About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 1
இரவில் மின்னும் மின்மினிப் பூச்சியை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கயிற்றில் கட்டி, புதர்களில் தோரணம் போல் தொங்க விட்டால் எப்படி வண்ணமயமாக காட்சி தருமோ! அப்படி காட்சி தந்தது மகாராட்டிரத்தின் நவி மும்பை மாகாணம்.
தூய்மையான சிட்டியாக கருதப்படும் அதன் வீதியில் வலது இடது என இரு பக்கமும் தலையை தலையை திரும்பி பார்த்தபடி… எரிந்து கொண்டிருந்த மின் விளக்கின் உதவியுடன் பாதையில் கவனம் பதித்து டக்… டக்… என்ற சத்தத்துடன் யாரோ நடந்து செல்வது தெளிவாக கேட்டது.
யாருமற்ற வீதியில் தனியாக ஒரு இளம் பெண் ஒய்யாரமாக நடை பயின்று கொண்டிருந்தாள். அவளின் கால்கள் புதிதாக இப்பொழுது தான் ஹை ஹீல்ஸ்ஸை அணிந்திருக்கும் போலும். இரு அடிக்கு ஒரு முறை தடுமாற்றம் வந்தது நடையில்.
உடலின், இன்னொரு தோல் என்பது கணக்காக இறுகிப் பிடித்து, அவளின் அளவெடுத்து வைத்து செதுக்கப்பட்ட அங்கங்களையும், வென் நிற வயிற்றை கீறலிட்ட இடைவெளிகள் மூலமாகவும் அப்பட்டமாக பறைசாற்றும் விதமாக இருந்த உடை அவளுக்கு நிச்சயம் அசௌகரியமாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
அதையும் முதல் முறை அணிகிறார் போலும்.
லெதர் ஜாக்கெட் என்ற பெயரில், இறக்கமாக வெட்டப்பட்டு பளிங்கு முதுகை காட்சிப் படுத்தாது மூடியவள், அதன் ஜிப்பை ஏற்றி தன் மேல் பாகத்தை மறைத்தாள். ஆனால் முட்டி வரை மட்டுமே நின்று கொண்டு, அவள் நடக்கும் போது தொடைக்கு ஏறிக் கொண்டே இருந்த ஸ்கெட்டை அவ்வபோது இழுத்து இழுத்து விட்டும் அவஸ்தை தந்தது.
அது வடிவேல் நின்று கொண்டே ஓலப்பாயை விரித்த கதையாக இறக்க மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது. தன் நீண்ட கால்களின் வனப்பை மறைக்கும் பொறுப்பை கருப்பு நிற லெக்கின்ஸ்ஸிற்கு குடுக்க, அது நிறத்தை மட்டுமே மறைப்பேன் உன் வாழைத்தண்டையொத்த கால்களின் செழுமையை அல்ல என்று விட்டது.
மொத்தத்தில் கேட் வாக் செய்ய வேண்டி தோதாய் உடை அணிந்து கொண்டு, வீதியில் பீதியுடன் நடந்து வந்தாள் சாலைக்கு.
தன் ஹென்ட் பேக்கில் இருந்து ஃபோனை எடுத்தவள், அதில் மணியை பார்த்து விட்டு லாக்கை ஓப்பன் செய்து யாருக்கோ அழைப்பு விடுத்தாள்.
“நா வந்திட்டேன். வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். “ என்றவளுக்கு பதிலாக அந்தப் பக்கத்தில் இருந்து,
“ டூ மினிட்ஸ். “ என்று ஒரு ஆண் குரல் சொல்லியது.
சில நிமிட காத்திருப்புக்கு பின் ஒரு கார் அவளின் முன் வந்து நின்றது. அதில் வேகமாக எறிக்கொண்டவளுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டாது.
“Don't worry. எல்லாம் நல்ல படியா நடக்கும்.” என்றான் இளவேந்தன்.
