About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
#கௌரிவிமர்சனம்
#பாரிஜாத_மலர்_என்_கை_சேருமா….
டுவிஸ்ட் & டர்ன்ஸ் ஓட கதையில் காதல், பாசம், துரோகம், நட்பு எல்லாமே இருக்கு….
ஆரபி, கர்த்தரின் பெண்….இந்த வாக்கியம் பிடிச்சி இருந்தது….இப்படியே சொல்லாம்….
அவள் வளர்ந்த ஹோம் விட்டு, மியூசிக் டீச்சரா இருக்கா….
அவள் வெளி வந்துட்டாலும், அந்த ஹோம் & அதில் உள்ள குழந்தைகள் மேல ரொம்ப அன்பு…..
அந்த ஹோமை இடிச்சிட்டு அங்க ஹோட்டல் கட்ட வரான் நம்ப ராஜா….
ராஜாவா????
ஹ்ம்ம், ராஜாவே தான்…. பைரவ் ரகுநந்தன்….கேரள ராஜா….
அப்ப அவன் ஆன்டி ஹீரோ????
அது தான் இல்ல…
ஆரபி, ஹோம் பத்தி யுவா கிட்ட சொல்ல…
பைரவ், அதை மீட்டு தரான்…..
யுவா, பைரவ் ஓட அத்தை பையன்….ப்ரெண்ட் எல்லாமே…..
ராஜா வம்சத்தில், அடுத்த ராஜா யாரு அப்படினு பெரும் போட்டி….
பைரவ்க்கு அப்பா அம்மா இல்லைனாலும், சித்தப்பா, அத்தை எல்லாம் இருக்காங்க….
அவங்களுக்கு பசங்களும் ….
அப்ப போட்டி எப்படி இருக்கும்????
இதில் ஆரபி எப்படி வந்தா????
பைரவ் ஏன் வீல் சரில் இருக்கான்????
அவனோட திட்டம் தான் என்ன????
இது எல்லாம் மீதி கதை…..
பைரவ், கொஞ்சமா பேசினாலும்….அவனோட செயல்கள் எல்லாம் வாவ் தான்….
அவனுக்கும் யுவாக்கும் இல்ல பாண்டிங் செம்ம…..
யுவா, அவன் போல ரொம்ப அழுத்தம் இல்ல தான்….
ஆரபி, அன்பு,கருணை, காருண்யம் எல்லாத்துக்கும் இவ பேரை மாத்தி வெச்சரலாம்….
ராதிகா, சரியான சரவெடி….எனக்கு இவளை ரொம்ப பிடிச்சது…..
ரவி வர்மா, இந்த தாத்தா, கௌரவம் அப்படினு சொல்லிட்டு இருந்தாலும் உண்மை எல்லாம் தெரியும் போது, இவரோட நியாயம் ரொம்பவே பிடிச்சது.....
கதையில் இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க…..
கதை பின்னணி எல்லாம் கேரளா அரன்மனையில் தான் நடக்குது…..
இவளோ மலையாளம் படிக்க ரொம்பவே கஷ்டமா இருந்தது ரைட்டர்…..
அதே போல, கதை பெருசு….இன்னும் க்ருஸ்பா குடுக்க பாருங்க…..
