All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 45

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 45

 

சஜித்தின் பின்னால் சென்றவளை காண சகிக்காது ப்ரஜித் தன் காருக்குள் சென்றமர, ரிபேக்கா இளவேந்தனிடம் இந்தத் திருமணம் ஏன் நடக்க உள்ளது என்ற காரணத்தை விளக்கமாகக் கூறினாள். 

 

"JET குழுமமும் ரேவன் இன்டஸ்டியும் கிட்டத்தட்ட திவாலாகுற நிலமைல இருக்கு கோகோ. அத மீட்கவும், நம்ம கைவசம் இருக்குற கம்பெனிஸ்ஸ ரன் பண்ணவும் நமக்கு உதவி வேணும். NITF-ன்னு ஒரு கார்ப்பரேட் க்ரூப் நமக்கு உதவ முன்வந்திருக்கு. சொல்லப் போனா NITF JET-ய விலைக்கி வாங்கிடுச்சி. ரெண்டும் குழுமமும், மேரேஜ் முடிஞ்ச அடுத்த நாள் ஒன்னு சேரப் போது. சில முக்கியமான போஸ்ட்ல ரேவன் குடும்பம் இருக்கனும்னா அதுக்கு shares நம்மக்கிட்ட இருக்கனும்." என்ற ரிபேக்காவை பார்க்காது இளவேந்தன் துகிராவை வெறித்தான்.

 

துகிரா, "இந்தர் அங்கிள் CEO நீடிக்கனும்னா என்னோட ஃபோமிலிக்கிட்ட இருக்குற சேர்ஸ் முக்கியம். அதுனால தான..." என்றவளின் பேச்சு பிடிக்காது வேகமாக நடையுடன் கோகோவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றவனுக்கு தெரியாது, இந்தத் திருமணத்தை நிறுத்தக் கோரி சஜித்திடம் சென்று பேசித் திட்டு வாங்கிக் கொண்டு வந்தது. 

 

ஏற்கனவே கோகோ நிராகரித்தது அவமானமாகிப்போக, அப்பொழுது துகிராவும் அவனை வேண்டாம் என்று சொல்ல வந்தது அவனை, ‘யாருக்கும் வேண்டாத ஒருவனான தான்.’ எனக் கோபம் கொள்ள வைத்தது. 

 

கோகோவைப் போல் அவனின் கோபத்திற்கு பழக்கப்படாத துகிரா செய்வதறியாது நடப்பவை நடக்கட்டும் என்பதுபோல் அடங்கிப் போனாள்.

 

நடந்ததை எண்ணிப் பார்த்துக் கவலையுடன் உடை கூட மாற்றாது சோஃபாவில் சுருண்டு படுத்திருந்த கோகோவை உணவுன்னச் சொல்லி எழுப்பினான் இளவேந்தன். 

 

"எனக்கு எதுவும் வேண்டாம் அத்தான்." என்றாள் சோர்வுடன். 

 

"கோகோ..." என்ற அதட்டலுடன் ஊட்டிவிட்டவன், 'இத்தன அவமானத்திற்கு பின்னும் நீ சஜித்தை நேசிக்கிறாயா?' என வினவ, 

 

"சத்யா அத்தான். சஜித் இல்ல. என்னோட சத்யாக்கு என்ன வெறுக்க தெரியாது. நா என்ன பண்ணாலும் அவன் ரசிப்பான். கோவப்பட்டா கூட அதுல எம்மேல இருக்குற அக்கறைய என்னால உணர முடியும். என்ன வெறுத்திட்டேன்னு அந்தச் சத்யா நல்லாவே பொய் சொல்றான். He still loves me." என்றவளின் நம்பிக்கை குலையாமல் இருக்க இறைவனை வேண்டினான். 

 

ஏனெனில் அவனுக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை.

