All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வட்டிக்காரனின் வசியக்காரியவள்-1

 

VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 1 month ago
Posts: 7
Topic starter  

அத்தியாயம்-1

பெங்களூர் சிட்டி அந்த காலை நேரத்திலும் அவ்வளவு சுறுசுறுப்பாக இருந்தது.. பின்னே பெங்களூர் சிட்டியின் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிற்றே அப்படிதான் இருக்கும்.. காலையில் ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் போக்குவரத்து நெரிசல் மதியம் ஆனாலும் சரியாகாத நிலைமை தான் அங்கே.. அதனாலே ஒன்பது மணிக்கு ஆபிஸிற்கு வர வேண்டியவர்கள் அனைவரும் ஆறு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் தான் சரியாக வரும்.

அப்படிப்பட்ட எலக்ட்ரானிக் சிட்டியில் தான் எங்கு பார்த்தாலும் ஐடி ஆபிஸ் நிறைந்திருக்கின்றது. அங்கில்லாத ஐடி நிறுவனமே இல்லை. ஏன் சொல்ல போனால் தமிழ்நாட்டில் இல்லாத பல நிறுவனங்கள் கூட அங்கு நிறைந்து இருந்தது. அது போக நிறைய வெளிநாட்டு கம்பெனிகளும் அங்கு தன் பட்டறையை போட்டிருந்தது. மக்களுக்கு தான் வேலைக்கு பஞ்சம் அல்லவா. அதனால் தான் இது போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் தங்கள் கஜானாவை நிறைத்துக்கொண்டிருக்கின்றது..

அப்படிப்பட்ட மிகப்பெரிய நிறுவனத்தின் வாசலில் தான் வேகமாக வந்து நின்றது ஒரு சிஃப்ட் டிசயர் கார். அதில் இருந்து வேகமாக இறங்கிய ஒருத்தியோ.. “தாங்க்ஸ் பய்யா...”என்றவள் தன் ஹேன்ட் பேக்கில் இருந்து பணத்தை எடுத்து கொடுத்தவள் அவசரமாக ஓடினாள் அந்த நிறுவனத்தின் உள்ளே..

அவள் முகமோ அந்த காலை நேரத்திலும் பனிதுளிகள் விழுந்தது போல வியர்த்து போய் இருந்தது.. ஆனாலும் அவளின் முகம் கொஞ்சமும் சோர்வை காட்டவில்லை. அதற்கு பதில் ஒருவித பதட்டத்தை தான் காட்டியது. அந்த பெரிய கட்டடத்தை நோக்கி ஓடியவள் ஐந்தாம் மாடியில் இருந்த தன்னுடைய அலுவலகத்தை நினைத்து கடுப்பாகி போனாள்.

ம்ச் இவங்களுக்கு இந்த ஃபஸ்ட் ஃப்ளோர் எல்லாம் தெரிலையா.. போயும் போயும் அஞ்சாவது மாடில கம்பெனிய வச்சி உயிர வாங்குறாங்க. ஒரு அவசரத்துக்கு கூட வேகமா ஓட முடிதா.”என்று தன்னை தானே திட்டியவாறே ஓடியவள் தன் கைகடிகாரத்தை பார்க்க அதுவோ அப்போது தான் எட்டு என்று காட்டியது. தன் பல்லை நறநறவென கடித்துக்கொண்டவள். “எல்லாம் இந்த மேனேஜர் பரசுவ சொல்லனும். காலையில எட்டு மணிக்கு ப்ராஜக்ட் லைவ் இருக்குனு காலையில ஆறு மணிக்கா சொல்லுவாரு. இந்த லட்சணத்துல நான் டீம் லீட் வேற..”என்று புலம்பலுடன் லிஃப்டில் ஏறி ஐந்தாவது மாடியின் பட்டனை க்ளிக்க. அதுவோ இன்று பார்த்து சோதனையாக மெதுவாக டோரை க்ளோஸ் செய்தது.

அவளோ கடுப்பாகியவள்.. “ஆண்டவா எல்லாம் ஒரே நேரத்துல சோதிக்கிதே..”என்று புலம்பலுடன் கையை உதறிக்கொண்டு நிற்க.. அவள் சோதனையை முடிவுக்கு கொண்டு வருவது போல அடுத்த ஐந்தாவது நிமிடம் அவளின் அலுவலகத்தின் வாசலில் லிஃப்ட் நின்றது. எரிச்சலாக லிஃப்டில் இருந்து இறங்கியவள்.. லிஃப்டினை பார்த்து ஒரு முறை முறைத்தவாறே.. “டேம்ன் லிஃப்ட்..”என்று திட்டியவாறே தன் இடத்தை நோக்கி ஓடினாள்.