மத்தபடி கதை நல்லா இருக்கு….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐
லிங்க்👇👇👇👇
பாரிஜாதம் மலர் என் கையில் சேருமா கதை அருமை. ராதிகா ஆரபி நட்பாக ஆரம்பித்த கதை ஆஸ்ரமம் அபகரிப்பு என்று கதை அடுத்த கட்டத்திற்கு போகும் போது ஹீரோஸ் என்ட்ரி. யுவராஜ் செம இவன் ராதிகா தனுஜ்யிடம் அதிரடியாக பேச ஆரபி பொறுமையாக பேசுவதால் பைரவ் வர ஆஸ்ரமம் பிரச்சினை முடிவுக்கு வர பைரவ் சஸ்பென்ஸ் தெரியவருகிறது அவனின் மனைவி அப்பா அம்மா கொலைபண்ணியது யார் என்பதை தேடுகிறான் என்று மலையாள மொழி யுடன் சஸ்பென்ஸ் வுடன் போவது சூப்பர். ஆரபி பைரவ் மனைவியாக நடிக்க வர மலைஜாதியினருக்கு கொடுத்த நிலத்தில் கிரானைட் இருக்க அதனால் ஆரம்பமாகும் பிரச்சினை அண்ணா தம்பி மச்சான் கூட்டு சேர்ந்து பிரச்சினை களைந்து ஆரபி பைரவ் யுவராஜ் ராதிகா வும் சேர்வதும். கார்த்திகா மீனு பாட்டி செம. கார்த்திகா சொந்தமும் பைரவ் அம்மா சொந்தமும் செம. கூடவே வில்லன்களை களை எடுத்து தன் மனைவியை அப்பா அம்மா கொலை செய்தவனை தண்டனை செம. சஸ்பென்ஸ் உடைந்து ஆரபியுடன் இணைவது செம. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
செந்தணல் தாரிகையே கதை செம. நாச்சியார் போலீஸ் இருக்கிறாள் கல்யாணம் வேண்டாம் என்க அம்மா தங்கைக்கு முடிப்பதற்கு பையன் பார்க்க நாச்சியாரையை கேட்க அக்கா தங்கை இருவரின் காதலும் தெரியவர அம்மா நாச்சியார் கோபமாக இருக்கிறார் அப்பாவுக்கும் தெரியும் என்கும் போது கோபம் இன்னும் வர அஜய் மகன் தேவ் வுடன் இருக்கிறான் அவன் தன் காதலை ஜெயிக்க மென்மையாக இருந்தாலும் அழுத்தமாக உணர்த்துவது அழகு அவன். நாச்சியார் வழக்கில் எதுவும் துப்பு கிடைக்காமல் அல்லல் பட்டும் குடும்பத்தில் வரும் பிரச்சினை அஜய் யின் மூலம் களைவதும் செம.தங்கைகாதலன் கார்த்தி நிரம்ப நல்லவன் அம்மாவும் இல்லாமல் போக பிரச்சினை வருவதை அஜய் மூலம் சமாளிப்பது செம. அஜய் என்று கூப்பிட்டும் ஒருமையில் பேசுவதும் நாச்சியாரையை அஜய் புரிந்து கொள்வதும் அழகு . அஜய் அப்பா கோபமாக பேசினவுடன் நாச்சியார் வீட்டைவிட்டு போனாலும் அஜய் அதற்கு கண்டிக்காமல் தேவ் ஏன் விட்டு விட்டு போனாய் என்று சொல்வது சூப்பர். தேவ் கியூட்.. தவமணி சண்முகம் சூப்பர். எல்லோருடைய மனநிலையை அழகாக சொல்லி இருப்பது சூப்பர். வழக்கின் திருப்பம் சஸ்பென்ஸ் இரண்டும் களைந்து சுபம். அஜய் நாச்சியார் ரொமான்ஸ் கியூட். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#போகனின்_மோகனாங்கி….
மறு ஜென்மம் பத்தின கதை….
கதை வேற லெவல் 🤩🤩🤩🤩
மேக்னா, தான் எழுதின கதைக்கு வரைய ஓவியரை தேடிட்டு இருக்கா….
அதை அப்படியே அனிமேஷன் படமா எடுக்கவும், அந்த கதையை வெளியிடாமல் வெச்சி இருக்கா…..
அவ கதையை அப்படியே, சீன் பை சீன் போகன் அப்படிக்கர ஓவியன் வரைந்து இருக்கான்…..
அவ ப்ரெண்ட் நித்தியை தவிர யாருக்கும் அந்த கதை தெரியாது….
அப்படி இருக்கும் போது இது எப்படி சாத்தியம்????
இருவருக்கும் ஒரே கற்பனை வர வாய்ப்பிருக்கா?????
இந்த போகன் கிட்ட கதை திருடி இருக்கியா அப்படினு கேள்வி கேட்க போக….
அங்க இருப்பதோ பென் பெயரில் வரையும் அகத்தியன்….
அவனின் மோகனாவை பார்க்கவே தவம் செய்து பிறப்பு எடுத்தவன்…..
