All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 46

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 134
Topic starter  

அத்தியாயம்: 46

 

நம்மூர்களில் நலங்கு வைப்பதை அந்த ஊரில் ஹால்டி என்கின்றனர். 

 

மஞ்சளையும் சந்தனத்தையும் பசையாக்கி மணமக்களுக்குப் பூசி, ஆசி வழங்குவதே இதன் நோக்கம். 

 

மாலைவேளையில் ரேவன் குடும்பத்தாரின் தோட்டம் இந்த நிகழ்ச்சிக்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

 

தாமரை வடிவிலிருந்த மேடையில் ஜீவனற்று அமர்ந்திருந்தாள் துகிரா. மஞ்சள் வண்ணச் சேலையில் சகல அலங்காரத்துடன் இருந்தவள் கழுத்தை வளைத்து இடப்பக்கம் பார்த்தாள். அங்குச் சஜித்தும் அதேபோன்றொரு மேடையில் அமரவைக்கப்பட்டு மஞ்சள் சந்தனக்கலவையிருந்தான். 

 

அவனின் கம்பீரம் அவளுக்கு ரசிக்கும்படி இல்லை. கன்னத்தில் பூசிய மஞ்சள் அவளுக்கு அழகு சேர்க்கவில்லை. 

 

தன் காதலுக்காக வீட்டை விட்டு ஓடி வந்து சஜித்திடம் கெஞ்சிய கோகோவால் தைரியம் வரப்பெற்றவள் தாயிடம் இளவேந்தனைப் பற்றிச் சொல்ல, 

 

"எனக்குத் தெரியும் ஹனி உனக்கு அந்த வேலக்காரன பிடிச்சிருக்குன்னு‌. ஆனா உன்னோட ஹஸ்பெண்ட் ரேவன் குடும்பத்து பசங்கள்ள ஒருத்தனாத்தா இருக்கனும்னு நா முடிவு பண்ணிட்டேன். சோ, கண்ட உலறாம கல்யாணம் பண்ணிக்க." என்றுவிட்டார்.

 

வேறு வழி தெரியாது வெதும்பிப்போய் இருந்தாள் பெண். 

 

வெதும்பியது அவள் மட்டுமல்ல ரிபேக்காவும் சித்தாராவும் தான். ஏன் இந்தருக்கு கூடக் கலக்கம் உண்டு. 

 

ப்ரஜித் பிஸ்னஸ்ஸிற்காக என்ற சொன்னாலும் சஜித்தை அவமதிக்கும் நோக்கில் தான் இந்தத் திருமணத்தை ஏற்பாடு செய்திருக்கிறான் என்பது மூவருக்குமே புரிந்ததிருந்தது. 

 

மூவருமே சஜித்திடம் கூறினர் இந்தத் திருமணம் வேண்டாமென்று. 

 

ஆனால் அவனுமே தொழிலை காரணம் காட்டி முடியாது என்றான்.

 

விபரீதமாக ஏதும் நடக்கக் கூடாது என்ற கவலையில் அவர்கள் இருக்க, ஸ்மித்தாவிற்கு ஏகப்பட்ட குஷி.

 

சஜித்தின் கன்னத்தில் மயிலிறகைக் கொண்டு மஞ்சள் பூசிவிட்டு, ஆலம் சுற்றி முகம் கொள்ளாச் சிரிப்புடன் தன் மருமகனை ரசிக்க,

 

"ஜனா வந்துட்டான ஆன்டி." என்றான் ப்ரஜித்.

 

"ப்ளைட் ஏறிட்டான். நாளைக்கி காலைல வந்திடுவான். தங்கச்சி கல்யாணம், கொஞ்சம் சீக்கிரமா வாடான்னா கேக்கவே இல்ல அவன். அமெரிக்கா என்ன பக்கத்துலயா இருக்கு. 

 

அந்த ஜோடியப் பாரேன் ப்ரஜி. பொருத்தம் அருமையா இருக்குல." என்க, திருப்பி மேடையில் இருந்த இருவரையும் பார்த்தான்.

 

"இந்தக் கல்யாணம் உங்க பொண்ண ரேவன் குடும்பத்து மருமகளா மாத்தும் ஓகே. ஆனா சொத்துலயும் கம்பெனி நிர்வாகத்துலயும் பங்கு கிடைக்குமா என்ன?" என்றவனை 'அதற்குத்தானே இந்தத் திருமணம். அது நடக்காது என்கிறானா.' எனக் குழம்பிப் போய்ப் பார்த்தார்.

