவன் நம்பிக்கைக்குரிய ஒரு பெண் போலீசிடம் கொடுக்கப்பட்டிருந்தது.  
 
 
அன்று ஏதோ தவறு நடந்திருப்பதாகவும் அதற்காக பெண் மருத்துவரும் அங்கு வேலை செய்த வாட்பாய் ஒருவனும் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டாலும் அதற்கான காரணம் என்று தெளிவாக யாரும் எதையும் வெளியிடவில்லை.
 
 
அந்த காணொளி வழக்கில் கைது செய்யப்பட்டால் வெகு சீக்கிரம் இருவரும் ஜாமின் வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடுவார்கள். அதோடு அவர்களுக்கான தண்டனையும் மிகக் குறைவாக கிடைக்கும் என்று அப்போதைக்கு எதையும் சொல்லாமல் மறைத்தவன், இப்போது அவர்கள் அவ்வளவு எளிதில் வெளியில் வர முடியாத அளவிற்கு போதைப் பொருள் கடத்தல், அதை மருத்துவமனையில் வைத்து விற்பனை மற்றும் அங்கு வரும் பெண்களுக்கு தவறான மருத்துவம், ஆர்கன் திருட்டில் சம்பந்தம் என்று அவர்களின் மீதான புகார்களின் பட்டியலை நீடித்துக் கொண்டே சென்றான். 
 
 
இதையெல்லாம் அவனின் கட்டளையின் பேரில் செய்து கொண்டிருந்தவர்கள் அனைத்தையும் விநாயக்கின் கவனத்திற்கு கொண்டு வந்து கொண்டே இருக்க.. அதைப் பற்றி பேசியவாறே கமிஷனர் ஆபீஸில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்தான் விநாயக்.
 
 
ஒரு இடத்தில் நின்று பேசி முடித்து நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன், தன் கையில் இருந்த அலைபேசியை யோசனையோடு பார்த்திருக்க.. அவன் தோளில் ஒரு கரம் அழுத்தமாக பதிந்தது. 
 
 
அதில் பார்வையை திருப்பியவன் அங்கு சஞ்சய் தத்தாத்ரேயன் நிற்பதை கண்டு ஆச்சரியமானான் விநாயக். ‘ஒருவேளை சற்று முன் பேசியதை எல்லாம் கேட்டிருப்பாரோ..!’ என்று திகைத்துப் பார்க்க.. “என்ன லுக் இது..?” என்றான் சஞ்சய். 
 
 
அதில் வேகமாக தன் யோசனை கலைந்து “ஹலோ சீனியர் நீங்க என்ன இங்கே..?” என்று சந்தோஷமாக விநாயக் கேட்கவும் “நானும் போலீஸ் தான் மேன், ஞாபகம் இருக்கா..!” என்றான் தனக்கே உரிய புன்னகையோடு சஞ்சய்.
 
 
அதில் தன் கேள்வியை எண்ணி தானே தலையில் தட்டிக் கொண்டவன் “சாரி நான் அப்படி கேட்கலை சீனியர், நீங்க இங்கே இல்லையே..! ஆந்திராவில் இருக்கிறதா கேள்விப்பட்டேன்.. திடீர்னு உங்களை இங்கே பார்க்கவும்..” என்று அவன் இழுக்க.. “ஹம்ம், ஒரு வேலையா வந்தேன்..” என்றான் சஞ்சய். 
 
 
அப்படியே இருவரும் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டிருக்க.. “அப்புறம் என்ன ஏதோ யோசனையில் இருக்கே..?” என்றான் சஞ்சய். ‘ஒண்ணுமில்லை’ என தலையசைத்தவன், பின் சற்று தயங்கி அவன் முகம் பார்த்தான். 
 
 
அந்த பாவணையில் சிரித்து விட்ட சஞ்சய் “இப்போ என்ன, நீ பேசினதை நான் கேட்டேனா இல்லையான்னு உனக்கு தெரியணும் அவ்வளவு தானே..!” என்று கேட்டு சிறு இடைவெளி விட்டு “கேட்டேன், எல்லாமே கேட்டேன்.. நான் உன் பின்னே தான் வந்துட்டு இருந்தேன்..” என ஒளிவு மறைவு இல்லாமல் கூறினான் சஞ்சய். 
 
 
அதில் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் விநாயக் பார்த்திருக்க.. “உன்னை தப்பா நினைச்சுடுவேன்னு தோணுதா..?” என்று சஞ்சய் கேட்க “நினைக்க வாய்ப்பு இருக்கு தானே..!” என்றான் விநாயக்.
 
 
“இல்லவே இல்லை.. சில நேரங்களில் நாம இப்படி எல்லாம் செஞ்சு தான் குற்றவாளிக்கு சரியான தண்டனையை வாங்கி கொடுக்க முடியும், இல்லைனா சட்டத்தில் இருக்க எல்லா ஓட்டையையும் பயன்படுத்தி எப்படியாவது அவங்க ஈஸியா வெளியே வந்துடுவாங்க.. 
 
 
உயிரைக் கொடுத்து உழைச்சு, சாப்பாடு தூக்கம் இல்லாம அவங்களை கண்டுபிடிச்சு கொண்டு வந்து நாம நிறுத்தினா.. அவங்களை தேடி கண்டுபிடிக்க நாம நேரம் எடுத்துக்கிட்ட அளவு கூட அவங்க உள்ளே இருக்க மாட்டாங்க.. அப்புறம் என்ன இதுக்கு நாம போலீஸா இருக்கோம்னு நமக்கே தோணும்.. 
 
 
நம்மால் நம் பதவியால் அப்பாவி ஒருத்தன் பாதிக்கப்படக்கூடாது, ஆனா அதுவே தப்பு செஞ்சவன் தப்பிக்கிறான்னு தெரிஞ்சா நம்ம பதவியை வெச்சு அவனை தப்பிக்க விடாம செய்யறதோ.. இல்லை நம்ம ஸ்டைலில் தண்டனை கொடுக்கறதோ தப்பே இல்லைன்னு தான் நான் சொல்லுவேன்.. சோ கேரி ஆன்..” என விநாயக் தோளை சஞ்சய் லேசாக தட்டிக் கொடுக்க.. “இந்த விஷயத்தில் நீங்க தான் எனக்கு ரோல் மாடல்..” என்றான் விநாயக்.
 
 
அதற்கு அமர்த்தலாக ஒரு புன்னகையை பதிலாக கொடுத்த சஞ்சய், “ஓகே பார்ப்போம், பை..” என்று தன் வாகனத்தில் ஏற முயல “சீனியர்..” என்று தயக்கத்தோடு அழைத்தான் விநாயக். 
 
 
அதில் என்ன என்பது போல் சஞ்சய் திரும்பி பார்க்கவும் “ஒரு சந்தேகம்..’ என்று அவன் நிறுத்த “கேளு..” என திரும்பி நின்றான் சஞ்சய். “இது அபிஷியல் இல்லை, பர்சனல் கேட்கலாமா..?” என்று விநாயக் தயக்கத்தோடு இழுக்கவும் “பர்சனல்..?” என்ற ஒற்றை புருவத்தை உயர்த்தி கூறியவன் “அப்படி என்ன கேட்கப் போறே..? எங்கே கேளு பார்க்கலாம்..!” என்றான்.
 
 
“அது மேடம்.. அதாவது உங்க வொய்ப் இப்போதாவது சமைக்கறாங்களா..?” என விநாயக் சிறு புன்னகையோடு கேட்டு நிறுத்த.. அதற்கு உடனே பதில் சொல்லாமல் சஞ்சய் அவனை கேள்வியாக பார்த்தான். அந்த பார்வையின் அர்த்தம் புரிந்து “இது என் சந்தேகம் இல்லை, வாசகர் விருப்பம்..” என்றான் விநாயக்.
 
 
அதைக் கேட்டு தனக்கே உரிய புன்னகையோடு விநாயக்கை பார்த்த சஞ்சய் “அவங்களுக்கு வராது..” என்றான். இப்போது அந்த புன்னகையில் தானும் இணைந்து கொண்ட விநாயக் “இப்போவும் வராது தானா..! தெரியாதுன்னு சொல்ல மாட்டாங்களா..?” என கேட்க “அதுவும் அவங்களுக்கு வராது..” என்று சிரித்துக் கொண்டே கூறினான் சஞ்சய்.
 
 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
 
 
MNKN - 19
 
 
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1784658763-IMG-20260721-WA0001.jpg
 
 
மௌனம் - 20
 
சமையலறையில் நிலா வேகமாக வேலை செய்து கொண்டிருக்க.. அவளை பின்னிருந்து இறுக அணைத்திருந்தான் வர்மா. அதில் லேசாக திகைத்து “ஐயோ என்ன இது ஆர்யன் வந்துட போறான்..” என்று நிலா பதற.. “குட்டி பையன் இப்போதைக்கு வரமாட்டான், வினய்கிட்ட அவனை கொடுத்துட்டு வந்துருக்கேன்..” என்றான் அவள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தப்படியே வர்மா. 
 
 
“என்ன..?” என்று சிறு திகைப்போடு அவள் முகத்தை திருப்பி வர்மாவை பார்க்கவும் “ஹ்ம்ம், இனி எந்த சாக்கும் நீ என்கிட்ட சொல்லவே முடியாது..” என்று அவள் இடையை வளைத்திருந்த தன் கையில் இறுக்கத்தை கூட்டினான் வர்மா.
 
 
“அச்சோ அவர் என்ன நினைச்சுருப்பார்..?” என நிலா முகம் சிவக்க லேசான பதட்டத்தோடு கேட்கவும் “இதில் நினைக்க எல்லாம் ஒண்ணுமில்லை, கொஞ்ச நேரத்துக்கு எங்களை தொந்தரவு செய்யாம பார்த்துக்கோன்னு சொல்லிட்டே வந்துட்டேன்..” என அவன் சொல்லிய விதத்தில் அதிர்வோடு விழிகளை திருப்பி அவனை பார்த்தாள் நிலா.
 
 
“பத்து நாள் பிசினஸ் ட்ரிப் முடிஞ்சு வந்து இருக்கேனே, கொஞ்சமாவது என்னை ஸ்பெஷலா கவனிப்போம்னு உனக்கு தோணுதா..!” என அவன் குறைப்பட்டுக் கொண்டே அவள் கழுத்து வளையில் குட்டி குட்டி முத்தங்களை வர்மா வைத்துக் கொண்டிருக்க.. “அதுக்காக தான் வேகமா நான் சமைச்சுட்டு இருந்தேன்..” என்றாள் நிலா.
 
 
“அடியேய் எனக்கு என்ன வேணும்னு உனக்கு இன்னுமா புரியலை, நான் உன்னை எவ்வளவு தேடினேன்னு உனக்கு புரிய வைக்கணும் போலேயே..!” என்று வர்மா லேசாக சலிப்பான குரலில் நிலாவின் கன்னத்தோடு கன்னம் இழைந்தபடியே சொல்லவும், அவன் சொன்ன விதத்தில் உண்டான புன்னகையோடு “என்னை தேடினீங்களா..? நிஜமா..!” என்றாள் வேண்டுமென்றே அவனை சீண்டுவது போல் நிலா.
 
 
“ஓ அப்போ உனக்கு நான் உன்னை எவ்வளவு தேடினேன்னு தெரியாது அப்படித்தானே..! சரி இனி வார்த்தைகளில் இல்லை செயலிலேயே புரிய வைக்கறேன்..” என்றவன் அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
 
 
அதேநேரம் இங்கு தன் ஜிம்மிற்குள் விநாயக் உடற்பயிற்சியை முழு வேகத்தோடு செய்து கொண்டிருக்க.. “வினுப்பா, நானு.. இது வேணு..” என்று அழகாக தன் மழலை மொழியில் அங்கிருக்கும் உடற்பயிற்சி கருவிகளை காண்பித்து கேட்டுக் கொண்டிருந்தான் ஆர்யவர்மன்.
 
 
மஹேந்திரவர்மன் - தேன்நிலா தம்பதிகளின் (இப்போதைக்கு) ஒற்றை வாரிசு. “நீயும் செய்யணுமா குட்டி பையா..? சீக்கிரம் செய்யலாம், இந்த ஆர்யன் குட்டி இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டா வினுப்பா எல்லாம் சொல்லிக் கொடுக்கறேன்..” என்று கொஞ்சியவாறே தன் தினசரி பயிற்சிகளை முடித்து விட்டு வெளியில் வந்தான் விநாயக். 
 
 
அது அவன் வீட்டு மொட்டை மாடியில் தன் உடற்பயிற்சிகென விநாயக் வைத்திருக்கும் அறை. இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அனைத்து நவீன உடற்பயிற்சி சாதனங்களும் அங்கு அணிவகுத்து இருக்கும். அதை முடித்துக் கொண்டு வெளியில் வந்தவன், ஆர்யனை தூக்கி வைத்தபடியே அவனின் மழலை கேள்விக்கு எல்லாம் கொஞ்சலோடு பதிலளித்து கொண்டிருந்தான்.
 
 
சில நொடிகளில் ஆர்யன் அங்கிருந்த பூச்செடிகளை இறங்கிச் சென்று தொட்டு பார்த்துக் கொண்டிருக்க.. விநாயக் புஷ்ஷப் எடுக்க தொடங்கினான். அதை கண்டு குதுகலமான ஆர்யன் ஓடி வந்து விநாயக்கின் முதுகில் ஏறி அமர்ந்து கொள்ள.. அதில் உண்டான சிறு புன்னகையோடு தன் உடற்பயிற்சியை தொடர்ந்தான் விநாயக்.
 
 
அடுத்த சில நிமிடங்களில் ஆர்யன் “வினுப்பா.. ஒன் கை.. ஒன் கை..” என்று குதிக்க.. “ஹ்ம்ம் ஓகே ஓகே..” என்று குழந்தை ஆசைப்பட்டபடியே ஒரு கையால் விநாயக் புஷ்ஷப் எடுக்க தொடங்க.. ஆர்யனுக்கு அத்தனை சந்தோஷம், கைதட்டி குதூகலித்தபடியே அவன் முதுகில் ஒய்யாரமாக அமர்ந்திருந்தான்.
 
 
அவனை அவனை ரசித்து கிடந்த விழிகள்
வேறாரையும் பார்க்காதே
ஹே... அவனை அவனை பழகி தொலைத்த இதயம்
வேறாரையும் ஏற்காதே
 
 
என்று திடீரென ஒலித்த குரலில் விநாயக் சட்டென பார்வையை திருப்பி பார்க்க.. அங்கு நிமலனின் வீட்டு பால்கனியில் இவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அவர்கள் இருவரும் அறைக்குள் இருந்து வெளியில் வந்த நொடி முதல் இமைக்காமல் அவனைத் தான் அங்கு நின்று ரசனையோடு விழிகளால் பருகிக் கொண்டிருந்தாள் நந்தினி. 
 
 
இப்படி ஒருத்தி அங்கு நிற்பதை கூட உணராமல் தன் போக்கில் குழந்தையோடு ஒரு தனி உலகத்தில் அவன் சஞ்சரித்துக் கொண்டிருக்க.. அதையெல்லாம் பார்க்க பார்க்க அவளுள் அத்தனை ஏக்கம் பரவியது. அதை கலைப்பது போல் திடீரென ஒலித்த அவள் அலைபேசியின் சத்தத்தில் தான் விநாயக் இப்போது திரும்பிப் பார்த்திருக்க.. சட்டென தன் கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து அந்த பாட்டை நிறுத்த முயன்றாள் நந்தினி.
 
 
இதையெல்லாம் நிதானமாக பார்த்தவாறே எழுந்து நின்றவன், குழந்தையை ஒற்றைக் கையால் வாகாக பிடித்து தூக்கி இருக்க.. “வினுப்பா இன்னு வேணு..” என்று சிணுங்கினான் ஆர்யன்.  
 
 
“ஹ்ம்ம் வேணுமா கொடுத்துட்டா போச்சு..” என்று அவளைப் பார்த்தபடியே கூறியவாறு, சட்டென ஆர்யனை தூக்கி மேலே போட்டு பிடித்திருந்தான் விநாயக். அதற்குள் வேகமாக அங்கிருந்து நந்தினி கீழே இறங்கி சென்று விட்டிருந்தாள்.
 
 
இன்று மனம் ஒரு மாதிரி இருக்க, தீக்ஷாவை பார்த்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்க நினைத்து காலையிலேயே சீக்கிரம் கிளம்பி வந்து இருந்தாள் நந்தினி. 
 
 
இப்படி எதிர்பாராமல் திடீரென வந்து நின்றவளை கண்டு முதலில் திகைத்தாலும் அவளின் உள்ளே நடக்கும் போராட்டங்களை முழுமையாக அறிந்திருந்தவள் என்பதால் எந்த கேள்வியும் கேட்காமல் வரவேற்று அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருக்க.. தீக்ஷாவின் குழந்தை உறக்கம் கலைந்து எழுந்து சிணுங்கியது.
 
 
“ஹே நந்து ஒரு நிமிஷம், நான் போய் அந்த குட்டியை கவனிச்சுட்டு வரேன்..’ என்று தீக்ஷா எழுந்து செல்ல தனிமையில் மாடி வராண்டாவில் அமர்ந்திருந்தவள், எழுந்து மெல்ல காரிடாரில் நடந்து வந்து அங்கிருந்த பால்கனியில் நின்றவளின் பார்வை யாரும் இல்லா பக்கத்து மொட்டை மாடியில் தான் ஏக்கமாக பதிந்து இருந்தது. 
 
 
‘ஒருமுறை அவன் தரிசனம் கிடைத்து விடாதா..!’ என்பது போல் அவள் பார்த்திருக்க.. அவளின் எதிர்பார்ப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் தன் ஜிம் அறையிலிருந்து வெளியில் வந்தவனை நம்ப முடியாமல் தான் பார்த்தாள் நந்தினி.
 
 
இத்தனை எளிதாக இன்று அவனைப் பார்த்து விடுவோம் என அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. ஏனெனில் இதற்கு முன்பும் இப்படி எத்தனையோ முறை இங்கு வந்து மணிக்கணக்காக தவம் இருந்த போதும் கூட அவன் தரிசனம் அவளுக்கு கிடைத்ததில்லை.
 
 
அதில் எப்போதும் போல இன்றும் தன் நிலையை எண்ணி உண்டான கழிவிறக்கத்தோடே அவள் நின்றிருக்க.. ஆர்யனை தூக்கிக்கொண்டு வந்து அவன் செய்த அனைத்தும் அவளுக்கு கவிதையாக இருந்தது. ‘இப்படி தங்கள் குழந்தையோடு அவன் விளையாடினால் எப்படி இருக்கும்..?’ என நந்தினியின் மணக்கண்ணில் ஓட.. அசையாமல் அவனையே அவள் பார்த்திருந்த போது தான் கரடியாக அவளின் அலைபேசி ஒலித்து இருந்தது.
 
 
அவசரமாக அங்கிருந்து ஓடி வந்து விட்டிருந்தாலும் இன்னும் அவன் தன்னை பார்த்து வைத்த படபடப்பு அவளுள் அப்படியே மிச்சமிருந்தது. வேகமாக படியில் இறங்கி வந்து கொண்டிருப்பவளை பார்த்த தீக்ஷா “என்ன நந்து.. ஏன் இறங்கி வந்துட்டே..? இதோ நான் மேலே தான் வந்துட்டு இருந்தேன்..” என தன் கையில் இருவருக்குமாக கொண்டு வந்திருந்த காபி கோப்பையை காண்பித்தபடியே கூறினாள் தீக்ஷா.
 
 
“ஹ்ம்ம் இல்லை நான் கிளம்பறேன்..” என அவள் மெல்லிய குரலில் முனகவும் “என்னாச்சு..?” என்று நந்தினியின் முகம் பார்த்தாள் தீக்ஷா. அதற்கு பதிலேதும் சொல்லாமல் அவள் வேகமாக ‘ஒண்ணுமில்லை’ என தலையசைக்கவும், அதற்கு நேர் மாறாக அவளின் விழிகள் உடைபடுக்கவும் சரியாக இருந்தது. 
 
 
அதைக் கண்டு பதறிய தீக்ஷா “ஹேய் என்னாச்சு, ஏதும் பிரச்சனையா..! யாராவது ஏதாவது சொன்னாங்களா..? இங்கே யார் உன்னை என்ன சொல்ல போறா..!” என்று புரியா படபடப்போடு அடுத்தடுத்து கேட்டுக் கொண்டே செல்ல.. “எதுவுமில்லை..” என்றாள் வரவழைத்துக் கொண்ட பொறுமையுடன் நந்தினி.
 
 
அதில் இனி இவளிடம் பொறுமை எல்லாம் வேலைக்கு ஆகாது எனப் புரிந்து “எதுவுமில்லாம தான் இப்படி சின்னப்பிள்ளை மாதிரி அழுதுட்டு நிற்கறியா..? நம்ம ஸ்ரீ குட்டி கூட இப்படி அழ மாட்டா..” என முறைப்போடு சொல்லி அவளை அருகில் இருந்த அறைக்குள் இழுத்துச் சென்றாள் தீக்ஷா. 
 
 
“விடு தீக்ஷு நான் கிளம்பறேன்..” என்று தன் கையை அவளிடம் இருந்து எடுத்துக் கொள்ள முயன்றபடியே நந்தினி உள்ளே செல்ல.. “மூச் ஒழுங்கா உட்காரு, என்ன பிரச்சனை உனக்கு..? எதுவாயிருந்தாலும் என்கிட்ட சொல்லு, எதையும் வெளியே சொல்லாமல் உனக்குள்ளே வெச்சு என்ன செய்யப் போறே..?” என்று அதட்டலாக கேட்டாள் தீக்ஷா. 
 
 
அதில் தன்னையே குறை சொல்வது போல் அவள் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியாமல் “சொல்லி.. சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது..?” என்று நந்தினி கேட்க.. “சொல்லாம மட்டும் என்ன சாதிக்க போறே..!” என திரும்ப கேட்டாள் தீக்ஷா. 
 
 
இதில் நந்தினி அமைதியாகி விட, “இங்கே பார் நந்து, எனக்கு உன்னையும் தெரியும்.. உன் மனசில் இருக்க வலியும் புரியும்.. ஆனா நான் சொல்றது நிஜம், நீ என்னை நம்பு.. நிச்சயம் நீ வருத்தப்படும்படி வினய் அண்ணா எப்போவும் நடந்துக்க மாட்டாங்க.. என்னை கேட்டா நீ தேவை இல்லாம யோசிச்சு குழம்பிட்டு இருக்கேன்னு தான் சொல்லுவேன்.. ஒருமுறை அண்ணாகிட்ட பேசி தான் பாரேன்..” என்றாள் தீக்ஷா. 
 
