All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 4 / 4
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 
ஜானகி மந்திரம் 31 A
 
அடுத்த கணமே, 
 
ஸ்ரேயாவின் அறைக் காட்சியிலிருந்து கேமரா 'ஸ்விஷ் கட்' (Swish Cut) ஆகி மீண்டும் வெளியே வர...
 
பின்னணியில் மியூட் ஆகியிருந்த இசைஞானியின் அந்த மெலடி, இம்முறை தாளக் கட்டுகளுடன் அதிரடியாக எகிறித் தொடங்கியது.
​மாண்டேஜ் பாடலின் முதலாவது சரணம் கண்டாலாவின் மலைக் காற்றில் கம்பீரமாக ஒலிக்க ஆரம்பித்தது.
 
லொகேஷன்: காட்சியின் பின்னணி அப்படியே ஒரு கனவுலகமாக மாறுகிறது. கண்டாலாவின் பிரம்மாண்டமான, பச்சைப்பசேலென்ற ஒரு மலையடிவாரம். சுற்றிலும் அடர்ந்த மரங்கள் சூழ, தரை முழுக்க இயற்கையாய் பூத்துக் குலுங்கும் வெளிறிய ஆரஞ்சு நிறம் (pastel orange), அடர் திராட்சை நிறம் (Deep Wine), மின்சார நீலம் (Electric Blue), மயில் நீலப்பச்சை (Teal green) மற்றும் தாமிர வர்ணம் (Metallic Copper) என வகை வகையான காட்டுப் பூக்கள் ஒரு மாயாஜால பலவண்ணக் கம்பளம் விரித்தாற்போல் காற்றில் அசைந்தாடுகின்றன.
 
"இடமும் வலமும் இரண்டு உடலும் மனமும்
ஓஓ இணைந்தோங்கி நிற்கும்போது
இதையன்றி எண்ணம் ஏது
இளவேனிற்காலம் வசந்தம்..."
மைதிலி இப்போது இளமஞ்சள் நிற அனார்கலி உடையில், வெள்ளை மலர் எம்பிராய்டரி வேலைப்பாடுகள் மின்ன, பூக்களின் நடுவே தேவதையாய் மலர்ந்திருந்தாள். மனோ, காபி பிரவுன் நிறக் கோட்டும் (Brown Blazer), அதற்கு பொருத்தமான வெளிர் நிறச் சட்டையும் அணிந்து செம ஸ்டைலாக மாறுகிறான்.
 
​அந்தப் பூக்களுக்கு நடுவே இருவரும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். மைதிலி தன் இரு கைகளையும் சற்றே விரித்து, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடுகிறாள். மனோ அவளது அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்கிறான்.
 
​“ஒரு கோவில் மணியின் ராகம்... லலல லலல லலல..
 
பாடல் வரிகளின் 'லலல' பீட்ஸிற்கு ஏற்ப, கேமரா அவர்களைச் சுற்றி '360 டிகிரி' கோணத்தில் வேகமாக சுழல்கிறது. இப்போது மனோவும் மைதிலியும் ஒருவரையொருவர் பார்த்தபடி, தங்களின் வலது கையை மட்டும் மேலே உயர்த்தி, விரல்களால் காற்றில் ஒரு அழகான முத்திரையை பதிப்பது போல் மெதுவாக அசைக்கிறார்கள். அப்படியே தங்களின் இடது கையை இடுப்பில் வைத்தபடி, அந்தப் பூந்தோட்டத்தின் புல்வெளியில் வட்டமாக சுழன்று (Spins) ஆடுகிறார்கள். மைதிலியின் பறக்கும் கூந்தலும், அவளது மஞ்சள் நிற உடையின் விளிம்புகளும் அலைபாய, அவளின் வெள்ளை நிறத் துப்பட்டா, காற்றில் மிதக்கும் வெண் மேகத்தின் துண்டு போல அவளை சுற்றி ஒரு அழகான வட்டப் பாதையை உருவாக்குகிறது.
 
​“ஒரு கோவில் மணியின் ராகம்...
ஒரு வானில் தவழும் மேகம்...
பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே...”
 
இசை இன்னும் மென்மையாக கரைய, மனோ சட்டென்று தன் கைகளை மைதிலியின் தோள்களுக்கு அருகில் கொண்டு வருகிறான். ஆனால், அவளைத் தொடாமல் அவளது உடலின் அசைவுகளுக்கு இணையாக தன் பிளேஸர் கைகளை அசைக்கிறான். மைதிலி லேசாக சரிந்து தன் இரு கைகளையும் மார்போடு குவித்து வைத்துக்கொண்டு, மனோவுக்கு மிக அருகில் வந்து, பின் அப்படியே பின்னோக்கி சில அடிகள் எடுத்து வைத்து நளினமாக விலகி ஓடுகிறாள். அவள் விலகும் போது, மனோ அவளது பாதச் சுவடுகளை பார்த்தபடி, காற்றில் மிதக்கும் அந்த வெண் மேகங்களை நோக்கித் தன் கைகளை உயர்த்தி, அவளைத் தன் முழு உலகமாக ஏற்கும் தோரணையில் அந்தப் புல்வெளியில் கம்பீரமாக நடந்து வந்து அவளோடு இணைகிறான். இருவரின் முகத்திலும் அந்தப் பூக்களின் பிரகாசமும், எல்லையற்ற காதலின் ஏக்கமும் அப்பட்டமாக தெரிகிறது!
 
அந்த வினாடியில்... கேமரா மைதிலியின் முகத்தில் closeup காட்டி நிற்கிறது.
 
​திடீரென, 'டிங்...' என்ற மொபைலில் மெசேஜ் டோன் சத்தம்.
 
அந்தச் சத்தம் கேட்ட அடுத்த கணமே, கனவுலகத்தின் அந்தப் பலவண்ணப் பூக்களும் மலையடிவாரமும் அப்படியே மெதுவாகக் கலைந்து மறைகின்றன.
​பின்னணியில் ஒலித்த 'நெற்றிக்கண்' பாடலின் முதல் சரணத்துக்கான மியூசிக் சட்டென்று முழுமையாக நின்றுபோக, அந்த மெசேஜ் டோனின் சத்தம் மைதிலியை அப்படியே நிஜ உலகத்திற்குள் இழுத்து வருகிறது.
 
அடுத்த சரணத்துக்கு போவதற்குள் ரெண்டு முக்கிய சம்பவங்களை பார்த்து விடலாம்.
 
சம்பவம் 1:
ஐந்தாவது செமஸ்டரின் இறுதியில், சன்ஷைன் யாரென்று பாபி தீவிரமாக தேடத் தொடங்கிய நேரத்தில், எதிர்பாராத விதமாக ஒரு பைக் விபத்து அவனுக்கு ஏற்பட்டது. இடது கால் எலும்பு முறிந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவன் மருத்துவமனையிலேயே முடங்கி கிடக்க நேர்ந்தது. காலேஜிற்கு வராமல் மெடிக்கல் லீவில் அவன் இருந்ததால், சன்ஷைன் கேர்ள் பற்றிய உண்மையை அவனால் மேற்கொண்டு துப்புத் துலக்க முடியாமல் போனது.
 
​சம்பவம் 2 :
 
அதே காலகட்டத்தில், அவளது சொந்த ஊரான மஞ்சாரிலிருந்து அம்மா ஜான்சி போன் செய்திருந்தாள். சாகர் மாமாவின் மகன் சஞ்சீவ், போதைக்கு அடிமையாகி திருட்டு வழக்கில் ஜெயிலுக்குப் போயிருக்கும் அதிர்ச்சி தகவலை சொன்னாள். 
 
"அவன் லட்சணம் ஊருக்கே தெரிஞ்சுப் போச்சு மைதி. இனி அவனுக்கு யாரும் பொண்ணு தர மாட்டாங்கன்னு, உன்னை அவனுக்கு கட்டி வைக்க மாமாவும் அத்தையும் ரகசியமா பேசிட்டு இருக்காங்க. நீ அங்கேயே ஜாக்கிரதையா இரு" என்று ஜான்சி எச்சரித்தாள். அவளின் ஆஸ்துமா பிரச்சினை மோசமாகிக் கொண்டிருப்பதை, அன்று மைதிலிக்கு தெரியாமல் ஜான்சி மறைத்துவிட்டாள்.
 
 
மியூட் ஆகியிருந்த இசைஞானியின் மெலடி மீண்டும் தாளக் கட்டுகளுடன் இரண்டாவது சரணமாக ஒலிக்கத் தொடங்குகிறது.
 
​"இடையும் கொடியும் குலுங்கும் நடையும் மொழியும்...
(ல ல ல லலல லலல...)
எடை போடக் கம்பன் இல்லை எனக்கந்த திறனும் இல்லை...
இலை மூடும் வாழைப் பருவம்...”
 
அதே கண்டாலாவின் பச்சை பசேல் என்ற மலையடிவாரம். காற்றில் அசைந்தாடும் பல்வேறு வர்ணப் பூக்களுக்கு நடுவே கனவு மீண்டும் தொடர்ந்தது.
மைதிலி இப்போது புதுமையான மென்மையான பிஸ்தா கிரீன் (Soft Pistachio Green) நிறச் சுடிதாரில் தேவதையாய் நின்றிருந்தாள். அதன் குர்தி முழுவதும் நுட்பமான வெள்ளைச் சில்க் நூல் வேலைப்பாடுகள் மின்ன, அவளது தோளில் இருந்த மெல்லிய Soft Grey நிறப் பட்டு துப்பட்டா காற்றில் அலை அலையாய் மிதந்தது. மனோ, டார்க் ஆலிவ் கிரீன் நிற கார்கோ ஷர்ட், அதன் உள்ளே ஒரு வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் டெனிம் பேண்ட் அணிந்து செம கூலாக நின்றிருந்தான்.
மைதிலி தன் பிஸ்தா கிரீன் சுடிதாரின் விளிம்புகள் அங்கிருந்த வண்ணப் பூக்களின் மீது பட்டு உராய்ந்து செல்ல, முகத்தில் வெட்கப் புன்னகையோடு இடமும் வலமுமாக தன் உடலை வளைத்து, பூக்கள் மீது மெதுவாக மிதப்பது போல் ஓரிரு அடிகள் எடுத்து வைத்து நளினமாக ஆடினாள். அவளது காற்றில் பறக்கும் துப்பட்டாவின் அசைவுகளுக்கு கச்சிதமாக தன் கால்களை நகர்த்தி, மனோ அவளைத் தன் காதலால் ஆட்கொள்வது போல் பின் தொடர்ந்தான்.
 
​எங்கிருந்தோ நுழைந்த சஞ்சுவும் இந்துவும் கைகளைக் கட்டிக்கொண்டு, இவர்களை முறைத்து பார்த்தபடி, சத்தமாக கேட்டார்கள்:
 
​"ஏய்... என்னடி பண்ணிட்டு இருக்க?!"
 
​அந்த ஒற்றைக் குரலில், பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த 'நெற்றிக்கண்' பாடலின் இசை அப்படியே கட் ஆனது! 
 
​மனோவும் மைதிலியும் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்க்க...மலையடிவாரமும், பூக்களும், கனவு காட்சியும் அப்படியே காற்றில் கலைந்து சட்டென்று மறைந்து... காட்சி அப்படியே நிஜ உலகிற்கு தாவியது.
 
​படுக்கையில் படுத்தபடி கனவு கண்டு கொண்டிருந்த மைதிலியின் அருகே சஞ்சுவும் இந்துவும் அதே பொசிஷனில் கை கட்டியபடி நின்றிருந்தனர்.
 
இரவு மணி 11
 
மைதிலி பதறிப் போய் எழும்பி உட்கார,
இந்து: "ஏய், என்னடி பண்ணிட்டு இருக்க? முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கு. கனவு கண்டுகிட்டு இருக்கியா?" 
 
இருவரும் அப்போதுதான் வாஷ்ரூமிற்குப் போய், முகத்தில் அப்ளை செய்திருந்த பேசியல் ஸ்க்ரப்பை கழுவிவிட்டு, கைகளில் டவலோடு அறைக்குள் நுழைந்திருந்தனர். அவர்களின் ஈர முகத்தில் இன்னும் அந்த பேசியல் க்ரீமின் நறுமணம் மெலிதாக எஞ்சியிருந்தது.
 
​மைதிலியின் இதழ்களில் இன்னும் எஞ்சியிருந்த வெட்கப் புன்னகையை பார்த்த கணத்திலேயே, அங்கே என்ன நடந்திருக்கும் என்பதை அந்த இரு தோழிகளும் நொடியில் புரிந்து கொண்டனர். 
 
​சஞ்சு டவலால் முகத்தை துடைத்துக்கொண்டே கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். 
 
"எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி கனவு கண்டுக்கிட்டே வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருப்பே சுட்கி? நேர்ல போய் அவன்கிட்ட விஷயத்தை சொன்னாதான் என்ன?"
 
மைதிலி ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தப்பிப்பதற்காக வாய் திறக்க... அதை சட்டென்று கவனித்த இந்து, தன் கையை நீட்டி அவளை பேசவிடாமல் தடுத்தாள்.
 
​"வேண்டாம் தாயே! தூங்க போற நேரத்துல உன்னுடைய சொற்பொழிவை கேக்குறதுக்கு நாங்க ரெடியா இல்ல. நீ என்னென்ன சாக்குப்போக்கு காரணங்கள் சொன்னாலும்... நிஜம் என்ன தெரியுமா? அவன் இப்போ உன்னை முழு மனசா லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான். காலேஜ் முடியறதுக்கு வெறும் ஒன்றரை மாசம் தான் இருக்கு. இப்ப சொல்லாம நீ எப்ப சொல்லப் போற? ஏதாவது ஒரு காலகட்டத்துல சொல்லித்தானே ஆகணும்... இல்ல, கடைசி வரைக்கும் சொல்லாமலயே இப்படியே ஊருக்குப் போயிடப் போறியா?"
 
​'காலேஜ் முடியப் போகுது...' — இந்து தற்செயலாக அந்தப் புள்ளியைத் தொட்டதும், மைதிலியின் உலகமே ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனது.
​காலேஜ் முடிய இன்னும் நாற்பத்தைந்து நாட்கள். கணிதம் மிகத் துல்லியமானது. நாட்கள் கரையும் வேகம் பயமுறுத்துகிறது. சட்டென்று அவளது கண்ணிமைகளின் ஓரத்தில் நீர் கோத்துக் கொண்டது. லென்ஸுக்குள் புகுந்த தூசி போல ஒரு மெல்லிய வலி. கண்கள் குளமாகி, அந்த நீர்திரைக்கு பின்னால் சஞ்சுவின் முகமும் இந்துவின் முகமும் மங்கலாக தெரிந்தன. 
 
​சஞ்சு அவளது கைகளை பற்றிக்கொண்டாள். "இந்து கேட்கிறது கரெக்ட்தானே சுட்கி.... எவ்வளவு நாளைக்குத்தான் சொல்லாம இப்படி இழுத்துட்டே போக முடியும்? ஒருவேளை... நீ அவன்கிட்ட விஷயத்தை சொல்லி, அவன் வேற மாதிரி ஏதாவது பதில் சொன்னா உன்னால தாங்க முடியாதுங்கிறது உண்மைதான், எங்களுக்கு புரியுது. அதுக்காக இப்படியே சொல்லாமலே இருக்கிறதுல என்ன நியாயம் இருக்கு?"
​அவளுக்குள் ஒரு மௌன யுத்தம் நடந்து கொண்டிருந்தது. வார்த்தைகளால் நிரப்ப முடியாத ஒரு அந்தரவெளி அது. காதலின் வதையே இந்த bloody தவிப்புதான். Sunshine யாரென்ற உண்மை தெரிந்து, அவன் அவளைத் தவிர்த்து விட்டால், இதுவரை ரகசியமாய் ஆராதித்த இந்த ஒட்டுமொத்தக் கனவுலகமும் நொறுங்கி தவிடுபொடியாகிவிடுமே என்ற பயம் ஒருபுறம்; சொல்லாமல் பிரிந்தால், எஞ்சிய வாழ்நாள் முழுக்க இந்த குற்ற உணர்ச்சியே ஒரு தீராத ரணமாக தன்னை அரித்து தின்றுவிடுமே என்ற பதற்றம் மறுபுறம். அவளது இதயம் ஒரு ஊசலாட்டத்தின் உச்சியில் நின்றது. இரண்டு பக்கமும் பாதாளம் தெரிந்த ஒரு குறுகிய பாலத்தில் தத்தளிப்பவளை போலிருந்தது அவளது நிலை.
 
​மைதிலி பதில் சொல்ல முடியாமல் தவிப்பதைப் பார்த்த இந்து, சஞ்சுவின் பக்கம் திரும்பினாள்.
 
"எனக்கென்னவோ இவ கடைசி வரைக்கும் அவன்கிட்ட சொல்ல மாட்டான்னுதான் தோணுதுடி. என்ன ஆனாலும் சரி, பேசாம நாமளே மனோகிட்ட போய் உண்மையை சொல்லிட்டா என்ன?"
 
​"சீச்சீ... நல்லாவே இருக்காதுடி!" சஞ்சு அதை உடனே மறுத்தாள். 
 
"நான் இதைப்பத்தி யோசிக்காம இல்ல. ஆனா, மனோகிட்ட போய் 'உன்னோட சன்ஷைன் காதலி இவதான்'னு நாம மூணாவது மனுஷங்களா சொல்றதை விட... மைதிலியே நேர்ல போய் 'நான் தான் உன்னோட சன்ஷைன்'னு சொல்லும்போது அவனுக்கு எப்படி இருக்கும்? சும்மா அதிரும்ல..." —
 
சொல்லும்போதே சஞ்சுவின் கைகளில் இருந்த ரோமங்கள் குத்திட்டு நின்றன. தன் உடலை ஒருமுறை சிலிர்த்துக் காட்டினாள். 
 
"அப்படியே பையனுக்கு Goosebumps ஆயிரும்!"
 
​தொடர்ந்து சஞ்சுவின் கண்கள் பிரகாசமடைந்தன. 
 
"அதைவிட இன்னொன்னு சொல்றேன் கேளு... ஒருவேளை, அவனா தேடி இவதான் அந்த 'சன்ஷைன்'னு கண்டுபிடிச்சு வந்து நின்னா எப்படி இருக்கும்?"
 
​அந்த ஒரு நொடி... மூவருமே அமைதியாயினர். அந்த அற்புத தருணத்தை, மனோ மைதிலியை அடையாளம் காணும் அந்த காதல் காட்சியை தங்களின் கற்பனையில் ஓடவிட, மூவரின் உடலும் ஒருசேர சிலிர்த்துப் போனது! அறையின் மௌனத்தில் அவர்களின் மூச்சுக்காற்று மட்டும் சூடாய் ஏறி இறங்கியது.
 
​இந்து தான் முதலில் அந்த சிலிர்ப்பிலிருந்து வெளியே வந்தாள். 
 
"அதான்... அவன் கண்டுபிடிக்கிற மாதிரியே தெரியலையே! அவன் ஏதோ ரொம்ப டீசண்டா, 'சன்ஷைன்' மனசு புண்படக் கூடாதுன்னு நேர்ல வரச் சொல்லி கட்டாயப்படுத்தாம இருக்கிறான். இப்படி ஒருத்தன் எங்கயாவது இருப்பானா? இதுக்கு மேல எனக்கெல்லாம் பொறுமை இல்லை சுட்கி. நாளைக்கு நீயே அவன்கிட்ட போய் நேர்ல பேசி, உண்மையை சொல்றே... உனக்கு பயமா இருக்கு, உன்னால முடியாதுன்னா சொல்லு, நானே நேர்ல போய் அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடுறேன். அவ்வளவுதான்!"
 
​மைதிலி பயத்தோடும் தயக்கத்தோடும் தன் இரு தோழிகளையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள். அவளது கண்கள் 'வேண்டாம்' என்று கெஞ்சின.
 
​சஞ்சு அவளை சமாதானப்படுத்தும் குரலில், "நாம கற்பனை பண்ற மாதிரி எல்லாம் எதுவும் இங்க நடக்காது சுட்கி. இப்போதைக்கு வேற வழியே இல்லை, நீயே போய் சொல்லிரு... என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம், கவலைப்படாதே. உனக்குத்தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோமே! அதனால கவலைப்படாதே. நாங்க சொல்றத இனிமே நீ கேளு. நாளைக்கு அவன் காலேஜுக்கு பைக்ல வருவானா, இல்ல கார்ல வருவானா?"
 
​மைதிலி தன் கண்களை துடைத்துக்கொண்டு, லேசான நடுக்கத்துடன் சொன்னாள், "நாளைக்கு Wednesday... அதனால கார்லதான் வருவாரு."
 
இந்து: ஓஹோ!!! அவரு schedule அவரைவிட இவங்களுக்கு தான் கரெக்டா தெரியும் போலருக்கு... என்று கலாய்க்க, மைதிலி எதுவும் சொல்லவில்லை.
 
