All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 22

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

 

தேடல் - 22

 

இப்படியே தன்னவளை சமாதானம் படுத்தும் பணியை தொடங்கிய ஹர்ஷாவோ மூன்று மாதம் கழிந்தும், அவளை இன்னும் மலையிறக்க பாடுபட்டு கொண்டு தான் இருக்கிறான்.

 

மாதம் ஒருமுறை மகியை பரிசோதனைக்கு அழைத்து செல்பவன், ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதால் இம்முறை ஒரு வாரம் தமாதமாகி விட, 

 

வேலை முடித்து வந்து, மறுநாள் பெண்ணவளுடன் பரிசோதனை செய்வதற்காக நண்பன் மருத்தமனைக்கு வந்தவன், அவன் உள்ளே அழைப்பதற்காக தன்னவளுடன் காத்திருந்தான்.

 

நண்பன் வருகை அறிந்த சசியும் நண்பன் என்று அவனை முதலில் கவனிக்காமல் வரிசையாகவே காத்திருக்க வைத்து தான் பரிசோதிப்பான், அது தான் முறை என்று ஆதியும் தகராறு செய்யாமல் பரிசோதிப்பு சீட்டு வாங்கியே தன் எண் வரும்வரை காத்திருந்து செல்வதே வழக்கமாக கொள்வான்.

 

இதில் காத்திருக்க பொறுமையில்லாமல் நொந்த மகிழ்மதி “தீரா.. உங்க ப்ரெண்ட் ரொம்ப காக்க வைக்கார்..”

 

“ஏன்டி.. அண்ணன் அண்ணன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவ இப்போ என்ன என் ப்ரெண்ட்டுங்குற”

 

“பின்ன தங்கச்சிய இப்படி நொந்து போறளவு காக்க வச்சா கடுப்பாகாதா.. நான்லாம் உடம்பு சரியில்லன்னா கூட.. இந்த கொடுமைக்காக தான் ஹாஸ்பிட்டல் பக்கமே போகாம டாக்டர் கிட்ட கால் பண்ணி டேப்லெட் கேட்டு வாங்கிப்பேன்.. இன்னும் எவ்வளவு நேரம் தீரா.. பேசாம வீட்டுக்கு போயிட்டு எல்லாரும் போனதும் வருவோமோ” என்று புலம்பி கொண்டிருக்க,

 

அப்போது வெளியே வந்த செவிலியர் “மிஸ்ஸஸ் மகிழ்மதி ஆதிரன்” என்றழைக்க,

 

ஆதியோ “அநேகமா நீ புலம்பினது உன் அண்ணனுக்கே கேட்டிருக்கும் போல.. வா போலாம்” என்று கூறி, பெண்ணவளின் கரம்பற்றி உள்ளே அழைத்து சென்றான்.

 

அவர்கள் உள்ளே வந்ததும் “வா மச்சான்.. வாமா.. உக்காருங்க ரெண்டு பேரும்”

 

அதை கேட்டு இருவரும், அவனின் எதிரே அமர, ஆதியோ “டேய் மச்சான்.. உன் தங்கச்சி உன்மேல கோவமா இருக்காளாம்”

 

“என்னவாம்” என்க,

 

மகியோ “நான் எப்போ அப்படி சொன்னேன்.. அவர் சும்மா சொல்லுறார் அண்ணா” என்று கணவனை முறைக்க,

 

“வெளிய வச்சி சொன்னியே” என்று கூறியதை கேட்டு, அவன் தொடையில் கில்லி விட, அவனோ “ஆஆ” என்று கத்தியதில்,

 

சசியோ “ஏன்டா கத்துற”

 

“ஒன்னும் இல்லைடா.. கொசு கடிச்சிட்டு.. நீ அவள செக் பண்ணுடா” என்று கூறி தொடையை தடவியவாறு மனைவியை முறைத்தான்.