 

"எல்லாம் ஒரு வாரம் தான். அதுக்குள்ள உன்னால சஜித்த சமாதானம் செய்ய முடியலன்னா..." என்றவன் அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு, 

 

"பேசாம நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிட்டு உங்கண்ணே முன்னாடி போய் நின்னிடலாம். குடும்பம் நம்மல ஏத்துக்கும்." எனக் கேலியாகக் கூற, துள்ளிக் குதித்து எழுந்தவள்,

 

"அது இந்த ஜென்மத்துல நடக்காது. அடுத்து... அடுத்து... இல்ல எந்த ஜென்மமும் எனக்கு நீங்க வேண்டாம். எனக்கு என்னோட சத்யா தா வேணும். தப்பு பண்ணிட்டேன். என்னாட முட்டாள்தனத்தால அவன வேண்டாம்னு சொல்லிட்டேன்." என்றவள், 

 

"ஹேய், நீங்க அவனோட பீஏ தான. இந்த நேரம் அவெ எங்க இருப்பான்னு உங்களுக்குத் தெரியும் தான." என்க,

 

"நா வேலைய ரிசைன் பண்ணிட்டேன்‌." 

 

"அப்படியே விலகினாலும் உங்களுக்கு அவனோட அப்பாயின்மெண்ட் எல்லாமே தெரியும் தான." என்றவளுக்கு இளவேந்தன் வேலையை விட்டதில் வருத்தமே இல்லை போலும்.

 

இத்தனை நாட்களாகச் சஜித்திற்கு பார்த்த உளவு வேலையைத் தனக்காகப் பார்க்கச் சொல்லிக் கெஞ்சினாள்.

 

அவனும் சிரித்தபடியே சஜித்தை எங்கு சென்றால் காணலாம் என்றான். 

 

அவனின் தகவல்படி சஜித் செல்லுமிடமெல்லாம் அவனின் கண்களில் படுமாறு நின்று கொண்டு கையாட்டினாள்‌. பேச முயற்சிக்கவில்லை. 

 

'ஹோட்டல் வாசல்ல அசிங்கப்பட்ட மாறி, போற இடத்துலயெல்லாம் அசிங்கப்பட முடியாது. அவன் மேல நா வச்ச காதலுக்காக என்னோட சுயமரியாதைய விட்டுக் குடுக்க விரும்பல. அதே நேரம் ஈகோ பாத்து அவனயும் விட முடியால. நா ஒருத்தி அவனுக்காக இருக்கேங்கிற மறக்கவிடமாட்டேன்.' என்றவள் விடாது இரு நாட்கள் அவனை ஃபாலோ செய்தாள்.

 

அன்று ஸ்மித்தா சொன்ன சஜித்ரேவனின் ஸ்டேட்ஸ் என்னவென்று இன்று கண்களால் பார்த்தாள். உயரம் தான். வான் தொடும் தூரம் இருந்தது அவனின் நிலை.

 

அப்பொழுதும் அவனை விட்டுச் செல்லும் எண்ணமில்லை. 

 

‘அவன் என் சத்யா. அவன் எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் நான் அவனை மட்டுமே நேசிக்கிறேன்.’ என்று விடாது துரத்தினாள்.

 

ஸ்மித்தாவும் அவளைத் துரத்த என்னென்னமோ செய்து பார்த்தார். பணக்கார வீட்டுப் பையனை வளைத்துப் போட நினைக்கும் ஆள்மயக்கி, ஏமாற்றுக்காரியென நிறைய பட்டங்கள் கிடைந்தன. 

 

என்ன நடந்தாலும் சத்யாவை விட்டுக் கொடுக்கமாட்டேன், அவனை நான் காதல் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதில் உறுதியுடன் இருந்தாள். 

 

அவளின் உறுதிக்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பதை அந்த இரும்பு மனிதனின் முகத்திலிருந்து கண்டு பிடிக்கவே முடியவில்லை. 

 

‘என்ன வேண்டாம்னு சொல்லிட்டேல.’ என்ற கோபம் அவனை வியாபித்திருந்தது.

 

ஸ்மித்தாவின் போதனைகளால் கேட் வாசலில் வந்து நின்றவளைச் செல்லச் சொல்லிக் காவலாளி தர்க்கம் செய்ய, சஜித்தின் கார் தாண்டிச் சென்றது. 

 

அவளின் முகம் தன்னைக் கண்டதும் ஜொலித்து, கடந்து சென்றதும் மங்கியும் போனதை கண்ணாடி வழியே கண்டவன், காரை நிறுத்தினான். 

