All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூடவா ரிவ்யூ

Page 7 / 7
 

Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

 

பரிஜாத மலர் என் கை சேருமா.?

 

 

 

பெற்றோர் இல்லாமல் வளர்கிறார் நம் நாயகி ஆரபி. இவளுக்கு அனைத்தும் ஆசிரமத்தில் உள்ளவர்கள் தான். இவளின் உயிர்த்தோழி ராதிகா.

 

பைரவ் நம் கதையின் நாயகன். இவனின் அத்தை மகன் யுவராஜ். நம் நாயகனின் உயிர்த்தோழனும் கூட.

 

இவர்கள் இருவரும் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அக்குடும்பத்தில் நடக்கும் சூழ்ச்சிகளும் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களையும் இவர்கள் கண்டறிய, அதை முறியடிக்க முயல்கிறார்கள் இருவரும்.

 

இதை அவர்களின் தாத்தாவிற்கும் புரிய வைக்க முயல்கிறார்கள்.

 

அவர் புரிந்துக் கொண்டாரா.?

 

இடையில் ஆரபியும் ராதிகாவும் இவர்களுடன் இணைகிறார்கள். அவர்கள் ஏன் இவர்களுடன் இணைய வேண்டும்.?

 

சூழ்ச்சிகளை முறியடித்தார்களா.?

 

யுவராஜ் ஏன் ஆரபிக்கு உதவுவதாக வாக்களித்தான்.?

 

நம் நாயகனுக்கு இருக்கும் குறை என்ன.? அவனுக்கு ஏற்கனவே திருமணமாகியும் விட்டிருந்தது. அவனின் முதல் மனைவி என்ன ஆனாள்.? 

 

ஆரபியும் ராதிகாவும் இறுதியில் என்ன ஆனார்கள்.?

 

அரச குடும்பத்தில் நடக்கும் சூழ்ச்சிகளும் முறியடிக்கப்பட்டதா.?

 

பல சுவாரஸ்யமான தகவல்களுடன் கதைக்களம் பயணிக்கிறது. இது பெரிய கதை..

 

ஆனால் கதை நகர்ந்த விதம் தொய்வில்லாமல் சென்றது

.கதையும் அருமை..

 

போட்டியில்

வெற்றி பெற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

செந்தணல் தாரிகையே

 

 

 

நம்ம நாச்சியார் அதிரடி போலீஸ்.. இவ அம்மா இவளைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்ல, அவளோ மறுக்கிறாள்.. இந்த மறுப்பிற்கான காரணம் தான் என்ன.?

 

அதனால் இவளின் தந்தை ஸ்ரீ க்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். மாப்பிள்ளையாக வருகிறான நம்ம நாயகன் அஜய்.

 

இவன் நாச்சியைத் தான் கல்யாணம் பண்ணுவேனு சொல்ல, ஸ்ரீ யும் கவலைப்படவில்லை. காரணம் அவளின் காதலன் கார்த்தி.

 

நாச்சி ஏன் அஜயை வேணாம் என்கிறாள்.? அவனும் விட்டு விட்டானா.?

 

இதற்கிடையில் சாஹியின் வழக்கு நம்ம நாச்சியார் கையில்.. 

 

விறுவிறுப்பாக நகர்கிறது..

 

என்ன இருந்தாலும் சாஹிக்கு இப்படி நடந்திருக்க வேணாம்.. அது ரொம்ப வருத்தமா இருந்துச்சு..

 

தேவ் வருகிறான். அது யார்.? அவனுக்கும் நாச்சியாருக்கும் என்ன சம்பந்தம்.? அஜயின் காதல் நிறைவறியதா.? நாச்சியாரின் திருமண வெறுப்பிற்கான காரணம் தான் என்ன.?

 

இறுதியில் இருவரும் இணைந்தார்களா.? என்ற பல டிவிஸ்ட்டுகளுடன் சுவாரஸ்யமாக நகர்ந்தது கதை..

 

நீங்கள் போட்டியில் வெற்றி பெ

ற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

வட்டிக்காரனின் வசியக்காரியவள்

 

 

 

அழகான கதை.. நம்ம வட்டிக்காரனின் வசியக்காரி தான் நம் நாயகி.. 

 

வசி நம் நாயகி.. பெற்றோர் இல்லாமல் சித்தி சித்தப்பாவுடன வளர்கிறாள்.

 

இவர்கள் வசி மீது காட்டும் பாசத்தில் அவர்களின் மகள் பொறாமை கொள்ள, அதற்கு தூபம் போடுவது போல் அவளின் பாட்டியின் செயலும் அமைகிறது. இவள் சிறு வயதில் அனுபவித்த கொடுமைகள் எல்லாம்🤧🤧🤧 

 

எல்லாம் கிழவினு ஒன்னு இருக்கு அதனால தான்.. 

