All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

[Sticky] " உயிருள்ளவரை யான் உனதே!"

Page 3 / 3
 

VSV 52 - உயிருள்ளவரை யான் உனதே!!
(@vsv52)
Member Author
Joined: 3 months ago
Posts: 40
Topic starter  

அத்தியாயம் 29 :

" எதுக்காக மூணு பேரும் இவ்வளவு காலையிலேயே எந்திரிச்சு வந்தீங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி இருக்கலாமே.. " என்று அன்பொழுக கேட்டார் சீதா.

" இல்லை சீதாம்மா.."என்று தன் நாக்கை வெளியில் நீட்டி கடித்துக் கொண்டவள் " சாரி சாரி அத்தை.. நான் எப்பவுமே இந்த நேரத்துக்கு எழுந்து பழக்கமானதால எனக்கு தூக்கம் வரல.. " என்றாள்.

" எதுக்காக இப்படி தடுமாறுற தென்றல்.. சாரிமா எங்க வீட்ல இருக்க யாருக்குமே உனக்கு வச்ச அந்த பேர விட இந்த பெயர்தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனால என்னடா நம்ம ஒரிஜினல் பேரை சொல்லி கூப்பிடாம இந்த பேர் சொல்லி கூப்பிடுறாங்கன்னு என்கிட்ட கோச்சுக்க கூடாது.. "

" பெயர்ல எந்த பெயராக இருந்தால் என்ன அத்தை? உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படியே கூப்பிடுங்க.. "

" அதே தாண்டா நானும் உனக்கு சொல்றேன் எப்பவும் போல சீதா அம்மான்னே கூப்பிடு.. இதுவரைக்கும் நீ யாரும் இல்லாமல் பட்ட கஷ்டம் எல்லாம் போதும் இனிமேலும் நீ கஷ்டப்படக்கூடாது.. " என்றவரை கண்கள் பனிக்க பார்த்தாள்.

" எனக்கு தூக்கம் வந்துச்சுமா.. என் புருஷன் தான் முதல் நாளே குடும்ப பொறுப்பாக இருக்கனும்னு என்னை அனுப்பி வச்சிட்டார்.." என்று குற்றப்பத்திரிகை வாசித்தாள் ரேணுகா.

" ரேணுகாவது பரவாயில்லை என் புருஷன் இருக்காரே காலையில நாலு மணிக்கு எந்திரிச்சு நான் அவருக்கு டீ போட்டு கொடுத்து தான் இனிமே எழுப்பனும்னு ஒரே போட போட்டுட்டார்.. " என்றாள் சுரேகா.

" பரவாயில்லையே அண்ணி இவங்க ரெண்டு பேர் புருஷனும் நல்லா தான் இவங்க ரெண்டு பேரையும் வேலை வாங்குறாங்க நம்மளை தான் இது ரெண்டும் ஏச்சிகிட்டு போச்சு.. நம்மள ஏமாத்தறாத மாதிரி இனிமே அவங்க அவங்க புருஷனை ஏமாத்த முடியாது.. "எனவும் சீதா தன் மகள் மருமகள் இருவரையும் கண்டு வாய் விட்டு சிரித்தார்.

" ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு எங்க ரெண்டு பேரையும் ரொம்ப ஓவரா தான் கலாய்க்கிறீங்க.. " என்று பெண்கள் இருவரும் ஒன்றாக தங்களது அம்மாவை குற்றம் சாட்ட, அதையெல்லாம் கண்களில் ஓரத்தில் சிறு நீருடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.

பெண்கள் நால்வருக்குமே அவளது நிலைமை புரிந்தது.

இந்த உலகத்திலேயே விலை கொடுத்து வாங்க முடியாத ஒரே சொத்து தாய் பாசம் மட்டுமே.

" ரெண்டு பேரும் போங்கடி அந்த பக்கம் இனிமே உங்க ரெண்டு பேருக்கும் இந்த வீட்டில செல்லம் கிடையாது எங்க ரெண்டு பேருக்குமே இனி செல்லம் எங்களோட தென்றல் மட்டும்தான்.. அவளுக்கு அடுத்து எங்க ராகுல் செல்லம் ரெண்டு பேருக்கும் மட்டும்தான் இனிமேல் இந்த வீட்டில் முன்னுரிமை நீங்க எல்லாம் அங்கிட்டு போங்க.. " என்றார் லட்சுமி.

