All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 29

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 132
Topic starter  

அத்தியாயம்: 29

"ஹலோ... சத்யா... சத்யா… இருக்கியா! ஹலோ..." என்ற கோகோவின் குரலில் அதீத பீதியை காணலாம்.

 

எங்கே தன் அலைபேசி உயிரை விட்டு விட்டதோ என்ற அச்சத்தில் காதில் இருந்த ஃபோனை எடுத்துப் பார்க்க, அதில் வந்த வெளிச்சம் ஜீவன் இருக்கிறது என்றது.

 

"தேங்க் காட்... ஜார்ஜ் இன்னும் இருக்கு. சத்யா எதாவது பேசு. அமைதியா இருக்காத. ப்ளீஸ்…" என்க, அத்தனை நேரம் சிந்தனையில் இருந்தவனின் உதடுகள் லேசாக விரிந்தன. 

 

"யாரவாது உங்கண்ணுக்கு தெரியுறாங்களா?" 

 

"ம்... ஒரு வயசான பாட்டி இருக்காங்க."

 

"ஓகே... நீ அவங்க கிட்ட போய் நான சொல்றத அப்படி சொல்லு." என்றவன் மராத்தியில் எதுவோ சொல்ல, 

 

"அவங்கட்ட நா பேசனுமா?" 

 

"உனக்கு வீட்டுக்கு வர்ற வழி வேணுமா வேண்டாமா?"

 

"வேணும்."

 

"அப்பப் போய்ப் பேசு." என்க, அவன் கூறியதை அடிப்பிறலாமல் ஒப்பித்தாள் கோகோ. 

 

அந்தப் பாட்டி கூறிய பதிலைக் கேட்டவனுக்கு கோகோ இப்போது எங்கு இருக்கிறாள் என்பது புரிபட்டது.

 

ஃபோனிலேயே அவளுக்கு அவன் வழி கூற, அவன் சொன்ன பாதை வந்து நின்ற இடம் ஒரு ரயில்வே நிலையம்.

 

அதில் ஏறிச் சிட்டிக்குள் வரச் சொன்னான். 

 

"டிக்கெட்?..."

 

"ஸ்டேஷன் மாஸ்டர் கேட்டா பாத்துக்கலாம்." என்றவனின் பேச்சைக் கேட்டு, ரயில் ஏறி விட்டாள். 

 

ஜன்னல் காற்றில் வீசிய குளிர்ந்த காற்றும், காதில் கேட்டுக் கொண்டே இருந்த சஜித்தின் பேச்சும் கோகோவிற்கு இதமாயிருந்தது. 

 

"அடுத்த ஸ்டேஷன்ல இறங்கிடு." என உத்தரவிட்டவன் அங்கு வந்து நின்ற மின்சார ரயிலில் ஏறச் சொன்னான்.

 

அது தான் அன்றைய நாளுக்கான இறுதி மின்சார ரயில் போலும். கூட்டம் சிறிதும் இல்லாது காற்று வாங்கிய கம்பார்ட்மெண்டில் அவளும் சில இளைஞர்களும் மட்டுமே இருந்தனர். 

 

"சரியா ஆறாவது ஸ்டாப். உந்தலைக்கு மேல இருக்குற போர்ல ஸ்டேஷனோட பேர் வரும். சோ பாத்திட்டே வா" என்றவன் அவள் இறங்க வேண்டிய நிலையத்தின் பெயரைக் கூறினான்.

 

"ஓகே... சத்யா..." என்றவளின் குரலில் சுரத்தை இல்லை.

 

"என்னாச்சி."

 

"இங்க சில சின்னப் பசங்க இருக்காங்க. அவங்க கைல பாட்டில் இருக்கு. எனக்குப் பயம்மா இருக்கு சத்யா... சத்யா... ஹலோ... ஹலோ..." என்றவளுக்கு உயிர் தொண்டைக் குழிக்குள் வந்து நின்றது போன்றுணர்வு.

 

ஏனெனில் அலைபேசியில் ஜீவன் இல்லை. 

 

அது ஸ்விச் ஆஃப் ஆகியிருந்தது. 

 

பெண்ணவள் அதிர்ச்சியின் உச்சம் தொட்டு, அச்சத்தில் உரைந்து விட்டாள். 

 

பெண் என்பதற்கான அடையாளமாக அவள் மட்டுமே அந்தக் கம்பார்ட்மெண்டில் இருந்தாள். 