எப்பவும் போல மறு ஜென்ம கதை அப்படினாளும்…..
இது கவரும் விதமா இருக்கு….
அவரவர் நியாயம் புரிந்து, ஒண்ணா சேர்ந்தா அடுத்த டுவிஸ்ட்….
கதை ஆரம்பம் முதல் கடைசி வரை …
விறுவிறுப்பு குறையாமல் சூப்பரா போகுது…..
அகத்தியனும், அவனின் காதலும் ரொம்பவே பிடிச்சது…..
கதை நிறைவா இருந்தது ரைட்டர்♥️♥️♥️♥️
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
ரைட்டர் ஜி 💐💐💐💐💐
வரமாய் வந்த உயிரே வைஷ்ணவி சக்தி குழந்தை இல்லை என்ற பிரச்சினை வருகிறது. வைஷ்ணவி குழந்தைக்காக அவள் படும் வேதனை சொல்லி மாளாது சக்தி அவளை அன்பாக பார்த்து கொள்வது அம்மாவையும் பேசுவது என்று அழகு அவன் . பவித்ரா யதார்த்தமான மாமி அவள் மருமகளை நன்றாக பார்த்து கொண்டாலும் மற்றவர்கள் கேட்கும் போது அவளை பேசி விடுகிறாள். சக்தி உடன்பிறந்த தங்கைகளுக்கும் குழந்தை இருக்கிறது .வைஷ்ணவி உடன்பிறந்த அக்கா அண்ணாவுக்கும் குழந்தை இருக்கிறது. வைஷ்ணவி எல்லோரும் கேட்கவும் குழந்தைக்காக பரிசோதனை செய்ய பாவம் அவளின் வேதனை முதலில் அவ்வளவு காட்டவில்லை என்றாலும் பின்னர் பிரச்சினை வர சக்தி பரிசோதனை செய்ய போகும் போது அவனின் அல்லல் தெரியவருகிறது. வைஷ்ணவி அல்லலும் பரிசோதனை பின்னர் இரத்தம் வந்து மயங்கி விழுந்து ட்ரிப்ஸ் ஏற்றி சக்தி படும் கஷ்டம் உணர்வு செம.. இதனிடையே பாட்டியின் ஞாபக மறதியும் அழகாக சொல்லி இருக்கேங்கே.கதை படிக்கும் நமக்கே அவர்களுக்கு குழந்தை வரம் வேண்டும் நினைக்க வைக்கிறது செமடா.கடைசி நாத்தனார் அக்கா மாசமாக ரைட்டர் மேல் கோபம் தான் ஒருவழியாக தங்கை குழந்தை வேண்டாம் முடிவுக்கு வரவும் அந்த குழந்தை எனக்கு கொடுங்கள் என்று கையேந்துவது நமக்கு கஷ்டமாக இருக்கிறது. அவளும் சம்மதிக்க டாக்டர் கொஞ்சம் பொறுங்கள் வரும் என்கிறார் வைஷ்ணவி வேண்டும் என்க குழந்தை ஸ்கேன் பண்ணும் போது அவளே குழந்தை பெறுவது மகிழ்வது சூப்பர் தான். குழந்தையும் வைஷ்ணவி அம்மாவாக உணர்வது சூப்பர். செல்வம் சூப்பர். காயத்ரி டூ மச் குழந்தை உணர முடியவில்லை அழுத்தம் வருகிறது குழந்தை தேவதை வர அவள் சக்தி வைஷ்ணவி சரவணன் சேர்வது பவித்ராசேரமால் இஇருப்பது சண்டை போடுவது சூப்பர் அவிஷா.சக்தி வைஷ்ணவி தேவதையாக வந்தவள் தனக்கு துணையாகதம்பியையும் கூட்டி வருகிறாள். முடிவு அருமை வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