 

வசி விலகி நின்னாலும் அவங்க சித்தி சித்தப்பா தன் கடமைகளைச் சரி வர செய்கிறார்கள்.

 

வசி அனுபவித்த கொடுமைகளுக்கு எல்லாம் பலனாக நம் வேந்தன் அவளை கரம் பிடிக்கிறான்.

 

இவனின் சேட்டைகள் ரசிக்கும்படியாக இருந்தது. இவனின் குடும்பம் 😍😍😍😍🤩🤩 

 

வசி அனுபவித்த வலிகளுக்கு வேந்தனின் குடும்பம் கிடைத்தது வரம்..  

 

 

கதை படிக்க நல்லா இருந்துச்சு..

 

நீங்கள் போட்டியில் வெற்றி பெ

ற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

என்றென்றும் அன்புடன் சந்தனா 

 

 

 

போட்டியில் படித்த முதல் கதை.. ஆனால் இப்போது தான் விமர்சனம் எழுத முடிந்தது.

 

நம்ம சந்தனா இருக்காளே சந்தனா கதையின் பெயரை போலவே அன்புடன் சந்தனா தான்.. சந்தனாவே தான்..

 

இவ டாக்டர்.. இவளும் இவ பையனும் தனியாக இருக்க, இவளோட கணவன் யார்.? என்று குழப்பத்துடனே நகர்கிறது கதைக்களம்.

 

நம்ம மனோக்கு காலுல அடிப்பட்டதுல எல்லாரு மேலயும் கோவத்தைக் காட்டறான்..இவனைக் கண்டு குட்டி பயந்து பின்வாங்க.. ஒரு கட்டத்துல மனோக்கு குட்டி மேல பாசம் பொங்க.. கதையும் சுவாரஸ்யமா நகர்கிறது.

 

இடைல வந்த தீனா யாரு.? 

 

ரஞ்சன் சோபி தம்பதி சந்தனாவை பார்க்க வர்றாங்க.. அவங்க யாரு.? எதுக்கு சந்தனாவைப் பார்க்க வரணும்.? அவங்க மூலமா என்ன உண்மை வெளில வந்துச்சு.? சந்தனாவோட கணவன் யாரு.?

 

என்ன தான் நம்ம சந்தனா சிரிச்சுட்டே இருந்தாலும் அவளுக்குள்ளும் சொல்ல முடியாத வலியும் வருத்தமும் இருக்கவே செய்கிறது.

 

காதலித்தவன் எனக்காக காத்திரு என்று விட்டு செல்ல, இவளும் அவனுக்காக காத்திருக்க... நடந்ததோ வேறு.

 

அப்படி என்ன தான் நடந்தது.? 

 

உண்மை தெரிஞ்சதும் தீனா அமைதியா இருந்துருக்கலாம்.. இது பாதிக்கப்பட்டது சோபி மட்டும் தான்..  அவ அன்புக்கு மதிப்பே இல்லாம போய்ருச்சு..

 

கதை நல்லா இருந்துச்சு.. விறுவிறுப்பாகவும் நகர்ந்துச்சு..

 

நீங்கள் போட்டியில் வெற்றி

பெற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

 

 

மனதில் நின்றவள் 

 

 

சாதாரண ஃபீல் குட் ஸ்டோரி..

 

சகஸ்தா - ரிஷி வேலை விஷயமாக தன் அத்தை வீட்டிற்கு வருகிறாள் நம் நாயகி.

 

அவளின் மேல் காதல் கொள்கிறான் ரிஷி.. இவன் வேறு யாருமில்லை சகஸ்தாவின் அத்தை மகன் தான்..

 

ஆனால் ஆடவனின் காதலை பெண்ணவள் மறுக்கிறாள். 

 

அது எதனால்.?

 

கடந்த காலத்தில் இவளுக்கு என்ன நடந்தது.?

 

அவள் மறுத்தும் ரிஷி அவளை விட்டு விட்டானா.? இல்லையே அவனின் அதிரடியில் பெண்ணவளின் மனது மாறியதா.? இல்லை அவனை ஏற்காமல் மறுத்தாளா.?

 

பெயர்கள் அருமை.. கதை நகர்ந்த விதமும் அருமை.. 

 

நீங்கள் போட்டியில் வெற்றி பெ

ற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review 

 

சில்லாஞ்சிறுக்கியே!

 

 

 

கதை மிகவும் அருமை..

 

யாஷ் மற்றும் தமிழ் அருமை.. 

 

தன் கிராமத்தில் டீ கடை வைத்து நடத்தி வருகிறாள் தமிழ். இவளின் நண்பன் நேத்ரன்.. இவளுக்குத் துணையாக கடையில்  வேலை செய்யும் பெண் தேன்மொழி... இவளுக்கு கைக்குழந்தை ஒன்றும் இருக்கிறது.. கணவன் இல்லை.

