All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 30

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 30

 

"எதுக்கு அத்தான் நீங்கச் சத்யாவ பாக்கனும்." 

 

"உனக்கு உதவி பண்ண சத்யாக்கு நான் தேங்க்ஸ் சொல்ல வேண்டாமா." என்றபோது கோகோவின் விழிகள் கோலிக் குண்டென உருளத் தொடங்கின. 

 

ஏன் சத்யாவை இளவேந்தனிடம் அறிமுகம் செய்ய முடியாது தவிர்க்கிறோம்? என்ற கேள்வியைப் பலமுறை கேட்டு விட்டாள். 

 

அவனிடம் ஈர்ப்பையும் தாண்டி ஓர் மயக்கம் உண்டு அவளுக்கு. அந்த மயக்கத்திலிருந்து தெளிய விரும்பவில்லையென்றாலும் அதற்கான சரியான பெயர் புரிபடவில்லை.  

 

'அத்தான் இந்த டீபி பாரேன். பையன் செம்மையா இருக்கான். தெலுங்கு ஹீரோ கணக்கா. குடுத்து வச்சவ இவன கட்டிக்கப்போறவ.' என இன்ஸ்டாவைக் காட்டி கவலையேபடாது இளாவிடம் திட்டு வாங்கியிருக்கிறாள். 

 

ஆனால் சத்யாவை அறிமுகம் செய்யத் தயாராக இல்லை. 

 

எவ்வித ஒழிவு மறைவும் இளவேந்தனிடம் இருந்ததில்லை. ஆனால் சஜித் விசயத்தில் முடியவில்லை.

 

"அந்தச் சத்யா நம்பர் இருந்தா தா. நா பேசனும்." 

 

"மணி பாத்திங்களா அத்தான்? இந்த நேரத்துலயா பேசப் போறிங்க?."

 

"நாளைக்கி காலைலன்னு ஒரு பொழுது இருக்குல. விடியும் தான. இல்ல விடியாம போய்டுமா? நம்பர் தா. என்ன வேல பாக்குறா?." எனக் குடைய.

 

"என்னோட ஆஃபிஸ் பக்கத்துல ஒரு சாக்லேட் கடைல வேல பாக்குறா. ரொம்ப நல்லவ அத்தான். அதிகமா பேச மாட்டா. அதுலயும் ஆம்பளைங்க கூடப் பேசவே மாட்டா. நா பேசறத அமைதியா கேட்டுட்டே வருவா. உங்கள விட எம்மேல அக்கறை அதிகம்." எனச் சத்யாவை சிலாகித்து பேச,

 

"பாராட்டுப் பத்திரம் வாசிக்கச் சொல்லல. நம்பர்‌ தா." 

 

"ஃபோன்ல சார்ஜ் இல்ல." என்றாள் முகத்தை உம்மென வைத்துக்கொண்டு.

 

"ஓகே... நாளைக்கி ஆளையே நேர்ல காட்டு. பாத்து பேசிட்டு போனாத்தான் நிம்மதியா இருக்கும்." 

 

"உங்களுக்கு எதுக்கு சத்யா?." என்றாள் காட்டமாக.

 

"நா வச்சிக்கலாம் கேக்கல.‍" 

 

"முதல்ல உங்க ஆள நீங்கக் காட்டுங்க. நா ஏ ஆள காட்டுறேன்." என்றாள் இரு கரத்தையும் கட்டிக்கொண்டு. 

 

"நா அவள அறிமுகம் செய்யாததும் நீ சத்யாவ கண்ணுல காட்டாததும் ஒன்னா.?"

 

"ஆமா... ஒன்னு தான். ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி, யாரையும் நீங்கக் காட்ட மாட்டேங்கிறிங்க. ஏன்?" என்றவளை உற்று நோக்கினான் இளவேந்தன். 

 

அவள் எதுவோ கள்ளம் செய்கிறாள் என்றது மனம்.