 

வேகமாக ஓடிச் சென்றவளை காவலாளி தடுக்கவில்லை. ஏனெனில் அவனின் முதலாளி காரை விட்டு இறங்கி கையசைத்து அழைத்திருக்கிறானே. 

 

"சத்யா....." என்றபடி அவனின் முன் வந்து நிற்க, 

 

"சஜித்... சஜித்ரேவன்..." எனத் திருத்தினான் அவளின் வார்த்தையை. 

 

"இந்தக் கரெக்ஷன நா உன்னப் பார்த்து முதல் தடவ சத்யான்னு கூப்பிடும் போதே செஞ்சிருந்தா இவ்ளோ பிரச்சனையும் வந்திருக்காது. உன்ன சைட் அடிக்கிறதோட நிப்பாட்டிருப்பேன். மேக்கொண்டு நமக்குள்ள எதுவுமே நடந்திருக்காது." என்க, 

 

"அந்தத் தப்பு எம்மேல தா.?" என்றவனுக்கு எந்தப் பக்கம் தலையை அசைக்கவெனத் தெரியாது முழுக்க, 

 

"எதுக்கு வந்த?"

 

"உன்னோட ப்ரபோசல அக்சப்ட் பண்ணிக்கிறேன்னு சொல்ல."

 

"அது காலாவதியாகி ரொம்ப நாள் ஆச்சி." 

 

"ஆனா நமக்குள்ள அந்த லவ் அப்படியே இருக்கு சத்யா."

 

"உன்ன லவ் பண்றதா நா எங்கேயும் சொல்லவே இல்லயே." 

 

"நீ சொன்ன சத்யா. மறந்திட்டியா?. ஹோட்டல் வாசல்ல வச்சி." என்க, தோள்களைக் குளுக்கியவன் காரின் கதவைத் திறக்க, முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு பரிதாபமாகப் பார்த்தாள் கோகோ. 

 

அதைத் திரும்பிப் பார்க்காமலேயே உணர்ந்தவன், "ஹோட்டல் வாசல்ல வச்சி நீயும் ஏதோ உளற்னியே?. ப்ரூஃப் சம்திங்..." 

 

"ஹாங்... என்னோட லவ்வ ப்ரூஃப் பண்றேன்னு சொன்னேன். சொல்லு சத்யா நா என்ன பண்ணனும்?." என ஆவலாகக் கேட்க,

 

"இங்கயே நில்லு." என்றுவிட்டு காரில் ஏற, 

 

"எவ்ளோ நேரம்?" என்றவளை மெல்லத் திரும்பிப் பார்க்க,

 

“இல்ல கால் வலிக்கும்… வெயில் வேற அடிக்கிது… அதான்.” என்றாள் சின்னக் குரலில்.

 

"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்." என்றதும் சந்தோஷமானவள் அவன் காரைப் பின்னால் எடுத்து, அவளை நோக்கி வேகமாக முன்னேறி வருவதைக் கண்டு பீதியில் உறைந்துபோனாள். 

 

'அடப்பாவி! ஒரு பேச்சுக்கி சொன்னா உயிரக் குடுத்து நிறுபின்னு கொல்ல பாக்குறான்.' என மனதிற்குள் கருவியவள் காதையும் கண்ணையும் மூடிக்கொண்டு அசையாது நிற்க, அதி வேகத்தில் வந்த கார் சில மீட்டர் இடைவெளியில் நின்று போனது. 

 

துளியும் அசையாது அதே இடத்தில் ஆணியடித்தைப் போல் நின்றவளின் தோரணையைக் கண்டு, இதழ் விரிக்காது சிரித்தவன், அலுவலகம் சென்றமர்ந்தான் ஒருவித குதுகலத்துடன். 

 

வேலையே ஓடவில்லை அவனுக்கு. மனம் முழுவதும் அவள் தான். அவளின் சேட்டைகள் கண்களைத் திறந்திருந்தாலும் மூடியிருந்தாலும் இம்சை செய்தன. 

 

ஒரு வாரம்பின், தியேட்டர் வாசலில் கண்டது உள்ளுக்குள் சிலர்ப்பைத் தந்தாலும் இறுகிய முகத்துடன் அவளைத் தவிக்க விட்டுச் சென்றதற்கு அவனின் மனம் அவனைக் கரித்துக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. 

