About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் ஒன்று:
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான முற்றம் வைத்த அந்த வீட்டில் வாயிலுக்கு முன்பாக இருந்த மாமரமும் அதன் அருகிலிருந்த வேப்பமரமும் அந்த வீட்டிற்கு இன்னும் அழகு சேர்ப்பதாக அமைய, வீட்டின் வலது பக்கம் இருந்த தென்னை கன்றுகளும் அதனருகில் உன்னை பார்த்து வளர்கிறேன் என்று தழைத்து செழித்திருந்த வாழை மரங்களும் கீழேயே உன்னை பார்த்து பார்த்து பூக்கிறேன் என்று அழகழகாக பூத்திருந்த விதவிதமான பூக்களும் என்று இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த வீட்டையும் அதில் சுற்றி இருந்த மரங்கள் செடிகள் கொடிகள் வகைகளையும்.பார்ப்பதற்கு அத்தனை ரம்மியமாக இருந்தது அந்த வீட்டின் சூழல்.
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் அருளைத் தரும் பிள்ளையார்
ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலவனின் அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் தீர்த்து வைக்கும் பிள்ளையார்
என்று தனது கம்பீரமான குரலால் பாடிக் கொண்டிருந்தார் அறுபதின் தொடக்கத்திலிருந்த பூமாதேவி.
அவர்தான் அந்த குடும்பத்தின் ஆணிவேர்.
அந்த வீட்டில் எடுக்கும் அத்தனை முடிவுகளும் அவரை சார்ந்து மட்டுமே இருக்கும்.
அவரின் பாடலில் பக்திக் கொண்டு கண்களை மூடி சாமி கும்பிட்டு கொண்டிருந்தார்கள் அந்த குடும்பத்தில் இருந்தவர்கள்.
பூமாதேவியின் கணவர் மாரியப்பன் எப்போதும் போல் வயதான பிறகும் குரலில் சிறிதும் கம்பீரம் குறையாமல் பாடிக்கொண்டிருந்த மனைவியை 'இவள் என் மனைவி' என்று பெருமையுடனும் அதே நேரம் பூஜை அறையில் இருப்பதால் பக்தியுடனும் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவருக்கு பக்கத்தில் அவரது மகள் லட்சுமி தேவியும் அவரது கணவர் இந்திரனும் நிற்க, அவர்களுக்கு அடுத்தார் போன்று அவர்களது மகன் கணேசனும் அவரது மனைவி சீதாவும் நின்று கொண்டிருக்க, அவர்களுக்கு எதிர்த்தார் போன்று அந்த வீட்டின் இளைய தலைமுறைகள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
லட்சுமி இந்திரன் தம்பதியரின் மகள் சுரேகாவும் அவர்களது மகன் விஷ்வாவும் பக்கத்தில் நிற்க, அவர்களுக்கு அடுத்தார் போன்று சீதா கணேசன் தம்பதியரின் மகன் நம் கதையின் நாயகன் விஷ்ணுவரதனும் அவனது தங்கை ரேணுகாவும் ஒன்றாக நின்றபடி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இப்படி அவர்கள் குடும்பமாக அனைவரும் பக்தியுடன் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்க, அந்த குடும்பத்திற்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத தென்றல் அந்த வீட்டில் வேலை செய்யும் பணியாள் பெண் பூமாதேவியின் ஆணைக்கிணங்கி அவளும் ஒரு ஓரமாக நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க, அவளை வெறுப்பாக பார்த்தபடியே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள் சுரேகாவும் விஷ்ணுவரதனும்.
அவர்கள் இருவருக்கும் தென்றல் அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்தது முதலே ஏனோ காரணம் தெரியாமலேயே பிடிக்காமல் போனது.
வீட்டின் மூத்தவர் பூமாதேவியின் பேச்சை எதிர்த்து பேச முடியாததால், அவள் அங்கு வந்திருப்பது எரிச்சலாக இருந்தாலும் வேறு வழி இல்லாமல் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் இருவரும்.
பூஜையை பூமா முடித்ததும் அவர் கையிலிருந்த ஆராத்தி தட்டை வேகமாக வந்து வாங்கிக் கொண்ட தென்றல் அதை அந்த குடும்பத்திலிருந்த அனைவருக்கும் காட்ட, அனைவரும் பக்தியுடன் எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்ள சுரேகா வேண்டா வெறுப்பாக அவளை பார்த்தபடி ஆராத்தியை ஒத்திக்கொண்டு திருநீரை எடுத்து பூசியவள் அதற்கு மேலும் அங்கு நின்று கொண்டிருந்த தென்றலை பார்க்க பிடிக்காமல் தனது அறைக்கு சென்று விட்டாள்.
அங்கிருந்த அனைவரும் பூஜை முடிந்ததும் ஒவ்வொருவராக கலைந்து போக கடைசியாக நின்று கொண்டிருந்த ரேணுகா அண்ணனுக்கு முன்பாக, அவசரமாக தீபாரதனையை எடுத்துக் கொண்டு விஷ்வாவை தொடர்ந்து சென்று விட்டாள்.
அனைவரும் அங்கிருந்து அகன்று போனதை உறுதிப்படுத்திக் கொண்ட விஷ்ணு எப்போது போல் தென்றலை விஷம் தேய்த்த அம்பு போல் வாயிலிருந்து விஷத்தை கொட்ட ஆரம்பித்தான்.
"உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவேயில்லை! என்னோட அப்பத்தா பெரியவங்க அவங்க அப்படி தான் சாமி கும்பிட வர சொல்லுவாங்க அவங்க சொன்னா உடனே நீ வந்துடுவியா? உன்னோட தகுதி தராதரம் என்னன்னு உனக்கே தெரிய வேண்டாம்.. அவங்க சொன்னா என்ன வேணும்னாலும் செய்வியா!! உன்கிட்ட நான் பல தடவை எச்சரிக்கை பண்ணிட்டேன் இதுக்கு மேலயும் இந்த வீட்ல நீ இருந்தா அதுக்கப்புறம் ஏன்டா நீ பொறந்தேன்னு உன் வாழ்க்கையில வேதனைப்படுற அளவுக்கு உன் வாழ்க்கையை நரகமா மாத்திடுவேன்.."என்றவனை வேதனையுடன் பார்த்தாள் பெண்ணவள்.
"மன்னிச்சிடுங்க ஐயா நான் இந்த வீட்ல வேலை பார்க்கணும்னு பெரிய அம்மா ரொம்ப ஆசைப்பட்டாங்க.. அவங்களோட விருப்பத்துக்கு மாறாக என்னால இந்த வீட்டை விட்டு வெளியே போக முடியாது உங்களோட சொல்லுக்கு என்னால மரியாதை கொடுக்காமல் போனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க.. உங்களுக்கு ஒரு வேளை என்னை பிடிக்கலைன்னு சொன்னா நீங்களே பெரிய அம்மாகிட்ட சொல்லி என்னை வேலையை விட்டு நிறுத்திடுங்க உங்களுக்கும் என்னை வீட்டை விட்டு விரட்டியது போல ஆயிடுச்சு..எனக்கும் யார் மனசையும் புண்படுத்தாம இந்த வீட்டை விட்டு போனது மாதிரி ஆயிடுச்சு.. ஆனா தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க ஐயா நானா இந்த வீட்டை விட்டு போக மாட்டேன்.."எனவும் அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் கடுப்பான விஷ்ணு கோபத்தில் தீபாரதனையை ஊதிவிட, அதிலிருந்த விபூதி மொத்தமும் தென்றலின் கண்களில் விழுக, அதன் விளைவு அவள் கையிலிருந்த பூஜை தட்டு பெரும் சத்தத்தை எழுப்பி கீழே விழுந்து அங்கிருந்து அனைவரையும் மீண்டும் ஒன்றாக கூட வைத்தது.
திடீரென எழுந்த சத்தத்தில் குடும்பத்திலிருந்த அனைவரும் ஒன்றாக கூடிவிட,"ஐயோ கண்ணு எரியுது.."என்று வேதனையுடன் கண்களை தேய்த்தபடி தென்றல் அழுது கொண்டிருக்க, பதட்டமாக அவள் பக்கத்தில் வந்தார் பூமா.
"ஐயோ கண்ணு உனக்கு என்னாச்சு? எதுக்காக கண்ணை இப்படி தேச்சுக்கிட்டு இருக்க!"என்றவர் அவளது கைகளைப் பிடிக்க, அங்கிருந்த ஒரு சிலருக்கு அவரது செயல் பிடிக்காமல் போனது.
விஷ்ணு தென்றல் மீதிருந்த கோபத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கத்தான் நினைத்தானே தவிர, அவளை காயப்படுத்த சிறிதும் நினைக்கவில்லை.
ஆனால், அவனையும் மீறி நடந்துவிட்ட இந்த செயலில் ஒரு நொடி திகைத்துப் போனவன் மறு நொடியே தன்னை மீட்டு கொண்டான்.
தென்றல் கத்தியதும் அவனும் உதவி செய்யத்தான் நினைத்தான்.
அதற்குள் குடும்பத்திலிருந்த அனைவரும் ஒன்றாக கூடிவிட, அவர்களுக்கு முன்பாக அவளுக்கு உதவி செய்ய அவனது ஈகோ இடம் கொடுக்காமல் போக, கைகளை கட்டியபடி அவளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இப்பொழுது பூமா அவளை தொட்டு பேசுவது பிடிக்காமல் போக, அதை சொல்வதற்காக வார்த்தைகளை உள்ளேயே பூட்டி வைக்காமல் வெளியே விட்டு விட்டான்.
"பாட்டி என்ன இது? வரவர நீங்க பண்ற எதுவுமே இங்க யாருக்கும் சுத்தமா பிடிக்கல.. போயும் போயும் ஒரு வேலைக்காரிக்கு நீங்க இவ்வளவு கரிசனம் காட்டி பேசுறது எனக்கு ரொம்ப கேவலமா இருக்குது.. அந்தப் பொண்ணு இந்த வீட்டோட வேலைக்காரி அந்த மதிப்பை மட்டும் அந்த பொண்ணுக்கு நம்ம கொடுத்தா போதும்.. செருப்பை எப்பவுமே வாசல்ல மட்டும் தான் விடனும் அதை தூக்கி தலையில வச்சிக்கிட்டா அந்த செருப்புக்கு எப்படியோ அத வச்சிருக்குறவங்களுக்கு சுத்தமா மதிப்பே கிடையாது.."என்றவன் அவளை அனைத்திலும் கீழாக, செருப்போடு ஒப்பிட்டு பேச அவன் சொன்னதைக் கேட்டு கண் எரிச்சலிலிருந்த தென்றலுக்கு கண் எரிச்சலையும் தாண்டி மனது எரிய ஆரம்பித்தது.
"வாயை மூடு வரதன்.. உனக்கு எப்படி இப்படி எல்லாம் பேச வருது? நீ வெளியில் வேலைக்கு போயிட்டு வந்த ஒரு வருஷம் என்னதான் நடந்துச்சுன்னே தெரியல.. இப்படி ஆளே மொத்தமா மாறி போய் வந்திருக்க.. நீ இப்படியிருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல தம்பி.. எப்பவும் என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் நமக்கு மேலானவர்களாக இருந்தாலும் சரி நமக்கு கீழே உள்ளவங்களா இருந்தாலும் சரி மரியாதை கொடுக்கணும்னு சொல்லி தான் உங்க எல்லாரையும் வளர்த்திருக்கேன்.. ஆனால் நீயும் இந்த சுரேகா பொண்ணும் மட்டும் தான் இப்படி அடுத்தவங்க மனச நோகடிக்கிற மாதிரி வளர்ந்திருக்கீங்க? உங்க ரெண்டு பேரையும் எந்த இடத்தில நான் கண்டிக்காம விட்டேன்னு எனக்கே தெரியல.."என்றவர் அதற்கு மேலும் பேரனிடம் பேச பிடிக்காமல் கண் எரிச்சலில் துடித்துக் கொண்டிருந்த தென்றலை கவனிக்க ஆரம்பித்தார்.
"இங்க பாருமா.. என் கூட வா கண்ணை கழுவி விடுறேன்.. அப்பதான் கண்ணுல இருக்க தூசி போகும் கொஞ்சமாவது கண் எரிச்சல் நிற்கும் என் கூட வா.."என்று தகுதி தராதரம் பார்க்காமல் பெயருக்கு ஏற்றார் போலவே பூமாதேவியாக மாறியவர் அவளது கைகளைப் பிடிக்க, விஷ்ணுவுக்கு தன் அப்பத்தா தன்னை அத்தனை பேர் முன்னிலையிலும் அவமானப்படுத்துவது போல் அதுவும் குறிப்பாக அந்த வீட்டின் வேலைக்காரி முன்பாக அப்படி பேசியது பிடிக்காமல் போனாலும் அவர் பேசியதையும் தாண்டி தென்றல் கைகளைப் பிடிக்கப் போவதைக் கண்டு இன்னும் சுத்தமாக பிடிக்காமல் போனது.
"நில்லுங்க அப்பத்தா.. நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க எனக்கு எப்பவுமே என்னோட அப்பத்தா கம்பிரமா இருக்குறதை பார்க்கத்தான் பிடிக்கும்.. இப்படி நமக்கு சேவை செய்ற வேலைக்காரிக்கு நீங்க சேவை செய்றது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல அதுக்கு மேலயும் நீங்க இந்த பொண்ணுக்கு உதவி செஞ்சா அதுக்கப்புறம் என்கிட்ட பேச வேண்டாம்.. எப்பவுமே நம் குடும்பத்துக்குனு ஒரு மரியாதை இருக்கு.. யாரை எங்க வைக்கணுமோ அங்க தான் வைக்கணும்.."என்றான்.
"அத்தான் சொல்றது ரொம்ப சரிதான் அம்மாச்சி.. எனக்குக் கூட நீங்க இப்படி பண்றது சுத்தமா பிடிக்கலை அத்தான் பேசுவதும் தப்பில்லை.. இப்படி வீட்டு வேலைக்காரிக்கு நீங்க சேவகம் பண்றதும் அவ முன்னாடி எங்க எல்லாரையும் எடுத்தெறிஞ்சு பேசுறதும் எங்க யாருக்கும் பிடிக்கல..அவ இந்த வீட்டு வேலைக்காரி தானே? அது அவளுக்கு தான் மறந்து போச்சு உங்களுக்குக்குமா மறந்து போச்சு!"
