All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 40

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 40

 

கார், அவர்கள் வாழ்ந்த வீட்டின் முன் வந்து நின்றது. 

 

சித்தாராவை பார்க்க வரும் சமயம், பலமுறை கடந்து சென்றிருந்தாலும், ஒரு முறை கூட உள்ளே சென்றது இல்லை.

 

இன்று, 'அவன் மேல இருக்குற உன்னோட ஃபீலிங்க நீ சேர் பண்ணிக்கப் போற. அவ்ளோ தான்.'

 

'அவன் ஏத்துப்பான்னு நினைக்கிறியா?' என மற்றொரு மனம் கேள்வியெழுப்ப.

 

'அத அப்பப் பாத்துக்கலாம். ஏன்னா நா ப்ரிப்பர் பண்ணி வச்ச மாறி அவன்ட்ட இருந்து கேள்வி வராது.' என அவளுக்கு அவர்களே பேசியபடி உள்ளே சென்றாள். 

 

வீடு, அவள் விட்டுச் சென்றபோது எப்படி இருந்ததோ, இப்பொழுதும் அப்படியே இருந்தது அவளுக்கு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியைத் தந்தது. 

 

அவன் எந்த அளவிற்கு தன்னை அவதானித்திருந்தால், எதையும் மாற்றாமல் அப்படியே தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறான் என்பது புரிய வேகமாக அவர்களின் படுக்கை அறைக்குச் சென்றாள். 

 

குளியலறையில் நீர் விழும் சத்தம் கேட்டது. 

 

அங்கு இருந்த வரை, அவனுக்கான உடையை அவள் தான் தேர்வு செய்து வைக்க வேண்டும். 

 

காலை உணவு எப்பொழுதும் இந்தர் சித்தாராவுடன் தான். ஆனால், அங்குச் செல்லும் முன் அவன் காபியையும், இவள் பலச்சாறயும் எடுத்துக் கொண்டு, தோட்டத்தில் ஒன்றாக அமர்ந்து அருந்துவது வழக்கம். 

 

அந்த நினைவில் தான் அணிந்திருக்கும் இளம் மஞ்சள் வண்ண புடவைக்குப் பொருத்தமான கோர்ட் சூட்டை எடுத்து வைத்தவள், கிச்சனுக்குச் சென்று காபி மேக்கரில் காபி தயாரிக்க ஆரம்பித்தாள். 

 

குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பழத்தை எடுத்து மிக்சரில் போட்டு அரைக்க நினைக்க, ஜார் சரியாகப் பொருந்தது மக்கர் செய்தது. 

 

குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் மெத்தையில் கிடந்த ஆடையைப் பார்த்துப் புருவம் சுருக்கியபடி வெளியே வர, சமயலறையில் அவனின் மனைவியின் தரிசனம் கிடைத்தது.

 

மிக்சியுடன் போராடிக் கொண்டிருந்தவளைக் கண்டு சிறிய புன்னைகை உண்டாக, சில நிமிடங்கள் அதைச் சுவற்றில் சாய்ந்து நின்று ரசித்தான். 

 

அவள்மீது அவன்‌ காட்டும் கோபமெல்லாம், எங்கே அவளிடம் வீழ்ந்து விடுவோமோ என்றப் பயத்தின் காரணமாக விளைந்தது.

 

இப்போது வரை அவளை வெறுக்கவும், அவளை மறக்கவும் முயன்று கொண்டிருக்கும் அவனுக்குக் கிடைத்தது என்னமோ தோல்வி மட்டுமே.

 

"ம்ச்... என்னாச்சி இது.?" என அதனுடன் போராடிக் கொண்டிருந்தவளை நெருங்கி,

 

"புதுசா ஒரு ஆள் கைப் படவும் கொஞ்சம் வெட்கப்படுதுன்னு நினைக்கிறேன். போகப் போக உனக்கு அது பழகிடும்." என்றபடி ஜாரை மிக்சியில் பொருத்தி பட்டனை தட்டி விட, அது மெல்லிய இரைச்சலும் பழத்தைப் பழச்சாறாக மாற்றியது. 