 

"என்ன ப்ரஜி சொல்ற.? மனோ அண்ணாவோட பையனுக்கு ரேவன் குடும்பத்துல எல்லா உரிமையும் உண்டு." 

 

"மனோ அங்கில் பையனா இருந்திருந்தா உரிம கண்டிப்பா கிடைக்கும்." என்க, அனுஜித் சஜித் யாரென்று விளக்கினாள். 

 

மனோஜித் தன் காதலியுடன் வெளிநாட்டில் செட்டிலான சமயம், ஒரு விபத்தில் அவரின் மனைவி சான்ட்ரா காப்பாற்றிய இரண்டு வயது சிறுவன் தான் சஜித்ரேவன். பல நாட்களாகக் குழந்தை இல்லாதிருந்தவர்கள், பிள்ளைச் செல்வம் கிடைத்தது என்று மகிழ்ந்து போயினர். 

 

சஜித் தத்துப் பிள்ளையாக மாறிப்போக, இது தெரிந்த ஆஜித்ரேவனும் இந்தரும் சஜித்தை வாரிசாக ஏற்க மறுத்தனர். ஆனால் தொழில் நொடித்த சமயம் மனோஜித் தன் மனைவி, மகனை அழைத்து வந்தார். 

 

முதலில் தயங்கிய இருவரும், சஜித்தின் திறமையால் கவரப்பட்டு, தொழில் வாரிசாக மட்டுமல்லாது ரேவன் குடும்பத்திலும் ஓர் அங்கமாக்கினர். 

 

ஆஜித்ரேவன் இரு பேரன்களிடமும் பாகுபாடு காட்டாது அன்பை பொழிந்தார்.

 

அவர் இறப்பிற்கு பின் அவர் எழுதி வைத்த உயிரில், பரம்பரை சொத்துக்களில் சஜித்திற்கு பங்கு இல்லாததை கவனித்த மகேந்தருக்கு சந்தேகம் உண்டாக, சான்ட்ராவால் குழந்தை ஈன்றெடுக்க முடியாது என்ற உண்மையும், சஜித் ஆதரவற்ற அனாதை என்பதையும் தெரிந்துகொண்டார். 

 

தொழிலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் சஜித்தை அநாதை என்று ப்ரஜித்தை வைத்தே அகற்ற‍, அண்ணன் தம்பியாய் இருந்தவர்களை எதிரியாக்கினர். 

 

"அநாத பயலுக்கு எம்பொண்ணா? இந்தக் கல்யாணத்துக்கு நாஞ்சம்மதிக்க மாட்டேன்." என ஆத்திரத்துடன் கத்தி மகளை அழைத்துக் கொண்டு நடந்தது ஸ்மித்தாவின் குடும்பம்.

 

புருவம் சுருக்கியபடி எழுந்த சஜித், “யார் அநாதன்னு சொல்றிங்க?" என்றபடி துகிராவைக் கரம்பற்றி நிறுத்தினான் சஜித்.

 

அனு, "உன்னத்தான்டா *****." எனத் தகாத வார்த்தைகளால் ஏச அவனின் மீது பாய்ந்தான் சஜித்.

 

மகேந்தர், "விடுடா அநாதப்பயளே. எங்கயோ? எவனுக்கோ பிறந்த உன்ன, மனோஜித் தன்னோட பையனா அடையாளம் காட்டினதுனால இங்க இருக்க. அவனும் போய்ச் சேந்திட்டான், அப்பெ பேரு தெரியாத அநாதயான உன்ன பேரனா ஏத்துக்கிட்ட கிழட்டு கபோதியும் போய்ச்சேந்திட்டான்." என்றவர் அடுத்த வார்த்தை பேச விடாது தாடை எலும்புகள் உடைந்திருக்கும். ஆஜித்ரேவன் பற்றிப் பேசினால் சஜித்திற்கு வரும் கோபத்திற்கு அளவேயில்லை. ஆனால் ப்ரஜித் குறுக்கிட்டான்.

 

"அநாதைய அநாதன்னு சொல்லாம வேற எப்படி சொல்ற.?" என்ற ப்ரஜித்தின் சட்டையைக் கொத்தாகப் பற்ற, ஃபோர்ட் மீட்டிங்கில் நடந்ததுபோல் அண்ணன் தம்பி இருவருக்குள்ளும் மல்யுத்தம் நடத்திருக்கும். ஆனால் சித்தாராவின் மயக்கம் அதற்குத் தடை போட்டது.

 

மகன்கள் இருவரின் கோலம் கண்டு அவர் மூர்ச்சையானார்.

