All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 24

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

அத்தியாயம்: 24

 

"மேம், உங்க ஹஸ்பெண்ட்." என்றாள் ரிபேக்காவின் பீஏ.

 

தலை தூக்கிப் பார்த்தவளுக்கு அவளை நித்தமும் கொடுமை செய்யும் கணவனான ப்ரஜித் நிற்பது தெரிந்தது. 

 

"உப்...." எனப் பெருமூச்சை இழுத்து விட்டவள், அவனின் முன் சென்று, 

 

"எனக்கு இன்னும் வொர்க் முடியல."

 

"எப்ப முடியும்?."

 

"எனக்குத் தெரியல."

 

"வாவ்! கேள்விக்கு ரொம்பச் சரியான பதில் சொல்லிருக்க." என நக்கலாகக் கூறிய படி அவளின் கேபினுக்குள் சென்று அமர்ந்து கொண்டான். அவனின் பின்னாலேயே சென்றவள்,

 

"நா ஒன்னும் வெட்டிய இல்ல. உள்ள அட்சூட் போய்க்கிட்டு இருக்கு. அது முடியவும் அத எடிட்டிங் டீம் கிட்ட குடுத்து, அத சரி பார்த்து வாய்ஸ் ஓவர் குடுத்து, கம்ப்ளீட் பண்ணி மார்னிங் டென் ஓ க்ளாக் குள்ள என்னோட க்ளைண்ட் கிட்ட சமிட் பண்ணனும். அது என்னோட கேரியருக்கு முக்கியமானது. சோ ப்ளீஸ் என்ன கடுப்பேத்தாம போய்டு." என்று விட்டுச் சென்றாள் ரிபேக்கா. 

 

காலையில் அலுவலகம் செல்லும் ப்ரஜித் மனைவியை அவளின் ஆஃபிஸில் இறக்கி விட்டு விட்டுத் தான் செல்வான். அதே நேரம் வீடு திரும்பும்போது அவளை அழைத்துக் கொண்டு தான் வருவான். 

 

"என்னோட ஆஃபிஸ்க்கு போக எனக்கு வழி தெரியும்." என மறுத்தவளின் பேச்சிற்கு அவன் மதிப்புத் தரவில்லை. 

 

"நீயும் நானும்..." என அவன் ஆரம்பிக்கும் போதே, 

 

"ஹஸ்பெண்ட் அண்டு வைஃப். நாம ஒருத்தருக்கொருத்தர் care and loveவோட இருக்கனும். நமக்குள்ள நடந்த கல்யாணத்துக்கு ரெஸ்பெக்ட் குடுக்கனும். அதான." 

 

"கரெட்க்கா சொல்லிட்ட கண்ணம்மா. கம் வித் மீ." என்பவன் தான் அவளின் ஓட்டுனர். 

 

எப்பொழுதும் எட்டு மணிக்குள் இருவரும் வீடு அடைந்திருப்பர். ஆனால் இன்று... 

 

முக்கியமான விளம்பரப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதில் நடிக்க வேண்டிய நடிகை ஒத்துழைப்பு தராது ஒரு பக்கம் இம்சை செய்தாளென்றால், படமெடுக்கும் இயக்குனரிடம்‌, திருப்தியாக இல்லையயென்று மீண்டும் மீண்டும் காட்சிகளை எடுக்க வைத்தாள் ரிபேக்கா.    

 

ரிபேக்கா செய்ய வேண்டிய செயல்களைத் திட்டமிட்டு கணக்கச்சிதமாகச் செய்து முடிக்க நினைப்பவள்.

 

எட்டு மணிக்குள் முடிக்க வேண்டிய விளம்பரப்படம், பத்தை நெருங்கியும் முடியாது இழுத்துக் கொண்டே போக, அது ரிபேக்காவின் பீபியை ஏற்றியது. 

 

இரவு பத்து மணி ஆனது. ஆனாலும் 'இதுக்கு இல்லயா ஒரு எண்டு' என்று அனைவரும் சோர்ந்து தான் போயினர். 

 

மனதில் தோன்றிய காட்சியை அப்படியே படமாக்க வேண்டும். அதனால், "ப்ரேக்... டென் மினிட்ஸல ஃப்ரெஷ்ஷாகிட்டு வாங்க." என்று விட்டுத் தன் கேபினுக்குள் செல்ல, அங்க ப்ரஜித் லேப்டாப்புடன் அமர்ந்திருந்தான். 

 

"நீ இன்னும் போகலயா?" 

