All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 3 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 19 A
 
இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு நாள் ​மதிய உணவு இடைவேளை. 
 
கல்லூரி வளாகம் வழக்கமான சத்தங்களுடன் இயங்கிக் கொண்டிருந்தாலும், மைதிலிக்கும் மனோவுக்கும் அந்த நிமிடம் ஒரு தனிமை தீவு போலவே இருந்தது. காலையிலேயே அவன் அனுப்பிய அந்த மெசேஜ்— "I want to hear your voice. மதியம் 1:30-க்கு கால் பண்றேன். ஓகேவா?" —
 
அதை மைதிலி எத்தனை முறை படித்தாள் என்பதற்கு அவளுக்கே கணக்கு இல்லை.
 
முதலில் மறுத்தாள். பிறகு தவிர்த்தாள்.
 
ஆனால் —
 
திரும்பத் திரும்ப அவன் insist பண்ணியதால், ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது.
 
​சஞ்சுவும் இந்துவும் அவர்கள் கிளாசில் இருப்பார்கள். டிபார்ட்மெண்ட் சிம்போசியம் விஷயமாக அவர்கள் அலைந்து கொண்டிருந்ததால் இருவரையும் அவள் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.
 
கேண்டீன் பக்கமும் மரத்தடிகளிலும் மாணவர்கள் ஒருவரையொருவர் லஞ்ச் பாக்ஸைப் பிடுங்கி சாப்பிட்டபடி சினிமா மற்றும் கிரிக்கெட் பற்றி ஆரவாரமாக கலாட்டா செய்துகொண்டிருந்தனர்.
 
​மறுபுறம், மாணவிகள் சிறு சிறு குழுக்களாக வராண்டாக்களில் உலவியபடி, மெல்லிய சிரிப்புடன் ரகசியங்களை பகிர்ந்துகொண்டு தங்களுக்குள் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தனர்.
 
மைதிலி மட்டும் மெல்ல பிரிந்து காமர்ஸ் பிளாக் கிரவுண்ட் ப்ளோர் லேடீஸ் ரெஸ்ட் ரூம் பகுதிக்கு முன்னால் இருந்த அந்த நிழலான வராண்டாவிற்கு வந்தாள். அங்கே நடமாட்டம் குறைவாக இருந்தது.
சுவர் மீது வருடங்களின் மெல்லிய சிதைவு. பூச்சு உரிந்த தடங்கள்.
 
அருகில் நின்றிருந்த ஒரு முதிர்ந்த வெள்ளை சம்பா மரம். அதிலிருந்து உதிர்ந்த பூக்கள், தரை முழுக்க பரவியிருந்தன.
 
பால் வெள்ளை இதழ்கள்.
 
மஞ்சள் மையம்.
 
வெயிலில் மின்னியது.
 
அவள் ​கையில் இருந்த அந்தப்  நோக்கியா போன், அவள் உள்ளங்கையின் சூட்டில் வேர்த்திருந்தது.
 
மதியம் 1:31.
 
போன் ரிங் டோனை வெளியிட.... மைதிலி தயக்கத்துடன் 'அட்டெண்ட்' செய்து காதுக்கு கொடுத்தாள்.
 
​மறுமுனையில் ஒரு நொடி மௌனம்... பிறகு ஒரு மெல்லிய சிரிப்புடன் கலந்த அந்த காந்தக் குரல் ஒலித்தது.
 
​மனோ: "ஹலோ... சன்ஷைன்? இருக்கியா?"
 
மைதிலிக்கு திடீர் படபடப்பு. ​இவ்வளவு காலம் எழுத்துக்களாக பார்த்த அந்த மனிதன், இப்போது ஒலியாக தன் காதுக்குள் இறங்குவதை மைதிலியால் நம்ப முடியவில்லை.
 
​மைதிலி: (தொண்டையை சரிசெய்தபடி மெல்லிய குரலில்) "ம்... இருக்கேன்..."
 
மைதிலி தூணை பிடித்தபடி நின்றுகொண்டே இருந்தாள்.
 
அவளது மூச்சு மெதுவாக சீராகிக் கொண்டிருந்தாலும் —
இதயம் மட்டும் இன்னும் அவசரத்தில் துடித்துக் கொண்டே இருந்தது.
 
அதே நேரம் —
 
ஃபுட்பால் கிரவுண்ட்.
 
மனோ —
 
ஒரு பெரிய மரத்தடியில்
ஒரு காலை மடக்கி, மரத்தில் தூக்கி வைத்து சாய்ந்து நின்றிருந்தான்
 
​மனோ: "வாவ்... தேங்க்ஸ்.  தெரியுமா? இவ்வளவு நாள் உன் மெசேஜ் படிக்கும்போது எனக்குள்ள ஒரு வாய்ஸை நானே கிரியேட் பண்ணி வச்சிருந்தேன். ஆனா நிஜம் அதைவிட ரொம்ப அழகா இருக்கு. Your voice has a soul, Sunshine. ஒரு சின்ன பயம் இருக்கு... ஆனா அதுல ஒரு நேர்மை இருக்கு."
 
​மைதிலிக்கு தன் கைகள் வேர்ப்பது புரிந்தது. ஒரு பக்கம் தன் நிஜ அடையாளத்தை மறைக்கிறோம் என்ற 'Insecurity', இன்னொரு பக்கம் அவனது வார்த்தைகள் தரும் போதை.
 
தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கித் தவிக்க, வராண்டாவின் அந்த தூணைப் பலமாக பற்றிக்கொண்டாள்.
 
மனோ: "இப்ப நான் காலேஜ்லதான் இருக்கேன்... நீ எங்க இருக்க? இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?"
 
தான் அவனுக்கு மிக அருகில்தான் இருக்கிறோம் என்பதை சொல்ல முடியாமல் மௌனமானாள். அவளது 'Silence'-ஐ புரிந்துகொண்டது போல மனோவே தொடர்ந்தான்.
 
​மனோ: "சரி... ஓகே ஓகே. நீ சொல்ல வேண்டாம், நான் உன்னை போர்ஸ் பண்ணல. எங்களுக்கு இப்போ லஞ்ச் பிரேக். பசங்கல்லாம் கேண்டீன்ல கத்திக்கிட்டு இருக்காங்க... நான் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இப்போ கிரவுண்டுக்கு வந்துட்டேன். இங்க ஒரு மரத்தடியில தனியா நின்னுதான் உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்."
 
மைதிலி: "நிஜமாவே என்கிட்ட பேசணும்னு தோணுதா மனோ? நான் எப்படி இருப்பேன்னு கூட உங்களுக்கு தெரியாதே..."
 
மனோ: (ஒரு மெல்லிய புன்னகையுடன்) "உன் முகம் எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதுதான். ஆனா, உன் பேச்சு மூலமா நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு தெரியும் சன்ஷைன்.
 
மைதிலி: அப்படியா நான் எப்படிப்பட்டவ, ஒரு சாம்பிள் சொல்லுங்க பாப்போம்...
 
படபடப்பு அவளுக்கு குறைந்து கொண்டே செல்ல, சகஜமாக பேச ஆரம்பித்தாள்.
 
மனோ: “சொல்லட்டுமா…?”
 
சிறிது இடைவெளி.
 
“நீ ரொம்ப யோசிப்ப…
 
ஒவ்வொரு வார்த்தையும் type பண்ணுறதுக்கு முன்னாடி இரண்டு தடவை யோசிப்ப…
யாரையும் hurt பண்ணக்கூடாது னு நினைப்ப…
 
ஆனா உனக்குள்ள என்ன கஷ்டமோ  — அத மட்டும் சொல்ல மாட்ட…”
 
மைதிலி அசைவின்றி நின்றாள்.
 
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் —
 
அவளுக்குள்ள ஒலித்தது.
 
மைதிலி: “அவ்வளவு easyஆ analyse பண்ணிட்டீங்களா…?”
 
மனோ: (சிரித்தபடி)
 
"Analysis இல்ல சன்ஷைன்… feeling… நீ எப்படிப்பட்டவளா இருப்பன்னு என்னால பீல் பண்ண முடியுது.."
 
சிறிது மௌனம்.
 
அந்த மௌனம் — சொல்லாத உணர்ச்சிகளால் நிரம்பிருந்தது. மைதிலி உதட்டோரம் புன்னகை.
 
மனோ:.“நான் ஒரு விஷயம் கேக்கலாமா…?”
 
மைதிலியின் விரல்கள்
போனை இன்னும் பலமாக பற்றின.
 
“ம்… கேளுங்க…”
 
மனோ: “நீ இப்போ சிரிக்கிறியா…?”
 
அவள் சற்று திகைத்தாள்.
 
இவனுக்கு எப்படி தெரியும்?
 
மைதிலி: எதுக்காக அப்படி கேக்குறீங்க?
 
மனோ: “தெரியல… but I can literally feel your smile right now."
 
மைதிலி — முதன்முறையாக —
சிறிது வெளிப்படையாக சிரித்தாள்.
 
“இல்ல…ஆனா இப்போ சிரிக்கறேன்…”
 
அந்த பதிலுக்கு பிறகு —
மறுமுனையில் ஒரு பெருமூச்சு.
 
மனோ: Good… நீ சிரிக்கணும் சன்ஷைன்…
சன்ஷைன்ங்கற பேருக்கு ஏத்த மாதிரி எப்பவுமே சிரிக்கணும், எல்லாரையும் சிரிக்க வைக்கணும். அதுதான் சரி.
 
அந்த பதில் மைதிலியின் உள்ளத்தை உருகச் செய்தது.
 
அவள் வரண்டாவில் நடை பயின்றாள். கீழே கிடந்த சம்பா பூக்களை கவனமாக மிதிக்காமல் நடந்தாள்.
 
மைதிலி: “நீங்க எப்பவுமே இப்படி தான் பேசுவிங்களா…?”
 
மனோ: “யார்கிட்ட…?”
 
மைதிலி: “ என்னை மாதிரி… யாருன்னே தெரியாத பொண்ணுங்க கிட்ட…”
 
சிறிது நேரம் —
 
மௌனம். மௌனத்தில் லேசான காயம்.
 
பின்னர்,
 
மனோ:
 
“இல்ல… இதெல்லாம் நான் யார்கிட்டயும் பேச மாட்டேன்…
நீ-ங்கறதுனால தான் பேசுறேன்… ஏன்னா நீ எனக்கு ரொம்ப important அதான்."
 
அந்த பதில் — மைதிலியை நடக்கவிடாமல் நிறுத்தியது.
 
அவள் தரையில் இருந்த வெள்ளை பூக்களை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
 
மைதிலி: “நான்… உங்களுக்கு ரொம்ப importantஆ…?”
 
அந்த கேள்வி — அவளுக்கே பயமாக இருந்தது.
 
மறுமுனையில் —
 
ஒரு அர்த்தமுள்ள சிரிப்பு.
 
மனோ: “அது உனக்கே தெரியாதா…?”
 
அவள் எதுவும் பேசவில்லை.
 
மனோ: “நான் சொல்லணுமா…?”
 
மைதிலியின் மூச்சு — மெல்ல தடைபட்டது.
 
“ம்…”
 
மனோ: “எனக்கு எல்லாரும் இருக்காங்க.. அவங்களையெல்லாம் இம்பார்ட்டன்டா நான் நினைக்கல. ஆனா நீ இல்லனா… என் நாள் முழுசும் empty தான்…நீ online இல்லனா… நான் wait பண்ணுறேன்… நீ reply lateஆ கொடுத்தா… நான் irritate ஆகுறேன்…இதல்லாம்… important இல்லனா என்ன…?”
 
அந்த வார்த்தைகள் —
 
மைதிலியின் உள்ளத்தில் ஆழமாக பதிந்தது. அவள் இதயம் உருகி வழிவது போலிருந்தது. மெதுவாக சுவரில் சாய்ந்து கண்களை மூடினாள்.
 
ஒரு நொடி —
 
அவள் எல்லாத்தையும் மறந்து — அந்த உணர்வை மட்டும் உணர்ந்தாள்.
 
Cut to — Close up
 
அவள் முகத்தில் பரவச நடுக்கம்.
 
உதட்டில் பிறக்கும் சிறிய புன்னகை.
 
முன்பக்கம் கிரவுண்டில் மாணவர்கள் சத்தம்…
 
கலாட்டா, சிரிப்பு  கூச்சல்.
 
அனைத்தும் மெதுவாக மங்க ஆரம்பித்தது.
 
Fade out — Background noise
 
மீதமிருப்பது —அவன் குரல் மட்டும்.
 
Echo effect —
 
"நீ இல்லனா… என் நாள் முழுசும் empty…"
 
அந்த வார்த்தைகள் —
 
அவள் மனதுக்குள் மெல்ல மெல்ல ஒலித்துக் கொண்டே இருந்தது.
 
Visual — Slow Motion
 
காற்று லேசாக வீசியது.
 
அவள் தலைமுடியின் சில கூந்தல்கள் — முகத்தை வருடின.
 
Insert shot —
 
தரையில் இருந்த வெள்ளை சம்பா பூக்கள் காற்றில் புரண்டு நிமிர்ந்தன.
 
Cut — Extreme close up
 
அவள் மூடிய கண்களின் மூலைகளில் ஒளிரும் ஈரப்பதம்.
 
அந்த நொடி —
 
அவள் எங்கும் இல்லை.
 
காலேஜ் வராண்டா மறைந்து,
 
சம்பா பூக்களின் வெள்ளை வெறுமை.
 
அந்த வெறுமையின் நடுவில் —
 
அவன் குரல் மட்டும்.
 
அவள் — அந்த குரலை பிடித்து கொண்டு நிற்கிறாய்
 
Heartbeat sound — slow… லப் டப்
 
ஒரு நொடி —
 
அவள் எல்லாத்தையும் மறந்தாள்.
 
யார்… எங்கே… எப்படி…
 
எதுவும் இல்லை.
 
Only feeling.
 
அந்த உணர்வு — அவளை முழுக்க நிரப்பியது.
 
மனோவின் குரல் கேட்க--- Cut Back to reality.
 
“இப்போ நான் சொன்னது, உன் நெஞ்ச தொட்ட மாதிரி
ஃபீல் பண்ணுன இல்லையா ?”
 
மைதிலி கண்களை சட்டென்று திறந்து திகைத்தாள்.
 
அடப்பாவி! இவன் எப்படி கண்டு பிடிக்கிறான்?
 
மைதிலி: எப்படி பீல் பண்றேன்னு சொல்றீங்க?
 
மனோ — மரத்திலிருந்து நேராக நின்றான்.
 
"அது என்னமோ தெரியல சன்ஷைன். உன் silence கூட அதிகமா பேசுது … மத்த விஷயங்களில் கரெக்டா இருக்கனா இல்லையான்னு எனக்கு தெரியாது. ஆனா உன் விஷயத்தில் மட்டும் எனக்கு உள்ளுக்குள்ள தோணுது, அதை சொல்றேன்.."
 
மைதிலி அந்த வராண்டாவில் இருந்து நடக்கத் தொடங்கினாள்.
 
மைதிலி:
 
“நீங்க ரொம்ப dangerous…”
 
மனோ சிரித்தான்.
 
அவனும் மெதுவாக நடக்க ஆரம்பித்தான்.
 
மரத்தடியை விட்டு — காலேஜ் பில்டிங் நோக்கி.
 
மனோ: “ஏன்…?”
 
மைதிலி: “மனசுல இருக்கிறதல்லாம் கண்டுபிடிச்சுட்றீங்க…”
 
மனோ — நடந்தபடி ஸ்டைலாக தலையை கோதினான்.
 
“நீ தான் சொல்லாம எல்லாத்தையும் சொல்லிருரியே…”
 
மைதிலி — ஒரு நொடி நின்றாள்.
 
“நானா…?”
 
மனோ:
 
“yes… நீ உன்னை மறைக்க முயற்சி பண்ணுற… ஆனா ஒவ்வொரு வார்த்தையிலும் நீ தெரிஞ்சுட்ற…What can i do? ”
 
சற்றும் தூரத்தில் அவள் கிளாஸ் கேர்ள்ஸ் வருவதை கவனித்ததும்,
 
மைதிலி அவசரமாக: சரி ஓகே. நான் அப்புறமா பேசறேன்.... என்றாள்.
 
மனோவும் அவசரமாக: எப்ப?... என்று கேட்க,
 
மைதிலி: text பண்ணுங்க... ஓகேவா bye.
 
என்றபடி அவன் பதிலை  எதிர்பார்க்காமல் காலை கட் செய்தாள்.
 
ச்சே! வச்சிட்டாளே! இன்னும் கொஞ்ச நேரம் பேசிருக்கலாம்.
 
மொபைலை பாக்கெட்டில் போட்டபடி மனோ நடக்க ஆரம்பித்தான். 'இவ கண்டிப்பா நம்ம காலேஜ் ஸ்டூடண்டா தான் இருக்கணும். ஆனா இவ்வளவு பேருக்கு நடுவுல இவளை எப்படிக் கண்டுபிடிக்கிறது?' என்ற யோசனை அவன் தலையை குடைந்தது.
 
இப்போது —
 
மைதிலி வராண்டாவை கடந்து காமர்ஸ் பில்டிங்கின் முன்புறம் வந்தாள்.
 
முன்னால் —
 
கிரவுண்ட்.
 
அதே நேரம் —
 
மனோவும் கிரவுண்டிலிருந்து
அந்த பக்கமாக நடந்து வந்தான்.
 
சற்றும் எதிர்பாராத அந்த நொடியில், இருவேறு துருவங்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் தூரத்தில் இருந்தார்கள்.
 
எதிரே வரும் மனோவை பார்த்து விட்டாள். தற்செயலாக அவனை எதிரே பார்த்ததும், மைதிலிக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது.
​மனோ காமர்ஸ் பில்டிங்கை கடந்து மெயின் பில்டிங் நோக்கி செல்வதற்காக வந்தான். மைதிலி சட்டென்று தலையை குனிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.
 
​அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாண்டிச் சென்ற அந்த விநாடி...
 
​மனோவின் உடலில் இருந்து வீசிய அந்த 'அசாரோ விசிட்' பெர்ஃப்யூம் வாசனையால் மைதிலி மனதிற்குள் ஒரு சுகந்தமான நடுக்கம்.
 
தன்னிடம் இப்போது பேசிய அந்த சன்ஷைன் குரலின் அதிர்விலேயே லயித்துப்போயிருந்த மனோ, எதிரே வந்த பெண்ணை துளியும் கவனிக்காமல் கடந்து சென்றான்.
 
​மைதிலி மட்டும் ஒரு கணம் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தாள். அவன் ஸ்டைலாக நடந்து சென்று கொண்டிருந்தான்.
 
'இவன் தேடும் அந்த சன்ஷைன் கேர்ள் நான்தான் என்று தெரிந்தால், இவன் இன்னும் இப்படியே அன்பாக இருப்பானா?' என்ற கேள்வி அவள் கண்களில் ஒரு மெல்லிய ஈரத்தை வரவழைத்தது.
 
தொடரும் 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 20
 
 
​அன்று மாலை... பெண்கள் விடுதி.
 
​விடுதி அறையின் கதவை ஸ்ரேயா தள்ளி திறந்து உள்ளே நுழைந்தபோது, அவள் எதிர்பார்க்காத ஒரு காட்சி அவளை அப்படியே நிற்க வைத்தது.
 
வழக்கமாக ஏதாவது வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சலோனியும் பிரணவியும், ஏதோ ஊரை காலி செய்வது போல பரபரப்பாக தங்கள் துணிகளைப் பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தார்கள்.
 
​அவர்கள் முகத்தில் வழக்கத்துக்கு மாறான பயம்.
 
ஸ்ரேயா: ​"ஏய்... என்ன? எதுக்கு இப்போ பெட்டி படுக்கையோட.... ஊருக்கு கிளம்புறீங்களா ?"
 
​சலோனி தன் பேக் zip-ஐ இழுத்து மூடியபடி மெதுவாக நிமிர்ந்தாள். டென்ஷனை மறைக்க சிரமப்பட்டாள். அவள் குரலை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், உள்ளேயிருந்த பதட்டம் வெளியில் தெரிந்துவிட்டது.
 
“நாங்க… வேற ரூமுக்கு shift ஆகுறோம் ஸ்ரேயா… இங்க இருக்கிறது இனிமே safe இல்ல…”
 
​ஸ்ரேயா ஏளனமாக திமிராக புன்னகைத்தாள்.
 
“Safe இல்லையா…? Seriously…?”
 
ஒரு புருவத்தை உயர்த்தி....
அவள் மெதுவாக முன்னே வந்தாள்.
 
“Are you guys even listening to yourselves…?இந்த ஹாஸ்டல்ல… who runs the gameன்னு மறந்துட்டிங்களா…?”
 
​சலோனி: "உனக்கு விஷயம் தெரியாது SRK. அண்டர்கவர் போலீஸ்காரங்க காலேஜுக்குள்ளயும் ஹாஸ்டலுக்குள்ளயும் நுழைஞ்சிருக்காங்க. போதை Party விவகாரத்துல லிஸ்ட் எடுத்துட்டு இருக்காங்களாம். ஒருவேளை நாம மாட்டினா... அப்புறம் ஜென்மத்துக்கும் வெளிய வர முடியாது. கொஞ்ச நாளைக்கு நாம பிரிஞ்சி இருக்கிறது தான் நல்லது."
 
What the heck!!!!
 
​ஸ்ரேயா ஆச்சரியத்துடன் பிரணவியைப் பார்த்தாள்.
​பிரணவி வேகவேகமாக தலையாட்டினாள்.
 
"ஆமா SRK... எனக்கும் அதே தகவல் தான் கிடைச்சது. போன்ல ஒருத்தங்க வார்ன் பண்ணாங்க. போலீஸ் லிஸ்ட்ல நம்ம பேரும் இருக்காம். அதனாலதான் ரிஸ்க் எடுக்காம வேற ரூமுக்கு போறோம்."
 
​ஸ்ரேயா தன் கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றாள். "முட்டாள்தனமா பேசாதீங்க! அப்படி எல்லாம் எதுவுமே கிடையாது. யாரோ உங்களை வச்சுச் செய்றாங்க... அதையும் மீறி ஏதாவது பிரச்சனை வந்தா இந்த ஸ்ரேயா பாத்துக்க மாட்டேனா? நான் இருக்கும்போது உங்களுக்கு என்ன பயம்?  You both just panic for no reason…?”
 
அவள் குரல் கொஞ்சம் குளிர்ந்தது.
 
“Come on yaar… don’t behave like amateurs…”
 
​சலோனி தன் பெட்டியை தூக்கிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தபடியே பேசினாள்.
 
"பிரச்சனை வந்ததுக்கு அப்புறம் நீ பார்த்துக்குறதை விட, பிரச்சனை வராம பார்த்துக்கிறது தான் புத்திசாலித்தனம் ஸ்ரேயா. அதனால தயவுசெஞ்சு எங்களை மன்னிச்சிடு... BYE!"
 
​அவள் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், இருவரும் விறுவிறுவென்று அறையை விட்டு வெளியேறினார்கள்.
 
ஸ்ரேயா அந்த வெறிச்சோடிய அறையின் நடுவில் அசையாமல் நின்றாள்.
 
அவளது கண்கள் மெதுவாக சிவந்தது.
 
கோபம் — ஆனா கண்ட்ரோல்டான கோபம்.
 
“Undercover ஆ…? Nice try…”
 
கசப்பாக புன்னகைத்து விட்டு  ஜன்னல் பக்கம் திரும்பினாள்.
 
காற்றில் திரைச்சீலைகள் பலமாக அசைந்தன.
 
“யாரு இவங்களை இவ்வளவு panic பண்ணுற அளவுக்கு scare பண்ணிருக்காங்க…?”
அவள் கண்கள் சுருங்கின.
 
“சஞ்சு.... இந்து?”
 
அவள் தலையை சற்றே சைக்கோ தனமாக சாய்த்தாள்.
 
“No one… messes with my space…”
 
அவள் அழுத்தமாக, வெறுப்பாக சொன்னாள்.
 
“And gets away with it...."
 
​ஒரே கல்லூரி வளாகம். ஆனால் இருவேறு உலகங்கள்.
 
மறுநாள் ​காலை 11:15
 
மனோ ப்ளே கிரௌண்டில் நடந்து கொண்டிருந்தான். மரங்களின் நிழல் தரையில் கோலமிட,
ஒரு காரணமுமில்லாமல் —
சன்ஷைனிடம் பேசணும் போல தோன்றியது.
 
ஒரு வார்த்தை…
 
ஒரு மெசேஜ்…
 
ஏதாவது.
 