“நடந்தே ஆகனும். எனக்கு பயமா இருக்கு.” என்றவள் முகத்தில் கலவரம் தெரிய, அவளின் மடியில் பிண்ணிக் கிடந்த விரல்களை பற்றி ஒரு முறை அழுத்தி விடுவித்தான்.
அது அவளுக்கு ஆறுதல் சொல்வது போல் இருந்தது.
“பத்து மணிக்கு மேல தா நம்மல உள்ளயே அலோ பண்ணுவாங்க. அரைமணி நேரம் அங்க இருந்து தா ஆகனும். நா உனக்கு சிக்னல் காட்டி அங்கருக்குறவங்கள டைவர்ட் பண்றேன். நீ சப்ளையர்ஸ் வந்திட்டு போகுற டோர் வழியா உள்ள போய்டு.
அது மினி கிச்சனுக்கு போகும். அதுல இருந்து நாலாது டோர் வழியா வெளிய வந்து உன்னோட ரைட் சைடு நடக்க ஆரம்பிச்சா, ஒரு லிஃப்ட் தெரியும். செக்கேன்ட் ஃப்ரோர்ல சினிமா கார்னர்னு போர்டு இருக்கும். தெரியலன்னா யார்க்கிட்டயும் விசாரிக்காத. சைன் போர்டு அங்கங்க தொங்கும். அது மட்டும் கவனிச்சிட்டே போ.
சினிமா முடியுற வர யார் கண்ணுக்கும் சிக்காம ஒழிஞ்சுக்க. படம் முடிவும் கதவு திறக்குற வர வெய்ட் பண்ணு. அப்றம் என்ன பண்ணனும் என்ன பேசனும்னு யோசிச்சு வச்சிருக்க தான. பேசிடு. சிம்பிள்."
"சிம்பிளா!. இவ்ளோத்த தாண்டி உள்ள போனா எப்படி பேச்சு வரும்?" என சந்தேகமாக கேட்க,
"என்னால ப்ளான் போட்டு தா குடுக்க முடியும். அத எக்சிக்யூட் பண்ணப் போறது நீ தா. கொஞ்சம் உன்னோட விளையாட்டுத் தனத்த மூட்ட கட்டீட்டு சீரியஸ்ஸா இருக்க முயற்சி பண்ணு." என சிடுசிடுத்தான் அவன்.
"நா ஒன்னும் விளையாடல. சீரியஸ்ஸா தா சொல்றேன். நீங்க சொன்ன எந்த பாதையும் என்னோட மைன்ட்ல உக்காரல. வேற வழி எதாவது."
"அந்த ஹோட்டலுக்குள்ள போக அது மட்டும் தா வழி. இல்லன்னா விஐபி பாஸ் கேப்பான். அது இருக்கா உங்கிட்ட. இல்லேல்ல. உன்ன மாறி என்ன மாறி ஆளுங்கள கேட் வாசல்ல கூட நிக்க விடமாட்டான். ரொம்ப ரிஸ்க் எடுத்து இதப் பண்றேன்னா அதுக்கு காரணம் நீ தா.”
“நன்றி. உங்க உதவிக்கு.” என்றவள் முகத்தை அவன் புறம் திரும்பவில்லை.
“ஞாபகம் வச்சுக்க படம் பத்து நாப்பத்தஞ்சுக்கு முடியும். அங்க இருந்து பார்க்கிங் போக பத்து நிமிஷம் தா ஆகும். அது தா உனக்கான டயம்.” என்றவனின் பேச்சு அவளின் செவிக்குச் சென்றதாக தெரியவில்லை.
“லூசுத் தனமா எதையாவது செஞ்சிடாத. ஏன்னா அந்த ஹோட்டல் முழுக்க பவுண்சர்ஸ் இருப்பாங்க. உன்ன அலேக்கா தூக்கிக் கொண்டு வந்து வெளில குப்ப மாறி தூக்கி வீசிட்டு போய்டுவாங்க. இந்த சான்ஸ்ச விட்டா நீ அவன பாக்க வேற சான்ஸ் கிடையவே கிடையாது." என கடுப்புடன் தன் பேச்சை முடிக்க,
‘அதெல்லாம் பாத்துக்கலாம்.’ என்பது போல் அமர்ந்திருந்தாள் பெண்.