சஞ்சு: ​"சூப்பர்! கார்னா இன்னும் வசதி... பிரைவசி கிடைக்கும்!" என்று சஞ்சு குதிக்க, "ஓகே... நாளைக்கு எந்த இடத்துல வச்சு, எப்படி, எந்த வழியில அவன்கிட்ட சொல்லலாம்?" என்று மைதிலியின் சார்பாக சஞ்சுவும் இந்துவும் தீவிரமாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்து, ஆலோசனையில் இறங்கினர்.
 
'நாளைக்கு என்ன ஆகப்போகிறதோ...' என்ற டென்ஷனில், தன் காதலின் விதியை தீர்மானிக்கப் போகும் இரு தோழிகளையும் மாறி மாறிப் பார்த்து கொண்டிருந்தாள் மைதிலி!
 
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 

ஜானகி மந்திரம் 32

​மறுநாள் மாலை 4 மணி

​கண்டாலா SSG காலேஜின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே இருந்த பஸ் ஸ்டாப்.

​மாலை நேரத்து வெயில் மெல்லத் தணிந்து, மலைப் பிரதேசத்துக்கே உரிய இளங்காற்று வீசத் தொடங்கியிருந்தது. காலேஜ் முடிந்த நேரம் என்பதால், பஸ் ஸ்டாப் முழுக்க 2003-ன் அசல் இளமை. மாணவ-மாணவிகளின் அலைமோதும் கூட்டம். சுடிதார், சல்வார், ஜீன்ஸ், டீ சர்ட் என ஆங்காங்கே குழுக்களாக நின்று லேட்டஸ்ட் ரிங்டோன்களை பற்றிப் பேசிக் கொண்டும், போன்களில் மெசேஜ் தட்டிக்கொண்டும், புரபசர்களை கலாய்த்துக்கொண்டும், அந்த இடமே கலகலத்து கொண்டிருந்தது.

காற்றில் ஃப்ரெஷ்னெஸ்.
காற்றில் கலர் கலரான அரட்டைகள்.
காற்றில் சிரிப்புகள்.

​ஆனால், அந்த கூட்டத்தை தாண்டி கொஞ்சம் தள்ளி நின்றிருந்த மைதிலிக்கு மட்டும் உலகமே தடுமாறி போயிருந்தது. அந்த மார்ச் மாதத்து இளவெயிலிலும் அவளது நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள், வெளியில் இருக்கும் வெயிலின் ஒத்தடமல்ல; நெஞ்சுக்குள் பற்றி எரியும் ரகசியத் தீயின் கசிவுகள்! அவளது கால்கள் பூமிக்கு மேலே நாலங்குலம் மிதப்பது போலொரு நிலைதடுமாற்றம்.

​சஞ்சுவும் இந்துவும் ஒரு ஸ்கெட்ச் போட்டிருந்தார்கள். சிம்பிள். எஃபெக்டிவ்.
​மனோ இன்று தனியாகத்தான் வருவான். பாபி கால் ஒடிந்து மெடிக்கல் லீவில் இருப்பதால், காரின் பேஸஞ்சர் சீட் காலியாக இருக்கும் என்பது கேரண்டி. 'இந்த வழியேதான் அவன் போவான்' என்பது நூறு சதவீத லாஜிக். ஏனென்றால் வெளியேறுவதற்கு வேறு வழியே இல்லை.

​பிளான் இதுதான்: மனோவின் காரை நிறுத்து. மைதிலியை ஏற்றி விடு. மைதிலியின் பார்ட் டைம் வேலைக்கு அவள் போகும் அவசரத்தை காரணமாக சொல். மார்க்கெட் ஏரியா வரைக்கும் 'லிப்ட்'. அந்தச் சில நிமிடங்கள் காருக்குள் மைதிலி சன்ஷைன் ரகசியத்தை உடைக்க வேண்டும்.
​எல்லாம் காகிதத்தில் பக்காவாக இருந்தது.

ஆனால், மைதிலியை ஒப்புக்கொள்ள வைத்து, அவளை ஹாஸ்டல் அறையிலிருந்து இந்த பஸ் ஸ்டாப் வரை இழுத்துக்கொண்டு வருவதற்குள் சஞ்சுவிற்கும் இந்துவும் நாக்கு தல்லேது!

​மைதிலி நடுங்கும் உதடுகளைப் பிரித்து, "எனக்கு நிஜமாவே ரொம்ப பயமா இருக்குடி. ப்ளீஸ், இந்த பிளான் வேண்டாமே! நான் பேசாம பஸ்ஸுலேயே வேலைக்கு கிளம்புறேன்..." என்று நேற்று இரவிலிருந்து இப்போது வரை 108-வது முறையாக அதே பல்லவியை பாடினாள்.

​தோழமையின் உச்சம் என்பது அடுத்தவர் பயப்படும்போது கோபப்படுவதல்ல; அரவணைப்பது. சஞ்சு மெல்ல அவளருகே வந்து, மைதிலியின் குளிர்ந்து போயிருந்த கைகளை தன் இரு உள்ளங்கைகளுக்குள் பொத்திக் கொண்டாள். அந்தத் தொடுதலில் 100% நட்பின் கதகதப்பு.

"சுட்கி, நீ அவனை எப்படில்லாம் காதலிக்கிற... எந்தளவுக்கு மனசுக்குள்ளேயே முக்கியத்துவம் கொடுக்கிறேன்னு நாங்க கூடவே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கோம். எத்தனையோ ராத்திரிகள்ல நாங்க ரெண்டு பேரும் வியந்து போயிருக்கோம். வெளிப்படையாக சொல்லணும்னா, நம்ம ஏஜ் பசங்க பண்ற தமாஷான காதல்களை பார்த்து எங்களுக்கு லவ் மேல பெரிய அபிப்ராயம் இல்லாமதான் இருந்தது. காதல்ங்கிறது வெறும் கவர்ச்சியோன்னு கூடத் தோணியிருக்கு. ஆனா, உண்மையான காதல்னா என்ன, அதோட உன்னதம் என்னங்கிறதை உன்னைப் பார்க்கும் போதுதான் நாங்க உணர்ந்தோம் சுட்கி!

At the same time, அவன் உன் மேல வச்சிருக்கற லவ்வும் எந்த விதத்துலயும் குறைஞ்சது இல்லை. நீங்க ரெண்டு பேரும் எந்த காரணத்தைக் கொண்டும் பிரிஞ்சிரக் கூடாது, கண்டிப்பா ஒண்ணு சேரணும்... அதனாலதான் உன்னை இப்படி வற்புறுத்துறோம்."

​சஞ்சுவின் குரல் லேசாக தழுதழுக்க மேலும் தொடர்ந்தாள்.

"யோசிச்சுப் பாரு சுட்கி, காலேஜ் முடியறதுக்கு வெறும் ஒரு மாசம்தான் இருக்கு. எக்ஸாம்ஸ் முடிஞ்சதுன்னா எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா ஊருக்கு போயிருவோம். அதன் பிறகு எல்லாரும் வேற வேற உலகத்துல பிஸியாயிருவோம். வாழ்க்கையில புதுசு புதுசா பிரச்சனைகள் வந்து சூழ்ந்துக்கும். இன்னைக்கு நாங்க கூட இருந்து தர்ற இந்த தைரியம் கூட அப்போ உனக்குக் கிடைக்காதுடி. சொன்னா கேளு... இப்பப் போய் அவன்கிட்ட உண்மையைச் சொல்லிடு!" என்று உள்ள கிடக்கையை வெளிப்படுத்தினாள்.

​இந்துவும் அவளது இன்னொரு கையைப் பற்றிக் கொண்டாள். "ஆமா சுட்கி, சஞ்சு சொல்றது அட்சர சுத்தமா உண்மை. மனோ ரொம்ப ஜென்டில்மேன்டி. 'சன்ஷைன்' முகத்தைக் காட்ட விரும்பலைன்னா, அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அவன் நேர்ல பார்க்க வரச் சொல்லி கட்டாயப்படுத்த மாட்டான்; தேடியும் வரமாட்டான். அதனால எப்படியும் நீயாப் போய் சொன்னா மட்டும்தான் இந்த உண்மை அவனுக்கு தெரியும். இந்த ஹாஸ்டல் லைஃப், காலேஜ் லைஃப் எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்ல முடிஞ்சு போயிடும். அப்புறம் உன்னோட இந்த அழகான கனவு வெறும் கனவாவே கரைஞ்சு போயிடும்டி. இந்தக் கனவு கலையாம இருக்கணும்னா, அதை நீ நிஜமாக்கியே ஆகணும். தயவுசெஞ்சு நாங்க சொல்றதை கேளு... போய் சொல்லு!"

​காலேஜ் கேட்டின் வழியே மனோவின் கார் எப்போது வெளிப்படும் என்று வாசலையே பார்த்தபடி அந்த இரு தோழிகளும் அவளுக்குள் தைரியத்தை விதைத்து கொண்டிருக்க... மைதிலி சுற்றியிருந்த அத்தனை இளமைக் கூட்டத்தின் சத்தத்திற்கும் நடுவே, தனக்குள் மட்டும் ஒரு நிசப்தமான மௌனக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தாள்!

​காற்றின் திசையறியாது காம்பஸில் சுழலும் காந்த ஊசியைப் போல, அவளது கண்கள் காலேஜ் கேட்டையும் தன் தோழிகளையும் மாறி மாறிப் பார்த்துப் தவித்து நின்றது!

இந்து மெல்ல மைதிலியின் முகத்தைப் பார்த்துவிட்டுச் சஞ்சுவின் பக்கம் சாய்ந்தாள். "சஞ்சு, இவ முழிக்கிற முழியைப் பார்த்தா இன்னைக்கு இவ பேசிக்கிற மாதிரி தெரியல... ப்ச்ச்... எனக்கு நம்பிக்கை இல்லைடி" என்றாள் அப்பட்டமான சலிப்புடன்.

சஞ்சு சட்டென்று ஒரு ஐடியா மின்னியவளாய் இந்துவின் பக்கம் திரும்பினாள். "இங்க பாரு இந்து, இவ காரில் ஏறிய உடனே 'நான்தான் சன்ஷைன்'னு மொத்த ரகசியத்தையும் கொட்டி எல்லாத்தையும் சொல்லக்கூட வேண்டாம். ஜஸ்ட்... காருக்குள்ள ஏறி, 'என்னை அங்க இறக்கிவிடுங்க, இங்க இறக்கிவிடுங்க'ன்னு சாதாரணமா நாலு வார்த்தை பேசட்டும். போன்ல கேட்கிற குரலுக்கும், நேர்ல கேட்கிற குரலுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். மனோவுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும், இவ வாய்ஸை வச்சு சன்ஷைனை கண்டுபிடிக்கிறானான்னு பாத்துரலாம். அட்லீஸ்ட் இதையாவது செய்டி. என்ன சொல்ற?!"

​இந்து மைதிலியை பார்த்து ஒரு சலிப்பான லுக் விட்டுட்டு, "பாயிண்ட் ஓகேதான் சஞ்சு. ஆனா, அந்த நாலு வார்த்தையைக் கூட இவ ஒழுங்கா பேசுவாளாங்கிறதுதான் எனக்கு டவுட்டா இருக்கு!"

​சஞ்சு மைதிலியை பார்த்தாள்.
​பெண்ணிடம் அப்பட்டமான நடுக்கம். உதறல்.

ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்தவளாய் சஞ்சு சொன்னாள்: "சரி ஓகே. நீ ரொம்ப பயப்படுற. உனக்காக நாங்க இதுகூடவா செய்யக் கூடாது? பேசாம நாங்களே மனோகிட்ட போய், 'இவதான் உன் சன்ஷைன்'னு ஓப்பனா சொல்லிடுறோம். ஆனா... அது அவ்ளோ நல்லா இருக்காதேன்னு பார்க்கிறேன்."

​மைதிலியிடம் பதிலில்லை. அவள் கைகள் தானாக அவளது சுடிதார் துப்பட்டாவின் நுனியைச் சுருட்டி, கசக்கி, பிழிந்து கொண்டிருந்தன. கால்கள் ஒரே இடத்தில் நிற்காமல் தாளம் தட்டின. மூச்சுக்காற்று சூடாக வெளிவந்தது.

அதே விநாடி.
​எஸ்.எஸ்.ஜி காலேஜ் கேட். மனோவின் கார் மாஸாக வெளியே வந்தது.

​சட்டென்று அந்த இடமே பரபரப்பானது! சஞ்சுவும் இந்துவும் நொடியில் அலர்ட் ஆனார்கள்.

​"அவன் கார் வந்துருச்சு! இவ பேசப் போறது இல்லை... நாமளே காரை நிறுத்தி, எல்லாத்தையும் பேசி எல்லாம் வா!" என்று சஞ்சு அவசரமாய் இந்துவை இழுத்துக் கொண்டு காரை மடக்குவதற்காக ரோட்டை நோக்கி சென்றாள்.

​அந்த நொடியில்... தயங்கி நின்றிருந்த மைதிலி பரபரப்புடன் அவர்கள் இருவரின் அருகே சென்று முதுகை தட்டினாள்!

​இருவரும் பின்னே திரும்பி பார்க்க, சஞ்சு ஆச்சரியமும் பதற்றமும் கலந்து, "என்னடி?" என்று கேட்டாள்.

​மைதிலி தன் கண்களில் தேங்கியிருந்த நீர்த்திரையைத் துடைத்துக் கொண்டு, பயத்தையெல்லாம் ஒரு நொடியில் விழுங்கிவிட்டு, தீர்மானமான குரலில் சொன்னாள்: "நானே பேசுறேன்!"

​அந்த ஒற்றை வார்த்தையில் இருவரின் முகமும் முகம் அப்படியே பிரகாசமானது. "வெரி குட்... சூப்பர்!" என்று உற்சாகமாகக் கத்தினாள் இந்து.

​அடுத்த கணமே, மனோவின் கார் அந்தப் பஸ் ஸ்டாப்பை தாண்டி செல்ல... சஞ்சுவும் இந்துவும் உற்சாகமாக கைதட்டி, 'மனோ' என்று சத்தமிட்டார்கள்.

​டயர்கள் மெலிதாக தார்ச்சாலையில் உரச, கார் கச்சிதமாக அங்கே வந்து நின்றது. பஸ் ஸ்டாப்பில் இருந்த மொத்தக் கூட்டமும் தங்களின் பேச்சுகளை நிறுத்திவிட்டு, ஆர்வமாக இவர்களை நோக்கி திரும்பியது.

​ஸ்பாட்லைட்.

​மனோ வலது பக்க டிரைவர் சீட்டில் இருந்தபடியே, இடது பக்க பேசஞ்சர் சீட் விண்டோ கிளாஸை நைஸாக கீழே இறக்கினான். ஸ்டீயரிங்கில் ஒரு கையை வைத்தபடி, இடது புறமாகச் சாய்ந்து, வெளியே நின்ற இவர்களை எட்டிப் பார்த்தான்.

​முகத்தில் அவனுக்கே உரிய அந்த ஈஸியான புன்னகையுடன், "என்ன கேர்ள்ஸ்... இன்னைக்கும் ஏதாவது பிரச்சனையா?" என்று கேட்டான்.

​இந்து உடனே சாமர்த்தியமாக முந்திக்கொண்டாள். "நோ நோ... பிரச்சனை எதுவும் இல்லை மனோ. எங்க ரூம் மேட் மைதிலிக்கு இன்னைக்கு ஒர்க்குக்கு லேட் ஆயிருச்சு. நீங்க போற வழி தான்... If you don't mind, அவளை மார்க்கெட் ஏரியால மெயின் ரோட்டில் விட்ற முடியுமா?"

​மனோ மைதிலியின் முகத்தை ஒருமுறை பார்த்துவிட்டு புன்னகைத்தான்.

​"I don't mind at all..." என்று சொன்னவன், தொடர்ந்து, "Ask her to come and get in" என்றான்.


மனோ சம்மதித்த அந்த விநாடி, மைதிலியின் உலகத்தில் புவி ஈர்ப்பு விசை திடீரென பல மடங்கு அதிகமானது போலிருந்தது. நரம்புகள் இழுத்துக் கொண்டன. கால்கள் தரைக்குக் கீழே நூறு அடி ஆழத்தில் வேர்விட்டது போல அப்படியே கல்லாய் உறைந்து நின்றாள். ‘ஐயோ... முடியாது’ என்று உள்ளுக்குள் அலறியபடி அவள் பின்வாங்க நினைத்த அந்த மைக்ரோ நொடியை தோழிகள் இருவரும் மிகச் சரியாகப் படித்துவிட்டார்கள்.

சுற்றியும் கல்லூரி மாணவர்களின் கண்கள். ஒரு 'சீன்' கிரியேட் ஆகிவிடக் கூடாது.

சஞ்சுவும் இந்துவும் மிக இயல்பாக நடப்பது போல, மைதிலியின் இருபுறமும் அரணாக வந்து நின்றார்கள். வெளியில் யாருக்கும் சந்தேகம் வராதபடி, தங்களின் கைகளை அவளது முதுகில் கச்சிதமாகப் பதித்து, ஒரு ரோபோட்டை நகர்த்துவது போல அவளைக் காரை நோக்கி முன்னோக்கித் தள்ளினார்கள்.

​இவர்களின் தள்ளு முள்ளில், எப்படியோ தட்டுத்தடுமாறி மைதிலி காரின் கதவருகே சென்று நிற்க... அவளது டென்ஷனை பார்த்த மனோ சத்தமாகச் சிரித்துவிட்டான்.

​"அட... தைரியமா வாங்க! நான் ஒண்ணும் உங்களைக் கடிச்சிர மாட்டேன். எங்க விடணும்னு சொல்லுங்க... விட்டுடுறேன்" என்றான் கலகலப்பாக.

​வெளியே நின்ற சஞ்சு, மைதிலிக்கு இன்னும் தயக்கம் குறையாததைக் கண்டு, "இல்ல... உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு ஃபீல் பண்றா, அதான் வேற ஒண்ணும் இல்ல மனோ" என்று பேலன்ஸ் செய்தாள்.

​மனோ காரின் ஸ்டீயரிங்கில் கைகளை தட்டியபடி, "எனக்கு என்ன கஷ்டம்? நான் என்ன அவங்களை தலையிலயா தூக்கிட்டுப் போறேன்? கார்லதானே போறோம்... அதுவும் நான் போற வழிதானே, வாங்க!" என்றான்.
​மைதிலி மெதுவாகக் காரின் பின் பக்கக் கதவின் ஹேண்டிலைப் பிடித்து, பின் சீட்டில் ஏறப் போக...

​மனோ சட்டென்று அவளை தடுத்து, "அட... முன்னால வாங்க, பேசிக்கிட்டே போவோம்!" என்றான் மிக எதார்த்தமாக.

​அவன் 'முன்னால வாங்க' என்று சொன்னதும் மைதிலி என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க... சஞ்சுவும் இந்துவும் கண்சிமிட்டி, "அட... அவருதான் சொல்றார்ல, ஏறுடி!" என்று அவசரமாய் அவளை முன் பக்கக் கதவை நோக்கி திருப்பி, கதவைத் திறந்து அவளை முன் சீட்டிற்குள் ஏற்றிச் சொருகி, 'டப்'பென்று கதவை சாத்தினர்!

​கார் கிளம்பியது.

​சாலையோரம் நின்ற சஞ்சுவும் இந்துவும், ஏதோ நாலு லாரி மண்ணை அள்ளிப் போட்டுக் காரியத்தை முடித்த திருப்தியில், தங்களின் கைகளைத் தட்டித் தூசியைப் போக்கிக் கொண்டனர்.

"அப்பாடா, ஒரு வழியாக ஏத்தி அனுப்பியாச்சு!"

​இனி காருக்குள்...

​காருக்குள் அவனருகில் அமர்ந்திருந்த அந்த நிலை மைதிலியின் நெஞ்சை அதிரச் செய்தது உண்மைதான். அவளது இதயம் கூண்டுக்குள் அடைபட்ட பறவையாய் படபடவென அடித்துக் கொண்டது. என்றாலும், அவள் ஒன்றும் கோழை இல்லையே! தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, அவள் முடிந்தவரை தளரவிடாமல் தாக்குப்பிடித்தாள்.

​ஆனாலும், அவனுக்கு மிக அருகில், அவனது பெர்சனல் ஸ்பேஸுக்குள் அமர்ந்திருப்பது அவளுக்குள் ஒரு புதுவிதமான தவிப்பை ஏற்படுத்தியது. மனோவின் கைகள் ஸ்டீயரிங்கை லாவகமாக கையாண்ட விதம், அவனது அசைவுகள், அந்த அசாத்தியமான கூல்னஸ்... எல்லாமே அவளுக்குள் ஒரு காந்த ஈர்ப்பை நிகழ்த்தி கொண்டிருந்தன. இந்தத் தூரத்திலிருந்து அவனை பார்ப்பதும், அவனது இருப்பை உணர்வதும் அவளது நரம்புகளுக்குள் ஒரு மெல்லிய சிலிர்ப்பைக் கடத்தியது.