அவன் மெதுவாக நின்றான். பாக்கெட்டிலிருந்து போனை எடுத்தான்.
 
​மனோ (Message): "குட் மார்னிங் சன்ஷைன்! உலகத்துக்கே சன்ஷைன் கொடுக்கிற சூரியனே நடு வானத்துக்கு வந்துருச்சு  ஆனா உன் மெசேஜ் இன்னும் வரல?"
 
​B.Com கிளாஸ் ரூம் - மைதிலி:
மைதிலி அப்போதுதான் அக்கவுண்டன்சி கிளாஸில் பேலன்ஸ் ஷீட்டைச் சரிபார்த்து கொண்டிருந்தாள். சைலண்டில் கிடந்த மொபைலில் லைட் எரிந்ததும்  மேசைக்கு அடியில் பார்த்தாள். ஒரு புன்முறுவலுடன் பதில் அனுப்பினாள்.
 
​மைதிலி (Reply): " ரொம்ப சீக்கிரம் முழிச்சுட்டீங்க போல... have a good day!"
 
மனோ: முழிச்சிட்டிங்களா வா? நான் இப்ப காலேஜ்ல இருக்கிறேன். புட்பால் ப்ராக்டீஸ்.
 
மைதிலி: ஜாலிதான். பாதி நேரம் புட்பால் கிரிக்கெட் பிரக்டிஸ்ன்னு கிளாஸுக்கு போறதே இல்ல, கரெக்டா?
 
மனோ: ஆமா OD குடுத்துருவாங்க... பட் எதை செஞ்சாலும் சின்சியரா பண்ணுவேன்.
 
​மதியம் 12:45 - கேண்டீன் பரபரப்பு.
 
மனோ தனது நண்பர்களுடன் கேண்டீனில் அமர்ந்து கிரிக்கெட் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். சுற்றி எக்கச்சக்க சத்தம், ஆனால் அவன் மனம் மட்டும் அந்த 'Virtual' உலகத்திலேயே இருந்தது.
 
​மனோ (Message): "இங்க பயங்கர சத்தம்... ஆனா எனக்குள்ள உன் குரல் மட்டும் தான் கேட்டுட்டே இருக்கு. லஞ்ச் சாப்பிட்டியா? இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அப்புறம்... இன்னைக்கு நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்கனு நான் கெஸ் பண்ணட்டுமா?"
 
​மைதிலி (Reply - அவள் கிளாஸ் ரூமில் தோழிகளுடன் லன்ச் சாப்பிட்டபடி ): "கெஸ் பண்ணாதீங்க... கண்டிப்பா தப்பாத்தான் இருக்கும்! நான் லஞ்ச் சாப்பிட்டுட்டு இருக்கேன். நீங்களும் நல்லா சாப்பிடுங்க. அப்புறம்... சுத்தி இருக்கிறவங்ககிட்ட கொஞ்சம் பேசுங்க, போன்லயே இருக்காதீங்க!"
 
​மாலை 3:30 - ஃபுட்பால் மைதானம்:
மனோ பிராக்டிஸுக்கு போவதற்கு முன்னால், மைதானத்தின் ஓரத்தில் அமர்ந்து ஷூ லேஸைக் கட்டிக் கொண்டிருந்தான். வானம் லேசாக மேகமூட்டத்துடன் இருக்க, அவளது நினைவு மீண்டும் வந்து போனது.
 
​மனோ (Message): "இப்போ இங்க கிளைமேட் செமையா இருக்கு. சின்னத் தூறல். இந்த நேரத்துல உன் கூட ஒரு லாங் வாக் போகணும்னு ஆசையா இருக்கு சன்ஷைன். எப்போ நடக்கும் இது?"
 
​மைதிலி (Reply - கிளாஸ் முடிந்து ஹாஸ்டலுக்கு செல்லும்போது): "கிளைமேட் ரசிங்க... ஆனா நனையாதீங்க, அப்புறம் சளி பிடிச்சுடும். லாங் வாக் போகலாம்... அதுக்கு இன்னும் time இருக்கு. இப்போ பிராக்டிஸ்ல கவனம் செலுத்துங்க!"
 
ஹாஸ்டல் ரூமில்,
 
சஞ்சுவும் இந்துவும் ஸ்ரேயாவின் ரூமில் நடந்த விவகாரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்.
 
​இந்து: "சஞ்சு... அந்த ரெண்டு பேரும் காலி பண்ணிட்டு போறதை ஸ்ரேயா பார்க்கும்போது அவ மூஞ்சியை பாத்திருக்கணுமே... செம கடுப்புல இருப்பா!"
 
​சஞ்சு சிரிப்பை அடக்கிக்கொண்டு,
"கூட்டம் சேர்த்துக்கிட்டு கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டா... இப்ப தனியா கிடந்து லோல் படட்டும்... இப்போதைக்கு நம்ம சன்ஷைன் கேர்ள் தான் ரொம்ப ஹேப்பியா இருக்கா போல!"
 
​மைதிலி கையில் வைத்திருந்த போனைப் பார்த்தபடி ஒரு ரகசியப் புன்னகையோடு ரூமுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.
 
​மாலை 5:45 - கஃபே
 
ஒரு டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, அடுத்த ஆர்டருக்காக காத்திருந்த அந்தச் சில நிமிட இடைவெளியில், அவளது ஏப்ரன் பையில் இருந்த போன் மெல்ல அதிர்ந்தது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் போனை எடுத்து பார்த்தாள்.
 
​மனோ (Message): "இன்னைக்கு நாள் முழுக்க உன் மெசேஜ்கள் தான் என்னைச் சந்தோஷமா வச்சிருந்தது. முகம் தெரியாமலே ஒருத்தங்க மேல இவ்வளவு அன்பு வைக்க முடியுமான்னு எனக்குள்ளயே கேட்டுக்கிறேன். தேங்க்ஸ் சன்ஷைன்... என் லைஃப்ல வந்ததுக்கு."
 
​மெசேஜை பார்த்த அடுத்த நொடி, மைதிலியின் கைகள் லேசாக நடுங்கின. அந்த சலசலப்பான கஃபேவில், நிறைய மனிதர்களுக்கு நடுவே நின்றிருந்தாலும், அந்த ஒரு மெசேஜ் அவளை ஒரு தனி உலகிற்கு இட்டுச் சென்றது.
 
​கஃபேவின் ஜன்னல் வழியாகத் தெரிந்த அந்த செந்நிற அந்தி வானத்தை பார்த்தபடி அப்படியே நின்றாள்.
 
"நிஜமான மைதிலியை — இந்தக் கஃபேவில் சாதாரண வொர்க்கராக இருக்கும் இந்தப் பெண்ணை — நீ பார்த்தாலும் இதே அன்பைச் செலுத்துவாயா மனோ?' என்ற கேள்வி அவள் மனதிற்குள் ரணமாக நிழலாடியது.
 
அந்த கேள்வியை முழுங்கிவிட்டு, மீண்டும் தன் வேலையில் மூழ்கினாள்.
 
 
மறுநாள் காலை
 
​கல்லூரியின் பிரதான நோட்டீஸ் போர்டை சுற்றி ஒரு சில மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். அந்த நீல நிற போர்டில், இளஞ்சிவப்பு நிற காகிதத்தில் அச்சிடப்பட்ட அந்த 'சர்குலர்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
 
​SSG COLLEGE OF ARTS & SCIENCE
NOTICE
​Subject: Inauguration of Cultural & Arts Club Activities - 2003-04
 
​We are pleased to announce the commencement of our Annual Cultural Calendar. The formal inauguration will be presided over by our honorable Principal, followed by a special address from the Cultural Club Chairman, Mr. Mano (BSC CS IIIrd Year).
 
​Date: 15th October 2003
​Time: 10:30 AM
​Venue: Dilipkumar Auditorium
 
​All students are cordially invited to witness the launch of this year's events, including the announcement of the 'Annual Mega Play' and audition schedules.
​By Order,
Cultural Committee.
 
காலேஜ் ஆடிட்டோரியத்தில் மாணவர்கள் தோரணங்களை கட்டிக்கொண்டிருந்தனர்.
​ஸ்டேஜின் கீழே நின்று கொண்டு, வேலைகளை சரிபார்த்துக் கொண்டிருந்தான் கல்ச்சுரல் கிளப் சேர்மன் மனோ.  மேடை அலங்காரம் மற்றும் தூய்மைப் பணிகளை துரிதப்படுத்தி கொண்டிருந்தான். அவனது மேற்பார்வையில் ஆடிட்டோரியம் புதுப்பொலிவு பெற்றுக்கொண்டிருந்தது.
 
​ஆடிட்டோரியத்தின் நடுவரிசை இருக்கைகளில் சந்தீப், மனிஷ், பிரேம் மற்றும் பாபி ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். மேடையில் மைக்குகளும் ஸ்பீக்கர்களும் செட் செய்யப்பட்டுக்கொண்டிருக்க, இவர்களின் அரட்டை சூடுபிடித்தது.
 
​பிரேம்: "டேய் என்னடா இந்த வருஷம் இனாகிரேஷனுக்கு என்ன டிராமா போடப்போறாங்க? ஏதாவது ஐடியா இருக்கா?"
 
​சந்தீப்: "வேற என்ன இருக்கும்... அநேகமாக ரோமியோ ஜூலியட் தான்."
 
​பிரேம்: (கிண்டலாக) "அப்போ ரோமியோ நம்ம மனோ சார்... ஜூலியட் யாருடா? பொண்ணுங்களுக்குள்ள இப்போவே அதுக்காகப் பெரிய சண்டையே நடக்கும் பாரு! ஸ்ரேயா முதல் ஆளா வந்து நிப்பா.
 
​மனிஷ்: "இன்னும் முடிவு பண்ணலையாம். ஆடிஷன் வச்சு தான் யாரை எடுக்குறதுன்னு பாக்கணும்னு சேர்மன் சார் சொன்னார்.
 
​பாபி அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்தான்.
 
மனோ ஒரு எலக்ட்ரீஷியனிடம் ஸ்பாட்லைட் செட்டிங்ஸ் பற்றிப் பேசிக்கொண்டிருக்க, தூரத்திலிருந்து சந்தீப் அவனை உற்றுப் பார்த்தான்.
 
​சந்தீப்: (குரலை கம்மி பண்ணி ரகசியமாக கேட்டான்) "டேய், நான் ஒண்ணு கேட்கணும்னு நினைச்சேன். மனோ என்னடா கொஞ்ச நாளாவே போனும் கையுமா சுத்திட்டே இருக்கான்? யார்கிட்டயாவது கடலை போட்டுட்டு இருக்கானா? வழக்கமா அவன் அப்படி செய்ய மாட்டானே!"
 
​மனிஷ்: "ஆமாடா, எனக்கும் அதே சந்தேகம் தான் இருக்கு. போனை பார்த்து தனியா சிரிச்சுகிட்டு இருக்கான், அடிக்கடி ஓரமாக நின்னு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கான்... Something is wrong!"
 
​ பிரேம்: (பாபியைத் தட்டி) "நானும் இதையே கேட்கணும்னு தான் நினைச்சேன். பாபிக்கு தெரியாம இங்க எதுவும் நடக்காதே! சொல்லுடா பாபி... மனோ யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சுட்டானா?"
 
​பாபி சட்டென்று சுதாரித்தான். இந்த தில்லாலங்கடிகளிடம் உண்மையை சொன்னால், அவர்கள் மனோவை ஓட்டித் தீர்த்துவிடுவார்கள். அதே சமயம் அவர்களுக்குத் தெரியாது என்று சொன்னால், அவர்கள் இன்னும் துருவித் துருவி ஆராய்வார்கள்.
​ஒரு நொடி யோசித்துவிட்டு, "ஆமாப்பா... எனக்கும் அதான் டவுட்டா இருக்கு. பேசாம அவன் கிட்டயே ஒரு வார்த்தை கேட்டுருங்க..." என்றான் மழுப்பலாக.
 
​சந்தீப்: "கரெக்ட்! கொஞ்ச நாளாவே இந்த விஷயம் என் மண்டையை குடைஞ்சுட்டே இருக்கு. இன்னைக்குச் சாயந்திரம் பாரு... அவனை பாருக்கு கூட்டிட்டுப் போய் ரெண்டு பீர் வாங்கி கொடுத்து உண்மையை கக்க வைக்கிறேனா இல்லையான்னு பாரு!"
 
​சந்தீப்பின் அந்த தீர்மானமான பேச்சைக் கேட்ட பாபிக்கு, 'ஐயோ பாவம் மனோ!' என்று தான் தோன்றியது.
 
 
​மாலை 7:00 மணி. 'தி ஓல்ட் டவுன்' பாரின் ஒரு மூலையில் இருந்த அந்த டேபிளில் நிசப்தம் நிலவியது. சுற்றியிருந்த இரைச்சல்களுக்கு நடுவே, அந்த நான்கு ஜோடி கண்களும் மனோவையே வச்ச கண்ணு வாங்காமல் பார்த்து கொண்டிருந்தன.
 
​சந்தீப், மனிஷ், பிரேம் ஆகிய மூவரும் கையில் இருந்த கிளாஸை அப்படியே வைத்திருக்க, பாபி மட்டும் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான். காரணம், மனோ எதையும் மறைக்காமல் எல்லா உண்மையையும் - அதாவது அந்த 'சன்ஷைன்' பற்றிய விவரங்களை - அப்படியே கொட்டிவிட்டான்.
 
​சந்தீப் குரலில் அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் போன்ற உணர்ச்சிகளின் காக்டைல்: "என்னடா சொல்றான் இவன்? டேய் மனோ... நிஜமாவா சொல்ற? பேரு, ஊரு, அட்ரஸ், ... ஏன் முகத்தை கூட பார்க்காமலயா ஒரு பொண்ணை லவ் பண்றேன்னு சொல்ற? அதுவும் ஏதோ ஒரு ஆன்லைன் சாட்ல வந்தவளை!"
 
​மனிஷ்: "டேய் மனோ... உன் ரேஞ்ச் என்ன? லெவல் என்ன? காலேஜ்ல உனக்கு இருக்கிற இமேஜ் என்ன? ஆனா நீ என்னடான்னா யாரோ ஒரு பொண்ணு அனுப்புற மெசேஜை வச்சுக்கிட்டு உருகுற? என்னடா நடக்குது இங்க?" பிறகு சட்டென்று பாபியைப் பார்த்தான். "பாபி! இதெல்லாம் உனக்கு ஏற்கனவே தெரியுமா? அவன் கூடவே சுத்துறியே... ஏன் சொல்லல?"
 
​பாபி: (அனைவரையும் பரிதாபமாகப் பார்த்துவிட்டு) "டேய்... நான் ஏற்கனவே அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன்டா.  நான் சொல்றதை இவன் காது கொடுத்துக் கூடக் கேட்கல. நீங்களாச்சும் எடுத்து சொல்லுங்கடா..."
 
​பிரேம்: "டேய் மனோ... இது ஏதோ பிரச்சனை மாதிரி தான்  தெரியுதுடா. ஒருவேளை உன்னை பிடிக்காத யாராவது உன்னை வச்சு செய்றாங்களோன்னு தோணுது. கொஞ்சம் அமைதியா யோசிச்சுப் பாரு!"
 
​மனோ மெல்ல பீரை ஒரு மிடறு குடித்துவிட்டு, நிதானமாக நிமிர்ந்து அமர்ந்தான். அவனது முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை; மாறாக ஒரு தெளிவான அமைதி இருந்தது.
"டேய்... உங்களோட அக்கறை எனக்குப் புரியுது. ஆனா ஒன்னு மட்டும் கேட்டுக்கோங்க. நாம எல்லாரும் ஒரு பொண்ணை பார்க்கிறோம், அவ அழகானவளா இருந்தா லவ் பண்றோம். ஆனா, அவ எப்படி இருப்பான்னு கூடத் தெரியாம, அவ மேல எனக்கு பீலிங்ஸ் வருதுன்னா, அதுதானே உண்மையான லவ்?"
 
​சந்தீப்: மண்ணாங்கட்டி... இதெல்லாம் சினிமாவுல வேணா நல்லா இருக்கும்டா. நிஜ வாழ்க்கையில ஒருத்தங்க அடையாளத்தை வெளிப்படுத்திக்காம பேசுறாங்கன்னா அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு தப்பு இருக்குன்னு தான் அர்த்தம்."
 
​மனோ: "தப்பு இருக்கலாம்... இல்லாமலும் இருக்கலாம். ஆனா அவகிட்ட பேசும்போது எனக்குள்ள கிடைக்கிற அந்த நிம்மதி, எனக்குள்ள ஏற்படுற அந்த மாற்றம்... அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. காலேஜ்ல நான் 'மனோ'ங்கிற பிராண்ட். ஆனா அவகிட்ட நான் வெறும் ஒரு சாதாரண மனுஷன். அவ என்னை ஒரு ஹீரோவா பார்க்கல, ஒரு மனுஷனா நேசிக்கிறா. அது போதும்டா எனக்கு!"
 
பாபி: ஐயோ!!! நிறுத்துடா போதும். இதையே சொல்லி தான்டா போரடிக்கிறான்!
 
​மனிஷ்: "சரி... ஒருவேளை அவ நீ நினைக்கிற மாதிரி இல்லாம, யாராவது உன்னை ஏமாத்த நினைக்கிற ஆளா இருந்தா என்ன பண்ணுவ?"
 
​மனோ அவனுடைய வசீகரமான புன்சிரிப்பை சிந்திய படி, "ஏமாந்துட்டு போறேன்டா! ஒரு அழகான கனவுல ஏமாந்து போறதுல கூட ஒரு சுகம் இருக்குல்ல? ஆனா என் மனசு சொல்லுது... அவ என்னை ஏமாத்த மாட்டா. அவளுக்கு ஏதோ ஒரு தயக்கம் இருக்கு, அதனாலதான் அவ யாருன்னு சொல்ல மாட்டேங்கிறா? முன்னாடி வர மாட்டேங்கிறா? அதுக்காக அவளைத் தப்பா நினைக்க முடியாது. ப்ளீஸ்... இப்போதைக்கு இதை இத்தோட விடுங்க. இன்னைக்கு நாம வந்தது கல்ச்சுரல் இனாகிரேஷனை செலிப்ரேட் பண்ண... அதை கவனிப்போம்!"
 
​மனோவின் அந்த தீர்மானமான பேச்சை கேட்டதும், நண்பர்களுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் அவ்வளவு உறுதியாக இருக்கிறான் என்பது அவர்களுக்குப் புரிந்தது.
 
​சந்தீப்: "சரிடா... உன் இஷ்டம். ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ, அந்த 'சன்ஷைன்' ஒருவேளை உன்னை காயப்படுத்த நினைச்சா, அவளால உனக்கு ஏதாவது பிரச்சனை வந்தா, உன் பெயர் கெட்டுப் போனா நாங்க சும்மா இருக்க மாட்டோம்."
 
மனோ சந்தீப்பின் தோளைத் தட்டிப் புன்னகைத்தான்.
 
"தேங்க்ஸ்டா... என் மேல இருக்கிற அக்கறையில நீங்க சொல்றது எனக்குப் புரியுது. ஆனா இப்போதைக்கு அந்த 'சன்ஷைன்' மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு. ஐ ஆம் ஹேப்பி வித் திஸ்!"
 
​பீரில் ஒரு பெரிய மிடறு குடித்துவிட்டு, "இருங்க...  ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துர்றேன்," என்று சொல்லிவிட்டு இருக்கையை விட்டு எழுந்து விறுவிறுவென்று நடந்தான்.
 
​அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்த சந்தீப், மனிஷ் மற்றும் பிரேம் ஆகிய மூவரும் சட்டென்று ஒன்றாகத் திரும்பிப் பாபியைப் பார்த்தனர். அவர்களின் கண்களில் இப்போது அளவுக்கு மீறிய டென்ஷன் தெரிந்தது.
 
​பாபி அவர்கள் மூவரும் பார்க்கும் பார்வையை பார்த்து ஒரு நொடி ஜெர்கானான்.
 
"என்னடா... அப்படிப் பார்க்குறீங்க?"
 
​சந்தீப்: "பாபி... மனோ நம்ம பையன்டா... இப்படி எக்கு தப்பா ஒரு எமோஷனல் லூப்ல சிக்கியிருக்கான்டா.  ஒருவேளை அந்தப் பொண்ணு நிஜமாவே யாராவது அவனுக்கு ஆகாதவங்களா இருந்தா, அது தெரிஞ்சு அவனோட  நம்பிக்கை உடைஞ்சா... மனோவால அதைத் தாங்கிக்க முடியாது போலயே... ரொம்ப இன்வால்வ் ஆயிட்ட மாதிரி தெரியுது."
 
​மனிஷ்: "கரெக்டா சொன்னடா சந்தீப். அந்த பொண்ணு சொல்ற ஒவ்வொரு விஷயத்தையும் அதிகமா நம்புறான். அந்த அளவுக்கு அவனை அந்தப் பொண்ணு 'ஹிப்னாடைஸ்' பண்ணி வச்சிருக்கா."
 
​பிரேம்: "நம்மகிட்ட கூட சொல்லாம அவன் மறைச்சிருக்கானா அந்தப் பொண்ணு இவனை எந்த அளவுக்கு இம்பிரஸ் பண்ணிருக்கா பாரு! பாபி... நீ அவன்கூடவே இருக்கிறவன்... உனக்கு ஒரு க்ளூ கூடவா கிடைக்கல?"
 
​பாபி பெருமூச்சு விட்டு, "டேய்... நான் எல்லாத்தையும் செக் பண்ணிட்டேன். புனே அட்ரஸ் வரைக்கும் போயிட்டேன். ஆனா அவ ரொம்ப புத்திசாலியா இருக்கா. தன்னோட எந்த அடையாளமும் வெளிய வராம பார்த்துக்கிறா", என்றான்.
 
​சந்தீப் எரிச்சலில் மேசையை ஓங்கித் தட்டி, 
 
"கூடவே இருந்து கோட்டை விட்டுருக்கோமே... சரி ஓகே.
யாரா இருந்தாலும் சரி... மனோ எமோஷன்ஸ் ஓட விளையாடுற அந்த 'சன்ஷைன்' யாருன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும். அதுவும் இந்த அக்டோபர் 15  கல்ச்சுரல் கிளப் இனாகிரேஷன்குள்ள அந்த பொண்ணை மனோ முன்னாடி நிறுத்தணும். இது நம்ம நாலு பேரோட பொறுப்பு. என்ன சொல்றீங்க?"
 
​மனிஷ் & பிரேம்: (ஒரே குரலில்) "கண்டிப்பா! கண்டுபிடிச்சு தீரணும்!"
 
​நான்கு நண்பர்களும் ஒருமித்த கருத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தூரத்தில் ரெஸ்ட் ரூமில் இருந்து மனோ வெளியே வருவது தெரிந்தது. தங்களுக்குள் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை போட்டுக்கொண்ட நண்பர்கள், அவன் வருவதைப் பார்த்ததும் பழையபடி சாதாரணமாக சிரித்துப் பேசத் தொடங்கினர்.
 
 
தொடரும்
​ 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 21
 
 
​​அன்று இரவு 11 மணி.
 
​மைதிலி: "மனோ... உன் வீட்டு பிரச்சனையை பத்தி நீ சொன்னதையெல்லாம் கேட்டப்போ, எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தோணுது."
 
​மனோ: "என்ன... சொல்லு சன்ஷைன்."
 
கஃபேவில் பகுதிநேர வேலையை முடித்துவிட்டு திரும்பியிருந்த மைதிலிக்கு உடல் களைப்பை காட்டிலும், மனோவின் குடும்பச் சூழல் தந்த பாரமே அதிகமாய் இருந்தது. கால் கடுக்க வேலை செய்துவிட்டு வந்திருந்தாலும், மனோ போனில் சொன்ன விஷயங்கள் அவள் மனதை உறங்க விடவில்லை.
 
மறுமுனையில் புனேவில் உள்ள தனது பிரம்மாண்டமான அறையில் நிலவும் நிசப்தத்திற்கு நடுவே மனோ சோகமாக அமர்ந்திருந்தான்.
 
​மைதிலி நிதானமாக, "இதுவரைக்கும் உன் அப்பா அம்மா ஆளுக்கு ஒரு பக்கமா பிரிஞ்சு, சரியான புரிதல் இல்லாம இருந்தாங்கன்னா அது உன்னுடைய தப்பு கிடையாது. ஆனா... இனியும் அவங்க அப்படியே இருந்தாங்கன்னா, அது கண்டிப்பா உன்னுடைய தப்புதான்", என்றாள்.
 