 

நண்பன் கூறியதும் பெண்ணவளை அழைத்து சென்று செய்ய வேண்டிய பரிசோதனை எல்லாம் செய்துவிட்டு அவளுடன் வந்து நண்பன் அருகில் அமர்ந்தவன் “மச்சான்.. தலைல உள்ள காயம் நல்லா ஆரிடுச்சு.. சோ இனி எந்த பிராப்ளமும் இல்ல.. முடிஞ்ச அளவு பழச கூட நினைவு படுத்த முயற்சிக்கலாம்.. ஒருவேளை பழச நினைச்சி யோசிக்கும் போது அதிகமா தல வலி வந்தா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வா.. மே பீ வர வாய்ப்பு கம்மி தான்.. இப்போ தான் காயம் ஆரியிருக்கு ஸ்ட்ரெஸ் பண்ணிக்க வேண்டாம்ன்னு நீங்க நினைச்சா.. இன்னும் டூ மந்த்ஸ் வெயிட் பண்ணியே பழச நினைவு படுத்தலாம்.. திஸ் ஸ் யூவர் சாய்ஸ்” 

 

“ம்ம்.. ஓகே மச்சான்.. இன்னும் ரெண்டு மாசம் போகட்டும்.. மத்தப்படி வேற எந்த பிராப்ளமும் இல்ல தான”

 

“டோண்ட் வொர்ரி மச்சான்.. ஷீ இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்” என்று கூற, அதற்கு மேல், சிறிது நேரம் நண்பனுடன் கேட்க வேண்டிய சந்தேகங்களை கேட்டுவிட்டே தன்னவளுடன் அங்கிருந்து விடை பெற்றான்.

 

மறுநாள் விடுமுறை நாள் என்பதால் இன்று இரவு அனைவரும் ஒன்று கூடினர்.

 

ஆடவர் மூவரும் பெண்கள் இருவருடன் இரவு உணவிற்கு சமைத்து கொண்டிருக்க, இதழோ ‘நமக்கு இதெல்லாம் செட்டாகாது’ என்று நழுவியவள், சமத்தாக ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி பார்க்க தொடங்கி விட்டாள்.

 

சிறிது நேரம் நண்பர்களுக்கு சமைக்க உதவிய சசியோ தன்னவளின் சீண்டலில் கடுப்பாகி ‘ஆள விடு’ என்றவாறு இதழுடன் இணைந்து தொலைகாட்சி பார்த்து கொண்டிருந்தவன் “படிப்பு முடிஞ்சுடுச்சு நெக்ஸ்ட் பிளான் என்ன இதழ்”

 

“எனக்கு தெரிஞ்ச சீனியர் டாக்டர்கிட்ட ட்ரைனிங்க்கு கேட்டுருக்கேன் கன்பிர்மேஷன் லெட்டருக்காக வெயிட்டிங் வந்ததும் ட்ரைனிங் ஓடிடுவேன்”

 

“ம்ம் சூப்பர்டா.. ட்ரைனிங் முடிஞ்சதும் சொல்லு நம்ம ஹாஸ்பிட்டலயே உனக்கும் இடம் போட்ருலாம்”

 

“தேங்க்ஸ் அண்ணா.. நான் கூட அதான் யோசிச்சேன் ட்ரைனிங் முடிஞ்சதும்.. இத பத்தி பேசிக்கலாம்ன்னு விட்டுட்டேன்” என்க, அவனும் அதற்கு தலையை ஆட்டிவிட்டு தங்கையுடன் இணைந்து மறுபடியும் படம் பார்க்கும் பணியில் இறங்கினான்.

 

*

அனைவரும் சாப்பிட்டு முடிக்க, மகியோ குளிர்சாதன பெட்டியிலிருந்து சில பழங்கள் எடுத்து வெட்டி தட்டியில் எடுத்து தாராவின் அறைக்குள் சென்றவளோ, ஜன்னல் கதவை திறந்து “அணி பேபி” என்று அழைத்து ஜன்னல் வெளியே தட்டை வைக்க, இருப்பிடத்தில் உறங்கி கொண்டிருந்த அணிலும் இவளின் குரல் கேட்டு உணவு உண்ண வந்துவிட்டது.

 

அணி பேபி தாராவிற்கு மட்டுமல்ல மகிக்கும் இந்த மூன்று மாதத்தில் செல்ல பிராணியாகி போனது.

 

இப்போது அது சாப்பிடும் அழகை ரசித்து கொண்டிருந்த மகியின் தோலில் கைப்போட்ட தாரவும், அதை ரசிக்க தொடங்கினாள்.