 
அப்போதும் நந்தினி அமைதியாகவே இருக்க.. “நீ இவ்வளவு வருத்தப்படறேன்னு தெரிஞ்சும் நான் ஏன் இப்போ வர அண்ணாகிட்ட போய் பேசலை தெரியுமா..? இது உங்க இரண்டு பேருக்கு நடுவில் இருக்கும் ஒரு விஷயம், இதில் மூன்றாவது ஆள் நான் தலையிட்டா நல்லா இருக்காது.. இதை நீங்க தான் சரி செய்யணும், நீதான் நந்து போய் பேசணும்..” என்றாள் தீக்ஷா. 
 
 
அதில் சட்டென நந்தினிக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன பேச சொல்றே..? என்னை பார்த்தாலே முகத்தைத் திரும்பிட்டு போறவங்ககிட்ட போய் என்ன பேச முடியும்..? நான் பேசக்கூட அவர் வாய்ப்பு கொடுக்க மாட்டார், என்னை பார்க்கவே விருப்பமில்லைன்னு அவரோட ஒவ்வொரு செயலும் காட்டும் போது நான் எப்படி போய் பேச முடியும்..? எனக்கு மட்டும் பேசணும்னு ஆசை இல்லையா..!” என்று படபடத்தவள், “எவ்வளவு ஆசை எனக்குள்ளே இருக்குன்னு உனக்கு என்னடி தெரியும்..?” என்று அழுகையோடு அப்படியே நிறுத்தி விட, “அப்படி என்ன ஆசை எல்லாம் மேடம்க்கு இருக்கு..? எங்கே சொல்லுங்க கேட்போம்..” என்றாள் தீக்ஷா.
 
 
அதற்கு நந்தினி பதிலேதும் சொல்லாமல் அமைதியாக முகத்தை திருப்பிக் கொண்டு எங்கோ பார்த்தபடி அமர்ந்திருக்க.. அவளின் கன்னத்தை ஒரு கையால் பிடித்து திருப்பி தன் முகம் பார்க்க செய்தவள் “அட சொல்லுடி என்னன்னு தான் கேட்போம்.” என்றாள் தீகஷா.
 
 
“இப்போ சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுது..” என்று அவள் முறைப்பாக கேட்கவும் “யாருக்கு தெரியும், எங்கிருந்தாவது ஏதாவது ஒரு தேவதை இதை கேட்டுட்டு ததாஸ்துன்னு கூட சொல்லலாம்..” என்றாள் தீக்ஷா. 
 
 
“என்னை பார்த்தா உனக்கு விளையாட்டா இருக்கா..?” என அவள் முறைக்கவும் “அட இல்லைடி, நல்லதோ கெட்டதோ நமக்குள்ளேயே வெச்சு இருக்கறது எந்த வகையிலும் பயன் தராது.. மனசில் இருக்குறதை யார்கிட்டயாவது சொல்லு, அது நல்லதா கூட முடியலாம்..” என்றாள் தீக்ஷா. 
 
 
“சொல்லு சொல்லுனா என்னடி சொல்லணும்..? எல்லா பொண்ணுங்களையும் போல தானே எனக்கும் சின்ன சின்ன ஆசைகள் எதிர்பார்ப்புகள் கனவுகள் எல்லாமே இருக்கும்.. முதன்முதலில் எனக்கு ஒருத்தரை பிடிச்சது.. அதுக்கு முன்னே வர இப்படி ஒரு உணர்வு எனக்கு வந்ததே இல்லை.. என் வாழ்க்கையில் அந்த ஒரு வார காலமும் எனக்கு சொர்க்கமா தெரிஞ்சது.. 
 
 
அவருக்கும் என்னை பிடிச்சுருக்குன்னு நல்லா எனக்கு புரிஞ்சது, ஆனா எல்லாமே கனவு போல ஒரு நாள் கலைஞ்சு போச்சு.. இந்த நிமிஷம் வரைக்கும் நிஜமாவே அவருக்கு என்னை பிடிக்குமா..? பிடிக்காதான்னு கூட எனக்கு தெரியலை.. ஆனா இந்த ஜென்மத்தில் அவரை தவிர என்னால் வேற யாரையும் மனசில் நினைக்க கூட முடியாது.. 
 
 
என்னை சுத்தி அத்தனை பிரச்சனைகள் ஓடிட்டு இருக்கு, ஆனா என் வீணா போன இந்த மனசு இருபத்து நாலு மணி நேரமும் அவரை பற்றி மட்டும் தான் யோசிக்குது..” என்று தன் மனதில் உள்ள ஆதங்கத்தை எல்லாம் அவள் கொட்டிக் கொண்டிருக்க.. தீக்ஷாவுக்கே பாவமாக இருந்தது.
 
 
‘என்ன இல்லை இவளிடம்..? நல்ல அழகு, படிப்பு, வசதியான குடும்பப் பின்னணி, இத்தனையும் இருந்தும் ஏன் இவளுக்கு மட்டும் வாழ்க்கை இப்படி..!’ என்று தீக்ஷாவுக்கும் தோன்றாமல் இல்லை. கல்லூரி காலத்தில் நந்தினியின் பின்னே எத்தனை பேர் சுற்றிக் கொண்டிருந்தனர் என அருகில் இருந்து பார்த்திருக்கிறாள்.. 
 
 
ஆனால் விநாயக்கை மனதில் வைத்து அத்தனை பேரின் விருப்பத்தையும் மறுத்திருக்கிறாள் நந்தினி. இவளின் வாழ்க்கை இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருந்திருக்கலாம் என்று மனதில் தோன்ற “கவலைப்படாதே.. எல்லாம் ஒரு நாள் மாறும், நிச்சயம் நீ ஆசைப்பட்ட எல்லாமே நடக்கும்..” என்று தன் மன விருப்பத்தை அவளுக்கு ஆறுதல் போல நந்தினியின் கை பிடித்து சொல்லிக் கொண்டிருந்தாள் தீக்ஷா. 
 
 
அதில் தன் கையை அவளிடம் இருந்து வேகமாக இழுத்துக் கொண்ட நந்தினி “எப்போ..? எப்போ நடக்கும்.. எனக்கு அறுபது வயசான பிறகா..? நான் சின்ன குழந்தையா தீக்ஷு, நீ என்னை சமாதானம் செஞ்சுட்டு இருக்கே.. தினம் ஏதோ ஒரு இடத்தில் யாரோ ஒரு காதல் ஜோடியை பார்க்க நேரும் போது எனக்குள்ளே உண்டாகும் வலி, அதை உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்..? பெருசா என்ன நான் ஆசைப்பட்டேன், அவங்களை மாதிரி கை கோர்த்துட்டு நடக்கணும்.. தினம் பேசிக்கணும், என் மனசு அவருக்கும் அவர் மனசில் இருக்கறது எனக்கும் சொல்லாமலே புரியணும்.. மத்தவங்களை விட நாம விரும்பற ஒருத்தருக்கு நாம தான் முக்கியமா இருக்கணும்னு நினைக்கிறது எல்லாம் தப்பா என்ன..? இதெல்லாம் என்ன நடக்கவே முடியாததா..! இல்லை நடக்கவே கூடாத ஆசைகளா..! ஆனா இது கூட எனக்கு கிடைக்கலையே, இயல்பா ஒவ்வொரு பொண்ணுக்கும் கிடைக்கக்கூடிய விஷயங்கள் தானே இது.. ஏன் இது கூட எனக்கு மறுக்கப்படுது..?” என அவள் கண்ணீரோடு சொல்லிக் கொண்டிருக்க.. தீக்ஷாவுக்கு மனம் பாரமானது.
 
 
*******
 
 
இரண்டு நாட்களுக்கு பிறகு..
 
 
மாலை லேசாக இருள் சூழத் தொடங்கி இருக்க.. மெல்ல நடந்து சென்று கொண்டிருந்தாள் நந்தினி. திடீரென அவள் வழியை மறிப்பது போல் அங்கு வந்து நின்ற புல்லட்டை கண்டு பதறி அவள் இரண்டடி பின்னுக்கு நகர, அதில் அமர்ந்திருந்த விநாயக் அவளை கேள்வியாக பார்த்தபடி “இங்கே என்ன செய்யறே..?” என்றான். 
 
 
“ஹாங்..” என அவனை இங்கு திடீரென கண்டதில் உண்டான திகைப்பிலும் இப்படி வந்து பேசுவதிலும் அவள் விழிக்க.. “உனக்கு நிஜமாவே காதில் ஏதாவது பிரச்சனையா..?” என்றான் விநாயக்.  
“ஆங் அதெல்லாம் இல்லை..” என்று இப்போது மறுப்பாக வேகத்தோடு நந்தினி தலையசைத்தாலும் அவளின் பார்வை விநாயக் பின்னே எங்கோ அடிக்கடி பதிந்து மீள.. அவள் பார்வை சென்ற திசையை திரும்பிப் பார்த்தவன், “அங்கே என்ன..?” என்றான். 
 
 
அதற்கு ஒண்ணுமில்லை என்பது போல் தலையசைத்தாலும் அவள் பார்வை அப்போதும் அந்தப் பக்கமே செல்ல.. நிதானமாக அந்தப் பக்கம் திரும்பியவன், ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஆள் சிறு பெண்ணை கையில் பிடித்தபடி நடந்து சென்று கொண்டிருப்பதை கண்டான்.
 
 
அவர்களையே இவள் பார்த்துக் கொண்டிருப்பதை புரியாமல் பார்த்தது “யாராது..?” என விநாயக் கேட்கவும், “தெரியலை..” என்றாள் நந்தினி. அதில் அவளை கூர்மையாக பார்த்தவன் “உன் கார் எங்கே..?” என்றான். 
 
 
“அது அங்கே..” என்று அவள் நடந்து வந்த திசைக்கு எதிர் புறம் கையை காண்பித்து நந்தினி சொல்லவும் “காரை அங்கே விட்டுட்டு இங்கே என்ன செய்யறே..?” என்றான் விநாயக். “அது..” என்றவள், மீண்டும் அங்கு செல்பவர்களை பார்க்க.. “என்ன நடக்குது இங்கே..?” என்றான் தன் குரலில் கொஞ்சமும் எரிச்சலை மறைக்காமல் விநாயக்.
 
 
“அது.. அந்த ஆள்.. அந்த பொண்ணு..” என்ற அவள் இழுக்கவும் “என்னாச்சு..?” என்றான் குரல் இறுக விநாயக். “இல்லை அங்கே நான் பார்க்கும் போது அந்த பொண்ணுகிட்ட அவன் ஏதோ பேசிட்டு இருந்தான்.. அதுக்கு அந்த பாப்பா சரியா பதில் சொல்லலை.. அப்புறம் சாக்லேட் கொடுத்து ஏதோ கொஞ்சி பேசி கூட்டிட்டு போறதை பார்க்கும் போது ஏனோ எனக்கு ஏதோ தப்பா தோணுது.. அதான் என்னன்னு பார்க்கலாம்னு வந்தேன்..” என்று அவள் சொல்லவும், “இதில் என்ன தப்பு இருக்கு.. அந்த குழந்தையோட சித்தப்பாவாவோ இல்லை மாமாவாவோ இருக்கலாம்.. குடும்ப பிரச்சனை எதுவும் இருக்கலாம் இல்லையா..?” என்றான் விநாயக்.
 
 
“ஆனா எனக்கு அப்படி தோணலை, அந்த பொண்ணு பாடி லாங்குவேஜ் கொஞ்சம் தயக்கமா தடுமாற்றமா இருந்தது.. அதான் எனக்கு சந்தேகமா இருக்கு..” என்றாள் நந்தினி.
 
 
இதில் விநாயக் அந்தப் பக்கம் திரும்பி பார்க்க.. இவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து ஒரு இருபத்து ஐந்து அடி தொலைவில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் பார்லருக்குள் அந்தப் பெண்ணுடன் அவன் நுழைவது தெரிந்தது.
 
 
இது கொஞ்சம் ஆள் அரவமற்ற பகுதி தான். பெரிதான போக்குவரத்தோ ஆள் நடமாட்டோமோ இல்லாமல் சாலை வெறிச்சோடி இருந்ததில் இங்கிருந்தே தெளிவாக அவனை பார்க்க முடிந்தது. 
 
 
அதில் அவள் பக்கம் திரும்பியவன் “இதுக்காக நீ அவங்களை ஃபாலோ செஞ்சு வந்து இருக்கே அப்படித்தானே..!” என்றான். ஆம் என நந்தினியின் தலை வேகமாக அசையவும், ஒரு நொடி தீர்க்கமாக அவளை பார்த்தவன் “சரி நீ போ, நான் பார்த்துக்கறேன்..” என்றான் விநாயக்.
 
 
“இல்லை நானும்..” என அவள் தயக்கத்தோடு இழுக்கவும், ‘சரி வா..’ என்பது போல் தன் புல்லட்டை திருப்பி நிறுத்தினான் விநாயக். அதில் அவனை கேள்வியாக நந்தினி பார்க்கவும், நேராகப் பார்த்து அமர்ந்திருந்தபடியே விழிகளை மட்டும் திருப்பி அவளை பார்த்தவன், “ஏறி உட்கார ஐடியா இருக்கா..?” என்றதில் மறுவார்த்தை பேசாமல் வேகமாக ஏறி அவன் பின்னே அமர்ந்திருந்தாள் நந்தினி. 
 
 
அவளின் அந்தப் பதட்டத்தை பார்த்தவன் வேறு எதுவும் பேசாமல் சட்டென வண்டியை எடுத்து விட, இதை ஒரு நொடி எதிர்பாராமல் தடுமாறி பின் அவனையே பிடித்துக் கொண்டாள் நந்தினி. 
 
 
ஒரு வேகத்தில் அவன் தோளை பிடித்துக் கொண்டவளுக்கு, அதன் பின் அங்கிருந்து கையை எடுக்கவே மனம் இல்லை. முதன்முறை மனதுக்குப் பிடித்தவனோடான இந்த இருசக்கர வாகன பயணம் அவளை ஏதோ செய்து கொண்டிருந்ததில் முழுதாக அதை நந்தினி உணரும் முன்பாகவே தன் புல்லட்டை கொண்டு சென்று அந்த ஐஸ்கிரீம் பார்லர் முன் நிறுத்தி இருந்தான் விநாயக்.
 
 
அதைக் கூட உணரும் நிலையில் இல்லாத நந்தினி அவன் முதுகையே பார்த்துக் கொண்டிருக்க.. அவளின் நிலையை உணர்ந்தது போல் “இறங்கு..” என்றான் மெல்லிய குரலில் விநாயக். அதிலேயே நினைவு கலைந்தவளாக பார்வையை திருப்பியவள், அப்போதே வண்டி நின்றிருப்பது புரிந்து இறங்கி தயக்கமாக அவனை பார்க்க.. அவனோ அதையெல்லாம் கண்டு கொள்ளாதது போல் இறங்கி உள்ளே சென்றான்.
 
 
நந்தினி அவனைப் பின்தொடர்ந்து செல்ல.. பெரிதாக அந்த கடையில் கூட்டம் எதுவுமில்லை. சற்றுமுன் அவள் குறிப்பிட்டிருந்த ஆசாமி ஒரு ஆறு வயது பெண் குழந்தையுடன் அங்கிருந்த ஒரு மூலையில் அமர்ந்திருக்க.. அதற்கு நேர் எதிர் திசையில் ஒரு காதல் ஜோடி அமர்ந்திருந்தது. 
 
 
அதைத் தவிர மற்ற இருக்கைகள் எல்லாம் காலியாகவே இருக்க.. அந்த ஆசாமிக்கு சற்று தள்ளி அவனை பார்ப்பது போலான கோணத்தில் சென்று விநாயக் ஒரு மேஜையில் அமர, அவன் பின்னையே வந்தவள் விநாயக்கின் முகம் பார்த்து நின்றாள்.
 
 
அதில் தன் எதிரே இருந்த இருக்கையை காண்பித்து உட்கார் என்பது போல் அவன் சைகை செய்ய.. சட்டென அங்கே அமர்ந்து கொண்டாள் நந்தினி. “என்ன சாப்பிடறே..?” என அவன் கேட்கவும் “இல்லை, எதுவும் வேண்டாம்..” என அவள் வேகமாக மறுத்தாள். 
 
 
“நாம இங்கே அவனை வேவு பார்க்க தான் வந்தோம்னு எல்லாருக்கும் தெரியணுமா..!” என பல்லை கடித்து கொண்டு கேட்டவன், எழுந்து சென்று ஏதோ ஆர்டர் செய்து விட்டு வர, நந்தினியின் முகம் வாடிப்போனது.
 
 
‘ஒரு வார்த்தைக்கு வேண்டாம்னு சொன்னா, திரும்ப கேட்க மாட்டாங்களா..! அவங்களுக்கு மட்டும் சொல்லிட்டு வராங்க..’ என்று தனக்குள்ளேயே முனகிக் கொண்டாலும், அவளுக்கு இந்த நொடி இப்படி அவன் முன் அமர்ந்து இருப்பது பிடித்தே இருந்தது.
 
 
அதில் ஆசை தீர அவனை பார்ப்பதும், பின் எங்கே கண்டுக்கொண்டால் திட்டுவானோ..! என பார்வையை திருப்பிக் கொள்வதுமாக நந்தினி இருக்க.. “என்ன செஞ்சுட்டு இருக்கே நீ..?” என மெல்லிய குரலில் கடிந்து கொண்டான் விநாயக். 
 
 
அதில் தொடர்ந்து அவனை அப்படி பார்ப்பதை தான் கண்டிக்கிறான் என்று எண்ணி “நான்..” என நந்தினி ஏதோ சொல்ல தொடங்கவும் “விடாம அவனை இப்படி பார்த்து வெச்சு நீயே எங்க அப்பன் குதிருக்குள்ளே இல்லைன்னு காட்டி கொடுத்துடுவே போலேயே..!” என்றான் விநாயக்.
 
 
“அது..” என்று நந்தினி தடுமாறவும், “நீ அந்த பக்கம் திரும்பாதே, நான் பார்த்துக்கறேன்..” என்றான் விநாயக். அதற்கும் நந்தினி சம்மதமாக தலையசைக்கவும் அவள் முன் பணியாள் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக்கை கொண்டு வந்து வைக்கவும் சரியாக இருந்தது.
 
 
அதில் அவள் திகைப்பாக நிமிர்ந்து விநாயக்கை பார்க்க.. அவன் தன் முன் வைக்கப்பட்டிருந்த மாதுளை பழச்சாறை குடிப்பதில் கவனமாக இருந்தான். அவனுக்கு மட்டும் சொல்லிக் கொண்டான் என நினைத்திருந்தவளுக்கு இப்படி தனக்கும் சொல்லியதையே நம்ப முடியவில்லை என்றால் இதில் அவளுக்கு பிடித்ததை வேறு சொல்லி வைத்திருக்க.. இந்த நொடி நந்தினி எப்படி உணர்கிறாள் என அவளுக்கே வார்த்தைகளில் சொல்லத் தெரியவில்லை.
 
 
இதில் விநாயக் தன்னைக் கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்தாலும் அவனையே பார்த்தபடி சில நொடிகள் இருந்தவள், எதற்குள்ளும் அடங்காமல் விரித்து விடப்பட்டிருந்த அலை அலையான கூந்தல் முன்னே வந்து விழுந்து தொந்தரவு செய்யாமல் இருக்க, அதை நளினமாக தன் காதோரம் ஒதுக்கியபடியே மெல்ல தன் முன் இருந்த மில்க் ஷேக்கை பருக தொடங்கினாள் நந்தினி.
 
 
நந்தினி தன்னை பார்த்துக் கொண்டிருந்த அவ்வளவு நேரமும் அதை கவனிக்காதது போல் அமர்ந்திருந்த விநாயக், அவள் பார்வையை திருப்பிக் கொண்ட பின் நந்தினியை பார்த்தான். அந்த மில்க் ஷேக் அவளின் பளிங்கு தொண்டைக்குள் பயணிப்பதை கண்டவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
 
 
லேசாக காற்றில் கூந்தல் பறக்க ஒற்றை விரல் கொண்டு அதை ஒதுக்கியவாறே அவள் மில்க் ஷேக்கை குடிக்க.. ஸ்ட்ராபெரிக்கு போட்டியாக சிவந்திருந்த அவளின் இதழ் வழியே பயணித்து உள்ளே செல்லும் பானம் சந்தனத்தில் குழைத்து செய்தது போல் இருந்த அவளின் தொண்டைக்குள் செல்வது வரை நிதானமாக பார்வையால் தொடர்ந்துக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
ஒவ்வொரு முறையும் அவள் மில்க் ஷேக்கை உறிஞ்சும் போதெல்லாம் இங்கே இவன் தொண்டைக்குழி அவஸ்தையாய் ஏறி இறங்கியது. இதை அறியாத நந்தினி தன் முழு கவனத்தையும் மில்க் ஷேக் மேல் பதித்து அதை பருகிக் கொண்டிருக்க.. அதற்கு நிகராக அவளை விழிகளால் பருகிக் கொண்டிருந்தான் விநாயக்.
 
 
இதில் அவன் பார்வையை உணர்ந்தோ.. இல்லை இயல்பாகவோ நந்தினி விழிகளை மட்டும் உயர்த்தி விநாயக்கை பார்க்க.. அவளின் செயல்களை முன்பே கணித்திருந்தவன் தன் பார்வையை வேறு பக்கம் திருப்ப.. அங்கு கண்ட காட்சியில் அத்தனை நேரம் அவன் மனதில் இருந்த இதம் மறைந்து காணாமல் போயிருக்க.. அங்கு ஒரு எரிமலை வெடிக்க தயாரானது.
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
MNKN - 20
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1784972344-IMG-20260725-WA0001.jpg
 
 
மௌனம் - 21
 
விழிகளால் அவளையே பருகிக் கொண்டிருந்தவன், நந்தினி நிமிர்வது போல் தெரிந்ததும் தன் பின்னந்தலையை லேசாக கோதியப்படியே பார்வையை திருப்பிக் கொண்டான்.
 
 
அதே நேரம் அந்தப் பக்கம் அமர்ந்திருந்த சந்தேகத்திற்குரிய ராஜன் மேல் அவனின் பார்வை பதிய.. அங்கு கண்ட காட்சியில் எரிமலை பிழம்பானான் விநாயக்.
 
 
சிறு குழந்தை என்று கூட பாராமல் ராஜன் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து அந்தக் குழந்தையின் கவனத்தை திசை திருப்பி விட்டு அவளின் முழங்காலுக்கு மேல் மெதுவாக தடவி கொண்டு இருக்க.. அதில் லேசாக நெளிந்த அந்த குழந்தை அவன் கைகளை எடுத்து விட முயன்றது.
 
 
இப்படியே இரண்டு முறைக்கும் மேல் நடக்க.. குழந்தையின் கவனத்தை மீண்டும் ஐஸ்கிரீம் பக்கம் திருப்பி விட முயன்றவன், தன் தொடுதலை தொடர்ந்து கொண்டிருக்க.. அந்த நேரம் தான் அவனைப் பார்த்து இருந்தான் விநாயக்.
 