​மனோ ஒரு கணம் Stuck ஆகி நின்றான். 
 
​மனோ: "வெயிட்... நீ என்ன 'மீன்' பண்றன்னு எனக்குப் புரியல சன்ஷைன். கொஞ்சம் 'கிளியரா' சொல்றியா?"
 
​மைதிலி: "கொஞ்சம் சைக்காலஜிக்கலா யோசிச்சு பாரு மனோ. உங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே மோசமானவங்க கிடையாது. ஆனா அவங்களுக்குள்ள ஒரு 'Common Ground' இல்லை. உங்க அப்பா பிசினஸ், வொர்க்ன்னு அதுலயே மூழ்கிட்டாரு. அவருக்கு தன் மனைவியோட உணர்வுகளுக்கு நேரம் ஒதுக்க தெரியல. உங்க அம்மா, கணவனோட கவனிப்பு கிடைக்காத அந்த ஏமாற்றத்தை லேடிஸ் கிளப், ஃபிரண்ட்ஸ்னு வெளிய தேடிக்கிறாங்க. இது ஒரு 'Vicious Cycle'. ஒருத்தர் விலக விலக, இன்னொருத்தர் இன்னும் தூரமா போயிட்டே இருக்காங்க."
 
​மனோ மெல்லிய சலிப்போடு கண்களை மூடித் திறந்தான். அந்த அறையின் நிசப்தம் அவனது விரக்தியை இன்னும் அதிகமாக்கியது.
 
"ஆமா... ஆனா அவங்களை எப்படி சேர்த்து வைக்கிறதுன்னு தான் தெரியல. நானும் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். கேட்கவே மாட்டேங்குறாங்க... எப்பவும் சண்டை தான்."
 
​மைதிலி: லுக் மனோ... இனிமேல் 'பேசிப் புரியவைக்கலாம்' என்கிற ஸ்டேஜை அவங்க தாண்டிட்டாங்க. 'சொல்றது' அங்கே வேலைக்கு ஆகாது. ஆனா, அவங்க ரெண்டு பேரோட Diverging paths ஐ intersect பண்ண வைக்கிற அந்த 'ஒற்றைப் புள்ளி' நீ மட்டும்தான்.
 
​மனோ: (குழப்பமாக) "நானா? நான் எப்படி?"
 
​மைதிலி: "வீட்ல இப்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பணம் பேர் புகழ் எல்லாம் தேவைக்கு அதிகமாவே இருக்கு. நீயும் ஒரு சமர்த்தான பையனா, அப்பா அம்மா பெயரை காப்பாத்துற பையனா இருக்கிறதுனால, அவங்களுக்கு உன் மேல எந்தக் கவலையும் இல்லை. அதனாலதான் அவங்க ஆளுக்கு ஒரு திசையில 'Diverge' ஆகிப் போயிட்டு இருக்காங்க. ஆனா, ஒருவேளை உன் விஷயத்துல ஒரு பிரச்சனை வந்துச்சுன்னு வச்சுக்கோ... அவங்க ரெண்டு பேருமே தங்களோட பாதையில இருந்து உனக்காக திரும்பி வர வேண்டிய கட்டாயம் வரும்."
 
​மனோ: "புரியல... நான் என்ன பண்ணணும்னு சொல்ற?"
 
மைதிலி பதில் சொல்லவில்லை. ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பால்கனி கம்பிகளைப் பிடித்தபடி அந்த இருண்ட வானத்தை உற்றுப் பார்த்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு தன் முடிவில் உறுதியானாள்.
 
மைதிலி குரலில் 'கன்விக்சன்' ஏற...
"நீ பேசாம ஒண்ணு பண்ணு. ஒரு வாரம் வீட்ல யார்கிட்டயுமே சொல்லாம, எங்கேயாவது வெளியூருக்குப் போய் ரெஸ்ட் எடுத்துட்டு வா. கிளம்பறதுக்கு முன்னால உன் அப்பா அம்மாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பு. வீட்ல நிம்மதி இல்லை அதனால நான் எங்கேயோ போறேன்னு மெசேஜ் அனுப்பி விட்டுட்டு கிளம்பிரு. போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிரு. நீ எங்க இருக்கேன்னு யாருக்குமே தெரியக்கூடாது..." என்றாள்.
 
​மைதிலி சொன்ன அந்த 'பிளான்', மனோவின் வழக்கமான லாஜிக்கிற்கு சற்றும் பொருந்தாத ஒன்றாக இருந்தது.
 
"அப்படி பண்ணா என்ன நடக்கும்னு நினைக்கிற? I dont think this will workout. எங்க வீட்ல இருக்கிற தற்காலிக அமைதி கூட இதுல மொத்தமா 'டிஸ்டர்ப்' ஆகிடும்னு தோணுது."
 
​மைதிலி உறுதியான குரலில், "நீ காணாம போகும்போது, உங்க அப்பா பிசினஸை மறந்துட்டு ஓடி வருவாரு. உங்க அம்மா கிளப்பை விட்டுட்டு உன்ன நெனச்சு அழுவாங்க. உன்னைத் தேடுற அந்த பதற்றத்துல அவங்க ஒருத்தருக்கொருத்தர் பேச வேண்டியிருக்கும், ஒருத்தரை ஒருத்தர் தேத்த வேண்டியிருக்கும். ஒரு புள்ளியில அவங்க ரெண்டு பேரோட கைகளும் உனக்காக இணையும் பாரு... அந்த நொடியில அவங்க இழந்த அந்த 'அண்டர்ஸ்டாண்டிங்' திரும்ப கிடைக்கும். என்னை நம்பி நீ பண்ணித் தான் பாரேன்! நீ எனக்கு ரொம்ப முக்கியம். உன் அப்பா அம்மா என்னோட அப்பா அம்மா மாதிரி... அதனால நான் நிச்சயமா உனக்கு தவறான அட்வைஸ்ல்லாம் பண்ணிர மாட்டேன்.."
 
​மைதிலியின் பேச்சில் இருந்த தெளிவும், ஆழமான நம்பிக்கையும் மனோவை சிந்திக்க வைத்தது. இதுவரை தான் செய்யத் துணியாத ஒரு காரியம், ஆனால் அதன் பின்னால் இருக்கும் நோக்கம் எவ்வளவு உண்மையானது என்று அவனுக்கு புரிந்தது.
 
​மனோ: "நிஜமாவே இது ஒர்க் அவுட் ஆகும்னு நினைக்கிறியா?"
 
​மைதிலி: "உன் மேல அவங்க வச்சிருக்கிற அன்பு உண்மையா இருந்தா, கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். ஆகணும். நல்ல மனசோட தான் சொல்றேன். உன் மனசுல ஆழமா ஏற்பட்டிருக்கிற காயங்கள் இந்த பிரச்சனைல இருந்து தான் ஆரம்பிக்குது. அதனால இது சரியாச்சின்னா உன்னோட பிரச்சினைகளை பாதி சரியாயிடும். Think about it.. ஆனா எங்க போனாலும் என்கிட்ட பேசாம இருந்திராத... அட்லீஸ்ட் மெசேஜ் ஆவது பண்ணிரு... ஓகே குட் நைட்", என்று சொல்லிவிட்டு அவள் காலை டிஸ்கனெக்ட் பண்ண...
 
​மனோ ஜன்னல் வழியாக தெரிந்த புனே நகரத்தின் இரவு வெளிச்சங்களை பார்த்தான்.
 
அவள் சொன்ன அந்த 'அதிர்ச்சி வைத்தியம்' ஒருவகையில் அபாயகரமானதுதான். ஆனால், தன் குடும்பத்தின் சிதறிய துண்டுகளை ஒன்றாக இணைக்க இதைவிடச் சிறந்த வழி வேறொன்றும் இருக்கப்போவதில்லை என்பதை அவனது உள்மனம் அடித்து சொன்னது. "உன் அப்பாவும் அம்மாவும் என்னோட அப்பா அம்மா மாதிரி..." என்று அவள் சொன்ன அந்த ஒரு வரி, அவனது தயக்கங்கள் அனைத்தையும் சுட்டெரித்துவிட்டது.
 
உடனடியாக ஒரு சிறிய டிராவல் பேக்கை எடுத்தான். சில உடைகள், அவசியமான பொருட்கள்... அவ்வளவுதான். விடியற்காலை ஐந்து மணிக்கு அவன் இந்த வீட்டை விட்டு வெளியேறப் போகிறான். யாரிடமும் சொல்லாமல், எங்கே போகிறோம் என்று அவனுக்கே தெரியாத ஒரு பயணத்திற்கு அவன் தயாரானான். 
 
ஒருமுறை தன் மொபைலில் 'சன்ஷைன்' என்ற பெயரை பார்த்தான். 
 
 'சன்ஷைன்... நீ அடையாளம் தெரியாத ஒருத்தி இல்லை, என் வாழ்க்கையோட வெளிச்சம்' என்ற எண்ணம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது.
 
மறுநாள் காலை 9:30 மணி - யஷ்வந்த் ராவ் அலுவலகம்
 
​ஒரு முக்கியமான பிசினஸ் மீட்டிங்கிற்குத் தயாராகி கொண்டிருந்த யஷ்வந்த் ராவின் மொபைல் 'டிங்' என ஒலித்தது. அலட்சியமாக பார்த்தவரின் கண்கள் மெசேஜைப் படித்ததும் அப்படியே நிலைத்து நின்றன.
 
​"Dear Mom and Dad, a sense of loneliness engulfs me the moment I step into our home. நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசையில நின்னு சண்டை போட்டுட்டு இருக்கும்போது, நடுவுல நான் யாருக்காக வாழ்றேன்னு எனக்கே புரியல. உங்களோட இந்த இடைவிடாத சண்டைக்கு நடுவுல, நான் தேடுற அந்த ஒரு துளி நிம்மதி கூட இங்க எனக்கு கிடைக்கல. இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லைன்னு தோணுது. அதனால, என் மனசுக்கு நிம்மதி கிடைக்கிற இடத்தை தேடி நான் போறேன். என்னை தேடாதீங்க... - மனோ."
 
​யஷ்வந்த் ராவிற்குத் தலை சுற்றியது. கையில் இருந்த ஃபைல் நழுவித் தரையில் விழுந்தது. பல கோடி ரூபாய் பிசினஸை தெனாவட்டாக கையாளும் அந்த மனிதனின் கைகள் முதல்முறையாக நடுங்கின.
 
​அதே சமயம் - மனோவின் இல்லம்.
 
​சுலோச்சனா கண்ணாடி முன் நின்று தனது வைரத் தோட்டை சரிசெய்து கொண்டிருந்தாள். மொபைல் சிணுங்கியதும் ஏதோ கிளப் மெசேஜ் என்று நினைத்து அலட்சியமாக திறந்தாள். ஆனால், மனோவின் குறுஞ்செய்தியை படித்ததும், முதலில் திகைத்தாள், அதன்பிறகு மெசேஜின் வீரியம் தாக்க அதிர்ந்தாள்.
 
 
​"மனோ..." என்று மெல்ல முணுமுணுத்தவள், கையில் இருந்த ஜுவல்லரி பாக்ஸை அப்படியே மேஜை மேல் வைத்தாள். தடுமாற்றத்துடன் நடந்து அவன் அறைக்கு சென்றாள். அங்கே நிலவிய மனோ இல்லாத நிசப்தம் அவளை பயமுறுத்தியது. 
​அவளுக்கு அழுகையை விட குற்றவுணர்வு மேலோங்கியது. "நாங்க ரெண்டு பேரும் சண்டை போடுறது அவனுக்கு இவ்வளவு பெரிய வலியை தந்திருக்கா?' என்று முதல்முறையாக யோசித்தாள்.
 
​சரியாக அந்த நேரத்தில் யஷ்வந்த் ராவ் போன் செய்ய, எப்போதும் எடுக்காமல் தவிர்க்கும் சுலோச்சனா, இந்த முறை போன் அடித்த முதல் நொடியே அட்டென்ட் செய்தாள்.
 
​யஷ்வந்த் குரலில் பதட்டம். "சுலோச்சனா... மனோ உனக்கு ஏதாவது மெசேஜ் பண்ணானா? அவன் வீட்ல இருக்கானா?"
 
​சுலோச்சனா: "இல்லங்க... அவன் மெசேஜ் அனுப்பிட்டு எங்கேயோ போயிட்டான். ரூம் காலியா இருக்கு. அவன் நம்பருக்குக் கால் பண்றேன்... சுவிட்ச்-ஆஃப்னு வருதுங்க. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. இதுக்கு முன்னால என் புள்ள இப்படிப் பண்ணதே இல்லையே... அவனுக்கு ஒரு பிரச்சனையும் இருக்காதுல்ல..."
 
​சுலோச்சனாவின் அழுகை யஷ்வந்த் ராவிற்குள் இருந்த பிடிவாதத்தை உடைத்தது.
 
​யஷ்வந்த்: "பயப்படாத சுலோ... அவன் புத்திசாலி. தவறான முடிவு எதுவும் எடுத்துக்க மாட்டான். எங்கேயாவது ட்ரிப் போயிருப்பான். நீ டென்ஷன் ஆகாத... இப்போவே ஆபீஸ்ல இருந்து கிளம்பி வீட்டுக்கு வர்றேன். நம்ம பையனை எப்படியாவது கண்டுபிடிச்சிரலாம். நீ தைரியமா இரு."
 
​யஷ்வந்த் ராவ் மீட்டிங்கை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு தனது காரை நோக்கி ஓடினார். மறுபுறம் சுலோச்சனா, கையில் இருந்த கிளப் பேக்கை ஓரமாக தூக்கி எறிந்தாள்.
 
​பல வருடங்களாக ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டிருந்த அந்த தம்பதியினர், இன்று முதல்முறையாகத் தங்கள் மகனுக்காக ஒரே புள்ளியில் இணைந்து துடிக்கத் தொடங்கினர். மைதிலி சொன்ன அந்த 'அதிர்ச்சி வைத்தியம்' வேலை செய்ய தொடங்கியிருந்தது.
 
 
​இரண்டு நாட்களுக்கு பிறகு, காலை 9:30 மணி. 
 
கல்லூரி வளாகம் பரபரப்பாக இருக்க, கிளாஸ் வாசலில் நின்றிருந்த பாபியை நோக்கி மனிஷும் சந்தீப்பும் பதட்டமாக மூச்சிரைக்க ஓடி வந்தனர்.
 
​மனிஷ்: பாபி! என்னடா நடக்குது இங்க? காலையில மனோவோட அப்பா எனக்கு கால் பண்றாரு. மனோ உன் கூட இருக்கானா? கடந்த ரெண்டு நாளா மனோவை பாத்தியான்னு கேக்குறாரு. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. விசாரிச்சப்ப, ரெண்டு நாளா அவன் வீட்டிலேயே இல்லையாமே, அவங்கப்பா உடைஞ்சு போய் பேசினார். அவனை தேடிட்டு இருக்கோம். விஷயத்தை வெளியில சொல்லிராதபான்னு சொன்னப்ப, ரொம்ப பாவமா இருந்துச்சுடா..."
 
​சந்தீப்: "ஆமாடா, எனக்கும் போன் வந்துச்சு. போலீஸ் ஸ்டேஷன்ல 'மிஸ்ஸிங் கம்ப்ளைன்ட்' கொடுத்திருக்கிறதா சொன்னாரு. மனோ இப்படி சொல்லாம கொள்ளாம எங்கேயும் போக மாட்டானே... உன்கிட்ட ஏதாவது சொன்னானா? உண்மையை சொல்லுடா!"
 
​பாபி இருவரையும் அமைதியாக பார்த்தான். சுற்றும் முற்றும் யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு விஷயத்தை சொன்னான்.
 
​பாபி: "முதல்ல டென்ஷன் ஆகாதீங்க. அவன் சேஃபா தான் இருக்கான். நேத்து நைட் ஒரு எஸ்.டி.டி பூத்ல இருந்து எனக்கு கால் பண்ணினான். அவன் இப்போ 'அம்போலி' மலைப்பகுதியில ஒரு ரிசார்ட்ல தங்கியிருக்கான்."
 
மனிஷ் மற்றும் சந்தீப்பிற்கு அதிர்ச்சி.
 
​சந்தீப்: "அம்போலியா? அங்க எதுக்குடா போனான்? இங்க அவங்க அப்பா அம்மாவை டென்ஷனாகிட்டு அங்க எதுக்கு போய் ஜாலியா இருக்கிறான்? இன்னும் ரெண்டு நாள்ல அவனுக்கு பர்த்டே வருது. ஆல்ரெடி காலேஜ் சேட்ரூமில் எல்லாம் அவனுக்கு அட்வான்ஸ் விஷஸ் பறந்துட்டு இருக்கு. பர்த்டே பார்ட்டி கொடுக்கணும். நெக்ஸ்ட் வீக் கல்ச்சுரல் கிளப்ல சொற்பொழிவு ஆத்தணும். இப்படி எல்லாத்தையும் பாதியில விட்டுட்டு போனா எப்படி?"
 
​பாபி மெதுவாக மைதிலி கொடுத்த அந்த ஐடியாவையும், மனோ எதற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தான் என்பதையும் விளக்கினான். விஷயத்தைக் கேட்ட மனிஷும் சந்தீப்பும் சிறிது நேரம் வாயடைத்து நின்றனர்.
 
​மனிஷ்க்கு உலக மகா டென்ஷன்: "பைத்தியமடா அவன்! யாரோ ஒரு பேரு, ஊர் தெரியாத ஒருத்தி சொன்னான்னு கேட்டுட்டு, பெத்தவங்களை இப்படி டென்ஷன் படுத்துவானா? அந்தப் பொண்ணு சொல்றதெல்லாம் இவனுக்கு வேதவாக்கா? இது ரொம்ப ஓவர்டா!"
 
​பாபி: "ஆக்சுவலா... யோசிச்சு பார்த்தா இது ஒரு நல்ல ஐடியா தான். அவங்க அப்பாவையும் அம்மாவையும் சேர்த்து வைக்க இதைவிட ஒரு நல்ல ஐடியா கிடைக்காது. அந்தப் பொண்ணு ஒரு 'சைக்காலஜிக்கல் கேம்' ஆடியிருக்கா. ஆனா, எனக்கு என்ன கஷ்டமா இருக்குன்னா... அந்தப் பொண்ணு சொன்ன ஒரே வார்த்தைக்காக, யோசிக்காம இவ்வளவு பெரிய ரிஸ்க்கை மனோ எடுக்கிறான்னா, அவ வார்த்தைக்கு இவன் எந்த அளவுக்கு மதிப்பு கொடுக்கிறான் பாருங்க! இது எங்க போய் முடியப்போகுதுன்னு தெரியல."
 
​சந்தீப்: "டேய், இப்போதைக்கு அவன் சேஃப்பா இருக்கான்னு நமக்கு தெரியும். ஆனா அவங்க வீட்டுக்கு தெரியாது. அந்த பொண்ணு இவனை முழுசா தன் கண்ட்ரோல்ல வச்சிருக்கான்னு மட்டும் புரியுது. நாம இதுல உடனடியா தலையிட்டே ஆகணும். அந்த 'சன்ஷைன்' யாருன்னு தெரிஞ்சே ஆகணும். மனோவோட இந்த எமோஷனல் பலவீனத்தை அவ தனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிறாளோன்னு எனக்குப் பயமா இருக்கு."
 
​மனிஷ்: "You are right... அவன் பிளான் படியே அந்த ட்ரீட்மெண்ட் முடியட்டும். ஆனா, in the mean time, அவன் வர்றதுக்குள்ள அந்த பொண்ணு யாருன்னு கண்டுபிடிச்சே ஆகணும்.
 
​​மூவரும் தீவிரமாக ஆலோசித்து கொண்டிருந்தபோது, திடீரென அந்த இடத்தின் அட்மாஸ்பியரை மாற்றும் விதமாக ஒரு காஸ்ட்லியான 'பக்காரா ரூஜ் 540' பெர்ஃப்யூமின் அடர்த்தியான மணம் பரவியது. ஒரு வினாடி திகைத்து சைடில் திரும்பி பார்த்தால், ஸ்ரேயா அங்கே தனியாக வந்து நின்றாள். அவளது கண்கள் எதையோ துருவி தேடுவது போல மின்னின.
 
​ஸ்ரேயா: (தன் கூந்தலை அசால்டாக ஒதுக்கிவிட்டு) : "என்ன மிஸ்டர் பாபி? உங்க கேங்ல ஒரு ஆள் குறைச்சலா இருக்கே... ஸ்டுடென்ட் சேர்மன் சார் எங்கே?" என்று கேட்க,
​மூவரும் ஒரு நொடி திடுக்கிட்டாலும், பாபி சட்டென்று சுதாரித்துக் கொண்டான்.
 
​பாபி: "ஓ... அதுவா? அவங்க வீட்ல ஒரு முக்கியமான 'ஃபேமிலி ஃபங்ஷன்'. அதான் ஊருக்குப் போயிருக்கான். ஒரு வாரம் ஆகும் வரதுக்கு."
 
ஸ்ரேயா அவர்களை மேலிருந்து கீழ் வரை ஒருமுறை அளவெடுப்பது போல சந்தேகமாகப் பார்த்தாள். அவளது பார்வையில் 'ஏதோ ஒரு பெரிய விஷயத்தை என்னிடம் மறைக்கிறீர்கள்' என்ற மௌனமான சவால் இருந்தது.
 
​ஸ்ரேயா: (சந்தேகமாக புருவத்தை உயர்த்தி) "Family function? That's strange! மனோ என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலையே? I mean, usually மனோ கே கர் மே குச் பி ஹோதா ஹை, தோ வோ ஸப்ஸே பெஹ்லே முஜே ஹீ பத்தாதா ஹை... (மனோ வீட்ல எது நடந்தாலும், அவன் முதல்ல என்கிட்ட தான் சொல்லுவான்).
​But now... leave alone a call, ஏக் மெசேஜ் தக் நஹி கியா உஸ்னே! (ஒரு மெசேஜ் கூட அவன் பண்ணல). It sounds very fishy... isn't it?"
 
பாபி: இல்ல... இது unexpected ப்ரோக்ராம். அதனால யாருக்கும் இன்பார்ம் பண்ண முடியல...
 
ஸ்ரேயா: (மெதுவாக தலையசைத்து) "சரி ஓகே...bye," என்று மிக அலட்சியமாக கூறிவிட்டு, ஒரு 'கேட்வாக்' பாணியில் மிக ஸ்டைலாக திரும்பி நடந்தாள்.
 
​அவள் சென்ற பிறகு, அவள் பூசி வந்த அந்த பெர்ஃப்யூமின் அதீத மணம் அந்த இடத்திலேயே தங்கிவிட, மூவரும் ஒருசேர தலையை பிடித்துக்கொண்டனர்.
 
​சந்தீப்: "அபே யார்! இஸ்கி பெர்ஃப்யூம் கி ஸ்மெல் ஸே தோ மேரா ஸர் ஃபட்டா ஜா ரஹா ஹை (அடப் பாவிங்களா! இவ பெர்ஃப்யூம் வாசனையில என் தலையே வெடிச்சிடும் போலருக்கே)... வழக்கமா இவளை சுத்தி ஒரு நாலஞ்சு பேர் ஈ மொய்க்கிற மாதிரி மொய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. இவளுக்கு பின்னாடியே ஒரு கூட்டமே சுத்தி சுத்தி வரும். ஆனா இப்போ என்னடான்னா... தனியாவே வர்றா, தனியாவே போறா. யார்கிட்டயும் பெருசாப் பேசுறது கூட இல்லை. இவளுக்கு என்னதான் ஆச்சு? ஏதாவது பிரச்சனையா இருக்குமோ?"
 
​பாபி: "yes... சலோனியும் பிரணவியும் கூடவே வருவாங்க... ஆளையே காணல, விசாரிக்கணும். ஆனா இப்போ முக்கியமானது அந்த 'சன்ஷைன்' மேட்டர். எனக்கு என்னவோ அவ நம்ம காலேஜ் பொண்ணுதான்னு ஆணித்தரமாத் தோணுது. என்கிட்ட இருக்கிற அவளோட நம்பரை செக் பண்ணிப் பார்த்தேன், அது ஒரு 'ஹட்ச்' (Hutch) நம்பர் மாதிரிதான் இருக்கு. அட்ரஸ் fakeனு கன்ஃபார்ம் ஆகிடுச்சு. ஹட்ச் நெட்வொர்க்ல வேலை செய்யுற யாரையாவது பிடிச்சா, இந்த நம்பர் இப்போ எந்த 'லோக்காலிட்டில' ஆக்டிவா இருக்குன்னு கண்டுபிடிச்சிரலாம்."
 