அப்போது அந்த அலுவலகத்தில் யாரும் அவ்வளவாக வரவில்லை. அதெல்லாம் அவள் கவனிக்கவும் இல்லை. வேகமாக தன் டெஸ்கிற்கு ஓடியவள் அவசர அவசரமாக தன் பேகில் இருந்த லேப்டாப்பை ஓப்பன் செய்து தன் டெஸ்கில் இருந்த ப்ரின்டவுட் மெஸினுடன் கனெக்ட் செய்தவாறே சில பல பேப்பர்களை ப்ரின்ட் அவுட் எடுத்தவள்.. அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டும், இன்னொரு கையில் லேப்டாப்பை எடுத்துக்கொண்டும் ஓடினாள் மீட்டிங் ரூமை நோக்கி.

மே ஐ கம்மின் பரசு..”என்று வெயில் நின்று அனுமதி கேட்க..

எஸ் கம்மின் வசி.”என்ற பரசுவோ வேகமாக மூச்சிறைக்க ஓடி வரும் வசிகாவை பார்த்து கையை கட்டிக்கொண்டு முறைக்க. வசிகாவோ அவனுக்கும் மேல் அவனை முறைத்தாள்.

வாட் வசி, நான் முறைக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு நீ ஏன் முறைக்கிற..”என்றவனை இன்னும் அதிகமாக முறைத்தவளோ.. “ஹவ் மெனி டைம்ப்ஸ் ஐ டோல்ட் யூ பரசு. என்னை வசினு கூப்டாதீங்கனு.. ஐ ம் வசிகா. அப்டியே கூப்டுங்க..”என்றாள் அங்கிருந்த டேபிளில் தன் லேப்டாப்பை வைத்தவாறே..

ஆம் அவள் வசிகா. அக்மார்க் சென்னையை சேர்ந்தவள். இந்த ஐடி ஃபீல்டில் நுழைந்து கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகிறது. கல்லூரியில் படிக்கும் போதே கடைசி வருடத்தில் வைத்த ப்ளேஸ்மென்டில் செலக்ட் ஆனவள் வேணும் என்றே பெங்களூர் சிட்டியை தேர்ந்தெடுத்து இங்கு வந்துவிட்டாள். வேலையில் சேர்ந்து கிட்டதட்ட இந்த மூன்று வருடங்களில் நான்கு கம்பெனி மாறிவிட்டாள். மாறிவிட்டாள் என்றாள் இவளின் புத்திசாலித்தனத்திற்காக இதுவரை நான்கு முறை வெவ்வெறு கம்பெனிகளில் இன்டர்வியூ அட்டன் செய்தவள் அனைத்திலும் வேலையை வாங்கிவிட்டாள். இப்போது அவள் வேலையில் இருப்பது பிரபலமான ஐடி கம்பெனி தான்.

அதனால் தான் இந்த சின்ன வயதில் டிஎல் ஆக இருக்கின்றாள்.வேலையில் கன் ஆக இருப்பாள். தேவை இல்லாமல் யாருடனும் பேசமாட்டாள், பழகமாட்டாள். அவளின் நட்பு வட்டமே குறுகியது தான்.

பரசுராமன் வசியின் மேனேஜர். வசி கூறியதை கேட்டவர் சின்ன புன்னகையை கொடுத்தவர். “நீ இன்னும் மாறவே இல்ல வசிகா.. கிட்டதட்ட நீ இங்க வேலைக்கி ஜாய்ன் பண்ணி ஒன் இயர் ஆக போகுது. ஆனா இப்போவர நீ யார்கிட்டையும் சரியா பேசி கூட நான் பார்த்ததே இல்ல. ஏன் வசிகா இப்டி ரிசர்வ்ட் டைப்பா இருக்க..”என்றார் பரசு.. பரசுக்கு உண்மையில் வசியை மிகவும் பிடிக்கும். அதற்கு காரணம் அவளின் அமைதியான அடக்கம் தான். சொல்லபோனால் அவருக்கு வசியை கிட்டதட்ட ஆறு வருடங்களாக தெரியும்.. ஏனென்றால் வசியின் தோழி அஞ்சலியின் அண்ணன் தான் வசிகா.

பரசுவின் தங்கை அஞ்சலியும், வசிகாவும் கிட்டதட்ட ஏழு வருடங்களாக தோழிகளாக பழகுகின்றனர். இருவரும் ஒன்றாக ஒரே துறையில் தான் தங்கள் கல்லூரி படிப்பை முடித்தனர்.வசிகாவிற்கு தோழி என்றால் ஏன் நட்பு என்றாலே அது அஞ்சலி மட்டும் தான்.இன்னொருவனும் இருக்கின்றான். அவனை பற்றி பின்னால் பார்ப்போம்.அஞ்சலியும் இதே ஐடி கம்பெனியில் தான் வேலை பார்த்தாள். ஆம் பார்த்தாள் இப்போது தான் இரண்டு மாதங்களுக்கு முன்பு அஞ்சலிக்கு திருமணம் நிச்சயிக்க இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு திருமணம் என்பதால் வேலையை விட்டு நின்றுவிட்டாள்.