​இதற்கெல்லாம் மேலாக, மனோவிடமிருந்து வீசிய அந்த 'அசாரோ விசிட்' பெர்ஃப்யூமின் நறுமணம் அவளை மேலும் சிரமப்படுத்தியது. உள்ளுக்குள் ஒரு மயக்கம் அவளைச் சூழ்ந்தது.

​[எடிட்டிங் கட் — டைரக்டரின் mind voice]

​டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்: "ஹலோ... இந்த இடத்துல ஒரு 'கட்' கொடுத்துட்டு நேரா நிகழ்காலத்துக்கு போயிரலாமா? ஏன்னா, வழக்கமா இந்த கதையில் இந்த மாதிரி perfume smell வரும்போது டைம் ஜம்ப் பண்றதுதானே ஃபார்முலா?"

​வேணாம்! ஆடியன்ஸ் கொலவெறியில் காண்டாகிறது என் மனக்கண்ணுல அப்படியே தெரியுது. அதனால நோ கட்!

ஓகே... ஓகே... கட் பண்ணல. சீன் கன்டினியூ ஆகட்டும்!"

​மனோ கார் டிரைவ் செய்தபடி எதார்த்தமாகக் கேட்டான்.
​"Why do you get tensed for everything?"

​வாயை திறந்து இதற்குப் பதில் சொன்னால் மாட்டி விடுவோமோ, போனில் தினமும் பேசும் தன் 'சன்ஷைன்' குரலை அவன் டக்குனு கண்டுபிடித்து விடுவானோ!

பேசாமல் அப்படியே அமைதியாக இருந்துவிடுவதே இந்த நிமிஷத்திற்கு உசிதம் என்று மைதிலியின் உள்மனம் ரகசியத் தராசில் தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால், சில நேரங்களில் மௌனம் என்பது பதிலை விடவும் ஆபத்தானது. ‘சொல்லித்தான் பார்ப்போமே, நடப்பது நடக்கட்டும்’ என்றொரு விசித்திரமான தைரியம் எங்கிருந்தோ அவளுக்குள் வந்து குடியேறியது.

​"நான்... பி.காம் ஃபைனல் இயர்..." என்றாள் மெல்ல.

​அவளது வாய்ஸை கேட்ட அந்த விநாடி, மனோவின் கைகள் ஸ்டீயரிங்கில் தானாக இறுகின. சாலை மீதிருந்த அவனது மொத்தக் கவனமும் சிதற, முகத்தை அப்படியே இடது புறமாகத் திருப்பி அவளை உற்றுப் பார்த்தான்.

​எங்கேயோ கேட்ட குரல்.
அடிக்கடி கேட்ட குரல்.

​மைதிலி அவன் பார்ப்பதை உணர்ந்து: "என்ன... இப்படிப் பார்க்கிறீங்க?"

​அவனது கவனம் முழுக்க அவளது முகத்திலேயே இருந்ததால், அடுத்த நொடி, கார் சாலையின் மையக்கோட்டை தாண்டி லேசாக விலகுவதை அவனது Reflex எச்சரித்தது.
​சட்டென்று சுதாரித்துக் கொண்டான். காரை லாவகமாக ஸ்டீயரிங்கை இடப்பக்கம் திருப்பி காரை சரியான டிரேக்கிற்குள் கொண்டு வந்தான்.

காரின் ஸ்பீடோமீட்டர் 40-ஐக் காட்டியது. அந்த வேகம் குறைதல் அவனுள் எழுந்த கேள்விகளின் வேகம் அதிகரிப்பதன் அறிகுறியாகவே இருந்தது.

"இல்ல... உங்க வாய்ஸ் அடிக்கடி கேட்ட மாதிரி ரொம்ப ஃபெமிலியரா இருக்கு" என்றான் குழப்ப பார்வையுடன்.

தன் குரலைக் கேட்டதும் அவனிடம் ஏற்படும் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்றுதான் மைதிலியும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.

​மைதிலிக்கு உள்ளுக்குள் லேசாக மூச்சு வந்தது. அவன் தன் குரலை வைத்து முழுமையாக கண்டுபிடிக்கவில்லை என்பது அவளுக்கு புரிந்தது. அவனது மூளையின் நினைவகத்தில் ஒரு சின்னக் குழப்பம் மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைமைக்கு திரும்பிக் கொண்டிருந்தாள்.

ஆனாலும் காதலியை கண்டதும் வரும் பரவசம், ஆச்சரியம், அந்த 'கண்ணாடி' கண்கள்... எதுவுமே அவனிடம் இல்லை என்று மைதிலிக்கு ஏமாற்றம்.

​மாறாக, ஒரு கணக்கு தப்பும்போது வரும் குழப்பம் போன்ற பார்வை.
​எதிர்பாராத புதையல் கிடைத்தால் மனிதனுக்குத் திகைப்புதானே வரும்? 'இது நிஜம்தானா?' என்ற சந்தேகம். ஆனால் அவனது முகம் ஒரு கம்ப்யூட்டர் ஹேங் ஆனது போல குழப்பமாக இருந்தது.

அவளுக்குள் இருக்கும் அந்த மாபெரும் பயமும் எட்டிப் பார்த்தது. ஒருவேளை... நான்தான் சன்ஷைன் என்று தெரிந்ததும் அவனுக்குள் ஏமாற்றம் வந்துவிட்டதோ? போனில் தன் குரலை கேட்டு அவன் உருவாக்கி வைத்திருந்த அந்த கற்பனை தேவதையின் பிம்பத்திற்கு, இதோ அவனருகில் அமர்ந்திருக்கும் இந்த எளிய பி.காம் மாணவியின் அசல் முகம் ஈடுகொடுக்கவில்லையோ என்ற சந்தேகம் அவளை வாட்டியது.

​மனோ மீண்டும் பேச்சை தொடர்ந்தான். "நீங்க டிரான்ஸ்ஃபர் ஸ்டூடண்ட் தானே? இப்பதானே இந்த காலேஜுக்கு வந்திருக்கீங்க?"

​"கரெக்ட்..." என்று ஆரம்பித்த மைதிலி, இம்முறை வேண்டுமென்றே தன் வாய்ஸ் மாடுலேஷனை மாற்றிக் கொண்டாள். தனக்கு இந்த ஊர் புதிது என்பதையும், தன் பூர்வாசிரமத்தை பற்றியும், தன் வாழ்வியலை பற்றியும், எளிய வார்த்தைகளில் பேசத் தொடங்கினாள்.

​அவள் பேசப் பேச...

​'ஒருவேளை இவள் தான் நம்ம சன்ஷைனோ?' என்ற சந்தேகம் அவனது மூளையை தாக்க, அவனது புருவங்கள் சுருங்கி முகத்தில் ஒரு குழப்பம் அப்பட்டமாக ரேகையாய் ஓடியது.

ஆனால், பெண்களின் மனது எப்படி ஆண்களுக்கு புரிவதில்லையோ, அதே மாதிரி ஆண்களின் மனதும் பெண்களுக்கு புரிவதில்லை.
​அவன் குழம்பியது நிஜம்தான். ஆனால், அது ஏமாற்றத்தால் வந்த குழப்பம் இல்லை. இதுவரைக்கும் போனில் மட்டுமே கேட்டுப் பழகிய ஒரு குரல், இப்போது திடீரென்று நிஜத்தில், தன் காருக்குள் கேட்கும்போது—'இது அந்த அசல் குரல் தானா, இல்லை வேறொரு குரலா?' என்ற அந்த டெக்னிக்கல் ஒப்பீட்டு தவிப்பை தவிர அவனுக்குள் வேறு எந்த குழப்பமும் இருக்கவில்லை. அவனது கணினிக் கணக்குகள் மேட்ச் ஆகாமல் தடம் புரண்டதே அந்தப் பார்வைக்குக் காரணம் என்பதை அவளது பெண் மனம் அறியவில்லை.

இதற்கிடையே, ​

​இந்துவின் வாட்ச் முள் நகர்வது போல தெரியவில்லை. வழக்கமாக அந்த சாலையில் வரும் ஒன்றிரண்டு லோக்கல் ஆட்டோக்கள் கூட இப்போது ஆப்சென்ட். அரை மணி நேரத்துக்கு ஒரு பஸ் தான் வரும். தார்ச்சாலை முழுக்க மாலை நேரத்து வெறிச்சோடிய மௌனம்.

​"இப்ப என்னடி செய்யறது?" இந்து கத்தினாள். குரலில் அப்பட்டமான டென்ஷன்.
​அதே விநாடி. தூரத்தில் ஒரு பைக் சத்தம். 4-ஸ்ட்ரோக் எஞ்சின் சத்தம். ஒருவன் ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரில் வேகமாக வந்து கொண்டிருந்தான். சஞ்சு சட்டென்று நடுரோட்டுக்கு வந்து கையை நீட்டி மறித்தாள். இருவரும் சாதாரண சல்வாரில் இருந்தாலும், உடையை மீறிய, ஓப்பனை தேவைப்படாத அழகிகள். தார்ச்சாலையில் இரண்டு அழகான கல்லூரிப் பெண்கள் லிப்ட் கேட்டால், பிரேக் மிதிக்காத அசடர்கள் இந்த உலகத்தில் மிகக் குறைவு. உடனே பிரேக் அடித்து நிறுத்தினான்.

​"என்ன விஷயம்?" என்றான் அவன், ஹெல்மெட் கண்ணாடியை ஏற்றிவிட்டு.
​"மார்க்கெட் ஏரியா வரைக்கும் போகணும். அர்ஜென்ட்!"

​பைக்காரன் லேசாகத் தயங்கினான். "ஓ ஸாரி... நான் மார்க்கெட் ஏரியா வரைக்கும் போகலையே. பாதியிலேயே வகாவ்லி ரோட்டில கட் அடிச்சு உள்ள போயிருவேன்.

​சஞ்சு அவனது தயக்கத்தை நொடியில் முறித்தாள்.
"சரி ஓகே, அதுவரைக்குமாவது எங்களை டிராப் பண்ணுங்க. ஆனா... கொஞ்சம் வேகமா போங்க ப்ளீஸ்!"

​அவர்கள் ஏறி அமர்ந்த அடுத்த கணம் பைக் வேகம் எடுத்தது. தன் வாழ்நாளில் இரண்டு அழகான பெண்களை பின்னால் ஏற்றிக்கொண்டு அவன் பயணித்ததே இல்லை போல! அந்த எக்ஸைட்மென்ட்டில், வேண்டுமென்றே அவ்வப்போது சடன் பிரேக்குகளை போட்டுக் கொண்டே பைக்கை செலுத்தினான்.

​ஆனால், அவனது சில்மிஷங்களை கவனிக்கும் மனநிலையில் சஞ்சுவும் இந்துவும் இல்லை. மைதிலி காருக்குள் என்ன பாடுபடுகிறாளோ என்ற டென்ஷனில், இருவரின் உடம்பும் விறைப்பாக இருந்தது. பைக் அந்த ரைட் கட் திருப்பத்திற்கு வந்து நின்றது. இருவரும் டக்கென்று இறங்கி, அவனுக்கு ஒரு இயந்திரத்தனமான நன்றியை சொன்னார்கள்.
​தனக்குக் கிடைத்த பூர்வபுண்ணிய பாக்கியத்தை நினைத்து, மனசுக்குள் கடவுளுக்கு தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே, அவன் ரைட் திரும்பி தன் ஊரை நோக்கி பைக்கை முறுக்கினான்.

​அவர்கள் நின்று பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனோவின் காரை காணவில்லை. மார்க்கெட் ஏரியா பக்கம் போகும் வாகனங்கள் எதுவுமே இல்லை காலேஜ் பக்கம் போகும் வாகனங்கள் தான் ஒரு சில ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

​இந்து தன் நகங்களை கடித்தபடி, "இவ அங்க போய் சன்ஷைன் ரகசியத்தை சொன்னாளா இல்லையா... என்ன ஆச்சுன்னே தெரியலையேடி! எனக்கு பிபி ஏறுது!" என்றாள்.

அதே நேரம்,

​காரின் ஸ்பீடோமீட்டர் முள் 40-க்கும் 50-க்கும் நடுவே ஊசலாடிக்கொண்டிருந்தது. மனோவின் மனசும் அப்படித்தான்.
​போனில் கேட்கும் சன்ஷைனின் குரல் வேறு; இதோ பக்கத்து சீட்டில் அமர்ந்து பேசும் மைதிலியின் குரல் வேறு. வழக்கமாகவே மொபைல் நெட்வொர்க்கின் சிக்னல் அலைவரிசையில் சுருங்கி வரும் குரலுக்கும், நேரடி குரலுக்கும் ஏகப்பட்ட டெசிபல் வித்தியாசங்கள் உண்டு. அது போக, மைதிலி இப்போது வேண்டும் என்றே தன் அசல் மாடுலேஷனை மாற்றி, மிகவும் எச்சரிக்கையாக, வேறொரு டோனில் பேச்சை திசை திருப்பிக் கொண்டிருந்தாள்.

​குரல் மேட்ச் ஆகிறது போல தோன்றுகிறது, அதே சமயம் பிடிபடாமல் நழுவுகிறது. அவளது திட்டமிட்ட டோன் மாற்றத்தால் அவனால் உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

​அவள் சொன்ன தகவல்களிலிருந்து அவளை பற்றி ஒரு சில விஷயங்கள் தெரிந்து கொண்டான்.

​அவள் ஒரு டிரான்ஸ்ஃபர் ஸ்டூடண்ட்.
​வசதி இல்லாத குடும்பப் பின்னணி.
​படிப்புச் செலவுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஓடி ஓடிப் பார்ட் டைம் வேலை பார்க்கிறாள்.
​அவ்வளவுதான்.

Sunshine தன்னுடைய பர்சனல் விவரங்களை அவனிடம் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. அதனால் இவளையும் சன்ஷைனையும் அவனால் சம்பந்தப்படுத்தி பார்க்க முடியவில்லை.

மனோவின் குழப்பம் மைதிலிக்கு ஏமாற்றம். அவளது அகத்தில் இரண்டு எதிர் எதிர் துருவங்கள் மோதிக்கொண்டன. ஒரு பக்கம், 'எக்காரணத்தை கொண்டும் தான்தான் சன்ஷைன் என்கிற ரகசியத்தை இப்போதைக்கு சொல்லவே கூடாது' என்கிற அசாத்தியமான பிடிவாதம். இன்னொரு பக்கம், 'இந்த தவிப்புக்கு இப்போதே முற்றுப்புள்ளி வைத்து, எல்லா உண்மையையும் கொட்டி, இங்கயே ஒரு எண்ட் கார்டு போட்டுவிட்டால் என்ன?' என்கிற ஒரு விசித்திரமான விரக்தித் துணிச்சல்.

​​பாதுகாப்பு வளையத்திற்குள் ஒளிரும் ரகசியத்தை அப்படியே நீட்டிப்பதா, அல்லது ஒரே அடியில் உடைத்துவிட்டு அதன் விளைவுகளை சந்திப்பதா? இந்த இரண்டு எண்ணங்களும் அவளது இதய பிரதேசத்தை யுத்தக் களமாக்கின.

​ஒரே சீட்டில், சில அங்குல இடைவெளியில் அவனது உலகமும் அவளது உலகமும் தனித்தனியாக இயங்கிக் கொண்டிருந்தன.

காரின் முன் கண்ணாடி வழியே பாய்ந்த அந்த மாலை நேரத்துச் செவ்வான வெளிச்சம், சாலையோர மரங்களின் நிழல்களோடு போட்டி போட்டுக்கொண்டு அவளது முகத்தில் விழுந்தது. அதுவரை பதற்றத்தில் இருந்தவள், சட்டென்று தன் கைகளை மடியில் கோர்த்துக் கொண்டு நேராக நிமிர்ந்து அமர்ந்தாள். அவளது விரல்கள் இப்போது நடுங்கவில்லை; மாறாக ஒரு தீர்க்கமான அமைதியோடு லாக் ஆகியிருந்தன.

​அவளது பார்வையில் இருந்த அந்தத் தடுமாற்றம் மறைந்து, கண்கள் விண்ட்ஷீல்டிற்கு அப்பால் விரிந்திருந்த தார்ச்சாலையின் ஏதோ ஒரு புள்ளியில் நிலைத்தன. பயத்தின் அத்தனை அலைகளையும் ஒரே விநாடியில் தனக்குள்ளேயே ஆழமாக புதைத்துவிட்டு, ஒரு முடிவுக்கு வந்தவள் போல அவளது உதட்டின் ஓரத்தில் ஒரு மிக மெல்லிய, அழகான புன்னகை அரும்பியது.
அவளது முகத்தில் இப்போது தவிப்பில்லை; ஒரு தெளிவு மட்டுமே எஞ்சியிருந்தது.
​அந்த விசுவல் மாற்றம் அவளது குரலிலும் எதிரொலித்தது.

​"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என்று அவள் மெல்ல ஆரம்பித்த அந்த விநாடி—

​​மாலை நேரத்து இளங்காற்று முகத்தில் அடிக்க, இந்து மற்றும் சஞ்சுவின் தலைமுடி கலைந்து முகத்தில் விழுந்தது. வாகனங்கள் ஏதாவது வருகிறதா என்று ரோட்டோரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இந்து பதட்டமாக நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.
"எனக்கென்னவோ ரொம்ப பயமா இருக்குதுடி... இவ என்ன சொன்னாளோ, அவன் என்ன பண்ணுனானோ? என்ன ஆச்சோ? பஹுத் கபராஹட் ஹோ ரஹீ ஹை.."

​சஞ்சுவின் முகத்திலும் பயம் அப்பட்டமாக தெரிந்தது. ஒருவேளை தாங்கள் செய்தது தவறோ என்று கூட யோசனைகள் வந்தது.

சஞ்சு: "சும்மா இருந்தவளை நாமதான் உசுப்பேத்தி அனுப்பி வச்சோம். நாம பண்ணது தப்போன்னு இப்ப தோணுதுடி. ஒருவேளை ஏதாவது நெகட்டிவா நடந்துச்சுன்னா... மைதிலியால அதை தாங்கவே முடியாது. அவ தைரியசாலி தான் ஆனா இந்த விஷயத்துல ரொம்ப வீக்.
மனசு உடைஞ்சு எதையாவது பண்ணிக்கிட்டா என்ன பண்றது! நாம உடனே அவளை போய் பிடிக்கணும்!"

​இனி ஒரு விநாடி கூட அங்கே நின்று வண்டிக்காக காத்திருப்பது நேர விரயம் என்று இருவருக்குமே புரிந்தது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்ட அடுத்த கணமே, மார்க்கெட் ஏரியாவை நோக்கி தார்ச்சாலையில் ஓடத் தொடங்கினார்கள்!

துப்பட்டாக்கள் காற்றில் படபடக்க, இருபதுகளின் அசல் இளமை குலுங்க, வேகமான ஓட்டத்திற்கு ஏற்ப மார்புகள் அசைந்து அலையிட, தார்ச்சாலையில் அந்த இரண்டு இளம் பெண்களும் ஓடிய விதம் எதிர்படுபவர்களை சுண்டி இழுக்கும், ஒரு அசல் இளமையின் அசைவுப் படம் போல இருந்தது.

ஆனால் அவர்களோ, 'மைதிலிக்கு ஏதாவது நெகட்டிவா நடந்திர கூடாது' என்ற ஒற்றை வெறியில் தங்களின் அத்தனை எனர்ஜியையும் அந்தத் தார்ச்சாலையில் தீர்த்துக் கொண்டிருந்தார்கள்.

​இந்துவையும் சஞ்சுவையும் கடந்து சென்ற ஒரிரு டூ-வீலர்களும், காரில் இருந்தவர்களும் இவர்களை விசித்திரமாக பார்த்துவிட்டு சென்றனர்.

"எதுக்கு இப்படி பைத்தியம் பிடிச்ச மாதிரி ஓடுறாங்க?" என்ற கேள்விக் குறி பார்வைகள்.

எதையும் கவனிக்கும் நிலையில் அவர்கள் இல்லை.
​கொஞ்ச நேரம் ஓடியவர்கள் ​ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்கிக் கொண்டார்கள்.

திடீரென்று பின்னால் ஒரு பைக் வரும் சத்தம் கேட்டது.
​இந்து கையை நீட்டினாள். நல்லவேளையாக அந்த பைக் இவர்களை கடந்து செல்லாமல், சடாரென பிரேக் அடித்து நின்றது.
​இருவரும் ஒரு விநாடி கூடத் தாமதிக்கவில்லை.

பைக்காரன் "எங்க போகணும்?" என்று கேட்பதற்கு முன்பாகவே, சஞ்சுவும் இந்துவும் பைக்கின் பின் சீட்டில் ஏறி தங்களை சொருகிக் கொண்டனர்.
​"மார்க்கெட் ஏரியா! ப்ளீஸ் வண்டிய எடுங்க! கொஞ்சம் அர்ஜென்ட்"

பைக் உடனே புறப்பட்டது.

தொடரும்


This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 
ஜானகி மந்திரம் 32 A
 
 
​அடுத்த பத்தாவது நிமிடம்.
 