​மனிஷ்: "good idea!!! நம்ம காலேஜ் ஏரியாவா? இல்ல ஹாஸ்டல் ஏரியாவான்னு தெரிஞ்சாலே போதும்... அதுக்கப்புறம் ஆளை தூக்குறது ஈசி. ஆனா, அந்த நெட்வொர்க்ல நமக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?"
 
​சந்தீப்பும் மனிஷும் "யாரை பிடிக்கலாம்?" என்று தீவிரமாக யோசனையில் ஆழ்ந்தனர். அப்போது தூரத்தில் சிக்கியும், கையில் ஒரு கற்பனை கேமராவை வைத்துக் கொண்டு எதையோ 'ஃபிரேம்' செய்தபடி டைரக்டரும் வருவதைக் கண்டதும், பாபி சைகை காட்டினான்.
 
​பாபி: "டேய்... ரெண்டு பைத்தியமும் வராங்க. டாபிக்கை மாத்துங்க... இவங்க கிட்ட இந்த விஷயம் போகக் கூடாது. போனா ஊர் பூரா தம்பட்டம் அடிச்சிருவானுங்க!"
 
​உடனடியாக மூவரும் கிரிக்கெட் மேட்ச் பற்றிப் பேசுவது போலப் பாவனையை மாற்றிக் கொண்டனர். சிக்கி அவர்களை ஒரு விசித்திரமான பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான்.
 
டைரக்டர் சட்டென்று நின்று, தன் கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களை ஒரு 'வைட் ஆங்கிளில்' பார்ப்பது போலப் பார்த்தான். 
​அப்போது டைரக்டர் (மைண்ட் வாய்ஸ்): 
 
"பார்த்தீங்களா... என்கிட்ட விஷயத்தை மறைக்கிறாங்களாம்! மனிஷ், சந்தீப்... உங்க ஆக்டிங் ரொம்ப வீக்கா இருக்குப்பா! ஆனா ஒன்னு... இந்த டைரக்டருக்கு தெரியாம இந்த கதையில ஒரு துரும்பு கூட அசையாது. என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... கதை இன்னும் முடியல!"
 
சிக்கியை நோக்கி சென்று அவனுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.
 
மதியம்.
 
கல்லூரி கேண்டீன் வழக்கம்போல சத்தத்தாலும் சலசலப்பாலும் நிரம்பி இருந்தது. டீ கிளாஸ்களின் சிணுங்கல், மாணவர்களின் சிரிப்பு, எங்காவது ஒரு மூலையில் ஓடும் சினிமா டிஸ்கஷன் — எல்லாம் கலந்து ஒரு பரபரப்பான பின்னணியை உருவாக்கி இருந்தது.
 
அந்த கூட்டத்தில் இருந்து சற்று ஓரமாக, ஒரு மேசையைச் சுற்றி சஞ்சு, இந்து, மைதிலி மூவரும் அமர்ந்திருந்தனர்.
 
சஞ்சு கையில் இருந்த கோக் பாட்டிலை மெதுவாக சுழற்றிக்கொண்டே மைதிலியை கவனித்தாள். மைதிலியின் முகத்தில் ஒரு தெளிவான அமைதி இருந்தது. தான் செய்யப்போகும் காரியத்தின் ஆழத்தை உணர்ந்த ஒரு நிதானம்.
 
“மைதிலி…” என்று சஞ்சு மெதுவாக தொடங்கினாள்.
 
“நீ இப்படி இன்னும் எவ்வளவு நாளுக்கு இருக்க போறே?”
 
மைதிலி புரியாத மாதிரி அவளைப் பார்த்தாள்.
 
“என்ன?”
 
இந்து: “நீ யாரு என்னன்னு தெரியாம மனோ உன்னோட இவ்வளவு attach ஆயிட்டான். இப்போ நீ சொல்லுறதெல்லாம் அவன் கேட்கிறான்… follow பண்ணுறான்… even வீட்டைவிட்டு போற அளவுக்கு…”
 
அந்த வார்த்தை மைதிலியின் முகத்தில் ஒரு நொடிக்கு நிழலை வீசியது.
 
சஞ்சு சற்றே முனைந்து, குரலை தாழ்த்தி,
 
“இதுக்கு மேலயும் நீ யாருன்னு சொல்லாம இருக்கிறது சரி இல்ல மைதிலி…” என்றாள்.
 
அந்த ஒரு வரி — நேராக அவள் மனசுக்குள் விழுந்தது.
 
மைதிலி கீழே பார்த்தாள். அவள் விரல்கள் மேசையின் விளிம்பை மெதுவாக தடவிக் கொண்டிருந்தது. அவள் பேசாமல் அமைதியாக இருந்தாலும்....
அவள் உள்ளே ஓடிய எண்ணங்கள் — வேகம் அதிகமாய் இருந்தது.
 
இந்து மெதுவாக அவளது தோளில் கை வைத்தாள்.
 
“நாங்க உன்னை பயமுறுத்தல… ஆனா… நீயும் அவனையும் இப்படி கெஸ்ஸிங்ல வைக்கக் கூடாது. அவன் உன்ன நம்புறான் மைதிலி… அந்த நம்பிக்கையை நீ ரொம்ப நாள் இழுக்க முடியாது.”
 
மைதிலி: “நான்… எப்படி...எனக்கு…எனக்கும் தெரியுது. இது ரொம்ப நாளா இப்படி போக முடியாது…” என்று தயக்கமாக, பேச்சை முடிக்க முடியாமல் இழுத்தாள்... சற்று முன்னால் தெரிந்த தெளிவு இப்போது இல்லை.
 
சஞ்சு: “அப்படின்னா?”
 
மைதிலி கண்களில் இன்னும் தயக்கம் இருந்தது. ஆனாலும் — அதுக்குள் ஒரு முடிவு முளைக்க ஆரம்பித்திருந்தது.
 
“கொஞ்சம் பயமா இருக்கு… இருந்தாலும் நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நாளைக்கு அவனை வெயிட் பண்ண வைக்க முடியாது தான்..." என்றாள்.
 
சஞ்சுவும் இந்துவும்... என்ன சொல்ல போகிறாள் என்பதை போல அவளை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க,
 
மைதிலி சில நொடிகள் கண்களை மூடினாள். மனோவின் குரல், அவன் வார்த்தைகள், அவன் நம்பிக்கை — எல்லாம் அவள் நினைவில் ஒலித்தது.
 
மீண்டும் கண்களை திறந்தாள்.
 
“இன்னும் ரெண்டு நாள்ல அவன் birthday வருது…..அன்னைக்கு…” என்று ஒரு சிறிய இடைவெளி.
 
“நான்… யாருன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன்…”
 
என்று அவள் சொல்லி முடித்ததும்,
அவளுக்குள்ள இருந்த சுமை கொஞ்சம் குறைந்தது.
 
சஞ்சு முகம் முழுக்க புன்னகை பரவியது.
 
“அதுதான் correct!”
 
இந்து திருப்தியாக தலையசைத்தாள்.
 
“Lateஆனா கூட right decision…”
 
மைதிலி சிக்கனமாக சிரித்தாள்.
 
ஆனா — அந்த சிரிப்புக்குள் இன்னும் ஒரு பயம் இருந்தது.
 
அவன் என்ன நினைப்பான்…?
 
அவன் விஷயம் தெரிஞ்சதும் பழைய மாதிரி இருப்பானா…?
 
அந்த கேள்விகள், பயங்கள் இன்னும் அவளை விட்டு போகவில்லை.
 
ஆனா — முதல்முறையாக
 
அவள் ஓடாமல்,
 
அந்த பயத்தை எதிர்கொள்ள முடிவு செய்திருந்தாள்.
 
தொடரும்…


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 21 A
 
 
 காலை 10:30 மணி - கல்லூரி வளாகம்
 
​மறுநாள் மனோவின் பிறந்தநாள் என்பதால், கல்லூரி முழுவதும் கொண்டாட்ட மனநிலை பரவி இருந்தது. ஆனால், மைதானத்தை விட அதிகமாக சலசலப்பு நிலவியது 'MSN Messenger' சேட் ரூம்களில் தான். காலேஜ் சேட்ரூம்கள் மனோவைப் பற்றிய செய்திகளால் நிறைந்திருந்தது.
 
​பாபி, மனிஷ், பிரேம், சிக்கி மற்றும் டைரக்டர் ஆகியோர் கேண்டீன் மரத்தடியில் chat room விவாதங்களை ஆச்சரியமாகப் பார்த்து கொண்டிருந்தனர்.
 
​பாபி: "டேய்... நம்ம சேர்மன் ஆளே இல்லனாலும், சேட் ரூம்ல அவன் தான் 'ட்ரெண்டிங்'. Girls எல்லாரும் அட்வான்ஸ் விஷ் பண்ணி மெசேஜ் அள்ளித் தெளிக்குதுங்க! மாஸ்ரா அவன்!!! 
 
நெட் சென்டர்க்கு போயிட்டு வந்த சந்தீப், அவர்கள் அளவளாவலில் இணைந்து கொண்டான்.
 
சந்தீப்: டேய் விஷயம் தெரியுமா? சிந்தூரின்னு ஒரு பர்ஸ்ட் இயர் பொண்ணு மனோ கூட எடுத்த போட்டோவை போட்டு பண்ண விஷ் தான் வைரலா போயிட்டுருக்கு.
 
​முதலாம் ஆண்டு மாணவி சிந்தூரி, போன மாதம் ஒரு காலேஜ் ஃபங்ஷனில் மனோவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு, "Advance Birthday Wishes to my favorite senior Mano!" என்று கேப்ஷன் கொடுத்திருந்தாள்.
​அவ்வளவுதான், அடுத்த சில நிமிடங்களில் அந்தப் புகைப்படம் ஒரு பெரிய 'ட்ரால் மெட்டீரியலாக' மாறி இருந்தது. அவளை அனைவரும் கலாய்த்து தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.
 
​சந்தீப்: "அபே யார்... யே க்யா ஹோ ரஹா ஹை? (அடப் பாவிங்களா... இது என்ன நடக்குது?) பாவம் அந்த பொண்ணு சிந்தூரியை வச்சு செய்றாங்களே!"
சேட் ரூமில் கமெண்ட்கள் அனல் பறந்தன. சிந்தூரி மாநிறத்திற்கும் குறைவான நிறம் என்பதால், மனோவின் பக்கத்தில் அவள் நிற்பதை மாணவர்கள் கொடூரமாக கிண்டல் செய்திருந்தனர்.
​ஒரு கமெண்ட் இப்படி இருந்தது: "தக்காளி பக்கத்துல, யாரோ தார் ஊத்தின மாதிரி இருக்குடா!"
​இன்னொருவன், "மனோ... ப்ரோ, உங்க பர்சனாலிட்டி எங்க? இவ எங்க? மேட்ச் ஆகவே இல்லையே!" என்று பதிவிட்டிருந்தான். விஷயத்தை சந்தீப் சொன்னதும்,
 
​மனிஷ்: "ரொம்ப ஓவர்டா இது. அந்த பொண்ணு ஆசைப்பட்டுப் போட்டோ போட்டா, இப்படி அவ நிறத்தை வச்சு அசிங்கப்படுத்துறது தப்பு இல்லையா? ஒருத்தரோட கலரை வச்சு இப்படி கம்பேர் பண்றது bullying மாதிரி இருக்கு.
 
​சந்தீப்: "கரெக்டா சொன்ன மனிஷ். சிந்தூரி எனக்கும் தெரியும. அவளுக்கு மனோ மேல ஒரு மரியாதை. அதனால ஆசைப்பட்டு போட்டுச்சு. மனோ மட்டும் இங்க இருந்தா, இந்த கமெண்ட் போட்டவனுங்களை வெளுத்து வாங்கியிருப்பான். 
 
​அப்போது டைரக்டர் தன் கற்பனை கேமராவை ஸ்கிரீன் பக்கம் திருப்பி, ஒரு 'க்ளோசப் ஷாட்' வைப்பது போல சைகை செய்தார்.
 
​டைரக்டர் (மைண்ட் வாய்ஸ்): "பார்த்தீங்களா... நிஜ உலகத்தை விட இந்த டிஜிட்டல் உலகம் ரொம்பக் கொடூரமானது. ஒரு அழகான தருணத்தை எப்படி ஒரு 'pathetic சீன்' ஆக்குறாங்க பாருங்க! கலர் முக்கியம் இல்ல பாஸ், மனசு தான் முக்கியம். ஆனா இவனுங்களுக்கு எப்போ புரியப்போகுதோ? இந்த 'ட்ரால்' சீனால நாளைக்கு மனோவோட பர்த்டேல ஏதாவது ட்விஸ்ட் வருமா? கேமரா ரோலிங்... அடுத்த ஷாட் என்னன்னு பார்ப்போம்!"
 
டைரக்டர் தன் 'ஆஸ்கார்' லெவல் மைண்ட் வாய்ஸை முடித்துவிட்டு சிக்கியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
 
​கேண்டீனின் மறுபுறம், ஒரு அமைதியான மூலையில் மைதிலி, சஞ்சு மற்றும் இந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் இருந்த உணவை விட, சிந்தூரி பற்றிய செய்திகள் தான் அவர்களை அதிகம் உலுக்கியிருந்தது.
​சிந்தூரியின் புகைப்படத்திற்கு கீழே வந்திருந்த அந்த வக்கிரமான கமெண்ட்கள் மைதிலியின் முகத்தில் இருந்த தெளிவை மெல்ல மெல்ல மறைத்திருந்தன.
 
​மைதிலி: "பார்த்தீங்களா... ஒரு போட்டோ போட்டதுக்கே அந்தப் பொண்ணை இவ்வளவு தூரம் 'புல்லி' பண்றாங்க. 
'தக்காளியில் தார் ஊற்றின மாதிரி இருக்கு'ன்னு சொல்ற அளவுக்கு இவங்க மனசு எப்படிப் போகுது?" குரல் உடைந்து மறுபடியும் தயக்கம் பற்றியிருந்தது.
 
சஞ்சு: "People can be so heartless when they are behind a screen, Chutki!"
 
​மைதிலி: "உண்மையை சொல்லணும்னா... சிந்தூரியை விட நான் இன்னும் ஒரு ஷேட் கம்மி தான். அவளைப் பார்த்தே இப்படி சொல்றாங்கன்னா, நான் மனோ பக்கத்துல நிக்கிறதுக்கு கூட எனக்கு எந்த தகுதியும் இல்லைன்னு தான் சொல்லுவாங்க. அப்புறம் எனக்கு என்னவெல்லாம் ட்ரால் வரும்? அதைவிட... என்னால மனோவை எப்படில்லாம் கிண்டல் பண்ணுவாங்க. அவனோட லெவல் எங்க? நான் எங்க?
 
​இந்து: "Oh please! Don't start that 'Insecurity' tape again, chutki!"
 
​மைதிலி உறுதியாக, "இல்ல இந்து. என்னால மனோவுக்கு எந்தக் கெட்டப் பெயரும் வர வேண்டாம். அவன் லெவலே வேற. அவனோட இமேஜ் இந்த மாதிரி அசிங்கமான கமெண்ட்களால உடையக்கூடாது. மனோவோட பர்த்டே அன்னைக்கு என்னை வெளிப்படுத்திக்கலாம்னு நினைச்சேன்... ஆனா இப்போதைக்கு வேண்டாம். Let's wait and see", என்றாள்.
 
​மைதிலியின் இந்தத் திடீர் பின்வாங்கலை சஞ்சு ஆமோதித்தாள்.
 
​சஞ்சு: "I get you, Chutki.இப்போதைக்கு இந்த 'Chat room' நச்சரிப்பு அடங்குற வரைக்கும் சைலண்டா இருக்கிறதே பெட்டர். Sometimes, being invisible is the ultimate protection for the person we love."
 
இந்துவுக்கும் புரிந்தது.
 
சஞ்சு: but one thing மைதிலி... மனோ கூட பாபின்னு ஒருத்தன் இருக்கான். He is the mastermind of their gang. I’ve heard he’s incredibly sharp and always the one giving tactical advice to Mano in every crisis. மனோ அவன்கிட்ட எதையுமே மறைக்கிறது இல்லைன்னு கேள்விப்பட்டிருக்கேன். உன் விஷயம் மட்டும் பாபிக்கு தெரிஞ்சது... நிச்சயமா நீ யாருன்னு கண்டுபிடிக்காம விடமாட்டான். ஜாக்கிரதையா இரு!"
 
​மைதிலி இதழோரம் ஒரு சிறு புன்னகை அரும்பியது. "நான் அழகில்லை" என்கிற தாழ்வு மனப்பான்மை அவளது தன்னம்பிக்கையை சற்று அசைத்துப் பார்ப்பது நிஜம்தான். ஆனால், அந்த பலவீனம் அவளது அறிவாற்றலை ஒருபோதும் தொட்டதில்லை.
 
​மைதிலி: " கவலைப்படாதீங்க! எவ்வளவு பெரிய புத்திசாலியா இருந்தாலும் சரி, நான் என்னைக்கு என்னை வெளிப்படுத்திக்கணும்னு நினைக்கிறேனோ, அன்னைக்கு மட்டும்தான் என்னை கண்டுபிடிக்க முடியும். நான் பார்த்துக்கிறேன்!"
 
மைதிலி சொல்லி முடித்ததும், கேமரா அவளது முகத்தை நோக்கி மிக நெருக்கமாக (Extreme Close-up) நகர்கிறது. அவள் மெதுவாகத் தலைநிமிர்ந்து, நேராக கேமராவை பார்த்து ஒரு குறும்புத்தனமான புன்னகையை உதிர்க்கிறாள்.
 
​அதே நேரம் - வெளியே மரத்தடியில்,
 
​பாபியின் போன் ரிங் டோனை வெளியிட... எடுத்து பார்த்துவிட்டு ஓரம் கட்டி சென்று பேசினான். ஒரு நிமிடம் பேசி பேசி முடித்து விட்டு வந்து, hutch கஸ்டமர் கேர் நண்பன் தான் பேசியதாக எல்லோரிடமும் தெரிவித்தான்.
 
​பாபி: "டேய்... எக்ஸாக்ட் பின்-பாயிண்ட் லொகேஷன்லாம் சொல்ல முடியாதாம். ஆனா, அந்த 'ஹட்ச்' சிம் கார்டு கடைசியா லேட்ச் ஆன டவர் ஐடியை வச்சு ஒரு குத்துமதிப்பான லொகேஷன் சொல்லிருக்கான்."
 
​சந்தீப்: "அப்படின்னா எந்த ஏரியாடா?"
 
​பாபி: "நம்ம SSG காலேஜ் சுத்தி இருக்கிற மூணு கிலோமீட்டர் ரேடியஸ்ல தான் அந்தப் பொண்ணு இருக்கா. டவர் சிக்னல் நம்ம காலேஜ் கேம்பஸ், அப்புறம் பக்கத்துல இருக்கிற இன்ஜினியரிங் காலேஜ், கண்டாலா டவுனின் ஒரு பகுதி... இது எல்லாத்தையும் கவர் பண்ணுது. ஆனா ஒண்ணு கன்ஃபார்ம் ஆயிடுச்சுடா... அவ கண்டிப்பா நம்ம காலேஜ் பொண்ணுதான்!"
 
​மனிஷ்: "எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"
 
​பாபி: "தெரியலடா... ஆனா மனோவோட ஒவ்வொரு அசைவையும் அவ கவனிச்சு அட்வைஸ் பண்ற ஸ்டைலை பார்த்தா, அவ நம்ம காலேஜ் அட்மாஸ்பியர்ல வளர்ந்த ஒருத்தியாத்தான் இருக்கணும்னு என் உள்மனசு சொல்லுது. She is definitely from our college!"
 
​சந்தீப் தன் தலைமுடியை வெறுப்பாக கோதிக்கொண்டான்.
 
​"ஆனா பாபி, காலேஜ்ல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க இருக்காங்களே... இதுல அந்த 'சன்ஷைன்' யாருன்னு எப்படி கண்டுபிடிப்ப?"
 
​பாபி கண்களில் ஒரு மின்னல் வெட்டியது. அவன் ஒரு கூர்மையான பார்வையை வீசிவிட்டு,
"வைக்கோல் போர்ல ஊசியை தேடுறது கஷ்டம்தான்... ஆனா மேக்னட்டை பயன்படுத்தினால் ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்! மனோ தான் அந்த மேக்னட்... அந்த மேக்னட்டை வச்சு அந்த ஊசியை நான் புடிக்கிறேனா இல்லையான்னு மட்டும் பாரு!" என்றான்.
 
அவனுக்கும் எக்ஸ்ட்ரீம் குளோசப். அவனது பார்வையில் அடுத்த 10 நகர்வுகளை முன்பே கணித்துவிட்ட ஒரு செஸ் பிளேயரின் தெளிவு.
 
​இப்போது திரை இரண்டாக பிரிகிறது - Split Screen.
 
இடதுபுறம் 'சன்ஷைன்' மைதிலி, வலதுபுறம் 'மாஸ்டர்மைண்ட்' பாபி — இருவரும் நேருக்கு நேர் கேமராவைப் பார்த்து (Breaking the 4th wall)....
 
ஒருவரையொருவர் சவாலுக்கு இழுப்பது போன்ற ஒரு கூர்மையான பார்வையில் ஃப்ரீஸ் ஆகிறார்கள்.
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 22
 
 
​காலை 11 மணி
 
மைதிலி கேண்டீனில் இருந்து கிளம்ப அவசர அவசரமாக புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தபோது, அவளது போனுக்கு ஓர் அழைப்பு வர...
 
தெரியாத எண்.
 
அட்டென்ட் செய்து பேசினாள்.
 
​"ஹலோ.. கண்டாலா போஸ்ட் ஆபீஸ்ல இருந்து பேசுறேன்ம்மா", ஒரு முதிர்ந்த ஆண் குரல்.
 
​"சொல்லுங்க."
 
"உங்களுக்கு ஒரு ரிஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு. ஏதோ புக் பார்சல் மாதிரி இருக்கு. காலேஜ் பக்கம் வர்றதுக்கு எனக்கு இன்னைக்கு வேலை இல்ல. இந்த ஒரு பார்சல் மட்டும்தான். அதான் நேர்ல வந்து குடுக்க முடியல. நீங்க வந்து வாங்கிக்க முடியுமா?"
 
​மைதிலி ஒரு நொடி யோசித்தாள். "சரிங்க சார், மதியம் லஞ்ச் இன்டர்வெல்ல வர்றேன்" என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தாள்.
 
​என்ன கிளம்பலாமா என்று இந்து கேட்க, மைதிலி சரி என்று தலையாட்டினாள். சஞ்சு கேண்டீன் கவுண்டருக்கு சென்று pay பண்ணி கொண்டு வர...மூவரும் கிளம்ப தயாரானார்கள்.
 
அடுத்த நொடி திடீரென்று ஏதோ ஒன்று உதைக்க... மைதிலி அப்படியே நின்றாள். போன் குரலில் இருந்தது செயற்கையான முதிர்ச்சி.
 
'எனக்கு யாரு புக் பார்சல் அனுப்புவாங்க?'
 
​சஞ்சு, இந்து, அம்மா, அப்புறம் மனோ... இவர்கள் நான்கு பேருக்கு தான் அவளது தொடர்பு எண் தெரியும். அம்மா அனுப்ப வாய்ப்பில்லை. சஞ்சுவும் இந்துவும் இங்கேயே அவளுடன் தான் இருக்கிறார்கள்.
மனோவிற்கோ அவள் எந்த கல்லூரியில் படிக்கிறா என்பதே தெரியாது. பின் யார் இது?
 
​உடனே சஞ்சு and இந்துவிடம் விசாரித்தாள். 
 
"நீங்க எனக்கு ஏதாவது புக் வாங்கி பார்சல் அனுப்புனீங்களா?"
சஞ்சு: ஏண்டி பக்கத்திலேயே இருக்கிற? நாங்க உனக்கு எதுக்கு புக் பார்சல் அனுப்ப போறோம்? வாங்கி கைலயே கொடுக்க மாட்டோமா? ஆர்டர் போட்டிருந்தா கூட சொல்லிருப்போமே.
 
இந்து: என்னாச்சு? என்று குழப்பத்துடன் கேட்க, மைதிலி நடந்ததை சொன்னாள்.
 
​"ஏதோ தப்பா படுதே... ஒருவேளை மனோவா இருக்குமோ?" - சஞ்சு.
 
மைதிலியின் கண்கள் யோசனையில் சுருங்கின.
 