 

தூர இருந்து புகைத்துக் கொண்டிருந்த சிறுவர்கள் இவளைப் பார்த்தபடியும் தங்களுக்குள் கிசுகிசுத்த படியும் இருக்க, அணிந்திருந்த லாங் ஸ்கெட்டை இறுக்க பற்றியபடி அவர்களை விட்டு வெகுதூரம் நடந்து, ஏறியிறங்கும் வாசலை அடைந்தாள்.  

 

அவர்கள் நெருங்கி வந்தால் ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடலாம் என்று முடிவு செய்திருந்தாள். 

 

ஆனால் அதற்கு அவசியமில்லாது அவர்கள் எழுந்து வருவதற்குள் அடுத்த நிலையம் வந்துவிட்டது. கோகோ வேகமாக இறங்கி விட்டாள். 

 

அது சத்யா இறங்கச் சொன்ன நிலையம் அல்ல. 

 

அங்கும் சில நான்கு கால் ஜீவராசிகளை தவிர்த்து யாருமில்லை. கையில் காசில்லாது, வழிகாட்ட ஃபோனும் இல்லாது, புரியாத மொழி பேசும் ஊரில் தனித்து நின்றவளின் மனம் மீண்டும் அச்சக்குழிக்குள் சிக்கியது. 

 

'இது என்ன இடம்னே தெரியல. என்ன எப்படியாது காப்பாத்தி என்னோட வீடு சேத்திடு முருகா.' எனக் கண்ணீருடன் நடைபோட, அவள் இறங்கிய ட்ரெயின் நகரத் தொடங்கியது. 

 

மனம் வெதும்பிய படி நடந்து சென்றவளின் இடைப் பற்றி அவள் இறங்கிய ரயிலிலேயே யாரோ இழுத்து ஏற்றி விட்டனர்.

 

"லீவ் மீ... விடு என்ன... ஹெல்ப்..." எனத் திமிறியவள், யாரென்று பார்க்காது கைகளைக் காற்றில் வீசி அடிக்க,

 

"இது தான் ஆறாவது ஸ்டாப்பா?. உனக்கு நம்பர் கவுண்ட் பண்ணத் தெரியுமா தெரியாதா?." என்ற பழக்கப்பட்ட சஜித்தின் குரலில் தான் திமிறலை கை விட்டுத் நிதானத்திற்கு வரவைத்தது. 

 

"சத்யா..." என்றபடி அவனின் முகம் பார்த்து நிம்மதி பெருமூச்சி விட்டாள்.

 

"இன்னும்‌ மூணு ஸ்டாப் இருக்கு. அந்தக் கம்பார்ட்மெண்ட்ல பயமா இருந்தா லேடிஸ் கம்பார்ட்மெண்ட்ல ஏறிருக்கனும். அத விட்டுட்டு ட்ரெயின விட்டா இறங்குவ." என்றான் காட்டமாக.

 

அவன் பார்த்து வளர்ந்த பிஸ்னஸ் உலகில் எத்தையோ துணிச்சலான பெண்கள் இருக்க, இவளின் பயம் கோபத்தை தந்தது.

 

அவனைக் கண்ட அவள் கண்களில் ஒளி. அவனின் குரல் கேட்டதில் அவளின் ஜீவன் உயிர் பெற்றது. அவனின் பரிசத்தில் அது நிம்மதி அடைந்தது. 

 

அதே நிம்மதியுடன் அண்ணாந்து அவனின் முகம்‌ பார்த்தபடி சில நிமிடங்கள் அவள் இருக்க, அதில் என்ன கண்டானோ, பற்றி இருந்த இடையின் அழுத்ததைக் கூட்டினான். 

 

அந்த அழுத்தம் அவனின் மார்பில் தலை சாய்த்து அவனை இறுக்கமாக அணைக்க வைத்தது.

 

"நா பயந்திட்டேன் சத்யா. ரொம்ப ரொம்ப பயந்திட்டேன். நீ மட்டும் இன்னைக்கி இல்லன்னா. என்னால யோசிச்சுக் கூடப் பாக்க முடியல. தேங்க்ஸ் சத்யா. ரொம்ப தேங்க்ஸ்." என்றவள் வடிந்தோடிய கண்ணீரை, முகத்தை இடம் வலம் திருப்பி அவனின் மார்பில் துடைத்தெடுத்தாள். 

 

பின் மீண்டும் தலை தூக்கி, "நீ எப்படி வந்த?" எனக் கேட்க, அவன் தந்த பதில் மயிர்கால்களை சிலிர்த்தெழச் செய்தது. 