 

முதுகை உரசி வந்து நின்றவனின் அண்மையும், மேலிருந்த வந்த வலலைக் கட்டியின் வாசமும் அவளைக் கிறங்கச் செய்தது. சொட்டு விட்டுக் கொண்டிருக்கும் சிகையிலிருந்து, நீர் வடிந்து அவளின் தோளில் விழுந்து பள்ளத்தை நோக்கிப் பயணம் செய்யத் தொடங்கியது. அந்த நெருக்கம், இதத்தை தர,

 

"தேங்க்ஸ்." என்றாள் அவனுக்கு ஒரு மோகனப் பார்வையை தந்தபடி. 

 

அவளின் பார்வை ஒன்றே, உடலின் ஈரம் காயாது துண்டுடன் நின்று கொண்டிருந்த அவனின் உணர்வுகளைத் தட்டியெழுப்ப போதுமானதாய் அமைந்தது. 

 

காதலென்ற ஒன்று அவளிடத்தே இல்லாத போதே அவளின் பார்வை உணர்ச்சிகளுக்குத் தூண்டில் வீசும். இன்று கண்கள் முழுவதிலும் காதலுடனும், நாணச் சிவப்பு கதுப்புடனும் நின்றவள் வலையாய் தாபத்தை வீச,

 

அவனின் விரல்கள், பெண்ணவளின் தோலில் அழுத்தமாக ஊரத் தொடங்கியது. 

 

முழுதாகத் திரும்பாது, கழுத்தை மட்டும் வளைத்து விழிகளை உருட்டி ஓரத்திற்கு கொண்டு வந்தவளின் முகம் நோக்கிக் குனியத் தொடங்கினான். 

 

'அது எங்களுக்குள்ள நடந்து ரொம்ப நாள் ஆச்சி தான். அதுக்குன்னு இவாக்கிட்ட நெருங்குனா அத அட்வாண்ட்டேஜ்ஜா எடுத்துப்பாளே.' எனத் தலையை உளுக்கிக் கொண்டு, அந்த மாய வலையிலிருந்து விடுபட நினைத்துத் தன் அறைக்குள் சென்றான். 

 

இவளும் பின்னாலேயே சென்றாள். வந்தவள் எடுத்து வைத்த சட்டையை அவனிடம் நீட்ட,

 

"ரிப்பேக்கா... எதுக்கு இங்க வந்த.?" என்றான் சட்டையை வாங்காது வதனத்தில் கோபத்தை கொண்டு வர முயன்றான்.  

 

"உன்ன... பாக்கனும் போல இருந்தது டியர்." என்றவள் உரிமையாய் சட்டையை அவனுக்கு மாட்டி விடத் தொடங்கினாள்.

 

"அதுக்கு இங்க வந்து, இந்த மாறிலாம் செய்யனுமா என்ன?" என்றான் சிறு எரிச்சலுடன்.

 

"உனக்கு ஹெல்ப் பண்ணறேன்."

 

"எதுவும் தேவையில்ல ரிபேக்கா. வெளில போ." என்றான் குரலுயர்த்தி. 

 

"பட்... இத உனக்கு, நா மனைவியா இருக்குற வரச் செய்யனும்னு நீ தான சொன்ன." 

 

"மனைவி... இத்தன நாள் இந்தப் பக்கமே வரலயே நீ. அத்தோட நமக்கு டைவர்ஸ் ஆகப்போது. ஐ திங்க் இன்னைக்கி நம்ம மேரேஜ்க்கு முடிவு நாள்."

 

'முடிவு நாள் மேரேஜ்க்கு இருக்கலாம். நமக்கு இல்ல.' என அவனுக்கு கேட்கும்படி முணுமுணுத்தவள்,

 

"எஸ், லாஸ்ட் டே தான். ஆனா, அந்த நாள்ல உன்னோட கண்ணம்மாவா! பேப்-பா நடந்துக்கனும்னு தோணுச்சி." என்றவள் நெருங்கி வந்து அவனின் சட்டையின் பொத்தான்களை மாட்டிவிட, அவளின் கரம்பற்றித் தடுத்தவன்.