"வாய மூடு சுரேகா.. அம்மாவை எதிர்த்து பேச உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்? அம்மா எது செஞ்சாலும் அதுல ஒரு விஷயம் இருக்கும்.. அம்மா சொல்றது போல இங்க இருக்க எல்லாருமே சமம் தான் நம்ம கிட்ட பணம் இருக்கு அதை இல்லாதவங்க கிட்ட கொடுக்கிறோம்..அவங்ககிட்ட பணம் இல்லை அதுக்கு பதிலா இலவசமா வாங்காம நமக்கு வேலை பார்த்து கொடுக்குறாங்க அவ்வளவுதான் வித்தியாசம்.. சரி உனக்கு தென்றல் இங்க இருக்கிறது பிடிக்கலைன்னு சொன்னா அம்மா கிட்ட சொல்லி அவளை நான் வீட்டை விட்டு போக சொல்லிடுறேன்.."என்றதும் சுரேகா முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.
ஆரம்பத்தில் அன்னை தன்னைத் திட்டி பேசுவதை கேட்டு கோபம் கொண்டவள் இப்பொழுது தென்றல் இந்த வீட்டை விட்டு போகப்போகிறாள் என்ற செய்தியை அவர் வாயால் கேட்ட பிறகு அவளுக்கோ மகிழ்ச்சி தாங்க இயலவில்லை.
பூமாதேவியோ மகள் பேசுவதிலிருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவர் அர்த்தம் நிறைந்த ஒரு பார்வையை உதட்டுக்குள் அடக்கி வைத்துக் கொண்ட புன்னகையோடு மகளைப் பார்க்க, அன்னையை பார்த்த லட்சுமி தென்றலையும் பார்த்தார்.
அவளோ கண் எரிச்சலையும் மீறி கண்களில் கண்ணீருடன் லட்சுமியை பார்க்க, அவளது பார்வையை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.
சிறு பிள்ளை உணவுக்காக ஏங்கி அந்த உணவு கிடைக்காமல் போனபோது உதட்டைப் பிதுக்கி அழுகைக்கு தயாராகி நிற்பது போல் இருந்தது அவளது செயல்.
ஏனோ அவருக்கும் அவரது தாயார் பூமாதேவிக்கும் சரி அவள் அந்த வீட்டிற்கு வந்தது முதல் அந்த வீட்டிற்கும் அவளுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருப்பது போலவே தோன்றியது.
அதனால்தான் என்னவோ அவளை மற்ற வேலைக்காரர்களோடு ஒப்பிட்டு பார்க்க அவர்களால் முடியவில்லை.
அவர்கள் மனதிலிருக்கும் விஷயங்கள் எல்லாம் புரியாது சுரேகா தன் வாயை கொடுத்து தானே மாட்டிக் கொண்டாள்.
"சுரேகா.. நீ சொல்றதும் சரிதான் இந்த பொண்ணு வந்ததுலயிருந்து அம்மா இந்த பொண்ணுக்கு ரொம்ப தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.. அது உனக்கும் சரி இந்த வீட்ல இருக்க இன்னும் சில பேருக்கும் பிடிக்கல.."என்றவர் விஷ்ணுவரதனையும் ஒரு குத்தலான பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் தொடர்ந்தார்.
"இந்த பொண்ணு செய்ற அத்தனை வேலையையும் இனிமேல் நீ ஒரு ஆளா செய்யறியா? அப்படி நீ ஒரு ஆளா இந்த வேலை எல்லாத்தையும் செய்யிறேன்னு சொல்லு.. அடுத்த நிமிஷம் கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த பொண்ணை இப்பவே நம்ம வீட்டு விட்டு அனுப்பி வச்சிடுறேன்.."என்றதும் தாயை அதிர்ச்சியாக ஒரு பார்வை பார்த்தாள் சுரேகா.
"நீங்க என்ன பேசுறீங்க மம்மி! நானும் இந்த பொண்ணும் ஒண்ணா.. நான் இந்த வீட்டோட இளவரசி இவ இந்த வீட்டோட வேலைக்காரி.. உங்களோட லாங்குவேஜ்ல சொல்லனும்னா பணிப்பெண் இவ பாக்குற எல்லா வேலையும் நான் பார்க்கணுமா? என்னால முடியாது.."
"அப்பாடி இப்பவாவது ஒத்துக்கிட்டயே!! அவ இந்த வீட்டோட வேலைக்காரி தான் அந்த வேலைக்காரி கூட தான் இந்த வீட்டோட இளவரசி போட்டி போடுறாங்க! அப்படி அந்த பொண்ணு கிட்ட என்ன இருக்குதுன்னு நீ அந்த பொண்ணு கிட்ட போய் போட்டி போட்டுக்கிட்டு இருக்க?? அவ இந்த வீட்டோட வேலைக்காரி தான் இல்லன்னு சொல்லல.. ஆனா அவளும் ஒரு மனுசி தான் ஒரு மனுசியை மனுஷியா மதிக்கலானாலும் அவளை எதிரி மாதிரி நடத்தாத!! இனிமே உனக்கு ஏதாவது அவ இங்க இருக்கிறதுல பிரச்சனைன்னு சொன்னா அடுத்த நிமிஷம் கொஞ்சம் கூட யோசிக்காம உன்னை இந்த வீட்டோட பணிப்பெண்ணா மாத்திடுவேன் போ.."என்றவர் கொடுத்த சத்தத்தில் சுரேகா உடல் ஒரு நிமிடம் தூக்கி வாரி போட்டது.
"அப்படி என்னதான் இவகிட்ட இருக்கோ எல்லாரையும் சொக்குப்பொடி போட்டு மயக்கி வச்சிருக்கா.."என்று தென்றலை வசை பாடிவிட்டு தனதறைக்கு கோபமாக சென்றுவிட்டாள்.
தன்னை இத்தனை பேர் முன்னிலையில் அவமானப்படுத்திய தாயையும் அவர் பேச காரணமாக இருந்த தென்றலையும் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாக பதிந்து போனது.
"நீங்க பேசறது கொஞ்சம் கூட எனக்கு பிடிக்கல அத்தை அப்பத்தா.. போயும் போயும் ஒரு வேலைக்காரிக்காக எங்க எல்லாரையும் நீங்க இப்படி மட்டம் தட்டுவது எங்களுக்கு பிடிக்கல அவ்வளவுதான் நான் சொல்லுவேன்.."என்ற விஷ்ணு தனது வேட்டியை உயர்த்திப் பிடித்துக் கொண்டு அவனது ரைஸ்மிலுக்கு சென்று விட்டான்.
அவர்கள் அங்கிருந்து செல்லவும் அதற்கு மேல் அங்கு பிரச்சனை செய்ய தான் யார் உள்ளார்கள்??
"என்ன மன்னிச்சிடுங்க பெரிய அம்மா.. சின்ன முதலாளியம்மா.. என்னாலதானே உங்க குடும்பத்துக்குள் இவ்வளவு பிரச்சினை நான் வேணும்னா இந்த வீட்டை விட்டு போய்டவா!"என்ற தென்றலை முறைத்து பார்த்தார் பூமாதேவி.
"இங்க பாரு இந்த குடும்பத்துல நீ ஒரு ஆளா இல்லாம போனாலும் நீயும் என்னோட பேத்தி மாதிரிதான்.. உன்னோட தாத்தா இந்த குடும்பத்துக்காக ரொம்ப உழைச்சவர்.. அவருக்கப்புறம் உனக்குன்னு யாரும் இல்ல.. இந்த குடும்பத்தோட விசுவாசி உன்னோட தாத்தா அவருடைய பொண்ணு உனக்கு இந்த குடும்பத்துல அடைக்கலம் கொடுக்கலைன்னா அதைவிட இந்த குடும்பத்துக்கு பெரிய அசிங்கம் வேற எதுவுமில்லை.. சுரேகா விஷ்ணு ரெண்டு பேரையும் பத்தி உனக்கு தெரியாதா? விட்டுட்டு போய் வேலையை பாருமா.."எனவும் மனத்தாங்கலுடன் தனது வேலையை பார்க்க போனாள் தென்றல்.
அத்தியாயம் 2:
"இங்க பாருமா தென்றல் வீட்டுக்கு பின்னாடி இலைகள் எல்லாம் கொட்டி ரொம்ப அசிங்கமா இருக்குது.. அதெல்லாம் போய் கொஞ்சம் சுத்தப்படுத்து நாளைக்கு கோவில்ல பூஜையிருக்கு அதுக்கு வேற ஏற்பாடு பண்ணனும் கொஞ்சம் வேலைகளை சுருக்கா பார்த்துட்டு வா.."என்று சீதா சொல்ல, அவருக்கு தலையசைத்து விட்டு தனது வேலையை பார்க்கச் சென்றாள்.
தோட்டத்தில் கொட்டிக் கிடந்த இலைகளை எல்லாம் ஒரு விளக்கமாறை எடுத்து பரபரவென கூட்டி பெருக்க ஆரம்பித்தவள் நிமிடங்களில் வேலையை முடித்தாள்.
அவள் தனியாக நிற்பதை கண்ட ரேணுகா வேகமாக அவளிடம் ஓடி வந்தாள்.
ஓடிவந்த வேகத்தில் அவள் மூச்சு வாங்கிய படி நிற்க,தன் பக்கத்தில் ஏதோ அரவம் கேட்பது போல் உணர்ந்த தென்றல் நிமிர்ந்து பார்க்க அங்கு மூச்சு வாங்கியப்படி நின்று கொண்டிருந்த ரேணுகாவை புன்னகையுடன் எதிர்நோக்கினாள்.
"இந்த வீட்ல எல்லாருக்கும் ஒரு ஒரு வேலை ஆனா உனக்கு மட்டும் வேலை மட்டும்தான் வேலை.. எப்படி தான் இவ்வளவு வேலையை ஒரே ஆளா பாக்குறியோ தென்றல்?? சரி தனியா வா நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.."என்ற ரேணுகா தென்றல் பதிலை எதிர்பார்க்காமல் அவள் கையை பிடித்து வீட்டிற்கு பக்கத்திலிருந்த தென்னை மரத்துக்கு பக்கத்தில் அவளை அழைத்து சென்றாள்.
"ஐயோ!! எனக்கு நிறைய வேலை இருக்குது ரேணுகா மேடம்.. நீங்க இப்படி திடீர்னு என் கையை பிடிச்சு இழுத்துக்கிட்டு போனா என் வேலைகளை எல்லாம் நான் எப்படி பார்க்கிறது?"
"சும்மா கத்தாதடி.. நான் என்ன உன்னை இந்த வீட்டு வேலைக்காரி மாதிரியா நினைக்கிறேன் என்னோட தோழியாக தானே உன்னை நினைக்கிறேன்.. அதனாலதானே உன் கிட்ட எந்த விஷயத்தையும் மறைக்காம சொல்றேன்.."
"நீங்க சொல்றது உண்மையா இருந்தாலும் எனக்கு ரொம்ப பயமா இருக்குது மேடம்.. எந்த நேரத்துல எந்த பிரச்சனை வேண்டுமானாலும் வரலாம் எனக்கு எப்பவுமே பிரச்சனை இல்லாத ஒரு அமைதியான வாழ்க்கை வாழனும்னு தான் ரொம்ப ஆசை..நீங்க இப்படி என் கூட பேசறத யாராவது பார்த்தா என்னை தான் திட்டுவாங்க.. அதோட எனக்கு சோலி வேற நிறைய கிடக்கு.."
"சரி போமா போ.. உனக்கு என்னை பார்த்தா பிடிக்கல போலருக்கு அதனால தான் என் கூட பேச மாட்டேங்கற சரி போ நான் என் பிரச்சனையை என் கூடவே வச்சுக்கிறேன்.."என்ற ரேணுகா முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள, தன்னையும் ஒரு ஜீவனாக நினைத்து தன்னிடம் அவளது அத்தனை ரகசியங்களையும் பகிர்ந்து கொள்பவளை நினைத்து பார்த்த தென்றல் அவளை அப்படியே விட்டு செல்ல மனமில்லாமல் அவள் சொன்னதை கேட்க ஆரம்பித்தாள்.
"சரி சொல்லுங்க ரேணுகா மேடம் எதுவா இருந்தாலும் கொஞ்சம் வேகமா சொல்லுங்க வேலை நிறைய இருக்கு.."
"ஹப்பா.. இப்பவாவது என் கூட பேச ஒத்துக்கிட்டியே.."
"சரிங்க மேடம் விஷயம் என்னன்னு சொல்லுங்க.."
"அது வந்து தென்றல்.. அது வந்து..அது.."என்றவள் வார்த்தைகள் பேச முடியாமல் முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்து போக, அவளிடம் பேச வேண்டும் என்று அழைத்து வந்தவள் இப்பொழுது பேச முடியாமல் தடுமாற, அவளது தடுமாற்றத்தை வெகுவாக ரசித்துப் பார்த்த தென்றல் "என்னங்க மேடம் நீங்க வெட்கப்படுவதை பார்த்தா விஷ்வா சார் கிட்ட உங்க காதலை சொல்லிட்டீங்களா!!" என்று அவளின் வெட்கத்தை சரியாக கணித்து கேட்க, முதலில் அவள் சொன்னதை கேட்டு ஆச்சரியமான பார்வை பார்த்த ரேணுகா பின்பு வெட்கப்பட்டு தலையை குனிந்து அவளுக்கு ஆமென தலை அசைத்தாள்.
"ஐயோ மேடம் ரொம்ப அழகா இருக்கீங்க.. உங்களை இப்படி பார்க்கும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? நீங்க எவ்வளவு நாள் என்கிட்ட உங்க அத்தான் கிட்ட காதலை எப்படி சொல்லப் போறேன்னு சொல்லி சொல்லி பயந்தீங்க.. இப்ப எப்படியோ சொல்லிட்டீங்க போலருக்கு.. நீங்க சொன்னது இருக்கட்டும் விஷ்வா சார் என்ன சொன்னாங்க.."
"அவர் சொல்றது இருக்கட்டும் தென்றல் நான் சொல்றதை நீ எப்பதான் கேக்க போற?"
"நீங்க சொல்றத எப்பவும் கேட்கிறதுதானே மேடம் என்னோட வேலை.. உங்க மனசு கஷ்டப்படுறது மாதிரி நான் ஏதாவது தப்பு பண்ணிருந்தா தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க.."என்றவள் குரலில் இருந்த சந்தோஷம் முற்றிலும் விலகி போய், அந்த இடத்தை பயம் ஆக்கிரமிப்பு செய்தது.
"ஹைய்யோ.. இப்ப எதுக்கு நீ தேவையில்லாம பயப்படுற தென்றல்.. நான் உன்னை சும்மா கிண்டல் பண்றேன் அது கூட உனக்கு தெரியல!!"
"சாரி மேடம்.."