 

"விட்டா என்ன விடிய விடியப் பாத்திட்டே இருப்பிங்க. எனக்கு வேலை இருக்கு. நா தூங்குறேன். குட் நைட்." என்றவள் பெட்டை சோஃபாவாக மாற்றிப் படுத்துக் கொள்ள, இளா தரையில் படுத்தான்.

 

போர்வை மூடிக் கிடந்தாலும் கோகோவிற்கு உறக்கம் வரவில்லை. அத்தனை மணி நேரம் அரவணைப்பு தந்த நித்திரா தேவி அவளை அம்போவென விட்டு விட்டுச் சென்று விட்டாள். 

 

தன் சுட்டு விரலால் தன் உதடுகளைத் வருடிப் பார்த்தவளுக்கு குறுகுறுப்பு. அதரங்கள், இப்போதும் ஆடவனின் மார்பில் வளர்ந்திருந்த முடிக் கற்றைகளை உணர்ந்தன. 

 

“ஏன் நெஞ்சுல அவ்ளோ முடி வளத்து வச்சிருக்கான். ம்... Boar(ஆண் கரடி) மாறி. ஆனாலும் அது அவனுக்கு அழகா இருந்தது. புஸ்புஸ்னு‌... " என்றபோது அவனை முதல் முறை இடையில் துண்டுடன் கண்டது நினைவு வந்து அவளின் கன்னங்கள் இரண்டையும் சிவக்க வைத்தன.

 

அந்த நொடியிலிருந்த படபடப்பில் அவனின் பிடிக்குள் சிக்குண்டு கிடந்ததை அறியாதவளுக்கு, இப்பொழுது ஒவ்வொன்றாக நினைவு வந்து உறக்கத்தை கெடுத்தது.  

 

பல கவிஞர்கள் வர்ணித்துக் கேட்டதுண்டு பெண்ணவளின் கூந்தல வாசம் கண்டு, சிக்கி என்று‌. இங்குக் கோகோவிற்கு தலைகீழாக மாறியிருந்தது‌. 

 

நாசியை நிறைத்த அவனின் வாசம். கன்னங்கள் உணர்ந்த ரோம முடிகள், உடும்மெனப் பற்றியிருந்த பிடி இவையெல்லாம் அவளைச் சஜித்திற்கான உலகிற்கு இழுத்துச் சென்றது. 

 

ஆனால் இளா விடவில்லை. விடிந்ததும் முதல் ஆளாக, அந்த உலகிலிருந்து பிடித்திழுத்து அலுவலகம் சென்றான். 

 

"அத்தான் இதெல்லாம் ஓவர். நா ஒன்னு ஸ்கூல் பொண்ணு கிடையாது. மிஸ்க்கிட்ட சொல்லி விட்டுட்டு வர்ற மாறி ரிபேக்கா மேம் கிட்ட சொல்லி விட. நானே என்ன பாத்துப்பேன்." என எரிச்சலுடன் சண்டை போட்டாள் கோகோ. 

 

அதற்கு இரு காரணங்கள் உள்ளது. 

 

ஒன்று, கடந்த ஒரு மாதகாலமாக அவளின் விடியல் சத்யாவின் முகத்தில் தான். 'பேசமாட்டேன்' என்று வீம்பாய் இருந்த போதும் கூட ஜாக்கிங் சென்று வரும் அவனைச் சைட் அடிக்கத் தவறியதில்லை. 

 

 சத்யாவை ரசிக்க விடாது அவளுடனேயே தங்கியது இளவேந்தனை வில்லன்போல் காட்டியது.

 

அடுத்த காரணம், அவளின் சொட்டு நீர் பாசனம் நிறுத்தப்பட்டு விட்டது. இளவேந்தன் குழாயை மாற்றி விட்டான். 

 

'ச்ச... இனி டவல தூக்கிட்டு சத்யா வீட்டுக்குப் போக முடியாதா. இல்ல போலாம். அவனுக்குத் தெரியாதுல பைப் மாத்தினது.' எனக் குதுகலித்தவளுக்கு தெரியாது, இனி வரும் நாட்களிலும் சத்யாவை பார்க்க முடியாதபடி இளவேந்தன் திட்டம் போட்டிருப்பது‌.