 

தமிழ் மொழியின் மீது பற்றுக் கொண்ட காரணத்தில் அவ்வூருக்கு வருகிறான் நம் நாயகன். வந்ததும் தமிழ் மற்றும் யாஷின் பேச்சுக்கள் 😂😂😂🤣🤣🤣

 

யாஷின் அடாவடித்தனம் ரசிப்பாக இருந்தது. இவனும் தமிழும் சேர்ந்து வரும் இடங்கள் எல்லாம்🤩🤩😍😍😍

 

தேன்மொழியின் மீது நேத்ரன் காதல் கொள்ள, அவள் மறுக்க, ஆனால் ஒரு பிரச்சனையில் அவளைக் கைபிடிக்கவும் செய்கிறான்.

 

இவனின் இல்லாத அண்ணன் வசனங்கள் எல்லாம் 🤣😂😂😂

 

தமிழும் யாஷின் மீது காதல் கொள்கிறாள்.

 

ஆனால் ஒரு விசயத்தில் அவள் தடுமாறி நிற்க, அது என்ன விசயம்.? அவளின் தடுமாற்றம் எதனால்.?

 

அவளின் காதல் நிறைவேறியதா.? யாஷூம் அவளின் கரம் பிடித்தானா.? என்பது கதையில்.

 

தமிழும் யாஷூம் மனதில் நின்று விட்டார்கள்..

 

நீங்கள் போட்டியில் வெற்றி

பெற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 1 month ago
Posts: 17
 

Sahi review

 

கள்விழி மயக்கம்

 

 

ப்ரஜித் சஜித் இருவருக்கும் ஏற்படும் மோதலில் பிசினஸை விட்டு சஜித் விலகி கண்காணாத இடத்திற்குச் செல்ல, இதனால் கோவமாகிறான் ப்ரஜித்.

 

அன்னையிடம் கண்டிப்பாக தம்பியைக் கண்டுபிடித்து விடுவேன் என்று ப்ரஜித் சத்தியம் செய்து விட்டு சஜித்தை வெளிகொண்டு வர அவன் மிகவும் விரும்பும் தொழிலை நாசமாக்க முயல்கிறான் ப்ரஜித்.

 

தன் மனைவி ரபேக்காவையும் வேணாம் என்று விவாகரத்து செய்ய ப்ரஜித் முயல, ரபேக்காவை ரோல்மாடலாக கொண்டு கோகிலா அவளிடம் வேலைச் செய்ய மும்பை வருகிறாள்.

 

இவள் எப்படி சஜித்திற்கு ஜோடியானாள்.?

 

ப்ரஜித் ரபேக்காவை விவாகரத்து செய்து விட்டு வேற பெண்ணைத் திருமணம் செய்தானா.?

 

சஜித் ஏன் தலைமறைவாக வேண்டும்.?

 

தலைமறைவானாலும் இளவேந்தனின் உதவியுடன் தன் தொழிலைத் தூக்கி நிறுத்த முயல்கிறான்.

 

யார் இந்த இளவேந்தன்.? இவனின் உதவியுடன் தான் கோகிலா மும்பைக்கு வந்ததே.. இவனுக்கும் கோகிலாவுக்கும் என்ன சம்பந்தம்.?

 

கதையின் இடையில் வரும் துகிரா யார்.? அவளின் ஜோடி யார்.?

 

ப்ரஜித் அன்னையிடம் கூறியபடி தன் தம்பியை அவரின் முன்னால் நிறுத்தினானா.? மனைவியுடன் இணைந்தானா.?

 

இப்படி பல டிவிஸ்ட்டுகளை உள்ளடக்கிய கதை இது.

 

சற்று பெரிய கதை தான்.. ஆனால் பொறுமையுடன் படித்தால் சுவாரஸ்யமாகவே செல்லும்..

 

கதையின் போக்கும் அருமை..

 

போட்டியி

ல் வெற்றி பெற வாழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 49
 

@sahi-varun வாவ்... உங்க விமர்சனம் படிச்சதில்.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..

 

மிக்க மிக்க நன்றி 🥰 🙏 

 

உண்மையான அடையாளத்துடன் நானும் உங்களுடன் பேச விழைகிறேன் 


   
ReplyQuote
VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 40
 

@sahi-varun Thank you so much sis 😍 😍 😍


   
ReplyQuote
VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 29
 

@zeenath

மிக்க நன்றி சிஸ்டர்😍😍


   
ReplyQuote
VSV 31 – மனதில் நின்றவள்
(@vsv31)
Trusted Member Author
Joined: 7 months ago
Posts: 29
 

@sahi-varun 

மிக்க நன்றி சிஸ்டர் 😍 


   
ReplyQuote
VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 54
 

@sahi-varun தாங்க்யூ சோ மச் சிஸ் 🥰🥰🥰


   
ReplyQuote
Page 7 / 7

You cannot copy content of this page