"போதும் நிறுத்து தென்றல் என்னால முடியல.."என்று இரு கைகளையும் எடுத்து கும்பிட்டவள் தென்றலை பேச விடாமல் அவளே பேச ஆரம்பித்தாள்.
"நான் உன்கிட்ட பல தடவை சொல்லிருக்கேன்..நீ மத்தவங்க முன்னாடி என்னை மரியாதையா கூப்பிட்டா போதும் அது கூட என்னோட அண்ணனும் வருங்கால அண்ணி சுரேகாவும் ஏதாவது சொல்லுவாங்க அதுக்காக தான்.. மத்தபடி நம்ம ரெண்டு பேரும் தனியா இருக்கும் போது என்னை நீ வான்னு பேர் சொல்லி கூப்பிடுன்னு எத்தனை தடவ உன்கிட்ட சொல்றது?"என்றதும் தான் என்னவோ என்று நினைத்துக் கொண்டிருந்த தென்றல் அவள் இதை சொன்ன பிறகே, இழுத்து வைத்திருந்த சுவாசக் காற்றை சற்று பெருமூச்சாக விட்டாள்.
"அது சரி வராதுங்க.. என்னதான் இருந்தாலும் கொடுக்குற மரியாதையை கொடுக்கணும்.. இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் ஒருமையில் பேசி பழகுனா நாள பின்ன நாலு பேருக்கு முன்னாடி நான் உங்களை பேர் சொல்லி கூப்பிட்டால் உங்களுக்கும் அசிங்கம் அதோட பாக்குறவங்க என்னையும் மரியாதை தெரியாதவளா இருக்கா இவள்ன்னு ரொம்ப கேவலமா பேசுவாங்க.. அதனால எப்பவும் உங்களை அழைக்கிறது மாதிரி ரேணுகா மேடம்னு கூப்பிடுறது தான் யாருக்கும் பிரச்சினை இல்லை அதுதான் எனக்கும் சந்தோஷம்.."என்றவள் அத்தோடு அந்த பேச்சுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாள்.
"உன்கிட்ட இதுக்கு மேல என்ன சொன்னாலும் நீ கேட்க போறது இல்ல சரிதான் போ.."என்றதும் அவளை ஒரு சின்ன புன்னகையுடன் பார்த்தாள் தென்றல்.
"சரி சரி விஷயம் என்னன்னு சொல்லட்டுமா.."என்ற ரேணுகா தன் மனதில் இருந்ததை அவளிடம் மொத்தமாக சொல்லி முடிக்க, அதைக் கேட்ட தென்றலுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
"ரொம்ப சந்தோசமா இருக்கு மேடம்.. இந்த வீட்டிலேயே என்னையும் ஒரு மனுஷியா நினைச்சு உங்க அம்மா அம்மாச்சி இரண்டு பேரும் பழகுனா நீங்க அதுக்கும் மேல ஒரு படி போய் உங்கள் அந்தரங்கம் முதல் கொண்டு எல்லாத்தையும் என்கிட்ட சொல்லுறீங்க.. உங்க குடும்பத்துல இருக்க எல்லாருமே என்னையும் உங்கள்ல ஒருத்தரா பார்க்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது.. எத்தனையோ நாள் எனக்கு யாருமே இல்லைன்னு நிறைய கவலைப்பட்டுருக்கேன்.. இப்ப நீங்க எல்லாரும் பேசறது நடந்துகிறது எல்லாத்தையும் பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.."என்று உணர்ச்சி பொங்க பேசியவளை அன்பாக பார்த்தாள் ரேணுகா.
இளநீர் வெட்டுவதற்காக அந்தப் பக்கம் வந்த விஷ்ணு அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அவர்கள் பக்கத்தில் வர, தென்றலின் கெட்ட நேரமோ என்னவோ ரேணுகா எதிர்பார்க்காத வார்த்தையை சொல்லிவிட்டாள்.
"சுரேகா மட்டுமில்லாம இருந்திருந்தா கண்டிப்பா என் அண்ணன்கிட்ட சொல்லி நான் உன்னை தான் கல்யாணம் பண்ண சொல்லிருப்பேன்.. எனக்கு உன்னை அந்த அளவுக்கு மிகவும் பிடிக்கும் தென்றல்.. கண்டிப்பா எனக்கு மட்டும் நீ அண்ணியா வந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. அண்ணன் மனசு வச்சா கண்டிப்பா இது நடக்கும்.."என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே, அவளது அலைபேசி ஒலித்தது.
அலைபேசியை எடுத்துப் பார்த்தவள் அதில் ஒளிர்ந்த விஷ்வா பெயரை கண்டதும் அவளது முகம் செந்தாமரையாக சிவந்து போனது.
"சரி தென்றல் எனக்கு முக்கியமான போன் வந்துருக்கு நான் அப்புறமா உன் கிட்ட பேசுறேன்.."என்றவள் கொல்லைப்புறமாக அவளது அறைக்கு சென்று விட, அவள் பேசியதை எல்லாம் கேட்டு அதிர்ச்சியாக நின்று கொண்டிருந்தாள் தென்றல்.
தங்கை சொல்லி சென்ற வார்த்தைகளை கேட்டதும் விஷ்ணுவுக்கு கோபம் எகிறிக்கொண்டு வந்தது.
ரேணுகா பேசி சென்ற வார்த்தைகளை கேட்டு சிலையாக சமைந்து நின்ற தென்றல் பக்கத்தில் வந்தவன் அவளை மேலும் கீழுமாக பார்க்க, அவனை அங்கு கண்டதும் மனதளவில் மரணித்து விட்டாள் பெண்ணவள்.
"ஐயோ சார் தயவு செய்து வார்த்தை எதையும் விட்டுடாதீங்க.. உங்க வாயில இருந்து வர்ற வார்த்தை ஒவ்வொன்றும் தேள் கொடுக்கு மாதிரி.. உங்க தங்கச்சி பேசியதுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது.. அது அவங்க மனசுல உள்ள விஷயம்.."என்றாள் அவசரமாக.
அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் நாராசமாக இருக்கும் என்று இத்தனை நாட்களில் அறிந்து வைத்திருந்தவள், இப்பொழுது தன்னை வேட்டையாட துடித்துக் கொண்டிருக்கும் அவனைப் பார்க்கும் பொழுதே அத்தனை பயமாக இருந்தது அவளுக்கு.
அவன் பேசும் வார்த்தைகளை எல்லாம் தாங்கிக் கொள்ள இயலாது என்பதால்தான் அவனைப் பேச விடாமல் அவளே முந்தி பேசி விட்டாள்.
அவள் பேசாமல் இருந்திருந்தால் விஷ்ணு கோபமாக நாலு வார்த்தைகளால் திட்டிவிட்டு போயிருப்பானோ என்னவோ!!
அவள் அவசரமாக பேசியதை கண்டு அவன் கோபம் இன்னுமின்னும் பல மடங்கு பெருகி போனது.
அதன் விளைவு எது நடக்கக்கூடாது என்று தென்றல் அவசரமாக தன்னிலை விளக்கம் கொடுத்தாளோ! அது நடந்து விட்டது.
"நான் கூட என் தங்கை உன்கிட்ட பேசுறதை பார்க்கும் போது அவளுக்கு மட்டும் தான் இதுல விருப்பமிருக்கும் போலன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இப்ப நீ அவசர விளக்கம் கொடுக்கும்போது அவள் பேசுனதுக்கும் நீ சொன்னதுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே எனக்கு தோணுது.."
"ஐயோ அப்படியெல்லாம் இல்ல ஐயா.. இல்லை சார் மன்னிச்சிடுங்க சார் தெரியாம ஐயான்னு சொல்லிட்டேன். ஐயான்னு மரியாதையா கூப்பிட்டா உங்களுக்கு பிடிக்காதுல்ல வயசானவங்கள தான் அப்படி கூப்பிடுவாங்கன்னு சொல்லிருக்கீங்க.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க சார்.. நீங்க நினைக்கிறது மாதிரி ரேணுகா மேடம் பேசுனதுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை தயவு செஞ்சு என்னை நம்புங்க சார்.."
"எல்லார்கிட்டயும் நடிச்சு எல்லாரையும் ஏமாத்துறது மாதிரி என்னையும் ஏமாத்தலான்னு நினைக்காத நான் ஒன்னும் முட்டாள் கிடையாது.."என்றவனை என்ன சொல்லி நம்ப வைப்பது என்பது போல் வேதனையோடு தென்றல் பார்க்க, அவளது பார்வை விஷ்ணுவரதனின் மனதை என்னவோ செய்தது.
மனதின் பேச்சை ஏற்க மறுத்தவன் அதற்கும் அவள் மீது கோபம் கொண்டு வார்த்தைகளை கங்குகளாக கொட்ட ஆரம்பித்தான்.
"இங்க பாரு.. எனக்கு நல்லா தெரியும் உனக்கு இந்த வீடு சொத்து இது எல்லாத்தையும் பார்த்து அதை அனுபவிக்கணும்னு ரொம்ப ஆசை.. உன்ன மாதிரி அன்னக்காவடி எல்லாம் எப்பவுமே அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படுவதெல்லாம் சாதாரண விஷயம் தானே!!ஆனால் நீ அதையும் தாண்டி என்ன கல்யாணம் பண்ண நினைக்கிற இல்லையா?"என்று இடையிட்டவன் அவள் முகத்தில் கலவரம் தெரிய, அவன் இதழ்களில் ஒரு வன்ம புன்னகை.
"சரி அப்படியே நீ ஆசைப்படுவது மாதிரி இருந்தாலும் அதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும்.. என் வீட்டு வேலைக்காரன் கூட கல்யாணம் பண்ணிக்க தகுதி இல்லாத ஒருத்தி நீ.. நான் என் குடும்பத்துல இருக்கிறவங்க எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்.. நீ ஒரு ராசி கெட்ட ஜென்மம் அதனால தான் உனக்கு இந்த உலகத்துல யாருமே இல்ல.. உனக்கு இந்த வீட்டு முதலாளியோட பையன் கேட்குதோ.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதற்கு செத்துப் போகலாம்டி.. இந்த மானங்கெட்ட உயிர் மானங்கெட்ட வாழ்க்கை இதெல்லாம் உனக்கு தேவைதானா? கேவலம் பணத்துக்காக தானே என் தங்கச்சி கிட்ட பாசமா பேசறது மாதிரி பேசி உன் மனசுல இருக்குற விஷயம் எல்லாத்தையும் சொல்லி அவ மனசுலயும் இந்த மாதிரி பதிய வச்சிருக்க..",
"வெல்.. நீ சொன்னது மாதிரியே சாரி சாரி நீ ஆசைப்பட்டது மாதிரியே நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் ஆனா அதுக்கு அடுத்த நிமிஷம் நான் செத்துப் போயிடுவேன்டி.. இந்த விஷ்ணுவரதனுக்கு எப்படிப்பட்ட பொண்ணு மனைவியா வரணும்னு ஒரு கனவு இருக்கு.. சுரேகாவையும் தாண்டி என் மனசுல அவ ஆழமா பதிஞ்சு போய்ட்டா.. அவ ஒருத்திக்கு மட்டும்தான் என் மனசுல இடமிருக்கு.. அது கைகூடாமல் போச்சு அப்ப என்ன நடந்துச்சுன்னு கூட எனக்கு தெரியல.. வீட்ல இருக்கவங்க சந்தோஷத்துக்காக நான் சுரேகாவை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. ஆனா பாவம் நீயும் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுற இல்ல.. அப்படி ஒரு சிச்சுவேஷன் வந்தா நான் செத்துப் போயிடுவேன் இல்லை நீ செத்து போயிடனும் சரியா!!"என்றவன் அவளும் உணர்வுள்ள ஒரு சராசரி பெண் என்பதை மறந்து வார்த்தைகளால் அவள் மனதை குத்தி கிழித்த சந்தோஷத்துடன் அங்கிருந்து செல்ல, அந்த இடத்திலேயே மடங்கி அமர்ந்துவிட்டாள் தென்றல்.
ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் என்ற வார்த்தை அவள் விஷயத்தில் சரியாகிப் போனது.
அவன் சொன்ன அந்த நிமிடமே அவளது உயிர் அவளை விட்டு பிரிந்திருக்க வேண்டும்.
அவளையும் நம்பி இரு ஜீவன்கள் இருக்கிறதே!!
அதோ போகிறானே அவனுக்கு தெரியுமா!! 'என்னையும் நம்பி இரண்டு ஜீவன்கள் இருக்கிறது எனக்கும் உறவு என்று சொல்லிக் கொள்ள இருவர் உள்ளார்கள் என்பது' என்று மனதோடு சொல்லிக் கொண்டவள் கண்ணீரைத் துடைத்து எறிந்து விட்டு எப்போதும் போல் மற்றவர்கள் சந்தோஷத்திற்காகவும் தனது சந்தோஷத்தை விட்டுவிட்டு வேலைகளை தொடர ஆரம்பித்தாள்.
'ஒரு வீட்ல வேலை செஞ்சா அவங்களுக்கு அந்த வீட்ல இருக்கவங்க அடிமையா.. நாங்களும் உணர்வு கொண்ட சக மனிதர்கள் தானே அந்த விஷயம் ஏன் யாருக்கும் புரியல!!' என்று மனதுக்குள்ளையே பேசிக் கொண்டவள் வேலைகளை முடிக்க, அவளிடம் வந்தார் லட்சுமி.
"தென்றல்.."என்று அவளை அழைக்க,"சொல்லுங்க சின்ன அம்மா.."என்றவள் பவ்யமாக கேட்க, அவளைப் பார்த்ததும் கதறி விட்டார்.
அவர் கதறி அழுவதை கண்டதும் பதறிப் போன தென்றல் "ஐயோ என்னாச்சு அம்மா.. எதுக்காக இப்படி அழுகுறீங்க கால்ல ஏதாவது குத்திடுச்சா இல்ல எங்கையாவது அடிபட்டுடுச்சா? எதுக்காக இப்படி அழுகுறீங்க இருங்க நான் போய் இப்பவே வீட்ல இருக்க யாரையாவது கூட்டிட்டு வரேன்.."என்று பேசியபடியே அங்கிருந்து செல்லப் போனவளை தடுத்து நிறுத்திய லக்ஷ்மி அவளை கட்டிப்பிடித்து அழுக ஆரம்பித்தார்.
அவர் அப்படி செய்ததும் ஒன்றும் புரியாது நின்ற தென்றல் என்ன செய்ய வேண்டும் என்று கூட தோன்றாமல் அவர் எதற்காக இப்படி செய்கிறார்?என்று யோசித்தபடி அவரையே பார்க்க, சிறிது நொடிகள் வரை அழுத லட்சுமி தன்னை தானே மீட்டெடுத்துக் கொண்டவர் அவளை விட்டு பிரிந்தார்.