​மார்க்கெட் ஏரியாவில் இருவரையும் அந்தப் பைக்காரன் கொண்டு வந்து விட்டான். சஞ்சுவும் இந்துவும் அவசரமாக வண்டியிலிருந்து துள்ளி இறங்கி, அவனுக்கு அவசர அவசரமாக ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு சுற்றிலும் பார்த்தார்கள்.
 
மணிக்கூண்டு மார்க்கெட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் மாலை நேரத்து நெரிசல். பக்கத்தில் பஸ் ஸ்டாப் இருந்தது. ஆனால், மனோவின் கார் அங்கெங்குமே இல்லை. மைதிலியையும் காணவில்லை.
 
​இந்துவின் முகம் வெளுத்தது. "எங்கடி? ஒருவேளை நேரடியா கஃபேவுக்கே போயிட்டாளா?"
 
​சஞ்சுவின் பார்வையும் நாலாபுறமும் தேடியது.
 
"தெரியலையே... வா, முதல்ல அங்க போய் பார்ப்போம்."
 
​இருவரும் மணிக்கூண்டு மார்க்கெட்டை நோக்கி செல்லும் சாலையில் வேகமாய் ஓடினார்கள். அவர்கள் ஓட ஆரம்பித்த சில விநாடிகளிலேயே, எதார்த்தமாக இடதுபக்கம் பார்த்தாள் இந்து.
 
தார்ச்சாலையை விட்டு இறங்கிச் செல்லும் ஒரு ஆள் அரவமற்ற ஒற்றையடி பாதை. அதன் ஓரத்திலிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் யாரோ ஒரு பெண் தனியாக நிற்பது தெரிந்தது.
 
​மாலை மங்கும் வேளையில், தூரத்திலிருந்து பார்த்தபோதே இந்துவின் கண்கள் சட்டென்று அவளை அடையாளம் கண்டுகொண்டன. 
 
அது மைதிலி!
 
​"சஞ்சு... அங்க பாரு, மைதிலி!"
 
​இருவரும் திரும்பி, ஒற்றையடி பாதையில் படபடவென இறங்கி, அவளை நோக்கி "மைதிலி... மைதிலி!" என்று கத்திக்கொண்டே ஓடினார்கள்.
 
​அவர்களது குரல் கேட்டு, கண்களில் தேங்கியிருந்த நீருடன் மைதிலி அவர்களை திரும்பிப் பார்த்தாள்.
அழுகையை அடக்க முடியாமல் உதடுகள் துடித்தபடி, கண்ணீரும் கம்பலையுமாக நின்றுகொண்டிருந்தவளை பார்த்ததும், சஞ்சுவிற்கும் இந்துவிற்கும் நெஞ்சு 'சுரீர்' என்றது. 
 
ஏதோ விபரீதம் நடந்துவிட்டது, நெகட்டிவ் ரிசல்ட் என்பதை அவளது முகம் அப்பட்டமாக சொல்லாமல் சொல்லியது. அவளை எப்படித் தேற்றுவது, ஆறுதல்படுத்த என்ன வார்த்தைகளை சொல்வது என்று தெரியாமல் தவித்தபடியே அவளை நெருங்கினார்கள்.
 
​சஞ்சு அவளது கைகளை பற்றிக்கொண்டு, "என்னடி ஆச்சு? ஏன் இங்க வந்து தனியா அழுதுட்டுருக்க?" என்று மூச்சு வாங்கக் கேட்டாள்.
 
​மைதிலி பதில் பேசவில்லை. தவிப்போடு தோழிகள் இருவரையும் உற்றுப் பார்த்து கொண்டிருக்க, அவள் தொடர்ந்து இருவரையுமே பதில் சொல்லாமல் ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்
 
இந்து பொறுமை இழந்து...
​"கேக்குறோம்ல... பதில் சொல்லுடி, என்ன ஆச்சு? நீ அவன்கிட்ட உண்மையை சொன்னியா? அவன் என்ன சொன்னான்?"
 
​[ஃபிளாஷ்பேக் கட் — காருக்குள்]
 
​காரின் விண்ட்ஷீல்டுக்கு வெளியே மரங்களின் நிழல் முகத்தில் விழுந்து மறைய, மைதிலி மெல்லத் தன் முகத்தை மனோவின் பக்கம் திருப்பினாள்.
 
​"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..."
 
​மனோ ஸ்டீயரிங்கிலிருந்து கைகளை எடுக்காமல், தன் கூல் புன்னகையோடு லேசாக தலை சாய்த்தான்.
 
"Yes... சொல்லுங்க."
 
​மைதிலி தொண்டையை கனைத்துக் கொண்டாள். உள்ளுக்குள் எகிறிய இதயத் துடிப்பை அடக்கி, அசாத்தியமாக ஒரு தைரியத்தை வரவழைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள். ஆனால், அவனை திரும்பிப் பார்த்த அந்த மைக்ரோ விநாடி... அவளுக்குள் இருந்த 'சன்ஷைன்' பயந்து உள்ளே ஒளிந்துகொண்டாள். அவள் சொல்ல வந்த விஷயம் அப்படியே தொண்டைக்குள் லாக் ஆகிவிட, அவளறியாமலேயே பேச்சு வேறு தடம் மாறியது.
 
​"காலேஜ்ல எல்லாரும் உங்களை பத்தி ரொம்ப நல்லவிதமா சொல்றாங்க. ஆஹா ஓஹோன்னு புகழ்றாங்க. நீங்க காலேஜ் ஸ்டூடண்ட் யூனியன் லீடர். பசங்களோட குறைகளைக் கேட்டு உடனே நிவர்த்தி பண்றீங்க... எல்லாம் ஓகேதான். ஆனா நீங்க பண்ற ஒரு விஷயம் எனக்கு பிடிக்கல...." என்று இழுத்தாள்.
 
​"என்ன விஷயம்?" என்றான் அவன் எதார்த்தமாக.
 
​"இந்த பைக் ரேஸ் எல்லாம் ரொம்ப டேஞ்சரான விஷயம் ஆச்சே! அதை எதற்காக நீங்க பண்ணனும்? அதை மட்டும் நீங்க தவிர்க்கக் கூடாதா?"
​அவள் உடைக்க வந்த ரகசியம் வேறு, ஆனால் பயத்தில் அவளது வாய் கேட்ட கேள்வி முற்றிலும் வேறாக மாறிப் போனது!
 
​மனோ இதைக் கேட்டு சட்டென்று சிரித்தான்.
 
​"அடேங்கப்பா... இதான் விஷயமா? எதுலதான் டேஞ்சர் இல்லை? உலகத்துல எல்லாத்துலயும் தான் ஆபத்து இருக்கு. வீட்ல ஃபேன் போடுவதற்காக சுவிட்ச் போடப் போறோம்... ஷார்ட் சர்க்யூட்ல கரண்ட் ஷாக்கடிச்சு செத்துப்போனவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. பாம்பு கடிச்சுப் பொழைச்சவனும் இருக்கான்... ஆனா, செருப்பு கடிச்சு செப்டிக் ஆகி செத்தவனும் இருக்கான். பயந்துகிட்டே இருந்தா நம்மால எதையுமே பண்ண முடியாது!"
 
​அவன் பைக்கின் கியரை மாற்றுவது போலப் பேச்சை லாவகமாகத் திருப்பினான்.
​"நீங்க கேட்டதுனால ஒரு stats சொல்றேன்... உலகத்துல நடக்குற மொத்த பைக் விபத்துக்கள்ல, ரேஸ் டிராக்ல ஓட்டுற ரேசர்களுக்கு நடக்குற விபத்து வெறும் 1 சதவீதத்துக்கும் கம்மிதான். ஏன்னா, அவங்க முறையான சேஃப்டி கியர்ஸ், ஹெல்மெட், ட்ரெய்னிங்கோட வண்டி ஓட்டுறாங்க. ஆனா, முறையான ஹெல்மெட் போடாம, டிராஃபிக் ரூல்ஸை மதிக்காம சாதாரண ரோடுகள்ல சுத்துற பொதுமக்களுக்குத்தான் 99 சதவீத விபத்துக்கள் நடக்குது. சோ, ரேஸிங் என்கிறது ஒரு கால்குலேட்டட் ரிஸ்க்... ஒரு ஸ்போர்ட்ஸ். அதனால பயப்படத் தேவையில்லை..."
​இப்படியாக அவனது அந்தப் பேச்சு, ரேஸிங் பற்றிய ஒரு விவாதமாகவே முடிந்துபோயிருந்தது.
 
அதற்குள் மார்க்கெட் ஏரியாவும் வந்துவிட, மைதிலி காரை விட்டு இறங்கியிருந்தாள்.
 
​[நிகழ்காலம் — ஒற்றையடிப் பாதை மரத்தடி]
 
​ஃபிளாஷ்பேக்கை கேட்டு முடித்த இந்துவிற்கும் சஞ்சீவிற்கும் ஒரு பக்கம் செம கடுப்பாக இருந்தது. 'இவ்வளவு தூரம் ஸ்கெட்ச் போட்டு காருக்குள் ஏற்றி அனுப்பி அரக்க பறக்க ஓடி வந்தா இவள் போய்ப் பைக் ரேஸை பற்றிப் பேசிவிட்டு வந்திருக்கிறாளே!' என்று ஆத்திரமாக வந்தது. ஆனால், இன்னொரு பக்கம்... அப்பாடா, ரகசியம் இன்னும் உடையவில்லை, இப்போதைக்கு இவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்ற பெரிய ஆறுதலும் எட்டிப் பார்த்தது.
 
​இந்து: "அடிப்பாவி! ரெண்டு பேரும் மட்டும் தனியா காரில் இருந்தீங்க. எவ்வளவு பெரிய கோல்டன் சான்ஸ்.. ஏன்டி சொல்லல?"
 
​மைதிலி தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு, அவர்களை ஏறிட்டுப் பார்த்தாள். அவளது கண்களில் இப்போது அப்பட்டமான ஒரு வலியும், முதிர்ச்சியும் தெரிந்தன.
 
​"நான் பேச ஆரம்பிச்ச முதல் ரெண்டு வரியிலயே... என் வாய்ஸைக் கேட்டதும் அவன் முகத்துல ஒரு சின்ன ஏமாற்றத்தையும், குழப்பத்தையும் பார்த்தேன்..." என்று அவளது குரல் உடைந்தது.
 
அவளே மேற்கொண்டு பேசட்டும் என்று இருவரும் பேசாமல் காத்திருந்தார்கள்.
 
ஒரு சில நொடிகளுக்கு பிறகு மைதிலி தொடர்ந்தாள்.
 
​"நான் தான் அவனோட சன்ஷைன்னு சொல்லி, அவன் மனசுக்குள்ள தாங்கி பிடிச்சிருக்கற அந்த அழகான காதல் கனவை, என் நிஜ முகத்தைக் காட்டி நான் கலைக்க விரும்பல. போன்ல அவனுக்கு நான் தேவதையாவே இருந்துட்டு போறேன். இப்ப மட்டுல்ல... எப்பவுமே... அவன் என்னை பற்றி நினைக்கிற வரைக்கும்... எனக்கு போன் வர வரைக்கும்... என் கூட பேசுற வரைக்கும்... 
 
அதனால நேர்ல போயி அவனோட கனவை கலைக்க எனக்கு மனசு வரல. அதான்... அதான் என்னால சொல்ல....!" என்று மேற்கொண்டு சொல்ல முடியாமல் 
வார்த்தைகளுக்குள் அடக்க முடியாத அந்தப் பெருவலியை விம்மல்களாக கொட்டினாள். அதுவரை அவளுக்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த காதலின் மொத்த பாரமும் அந்த ஒற்றை அழுகை கரைத்து விடப் போவதில்லை.
​சஞ்சுவும் இந்துவும் பேச்சற்று நின்றார்கள். 
 
அடுத்த விநாடி, இருவரின் கண்களிலும் கண்ணீர் கசிவு. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். வார்த்தைகள் தீர்ந்துபோன அந்த இடத்தில், நட்பைத் தவிர வேறென்ன ஆறுதல் இருக்க முடியும்?
 
​இருவரும் மெல்ல நகர்ந்து மைதிலியின் இருபுறமும் நெருங்கினர். எவ்விதக் கேள்விகளும் இன்றி, அவளை தழுவி, அவளை அப்படியே தங்களுக்குள் ஆறுதலாக கட்டிக்கொண்டனர். 
 
ஒற்றையடிப் பாதையின் மங்கலான அந்தி வெளிச்சத்தில், தோழிகளின் இறுக்கமான அணைப்பின் கதகதப்பில், மைதிலி முகத்தை புதைத்துக் கொண்டு தன் மனபாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வைத்தாள்.
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 

ஜானகி மந்திரம் 33

இரவு 10.20 மணி.

[வேலை முடிந்து மைதிலி பஸ்ஸில் திரும்புகிறாள். ஜன்னலோரக் காற்று, அவளது கலைந்த கூந்தலை முகத்தின் மீது ஒரு கவிதை போல கிறுக்கிக் கொண்டிருந்தது. ]

​மஞ்சள் விளக்குகள் விழுந்து ஓடும் தார்ச்சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மைதிலி. கைபேசி சத்தமிட்டது. மனோவின் பெயர் திரையில் மின்மினியாய் அலைந்தது.

மனோவின் அழைப்பை பார்த்ததும் அட்டென்ட் செய்து பேசினாள்.

​"என்ன விஷயம், இந்த டைம்ல பண்ணி இருக்கீங்க?" --

மைதிலியின் குரலில் இரவின் சோர்வு கலந்திருந்தது.

​"You know what happened today...இன்னைக்கு காலேஜ் முடிஞ்சு போகும்போது கார்ல எங்க காலேஜ் பொண்ணு ஒருத்தியை கூட்டிட்டு போனேன். பேரு மைதிலி, பிகாம் படிக்கிறா. வாய்ஸ்... அப்படியே உன் வாய்ஸ் மாதிரியே இருந்துச்சு " என்றான் மனோ. அவன் பேசிக் கொண்டிருந்தது, புனேவில், அவன் வீட்டிலிருந்து...

​மைதிலியின் நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு பறவை சிறகடித்தது. பிடிபட்டுவிட்டோமோ என்கிற நடுக்கத்தை வெளிக்காட்டாமல், "அப்படியா..." என்று ஒரு வெற்று வார்த்தையை காற்றில் எறிந்தாள்.

மனோ: நான் கூட ஒரு செகண்ட் நீயா இருப்பியோன்னு நினைச்சேன்... பட் அது நீயா இருக்க முடியாது.

மைதிலி: ஏன் அது நானா இருக்க முடியாது?

மனோ: (மறுமுனையில் லேசான சிரிப்பு, காற்றில் கரையும் சத்தம்) "சான்ஸே இல்லை சன்ஷைன். உன்னோட வாய்ஸ், நீ பேசுற விதம், என்மேல நீ வச்சிருக்கற அந்த அக்கறை, உன்னுடைய புத்திசாலித்தனம், கான்ஃபிடன்ஸ்... இது எல்லாத்துக்கும் என் மனசுக்குள்ள ஒரு உருவம் கொடுத்திருக்கேன். இன்னைக்கு கார்ல வந்த பொண்ணோட வாய்ஸ் தவிர, அவளோட பாடி லாங்குவேஜ் ரொம்ப poor. To top it off, she seemed incredibly naive and fearful. There was absolutely no sign of sharpness or intellect on her face. நீங்க ரெண்டு பேரும் வேற வேற ஜோன்! No chance"

மறுமுனையில் மைதிலிக்குள் 'க்ளிக்' சத்தம்.
​அவள் இத்தனை நாட்களாக எதை நினைத்து தயங்கினாளோ, எங்கே உண்மை தெரிந்தால் எல்லாமே ‘கிராஷ்’ ஆகிவிடுமோ என்று பயந்தாளோ, அந்தப் பயம் இப்போது 'கன்ஃபார்ம்' ஆகியிருந்தது. அவளது எதார்த்தமான எளிய உலகமும், அவன் கற்பனையில் கட்டமைத்து வைத்திருக்கும் அந்த 'கிளாஸான' சன்ஷைன் பிம்பமும், ஒருபோதும் மேட்ச் ஆகாது என்கிற கசப்பான உண்மை, அவளுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது.

​இவன் காதலிப்பது அவளை அல்ல; அவளுக்கு பின்னால் அவன் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கற்பனை தேவதையை!

​மனோ அதுவரை அத்தனை கவனமாய் தவிர்த்த அந்த ஒரு கேள்வியை, இன்று தன் கட்டுப்பாட்டை மீறி அவளிடம் கேட்டுவிட்டான்.

"சன்ஷைன்... இன்னும் எவ்வளவு நாள்தான் நான் உன்னைப் பார்க்காம போன்லயே பேசிட்டு இருக்கணும்? இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடிஞ்சிரும். A strange kind of fear is creeping in... I don't know, man, என்னமோ தெரியல, மனசு பாரமாவே இருக்கு. நீ பக்கத்துலதான் எங்கேயோ இருந்து என்னை பார்க்கிறேன்னு என்னால  உணர முடியுது. ஆனா நான் உன்னை எப்ப பார்க்கிறது? நான் உன்னை ஒருபோதும் பார்க்கவே முடியாதா?"

​மனோவின் குரலில் ஏக்கத்தின் ஈரப்பதம் படர்ந்திருந்தது. பணம், ஸ்டேட்டஸ், தோற்றம் என எல்லாவற்றிலும் அவர்கள் இருவருக்கும் நடுவே இருந்த பிரம்மாண்டமான இடைவெளி அவளை பொசுக்கினாலும், அவளது உள்மனது அவனது பிரசன்னத்திற்காக ஏங்கியது.

"நானும் உங்களை நேர்ல பாக்கணும்னு நினைக்கிறேன் மனோ. ஆனா அதுக்குண்டான நேரம் எப்ப வரும்னு எனக்கே தெரியல. நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கவா?" என்று அவளது மனதின் தவிப்பை வார்த்தைகளில் அடக்க முடியாமல் கேட்டாள்.

​"Yes..."

​"ஒருவேளை... நான் உங்களை நேர்ல வந்து பார்க்கவே இல்லைன்னா என்ன பண்ணுவீங்க? நம்ம டெய்லி லைஃப்ல, பஸ்ல, ட்ரெயின்ல எத்தனையோ பேரை பார்க்கிறோம் பேசுறோம் பழகறோம்... கடந்தும் போறோம். எல்லா ரயில் சினேகமும் கடைசி வரைக்கும் லைஃப்ல கூடவே வரதில்லையே, கரெக்டா? அதே மாதிரி இந்த சன்ஷைனும் ஒரு மெமரியா லைஃப்ல கடந்து போயிட்டா... என்ன பண்ணுவீங்க?"

​மனோவின் பிரபஞ்சம் ஒரு நொடி அசைவற்று நின்றது.  நெஞ்சுக்குள் சட்டென்று ஒரு கனம் ஏறியது. அவளை கட்டாயப்படுத்த அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால், அவளின்றி தன் நாட்கள் எப்படி நகரும் என்கிற சூன்யம் உலுக்கியது.
அவளை இழப்பதை அவனால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.

​"என்ன அவ்வளவு ஈசியா ஒரு சாதாரண ரயில் சினேகம்னு சொல்லிட்ட? தெரியல சன்ஷைன்... நீ இல்லாம என் நாட்கள் எப்படி நகரும்னு எனக்கே தெரியல... நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியல. என்னால அதைத் தாங்க முடியுமா முடியாதான்னு கூட எனக்கு தெரியல. நான் உன்னை நேர்ல பார்த்துப் பேசுறதுதான் என் வாழ்க்கையோட பெஸ்ட் மொமென்ட்டா இருக்க முடியும். யாருக்கு தெரியும்???... அது என் வாழ்க்கையையே மாற்றக்கூடிய விஷயமா கூட இருக்கலாம். ஒரு தடவை... ஒரே ஒரு தடவை... நீ என்னை பார்க்க வரக்கூடாதா? என்னோட affection இன்னுமா உனக்கு புரியல?" என்றான் ஒரு யாசகனை போல.

​மைதிலியின் கண்களில் நீர் திரண்டது. பஸ்ஸின் ஜன்னல் கண்ணாடி வழியே தெரிந்த விளக்குகள் யாவும் அவளது கண்ணீரில் கரைந்து நீண்ட கோடுகளாய் தெரிந்தன.  சாட்டிங் ஆரம்பிக்கும்போது, அவன் கண்டாலா கல்லூரியின் 'ஹீரோ'வாக இருப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. ஏதோ நம்மை போல சாதாரண பையன், நாலு வார்த்தை ஆறுதலாகப் பேசுகிறான் என்றுதானே பழகினாள். அது  இந்தளவுக்கு கொண்டு வந்து நிறுத்தும் என்று அவளது எளிய மனம் கணிக்கவில்லை.

​அவள் என்ன பதில் சொல்லியிருப்பாள்?

இந்தக் கதைக்கு ஸ்கிரீன் பிளே மற்றும் டயலாக்ஸ் எழுதிக் கொண்டிருந்த ஜேம்ஸ் கேமராமேனுக்கு இந்த இடம் stuck ஆகிறது... அவள் என்ன பதில் சொல்லிருப்பாள் என்பதை அக்யூரேட்டாக யூகிக்க முடியவில்லை. சரியான ஒரு டயலாக் மாட்டவில்லை.