 

ஆனால் அவனும் என்ன செய்வான். அவன் கவனிக்க எக்கச்சக்க இருந்தன. நிறுவனம் கைமாற உள்ளதால் பல புல்லுருவிச் செடிகளைக் களையெடுக்க வேண்டும்.

 

முதல் புல் மகேந்தரன் குடும்பம். 

 

'இனியும் அவர்களை விட்டு வைத்தால் சுண்ணாம்பு சுவர் கூட மிச்சாது.' எனுமளவிற்கு அதிகமாகச் சுரண்டியுள்ளனர் என்பதால், ஆதரத்துடன் இயக்குனர் கூட்டத்தில் நிறுபிக்கவன் JET குழுமத்திலிருந்து விரட்டியடித்தான்.  

 

அந்தக் கடுப்பில், "கல்யாணம் வரைக்கும் என்னால பொறுமையா இருக்க முடியாது. இப்பவே இந்த நொடியே அவனுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் உள்ள உறவு என்னென்னு சொல்லி நாய் மாறிக் கல்லால அடிச்சி அவனத் துரத்தி விடுறேன்." என அனுஜித் புலம்ப, 

 

"வெயிட் பண்ணு அனு. எதுவா இருந்தாலும் அது மணமேடைல தா நடக்கனும். அப்பத்தா உனக்குத் துகி கிடைப்பா. அவனும் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிப்பான்." என்றது ப்ரஜித்தின் குரல். 

 

காத்திருக்கச் சொன்ன யோசனை பிடிக்கவில்லையென்றாலும் இருவரும் அதை ஆமோதித்துத் தலையசைத்தனர்.

 

சஜித் பற்றிய உண்மையைச் சொல்லி ப்ரஜித் துரத்தி விட்டுவிடுவான். அனுஜித் துகிராவின் திருமணம்மூலம் கிடைக்கு பங்குகலால் தலைமை பதவி கிடைத்துவிடும். ப்ரஜித்தை ஏமாற்றுவது மிகவும் எளிது. எனவே மொத்த குழுமமும் தங்களுக்கு தான் என்ன மிதப்பான புன்னகை இருவரின் முகத்தில் இருந்தன. 

 

அன்று மாலை வீடு வந்தவனை,

 

"சஜிக் கண்ணா! இந்தப் பொண்ணு சொல்றது உண்மையா?" என்றக் கேள்வியுடன் வரவேற்றார் சித்தாரா. அவரின் அருகில் கோகோ நின்றுகொண்டிருந்தாள்.

 

'எந்த உண்மை. இன்னும் எங்களைப் பற்றிச் செல்லப்படாத உண்மை உள்ளதா என்ன?' எனப் புருவம் சுருக்க, சித்தாராவின் கோபப் பார்வை அவனைச் சுட்டது.

 

"நீ இப்படி பண்ணுவன்னு நா நினைக்கவே இல்ல சஜி. உன்ன நா நல்ல ஒழுக்கமான பையனா வளத்திருக்கேன்னு நம்பினேன். உன்னோட கல்யாணத்த நா எப்படியெல்லாம் செஞ்சி பாக்கனும்னு ஆசப்பட்டேன். ஆனா நீ..." எனப் புலம்ப, சஜித் அவளின் கரம்பற்றி இழுத்துவந்தான்,

 

"நீ என்ன சொல்லி வச்ச அவங்க கிட்ட.?" என்றான் கோபமாக. 

 

"நா எல்லாத்தையும் அவங்க கிட்ட தெளிவா சொல்லிட்டேன் சத்யா. அசையாம அஞ்சி நிமிஷம் நின்னு என்னோட லவ்வ ப்ரூஃப் பண்ணிட்டேன்‌. சோ, நா வின் பண்ணிட்டேன். வின்னருக்கு ப்ரைஸ் கிடைக்கனும். உன்னோட லவ்வ நா ப்ரைஸ்ஸா எடுத்துக்கிட்டேன். டீல் இஸ் டீல்.” என்றவளை விழி இடுக்க பார்த்தான். 

 

அது அவளை வழமைபோல் மயக்கியது.