 

ஸ்மித்தா, 'நல்லவேள முன்னாடியே தெரிஞ்சது.' என்ற நிம்மதியுடன் மகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

 

சித்தாராவால் ப்ரஜித் சஜித்தை பார்த்து அநாதை என்றதை ஏற்க முடியவில்லை. இந்தருக்கு கூடச் சஜித் வந்த புதிதில் சிறு விலகல் இருந்தன. பின்னாட்களில் அது காணாது சென்று தன் மகனாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டார்.  

 

சித்தாரா பார்த்த கணமே தன் மகன் என்றார். இருவரும் சஜித்தை தன் மகனாக ஏற்றிருந்தனர். 

 

இன்று தாய் தந்தையாகத் தாங்கள் இருக்கும்போது ப்ரஜித் அநாதை என்றது சஜித்தைக் காட்டிலும் அவர்களுக்குத் தான் வலித்தது. 

 

உடனடியாக ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றப்பட்டவரின் பின்னால் ப்ரஜித் பதறி ஓட, "சஜித் எப்பவும் இந்தக் குடும்பத்துல ஒருத்தன் தான். ரேவன் வாரிசு தான். இத உன்னால ஏத்துக்க முடியாதுன்னா சித்து முன்னாடி வராத." என்ற இந்தர் ப்ரஜித்தை வார்த்தையால் எச்சரித்துவிட்டுச் சென்றார்.

 

கூடவே சித்தாராவின் அருவருக்கத் தக்க பார்வையில் சிலையென அங்கேயே நின்றான் ப்ரஜித்.

 

அனுஜித்தும் மகேந்தரும் அவனின் தோளில் தட்டிக் கொடுத்து, "இனி ரேவன் குடும்பத்துல எல்லாமே நீ தான். வாழ்த்துக்கள் ப்ரஜித்." என்றுவிட்டு செல்ல, அவனின் மனைவி வந்து நின்றாள் அவனின் முன். 

 

"இன்னோரம் நீ உன்னோட ஃப்ரெண்டு பின்னாடியே ஒரேயடியா போயிருக்கனுமே. பெட்டி எடுத்திட்டு போகனும்னு வெய்ட் பண்றியா.?" என நக்கலாகக் கேட்க, சத்தென அவனின் கன்னத்தில் பதிந்தது ரிபேக்காவின் கரம். 

 

"விட்டுட்டு போய்டுவேன்னு நீயா எப்படி முடிவு பண்ணுவ.?” என்றபடி வந்தணைத்தாள் அவனை. 

 

"ஏ ப்ரஜி கஷ்டப்பட்டு நடிக்கிற?." என்றவளை விலக்கி உற்று நோக்க, 

 

"இது நீ கிடையாது. உனக்குள்ள ஏதோ இருக்கு ப்ரஜி. ஒரு கோபம். அது தீர நீயென்னென்னமோ பண்ற. செய். நா உங்கூடவே தான் இருப்பேன்." என்றவளை வாரியணைத்தவனின் விழிகள் நனைந்திருந்தன. 

 

தன் செயல்களுக்கான விளக்கம் தெரியாத போதும், தன் மனைவி நம்பிக்கையுடன் தன்னுடன் நிற்பது கணவனாய் கர்வத்தை தந்தது.

 

“தேங்க் யூ கண்ணம்மா.” என்றவன் அவளை விடுத்து அனுஜித்தின் பின்னால் செல்ல ரிபேக்கா ஆழமாகத் தன் மூச்சை இழுத்து விட்டாள்.

 

வதந்திகள் வேகமாகப் பரவும். அதிலும் சமூகத்தில் பெரும் புள்ளிகள் சம்மந்தப்பட்டிருந்தால் அதன் வேகத்தைக் கணிக்கவே முடியாது. 

 

இங்கும் வேகமெடுத்து பரவியது, சஜித் அநாதை என்ற செய்தியும் இனி ரேவன் குடும்பத்திற்கும் அவனுக்குச் சம்மந்தமில்லை என்ற வதந்தியும். 

 

அது, "அத்தான் நா சத்யாவ பாக்கனும். இப்பவே… " எனக் கோகோவை அழவைத்தது. 

 

'எப்படி தன்னவன் இதைத் தாங்குவான்' என்றெண்ணி அழ,

 

இளவேந்தனுக்குமே இது அதிர்ச்சி தான். 

 

இருவருக்குள்ளும் பகை மேகம் இருந்த போதும் பொது இடத்தில் அதுவும் வெளியாட்கள் முன் ப்ரஜித் மழையாய் பொழிந்திருக்க வேண்டாம். ப்ரஜித் பேசியதும் நடந்து கொண்டதும் அதிகப்படி என்று கோபத்தைத் தந்தது. 