 

அது சாப்பிட்டுவிட்டு சென்றதை கண்ட மகி “அணி பேபி.. நான் பாக்கும் போதெல்லாம் பாதிக்கு மேல சாப்பிட மாட்டிக்கு.. ஆனா அடுத்த ஒரு மணிநேரத்துல வந்து பாத்தா காலியான தட்டு தான் இருக்கு.. அது எப்படின்னு பல தடவ கேட்கிறேன் இன்னைக்காவது சொல்லலாம்ல”

 

“அது ஒரு பெரிய கதை.. இன்னொரு நாள் சொல்லுறேன் இப்போ மூடு இல்ல” 

 

“ம்க்கும்.. கேட்கும் போதெல்லாம், அதே டயலாக்க தான் சொல்லுற.. ஆனா அந்த பெரிய கதை என்னன்னு சொல்ல மாட்டிக்க” என்று கூறி சிலுப்பி கொண்டாள்.

 

 

யாரும் இல்லாததை உறுதிப்படுத்தி கொண்டு மொட்டை மாடி வந்த ஆதியோ, அழைப்பு விடுத்து இதழையும் அழைக்க, மறுநிமிடமே அவனை காண வந்தவள் “சொல்லுங்க அண்ணா”

 

“பைல் கிடைச்சுதா இதழ்”

 

“இதுவரைக்கும் எதுவுமே கிடைக்கல அண்ணா.. அப்பா சமந்தப்பட்ட சில இடங்கள் தேட வேண்டியிருக்கு கொஞ்ச டைம் கொடுங்க அண்ணா..”

 

“ஓகேடா.. பைல் தவிர்த்து வேற எதவாது சந்தேகப்படும் படி எது கிடைச்சாலும் எடுத்துடு”

 

“பாக்குறேன் அண்ணா.. அப்புறம் இன்னொரு விஷயம் உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்”

 

“என்னடா விஷயம்”

 

அது வந்து அண்ணா.. அண்ணிய இங்க முதல் முதல பாக்க வருற முன்னாடி என்னோட அப்பா ஒருத்தர் கிட்ட ஃபோன் பேசினத ஒட்டு கேட்டேன்” என்று கூறி தந்தை தன்னிடம் பேசியதில் தொடங்கி யாருக்கோ அழைத்து சாரமாறியாக திட்டியது வரை அவனிடம் முழுதாக கூறினாள்.

 

“அப்போ.. அவரோட டார்கேட் நானும் மகியும் மட்டும் தான் பூமி இல்ல..”

 

“ஆமா அண்ணா.. அப்படி தான் சொன்னார்.. ஆனா எனக்கு குழப்பமாவே இருக்கு”

 

“இதுல குழம்ப ஒன்னும் இல்ல.. எனக்கு வச்ச குறில பூமி மாட்டிக்கிட்டான்.. அதுவும் என்னோட பைக்ல அவன் போனதுல அவன சரியா பாக்காம நானும் மகியும் தான் போறோம்ன்னு நினைச்சி ஆக்சிடென்ட் பண்ணியிருக்காங்க.. தென் இந்த விஷயம் அவரே எதிர் பாக்கல நீ சொல்லி தான் அவருக்கு தெரிஞ்சுயிருக்கு.. சோ இனி கவனமா இருக்கணும்.. நீயும் கவனமா இரு” 

 

“அவர சும்மா விட்டு வைக்காதீங்க அண்ணா.. எப்படி தான் பூமிய கொன்னுட்டு மனசாட்சியில்லாம நிம்மதி இருக்காரோ” என்று முடிக்கையில் 

 

“பூமி யாரு” என்ற குரல் கேட்டு திரும்பிய இருவரும் ஹர்ஷா நிற்பதை கண்டு அதிர்ந்து விட்டனர்.

 

அவனோ, அவர்கள் எதிரில் வந்தவன் இதழை பார்த்து “பூமி யாருன்னு கேக்குறேன்ல” என்று குரல் உயர்த்த,

 

அதில் கைகால்கள் நடுங்க நின்றவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாற, இதற்கு மேல் மறைப்பது சரியில்லை என்று உணர்ந்த ஆதியோ “நான் சொல்லுறேன்” என்று கூற, இப்போது பார்வையை ஆதியின் புறம் திருப்பிய ஹர்ஷா “சொல்லு” என்பது போல் மார்புக்கு கையை கட்டிக்கொண்டு நின்றான்.