" போதும் போதும் ரொம்ப பண்ணாதீங்க நாங்க போறோம்.. " என்று சுரேகா அங்கிருந்து அழுது கொண்டே போவது போல் பாவ்லா செய்ய, தென்றல் சிரித்து விட்டாள்.

" அம்மாடி இப்பவாவது சிரிச்சியே பெண்ணே.. " என்ற சுரேகா வராத வியர்வை வழிந்து துடைத்தெறிந்தாள்.

" ரொம்ப ஓவரா பண்ணாதடி.. "என்றாள் ரேணுகா.

அதையும் ஒரு சின்ன சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.

" இனிமேல் நீங்களும் எங்களோட ஐக்கியம் ஆயிக்கோங்க அண்ணி.. " என்றாள் ரேணுகா மரியாதையாக.

" எதுக்கு இந்த மரியாதை எல்லாம் எப்பவும் போல என்னை பேச சொல்லி கூப்பிடு ரேணுகா.. "

" என்னதான் இருந்தாலும் நீங்க என்னோட அண்ணன் மனைவி நமக்கு கிராமத்துல நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குது என்னோட அண்ணி நீங்க தானே.. அதேபோல சுரேகாவும் எனக்கு இனிமேல் அண்ணி தான்.. கார்த்திக் அண்ணனும் இனி எனக்கு அண்ணன் மாதிரி தான்.. " என்றவளை யாவரும் ஒரு புன்னகையோடு பார்த்தார்கள்.

" ரொம்ப ஆச்சரியமா இருக்குது தென்றல் நான் உன்னை எவ்வளவோ பேசி இருக்கேன் உன்னால என்னை எப்படி மன்னிக்க முடிந்தது.. " என்று நம்ப முடியாமல் கேட்டாள் சுரேகா.

அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்த தென்றல் எதுவும் பேசவில்லை.

" ப்ளீஸ் தென்றல் எதுவா இருந்தாலும் நாம இன்னைக்கு பேசி முடித்து விடலாம்.. " என்று கெஞ்சி கேட்டவளைக் கண்டு கண்களின் ஓரத்தில் வந்த கண்ணீரை சுண்டி எறிந்த தென்றல் பேச ஆரம்பித்தாள்.

" நெஜமாலுமே நீங்களும் சரி விஷ்ணுவும் சரி என்னை எப்ப பார்த்தாலும் அசிங்கப்படுத்துவது மாதிரியே பேசிக்கிட்டே இருப்பீங்க.. அப்பல்லாம் எனக்கு இந்த வீட்ல இருக்கணுமா? வீட்டை விட்டே போயிடலாம்னு தோணும் ஆனா நான் பூமாதேவி பாட்டிக்கு என்ன நடந்தாலும் இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்னு சத்தியம் பண்ணி கொடுத்தேன்.. எனக்கு தங்கச்சி யாரும் இல்ல உன்னை நான் என்னோட தங்கச்சியா தான் பார்த்தேன் சுரேகா அதனால தான் நீ எது பேசினாலும் எனக்கு கோபம் வரல.. ஆனா அதுக்காக முழுசா கோபம் வரலன்னு சொல்ல முடியாது நீங்க ரெண்டு பேருமே என்னை அளவுக்கு அதிகமா கஷ்டப்படுத்தி இருக்கீங்க.. அதையெல்லாம் யோசிச்சு நான் இந்த வீட்டை விட்டு போயிருந்தால் இதோ இப்போ எனக்கு இந்த சந்தோஷமான தருணங்கள் எல்லாமே கிடைக்காமலேயே போயிருக்கும்.. எனக்கு இப்பவும் உங்க ரெண்டு பேர் மேலயும் கோபம் கிடையாது ஆன மனசு ஓரத்தில் ஒரு சின்ன வருத்தம் இருக்கு அது கண்டிப்பா போகப் போக மாறிடும்.. " என்றவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் சுரேகா.