சம்பவத்தை அவன் நேரில் பார்க்கவில்லை என்பதால் அவனுக்கு சரியாக தெரியவில்லை.

Get together-ற்கு வரும்போது  கேட்க வேண்டும்??? மனோ, நீ வருவியா? எங்கடா இருக்க?

ஒன்று மட்டும் டைரக்டருக்கு தெரிந்தது... அவளது பதிலில் ஒரு அசாத்தியமான முரண் இருந்திருக்கும். 'உங்களை பார்ப்பேன்' என்கிற நம்பிக்கையும் இருக்க வேண்டும், அதே சமயம் தன் சூழ்நிலையை நினைத்து 'பார்க்க மாட்டேன்' என்கிற பிரிவின் வலியும் இருந்திருக்கும்.

​பேசாமல், ஒண்ணு பண்ணலாமா? ஒரு கவிஞன் தன் கவிதையின் கடைசி வரியை வாசகனின் ஊகத்திற்கே விட்டுவிடுவதை போல, 'இந்த இடத்தை கடந்து போகிறது காலம்' என்று அப்படியே விட்டுவிடலாமா?

​சே! சே!... நல்லா இருக்காது!

டைரக்டர், அந்த சீனை அவன் மனக்கண்ணில் மீண்டும் ஓட்ட ஆரம்பித்தான்.

உள்ளங்கையால் கன்னத்து ஈரத்தை மெல்ல துடைத்துக் கொண்டாள். அழுகையை மறைக்க முயலவில்லை, ஆனால் அவனுக்கு அது தெரியக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். அவளது குரல் அவனது காயத்திற்கு மருந்திடுவது போல...காதலும், அசைக்க முடியாத மென்மையும் கொண்டு ஒலித்தது. தனக்கு விதிக்கப்பட்ட எல்லையை உணர்ந்த ஒரு பெண்ணின் குரலது.

​"மனோ... ஒருவேளை அப்படி நடக்கலைன்னா, நாம நேர்ல பார்த்துக்கவே முடியலைன்னா கூட... நீங்க இதே அன்போடதான் இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். நானும் அப்படித்தான். நான் உங்களை தேடி வருவேன். கண்டிப்பா வருவேன். எப்பன்னு கேட்காதீங்க. கேம்பஸ் நாட்கள் முடிந்துவிடுவதால் மட்டுமே எல்லாம் முடிந்துவிடுவதில்லை. எனக்கு தயவு செஞ்சு கொஞ்சம் டைம் குடுங்க.  நமக்கான நேரம் வரும்போது, நான் யார்னு உங்க முன்னாடி வந்து நிப்பேன். அதுவரைக்கும் இந்த சன்ஷைனை உங்க மனசுக்குள்ளயே வச்சிருங்க.
​ஆனா... அபெக்ஷன் அது இதுன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு உங்க வேலைகளை செய்யாம விட்றாதீங்க மனோ. உங்களுக்குள்ள எவ்வளவோ பொட்டன்ஷியல் இருக்கு. நீங்க வாழ்க்கையில இன்னும் நிறைய சாதிக்கணும், ரொம்ப பெரிய இடத்துக்கு முன்னேறி வரணும். அதுதான் இந்த சன்ஷைனுக்கும் பெருமை. எனக்காக அதை மட்டும் செய்வீங்களா? ப்ராமிஸ் பண்ணுங்க."

​அவள் சொன்ன அந்த பதிலில் காதலின் உச்சமும் இருந்தது, பிரியப் போகிறோம் என்கிற ஒரு மெல்லிய வலியும் இருந்தது. அதே சமயம், அவனது எதிர்காலத்தின் மீதான அக்கறையும் தூக்கலாக இருந்தது.

​மறுமுனையில் மனோ அந்த வார்த்தைகளின் பாரம் தாங்காமல் திகைத்தான்.

அவளுக்குள் இருக்கும் தவிப்பை அவனால் உணர முடிந்ததே தவிர, அதன் காரணத்தை அவனால் தீண்ட முடியவில்லை.

​அவன் தன் மூச்சை ஆழ இழுத்துவிட்டு, குரலை தளர்த்தி சொன்னான்:

​"செய்றேன் சன்ஷைன், i promise... நீ கேட்டா நான் எதைத்தான் செய்யாம இருந்திருக்கேன்? நீயும் நல்லா இருக்கணும்னு ஆசைப்படுறேன் சன்ஷைன். நீ கேட்காத இன்னொரு பிராமிஸும் பண்றேன். நீ என்னை எப்போ தேடி வந்தாலும், எந்த சூழ்நிலையில வந்தாலும்... இந்த மனோ உனக்காக காத்துட்டேதான் இருப்பான்.  Whether I am right at the top, wrapped in power and status just like you wished, or whether I end up as an absolute nobody in some ordinary corner... my focus won't shift. ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல ஆயிரம் ட்ரெயின் வந்துட்டு போனாலும், தான் போக வேண்டிய ஊருக்கான ட்ரெயினுக்கு மட்டுமே காத்துக்கிட்டு இருக்குற ஒரு பேசஞ்சர் மாதிரி, நான் உனக்காக காத்துக்கிட்டு இருப்பேன். நீ கண்டிப்பா என்னை தேடி வருவேன்னு இப்போ சொன்னியே... அந்த வார்த்தையை காப்பாத்து சன்ஷைன். அது போதும் எனக்கு."

மறுமுனையில், மைதிலிக்கு உள்ளுக்குள் ஒரு பெரிய நிலநடுக்கம் வந்து அடங்கியது போலிருந்தது.  அவளது எளிய வாழ்க்கையில், அவளை விட, அவளது எதிர்காலத்தையும், அவளது வரவையும், இவ்வளவு ஆழமாக நேசிக்கும் ஒருவனை  அவள் சந்தித்ததே இல்லை. தியேட்டரில் திடீரென கரண்ட் போய் அனைத்துமே நிசப்தமாவது போன்ற ஒரு கணமது. அதைவிட ஒரு உன்னதமான தருணம் அவளது வாழ்வில் வாய்க்கப் போவதில்லை.

ஆனால், எல்லா உணர்ச்சிகளையும் அள்ளி அப்படியே கொட்டிவிட அவளுக்கு சாத்தியமில்லை. எமோஷனல் ஆகி உண்மையை உடைத்தால் மொத்தக் கதையும் முடிந்துவிடும். புத்தி 'பிரேக்' போட்டது.

​"தேங்க்யூ மனோ..." என்று அவளது உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.

​அதற்கு மேல் அவளால் தன் அழுகையை அடக்கவோ, அந்த இரட்டை அர்த்த நாடகத்தை தொடரவோ முடியவில்லை. அவசரமாய் அவள் தன் மொபைலை அணைத்தாள். போன் கட் ஆனது.

சரி ஓகே... மைதிலியின் மனபாரம் கொஞ்சம் அடங்கட்டும்.

இந்த இடைப்பட்ட நாட்களில், ஸ்ரேயா தரப்பில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

​[பின்னணிச் சூழல்: சம்பவம் நடந்தது ஒரு மாசத்துக்கு முன்னால்... ஸ்ரேயாவின் ஹாஸ்டல் அறை. மேஜை முழுக்க சிதறிக்கிடக்கும் காகிதங்கள். ஸ்ரேயா தன் பிரெஞ்சு மேனிக்யூர் செய்த நகங்களை மேஜையின் மீது தாளமிட்டபடி, முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் யோசித்துக் கொண்டிருக்க,  பக்கத்தில் நின்றிருந்த சலோனியும் பிரணவியும் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், பேட்டரி தீர்ந்த பொம்மைகள் போல  விழிக்கிறார்கள்.]

​சன்ஷைன் யார் என்று கண்டுபிடிப்பதற்காக, தன் செல்வாக்கை பயன்படுத்தி ஹாஸ்டல் ஆபீஸிலிருந்து மாணவிகளின் லேண்ட்லைன் மற்றும் மொபைல் எண்களை திருடி, அவர்கள் எடுத்த அத்தனை முயற்சிகளும் ஒரு பெரிய பூஜ்ஜியத்தில்தான் முடிந்திருந்தன.

​2003 காலக் கட்டத்தில், ஒரு மொபைல் எண்ணை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு நபரின் முகவரியையோ அடையாளத்தையோ கண்டுபிடிப்பது என்பது சாதாரண காரியமல்ல. அந்த எண்ணிற்கு அவர்கள் செய்த முந்தைய அழைப்புகள் யாவும் 'சுவிட்ச் ஆஃப்' என்றோ அல்லது கால் அட்டென்ட் செய்யப்படாமலும் முடிந்திருந்தன.

ஸ்ரேயா தீவிர யோசனையில் இருக்க, பிரணவி என்ன செய்வதென்று தெரியாமல், இன்னொரு முறை அந்த நம்பருக்கு கால் செய்து பார்த்தாள். இப்போதும் அதே சுவிட்ச் ஆஃப் மெசேஜ் தான் வரும் என்ற அவநம்பிக்கையோடு டயல் செய்ய...

​[காட்சி அமைப்பு: அந்த நோக்கியா போனின் டிஸ்ப்ளே திரை மட்டும் க்ளோஸ்-அப்பில் காட்டப்படுகிறது. அதில் 'Dialing...' என்று வந்து, திடீரென '0:01' என விநாடிகள் ஓடத் தொடங்குகின்றன.
​வழக்கமாக unknown நம்பரில் இருந்து கால் வந்தால் அட்டென்ட் செய்யாத சன்ஷைன், இம்முறை அட்டென்ட் செய்தாள்!]

​லாட்டரி சீட்டில் ஜாக்பாட் அடித்தது போன்ற ஒரு எதிர்பாராத அதிர்ச்சியில், பிரணவியின் தொண்டை வறண்டது. குரலின் டெசிபலை  குறைத்து, பதற்றத்துடன் கிசுகிசுத்தாள்:

"ஹேய் SRK... கால் அட்டெண்ட் பண்ணிட்டா!"

சட்டென்று திரும்பி ​பிரணவியின் கைகளிலிருந்து போனை வெடுக்கென்று பிடுங்கினாள் ஸ்ரேயா. அவளது முகத்திலிருந்த கடுப்பு நொடியில் மறைந்து, ஒரு தேர்ந்த கார்ப்பரேட் பெண்ணின் போலிப் புன்னகை குடியேறியது. தன் குரலை மாற்றி, பக்கா ஆங்கிலத்தில் பேச தொடங்கினாள்:

​"Hi! Good evening. This is Neha calling from HDFC Bank Credit Card division. We have a special, newly launched credit card offer exclusively for college students, with zero annual fees. May I know your good name and department to process this, please?"

​[காட்சி அமைப்பு:  கஃபேவின் கிச்சன் பகுதி. எஸ்பிரஸோ மெஷின் ஆவி பறக்க வேலை செய்துகொண்டிருக்கிறது. மைதிலி கஸ்டமரின் ஆர்டர் சீட்டைப் பார்த்தபடி, "Chef, one Caramel Macchiato and a Choco Muffin setup please!" என்று கிச்சனில் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில், பாக்கெட்டில் இருந்த அவளது மொபைல் போன் அதிர்கிறது. டிஸ்ப்ளேயில் அந்த பழக்கப்பட்ட எண். யார் நம்பர் என்று அவள் தெரிந்து கொண்டிருந்தாள்.

​முன்பு பலமுறை இந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்தபோதும்,  மைதிலி அதை எடுக்காமல் விட்டிருந்தாள். ஆனால், இப்போதும் அதே எண் விடாமல் ஒளிர, மைதிலியின் முகம் லேசாக இறுகியது. 'இன்னைக்கு இவங்களுக்கு ஒரு நல்ல பதில் சொல்லி, இந்தத் தொல்லையை முடிக்கணும்' என்ற முடிவோடு, போனை எடுத்துக்கொண்டு கஃபேவின் பின்பக்கக் கதவை திறந்து, ஆள் நடமாட்டமில்லாத  அமைதியான பின்பகுதிக்கு வருகிறாள்]

​ஸ்ரேயாவின் அடித்து துவைத்த காயலான் கடை ஐடியா மைதிலியை அசைக்கவில்லை. Sunshine யாரென்று கண்டுபிடித்து விட வேண்டும் என்ற அவர்களின் விடாமுயற்சியை ஒரே போடாக உடைத்து, மைதிலி மிக நிதானமாக, நறுக்கென்று பேச ஆரம்பித்தாள்:

​"இங்க பாரு... இந்த மாதிரி சின்னப் புள்ளத்தனமான வேலை எல்லாம் என்கிட்ட செய்யாதீங்க. ஸ்ரேயா தானே பேசுறது? சும்மா சும்மா எனக்கு போன் பண்றது, நான் யாருன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்றது... இந்த வேலைல்லாம் வேண்டாம். அதெல்லாம் உன்னால கண்டுபிடிக்க முடியாது. வேற ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க!"

​[காட்சி அமைப்பு: Fake call என்று அவள் உடனே கண்டுபிடித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சுருக்கென்றது. போனை இறுக்கமாக பற்றிக் கொண்டு, மிரட்டலை மிகவும் நிதானமாகவும், ஆபத்தான அமைதியுடனும் உதிர்க்கிறாள். ஆத்திரத்தில் கத்தினால் தோற்றுவிடுவோம் என்று தெரிந்த எலைட் வர்க்கத்து ஆட்டிடியூடுடன் அவள்.]

ஸ்ரேயா: ​"Listen to me carefully! Why the hell are you fooling Mano under the name of Sunshine? Why are you unnecessarily playing games between me and Mano? Don't you know he truly likes me? I love him! I am warning you, stop talking to Mano and end this nonsense right now. Otherwise, you will have to face unexpected consequences!"

​("நல்லா காது குடுத்து கேளு! சன்ஷைன் என்கிற பேர்ல ஏன் மனோவை ஏமாத்திக்கிட்டு இருக்க? அனாவசியமா எனக்கும் மனோவுக்கும் நடுவில், ஏன் இந்த விளையாட்டு? அவனுக்கு என்னைத்தான் உண்மையிலேயே பிடிக்குமன்னு உனக்கு தெரியாதா? நான் அவனை லவ் பண்றேன்! உனக்கு நான் வார்னிங் கொடுக்கிறேன்... இந்த வேலையை இதோட நிறுத்திக்கிட்டு மனோகிட்ட பேசுறதை விட்டுரு. இல்லைன்னா எதிர்பாராத விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்!")

​[காட்சி அமைப்பு: மைதிலி நிமிர்ந்து நிற்கிறாள். அவளது பாடி லாங்குவேஜில் ஒரு மில்லிமீட்டர் நடுக்கம் கூட இல்லை. ஸ்ரேயாவின் வார்த்தைகள் அவளது காதுகளை தொட்டு அப்படியே கீழே விழுகின்றன.]

மைதிலி எந்தவித சலனமும் இன்றி, மிகவும் தெளிவாக பதிலடி கொடுத்தாள்:

​"நல்லா புரிஞ்சுக்கோ ஸ்ரேயா... நான் மனோவை தேடிப் போய் பேசல, அவனாத்தான் எனக்கு போன் பண்ணி பேசுறான். உன்னை அவனுக்குப் பிடிக்கும்னா அவனே உன்னை தேடி வந்து பேசிருப்பான். நீ எதுக்காக மனோ கூட பிரண்ட்ஷிப் வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்னு எனக்கு நல்லா புரியுது. நீ உண்மையா அவனை லவ் பண்ணல... நீ உன்னைத்தான் லவ் பண்ற! எப்பவுமே நீ 'லைம் லைட்ல' இருக்கணும் பாரு... அதுக்கு அவனை ஒரு கருவியா பயன்படுத்த நினைக்கிற. தயவுசெய்து நான் சொல்றதை கேளு... இந்த ஈகோவையும் பிடிவாதத்தையும் விட்டுட்டு, உன்னோட கரியர்ல கவனம் செலுத்து. அதுதான் உனக்கு நல்லது. எல்லாருக்கும் நல்லது"

​மைதிலியின் அந்த அட்வைஸ் ஸ்ரேயாவின் ஈகோவின் உச்சக்கட்டப் புள்ளியை தொட்டது.

"வாய மூடு. நீ யாருன்னு கண்டுபிடிச்சு உன்னை என்ன பண்றேன்னு பாருடி!" என்று அவள் டென்சனாக பேச,

​[காட்சி அமைப்பு: கஃபேவின் பின்பக்க சுவரில் சாய்ந்தபடி, மைதிலி தன் நெற்றியை மெல்லத் தேய்த்து கொள்கிறாள். அவளது முகத்தில் கோபத்திற்குப் பதிலாக, ஒரு சிறு பிள்ளையின் பிடிவாதத்தை காணும் மெல்லிய பரிதாபமே நிலவுகிறது. குரலை இன்னும் நிதானப்படுத்தி, சாத்விகமாக பேசுகிறாள்.]

மைதிலி:  ஸ்ரேயா, நிதானமா யோசிச்சுப் பாரு. மிரட்டுறதாலயோ, பழிவாங்குறதாலயோ உனக்கு என்ன கிடைக்கப் போகுது? ஒருத்தரோட அன்பை மிரட்டி வாங்க முடியாது. நான் உனக்கு எதிரி இல்லை. இன்னும் கொஞ்ச நாள்ல காலேஜ் முடியப் போகுது, எல்லாரும் அவங்கவங்க வழியில போகப் போறோம். இந்த தேவையில்லாத கோபத்தை மனசுல வச்சு உன்னை நீயே காயப்படுத்திக்காத. நல்லபடியா படிச்சு உன்னோட லைஃப்ல மேல வர்ற வழியப் பாரு.

​"லீவ் யுவர் ஃபக்கிங் அட்வைஸ்! உன்னை நான் சும்மா விடமாட்டேன்!" என்று ஸ்ரேயா மறுமுனையில் ஆக்ரோஷமாக வார்த்தைகளை கொட்ட...

மைதிலி: "எவ்வளவு சொன்னாலும் நீ புரிஞ்சுக்க போறதில்ல. உன்கிட்ட இதுக்கு மேல பேசுறதுக்கு ஒண்ணுமில்லை..." என்று மிக அமைதியாக சொல்லிவிட்டு, எந்தப் பதற்றமும் இன்றி 'டக்'கென்று காலை கட் செய்தாள்.

​[காட்சி அமைப்பு: கட் செய்யப்பட்ட போனின் திரை சட்டென இருண்டு 'Call Ended' என்று காட்டிவிட்டு உறைந்து நிற்க,  ஸ்ரேயாவின் கண்கள் சிவந்து, வெறித்து பார்க்கின்றன. சலோனியும் பிரணவியும் பயத்தில் அவளை விட்டு லேசாக விலகி நிற்கிறார்கள்.]

​​அறைக்குள் நிலவிய மௌனத்தை உடைப்பது போல் சலோனி மெல்ல நகர்ந்து வந்தாள். சன்ஷைனை பற்றிய  ரகசிய வியப்பு அவளுக்கு ஏற்பட,  தோள்களை குலுக்கியபடி சொன்னாள்:

"பார்ட்டி யாரு? நம்மள விட பெரிய தில்லாலங்கடியா இருப்பா போல இருக்கே!"

​ஸ்ரேயாவின் BP எகிறியது. அவளை திரும்பி பார்க்க, பார்வையில் தீ கங்குகள்.

​பொறி தட்டியது இருவருக்கும். ஆபத்து.

சலோனி சட்டென்று பிரணவியின் கையை பற்றினாள்.

​"நாங்க... அப்புறம் வர்றோம் SRK."

​நைஸாக நகர்ந்தார்கள். கதவு திறந்தது, மூடியது.

​அதன் பிறகு, சன்ஷைனை கண்டுபிடிக்க அவர்கள் பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார்கள். ஒரு பக்கம் ஹாஸ்டலில் இருந்த ஜூனியர்களின் போன்களை எல்லாம் வாங்கிச் செக் பண்ணிப் பார்த்துவிட்டார்கள், பல பேரிடம் விசாரித்துவிட்டார்கள்... நிச்சயமாக அந்த சன்ஷைன்  ஜூனியர் பெண் இல்லை என்று தெரிந்தது. சீனியர்களின் ஃபோனை அவ்வளவு சீக்கிரம் செக் பண்ணி விட முடியாது என்பதால் அதை செய்ய முடியவில்லை. சந்தீப் and மணிஷிடமிருந்து கூட உருப்படியாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

​இன்னொரு பக்கம், ஸ்ரேயா எத்தனையோ விதமான வலைகளை வீசியும் மனோ அவளது எல்லைக்குள் சிக்கவே இல்லை. லாஸ்ட் செமஸ்டர் ஓடிக்கொண்டிருக்க, காலேஜ் முடிவதற்கு இன்னும் ஒரே ஒரு மாதமே மிச்சம் இருந்தது. 'கண்டாலா எஸ்.எஸ்.ஜி காலேஜின் அசைக்க முடியாத இளவரசியாக தான் வெளியேற வேண்டும்' என்ற ஸ்ரேயாவின் நீண்ட நாள் கனவு கடைசி செமஸ்டரில் தகர்ந்து போயிருந்தது.