போகனின் மோகனாங்கி கதை அருமை. ஆரம்பத்தில் ஓவியக் கண்காட்சி நடக்க ஹீரோயின் தோழி கதைக்கு ஓவியரை தேட போகன் கிடைக்க ஆனால் அவளின் கதை தேவையான ஓவியம் கிடைக்க சண்டை போட வர இருவரும் சந்திக்கும் முன் யார் என்று அறிய அவள் தான் தேடிய தன்னவள் அறிய மேக்னா நித்யா அகனிடம் சண்டை போட ஜென்மம் ஜென்மம் தொடரும் சங்கதி சொல்ல ஞாபகம் வந்தாலும் அவனை கொல்ல நினைக்க அகன் தன்னுடைய கதையை சொல்ல புரிய பின்னர் பிரச்சினை தீர்ந்தது நினைத்தால் அப்பா அத்தை அத்தை மகன் வில்லனாக வர அகன் அதையும் சமாளித்து கரம் பிடிக்க நித்யா தினேஷ் சேர அவார்ட் வாங்க சுபம். கருத்து செம. முடிவு அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
நைட் லைப் கதை அருமை. இண்டர்நெட் மூலம் ஏற்படும் பிரச்சினை காதல் போலீஸ் சஸ்பென்ஸ் கொலை பசங்களுக்கு வன்முறை சம்பவங்கள் ரொமான்ஸ் நம்பிக்கை துரோகம் அனைத்து கலந்து விறுவிறுப்பாக கடைசி வரை வில்லனை சஸ்பென்ஸ் கொண்டு போனது செமடா. ஆரா யுகி சாதனா இனி நட்பு செம. ஆரா மித்திரன் பேசி முடிக்க வழக்கில் மித்திரனுக்கு உதவியாக நட்பு பட்டாளம் களம் இறங்க செம. ஆல்வின் இண்டர்நெட் பிரச்சினையால் இனி பிடித்தம் ஏற்படுவது கேரமல் என்று அழைப்பது சூப்பர். யுகி ராகவ் காதலை சொல்ல வேண்டாம் மறுக்க அவன் மேல் கோபம் வருகிறது. மித்திரன் ஆரா ரொமான்ஸ் பொண்டாட்டி அழைப்பது சூப்பர் இதனிடையே வில்லன்களை கண்டறிந்து சாட்சிகளை வில்லன் கொல்வது ஆரா யுகி கடத்துவது சண்டை என்று செமயபோச்சு. வில்லன் இவன் தான் கடைசி தெரியாமல் பார்த்து கொண்டது செம. தண்டனை சூப்பர். ஆல்வின் இனி ஆரா மித்திரன் யுகி ராகவ் சாதனா திலக் அனைத்து ஜோடி சேர்வது சூப்பர் மித்திரன் வேட்டை தொடரட்டும். வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்
#வாகை_சூட_வா_25
#கௌரிவிமர்சனம்
#நைட்_லைப்…
சஸ்பென்ஸ் திரில்லர் கதை…..
ஆல்வின் ஓட கம்பனி ஹேக் ஆகிட்டு அப்படினு ஜெர்மன்ல இருந்து வரான்….
அதனால, மக்கள் ஓட தகவல்கள், பெரிய பொலிடிகல் தலைவர்கள் ஓட தகவல்கள் எல்லாம் ஹேக் செய்ய படுது …..
இதில் மக்கள் ஒரு பக்கம் நெருக்க….மீடியா அதில் எண்ணெயை ஊத்த….
இப்படி ஒரே கலவரமா இருக்கு…
சிஎம் கூட அதுக்கு விதிவிலக்கு இல்ல….
அவருக்கும் சில மிரட்டல்கள்….
இது எல்லாம் யார் செய்யற?????
இதை கண்டு பிடிக்க டெல்லிலா இருந்து வராங்க மித்ரன் & ராகவ்….
ஹேக் மட்டும் தான்னு நினைச்சா….
அது கூடவே, போ*தை பொருள், ஹியூமன் ட்ராஃபிக் என….
கதை சும்மா விறுவிறுப்பா போகுது…..
மித்ரன் & ராகவ் காம்போ செம்ம சூப்பர்…..
ரெண்டு பேரும் முறைச்சிகிட்டாலும்….எப்பவும் ஒரே போல யோசிக்கிறது சூப்பர்….
அதே போல, ஆல்வின் & கேரமில் காம்போ கூட கியூட்டா இருந்தது….