இருவரும் யாரையோ பார்த்து பேசி சமாதானம் செய்யச் செல்கின்றனர் போலும்.
கார் ஒரு பெரிய ஹோட்டலின் வாயிலை அடைந்தனர். மேலே அணிந்திருந்த ஜாக்கெட்டை கலட்டி காரிலேயே வைத்து விட்டு, ஜோடியாக இருவரும் கரம் கோர்த்தபடி அவர்கள் சென்ற இடம் பப்.
டிஸ்கோதேக்.
மங்கிய வெளிச்சத்தில், கண்களை கூச்சச் செய்யும் கலர்க் கலர் விளக்குகள் அவ்வபோது க்ராஸாகி பார்வையை மறைத்தது. ஆண் எது பெண் எது என்று தெரியாதவாறு கூட்டமாக நடுவில் ஆடிக் கொண்டிருந்தனர்.
டங்... டங்... என்ற அதிர்வுடன் இசைத்த ஒலி பெண்ணிற்கு தலை வலியையே குடுத்து விட்டது.
ஹீல்ஸ், உடை மட்டுமல்ல இது தான் அவளின் முதல் பப் அனுபவம். ஆடிக் கொண்டிருந்த யாவருடனும் லயிக்காது, அவர்களை விலக்கிக் கொண்டு ஓரமாக கிடந்த ஒரு நாற்காலியை தேடிப் பிடித்து அமர்ந்தாள்.
"மேம். எனி திங்." என்றபடி பணிவுடன் நின்றார் சப்ளையர்.
"எனி நான்-ஆல்கஹால் டிரிங் ப்ளீஸ்." என்றான் இளா.
“இப்ப நா இருக்குற நிலமைக்கி அது செட்டாகாது. அந்த மாறி க்ளாஸ்ல எதுனாலும் குடுங்க.” என்றவள் பக்கத்து டேபிளில் சாட் க்ளாஸ்ஸில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த பானத்தை காட்ட,
“இப்ப இது அவசியமா?” என்றான் இளா.
“தைரியம் வேணும் அத்தான். அதுக்கு இது தா ஒரே வழி. ஸார் ப்ளீஸ் கொண்டு வாங்க.” என்றவள் இளாவிடம் தொடங்கி பேரரிடம் முடித்தாள்.
அவளின் முன் வைக்கப்பட்ட இரண்டு க்ளாஸ்களில் ஒன்றை எடுத்து நுகர்ந்து பார்த்தவள், முகத்தை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு டக்கென வாயில் ஊற்றிக் கொண்டாள். அடுத்த கிளாஸ்ஸை எடுக்கும் முன்.
“போதும். நீ இங்கயே மட்டையாகிடுவ.” என்றவன் சில நிமிடங்களில் அவளுக்கு சிக்னல் குடுக்க, தட்டில் வெற்று க்ளாஸ்களை தூக்கிச் சென்று கொண்டிருந்த சப்ளையரை ஃபாலோ செய்தாள்.
இளா சொன்னதை மறந்து விட்டாள் போலும். எந்தப் பக்கம் செல்வது என்று திருதிருவென முழித்தபடி அங்கும் இங்கும் திரிந்தவள், யாரிடமும் வழிக் கேட்காமல், தேடிப் பிடித்து அந்த ஹோட்டலில் இருக்கும் ப்ரத்தேக வாடிக்கையாளர்களுக்கு என அமைத்திருந்த மினி சினிமாத் தியேட்டரின் முன் வந்த நேரம் அதை திறந்து கொண்டு இரு ஜோடிகள் வெளியே வந்தது.
இவள் புன்னகையுடன், "சத்யா..." என்றழைக்க, அந்த நாமத்திற்குச் சொந்தக்காரன் இவளை அணலில் தள்ளாத குறையாக துடிக்க விட்ட படி கடந்து சென்றான். மற்ற மூவரும் இவளை பார்த்தும் பச்சை விளக்கைப் பார்த்த வாகனம் போல் நின்று கொண்டனர். அவர்களின் பார்வையில் சிறு பரிதாபம் இருந்தது.