​இளவரசனை அடைந்து இளவரசியாக முடியவில்லை என்பதை விட, இவ்வளவு அழகும் அந்தஸ்தும் இருக்கும் தன்னை தூக்கிப் போட்டுவிட்டு, ஊர் பேர் தெரியாத ஒருத்தி வெறும் பேச்சாலேயே அந்த இளவரசனை கரெக்ட் பண்ணிவிட்டாளே என்ற வன்மம் அவளை உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருந்தது.

​'இனி அந்த இளவரசன் எனக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை... ஆனால், அவனும் அந்த சன்ஷைனும் ஒருபோதும் இணைந்துவிட கூடாது. அவர்களின் காதல் நிறைவேறவே கூடாது, அதை எப்படியாவது நசுக்க வேண்டும்' என்கிற வெறி மட்டும் அவளது அடிமனதில் கனன்று கொண்டிருந்தது.

​[இடம்: மராட்டிய மாநிலத்தின் மஞ்சார் அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம் - அவசாரி.

மறுநாள் மதியம் ஒரு மணி]

​மஞ்சாரில் இருந்து சில கிலோமீட்டர் தள்ளியிருக்கும் அந்த 'அவசாரி' அரசு மருத்துவமனையின் வராண்டாவில் கார்போலிக் ஆசிட் நெடி தூக்கலாக அடித்தது. வார்டுக்குள் மைதிலியின் அம்மா ஆஸ்துமா முற்றி, ஆக்சிஜன் மாஸ்க்கோடு மூச்சுத் திணறிக் கொண்டிருக்க... வெளியே வராண்டாவின் ஓரத்தில் சாகர் மாமாவும், கமலினி அத்தையும் தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

​டாக்டர் சொன்னது அவர்களின் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது: "ஆஸ்துமா அட்டாக் தீவிரமா இருக்கு. நுரையீரல்லயும் பிரச்சனைகள் இருக்கிறதுனால உடனே Lobectomy பண்ணியாகணும். ஆனா அந்த ஆபரேஷன் பண்ணக்கூடிய வசதி நம்ம அரசு ஆஸ்பத்திரியில இப்போதைக்கு கிடையாது. உடனே சிட்டில இருக்கிற ஏதாவது பெரிய பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு தான் கூட்டிட்டு போகணும்."

​கமலினி அத்தை ஆஸ்பத்திரி சுவரில் சாய்ந்து கொண்டு, குரலைத் தாழ்த்தினாள்: "இந்த வயசுல இவளுக்கு ஆபரேஷன் தேவையா?அதுவும் பிரைவேட் ஆஸ்பத்திரின்னா லட்சங்கள்ல இழுக்குமே!"

​சாகர் கவலையோடு கைகளைக் பிசைந்தார். "டாக்டர் வேற வழியில்லைன்னு சொல்றாரே கமல்."

கமலினியின் கண்களில் ஒரு சுயநலப் பொறி தட்டியது. ​

​"நான் வேற ஒரு வழி சொல்றேன் கேளு...மைதிலி அம்மாவோட இந்த ஆபரேஷனையும், பிரைவேட் ஆஸ்பத்திரி செலவையும் ஒரு சாக்கா வச்சு, அவளை நம்ம சஞ்சீவுக்கு கட்டி வச்சுட்டா என்ன? அவன் குடிச்சு குடிச்சு வீணா போறான். ஊருக்குள்ள அவனோட நடவடிக்கைகள் தெரிஞ்சு வேற யாரும் பொண்ணு கொடுக்க மாட்டேங்குறாங்க. இப்போதைக்கு நமக்கு இதுதான் ஒரே வழி."

​சாகர் அதிர்ந்து போய் அவளை பார்த்தார்.

"அவ... அவ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாளே? அவளோட படிப்பு..."

​"படிப்பு அப்புறம் கிடக்கட்டும்..." கமலினி இடைமறித்து சொன்னாள், "நம்ம சஞ்சீவ் கஞ்சா கேஸ்ல உள்ள போயிருக்கான், சாதாரணமா அவனால சீக்கிரம் வெளில வர முடியாது. ஆனா, அவனுக்கு கல்யாணம்னு பத்திரிகையை கோர்ட்டுல காட்டுனா... அதை ஒரு ஸ்ட்ராங் காரணமா வச்சு, உடனே பெயில் எடுத்து அப்படியே வெளில உட்கார வச்சிரலாம்னு வக்கீலே ஐடியா சொல்லியிருக்கார்!"

​சாகர் யோசித்தார். வக்கீல் சொன்ன அந்த தந்திரம் வேலை செய்யும் என்று அவருக்கே தோன்றியது.

​கமலினி சாகரின் தோளை உலுக்கினாள்:

"இன்னும் கொஞ்ச நாள்ல அவளுக்கு காலேஜ் முடிஞ்சிடும். ரொம்ப படிச்சு வேலைக்கு போயிட்டான்னா, அறிவு வந்துரும். அப்புறம் நம்ம பையனுக்கு பொண்ணு கிடைக்காது. 'அம்மாவுக்கு பிரைவேட் ஆஸ்பத்திரியில ஆபரேஷன் பண்ணி, லட்சக்கணக்குல செலவழிச்சு அவங்களை நல்லபடியா வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வரணும்னா... நீ எங்க பையனை கட்டிக்கிட்டுத்தான் ஆகணும், அப்பதான் காசு கொடுப்போம்'னு மைதிலியை மிரட்டியாவது வளைச்சு சம்மதிக்க வைக்கணும். அப்போதான் நம்ம பையன் லைஃபும் தப்பும், அவங்க அம்மாவுக்கும் ஆபரேஷன் நடக்கும். என்ன சொல்றீங்க?"

​கமலினியின் அந்த பிளானை ஏற்பதை தவிர, சஞ்சீவை வெளில எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த சாகருக்கு வேறெந்த வழியும் இருக்கவில்லை.

மனசாட்சி ஒரு பக்கம் குத்தினாலும், மகனின் எதிர்காலம் என்கிற பாசம் அதை அமுக்கியது.
அவர் யோசனையாக தலையசைத்தார்.

கமலினி: ரொம்ப யோசிச்சிட்டு இருக்காம... கையோட அவளுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லிருங்க. கல்யாணம் ஏற்பாட்டை பண்ண ஆரம்பிச்சிடலாம். கடைசி பரிட்சை முடிஞ்சதும் அடுத்த ரயிலை புடிச்சு உடனே கிளம்பி வர சொல்லுங்க.

சாகர் போனை எடுத்து மைதிலிக்கு கால் செய்ய ஆரம்பித்தார்.

​[காட்சி அமைப்பு: கல்லூரியின் லஞ்ச் இன்டர்வல் நேரம். சாப்பிட்டுவிட்டு கேண்டீனுக்கு வெளியே வரிசையாக பைப்புகள் இருக்கும் நீளமான வாஷ் பேசினில் கைகழுவி கொண்டிருந்தாள் மைதிலி. (Dress: எளிய காட்டன் சல்வார் கமீஸ், ஒரு பின்னலுக்குள் அடங்கிய கூந்தல்).

சுற்றிலும் மாணவ மாணவிகளின் அரட்டையும் பலத்த சிரிப்பொலிகளும் கேட்கிறது. குழாயில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க, அவளது போன் பேக்கில் ரிங்டோனை வெளியிடுகிறது. டிஸ்ப்ளேயில் மின்னுவது 'சாகர் மாமா'வின் பெயர்.
​மைதிலி கைகளை கர்ச்சீப்பால் துடைத்துக் கொண்டே காலை அட்டென்ட் செய்கிறாள்.

போனை காதில் வைத்த நொடி—மறுமுனையில் சாகர் மாமா பதற்றமும் மிரட்டலும் கலந்து சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியாய் வந்து பாய்கிறது. அம்மாவின் ஆபத்தான நிலைமை... லட்சங்களில் ஆபரேஷன் செலவு... அதற்கு கைமாறாக மாமா போடும் கல்யாண நிபந்தனை!

கேமரா ஒரு மீடியம் குளோசபில் அவளது முகத்தை, குறிப்பாக அவள் கண்களை காட்டுகிறது. மறுமுனையில் சாகர் மாமா பேசுவது— தெளிவாக கேட்கவில்லை. அவர் பேசுவதை கேட்கும் மைதிலியின் முகபாவனை, அவளது கண்களில் ஏற்படும் மாற்றம், அதிர்ச்சி, வலி, பதட்டம்—இதுதான் பிரதானமாக காட்டப்படுகிறது.

அவள் 'ம்மா...' என்று மட்டும் மெதுவாக முணுமுணுக்கிறாள்.

​கேமரா மிக நெருக்கமாக அவளது முகத்தை நோக்கி, ஒரு ரஷ் (push-in) போல நகர்கிறது. சுற்றியிருந்த அத்தனை கல்லூரி இரைச்சல்களும்—சிரிப்பு, அரட்டை, தண்ணீரின் சத்தம்—சட்டென்று ஒரு மியூட் நிலைக்கு சென்று, ஒரு நிசப்தம் ஆட்கொள்கிறது. கேமரா அவளது கண்களை மட்டும் குவியப்படுத்துகிறது (Shallow depth of field). அவள் பின்னணியில் இருக்கும் மாணவர்கள் மங்கலான உருவங்களாக மாறுகிறார்கள்.

நடுக்கத்தில் அவள் கையில் இருந்த கர்ச்சீப் நழுவ... வாஷ் பேசினில் கர்ச்சீப் விழுந்து, தண்ணீரில் பட்டு, மெதுவாக தண்ணீரின் ஓட்டத்தில் மிதக்க ஆரம்பிக்கிறது. தண்ணீர் ஓட்டம், அதில் மிதக்கும் கர்ச்சீப்—இவை அவள் வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை குறிப்பது போல இருக்கின்றன.

மியூட் செய்யப்பட்டிருந்த கல்லூரியின் இரைச்சல்கள்—மாணவர்களின் பேச்சு, சிரிப்பொலிகள், தண்ணீரின் சத்தம்—மீண்டும் மெதுவாக, கேட்கத் தொடங்குகின்றன. சுற்றியிருக்கும் உலகம் அதன் போக்கில் இயங்க, மைதிலி மட்டும் அவளின் நிசப்த பிடியில், அதே அதிர்ச்சியில், விழிகள் வெறிக்க உறைந்து நிற்கிறாள்.

தொடரும்
​ 



   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 
ஜானகி மந்திரம் 34
 
 
சாகர் மாமாவின் போன்காலிற்கு பிறகு, மைதிலிக்கு கல்லூரி வளாகம் நரகமானது. வகுப்பறைக்குள் நுழைய பிடிக்கவில்லை. கால்கள் தன்னிச்சையாக லேடிஸ் ஹாஸ்டல் நோக்கி நடந்தன.
 
அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள். 'அம்மா...'—தொண்டைக்குள் ஏதோ ஒரு உருண்டை அடைத்தது. சத்தம் வரவில்லை. கைகளில் நடுக்கம். சுவரில் இருந்த காலண்டரில் கண்கள் நிலைத்தன. இந்த உலகத்தில் அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு புள்ளி. அவளது அம்மா.
​அங்கே அவர் உயிருக்கு தவித்துக் கொண்டிருக்கிறார். இங்கே அவளது கைகள் காற்றில் துழாவின. மேஜை மேல் இருந்த புத்தகங்கள், பேனாக்கள் எல்லாம் அர்த்தமற்று தெரிந்தன.
​'கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் ஆபரேஷன்...' மாமாவின் வார்த்தைகள் காதுக்குள் ரீங்காரமிட்டன. ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சுவரில் அடிக்க கையை ஓங்கினாள். கைகள் அந்த சுவரிலேயே உறைந்து பின் தளர்ந்தன. கையாலாகாத்தனம்.
​முழங்கால்கள் பலமிழந்து நடுங்கின. சுவரோரம் அப்படியே சரிந்தாள். முழங்கால்களுக்குள் முகம் புதைந்தது. தோள்கள் மட்டும் விம்மி விம்மி எழும்பின. அறைக்குள் அவளது அழுகையின் அதிர்வு மட்டும் மெலிதாக கேட்டது.
 
​மாலை. கல்லூரி முடிந்து அறைக்குள் நுழைந்த இந்துவும் சஞ்சுவும், மைதிலியின் நிலையை பார்த்துப் பதறினர்.
 
விசாரித்ததில் விஷயம் உடைந்தது. மாமாவின் மிரட்டலும், அம்மாவின் நிலையும் கேட்டு இருவருமே அதிர்ந்தனர். ஆனால், அடுத்த நொடியே அவளுக்கு அரணாக நிமிர்ந்து நின்றனர்.
 
​இந்து: "மைதிலி, நீ எதுக்கும் இப்போ கவலைப்படாத. இப்போதைக்கு அம்மாவோட ஹெல்த் மட்டும்தான் நமக்கு முக்கியம்."
 
​சஞ்சுவின் மூளை சாமர்த்தியமாக கணக்கு போட்டது.
 
​சஞ்சு: "அவங்க அம்மாவின் ஆபரேஷனையும் அதற்குண்டான செலவையும் வச்சி தானே மிரட்டுறாங்க? இப்போதைக்கு கல்யாணத்துக்கு ஓகே-ன்னு சும்மா தலையாட்டி வை. அப்பத்தான் அவங்க அம்மாவை ஒழுங்கா கவனிச்சு, ஆஸ்பத்திரியில சேர்த்து ஆபரேஷன் பண்ணுவாங்க."
 
​"ஆனா... சஞ்சீவ்..." மைதிலியின் அடிக்குரல் நடுங்கியது.
 
​இந்து: (குறுக்கிட்டு) "ஆபரேஷன் முடியட்டும். அவங்களுக்கு என்ன செலவாச்சோ, அந்தப் பணத்தை நாம எப்படியாச்சும் பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கலெக்ட் பண்ணி குடுத்துரலாம். கவலைப்படாதே. அதுக்கப்புறம் நீ அந்தப் பொறுக்கிப் பயலை கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியமே இருக்காது. நாங்க இருக்கோம், தைரியமா இரு."
​தோழிகளின் அந்த வார்த்தைகள், மைதிலிக்கு ஒரு பெரிய பிடிமானத்தை கொடுத்தன. அழுதுகொண்டிருக்க இது நேரமல்ல என்று அவளது புத்திக்கு உரைத்தது.
 
​சஞ்சு: "நீ முதல்ல போய் அம்மாவை பாத்துட்டு வா. கல்யாணத்தை பத்திக் கேட்டாங்கன்னா, எக்ஸாம் முடிந்ததுக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டு வா. அம்மாவுக்கு ஆபரேஷன் முடியட்டும், மிச்சத்தை அப்புறம் பாத்துக்கலாம்."
 
​தோழிகள் தந்த தைரியத்தில், மைதிலி தீர்மானமாக தலையசைத்தாள். ஊருக்கு கிளம்ப தயாரானாள்.
 
​மறுபக்கம்,
 
​பாபி ஹாஸ்பிடலிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து மூன்று வாரங்கள் ஓடிவிட்டன.
​அந்த ஆக்சிடென்ட்டில் அவனது வலது கால் முட்டிக்குக் கீழே இருக்கும் எலும்பில் (Tibia) பலத்த பிராக்சர். முட்டிக்கு மேல் தொடங்கி கணுக்கால் வரைக்கும் கனமான மாவுக்கட்டு போடப்பட்டிருந்தது. கழற்ற முடியாத கட்டோடு படுக்கையில் கிடப்பதே ஒரு நரகம். எழுந்து உட்கார வேண்டுமென்றால் கூடக் காலில் பாரம் அழுத்தும்.
 
​டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த பிறகும் அவனால் சாதாரண மனிதனை போல உடனே காலூன்றி நடக்க முடியவில்லை. கிரட்சஸ் எனப்படும் நடைக் கட்டைகளை ஊன்றி, பிராக்சரான வலது காலை சற்றே தரைக்கு மேலே தூக்கியபடி, இடது காலில் மட்டுமே பாரத்தை தாங்கி நொண்டி நொண்டித்தான் நகர முடிந்தது.
 
​இந்த இடைப்பட்ட நாட்களில், மனோவும் மற்ற நண்பர்களும் ஹாஸ்பிடலுக்கும் சரி, வீட்டிற்கும் சரி... அடிக்கடி வந்து பார்த்து விட்டுத்தான் போயிருந்தார்கள். ஆனால், படுக்கையில் கிடந்த பாபி சும்மா இருக்கவில்லை. சன்ஷைன் அவனுள் கனன்றுகொண்டே இருந்தாள்.
​வீட்டில் முடங்கி போரடித்த நாட்களில், அவன் சந்தீப்பிற்கு போன் போட்டான்.
 
​"டேய் சந்தீப்... லைப்ரரில அந்த 'ரோமியோ ஜூலியட்' புக்கை கடைசியா எடுத்துட்டு போனது கோமல்னு தெரிஞ்சிதுல்ல? அவளை தனியா பிடிச்சு ரகசியமா விசாரி. சன்ஷைனுக்கும் அவளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு எனக்கு தெரிஞ்சாகணும்" என்று அசைன்மென்ட் கொடுத்திருந்தான்.
 
கோமல் யார் என்று விசாரித்து, சந்தீப் பிகாம் டிபார்ட்மெண்டுக்கு சென்று, நைஸாக பேசி, விஷயத்தை கறந்துவிட்டு, பாபிக்கு தனது இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டை சமர்ப்பித்தான்.
 
​போனில் சந்தீப் சொன்ன விஷயம் இதுதான்:
​"பாபி, விஷயம் என்னன்னா... கோமல் பி.காம் பைனல் இயர் படிக்கிறா. அவ அந்த ரோமியோ ஜூலியட் புக்கை எடுத்தது அவளுக்காக இல்லையாம். அவளோட கிளாஸ்மேட் மைதிலிக்காக! நம்ம சிக்கி சுத்திட்டு இருந்தானே! அந்த மைதிலி! லைப்ரரி ரூல்ஸ்படி ஒருத்தருக்கு ரெண்டு டோக்கன் தான் தருவாங்க. மைதிலி அவளோட ரெண்டு டோக்கன்லயும் ஏற்கனவே வேற சப்ஜெக்ட் புக்ஸ் எடுத்துட்டாளாம். அதனால கோமலோட டோக்கனை வாங்கி, அவ மூலமா இந்த புக்கை எடுக்க சொல்லியிருக்கா."
 
​சந்தீப் இதை சொல்லி முடித்த அடுத்த நொடி, கட்டிலில் சாய்ந்து படுத்திருந்த பாபி, வலது கால் வலியையும் மீறி சட்டென விறைப்பாக எழுந்து உட்கார்ந்தான்! அவனது கண்கள் அகல விரிந்தன.
 
​மைதிலி! மைதிலி! மைதிலி!
 
​"bloody hell!!!... என்ன செக் பண்ணினாலும், கடைசியில் சுத்திச் சுத்தி இந்த மைதிலிகிட்ட வந்துதான் நிக்குதா?!" — பாபியின் மைண்ட் வாய்ஸ்.
 
​சன்ஷைன் பற்றி என்ன விசாரிச்சாலும், mostly மைதிலியிடம் வந்து தான் நிற்கிறது. ஒன்று, அவள்தான் சன்ஷைனாக இருக்க வேண்டும். அல்லது, சன்ஷைனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை!
 
​உடனே மொபைலை எடுத்து, அந்த சன்ஷைன் நம்பருக்கு கால் செய்து பார்த்தான். ரிசல்ட்? வழக்கம்போல்தான். பாதி நேரம் ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்தது; மீதி நேரம் ரிங் போய்க் கொண்டே இருந்தது, மொத்தத்தில் மறுமுனையில் கால் எடுக்கவில்லை.
 
​'நேரடியா காலேஜுக்கு போய் அவளை கையும் களவுமா பிடிக்கணும். அதுவரைக்கும் அமைதியா இருக்கணும்' — காலேஜுக்குப் போகும் நாளுக்காக பாபி வெறியோடு காத்திருந்தான்.
 
​குறிப்பிட்ட நாளும் வந்தது.
 
​சரியாக ஒன்றரை மாதங்களுக்கு பிறகு, பாபி ஒருவழியாக காலேஜ் வந்திருந்தான். 
 
காலேஜில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை அப்படியே தான் இருந்தது. ஒரே ஒரு மாற்றம், சிக்கி. மறுபடியும் பஜ்ரங் பலி அவதாரம் எடுத்திருந்தான். பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் பேசிக் கொண்டிருந்தால் இடையில் புகுந்து கட்டையை கொடுத்தான். ஆனால் இந்த முறை எவனுமே அவனை மதிக்கவில்லை. ஜூனியர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன் மட்டும் அவனுக்கு ஆதரவு தெரிவித்து," விடுங்க பாஸ்... இளைஞர்கள் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். ஒரு குவாட்டர் அடிச்சா சரியா போயிரும்" என்றான்.
 