" ரொம்ப ரொம்ப சாரி தென்றல் என்னதான் இருந்தாலும் நான் அப்படி எல்லாம் பேசி இருக்க கூடாது உன்னை ராசி கெட்டவள் அத்தான கல்யாணம் பண்ணிக்க போற அப்படி இப்படின்னு சொல்லி நிறைய திட்டி இருக்கேன் எல்லாத்தும் காரணம் நான் விஷ்ணு அத்தான் மேல வச்ச பாசம் தான்.. " என்று மீண்டும் மன்னிப்பு வேண்ட, அந்த இடத்தில் கனத்த சூழ்நிலை நிலவுவதை கண்ட ரேணுகா பேச்சை மாற்றினாள்.

"யப்பா.. இவங்க ரெண்டு பேரோட மன்னிப்பு போராட்டம் என்னைக்கு தான் முடியுமோ தெரியல காலையிலேயே இதைத்தான் பாக்கணும்னு தெரிஞ்சு இருந்தா நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சுட்டு அப்புறம் கூட வந்து இருப்பேனே.." என்று ரேணுகா காற்றில் கையை அசைத்து தலையை தட்டி விடுவது போல் நடிக்க அந்த இடமே கலகலப்பாக மாறியது.

அந்த நிமிடம் அங்கிருந்த பெண்கள் அனைவருமே இனிமே இது போல் எந்தவிதமான சூழ்நிலையும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ஆண்கள் மூவரும் தங்கள் மனைவிமார்களை பார்ப்பதற்காக வந்தவர்கள் தென்றல் பேசியதை கேட்டு மனம் வலிக்க நின்று கொண்டிருந்தார்கள்.

ஐவரும் பேசி சிரித்து கொண்டிருப்பதை கண்டு சப்தம் செய்யாமல் மூவரும் தனியாக வந்தார்கள்.

" கேட்டியா விஷ்ணு நீ எந்த அளவுக்கு தென்றல் மனசை காயப்படுத்தி இருக்கேன்னு.. அது எதையும் நீ உன் சுயநினைவு இல்லாத போது தான் செஞ்ச அத பத்தி நீ பேச வேண்டாம் இனிமேலாவது அவளை நல்லபடியா பார்த்துக்கோ பாவம் அந்த பொண்ணு.. " என்றதும் கலங்கிய கண்களை மறைத்துக் கொண்டான் விஷ்ணு.

" ஆமாம் மச்சான் இனிமே அந்த பொண்ணு எனக்கு ஒரு தங்கச்சி மாதிரி தான்.. சுரேகாவுக்கு செய்ற அத்தனையும் இனிமே என்னோட தங்கச்சி பிரகல்யா வேண்டாம் வேண்டாம் அத்தை சொன்னது மாதிரி தென்றலுக்கு கண்டிப்பா நான் செய்வேன் இனிமே அந்த பொண்ணு எதுக்காகவும் கஷ்டப்படக்கூடாது.. " என்றான் விஷ்வா.

" கண்டிப்பாடா இனிமே நான் என் மனைவியை கஷ்டப்படுத்துவது மாதிரி எதையும் செய்ய மாட்டேன் அவள் என்னோட தேவதை.. என்னோட தேவதை எப்பவுமே சந்தோஷமா தான் இருக்கணும் அவளை எப்பவுமே இனி நான் கஷ்டப்படுத்தவே மாட்டேன் உங்க ரெண்டு பேருக்கும் நான் சத்தியம் பண்ணி தரேன்.. " எனவும் ஆண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் நெகிழ்ச்சியாக அணைத்துக் கொண்டார்கள்.

