About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
டீசர்:
வசிகா தன் அறையில் அதாவது தன்னுடைய கணவனின் அறையினுள்ளே நுழைந்ததில் இருந்த பதட்டம் இப்போது முழுதும் பறந்து போய் இருந்தது. பின்னே இருக்காதா அவள் ரணவேந்தனின் அறைக்குள் நுழைந்து கிட்டதட்ட கால்மணி நேரத்தை தாண்டி சென்றது.
ரணவேந்தனின் அன்னை வசிகாவின் தலையில் முழுக்க பூவை வைத்துவிட்டவர்.. “கொஞ்ச நேரத்துக்கு தான்டா.. அப்புறமா இந்த பூவ நீ எடுத்துடலாம்..”என்றார் அவளின் கஷ்டம் புரிந்தவாறே. ஏனென்றால் வசிகாவின் முகமோ முதல் தடவை கணவனின் அறைக்கு நுழையப்போவதில் அதிக படப்படப்பில் வியர்வை மின்ன உட்கார்ந்திருக்க.. அதனை அதிகப்படுத்துவது போலவே அவரின் செயல் அவள் முகத்தில் சுருக்கத்தை அதிகப்படுத்தியது. அதனை அவர் கவனித்ததனால் தான் இந்த விளக்கம் கொடுத்தார்.
“எனக்கும் இப்டி எல்லாம் உன்ன டிஸ்டர்ப் பண்ணனும்னு இஷ்டம் இல்லடா.. ஆனா பாரு வீடு முழுக்க சொந்தக்காரங்களா இருக்காங்க.. அவங்க உன்ன பாத்து நாலு வார்த்த நக்கலா பேசிட்டா அத கேட்டு எனக்கு கஷ்டமா இருக்குமே.. அதுனால தான் இத பண்ண வேண்டியதா போச்சி..”என்றார் ரணவேந்தனின் அன்னை..
அவரின் விளக்கமே வசிகாவிற்கு அவ்வளவு ஆச்சரியத்தை கொடுத்தது. அவளும் டிவி சீரியல்களில் வரும் டிபிக்கல் மாமியார்களை பற்றி அவ்வளவாக இல்லை என்றாலும் ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்தாள். அதனால் தான் ரணவேந்தனின் அன்னை பேசுவது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
கண்ணாடி வழியாக வசிகா தன்னையே இமைக்காமல் பார்ப்பதனை பார்த்து புன்னகைத்தவரோ.. அவளின் அழகில் ஒரு நிமிடம் சொக்கி போனார். பின் அவளுக்கு தன் கைகளால் திருஷ்டி கழித்தவர். “என் கண்ணே பட்டுடும் போல என் மருமக அவ்ளோ அழகு..”என்றார் அவள் கன்னத்தில் அழகான திருஷ்டி பொட்டை வைத்தவாறே..
“ஆகா அதே டைலாக்..”என்றவாறே அங்கு வந்தாள் அவரின் மூத்த மருமகள்.. அதில் அவரின் முகத்தில் புன்னகை அரும்ப ஆனாலும் தெரியாதது போல தன் மூத்த மருமகளை பொய்யாக முறைத்தவறோ.. “என்னடி அதே டையலாக் பேசிட்டாங்க இங்க..”என்றார்
அவரின் மூத்த மருமகளோ வசிகாவின் தலையை ஒழுங்குப்படுத்தியவாறே.. “என்ன டையலாக்கா அத்த எனக்கு இதே மாதிரி முதலிரவுக்கு தலையில பூ வச்சிட்டு இதே மாதிரிதானே திருஷ்டி கழிச்சிட்டு சேம் டையலாக் சொன்னீங்க.. “அப்டியே என் கண்ணே பட்டுடும் போல.. என் மருமக அவ்வளவு அழகு..”என்று கூறும்போதே அவர் பேசிய மாடுலேஷனிலையே பேச.. அவ்வளவு நேரம் ஒருவித படப்படப்பில் இருந்த வசிகாவிற்கே அவள் பேசியதில் புன்னகை வந்துவிட்டது. நல்ல வரிசை பற்கள் தெரியும்படி புன்னகைக்க… ரணவேந்தனின் தாயோ செல்லமாக மூத்த மருமகளின் தோளில் தட்டினார்.