 

அவளின் ஃபோன் பேட்டரி எப்பொழுது தீரும் என்று கணித்தவன் முந்தைய ஸ்டேஷனிலேயே ஏறி விட்டான். அவளைத் தேடி வரும் முன் அவள் இறங்கி நடந்து செல்வது தெரிய பிடித்திழுத்து விட்டான். 

 

"எனக்காக வா வந்த?" என்றவளுக்கு தன் பச்சை விழிகளை இமை கொண்டு மூடித் திறந்து கண் சிமிட்டலை பதிலாகத் தந்தான்.

 

இருவரின் பார்வையும் நேர்க்கோட்டில் முட்டி நின்றது பல நிமிடங்கள். 

 

இமை தாழ்த்தி அந்த யுத்தத்தின் தோல்வியை ஏற்றவள், அந்தத் தோல்வியை அவனுக்கே பரிசளித்தாள் தன் செயலின் மூலம்.

 

"எனக்கான வந்ததுக்கு தேங்க்ஸ் சத்யா." எனத் தலை நிமிராது தன் ஈர உதடுகளை, சட்டையின் மூன்று பட்டன்களை போடாது விட்டிருந்தவனின் முடிக்கற்றைகள் படர்ந்திருந்த மார்பில் ஒற்றி எடுத்துத் நன்றியாய் கூற, சஜித் தான் அங்குத் தன்னிலை மறந்து நின்றான். 

 

காதல், காமம், முத்தம், தொடுகை, தாபமென எந்த உணர்வையும் அறியாதவன் அல்ல. 

 

ரிபேகாவின் நட்பான அணைப்பிற்கு பழக்கப்பட்டவன். படிக்கும் காலத்தில் பல பெண் தோழிகள் உண்டு அவனுக்கு. அவர்கள் தரும் முத்தம் அவனுக்குக் காதலையும் காமத்தையும் தந்ததில்லை.  

 

ஏன் அன்று துகிராவை இதுபோல் காப்பாற்றியபோது அவளும் தான் கட்டியணைத்து அவன் கன்னத்தில் முத்தம் வைத்துத் தன் நன்றியைக் கூறியிருந்தாள். 

 

இதில் எதிலும் உண்டாக ரசாயன மாற்றம், ஒரு மாதம் பார்த்துப் பழகிய ஒருத்தியால் நிகழ்ந்துள்ளது. 

 

அவளின் ஆர்வமிகு பார்வை அவனுள் உண்டாக்கும் வேதியல் மாற்றத்தைச் சிலகித்தபடி இருந்தவன் அவளை அணைக்கவில்லை.

 

அவளைத் தன்னுள் புதைக்கும் வேகத்தில் உயர்ந்த கரத்தைத் தன் போண்ட் பாக்கெட்டிற்குள் புதைத்தவனை அவள் தான் உட்கொண்டிருந்தாள். 

 

அவனின் கரத்தில் தொங்கிக் கொண்டு, அவனின் புஜத்தில் தலை சாய்ந்தபடி பத்திரமாக வீடு வந்து சேர்ந்தாள் கோகோ.

 

___________

 

டைங் டைங்.... என விடாது அழைப்பு மணி அடித்துக் கொண்டே இருந்தது‌.

 

"கோகிலா கதவத் திற. கோக்கி... இருக்கியா?..." என்ற இளவேந்தனின் கத்தல் தான் கோகோவின் இமை கதவைத் திறக்க வைத்தது. 

 

நேரத்தைப் பார்த்தாள். அது அதிகாலை மூன்று என்றது. 

 

இன்னும் உயிர் துறந்த அலைபேசிக்கு மின்சாரம் பாய்ச்சாததால் அநாவசியப் பொருளாக, கைப் பையில் கிடந்தது அது. 

 

அபலையாய் நின்றபோது நூறிற்கும் மேல் அழைத்திருப்பாள் இளவேந்தனுக்கு. பல வாய்ஸ் நோட்,

 

‍"அத்தான் பயம்மா இருக்கு. நான் எங்க இருக்கேன்னே தெரியல அத்தான்." எனக் கண்ணீருடன் அவள் அனுப்பிய செய்திகள் அனைத்தும் சில மணி நேரத்திற்கு முன் தான் அவனைச் சென்றடைந்ததிருந்தது‌. 