​" May be...ஆனா மனோவை பார்த்தா அப்படி தெரியல. பாபியா இருக்கலாம்..."- இந்து
 
மைதிலி: "பாபியா இருக்கறதுக்கு தான் வாய்ப்பு ஜாஸ்தி..."
 
சஞ்சு: ஆனா நீ இந்த காலேஜ்தான்னு எப்படி ஐடெண்டிஃபை பண்ணிருப்பான்?
 
மைதிலி யோசித்தபடி,
"அது ஒரு சிம்பிள் கெஸ்ஸிங் தான் சஞ்சு. மனோவை பத்தின எல்லா விஷயமும் எனக்குத் தெரியுதுன்னா, நான் அவன் படிக்கிற இதே காலேஜை சேர்ந்தவளாத்தான் இருப்பேன்னு பாபி யோசிச்சிருக்கலாம். அந்த டவுட்லதான் இப்போ ஒரு செக் வைக்கப் பார்க்கிறான்", என்றாள்.
 
​​அதே சமயம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பில்டிங் ஜென்ட்ஸ் ரெஸ்ட் ரூம் முன்னால் நின்று கொண்டிருந்தான் பாபி. அடுத்த நொடி கையில் இருந்த கைபேசியை சுழற்றியபடி, ஒரு நிதானமான புன்னகையை சிந்தி விட்டு கிளம்பினான்.
 
​மதியம் ஒரு மணி. 
 
கண்டாலா போஸ்ட் ஆபீஸின் வாசலில் ஒரு ஓரமாக மறைந்து நின்று, உள்ளே வரும் ஒவ்வொரு பெண்ணையும் பாபி தன் கழுகுக் கண்களால் ஸ்கேன் செய்து கொண்டிருந்தான். நிமிடங்கள் ஓடியது, மணி இரண்டை தொட்டது. மைதிலி வரவில்லை.
​பாபியின் நெற்றியில் சந்தேக சுருக்கம். 
 
​"Damn it! What’s taking her so long?" - பாபியின் முகத்தில் லேசான எரிச்சல் படர்ந்தது. அவனது கணிப்பு எப்போதும் தப்பாது. ஆனால் இப்போது, காலியான போஸ்ட் ஆபீஸ் வாசல் அவனைப் பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது.
 
​இனி காத்திருப்பதில் பயனில்லை என்று நினைத்த பாபி, மீண்டும் மைதிலிக்கு அழைத்தான். அழைப்பு நீண்டது... ஆனால் அவள் எடுக்கவில்லை. மீண்டும் ஒருமுறை முயன்றான். அப்போதும் அவள் எடுக்கவில்லை.
 
​சட்டென அவனது போன் அதிர்ந்தது. ஒரு குறுஞ்செய்தி.
​பாபி அதைத் திறந்து பார்த்தான்.
 
​"சாரி, எனக்கு அந்தப் பார்சல் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். தேங்க்யூ பாபி!"
 
​பாபி அந்த மெசேஜை படித்துவிட்டு ஒரு நொடி திகைத்தான். பின், சத்தமில்லாமல் ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தான். 
 
​"வெரி ஸ்மார்ட்!" - அவன் உதடுகளில் முணுமுணுப்பு. 
 
​அவளது புத்திசாலித்தனத்தின் மீது அவனுக்கு இப்போது ஒருவிதமான போட்டி உணர்வு ஏற்பட்டது. பாபி ஆன்லைனில் கடலை போட்டு கொண்டிருக்கும் ஐடியை கூட கண்டுபிடிக்க வேண்டும் என்ற நினைப்பு அவனுக்கு வந்ததில்ல... ஆனால் இந்த sunshine ஐ கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று வெறி ஏற்பட்டது. உடனே அவளுக்கு ரிப்ளை அனுப்பினான்.
 
"Sunshine, you can't hide for long. I'll find out who you are... You can't escape from me!"
 
​மறுமுனையில் இருந்து சில நொடிகளிலேயே பதில் வந்தது. மிகவும் சுருக்கமாக, அதே சமயம் அழுத்தமாக:
 
​"Good Luck! :)"
 
போனை பாக்கெட்டில் வைத்தபடி மெல்ல நடக்க தொடங்கினான்.
 
​'சன்ஷைன்... நீ ரொம்ப புத்திசாலிங்கிறதை நான் ஒத்துக்குறேன். ஆனா, நீ நல்லவளா இருக்கணும்னு நான் அந்தச் சாமிக்கிட்ட வேண்டிக்கிறேன். ஏன்னா, மனோ உன்னை அந்தளவுக்கு நம்புறான். அவன் நம்பிக்கையை நீ காப்பாத்தணும். ஒருவேளை நீ அவனை ஏமாத்துறதா இருந்தா... இந்த பாபி சும்மா இருக்க மாட்டான்!' என்று தனக்குள் முணுமுணுத்து கொண்டான்.
 
அன்றைக்கு மாலை 5 மணி 
 
​SSG கல்லூரி கால்பந்து மைதானத்தின் பார்வையாளர்கள் அமரும் கான்கிரீட் கிராண்ட் ஸ்டாண்டில் டைரக்டர் மட்டும் தனியாக படுத்திருந்தான். ரேடியோ நியூஸ் சொல்வது போல இந்த சீனை வைத்தால் என்ன என்று திடீரென்று அவனுக்கு தோன்றியது...
 
அடடா!!! டைரக்டரு பின்றடா!
 
அவனுக்கு அவனே சபாஷ் சொல்லிக் கொண்டான்.
 
மைதானத்தில் மற்ற வீரர்கள் பயிற்சியில் இருக்க, ஜேம்ஸின் கையில் திடீரென்று கற்பனையாக ஒரு ரேடியோ முளைத்தது.
 
​அடுத்த விநாடி அந்த புகழ்பெற்ற சிக்னேச்சர் இசை ஒலிக்க, ஜேம்ஸ் தன் காதுக்கு அருகில் ரேடியோவை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றான்.
​"ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் ரங்கசாமி.
 
​தலைப்புச் செய்திகள்:
 
​புனே தொழிலதிபர் யஷ்வந்த் ராவ் குடும்பத்தில் நிலவி வந்த நீண்ட காலப் பனிப்போர் ஒரு முடிவுக்கு வந்தது.
​மகன் மனோ திடீர் என்று காணாமல் போனதை தொடர்ந்து, பெற்றோர்கள் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை மறந்து மீண்டும் இணைந்தனர்.
மனோவை தேடும் வேட்டை ஒரு சிதறிய குடும்பத்தை சீரமைத்த சுவாரஸ்யப் பின்னணி.
 
​இனிச் செய்திகள் விரிவாக...
 
​புனே நகரையே கடந்த நான்கு நாட்களாக காணாமல் போன மனோவை தேடுவது தொடர்பான விவகாரம் இன்று சுபமாக முடிவடைந்தது. நமது நேயர்களுக்குத் தெரிந்தபடி, தந்தை யஷ்வந்த் ராவ் மற்றும் தாய் சுலோச்சனா ஆகியோரிடையே நிலவி வந்த மனக்கசப்பு, மகனின் இந்த தற்காலிக பிரிவால் தகர்க்கப்பட்டுள்ளது.
​மகனைத் தேடி அலைந்த பயணத்தில், கசப்புகளையும் ஈகோவையும் வழியிலேயே விட்டுவிட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் மீண்டும் புரிந்து கொண்டனர்.  
 
கடந்த நான்கு நாட்களாக தலைமறைவாக இருந்த மனோ, பொதுத் தொலைபேசி வாயிலாக தனது நண்பன் பாபியை தொடர்புகொண்டு வீட்டு நிலவரத்தை கேட்டறிந்துள்ளார். தனது பிரிவால் பெற்றோர்கள் எந்த அளவிற்கு மனவேதனையிலும், அதே சமயம் ஒருமித்த தேடலிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர்ந்த மனோ ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.
​தனது கைபேசியை செயல்பாட்டுக்குக் கொண்டு வந்த மனோவிற்கு, அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது தந்தையிடமிருந்து நெகிழ்ச்சியான அழைப்பு ஒன்று வந்துள்ளது. பெற்றோரின் உருக்கமான பேச்சால் மனம் மாறிய அவர், உடனடியாக வீடு திரும்பச் சம்மதித்தார்.
 
​இன்று மாலை Deshmukh இல்லத்தின் வாசலில் மனோ வந்து நின்றபோது, அங்கு ஒரு நெகிழ்ச்சியான சூழல் நிலவியது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு யஷ்வந்த் ராவ் மற்றும் சுலோச்சனா தம்பதியினர் ஜோடியாக நின்று மகனை வரவேற்றது, புனே நகரின் இன்றைய முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
 
​தற்போது மனோ தனது பெற்றோருடன் நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், குடும்பத்தின் அமைதி மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
​செய்திகள் இத்துடன் நிறைவடைந்தன. மீண்டும் அடுத்த செய்தி அறிக்கையில் சந்திப்போம். வணக்கம்."
 
​டைரக்டர் முகத்தில் ஒரு மெல்லிய திருப்தி. கற்பனை ரேடியோவை பையில் போட்டுவிட்டு எழுந்தான்.
 
​அதே சமயம், 
 
​தன் அறையின் ஜன்னல் ஓரம் நின்றிருந்த மனோவின் முகம், பல நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் நிம்மதியாக பிரகாசித்தது. வாசலில் அவன் அப்பா அம்மாவின் கைகளைப் பற்றிப் பிடித்திருந்த அந்த நிமிடம், அவன் வாழ்வில் மறக்க முடியாத நிமிடங்களில் ஒன்று. உடனே அவன் 'சன்ஷைன்' மைதிலிக்கு அழைக்கிறான்.
 
​மனோ: (உற்சாகத்தில் குரல் தழுதழுக்க) "சன்ஷைன்! ஐ ஜஸ்ட் கான்ட் பிலீவ் திஸ்! இப்போதான் அப்பாவையும் அம்மாவையும் பார்த்தேன். ஒருத்தர் கையை ஒருத்தர் பிடிச்சுட்டு... அவங்க கிட்டருந்த அந்த அன்யோனியத்தை பார்த்து எனக்கு கண்ணே கலங்கிடுச்சு. நீ சொன்ன அந்த 'ஷாக் ட்ரீட்மென்ட்' நிஜமாவே ஒரு மேஜிக் பண்ணிருச்சு!"
 
​மறுமுனையில் கஃபே டூட்டியில் இருந்த மைதிலி ஒரு மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள். அந்தச் சிரிப்பில் ஒரு நல்ல காரியம் கைகூடிய திருப்தி மட்டுமே இருந்தது.
 
​மைதிலி நிதானமாக, "கேட்கவே சந்தோஷமா இருக்கு மனோ", என்றாள்.
 
​மனோ: "ஒரு சின்ன ஐடியா ஒருத்தரோட வாழ்க்கையையே மாத்தும்னு கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இப்போதான் நேர்ல பார்க்கிறேன்!"
 
​அவன் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்.
 
​மனோ: "தேங்க்ஸ்ங்கிற ஒரு வார்த்தை ரொம்பச் சின்னதுன்னு தோணுது சன்ஷைன். என் வாழ்க்கையோட பெரிய பாரத்தை இறக்கி வச்சிருக்க. நிஜமாவே இது எங்க குடும்பத்துக்கு புது ஆரம்பம் தான்!"
 
​மைதிலி மென்மையாக பதிலளித்தாள்.
"ரொம்ப எமோஷனல் ஆகாத மனோ. உங்க எல்லாரையும் ஒண்ணா பார்க்கணும்னு நினைச்சேன், அது நடந்துடுச்சு. அந்த சந்தோஷமே போதும். இனி நீ நிம்மதியா இருப்பல்ல... அதுதான் இந்த 'சன்ஷைன்' எதிர்பார்க்கிற ஒரே விஷயம்!.. அப்புறம் இன்னொரு விஷயம்... நேத்து உன் பிரண்டு பாபிகிட்ட இருந்து எனக்கு ஒரு போன் கால் வந்துச்சு. என்னை எப்படியாவது நேர்ல வரவழைக்க ஒரு சின்ன 'டிராப்' செட் பண்ணியிருந்தான்...." என்று நடந்த விஷயத்தை சொன்னாள்.
 
Sunshine யார்? எப்படி இருப்பாள்? என்று தெரிந்து கொள்ள மனோவுக்கு விருப்பம் இருந்தாலும், அவளை சங்கடப்படுத்தக் கூடாது என்பதில் அவன் உறுதியாக இருந்தான்.
 
மனோ: (சற்று சங்கடத்துடன்) "ஐயோ... really sorry Sunshine! நீ தப்பா நினைச்சுக்காத. பாபிகிட்ட நான் உன்னைப்பத்தி எதையும் சொல்லல. ஆனா அவன் ரொம்ப புத்திசாலி... நானே எதிர்பார்க்காத நேரத்துல என் மெசஞ்சர் ஐடியை ஹேக் பண்ணி உன்னைப்பத்தின விஷயங்களை கண்டுபிடிச்சிட்டான். என்மேல அவனுக்கு அக்கறை ஜாஸ்தி, அதான் நான் யார்கிட்ட பேசுறேன், எதுக்காக இப்படி இருக்கிறேன்னு தெரிஞ்சுக்க இவ்வளவு தூரம் இறங்கிட்டான். அவன் செஞ்சது தப்புதான், நான் அவன்கிட்ட பேசுறேன்..."
 
​மனோவின் பதற்றத்தை உணர்ந்த மைதிலி, மெல்லிய புன்னகையோடு அவனை இடைமறித்தாள்.
 
​மைதிலி: "நிச்சயமா நான் தப்பா நினைக்கல மனோ. சொல்லப்போனா iam happy for you. இந்த காலத்துல ஒரு நண்பனுக்காக இவ்வளவு மெனக்கெடுற பிரண்ட்ஸ் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். உனக்காக எதையும் செய்யுற பாபி மாதிரி ஒரு நல்ல நண்பன் உனக்கு கிடைச்சிருக்கான் பாரு... So please அவனைத் திட்டாதே!"
 
​மனோவிற்கு இப்போதுதான் உயிர் வந்தது. மைதிலியின் இந்த முதிர்ச்சியான அணுகுமுறை அவள் மீதான அவனது மரியாதையை இன்னும் பல மடங்கு உயர்த்தியது.
 
மைதிலி போனை துண்டித்த பின்பும், அந்த நிசப்தமான அறையில் அவளது குரலின் நிதானம் மட்டும் இன்னும் மிச்சமிருந்தது.
 
​மனோ கட்டிலில் சாய்ந்து கையில் இருந்த போனை பார்த்தான். அவனின் குடும்ப பிரச்சினையை தீர்த்துவிட்டு, எந்த ஒரு பெருமிதமும் இல்லாமல் "சந்தோஷம், நிம்மதியா இருங்க" என்று அவள் சாதாரணமாக சொல்லிச் சென்ற விதம் அவனுக்குள் ஏதோ ஒன்றை செய்தது.
 
​இதுவரை அவன் சந்தித்த பெண்கள் அனைவரும் அவனது தோற்றத்தையோ, அவனது குடும்பப் பின்னணியையோ பார்த்துத்தான் வியந்திருக்கிறார்கள். ஆனால், முதன்முதலாக ஒரு பெண், அவனது ஒட்டுமொத்த வாழ்வியலையும் ஒரு செஸ் போர்டை போல கையாண்டு, சிதறிக்கிடந்த காய்களை சரியாக அடுக்கி சீர் செய்திருக்கிறாள்.
 
​அந்தப் புத்திசாலித்தனத்தின் மீது அவனுக்கு ஒரு பிரமிப்பு உருவானது. அந்தப் பிரமிப்பு மெல்ல மெல்ல அவனது இதயத்தின் ஆழத்திற்குள் இறங்கி, ஒரு புதிய உணர்வாகப் படர தொடங்கியது. அது வெறும் நன்றியுணர்வு அல்ல; தன்னைக் காட்டிலும் ஒரு படி மேலாக சிந்திக்கும் ஒரு பெண்ணின் மீது பிறக்கும் அதீத மரியாதை கலந்த காதல்.
 
​"சன்ஷைன்..." என்று மெல்ல முணுமுணுத்து பார்த்தான்... அந்த வார்த்தை இப்போது அளவுக்கு மீறி அழகாக இருந்தது.
 
​இதுவரை அவளிடம் பேசியது ஒரு உண்மையான அன்பை தேடி... ஆனால் இந்த நிமிடம், அவனது தேடலின் மையம் மாறிவிட்டதை அவன் உணர்ந்தான். அவளது அறிவும் நிதானமும் மனோவை அவளோடு நிரந்தரமாகக் கட்டிப்போட்டுவிட்டது. ஏற்கனவே அவனுக்குள் துளிர்த்திருந்த காதல் அவனது ஆழ்மனதில் சத்தமில்லாமல், ஒரு மகா விருட்சமாக வளர தயாரானது.
 
கட் பண்ணினால்,
 
​காலத்தின் திரையில் ஒரு நீல நிறத் தூரிகை ஓவியம் தீட்டப்பட்டு கொண்டிருந்தது.
 
​நீலமும் சாம்பலும் கலந்த வானம், மௌனத்தின் மொழியில் ஏதோ ரகசியம் பேச, தூரத்து பனிமலை முகடுகளை மேகங்கள் வாஞ்சையுடன் முத்தமிட்டுக் கொண்டிருந்தன. கீழே, ஆகாயத்தின் நீலத்தை அப்படியே அள்ளிப் பருகிய கண்ணாடி ஏரி; அதில் மலையின் நிழல்களும் மேகங்களின் பிம்பங்களும் மிதக்கும் தோணிகளாய் அசைந்தன.
 
​அவளது பின்னிட்ட கூந்தலில் இருந்து தப்பித்த சில உதிரி இழைகள், தழுவிச் சென்ற காற்றில் நாட்டியமாடின.
அணிந்திருந்த வயலட் சுடிதாரின் பூக்கள், அந்தப் பனிப்புகை தூவலில் உயிர் பெற்றுச் சிலிர்த்தன. அது... மொழியில் வடிக்க முடியாத ஒரு சோகத்தின் பேரழகு! கவிதைத்தனமான கனவுவெளி.
 
​சுற்றிலும் இருந்த துலிப் மலர்கள் வண்ணங்களை சிதறவிட்டிருந்தன. பல்லாயிரம் மலர் கரங்களை அசைத்து அவை பனிக் காற்றுடன் மல்லுக்கட்ட, இடையிடையே சறுக்கி ஓடும் பனிப்புகை ஒரு மாயத் திரையை உருவாக்கியிருந்தது. 
 
அந்தத் திரைக்குப் பின்னால் அவன்... 
 
மேகங்களின் மடியில் அமர்ந்திருக்கும் தேவதூதனைப் போல! முகம் தெளிவாக தெரியவில்லை, ஆனால் அந்த மங்கலான வசீகரமே அவளது எண்ணங்களைச் சிதறடித்து, ஒருவித மந்தமான பரவசத்தில் அவளை ஆழ்த்தியது.
 
​ஈர உடையின் ஜில்லிப்பு மேனியைத் தழுவ, எங்கிருந்தோ கசிந்த அந்த மெல்லிய இசையின் தாளத்திற்கு ஏற்ப, துலிப் செடிகளை விலக்கிக்கொண்டு அவனை நோக்கி மைதிலி நகர்ந்தாள். 
 
நெருங்க நெருங்க அவனது காந்த விசை அவளை ஈர்த்தது. நெஞ்சுக்குள் ஒரு தாளம்; விழிகளில் ஒரு தேடல்.
​அந்தப் பனிப்புகை மெல்ல மெல்லக் கலைந்தது. 
 
மைதிலி நெஞ்சு கூடு திடும் திடும் என அடித்துக் கொண்டது. அவனது முகம் முழுமையாக தெரியப்போகும் அந்த இறுதி நொடியில்...
 
​காலத்தின் வேகம் குறைந்து, உலகம் ஒரு கணம் ஸ்தம்பித்து நிற்க, அவன் மெதுவாய் அவளை நோக்கித் திரும்பினான். அந்த நொடி, காலம் காலமாய் அவள் தேடிய விடை அவனது முகத்தில் தெரிந்தது.
 
அது மனோ!
 
​அவனது முகத்தை பார்த்த அந்த விநாடி, மைதிலியின் உள்ளத்தில் பூரிப்பு நிலவின் ஒளியாய் வழிந்தது. இதுவரை எதற்கும் அசைந்து கொடுக்காத அவளின் இதயம், அவனது அந்த ஒற்றை பார்வையில் ஒரு பனித்துளியாய் உருகியது. அவளது முகத்தில் படர்ந்த அந்தப் பரவசம், ஒரு கவிஞனின் ஆகச்சிறந்த வரிக்கு இணையானது. 
 
அவன் தான்... அவனேதான்... மனோ தான்.
​சட்டென மைதிலி கண்கள் திறக்க, படபடப்பு அறையின் நிசப்தத்தை உடைத்தது.
​மைதிலி திடுக்கென்று முழித்துப் பார்த்தாள். அந்தப் பேரானந்தத்தின் அதிர்வோடு மைதிலி கட்டிலில் எழுந்து அமர்ந்தாள். இதயம் இன்னும் அந்த பனிமலைக் கனவின் இசையில் துடித்துக் கொண்டிருந்தது.
 
​சுற்றிலும் நிசப்தம். அறையின் மங்கலான வெளிச்சத்தில் பக்கத்துக் கட்டில்களில் சஞ்சுவும் இந்துவும் எவ்வித சலனமும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். ஜன்னல் வழியே கசிந்த அதிகாலை ஐந்து மணியின் இளங்காற்று, அவளது கனவின் மிச்சங்களை சுமந்து வந்தது.
 
இதுவரை அவளுக்குள் இருந்தது பாசமா? நேசமா? அல்லது வெறும் நட்பா? என்ற ஆயிரம் கேள்விகள் அவளது புத்திசாலித்தனத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன. ஆனால், அந்தப் பனிப்புகை விலகிய அந்த ஒரு நொடி, அவனது முகத்தைக் கண்டபோது அவளுக்குள் ஏற்பட்ட அந்தப் பூரிப்பு... எல்லா தர்க்கங்களையும் உடைத்தெறிந்தது.
 
ஒரு உண்மை மட்டும் மெதுவாக வெளிச்சமாயிற்று.
 
கனவில் தோன்றும் உருவம்
மனதில் இருக்கும் உருவம்தான்.
 
அந்த எண்ணம்—
 
அவளது உள்ளத்தை ஒரு மென்மையான குற்ற உணர்வால் நிரப்பியது.
 
மறைத்துக் கொண்டிருந்த உணர்வு அவள் முன் வந்து நின்றது.
 
 
உதட்டோரம்—
 
ஒரு பயம்கலந்த புன்னகை.
 
இதயம்— அதை ஒப்புக்கொள்ளத் தொடங்கியது.
 
அவன்…
 
அவள் மனதுக்குள் நுழைந்துவிட்டான்.
 
​அது நேசமும் அல்ல, பாசமும் அல்ல... அது தெளிந்த நதியாய் ஓடும் காதல்! 
 
​"அதிகாலைக் கனவு பலிக்கும் என்பார்களே..." - அவளது உள்மனம் ரகசியமாய் முணுமுணுத்தது. இதுவரை அவளது கனவுகளில் முகம் தெரியாத ஒரு நிழலாக தெரிந்த உருவம், இன்று முதன்முறையாக தெளிவான சித்திரமாக மாறியிருந்தது.
 
​அவன் அவளது திட்டங்களின் ஒரு பகுதி மட்டுமல்ல, இப்போது அவளது கனவுகளின் நாயகனும் அவனே! அந்த உணர்வு அவளுள் ஒரு மெல்லிய நடுக்கத்தையும், இனம் புரியாத ஒரு பேரானந்தத்தையும் ஒருசேரக் கொடுத்தது.
 