 
அடுத்த நொடி எரிமலையாக மாறியவன், நொடியில் எழுந்து சென்று பளாரென அவன் கன்னத்தில் அறைந்திருந்தான். இதை துளியும் எதிர்பாராமல் அவன் அதிர்ந்து விழிக்க.. “பொறு** ராஸ்** சின்ன குழந்தைகிட்ட என்ன செஞ்சுட்டு இருக்கே..?” என கேட்டு மீண்டும் ஒரு அறை கொடுத்திருந்தான் விநாயக்.
 
 
அதில் அவன் தெளிந்து பதிலளிக்கும் முன் நந்தினியின் பக்கம் திரும்பியவன், குழந்தையை கண் காண்பித்து அவளிடம் அழைத்துக் கொள்ள சொல்ல.. நொடியில் செயல்பட்டு அவளும் குழந்தையை தன்னோடு இழுத்து நிறுத்திக் கொண்டு இருந்தாள்.
 
 
அதே நேரம் அடி வாங்கியவன் நிலைமையை சமாளிக்க நினைத்து “ஹலோ நீங்க தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க, அது என் அக்கா பொண்ணு..” என்றான். “உன் அக்கா பொண்ணா இருந்தா இப்படி எல்லாம் தொட சொல்லுதோ..!” என்று கேட்டு மீண்டும் விநாயக் ராஜனின் முகத்தில் நான்கு குத்து விட, அதே நேரம் நந்தினியின் கைவளைவில் நின்று இருந்த குழந்தைக்கு என்ன புரிந்ததோ சட்டென “இல்லை அவர் பொய் சொல்றாரு, அவர் யாருனே எனக்கு தெரியாது..” என்றிருந்தது.
 
 
இதில் மேலும் கடுப்பானவன், அந்த கயவனின் பக்கம் திரும்ப.. அதே நேரம் அவனும் “ஏய் என்ன பேசிட்டு இருக்கே நீ..?” என்று குழந்தையை அதட்டியப்படியே விநாயக் பக்கம் திரும்பி “அவ ஏதோ பயத்தில் உளறிட்டு இருக்கா, நீங்க என்னை தப்பா புரிஞ்சுட்டு இருக்கீங்க.. நான் அப்படி எல்லாம் இல்லை, நானும் ஒரு கௌரவமான குடும்பத்தில் இருந்து தான் வரேன்..” என்று அதற்குள் அங்கு வேலை செய்பவர்கள், அமர்ந்திருந்தவர்கள் என எல்லாம் எழுந்து நின்று வேடிக்கை பார்ப்பதை கண்டு சூழ்நிலையை சமாளிக்க முயன்றான்.
 
 
ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையிலேயே இல்லாத விநாயக் அவனை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டு இருந்தான். ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் “ஏய் யாருடா நீ, பெரிய இவனா..? அவ என்ன உன் பிள்ளையா..?” என்று வெறுப்போடு ராஜன் கத்தி இருக்க.. அவ்வளவு தான் கொந்தளித்து விட்டான் விநாயக்.
 
 
சட்டென அவனின் கழுத்தை பிடித்து அப்படியே மேலே தூக்கி இருந்தவன், “என் பிள்ளையா இருந்தா தான் கேட்கணுமா..! செய்யறதே கேவலமான வேலை, இதில் எவ்வளவு திமிர் இருந்தா இவ்வளவு தெனாவட்டா பேசுவே..?” என்று கேட்டு அடி பின்னி எடுத்து விட்டான் விநாயக்.
 
 
இதில் இப்படி ஒரு தாக்குதலை தாங்க முடியாமல் ராஜன் நிலை குலைந்து போக.. அதை கண்டு பயந்து போன கடை உரிமையாளர் “ஹலோ யார் சார் நீங்க..? என்ன கலாட்டா இதெல்லாம்..! உங்க பிரச்சனையை வெளியே போய் வெச்சுக்கோங்க..” என்று சத்தம் போட்டார்.
 
 
அதில் ஆத்திரமாக திரும்பி அவரை முறைத்தவன், “உன் கடை தானே இது..! இவ்வளவு தைரியமா அவன் இங்கே அந்த குழந்தையை கூட்டிட்டு வரான்னா இதுக்கெல்லாம் நீயும் உடந்தையா..?” என்று அவன் கர்ஜிக்க.. “என்ன நா.. னா..? யாருங்க நீங்க..? உங்க இஷ்டத்துக்கு பேசறீங்க, முதலில் வெளியே போங்க..” என்று திகைப்பும் தடுமாற்றமுமாக பேசினார்.
 
 
அதற்குள் அவனை அடித்து கீழே சாய்த்து இருந்த விநாயக், எரிச்சலோடு திரும்பி கடை உரிமையாளரை பார்த்து “சும்மா லோட லோடன்னு பேசிட்டு இருந்தேன்னு வெச்சுக்கோ, அவன் கூட சேர்த்து உன்னையும் லாக்கப்பில் வெச்சு முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்..” என்றான் ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்கும் குரலில் விநாயக்.
 
 
அந்த உடல் மொழியிலும் குரலிலும் திகைத்து நின்றவருக்கு, அப்போதே இவன் உருவமும் தோரணையும் போலீஸ் என்று புரிய வைக்க போதுமானதாக இருக்க.. ராஜனும் அப்போதே இதையெல்லாம் கவனித்து இருந்தான்.
 
 
அதிலேயே மிரண்டு அவர் நின்று விட, அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழற்றிய விநாயக், அங்கிருந்த ஒரு பகுதியை சுட்டி காண்பித்து “இது என்ன இடம்..?” என்றான். “அது ஸ்டோர் ரூம்..” என அவர் சொல்லவும், கீழே முகமெல்லாம் வீங்கி அசைய முடியாமல் படுத்திருந்தவனை தரதரவென அங்கே இழுத்து சென்றான் விநாயக்.
 
 
கடை உரிமையாளரும் என்னனவென புரியாமல் பின்னேயே செல்ல.. உள்ளே அவனை தள்ளி கதவை பூட்டியவன், “இவன் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கட்டும், நான் திரும்ப வரும் வரைக்கும் நீ தான் இவனுக்கு காவல்.. அவனா தப்பிச்சாலும் நீயே திறந்து விட்டாலும் அவனுக்கு பதில் உன்னை உள்ளே தள்ளி மொத்த கேஸையும் உன் மேல் எழுதிடுவேன் ஜாக்கிரதை..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் மீறவே முடியாத குரலில் மிரட்டினான் விநாயக்.
 
 
சற்று முன் விநாயக் போலீஸ் என்று தெரிந்ததிலேயே அவசரப்பட்டு பேசி விட்டதை எண்ணி மிரண்டு போய் நின்றிருந்த கடை உரிமையாளர், அவனின் இந்த மிரட்டலில் முற்றிலும் பயந்து போனார். அதிலும் இவ்வளவு நேரமும் துளியும் ஈவு இரக்கம் காண்பிக்காமல் விநாயக் அவனை அடித்து துவைத்து இருந்தும், ஒரு துளி ரத்தம் கூட வெளியில் வரவில்லை. 
 
 
ஆனால் வலியில் அவன் துடித்ததை கண் முன் கண்டிருந்தவருக்கு உடல் எல்லாம் பயத்தில் நடுங்கியது. அதில் சம்மதமாக அவரின் தலை வேகமாக அசைந்தது. அதை ஒரு கண்டிப்போடு பார்த்துவிட்டு பார்வையை திருப்பியவன், இத்தனை ருத்ர தாண்டவத்தையும் லேசான மிரட்சியோடு பார்த்தபடி நின்றிருந்த நந்தினியை நெருங்கினான்.
 
 
அவனை கழுத்தைப் பிடித்து விநாயக் தூக்கும் போதே இதை எல்லாம் கண்டால் அவள் பயந்து போவாள் என்று எண்ணி குழந்தையின் விழிகளை தன் கரம் கொண்டு மூடி தன்னோடு சேர்த்து அணைத்து பிடித்து நின்று கொண்டாள் நந்தினி. 
 
 
இப்போதும் அப்படியே அவள் நின்றிருக்க.. நிதானமாக அவளை நெருங்கிய விநாயக் குழந்தையின் முன் மண்டியிட்டு அமர்ந்து “பேபி..” என்றான். அதில் அவள் மெல்ல விழிகளை திருப்பி பார்க்க.. “உன் வீடு எங்கே இருக்கு..?” என்றான் அடுத்ததாக விநாயக்.
 
 
குழந்தையும் அருகில் இருக்கும் ஒரு முகவரியை சொல்ல.. இருவரையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான் விநாயக். குழந்தையை தூக்கி இருக்கையின் முன் அமர்த்திக் கொண்டவன், தன்னையே பார்த்தபடி நின்றிருந்தவளை எரிச்சலோடு திரும்பி பார்த்து “ஒவ்வொரு முறையும் உன்னை வெத்தலை பாக்கு வெச்சு கூப்பிடணுமா..?” எனவும், சட்டென ஏறி அவன் பின்னே அமர்ந்து கொண்டாள் நந்தினி.
 
 
அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தையின் வீட்டு முன்பாக வண்டியை நிறுத்தியவன், உள்ளே இருப்பவர்களை அழைக்க.. ஒரு வயதான பாட்டி தான் வெளியில் வந்தார். கொஞ்சம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பம் தான். குழந்தையின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குப் போய் இருக்க.. பாட்டி தான் அந்த பெண்ணை பார்த்துக் கொள்கிறார். 
 
 
இங்கு அருகில் தான் மற்ற பிள்ளைகளோடு அவள் விளையாடிக் கொண்டிருப்பதாக அவர் நினைத்திருக்க.. நடந்தது எதுவும் பாவம் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அதில் அவரின் வயதை மனதில் வைத்து வேறு எதையும் சொல்லி அவரை பயம் கொள்ள செய்ய விரும்பாதவன், “பாப்பாவை அப்படி எல்லாம் தனியா வெளியே விளையாட விடாதீங்க பாட்டிம்மா.. இப்போ இருக்க காலம் அவ்வளவு நல்லா இல்லை, உங்க கண் பார்வையிலே வெச்சுக்கோங்க..” என்றவன், குழந்தையின் பக்கம் திரும்பி “நீயும் ரொம்ப கவனமா இருக்கணும், எதுக்காகவும் தனியா இப்படி எல்லாம் வெளியே போகக்கூடாது புரியுதா..?” என்று அழுத்தம் திருத்தமாக என்றாலும் குரலில் கண்டிப்பை காண்பிக்காமல் சொல்லவும், நடந்ததை எல்லாம் மனதில் வைத்து அதுவும் சமத்தாக ‘சரி’ என்று தலையசைத்தது. 
 
 
மீண்டும் பாட்டியின் பக்கம் திரும்பியவன், “அவங்க அப்பா வேலை முடிஞ்சு வந்ததும் என்கிட்ட பேச சொல்லுங்க..” என்று தன் அலைபேசி எண்ணை கொடுக்க.. அவரோ என்ன என்பது போல் குழப்பமாக அவனை பார்த்தார். “பெருசா ஒண்ணுமில்லை, எனக்கு தெரிஞ்சவர் தான்.. அவரை பார்க்கத்தான் கிளம்பி வந்தேன், ஆனா பார்க்க முடியலை.. அதான் கொஞ்சம் பேசணும்..” என்று இயல்பாகவே சொல்லிவிட்டு, மீண்டும் ஒருமுறை குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி முடித்து அங்கிருந்து கிளம்பினான் விநாயக்.
 
 
சூழ்நிலையை அத்தனை அழகாக அவன் கையாண்ட விதத்தை அருகில் இருந்து பார்த்த பிரம்மிப்போடே மீண்டும் விநாயக் பின்னே புல்லட்டில் ஏறி அமர்ந்தவள், இந்த முறை சிறு தயக்கத்தோடே என்றாலும் அவன் வண்டியை கிளப்புவதற்கு முன்பே விநாயக் தோளை மெதுவாக பிடித்து இருந்தாள்.
 
 
இதில் அவன் இதழ்களில் லேசாக ஒரு புன்னகை நெளிந்தது. ஆனாலும் முகம் இறுக்கமாகவே இருக்க.. ‘அவன் எதுவும் திட்டுவானோ..?’ என்று பயந்து சிறு பதட்டத்தோடு விநாயக் பின்னே அமர்ந்தவாறே தலையை மட்டும் மெதுவாக சாய்த்து அவன் முகத்தை அவள் காண முயல.. அங்கோ எதையுமே அவளால் கண்டு கொள்ள முடியவில்லை. 
 
 
இதில் முகத்தை சுருக்கி கொண்டவள், இப்போதைக்கு அவன் திட்டாமல் இருப்பதே பெரிய விஷயம் என்பது போல் தன் கைகளை கொஞ்சம் அழுத்தமாகவே அவன் தோளில் பதித்தாள் நந்தினி. 
 
 
அதில் அவன் புன்னகை கொஞ்சம் விரிய.. எவ்வளவு மெதுவாக வாகனத்தை செலுத்த முடியுமோ அத்தனை மெதுவாக செலுத்தி கொண்டிருந்தான் விநாயக்.
 
 
பார்த்த முதல் நாளே உன்னைப்
பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே
உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப் பின் எனை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும்... மறையாதே…
 
 
என்று அவர்களுக்காகவே ஒலிப்பது போல் எங்கிருந்தோ ஒரு டீக்கடையில் இருந்து பாடல் வரிகள் கசிந்து வந்து அவர்களை தீண்டிச் சென்றது.
 
 
இந்த நொடி மற்றதெல்லாம் மறந்து போக இருவரும் அந்த பயணத்தை வெகுவாக ரசித்தனர்.
 
 
எத்தனை மெதுவாக சென்றும் நந்தினியின் கார் இருக்கும் இடம் வந்து விடவும் அவன் வண்டியை நிறுத்த.. அவளும் அமைதியாக இறங்கி நின்றாள். 
 
 
இப்போது நன்றாகவே இருள் கவிழ தொடங்கி இருக்க.. “இங்கே எதுக்கு வந்தே..?” என்றான் சுற்றும் முற்றும் பார்த்தவாறே விநாயக். “அது இங்கே நடிகை காவ்யா இருக்கறதா கேள்விப்பட்டேன், அதான் அவங்களை தேடி வந்தேன்..” என்றாள் நந்தினி. 
 
 
அதில் புருவங்கள் இடுங்க அவளை பார்த்தவன், “அவங்களை ஏன் பார்க்கணும்..?” எனவும் “இல்லை, நிறைய வருஷமா அவங்க நடிக்கலை.. ரொம்ப நல்ல நடிகை, இதுவரை சில படங்கள் மட்டுமே நடிச்சு இருந்தாலும் அவங்களுக்குன்னு இங்கே தனி ஒரு இடம் இருக்கு..” என்றாள் நந்தினி. 
 
 
“அதெல்லாம் சரி இப்போ நீ எதுக்கு அவங்களை தேடறே..?” என அவன் கேட்கவும், “பல வருஷமா நடிப்பில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களை திரும்ப முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க கூட்டிட்டு வருவது இப்போ ஒரு ட்ரெண்ட்.. அதே போல அவங்களையும்..” என அவள் சொல்லிக் கொண்டிருக்க.. அவன் முகம் அதிருப்தியை காண்பித்தது.
 
 
அதில் நந்தினி அப்படியே தன் பேச்சை நிறுத்தி என்ன என்பது போல் அவனை பார்க்க.. “பிசினஸில் பெரியாளாக நினைக்கறதும், அதுக்காக முயற்சிக்கறது சரி தான்.. அதேநேரம் குடும்ப விஷயங்களும் கொஞ்சம் தெரிஞ்சு இருக்கணும்.. நீ கூப்பிட்டதும் அவங்க வந்துடுவாங்களா..?” என்றவன் சொல்ல வருவது புரியாமல் அவள் பார்க்க.. “உன்னை சுத்தி நடக்கிறதை எப்போ தான் நீ புரிஞ்சுக்க போறியோ..!” என்றான் ஒரு மாதிரியான குரலில் விநாயக்.
 
 
அதில் முகம் சுருங்க அவள் நின்றிருக்க.. “அந்த குழந்தைக்கு ஏதோ தப்பா நடக்க போகுதுன்னு புரிஞ்சு காப்பாற்ற நினைச்சது தப்பில்லை.. ஆனா இப்படி பழக்கமில்லா இடத்தில் தனியே அவனை ஃபாலோ செஞ்சுட்டு போறதெல்லாம் முட்டாள் தனம், இனி இப்படி எதையும் செஞ்சு பெருசா எந்த சிக்கலையும் மாட்டிக்காதே..!” என்றான் எரிச்சல் குரலில் விநாயக்.
 
 
அவன் பேசிய விதத்தில் அவள் முகம் வாடிப்போக அமைதியாக நந்தினி நின்றிருக்க.. “ஒருவேளை அவன் தனியாளா இல்லைனா என்னாகும்னு யோசிச்சியா..? உன்னை விட சின்ன பொண்ணு தானே மானு..! அன்னைக்கு அப்படி ஒரு சூழ்நிலையிலும் எவ்வளவு தெளிவா யோசிச்சு உங்களுக்கும் எந்த சிக்கலும் வந்துடாம அதேநேரம் சம்பந்தப்பட்டவங்களும் தப்பிக்காம இருக்க நினைச்சா தானே..! அப்படி ஸ்மார்ட்டா யோசி..” என்றான் விநாயக்.
 
 
இதில் அவள் முகம் முற்றிலும் பொலிவிழந்து போனது. ‘தன்னை எந்த விதத்திலும் அவனுக்கு பிடிக்கவே இல்லையோ..!’ என்று அவள் மனம் யோசிக்கத் தொடங்க.. அதை அப்பட்டமாக நந்தினியின் முகம் வெளிப்படுத்தியது. இதை கண்டு மானசீகமாக தலையில் அடித்து கொண்டவன், “கிளம்பு..” என்பது போல் சைகை செய்ய.. அதையும் சரியாக தவறாகவே புரிந்து கொண்டவள், மெல்லிய தலையசைப்போடு காரிலேறி அமர்ந்தாள்.
 
 
அவள் அங்கிருந்து செல்லும் வரை பார்த்திருந்தவன், தன் அலைபேசியில் யாருக்கோ அழைத்து பேசிவிட்டு மீண்டும் அந்த ஐஸ்கிரீம் பார்லருக்கு சென்றான். கடையின் கதவு பாதிமூடப்பட்டு இருக்க.. அதை பார்வையால் உள்வாங்கியவாறே உள்ளே நுழைந்தவன், வாயிலை பார்த்தது போல் நாற்காலியை திருப்பி போட்டு அமர்ந்து கொண்டான்.
 
 
கடையின் உரிமையாளர் அவன் முன்வந்து பவ்யமாக நிற்க.. அவரை ஒரு பார்வை பார்த்தாலும் விநாயக் எதுவும் பேசவில்லை. அடுத்த சில நிமிடங்களில் அடியாட்கள் போல் இருந்த இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். 
 
 
விநாயக்கின் முன் வந்து நின்று பணிவோடு அவர்கள் வணக்கம் வைக்கவும், அதற்கும் ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன் “அதோ அந்த ரூமில் இருக்கான், நம்ம இடத்துக்கு கொண்டு போய் வைங்க.. அடுத்து என்னன்னு அப்புறம் சொல்றேன்..” என்றான் விநாயக்.
 
 
அவர்களும் அந்த அறைக்குச் சென்று கதவை திறக்க.. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அங்கிருந்து தப்பிக்க முயன்ற ராஜனை இருவரும் ஒரே பிடியில் பிடித்து நசுக்கி தூக்கி தோளில் போட்டுக் கொண்டிருந்தனர். இதில் அவன் அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க எவ்வளவு முயற்சித்தும் கொஞ்சமும் வேலைக்கு ஆகவில்லை. 
 
 
“கிளம்பறோம் சார்..” என்று அவர்கள் விநாயக் முன் வந்து நின்று சொல்லி விட்டு வெளியில் செல்லவும், “சரி..” என்று விட்டு விநாயக் எழுந்து கொள்ள.. பெரிதாக எதிலிருந்தோ தப்பித்தோம் என்ற விடுதலை உணர்வோடு முகம் பிரகாசிக்க அவனைப் பார்த்தார் கடையின் உரிமையாளர்.
 
 
ஆனால் அதற்கு நேர் மாறாக முகம் இறுக கடினமாக அவரைப் பார்த்தவன் “இப்போ இங்கே எதுவுமே நடக்கலை.. நீ எதையும் பார்க்கலல புரியுதா..! தேவையில்லாம இங்கே நடந்ததை வெளியே பேசினேன்னு தெரிஞ்சுதுனா இப்போ வந்த இரண்டு பேர் திரும்ப வந்து அதேபோல உன்னை தூக்கிட்டு போக வேண்டி இருக்கும் ஜாக்கிரதை..” என்று விரல் நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி இருந்தான் விநாயக்.
 
 
‘சும்மாவே இங்கு நடந்ததை கண்டு பயந்து போய் இருப்பவர், இப்படி அவன் மிரட்டிய பிறகு இதைப் பற்றி வெளியில் பேசவா போகிறார்..?’ மிரட்சியும் கலக்கமுமாக அவன் சென்ற திசையையே பார்த்தபடி நின்று இருந்தார் கடை உரிமையாளர்.
 
 
******
 
 
இரண்டு நாட்கள் கடந்து இருந்தது..
 
 
உணவு உறக்கம் இல்லாமல் ராஜனை இருளான ஒரு அறைக்குள் அடைத்து வைத்திருந்தனர். அங்கு இருந்த மலையளவு அடியாட்களை பார்க்கும் போதே அவனுக்கு அடி வயிறு எல்லாம் கலங்கியது. ஆனால் அங்கிருந்து ஒருவரும் அவனை எதற்காகவும் நெருங்கவே இல்லை.
 
 
அன்று விநாயக் அப்படி அடித்து துவைத்து இருக்க.. அதன் பின் யாருமே தன்னை கண்டு கொள்ளாதது வேறு அவனுக்கு பெரும் பயத்தை கொடுத்தது. இதைவிட பெரிதாக எதுவோ நடக்கப்போகிறது என்ற எண்ணமே அவனை தினம் தினம் ‘தன்னை விட்டு விடுமாறு..’ கேட்டு கெஞ்சி கதற செய்து கொண்டு இருந்தது. 
 
 
விநாயக் போலீஸ் என்று தெரிந்த நொடியில் இருந்து ‘தெரியாமல் பெரிதாக எதிலோ வந்து சிக்கிக் கொண்டோம்..’ என்று மட்டும் புரிய.. ‘இதிலிருந்து எப்படி தப்பிப்பது..?’ என்று மட்டுமே அந்த ஐஸ்கிரீம் பார்லரின் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த போதிலிருந்து அவன் எண்ணமெல்லாம் இருக்க.. அதற்கு நேர் மாறாக இப்போது எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
 
 
காவல் நிலையத்துக்கும் தன்னை அழைத்துச் செல்லாமல் காவலர்கள் போல் யாரும் இங்கு இல்லாமல் வேறு ஏதோ ஒரு இடத்தில் யாரின் பாதுகாப்பிலோ இப்படி அடைத்து வைக்கப்பட்டிருப்பது எதற்கு ஏன் என்று எதுவும் புரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரகமாக கழித்துக் கொண்டிருந்தான் ராஜன். 
 