இப்படி ஆண்களும் பெண்களும் பேசுவதை அவர்களுக்கே தெரியாமல் கேட்டுக் கொண்டிருந்த மாரியப்பனுக்கும் பூமாதேவிக்கும் தங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் இதே மகிழ்ச்சியோடு என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு மனநிறைவோடு பார்த்தார்கள்.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு,

" இவனுக்கு மட்டும் எப்படி தான் அன்லிமிடெட்டா குழந்தைகள் வந்துகிட்டே இருக்குதுன்னு தெரியலடா.." என்று கார்த்திக் விஷ்வாவுடன் சேர்ந்து விஷ்ணுவை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

அவனோ இவர்கள் இருவரையும் கண்டு கொள்ளாமல் உள்ளே பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த தென்றலை கதவுக்கு வெளியில் நின்று பதட்டமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அங்கு அமர்ந்திருந்த சீதா ராகுலை வைத்துக் கொள்ள பக்கத்திலேயே சமத்தாக அமர்ந்திருந்தார்கள் ராகுலின் தங்கை இரட்டையர்களான சைந்தவியும் வைஷ்ணவியும். அவர்களுக்கு அடுத்தபடியாக பிறந்த சந்திரனை பூமாதேவி வைத்துக்கொள்ள இப்பொழுது அவள் தனது அடுத்த வாரிசை தான் இந்த உலகிற்கு கொண்டு வர முயற்சி செய்தவள் அதில் வெற்றிகரமாக அழகான ஒரு பெண் தேவதையை மீண்டும் ஈன்றெடுத்தாள்.

அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு தான் வெளியில் நின்று கொண்டிருந்த விஷ்ணுவுக்கு மூச்சு வந்தது.

அவனை வாரிக் கொண்டிருந்த கார்த்திக்கின் காலை சுரண்டினான் அவனது மகன் ரித்விக். மகள் தான்யாவை சுரேகா வைத்திருந்தாள்.

ரேணுகா ஒரே பிரசவத்தில் ஆண் பெண் என்று இரட்டைக் குழந்தைகளை பெற்று கொண்டவள் இதற்கு மேல் முடியாது என்று விஷ்வாவிடம் உறுதியாக சொல்லிவிட, அவளுக்கு முதலில் கள்ளத்தனமாக சம்மதம் சொன்ன விஷ்வா ரேணுகாவை ஏமாற்றி இப்பொழுது அவளது வயிற்றில் ஐந்து மாத கரு இருந்தது.

அவளுடைய குழந்தையை லட்சுமியும் இந்திரனும் வைத்துக்கொள்ள ரேணுகா வயிற்றிலிருந்த குழந்தை அவளை பாடாகப்படுத்தி அடிக்கடி வாந்தி வரவைக்க, வீட்டிலேயே இரு என்று அவளது தாய் கணவன் இருவரும் சொல்ல அதை எல்லாம் கேட்காமல் தென்றலுக்கு குழந்தை பிறக்கும் போது தானும் அங்கிருக்க வேண்டும் என்று அடம் பிடித்து வந்திருந்தாள்.

கார்த்திக்கின் குழந்தை அவனை பிடித்துக் கொள்ள விஷ்வா வாந்தி எடுத்துக் கொண்டிருந்த மனைவிக்கு துணையாக சென்று விட்டான்.

தென்றலுக்கு குழந்தை பிறந்ததும் குழந்தையை கொண்டு வந்து அவளது கணவனிடம் கொடுக்க, மூன்று குழந்தைகளை அவன் தனது கைகளில் வாங்கியிருந்த போதும் ஐந்தாவது குழந்தையையும் முதல் குழந்தை ஏந்துவது போலவே ஏந்தி அதன் நெற்றியில் முத்தம் பதித்தான்.

குழந்தையை பக்கத்தில் நின்ற தகப்பனிடம் கொடுத்துவிட்டு டாக்டரை பார்க்க அவரோ எப்போதும் போல் இவனை உள்ளே அனுமதித்து விட்டார்.

உள்ளே நுழைந்தவன் அங்கு தன்னை பார்த்துக் கொண்டிருந்த மனைவிக்கு முத்தத்தை பரிசாக கொடுத்தான்.