அப்பறம் மித்து கொச்சிப்பான்….அவனும் ஆருவும் கூட செமம்….
ராகவ் & யுகியும் சூப்பர் ….
திரில்லர் கதைனாலும், கியூட்டா நாலு லவ் ட்ராக் அதில்…..
கடைசில இவனா அப்படினு ஷாக் தான்…..
கதை ரொம்ப சூப்பர் ரைட்டர்👏🏻👏🏻👏🏻👏🏻
சில இடங்கள் மட்டும் incomplete aa இருக்க ஃபீல்…..
ரத்னம், அந்த விடியோவா blur பண்ணி விட்டார் … அவரோட பார்ட் அதுக்கு மேல இல்ல…..
மினிஸ்டர் சதாசிவம் கிட்ட அஸ்வினை ஏன் கூட்டி போனாங்க???
இதுக்கு அப்பறம் அவர் பேர் எங்கையும் வரல….
இது போல தான்….
மத்தபடி எனக்கு கதை ரொம்ப பிடிச்சது….
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
லிங்க்👇👇👇👇
#வாகை_சூடவா_போட்டி
#நைட்_லைஃப்
#vsv39
Kcadmin Kavi Chandra sis அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதை.. அருமையாகவும் விருவிருப்பாகவும் இருந்தது.
ஆல்வின் அவனின் கேரமல் என்னை அதிகம் கவர்ந்த ஜோடி இவர்கள் தான் 🥰
மித்ரன்.. ஆராதனா.. இவர்கள் ஜோடியும் சூப்பர்
ரிஷி யுகி காதல் இல்லை என்று தெனாவட்டாக திரிந்த ரிஷி பின் பெண் அவளிடம் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
சாதனா மட்டும் சோலோவாக சுற்றுகிறாள். மனதில் இருக்கும் காதலை பகிர்ந்து கொள்ளவில்லை இவள்.
கிங், வாங் என இரண்டு மாபியா தலைவர்கள் அவர்களை பிடிக்க வரும் மித்திரன் ரிஷி.. ஒவ்வொன்றையும் கண்டுபிடிக்கும் மிக அருமையாக இருந்தது. ஹேக் பற்றி நிறைய தகவல்கள். சூப்பர். 👏
ஒவ்வொன்றையும் கோர்த்து வில்லன் யார் என கண்டுபிடிக்கும் விதம் அருமை. இவன்தான் வில்லனாக இருப்பான் என யூகிக்க முடியவில்லை.. விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰❤️
Good lu
ck 🥰 🌹
#vsv45
#கனலைஅணைக்கவாகவியே
#வாகைசூடவாபோட்டிக்கதை
Kcadmin Kavi Chandra அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
தேவ் ஆச்சார்யா ஆராதனா
ரிஷி வந்தனா
ஆரியன் இளமாறன் லயவர்ஷினி
இந்த மூன்று ஜோடிகளை சுற்றியே கதை.
இதில் எனக்கு மிகவும் பிடித்த ஜோடி ஆரியனும் வர்ஷினியும் தான்.
அரிய வகை வைரம் ஒன்று வர்ஷினியின் கை சேர்கிறது. அதை எப்படியும் அடைந்து விட வேண்டும் என நினைப்பவனுக்கு வர்ஷினியின் மேல் ஏதோ ஒரு வன்மமும் பகையும் இருக்கிறது. அவளை பெற்றோரின் சம்மதம் கொண்டு மணக்கிறான்.. ஆன்ட்டி ஹீரோவாக மாறி அவளை கொடுமை செய்யாமல் காதலால் அவளை கொண்டாடித்திருக்கிறான். ஆனாலும் வன்மத்தை விடாமல் பிடித்துக் கொண்டு அவளை விட்டு விலகுகிறான். விலகியவன் மறுபடியும் அவளை எப்படி சேர்ந்தான் என்பது கதையில். பெண் அவனை மன்னித்தாளா என்பதும் கதையில்.