"என்னை தயவுசெஞ்சு மன்னிச்சிடுமா.."என்றவர் இரு கைகளையும் கூப்பி அவளிடம் மன்னிப்பு கேட்க, அவரது செயலில் பதறிப் போன தென்றல் "என்னம்மா வயசுல பெரியவங்க நீங்க என்ன போய் கையெடுத்து கும்பிட்டு பேசுறீங்க.. எனக்கு பாவத்தை சேர்த்து வைக்காதீங்க அம்மா.."என்றவளை பரிதாபமாக பார்த்தார்.
"இல்லம்மா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வாழைமரத்துல இலைய அறுக்குறதுக்குகாக இந்த பக்கம் வந்தேன்.. ஏதோ பேச்சு சத்தம் கேட்க இந்த பக்கம் வந்தேன் என் மருமகன் உன் கிட்ட சொன்ன எல்லா வார்த்தையும் கேட்டேன்.. அவன் பேசின அத்தனை வார்த்தைகளையும் ஒரு அம்மாவா இருந்து பார்த்தா அவன் பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும் அவனை மன்னிக்க முடியும்.. ஒரு பொண்ணா அவன் பேசிய வார்த்தைக்கு அவனை மன்னிக்க முடியாது.. அவன் உன்கிட்ட இந்த மாதிரி பேசினதுக்கு எங்களோட வளர்ப்பு சரியில்லாமல் போனதுதான் காரணம்.. பூமாதேவி வம்சத்துல இப்படி ஒரு ஈனப்பிறவி வந்து பிறந்துருக்கு.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு கண்டிப்பா அவன் பேசினதுக்கு அவனுக்கு தண்டனை உண்டு.."
"பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க அம்மா.. அவர் ஏதோ என்கிட்ட கோவத்துல பேசிட்டு போறாங்க.. அதை எல்லாம் நான் பெருசா எடுத்துக்கல.. நீங்க இந்த விஷயத்தை இதோட விடுங்கள்.. சீதா அம்மா வேலை இருக்கிறதா சொன்னாங்க.. நான் அங்க போய் அந்த வேலைகளை பார்க்கிறேன் நீங்க இதையெல்லாம் நினைத்து கவலைப்படாம போய் சாப்பிடுங்க அம்மா.."என்றவள் தொடப்பத்தை கையில் எடுத்துக் கொண்டு செல்ல, அவளையே அன்பாக பார்த்தார் லட்சுமி.
அவள் அங்கிருந்து மறைந்ததும் விஷ்ணு பேசிய வார்த்தைகள் யாவையும் கேட்டு ஒரு பெண்ணாக அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போக, அதன் விளைவு குடும்பத்தில் இருந்த அனைவரிடமும் அவன் சொன்ன வார்த்தையை சொல்ல, பூமாதேவி சிறிதும் யோசிக்காமல் அவனை அந்த குடும்பத்தை விட்டு விலகி வைக்க துடிதுடித்துப் போனவன் அதற்கு காரணமான தென்றலை பார்த்தவன் கண்களில் எறிந்த ஜுவாலையில் நடுநடுங்கிப் போனாள் பெண்ணவள்.
அத்தியாயம் மூன்று:
கண்களில் கோபக்கனல் மின்ன தன்னையே பார்த்துக் கொண்டிருந்த, விஷ்ணுவை கண்டதும் தென்றலுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அவளும் பாவம் செய்யாத தவறுக்கு அவனிடம் எப்படி தன்னை நிரூபணம் செய்வாள்.
"இதுதான் உங்க முடிவா அப்பத்தா!"
"ஆமாம் விஷ்ணு இதுதான் என்னோட முடிவு.. அந்தப் பொண்ணும் இந்த வீட்டு பொண்ணு மாதிரி தான்னு உன்கிட்ட பல தடவை சொல்லிட்டேன்.. அப்படியும் மீறி நீ அவகிட்ட இந்த மாதிரி எல்லாம் எப்படி பேசின!! அவகிட்ட இந்த மாதிரி பேசுறதுக்கான உரிமையை உனக்கு யார் கொடுத்தாங்க? முதன்முதலா நீ இந்த குடும்பத்தில் வந்து பிறந்தத நினைச்சு ரொம்ப வெட்கப்படுறேன்.."என்றவர் அவனது முகத்தைக் கூட பார்க்காமல் திரும்பிக் கொண்டார்.
"என் வம்சத்துல பிறந்துட்டு நீ இப்படி பண்றதை பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு வரதன்.. என்னோட அப்பா ரொம்ப மரியாதையானவர் பண்பானவர்.. எல்லார்கிட்டயும் அவ்வளவு பாசமா நடந்துக்குவார் அவர் மேல இருக்க பாசத்தால தான் உனக்கு என் அப்பா பேரையே வச்சேன்.. ஆனா அவரோட பேர வச்சு உனக்கு அவரது குணத்தை அப்படியே சொல்லிக் கொடுக்காமல் வளர்த்தது எங்களோட தப்புதான்.."என்ற மாரியப்பன் முகம் கசங்க, வேதனையில் மேலும் எதுவும் பேசத் தோன்றாமல் அங்கிருந்து சென்று விட்டார்.
விஷ்ணுவின் தாயும் தந்தையும் அவன் மீது இருந்த கோபத்திலும் கூட பெற்றோராக விட்டுக் கொடுக்க மனம் வராமல் அமைதியாக மௌனம் சாதித்தார்கள்.
"அண்ணா.. நான் என் மனசுல இருக்க விஷயத்தை தான் தென்றல் கிட்ட சொன்னேன்.. நீங்க அதை இப்படி இவ்வளவு பெரிய பிரச்சினையாக்கி அவகிட்ட பேசி இருக்க வேண்டியது கிடையாது.. என்னோட அண்ணன் இப்படிப்பட்டவர்னு நினைக்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நீங்க இப்படி இருக்கறது எனக்கு பிடிக்கலைன்னா.."என்றாள் ரேணுகா.
"கொஞ்சம் அமைதியா இரு ரேணுகா.. இப்ப விஷ்ணு அத்தான் என்ன தப்பா சொல்லிட்டாருன்னு குடும்பத்துல இருக்க ஆளாளுக்கு அவரை ஏதோ கொலை குத்தம் பண்ண ரேஞ்சுக்கு பேசிகிட்டு இருக்கீங்க.. ஒரு வேலைக்காரி உன் அண்ணனுக்கு மனைவியா வரணும்னு நீ ஆசைப்பட்டா அதுக்கு அர்த்தம் என்ன?அப்ப நான் அவரை கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு நினைக்கிறியா இல்ல அந்த தகுதி தான் எனக்கு இல்லைன்னு சொல்றியா!!"எனவும் அவளை முறைத்துப் பார்த்தாள் ரேணுகா.
"என்ன ரேணுகா என்னை முறைச்சு பாக்குற நான் உன்னோட வருங்கால அண்ணி அதற்கான மரியாதையை நீ எனக்கு தரணும்.. இப்படி நீ என்னை முறைச்சு பார்க்கிற அளவுக்கு நான் இப்ப என்ன உன்கிட்ட கேட்டேன்.."
"வாயை மூடு சுரேகா.. இன்னும் உனக்கும் என் அண்ணனுக்கும் கல்யாணம் ஆகலை ஒருவேளை கல்யாணம் ஆனா அதைப்பற்றி நாம அதுக்கப்புறம் பேசலாம்.."
"நீ இப்படி பேசுறதை பார்க்கும்போது எனக்கும் உன் அண்ணனுக்கும் கல்யாணம் நடக்க விடாமல் பண்ணிருவ போலருக்கு.. எனக்கும் விஷ்ணுவுக்கும் கல்யாணம் நடக்காம போனா அதுக்கப்புறம் இந்த சுரேகா உயிரோடு இருக்க மாட்டேன்.. அதோட இந்த வேலைக்காரியை உன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சா அவரும் உயிரோட இருக்க மாட்டார்.. நாங்க ரெண்டு பேரும் சாகணும் அதானே உனக்கு வேணும் சரியா!"என்ற சுரேகா வார்த்தையில் பெரிதும் அடிபட்டு போனாள் ரேணுகா.
சுரேகா சொன்ன வார்த்தையை கேட்டு ரேணுகா அடிமனது வரை சென்று வலியை ஏற்படுத்த, எதுவும் பேசாமல் சிறு பிள்ளை போல் அவள் அழுக ஆரம்பிக்க,தன் வீட்டுப் பிள்ளைகள் இருவரும் சண்டை போடுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர்களது பெற்றோர்கள் துடித்தவர்கள் மனதுக்குள்ளயே அழுது கொண்டார்கள்.
ரேணுகாவை கடிந்து பேசினால் அவளது பெற்றோர் வருத்தப்படுவார்கள் என்று சுரேகா பெற்றோர்களும் சுரேகாவை கடிந்து பேசினால் அவளது பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள் என்று ரேணுகா பெற்றோரும் அடுத்தவரை காயப்படுத்த மனம் வராமல் மௌனம் சாதிக்க, தங்கள் குடும்பத்துக்குள்ளையே முதன்முதலாக அனைவரும் சண்டை போட்டுக்கொண்டு கண்ணீரோடு நிற்பதை கண்ட விஷ்ணுவுக்கு இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் இவள் தானே? என்று தென்றல் மீது கோபம் பல மடங்கு பெருகி போனது.
விஷ்ணு பார்த்த பார்வையில் தென்றலுக்கு சர்வமும் ஒடுங்கிப் போனது.
தான் எதுவும் சொல்லாமலேயே இத்தனை பிரச்சனைகள் அதுவும் தன்னால் நடக்கிறது என்று தென்றலுக்கு அது வேறு ஒரு பக்கம் கவலையை கொடுக்க, இந்த பிரச்சனையை இத்தோடு முடிக்க வேண்டும் என்று வாயை திறந்தாள்.
"தேவி அம்மா லக்ஷ்மி அம்மா சீதா அம்மா ஐயா மூணு பேருக்கும் எல்லார்கிட்டயும் சேர்த்து நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. தெரிஞ்சோ தெரியாமலையோ என்னால இந்த குடும்பத்துல பிரச்சனை வந்துருச்சு.. அதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் தயவு செஞ்சு இதை பத்தி மேலும் பேசி உங்களுக்குள்ளேயே நீங்க சண்டை போட்டுக்க வேண்டாம்.. இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் ஒத்துமையா இருக்கிறது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒருவேளை என்னால பிரச்சனைன்னு சொன்னால் இந்த வீட்டு வேலைக்காரி நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுறேன் தயவு செஞ்சு நீங்க யாரும் சண்டை போட்டுக்காதீங்க.."எனவும் வாயை திறந்தான் விஷ்ணுவரதன்.
"ஏய்..வாயை மூடு உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. அங்க நான் உன்கிட்ட சொன்ன அத்தனையும் ஒன்னு கூட மாத்தாம லட்சுமி அத்தை கிட்ட சொல்லி இவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணிட்டு நீ இப்ப நல்லவ மாதிரி பேசினா அப்படியே இங்கே இருக்க எல்லாரும் உன்னை நம்பிடுவாங்களா!!"
"வாயை மூடு விஷ்ணு.. அவள் ஒன்னும் என்கிட்ட சொல்லலை நீ பேசின அத்தனையும் நானும் தான் கேட்டேன்.. நீ பேசிய வார்த்தை அத்தனையும் என்னாலையே தாங்கிக்க முடியல.. என்னை நீ அத்தைன்னு தானே கூப்பிடுற!! அப்புறம் எப்படி உன்னால மத்த பொண்ணுங்களை இப்படி தப்பா பேச முடியுது.."
"இங்க பாருங்க லட்சுமி அம்மா நீங்க எனக்கு அத்தையா இருந்தாலும் என்னோட அம்மாவா தான் உங்களை பார்க்கிறேன்.. அதுக்காக நீங்க என்ன பேசினாலும் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்க முடியாது.."என்றவனை நம்ப முடியாமல் பார்த்தார் லட்சுமி.
"என்ன வரதன் எல்லாரையும் எதிர்த்து பேசிக்கிட்டு இருக்க! உனக்கு அந்த அளவுக்கு தைரியம் வந்துடுச்சா என்ன? இப்ப எதுக்காக நீ சம்பந்தமே இல்லாம உன் லட்சுமி அத்தை கிட்ட இப்படி கோபப்படுற"என்ற இந்திரனை பணிவாக பார்த்த விஷ்ணு மௌனம் சாதித்தான்.
"அண்ணா அவன் ஏதோ தெரியாம பேசிட்டான்.. அதுக்குத்தான் அத்தை அவனுக்கு ரொம்ப பெரிய தண்டனை கொடுத்து இந்த குடும்பத்தை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்களே அப்புறம் எதுக்கு இன்னும் கூட அவனை நீங்க திட்டறீங்க.."என்று தன் மனம் பொறுக்க முடியாமல் சீதா கேட்டுவிட, அந்த இடத்தில் கனத்த மவுனம் நிலவியது.
"ஏன் சீதா உன் பையனை திட்றதுக்கு எனக்கு உரிமை இல்லையா இல்லை திட்டக்கூடாதா?"என்றவர் ஒரு நிமிடம் அமைதி காத்து மேலும் அங்கேயே நின்றால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்று விலகி சென்று விட்டார்.
"உங்ககிட்ட இருந்து இதை எதிர்பார்க்கல அண்ணி.."என்ற லட்சுமி மனம் தாங்காது அங்கேயே நின்று கொண்டிருந்த சுரேகாவை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
"இப்ப எதுக்கு என் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு போறீங்கம்மா விடுங்க.. நான் அத்தான் கிட்ட பேசணும் எல்லாரும் அத்தானை பேசும்போது நான் அவரை விட்டுட்டு வர முடியாது.."என்றவள் அவரிடமிருந்து கைகளை விடுவிக்க போராட, அவரோ திரும்பி அவளை ஒரு
உக்கிரமான பார்வை பார்க்க, அதன் பிறகு அமைதியாகிவிட்டாள் சுரேகா.
விஷ்வா எப்போதும் போல் பேசாமல் ரேணுகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, அவனது பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்து கொண்ட ரேணுகா மனது நிலையில்லாமல் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது.
எத்தனை நாட்களாக அவனை காதலிக்கிறாள்.
அவனது இந்தப் பார்வைக்கு கூட அர்த்தம் தெரியாமல் இருக்க அவள் என்ன கண் தெரியாத குருடியா!!