 

"கண்ணம்மாவா!!." என்று புருவம் உயர்த்தினான். ஏனெனில் அவன் அந்தப்‌ பெயரைச் சொல்லி அழைக்கும் போதெல்லாம் அவள் முகம் அப்பட்டமாக விருப்பமின்மையைக் காட்டும். இன்று வெட்கத்தை காட்டியது,

 

"உன்னோட கண்ணம்மாவாவே என்னைக்கும் இருக்க ஆசப்பட்டு வந்தேன் ப்ரஜி." என முணுமுணுத்தவள் அவனின் டையை எடுத்து அவனின் கழுத்தில் சுற்றி முடிச்சிடத் தொடங்கினாள்‌.

 

"தலைல எதுவும் அடி பட்டிருக்கா?. ஹாஸ்பிட்டல் போகலாம் வா." என அவளின் இந்தத் திடீர் மாற்றத்தை ஏற்க முடியாது கேட்க,

 

"ம்ச்... ஏ என்ன விரட்டுற டியர்?" என அவனின் கண்களை உற்று நோக்கிக் கேட்க,

 

"நா யாரையும் விரட்டல ரிபேக்கா. சிலர் அவங்களா உன்னோட லைஃப்க்குள்ள வந்தாங்க, அவங்களாவே போய்ட்டாங்க. பாஸிங் க்ளவுட் மாறிக் கடந்து ரொம்ப தூரம் போய்டுறாங்க." எனத் தலை திருப்ப, டையைச் சுண்டி இழுத்து இருவருக்குமான இடைவெளியைக் குறைத்தவள், அவனின் தோளில் கரத்தை மாலையாகக் கோர்த்து, 

 

"அப்பத் திரும்பி வந்தா ஏத்துப்பியா." என்றாள் மயக்கும் குரலில்.

 

"கண்டிப்பா. என்ன விரும்பி வர்ற பொண்ண ஏத்துக்காம எப்படி.?" என்றவன் கரத்தைப் பெண்ணவளின் இடையில் கோர்த்து இறுக்க, ரிபேக்காவின் முகத்தில் தெரிந்த நாணச் சிவப்பு அவனை மேலும் முன்னேற்றியது.

 

பல நாட்களுக்குப் பின் கிடைக்கும் மனைவியின் அண்மையையும் அவளையும் ரசிக்க வேண்டி, இதழ் ருசிக்கத் தொடங்கினான். 

 

ஒரு வித வேட்கை, இருவரையும் தாபப் பிடிக்குள் தள்ள, அவனின் வார்த்தையில் இருந்த பிழையை உணர்ந்து தெளிநிலைக்கு வந்தது மங்கையின் மனம்.

 

"நா பொண்ணு இல்ல ப்ரஜித். உன்னோட வைஃப்." என்றாள் அவனிடமிருந்து விலகி.

 

"எக்ஸ்பயரி டேட் தெரிஞ்சதுக்கு அப்றம் அந்த உறவு தொடர முடியாது ரிபேக்கா?" என்றவனை குழம்பிப் போய்ப் பார்க்க,

 

"இன்னும் நாலு மணி நேரம் தா நம்மோட உறவு. அதுக்கப்றம் நீ யாரோ. நா யாரோ." என்றவன் அவளை விவாகரத்து செய்வதில் உறுதியாக இருக்கிறான் போலும். 

 

'நீ என்ன வித்தைக் காட்டி ஆடினாலும் இந்த மன்மதனை மயக்க முடியாது' என்ற ரீதியில் அவன்‌ நிற்க, அவனை இறுக்கி அணைத்தவள்,

 

"எத்தன மணி நேரமா இருந்தாலும் உன்னோட மனைவியா இருக்குற இந்த நொடி போதும் ப்ரஜித். என்னோட முட்டாள் தனத்துனால ஆறு மாசம் உங்கூட வாழ்ந்த நம்ம லைஃப்போட நினைவுகள பத்திரப்படுத்தத் தவறிட்டேன். இப்ப வேணும் ப்ரஜி அது எனக்கு. கடைசிவரைக்கும் என்ன விட்டுப் போகாது உன்னோட மெமரீஸ் எனக்குள்ள வேணும். 