 

‍”லவ்வ ஒருத்திட்ட பண்ணிட்டு கல்யாணத்த வேறவ கூடப் பண்ணிக்கனும்னு நிக்காத சத்யா. அதுவும் மூணு வர்ஷமா லிவ்விங் டுகெதர் ரிலேஷன்சிப்ல புருஷன் பொண்டாட்டியா இருந்திட்டு, ரகசியமா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்ட என்ன விட்டுட்டு, வேற ஒரு பொண்ணுகூட மேரேஜ்… தப்பு சத்யா." என்றபோது புருவம் உயர்ந்தது அவனுக்கு.

 

"மூணு வர்ஷம்? லிவ்விங் டுகெதர்! மேரேஜ்! அவ்ளோ தானா! kg படிக்கிற பேபிய மறந்திட்ட." என்றான் நக்கலாக.

 

"சொல்லிருப்பேன். பட் குழந்தைய கூட்டீட்டு வான்னு சொன்னா ரெடிமேட் குழந்தைக்கி நா எங்க போக. அதா வயித்துக்குள்ள வச்சிருக்கேன்னு சொல்லிருக்கேன். நாலு மாசம். இன்னும் வயறு வளரல." என்றவளை விழி இடுங்கப் பார்த்தவனின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு, அவனின் சட்டை பட்டனை விலக்கி, மார்பில் படர்ந்திருந்த முடிக் கற்றையை வருடியபடி, 

 

"நமக்குள்ள தா எல்லாம் ஆச்சே சத்யா. அதுக்கு பேரு கந்தர்வ கல்யாணமாம். அதுக்கு சாட்சியா நாம ஒன்னா இருந்த வீடு இருக்கு." என்றவள் அவனின் இடையணைத்து.

 

"அத்தைக்கி நல்லா மனசு. நாஞ்சொன்னதும் உடனே புரிஞ்சிட்டு இந்தக் கல்யாணத்த நிப்பாட்டப் போறதா வாக்கு குடுத்திருக்காங்க." என்றவள், எம்பி அவனின் உதடுகளில் தன் இதழை ஒற்று எடுத்து, 

 

"என்னோட சத்யா கூட அந்தப் புறாக்கூண்டுக்குள்ள நம்ம பேபிகூட சந்தோஷமான ஒரு வாழ்க்க. அது வேணும் சத்யா. நீ வேணும் சத்யா எனக்கு. ஐ லவ் யூ. நீயே நினச்சாலும் உன்னால என்ன வெறுக்க முடியாது." என்றுவிட்டுச் செல்ல, அவளால் ஈரம் செய்யப்படாத உதடுகளை மடித்து ஈரம் செய்தவனுக்கு சிலிர்ப்பும், பொய்யை எவ்வளவு அழகாய் செல்கிறாள் என்ற ரசனையும் வந்தது. 

 

"முதல்ல நா நம்பல. இப்ப நம்புறேன். அந்தப் பொண்ணு சொன்னது உண்மன்னு." என்றபடி சக்கரத்தை உருட்டிக் கொண்டு சித்தாரா வர, 

 

"மாம்..." என்றவன் அவரின் கைப்பிடியை பற்றி அவருக்கு நிகராகக் குனிந்தவன்,

 

"உண்ம பொய்ன்னு எதுவும் கிடையாது மாம். நாளைக்கழிச்சி நடக்கப் போற கல்யாணம் ரொம்ப முக்கியமானது." என்றுவிட்டு எழ, 

 

"ஆனா சஜிக் கண்ணா! நீயும் அந்தப் பொண்ணும்..." 

 

"எனக்கு நம்ம ரேவன் குடும்பம் தான் முக்கியம். மத்தெல்லாம் அடுத்து தான்." என அழுத்தமாக கூறிவிட்டுச் சென்றான். 

 

செல்லும் அவனைப்பார்க்கையில் ப்ரஜித்தின் மீது கோபம் வந்தது அவருக்கு. அவன் தானே இந்தத் திருமணத்திற்கு காரணகர்த்தா. 

 

அந்தக் கோபம் வெறுப்பாய் மாறி ப்ரஜித்தைச் சுட்டது.  

 

மயக்கம் தொடரும்...

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments


   
ReplyQuote

You cannot copy content of this page