 

இன்றோடு சத்யாவை நேருக்கு நேராகப் பார்த்துப் பத்து நாட்கள் ஓடி விட்டன. 

 

இளவேந்தனின் தயவால் அவளுக்கு ஒரு வாடிக்கையாளரும் கிடைத்து விட்டார். அந்தச் சந்தோஷத்தில் கோவிலுக்குச் சென்றிருந்தாள் கோகோ. 

 

"இன்னும் மூணே மூணுக் க்ளைண்ட் தான். அது கிடைச்சிடுச்சின்னா வேலை கன்பார்ம் ஆகிடும். இந்த வேலைய காரணமாக வச்சி இங்கயே செட்டில் ஆகிடனும். அவார்ட் வாங்கிடனும். சத்யாவ சைட் அடிக்கனும். இனி ஊர் பக்கமே போகக் கூடாது. குறிப்பா எங்கண்ணே கண்ணுல சிக்கக் கூடாது." எனப் பெரிய வேண்டுதலை வைத்துவிட்டு வந்தாள் கோகோ. 

 

அப்போது சஜித் சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில், யாருடனோ ஃபோனில் காரசாரமாக உரையாடிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

 

திரும்பிப் பார்த்தாள், தன்னுடன் வந்த இளவேந்தன் அங்கிருந்த காவலாளியிடம் மும்மரமாகப் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது. 

 

அவன் பார்வை தன்மீது இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு வேகவேகமாகச் சஜித்தை நோக்கி ஓடிச் சென்றாள்‌. 

 

"சத்யா... ஓய் சத்யா..." என்றபடி அவனின் முன் வந்து நிற்க, இரு விரல்களை அழகாய் காட்டி, 

 

"டூ மினிட்ஸ். பேசிட்டு வர்றேன்." என இதழசைக்க கடுப்பாகிப் போனது,

 

'நானே அத்தான் பார்வைல படாம இவனப் பாக்க ஓடி வந்தா. இவெ ஃபோன் பேசிட்டு என்ன கண்டுக்காம இருக்கான். இத்தன நாளாகப் பாக்கலயேன்னு ஒரு இது இருக்கா பாரு. ஹிம்...' என முகம் திரும்பியவள் கையில் இருந்தது பிரசாதத்தை அவனிடம் நீட்ட, அவன் விழி இடுங்க,

 

'பேசிட்டு இருக்கேன்.' என்பதுபோல் முறைத்தான். 

 

அவனின் முறைப்பிற்கெல்லாம் மதிப்புக் குடுக்கும் ஆளா கோகோ. 

 

அவனின் கரம்பற்றி இழுத்துக் கொண்டு, பூங்காவிலிருந்த மேடையின் அருகில் சென்றாள். 

 

அவனின் உயரத்திற்கு ஈடுகொடுக்க வேண்டி அதன் மேல் ஏறியவள் அவனின் கன்னம்பற்றித் தன் முகத்தின் அருகே இழுத்து, நெற்றியில் திருநீற்றை பூசி விட்டு ஊதி விட்டு,

 

"கோவமா இருக்காத சத்யா. ஹாட் அட்டாக் வருமா. சிரிச்சிட்டே திட்டு." என்க, குறுநகையுடன் அழைப்புத் துண்டித்தவன்,

 

“நா திட்டுனா நீ திருந்திடுவா?”

 

“கண்டிப்பா.” என்றவள் பெஞ்சிலிருந்து குதித்திறங்கினாள்.

 

"மேடம பாக்கவே முடியலயே. பிஸியா?" 

 

"ஆமாம். லிட்டில் பிஸி. உனக்கு ஒரு குட் நியூஸ் தெரியுமா, எனக்கு ரெண்டாவது க்ளைண்ட்டும் கிடைச்சிருக்காங்க." என்றவள் தன் வாடிக்கையாளரைப் பற்றிக் கதை அளக்கத் தொடங்கினாள். 