 

நம்ம கல்யாணம் உன்னோட விருப்பத்தோட நடக்கலன்னு எனக்குத் தெரியும், ஆனா டைவர்ஸ் முழுக்க முழுக்க உன்னோட தனிப்பட்ட விருப்பம். அத செய்யாதன்னு சொல்ல யாருக்கும் உரிம இல்ல. நீ எடுக்குற எந்த ஒரு முடிவா இருந்தாலும் நா அத ஆக்சப்ட் பண்ணிக்கிறேன் ப்ரஜி." என்றவள் விவாகரத்து வேண்டாம் என்று சொல்ல வரவில்லை, தன் காதலைச் சொல்லி அவனுடனான நினைவுகள் வேண்டும் என்று வந்திருக்கிறாள். 

 

"அப்ப நா எடுக்குற முடிவு எதுவா இருந்தாலும் ஏத்துப்பியா?." என்றான் குறும்பாக, 

 

"எஸ்..." என தலையசைக்க,

 

"ஒரு வேள அந்த முடிவு உனக்கு தண்டனையா அமைஞ்சா?."

 

"ஏதுப்பேன்." என்றவள், 

 

"என்ன நீயே கோர்ட்டுக்கு கூட்டீட்டு போ. உங்கூட கார்ல போகுற மொமெண்ட தவற விரும்பல." என்றபடி கதவைத் திறக்க, அது முடியவில்லை. திரும்பித் தன் கணவனைப் பார்த்தாள்.

 

"கோர்ட்ல ஆஜராக, இன்னும் நாலு மணி நேரம் இருக்கு. நாம ஏ அத கார்ல வேஸ்ட் பண்ணனும். கமான் நீ மாட்டி விட்ட சட்டைய நீயே கலட்டி விட்டுப் பாப்போம்." என்று கரம் விரிக்க, அதில் வாகாய் பொருந்திப் போனாள் ரிபேக்கா. மனைவியை தன்னுடன் புதைத்துக் கொண்டு,

 

"உனக்குப் போதுமான மெமரிஸ்ஸ உருவாக்குனதுக்கு அப்றம் நாம டைவர்ஸ் பண்ணிப்போம்." என்று நீதி மன்றத்தில் ஆஜராகாது, அவளையும் ஆஜராக விடாததால் யாரோ யாருக்கோ போட்ட வழக்காக அது மாறிப்போனது.‌ 

 

__________

 

"என்ன அப்படியே உக்காந்திருக்க, இந்தா..." என ஒரு கண்ணாடி டம்ளரை கோகோவின் கரத்தில் திணித்துவிட்டு அவளை நெருங்கி அமர்ந்தாள் துகிரா. 

 

தோழிகள் இருவரும் பார்த்துக் கொண்டு பல நாட்களாகி விட்டது. அதிலும் அன்று இளவேந்தன் இறக்கவிட்டுச் சென்றபின் துகிரா வெளியே நடமாடிவது அரிதாகிப் போனதென்பதால் பார்க்க வந்துள்ளாள் கோகோ.  

 

ஆனால் ஏன் வந்தோம் என்று இப்பொழுது மட்டுமல்ல பின்னாட்களிலும் வருத்தப் போகிறாள். 

 

ஸ்மித்தா அன்று வந்திறக்கிய மகளின் முகத்தை வைத்தே 'மகள் காதல் வயப்பட்டிருக்கிறாள்' என்பதை அறிந்து கொண்டார்.  

 

எங்கே, முடி சூடா ராணியாக இந்த ரேவன் குழுமத்தில் கிடைக்கவிருக்கும் பதவியின் மதிப்பு தெரியாது தூக்கியெறிந்து விடுவாளோ என்ற பயம் அவருக்கு வந்து விட்டது. 

 

ஊர் முழுவதும் 'ரேவன் குடும்பத்து மருமகள் என் மகள்' என்று அடித்து வைத்திருக்கும் பெருமை, இந்தத் திருமணம் நடக்காது போனால், உடைந்து அவரையே கிழித்துவிடும். 

 

ரேவன் குடும்பத்து தங்கையாக இருந்தபோது கிடைத்த மரியாதையை விடச் சம்மந்தியாகப் போகிறார் என்பதால் கிடைத்திருக்கும் சலுகையையும் மரியாதையையும் இழக்கத் தயாராக இல்லை. 