 
கிட்டத்தட்ட அரை மயக்க நிலையில் அவன் இருந்த போது மூன்றாம் நாள் காலை அங்கு வந்தான் விநாயக். அவனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மரியாதையோடு வணங்கி நிற்க.. அதற்கு எல்லாம் ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக கொடுத்தவன், நேராக ராஜனின் முன் வந்து நிற்க.. விநாயக்கைக் கண்ட நொடியே அவனுக்குள் பதட்டம் பயம் எல்லாம் மீண்டும் பெரிதாக தொற்றிக் கொண்டது. 
 
 
“அப்புறம் எப்படி இருக்கே..? நம்ம இடத்துக்கு வந்து இருக்கே, விருந்தோம்பல் எல்லாம் எப்படி இருந்தது..?” என்ற அத்தனை நக்கலாக விநாயக் பேசியபடியே, ஒருவன் கொண்டு வந்து போட்ட இருக்கையில் ராஜனுக்கு எதிரில் அமர.. கண்ணில் கலவரம் தேங்கி நிற்க விநாயக்கை பார்த்தான் ராஜன். 
 
 
‘மூன்று நாட்களாக தண்ணீர் கூட கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள் என்று சொல்லவா முடியும்..? இல்லை சொன்னால் தான் தன்னை சும்மா விடுவானா..!’ என்றெல்லாம் மனதில் நினைத்தாலும் வாயைத் திறந்து அவன் எதுவுமே பேசவில்லை. அதே நேரம் “என்ன சாப்பிடறே..?” என்றான் விநாயக்.
 
 
அதில் அவ்வளவு நேரமும் அவனுள் மறந்திருந்த பசி மீண்டும் துளிர்த்தெழ.. எதிர்பார்ப்போடு அவனைப் பார்த்தாலும் ‘வேண்டாம்’ என்று அசைந்தது அவனின் தலை. அதில் போலியாக ஆச்சரியமான விநாயக், “வேண்டாமா..! நிஜமா எதுவும் வேண்டாமா..! அப்புறம் நீங்க சாப்பிட எதுவும் கொடுக்கலைன்னு பீல் செய்ய கூடாது..?” என்று குறைப்பட்டுக் கொள்வது போல் சொல்ல.. “தெரியாம செஞ்சுட்டேன் என்னை விட்டுடுங்க..” என்று தன்னுள் மிச்சமிருந்த சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி கையெடுத்து கும்பிட்டு கெஞ்சினான் ராஜன்.  
 
 
“நேத்து பிறந்த பாப்பா நீ தெரியாம செய்ய.. என்னடா நா** என்ன செய்யறோம்னு தெரியாம தான் அத்தனை அழகா ஏமாத்தி அந்த குழந்தையை அங்கே கூட்டிட்டு போனியா..?” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டவாறே, விநாயக் எழுந்து நின்றதற்கே பயந்து பதறி நான்கடி அமர்ந்தவாறே பின்னுக்கு நகர்ந்தான் ராஜன்.  
 
 
தன் மேலான அவன் கோபத்தைக் கண்டவனுக்கு கண்டிப்பாக அவ்வளவு எளிதாக தன்னை விநாயக் விட்டு விட மாட்டான் என்று தெளிவாக புரிய.. “சரி தப்பு தான் ஒத்துக்கறேன்.. நான் செஞ்சது தப்பு தான், என்னை போலீஸில் பிடிச்சு கொடுத்துடுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிடுங்க..” என்று இங்கிருந்து அங்கே சென்று விட்டால் கூட பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விட்டிருந்தவன், தயக்கமும் தடுமாற்றமுமாக பேசிக்கொண்டே செல்ல.. ஏதோ பெரிய நகைச்சுவையை கேட்டது போல் சத்தம் போட்டு சிரித்து இருந்தான் விநாயக்.
 
 
அந்தக் குரலே ராஜனின் வயிற்றில் புளியை கரைத்தது. அதில் மிரட்சியோடு விழிகளை உயர்த்தி அவன் விநாயக்கை பார்க்க.. அதே நேரம் அவனைப் பார்த்தபடியே சிரித்துக்கொண்டிருந்தவனின் முகம் திடீரென மாற.. அப்படியே இறுகிப்போன முகத்தோடும் ரத்தமென சிவந்த விழிகளோடும் அவன் முன் ஒற்றை காலை மடக்கி குனிந்து அமர்ந்தவன், “அவ்வளவு சீக்கிரம் என்கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்னு நினைக்கறியா..?” என்றான் விநாயக்.
 
 
அந்தக் குரலே அவனுள் குளிரை பரவ செய்ய.. கலவரத்தோடு விநாயக்கை பார்த்தான் ராஜன். “என்ன போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டு போய் உன் மேலே கேஸ் போட்டு நீ சட்டத்தில் இருக்க ஓட்டையை, பள்ளத்தை, குழியை எல்லாம் பயன்படுத்தி வெளியே வருவதை நான் கையாலாகாம கைகட்டி வேடிக்கை பார்ப்பேனஅனு நினைச்சியா..? இன்னைக்கு போக்ஸோவில் உன்னை உள்ளே போட எனக்கு ரொம்ப நேராகாது.. ஆனா நீ கொஞ்ச நாளிலேயே ஏதாவது ஒரு காரணத்தை வைச்சு வெளியே வந்துடுவே, அப்புறம் இதையே தான் இன்னொரு குழந்தைக்கும் செய்வே.. இதையெல்லாம் விரல் சூப்பிட்டு நான் வேடிக்கை பார்ப்பேன்னு நினைச்சியா..?” என விநாயக் பல்லை கடித்தபடி ஆத்திரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தும் குரலில் பேசிக் கொண்டிருக்க.. “இல்லையில்லை, இனி நான் இப்படி செய்யவே மாட்டேன்..” என்று பதறி கதறினான் ராஜன்.
 
 
“ஹாஹா இதையெல்லாம் புயல் காத்தில் உட்கார்ந்து எவனாவது பொறி சாப்பிட்டுட்டு இருப்பான் அவன்கிட்ட போய் சொல்லுடா.. உனக்கு நான் கொடுக்கப் போற தண்டனையே தனிரகம்.. என் ஸ்டைலில் இருக்கும், இன்னும் கொஞ்ச நேரம் வெயிட் செய்..” என்றவன் எழுந்து கொள்ளவும் அங்கு ஒரு வேன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
 
 
கிட்டத்தட்ட பத்து பெண்கள் தயக்கமும் கலக்கமுமாக யோசனையோடு அந்த இடத்தை விழிகளால் சுற்றிப் பார்த்தபடியே உள்ளே நுழைந்தனர். “வாங்க உங்களுக்காக தான் காத்திருக்கேன்..” என்ற விநாயக் சொல்லவும், “என்ன விஷயம் சார்..? நீங்க கூப்பிட்டீங்கன்னு சொன்னதும் உடனே கிளம்பி வந்துட்டோம், ஆனா..” என்று அதில் இரண்டு பேர் முன்னே வந்து மெதுவாக கேட்கவும் “சொல்றேன்..” என்றவன் திரும்பி ராஜனை பார்க்க.. அவர்களின் பார்வையும் அவன் மேல் பதிந்தது.
 
 
இவர்கள் எல்லாம் யார் என்பது போல் அவனும் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க.. “என்ன இவங்க யாருன்னு பார்க்கறியா.. இரு இப்போ தெரிஞ்சிடும்..” என்றவன், “உன்னை மாதிரியே சில கயவர்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளோட அம்மா தான் இவங்க எல்லாம்.. இன்னைக்கு வரை தன் குழந்தைக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்டு போராடி, அது கிடைக்காமல் சோர்ந்து போயிருக்க ஒரு சிலர் இவங்க..” என்றவன் நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி முடிப்பதற்குள் அவன் கண்ணில் கலவரம் அப்பட்டமாக தெரிந்தது. 
 
 
அதை திருப்தியாக பார்த்து விட்டு இவர்கள் பக்கம் திரும்பிய விநாயக் “உங்களையெல்லாம் ஏன் இங்கே வர சொன்னேன்னு கேட்டீங்க இல்லை, இதோ இவரை பார்க்க தான்.. இவர் தான் நம்ம ஸ்பெஷல் கெஸ்ட், இவரை நாம எப்படி கவனிக்கலாம்னு உங்க கூட டிஸ்கஸ் செய்யணும்.. நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளியை நாம தானே ஸ்பெஷலா கவனிப்போம்.. அந்த மாதிரி எந்த குறையும் இல்லாமல் இவரை நாம தான் கவனிக்க போறோம்..” என்றதும் அவர்கள் புரியாமல் விநாயக்கை பார்த்திருந்தனர். 
 
 
“உங்களுக்கெல்லாம் இன்னும் புரியலைன்னு நினைக்கறேன்.. இவர் யாருன்னு நான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க, சார் தான் ஒரு ஆறு வயசு குழந்தைகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செஞ்ச மகா புண்ணியவான்..” என்றதும் அங்கு இருந்த பெண்களுக்கெல்லாம் முகம் ஆத்திரத்தில் சிவந்தது.
 
 
“நல்ல வேளையா சரியான நேரத்தில் அந்த குழந்தையை எந்த பாதிப்பும் இல்லாம காப்பாத்தியாச்சு.. ஆனா அதுக்காக சாரை சும்மா விட்டுட முடியுமா..! அவ்வளவு தைரியமா அத்தனை பேர் வந்து போற இடத்தில் வெச்சே இப்படி ஒரு செயலை சார் செய்யறார்னா, இதுக்கு முன்னே எத்தனை இது போல செஞ்சு இருப்பார்..? இனி எத்தனை செய்யப் போறாருன்னு நாம யோசிக்கணும் இல்லை..?” என்று சொல்லி சிறு இடைவெளி விட்டவன், “உங்க மனசுக்குள்ளே எல்லாம் ஒரு பெரும் கோபம் உங்க குழந்தை பாதிக்க காரணமானவனை நாம எதுவுமே செய்ய முடியாத ஒரு கையாலாகாத தனத்தோட இருக்கோமேன்னு இன்னைக்கு வரைக்கும் இருக்கும் இல்லையா.. அதுக்கு எல்லாம் தீனி போடற மாதிரி உங்க கோபத்தை வெறுப்பை ஆத்திரத்தை எல்லாம் உங்க விருப்பப்படி இவனுக்கு தண்டனை கொடுத்து தீர்த்துக்கோங்க..” என்று விநாயக் சொல்லி முடித்த நொடி, அதற்காகவே காத்திருந்தது போல் அவன் மேல் அத்தனை பேரும் பாய்ந்தனர். 
 
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. 
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
MNKN - 21
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 7 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1785254254-IMG-20260728-WA0001.jpg
 
 
மௌனம் - 22
 
அன்று நண்பர்கள் குழு விநாயக் வீட்டில் கூடியிருந்தது. நிமலன் அரசியல் சம்பந்தப்பட்ட ஒரு பேச்சுவார்த்தைக்காக டெல்லி வரை சென்று இருந்தான். வர்மாவும் தன் நிலாவை அழைத்துக் கொண்டு ஒரு வெளிநாட்டு ட்ரிப் சென்று விட்டான்.
 
 
அதனால் அவர்கள் இருவரை தவிர மற்றவர்கள் எல்லாம் இன்று இங்கே சேர்ந்து இருந்தனர். அபிராமி இரண்டு நாள் பயணமாக மதுரை வரை ஒரு கோவில் கும்பாபிஷேகத்திற்கு சென்று இருந்தார். அதனால் இன்றைய இவர்களின் குழு இங்கே கூடி இருந்தது.
 
 
சமையலறையில் சிக்கன் ஸ்டஃப்டு பிரட் டோஸ்ட்டை விநாயக் செய்து கொண்டிருக்க.. அவன் அருகில் மேடை மேல் ஏறி அமர்ந்து வளவளத்துக்கொண்டு இருந்தாள் அபி.
 
 
“ஹ்ம்ம் அப்புறம் என்னாச்சு சொல்லு வினய், கேட்கவே செம மாஸா இருக்குடா இந்த சீன், இப்படியெல்லாம் இவனுங்களை தூக்கி போட்டு மிதிச்சா தான் உண்டு.. இல்லைனா ஈசியா வெளியே வந்துடுவானுங்க, செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு பாவமா முகத்தை வைச்சுட்டு தையல் மெஷின் வாங்கிட்டு போயிடுவாங்க பர** பயலு**” என்று அவள் திட்டிக் கொண்டிருக்க.. அதுவரை தொலைக்காட்சியை பார்த்தவாறு அமர்ந்திருந்த தர்ஷன் “அவ்வா பேட் வேர்ட்ஸ் பேசறே நீ..” என்றபடியே அங்கு வந்து நின்றான்.
 
 
“ஆமாடா அப்படித்தான் பேசுவேன் என்ன செய்வே..?” என அவனைப் பார்த்து இவள் இதழை சுழிக்க.. “நான் என்ன செய்வேன்.. ஆண்ட்டிகிட்ட சொல்லி உன் வாயிலேயே நாலு போட சொல்லுவேன், வேற எதுவும் செய்ய மாட்டேன்ப்பா..” என அவனும் அவளைப் பார்த்து பழிப்பு காண்பித்தான்.   
 
 
“ச்சீ ப்பே..” என்று அபி முறைக்க.. “ஹே தீனி பண்டாரம் இங்கேயே செட்டில் ஆகிட்டியா நீ..! என்னடா அவன் உள்ளே போய் இவ்வளவு நேரமாகுதே இன்னும் ஆளையே காணோமேன்னு பார்த்தேன்.. இப்போ இல்லை புரியுது, இங்கே அவன் செய்யும் போதே நீ உள்ளே தள்ளிட்டு இருந்தா எப்படி வெளியே எங்களுக்கு வரும்..?” என்று அவன் விடாமல் அவளை வம்புக்கு இழுக்க தொடங்கினான். 
 
 
“ஆமா நான் இங்கே எடுத்து சாப்பிட்டதை இவரு பார்த்தார், போடா..” என்று முகத்தை சுழித்தவள், “நீயே சொல்லு வினய், நான் ஒண்ணு கூட எடுக்கலை தானே..!” என அவனையே சாட்சிக்கு அழைக்க.. விநாயக் சிரித்துக்கொண்டே “அவ எதுவும் எடுக்கலை தர்ஷு, நான் இப்போ தான் செய்யவே ஆரம்பிக்கறேன்.. இவ்வளவு நேரம் பிரிப்பரேஷனுக்கே சரியா இருந்தது..” என்றான். 
 
 
“ஆமா இதைத்தான் பெரியவங்க உதவியா இல்லைனாலும் உபத்திரவமா இருக்கக் கூடாதுன்னு சொல்லுவாங்க.. இப்படி ஒரு உபத்திரவத்தை பக்கத்திலேயே வெச்சுட்டு இருந்தா உனக்கு வேலை எப்படி சீக்கிரம் முடியும்..? அவனை தொல்லை கொடுத்தது போதும் குரங்கு, எழுந்து வெளியே வா..” என்றான் தர்ஷன்.
 
 
“ஹாங் அங்கே வந்து உன் முகத்தை பார்த்துட்டு உட்கார சொல்றியா..? அதுக்கு நான் இங்கேயே இருப்பேன், போ போ..” என அவளும் அவனை வெறுப்பேற்ற.. “ஏன் எனக்கு என்ன குறைச்சல்..? ஊரே தவம் இருக்கும்மா என் முகத்தை பார்க்க..” என்று சொல்லியபடியே எட்டி அவள் தலையில் தட்டினான் தர்ஷன். 
 
 
“அப்போ அங்கேயே போய் உன் அழகு முகத்தை காட்டு, இங்கே எங்களுக்கு வேண்டாம்..” என இவளும் சலிக்காமல் பதில் கொடுக்க.. செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி இருவரையும் திரும்பி முறைத்தவன் “மரியாதையா இரண்டு பேரும் வெளியே ஓடிடுங்க..” என்றான். 
 
 
“இதைத்தான் நான் சொன்னேன்..” என்று தர்ஷன் அங்கிருந்து நகர போக.. “எல்லாம் உன்னால் தான்டா, இவ்வளவு நேரமும் வினய் என் கூட நல்லா தான் பேசிட்டு இருந்தான்.. நீ வந்த பிறகு தான் என்னையும் சேர்த்து விரட்டறான்..” என்று புலம்பியபடியே இறங்கியவன், “அவன் தான் போயிட்டானே.. நான் இங்கேயே இருக்கவா..?” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு விநாயக்கிடம் கேட்டாள்.
 
 
அதற்குப் புன்னகையுடன் என்றாலும் மறுப்பாக தலையசைத்த விநாயக், “வேண்டாம் நீ திரும்ப இங்கே உட்கார்ந்தா, அவனும் திரும்ப வந்து நிற்பான்.. எனக்கு வேலை முடியணும், பசிக்குதுடா சீக்கிரம் முடிச்சா தானே சாப்பிட முடியும்..!” என அவளை அனுப்பிவிட்டு, இரண்டு பக்கமும் நானஸ்டிக் தவ்வா வைத்து வேக வேகமாக வேலையை பார்த்தான் விநாயக்.
 
 
அவளுக்கும் பசி எடுக்கவும் மறுப்பேதும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள் அபி. திடீரென்று தான் இன்று அனைவரும் சந்திப்பது என முடிவானது. வழக்கம் போல் எங்காவது பொதுவான ஒரு இடத்தில் சந்திக்க நினைத்தவர்கள், பின் மற்ற இருவரும் வர முடியாத சூழ்நிலை என்று தெரிந்து அடுத்து என்ன செய்யலாம் என பேசி இறுதியாக விநாயக் வீட்டிலேயே சந்திப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தனர்.
 
 
சிறுவயதிலிருந்தே அனைவரும் ஒரே வீதியில் அடுத்தடுத்தும் எதிரெதிர் வீடுகளிலும் தான் வசித்தார்கள் என்றாலும், பெரும்பாலும் அவர்கள் சந்தித்துக் கொள்வது வெளியிடங்களில் தான். அனைவருமே பெரிய வீட்டுப் பிள்ளைகள் என்பதால் ஒரு கெஸ்ட் ஹவுஸ் ஒவ்வொருவரின் தேவைக்கு என்று அவரவர் பெயரில் கண்டிப்பாக இருந்தது.
 
 
அதில் ஒன்றைத்தான் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்வார்கள். தவிர்க்க முடியாத சில நேரங்களில் அவசர சந்திப்புக்கு மட்டுமே யாருடைய மொட்டை மாடியிலாவது குழுவை கூட்டுவார்கள்..
 
 
நேற்று மதியம் வெளியில் சென்றிருந்த விநாயக், இன்று காலை பதினொரு மணியளவில் வீடு திரும்பியிருந்தான். மீண்டும் வெகு தூரம் பயணிக்க அவனுக்கு சோர்வாக இருந்தது. அதோடு உடலும் உறக்கத்திற்கு கெஞ்சவும் இங்கேயே அனைவரையும் வரச் சொல்லி விட்டிருந்தான்.
 
 
மூவரும் வெளியே ஏதோ பேசி சிரித்து அமர்க்களம் செய்து கொண்டிருப்பது கேட்க.. அதையெல்லாம் கவனித்தவாறே வேகமாக சமைத்து முடித்து தனி தனி தட்டில் கொண்டு வந்து அவர்கள் கையில் கொடுத்தவன், தானும் அங்கு அமர்ந்து கொள்ள.. பொதுவாக பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
 
 
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பில
 
 
என துஷ்யந்தின் அலைபேசி இசைத்தது. அதில் அனைவரின் கவனமும் அந்தப் பக்கம் திரும்ப.. விழிகளாலேயே அவர்களிடம் சொல்லிக் கொண்டு அலைபேசியை எடுத்தபடி நகர்ந்து சென்றான் துஷ்யந்த்.
 
 
அவன் மீண்டும் வந்து அமரவும், “ஆஹான் தென்றல் வந்து தீண்டுச்சா மச்சான்..?” என்று தோளோடு இடித்து லேசாக கேலி செய்தான் விநாயக். அதில் புன்னகையோடு தனக்கே உரிய ஸ்டைலில் இரு பக்க மீசையையும் இருவிரல் கொண்டு ஒருமுறை நீவி விட்டுக் கொண்டவன், “தீண்டுச்சா.. தீண்டலையான்னு எனக்குன்னு ஒரு கதையை தனியா வெச்சு இருப்பாங்க, அப்போ தெரிஞ்சுக்கலாம்.. இப்போ உன் கதையை பார்ப்போமா..! அடுத்து என்ன பிளான்..?” என்றான் துஷ்யந்த். 
 
 
இதில் அவ்வளவு நேரமும் இருந்த விளையாட்டுத்தனம் காணாமல் போக முகத்தை தீவிரமாக மாற்றியவன் “பிளான் நிறைய இருக்கு, ஒண்ணு ஒண்ணா தான் செயல்படுத்தணும் பார்க்கலாம்..” என்றான் விநாயக்.
 
 
இதில் மூவரின் முகமும் தீவிரமான யோசனைக்கு செல்ல.. “சரி அதை விடு, உன் படம் எப்போ ரிலீஸ்..?” என விநாயக் தான் அடுத்த பேச்சை துவக்கி வைத்தான். “ஹ்ம்ம் அனேகமா இந்த தீபாவளிக்கு இருக்கும்னு நினைக்கறேன்..” என துஷ்யந்த் சொல்லவும், “என்னடா நீயே இவ்வளவு யோசிக்கறே..! உன்கிட்டையே படம் எப்போ ரிலீஸ்னு ப்ரொடியூசர் மேடம் சொல்லலையா என்ன..?” என்று விநாயக் முகத்தை பார்த்தபடியே துஷ்யந்தை வம்புக்கு இழுத்தான் தர்ஷன். 
 
 
“அதெல்லாம் சொன்னாங்க, இந்த படத்தில் கொஞ்சம் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வொர்க் நிறைய இருக்கு.. அதனால் ஒருவேளை தாமதமாகலாம்னு கூட சேர்த்து தான் சொன்னாங்க.. அதனால் தான் சரியா என்னால் சொல்ல முடியலை.. இப்போ என்ன தீபாவளிக்கு மிஸ் ஆனா பொங்கலுக்கு வரப்போகுது.. அதுவும் இல்லைனா நியூ இயர்க்கு ரிலீஸ் செஞ்சுக்கலாம் விடு..” என்று புன்னகைத்தான் துஷ்யந்த்.
 
 
“அடுத்து என்ன படம் துஷி..?” என்றாள் அபி. “ஒரு ஆக்ஷன் த்ரில்லர், செம கான்செப்ட்.. நியூ டைரக்டர், பட் ஸ்கிரிப்ட் நல்லா இருந்ததினால் ஓகே செஞ்சுருக்கேன்.. அடுத்த மாசத்தில் ஷுட் ஸ்டார்ட் ஆகும்னு நினைக்கறேன்..” என்றான் துஷ்யந்த்.
 