தேவ் ஆராதனா இருவரும் மருத்துவர்கள் தனக்கு பாடம் எடுத்த தேவ்வியின் மீது காதல் பெருகுகிறது ஆராதனாவிற்கு அதை அவனிடம் தெரிவிக்கும்போது கோபம் கொண்டு அவள் காதலை நிராகரிக்கிறான். சில வருடங்களுக்குப் பிறகு ஐந்து வயது ஆண் மகனுடன் இவனிடம் சிகிச்சைக்கு வருகிறாள் பெண்.. கைவிட்டு போன பெண்ணை காதல் கொண்டு மணக்கிறான் தேவ் வலிக்கொண்ட ஆராதனா அவனை மன்னித்தாளா என்பதும் அந்தக் குழந்தை யார் என்பதும் கதையில்.
ரிஷி வந்தனா இருவருமே மருத்துவர்கள். தனது மாணவியான வந்தனாவின் மீது காதல் கொள்கிறாள் ரிஷி செல்வந்தன் ஆன இவன் காதலை கண்டு பயந்து அவனை நிராகரிக்கிறாள் வந்தனா. பெற்றோரின் சம்மதம் கொண்டு இவளை கைப்பிடிப்பவன் தன் காதல் கொண்டாடி தீர்க்கிறான் அவளை..
அருமையாகவும் சுவாரசியமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤️
Good luck 🥰 🌹
#செந்தணல்_தாரிகையே
#வாகை_சூடவா
#vsv_37
Kcadmin Kavi Chandra அவர்களின் தளத்தில் நடக்கும் போட்டி கதை
திரில்லருடன் கலந்த அருமையான குடும்பக்கதை.
கோமதி நாச்சியார் அஜய் கிருஷ்ணா இவர்களும் இவர்களின் குடும்பமும். 🥰 கோமதி நாச்சியார் ஏசிபி… அஜய் கிருஷ்ணன் ஐடி கம்பெனியில் டீம் லீடர். கோமதியின் தங்கை ஸ்ரீயை பெற்றோர்களின் கட்டாயத்தால் தன் மகனுடன் பெண் பார்க்க வருகிறான் அஜய். வந்த இடத்தில் ஸ்ரீயின் அக்காவாகத் திருமணத்தை வெறுப்பவளாகத் தனது காலேஜ் சீனியரும் அவனின் ஒன் சைட் காதலியும் ஆன நாச்சியாரை பார்த்ததும் மின்னல் அடிக்கிறது அவன் கண்களில்.
சற்றும் தாமதிக்காமல் காலேஜ் காலத்தில் சொல்லாத காதலை சொல்லி அவளை மணக்கக் கேட்கிறான் தந்தையின் எதிர்ப்பையும் மீறி.
மகளுக்கு ஒரு நல்லது நடந்து விடாதா என ஏங்கும் நாச்சியாரின் தாய் சங்கர கோமதிக்கு பெரும் மகிழ்வாக இருக்கிறது. ஆனால் மகளை ஒப்புக்கொள்ள வைக்கத்தான் இவரால் முடியவில்லை. இதற்கிடையில் அவள் ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாள் என்ற ரகசியம் அவருக்குத் தெரிய வருகிறது இது அவரின் கணவருக்கும் தெரிந்திருப்பதில் மனம் உடைந்து மௌனத்தை ஆயுதமாக எடுத்துக் கொள்கிறார். கணவரிடமும் மகளிடமும் இவர் கேட்கும் கேள்விகள் சரியே இவர் ஆதங்கமும் மிகச் சரி. இவரின் மௌனத்தைக் கண்டு பயப்படுகிறார் இவரின் கணவரும் நாச்சியாரின் தந்தையுமான சங்கரநாராயணன். பாவமாகத்தான் இருக்கிறது அவரைப் பார்த்து. அன்னையின் மௌனத்திற்கு பயந்து திருமணத்திற்கு சம்மதிக்கிறாள் நாச்சியார். இதற்கிடையில் காணாமல் போன சாகித்யாவை கண்டுபிடிக்க வேண்டிய வழக்கு அவளிடம் வருகிறது.
அஜய் கிருஷ்ணன்… அருமையான கதாபாத்திரம் சிரித்துக் கொண்டே அனைவரையும் மயக்கி விடுகிறான் மயங்கியது போலிஸ்ஸம்மா மட்டுமல்ல நாமும் தான்... அனைத்தையும் விளையாட்டுபோலச் சரி செய்து விடுகிறான். மாமியாருடன் கூட்டு சேர்ந்து இவன் செய்யும் அளப்பறைகள் மிக அருமை.