 

"சுவேதா யாரு சத்யா? அவங்கள ஏ நீ இன்னைக்கே கண்டுபிடிங்கனும்னு சொல்லிட்டிருக்க?"

 

'நான் பேசிய ஹிந்தி உனக்குப் புரிந்ததா?' என்ற ரீதியில் அவன் பார்க்க,

 

"நானும் மும்பைக்காரியாகிட்டேன்ல. ஹிந்தி சீரியல் கூட டப்பிங் இல்லாம கண்ண மூடிட்டு கேக்குறேன். தெரியுமா?" என்றவள் திரும்பி இளவேந்தனைப் பார்த்தாள். 

 

அவன் இன்னும் பேசி முடிக்கவில்லை போலும்.

 

"சுவேதா... யாரு?" என்க,   

 

"நீ எங்கிட்ட கேள்வி கேட்டிருக்க. அப்ப நா பதில் சொல்லனும். ஆம் ஐ ரைட்." என்றபடி நெருங்கி வந்தவன் அவளின் துப்பட்டாவை பற்ற, அதை உருகிக் கொண்டு ஓடி விட்டத் தொடங்கிவிட்டாள். 

 

‘வாடபாவ், தூக்கி மாட்டிவிட்டுவான்.’ என நினைத்துக் கொண்டு ஓட,

 

"ஹேய்... கேள்வி கேட்டுட்டு பதில் வாங்காம போற?"

 

"பதில நீயே வச்சிக்க."

 

"அப்பச் சுவேதா யாருன்னு உனக்குத் தெரியவேண்டாமா?"

 

"அது எந்த நாட்டு பிரதிநிதியா இருந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தெரிய வேண்டாம்." எனக் கத்தினாள் கோகோ. 

 

இது போன்று இளவேந்தனுக்கு தெரியாத சந்திப்புகள் தினமும் நடைபெற்றன. 

____________

 

அது சிறிய ஹோட்டல். 

 

 கோகோ, "நாம ஏன் இங்க வந்திருக்கோம்."

 

இளா, "ஒரு க்ளைண்ட பாக்க."

 

"யாரு?" 

 

"பேர் சொன்னா தெரிஞ்சிடுமா?" என்றவனை முறைத்தாள் கோகோ.

 

"இப்ப எதுக்கு நீ முறைக்க. நாந்தா உன்ன முறைக்கனும். ரெண்டு வாரமா நா உங்கூட தா இருக்கேன்‌. அந்தச் சத்யா மட்டும் ஏ என்னோட கண்ணுல சிக்கல.?" என்றான் காட்டமாக.

 

"ஏன்னா சத்யா ஊர்ல இல்ல." 

 

"நம்பர் தா."

 

"அது நா சேவ் பண்ணி வைக்கல." என்றவளிடம் நம்பர் வாங்கும் முன் பார்க்கவேண்டிய ஆள் வந்துவிட்டார்.  

 

இருவரும் பேசிப் பேசியே அவரை Zeron consultant-யின் வாடிக்கையாளராக மாற்றி விட்டனர்.

 

ஆமாம்! இவன் ஏன் ரிபேக்காவிற்காகக் கஸ்டமர்களை பிடித்துக் கொடுக்கிறான். கோகோவிற்கு உதவவா?. அல்லது ப்ரஜித் வேலையை விட்டுத் துரத்தி விட்டு விட்டானா?. 

 

இரண்டுமே இல்லை. துப்பறிய.

 

கோகோவை வைத்துக் கேம் யாரோ விளையாடுவது போல் தோன்றியது அவனுக்கு. 

 

யார் அது? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளான்.

 

மயக்கம் தொடரும்...

 

கமெண்ட் திரி: 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

 

மயக்கம் 31 

https://kavichandranovels.com/community/postid/1220/


   
ReplyQuote

You cannot copy content of this page