 

அதைக் கேட்டவன் அவளுக்கு அழைக்க, அது செல்லாததால் அடித்துப் பிடித்துது ஓடி வந்திருக்கிறான். 

 

"கோகிலா நீ வீட்டுல தா இருக்கியா?. கோகிம்மா." என்றபோது அவனின் விழிகள் நனைந்திருந்தனர். 

 

தொலைந்து விட்டதாகக் கூறியவள் வீடு வந்தாளா? இல்லையா என்னானது? என்ற அவனின் பரிதவிப்பு அவளுக்குக் கேட்டதோ இல்லயோ. சஜித்திற்கு நன்றாகக் கேட்டது. 

 

கதவைத் தட்டியதும் அவள் திறக்கும் முன் சஜித் அவனின் வீட்டுக் கதவைத் திறந்திருந்தான். இளவேந்தனை பார்த்தவனின் புருவங்கள் முடிச்சிட, கரம் கட்டிக் கொண்டு நடப்பதை வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினார். 

 

இளவேந்தனுக்கு இருந்த டென்ஷனில் அவன் சஜித்தை கவனிக்கவில்லை. 

 

பல முறை தட்டியும் அவள் திறக்க வில்லை என்றதும் காவல் நிலையம் செல்வது தான் சரி என்று போலிஷிற்கு அழைக்க, கதவு திறந்தது. 

 

"ஏ அத்தான் இந்த நேரத்துல வந்திருக்கிங்க.?" எனச் சிகையை கோதியபடி வந்தவளின் தலை முதல் கால்வரை ஆராய்ந்தவன் அவளை அணைத்துக் கொண்டான். 

 

"ஸாரிம்மா. நீ கூப்பிட்டதும் என்னால உடனே வர முடியாத சூழ்நிலை. உன்னோட கால்ஸ் நா எடுக்காம விட்டதுக்கு ஸாரி டாம்மா." என்றவனின் அழுகை கோகோவையும் கண்ணீர் கடலுக்குள் தள்ள, 

 

'இல்ல எனக்கு நீச்சல் தெரியாது. அதுனால நா அதுக்குள்ள குதிக்க விரும்பல.' 

 

"இப்ப எதுக்கு அத்தான் அழறீங்க?. நான் சேஃபா வந்திட்டேன். வாசல் நின்னு அழாம வாங்க." என அதட்டி உள்ளே அழைத்துச் சென்றவள் குறுநகையுடன் நின்றிருந்த சஜித்தை பார்த்துச் சிறு நாணத்தோடு உள்ளே சென்றாள்.

 

இருவரும் உள்ளே சென்றதும், 'வீர வசனம் பேசும் நீர் குமிழி.' என முணுமுணுத்தபடி சென்றான் சஜித்.

 

"இவ்ளோ பெரிய ஆளாக வளந்திட்டு கண்ணுல கண்ணீர் வடிக்கிறது நல்லாவா இருக்கு. அழாதிங்க அத்தான்." என அதட்டியவாறு கட்டிலில் அமர்ந்தவளை ஏற இறங்க பார்த்தான். 

 

"என்னாச்சி அத்தான்?. நான் ரெண்டு கை, ரெண்டு கால், ஒரு வாய்னு சேமமா இருக்கேன்." 

 

"எப்படி வீட்டுக்கு வந்த?. பர்ஸ்ஸ பிக்பாக்கெட் அடிச்சிட்டதா சொன்னா. அப்றம் எப்படி?" என்றான் முறைத்தபடி.

 

‘ஆபத்துன்ன கூக்குரல் குடுத்த பக்கி, மீண்டுட்டேன்னு ஒரு செய்தி அனுப்பிருக்கலாம்ல.’ என்ற கடுப்பு அவனிடம்.

 

"அதா ஃபோன் இருந்ததே. சத்யா சரியான நேரத்துக்குக் கால் பண்ணா. நடந்தத சொன்னேன்‌. வழி சொன்னா. பாதி வழில என்ன பிக்கப்பும் பண்ணிட்டா." என்றவள் சூழ்நிலையிலும் கவனமாக ன்-என்ற எழுத்தைத் தவிர்த்துச் சத்யாவை பெண்போல் காட்டி பேச, 

 

"நா அந்தச் சத்யாவ பாக்கனும்." என அதிர்ச்சி வைத்தியம் செய்தான் இளவேந்தன். 

மயக்கம் தொடரும்...

 

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

மயக்கம் 30

https://kavichandranovels.com/community/postid/1190/


   
ReplyQuote

You cannot copy content of this page