 

இருவரும் சஜித்தைத் தேடிச் சென்றனர்.

 

மருத்துவமனையில் அவன் இல்லை என்ற செய்தி கிடைத்தது. வீட்டிலும் இல்லை. வேறு எங்கு இருப்பானென யோசித்தவளுக்கு, இருவரும் ஒன்றாய் வாழ்ந்த அவளின் அடுக்குமாடி குடியிருப்பு நினைவு வர, இளவேந்தனுடன் வந்து சேர்ந்தாள். 

 

லிஃப்ட்டிற்காகக் காத்திருக்குமளவிற்கு கூடப் பொறுமை இல்லாது படிக்கட்டில் தாவிச் சென்றவள், தன் வீட்டைத் திறக்க, 

 

கம்பியில்லாத பால்கனியில் வேடிக்கை பார்த்தபடி தன் பிரிய சாக்லேட் பானத்தைப் பருகியக் கொண்டு நின்றிருந்தான் சஜித்.

 

அவனைக் கண்டதும் ஜீவன் கொண்டவள், "சத்யா..." எனக் கூவிக் கொண்டு பின்னாலிருந்து அணைத்தாள். 

 

“நா உனக்காக இருக்கும்போது நீ எப்படி அனாதயாவ. நீ என்னோட சத்யா. அநாத இல்ல. உன்ன யாரும் அப்படி சொல்ல நான் விடமாட்டேன். நா இருக்கேன் உனக்கு." என்றபடி அவனின் டீசர்ட்டை ஈரமாக்க, 

 

"உன்னோட இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் போடுவியா. நா பேமிலி மேன்னு." என்றான் கேலியாக. 

 

"ம்... போடுவேன். நீ ஃபேமிலிமேன். உனக்குன்னு ஒரு குடும்பம் இருக்குன்னு நா போஸ்ட் போடுவேன்." 

 

"அந்தப் போஸ்ட்ல நீ நா KG baby கண்டிப்பா இருக்கனும்." என்றபடி திரும்பி அவளை இறுக்கமாக அணைக்க, அந்த வலி இதமாய் இருந்தது. 

 

"அதுக்கு நீ என்ன கல்யாணம் கட்டிக்கனும். கல்யாணம்… பண்ணிக்கலாமா.?" என்றவளுக்கு நிராகரிப்பை தராது புன்னகைத்தான்.

 

“ஐ ஆம் சாரி சத்யா. நா முட்டாள் தனமா ரிஜக்ட் பண்ணிட்டேன். என்னோட சாரிய அக்சப்ட் பண்ணிக்கி…” எனும்போதே இதழணைத்து பேச்சை நிறுத்தியிருந்தான்.

 

அவனால் எப்படி கோகோவின் மீது கோபம் கொள்ள முடியும். அந்த இரும்பு மனிதனை உருக்கித் தன் இஷ்டத்திற்கு வளைக்கும் பாவை அவள். அவனின் இரும்பு திரையைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அவனின் செல்ல ராட்சசி அல்லவா.

 

இருவரின் மனதையும் உடலையும் ஒன்றென மாற்றவும், வலிகளைத் தீர்க்கும் ஆழ்ந்த முத்தத்தைப் பரிமாறிக் கொள்ள, அதைத் தடுக்கவென இளவேந்தன் கதவைத்திறந்து கொண்டு வந்தான். 

 

“உப்ஸ்….” இருவரின் நிலைகண்டு கதவை மூடப் போக, 

 

"வேந்தன்..." எனத் தடுத்தது சஜித்தின் குரல். 

 

"என்னோட பெட்ல சில பேப்பர்ஸ் இருக்கு. சைன் பண்ணிட்டு உடனே சார்ஜ் எடுத்துக்கங்கங்க." என உத்தரவு போட, யோசனையுடன் வெளியேறினான் இளா.

 

"அத்தானுக்கு உன்னோட சாக்லேட் ஃபேக்டரி வேல போட்டுக் குடுத்திருக்கியா சத்யா." எனத் தலைதூக்கி கேட்க, அதை மார்பில் புதைத்தைத்தணைத்தான். 

 

சஜித் சொன்னதைக் கேட்டு அவனின் இல்லம் சென்றவன், மெத்தையில் கிடந்த காகிதங்களை படித்து அதிர்ச்சியானான். 

 

எந்தக் கம்பெனி JET industryயை கைப் பற்றியதோ, அந்த NITF ltd-ன் சொந்தக்காரன் சஜித்ரேவன் என்பதற்கான சான்றாய் இருந்தது அந்தக் காகிதம்.