SSG காலேஜ்
 
காலை 9:45 AM
 
​காலேஜ் மெயின் பில்டிங்கின் சதுர வடிவக் கட்டிடம் (முதல் தளம்)
 
​வெள்ளை நிறத் தூண்கள் வரிசையாக நிற்கும் அந்த பால்கனியில், இளையராஜாவின் இனிய புல்லாங்குழல் இசை மெல்ல ஒலிக்க தொடங்குகிறது.
எதிர்பக்க பால்கனியில் மனோ. நான்கு நாட்களுக்கு பிறகு காலேஜுக்கு வந்த உற்சாகம் அவன் முகத்தில். எதிரே இருந்த பசங்களிடம் ஏதோ ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறான். அந்தச் சிரிப்பு, சத்தமில்லாமல் ஸ்லோமோஷனில் மலர்கிறது.
மியூசிக்கில் வயலின் இழைகள் இணையும் போது கேமரா இந்தப்பக்க பால்கனிக்கு திரும்புகிறது. அங்கே மைதிலி. தோளில் ஒரு சைடாக காலேஜ் பேக், கையில் பேருக்கு ஒரு புத்தகம், ஆனால் அவளது மொத்த கவனமும் எதிர்பக்கம் இருக்கும் மனோ மீதுதான். அவள் இதழோரம் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது. வெறும் சந்தோஷத்தில் எழுந்த புன்னகை அல்ல... யாருக்கும் தெரியாமல் பூட்டி வைத்திருந்த ஒரு பிரியம், அவனது சிரிப்பை கண்ட மாத்திரத்தில் கட்டுக்கடங்காமல் வெளியே கசிந்ததன் அடையாளம். 
 
தன்னுள் ஏற்கனவே பூத்திருந்த அந்தக் காதலை, முதன்முதலாக அவள் முழுமையாய் உணர்கிறாள். அந்த உணர்வு, கையில் பிடித்து வைத்திருக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்பைப் போல அவ்வளவு மென்மையாக, அதே சமயம் நழுவிவிடுமோ என்கிற பயத்தை உள்ளடக்கிய பேரழகா அவளுக்குள் இருந்தது. தன் இதயமே தனக்குத் தெரியாமல் நடத்தும் இந்த நளினமான நாடகம் இவ்வளவு சுவாரஸ்யமானதா? தன்னைத் தொலைப்பதில் இத்தனை சந்தோஷம் இருக்குமா?
 
மனோ அந்த பசங்களிடம் விடைபெற்று நடக்க தொடங்குகிறான். அவன் நடக்கும் அதே திசையில், அவனுக்கு இணையாக இந்தப்பக்க பால்கனியில் மைதிலியும் நடக்கிறாள். இசை இப்போது இன்னும் துள்ளல் இசையாக மாறுகிறது.
​மனோ ஒரு பால்கனி தூணை கடக்கும்போது, மைதிலி பக்கமும் ஒரு தூண் குறுக்கிடுகிறது.
 
​அவன் மறைந்த அந்த ஒரு நொடி, மைதிலியின் முகத்தில் ஒரு சின்ன ஏக்கம். இசை சட்டென தாழ்வது போன்ற ஒரு உணர்வு.
 
​தூணைக் கடந்து அவன் மீண்டும் கண்ணில் படும்போது, அவளது கண்கள் மின்னுகின்றன. அந்தப் பரவசம் பின்னணி இசையின் ஏறுவரிசையோடு (Crescendo) கச்சிதமாக பொருந்துகிறது.
மழை நின்ற பின்னும் இலைகளிலிருந்து சொட்டும் நீர் துளிகள் போல, அவனது சிரிப்பு அவளுக்குள் ஒரு மௌனமான ரீங்காரத்தை எழுப்பியது. அந்தப் பால்கனியின் இடைவெளியை அவளது கண்கள் ஒரு மெல்லிய பாலமாக மாற்றியிருக்க, அங்கே அவன் சிந்தும் ஒவ்வொரு புன்னகையும் இவளது அமைதியான குளத்தில் விழும் சிறு கல்லென அலைகளை உருவாக்கியது. அவன் மகிழ்வாய் இருப்பதே தனக்கான வரமென்று, அவனது சந்தோஷத்தின் நிழலில் அவள் தன் காதலை ரகசியமாய் ரசித்து கொண்டிருந்தாள்.
 
மனோ நடந்து வரும் வழியில் சில மாணவிகள் ஓடி வந்து அவனை வழிமறிக்கிறார்கள். 
 
"Belated Birthday wishes Mano!" என்று அவர்கள் உற்சாகமாக கைகுலுக்குகிறார்கள். மனோ சிரித்தபடியே அவர்களுக்கு நன்றி சொல்கிறான்.
 
தூரத்தில் இதைப் பார்க்கும் மைதிலிக்கு ஒரு சின்னப் பொறாமை கலந்த ரசனை. 
 
"உனக்கு இவ்வளவு மவுசா?" என்பது போன்ற ஒரு பார்வை.
பால்கனியின் மூலை வரும்போது, இருவரும் சந்தித்துக் கொள்ள போகிறார்கள் என்பது போல ஒரு சூழ்நிலை உருவாகிறது. இருவருமே அந்தத் திருப்பத்தை நோக்கி வருகிறார்கள். பிஜிஎம் இப்போது உச்சத்தைத் தொடுகிறது.
 
​மனோ அந்தத் திருப்பத்தை நோக்கி வர, மைதிலி அங்கே ஒரு தூணுக்குப் பின்னால் சட்டென திரும்பி அவன் கவனிக்காதவாறு நின்று கொள்கிறாள். அவனது நிழல் அவள் மீது விழுந்து கடக்கிறது. அவன் அவளைக் கவனிக்கவில்லை. அவன் கடந்து சென்ற பின், அந்தத் தூணில் சாய்ந்து கொண்டு, அவனது முதுகைப் பார்த்தபடி ஒரு பெருமூச்சு விடுகிறாள்.
 
​அவளது இதயம் துடிக்கும் சத்தம், இசையின் அந்த இறுதி மெல்லிசையோடு ஒன்றிப் போகிறது. 
 
அதிகாலைக் கனவில் வந்த அந்த பனிப்புகை போல...
 
நிஜத்திலும், அவளுக்கும் அவனுக்கும் இடையே இந்தத் தூண்களும், ரகசியங்களும், இடைவெளிகளும் ஒரு திரையாக நின்றன. 
 
"இந்த ரகசியக் காதல், உண்மையில் நிறைவேறுமா? அல்லது என் மனசுக்குள்ளேயே ஒரு மௌனக் கவிதையாகவே முடிந்துவிடுமா?" என்கிற கேள்வி ஒரு வலியை அவளுக்குள் கடத்தியது.
அவள் யார் என்று தெரியாமலேயே அவள் மீது படர்ந்திருக்கும் மனோ அன்பின் ஆழம், ஒரு பக்கம் அவளுக்கு பெருமிதத்தை தந்தது; இன்னொரு பக்கம் "நிஜத்தில் என்னை பார்த்தால் இதே மாதிரி இருப்பானா?' என்கிற ஏக்கம் அவளது கண்களில் ஈரத்தை வரவழைத்தது.
 
தொடரும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 

ஜானகி மந்திரம் 23

​"ஆபீஸ் ஆ கயா மேடம்!"

​டிரைவரின் அந்த ஹிந்திக்குரல் கேட்டதும், 2003-ன் நினைவலைகளிலிருந்து 2010-ன் யதார்த்தத்திற்கு வந்து சேர்ந்தாள் மைதிலி.

​மும்பை, பேண்ட்ராவின் (Bandra) இதயப்பகுதியில் அமைந்திருந்தது அந்த பிரம்மாண்டமான 'டெக்னோநெட்' ஹெட் ஆபீஸ் வளாகம். நீல நிறக் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட வானளாவிய கட்டிடம், மும்பையின் மதிய வெயிலில் வைரம் போல மின்னிக் கொண்டிருந்தது. நவீன கட்டிடக்கலையின் உச்சமாய் நின்ற அந்த ஐடி நிறுவனத்திற்குள் நுழையும் போதே பிரமிப்பு பரவும்.

​"தேங்க்ஸ்!" என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு மைதிலி இறங்கினாள்.

​நேராக HR டிபார்ட்மெண்டுக்கு சென்றாள். அங்கே இருந்த சக ஊழியர்கள் அவளைக் கண்டதும் உற்சாகமானார்கள். "வாழ்த்துகள் மைதிலி! லண்டன் ஆன்சைட் போறதுக்கு எங்க எல்லோருடைய விஷஸ்!" என்று அவர்கள் கை குலுக்க, புன்னகையுடன் நன்றி தெரிவித்து கொண்டாள்.

ஞாயிறு மாலை london ஃபிளைட். அதற்கு முன்னால் இன்று இந்த செமினார், நாளை சனிக்கிழமை பெங்களூர் டீமுடன் ஒரு முக்கியமான 'பெர்ஃபார்மென்ஸ் அப்ரைசல்' (Performance Appraisal) மீட்டிங், லண்டன் செல்வதற்கான 'ஹேண்ட்-ஓவர்' டாக்குமெண்ட்ஸ் என வேலைகள் மலை போல குவிந்து கிடந்தன.

​செமினார் ஹாலுக்குள் நுழைந்தாள். 'Human Resource Strategies in Global Tech' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்து கொண்டிருந்தது. மேடையில் ஸ்பீக்கர்கள் வரிசையாக 'எம்ப்ளாயி ரீடென்ஷன்' (Employee Retention) மற்றும் 'வொர்க்-லைஃப் பேலன்ஸ்' பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். முன்வரிசையில் அமர்ந்திருந்த மைதிலி, அவர்கள் சொல்வதை உள்வாங்கி குறிப்பெடுத்துக் கொண்டாள்.
​மதியம் 3 மணிக்குத்தான் அவளுடைய முறை. அவளுக்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு: 'Bridging Cultural Gaps in International Onsite Projects'.

மேடையில் இருந்த ஒரு ஸ்பீக்கர், "திறமையை விட தெளிவான தகவல் பரிமாற்றமே ஒரு டீமை வெற்றிபெறச் செய்யும்" என்று கூறி முடிக்க, அரங்கம் கைதட்டலால் அதிர்ந்தது.
​அந்த கைதட்டல் ஓசை மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது... ஏசி அறையின் சத்தம் மறைந்து, 2003- ஆடிட்டோரியத்தின் ஓசையும், மாணவர்களின் விசில் சத்தமும் கேட்க தொடங்கின.

​2003 - SSG COLLEGE (திலீப்குமார் ஆடிட்டோரியம்)

​ஆர்ட்ஸ் அண்ட் கல்ச்சுரல் கிளப் இனாகிரேஷன்.

மேடையில் பிரின்சிபால் பேசிவிட்டு விடைபெற, அடுத்ததாக மைக் முன்னால் வந்து நின்றான் கல்ச்சுரல் கிளப் சேர்மன் — மனோ!

​அவன் மைக் முன்னால் வந்ததுமே மாணவிகள் மத்தியில் ஒரு ரகசிய சலசலப்பு ஏற்பட்டது. அவன் மைக் பிடித்த விதம், அந்த வசீகரப் புன்னகை... மைதிலி இமைக்காமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அருகில் இந்துவும் சஞ்சுவும் அமர்ந்திருக்க, மைதிலியின் கண்கள் மட்டும் மனோவிடம் தவம் இருந்தன.

​மனோ பேச தொடங்கினான்:
​"நண்பர்களே, காலேஜ் வெறும் டிகிரி வாங்குற இடம் மட்டும் கிடையாது. நம்மளோட உணர்வுகளை, கற்பனைகளை வெளிப்படுத்துற ஒரு களம். இந்த ஆர்ட்ஸ் கிளப் வெறும் கொண்டாட்டத்துக்காக இல்ல; ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரோ, ஐடி புரொபஷனலோ ஆகுறதுக்கு முன்னாடி, நாம ஒரு 'கிரியேட்டிவ் ஹ்யூமன் பீயிங்'கா (Creative Human Being) மாறணும். அதுக்குத்தான் இந்த கலைகள் நமக்கு தேவை."

​அவன் பேசப்பேச மைதிலி அந்த வார்த்தைகளில் கரைந்து போனாள். தள்ளி அமர்ந்திருந்த ஸ்ரேயா இறுக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவளுக்குப் பின் வரிசையில் சலோனி, பிரணவி, திஷா மற்றும் தான்வி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அந்த நான்கு பேரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல், தங்களுக்குள் இருந்த விரிசலை அந்த இறுக்கத்தில் காட்டிக் கொண்டிருந்தனர்.

​மனோ தொடர்ந்தான்:
​"வழக்கம்போல நம்ம கல்ச்சுரல் காலண்டர் ஒரு ஷேக்ஸ்பியர் டிராமாவோடதான் ஆரம்பிக்கப் போகுது. லாஸ்ட் இயர் போலவே இந்த வருஷமும் 'ரோமியோ ஜூலியட்' ப்ளே-யோட முக்கியமான சீன்ஸை மேடை ஏத்தப் போறோம். ரோமியோ கேரக்டர்ல நான் ஆக்ட் பண்றேன். ஜூலியட் மற்றும் மத்த மெயின் கேரக்டர்ஸ்க்கு நாளைக்கு ஆடிஷன் நடக்கும். விருப்பம் இருக்குறவங்க கலந்துக்கலாம்."

​மனோ முடிக்கும்போது, "நண்பர்களே, படிப்பு நமக்கு சோறு போடலாம், ஆனா கலைதான் நாம எப்படி வாழணும்னு சொல்லிக்கொடுக்கும். உலகப்புகழ் பெற்ற ஓவியர் பிக்காசோ ஒருமுறை சொன்னார்: 'கலை என்பது நம் ஆத்மாவில் படிந்திருக்கும் அன்றாட வாழ்க்கையின் தூசியைக் கழுவித் துடைக்கும் ஒரு கருவி' (Art washes away from the soul... the dust of everyday life). இந்தக் காலேஜ், லேப், அசைன்மென்ட்னு நாம ஓடிக்கிட்டே இருக்கும்போது, நம்ம மனசுல படியுற மெக்கானிக்கல் தூசியைத் துடைச்சு, நம்மளை திரும்பவும் மனுஷங்களா மாத்துறதுதான் இந்த கல்ச்சுரல் கிளப்போட வேலை. இந்த வருஷம் நாம வெறும் பெர்ஃபார்ம் பண்ணப்போறது இல்ல... நாம ஒவ்வொருத்தரும் நம்மக்குள்ள இருக்குற அந்த தூசியை துடைச்சுட்டு ஒரு புது மனுஷனா வெளிய வரப்போறோம். ஆர் யூ ரெடி?"

​அவன் கணீர் என்ற குரலில் பிக்காசோவின் மேற்கோளை சொல்லி முடிக்க, அந்த 'இன்ஸ்பிரேஷனல்' பேச்சில்
அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது.

​எல்லாரும் கைதட்டி முடித்த பிறகும், பரவசத்தில் இருந்த மைதிலி உட்கார்ந்தபடியே உற்சாகமாக தொடர்ந்து கைதட்டிக் கொண்டிருந்தாள். எல்லோரும் அமைதியான பிறகு இவளது கைதட்டல் மட்டும் தனியாக ஒலிக்க, அருகில் இருந்த மாணவர்கள் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தனர்.

​ஆடிட்டோரியத்தின் இடது பக்க ஓரத்தில், சுவரில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த சிக்கியும் பாபியும் சட்டென நிமிர்ந்தனர்.

"யார்டா அது? தனியா கைதட்டிட்டு இருக்கிறது?" என்று பாபி கூட்டத்தைப் பார்க்க,
​மைதிலியை பார்த்ததும் சிக்கியின் முகம் கடுப்பில் சுருங்கியது.

​"ஏய்... போதும் நிறுத்து! எல்லாரும் பார்க்குறாங்க!" என்று சஞ்சுவும் இந்துவும் பதறிப்போய் அவளது கையைப் பிடித்து அமுக்கி அமைதிப்படுத்தினர். அப்போதுதான் மைதிலிக்கு சுயநினைவே வந்தது. சுதாரித்துக் கொண்டு அவள் தலைகுனிய, மேடையில் பேசி முடித்த மனோ பிரின்சிபாலுடன் கைகுலுக்கிவிட்டு விடைபெற்றான்.

பாபி: "யார்டா அந்த கருகரு பாப்பா?"

சிக்கி: ​"டேய் பாபி... மரியாதையா பேசு. அது என் ஆளுடா!"

​பாபி ஆச்சரியமாக பார்த்தான். "ஓ... இவதானா அந்தப் பேரழகி? 'சிக்கி ஒரு பொண்ணு பின்னாடியே சுத்திட்டு இருக்கான், ஆனா அந்தப் பொண்ணு இவனை ஏறெடுத்தும் பாக்க மாட்டேங்குது'ன்னு பசங்க சொன்னது இவளைப் பத்திதானா?'

சிக்கி அவனை கடுப்பாக பார்த்தான்.

பங்க்ஷன் முடிந்ததால், ஆடிட்டோரியத்தில் இருந்த கூட்டம் மெல்ல கரைய தொடங்கியது.

பாபி: உன் ஆளுன்னு சொல்ற, ஆனா அவ என்னடான்னா அங்க மேடையில நிக்கிற மனோவைப் பார்த்து மெய்மறந்து கைதட்டிட்டு இருக்கா? பாத்துடா... மத்த எல்லாப் பொண்ணுங்க மாதிரியும் இவளும் அந்த மனோவோட ஃபேனா ஆகிடப் போறா!"

ஏற்கனவே மனோவைப் பார்த்தாலே சிக்கிக்கு லைட்டா பொறாமை, இதில் மைதிலி இப்படித் தனியாகக் கைதட்டித் தன் மானத்தை வாங்குவது அவனுக்கு இன்னும் எரிச்சலைத் தந்தது.

​"அவ மனோ ஃபேனும் இல்ல, ஒண்ணும் இல்ல. அவ ஏதோ ஆர்வத்துல தட்டிட்டா... விடு!" என்று சிக்கி சமாளித்தான்.

ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்தபோது, மைதிலியின் கால்கள் தரையில் படவில்லை. அவள் இன்னும் மனோவின் மேடை வசீகரத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

​சஞ்சு, இந்து மற்றும் மைதிலி கிளாஸை நோக்கி நடந்தபோது, சஞ்சு திடீரென மைதிலியின் தோளைத் தட்டி, "ஏண்டி மைதிலி... நீயே ஏன் அந்த ஜூலியட் கேரக்டருக்கு ஆடிஷனுக்கு போகக்கூடாது?" என்று கேட்டாள்.

​சஞ்சு கேட்ட அந்த ஒரு வார்த்தை, மைதிலிக்குள் ஒரு ரசாயன மாற்றத்தை உண்டாக்கியது.

'ரோமியோவாக நடிக்கப் போவது மனோ... அப்படியானால் ஜூலியட்டாக நான்...?' நினைக்கும்போதே உள்ளுக்குள் சந்தோஷம் முட்டி மோதினாலும், உடனே அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் முகத்தை மாற்றிக்கொண்டாள்.

​"நானா? நான் எப்படிடி ஆக்ட் பண்ண முடியும்? அந்த ஜூலியட் கேரக்டருக்குன்னு ஒரு 'கிரேஸ்' வேணும். அந்தப் பர்சனாலிட்டி எனக்கு மேட்ச் ஆகுமா? கண்டிப்பா செட் ஆகாது. நான் போகலப்பா!" என்று உடனடியாக மறுத்தாள்.

​இந்து அவளை இடைமறித்து, "அடி போடி! பர்சனாலிட்டாயாவது... மயிராவது! ஷேக்ஸ்பியர் playsனாலே உனக்கு அத்தனை இஷ்டம். அதுவும் ரோமியோ ஜூலியட்டை நீ கரைச்சுக் குடிச்சிருக்க. அப்புறம் என்ன? ஒரு நாடகத்துக்கு பெர்ஃபார்மென்ஸ்தான் முக்கியம், மத்ததெல்லாம் ரெண்டாவதுதான்!" என்றாள் அழுத்தமாக.

​சஞ்சுவும் விடாமல் தொடர்ந்தாள், "இந்து சொல்றது நூறு சதவீதம் உண்மை மைதிலி. அழகா இருக்குறவங்க எல்லாம் திறமையா நடிப்பாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா, உண்மையான திறமையோட நடிக்கிறவங்க, அந்த கேரக்டராவே மாறி மேடையில நிக்கும்போது... அவங்கதான் அந்த கேரக்டருக்கு அழகானவங்களா தெரிவாங்க! உன்கிட்ட அந்த திறமை இருக்கு."

​ஆடிஷனுக்குப் போக வேண்டும் என்கிற ஆசை மைதிலிக்குத் தீயாக இருந்தாலும், தன் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்னுக்கு இழுத்தது. 'கண்ணாடி முன்னாடி நின்னு வசனம் பேசலாம்... ஆனா மனோ முன்னாடி நின்னு அவனோட கண்ணைப் பார்த்துப் பேச முடியுமா?' - இந்த பயமே அவளை தடுத்தது.

​பேசிக்கொண்டே வந்தவர்கள் பிகாம் பில்டிங் அருகே வந்ததும் நின்றனர். "சரி, எனக்கு லேட் ஆகுது... நான் கிளம்பறேன்," என்று மைதிலி விடைபெற்றுக்கொண்டு தன் வகுப்பை நோக்கி நடந்தாள்.
​சோல்டர் பேக்கை இறுக்கிப் பிடித்தபடி நடந்தவளின் மூளைக்குள் ஷேக்ஸ்பியரின் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. அவளுக்குள் இருந்த ஜூலியட் மெல்லத் தலைதூக்கி பார்க்கத் தொடங்கினாள்.

ஷேக்ஸ்பியரின் வரிகள் அவளது நினைவில் வந்து மோதின:

​"My bounty is as boundless as the sea,
My love as deep; the more I give to thee,
The more I have, for both are infinite."

​(என் அன்பு கடலைப் போல எல்லையற்றது, ஆழமானது. உனக்கு நான் கொடுக்கக் கொடுக்க அது பெருகிக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் இவை இரண்டுமே முடிவில்லாதவை...)

​அந்த வரிகளை நினைத்த மாத்திரத்தில் மைதிலியின் முகம் தானாக சிவந்தது. 'இந்தக் காதலை சொல்ல ஜூலியட்டின் பர்சனாலிட்டி தேவையில்லை, அவளது அந்த மாறாத பிரியம் மட்டும் போதும்' என்று அவளது உள்மனம் ரகசியமாக சொன்னது.

​ஆனாலும், கண்ணாடி முன் நிற்கும் போது அவளது பிம்பம் அவளை ஏளனம் செய்கிறதே! அதை என்ன செய்வது?

உண்மையிலேயே தன்னுடைய ரோமியோ இந்த ஜூலியட்டை தேடிக் கண்டுபிடிப்பானா? அல்லது இந்த கனவு ஆரம்பிக்கும் முன்பே முடிந்துவிடுமா?

மைதிலியின் மௌனமான நடைக்குள்ளே ஒரு பெரிய யுத்தமே நடந்து கொண்டிருந்தது.

மதியம் 3.45 மணி.

SSG இன்டர்நெட் சென்டரில், கம்ப்யூட்டர் திரையை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் பாபி. ஏற்கனவே சன்ஷைன் விவகாரத்தில் வாங்கிய அடியினால் அவன் இருந்த கடுப்பில், எம்.எஸ்.என் மெசஞ்சரில் அவனது விரல்கள் விசைப்பலகையை துவம்சம் செய்தன.

​Bobby_cool says: இங்க பாரு, சும்மா மெசேஜ்ல லவ் டயலாக் அடிச்சுட்டு இருக்கிறதுல எனக்கு விருப்பமில்லை.

​Bobby_cool says: உனக்கு நம்ம ரிலேஷன்ஷிப்பை கண்டினியூ பண்ண விருப்பம் இருந்தா என்னை நேர்ல வந்து மீட் பண்ணு. இல்லன்னா எனக்கு இதைத் தொடர விருப்பமில்லை...

​திரையில் 'Mystic_Meera is typing...' என்று சில வினாடிகள் வந்து மறைந்தது. மறுமுனையில் இருந்த அந்தப் பெண்ணின் தயக்கம் அந்த தாமதத்தில் தெரிந்தது. சிறிது நேரத் தாமதத்திற்கு பிறகு பதில் வந்தது.

​Mystic_Meera says: சரி ஓகே... கமிங் சண்டே நாம கண்டாலா ஆங்கிலோ-இந்தியன் காபி ஷாப்ல மீட் பண்ணலாம்.

​Bobby_cool says: Good.. lets meet.

​பதிலை அனுப்பிவிட்டு, அடுத்த மெசேஜுக்காக கூடக் காத்திராமல் சட்டென பிரவுசிங்கை க்ளோஸ் செய்துவிட்டு வெளியேறினான்.

​வரப்போகிறவள் யார், அவள் பின்னணி என்ன என்று நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டு ரிலேஷன்ஷிப்பை தொடரலாம் என்பதே பாபியின் திட்டம். சும்மா கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போல ஆன்லைனில் சாட்டிங் செய்வதெல்லாம் அவனுக்கு சுத்தமாக புளித்து போயிருந்தது.