கையை பிசைந்தபடி நின்று கொண்டிருந்தவள் மனது நிலையில்லாமல் தவிக்க, மனதில் பாரமாக வெளியில் சென்றாள்.
"உன்கிட்ட இருந்து இத எதிர்பார்க்கலை சீதா.. உன்னையும் நான் லட்சுமி மாதிரியே என் பொண்ணாக தான் நினைச்சேன்.. இதுவரைக்கும் அப்படித்தான் உன்னையும் நடத்திருக்கேன்.. உன்னை பார்த்த மாதிரிதான் தென்றலையும் பார்த்தேன்.. தென்றல் மட்டுமல்ல நம்ம வீட்டுல வேலை செய்ற எல்லாரையும் நான் அப்படி தான் பார்ப்பேன் அது உனக்கும் தெரியும்.. அப்படியிருந்தும் வரதனுக்கு அவளை ஏன் பிடிக்காமல் போணுச்சுன்னு தெரியலை.. இப்படி நீ மாப்பிள்ளையை எதிர்த்து பேசியிருக்க வேண்டாம்.."என்றவர் எங்கே அவரது மனதை காயம் படும்படி ஏதாவது பேசி விடுவோமோ! என்று அவரும் செல்ல, கணேசன் மனைவியை முறைத்து பார்த்துவிட்டு மகனைப் பார்க்க கூட பிடிக்காமல் சென்றார்.
அனைவரும் விலகி சென்றதும் சீதா மனது பெரிய குத்தம் செய்தது போல், தன்னைத் தானே நிந்தித்துக்கொள்ள தன் நினைவில் சிந்தித்தபடி அங்கிருந்து சமையலறைக்கு செல்ல, அங்கு மீதமிருந்தது அவனும் தென்றலும் மட்டுமே.
தென்றல் தவிப்புடன் அவனைப் பார்க்க, அவளை வன்மமாக பார்த்த விஷ்ணு அவள் அருகில் நெருங்கி வர, அவன் பக்கத்தில் வரவும் தென்றலின் இதயம் பல மடங்கு துடிக்க ஆரம்பிக்க, கையை பிசைந்தபடி அவனுக்கு பயந்து நின்று கொண்டிருந்தாள்e.
"ரொம்ப சாமர்த்தியமா என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரையும் சண்டை போட வச்சு இப்படி ஆளுக்கு ஒரு திசையில பிரிச்சு விட்டல்ல.. இதுக்கெல்லாம் உன்னை பழிவாங்கம்மா விடமாட்டேன்.."என்றவன் கத்தவில்லை அவளை மிரட்டவில்லை.
ஆனால் அவன் சொன்ன அழுத்தமான வார்த்தை அவளுக்கு அடிமனது வரை சென்று பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
"என் மேல தப்பு இல்லை சார்.."என்று அவள் சொல்வதை முழுமையாக கேட்பதற்கு கூட அவன் அங்கில்லை.
இப்படி ஆளுக்கு ஒவ்வொருவராக வீட்டில் அவரவர் நினைவில் தவித்தபடி அன்றைய பொழுதை உணவு உண்ணாமல் கழிக்க, அவர்கள் அனைவரும் இப்படி இருப்பதற்கு தான்தான் காரணம் என்று தென்றல் மனது கவலைக் கொண்டது.
மறுநாள் அந்த ஊரின் முக்கியமான திருவிழாவான காளி கோயில் திருவிழா ஆரம்பமாகியது.
எப்போதும் அந்த ஊருக்குள் பூமாதேவியின் குடும்பத்திற்கும் ஒரு மரியாதை இருக்க, எப்போதும் போல் முதல் அழைப்பு அவர்களது குடும்பத்திற்கு தான்.
முதல் நாள் நடந்த சண்டையின் தடமே தெரியாது அந்த வீட்டில் இருந்த அனைவரும் சகஜமாக பேசிக்கொண்டு கோவிலுக்கு செல்வதற்கு முன்பாக தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
"அண்ணி.. இந்த புடவை உங்களுக்காக திருவிழாவிற்கு வாங்கினேன்.. அப்படியே என் மருமகளுக்கும் சேர்த்து புடவை வாங்கினேன் உங்களுக்கு பிடிச்சிருக்கா என்னன்னு தெரியல.. போன வாட்டி அம்மா வீட்டுக்கு போயிருந்தப்ப அங்க புடவைக்காரர் வந்தாரு உங்களுக்கு வாயில் புடவை ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்காகவே தேடி இந்த கலரை எடுத்தேன் இந்த ஊதா கலர் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கும் அண்ணி.. அப்படியே எனக்கும் இந்த பச்சை கலர் புடவை எடுத்தேன் உங்களுக்கு இந்த ஊதா கலர் புடவை கட்டிக்க பிடிக்கலாட்டி இந்த புடவையை கட்டிக்கோங்க.."என்றவர் இரு புடவைகளையும் லக்ஷ்மியிடம் அன்பாக கொடுக்க, அவரை அன்பாக பார்த்த லட்சுமி அவரது மனம் கோணாமல் அவர் கொடுத்த ஊதா கலர் புடவையை கைகளில் வாங்கியவர் அந்த புடவையை ஆசையாக தடவிப் பார்த்தார்.
"இந்த புடவை எனக்கு ரொம்ப ரொம்ப அழகா இருக்கும் அண்ணி.. நேத்து நான் உங்ககிட்ட அப்படி பேசினதுக்கு மன்னிப்பு கேட்டுக்குறேன்.. நீங்கதான் இந்த வீட்டோட முதல் மகள் நான் இன்னொரு வீட்டுக்கு வாழ போனதுக்கப்புறம் கூட இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறது ரொம்பவே பெரிய தப்பு.. அதுலயும் உங்களை எதிர்த்து பேசி இருக்கக் கூடாது சாரி.."என்றதும் அவரை கோபமாக முறைத்துப் பார்த்தார் சீதா.
"இப்படி எல்லாம் நீங்க பேசினா தான் எனக்கு கோபம் வரும் அண்ணி..நான் என்ன உங்கள என் நாத்தனாராவா பார்க்கிறேன்.. என் கூட பிறந்த சகோதரியா தான் பார்க்கிறேன். என் கூட பொறந்த தங்கச்சி என்கிட்ட சண்டை போட்டா நான் கோவிச்சுக்கிட்டு போக போறேனா என்ன? அதே மாதிரி தான் நீங்களும்.. நேத்தோட பிரச்சனையை நேத்தோடு முடிஞ்சு போச்சு இனிமே அதை பத்தி பேச வேண்டாம்.. இதை சுரேகா கிட்ட கொடுத்து போட்டுக்கிட்டு வர சொல்லுங்க நான் போய் அத்தைக்கும் தென்றலுக்கும் கூடவே வேலை செய்ற எல்லாருக்கும் எடுத்த புடவையை குடுத்துட்டு வரேன்.. ஆண்களுக்கு அவர் வேஷ்டி சட்டை எடுத்து இருக்கார் அவர் கொடுப்பார்.."என்ற சீதா பூமாதேவிக்காக வாங்கிய பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டு அவரிடம் சென்றார்.
பூஜை அறையில் அமர்ந்து மனமுருக வேண்டிக் கொண்டிருந்த, பூமாதேவியை தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவருக்கு முன்பாக அவருக்கு எடுத்த பட்டுப்புடவை வைத்துவிட்டு செல்ல, இதழ்களுக்குள் தெரியாத புன்னகையுடன் சீதா வைத்து சென்ற புடவையை பார்த்தவர் தன்னை தொந்தரவு செய்யாமல் அமைதியாக வெளியேறும் மருமகளை மனம் கனிய பார்த்தார்.
"அக்கா.. கோயில்ல பொங்கல் வைக்கிற மாதிரி இருக்கும் அந்த வெண்கல பானை கரண்டி எல்லாத்தையும் எடுத்துக்குங்க.. நான் பொங்கல் வைக்க தேவையான பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கிறேன்.. அப்படியே வெளில கோவிந்தன் அண்ணன் இருந்தா அவங்க கிட்ட சொல்லி இளநீர் பறிச்சிட்டு வர சொல்லுங்க.. ரொம்ப வெயிலா இருக்கு வீட்ல இருக்க எல்லாருக்கும் தாகம் ஏற்படும் அதனால அவங்களுக்கு தண்ணீர் தேவைப்படுற மாதிரி இருக்கும்.."
"சரி தென்றல் நான் போய் அவர்கிட்ட சொல்றேன் நீ வேலையை பாரு.."என்று அந்த வீட்டில் வேலை செய்யும் மற்றொரு வேலைக்கார பெண் பாக்கியம் அவரது கணவரை தேடிச் செல்ல, எதிர்பட்ட சீதா அவருக்கு வாங்கிய புடவையை அவரிடம் கொடுக்க, அதை கைகளில் ஆசையாக வாங்கிய பாக்கியம் "ரொம்ப அழகா இருக்குது மா.. எங்களையும் ஒரு மனுசனா மதிச்சு வருஷா வருஷம் திருவிழாவுக்கு புடவை எடுத்துக் கொடுத்து கூடவே செலவுக்கு பணமும் கொடுக்கிற உங்கள் நல்ல மனசுக்கு நீங்களும் உங்க குடும்பம் இன்னும் இன்னும் நல்லா இருப்பீங்க அம்மா.."என்றவர் கண்களில் கண்ணீர் வடிய அவரை அன்பாக முறைத்துப் பார்த்தார் சீதா.
"எப்பவும் வருஷ வருஷம் நான் புடவை எடுத்துக் கொடுக்கிறதும் நீங்க இந்த வார்த்தையை சொல்றதையும் எப்ப தான் நிறுத்த போறீங்கன்னு தெரியல பாக்கியம் அக்கா.. எல்லாரும் மனுஷங்க தான் நானும் கல்யாணத்துக்கு முன்னாடி வேலைக்காரர்கள் எல்லாம் வீட்டு அடிமை என்றுதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.. ஆனா இந்த குடும்பத்துக்கு வந்ததுக்கப்புறம் அத்தை கிட்ட இருந்து நிறைய விஷயம் கத்துகிட்டேன்.. அத்தையை பொறுத்தவரை எப்படி எல்லாரும் சமம்னு நினைக்கிறார்களோ அதே மாதிரி தான் நானும்.. சரி சரி பேசிக்கிட்டே இருந்தா கோவிலுக்கு போக லேட் ஆயிடும் நீங்க போய் ரெடியாயிட்டு வாங்க.."என்ற சீதா தென்றலை தேடிச் சென்றார்.
வீட்டில் உள்ள அனைவரும் குளித்து முடித்து சுத்தபத்தமாக இருக்க, தென்றலோ குளித்தும் கூட வேலை செய்கிறேன் என்று உடல் முழுவதும் தூசி படிந்த படி நின்று கொண்டிருக்க,அவளை பாவமாக பார்த்தார் சீதா.
எப்பொழுதும் அந்த வீட்டில் அதிகாலை எழுந்து முதல் ஆளாக குளிப்பது அவள்தான்.
ஆனால், குளித்ததற்கான எந்த அடையாளமும் இல்லாமல் நாள் முழுவதும் உடலை அழுக்காக்கிக்கொண்டு ஏதாவது வேலைகளை பார்க்கும் பெண்ணை பார்க்கும் பொழுது அவருக்கு மனம் வலித்தது.
அப்பொழுது கூட பரணில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவளை பார்த்தவருக்கு இந்தப் பெண் ஏன் தான் இப்படி இருக்கிறாளோ!என்று தோன்றாமல் இல்லை.
வீட்டில் கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகமாக வேலை செய்கிறாள் என்று சொல்வதை விட, அந்த குடும்பத்தை அவளது குடும்பமாக நினைத்து அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறாள் என்று சொல்வதே சாலப்பொருந்தும்.
"அம்மாடி தென்றல்.. இன்னைக்கு கூட எல்லா வேலையும் இப்படி தான் பார்க்கணுமா!! கோவிலுக்கு போகணும் கிளம்பு எந்த வேலையாக இருந்தாலும் வந்து பார்க்கலாம் அப்படியே உன்னால முடியலனாலும் ஆளுக்கு ஒரு வேலையா பார்த்தா முடிஞ்சிடும்.."என்ற சீதா குரலை கேட்டு, மேலே பொருட்களை எடுத்துக் கொண்டிருந்த தென்றல் கீழே குனிந்து பார்த்தாள்.
சீதாவை கண்டதும் மரியாதை நிமித்தமாக கீழே இறங்கியவள் இழுத்து சொருகி இருந்த புடவையின் தலைப்பை கீழே இறக்கிவிட, அவளது கைகளைப் பிடித்தவர் கிளி பச்சை நிறத்தில் இருந்த தாவணி பாவாடையை கொடுக்க, அதை ஆசையாக பார்த்தாள் தென்றல்.
"நீ இதோட இந்த வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் முழுசா முடிஞ்சிருச்சு தென்றல்.. போன வருஷம் புடவை கொடுக்கும் போது மறுத்தது மாதிரி இந்த வருஷம் மறுக்கக்கூடாது.."என்றவர் செல்லமாய் கண்டித்தார்.
"நான் சொல்ல மாட்டேன் அம்மா.. என் மேல நீங்க பாசமா எனக்கு கொடுத்திருக்கும் போது உங்கள் மனசு நோகும்படி எப்படி நான் வேணான்னு சொல்லுவேன்.."
"சரி சரி என்கிட்ட பேசியது போதும் சீக்கிரம் கிளம்பு கோவிலுக்கு போகலாம் வந்து எல்லா வேலையும் பார்க்கலாம்.. இல்ல இல்ல தினமும் நீ தானே வேலை பார்க்கிற இன்னைக்கு ஒரு நாள் நீ ஓய்வெடு நானும் லக்ஷ்மி அண்ணியும் எல்லா வேலைகளையும் பார்த்துக்கிறோம்.."
"வேண்டாம் அம்மா.. எல்லா வேலைகளையும் நான் பார்த்துக்கிறேன் வேலை ஒன்னும் இல்லை.."எனவும் சீதா அவளை முறைத்து பார்க்க, அதற்கு மேல் அவரிடம் மறுத்து எதுவும் பேசவில்லை தென்றல்.
அவள் அமைதியாக இருப்பதைக் கண்ட சீதா மௌனம் சம்மதம் என்று எடுத்துக்கொண்டு சின்ன புன்னகையுடன் அங்கிருந்து சென்றார்.