 

"வழக்கமான பதில் தான். நீ இல்லாம போகமாட்டேன்." என்க. 

 

"நைட் முழுக்க எனக்கு வொர்க் இருக்கும்."

 

"எனக்கு இந்த சோஃபா கூடக் கம்பர்டபுள்ளாத் தா இருக்கு." என்றவனை முறைத்தபடி 'இருக்குற டென்ஷன் பத்தாதுன்னு இவன் வேற.' என முணுமுணுத்தவள் இதுவரை எடுத்த காணொளிகளில் எதாவது தேறுமா எனப் பார்த்தபடி இருக்க, அவளின் முன்னிருந்த நாற்காலியில் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளின் முக பாவனைகளை ரசித்தான் ப்ரஜித். 

 

வில்லென வளைந்து நெளிந்த திருத்தப்பட்ட புருவம், அவள் பேசாத அன்பான பேச்சை அவனுடன் ஆசையாய் பேசியது. 

 

வெகுநேரம் அவளின் அழகில் மயங்கிப் போய் அமர்ந்திருந்தவன் அவளின் விழிகளில் தெரிந்த கலைப்பை உணர்ந்து எழுந்து சென்றான்.

 

காபிக் கோப்பையை அவளின் முன் வைத்து விட்டு, விழி விலக்காது மனைவியின் மதி முகத்தை மீண்டும் ரசிக்க, 'ம்ச்…' என்றபடி புருவத்தை உச்சி மேட்டிற்கு ஏற்றினாள். 

 

"காபி குடிச்சா டென்ஷன் போய்டும் கண்ணம்மா." என்றபடி அவளின் முன் நகர்த்தினான். 

 

முதலில் அதைக் கண்டு கொள்ளாது தான் வேலையைப் பார்த்தாள். ஆனால் நாசியை நிறைத்த காபிக் கொட்டையின் நறுமணம், 'எடுத்துப் பருகேன்.' என்றது. 

 

ப்ரஜித் பார்க்கிறானா என்று நோட்டமிட்டவள், அவனின் பார்வை தன்னிடம் இல்லை என்பதை உறுதி செய்யும் வரை எடுத்துப் பருகவில்லை.  

 

"ம்... இதுல சுகர் போட்டியா இல்லயா நீ?. கசக்குது." என்றபடி முகம் சுருக்கி மேஜையில் வைக்க, 

 

"காபின்னா லைட்டா கசக்கனும். அது தான் அதோட டேஸ்ட். பை தி வே எனக்குச் சுகர் பிடிக்காது. பிட்டரி ஸ்வீட் தான் மை பேவரரேட்." என்றவனை, 'என்ன டேஸ்டோ!' என்றபடி எழுந்து மீண்டும் சூட்டிங் நடக்கும் இடத்திற்கு செல்ல எதானித்தவளின் கரம்பற்றி நிறுத்தினான் ப்ரஜித். 

 

"எனக்கு நல்லாத் தெரியும் உன்னோட வொர்க்க நீ எந்த அளவுக்கு லவ் பண்றன்னு. பட் பிடிச்ச வேலைய ரிலாக்ஸா செய்யனும். டென்ஷன் ஆகாத. இது உன்னோட அழக குறைக்கிது கண்ணம்மா." என்றபடி நெருங்கியவன், 

 

"இந்தத் திமிர் காட்டி ஆட்டிட்யூட் பண்ற கண்ணுல டென்ஷன பாக்க நல்லா இல்ல. அத குறைக்க எங்கிட்ட நல்ல பில்(மாத்திரை) இருக்கு." என்றவன் அவளின் கன்னங்களைத் தாங்கி முகம் உயர்த்தினான்.

 

விழிகளோடு விழிகள் கலக்க விட்டவன், தன் பிரிய கசப்பு சுவையை, காபியை பருகிய அவளின் அதரங்களின் இனிப்புடன் கலந்து சுவைக்கலானான். 

 

இருந்த டென்ஷனில், அவன் தன்னை நெருக்கியதையே உணராத ரிபேக்காவிற்கு அவன் தந்த முத்தம், அருமருந்து என்று தான் சொல்ல வேண்டும். 

 

மருத்துவ முத்தமாக ஆரம்பித்த அது, அவளுக்கு எப்படியோ அவனுள்‌ மோகத்தீயைப் பற்ற வைத்து விட்டது. புதிதாய் அவளின் மீது பிறந்த காதலால் உரிமையுடன் தன் கை வளைவில் நிற்கும் மனைவியின் வதனத்தில் தன் கரங்களைக் கரைபுரல விட்டான். 