பரசு கூறுவதை கேட்டவளோ முகத்தில் எந்த உணர்வினையும் காட்டாமல் தன் லேப்டாப்பினை எடுத்து தட்டியவாறே "இன்னும் உங்களுக்கு டைம் ஆகலையா பரசு ப்ரோ. கிளைன்ட் கிட்ட லைவ் காட்டனும்னு காலையில ஆறு மணிக்கு போன் பண்ணி சொல்லிட்டு அவசர அவசரமா ஓடிவந்தவகிட்ட தேவை இல்லாம ஏதேதோ பேசிட்டு இருக்கீங்க. போய் லைவ்க்கான வேலைய பாருங்க.”என்றவள் கவனமோ முழுதும் லேப்டாப்பிலையே இருக்க. பரசுவோ அவளை கண்டு தலையை மெல்ல ஆட்டியவன். “ஹான் போறேன் போறேன்.நீ எல்லாம் ரெடியா வச்சிக்கோ வசி..”என்றான்

அவனின் வசி என்ற வார்த்தையில் மறுபடி அவள் முறைக்க. “அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன் வசிகா இப்டி முட்டை கண்ண வச்சி முறைக்காத..”என்றவர் க்ளைன்ட் காலை கனெக்ட் செய்வதற்கான வேலைகளை மும்முரமாக செய்ய.. அப்போதும் அவளின் முகத்தில் எவ்வித உணர்வுகளும் இல்லை.

அவள் அப்படிதான் சந்தோஷம் என்றாலும் சரி, வருத்தம் என்றாலும் சரி அதிகமாக முகத்தில் காட்டாத பிறவி. அதற்காக உணர்வுகளே இல்லை என்று கூறிவிட முடியாது. அதெல்லாம் இருக்கின்றது ஆனால் அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள். அவளிடம் அதற்கான காரணமும் இருக்கின்றது.

…………………………………………………………………………………………………………………………..

சென்னையின் பெருங்களத்தூரில் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் அது. அந்த நிறுவனத்தில் வேலையே மேல்தட்டு மக்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது தான். அதுவும் பாதி அப்பார்ட்மென்ட் வீடுகளையும், பாதி வில்லா டைப் வீடுகளையும் கட்டி அதனை பல கோடிகளுக்கு விற்கும் பிரபலமான நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் ஹெட் ஆபிஸ் தான் இப்போது அல்லோல கல்லோல பட்டுக்கொண்டிருக்கின்றது. அந்த ஹெட் ஆபிஸில் இருக்கும் பல பொருட்கள் வாசலில் கொண்டு வந்து போட்டு உடைத்தவாறே ஒரு கும்பல் நிற்க. அதனை தடுத்தவாறே தவிப்புடன் நின்றனர் அந்த நிறுவனத்தில் ஊழியர்கள்.

பொருட்கள் உடைவதை சாவகாசமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அருகில் ஓடிய இரு ஊழியர்களோ… "சார் சார் ப்ளீஸ் சார்.. இப்டி செய்ய வேணாம்னு சொல்லுங்க சார். ப்ளீஸ் சார்"என்று அவர்கள் கெஞ்ச… அவனோ அவர்களை ஒரு பார்வை பார்த்தவன் திரும்ப தன் பார்வையை பொருட்கள் உடைவதில் பதிக்க. அந்த ஊழியர்களுக்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை.

சார் ப்ளீஸ் சார் கொஞ்சம் இத நிறுத்த சொல்லுங்க சார்.”என்றான் ஒருவன்

அதற்கு அந்த வேடிக்கை பார்த்தவனோ. “எங்கிட்ட ஏன் மேன் வந்து கெஞ்சிறீங்க. உங்க முதலாளி எங்க. அவருக்கு இங்க வர சொல்லி இன்ஃபார்ம் பண்ணி ஒருவாரம் ஆயிடுச்சி இல்ல. ஒருவாரமா என்ன மேன் செஞ்சிட்டு இருக்காரு உங்க முதலாளி.”என்றான் அவன்

அதில் கையை பிசைந்தவாறே நின்றவர்களுக்கோ தங்கள் முதலாளியிடம் பத்து நாட்கள் முன்னையே இவர்களின் மிரட்டலை எடுத்து கூற. அவரோ அதனை கொஞ்சமும் மதிக்காமல்.”குறைக்கிற நாய் கடிக்காதுடா. அவன் வந்து சத்தம் தான் போடுவான். அதுக்கு மேல அவனுக்கு நம்ம ஆபிஸ் மேல கை வைக்க தைரியம் எல்லாம் இல்ல. நீங்க பயப்படாம வேலைய பாருங்க.”என்றார்