பாபியை கண்டதும், மனோவும் அவனது ஒட்டுமொத்த நண்பர்கள் பட்டாளமும் ஓடிவந்து சூழ்ந்துகொண்டன. கட்டிப்பிடித்தும், கைகளை குலுக்கியும் நலம் விசாரித்தார்கள்.
 
​"எப்படிடா இருக்க?", 
"கால் இப்போ ஓகேவா பாபி?" "ரொம்ப இளைச்சி போயிட்டியேடா" 
"நாயே இன்னும் உயிரோட தான் இருக்கியா?"
 
பாச கேள்விகள் பறந்தன.
​அனைவருக்கும் சிரித்த முகத்துடன் நன்றி சொல்லி பதில் அளித்து கொண்டிருந்தானே தவிர, மனசுக்குள் மைதிலியை மீட் பண்ணும் சந்தர்ப்பத்தை தான் எதிர்நோக்கி காத்திருந்தான்.
 
மைதிலியிடம் எதையும் நேரடியாக விசாரித்து, நூறு சதவீதம் கன்பர்ம் செய்துகொண்டுதான் இந்த விஷயத்தை மனோவிடம் பேச வேண்டும் என்பதில் பாபி மிகவும் உறுதியாக இருந்தான். அரைகுறைத் தகவலோடு சொன்னால் சரியாக இருக்காது, அதுமட்டுமில்லாமல் சன்ஷைன் விஷயத்தில் மனோ எவ்வளவு எமோஷனலாக இருக்கிறான் என்பதும் அவனுக்கு தெரியும்.
 
 
​மதியம் லஞ்ச் இன்டர்வல் டைம்.
 
​நண்பர்களிடமிருந்து நைஸாக நழுவி, பி.காம் கிளாஸ் ரூம் இருக்கும் பிளாக்கிற்குள் நுழைந்தான். நேராக அவளது கிளாஸ் ரூமிற்குள்ளேயே புகுந்துவிட்டான்.
​அங்கே மைதிலியை காணவில்லை. இரண்டு கேர்ள்ஸ் சாப்பிட்டு கொண்டிருக்க, போன் பேசிக் கொண்டிருந்த கோமலிடம் பாபி நேராக சென்றான்.
 
"எக்ஸ்க்யூஸ் மீ, மைதிலி எங்கே?" என்று விசாரித்தான்.
 
​கோமல் நிமிர்ந்து பார்த்துவிட்டு, "அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு நேத்து நைட்டே அவசரமா ஊருக்கு கிளம்பிப் போயிட்டா..." என்ற தகவலை சொன்னாள்.
 
"எப்ப வருவாங்க தெரியுமா?"
 
"தெரியலையே?"
 
"கல்ச்சுரல் கிளப் சார்பா ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அவங்க போன் நம்பர் தெரியுமா?"
 
"போன் வச்சிருக்கா, ஆனா அவள் அவ்வளவா பயன்படுத்துவதில்லை.."
 
​பாபிக்கு ஏமாற்றமாக இருந்தது. வந்த வேகமெல்லாம் வடிந்துபோக, ஏமாற்றத்துடன் பின்வாங்கி நடந்தான்.
 
​அவன் சில அடிகள் எடுத்து வைத்தபோது, பின்னால் இருந்து கோமல், "ஒரு நிமிஷம்" என்று கூப்பிட்டாள்.
​பாபி திரும்பிப் பார்த்தான்.
 
​"மைதிலிக்கு போன் இல்லனாலும்... அவளோட ரூம்மேட்ஸ் சஞ்சனா or இந்துமதி கிட்ட விசாரிச்சீங்கன்னா அவளை காண்டாக்ட் பண்ற ஏதாச்சும் ஆல்டர்நேட்டிவ் டீடைல்ஸ் கிடைக்கலாம்" என்று ஒரு க்ளூ கொடுத்தாள் கோமல்.
 
​அடுத்த நொடி, பாபிக்கு உள்ளுக்குள் பளிச்சென்று ஒரு பல்பு எரிந்தது.
 
"​சே! இந்த விஷயத்தை இவ்வளவு நாள் எப்படி கோட்டை விட்டேன்? "
 
பாபியின் உள்மனசு அவனது கவனக்குறைவை காறி துப்பியது. என்ன செய்ய வேண்டுமென அவசர கணக்குகள் போட்டான்.
 
​பாபி அவளை பார்த்து, "தேங்க்ஸ்..." என்று சொல்லிவிட்டு உற்சாகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். இவ்வளவு நாள் குழப்பத்திற்கு விடை கண்டுபிடித்து விடலாம் என்கிற ஆர்வம் அவனது மூளையை சுறுசுறுப்பாக்கியது.
 
மைதிலி தன்னை சுற்றலில் விட்ட கடுப்பில் மனசுக்குள்ளே சொல்லிக் கொண்டான்: "மைதிலிதான் சன்ஷைனா இல்லையான்னு இந்த அட்டம்டுல 100% தெரிஞ்சுரும்! அதுக்கப்புறம் இருக்கு உனக்கு..."
 
​அதே நேரம்,
 
காலேஜ் ஆடிட்டோரியத்தில் ஸ்ரேயா அண்ட் குரூப், கல்ச்சுரல் கிளப்பின் கடைசி நாடகமாக சீனியர்கள் ஃபேர்வெல் டிராமா பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்கள். உலகப் புகழ்பெற்ற 'ரபுன்செல்' (Rapunzel) கதையைத்தான் பட்டி டிங்கரிங் பார்த்து சின்ன ஸ்கிட் மாதிரி ரெடி செய்து, ரிகர்சல் பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரேயா.
[உலகப் புகழ்பெற்ற இந்த கதையின் நாயகி-- ரபுன்செல். பிறக்கும்போதே ஒரு மாந்திரீகக் கிழவியால் கடத்தப்பட்டு, வழிகளோ, கதவுகளோ இல்லாத ஒரு பிரம்மாண்டமான கோபுரத்தின் உச்சியில் சிறைவைக்கப்படுகிறாள். அவளுக்கு தரைவரை நீளும் அசாத்தியமான நீளமான கூந்தல் உண்டு. கீழே வரும் கிழவி, "ரபுன்செல்... உன் கூந்தலை கீழே விடு!" என்று கத்தினால், அவள் தன் முடியை ஜன்னல் வழியே கயிறு போலக் கீழே தொங்கவிடுவாள். அதைப் பிடித்து ஏறிதான் கிழவி மேலே வருவாள்.
 
​ஒருமுறை இதை மறைந்திருந்து கவனிக்கும் ஓர் இளவரசன், அதேபோல் குரல் கொடுத்து ரபுன்செலின் கூந்தல் ஏணியில் ஏறி அவளை சந்திக்கிறான். இருவருக்கும் காதல் மலர்கிறது. ஒருகட்டத்தில் இவர்கள் காதல் சமாச்சாரம் கிழவிக்கு தெரியவர, ரபுன்செலின் கூந்தலை அடியோடு கத்தரித்து அவளை காட்டுக்கு துரத்திவிடுகிறாள். பிறகு, அந்தக் கத்தரித்த கூந்தலின் ஒரு முனையை ஜன்னல் கொக்கியில் இறுக்கமாகக் கட்டிவிட்டு கிழவி கோபுரத்திற்குள்ளேயே காத்திருந்தாள்.
 
​வழக்கம்போல இளவரசன் கீழே வந்து குரல் கொடுத்தான். மேலே இருக்கும் கிழவி, கத்தரித்த அந்த நீண்ட கூந்தலை ஜன்னல் வழியே கீழே தொங்க விட்டாள். அதை ரபுன்செலின் கூந்தல் என்று நம்பி, இளவரசன் ஆசையோடு பிடித்து மேலே ஏறி ஜன்னல் அருகே வந்தான்.
 
​அங்கே ரபுன்செலுக்கு பதிலாக மாந்திரீகக் கிழவி நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். கிழவி வன்மத்தோடு சிரித்தபடி, அவனது முகத்திற்கு நேரே கைகளை வீசி மிரட்ட, அந்த திடுக்கிடலிலும் அதிர்ச்சியிலும் நிலைகுலைந்த இளவரசன், கையில் இருந்த கூந்தல் பிடி நழுவி, நிலைதடுமாறி கோபுரத்தின் உச்சியிலிருந்து அப்படியே தலைகுப்புறக் கீழே விழுந்துவிடுவான்.
​அப்படிக் கீழே விழும்போது, கோபுரத்தின் கீழே முளைத்திருக்கும் கூர்மையான முள் புதர்களில் அவனது கண்கள் குத்தி, அவன் தன் பார்வையை இழக்க நேரிடும். அதன் பிறகு கொஞ்ச நாள் pathos தான். நீண்ட தேடலுக்கு பிறகு ரபுன்செலின் குரலை கண்டுபிடிக்கும் இளவரசன், அவளை சேர்கிறான். ரபுன்செலின் அன்புக் கண்ணீர் அவன் கண்களில் பட, மீண்டும் பார்வை பெற்று இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். இதுதான் அசல் கதை.]
 
​மேடையில் அந்த அழகான ரபுன்செல் கேரக்டராக தன்னையும், கோபுரத்தின் கீழே நின்று அவளுக்காக உருகும் அந்த இளவரசன் கேரக்டராக மனோவையும் மறைமுகமாக சித்தரிக்க சொல்லி, ஒரு எழுத்தாளரிடம் பணம் கொடுத்து எழுதி வாங்கி இருந்தாள் ஸ்ரேயா. மேடையில் மனோவும் தனக்குமான காதலை மாணவர்களுக்கு உணர்த்த இதைவிடப் பெரிய சந்தர்ப்பம் கிடைக்காது என்று அவளது எலைட் மூளை கணக்கு போட்டிருந்தது.
 
​உண்மையில், சும்மா சும்மா தன் பின்னாலேயே சுற்றிக் கொண்டும், போன் பண்ணிக் கொண்டும், கடுப்பேத்தி கொண்டிருக்கிறாளே என்று, அவளது டார்ச்சரிலிருந்து தப்பிக்கத்தான் மனோ அவளைக் கூப்பிட்டு, "இந்த ஃபேர்வெல் டிராமாவை நீதான் முன்னாடி நின்னு நடத்தணும் ஸ்ரேயா" என்று இந்த வேலையைக் கொடுத்து ஒதுக்கியிருந்தான்.
​ஆனால் ஸ்ரேயாவோ, 'மனோவே தன்னை ஸ்பெஷலாக கூப்பிட்டு டிராமா செய்ய சொல்லிவிட்டான்' என்று தப்பாக புரிந்து கொண்டு, உலக மகா உற்சாகத்தில் ஆடிட்டோரியத்தையே அலற விட்டுக் கொண்டிருந்தாள்.
 
​மேடையில் சலோனியும் பிரணவியும் ஜூனியர்களை விரட்டி பேக்கிரவுண்ட் செட்டிங்ஸ்களை ரெடி பண்ணிக் கொண்டிருக்க, ஸ்ரேயா கையில் ஸ்கிரிப்ட் பேப்பரோடு முழு எனர்ஜியில் கத்தினாள்:
 
​"ஹேய்... அந்த டவர் செட்டிங்ஸை இன்னும் கொஞ்சம் ஹைட்டா வைங்க! இளவரசன் என் முடியைப் பிடிச்சு ஏறி வர்ற சீன்ல லைட்டிங்ஸ் அப்படியே எஃபெக்டிவா இருக்கணும். மனோ இந்த சீனை பார்க்கும்போது, எனக்கும் அவனுக்குமான கெமிஸ்ட்ரி என்னன்னு அவனுக்கு தெளிவா புரியணும், அண்டர்ஸ்டாண்ட்?"
 
அவள் கத்தி முடித்த அதே விநாடி, ஆடிட்டோரியத்தின் பிரம்மாண்டமான கதவுகள் மெல்லத் திறந்தன.
​அங்கே, மனோ உள்ளே நுழைந்தான். அவனை கண்டதும் ஸ்ரேயாவின் கண்களில் ஒரு பளபளப்பு. 'நம்மைப் பார்க்கத்தான் வந்திருக்கிறான்' என்கிற மிதப்போடு, கையில் இருந்த ஸ்கிரிப்ட் பேப்பரை சுருட்டியபடி, மேடையை விட்டு இறங்கி அவனிடம் பேச நேராக நடந்தாள்.
 
​அவனது பாதையை மறிப்பது போல் நின்றவள், "ஹாய் மனோ... டிராமா ரிகர்சல் பெர்பெக்டா போயிட்டு இருக்கு தெரியுமா? இந்த ரபுன்செல் ஸ்கிட் தான் கல்ச்சுரல் கிளப்போட பெஸ்ட்டா இருக்கும்..." என்று உற்சாகமாகப் பேச தொடங்கினாள்.
 
​ஆனால், அவனது மொத்த கவனமும் வேறு இடத்தில் இருந்தது. இரண்டு நாட்களாக சன்ஷைனிடமிருந்து ஒரு போன் காலோ, மெசேஜோ வரவில்லை. அவள் போன் சுவிட்ச் ஆஃப். நெஞ்சுக்குள் தேங்கியிருந்த ஏக்கம், அவனது முகத்தில் கவலையை ஏற்றியிருந்தது.
 
​ஸ்ரேயா பேசி முடிக்கும் முன்பே, அவளது முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல், "நைஸ்..." என்று மெக்கானிக்கலாக ஒரே ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்தான்.
 
​அடுத்த நொடி, அவளை கடந்து விறுவிறுவென்று ஆடிட்டோரியத்தின் பின்னால் இருந்த கிரீன் ரூமை நோக்கிச் சென்றான். உள்ளே நுழைந்தவன், அடுத்தவர்களின் சத்தம் எதுவும் தன் தனிமையை கலைத்துவிடக் கூடாது என்பது போல, ‘டக்’கென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டான்.
 
​ஒட்டுமொத்த குரூப் முன்னாடியும் மனோ தன்னை ஒரு தூசியாக கூட மதிக்காமல், ஏதோ கடமைக்கு ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போனதில் ஸ்ரேயாவுக்கு அவமானம் தலைக்கேறியது. முகம் ஆத்திரத்தில் சிவக்க, கையில் இருந்த ஸ்கிரிப்ட் பேப்பரை வெறியோடு தன் கைகளுக்குள் சுருட்டிப் பிசைந்தாள்.
 
மறுநாள் காலை 11 மணி
 
​வகுப்பிற்கு போகாமல் சஞ்சுவும் இந்துவும் லைப்ரரி பில்டிங்கை நோக்கி பதட்டமாக ஓடி வந்தார்கள். பாபிதான் அவர்களுக்கு SMS அனுப்பியிருந்தான். நேற்று மதியமே இவர்களது கிளாஸ் ரெப்பிற்கு ஒரு மாதத்திற்கான மொபைல் ரீசார்ஜ் கூப்பனை ஸ்பான்சர் செய்வதாக பாபி ஆசை காட்ட, அவளும் அடுத்த நொடியே இவர்களின் மொபைல் எண்களை அவனிடம் தாராளமாக ஒப்படைத்துவிட்டாள்.
 
​பாபி இருவருக்கும் அனுப்பி இருந்த மெசேஜ் இதுதான்:
 
​"Hi sunshine friends... Neenga rendu perum konjam library building 11 o'clock vara mudiyuma? Need to talk something important."
 
​"அடப்பாவி... கண்டுபிடிச்சுட்டானோ?"—இருவருக்குள்ளும் பயம் பற்றிக்கொண்டது. உச்சக்கட்ட டென்ஷனில் அவர்கள் லைப்ரரி பில்டிங்கை அடைந்தபோது, பில்டிங் வரண்டா முன்னாலயே காத்திருந்தான் பாபி. அவனது கையில் ஏதோ ஒரு பிரிண்ட் அவுட் பேப்பர் இருந்தது.
 
அவர்களை பார்த்ததும் பாபியின் முகத்தில் ஏகத்துக்கு எகத்தாளம்.
 
​"வாங்க சன்ஷைன் பிரண்ட்ஸ்... நீங்கதானே அவளோட பார்ட்னர்ஸ்? இன்னும் எவ்வளவு நாள்தான் இப்படி ஏமாத்தலாம்னு ஐடியா வச்சிருக்கீங்க?" என்று சற்றே கடுப்பான குரலில் கேட்டான்.
​அவர்கள் பதில் பேசாமல், எதுவும் தெரியாதது போல் அவனை ஆச்சரியத்துடனும் குழப்பத்துடனும் பார்க்க, சஞ்சுதான் முதலில் சுதாரித்துக் கொண்டு பேசினாள்.
 
​"பாபி, நீ என்ன பேசுறேன்னு எங்களுக்கு புரியல... கொஞ்சம் புரியிற மாதிரி சொல்லு" என்று நைஸாக சமாளித்தாள்.
 
​பாபி அசரவில்லை. "ரொம்ப நடிச்சு சிரமப்படாதீங்க சஞ்சு. நான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சுட்டேன். மைதிலிதான் சன்ஷைன்!"
 
​சஞ்சுவும் இந்துவும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 514
 
ஜானகி மந்திரம் 34 A
 
பாபி கையில் இருந்த பிரிண்ட் அவுட் பேப்பரை அவர்கள் முன்னால் விசிறி விட்டான்.
 
​"சன்ஷைனோட நம்பர் எனக்கு ஏற்கனவே தெரியும். அவ அந்த நம்பர்ல இருந்து மொத்தம் மூணு பேருக்கு மட்டும்தான் அடிக்கடி கால் பண்ணியிருக்கா. ஒண்ணு நீங்க ரெண்டு பேரு... இன்னொன்னு மஞ்சார் ஏரியாவில் ஒரு லேண்ட்லைன் நம்பர்! ஏர்டெல் நெட்வொர்க் ஆபீஸ்ல வேலை செய்யுற என் பிரண்ட்கிட்ட சொல்லி, உங்க ரெண்டு பேரோட கால் ஹிஸ்டரியை எடுத்துட்டேன். அது அப்படியே சன்ஷைனோட கால் டீடைல்ஸோட மேட்ச் ஆகுது. என்னை பொறுத்தவரைக்கும் மைதிலிதான் சன்ஷைன்ங்கறதுக்கு இதைவிட பெரிய ஆதாரம் தேவையில்லை. ஒருவேளை அப்படி இல்லன்னா கூட, அந்த சன்ஷைன் யாருங்கறது உங்களுக்கு 100% நிச்சயமா தெரிஞ்சிருக்கணும். இப்போவாவது உண்மையை சொல்லப் போறீங்களா... இல்ல, நான் நேரா மனோகிட்ட போய் இந்த ஆதாரம் எல்லாத்தையும் காட்டி, நான் என்ன பண்ணணுமோ அதை பண்ணிக்கட்டுமா?" என்று கோபத்தில் கொந்தளித்தான்.
 
​இந்து பயத்தை மறைத்து கொண்டு, "இல்ல பாபி... நீங்க ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறீங்க..." என்று மீண்டும் சமாளிக்கப் பார்த்தாள்.
 
​"போதும் நிறுத்துங்க! இன்னும் உங்ககிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ண விரும்பல..." என்று அவர்களை கட் பண்ணிவிட்டு, விறுவிறுவென்று நகரத் தொடங்கினான் பாபி.
 
அவனது வேகத்தைப் பார்த்த சஞ்சுவுக்கும் இந்துவுக்கும் அதற்கு மேல் பொய் சொன்னால் நிலைமை கைமீறிப் போய்விடும் என்பது புரிந்துவிட்டது. மனோவிடம் இந்த விஷயம் தவறான கோணத்தில் போனால் மொத்தக் காதலும் சுக்குநூறாகிவிடும்.
 
​"பாபி... ஒரு நிமிஷம் நில்லு please! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..." என்று சஞ்சு கெஞ்சலான குரலில் பின்னாடி ஓடிவந்து அவனது கையை பிடித்தாள்.
 
​பாபி நின்று அவளை திரும்பிப் பார்த்து,
 
"இப்பவாது உண்மைய சொல்லுங்க. தேவையில்லாத விஷயங்கள் பேசி என் நேரத்தை வீணடிக்காதீங்க.." என்றான்.
 
சஞ்சு: நான் சொல்லப்போறத கொஞ்சம் பொறுமையா கேளு... என்று ஆரம்பித்து, முதலில் இருந்து என்ன நடந்ததென்று அத்தனை விஷயங்களையும் வரிசையாக சொன்னாள். அவள் சொல்லச் சொல்ல பாபியின் முகத்தில் திகைப்பு, ஆச்சரியம், நம்ப முடியாத தன்மை என அத்தனை உணர்ச்சிகளும் மாறி மாறிப் பிரதிபலித்தன. 
 
சஞ்சு உணர்ந்து பேச, இந்துவும் இடையில் சில புள்ளிகளை இணைக்க... இருவருமாக மாற்றி மாற்றி விஷயத்தை சொல்லி முடிப்பதற்குள் ஐந்து நிமிடங்கள் ஓடியிருந்தன.
 