 

தன் இடையில் அழுத்தமாகப் படிந்திருந்த ஆடவனின் கரத்தின் வலிமையும், கழுத்தை வளைத்து மார்பில் அங்கங்கள் பதிய அணைத்திருந்தவன் தந்த முத்தத்தின் வேகமும் பெண்ணவளை திசை தெரியாது தவித்த படகு மீண்டு கரை சேரு வழியைக் காட்டியதைப் போல் இருந்தது. 

 

அவளுக்கு விலகத் தோன்றவில்லை. இவனுக்கு அவளைவிடத் தோன்றவில்லை. 

 

அட்டையாய் ஒட்டிக் கொண்டு, தன் இணையின் உயிரை உசுஞ்சிக் கொண்டிருந்தவனை விலக வைத்தது, கதவைத் தட்டும் ஓசை. 

 

அவளின் பீஏ தான். பத்து நிமிட இடைவேளை முடிந்து விட்டது என்று சொல்லிச் சென்றாள். 

 

நாணமோ வெட்கமோ ரிபேக்காவிற்கு தோன்றவில்லை. ஆனால் அது அவளுக்குள் ஓர் சில்லென்ற உணர்வைத் தந்திருந்தது நிஜம்.

 

அவளின் முகத்தில் நாணத்தை எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான்.

 

எவ்வித பாவனையும் காட்டாது இடத்தைக் காலி செய்தவளை முந்திக் கொண்டு ப்ரஜித் சூட்டிங் நடைபெறுமிடம் சென்று நடிக்கவிருந்த நடிகையிடம் எதையோ சொல்ல, அவள் சந்தோஷமாக ரிபேக்காவிற்கு ஒத்துழைப்பு தந்து ஒரே சாட்டில் விளம்பரம் ஓகே என்றானது‌. 

 

அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் சடுதியில் நடந்து முடிக்க, இருவரும் நடுச்சாமத்தில் வீடு வந்து சேர்ந்தனர். 

 

எப்பொழுதும் ரிபேக்கா பேசமாட்டாள் தான், ஆனால் ப்ரஜித் எதையாது அவளின் கேட்டுக் கொண்டே வருவான். ஆனால் இன்று அவன் அமைதியாகி விட, எவ்வித பேச்சுமின்றி தங்கள் கூட்டை அடைந்திருந்தனர்.

 

"அப்படி நீ அந்த மாடல்கிட்ட என்ன சொன்ன? அவ்ளோ நேரம் பந்தா காட்டிட்டு இருந்தவ உடனே பர்பெக்ட்டா நடிச்சா!" என்றவள் இரவு உடைக்கு மாறியிருந்தாள். 

 

பாவம் அன்றைய நாளின் இரண்டாவது ஏமாற்றம் அவனுக்கு.

 

அவளின் முகத்தில் பொறாமையை எதிர்நோக்கி பார்த்திருந்ததால் கிடைத்தது.

 

பொசசிவ் காதலின் முதல் படி. அந்தப் படியில் ஏறாது சண்டியாய் இருகரம் கட்டிக் கொண்டு நின்றவளின் மீது இவனுக்குக் காதல் பிறந்து விட்டதே. அவளால் மட்டுமே தூண்டப்பட்டு, பற்றி எரிந்து போயாட்டம் போடும் தன் உணர்வுகளுக்கு வடிகாலாக அவள் வேண்டும் என்றது அவனின் மனமும் உடலும்.

 

அவளின் கேள்விக்குப் பதில் சொல்லாது அவன் நிற்க,

 

"எனிவே நீ பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி. நாளைக்கி வொர்க் இருக்கு. குட் நைட் ப்ரஜி." என்றபடி போர்வை மூட இருந்தவளிடம் அதை உருகியலன், 

 

"I need you கண்ணம்மா. இப்பவே." என்றவன் எதிர் வினைகளை எதிர்பாராது அணைத்தான். 

 

பட்டை ஒத்த இடையில் பதிந்த ஆடவனின் கரம் அதன் மேல் உயர்ந்து பெண்ணவளை களவாடத் தொடங்கியது. 

 

உன் தோலாய் நான் இருக்க எதற்காக வீண் ஆடைகள் என்பது போல் அவளின் தேகத்தை மோகத்துடன் மூடிக் குலைந்தான்.

 

அன்றிலிருந்து எத்தனை முறை, எத்தனை மணி நேரம், யாருக்கு வெற்றி என்றெல்லாம் கணக்கெடுக்காது கட்டில் யுத்தம் நித்தமும் நடைபெறத் தொடங்கியது. 