" இத்தோட போதும்மா என்னால இதுக்கு மேல நீ படுற வேதனையை பார்க்க முடியாது ப்ளீஸ்.. "

" இந்த வாட்டி உங்க பேச்சை கேட்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் எனக்கும் முடியல.. "

" இதைத்தான் நானும் இரண்டாவது குழந்தை
பிறந்த போது சொன்னேன் கேட்காமல் இப்ப இத்தனை குழந்தைகளை பெத்துகிட்ட.. "

" நான் ஒரு பிள்ளையாய் பிறந்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன் விஷ்ணு.. உங்களுக்கு தெரியாது ஒரு பிள்ளையாய் இருக்கிறவங்களுக்கு ரொம்பவே கஷ்டம் அதுலயும் எனக்கு அம்மா கிடையாது.. ஆனா நம்ம குழந்தைகளுக்கு அப்படி ஒரு சூழ்நிலை வரக்கூடாது அவங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கணும் அவங்களை வளக்கறதுக்கு அவங்க அத்தை மாமா சித்தி சித்தப்பா பாட்டி தாத்தா அம்மாச்சி அப்பத்தா எல்லாரும் இருக்காங்க.. இது எல்லாமே என்னோட சந்தோஷத்துக்காக மட்டும்தான்.. " என்றவளை புன்னகையோடு மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

தென்றல் வீட்டுக்கு நல்லபடியாக வந்து சேர, அவளை வாஞ்சையாக பார்த்தார் பூமாதேவி.

" உன் ஒருத்தியால தான் இந்த குடும்பமே இவ்வளவு நல்லா வளர்ந்து இருக்கு தென்றல்.. எனக்கு அடுத்தபடியாக என்னோட குடும்பத்தை நீ நல்லபடியா பாத்துக்குவங்குற நம்பிக்கை இருக்குதும்மா.. " என்றவருக்கு ஒரு புன்னகையை எப்போதும் போல் பதிலாக கொடுத்தாள் தென்றல்.

அங்கிருந்த யாருமே இது அவர்களது குழந்தை என்று பிரித்துப் பார்க்காமல் அனைத்து குழந்தைகளையும் ஒன்றாகவே வளர்த்தார்கள்.

அனைத்து குழந்தைகளும் அனைவரையுமே தாய் தந்தை என்றே அழைத்தார்கள்.

இந்த ஐந்து வருடத்தில் பிரகல்யா கன்ஸ்டிரக்ஷனை நாடு முழுவதும் நிறுவி இருந்தான் விஷ்ணு.

அவனுக்கு உறுதுணையாக சுரேகா கார்த்திக் இருவருமிருக்க அவனால் அதை எளிமையாக சாதிக்க முடிந்தது.

தென்றல் பிசினஸ் பொறுப்புகள் முழுவதையும் அவர்கள் மூவரிடம் ஒப்படைத்துவிட்டு அவள் ஆசைப்பட்டது போலவே ஒரு நல்ல குடும்ப இல்லத்தரசியாக தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ள, ரேணுகாவும் வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் தென்றலுடன் இருக்க குழந்தைகள் அனைவரையும் அவர்களது பெற்றோர்களின் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள ( கார்த்திக் பெற்றோரையும் சேர்த்தே) அவர்களைப் பார்த்துக் கொள்வது அவர்களது பெற்றோர்களான பூமாதேவி மாரியப்பன் வேலையாகிப் போனது.

குழந்தை பிறந்து 16 நாட்கள் கடந்திருக்க குழந்தைக்கு " பூமாதேவி " என்று பெயர் வைத்திருந்தாள் தென்றல்.

தனது பெயரை தனது குல வாரிசுக்கு வைத்த தென்றலை கண்களில் நீர் ஒழுக பார்த்த பூமாதேவியை இறுக்கமாக அணைத்துக் கொண்ட தென்றல் " என் வாழ்க்கைல இது எதுவுமே இல்லனு நான் நினைச்சுகிட்டு இருந்தபோது அத்தனையும் இன்னிக்கு எனக்கு கிடைத்தது உங்க ஒருத்தவங்கனாலே மட்டும் தான்.. எப்பவுமே எனக்கு முதல் அம்மா நீங்க மட்டும் தான்.. " எனவும் அந்த நெகிழ்ச்சியான தருணத்தை கேமரா தனக்குள் உள்வாங்கிக் கொண்டது.

குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நல்லபடியாக முடிந்ததும் குடும்பத்தின் மூத்த மருமகளாக பெயர் சூட்டு விழாவிற்கு வருகை புரிந்திருந்த ஊர் மக்களை பார்த்து பார்த்து கவனித்துக் கொண்ட தென்றலை வந்திருந்தவர்கள் யாவரும் மனமார பாராட்டி விட்டுச் செல்ல, எப்போதும் போலவே ஆசை மனைவியை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

அவள் பிறந்தது முதல் அவனுக்கு உண்மை தெரியும் வரை அவள் பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் சேர்த்து இந்த ஐந்து வருடங்கள் அவளுக்கு நிம்மதியையும் காதலையும் சந்தோஷத்தையும் ஊட்டி ஊட்டி வளர்த்தான்.

அவன் பார்வையில் எப்போதும் போல் நாணம் கொண்டாள் தென்றல்.

எப்போதும் போலவே அவர்கள் இருவரையும் கூட இருந்த இரண்டு ஜோடிகள் வார, அவர்களது பிள்ளைகளும் அவர்களோடு சேர்ந்து கொள்ள அந்த இடமே மிகவும் கலகலப்பாகிப் போனது.

" எல்லாரும் வாங்க நம்ம வீட்டுக்கு புதுசா ஒருத்தர் வந்திருக்காங்க எல்லாரும் சேர்ந்து குடும்பமா ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.. " என்று விஷ்வா எல்லோரையும் அழைக்க அனைவரும் ஒன்றாக நிற்க ஒவ்வொரு குழந்தையும் பிறந்த பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்வது போலவே இந்த முறையும் கேமரா அவர்களை அழகாக தனக்குள் உள்வாங்கிக் கொண்டது.

விஷ்ணுவரதன் தன் பக்கத்தில் நின்ற பிரகல்யா காதுக்குள் " உயிர் உள்ளவரை யான் உனதே!!" என்று முணுமுணுக்க எப்போதும் போல் அழகான புன்னகையை உதிர்த்தாள்.

குடும்பம் என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அதில் பல பிரச்சனைகள் சண்டை சச்சரவுகள் என்று அனைத்தும் இருக்கும்.

இவர்கள் குடும்பத்திலும் வருங்காலத்தில் அப்படி சண்டைகள் ஏதாவது வந்தாலும் அத்தனையும் தாண்டி மனக்கசப்பின்றி இதே போல் என்றும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தலாம்.

எப்போதும் போல் இவர்கள் இதே புன்னகையோடு இருக்க வேண்டும் என்று வேண்டி நாமும் வாழ்த்தி விடை பெறுவோமாக.


   
ReplyQuote
VSV 52 - உயிருள்ளவரை யான் உனதே!!
(@vsv52)
Member Author
Joined: 3 months ago
Posts: 40
Topic starter  

ஹாய் பிரண்ட்ஸ்,

 

 கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்து விட்டோம். கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை பயணித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

 

 கதையை முழுவதுமாக படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் எனக்கு மேலும் ஊக்கமாக இருக்கும்.

 

 உங்களது கருத்துகள் தான் இந்தக் கதைக்கு நான் செலவிட்ட நேரத்திற்கான வெகுமதி எனக்கு. இந்த கதை நிச்சயம் உங்கள் மனதிற்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு மூன்று முறை எழுத்துப் பிழைகள் மீண்டும் சரிபார்த்து விட்டு தான் போட்டேன் அதையும் மீறி சில எழுத்துப் பிழைகள் தென்பட்டன. எழுத்துப் பிழைகள் ஏதாவது தென்பட்டால் அது உங்களுக்கு படிக்க இடைஞ்சலாக இருந்தால் சாரி. 

 

 தளத்தில் எழுத வாய்ப்பளித்த Kavi Chandra மேடம்க்கு மனமார்ந்த நன்றிகள். 

 

 சக எழுத்தாளர்களும் தங்கள் கதைகளை வெற்றிகரமாக முடிக்க எனது வாழ்த்துக்கள்.

 

வாய்ப்பிருந்தால் மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போம் நன்றி.

 

UYU-28,29

 

https://kavichandranovels.com/community/postid/964/

 

 

 

கருத்து திரி 

 

 

 

nity/postid/463/ https://kavichandranovels.com/community/postid/513/

 


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page