நடந்த உண்மை அத்தனையையும் கொட்டி முடித்த பிறகு, சஞ்சு ஒரு நீண்ட பெருமூச்சோடு தொடர்ந்தாள்:
​"மைதிலி கொஞ்சம் கூட இதை எதிர்பார்க்கல பாபி. அவ chat பண்ண ஆரம்பிச்ச போது, அவன் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த பையனா இருப்பான், தன்னை மாதிரிதான் இருப்பான், பிரெண்ட்லியா பேசலாம், அதுக்கு மேலே போக வாய்ப்பில்லைன்னு நினைச்சுட்டுத்தான் பேசினாள். ஆனா மனோ முழுசா இன்வால்வ் ஆகி, தன் மனசையே பறி கொடுக்கிற அளவுக்கு போவான்னு அவ சத்தியமா எதிர்பார்க்கல. அதுவும், எதிர்முனையில பேசுறது நம்ம காலேஜ் மனோதான்னு தெரிஞ்சதும் அவளுக்கு எப்படி இருந்திருக்கும்? அவள மாதிரி எங்களுக்கும் செம ஷாக்! என்ன பண்றதுன்னே தெரியல... இது உண்மையா, மனோ நிஜமாதான் லவ் பண்றானா, அவனோட ரேஞ்சுக்கு இதெல்லாம் உண்மையா இருக்க முடியுமா, இல்ல மத்த பசங்க பண்ற மாதிரி சும்மா ஜாலிக்கு ஓட்டுறானான்னு தெரிஞ்சுக்கவே எங்களுக்கு கொஞ்ச நாளாச்சு. அது உண்மைதான்னு தெரிஞ்ச பிறகு, மைதிலி தன்னை வெளிப்படுத்திக்க விரும்பல..."
அதன் பிறகு இந்து தொடர்ந்தாள். அவளது குரலில் தோழிக்கான தவிப்பு அப்பட்டமாக தெரிந்தது:
 
​"அதுக்குக் காரணம், அவ மனோவை பத்தி கவலைப்பட்டதால் தான் பாபி. காலேஜ்ல அவன் எவ்வளவு பெரிய ஹீரோவா இருக்கான்! அவன் கூட எந்த வகையிலயும் இவளுக்கு பொருத்தம் கிடையாதுன்னு அவளே நினைச்சுக்கிட்டா. உண்மையை அப்படியே மறைச்சி ஒதுங்கிரலாம்னு முடிவு பண்ணினா. ஆனா மனோ தான் விடல்லை, தொடர்ந்து மெசேஜ் பண்ணி, போன் பண்ணி, ரிலேஷன்ஷிப்பை கண்டினியூ பண்ண வச்சிட்டான். ஒரு தடவை அவனை சந்திச்சிரலாம்ன்னு கூட முடிவு பண்ணிட்டா. அந்த சமயத்துல தான் மனோ பர்த்டே சம்பவம் நடந்துச்சு. அவன் கூட எடுத்துகிட்ட போட்டோவை ஜூனியர் பொண்ணு ஒருத்தி சாட் குரூப்ல போட்டு எவ்வளவு பெரிய troll ஆச்சு. உனக்கே தெரியும் தானே. சும்மா போட்டோ போட்டதுக்கே இவ்வளவு கிண்டல்னா... மனோ லவ் பண்றதே அப்படிப்பட்ட ஒரு சுமாரான, அழகு இல்லாத, வசதி இல்லாத, அவனுக்கு எந்த வகையிலயும் பொருத்தம் இல்லாத ஒரு பொண்ணுன்னு இந்த காலேஜுக்குத் தெரிஞ்சா எவ்வளவு ட்ரால் வரும்? மைதிலியை கிண்டல் பண்ணுனா கூட அவ தாங்கிருவா... கேலிகள் கிண்டல்களை பார்த்தே வளர்ந்தவள் அவள். ஆனா அவளை வச்சு மனோவை கிண்டல் பண்ணுவாங்களே! அதை நினைச்சுத்தான் அவ இன்னி வரைக்கும் தன்னை வெளிப்படுத்திக்காம அப்படியே இருந்துட்டா பாபி..."
 
இரண்டு தோழிகளும் மாறி மாறி மைதிலி தரப்பு நியாயத்தையும், குடும்ப சூழ்நிலையையும், எவ்வளவு பாசக்காரி என்பதையும் அவனுக்கு விளக்கினார்கள்.
 
​எல்லாவற்றையும் உறைந்து போய் கேட்டுக் கொண்டிருந்த பாபிக்கு, அதுவரை மைதிலி மேல் இருந்த அத்தனை சந்தேகங்களும், எரிச்சலும் ஒரு நொடியில் காணாமல் போயின. 
 
'இவ்வளவு நல்லவளா அவள்? இத்தனை நாளா மனோவோட இமேஜுக்காகவும், பேருக்காகவும்தான் இவ்வளவு பெரிய உண்மையை மனசுக்குள்ள பூட்டி வச்சிருக்காளா...' — பாபி அவளது காதலின் ஆழத்தை புரிந்து கொண்டு அவளது பக்கம் சைடு வாங்கினான்.
 
தன் தலையை கோதி கொண்டு, மனோ தரப்பை விளக்கினான்.
 
"மைதிலி நினைக்கிற மாதிரியோ... இல்ல, நீங்க நினைக்கிற மாதிரியோ எதுவும் கிடையாது. மனோ அப்படிப்பட்டவன் இல்ல. அவன் ரொம்ப சின்சியரா லவ் பண்றான். பக்கத்துலேயே இருந்து இவளை நெனச்சு அவன் தவிக்கிறத பார்த்ததுனால சொல்றேன். ஊரு பேரு தெரியாத, முகத்தை பார்க்காத ஒரு பொண்ணை இவ்வளவு வெறித்தனமா லவ் பண்றானேன்னு எங்களுக்கெல்லாம் கூட ஆச்சரியமாத்தான் இருந்துச்சு. இப்போ நீங்க சொல்ல சொல்லத்தானே மைதிலியை பத்தி எனக்கு முழுசா தெரிய வருது... இப்படி ஒரு பாசக்காரியை பார்த்தா எவனா இருந்தாலும் லவ் பண்ண தான் செய்வான். ஆனா ஒண்ணு, மனோ ஒரு விஷயத்துல மனசு வச்சுட்டானா, அதன் பிறகு எப்பவுமே பின்வாங்க மாட்டான். எனக்கு நல்லா தெரியும். மத்தவங்க பேசுறதை பத்தி நமக்கு என்ன? ஊர் வாயை மூட முடியாது! சன்ஷைனை பார்க்காம மனோ எவ்வளவு ஃபீல் பண்றான் தெரியுமா? நான் இப்போவே போய் எல்லா விஷயத்தையும் மனோகிட்ட சொல்றேன். இந்த லவ் மேட்டரை நான் பேசி முடிச்சு வைக்கிறேன்!" என்று தீர்மானமாக சொன்னான்.
 
​பாபி அப்படி சொன்னதும், சஞ்சுவுக்கும் இந்துவுக்கும் நிம்மதி பெருமூச்சு. இவ்வளவு நாள் தங்களுக்குள் மட்டுமே இருந்த பாரத்தை, பயத்தோடவே பூட்டி வச்சிருந்த ரகசியத்தை, மனோவோட பெஸ்ட் பிரண்டு கிட்டயே ஷேர் பண்ணிக்கிட்டது அவங்களுக்கு பெரிய தெம்பை கொடுத்தது. 
 
ஆனாலும் சஞ்சு சட்டென அவனது கையை பிடித்து தடுத்தாள்.
 
​"ஒரு நிமிஷம் பாபி... அவசரப்படாத. அதுல இன்னொரு பெரிய பிரச்சனையும் இருக்கு. சன்ஷைன் விஷயம் இப்போ ஸ்ரேயாவுக்கும் தெரிஞ்சிருச்சு. சன்ஷைனோட நம்பரை வச்சுக்கிட்டு, ஹாஸ்டல் பூராவும் அது யாருன்னு ரகசியமா விசாரிச்சுட்டு இருக்கிறதை நாங்க கேள்விப்பட்டோம். மைதிலிதான் சன்ஷைன்ங்கற விஷயம் மட்டும் இப்போ ஸ்ரேயாவுக்கு தெரிஞ்சதுன்னா, அவ குட்டையை குழப்பி, இந்த லவ் மேட்டரையே கலைச்சு விட்டுருவா. அவ உள்ளுக்குள்ள ரொம்ப வெறி புடிச்சவ. மனோவுக்கும் மைதிலிக்கும் ஏதாவது ஆபத்தைக் கூட ஏற்படுத்தலாம்..."
 
​பாபி நம்ப முடியாமல் புருவத்தை சுருக்கினான். "ஸ்ரேயாவா?"
 
​"ஆமா பாபி... ஹாஸ்டல்ல ரொம்ப நாளா DSG கேர்ள்ஸ் பாலிடிக்ஸ் ஓடிட்டு இருந்தது உனக்கே தெரியும் தானே. நாங்க ரெண்டு பேரும்தான் மைதிலி கொடுத்த ஐடியா படி, பங்களா பார்ட்டியை போலீஸ்ல மாட்டி விட்டு அவளை அடக்கி வச்சோம். இது எல்லாத்துக்கும் காரணம் நாங்கதான்ங்கற ஒரு பலமான சந்தேகம் அவளுக்கும் இருக்கு. அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல எங்களை அடிக்க ஆள் செட் பண்ணது கூட அவளாத்தான் இருக்கும்னு நாங்க நினைக்கிறோம். அவள போட்டு பார்த்தது நாங்கதான்னு இன்னும் உறுதியாக தெரியாததுனால தான் அவ இதோட சும்மா இருக்கிறா, இல்லன்னா இந்நேரம் எங்க சோலி முடிஞ்ச்... சன்ஷைன்ங்கறவ எங்களுக்கு வேண்டப்பட்ட ஆளாத்தான் இருக்கணும்னு அவளோட கணக்கு. ஹாஸ்டல்ல எங்கள சுத்தி வலை விரிச்சுக்கிட்டே தான் இருக்கிறாள். ஆனால் இதுவரைக்கும் அவளுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கல. இந்த நேரத்துல உண்மை வெளியில வந்துச்சுன்னா, அவ எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்த்து எங்களையும் மைதிலியையும் ஒரு வழி பண்ணிருவா, ஏன் மனோவுக்கு கூட தான் ஆபத்து" என்றாள் சஞ்சு.
 
பாபி இளக்காரமாக சிரித்தான். 
"அவளெல்லாம் ஒரு ஆளுன்னு பயந்துட்டு இருக்கீங்களா நீங்க? விடுங்க... நாங்க பார்த்துக்கிறோம்!"
 
இந்து அவசரமாக குறுக்கிட்டாள்: "இல்ல பாபி... எல்லா விஷயத்தையும் யோசிச்சுத்தான் மைதிலி அமைதியா இருக்கா. அவ சொன்ன காரணங்களை புரிஞ்சிட்டு தான் நாங்களும் அதுக்கு ஒத்துக்கிட்டோம். காலேஜ் முடியறதுக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு. செமஸ்டர் எக்ஸாமும் ஆரம்பிக்கப் போகுது. இவ்வளவு நாள் பல்லை கடிச்சுக்கிட்டு பொறுமையா இருந்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தா எக்ஸாம் முடிஞ்சிரும். அதன் பிறகு எல்லாரும் ஆளுக்கு ஒரு பக்கமா போயிருவாங்க. ஸ்ரேயாவும் கேம்பஸ்குள்ள இருக்கிற வரைக்கும் தான் ஆட்டம் போடுவா, அதன் பிறகு அவ வேலைய பாக்க போயிருவா. அதுக்கப்புறம் சன்ஷைன் யாருன்னு மனோவுக்கு தெரிஞ்சா, பசங்களுக்கு தெரிஞ்சா, யாரும் அதைப்பத்தி பெருசா கவலைப்படப் போறதில்ல, கோர்ஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் ஸ்ரேயாவும் அதை ஒரு பொருட்டா எடுத்துக்க மாட்டாள். யாரும் ட்ரால் பண்ணவும் முடியாது. மைதிலி நினைக்கிறதுலயும் ஒரு நியாயம் இருக்கத்தானே செய்யுது? ப்ளீஸ் பாபி... அவளுக்காக, மனோவுக்காக, தயவுசெய்து ஒரு வாய்ப்பு கொடு... ஆனது ஆச்சு, இன்னும் 20 நாள் தானே, வெயிட் பண்ணிதான் பார்ப்போமே" என்று கையெடுத்து கெஞ்சினாள்.
 
பாபி யோசனையாக அவர்கள் இருவரையும் பார்த்தான்.
 
​சஞ்சுவின் கண்கள் இப்போது பனித்திருந்தது. "எல்லா விஷயத்தையும் யோசிச்சுத்தான் மைதிலி பொறுமையா இருக்காளே தவிர... மனோவை கஷ்டப்படுத்தணும்னோ, இல்ல, அவனை அலைய விடணும்னோ அவளோட நோக்கம் கிடையாது பாபி. அடுத்தவங்களுக்கு கெட்டது நினைக்கணும்னு அவ கனவுல கூட நினைக்க மாட்டா. அப்படி இருக்கிறப்போ, அவ உயிருக்கு உயிரா காதலிக்கிற மனோவுக்கு அவ எப்படி கெட்டது நினைப்பா? அதுமட்டுமில்லாம... இந்த மாதிரி ஒரு உண்மையான காதலை நாம வேற எங்கேயாச்சும் பார்த்திருக்கோமா? I swear, Bobby... I’ve never seen a love as real as this in such a long time! மூணாம் மனுஷங்க, நாம போய் பேசி சேர்த்து வைக்கிறது இந்த காதலுக்கு பெருமை சேர்க்காது. அவங்களாவே ஒண்ணு சேரணும்... அவங்க காதல் அவங்களை சேர்த்து வைக்கும்ன்னு நம்புறேன். அதுதான் இந்த காதலுக்கு மரியாதை..." என்று நாத்தழுதழுக்க பேசினாள்.
 
இந்துவின் கண்களிலும் நீர் திரை.
"ஆமா பாபி... ரெண்டு பேரும் எவ்வளவு உண்மையா காதலிக்கிறாங்கன்னு நாம பக்கத்துல இருந்து பார்த்துட்டே தான் இருக்கோம். அதுக்காகவாவது கொஞ்சம் பொறுமையா இருக்க கூடாதா? அம்மாவுக்கு ஆப்ரேஷன் பண்ற விஷயமா அவ ஊருக்கு போய்ருக்கா.திரும்பி வரட்டும். நாம இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம் ஆனால் என்ன நடக்குதுன்னு கவனிச்சுக்கிட்டு இருக்கலாம். அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கையில ஒண்ணு சேரணும்... அதை நாம பார்க்கணும் பாபி!"
அவள் குரலும் தழுதழுத்து உடைந்தது.
 
பாபிக்கு அவர்களின் தூய்மையான நோக்கமும், நட்பும் நன்றாகவே புரிந்தது. அதற்கு மேல் அவனால் கேள்வி கேட்க முடியாமல் மௌனமாக நின்றான். அவர்கள் சொன்ன அத்தனை விஷயங்களையும் மூளைக்குள் போட்டு அலசினான். அவர்கள் சொல்வதில் நூறு சதவீதம் நியாயம் இருக்கத்தான் செய்தது.
 
​ஒரு சில நிமிடங்கள் அங்கே மௌனமே கவிழ்ந்திருந்தது. லைப்ரரி பில்டிங்குள் இருக்கும் இன்டர்நெட் சென்டருக்கு மாணவர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள்.
 
கொஞ்ச நேரம் கழித்து, பாபி முகத்தில் ஒரு தெளிவான புன்னகை மலர்ந்தது. 
 
மைதிலி மனோவுக்காகத்தான் இவ்வளவு தூரம் பின்வாங்கியிருக்கிறாள் என்பது புரிந்தபோது, பாபிக்கு வியப்பு. இதுவரைக்கும் மனோ லவ்வை தான் பெருசாக நினைத்து இருந்தான். இப்போது மைதிலியின் காதலும் பெரியதாக தெரிந்தது. கூடவே, தோழிக்கு எல்லா விதத்திலும் துணையாக நிற்கும் சஞ்சுவும் இந்துவும்....
 
​'கிரேட் கேர்ள்ஸ்' என்று நினைத்துக் கொண்டான். அவர்கள் மேல் ஒரு மரியாதை வந்தது.
 
இருவரையும் ஏறிட்டு பார்த்தான்.
 
​"நீங்க சொல்றது சரிதான்... இப்போதைக்கு குட்டையை குழப்பாம அப்படியே 'Go with the flow' ன்னு விட்டுறதுதான் நல்லது. நான் மனோகிட்ட எதையும் சொல்ல போறதில்லை. உங்களை மாதிரியே நானும் அவங்க வாழ்க்கையில ஒண்ணு சேர்ற தருணத்தை எதிர்பார்த்து பார்த்துக்கிட்டே இருப்பேன். நானா சொல்ல மாட்டேன். இப்போ உங்களுக்கு சந்தோஷமா?"
 
இருவரும் புன்சிரிப்புடன் கண்ணீர் மல்க தலையாட்டினார்கள்.
 
பாபி: "ஆமா, இப்ப நல்லா மண்டைய மண்டைய ஆட்டுங்க.. இந்த விஷயத்துல, மண்ட காய வச்சி யார் இந்த சன்ஷைன்னு என்னை அலைய விட்டுட்டீங்களே! சரி போட்டும். ஆனா ஒரு விஷயம், உங்களை போல நல்ல பிரண்ட்ஸ் கிடைச்சது மைதிலி செஞ்ச புண்ணியம்... I'm proud of you guys!" என்று மனசார பாராட்டி கைகுலுக்க தன் கையை நீட்டினான்.
 
சஞ்சுவும் இந்துவும் கர்ச்சீப் எடுத்து கண்களை ஒற்றி கொண்டு, நெகிழ்ச்சியோடு அவனது கையைப் பிடித்து குலுக்கி கொண்டார்கள். பாபி அவர்களின் கைகளை தட்டிக் கொடுத்து தேற்றினான்.
 
சஞ்சு புன்னகைத்து கொண்டே சொன்னாள், "நீ மட்டும் என்ன பாபி... Mano is so damn lucky to have a friend like you! Seriously, you rock!"
 
​பாபி உடனே குறும்பாக கைகளை நீட்டி, " ஓஹோ அப்படியா ,அப்போ எனக்கும் ஒரு பிரண்ட்லி ஹேண்ட்ஷேக் வேணுமே..." என்றான்.
 
​சஞ்சு அவன் நீட்டிய கையை பிடித்து அப்படியே தன்பக்கம் இழுத்து, எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒரு கேஷுவலான ஹக் பண்ணி, அவனது முதுகில் தட்டினாள். பக்கத்தில் நின்ற இந்துவும் சட்டென புன்னகையோடு பாபியின் மறுபக்கம் தோளோடு தோள் சேர்த்து ஒரு சைடு ஹக் கொடுத்து, அவனது தோளை தட்டினாள்.
 
​லைப்ரரி பில்டிங் வராண்டாவின் முன்பக்கம் மதிய வெயில் மங்கி மங்கி அடித்து கொண்டு இருந்தாலும், அவர்கள் மூவர் முகத்திலும் இப்போது ஒரு நம்பிக்கை வெளிச்சம். மனோ - மைதிலி லவ் ஸ்டோரி... யாருக்கும் தெரியாமல் இந்த மூவரையும் ஒரே டீமாக மாற்றி இருந்தது!
 
சஞ்சுவும் இந்துவும் பாபியிடம் விடைபெற்றுக்கொண்டு கிளாஸ் ரூம் நோக்கிச் செல்ல, பாபி மறுபக்கமாக நகர்ந்தான்.
 
அந்தக் கூட்டணி கலைந்து வராண்டா முன்பகுதி வெறிச்சோடிய அடுத்த விநாடி...
​வரண்டாவில் இருந்த ஒரு சிமெண்ட் தூணின் மறைவிலிருந்து மெல்ல வெளிப்பட்டாள் சலோனி!
 
​அவளது கண்கள் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் அகல விரிந்திருந்தன. அவள் வேறொரு விசயமாக இன்டர்நெட் சென்டருக்கு வந்திருந்த நேரத்தில், இவ்ளோ பெரிய ஸ்கூப் நியூஸ் கிடைக்கும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
 
​பாபி, சஞ்சு, இந்து மூவரும் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் அச்சு பிசகாமல் பதிவாகியிருந்தது.
 
'​மைதிலிதான் சன்ஷைன்! அந்த பிச்சைக்காரிதான் மனோவோட நெஞ்சுக்குள்ள சேர் போட்டு உட்கார்ந்திருக்காளா?''
 
சலோனியின் உதடுகளில் ஒரு வன்மமான புன்னகை அரும்பியது. 
 
​"SRK... உனக்கு ஒரு அல்டிமேட் நியூஸ் காத்துட்டு இருக்கு!" என்று தனக்குள்ளே முணுமுணுத்தவள், சுற்றிலும் யாரும் பார்க்கிறார்களா என்று ஒருமுறை கவனித்துவிட்டு, ஸ்ரேயா இருக்கும் ஆடிட்டோரியம் நோக்கி விறுவிறுவென்று செல்ல தொடங்கினாள்.
 
தொடரும்


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page