தென்றல் தன் கைகளில் இருந்த தாவணி பாவாடையை ஆசையுடன் பார்க்க, நொடிகளில் அவள் கையில் இருந்த தாவணி பாவாடையை பிடுங்கிய விஷ்ணுவரதன் அதை அவள் கண் முன்பாகவே கையில் கொண்டு வந்திருந்த கத்தரிக்கோல் உதவியுடன் நாறு நாறக கிழித்து அவள் கைகளில் திணித்துவிட்டு செல்ல, அந்த உடையை போலவே அவள் முகமும் வேதனையில் கசங்கி போனது அவனது செயலை நினைத்து.
அத்தியாயம் 4:
தன் கையில் கந்தலாக இருந்த துணியை கண்ட, தென்றல் கண்களில் கண்ணீர் அருவியென நிற்காமல் வழிந்தது.
'எதுக்காக எனக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது? இவர் எப்ப தான் என்னை புரிஞ்சுகிட்டு இந்த மாதிரி நடந்துக்கிறத எல்லாம் நிறுத்துவார்னு தெரியலையே.. கடவுளே!!'என்று மனதுக்குள்ளையே சொல்லிக் கொண்ட தென்றல், அந்தத் துணியை கண்டால் அதற்கு வேறு பிரச்சனை செய்வார்களோ! என்று பயந்து கொண்டு அந்த துணியை தன் துணிகள் இருந்த பையின் அடியில் மறைத்து வைத்து விட்டாள்.
"கோவிந்தன் இங்கே வா.. இந்தா உனக்கு வேட்டி சட்டை வாங்கிட்டு வந்திருக்கேன்.."என்ற கணேசன் வீட்டிலிருந்த அனைவருக்கும் வாங்கி வந்திருந்த வேஷ்டி சட்டையை கொடுக்க, அவரையே பார்த்தபடி நின்று கொண்டிருந்த விஷ்ணுவர்தனை அவர் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.
"ஐயா ரொம்ப நன்றிங்க.. எல்லாருக்கும் புது துணி எடுத்து கொடுக்கிறிங்க ஆனா நம்ம விஷ்ணுவரதன் ஐயாவுக்கு ஒன்னும் குடுக்கலயா? இந்த வருஷம் புதுசா பேண்ட் சர்ட் போட்டு நிக்கிறாங்க.. ஐயாவை வேஷ்டி சட்டையில் பார்க்கும்போதுதான் நல்ல கம்பீரமா இருக்கும்.. உங்க குடும்பத்துக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாதுங்க ஐயா.. ஆனா என்னையும் நீங்க உங்க குடும்பத்துல ஒருத்தரா நினைக்கிறது தெரியும் அந்த உரிமையில சொல்லுறேன்.. என்னதான் அய்யா மேல கோவம் இருந்தாலும் அவர் உங்க பிள்ளை இப்படி உங்க பிள்ளையை பல பேர் முன்னாடி நீங்களே விட்டுக் கொடுக்கிறது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம் தயவு செஞ்சு எந்த கோபமா இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு இன்னைக்கு ஒரு நாளாவது ஐயாவுக்கு பிடிச்சது மாதிரி நீங்க நடந்துக்கலாமே!!"என்ற கோவிந்தனை மறுத்து பேச முடியாத கணேசன் "சரி சரி அதை அப்புறம் பாத்துக்கலாம் நீங்க போய் உடையை மாத்திட்டு வண்டிக்கு ஏற்பாடு பண்ணுங்க எல்லாரும் கிளம்பனும்.."என்றவர் தங்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே வருஷ வருஷம் அணியும் வேஷ்டி சட்டை அணியாமல் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நிற்கும் மகனை மேலும் வெறுப்புடன் பார்த்துவிட்டு சென்றார்.
'என் மேல எவ்வளவு பாசமா இருந்தீங்கப்பா இப்ப உங்களையும் சேர்த்து நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரும் என்னை வெறுக்கிற அளவுக்கு பண்ண அவளை நான் சும்மா விடமாட்டேன்..' என்று மனதுக்குள் கருவிக் கொண்ட விஷ்ணு அவர்களோடு ஒன்றாக செல்ல மனம் வராமல் அவனது பைக்கை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டான்.
கோவிலுக்கு செல்லும் வழியில் அவன் மனமோ தான் மட்டும் இப்படி தனியாக செல்கிறோமே என்று உலைக்கலனாக கொதித்தது.
அதன் விளைவு தென்றல் மீது இருந்த அவனது வெறுப்பு இன்னுமின்னும் அதிகமாகி கொண்டு சென்றது.
"சுரேகா இந்த டிரஸ்ல பார்க்கும்போது நீ ரொம்ப அழகா இருக்க.."
"நீ மட்டும் என்ன ரேணுகா இந்த புடவை உனக்கு பார்க்க அவ்ளோ அழகா இருக்கு.. என் கண்ணே உனக்கு பட்டுடும் போலருக்கு இன்னைக்கு உன்னை பார்த்தால் என் அண்ணன் அப்படியே விழுந்துடுவார் பாரேன்.."என்றவள் அவளை பார்த்து கண்ணடிக்க, அவளது செயலில் ரேணுகா முகம் செங்காந்தளாக சிவந்துப் போனது.
அவளது முக சிவப்பை கண்டதும் ரேணுகா அவளது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடியவள் விஷ்ணு அறையில் அவளை பிடித்து தள்ளி கதவை சாத்திவிட்டு வெளியே ஓடிவிட்டாள்.
தனது அறையில் முக்கியமான போன் கால் பேசிக் கொண்டிருந்த விஷ்வா திடீரென உள்ளே நுழைந்த ரேணுகாவை கண்டதும் பேசிக் கொண்டிருந்த அழைப்பை துண்டிக்க முடியாமல் ஓரிரு நொடிகள் பேச, அவன் போன் பேசிக் கொண்டிருப்பதை கண்ட ரேணுகா அமைதியாக இருந்தவள், முதன்முதலாக தான் அணிந்திருந்த புடவையில் தான் எப்படி இருக்கிறோம் என்பதை அவன் வாயிலாக கேட்க, ஆவலாக தலையை குனிந்தபடி காத்திருக்க அவள் நினைத்ததற்கு மாறாக பேசி விட்டான் விஷ்வா.
பேசிக் கொண்டிருந்த அழைப்பை துண்டித்த விஷ்வா "உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இல்லை.. அடுத்தவங்களோட ரூம்க்கு இப்படி தான் சட்டுன்னு வருவியா? உனக்கு மேனர்ஸ்னா என்னன்னு கொஞ்சம் கூட தெரியலை.. உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படித்தான் நான் காலம் முழுக்க வாழ போறேன்னு தெரியலை போ.."என்றவன் கோபமாக அவனதறையை விட்டு வெளியேற, அவனை விக்கித்து போய் பார்த்தாள் பெண்ணவள்.
அவன் தன்னைப் பற்றி என்ன சொல்ல போகிறான் என்பதை கேட்பதற்கு ஆவலாக இருந்தவள் அவள் நினைத்ததற்கு மாறாக தன்னை திட்டி விட்டு செல்லும் தன் அத்தானை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லை அத்தான்.. நான்தான் பைத்தியம் மாதிரி உங்களை நினைச்சு துடிச்சுக்கிட்டு இருக்கேன் ஆனா உங்களுக்கு அந்த மாதிரி எதுவும் இல்ல போலருக்கு அதனால தான் எப்ப பார்த்தாலும் என்னை திட்டிக்கிட்டே இருக்கீங்க.. நான் தென்றல எங்க அண்ணன் கூட சேர்த்து வச்சு பேசுனது உங்களுக்கு பிடிக்காம போயிருக்கும்.. என்னதான் இருந்தாலும் உங்களுக்கு என்னை விட உங்க தங்கச்சி தான் ரொம்ப முக்கியம்ன்னு எனக்கு தெரியும்.. அது தெரிஞ்சும் நான் அப்படி பேசி இருக்க கூடாது.."என்று தன்னையே திட்டிக் கொண்டவள் அழுகையுடன் அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.
"அண்ணி இந்த புடவையில் பார்க்க நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.."என்ற சீதாவை புன்னகையுடன் பார்த்த லட்சுமி "இது யாருடைய செலக்சன் என் அண்ணியோட செலக்சன் ஆச்சே! எப்படி தப்பா போகும்.."என்றவர் புன்னகையுடன் சீதா தனக்கு வாங்கி கொடுத்த புடவையை அன்பாக வருடி கொடுத்தார்.
"என் மகள் மருமகள் ரெண்டு பேரும் பாக்குறதுக்கு எவ்வளவு அழகா இருக்கீங்க உங்க ரெண்டு பேரையும் பார்க்கும்போது என் கண்ணே பட்டுடும் போலருக்கு.."என்றபடி வந்தார் தேவி.
அவருக்கு ஒரு புன்னகையை பரிசாக கொடுத்த இரு பெண்களும் பதிலுக்கு அவரையும் பாராட்டிவிட்டு கோவிலுக்கு செல்வதற்கான வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.
அனைத்து வேலைகளும் முடிய அவர்கள் முன்பாக தயங்கி தயங்கி வந்து நின்றாள் தென்றல்.
சீதா தான் வாங்கி கொடுத்த தாவணி பாவாடையை அணியாமல் பழைய புடவையை அணிந்து வந்திருந்த தென்றலை கோபமாகவும் அதே நேரம் புரியாமலும் பார்க்க, அவரை நிமிர்ந்து பார்த்த தென்றல் கண்களில் மெலிதாக ஒரு கண்ணீர்.
"என்ன மன்னிச்சிடுங்க சீதா அம்மா.. நீங்க வாங்கி கொடுத்த புடவை கையில வச்சுட்டு வேலை பார்க்கும் போது எதிர்பார்க்காம அடுப்புல விழுந்து எரிஞ்சு போச்சு.. கோவிலுக்கு போகும் போது இப்படி ஒரு புடவையை கட்டிக்கிட்டு வந்தா உங்க எல்லாரையும் அசிங்கமா பேசுவாங்க அதனாலதான் அதை தூக்கி எறிஞ்சிட்டேன்.."என்றாள் சாமர்த்தியமாக.
"அப்படியா தென்றல். அந்த தாவணி பாவாடை உனக்கு ரொம்ப அழகா இருக்குமேன்னு ரொம்ப ஆசையா வாங்கிட்டு வந்தேன் பரவாயில்லை.. சரி அதை கொண்டுட்டு வா எப்படி இருக்குன்னு பார்ப்போம்.."என்றதும் அதுக்கு என்ன சொல்வது?என்று தெரியாமல் கையை பிசைந்தப் படி நின்று கொண்டிருந்த தென்றலை கண்டதும் சீதா விஷயம் என்னவென்று யூகித்து விட்டார்.
அதை வெளிப்படையாக கேட்டால் அவள் வாயிலிருந்து உண்மை வராது என்று அவர் சூட்சமாக கேட்க, அதைக் கூட புரிந்து கொள்ளாத தென்றல் அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
"என்ன யோசிச்சிகிட்டு நிக்கிற தென்றல் போய் எடுத்துக்கிட்டு வா.."
"ஹான்.. இல்லம்மா அந்த புடவையை பார்த்தால் உன் மனசு ரொம்ப கஷ்டப்படணும்னு நினைச்சு அந்த தாவணி பாவாடையை நான் தூக்கி போட்டுட்டேன்.. அதனாலதான் இப்ப இதை கட்டிட்டு வந்துருக்கேன்.. சரிங்க அம்மா கோவிலுக்கு எல்லாம் லேட்டாயிடுச்சு எல்லாத்தையும் எடுத்து வைக்கவா??"என்றவள் பூஜை சாமான்களில் கை வைக்க போக, அவளை தடுத்து நிறுத்தினார் சீதா.
"ஒழுங்கு மரியாதையா உண்மையை சொல்லு தென்றல் உனக்கு பொய் சொல்ல கூட தெரியல.. என் மகன் உனக்கு கொடுத்த டிரஸ்சை என்ன பண்ணுனான்.."
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்லங்க அம்மா.. நான் ஏன் உங்ககிட்ட பொய் சொல்ல போறேன்.."என்றவள் அவர் முகம் பார்க்க முடியாமல் நிலம் நோக்க, அதற்கு மேலும் அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் விட்டுவிட்டார் சீதா.
"சரி இதை பத்தி நம்ம அப்புறம் பேசலாம் இப்ப கோவிலுக்கு கிளம்பலாம் லேட் ஆயிடுச்சு.."என்றதும் தான் தென்றலுக்கு நிம்மதியாகி போனது.
எங்கே அவர் இந்த விஷயத்தை விடாமல் மேலும் இதைப் பற்றி கேட்டு தன்னை குடைந்து எடுத்து விடுவாரோ! என்று பயந்து கொண்டிருந்தவள் இப்பொழுது சற்று ஆசுவாசமாக, வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.
"டேய் மச்சான் என்ன இது? கோவிலுக்கு வேஷ்டி சட்டையில் பார்க்க அழகா வருவ உன்னை நாலு பொண்ணு பார்க்கும் அதுங்க உன்னை பார்க்கும் போது நாங்க அதுகளை நானும் பார்த்து ரசிக்கலாம்னு நினைச்சா நீ இப்படி வேஷ்டி சட்டையில் வந்து நிக்கிற!"என்ற நண்பனை எரிச்சலுடன் பார்த்த விஷ்ணு வேஷ்டிக்குள் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை எடுத்து பத்த வைத்தான்.
அவன் எரிச்சலில் இருக்கிறான் என்பதை அவன் செயல் மூலம் தெரிந்து கொண்ட அவனது நண்பன் கார்த்திக் விளையாட்டுத்தனத்தை கைவிட்டவனாக "என்னாச்சு மச்சான்? எதுக்காக இப்போ இவ்வளவு டென்ஷனா இருக்க! உன்னை ரொம்ப டென்ஷன் ஆக கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லையா? அப்புறம் எனக்கு என்ன மரியாதை!"என்றவனை குழப்பமாக பார்த்தான் விஷ்ணுவரதன்.
அவனது குழப்பமான பார்வையை கண்ட கார்த்திக் அப்பொழுதுதான் அவசரப்பட்டு உளறி வைத்தது ஞாபகம் வர,"இல்ல மச்சான் நீ டென்ஷன் ஆனா பாக்குறதுக்கு அழகா இருக்க மாட்ட.. அப்புறம் எப்படி உன்னை பொண்ணுங்க எல்லாம் பாக்கும் உன்னை பார்க்கிற பொண்ணுங்களை எல்லாம் நான் எப்படி பார்க்கிறது.. அந்த அக்கறையில் தான் கேட்டேன் மற்றபடி உன் மேல எல்லாம் எனக்கு அக்கறை கிடையாது.."என்று அவசரமாக மாற்றி சொல்ல, நண்பன் சொல்வது உண்மை என்ற நம்பிய அவனது நலம் விரும்பியும் எரிச்சலுடன் சிகரெட்டை இழுக்க ஆரம்பித்தான்.