 

“சாரிடா ஹர்ஷா.. உன்கிட்ட ஒரு உண்மைய மறைச்சிட்டேன்.. நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியாம தான் உன்கிட்ட பொய் சொன்னேன்.. சாரிடா நீ நினைக்கிற மாதிரி மகிழ் லவ் பண்ணின பையன் நான் இல்ல.. பூமி தான்” என்று கூறி பூமி பற்றியும் விபத்து நடந்த நிகழ்வை பற்றியும், அதோடு தன்னுடைய காதலை பற்றியும் ஒன்று விடாமல் கூறியவன் “சாரிடா.. அன்னைக்கு இருந்த நிலமைல மகிக்கு உன்ன மட்டும் தான் தெரியும்.. எங்க உன்கிட்ட உண்மைய சொல்லி நீ என்ன தப்பா எடுத்து மகிழ்ல கூட்டிட்டு போயிடுவியோன்னு பயந்து தான் பொய் சொன்னேன்” என்க,

 

அந்நிமிடம் ஆதியின் உணர்வு புரிந்த ஹர்ஷாவோ, அவன் இருக்கும் இக்கட்டான சூழ்நிலையையும் வேதனையும் உணர்ந்து இறுக அணைத்தவனோ “புரியுது ஆதி.. எங்க எல்லாரையும் விட உன்னோட வலி தான் பெருசு.. உன்னோட நிலமை யாருக்குமே வர கூடாது.. ஆனாலும் இந்த வலிலயும் அவளுக்காக போராடுற.. உன் காதல நினைச்சி எனக்கே வியப்பாயிருக்கு.. நீ என்ன வேணாலும் பண்ணு உனக்கு எப்போவும் நான் துணை நிப்பேன்.. சீக்கிரமே மகிக்கு பழசு ஞாபகம் வந்து உன்ன புரிஞ்சு எடுத்துப்பா.. நம்ம எல்லாரும் ஒன்னா சந்தோசமா இருக்க தான் போறோம்” என்க,

 

தன்னிடமிருந்து, அவனை பிரித்த ஆதி “புரிஞ்சிக்கிட்டது தேங்க்ஸ்டா” என்று கூறியவன், அப்போது தான் வாயை மூடி கேவி கேவி அழும் இதழை காண, அவளோ ஆதி கதை கூற தொடங்கும் போதே மண்டியிட்டு அழ தொடங்கியவளுக்கு, அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாததால் வாயை மூடி அழ தொடங்கிவிட்டாள்.

 

தன்னவளின் நிலையை கண்டு பதறிய ஹர்ஷாவோ “இதழ்..” என்று தன் மார்பில் சாய்த்து ஆறுதலாக அணைத்து கொள்ள, 

 

அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணிய ஆதியும் அவள் தலையை வருடி, ஹர்ஷாவிடம் கண்ணை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றான்.

 

சில நிமிடங்கள் கடந்தும், அவள் அழுகை நிற்கவில்லை என்றதும் “இதழ்மா.. அழாதடி.. உன் அண்ணா மேல இருந்து பாத்துட்டு தான் இருப்பார்.. நீ அழுதா அவருக்கு கஷ்டமா இருக்கும் தான.. பிளீஸ்டி அழாத.. உனக்கு எப்போவும் நான் இருப்பேன்.. நம்ம சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன் அண்ணா நமக்கு குழந்தையா பிறப்பார்”

 

“பிளீஸ் ஹர்ஷூ.. என்ன அழ விடு.. எனக்கு அழனும் போல இருக்கு.. என்ன டைட்டா ஹக் பண்ணிக்கோ பிளீஸ்” என்று கூற, பெண்ணவளை கையில் ஏந்தி தன்னறைக்குள் சென்றவனோ அவளை தன் மார்பில் போட்டு இறுக்கி அணைத்தவாறே அவள் தலையை வருடிவிட்டே படுக்கையில் சாய்ந்து கொண்டான்.

 

அன்று தேடிய தன்னவனின் அணைப்பு இப்போது கிடைத்த நிம்மதியில் அவனிடம் ஆறுதல் தேடி அழுது கரைந்தவள், அவனின் அணைப்பிலே உறங்கி விட,

 

அவள் நெற்றியில் முத்தமிட்டவனோ ‘உன் கஷ்டம் தெரியாம.. நான் வேற கஷ்டபடுத்திட்டன்ல இதழ்.. சாரிடி இனி எப்போவும் உனக்காக நான் இருப்பேன்.. லவ் யூ லிப்ஸ்’ என்றவன், நடந்ததை நினைத்தும் தன்னவளின் நிலையை கண்டும், பாவம் அவனுக்கு தான் தூங்க இரவாகி போனது.