"சத்யா... சத்யா... நில்லு. நா... நா உங்கிட்ட பேசனும். ப்ளீஸ். " என கெஞ்சிய படி அவளின் பின்னாலேயே செல்ல,
"பட் எனக்கு உங்கிட்ட பேச எதுவும் இல்ல." என்றவனுக்கு அவளை திரும்பி பார்க்கும் எண்ணமே இல்லை போலும்.
"இருக்கு சத்யா. நம்மல பத்தி பேசனும். ப்ளீஸ்." என்றவுடன் நடந்து சென்று கொண்டிருந்தவன் சட்டென திரும்ப, அவனின் மீது மோதாது சடன் ப்ரேக் போட்டு நின்றாள்.
"வாட்.. என்ன சொன்ன? நம்மல பத்தியா? யூ மீன் உன்னையும் என்னையும் சேந்து நாமன்னு சொல்றியா.? எப்ப இருந்து நாம ஆனோம். ம்... Tell me. " என வினவ, அவள் பதில் சொல்லவில்லை.
பயத்தில் உறைந்து போய் நின்று விட்டாளா என்றால் இல்லை. அவனின் பச்சை ஏறிய கண்கள்களின் மீது அவளுக்கு ஒரு போதை. அதை விரித்து கோபமாக அவன் பேசினால் அந்த போதை அவளை முழுமையாக ஆட்கொண்டு அவனுள் இழுத்துச் செல்லும். இன்றும் அப்படி ஒரு போதையில் நிற்க, அவளை நெருங்கி வந்தவன்.
"உனக்கும் எனக்கு இடைல எதுவுமே இல்லை. There is nothing between us. கண்டபடி உலறிட்டு எம்முன்னாடி வராத. " என எச்சரிக்கை செய்தவன் அவளை கண்டு கொள்ளாது முன்னேறி நடக்க, அவளும் கெஞ்சிக் கொண்டே பின் தொடர்ந்தாள். ஒரு கட்டத்தில் அவளின் வருகையை நிறுத்துவது போல் கருப்பு கோர்ட் சூட் அணிந்திருந்த அந்த ஹோட்டலின் பாதுகாவலர்கள் வந்து அவளை தடுக்க,
"சத்யா... சத்யா... " என கத்திக் கொண்டே இருந்தாள். அவளை விடச் சொல்லி சத்யாவின் உடன் வந்திருந்தவர்கள் சொல்ல, அவர்கள் விழி விட்டனர். அணிந்திருந்த ஹீல்ஸை கையில் எடுத்துக் கொண்டு, வேகமாக ஓடிச் சென்று அவனின் முன் வந்தவள் அவனுக்கு ஈடாக பின்னாலேயே எட்டு வைத்து நடக்கத் தொடங்கினாள்.
"சத்யா ப்ளீஸ். நா சொல்றத கேளு."
"I am sorry. உங்கூட ஒரு செக்கேண்ட் கூட பேசுற ஐடியால நா இல்ல."
"பேசித்தான் ஆகனும் சத்யா. ஏன்னா நா உன்ன லவ் பண்றேன். I Love you. நீயும் என்ன லவ் பண்ணற. அதனால. "
"அதனால உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு எதிர்பாக்குறியா?.
நா உன்ன லவ் பண்ணேன் டி. இப்ப இல்ல. எப்ப நா உன்ன தேடி வந்தப்ப என்ன உதாசினப்படுத்தினியோ அப்பவே என்னோட லவ்... " என கோபமாக ‘முடிந்து விட்டது’ என்று கரத்தால் ஆக்ஷன் செய்து காட்டியவன்,
"இப்ப எனக்கு உம்மேல இருக்குற ஒரே ஃபீலிங்னா. அது பொறுப்பு மட்டும் தான். So Go away."