 

"ஹனி, இந்த மன்த் எங்க சங்கத்துல கொஞ்சம் அக்கௌன்ட்ஸ் பாக்க வேண்டி இருக்கு. ஹெல்ப் பண்ணு ப்ளீஸ்..." என்று கூறி மகளைத் தன் நிழலாக்கி, உனக்கு கிடைக்கப் போவது எத்தனை ஆடம்பரமான வாழ்வு என்று துகிராவிற்கு உணர்த்தத் தொடங்கினார்.

 

"ஒன் ஹவர் தான். நீ கால் பண்ணலன்னாலும் நா வந்திடுவேன்." என்றுவிட்டு இறக்கி விட்டுச் சென்றான் இளவேந்தன். 

 

"ஹேய்... ஸ்வீட் ஹாட் நீ தா கோகோ வா. உன்னப் பத்தி நிறைய சொல்லிருக்கா. இன்னைக்கு தா நாம மீட் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஹா.... கம் பேபி...‌ கம்... நா உன்ன நிக்க வச்சே பேசிட்டு இருக்கேன்." என உற்சாகத்துடன் சிரித்த முகமாக அழைத்துச் சென்றார். 

 

"சரியான நேரத்துல தா வந்திருக்க பேபி நீ. கல்யாணத்துக்கு எந்தச் செட் நகைய போடுறதுன்னு தெரியாம எம்பொண்ணு அதான் உன்னோட ஃப்ரெண்டு முழிச்சிட்டு இருக்கா. நீ வந்தத நல்லதாப் போச்சி."

 

"கல்யாணமா!!" என்ற கேள்வியுடன் துகிராவை பார்க்க, 

 

இதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்பது போல் முகத்தை வைத்திருந்தால் கூடச் சிறு சந்தேகம் வந்திருக்கும், பிடிக்கவில்லையோ என்று. ஆனால் துகியோ சந்தோஷமாக இருந்தாள். தலை குனிந்து தனக்குள்ளேயே சிரித்தவளை வெட்கப்படுகிறாள் என்று நினைக்கத் தோன்றியது.

 

"ஹாங்... கல்யாணம் தான். அடுத்த மாசம் எம்பொண்ணுக்கும் இந்தியாஸ் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன், ரேவன் குடும்பத்தோட இளவரன், சஜித்ரேவனுக்கும் மேரேஜ். உனக்குச் சஜிய தெரியுமா. ஹீ இஸ் எ..." என ஆரம்பித்தவர் அன்று அவளுக்குக் கூகுள் சொல்லிய தகவல்களைவிடப் பன்மடங்கு அதிகமாகக் கூறினார். 

 

"துகி ஏ இத எங்கிட்ட சொல்லல.?" 

 

"உங்கிட்ட சொல்ல வெக்கப்பட்டிருப்பா. அத்தோட ஊர்ல எல்லாரோட பொறாம பார்வையையும் தடுக்க நினைச்சி யாருக்கும் சொல்லிருக்க மாட்டா. பின்னச் சஜித்ரேவன் வைஃப்னா பொறாம தானா வந்து சேந்திடுமே. எம்பொண்ணும் சஜியும் பர்பெக்ட மேச்.” என இருவரையும் சேர்த்து அவர் பாடிய துதியில் கோகோவின் உள்ளம் சஜித்தை துகிராவின் கணவனாக உருவகப்படுத்திக் கொண்டது. 

 

மனதிற்குள் தாயின் பேச்சு எரிச்சலைத் தந்தாலும் துகிரா அதை மறுக்கவில்லை.

 

கல்யாண சாப்பிங் என்று பெயரில் இருவரும் சேர்ந்து பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

 

அவ்வபோது அதீத வெட்கத்துடன் வளம் வந்தவளை பார்க்கும் போது சஜித்தின் மீது துகிராவிற்கு தீவிர காதல் உள்ளது என்று எண்ணவைத்தது. 

 

மயக்கம் தொடரும்... 

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

 

மயக்கம் 41

https://kavichandranovels.com/community/postid/1328/


   
ReplyQuote

You cannot copy content of this page