அதில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தான் கடுப்பாகியது. “சார் நாம கடனா வாங்குன தொகைக்கான டைம் முடிஞ்சி ஒருமாசம் ஆகுது சார். அந்த ஆர்.வி ஃபினான்ஸ் கம்பெனிய பத்தி நமக்கே நல்லா தெரியும். அவங்க கடன கட்ட கொடுக்கற கெடு முடிஞ்சி மேல ஒரு மாசம் ஃபைனல் வார்னிங் கொடுத்தும் பணம் கட்டலனா அவங்க ஆக்ஸனே வேற மாதிரி இருக்கும்னு நமக்கு தெரிஞ்சதுதானே சார். இப்போ ஃபைனல் வார்னிங் முடிய இன்னும் பத்து நாள் தான் சார் இருக்கு. ஆனா நாம இன்னும் பணத்துக்கான ஏற்பாடே செய்யல சார்.அந்த ஃபினான்ஸ் கம்பெனியோட ஓனர் ஒருமாதிரி சார்.. சரியான கறார் பேர்வழினு கேள்விப்பட்டுருக்கேன் சார்”என்று அந்த நிறுவனத்தின் மேனேஜர் கலக்கமாக தன் முதலாளியிடம் கூற.

அந்த முதலாளியோ அதனை சாவகாசமாக காதில் வாங்கியவர். “ம்ச் அவன் என்ன பெரிய இவனா. அவன் கொடுத்த கெடுக்குள்ள நான் காச கட்டுனா அப்புறம் எனக்கு என்னய்யா மரியாத. அதெல்லாம் ஆறுமாசத்துக்கு அப்புறம் அவனுக்கு காசு கொடுத்துக்கலாம். இப்போ நாம அமஞ்சிக்கரையில ஒரு வில்லா டைப் வீடு கட்டனும்னு ப்ளான் போட்டோமே அந்த வேலைய பாருங்க. நானு ஒருமாசம் என் பையனோட ஃப்ரான்ஸ் போறேன். நடுவுல போன் பண்ணி டார்ச்சர் செய்யாதீங்க.”என்றவர் கிளம்பிவிட்டார் ஃப்ரான்ஸிற்கு

அவர் போவதை கலக்கிய வயிறுடன் பார்த்தார் அவரின் மேனேஜர். அவருக்கு தான் அந்த ஆர்.வி பைனான்ஸ் கம்பெனியை பற்றி அனைத்தும் தெரியுமே. அந்த நிறுவனத்தின் அவதாரத்தை பற்றியும் தெரியும் அப்படிப்பட்டவனிடம் தன் முதலாளி அலட்சியமாக நடந்துக்கொள்வதை பார்க்க பார்க்க பயத்தில் அடிவயிறு கலங்க தானே செய்யும்.

இப்போது அவர் பயந்ததை போல ஆர்.வி கம்பெனி தன்னுடைய அவதாரத்தை காட்ட ஆரம்பித்திருந்தது. சாதாரணமாக அந்த பிரபலமான கட்டுமான ஹெட் ஆபிஸை டார்கெட் செய்வதில்லை அந்த ஆர்.வி கம்பெனியின் நோக்கம். அடுத்து அந்த நிறுவனத்தின் தற்போதைய ப்ராஜெக்ட் ஆன அந்த வில்லா டைப் வீடுகளின் பேஸ்மென்டை தகர்க்க ஆரம்பிக்க.. அங்கோ அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் ஃப்ளைட்டில் பறந்து வந்தாறா இல்லை அவரே ரெக்கையை கட்டி பறந்து வந்தாறா என்ற அளவிற்கு வந்து விழுந்தார் ஆர்.வி கம்பெனியின் உரிமையாளனான ரணவேந்தன் காலில்.

(வசியக்காரி வருவாள்)

 


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 1 month ago
Posts: 7
 

Good starting machi ❤️❤️waiting next epi 


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 1 month ago
Posts: 18
 

அருமையான தொடக்கம்.சூப்பர்


   
ReplyQuote
VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 1 month ago
Posts: 7
Topic starter  

@vsv42 thank u machi


   
ReplyQuote
VSV 44 – வட்டிக்காரனின் வசியக்காரியவள்
(@vsv44)
Member Author
Joined: 1 month ago
Posts: 7
Topic starter  

@vsv45 thank u sis


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 39
 

@vsv44 சூப்பர் 👌


   
ReplyQuote

You cannot copy content of this page