"எல்லாம் என் வீட்டில் உள்ளவங்க பண்றது தான் டா.."
"அப்படி என்னடா உனக்கு பிரச்சனை? கூடி வாழ்ந்தால் கோடி நன்மைங்கிறது உங்க குடும்பத்தை பார்த்துதானே ஊரே சொல்லுது.."
"ஆமா.. அந்த ஒரே காரணத்துக்காக தான் நல்லவனா நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. இடையில இந்த ஒரு வருஷம் என்ன நடந்துச்சுன்னு சுத்தமா மறந்து போச்சு.. இல்லன்னா இந்நேரம் நான் எங்கே எப்படி இருந்திருப்பேன் தெரியுமா?"என்றவனை பயமாக பார்த்தான் கார்த்திக்.
அவனின் கண்களில் இருந்த பயத்தை கவனிக்க தவறிய விஷ்ணு, தன் சிந்தனையில் உழன்றபடி இருக்க அவனை அவனுக்கே தெரியாமல் ஒரு உருவம் தனது மொபைலில் பதிவு செய்து கொண்டது.
"சரி மச்சான் அதை விடு உன் பிரச்சனைக்கு என்ன காரணம் அதை சொல்லு.."
"வேற யாருடா எல்லாம் என் வீட்டு வேலைக்காரி அந்த தென்றல் தான்.. அவளைப் பார்க்கும்போது எனக்கு மனசுக்குள்ள ஒரு மாதிரி இருக்கு அது என்னன்னு சொல்ல எனக்கு தெரியல.. அவள் எல்லாம் எனக்கு வொர்த் ஆகுற அளவுக்கான எதிரி கிடையாது.. ஆனா அவளை பார்க்கும் போது மனசு என்னமோ போட்டு என்னை குடையுது.. அவளை பார்க்கும்போது என் மனசு என்கிட்ட என்னமோ சொல்ல துடிக்குது அது என்னன்னு எனக்கு தெரியல.."
"ரொம்ப யோசிக்காத வரதன் இந்த விஷயத்தை விடு.. அங்க பாரு இரண்டு அழகான பொண்ணுங்க உன்னை பார்க்குது.."
"ப்ச்.. நீ வேற ஏன்டா? எனக்கு அவளைப் பற்றி யோசிக்கும் போது மனசு என்னமோ பண்ணுது என்னுடைய மிகப்பெரிய எதிரி அவள்தான் டா.. அவ இருக்க தகுதிக்கு அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறா.. அதையும் என் தங்கச்சி மூலமா சொல்லி குடும்பத்துல பெரிய பிரச்சினையை உண்டு பண்ணி அத்தனைக்கும் காரணம் நான் தான்னு முடிச்சு வச்சுட்டா.. இப்ப என் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் என்னை கேவலமா பாக்குறாங்க என்கிட்ட பேசுறது கூட இல்ல மச்சான் என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க.."என்ற நண்பனை பாவமாக பார்த்த கார்த்திக் அவனது தோளில் கைப்போட்டு பேச்சை திசை திருப்பினான்.
"அதெல்லாம் விட்டு தள்ளு மச்சான் வீர வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்.. உன் வீட்டு வேலைக்காரி தென்றல் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கா மச்சான்.."என்றதும் அவனை முறைத்து பார்த்த விஷ்ணு ஏனோ கார்த்திக் சொன்ன வார்த்தைகள் அவனுக்கு பிடிக்காமல் தான் போனது.
அவனது அடி மனது அவனிடம் எதையோ சொல்ல துடிப்பது போலவே அவனுக்கு தோன்ற, அது என்ன என்று உணரும் முன்பே அவன் அந்த விஷயத்தை சிந்திப்பது கிடையாது.
"இங்க பாரு என்னதான் இருந்தாலும் அவ எங்க வீட்டு வேலைக்காரி எங்க வீட்டு வேலைக்காரிக்கு கூட எங்க வீட்டுல பாதுகாப்பு உண்டு..நீ இந்த மாதிரி பேசுறதே எனக்கு சுத்தமா பிடிக்கல மச்சான் இந்த மாதிரி இனிமே பேச வேண்டாம்.."என்றவன் கார்த்திக்கை விடுத்து முன்னே நடக்க ஆரம்பித்தான்.
அப்படி அழுத்தமாக சிந்திக்கும் பொழுது அவனுக்கு தலைவலி அதிகமாக வரும் என்பதால் எதையும் கருத்தில் கொள்வதும் கிடையாது அதைப்பற்றி ஆழ சிந்திப்பதும் கிடையாது.
செல்லும் நண்பனை பின்னாலிருந்த பார்த்த கார்த்திக்கின் கண்கள் சொல்ல முடியாத ஒரு உணர்வுகளை பிரதிபலித்தது.
அந்த உணர்வுகள் அவனது அடிமனது வரை சென்று அவனை கொல்லாமல் கொல்ல, மனதில் தோன்றிய சில உணர்வுகளை மனதோடு புதைத்துக் கொண்டவன் அவன் மனதின் ரகசியங்களை மனதோடு அழித்துவிட்டான்.
அதை அப்படியே விட்டுவிட்டு தன் மனதை மாற்றிக் கொள்வதற்காக விஷ்ணுவுடன் சேர்த்து அங்கு வந்திருக்கும் பெண்களையெல்லாம் வஞ்சனையே இல்லாமல் பார்க்க ஆரம்பித்தான்.
விஷ்ணுவோ அவர்களில் யாராவது தன் மனதில் பதிந்த அந்தப் பெண்ணாக இருக்கிறார்களா! என்று அவனது மனம் சல்லடை போட்டு சலித்து பார்க்க விடை என்னவோ பூஜ்யம் தான்.
கார்த்திக்கும் தன் நண்பனோடு சேர்ந்து அங்கு வந்திருக்கும் பெண்களை பார்க்கிறேன் என்று விஷ்ணுவிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.
அம்மாடி தென்றல்.. இந்த பொண்ணு ரேணுகாவை இன்னும் ஆளைக் காணும் நீ போய் அவளை கூட்டிட்டு வா.."என்ற லட்சுமி அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்த தென்றலை அனுப்பி வைத்துவிட்டு அவர் அந்த வேலையை கவனிக்க ஆரம்பித்தார்.
ரேணுகாவின் அறைக்கு வந்த தென்றல் அவளது அறை உள்பக்கமாக பூட்டியிருப்பதைக் கண்டு யோசனையாக கதவை தட்டிப் பார்த்தாள்.
"ரேணுகா மேடம் கதவை திறங்க கோவிலுக்கு போகணும்னு லட்சுமி அம்மா உங்களை வர சொல்லி சொன்னாங்க.."என்று அவளை அழைக்க, அந்த பக்கம் பதில் இல்லாமல் போக தென்றல் மனதில் கிலி பிடித்துக் கொண்டது.
"ரேணுகா மேடம் கதவை திறங்க.. கோவிலுக்கு லேட்டாயிடுச்சுன்னு உங்களை லட்சுமி அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க தயவு செஞ்சு கதவை திறங்க.."என்றவள் கதவை தட்டிப் பார்க்க, அந்த பக்கம் எந்த சப்தமும் இல்லை.
கோவிலுக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்த ரேணுகா அறைக்கு பக்கத்திலிருந்த சுரேகா தென்றல் சத்தம் கேட்டு வெளியில் வந்தவள் அங்கு பதட்டமாக தென்றல் ரேணுகாவின் அறையை தட்டிக் கொண்டிருப்பதை கண்டு எரிச்சலாக அவள் பக்கத்தில் வந்தாள்.
"ஏய் இப்ப எதுக்கு நீ இங்க வந்த உன்னை யார் இங்க வர சொல்லி சொன்னா?"
"இல்லை மேடம்.. கோவிலுக்கு போக லேட் ஆயிடுச்சுன்னு லட்சுமி அம்மா தான் என்னை ரேணுகா மேடமை கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க.."
"எந்த கேள்வி கேட்டாலும் அதுக்கு உன்கிட்ட ஒரு பதில் இருக்கும் தள்ளிப்போ அங்கிட்டு நான் என்னன்னு பார்க்கிறேன்.."என்றதும் தென்றல் விலகிவிட, அவளை இளக்காரமாக ஒரு பார்வை பார்த்த சுரேகா கதவை தட்ட ஆரம்பித்தாள்.
"ரேணுகா நான் சுரேகா கூப்பிடுகிறேன் கதவை திற.."என்று அவளும் கதவைத் தட்டிப் பார்க்க பதிலில்லை.
அவள் கதவை திறக்காமல் போனதும் தென்றலுக்கு பயம்பிடித்துக் கொள்ள,"சுரேகா மேடம் நான் போய் கீழே லட்சுமி அம்மாவை கூட்டிட்டு வரவா இல்லை வேற யாரையாவது கூட்டிட்டு வரவா! ரேணுகா மேடம் ரொம்ப நேரமா கதவை திறக்க மாட்டேங்குறாங்க எனக்கு பயமா இருக்கு.."எனவும் அவளை எரிச்சலாக பார்த்தாள் சுரேகா.
"கொஞ்ச நேரம் உன் வாயை மூடிக்கிட்டு நில்லுடி.."என்றவள் என்ன செய்தால் அவள் கதவை திறப்பாள் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
சில நொடிகள் சிந்தித்துக் கொண்டிருந்த சுரேகாவிற்கு மனதில் ஒரு யோசனை தோன்ற அதை அப்படியே செயல்படுத்தினாள்.
"ரேணுகா அண்ணி கதவை திறங்க உங்களை அண்ணன் கூப்பிடுறார்.. உங்களோட வருங்கால நாத்தனார் என்கிற முறையில் சொல்றேன் கதவை திறங்க நாத்தனார்க்கு மரியாதை கொடுக்கிறதா இருந்தா கதவை திறங்க.."என்றதும் தான் தாமதம் பட்டென கதவு திறந்து கொண்டது.
அங்கு இமைகள் வீங்கி அழுது கொண்டிருந்த ரேணுகாவை கண்டதும் சுரேகாவிற்கு தூக்கி வாரி போட்டது.
அவளைக் கண்ட தென்றலுக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது அவளது நிலையை கண்டு.
அவளது நிலையைக் கண்டு தென்றல் வருத்தம் கொள்ள ரேணுகாவிற்கு ஏற்றுக்கொண்டு சுரேகா அவளை சில, நொடிகளில் வார்த்தைகளால் வதம் செய்யப் போகிறாள் என்பதை பாவையவள் உணராமல் போனதுதான் அந்தோ பரிதாபம்.
அத்தியாயம் 5:
"என்ன ரேணுகா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே நீ போட்டிருந்த டிரஸ்ஸை என்கிட்ட வந்து காமிச்ச பாக்குறதுக்கு அவ்வளவு அழகா இருந்த.. அண்ணன் ரூம்ல உன்ன விட்டுட்டு வந்தேன் ரெண்டு பேரும் இந்நேரம் சந்தோஷமா பேசிக்கிட்டு இருப்பீங்க உங்க பிரச்சனை தீர்ந்திருக்கும்னு நினைச்சேன் இப்படி உன் ரூம்ல உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க என்ன ஆச்சு அண்ணன் உன்னை எதுவும் சொன்னாரா?"என்றவளை தேம்பலுடன் கட்டிப்பிடித்து சிறு பிள்ளை போல் அழுக ஆரம்பித்தாள் ரேணுகா.
தன் மீது விழுந்து அழுகும் தனது வருங்கால அண்ணியை புரியாமல் பார்த்த சுரேகா அவளை சமாதானப்படுத்தும் படி பேச, எதற்கும் மசியவில்லை ரேணுகா.
அவளது முகத்தை தன்னிலிருந்து பிரித்த சுரேகா தன்னை பார்த்தபடி அவளது முகத்தை தன் முகத்துக்கு நேராக நிமிர்த்தியவள் "இப்ப என்ன பிரச்சனைன்னு சொல்ல போறியா இல்லையா! இப்படி சின்ன பிள்ளை மாதிரி அழுதுகிட்டு இருந்தா நான் என்னன்னு எடுத்துக்கிறது நான் வேணா அண்ணன் கிட்ட பேசுறேன் என்னன்னு சொல்லு.. நான் எது சொன்னாலும் அண்ணன் கேட்பார்னு உனக்கு நல்லாவே தெரியும்.. வாயை திறந்து ஏதாவது சொன்னால் தானே எனக்கு தெரியும் இப்படி உள்ளுக்குள்ளேயே அழுதுகிட்டு இருந்தா எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது வாயைத் திறந்து சொல்லு ரேணு.."என்று கோபமாக பேச, அவள் பேசியதும் ரேணுகா கண்களில் இருந்த கண்ணீர் நின்றது.
"உங்க அண்ணன் என்னை ரொம்ப திட்டி பேசிட்டார்.. எப்பவும் ஏன் ஒரு நாள் கூட என்கிட்ட இப்படி பேசினது கிடையாது இன்னைக்கு என்கிட்ட ரொம்ப கடுமையா பேசிட்டாங்க.. என்னால அத தாங்கிக்கவே முடியல ரேகா.."
"இதுக்கெல்லாம் காரணம் யாரு ரேணுகா.. என் அண்ணாவுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்.. நீ சொன்னியே உன் அண்ணனுக்கு இதோ இந்த தென்றலை கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறேன்னு.. இதே மாதிரி என் அண்ணனுக்கும் நான் வேற யாரையாவது கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொல்லியிருந்தா உன் மனசு என்ன பாடுபடும்.. உன்னோட கஷ்டமும் வலியும் தானே எனக்கும்..நான் அண்ணன் மேல எவ்வளவு உயிரா இருக்கேனு உனக்கே நல்லா தெரியும் அப்படியிருந்தும் நீ என்ன சொல்லி இருக்க? இந்த தென்றல் கிட்ட அப்படி பேசலாமா! நீ சொன்ன ஒரு வார்த்தை எவ்வளவு பெரிய பிரச்சினையை உண்டாக்கி எல்லாருக்கும் எவ்வளவு காயத்தை கொடுத்திருக்கு உன்னால உன் அண்ணனை இந்த வீட்ல உள்ள எல்லாரும் ஒதுக்கி வச்சுட்டாங்க அதுவும் இந்த வேலைக்காரிக்காக.."என்று தென்றலை பார்க்க கூட பிடிக்காமல் அருவருப்பாக முகத்தை சுளித்தாள் சுரேகா.
அவள் பேசியதை கேட்டு தென்றலுக்கு சற்றும் மனம் வலிக்கவில்லை.