"சத்யா I am sorry. அன்னைக்கி இருந்த சூழ்நிலைல நா உன்னோட லவ்வ அக்சப்ட் பண்ணல. ஆனா இன்னைக்கி... "
"எல்லாம் மாறிடுச்சா?. நோ. எதுவும் மாறல. அதே சூழ்நிலைல தா இப்பவும் இருக்கு. "
"ஆனா நா மாறிருக்கேன் சத்யா. என்னோட சத்யாவ யாருக்காவும் விட்டுக் குடுக்கக் கூடாதுன்னு நா மாறிருக்கேன். I love you Sathya." என்றவள் இத்தோடு எத்தனையாவது முறை தன் காதலை அவனிடம் கூறுகிறாள் என்ற கணக்கே இல்லை.
ஒரே ஒரு நிராகரிப்பு. அவன் உரைத்தக் காதலை வேண்டாம் என்று தலையசைத்தமையால் இன்று அதை இம்போஷிஷனாக நூற்றிற்கும் அதிகமான முறை கூறி விட்டாள். ஆனால் அவனோ,
"நெக்ட் வீக் உன்னோட ஃப்ரெண்ட்ட மேரேஜ் பண்ணிக்க இருக்குற எங்கிட்ட லவ் ப்ரப்போஸ் பண்ண அறையுங் குறையுமா வந்திருக்க. கரெக்ட்டா?." என நக்கலாக கேட்க, அவள் ஒரு வித அசௌகரியத்தில் நின்றாள்.
"மேரேஜ்க்கு காரணம் காதலாத்தா இருக்கனும். பிஸ்னஸ் டெவலப்மெண்டுக்காக இருக்கக் கூடாது." என்றாள் சின்னக் குரலில்.
"ஃப்ரீ அட்வைஸ்க்கு தேங்க்ஸ். பட் எனக்கு அது தேவையில்ல. நானே வந்தது சொன்னேன்னு தான என்னோட லவ் நீ தூக்கி எரிஞ்ச. இனி எனக்கும் நா தேவையில்ல. I deserve someone who truly values me." என்றவன் அவளை அழைத்து வந்த இளவேந்தனை பார்த்து முறைத்தபடி, நடக்கத் தொடங்க, அவளும் கத்திய படி பின்னே சென்றாள்.
கார் பார்க்கிங்கை அடைந்து அவன் காரில் ஏறிச் சென்ற பின்னரும் துரத்திக் கொண்டே சென்றாள். இதற்கிடையே அவளை வேடிக்கைப் பார்த்த யாரையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
ஏன் இளா கூட, "வேண்டாம் விட்டுடு போகலாம்." என கெஞ்சிப் பார்த்தான். அவனின் பேச்சிற்கு மதிப்பளிக்காதவள்.
"சத்யா I Love You. ப்ளீஸ் எனக்கு ஒரு வாய்ப்பு குடு என்னோட லவ்வ நா ப்ரூஃப் பண்ண. சத்யா... சத்யா..." என்றவளுக்கு கருணை காட்டாது அவன் சென்றே விட்டான்.
சில மாதங்களுக்கு முன்… வடாப்பாவ் என்று அவளால் செல்லமாக அழைக்கப்படும் ஒரு நார்த் இந்தியனின் பின் காதலை யாசித்து ரோட்டில் மண்டியிட்டு அழுவாய் என்று யாராவது கூறியிருந்தால், "நல்ல ஜோக். கண்டிப்பா இதுக்கு விருது வழங்கச் சொல்லி நா PM முன்னாடி நின்னு போராடுறேன்." என நக்
கலாக கூறியிருப்பாள்.
ஆனால் இன்று அது நடந்து கொண்டிருக்கிறது.
அழும் இவள் தான் கோகோ. நம் நாயகி. இது நம் கோகோவின் காதல் கதை.
மயக்கம் தொடரும்....
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் தந்து விட்டு செல்லவும்.
Latest Post: கள் விழி மயக்கம் Our newest member: Saranyakumar Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page