……………………………………………………………………………………………………………………………
வசிகா வேந்தனின் அறையில் கடுப்பில் நிற்க. வேந்தனோ அப்போது தான் ஒரு காலை பேசிவிட்டு தன் அறை பால்கனியில் இருந்து அறைக்குள்ளே வந்தான்.. வந்தவன் வசிகாவை அங்கு பார்த்து அதிர்ந்துவிட்டான்..
“நீ எங்க இங்க..”என்று வாய்விட்டு கேட்டுவிட.. அவ்வளவே வசிகாவிற்கு இருந்த முதலிரவு அறை பயம், பதட்டம் அனைத்தும் பறந்து போக.. “எதே...”என்றாள் சத்தமாக அதே அதிர்வுடன்.
அவளின் எதே என்ற மாடுலேஷனில் ரணவேந்தன் அவளை புரியாமல் பார்க்க… அவனின் பார்வையில் கடுப்பாகியவள்.. “ஓஓஓ நான் எதுக்கு இங்க இருக்கனும்.. நான் போய் உங்க அம்மா கூடவே படுத்துக்குறேன்..”என்றவாறே வேகமாக அறையை விட்டு வெளியில் செல்ல அறை கதவை திறக்க போக.. அப்போது தான் ரணவேந்தனுக்கு அனைத்தும் புரிந்தது.. “ஷட்..”என்று தலையில் அடித்துக்கொண்டவன்.. “ஹேய் வசிகா.. நான் ஏதோ நியாபகத்துல..”என்று கூறியவாறே வேகமாக அவள் அருகில் ஓடியவன் வெளியில் செல்ல முயன்றவளை தன் கைக்குள் கொண்டு வந்தான்.
அதனை வசிகா கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்வுடன் அவன் நெஞ்சில் மோதியவாறே அவனை திருத்திருத்தவாறே பார்க்க.. அப்போது தான் அவளின் நெருக்கத்தையே ரணவேந்தனும் அதிர்வுடன் உள்வாங்கினான்.. சட்டென்று அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன். “அது தெரியாம..”என்று தயங்கியவாறே இழுக்க.. அவனின் தயக்கமே அவனுக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. யாரிடமும் இதுவரை இதுபோல தயங்கியதே இல்லை. “இவக்கிட்ட மட்டும் என்ன புதுசா..”என்று மனதினுள் கேள்வி எழுப்பியவன் அதனை ஓரம் கட்டியவாறே..
“அது நமக்கு இன்னிக்கி ஃபர்ஸ்ட் நைட்னு நான் மறந்துட்டேன்..”என்றான் தலை கோதியவாறே
“ஓஓஒ.. அத மட்டுமா மறந்தீங்க..”என்றாள் வசிகா அவனை கண்கள் விரிய பார்த்தவாறே
அதில் ரணவேந்தன் அவள் பெரிய கண்களையே உற்று பார்த்தவாறே என்ன என்பது போல பார்க்க…. “நமக்கு கல்யாணம் ஆனதையும், நான் உங்க பொண்டாட்டினும், ஏன் நான் இனி இந்த ரூம்ல உங்களோட தான் இருக்க போறேன்றதையும் சேர்த்து மறந்துட்டீங்க..”என்றாள் கோவமாக மூக்கு விடைக்க..
அதில் ரணவேந்தன் வந்த புன்னகையை மறைத்தவாறே நாக்கை நீட்டி கடித்துக்கொண்டவாறே நிற்க.. அவனின் இந்த போஸில் வசிகாவிற்கு இருந்த கடுப்பெல்லாம் மறந்து ஓடியே போனது.
Latest Post: தேவன் உருக்கும் இசை (06) Our newest member: Saranyakumar Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page