 

ஆடவனின் ஆண்மையில் பெண்மை கரைந்தது. 

 

விரும்பி இணைந்தாளா என்றால் அது பதில் சொல்ல முடியாத கேள்வி தான். ஆனாலும் அவனுடன் ஒன்றினாள், குழைந்தாள், குழைய வைத்தான். அங்கமெங்கும் சிவக்க வைத்தவன் தந்த முத்தமும், செல்லமாய் வலியே தெரியாது அவன் தந்த காயமும் இப்போதும் நினைவு உள்ளது அவளுக்கு. 

 

பின் வந்த நாட்கள் அத்தனையும், பிரிவே மாட்டோம் என்பது போல் கூடிக் கிடந்தனர். 

 

ப்ரஜித் தான் கொண்ட காதலை அவளுக்கு உணர்த்துவதிலேயே முனைவாய் இருக்க, அவள் காதலை உணரவே இல்லை என்பதை தாமதமாக உணர்ந்ததால் உண்டான காயம் அவனுக்கு ரணமாய் வலியைத் தந்தது.

 

தன் நண்பனுக்காக என்ற ஒரே வார்த்தையில் இத்தனை மாதம் அவன் வளர்ந்திருந்த நேசத்தை உருத்தெரியாது உடைத்து விட்டாள். 

 

அதை அவள் உணரவே இல்லை கோகோ வரும் வரை. 

 

கோகோவின் சில செயல்கள் தான் அவளுக்கு நினைவேட்டில் புதைந்து போனதாய் நினைத்த பொக்கிஷத்தை அகழ்வாராய்ச்சி செய்து எடுத்தது. 

 

"ரிபேக்கா. இட் டயம் டு மீட்டிங். கம்." என ப்ரியங்கா வந்து அழைக்கும் வரை ரிபேக்கா ப்ரஜித்தின் நினைவலைகளில் சிக்குண்டு கிடந்தாள். 

 

"யா... ஐ ஆம் கம்மிங்." என்றபடி கோகோ வைத்துச் சென்ற கசப்பு காப்பியை ரசித்துப் பருகியவளுக்கு உற்சாகம் கரைபுண்டது. 

 

அதே உற்சாகத்துடன் அவளின் கால்கள் கோகோவை தேடிச் சென்றது. 

 

"கோகோ, தேங்க்ஸ் ஃபார் த காபி." எனப் புன்னகையுடன் தன் ராஜ மாதாவே வந்து சொல்லும்போது கோகோ இந்த உலகிலா இருப்பாள். எப்பொழுதோ பறந்து விட்டாள். 

 

பறக்கும் முன், வலது காலை லேசாக மடக்கி, இடது காலைப் பின்னால் கொண்டு சென்று, ஒரு கையால் அணிந்திருந்த அனார்கலியின் டாப்ஸ்ஸை விரித்து, மறு கரத்தை அழகாய் விரித்து, தலை தாழ்த்தி ஆங்கிலேய பாணியில் தன் நன்றியைச் சொல்ல, ரிபேக்காவின் முகம் தன் கணவனின் நினைப்பில் மத்தாப்பாய் பூத்தது. 

 

பக்கத்திலிருந்த ஜீவன் சரமாய் உள்ளுக்குள் வெடித்துக் கொண்டிருந்து இருவருக்கும் தெரியவில்லை. 

 

'இதே மாறி ப்ரஜித் ரிபேக்காக்கிட்ட செஞ்சி பாத்திருக்கேன். அனு சொன்னது சரி தான். இவள இன்னும் கொஞ்ச நாள் இங்க விட்டு வச்சா கூட ரிபேக்காவ ப்ரஜித்த தேடி ஓட வச்சிடுவா.' எனக் கருவியவள் கோகோவை அடுத்த கணமே ரிபேக்காவிடம் திட்டு வாங்க வைத்து விட்டாள். 

மயக்கம் தொடரும்...

 

 

கருத்துகளை பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments/

 

மயக்கம்: 25 

https://kavichandranovels.com/community/postid/1047/

This topic was modified 4 days ago by VSV 11 – கள் விழி மயக்கம்
This topic was modified 9 hours ago by VSV 11 – கள் விழி மயக்கம்

   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 3 months ago
Posts: 29
 

Lover boy aa irunthavana inchi thinna kuranga maaththirukka 😂😂


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
Topic starter  

@vsv42 🥰🥰🥰🥰🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page