 

எப்பொழுதுமே இளாவிற்கு சஜித்தின் திறமைமீது பெருமிதம் இருக்கும். அவனின் தொழில் யுத்தி, திறமை, அடக்கமான, அடங்க வைக்கும் அதிகாரமான மிடுக்கான பேச்சு என அனைத்தும் இளவேந்தனை ரசிக்க வைக்கும். இன்றும் வைத்தது. 

 

இந்த மூன்று ஆண்டுகளில் அவன் இரும்பு ஆலையின் பங்குகளைக் கணிசமாக வாங்கி அதைக் கையகப்படுத்தியிருக்கிறான். அது அவனின் சாமர்த்தியத்தை பறைசாற்றியது.

 

இளவேந்தன், அந்த நிறுவனத்தின் பதவியை ஏற்றுக் கொள்வதற்கான காகிதமும் அதில் இருந்தது. கூடவே வேறொரு கடிதமும் இருந்தது. 

 

அது காதல் கவிதையைத் தாங்கி வந்திருந்த கடிதம். அதை வாசித்தவனுக்குள் புன்னகை வந்தது. அதை எழுதியது யாரெனத் தெரிந்து, சற்று சத்தமாக வாசித்தான் அதன் கடைசி வரியை. 

 

"வேந்தன் நான் உங்களை காதலிக்கிறேன்." என்று அதை வாசிக்கும் அவனின் குரலோடு ஒரு பெண் குரலும் சேர்ந்து கேட்டது. 

 

தலை உயர்த்திப் பார்த்தவன், கண்டது துகிராவை.  

 

“நீங்கச் சொன்ன மாறி நம்ம காதல வீட்டுல எல்லார்க்கிட்டயும் சொல்லிட்டு நா..." என்றவளுக்கு வார்த்தைகளைத் துப்பும் அளவிற்கு தெம்பில்லை. பூஞ்சை உடலை ஸ்மித்தா காயம் செய்து வைத்திருந்தார். அழுதபடி நின்றவளை இதமாய் அணைத்தான் இளவேந்தான்.

 

"உனக்குக் கால் பண்ண ஃபோன் கேட்டா வேந்தன். நேர்லயே சொல்லிடுன்னு கூட்டீட்டு வந்திட்டேன்." என்றபடி வந்தான் சஜித். 

 

ஸ்மித்தாவிற்கு தான் மகளைப் பற்றிக் கவலையில்லை. அதனால் அனுஜித்துடன் குறித்த நாளில் மகளுக்குத் திருமணம் என்றார்.

 

இம்முறை துகிரா தைரியம் வரப்பெற்று தன் காதலை அனைவர் முன்னிலையிலும் சொல்ல, பாவம் கொடி மேனி, ஸ்மித்தாவும் அனுஜித்தும் சேர்ந்து தந்த அடிகளால் புண்ணாகிப் போனது. 

 

“அப்பா கூடத் தடுக்க வேந்தன்.” என்றழுதவளுக்கு தன் ரத்த உறவுகளின் பாசமற்ற செயல் அமிலமாய் எரிய, ஆறுதலாகிப் போனான் இளா.

 

அப்பொழுது வந்த கோகோ, "அத்தான், துகி தா நீங்க லவ் பண்ற பொண்ணா?" 

 

சஜித், "ஒன் சைடு லவ். கொஞ்ச நாளைக்கு முன்னாடி டூ சைடாகிடுச்சி." 

 

"இத ஏ எங்கிட்ட சொல்லவே இல்ல துகி. நா உன்னோட ஃப்ரெண்ஷிப்க்கு துரோகம் பண்ணிட்டேன் எவ்ளோ கில்ட்டியா ஃபீல் பண்ணேன்னு தெரியுமா." என ஆத்திரத்துடன் சண்டைக்கு நின்றாள் கோகோ. 

 

பின்னே இந்த அழுத்தக்காரியால் தானே அவள் சத்யாவை ஏற்காது நிராகரித்து, அவளின் அண்ணனிடம் அடி வாங்கி, வீட்டை விட்டு ஓடி வந்து. ச்ச எவ்வளவுபட்டிருக்கிறாள்.

 

இருவரையும் சண்டைபோட விட்டு விட்டுச் சஜித் இளவேந்தனை தன் ஃபேக்டரிக்கு அழைத்துச் சென்றான். 

 

நாளை இரு நிறுவனங்களும் இணைய உள்ளதே அதற்கான பணிகளைக் கவனிக்க.

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments


   
ReplyQuote

You cannot copy content of this page