**

 

தாராவின் அறையிலிருந்து வந்த மகியோ சமையல் அறையிலிருக்கும் வேலையை முடித்துவிட்டு தன்னறைக்கு செல்லும் போது சசி பின்னே செல்வதை கண்டு கேள்வியாக நோக்கியவள் “இந்நேரத்துல பின்பக்கமா அண்ணா எதுக்கு போறாங்க” என்று எண்ணி அவன் பின்னயே செல்ல, 

 

அவனோ அணி பேபி சாப்பிட்ட மீதியை எடுத்து கொண்டு இன்னொரு அணிலிடம் வைப்பதை கண்டு, அவன் முன்னே சென்றவளோ “அண்ணா.. இத நீங்க வளக்குறீங்களா”

 

“ஆமாமா.. மூணு வருஷமா என்கூட தான் இருக்கான்”

 

“எதெய் மூணு வருஷமா.. நான் வந்த நாள்லிருந்து என் கண்ணுல படவேயில்ல”

 

“நீ என்னோட ரூம் பின்பக்கம் வந்தது இல்லல.. அதுனால இவன தெரிஞ்சிருக்காது”

 

“சரி தான்.. ஆனா அண்ணா அதுக்கு சாப்பிட ஃப்ரெஷ் வைக்கலாம்ல எதுக்கு அணி பேபிகிட்டயிருந்து எடுத்து வைக்குறீங்க” என்று கேட்க,

 

அப்போது, அவ்விடம் வந்த ஆதியோ தன்னவளின் தோலில் கைபோட்டு “அவங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் சோ அப்படி தான் சாப்பிடுவாங்க..”

 

“எதெய் லவ்வர்ஸா..” 

 

“ஆமா.. ரெண்டு பேரும் மூணு வருஷமா லவ் பண்றாங்க”

 

“அப்படின்னு அதுங்க வந்து சொன்னுச்சா என்ன” 

 

“நிஜமா மகிழ்”

 

“அது சரி.. லவ்வர்ஸ்ன்னு சொன்னீங்க அப்போ ஏன் ரெண்டையும் தனியா தனியா வளக்குறீங்க”

 

“ஒன்னா தான் இருந்துச்சு.. அப்புறம் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல பிரிஞ்சிடுச்சு போல”

 

“ஓ.. எப்படி அண்ணாவும் தாராவும் இருக்கிற மாதிரியா”

 

“மே பீ அப்படி கூட சொல்லலாம்” என்க,

 

அதை கேட்டவள், ஆசையாக அணிலை வருடி கொண்டிருந்த சசியின் புறம் திரும்பி “நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க.. உங்களுக்கு தாரவ ஏத்துக்குறதுல என்ன பிரச்சினை.. உங்களுக்கு அவள பிடிகலன்னா கூட பரவாயில்ல.. பிடிச்சும் எதுக்கு அவாய்ட் பண்றீங்க..” என்க,

 

அதை கேட்டு முகம் வாடியவனோ விலுகென்று எழுந்து செல்ல, அவனின் கரம் பற்றியவளோ “சாரி அண்ணா.. உங்கள கஷ்டப்படுத்திட்டேனா.. உங்களுக்கு என்கிட்ட சொல்ல இஷ்டம் இல்லன்னா சொல்ல வேண்டாம்”

 

“நீ தெரிஞ்சிகிறதுல எனக்கு இஷ்டம் இல்லன்னு இல்லமா.. ஆனா என்னால எதுவும் சொல்ல முடியாது.. நீ ஆதிக்கிட்ட கேட்டுக்கோ” என்று கூறி வேகமாக தன்னறைக்குள் நுழைந்து கதவை தாழிட்டவன், பால்கனிக்கு சென்று நிலவை வெறிக்க தொடங்கியவனின் எண்ணமோ, அவனின் கடந்த காலத்தை கண் முன்னே கொண்டு வந்தது

 

அவன் சென்றதும் தன்னவனிடம் “பிளீஸ் தீரா.. இவங்களுக்குள்ள என்ன தான் பிரச்னை

ன்னு சொல்லுங்க”

 

“சொல்லுறேன்.. வா இப்படி உக்காருவோம்” என்று கூறி அவளை அழைத்து கொண்டு மரத்தடியில் அமர்ந்தவன், அவளிடம் கடந்த காலத்தை கூற தொடங்கினான்.

 

         தேடல் தொடரும்...

 

இப்படிக்கு,

VSV42😍😍

 


   
ReplyQuote

You cannot copy content of this page