தவமணி இவனின் தாய் பாவப்பட்ட பெண்மணி..
தேவ் யார் என்பது ஆரம்பத்தில் புரியாமல் குழப்பமாக இருந்தது.
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்ந்தது கதை.
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Good luck 🥰❤️
#vsv_15
#வாகை_சூட_வா
#முடிவுற்ற_கதை
#நம்_காதல்_நாணலன்றோ?
Kavi chandra சிஸ்டர் அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
அப்பப்பா பெரிய மாயாண்டி குடும்பத்தார் தான்.. நாயகி என் குடும்பத்தில் ஒரு சிறு ஊரே இருக்க நல்ல வேலையாக நாயகன் குடும்பத்தில் அவன் ஒருவன் மட்டும் தான்.
ஆதி வருனேஸ்வரன்
பொற்றாமரையாழ்
அவனுக்கு யாழ் அவளுக்கு ஈஸ்வர்.
கல்லூரியில் சீனியர் ஜூனியர் ஆக அறிமுகமாகும் இவர்கள் இருவருக்கும் கதை புத்தகத்தால் ஒரு பிடித்தம் வருகிறது.. நாளடைவில் அது காதலாக மாற அவளின் படிப்பு முடிந்தபின் பகிர்ந்து கொள்கிறார்கள் இருவரும் தங்கள் மனதில் உள்ள காதலை... அந்த இடம் மிகவும் அருமையாக இருந்தது 🥰
தாமரையின் அண்ணன்கள் 5 பேர் அவர்களின் மனைவிமார்கள் அவர்களின் பிள்ளைகள் என மிகப் பெரிய குடும்பம். இதில் கடைசி அண்ணனிடம் மட்டும் அதிக பாசம் பெண்ணுக்கு மற்றவர்கள் வயது வித்தியாசத்தால் தந்தையின் ஸ்தானம் பெற்றிருக்க. அண்ணனாக இவனிடம் ஒற்றுதல் அதிகம் அவன் அக்னி வேந்தன். தங்கையோடு இவனின் பாசமும் தங்கை கணவனோடு இவனின் நட்பும் அன்பும் மிக அருமை. 🥰
சிறு சண்டை இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்த காதல் கொண்டு அதை எப்படி சரிப்படுத்திக் கொண்டார்கள் என்பது கதையில்
சிறுவர்கள் அனைவரும் ஒன்று கூடுவதும் ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பதும் மிகவும் நன்றாக இருந்தது.. ஒரு கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்த நிறைவு..
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰❤️
Good luck 🥰 🌹
காலம் தாண்டியும் காதலைத் தேடி கதை அருமை.அப்பாவும் பையனும் காதல் செய்து கைபிடிக்கும் நேரத்தில் அப்பா காதல் மனைவியை தொலைக்க பையன் கிடைக்க அவனை வைத்து கொஞ்சம் மனம் ஆறினாலும் தேடுதல் வேட்டை தொடர்கிறது. பையன் காதலிக்கு தெரியாது காதல் செய்வது இருந்தாலும் அவனோட ஸ்பைசி தேடிக்கொண்டு இருக்கிறான். இதன் இடையில் இனியா பைரவ்கோட்டையில் இருந்து வயதான முரடன் கல்யாணம் போகும் போது அண்ணியின் உதவியால் வீட்டை விட்டு வர அப்பா மித்ரனிடம் அடைக்கலம் ஆக வீட்டுக்கு கூட்டிட்டு வருகிறான். உலகத்தையை ஆள வேண்டும் என்று மார்த்தாண்டன் வில்லன் டைம் டிராவல் செய்து வருகிறான். யாழினி மித்திரனின் காதல் மனைவியை கூட்டிட்டு போனவன் அவன் தான். மித்திரன் தொல்லியல் இருப்பவன் அதனால் அவனுக்கு