பாபி ஃபுட்பால் கிரவுண்டுக்குள் நுழையும்போது, மாலை வெயில் மைதானத்தின் புற்கள் மீது தங்கம் பூசியிருந்தது. பயிற்சியில் இருந்த வீரர்களின் சத்தம் ஒருபுறம் கேட்டாலும், பாபியின் கண்கள் ஓரமாக நின்றிருந்த மனோவைத் தான் தேடின.
​மனோ செல்போனில் யாரிடமோ மிகத் தீவிரமாக, அதே சமயம் அசட்டு சிரிப்போடு பேசிக் கொண்டிருந்தான். அந்த சிரிப்பை பார்த்ததுமே யாரிடம் பேசுகிறான் என்று பாபிக்கு புரிந்து போனது.

அவன் அருகில் சென்று, "யார்டா லைன்ல... சன்ஷைனா?" என்று ஜாடையில் கேட்டான்.
​மனோ ஆமாம் என்பது போல தலையசைக்க, பாபியின் கண்கள் சுற்றிலும் சுழன்றன.

'இங்கதான் எங்கேயோ இருக்கா... ஆனா சிக்க மாட்டேங்கிறாளே!' என்று அவன் மனதுக்குள் கறுவிக் கொண்டிருந்தான். அதற்குள் மனிஷும் சந்தீப்பும் அங்கே வந்து இணைய, மனோ அவர்களைப் பொருட்படுத்தாமல் கொஞ்சம் தள்ளிச் சென்று பேச்சைத் தொடர்ந்தான்.

​பாபி மற்ற இருவரிடம் ரகசியமாக, "காலேஜுக்குள்ள தான் எங்கேயோ இருந்து பேசிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்டா..." என்றான்.

​சந்தீப் சலிப்புடன், "ரொம்ப கஷ்டம் பாபி. இப்ப எல்லா பொண்ணுங்க கையிலயும் மொபைல் இருக்கு. இதுல இவன் கூடப் பேசுறது யாருன்னு எப்படித் தனியா கண்டுபிடிக்க முடியும்?" என்று சொல்ல... பாபியும் அதை ஆமோதிப்பது போல தலையசைத்தான்.

​திடீரென மனோ "ஒரே நிமிஷம் லைன்ல இரு..." என்று போனில் சொல்லி, போனை தாழ்த்தி விட்டு, வாட்டர் பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தான். மற்ற மூவரும் தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டிருப்பதை பார்த்தவன்,

"சன்ஷைன்தான் பேசுறாடா... அவ மொபைல்ல சார்ஜ் இல்லையாம். அதான் ஏதோ லேண்ட்லைன் போன்ல இருந்து கூப்பிட்டு இருக்கா. நான் பேசிட்டு வரேன், கொஞ்சம் வெயிட் பண்ணுங்க pls," என்று சொல்லிவிட்டு மீண்டும் காதில் போனை வைத்தான்.

​'லேண்ட்லைன்!'

​அந்த வார்த்தையை கேட்டதும் பாபியின் மூளைக்குள் ஒரு Alarm அலறியது. மொபைல் என்றால் டவர் லொகேஷன் மாறுபடும், ஆனால் லேண்ட்லைன் என்றால் அட்ரஸை அக்குவேறு ஆணிவேராக பிரிச்சிரலாமே!

​பாபியின் மூளையின் கிரே மேட்டர் மின்சார வேகத்தில் வேலை பார்க்க ஆரம்பித்தது. BSNL அலுவலகத்தில் வேலை பார்க்கும் தன் நண்பன் ஒருவனுக்கு இந்த லேண்ட்லைன் நம்பரை கொடுத்தால், அந்த போன் இருக்கும் ஏரியா, லொகேஷன், ஏன் வீட்டின் கதவு எண் வரை அடுத்த ஐந்தே நிமிடத்தில் தெரிந்துவிடும்.

'இன்னைக்கு மாட்டுனாடா சன்ஷைன்!'

​பரபரப்பான பாபி, மனோவிடம் சைகையிலேயே "பேசு... பேசு... கட் பண்ணிடாத!" என்று உற்சாகப்படுத்தினான். மனோ பேசுவதில் மும்முரமாக இருக்க, பாபி மின்னல் வேகத்தில் அவனது போனை வாங்கி, செல்போன் திரையை நைசாக பார்த்து, அந்த லேண்ட்லைன் நம்பரைத் தன் போனில் குறித்துக்கொண்டான்.

​மனோவுக்கு ஒன்றும் புரியவில்லை.

"என்னடா இவன் இவ்வளவு ஆர்வமா இருக்கான்?" என்று அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பேச்சை தொடர, பாபி தன் நண்பன் ரத்தோருக்கு அந்த நம்பரை SMS அனுப்பிவிட்டு,
சில நொடிகள் இடைவெளி விட்டு உடனே அவனுக்கு கால் செய்தான்.

மறுமுனையில் போன் எடுக்கப்பட்டதும், மனோவை விட்டு தள்ளி சென்று பேச ஆரம்பித்தான். பாபியின் குரலில் பதற்றம் கலந்த வேகம் இருந்தது.

​"ஹலோ ரத்தோர்... பாபி பேசுறேன்டா. இப்ப ஒரு நம்பர் அனுப்பிருக்கேன் பாரு... ப்ளீஸ், அதோட லொகேஷன் இப்போவே எனக்கு வேணும். ரொம்ப அர்ஜென்ட்!"

​ரத்தோர் பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சில் ஒரு டெக்னிக்கல் அசிஸ்டென்ட். அவனது குரல் நிதானமாக கேட்டது.

"இருடா... இப்பதான் மெசேஜ் வந்துச்சு. 2307... இது நம்ம ஏரியா எக்ஸ்சேஞ்ச் கோடுதான். சிஸ்டத்துல லாக்-இன் பண்றேன், ஒரு நிமிஷம்."

​பாபி போனைத் தன் காதோடு அழுத்திப் பிடித்துக்கொண்டு, "டேய், சீக்கிரம் பண்ணுடா... ஆளு லைன்ல தான் இருக்கா. கட் பண்ணிட்டா லொகேஷன் மிஸ் ஆகிடும்!" என்றான்.

​ரத்தோர் கம்ப்யூட்டர் கீபோர்டை தட்டும் சத்தம் பாபிக்கு கேட்டது.

"பாபி... நான் 'டேட்டாபேஸ் குயரி' போட்டுத்தான் எடுக்கணும். தோ... அந்த நம்பர் '41' சீரிஸ்ல ஆரம்பிக்குது. இது நம்ம சிட்டி லிமிட்ல இருக்கிற 'மெயின் ஸ்விட்சிங் சென்டர்' (MSC) அண்டர்ல வருது."

​பாபிக்கு வியர்க்கத் தொடங்க, கிட்டத்தட்ட கத்தினான்.

"ரத்தோர், டெக்னிக்கலா பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. அட்ரஸ் கிடைக்குமா, கிடைக்காதா?"

​"கிடைக்கும்... டென்ஷன் ஆகாத, வெயிட் பண்ரா...ஆனா, நம்பர் சீரிஸைப் பார்த்தா இது வீட்ல இருக்கிற சாதாரண கனெக்ஷன் மாதிரி தெரியல... ஏதோ பிசிஓ (PCO) பூத் நம்பர் மாதிரி இருக்கு!"

பாபி: "பிசிஓ-வா? டேய், அப்போ அதுல யாரு வேணா பேசலாமே... ஆளை எப்படிப் பிடிக்கிறது?"

​ரத்தோர் இடைமறித்தான், "பதறாத பாபி. எங்க எக்ஸ்சேஞ்ச் டேட்டாபேஸ்ல ஒவ்வொரு பிசிஓ-வோட அட்ரஸும் தெளிவா இருக்கும். எனக்கு ஒரு ரெண்டே நிமிஷம் டைம் கொடு... எந்த ஏரியா, எந்த கடைனு அட்ரஸை கரெக்டா கண்டுபிடிச்சு சொல்றேன்."

பாபி கால் கட் செய்து விட்டு மற்ற இருவரையும் பார்த்து,

​"மனிஷ், சந்தீப்... ரெடியா இருங்கடா! லொகேஷன் வந்ததும், உடனே வேலையில் இறங்குறோம். இன்னைக்கு அந்த சன்ஷைன் யாருன்னு கண்டுபிடிச்சே ஆகணும்... காலேஜ்குள்ள இருக்கக்கூடிய பிசிஓவா இருக்கலாம். நாம முதல்ல காலேஜ் பிசிஓக்கு போகலாம். அங்க இல்லனா... அடுத்ததாக ரத்தோர் எந்த அட்ரஸ் சொல்றானோ அங்க போக வேண்டிருக்கும்.... comeon lets go"

​பாபியின் குரலில் இருந்த அந்த பரபரப்பு டென்ஷனும் மற்ற இருவரையும் தொற்றிக்கொண்டது.

மனோ தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருக்க... பேசு பேசு என்று சிக்னல் காட்டிக் கொண்டே அவனை கூட்டிக்கொண்டு நடந்தார்கள். மனோவுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும், தொடர்ந்து போனில் பேசிக் கொண்டே அவர்களுடன் சென்றான்...

மனோ சன்ஷைனிடம் பேசிக்கொண்டே, சட்டென பாபியின் பக்கம் திரும்பி சிக்னல் செய்தான். தன் புருவங்களைச் சுருக்கி, ஒரு கையை மட்டும் லேசாக உயர்த்தி, 'வேண்டாம்' என்பது போல மெல்ல அசைத்தான். அவனது சைகையில், "மறுபடியும் அவளைச் சங்கடப்படுத்துற மாதிரி ஏதாவது பண்ணிராதடா... பாத்து நடந்துக்கோ!" என்கிற எச்சரிக்கையும், வேண்டுகோளும் கலந்திருந்தது.

​அதைப் பார்த்த பாபி ஒரு திருட்டுத்தனமான புன்னகையோடு, தன்னுடைய கட்டைவிரலை உயர்த்திக் காட்டி (Thumbs up), பின் 'நான் இருக்கேன்ல... கவலைப்படாத' என்பது போலத் தன் நெஞ்சில் கைவைத்து ஒரு அஷுரன்ஸ் கொடுத்தான். "அதெல்லாம் நான் பாத்துக்குறேன்... நீ பேச்சை மட்டும் கட் பண்ணாம பேசு!" என்பதே அந்தப் பதில் சிக்னலின் அர்த்தம்.

மறுமுனையில் சன்ஷைனின் குரல்: "மனோ... எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. நான் போனை வைக்கவா?"
என்று கேட்க,

மனோவுக்கு அவளது குரலை இன்னும் கொஞ்ச நேரம் கேட்க மாட்டோமா என்கிற ஏக்கம். அதுமட்டுமில்லாமல் பாபி வேறு பேசு பேசு என்று சொல்கிறான், ஏதோ ஐடியா பண்ணிட்டான் போல என்று மனோவுக்கு தோன்ற...

"ப்ளீஸ்... இன்னும் கொஞ்ச நேரம் பேசேன். உன்கிட்ட பேசுனா எனக்கு பிராக்டிஸ் பண்ற டயர்டே தெரிய மாட்டேங்குது. ப்ளீஸ்... எனக்காக இன்னும் அஞ்சு நிமிஷம் மட்டும்!" என்று மென்மையான குரலில் கெஞ்சினான்.

​மறுமுனையில் ஒரு சிறிய மௌனம். பின் ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் "சரி... சரி... பாவம், ரொம்ப கெஞ்சாத. இன்னும் கொஞ்ச நேரம் பேசுறேன், போதுமா?" என்றாள் சன்ஷைன்.

​"தேங்க்ஸ்!" என்று மனோ உற்சாகமாய் பதிலளிக்க,
நால்வரும் கிளம்பி காலேஜ் கேண்டின் பக்கமாக இருக்கும் பிசிஓ நோக்கி நடந்தார்கள்.

சன்ஷைனை கண்டுபிடிக்கும் ரகசிய வேட்டை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

தொடரும்



   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 2 years ago
Posts: 462
 
ஜானகி மந்திரம் 24
 
 
​பாபி, சந்தீப், மனிஷ் மூவரும் கேண்டீன் பிசிஓ-வை நோக்கி ஓட்டமும் நடையுமாக சென்றனர். பின்னால் மனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல், "சன்ஷைன்... நீ இப்போ என்ன பண்ணிட்டு இருக்க?" என்று sweet nothings பேசி கொண்டு வந்தான்.
 
​எதிரே வந்த சில ஜூனியர் மாணவர்கள், "என்ன பாபி பாய்... என்னாச்சு? எதுக்கு எல்லாரும் ஓடுறீங்க?" என்று ஆர்வமாக வழிமறிக்க, 
 
பாபி, "ஒண்ணுல்லடா... கேண்டீன்ல இன்னைக்கு ஸ்பெஷல் வடா பாவ் போட்டிருக்காங்களாம். தீர்ந்துடப் போகுதுன்னு ஓடுறோம்!" என்று ஒரு போடு போட்டுவிட்டு முன்னேற... ஜூனியர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தார்கள்.
 
​கேண்டீன் பிசிஓ-வை அடைந்தபோது, அங்கே பாபி எதிர்பார்த்த சன்ஷைன் இல்லை. மாறாக, ஒரு 'தடி தாண்டவராயன்', பூத் கதவை அடைத்த மாதிரி அமர்ந்து, "ஆமாம்மா... சாப்பிட்டேன்மா... தயிர் சாதம் தான்..." என்று உருக்கமாக பேசிக்கொண்டிருந்தான்.
 
மறுமுனையில் ஏதோ சொன்னதும்,
 
"ஆமாம்மா சனிக்கிழமைதோறும் எண்ணை தேச்சு குளிக்கிறேன்..."
 
பாபி எரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் சுற்றிலும் பார்வையை போட்டான். சுற்றிலும் கேர்ள்ஸ் யாருமே இல்லை.
 
​"சே! இங்க இல்லடா. இந்த தடிமாடுதான் பேசிட்டு இருக்கு. ஸோ... சன்ஷைன் இங்க இல்ல!" என்று கன்ஃபார்ம் செய்தான்.
 
​தூரத்தில் மனோ இன்னும் போனை விடவில்லை.
 
​மனோ: "சன்ஷைன்... உனக்கு என்ன கலர் ரொம்ப பிடிக்கும்?"
 
​மைதிலி: (சிரித்துக்கொண்டே) "இதைத்தான் நீங்க முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னீங்களா மனோ?"
 
​மனோ: "இல்ல... சொல்லு, இதுல ஒரு விஷயம் இருக்கு!" - என்ன பேசி அவளை லைனில் வைத்திருக்க வேண்டும் என்பதால் எதையோ உளறி கொண்டிருந்தான்.
 
​மைதிலி: "எனக்குனு பிடிச்ச கலரை தேர்ந்தெடுக்கிற வசதி சின்ன வயசுல இருந்தே கிடையாது மனோ. எது கிடைக்குதோ அதுதான் என் கலர். ஆனா, இப்பல்லாம் எனக்கு 'டார்க் கலர்ஸ்' ரொம்பப் பிடிக்கும். ஏன் கேக்குறீங்க?"
 
​மனோ பதில் சொல்லும் முன்பே, பாபி அவனை ஓரமாகத் தள்ளி நிற்க சொல்லி சைகை காட்டினான். மனோ அவர்களின் பேச்சு குரல் கேட்காத டிஸ்டன்ஸில் நகர்ந்து சென்றான்
 
​சந்தீப்: "பாபி... லேடிஸ் ஹாஸ்டல் பக்கத்துல ஒரு பிசிஓ இருக்கு, அப்புறம் மெயின் கேட்டுக்கு வெளிய ஒண்ணு இருக்கு. இங்கெல்லாம் இருக்க வாய்ப்பிருக்கே?" என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போதே, பாபியின் போன் அதிர்ந்தது.
 
​ரத்தோர்!
 
​பாபி பட்டுன்னு போனை அட்டென்ட் செய்து: "சொல்லு ரத்தோர்... அட்ரஸ் கிடைச்சதா?"
 
​ரத்தோர்: "பாபி... நோட் பண்ணிக்கோ. இது கண்டாலா டவுன்ல இருக்குற மெயின் மார்க்கெட் ஏரியா. அங்கே அந்தப் பழைய கிளாக் டவருக்கு நேர் எதிரே, 'எம்.எஸ்.ஆர்டிசி' (MSRTC) பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற 'ஸ்ரீ கணேஷ் கம்யூனிகேஷன்' (Shree Ganesh Communication). அந்தப் பிசிஓ பூத்தோட நம்பர் தான் இது!"
 
​பாபிக்கு உள்ளுக்குள் ஒரு மின்னல் வெட்டியது. "ஸ்ரீ கணேஷ் கம்யூனிகேஷன்! ஓகேடா ரத்தோர்... தேங்க்ஸ்!"
​பாபி கால் கட் செய்துவிட்டு மற்ற இருவருக்கும்
விஷயத்தை சொன்னான்.
 
பாபிக்கு தெரியாது, மைதிலி வேலை பார்க்கும் அந்த 'ஆங்கிலோ-இந்தியன் காபி ஷாப்பில்' இருந்து கொஞ்ச தூரத்தில் தான் இருக்கிறது என்று!
 
​மனிஷ்: "டேய்! மார்க்கெட் ஏரியான்னா கார்ல போனா பத்து நிமிஷம் தான். ஆனா அந்தப் பக்கம் கூட்டமா இருக்குமே?"
 
​​சந்தீப்: "டேய் மனோ! பேசிக்கிட்டே வா ( சிக்னல்)... (பின்னர் பாபியை பார்த்து திரும்பி) நீ டிரைவ் பண்ணு. நாங்க பின்னால ஏறிக்கிறோம். நேர்ல போயி அந்த பார்ட்டியை அங்கேயே கோழி அமுக்குற மாதிரி அமுக்கிரலாம் !"
 
​பாபி மனோவைப் பார்த்து விசிலடித்து, "கிளம்பலாம்" என்று சைகை காட்டினான். மனோ "எங்கே?" என்று குழப்பத்துடன் புருவத்தை உயர்த்த, பாபி காரின் ஸ்டீயரிங்கைத் திருப்புவது போல ஜாடையில் சொல்லி, வர சொல்லிவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தான். எல்லோரும் பார்க்கிங் ஏரியாவுக்கு அவனை பின் தொடர்ந்தார்கள்.
 
பார்க்கிங் வந்ததும் மனோ கார் சாவி தூக்கி வீச... பாபி கதவை திறந்து டிரைவிங் சீட்டில் தாவி ஏறினான். அவன் பக்கத்தில் மனோ போன் பேசியபடியே ஏறிக்கொண்டான். பின் சீட்டில் சந்தீப்பும் மனிஷும் "இன்னைக்கு இருக்குடி உனக்கு!" என்கிற ரேஞ்சில் ஏறி கதவை சாத்தினர்.
 
​பாபி காரை ஸ்டார்ட் செய்து, கிளட்ச்சை ரிலீஸ் பண்ணி ஆக்ஸிலேட்டரை மிதித்த வேகம்... பார்க்கிங் ஏரியாவின் டயர்கள் அலறின. கார் கண்டாலா டவுனை நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது!
 
மறுபுறம், கண்டாலா பஜார் வீதியின் அந்தச் சிறிய பிசிஓ பூத்திற்கு, பக்கத்தில் இருந்த காயின் பாக்ஸில் மைதிலி பேசிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் அன்றைக்குன்னு பார்த்து அவளுக்கு தலைவலி... மற்றொரு பக்கம், அவளது கைக்கடிகாரத்தில் முட்கள் மிரட்டிக்கொண்டிருந்தன. காபி ஷாப் டூட்டிக்கு ரொம்பவே லேட்டாகி இருந்தது.
 
​'அய்யய்யோ ரொம்ப லேட் ஆயிடுச்சே... மனோ போனை வைக்க மாட்டேங்குறானே! இவனுக்கு என்னதான் ஆச்சு?' என்று அவள் தவித்தாள்.
 
​"மனோ... எனக்கு டைம் ஆயிடுச்சு. நான் கிளம்பட்டுமா?" என்று அவள் கெஞ்சும் குரலில் வினவினாள்.
 
​அதே சமயம், பாபியின் கார் கண்டாலா டவுனின் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்து கொண்டிருந்தது. ஆக்ஸிலேட்டரை மிதித்து டயர்களை கதறவிட்டாலும், முன்னால் சென்ற டூவீலர்களும், ஆட்டோக்களும் அவர்களுக்கு வழிவிட மறுத்தன.
 
​மனோ ஜாடையிலேயே பாபியிடம் கேட்டான், "டேய், வைக்கட்டுமான்னு கேக்குறாடா!"
 
​பாபி ஸ்டீயரிங்கை ஒரு கையில் தட்டியபடி, "டூ மினிட்ஸ்... இன்னும் ரெண்டே நிமிஷம் பேசுடா! இதோ நெருங்கிட்டோம்!" என்று கிசுகிசுத்தான்.
 
​மனோவும் கஷ்டப்பட்டு அவனுக்கு தெரிந்த டாபிக்கை எல்லாம் பேசிக் கொண்டிருந்தான்.
 
 'இதற்கு மேல் என்ன பேசுவது?' என்று அவன் யோசிக்க, பின் சீட்டில் இருந்த சந்தீப்பும் மனிஷும் மூளையை கசக்கினார்கள். திடீரென சந்தீப்பிற்கு ஒரு ஐடியா.
 
கைகளை உயர்த்தி 'பர்த்டே கிப்ட்... கிப்ட்!' என்று சத்தம் வராமல் பேசி சைகையும் செய்தான்.
 
​மனோ அதை கேட்ச் பண்ணி: "ஹலோ சன்ஷைன்... இரு, ஒரு முக்கியமான விஷயம் கேட்க மறந்துட்டேன். எல்லாரும் என் பர்த்டேக்கு கிப்ட் கொடுத்தாங்க. ஆனா, நீ எதுவுமே கொடுக்கலையே? உன் கிஃப்ட்டை தான் நான் ரொம்ப ஸ்பெஷலா நினைக்கிறேன்..." என்றான்.
 
​மறுமுனையில் மைதிலி ஒரு நொடி ஸ்தம்பித்தாள். மனோவின் குரலில் இருந்த அந்த எதிர்பார்ப்பு அவளது நெஞ்சை தொட்டது. அவள் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
 
​"கிளாக் டவர் வந்தாச்சு"
 
பாபியின் மனசுக்குள் காட்டு கூச்சல்.
 
​நூறு மீட்டர் இடைவெளி இருக்கும்போதே, டிராபிக் காரணமாக, அவசரமாக முடிவெடுத்து, பாபி காரை சட்டென ஓரத்தில் நிறுத்தினான்.
 
"இறங்குங்கடா!" என்று சிக்னல் செய்ய சந்தீப்பும் மனிஷும் கதவை திறந்து வெளியே குதித்தனர்.
 
​அதே சமயம் போனில் மைதிலி பேசினாள், "நிச்சயமா மனோ... உனக்கான என்னோட கிப்ட் சீக்கிரமே உன்னை வந்து சேரும். ஓகே... இப்ப நான் ரொம்ப அவசரமா கிளம்புறேன். Bye!"
​சொல்லிவிட்டு, அவசர அவசரமாக காலை துண்டித்தாள்.
 
​மனோ: "டேய்... வச்சுட்டாடா!"
 
பாபி: ​"பரவாயில்லை... புடிச்சிரலாம்! என்று சொல்லியபடியே கீழே இறங்கினான்.
 
மனோ: ​"டேய்... நிதானமா போங்கடா! அவளை சங்கடப்படுத்திடாதீங்க. ஜாக்கிரதையா டீல் பண்ணுங்க!" என்று பதட்டமாகக் கத்தினான். தன் 'சன்ஷைன்' எந்த ஒரு அசௌகரியத்திற்கும் ஆளாகிவிடக் கூடாது என்கிற பயம் அவனுக்கு.
 
சந்தீப்பும் மனிஷும் முதலில் ஓடினார்கள். 
 
​"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்டா, நீ வா!" என்று கத்தியபடியே பாபி ஓடினான்.
​ 
ஓடும் வழியில், கையில் ஒரு காகிதத்துடன் வந்த ஒரு நபர் சந்தீப்பை வழிமறித்தார். 
 
"தம்பி... இந்த அட்ரஸ்க்கு எப்படிப் போகணும்?"
 