 
“அப்போ அதுவரைக்கும் நீ ஃப்ரீயா..?” என்று தர்ஷன் கேட்கவும், “இல்லை மச்சான் ஒரு படத்துக்கு டப்பிங் ஒர்க் போயிட்டு இருக்கு.. இன்னொரு படத்துக்கு டிஸ்கஷன் போயிட்டு இருக்கு, பிஸியா தான் ஓடிட்டு இருக்கேன்..” என தன் வேலைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டான் துஷ்யந்த்.
 
 
“அப்புறம் மச்சி கங்கிராட்ஸ், சமீபமா இரண்டு விஷயங்கள் நீ செஞ்சதை பற்றி கேள்விப்பட்டேன்.. ஆனால் அப்போ என்னால் நேரில் வந்து உன்னை பார்த்து பாராட்ட முடியலை.. இரண்டுமே கொல மாஸ் மாமே.. இப்படியே நீ கலக்கு..” என்று விநாயக்கிற்கு கை கொடுத்தான் துஷ்யந்த்.
 
 
அதற்கு ஒரு புன்னகையோடு தலையசைத்தவன் “பெருசா நான் எதுவும் செஞ்சுடலை மச்சி, நாம கஷ்டப்பட்டு பிடிச்சு கொடுக்கும் ஒரு குற்றவாளிங்க எந்த தண்டனையும் இல்லாம ரொம்ப சுலபமா வெளியே வரும் போது எல்லாருக்கும் வரும் ஒரு தார்மீக கோபம் தான் எனக்கும்.. அப்போ அவங்க வெளியே வராம இருக்க என்ன செய்யணுமோ அதை தான் நானும் செஞ்சேன்..” என்றான் விநாயக்.
 
 
“நீ நினைக்கிறது தப்பே இல்லை வினய், இப்படி எல்லாம் செஞ்சா தான் சில மிருகங்களுக்காவது தண்டனை கிடைக்கும்.. இல்லை அத்தனையும் நாட்டில் சுத்தும், நாம காட்டில் வாழ வேண்டியதா மாறிடும்..” என்று அபி தன் கோபத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியவாறே பேச.. “நீ எதுக்கு இப்போ இவ்வளவு பொங்குறே..?” என்றான் தர்ஷன். 
 
 
“அப்படிதான்டா பொங்குவேன், எனக்கு இந்த நாட்டு மேலேயும் இங்கே இருக்க மக்கள் மேலேயும் அக்கறை இருக்கு.. உன்னை மாதிரி இல்லை, வயசு வாரியா சைஸு வாரியா சைட் அடிச்சா போதும்னு வாழ்ந்துட்டு போக..” என்று அபி அவனை கேலி செய்ய.. “எனக்கும் இந்த நாட்டு மேலேயும் அதில் இருக்க பொண்ணுங்க மேலேயும் அக்கறை இருக்கு, அதனால் தான் அவங்களை பார்த்து ரசிக்கறேன்..” என்றான் தர்ஷன்.
 
 
“இது என்ன மாதிரி பதில்..?” என அபி முறைக்க.. துஷ்யன் மற்றும் விநாயக் அவன் பேசிய விதத்தில் சேர்ந்து சிரித்தனர். “ஆமா மச்சி ஒரு பொண்ணு இன்னைக்கு பார்த்து பார்த்து அலங்காரம் செய்யறது எல்லாம் எதுக்கு..? நம்மளை மாதிரி நாலு பேர் பார்த்து ரசிக்க தானே..! நாமளும் கண்டுக்கலைனா அவங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்..? அப்படி எந்த பொண்ணும் மனம் வாடிப் போயிட கூடாதுன்னு தான் பெரிய மனசு செஞ்சு என் வேலையையெல்லாம் ஒதுக்கி வைச்சுட்டு அவங்களுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்கறேன்..” என தர்ஷன் தீவிரமான முக பாவத்தோடு பேசிக்கொண்டு இருந்தான். 
 
 
அதில் கடுப்பானவள் “சரி சரி இவனை விட்டா இப்படியே வெட்டி கதை பேசி நேரத்தை ஒட்டிடுவான்.. நான் உங்ககிட்ட எல்லாம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும், அதுக்காக தான் இன்னைக்கு பேசலாம்னு கூப்பிட்டேன்.. ஆனா அவங்க இரண்டு பேரும் எஸ் ஆகிட்டானுங்க.. சரி அப்புறம் நான் அவங்ககிட்ட தனியா பேசிக்கறேன்..” என தொடங்கினாள் அபி.
 
 
அதில் மற்ற இருவரின் கவனமும் அவள் பக்கம் திரும்ப.. தர்ஷன் மட்டும் அதில் பெரிதாக ஈடுபாடு இல்லாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
 
 
“இவன் ஏன் இப்படி விளக்கெண்ணெய் குடிச்சா மாதிரி இருக்கான்..? இவனுக்கு முன்னேயே விஷயம் தெரியுமா..!” என்று தான் ஒரு நல்ல போலீஸ்க்காரன் என்பதை மீண்டும் நிரூபித்தான் விநாயக். “ஹ்ம்ம் தெரியும்..” என்று தலையசைத்த அபி “நான் ஏதாவது ஒரு கிராமத்துக்கு போய் வேலை செய்யலாம்னு இருக்கேன்..” என்றாள்.
 
 
‘இது என்ன புதிதாக..?’ என்பது போல் இருவரும் அவளை பார்க்க.. “அப்பாவோட ஆசை வினய்..” என அபி சொல்லவும் “ஆமா அங்கிள் கூட ஆறு மாசத்துக்கு ஒரு முறை இதுபோல போவாரே..” என்றான் துஷ்யந்த். 
 
 
“ஆமா, ஆனா அவர் பதினைந்து நாள் கேம்ப் தான் போவார்.. நான் அப்படி இல்லை..” என்று சொல்லி அவள் சிறு இடைவெளி விடவும் இருவரும் கேள்வியாக அவளை பார்த்தனர். “நான் ஒரு வருஷமோ இல்லை இரண்டு வருஷமோ அங்கேயே தங்கி வேலை செய்யலாம்னு இருக்கேன்..” என்றாள் அபி. 
 
 
அதில் அவளை வியப்பாக அவர்கள் பார்க்க.. “இங்கே நாம எவ்வளவு தான் சேவை செஞ்சாலும் அது வீணா போறது போல அப்பாவுக்கு ஒரு எண்ணம்.. இங்கே நிறைய ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் இருக்கு, நிறைய ஸ்பெஷலிஸ்ட்ங்க இருந்துட்டே இருப்பாங்க.. ஒருத்தர் இல்லைனா ஒருத்தர் நிச்சயம் அவசரத்துக்கு பார்ப்பாங்க.. ஆனா இன்னும் சில கிராமங்களில் பல வசதிகள் கிடைக்கறதே இல்லை.. அப்படி ஒரு இடத்தில் தான் நம் தேவை அதிகமாக இருக்கும் அப்படின்னு அப்பா அடிக்கடி சொல்லுவார்.. அதனால் தான் நானும் அங்கே போய் சும்மா பத்து நாளோ பதினைந்து நாளோ இருந்து டிரீட்மென்ட் கொடுப்பதை விட, அவங்க கூடவே இருந்து கொஞ்ச நாள் என்னால் முடிஞ்ச உதவிகளை செய்யணும்னு நினைக்கறேன்..” என்றாள் அபி.
 
 
“நல்ல விஷயம் தான் செய்..” என்று விநாயக் சொல்லவும், துஷ்யந்தும் தன் இருக்கைகளின் கட்டைவிரலையும் உயர்த்திக் காண்பித்து புன்னகைத்தான். “இந்த சப்போர்ட் செய்யறது, சிங்கப் பெண்ணேன்னு பாடறது.. இந்த நாட்டுக்கு சேவை செய்யவே நீ பிறந்து இருக்கேன்னு கொஞ்சறதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.. முதலில் அவ எந்த ஊருக்கு போக முடிவு எடுத்து இருக்கான்னு கேளுங்க..?” என்றான் தர்ஷன். 
 
 
அதில் மற்றவர்களின் கவனம் அபியின் பக்கம் திரும்ப.. அவள் சொன்ன ஊரைக் கேட்டு இருவருமே திகைத்து பார்த்தனர்.
 
 
********
 
 
அன்று நந்தினிக்கு பிறந்தநாள்..
 
 
பெரிதாக எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சாதாரணமாகவே அறைக்குள் தயாராகி கொண்டிருந்தவளின் மனம் ஒருவனையே சுற்றிக் கொண்டிருந்தது.
 
 
இதற்கு மேலும் இங்கே தனியே இருந்தால் தன் மனதை தன்னாலேயே கட்டுப்படுத்த முடியாது எனப் புரிந்து கீழே இறங்கி வந்தாள் நந்தினி. அங்கே வழக்கம் போல் நடுநாயகமாக வேதவல்லி அமர்ந்திருக்க.. அவரை நேருக்கு நேர் பார்க்காமல் பார்வையை தழைத்துக் கொண்டே இறங்கியவளை சமையலறையில் இருந்து கவனித்து விட்டிருந்த சித்ரா “இப்படி வா..” என்று பூஜை அறைக்கு அழைத்துச் சென்று மனதார பிராத்தித்து கொண்டவர், “நீயும் நல்ல வேண்டிக்கோ.. நீ ஆசைப்படுற எல்லாம் நடக்கணும், எல்லாம் கிடைக்கணும் நல்லா வேண்டிக்கோ..” என்றார். 
 
 
அதில் அவரை வெறுமையாக திரும்பி பார்த்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக விழிமூடி நின்றாள். அவளுக்கு இப்போது எந்த வேண்டுதலும் இல்லை. வருட கணக்காக வேண்டியது எதுவுமே நடக்காததில் உண்டான ‘விரக்தியா..! சோர்வா..!! இல்லை தனக்கு எதுவுமே சரியாக நடக்காது என்ற எண்ணமா..?’ என தெரியவில்லை. 
மற்றவர்களுக்கு என்று வரும் போது ஒரு விஷயத்தை முனைப்பாக செய்ய நினைப்பவள், அதுவே தனக்கென வரும் போது அதை பற்றி யோசிக்கக்கூட தயாராக இல்லை. 
 
 
இப்போதும் அப்படியே அவள் அமைதியாக விழிமூடி நின்றிருக்க.. சித்ரா அங்கு இருந்த விபூதியை எடுத்து மகளின் நெற்றியில் பூசினார். அதிலேயே விழிகளை திறந்தவளிடம் “ஹாப்பி பர்த்டே நந்தும்மா..” என்று மகளின் கன்னம் பற்றி வருடினார் சித்ரா. அவரை பார்த்து மெலிதாக புன்னகைத்தாள் நந்தினி.
 
 
பத்து வயது குழந்தையாக தன் கணவரை இழந்த நிலையில் மகளின் கைபிடித்தப்படி ‘இவளை எப்படி வளர்த்து ஆளாக்கப் போகிறோமோ..?’ என்று கலங்கி நின்றதெல்லாம் அவர் மனக்கண்ணில் ஓடியதில் சித்ராவின் விழிகளும் லேசாக கலங்கியது. 
 
 
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்களது பெரிதான பிரச்சனைகள் எதுவுமில்லாத ஒரு வாழ்க்கை.. மற்ற வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களைப் போல உணவிற்கும் இருப்பிடத்திற்கும் வாழ்க்கையோடு போராட வேண்டியது இல்லை. ஆனால் இவரின் போராட்டம் முற்றிலும் வேறு ஒருவரோடு இருந்தது. 
 
 
வசதி வாய்ப்புகளுக்கு கொஞ்சமும் குறைவில்லை என்றாலும் இங்கு கொடுப்பதை சொல்லி காண்பித்துக் கொண்டே இருப்பதும் ஒருவகை நரகம் தான் என வெளியில் இருப்பவர்களுக்கு சொல்லி புரிய வைத்து விட முடியாது..
 
 
இங்கே அத்தனையையும் பொறுத்துக் கொண்டு பேசவே மறந்தது போல் அவர் இருந்ததின் இன்றைய பலன் நந்து தன் கண் முன் வளர்ந்து படித்து நல்ல ஒரு நிலையில் தன் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறாள். 
 
 
இந்த நொடி இதுவே அவருக்கு போதும் என மனம் எண்ணினாலும் அவளுக்கு வளமான வாழ்க்கையை நல்ல ஒரு இடத்தில் அவளுக்கு பிடித்த ஒருவனோடு அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்று அவர் மனதிற்குள் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. 
 
 
இன்று அவளின் இருபத்து ஐந்தாவது பிறந்தநாள்.. இதுவரை அவளின் திருமண பேச்சை யாருமே எடுக்கவில்லை. அதுவே சித்ராவுக்கு ஒரு மன குறை தான். அவராக தொடங்கவும் தயக்கமாக இருந்தது திருமணம் என்றால் எத்தனை செலவுகள் இருக்கும் சட்டென அதை சொல்லி வேதவல்லி ஏதாவது பேசிவிட்டால் என்ற பயமே அவரை தயங்கி தடுமாறி தனக்குள்ளேயே தவிக்க செய்து கொண்டிருந்தது. 
 
 
இதெல்லாம் மனதில் ஓட மகளின் முகத்தையே அவர் லேசாக கண்களில் தேங்கி இருந்த விழி நீரோடு பார்த்துக் கொண்டிருக்க.. தன் துயரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு “என்னம்மா என்னாச்சு..?” என்றாள் நந்தினி. 
 
 
அதில் வேகமாக விழிகளை மூடி ஒண்ணுமில்லை என்பது போல் தலையசைத்தவர், கன்னங்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடியே திரும்பி அவர் தானே தொடுத்து வைத்திருந்த பூவை கொடுத்தவாறே “இந்தா இதை வெச்சுக்கோ.. சீக்கிரம் வா, கோவிலுக்கு போயிட்டு வந்துடலாம்..” என்றார்.
 
 
அவர் கையில் இருந்த மல்லிகைப்பூவை பார்த்த நந்தினிக்கு மனம் மீண்டும் அவனை நோக்கியே சென்றது. அதில் அவள் அப்படியே வாங்காமல் நிற்க, மகளின் கையைப் பிடித்து “ஹ்ம்ம் பிடி, வெச்சுக்கோ.. என்ன யோசனை..? நேரமாகுது பார் சீக்கிரம் கிளம்பு..” என்றார் சித்ரா. அதை மறுக்க முடியாமல் பூவை வாங்கி வைத்துக் கொண்டவளின் மனது அவளை அறியாமலேயே.. 
 
 
மன்னவன் பேரைச் சொல்லி
மல்லிகை சூடிக் கொண்டேன்
மன்மதன் பாடல் ஒன்று
நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன்
 
 
என்று தனக்குள்ளேயே பாடியது. இது அவளின் பல வருட வழக்கம், மல்லிகை பூவை பார்த்தாலே அவன் நினைவு தான் நந்தினிக்கு வரும். அவன் அன்று வாங்கி கொடுத்த மல்லிகை பூவை இந்தப் பாடலை முணுமுணுத்தபடியே தான் வைத்துக் கொண்டிருந்தாள் நந்தினி.
 
 
அதன் பின் எப்போது மல்லிப்பூவை பார்த்தாலோ, இல்லை வைத்துக் கொண்டாலோ அவளுக்கு இந்தப் பாடல் தன்னையறியாமலே மனதில் ஓடும்.
 
 
அதில் அவள் அங்கே அப்படியே அசையாமல் நின்று விட, நந்தினியின் கண்கள் கலங்கியது. ‘அவனுக்கு தன் நினைவாவது இன்று வருமா..? தனக்கு பிறந்தநாள் என்றாவது தெரியுமா..!’ என்றெல்லாம் கழிவிறக்கத்தில் கண்கள் கலங்க அவள் நின்றிருக்க.. “இன்னும் என்ன தான் செஞ்சுட்டு இருக்கா அங்கே உன் மக..?” என்ற வேதவல்லியின் குரல் அவளின் மோன நிலையை கலைத்தது. 
 
 
பூவை மகளிடம் கொடுத்துவிட்டு சித்ரா எப்போதோ வெளியில் சென்று விட்டிருந்தார். அவரிடம் வேதவல்லி கத்திக் கொண்டிருப்பது புரிய.. வேகமாக அங்கிருந்து வெளியில் வந்தாள் நந்தினி.
 
 
அவளையே கடுகடுவென பார்த்துக் கொண்டிருந்த வேதவல்லியை நெருங்கி அவரின் காலை தொட்டு நந்தினி வணங்கவும், “ஹ்ம்ம் நல்லா இரு..” என்றபடியே தன் அருகில் இருந்த நகை பெட்டியை எடுத்து திறந்து காண்பித்தார் வேதவல்லி. 
 
 
இரண்டு சவரன் அளவில் இருக்கும் மெல்லிய சின்னச்சின்ன பூக்களை கோர்த்தது போலான கழுத்தை ஒட்டிய வகையிலான ஒரு சின்ன செயின் அது. அவரின் வசதிக்கும் அந்தஸ்துக்கும் இது மிகக் குறைவு என்று தெரிந்தாலும் “தேங்க்யூ வேதாம்மா..” என அவள் கூறவும், அவரின் பார்வை நந்தினியின் கழுத்தில் பதிந்தது. 
 
 
எப்போதும் போல் இன்றும் விநாயக் வாங்கி கொடுத்திருந்த அந்த செயினை தான் அவள் அணிந்திருந்தாள். “இன்னைக்கும் இதையே தான் போடணுமா..? முதலில் அதை கழட்டி ஏறி, இந்தா இதை போட்டுக்கோ..” என அவர் சிடுசிடுக்க.. அவளால் எப்படி அதை செய்து விட முடியும்..? அதில் உண்டான தயக்கத்தோடு தன்னையும் அறியாமல் நந்தினியின் வலது கை உயர்ந்து அந்த செயினை கெட்டியாக பற்றியது. 
 
 
தான் சொல்லியும் கேட்காமல் அவள் அப்படியே நிற்பதில் உண்டான கடுப்போடு “சிலை மாதிரி ஏன் அப்படியே நிற்கறே..? ஒரே விஷயத்தை எத்தனை முறை உனக்கு சொல்றது.. ஹ்ம்ம் கழட்டு, நானே இதை போட்டு விடறேன்..” என்றார் வேதவல்லி. 
 
 
“இல்லை வேதாம்மா, நேரமாகுது அம்மா கோவிலுக்கு போகணும்னு சொன்னாங்க.. நீங்க கெடுங்க நான் அப்புறம் போட்டுக்கறேன்..” என நந்தினி சமாளிக்க முயன்றாள். “என்னது அப்புறம் பொட்டுக்குவியா..? நீ எப்போவோ போட்டுக்கவா நான் இன்னைக்கு வாங்கி கொடுத்தேன்..!” என்றார் எரிச்சல் குரலில் வேதவல்லி. 
 
 
அடுத்து அவர் என்ன வேண்டுமானாலும் பேசுவார் எனப் புரிந்து சட்டென்று தணிந்து வந்தவள், “சரி கொடுங்க நான் இப்போவே போட்டுக்கறேன்.. இது கழுத்து வரைக்கும் அழகா இருக்கும், அப்படியே போட்டுக்கறேன்..” என நந்தினி அவர் கையில் இருந்ததை வாங்க போக.. சட்டென அதை பின்னுக்கு இழுத்துக் கொண்டவர், “அதை முதலில் கழட்டிட்டு போடு, நான் வாங்கி கொடுத்த பொருளுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கு.. அதை எங்கே போய் வாங்கினியோ தெரியலை, நூல் மாதிரி இருக்கு.. எப்போ பாரு அதை போட்டுட்டே இருக்க வேண்டியது.. கருமம் என்ன நல்லா இருக்கோ அது..!” என்று சிடுசிடுத்தார் வேதவல்லி.
 
 
இதில் செய்வதறியாது விழித்தாள் நந்தினி. “என்ன எல்லாம் அப்படியே நின்னுட்டு இருக்கீங்க..? கோவிலுக்கு போகணும் நேரமாகுது சீக்கிரம் கிளம்புன்னு சொன்னீங்க.. அப்புறம் ராகு காலம் வந்துடுச்சு, எமகண்டம் வந்துடுச்சுன்னு என்னை யாரும் குறை சொல்லக்கூடாது, நமக்கு நிறைய நேரமும் இல்லை.. நந்துக்கு பிளைட்டுக்கு அப்புறம் லேட் ஆகிடும்..” என அவளைக் காப்பாற்றுவதற்காகவே அங்கு வந்தது போல் கூறினான் நிதின்.
 
 
“ஆங் அதை மறந்து போனேன் பாரு, இந்த வீட்டுக்கு பொம்பளைங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட பொறுப்பே கிடையாது.. மசமசன்னு வேடிக்கை பார்த்துட்டு நிற்க சொன்னா நல்லா நிற்பாங்க, எல்லாரையும் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வா..” என்று நிதினிடம் அவர் சொல்லவும், “ஹ்ம்ம் சரி அதையும் கொடுங்க வேதம்மா, காரில் போகும் போது நந்து போட்டுக்குவா..” என்று எளிதாக அவரின் கையில் இருந்த நகை பெட்டியை வாங்கி கொண்டு வெளியேறி இருந்தான் நிதின்.
 
 
அவன் பின்னேயே நந்தினியும் விட்டால் போதும் என்பது போல் சென்று விட, அதற்கு மேலும் அங்கு நிற்க விரும்பாத சித்ராவும் புஷ்பாவும் கூட பூஜைக்குத் தேவையான ஆளுக்கு ஒரு பொருளை கையில் எடுத்தபடி வெளியேறி இருந்தனர். 
 
 
இன்று மதியம் நந்தினி மலேசியா கிளம்பி செல்கிறாள். ஒரு படத்தின் முழு படப்பிடிப்பும் மலேசியாவில் நடப்பதாக இருந்தது. வளர்ந்து வரும் ஒரு இயக்குனரை வைத்து இவர்கள் எடுக்கும் புது படம் அது. முழுக்க புது முகங்களை வைத்து எடுக்க திட்டமிட்டு இருந்தனர், காரணம் அந்த கதைக்கு இளமை பட்டாளம் தேவைப்பட்டது. 
 
 
கதையும் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் இளமை புதுமை கலந்த ஒரு காதல் கதை தான். அதில் எல்லா வேலைகளும் முடிந்து தயாராக இருக்க.. இன்று படக்குழு மலேசியா செல்ல திட்டமிட்டு இருந்தனர். தயாரிப்பாளர் என்ற முறையில் நந்தினியும் உடன் சென்று அங்கேயே இருக்க வேண்டிய சூழ்நிலை. 
 
 
முழுக்க புதுமுகங்கள் என்பதால் அவர்களுக்கு இந்த துறையில் இருக்கும் பல விஷயங்களைப் பற்றி தெரிந்திருக்காது.. அதோடு இயக்குனரும் வளர்ந்து வரும் ஒருவர் என்பதால் அனைவரையும் பொறுப்பாக உடனிலிருந்து சமாளிக்க வேண்டியது தயாரிப்பாளரின் கடமை.
 