டைம் டிராவல் மாலை கிடைக்க மித்து மிகிழ் ஸ்பைசி மூன்று யாழினி இடத்துக்கு வர நல்ல சக்தி கெட்ட சக்தி சண்டை மார்த்தாண்டன் காதலுக்கும் மகனுக்கும் போராட மித்திரன் மகிழ் இனியா யாழினி பைரவ்கோட்டை பைரவர் என்று சஸ்பென்ஸ் விடுபட்டு காலம் தாண்டியும் காதலைத் தேடி ஜெயித்து சுபம் ஆகிறது. ஸ்பைசி மகிழ் கல்யாணம் சூப்பர். மகிழ் எல்லாமே கிடைக்க முடிவு அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
#திரா_ஆனந்த்_விமர்சனம்
#வாகை_சூடவா_போட்டி_கதைகள்
#காலம்_தாண்டியும்_காதலை_தேடி
அட அட அட… எனக்கு இந்த கதை ரொம்ப புடிச்சி இருக்கு… ஏன்னா நான் ஒரு fantasy பிரியை… இந்த கதை படிக்கும் போது வேற எத பத்தியும் யோசிக்கலை. Predict பண்ண தோணல…
பர்ஸ்ட் 2 3 அத்தியாயம் கொஞ்சம் குழப்பமா இருந்துச்சி புரிஞ்சிக்க… ஆனா அது சுவாரசியத்தை இன்னும் தான் அதிகம் ஆக்குச்சி… அய்யோ ஒரு ஒரு கதாபாத்திரமும் எதோ நோக்கத்தோடயே இருக்கும். யாரயும் எதுவும் எதுக்குடா இதுனு இருக்காது. அதுவும் யாழ்க்கு வச்ச டிவிஸ்ட் unexpected… நான் கூட ஒப்புக்கு சப்பானியா தான் மித்து கூட அந்த இடத்துக்குனு நினைச்சேன். ஆனா செந்நீர்க்காக… நான் எந்த யாழ சொல்லறேன்னு படிச்சவங்களுக்கு புரியும்.
மார்த்தாண்ட வளவனுக்கு ஒரு இடத்துல விசில் பறக்க விட தோணிச்சு… செம்ம டைலாக்… “நம்ம மனைவி நம்ம குழந்தைனு சொல்லி பழகு” … ஹாஹா… எனக்கு தான் ஒரே பரவசம்… சிரிப்பு… ஏன்னு தான் தெரில… அதுவும் அத்தியாயம் 16லாம் பங்கம்… அந்த அத்தியாயம் செம்ம சூப்பரா இருந்துச்சி… இந்த மகி பையனோட… ஆனா பாவம் சில இளமை காலத்த எல்லாம் மிஸ் பண்ணிட்டான். அப்பறம் பர்சனல் எண்ணம் யாழுக்கும் பழைய இனியாவுக்கும் உரையாடல் வச்சி இருக்கலாமோ!!! மித்து தான் முக்கியம்… இருந்தாலும் அந்த உரையாடல் எப்டி இருக்கும்னு யோசிச்சேன்.
ஆனா நடுவுல ஒரு சின்ன இடம் மட்டும் மிஸ் ஆகிட்ட மாறி feeling… துயிலன், தளிர் பேர கேட்டதும் ஒரு நொடி நிப்பான்ல… அதுக்கு தான் காரணம்/connectivity இல்லாத மாறி ஒரு எண்ணம்… தனியா தெரியாது நான் அத எதிர்பார்த்தால தோணி இருக்கலாம். இல்ல கதாசிரியர் வேணும்னே தான் விட்டு வைச்சாங்களா தெரில…
இன்னும் நிறைய நல்ல மொமன்ட்லாம் இருக்கு.. ஆனா வேற எதுவும் சொல்ல வேண்டாம்… எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்கட்டும்… ஆனா செலவு பண்ணி படிக்கற டைம்க்கு worth ஆ இருக்கும்.
வாழ்த்துக்கள் @vsv28
நன்றி!!!
இங்ஙனம்
திரா ஆனந்த் 🍀
Currently viewing this topic 1 guest.
Recently viewed by users: Ram 1 minute ago.
Latest Post: வாகை சூடவா ரிவ்யூ Our newest member: Ram Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page