"அவசரமா போயிட்டு இருக்கேன்... விடுங்க"
 
ஓட முயற்சித்த ​சந்தீப்பை பிடித்து நிறுத்தி "சொல்லிட்டு போங்க சார்" என்று கேட்க, அந்த அட்ரஸ் பார்ட்டியை ஒருமுறை முறைத்துவிட்டு, அட்ரஸை வாங்கி பார்த்து விட்டு, "யோவ்... இந்த அட்ரஸ்ல இருந்தவன் எல்லாம் செத்துப் போயிட்டான்யா, இனிமே அங்க எவனுமே இருக்க மாட்டான்! நீ எதுக்கு அங்க போகப்போற? போய்யா!" என்று எரிச்சலில் கத்திவிட்டு மீண்டும் ஓடத் தொடங்கினான்.
 
​மறுபுறம், எதிரே வந்த ஒரு நபர் வேகமாக மனிஷ் மீது மோதினார். மனிஷ் ஒரு சுத்து சுத்தி விட்டு, "பார்த்து வரமாட்டீங்களா?" என்று எகிற, "நீங்கதானே தம்பி ஓடி வந்தீங்க?" என்று அவர் கேட்க, "எனக்குன்னே வருவீங்களாடா !" என்று டென்ஷனில் கத்திவிட்டு பாய்ந்தான் மனிஷ்.
 
இந்த தடுமாறல்களால் பாபி அவர்களை கடந்த முன்னால் ஓடினான். கடைசியாக மனோ அவர்களை பின் தொடர்ந்து நடந்து வந்தான். 
 
'ஸ்ரீ கணேஷ் கம்யூனிகேஷன்' பூத்தை நெருங்கிய பாபி, உள்ளே பார்த்தான்.
​பூத் காலியாக இருந்தது!
​பாபி இடுப்பில் கைவைத்த படி நிற்க, பின்னால் மூச்சு வாங்க ஓடி வந்த சந்தீப்பும், மனிஷும் அவன் பின்னால் வந்து நின்றனர். "எங்கே?" என்பது போல பார்த்தார்கள்.
 
​பாபி பூத் ஆப்பரேட்டரிடம், "சார்... இப்போ இங்க ஒருத்தங்க பேசிட்டு இருந்தாங்களே, அவங்க எங்கே?" என்று கேட்டான்.
​அந்த ஆப்பரேட்டர் நிதானமாக அவர்களை பார்த்து, "தம்பி... இது மார்க்கெட் பக்கம் இருக்குற கடை. ஒரு நாளைக்கு நூறு பேர் வந்து பேசுவாங்க. இதுல யாருன்னு நான் எப்படிச் சொல்றது?" என்று இழுத்தார்.
 
மனோவும் வந்து சேர்ந்தான்.
 
​"இல்ல சார்... இப்போ கடைசியா இங்கருந்து தான் எங்க நம்பருக்கு ஒரு கால் இங்கிருந்து போச்சு... ஒரு லேடி பேசிருப்பாங்க. அது யாருன்னு சொல்லுங்க..plssss!" என்று பாபி விடாமல் கேட்க, 
 
அந்த ஆப்பரேட்டர் யோசித்தார்.
​"கடைசியா இந்த பூத்துக்குள்ள பொண்ணு யாரும் பேசலையே தம்பி... ஒரு வயசான ஆளு தானே பேசிட்டுப் போனாரு?"
 
​நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
 
'அப்போ நம்பர் தப்பா?' என்று மனோ குழம்ப, பாபியின் கண்கள் பூத்தின் ஓரத்தில் இருந்த ஒரு ரூபாய் காயின் போனை கவனித்தது.
 
​"சார்... ஒருவேளை காயின் பாக்ஸ்ல பேசிருப்பாங்களோ? பேசினா உங்களுக்கு தெரியுமா?"
என்று பாபி கேட்டான்.
 
​"காயின் பாக்ஸ்ல பேசுறத நான் அவ்வளவா கவனிக்கிறதில்ல தம்பி. கஸ்டமர்ங்க வருவாங்க, காயின் போட்டுப் பேசிட்டு போயிட்டே இருப்பாங்க. அதெல்லாம் நான் நோட் பண்றதில்லை" என்று அவர் கைவிரித்துவிட்டார்.
 
​பாபிக்கு ஒரு விஷயம் புரிந்தது. அப்படின்னா Sunshine வெளியிலிருந்த காயின் பாக்ஸை பயன்படுத்தியிருக்கிறாள்.
 
​"டேய்... அவ இங்கிருந்து ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. இப்பதான் கட் பண்ணிருக்கா. சுத்தி தேடுங்கடா... இன்னைக்கு விடக்கூடாது!" என்று பாபி உத்தரவிட, ஆளுக்கு ஒரு பக்கமாக பஜார் வீதிக்குள் பாய்ந்தனர்.
 
​பாபி வலதுபுறம் இருக்கும் கடைகளுக்கிடையில் ஓட, மனிஷ் and சந்தீப் இடதுபுறம் இருக்கும் பஸ் ஸ்டாப் பக்கமாக ஓடினார்கள்.
 
மனோ மட்டும் எங்கேயும் செல்லாமல் அப்படியே நின்றுவிட்டான்.
அவனது கால்கள் யோசித்தபடியே நின்றன.
 
இதற்கிடையே, பஸ் ஸ்டாப்பில் இருந்து இரண்டு இளம் பெண்கள் ஏதோ பேசி சிரித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்தனர். 
 
இரண்டு பெண்களில் ஒருத்தி நீல நிற ஜீன்ஸ் மற்றும் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்து 'ஸ்டைலிஷ்' ஆக வர, அவளுக்கு அருகில் இருந்த மற்றொருத்தி மயில் கழுத்து நிறத்தில் டிசைனர் சுடிதார் அணிந்து தேவதை போல நடந்து வந்து கொண்டிருந்தாள். ரெண்டு பேரையும் பார்த்ததும் சந்தீப்பின் சிபிஐ மூளைக்கு சந்தேகம் வந்தது.
 
​"ஹான்!!! கண்டிப்பா இந்த ரெண்டு பேர்ல ஒருத்தி தான்... நிச்சயம்!" 
 
​அவன் சடக்கென்று அவர்கள் முன்னால் பாய்ந்து, டிராபிக் கான்ஸ்டபிள் போல் கையை நீட்டி நிறுத்தினான். அவனது திடீர் பிரவேசம் அந்த இரண்டு பெண்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
​"உண்மையைச் சொல்லுங்க... ரெண்டு பேர்ல யாரு sunshine. எங்க மனோவுக்கு யார் போன் பண்ணது?" - சந்தீப் மிகவும் தீவிரமாகக் கேட்டான், அவனது குரலில் புலனாய்வு அதிகாரம்.
  
​இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். அவர்களின் முகத்தில் குழப்பமும், சற்று எரிச்சலும் படர்ந்தன.
 
​"எனக்குத் தெரியும், என்னை ஏமாத்த முடியாது. நீங்க சொல்லலைன்னா நான் விட மாட்டேன்..." - சந்தீப் வழியை மரித்தபடியே மிரட்டலை தொடர்ந்தான்.
 
அந்த இரண்டு பெண்களின் முறைப்பைப் பார்த்து
​மனிஷ் தயங்கி, சந்தீப்பின் பின்னால் நின்றுந்தான். 'Eve teasing' என்று அவர்கள் கடுப்பாக, அவர்களின் முகத்தில் கோபம்.
 
​"சொல்ல போறீங்களா இல்லையா...?" - சந்தீப் மீண்டும் கேட்டான், தன் பொறுமையை இழப்பது போல நடித்தான்.
ஜீன்ஸ் பெண் தெனாவட்டாக, "வாட் தி ஹெல் ஆர் யூ டாக்கிங் மேன்?" என்று சொல்லி, அடிப்பதற்காக தன் வலது கையை ஓங்கினாள்.
​சந்தீப் திகைத்து பின்வாங்கி, 'என்ன? அடிக்க போறீங்களா?' என்று கேட்க, அவள் 'ஆம்' என்று தலையாட்டினாள்.
​சந்தீப் தன் பின்னால் இருந்த மனிஷை சட்டென இழுத்து முன்னால் விட்டான். 
 
"இவன் தான் கேட்க சொன்னான்!" - சந்தீப் அவனை கோர்த்து விட.... அவன் சொல்லி முடிப்பதற்குள்,
​"சப்!" - என்று ஒரு வலுவான அரை மனிஷின் கன்னத்தில் விழுந்தது.
 
​"ஐயையோ!!! அடிச்சிட்டாடா... மனோ எனக்கு இதெல்லாம் தேவையா!" - மனிஷ் தன் கன்னத்தை பிடித்துக்கொண்டு கதறினான். ஒரே அரையில் அவன் கண்ணம் சிவந்து பழுத்தது. 
 
இரண்டு பெண்களும் ஸ்டுப்பிட் என்று சொல்லிவிட்டு அவனை அவர்களை கடந்து சென்றார்கள்.
 
​மனிஷ், கன்னத்தை தடவிக் கொண்டு "டேய் சந்தீப்...!" என்று சொல்லி, அவனை முறைத்து பற்களை நரநர என்று கடிக்க.
 
​சந்தீப் அவன் நெஞ்சில் தட்டி கொடுத்து தேற்றினான்.
 
"டேய்!!! அந்த Sunshine யாருன்னு கண்டுபிடிக்கிறதுக்காக அரையெல்லாம் வாங்கிட்டு நிக்கிற... iam proud of you மச்சான். உன் உயிரை பணயம் வச்சாவது அவ யாருன்னு இந்த சந்தீப் கண்டுபிடிச்சே தீருவேன்டா" என்று சொல்ல...மனிஷ் கன்னத்தை தடவியபடியே முழித்துக் கொண்டு நின்றான்.
 
அதேசமயம்,
மனோவின் பார்வை மெதுவாக மேலே சென்றது — அந்தப் கிளாக் டவரை நோக்கி.
நேரம் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.
 
ஒரு நொடி…
 
அவன் மனசுக்குள் ஒரு எண்ணம்.
 
"இங்கேயே அவ இருக்கலாம்… அருகிலேயே…"
 
அடுத்த நொடி அதே எண்ணம் மாறியது.
 
"ஆனா… நாம இப்படி தேடி வர்றத அவளுக்கு தெரிஞ்சா…?"
 
அவனது புருவம் சற்று சுருங்கியது.
 
"அவ தவறா எடுத்துக்குவாளோ…? பயந்து போயிடுவாளோ…?"
 
அவன் ஒரு சிறிய பெருமூச்சை இழுத்தான்.
 
சுற்றிலும் கூட்டம் இருந்தாலும், அவனுக்கு மட்டும் அந்த இடம் வெறிச்சோடி போன மாதிரி தோன்றியது.
 
"அவளை பார்க்கணும்னு ஆசை தான்…
 
ஆனா… அவளுக்கு சங்கடம் ஆகக்கூடாது…"
 
அந்த இரண்டுக்கும் நடுவே அவன் சிக்கிக் கொண்டான்.
 
அவன் அசையாமல் நின்றபடியே, அந்த இடத்தில் நின்றபடியே கிளாக் டவரை பார்த்து யோசித்துக் கொண்டிருந்தான்.
 
அந்த நேரத்தில், "எக்ஸ்க்யூஸ் மீ..." என்றொரு மெல்லிய குரல் கேட்க, 
 
சந்தீப் அண்ட் மனிஷ் திரும்பிப் பார்த்தார்கள்.
​அங்கே மைதிலி நின்றிருந்தாள்!
 
​அருகிலிருந்த மெடிக்கல் ஷாப்பில் தலைவலி மாத்திரை வாங்குவதற்காக வந்தவள், இவர்கள் வழியை மறித்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "கொஞ்சம் வழியை விடுறீங்களா?" என்று நிதானமாகக் கேட்டாள்.
 
​அவளது டஸ்கி டோனையும் லுக்கையும் பார்த்ததும்... சந்தீப்பும் மனிஷும், "சாரி சிஸ்டர்... நீங்க போங்க!" என்று வழிவிட்டு விலகினார்கள். மைதிலி அவர்களுக்கு இடையே அமைதியாக நடந்து காபி ஷாப் நோக்கி சென்றாள்.
 
​செல்லும்போதே அவள் மூளை மின்னல் வேகத்தில் வேலை செய்தது. 'சன்ஷைன்' என்று இவர்கள் இருவரும் பேசிக் கொண்டதை அவள் கேட்டுவிட்டாள். 'இவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்?' என்று யோசித்தபடியே சுற்றிலும் பார்த்தாள்.
​தூரத்தே பாபி யாரையோ வெறித்தனமாக தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. சற்று தூரத்தில் கிளாக் டவரை பார்த்தபடியே ஏக்கத்தோடு மனோ நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், அவளுக்கு எல்லாம் புரிந்து போனது.
 
​"ஓ... என்னை தேடித்தான் இவ்வளவு தூரம் வந்திருக்காங்களா? இதனால் தான் இன்னைக்கு மனோ என்னை போகவிடாம பேசிக்கிட்டு இருந்தானா?"
 
"எப்படி கண்டுபிடித்து இருப்பார்கள்?"
 
"போன் நம்பரை வைத்து கண்டுபிடித்திருக்கலாம்"
 
​வேக வேகமாக தன் காபி ஷாப் நோக்கி சென்று, வாசல் பக்கமாக மறைந்து நின்று, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்றுப் பார்க்க தொடங்கினாள்.
 
சுற்றிலும் இருந்த கூட்டத்தில் பாபியின் கண்கள் ஒரு சுடிதார் அணிந்த பெண்ணின் மீது நிலைத்தன. அவள் பாபியை பார்த்ததும் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டு நடப்பது போல அவனுக்குத் தோன்றியது.
 
​'இவதான்! என்னை பார்த்ததுமே மூஞ்சை திருப்புறா பாரு... கண்டிப்பா இவ தான் அந்த 'சன்ஷைன்'!' என்று சந்தேகப்பட்ட பாபி, கூட்டத்தை முட்டி மோதி விலக்கிக் கொண்டு அவளை நோக்கி சீறினான்.
​பின்னாலிருந்து பார்க்கும்போது அந்தச் சுடிதார் அணிந்த உருவம் கச்சிதமாக, ஒரு கல்லூரி மாணவி போன்றே தெரிந்தது. அவள் வேகமாக நடக்கத் தொடங்க, பாபியும் தன் வேகத்தை அதிகப்படுத்தினான்.
 
​"எக்ஸ்க்யூஸ் மீ!" - பாபி கத்தினான். அவள் நிற்கவில்லை.
 
​"உங்களைத்தான் கூப்பிடுறேன்... ப்ளூ சுடிதார். கொஞ்சம் நில்லுங்க!" - பாபி மறுபடியும் குரலை உயர்த்தியும் அவள் தன் பாட்டிற்கு போய்க்கொண்டே இருந்தாள்.
 
​பாபிக்கு ஆத்திரம் வந்தது. 'எவ்வளவு திமிர் இருந்தா நான் கூப்பிட்டும் இவ பாட்டுக்கு போவா?' என்று நினைத்தவன், அவளை வேகமாக நெருங்கி சட்டென அவள் முதுகில் தட்டி மறித்தான். "உங்களைத்தான் கூப்பிட்டுட்டே இருக்கேன், நீங்க பாட்டுக்கு போயிட்டு இருக்கீங்க? நீங்கதான் வேணும்!" என்று அதட்டலாக சொன்னான்.
 
​"Yesss..." - ஒரு கிளிப் பிள்ளை போல மிக மென்மையான, கொஞ்சலான குரலில் ஒரு பதில் வந்தது.
 
​அந்த உருவம் மெல்ல திரும்பியது. முகத்தை பார்த்ததும் பாபி அப்படியே உறைந்து போனான்.
​திரும்பியவளுக்கு குறைந்தது 65 வயதாவது இருக்கும்! நரைத்த தலைமுடியை சாயம் பூசி மறைத்திருந்தாலும், முகத்திலிருந்த சுருக்கங்கள் போஸ்டர் அடித்து வயதை சொன்னது.
 
​பாபி மைண்ட் வாய்ஸ்: 'என்னடா இது கொடுமை! பாடி சூப்பரா இருக்கு... ஆனா ஃபேஸைப் பார்த்தா பாப்பரா இருக்கு!'
 
​அந்தப் பாட்டி தன் சுருக்கமான முகத்தில் ஒரு செயற்கையான புன்னகையை வரவழைத்துக்கொண்டு, "என்ன வேணும்?" என்று கொஞ்சலாக கேட்டார்.
 
​பாபிக்கு வியர்த்து கொட்டியது. "அது... அது வந்து... ஒன்னுமில்லைங்க!" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முயற்சி செய்தான்.
​ஆனால் அந்தப் பாட்டி விடுவதாக இல்லை. "இல்லையே... என்னைத்தானே கூப்பிட்டீங்க? 'நீங்கதான் வேணும்'னு வேற சொன்னீங்களே? என்ன வேணும்னு சொல்லுங்க?" என்று இன்னும் கொஞ்சம் குழைந்து கேட்க, 
 
பாபி: ​"ஐயையோ! தப்பு நடந்துடுச்சுங்க... ஆள் மாறிடுச்சு! என்னை மன்னிச்சிடுங்க!" என்று அலறியபடியே, அங்கிருந்து ஒரு ஒலிம்பிக் வீரனை போல திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தான் பாபி.
 
​இதைப் பார்த்து கொண்டிருந்த மைதிலிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. 
 
'நல்லா வேணும் உனக்கு!' 
 
மறுபக்கம் பார்க்க,
 
இன்னொரு பக்கம் மனிஷும் சந்தீப்பும் அடுத்த ரவுண்டை தொடங்கி இருந்தனர். அவர்களுக்கு சற்று முன்னால் ஒரு இளம் பெண், வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் டாப் மற்றும் அதற்குப் பொருத்தமாக முழங்கால் வரை நீண்டிருக்கும் சாம்பல் நிற பென்சில் ஸ்கர்ட் அணிந்து, காதில் ஹெட்போன் மாட்டியபடி ஒரு மாடல் அழகி போல நடந்து வந்து கொண்டிருந்தாள்.
 
​அவளைப் பார்த்ததும் சந்தீப் கண்கள் மின்ன, "மச்சான்... எனக்கு என்னமோ இவதான்னு தோணுதுரா!" என்றான்.
 
​இந்த முறை மனிஷ் உஷாரானான். "Wait... நான் போய் விசாரிக்கிறேன், நீ இங்கேயே இரு. நீ போனா எனக்கு இன்னொரு அரை வாங்கி கொடுத்துருவ!" என்று சொல்லிவிட்டு, சந்தீப்பை அங்கேயே நிற்க வைத்துவிட்டு அவளை நோக்கி சென்றான்.
​சில நொடிகள் அவளிடம் ஏதோ தீவிரமாகப் பேசினான் மனிஷ். பின் முகத்தில் ஒரு பெரிய வெற்றியுடன் திரும்பி வந்து, "மச்சான்... பேசிட்டேன்! அவதான் 'சன்ஷைன்'. உண்மையை ஒத்துக்கிட்டா! ஆனா எப்படி இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டா. என் நண்பன் சந்தீப் தான் காரணம், அவனுக்கு கம்ப்யூட்டர் மூளைன்னு சொன்னேன்" என்றான்.
 
​சந்தீப் பெருமையில் பூரித்து,
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்டா... எப்படியோ கண்டுபிடிச்சாச்சு!" என்று உற்சாகத்தில் அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.
 
​அவன் அருகில் சென்றதும் அந்தப் பெண், "நீங்கதானா?" என்று கேட்டாள்.
 
​"ஆமா..." என்று சந்தீப் பற்கள் தெரிய சிரித்து தலையாட்டினான்.
 
​'சப்!' - இந்த முறை சந்தீப்பின் கன்னத்தில் அரை விழுந்தது. அவனது காதுக்குள்ளே 'கிண்' என்று ரீங்காரம் கேட்டது.
 
​"ஆஆஆஆ!" - சந்தீப் கன்னத்தில் கை வைத்து அலறினான். மனிஷை பார்த்து, "ஏன்டா இப்படி பண்ணுன?" என்பது போல் திரும்பிப் பார்க்க, அந்தப் பெண் மீண்டும் சீறினாள்.
 
​"ஏன்டா பொண்ணுங்கன்னா உங்களுக்கு இளக்காரமா போச்சா? ரேட் பேசுறீங்களா?" என்று சொல்லிவிட்டு இன்னொரு முறை கையை ஓங்க, "ஐயையோ... என்னை விட்ருங்க சிஸ்டர்!" என்று அலறியபடியே சந்தீப் அங்கிருந்து தெறித்து ஓடினான்.
 
மனிஷ்: அரைக்கு அரை சரியா போச்சு மச்சான்... என்று கத்தினான்.
 
​இதையெல்லாம் காபி ஷாப் வாசலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மைதிலிக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
 
​ஆனால், அவளது பார்வை மெல்ல தூரத்தில் நின்று கொண்டிருந்த மனோ பக்கம் திரும்பியதும், அவளது சிரிப்பு மறைந்தது.
 
​அவன் இன்னமும் அந்த கிளாக் டவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது தோற்றமும், அந்த ஏக்கமான பார்வையும் மைதிலியின் மனதைத் துளைத்தது. 'எனக்காக இவ்வளவு ஏக்கத்தோடு நிற்கிறாரே... பேசாமல் உண்மையை சொல்லிரலாமா?' என்று அவளுக்குள் ஒரு கணம் தவிப்பு.
 
​ஆனால், மறுநொடியே அவள் தன் தோற்றத்தையும், தற்போதைய சாதாரண நிலையையும் பார்த்தாள். 'இல்லை... ஒரு காபி ஷாப் அட்டென்டன்டாக, ஒரு சாதாரண வேலையில் இருக்கும் நான், இவ்வளவு பெரிய இடத்து பிள்ளையான மனோ முன்னால் எப்படி போய் நிற்பது? அவர் என்னை ஏதோ ஒரு பெரிய தேவதையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். நிஜத்தைப் பார்த்தால் ஏமாந்து விடுவார்' என்று அவளது தாழ்வு மனப்பான்மை அவளை தடுத்தது.
 
காபி ஷாப்புக்குள் இருந்து மேனேஜர் முறைத்துக் கொண்டிருப்பது மைதிலிக்கு முதுகில் உரைக்க திரும்பி பார்த்தாள். காபி ஷாப் கண்ணாடி வழியாக உண்மையிலேயே முறைத்துக் கொண்டு இருந்தார். ஐயையோ!!! என்று அவசரமாக உள்ளே நுழைந்து, யூனிஃபார்மை மாற்றுவதற்காக லேடீஸ் ரெஸ்ட் ரூமை நோக்கி ஓடினாள்.
 
இன்னும் நகராமல் அதே இடத்தில் மனோ நின்றிருந்தான். அவள் எங்கேயோ பக்கத்தில் இருப்பதாக, அவனைப் நினைப்பதாக, அவனை பார்ப்பதாக, அவனுக்கு தோன்றியது.
 
யாரோ மிகவும் அருகில் இருந்துகொண்டே... தன்னை தீவிரமாகக் கவனித்துக் கொண்டே... ஏனோ பிடிபடாமல் நழுவிப் போகும் ஒரு விசித்திர உணர்வு.
 
அவன் மெதுவாக முணுமுணுத்தான் —
 
“சன்ஷைன்…”
 
அந்த ஒரு வார்த்தை காற்றில் கலந்தது.
 
அவள் பக்கத்தில் தான் எங்கேயோ இருக்கிறாள் என்று அவனுக்கு தெரியும் ஆனால் எங்கே என்று தெரியாது…
 
அவன் தன் பார்வையை சுற்றிலும் வந்து போய்க் கொண்டிருந்த மக்களின் முகங்கள் மீது படரவிட்டான். அங்கே கடந்து செல்லும் ஒவ்வொரு முகத்திலும் அவளைத் தேடினான்.
​'அந்தப் பூக்கடையின் ஓரம் நின்று பூக்களை ரசித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணா? அல்லது அவசரமாக பேருந்துக்காக ஓடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணா? ஒருவேளை போன் பேசியபடி போகிறாளே ... அவளாக இருக்குமோ?'
​எதிரே வரும் ஒவ்வொரு பெண்ணின் கண்களையும் ஒரு நொடி உற்றுப் பார்த்தான். 'இந்தக் கண்களில் நான் தேடும் அந்த மின்னல் இருக்குமா? இவள்தான் என் சன்ஷைனா?'
 
அந்த கிளாக் டவரிலிருந்து கொஞ்ச தூரத்தில் இருந்த காபி ஷாப்புக்குள்,
 
அவன் தேடி வந்த அந்த ‘சன்ஷைன்’,
 
அப்ரானை மாட்டிக்கொண்டு, ஒரு கஸ்டமரிடம் புன்னகையுடன்,
 
“வாட் வுட் யூ லைக் டு ஆர்டர், சார்?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
தொடரும்


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page