 
அதை சரியாக செய்து முடித்து வேதவல்லியிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்று எண்ணத்தோடே இரண்டு மாதங்களுக்கு முன்பு ரகோத்தமனிடம் தானே செல்வதாக கேட்டு அனுமதி பெற்று இருந்தாள் நந்தினி. அப்போது ஒரு வீம்புக்காக செய்து விட்டிருந்தவளுக்கு இப்போது இரண்டு மாதங்கள் அங்கேயே தங்கி இருப்பது கொடும் கனவாக இருந்தது. 
 
 
இங்கே இருந்தால் பேசிப்பழகி சிரித்து மகிழவில்லை என்றாலும் தொலைவில் இருந்தாவது வாரத்தில் இரண்டொரு முறை விநாயக்கை பார்த்துக் கொள்ளலாம்.. ஆனால் அங்கு சென்று விட்டால் அதுவும் முடியாது. அலைபேசியில் பேசி தன் ஏக்கத்தை தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் அவளுக்கு இல்லை. இதெல்லாம் மனதில் ஓட கிளம்ப வேண்டிய நேரம் வர வர, அது கொடுத்த பதட்டமும் தவிப்பும் அவளுள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
 
 

This post was modified 7 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
MNKN - 22
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 4 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1785523071-IMG-20260801-WA0000.jpg
 
 
மௌனம் - 23
 
விமான நிலையத்தில் நிதின் அருகே அமர்ந்திருந்தாள் நந்தினி. அவளின் கைகள் விநாயக் கொடுத்திருந்த செயினை மெல்ல வருடி கொடுத்தபடி இருக்க.. அவளின் கவனம் துளியும் அங்கு இல்லை.
 
 
“ஆனா தி கிரேட் வேதவல்லியையே ஏமாற்றி இருக்கேனா பெரிய ஆளு தான் நீ..” என்ற நிதினின் குரலில் பார்வையை நந்தினி திருப்பி பார்க்க.. அவன் பார்வை அவள் கழுத்தில் இருந்த வேதவல்லி வாங்கி கொடுத்த செயினின் மேல் பதிந்தது. 
 
 
கோவிலுக்கு செல்லும் வழியிலேயே விநாயக் வாங்கி கொடுத்திருந்த செயினை லேசாக உடைகளுக்குள் மறைத்தப்படி பின் செய்து கொண்டவள், அதை கழட்டாமலேயே வேதவல்லி வாங்கி கொடுத்திருந்ததை மட்டும் அணிந்திருப்பது போல் நடித்து வீட்டில் இருந்தவரை அவரை ஏமாற்றிவிட்டே விமான நிலையத்திற்கு கிளம்பி வந்திருந்தாள் நந்தினி.
 
 
சித்ராவுக்கு மகளை இரண்டு மாதம் பிரிந்து இருக்க போவதை எண்ணி கவலை. அது அவரின் வாடிய முகத்திலேயே தெரிய.. அவரை விமான நிலையத்திற்கு அழைத்து வந்தால் நந்தினி கிளம்பும் போது நிச்சயம் ஒரு அழுகை காட்சி அரங்கேறும் எனப் புரிந்தே யாரையும் வர வேண்டாமென மறுத்துவிட்டு நிதின் மட்டும் உடன் வந்திருந்தான்.
 
 
ரகோத்தமனுக்கு இரண்டு நாட்களாக கொஞ்சம் உடல்நிலை சரியில்லை. அதைக் காரணம் காண்பித்து புஷ்பாவையும் அங்கேயே இருக்க சொல்லியவன், “நான் ஏர்போட்டில் இருந்து அப்படியே ஒரு மீட்டிங்குக்கு கிளம்பிடுவேன் அத்தை, அப்புறம் நீங்க மட்டும் வீட்டுக்கு திரும்பி தனியா வர வேண்டி இருக்கும்.. அதனால உங்க பொண்ணுக்கு இங்கேயே டாட்டா காட்டிடுங்க, அவளை நான் பத்திரமா பிளைட் ஏற்றி அனுப்பி வெச்சுட்டு வரேன்..” என்று விளையாட்டு போலவே பேசி அனைவரையும் தவிர்த்து இருந்தான் நிதின்.
 
 
அதுவுமே அவளுக்கு நல்லதாக தான் இருந்தது. இப்போது இருக்கும் மனநிலையில் யாரோடும் இயல்பாக அவளால் பேசி சிரிக்க கூட முடியாது. இப்போது யாரோடும் பேசும் எண்ணமே இல்லாமல் அமைதியாக சில நொடிகள் அமர்ந்திருந்தால் போதும் என்று தோன்ற.. அப்படியே இருந்தவள், நிதின் நினைவுப்படுத்திய பிறகே தன் கழுத்தில் இருந்த மற்றொரு செயினை பற்றி அவளுக்கு ஞாபகம் வந்தது. 
 
 
அதில் ஒரு மெல்லிய புன்னகையோடு அதை கழட்டியவள் “இந்தா இதை நீ வெச்சுக்கோ..” என அவனிடம் கொடுக்க “இதை நான் வெச்சுட்டு என்ன செய்யப் போறேன்..?” என்றான் நிதின்.
“வீட்டில் எடுத்துட்டு போய் வை நிது, நான் திரும்ப வந்த பிறகு வாங்கிக்கறேன்..” என அவள் சொல்லவும், “அதுக்கு நீயே வெச்சுக்கலாம் இல்லை..” என்றான் நிதின்.  
 
 
“ம்ஹூம் எப்படியும் நான் இதை போட்டுக்க போறது இல்லை, அப்புறம் ஏன் அங்கே வேஸ்ட்டா இருக்கணும்..?” என அவள் சொல்லவும், அவளை ஒரு மாதிரியாக பார்த்தவன், எதுவும் பேசாமல் கைநீட்டி அந்த செயினை வாங்கிக் கொண்டான். 
 
 
படக்குழு மொத்தம் வந்து விட்டிருந்தனர். அவர்களெல்லாம் சற்று தள்ளி அமர்ந்திருக்க.. நிதின் அருகில் அமர்ந்திருந்த நந்தினி நொடிக்கொரு முறை தன் அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். ‘ஏதாவது அழைப்போ, குறுஞ்செய்தியோ வந்திருக்கிறதா..?’ என அவளின் விழிகள் ஒருவனின் பெயரையே அங்கு தேடி தவித்து ஏமாந்து கொண்டிருந்தது.
 
 
“யாருடைய போனுக்காகவாவது காத்திருக்கியா..?” என்று திடீரென நிதின் கேட்கவும் “என்ன..?” என்று அவன் பக்கம் திரும்பியவள், “இல்.. இல்லையே.. ஏன் கேட்கறே..?” என்று லேசாக தடுமாறவும், “ஐந்து நிமிஷத்தில் ஐம்பது முறை போனை எடுத்து பாத்துட்டே, அதனால் தான் கேட்டேன்..” என்றான் நிதின். 
 
 
“அதெல்லாம் இல்லை, டைம் என்னன்னு பார்த்தேன்.. அப்புறம் போன் அடிச்ச மாதிரியும் இருந்தது அதான்..” என அவள் சமாளிக்க முயல, ‘நான் இதை நம்பவில்லை’ என்பது போல் பார்த்து வைத்தான் நிதின்.
 
 
அதே நேரம் “நந்து..” என்று குரல் பின்னே இருந்து கேட்கவும், வியப்பாக திரும்பி பார்த்தவள், அங்கு தீக்ஷு நிற்பதைக் கண்டு ஆச்சரியமானாள். “ஹே நீ என்ன இங்கே..?” என்று நந்தினி நம்ப முடியா திகைப்பும் சந்தோஷமுமாக கேட்கவும், “இது என்ன கேள்வி, உன்னை பார்க்க தான்..” என்றாள் தீக்ஷு. 
 
 
“அதான் நீ ஏன்..?” என அப்போதும் சிறு சந்தோஷத்தோடு நந்தினி கேட்கவும், “ம்ஹ்ம் எனக்குன்னு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு இருக்க மக்கு பிரண்டு இன்னைக்கு மலேசியா போறா.. அடுத்த இரண்டு மாசத்துக்கு அவளை பார்க்க முடியாது.. அதோட இன்னைக்கு அவளுக்கு குவா குவா டே, அதான் பார்த்துட்டு போகலாமேன்னு வந்தேன்..” என்று நந்தினியின் இரு பக்க கன்னம் பிடித்து கொஞ்சுவது போல சொல்லியவள், “நான் வரலைனா தான் நீ சண்டை போட்டு இருக்கணும், ஆனா வந்ததுக்கு ஏன்னு கேட்டுட்டு இருக்கே.. உன்னை எல்லாம் வெச்சுட்டு..” என்று லேசாக தலையில் அடித்துக் கொண்டாள் தீக்ஷு.
 
 
அதில் நந்தினி அசடு வழிவது போல் புன்னகைக்க.. அவர்கள் இருவரும் தனியே பேசட்டும் என்பது போல் அங்கிருந்து நகர்ந்து சென்றான் நிதின். சட்டென நந்தினியை அணைத்து “ஹாப்பி பர்த்டே செல்லம்..” என தீக்ஷிதா சொல்லவும், நெகிழ்ந்தே போனாள் நந்தினி. 
 
 
“தேங்க்யூ.. நீ இங்கே வருவேன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலை..” என்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நந்தினி சொல்லவும், “உனக்கு இப்போவும் எப்போவும் நான் கூடவே இருப்பேன்..” என்ற தீக்ஷு தன் கைப்பையில் இருந்து ஒரு சின்ன பரிசு பெட்டியை எடுத்து அவளிடம் நீட்டினாள்.  
 
 
அதை நந்தினி ஆச்சரியமாக பார்த்து “ஹே இதெல்லாம் எதுக்கு தீக்ஷு..?” என்றாள். அதில் கோபமே இல்லாமல் நந்தினியை முறைத்தவள் அவள் கைப்பற்றி தான் கொண்டு வந்திருந்த பிரேஸ்லெட்டை அணிவித்தாள்.
 
 
தங்கமும் பிளாட்டினமும் கலந்து செய்திருந்த பிரேஸ்லெட் அது. நுண்ணிய வேலைப்பாடுகளோடு பார்த்து பார்த்து செய்திருந்தது போல் இருந்த பிரேஸ்லெட்டில் அங்காங்கு சின்ன சின்னதாய் இதயங்கள் தொங்கிக் கொண்டிருந்தது. 
 
 
காணும் போதே கண்ணையும் மனதையும் நிறைப்பதாக இருந்த அதை விழி எடுக்காமல் நந்தினி பார்த்துக் கொண்டிருக்க.. அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு இதயத்தில் Y என்றும் மற்றொன்றில் D என்றும் தங்க பின்னணியிலான இதயத்தில் பிளாட்டினத்தில் எழுத்துக்கள் மின்னியது. 
 
 
அதுவும் அருகருகில் இருந்த அந்த இரண்டு இதயங்களும் ஒன்றை ஒன்று இவள் கை அசைக்கும் போதெல்லாம் உரசி செல்வதை பார்க்கவே அத்தனை அழகாக இருக்க.. “ஹேய் வாவ்.. எப்படி உனக்கு இந்த மாதிரி டிசைன் எல்லாம் கிடைக்குது..” என்று தன் வியப்பையும் சந்தோஷத்தையும் மறைக்காமல் பகிர்ந்து கொண்டாள் நந்தினி. 
 
 
“நிஜமாவே உனக்கு பிடிச்சிருக்கா..? இது ஒரு ஸ்பெஷல் எடிஷன், இதுவரைக்கும் யாருக்கும் இப்படி செஞ்சு கொடுத்ததும் இல்லை.. இனி கொடுக்கவும் மாட்டாங்க.. இது உனக்கே உனக்கு..” என சொல்லி அவள் கண்ணடிக்க.. தன் கையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த இரண்டு இதயங்களும் உரசிக் கொள்ளும் அழகை பார்த்தவாறே “நாம எப்போவும் இப்படியே இருக்கணும் தீக்ஷு..” என்றாள் நந்தினி.
 
 
“ஏன் இல்லாம, கண்டிப்பா இருப்போம்..” என நந்தினியை அணைத்து விடுவித்த தீக்ஷு “சரி சரி உனக்கு நேரமாகுது நீ கிளம்பு.. உன் வேலையை நல்லபடியா முடிச்சுட்டு திரும்பி வா, உனக்காக இங்கே எப்போவும் நான் காத்திருப்பேன்..” என்று கூற “என்னடி ஏதோ லவ்வர் மாதிரி பேசிட்டு இருக்கே..!” என்றாள் புன்னகையோடு நந்தினி. 
 
 
“ஆமா லவ்வர் தான், நான் உன்னை லவ் செய்யறது தெரியாதா உனக்கு..?” என தீக்ஷு அவளை வம்புக்கு இழுக்க.. அதே நேரம் நந்தினி செல்ல வேண்டிய விமானம் பற்றிய அறிவிப்பு வந்ததில் நிதின் அவர்கள் அருகில் வந்தான்.
 
 
அதில் நந்தினியிடம் விடை பெற்றுக்கொண்டு தீக்ஷு அங்கிருந்து செல்ல முயல.. அப்போதே நினைவு வந்தவளாக “தனியாவா வந்தே நீ..?” என்றாள் நந்தினி. “இல்லை, தர்ஷன் அண்ணா என்னை கூட்டிட்டு வந்தாங்க.. பார்க்கிங்கில் வெயிட் செய்யறாங்க.. நான் கிளம்பறேன், நீ பத்திரமா போயிட்டு வா..” என்று விட்டு தீக்ஷு அங்கிருந்து நகர, நந்தினியின் கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்துவிட்டு “ஹ்ம்ம் உன் பிரெண்ட்ஸ் எல்லாம் கூட பெரிய ஆளுங்க தான் போல, நமக்கு தான் இந்த மாதிரி யாரும் கிடைக்க மாட்டேங்கறாங்க..” என போலியாக பெருமூச்சு விட்டான் நிதின். 
 
 
“அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும், உனக்கு இதெல்லாம் கிடைக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்..” என்று அவளும் கேலி செய்ய.. “எல்லாம் என் நேரம், இவ்வளவு நேரம் அழுது வடிஞ்சுட்டு இருந்த பொண்ணு இப்போ என்னை கலாய்க்குது..” என அவளைக் கிண்டல் செய்தான் நிதின்.
 
 
நந்தினியோடு பேசி, கேலி செய்து வம்பு இழுத்தாலும் பொறுப்பாக அவளை போர்டிங் வரை அழைத்துச் சென்று உள்ளே அனுப்பி வைத்தவன், கிளம்புவதற்கு முன் அத்தனை பத்திரங்களையும் சொல்லி எதுவாக இருந்தாலும் உடனே தனக்கு அழைக்க வேண்டும் என்றும் அழுத்தி கூறிவிட்டே விடை கொடுத்தான். 
 
 
விமானம் கிளம்பும் வரை காத்திருக்க நினைத்து நிதின் அங்கேயே அமர்ந்து கொள்ள.. சற்று தள்ளி இதையெல்லாம் பார்த்தபடியே அமர்ந்திருந்த விநாயக் “சரி கிளம்புவோமா..!” என்று தன் அருகில் இருந்த தீக்ஷுவை பார்த்தபடியே எழுந்து நின்றான்.
 
 
“இவ்வளவு நேரம் இருந்துட்டோம், இன்னும் கொஞ்ச நேரம்.. பிளைட் கிளம்பும் வரை இருந்துட்டு போகலாமே ண்ணா..” என அவள் கெஞ்சலாக கேட்கவும், “இனியும் இருந்து என்ன செய்யப் போறே..? சின்ன பிள்ளைங்க போல மேலே போற ப்ளைட்டுக்கு டாட்டா காட்ட போறியா..” என்று விட்டு விநாயக் விறுவிறுவென முன்னே செல்ல, வேறு வழியில்லாமல் திரும்பி திரும்பி பார்த்தப்படியே அவன் பின்னே ஓடினாள் தீக்ஷு.
 
 
******
 
 
மலேசியாவில் நந்தினிக்கு வேலைகள் எல்லாம் நல்லபடியாகவே நடந்து கொண்டு இருந்தது. ஆனாலும் அவளுள் ஏதோ ஒரு இனம் புரியா தவிப்பு.. எதையோ இழந்தது போலான மனநிலை, எதிலும் மனம் ஒன்ற முடியா ஒரு சோர்வு அவளை முழுதாக ஆட்கொண்டிருந்தது.
 
 
புதிய இயக்குனர் என்றாலும் தன் வேலையை திட்டமிட்டு கச்சிதமாக அவர் கொண்டு சென்றதின் பலன், ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது. நடிகர்களும் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்க எல்லாமே சிறப்பாக நடந்தது.
 
 
ஆனால் இதையெல்லாம் கண்டு சந்தோஷப்பட வேண்டியவளுக்கு மனம் பெரும் வெறுமையை மட்டுமே உணர்ந்து கொண்டு இருந்தது. எதையோ இழந்தது போன்ற தவிப்பு இதயம் முழுதும் நிறைந்திருக்க.. தனிமையில் மூச்சு விட கூட அவளுக்கு சிரமமாக இருந்தது.
 
 
ஒவ்வொரு நாளும் அவன் புகைப்படத்தை அலைபேசியில் பார்த்தபடி அமர்ந்திருப்பதும், ஒருமுறை கூட அவனிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வராததை எண்ணி கண்ணீர் வடிப்பதுமாக நாளை கடத்திக் கொண்டிருந்தவளுக்கு தானே அழைத்து பேசவும் தைரியம் வரவில்லை.
 
 
ஒருவேளை அவள் அழைத்து அவன் அதை ஏற்காமல் இருந்து விட்டாலோ.. இல்லை ஏற்று ஏன் அழைத்தாய் என கோபமாக பேசி அழைப்பை துண்டித்து விட்டாலோ அது மிகப்பெரிய வலியை அவளுக்கு கொடுக்கும்.. அதற்கு இப்படி கண்டுகொள்ளாமலும் பேசாமலும் இருப்பதே பரவாயில்லை என அவள் மனம் நினைத்தது.
 
 
இப்படியே வெகு சிரமப்பட்டு அவள் ஒவ்வொரு நாளையும் நெட்டித் தள்ளி கொண்டிருக்க.. எதிர்பார்த்ததை விட விரைவாகவே படப்பிடிப்புகள் சிறப்பாக முடிந்திருந்தது.
 
 
இதில் இரண்டு மாதம் என்று திட்டமிட்டு இருந்த பயணம் நாற்பது நாட்களிலேயே முடிந்திருக்க.. முதலில் படப் குழுவினரை விமானம் ஏற்றி அனுப்பி விட்டு அடுத்த விமானத்தில் கிளம்பி சென்னை வந்து இறங்கினாள் நந்தினி.
 
 
மனமெங்கும் ஒருவனே ஆக்கிரமித்து இருக்க.. இன்று எப்படியாவது அவனை தூரத்தில் இருந்தாவது பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்போடே விமானத்தில் இருந்து இறங்கி மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள் நந்தினி. அவளுக்கு இப்படியே விநாயக்கை காண சென்று விட தான் மனம் ஏங்கியது. 
 
 
தீக்ஷிதாவை காண்பது போல் சென்று கூட அவனை சந்திக்கும் வாய்ப்பு ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கவோ..! இல்லை ஏதாவது காரணத்தை வைத்துக் கொண்டு காவல் நிலையத்திற்கே சென்று விடவோ..! மனம் சண்டித்தனம் செய்ய அதை அடக்கும் வழி தெரியாமல் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
 
 
அவள் செய்ய நினைப்பதில் ஒரு சின்ன சறுக்கல் நிகழ்ந்தாலும் மொத்தமாக எல்லாம் மாறி போகும்.. சும்மாவே தன்னிடம் இருந்து தள்ளி நிற்பவன் மொத்தமாக தன்னை வெறுத்து விடுவான் என்றெல்லாம் மனதுக்கு உணர்த்தி முயன்றுக் கொண்டிருந்தாள் நந்தினி. அதேநேரம் வேறு எதையும் செய்ய முடியாத தவிப்போடு தன் பெட்டிகளை எடுத்துக்கொண்டு வாயிலை நோக்கி திரும்பியவளின் அலைபேசி அடித்தது.
 
 
நிதினாக தான் இருக்கும்.. அவன் தான் இரண்டு நாட்களாகவே எப்போது ஊருக்கு வருகிறாய் எனக் கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்பதால் நேரிலேயே சென்று பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தோட சுவாரசியமே இல்லாமல் அலைபேசியை பார்த்தவளுக்கு, அதில் ஒளிர்ந்த விநாயக்கின் பெயர் பெரும் திகைப்பை கொடுத்தது. 
 
 
அதில் அவளின் நடை அப்படியே தடைப்பட, நம்ப முடியாமல் அந்தப் பெயரையே நந்தினி பார்த்துக் கொண்டிருந்தாள். இது நிஜம் தானா.. இல்லை தன் மனதின் எதிர்பார்ப்பு இப்படி எல்லாம் தோன்ற செய்கிறதா.. என்றெல்லாம் நினைத்தாலும் லேசாக அவள் மனம் மகிழ்ச்சியில் துள்ள தான் செய்தது.
 
 
‘இத்தனை நாள் பிரிவுக்குப் பிறகு ஊருக்கு வந்து இறங்கியவளை பார்க்க இந்த கதைகளிலும் படங்களிலும் வருவது போல் அவனே நேரில் வந்து நின்று விட்டனோ..!’ என்று மனம் பரபரக்க.. விழிகளால் அந்த இடம் முழுக்க தேடியப்படியே அலைபேசியை ஏற்று காதுக்கு கொடுத்திருந்தாள் நந்தினி.
 
 
“ஹலோ..” என்ற அவன் குரல் மென்மையாக வந்து அவள் செவியை தீண்டியது. இதற்கு முன் இப்படி ஒரு குரலில் அவன் அவளிடம் பேசியது போல கூட நந்தினிக்கு நினைவே இல்லை. அதில் அந்த நொடியை அவள் அப்படியே விழிமூடி ரசித்தபடி நின்றிருக்க.. “நான் பேசறது கேட்குதா, ஹலோ..” என்று திரும்ப கேட்டிருந்தான் விநாயக். 
 
 
அதிலேயே வேகமாக விழிகளை திறந்தவளுக்கு பதிலுக்கு ஹலோ கூட சொல்லாதது நினைவுக்கு வரவும் “ஹ.. ஹலோ..” என்றாள் சிறு தடுமாற்றத்தோடே நந்தினி. 
 
 
“ஒரு முக்கியமான விஷயம், அபி உனக்காக அங்கே பார்க்கிங்கில் காத்திருக்கா. அவ கூட கிளம்பி இங்கே வா..” என்று மட்டும் சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்து விட, அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் ஒரு நொடி அப்படியே தன் காதில் இருந்து எடுத்த அலைபேசியை பார்த்தபடி நின்று இருந்தவள், பின் ‘இப்படி பார்க்க முடியாமல் தானே இத்தனை நாள் ஏங்கிக் கொண்டு இருந்தோம்..! இதோ இன்றும் வாய்ப்பு கிடைத்தால் போய் பார்த்து விட மாட்டோமா என்ற தவிப்போடு தானே வந்து இறங்கினோம்..!’ என்ற தோன்றவும், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக பார்க்கிங் சென்று அபியின் காரில் ஏறி அமர்ந்தாள் நந்தினி. 
 
 
ஓட்டுனர் இருக்கையில் அபி அமர்ந்திருக்க.. அவளுக்கு அருகில் நந்தினி முன்னுரிக்கையில் அமர்ந்து கொள்ள.. “ஜர்னி கம்பர்டபிளா இருந்ததா..?” என்று புன்னகைத்தாள் அபி.
 
 
நந்தினியும் பதிலுக்கு புன்னகைத்து ஆம் என்பது போல தலையசைக்க.. அதன் பின் கார் அமைதியாகவே பயணிக்க தொடங்கியது. அவளிடம் நந்தினியினால் எதுவும் கேட்கவும் முடியவில்லை. 
 
 
அவளாகவும் எதுவும் சொல்வது போல் தெரியவில்லை. அதில் லேசான குழப்பமும் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் அவளை கொஞ்சம் பதட்டம் அடைய செய்து கொண்டே இருக்க.. இதையெல்லாம் மீறி தன்னவனை இத்தனை நாட்களுக்கு பின் காண போகும் ஆவல் மட்டும் அவள் மனம் எங்கும் நிறைந்திருந்தது. 
 
 
அடுத்த சில நிமிடங்களில் ஒரு வளாகத்திற்குள் நுழைந்து கார் நிற்கவும் அபி இறங்கிக் கொள்ள.. நந்தினியும் மெதுவாக காரில் இருந்து இறங்கினாள். அவளை எதிர்கொள்வது போல் வாயிலேயே நின்றிருந்தான் விநாயக். 
 
 
அந்த நொடியில் மற்றதெல்லாம் மறந்து போக.. அவன் மட்டுமே அவள் கண்ணுக்குத் தெரிய, நீண்ட பிரிவுக்கு பின் கிடைத்து இருக்கும் தரிசனத்தை விழிகளில் நிறைத்துக் கொள்வது போல் இமைக்காமல் அவனையே பார்த்தபடி அப்படியே நின்று விட்டாள் நந்தினி.
 
 
சில நொடிகள் அவளையே பார்த்தபடி நின்று இருந்தவன், பின் மெல்ல நந்தினியை நெருங்கி வர.. அவன் தன்னை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுள்ளம் இன்பமாக அதிர்ந்தது.
 
 
இருநொடிகள் அவள் முகத்தை பார்த்தபடியே எதுவும் பேசாமல் நின்றிருந்தவன், தன்னையே பார்த்தமாறு ஒருவித மோன நிலையில் அவள் இருப்பதை கண்டு மெல்லிய புன்னகையோடு “வா..” என நந்தினியின் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்ல.. நடப்பதை எல்லாம் நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் கனவு உலகில் மிதப்பது போல் தன் கையை பிடித்திருந்த விநாய்க்கின் வலுவான கரங்களை பார்த்தவாறே அவனுடன் சென்றாள் நந்தினி.
 
 
உள்ளே சென்ற பிறகே சுற்றுப்புறம் புரிய.. அது ஒரு சர்பதிவாளர் அலுவலகம் என உணர்ந்ததில் கேள்வியாக தன் முன் நின்றிருந்தவனை பார்த்தாள் நந்தினி.
 
 
அதற்காகவே காத்திருந்தது போல் அவளின் வலது கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள் பொத்தி வைத்துக் கொண்டவன், மென்மையாக “யது.. உனக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தா இங்கே இப்போ நாம கல்யாணம் செஞ்சுக்கலாம், உனக்கு சம்மதமா..?” என்று கேட்டிருந்தான் விநாயக். 
 
 
வேற்று மொழி படத்தை பார்ப்பது போல், ‘அவன் சொல்ல வந்தது சரியாக தான் தனக்கு கேட்டதா..?’ என்பது போலான பாவணையில் அப்படியே அசையாமல் நந்தினி நின்றிருக்க.. அவளின் நிலையை உணர்ந்தவனாக மேலும் அவளை நெருங்கி நின்றவன், “யது இப்போ நீ தான் முடிவு எடுக்கணும், உனக்கு ஓகேனா இப்போ இங்கே நமக்கு கல்யாணம்..” என்றவன், மீண்டும் ஒரு சிறு இடைவெளி விட்டு “உனக்கு என் மேலே நம்பிக்கை இருந்தா ஓகே சொல்லு..” என்றான். 
 
 
அவன் வார்த்தைகள் நந்தினிக்கு புரியவே சில நொடிகள் எடுத்தது. பின் மெல்ல பார்வையை திருப்பியவள், அங்கு அபியும் தர்ஷனும் நின்றிருப்பதை கண்டு மீண்டும் விநாயக் பக்கம் திரும்ப.. அவளின் பதிலுக்காக காத்திருப்பது போல் நந்தினியையே பார்த்திருந்தான் விநாயக்.
 
 
மனதிற்குள் ஏதேதோ கேள்விகள், எத்தனையோ யோசனைகள், ஏன் எதற்கு என்று புரியாத குழப்பம் என அத்தனையும் முட்டி மோதினாலும் அவளின் தலை சம்மதமாக அசைந்தது. அதில் அவனுள் இருந்த பதட்டம் தணிய, மெல்லிய புன்னகையோடு அவளைப் பார்த்தவன் “நிஜமா தான் சொல்றியா..? உனக்கு ஓகேவா…!” என்றான் மீண்டும் விநாயக்.
 
 
நந்தினியின் மேலும் அவளுக்கு தன் மேல் உள்ள காதலின் மேலும் உள்ள நம்பிக்கையில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்து விட்டிருந்தாலும், ஒருவேளை நந்தினி மறுத்துவிட்டால் என்ற கேள்வியும், ஏதோ ஒரு ஓரத்தில் ஒரு புள்ளி அளவு அவனுள் உறுத்திக் கொண்டே தான் இருந்தது.
 
 
அதையெல்லாம் தன் ஒற்றை தலையசைப்பில் ஒன்றுமில்லாமல் செய்து விட்டிருந்தவளை கண்டு உண்டான மகிழ்வோடு நந்தினியை பார்த்தவன் “வா..’ என்று சற்று தள்ளி இருந்த மேஜைக்கு அருகில் அழைத்துச் செல்ல.. அங்கு இவர்களுக்காகவே காத்திருந்தார் அந்த அதிகாரி.
 
 
அடுத்தடுத்து எல்லாம் அத்தனை சுமூகமாக நடந்தது. எப்போது எப்படி இதையெல்லாம் இத்தனை தெளிவாக திட்டமிட்டு இதுவரை கொண்டு வந்தான் என அவளுக்கு புரியவில்லை. ஏதோ கனவுலகில் மிதப்பது போல் நடக்கவே வாய்ப்பில்லை என்று நினைத்திருந்த ஒன்று தன் கைவந்து சேர்ந்ததையே நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றிருந்தாள் நந்தினி. 
 
 
இருவருக்கும் மல்லிகை பூவையும் ரோஜா இதழ்களையும் சேர்த்து கோர்த்திருந்த மாலையை தர்ஷன் எடுத்துக் கொடுக்க.. முதலில் விநாயக் அதை நந்தினிக்கு அணிவித்தான். பின் அவளிடம் ஒரு மாலையை அபி கொடுக்கவும், நந்தினியும் விநாயக்கின் கழுத்தில் அதை அணிவித்தாள்.
 
 
அடுத்து தன் பாக்கெட்டில் இருந்த மாங்கல்யத்தை வெளியில் எடுத்தவன், பார்வையை தழைத்துக்கொண்டு நின்றிருந்தவளின் முகத்தை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க செய்து, அவளின் விழிகளோடு விழி கலந்தவாறே அவளின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான். 
 
 
அந்த நொடி நந்தினியின் விழிகள் கலங்கி கண்ணீர் தேங்கி நிற்க, மறுப்பாக அவளைப் பார்த்து வேண்டாம் என்பது போல் தலையசைத்தான் விநாயக். அதில் அவளும் கண்ணீர் வழியாமல் கட்டுப்படுத்திக் கொண்டு அப்படியே நிற்க.. ‘நான் இருக்கிறேன் உனக்கு..!’ என்பது போல் அவளின் கரத்தை அழுத்தி கொடுத்தான் விநாயக்.
 
 
அதன் பின் இருவரும் தங்கள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டு அங்கிருந்து கிளம்ப.. தன் நண்பர்களை வழி அனுப்பி வைத்துவிட்டு நந்தினியை தன்னோடு தன் காரில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் விநாயக்.
 
 
அவன் செயல்களுக்கு எல்லாம் உடன்பட்டு எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் அவனோடு சென்றாலும் நந்தினிக்கு நடப்பதெல்லாம் கனவா நிஜமா என்று புரியா ஒரு மனநிலை தான் இந்த நொடி இருந்தது. 
 
 
எங்கே இமைத்தால் கூட இந்த கனவு கலைந்து விடுவோமோ என்ற பயத்தோடே இந்த நொடியை மனதார ரசித்து அனுபவித்து கொண்டு அவனோடு சென்று இறங்கியவள், அங்கு அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு மனதளவில் வெகுவாக அடிபட்டு போனாள்.
 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
அனைவருக்கும் வணக்கம்.. 
 
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்..
 
 
 
மௌனமாய் நீ காதலாய் நான்..!!
 
 
 
 
MNKN - 23
 
 
 
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
 
 
 
 
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 days ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 546
Topic starter  
1785642276-IMG-20260802-WA0001.jpg
 
 
மௌனம் - 24
 
விநாயக் காரை ஓட்டிக் கொண்டிருக்க.. அவனருகில் அமர்ந்திருந்த நந்தினியின் பார்வை முழுக்க அவன் மேலேயே இருந்தது. இத்தனை நாள் தவற விட்டதற்கும் சேர்த்து அவனை விழிகளில் நிறைத்து கொள்ள முயன்றாள் நந்தினி.
 
 
அவளின் பார்வையை உணர்ந்து அதில் உண்டான மென்னகையோடு மெல்ல திரும்பி நந்தினியை பார்த்து ‘என்ன..?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினான் விநாயக்.
 
 
அதில் அவசரமாக அவள் பார்வையை தழைத்துக் கொள்ள.. சிறு புன்னகையோடே அவளை பார்த்தவாறே காரை ஓட்டிக்கொண்டு இருந்தான் விநாயக். அவனும் இடையில் எதுவும் பேசவில்லை அவளும் பேச முயற்சிக்கவில்லை.
 
 
இதோ அவனுடன் இப்படி தனியே விநாயக் அருகில் அமர்ந்து பயணிப்பதெல்லாம் அவள் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. அது இந்த நொடி சாத்தியமாகி இருப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது. அதை தவிர நந்தினியின் மனதில் வேறு எந்த எண்ணமும் இந்த நொடி இல்லை.
 
 
இப்படியே வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல் அவள் அமர்ந்திருக்க.. விநாயக் தன் காரை அந்த மாளிகைக்குள் நுழைத்து நிறுத்தினான். அதன் பிறகே பார்வையை திருப்பியவளுக்கு அவர்கள் வந்து இருக்கும் இடம் புரிய.. அதுவரை அவளை சூழ்ந்திருந்த மோன நிலை சட்டென அறுந்தது.
 
 
இதில் உண்டான திகைப்போடு அவள் திரும்பி விநாயக்கை பார்க்க.. ‘இறங்கு’ என்பது போல் விழியசைத்து விட்டு காரில் இருந்து இறங்கி இருந்தான் விநாயக். 
 
 
அதுவரை இல்லாத பயமும் பதட்டமும் இப்போது வந்து சூழ்ந்து கொள்ள.. ‘வேண்டாம், இங்கிருந்து போய்விடலாம்..’ என்பது போலான விழியுடான கெஞ்சுதலோடு நந்தினி அவனைப் பார்க்க.. அவனோ அதைப்பற்றி எல்லாம் துளியும் கண்டுகொள்ளாமல் அவள் பக்க கார் கதவை திறந்து பிடித்து “ஹம்ம் இறங்கு..” என்றான்.  
 
 
‘இங்கே ஏன் வேண்டாமே..!’ என அவள் சொல்ல நினைத்து வாயை திறந்த நொடி, கார் உள்ளே நுழைந்து நின்றிருந்ததில் ‘யார் வந்திருக்கிறார்கள்..?’ என பார்க்க வெளியில் வந்திருந்தார் புஷ்பா.
 
 
முதலில் விநாயக்கை இங்கே கண்ட அதிர்வில் அப்படியே நின்று விட்டவரின் பார்வை பின்பே நந்தினியின் மேல் பதிய.. இருவரையும் இப்படி இணைந்து இங்கு கண்டதில் உண்டான திகைப்பும், அவர்களின் மணக்கோலம் கண்டு உண்டான அதிர்வும் அப்பட்டமாக முகத்தில் தெரிய அசைய கூட மறந்து அப்படியே நின்று விட்டார் புஷ்பா.
 
 
‘இங்கே வேண்டாமே.. கிளம்பிடுவோம்..’ என்பது போல் அவனை நந்தினி மீண்டும் பார்க்க.. அவனோ ‘நீ இறங்கியே ஆக வேண்டும்..’ என்பது போல் அவள் முன் தன் கையை நீட்டினான். இதில் புஷ்பாவை சங்கடமாக பார்த்த நந்தினி விநாயக் கையை பற்றிக்கொள்ளாமல் தானாகவே மெதுவாக இறங்கி நிற்க.. அதே நேரம் “அடியேய், கார் வந்து நிற்குது யாருன்னு பார்கக அனுப்பினா.. அங்கே போய் சிலையா நின்றிருக்க, அப்படி யாரு வந்து இருக்கா..?” என்ற வேதவல்லியின் அதிகார குரல் வாயில் வரை கேட்டது.
 
 
இதற்கே நந்தினி பயத்தில் லேசாக தடுமாறி பின்னுக்கு நகர முயல, அவளின் கைப்பற்றி தன் அருகே இழுத்து நிறுத்தியவன், அவள் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டான்.
 
 
அதில் புஷ்பாவை ஏறிட்டு பார்க்க முடியாமல் நந்தினி பார்வையை தழைத்துக் கொண்டு தவிப்போடு நின்று இருக்கவும், புஷ்பாவுக்கு நிஜமாகவே இது பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது. 
 
 
இதில் அவர் வேதவல்லிக்கு எந்த பதிலும் சொல்லாமல் இன்னும் அப்படியே நின்றிருக்க.. “நான் இங்கே கேட்டுட்டே இருக்கேன், பதிலே சொல்லாம என்ன தான் செய்யறா இவ..?” என புலம்பியபடியே வாயிலை நோக்கி வந்தார் வேதவல்லி.
 
 
அந்தக் குரலுக்கே நந்தினியிடம் பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது. அதே நேரம் வாயிலில் வந்து நின்ற வேதவல்லியின் பார்வை இவர்கள் மேல் பதிந்து, ஒரு நொடி விழிகள் சுருங்கி பின் சூழ்நிலையை உணர்ந்தவரின் முகம் ஆத்திரத்திற்கு மாறியது.
 
 
“உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா, இந்த வீட்டு வாசப்படியை மிதிச்சிருப்பே..? இங்கே வர கூட ஒரு தகுதி வேணும், உனக்கு அது இல்லை..” என விநாயக்கை பார்த்து அவர் ஆங்காரமாக குரல் எடுத்து கத்தியதில், சமையலறையில் இருந்து சித்ராவும் இப்போதே வெளியில் செல்ல கிளம்பி கீழே வந்த ரகோத்தமனும் வேகமாக வாயிலுக்கு வந்து சேர்ந்தனர்.
 
 
சித்ராவுக்கு தன் மகளை இப்படி ஒரு கோலத்தில் கண்ட அதிர்வு ஒரு பக்கம் என்றால் அவள் விநாயக் அருகில் நிற்பது மற்றொரு அதிர்வை கொடுத்தது. இதில் திகைப்பு மாறாமல் அவர் நின்றுவிட, ரகோத்தமனுக்கோ எப்படி எதிர்வினையாற்றுவது என்று கூட புரியா ஒரு மனநிலை தான்.
 
 
இப்படி ஒரு சூழ்நிலையை அவர் கனவிலும் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ‘இவர்கள் இருவரும் எப்படி..? அதுவும் மணக்கோலத்தில்..! ஏன் இதெல்லாம்..?’ என்று அவருள்ளே பல கேள்விகள் முட்டி மோதி கொண்டு இருந்தது.
 
 
வேதவல்லியையும் சித்ராவையும் தவிப்போடு பார்த்த நந்தினி, விநாயக் கரங்களில் இருந்து தன் கையை விலக்கிக் கொள்ள முயன்றாள்.
 
 
ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் மேலும் தன் கரத்தை இறுக்கியவன், நிதானமாக சித்ராவின் பக்கம் பார்வையை திருப்பி “நானும் யதுவும் காதலிக்கறோம், அதனால் கல்யாணம் செஞ்சுக்கிட்டோம்..” என்றான் நிதானமான குரலில் விநாயக்.
 
 
“கல்யாணமா..! எது இதுவா..? அதானே உங்க அம்மா முறையா கல்யாண செஞ்சு வாழ்ந்து இருந்தா.. அதைப்பற்றி உனக்கும் தெரிஞ்சுருக்கும், அவளே ஒட்டிக்கிட்டு வந்தவ தானே.. அந்த புத்தி தான் உனக்கும் இருக்கும்..” என்று அருவருப்போடு முகத்தை சுழித்தார் வேதவல்லி.
 
 
இதில் விநாயக் முகமும் கரங்களும் இறுக.. இதை கலக்கமாக பார்த்தாள் நந்தினி. வேதவல்லியின் வார்த்தைகள் ரகோத்தமனுக்கு பெரும் வலியை கொடுக்க.. கண்டனமாக திரும்பி தன் தாயை பார்த்தவர், மறுத்து பேச முயன்று பின் அது இப்போது இருக்கும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கிவிடும் எனப் புரிந்து அமைதியாகி விட்டார்.
 
 
ஆனால் அவரின் பக்கம் கூட திரும்பாத விநாயக் சித்ராவை மட்டுமே பார்த்து “நீங்க உங்க மகளை காணோம்னு பயந்திட கூடாதுன்னு தான் நேரில் பார்த்து சொல்லிட்டு போக வந்தேன்..” என்றவன், சிறு இடைவெளி விட்டு “அதோட ஒரு சிலர் சொல்லாம கொள்ளாம உங்க பொண்ணு ஓடிப் போயிட்டான்னு தேவையில்லாம அவ மேலே பழி சொல்லுவாங்க, அதான் சொல்லிட்டே போகலாம்னு வந்தோம்..” என்றான் விநாயக். 
 
 
தன்னை கொஞ்சம் கூட மதிக்காமல் தன் பேச்சை ஒரு பொருட்டாக கூட எடுக்காமல் அவன் சித்ராவிடம் மட்டும் பேசிக்கொண்டு இருந்தது வேதவல்லிக்கு பெரும் எரிச்சலை கொடுக்க.. “உங்க அம்மாவால இந்த வீட்டுக்குள்ளே நுழைய முடியலைன்னு இப்போ உன்னை அனுப்பியிருக்காளா..? திட்டம் போட்டு புறவாசல் வழியா உள்ளே வருவது தான் உங்க குடும்ப வழக்கமா..! ஆனா இவளே ஒண்ணுமில்லாதவ அவளை கட்டிக்கிட்டதில் ஒரு பைசாவுக்கு பிரயோஜனம் இல்லைன்னு போய் அவகிட்ட சொல்லு..” என்று ஏகத்தாளமாக பேசினார் வேதவல்லி. 
 
 
அதில் திரும்பி அவரை முறைத்தவன் “எங்க அம்மாவை பற்றி பேசும் தகுதி கூட உனக்கு கிடையாது.. எங்க அம்மாவை பத்தி இன்னும் ஒரு வார்த்தை உன் வாயிலிருந்து வந்தது கொன்னு புதைச்சுடுவேன்.. மத்தவங்களை மாதிரி நீ என்ன வேணும்னாலும் பேசிக்கோன்னு வேடிக்கை பார்த்துட்டு நிற்க மாட்டேன்..” என ஒற்றை விரல் நீட்டி வேதவல்லியை எச்சரிப்பது போல் பேசினான் விநாயக்.
 
 
தன்னையே அவன் மிரட்டுவது போல் பேசியதில் உண்டான கோபத்தோடு “பேசினா.. பேசினா என்னடா செய்வே..? அப்படித்தான் பேசுவேன், என்னவோ உங்க அம்மா உத்தமி மாதிரியும் நீ முறையா பிறந்தவன் மாதிரியும் என்கிட்டயே எகிறிட்டு வர.. நான் என்ன இல்லாததையா சொன்னேன்..? உண்மையை தானே சொன்னேன்..” என அவர் சொல்லி முடித்த நொடி “ஏய்..” என்று ஆத்திரத்தோடு வேதவல்லியை அடிக்க பாய்ந்து விட்டான் விநாயக்.
 
 
அவனின் அந்த ஆக்ரோஷத்தில் வேதவல்லியே கொஞ்சம் நடுங்கித்தான் போனார். பயத்தோடு இரண்டடிகள் அவர் பின்னுக்கு நகர்ந்து நிற்க.. அதற்குள் “வினய்..” என்று ரகோத்தமனும் “தேவ்.” என நந்தினியும் அவனை இருபக்கம் பிடித்து தடுக்க முயன்றனர். 
 
 
அதில் இருவரிடம் இருந்தும் திமிறி விலகியவன், “நீ பேசறதை எல்லாம் அப்படியே நம்பும் அதே ஸ்கூல் பையனா இன்னும் என்னை நினைச்சுட்டு இருக்கே இல்லை.. இங்கே முறையை பற்றியும் ஒழுக்கத்தை பற்றியும் பேசும் தகுதி ஒருத்தருக்கும் கிடையாது..” என்று அங்கிருந்த மூவரையும் அழுத்தமாக பார்த்தபடியே உச்சரித்தவன் சித்ராவின் பக்கம் திரும்பி “நான் உங்களை சொல்லலை..” என்றான். 
 
 
இதை கண்டு புஷ்பாவின் முகம் வேதனையை வெளிப்படுத்தியது ரகோத்தமனுக்கும் இது பெரும் வலியை கொடுக்க.. விழியை இறுக மூடி சூழ்நிலையை கடக்க முயன்றார். 
 
 
ஆனால் இது வேதவல்லியை மேலும் சீண்டி விட, விநாயக்கை அமைதிப்படுத்த நினைத்து அவன் கரங்களை பிடித்தபடி நின்றிருந்த நந்தினியை பார்த்து “அடச்சீ தள்ளி நில்லு.. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு அவனை கட்டிக்கிட்டு வந்து என் முன்னேயே ஒரு உரசிட்டு நிற்கறே..” என்று அவளிடம் பாய்ந்தார் வேதவல்லி.
 
 
அதில் நந்தினி கைகளை வேகமாக எடுத்துக்கொள்ள முயல.. அதற்கு வாய்ப்பளிக்காமல் அவள் கையை தன்னோடு சேர்த்து பிணைத்துக் கொண்டவன், “யாரும் எதுவும் சொன்னா உடனே நீயும் அப்படியே செய்வியா..? என் புருஷன் நான் அப்படித்தான் ஒட்டி உரசிட்டு நிற்பேன்னு சொல்லத் தெரியாதா உனக்கு..?” என்று அவளிடம் காய்ந்தான் விநாயக். 
 
 
இதில் நந்தினி இரு பக்கமும் சிக்கிக் கொண்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திருதிருக்க.. “புருஷனா..! யாரு நீயா..? எங்கிருந்து வந்தான் இந்த திடீர் புருஷன்..? இதெல்லாம் ஒரு கல்யாணம் இதை எல்லாம் நான் ஒத்துக்கவே மாட்டேன்..” என அடங்காமல் கத்தி கொண்டே இருந்தார் வேதவல்லி. 
 
 
“உன்னை யார் ஒத்துக்க சொன்னது.. நான் உன்கிட்ட அனுமதி கேட்டு வந்து நிற்கலையே..!” என்று இதழ்களில் வழியும் கேலி புன்னகையோடு விநாயக் பதிலளிக்க.. “அப்புறம் எதுக்குடா இங்கே வந்தே..? பல வருஷத்துக்கு முன்னே இங்கே இருக்க சொத்தை எல்லாம் ஆட்டையை போட உங்க அம்மா போட்ட திட்டம் வேலைக்கு ஆகலைன்னு இப்போ உன்னை அனுப்பி இருக்காளா..?” என ஏகத்தாளமாக கேட்டார் வேதவல்லி. 
 
 
ஆனால் இப்போது கொஞ்சம் கூட கோபப்படாமல் “ஒருவேளை நீ இந்த வீட்டுக்குள்ளே அப்படித்தான் வந்தியோ.. அதனால் தான் யார் இங்கே வந்தாலும் உனக்கு அப்படியே தோணுதோ..!” என்று விநாயக் திரும்ப கேட்கவும், “ஏய் யாரை பார்த்து என்ன பேசறே..? நான் முறையா இந்த வீட்டுக்கு வந்தவடா..” என்று பெருமிதத்தோடு கூறினார் வேதவல்லி. 
 
 
“யாருக்குத் தெரியும்..! நீ எப்படி வந்தேன்னு உண்மையை சொல்லக்கூடிய யாரும் இப்போ உயிரோட இல்லையே..! இனி நீ சொல்றதை தான் இங்கே இருக்கஸஎல்லாரும் நம்பணும்.. அதனால் உன் விருப்பத்துக்கு கதை விடு, ஆனா நான் நம்ப மாட்டேன்..” என அவனும் விட்டுக் கொடுக்காமல் பேச.. “நான் யாரு எப்படி வாழ்ந்தேன்னு எல்லாம் உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லைடா..” என்று அப்போதும் திமிராகவே வேதவல்லி பேசார். 
 
 
“அதேதான் எங்க அம்மாவுக்கும்..! அவங்க யாருன்னு எனக்கும் அவங்களுக்கும் தெரிஞ்சா போதும்.. அதை உன்கிட்ட நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கும் இல்லை..” என்றான் அதே திமிர் கொஞ்சமும் குறையாத குரலில் விநாயக். 
 
 
ஆரம்பத்திலிருந்தே துளியும் மரியாதை இல்லாமல் தன்னிடம் பேசிக்கொண்டு இருப்பவனை கண்டு உண்டான எரிச்சலோடு “பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்க கூட தெரியாம, நல்லா வளர்த்து வெச்சு இருக்கா பிள்ளையை.. இதைத்தான் சொல்லுவாங்க குடும்பம் பெருமை பாரம்பரியம்னு..” என அவர் முகத்தை சுழிக்க “எங்க அம்மா எனக்கு நிறைய நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்து தான் வளர்த்து இருக்காங்க.. அதில் முக்கியமானது தரம் அறிஞ்சு நடந்துக்கறது, நாம பெரியவங்களுக்கு கொடுக்கும் மரியாதை அவங்க வயசை வெச்சு மட்டும் முடிவாகிறது இல்லை.. அவங்க நடந்துக்கும் முறையை வெச்சும் தான் முடிவாகும்.. அப்படி பார்த்தா என்னை பொறுத்த வரைக்கும் நீ ரொம்ப சின்ன புத்தி உள்ள ஆள்.. உனக்கு இதுவே போதும்..” என்றான் அவரைவிட அருவருப்பாக முகத்தை சுழித்தவாறே விநாயக்.
 
 
இதில் அவனை சமாளிக்க முடியாததோடு வார்த்தைக்கு வார்த்தை தன்னை அவமானப்படுத்துவதில் உண்டான எரிச்சலும் சேர, ரகோத்தமன் பக்கம் திரும்பிய வேதவல்லி “என்னடா அவன் பேசிட்டே இருக்கான், நீ பார்த்துட்டு இருக்கே..? இதெல்லாம் உன் வேலையா..!” என மகனின் மேல் பாய்ந்தார். 
 
 
அதில் அந்தப் பக்கம் திரும்பாமல் சித்ராவை மட்டும் பார்த்த விநாயக் “இங்கே நடந்ததை எல்லாம் நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காதீங்க.. உங்க மக நல்லா சந்தோஷமாவே இருப்பா, கவலைப்படாம இருங்க.. இதை சொல்லிட்டு போக தான் வந்தேன்..” என்று விட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்ல முயல.. “அவன் பாட்டுக்கு வந்து பேசிட்டு போயிட்டே இருக்கான்.. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கவா உங்களை பெத்து வளர்த்தேன்..” என்று ரகோத்தமன் மற்றும் சித்ராவை பார்த்து கத்தியவரின் கவனம் இப்போது நந்தினியின் பக்கம் திரும்பியது.
 
 
“உன்னை இத்தனை வருஷமா வளர்த்து படிக்க வெச்சதுக்கு நல்ல நன்றி கடன் காட்டிட்டே இல்லை நீ..! இதை தான் சொல்லுவாங்க, நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வெச்சாலும் அது புத்தி எதையோ தேடி தான் போகும்னு.. அதான் நீயும் அப்படியே போயிட்டியே..!” என்று விநாயக்கை பார்த்தபடியே அவர் கூற, நந்தினியின் பக்கம் திரும்பியவன் அவளாக பதில் சொல்லப் போவது இல்லை என்று உணர்ந்து “நீ வளர்த்து படிக்க வெச்சியா..? எப்படி நீயே வேலைக்கு போய் கல்லை உடைச்சு.. வேர்வை சிந்தி சம்பாதிச்சா..!” என்றான் நக்கலாக வேதவல்லியை பார்த்து விநாயக்.
 
 
அவர் என்ன பேசினாலும் அடுத்து எதுவும் பேச முடியாத அளவிற்கு சரியாக குறுக்கே அவன் வந்து நிற்பதை பொறுக்க முடியாமல் நந்தினியின் பக்கம் திரும்பியவர் “இங்கே பாருடி, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. என்ன சொல்லி இன்னைக்கு உன்னை ஏமாத்தினானோ எனக்கு தெரியாது.. ஆனா இவன் கூட நீ போனே, உன் வாழ்க்கை நாசமா போயிடும்.. நீ நல்லாவே இருக்க மாட்டே..” என்று சாபம் விடுவது போல பேசினார் வேதவல்லி.
 
 
அதில் விழிகள் கலங்கிவிட நந்தினி அப்படியே அவரை அசையாமல் பார்த்தபடி நின்றிருக்க.. சித்ராவுக்கும் இந்த வார்த்தைகளில் மனம் வெகுவாக கலங்கியது. விநாயக் இதையெல்லாம் அமைதியாக கடந்து விட முடியாமல் “அவள் எப்படி வாழ போறான்னு நீயும் பார்க்க தானே போறே..!” என்றான் விநாயக். 
 
 
“என்னடா என்னமோ காவியக் காதல் மாதிரி என்கிட்டேயே நாடகம் போடறே.. எங்கே என்ன பார்த்து சொல்லு, அவளை பிடிச்சு அவளுக்காகவா இந்த கல்யாணம் செஞ்சுக்கிட்டே..! என்னை பழிவாங்கவும் இந்த வீட்டுக்குள்ளே குறுக்கு வழியில் நுழையவும் தானே இதெல்லாம் செய்யறே..? எனக்கு தெரியாது நினைச்சியா..!” என்று வெறுப்போடு கத்தினார் வேதவல்லி. 
 
 
அதற்கு கொஞ்சமும் அசராமல் “ஆமா உன்னை பழிவாங்க தான் இந்த கல்யாணம்.. அவளை பிடிச்சு நான் இதை செஞ்சுக்கலை தான், இப்போ நீ என்ன செய்யப் போறே..?” என்று கேலியாகவே அவன் கேட்டு நிறுத்த.. அடுத்து என்ன பேசுவது என கூட தெரியாமல் திகைத்து பார்த்தார் வேதவல்லி.
 
 
இப்படியெல்லாம் பேசினால் அவன் இல்லை என்று வாதிடுவான். அதை வைத்து அப்படியே மேலும் அவன் மனதை நோகடிக்க எண்ணி அவர் பேச.. அதை அப்படியே அவன் ஒத்துக்கொண்ட பிறகு அடுத்து என்ன சொல்வது என்று கூட அவருக்கு புரியவில்லை. 
 
 
அதே நேரம் இங்கு நந்தினியோ அடிபட்ட பார்வை விநாயக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள். ‘அப்போ இதுக்காக தான் இந்த கல்யாணமா..? அதுக்காக தான் இவ்வளவு அவசரமா என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்களா..! எனக்காக என்னை பிடிச்சு இந்த கல்யாணம் செஞ்சுக்கலையா..?’ என்று அவள் மனம் அடுக்கடுக்காக கேள்விகளை கேட்டுக்கொண்டே செல்ல.. விழிகளில் தாங்கிய வலியோடு தன் அருகில் நின்றவனை பார்த்து கொண்டிருந்தவள், மெல்ல அவன் கைகளில் இருந்த தன் கரத்தை விலக்கிக் கொள்ள.. அதை பெரிதாக கண்டு கொள்ளாதவனின் கவனம் முழுக்க இப்போது வேதவல்லியின் மேல் மட்டுமே இருந்தது. 
 
 
மேலும் பத்து நிமிடங்கள் இருவரும் இப்படியே ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டும் மோதிக் கொண்டும் இருக்க.. இறுதியாக சித்ராவிடம் மட்டும் மீண்டும் சொல்லிக் கொண்டு வேறு யாரையும் திரும்பிக் கூட பார்க்காமல் நந்தினியுடன் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான் விநாயக்.
 
 
இங்கே வருவதற்கு முன் காரில் இருந்த மனநிலைக்கு முற்றிலும் மாறாக இப்போது நந்தினியின் மனநிலை இருந்தது. நிமிர்ந்தும் அவனைப் பார்க்காமல் விழிகளை தழைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பியது. 
 
 
அத்தனை சிரமப்பட்டு அதை கட்டடுப்படுத்தியவள், ‘எவ்வளவு முட்டாளா இருந்திருக்கேன்..? இத்தனை நாள் சாதாரணமா ஒரு வார்த்தை கூட பேசாம என்னை பார்க்க கூட விரும்பாதது போல இருந்தவர்.. திடீர்னு வந்து கல்யாணம் செஞ்சுக்கலாம்னு கேட்கும் போது எனக்கு ஏன் சரியா யோசிக்க தோணலை..? திடீர்னு ஏன் இந்த மாற்றம்னு நான் ஏன் நினைக்கவே இல்லை..! இதெல்லாம் வேதாம்மாவை பழிவாங்க தான்னா, அப்போ என் காதல்..! என்னைப் பற்றி அப்போவும் அவங்க யோசிக்கலை.. இப்போவும் யோசிக்கலை.. நான் தான் இங்கே பைத்தியக்காரி போல அவரை மட்டுமே நினைச்சுட்டு இருந்திருக்கேன்..!’ என்றெல்லாம் தனக்குள்ளேயே அவள் யோசித்து குழம்பிக்கொண்டு அமர்ந்திருக்க.. இடையில் இருமுறை அவளைத் திரும்பிப் பார்த்தபடியே காரை ஓட்டியவனும் நந்தினியை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. 
 
 
சற்று முன் நடந்தது, வீட்டை விட்டு பிரிந்து வருவது இதெல்லாம் அவளுக்குள் வருத்தத்தை விதைத்திருக்கும் என்று புரிந்து அவளுக்கான அமைதியை கொடுத்திருந்தவன், தன் வீட்டின் முன் சென்று காரை நிறுத்தினான்.
 
 
கார் நின்ற பிறகும் நந்தினி தலையை உயர்த்தாமல் இருப்பதை கண்டவன் “நாம இறங்கணும் யது..” என்று சொல்லிவிட்டு, முதலில் இறங்க வேறு வழி இல்லாமல் நந்தினியும் உடன் இறங்கினாள்.
 
 
தன் அலைபேசியை எடுத்து அபிராமிக்கு அழைத்தவன் “ம்மா கொஞ்சம் வெளியே வாங்க, உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்..” என்றான் விநாயக். “என்ன சர்ப்ரைஸா..?” என்றபடியே அடுத்த சில நிமிடங்களில் வெளியில் வந்த அபிராமி மணக்கோலத்தில் தன் மகனை அங்கு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் திகைப்பிலேயே தெரிந்தது. 
 
 
ஆனாலும் சட்டென தன்னை மீட்டுக் கொண்டவர், இருவரையும் விழிகளால் வேகமாக அலச.. மகனின் முகம் புன்னகையோடு இருக்க.. நந்தினி முகத்தில் கலவையான ஒரு உணர்வு. அதை கவனித்தவர் வேறு ஏதும் பேசாமல் “ஒரு நிமிஷம்..” என்று விட்டு வீட்டிற்குள் சென்று ஆரத்தி தட்டுடன் வெளியில் வந்தார்.
 
 
“இந்த பக்கம் திரும்பி சேர்ந்து நில்லுங்க..” என்று அவர் ஆரத்தி எடுக்க தயாராக.. அவரை விரிந்த புன்னகையோடு பார்த்தவன் “என்னம்மா ஏன் எதுக்குன்னு நீங்க ஒரு வார்த்தை கூட கேட்கலை.. ஆரத்தி எடுக்கறீங்க..?” என்றான்.  
 
 
“என் மகன் தப்பா எதுவும் செய்ய மாட்டான்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.. எனக்கும் கேட்க நிறைய இருக்கு, ஆனா அதையெல்லாம் வாசலிலேயே வெச்சா கேட்க முடியும்..? எப்படியும் நீ விருப்பமில்லாத பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், இரண்டு பேர் சம்மதத்தோட நடந்திருக்கும் கல்யாணம் தானே..” என்றவர் பேசிக்கொண்டே ஆரத்தி எடுத்து முடித்து “நீங்க இரண்டு பேரும் உள்ளே போங்க.. நான் இதை கொட்டிட்டு வரேன், மறக்காம வலது காலை வெச்சு போங்க..” என்று கொஞ்சம் சந்தோஷ பரபரப்போடே சொல்லிவிட்டு சென்றார்.
 
 
அடுத்த சில நொடிகளில் இருவரையும் பூஜை அறைக்கு அழைத்துச் சென்று நந்தினியை விளக்கேற்ற செய்தவர், “இரண்டு பேரும் நல்லா வேண்டிக்கோங்க.. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கும்..” என்றார். இதுவே முன்பென்றால் இத்தனை இயல்பாக அபிராமி தன்னை ஏற்றுக் கொண்டதற்கு அகமகிழ்ந்து போயிருப்பாள் நந்தினி. 
 
 
ஆனால் இப்போது இதெல்லாம் துளியும் அவளுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை. எதிலோ பெரிதாகத் தோற்று விட்ட உணர்வு மனம் முழுக்க நிரம்பி இருக்க.. பெரிதாக நம்பி ஏமாந்து விட்டது போல் மனம் கனக்க தொடங்கியதில் எந்த வேண்டுதலும் இல்லாமல் விழிமூடி அமைதியாக நின்றாள் நந்தினி. 
 
 
அடுத்து இருவரையும் அமர வைத்து அபிராமி பால் பழம் கொடுக்க.. அதை சாப்பிட்டபடியே சுருக்கமாக இருவரும் காதலித்ததும் திருமணம் செய்து கொள்ள நினைத்ததையும் பற்றி அவர் தெரிந்துக் கொள்ள வேண்டிய விதத்தில் கூறியவன், “நீங்க கண்டிப்பா என் காதலுக்கு எதிரா இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும்.. ஆனாலும் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு உங்களை ஏன் கூப்பிடலைன்னா யது அம்மா அங்கே வர முடியாத சூழல், அப்போ நீங்க மட்டும் வந்தா அவ வருத்தப்படுவான்னு தான் உங்களுக்கும் சொல்லலாம்மா தப்பா எடுத்துக்காதீங்க..” என்றான் விநாயக். 
 
 
இதெல்லாம் அருகில் இருந்தவளின் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை. “என் பையன் கல்யாணத்தை பார்க்க முடியலையேன்னு எனக்கும் கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு.. ஆனா இத்தனை வருஷமா பிடி கொடுக்காம இருந்தவன், இப்போ கல்யாணம் செஞ்சுக்கிட்டான்னு நினைக்கும் போது எனக்கு சந்தோஷமா இருக்கு.. அதனால் உன்னை மன்னிச்சுட்டேன் பிழைச்சு போ..” என்று புன்னகைத்தார் அபிராமி. 
 
 
இந்த எந்த பேச்சிலும் கலந்து கொள்ளாமல் நந்தினி அமைதியாகவே இருக்க.. புதிய இடம் புதிய சூழல் அதோடு வீட்டை விட்டு பிரிந்து வந்திருப்பது இதெல்லாம் அவளின் மனதிற்குள் சிறு கலக்கத்தை உண்டாக்கி இருக்கும் என்று புரிந்து “சரி நந்துக்கு கொஞ்சம் ஓய்வு வேணும் போல முகம் வாடி இருக்கு, உன் ரூமுக்கு கூட்டிட்டு போய் ரெஸ்ட் எடுக்க வை..” என்றார் அபிராமி. 
 
 
சரி என விநாயக் எழுந்து கொள்ள.. இல்லை வேண்டாம் என மறுக்க நினைத்தாலும் நந்தினிக்கு வார்த்தைகள் வரவில்லை. அதில் வேறு வழி இல்லாமல் அவனுடன் சென்றவளை அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி விநாயக் பின்னிருந்து இறுக்கமாக அணைத்துக் கொள்ள.. அவனிடமிருந்து வேகமாக விடுப்பட்டு விலகி நின்றவள், “அதான் நீங்க நினைச்சது எல்லாம் சரியா நடந்தாச்சே இன்னும் ஏன் நடிக்கிறீங்க..?” என்றாள். 
 
 
அதில் அவள் பேசுவது புரியாமல் விழிகளை சுருக்கி விநாயக் பார்க்க.. “உங்களுக்கு தான் என்னை சுத்தமா பிடிக்காது இல்லை..” என்று கேட்கும் போதே அவளுக்கு குரல் லேசாக திணறியது. இதில் நிதானமாக அவளைப் பார்த்தவன் “என்னை பார்த்தா அப்படியா இருக்கு..?” என்றான். 
 
 
இதற்கு பதில் சொல்லாமல் நந்தினி அமைதியாகவே இருக்க.. அவளின் முகத்தை தன் ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன், நந்தினியின் விழியோடு விழி கலந்து “சொல்லு அப்படியா இருக்கு..?” என்றான் மீண்டும் விநாயக்.
 
 
ஆம் என சொல்ல அவளுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இல்லை என மறுக்கவும் அவளால் முடியவில்லை. இதில் நந்தினி அமைதியாகவே இருக்க.. அவனும் வேறு எதுவும் கேட்காமல் அவள் முகத்தையே பார்த்தபடி நின்றிருந்தான்.
 
 
இது நந்தினிக்கு பெரும் அவஸ்தையாய் இருக்க.. மீண்டும் அவனிடமிருந்து விலக முயன்றவளை விநாயக் பிடித்து நிறுத்த.. “நீங்க நினைச்சது தான் நடந்தாச்சே இன்னும் என்ன வேணும் உங்களுக்கு..?” என்றாள் அழுகை குரலில் நந்தினி.  
 
 
அதுவரை விளையாட்டு போல் அவளை கையாண்டு கொண்டு இருந்தவன், இப்போதே நந்தினியின் வார்த்தைகளில் இருந்த வித்தியாசம் புரிந்து விழிகளே சுருக்கி “என்னாச்சு..?” என்று கேட்கவும் “ஏன் உங்களுக்கு தெரியாதா..? இல்லை எல்லாம் நானே சொல்லணுமா..! சரி நானே சொல்றேன், இந்த கல்யாணம் வேதம்மாவை பழிவாங்க தானே..! அவருக்கு பிடிக்காததை வீம்பா செய்யணும்னு தானே இதையெல்லாம் செஞ்சீங்க..” என்று எவ்வளவு முயன்றும் கட்டுப்படுத்த முடியாத குரலில் அவள் கேட்டு விட்டிருக்க.. நிதானமாக அவளை பார்த்தவன் “ஹே அப்படி இல்லை..” என்று ஏதோ சொல்ல வர, அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை நந்தினி.
 
 
“ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளு..” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில் விநாயக். “போதும் அங்கேயே நீங்க சொன்னதை எல்லாம் நல்லா கேட்டுட்டேன், எனக்கு அதுவே போதும்..” என்று அப்போதும் நந்தினி கோபமாகவே பேச, “அதை நீ நம்பறியா..?” என்றான் விநாயக். 
 
 
இதற்கு பதிலேதும் சொல்லாமல் நந்தினி முகத்தை திருப்பிக் கொள்ள.. அவள் முகத்தை பிடித்து திருப்பி தன்னை பார்க்க செய்தவன் “சொல்லு உனக்கு அப்படியா தோணுது.?” என்றான். 
 
 
செய்வதையும் செய்துவிட்டு இப்போது நிதானமாக தன்னை கேள்வி கேட்டுக்கொண்டு இருப்பவனின் மேல் உண்டான கோபத்தோடு “இதில் தோன்றுவதற்கு என்ன இருக்கு..? அதுதானே நிஜம்..!” என்று அவளும் கூறிவிட, “அப்போ அப்படியே வெச்சுக்கோ போடி..” என்று விட்டு அங்கிருந்து வெளியேறிய இருந்தான் விநாயக். 
 


   
ReplyQuote
Page 3 / 4

You cannot copy content of this page