ஒருமுறை ஒருவர் ஒரு வார்த்தையை பேசினால் மனதுக்கு வலிக்கும். தன்னை கஷ்டப்படுத்த வேண்டும் என்று இந்த வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்த நாள் முதலே தன்னை இதுபோலவே தூற்றிக் கொண்டிருக்கும் சுரேகாவின் பேச்செல்லாம் இப்பொழுது தென்றலுக்கு வேதனையை கொடுக்கவில்லை.
மாறாக, தன்னால் ஒருவர் மனது கஷ்டப்படுகிறதே என்றுதான் அவள் வருத்தம் கொண்டாள்.
சுரேகா சொன்னதும்தான் தான் பேசிய வார்த்தைகள் எத்தனை பெரிய தவறு என்று உணர்ந்து கொண்டாள் ரேணுகா.
'தான் சொன்னது போலவே சுரேகா விஷ்வாவிடம் வேறொரு பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என்று சொல்லி இருந்தால் தன் மனம் என்ன பாடுபடும் அதேபோல தானே அவளுக்கும் இருக்கும்..'என்று அவளது மனம் எடுத்துரைக்க, அதன் விளைவு முற்றிலுமாக சுரேகா பக்கம் சாய்ந்தாள்.
"என்ன மன்னிச்சிடுங்க அண்ணி.."என்று ரேகாவின் கைகளை ரேணுகா பிடிக்க, அவள் சொன்ன அண்ணி என்ற வார்த்தை ரேணுகாவின் அடிமனது வரை சென்று தித்திப்பை உண்டாக்கியது.
"ரொம்ப சந்தோசமா இருக்கு ரேணுகா.. இப்பவாவது என்னை உன் அண்ணியா ஏத்திக்கிட்டியே!!"என்றவள் குரலில் தான் அத்தனை ஏக்கம்.
அவள் குரலில் இருந்த ஏக்கத்தை கண்டு ரேணுகாவிற்கு ஒரு மாதிரியாகி போனது.
"இனிமே நான் அப்படி எதுவுமே பேச மாட்டேன் அண்ணி.. அண்ணனுக்கு எப்பவுமே சரியான ஜோடி நீங்க மட்டும்தான் எப்படியாவது விஷ்வா அத்தான் கிட்ட சொல்லி என்கிட்ட பேச சொல்லி சொல்லுங்க அதுவும் முன்ன மாதிரி சந்தோஷமா.. என்னால அவர் பேசாம இருக்கறதை தாங்கிக்க முடியல.. இந்த கஷ்டத்தை அனுபவிக்கும் போது தான் நான் பேசின வார்த்தை எவ்வளவு பெரிய தப்புன்னு எனக்கு புரியுது தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.."என்றவள் கண்களை துடைத்துக்கொண்டாள்.
"தட்ஸ் மை கேர்ள்.."என்று அவள் கன்னத்தை செல்லமாக தட்டிக் கொடுத்த ரேகா, அங்கு தங்களையே புன்னகையுடன் பார்த்தபடி நின்று கொண்டிருந்த தென்றலை கண்டதும் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் சகட்டு மேனிக்கு உதிர ஆரம்பித்தது.
"ஏய்.. உனக்கு இன்னும் இங்க என்ன வேலை இன்னும் போகாம என்ன எங்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க.."என்று அதட்டினாள்.
"இல்ல ரேகா மேடம்.. ரேணுகா மேடமை அவங்க அம்மா கூட்டிட்டு வர சொல்லி சொன்னாங்க.. கோவிலுக்கு போக ரொம்ப லேட் ஆயிடுச்சுன்னு சொல்லி சொன்னாங்க அதனாலதான் அவங்களை கையோட கூட்டிட்டு போகலாம்னு நின்னேன்.."
"வாய மூடுடி உன்னால தான் இந்த வீட்ல எவ்வளவு பிரச்சனைன்னு நீயே பாரு.. ஒரு வீட்டு வேலைக்காரிக்கு இவ்வளவு இம்பார்டன்ஸ் குடுக்குற ஒரே குடும்பம் இந்த குடும்பமா மட்டும்தான் இருக்கும்.. யாரை எங்க வைக்கணும்னு தெரியாம இந்த குடும்பத்துல இருக்க எல்லாரும் அவங்க இஷ்டத்துக்கு ஆடிட்டு இருக்காங்க.. எனக்கு அது கொஞ்சம் கூட பிடிக்கல எல்லாத்துக்கும் சேர்த்து நான் ஒரு முடிவு கட்டுகிறேன்..."என்றவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் மௌனம் சாதித்தாள் தென்றல்.
"இந்த வீட்டோட சாபக்கேடு நீதான்டி.. எப்ப இந்த குடும்பத்துல நீ கால் எடுத்து வச்சியோ அன்னைக்கு இந்த குடும்பத்துல பிரச்சனை ஆரம்பமாச்சு.. சின்ன புள்ளையா இருக்கும்போது தொலைந்து போன நீ அப்படியே போய் தொலைய வேண்டியதுதானே எதுக்கு மறுபடியும் உங்க தாத்தா பேரை சொல்லிக்கிட்டு இந்த வீட்ல வந்து வேலைக்கு சேர்ந்து தொலைஞ்ச! இந்த வீட்டுக்கு வந்து வேலைக்காரின்னு சேர்ந்ததும் போதும் எங்க எல்லாருடைய நிம்மதியும் பறிபோனதும் போதும்.. நீ ஒரு துரதிஷ்டம் புடிச்சவடி.. அதனாலதான் யாருமே இல்லாத அனாதையா இப்படி நின்னுகிட்டு இருக்க.. உன்ன புடிச்ச துரதிஷ்டம் இப்ப இந்த குடும்பத்தையும் ஆட்டி படைக்குது.. அதை இந்த குடும்பத்துல இருக்க யார்கிட்டயாவது சொன்னால் கேப்பாங்களா என்னமோ நான் தப்பா பேசினது மாதிரி என்னதான் எல்லாரும் திட்டுவாங்க.. கூடிய சீக்கிரம் விஷ்ணுவுக்கும் எனக்கும் கல்யாணமானதும் முதல் வேலையா உன்னை இந்த வீட்டிலிருந்து துரத்தி அடிக்கிறது தான் என்னோட முதல் வேலை.. போனா போகுது இத்தனை நாள் இந்த வீட்ல வேலை பார்த்த பாவத்துக்காக சொல்றேன் கூடிய சீக்கிரமே வேற வீட்ல வேலை தேடி வச்சுக்க..அதுவும் இந்த வீட்டை விட்டுப் போயி இந்த ஊரை விட்டு போய் வெளியூரில் தேடிக்க.. உன்னோட முகத்தைக் கூட நாங்க யாரும் பார்க்க கூடாது.."என்றதும் அவள் பேசிய பேச்சைக் கேட்டு தென்றல் மனது பெரிதும் அடிபட்டு போனது.
அவள் வாய் எதையோ சொல்ல துடிக்க, சொல்ல முடியாமல் மௌனம் காத்தாள்.
தான் பேசிய பேச்சுக்கு எதிர் பேச்சு பேச அவள் துடித்து கொண்டிருப்பதைக் கண்ட ரேகாவின் கோபம் இன்னும் அதிகமாக, தான் பேசும் வார்த்தைகளுக்கு எல்லாம் அமைதியாக கண்ணீர் வடித்தபடி நில்லாமல் தன்னை தன் வீட்டு வேலைக்காரி தன்னையே எதிர்த்து பேசுவதற்காக துடித்துக் கொண்டிருப்பதை கண்டதும் அவள் மனதில் இருந்த வக்கிர புத்தி அதிகமாக தென்றலை எப்படியாவது அழவைக்க வேண்டும் என்று வார்த்தைகளை இன்னும் அஸ்திரமாக்கி அவள் மீது பிரயோகம் செய்ய அதன் விளைவு எதிர்பார்த்தது போலவே அவளது எதிரி சாய்ந்து போனாள்.
"என்னடி என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு துடிக்கிற! நான் சொன்னதுல என்ன தப்புன்னு சொல்லு நீ ஒரு துரதிஷ்டம் பிடிச்ச பொண்ணு.. உனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல உனக்கு என் விஷ்ணு அத்தான் வேணுமா?தரித்திரம் பத்தி கேள்விப்பட்டிருப்ப இல்லையா? அதோட முழு உருவம் நீதாண்டி.. உன்ன பிடிச்சது எங்க எல்லாரையும் ஆட்டி படைக்குது.. உன் முகத்தைக் கூட பாக்க எங்க யாருக்கும் பிடிக்கல..விடிய காலம்பரமே டீ குடுக்கிறேன்னு எங்க முன்னாடி வந்து முழிச்சு எல்லாருடைய நாளையும் கருப்பு நாளா மாத்திடு.. இந்த வீட்ல இருக்க யாராவது ஒருத்தர் செத்தா தான் உனக்கும் சந்தோஷம் இந்த வீட்ல இருக்க எல்லாரும் அப்பதான் உன்னை புரிஞ்சுகிட்டு உன்னை அடிச்சு துரத்துவாங்க.. அப்பதான் இந்த வீட்ல இருக்க எல்லாருக்கும் நான் சொல்ல வர்றது புரியும்.. அதுவரைக்கும் எல்லாருக்கும் நான் கெட்டவளா தான் இருப்பேன் சை.. உன் கூட பேசறது கூட எனக்கு பெரிய அசிங்கம் இனிமே என் கண்ணு முன்னாடி வந்திராத அவ்வளவுதான் உனக்கு மரியாதை.."என்றவள் தன் மனதில் அத்தனை நாள் வைத்திருந்த நஞ்சக வார்த்தைகள் அனைத்தையும் பிரயோகம் செய்ய, அவள் பேசிய பேச்சின் வீரியம் தாங்க முடியாமல் அந்த இடத்திலேயே தொய்ந்து அமர்ந்தாள் பெண்ணவள்.
அவள் அத்தனை வார்த்தைகள் பேச ஒரு வார்த்தை கூட எதிர்த்துப் பேசாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரேணுக்காவை நம்ப முடியாமல் பார்த்த தென்றல் மனிதர்கள் தான் எத்தனை வேகமாக மாறுகிறார்கள் என்று மனதுக்குள் வெறுப்பாக எண்ணிக்கொண்டாள்.
"இங்க பாரு நாங்க எல்லாரும் குடும்பமா கோவிலுக்கு போறோம்.. அங்கேயும் வந்து நின்னு எங்க எல்லாரோட சந்தோசத்தையும் குலைக்காதே.. அதுவும் உன்னை பார்த்தா விஷ்ணு அத்தானுக்கு கோபம் ரொம்ப வரும் அதுக்கப்புறம் அவரோட சந்தோசம் என்னோட சந்தோசம் குடும்பத்தில் இருக்கிற எல்லாருடைய சந்தோசமும் மொத்தமா பறிபோயிடும்.. நீ இங்கேயே ஏதாவது ஒரு காரணம் சொல்லி இருக்கணும் எங்க கூட வரக்கூடாது.."என்றவள் அவளையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்த ரேணுகாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கி சென்று விட்டாள்.
அவள் பேசிய வார்த்தைகள் யாவும் தென்றல் காதுகளை சுத்தி சுத்தி வர, யாரிடமாவது அடைக்கலம் புக வேண்டும் என்று அவள் மனது துடிக்க, அப்படியே அமர்ந்திருந்தாள்.
ஒரு மனிதனை தாக்க ஆயுதம் தேவையில்லை.
அவர்களின் சொல் என்னும் அம்பு கொண்டு எதிரில் இருப்பவரின் இதயத்தை எளிமையாக துளைக்க முடியும் என்பதை நிரூபித்து இருந்தாள் சுரேகா.
தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை எனும் போது அவர்களை காயப்படுத்த அனைத்து மனிதர்களும் கையில் எடுக்கும் ஒரே அஸ்திரம் அவர்களை பற்றி தவறாக பேசுவது தானே!!
கீழே இறங்கி வந்த ரேணுகாவையும் சுரேகாவையும் கண்ட லட்சுமி அவர்களுக்கு பின்னால் தென்றல் வருகிறாளா? என்று பார்க்க, அவளை காணாது போக இரு பெண்களையும் கேள்வியாக நோக்க அவர் பார்வை புரிந்தும் பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார்கள்.
கீழே இறங்கி வந்து ரேகா பேசிய வார்த்தைகளை சொல்லி பிரச்சனையை மீண்டும் ஆரம்பித்து விடுவாளோ தென்றல் என்று ரேணுகா பயம் கொள்ள, சுரேகா அதற்கெல்லாம் சிறிதும் அஞ்சாமல் வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்ற ரீதியில் நிற்க என்று எப்பொழுதும் போல் இதழில் புன்னகையுடன் கீழே இறங்கி வந்தாள்.
"உன்ன தான் இவ்வளவு நேரம் தேடிக்கிட்டு இருந்தேன் தென்றல்.. இந்த பொண்ணை கூட்டிட்டு வரதுக்கு எதுக்கு இவ்வளவு நேரம் உனக்கு.. சரி சரி சீக்கிரம் கிளம்பு கோவிலுக்கு போகணும்.."என்றவர் கோவிலுக்கு கிளம்ப வேண்டிய பதட்டத்தில் அவளை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டார்.
நன்றாக கூர்ந்து கவனித்து இருந்தால் அவள் கண்களில் தாண்டவமாடிய சோகத்தை கண்டிருக்கலாமோ என்னவோ!!
"தப்பா எடுத்துக்காதீங்க லட்சுமி அம்மா.. ரேணுகா அம்மாவை கூப்பிட மாடி ஏறியதும் ஒதுங்கிட்டேன்.. சுரேகா மேடம் தான் எனக்கு தேவையானதை கொடுத்தாங்க அதனால்தான் வருவதற்கு கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு மன்னிச்சுக்கோங்க.. என்னால இப்ப கோவிலுக்கு வர முடியாது நீங்க மட்டும் போயிட்டு வாங்க.."என்றதும் அவளைப் பார்த்த லட்சுமி முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது.
அவர் முகத்தில் ஏமாற்றத்தை கண்டதும் தான் பொய் சொல்கிறோம் என்றும் தெரிந்தும் கூட தென்றல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு தன்னால் அவர்கள் குடும்பத்தில் மீண்டும் ஒரு பிரச்சனை வேண்டாம் என்று மௌனம் சாதித்தாள்.
"இல்லையே தென்றல் இப்பதானே ஒரு 15 நாளைக்கு முன்னாடி நீ தலைக்கு ஊத்தினதா என்கிட்ட சொன்ன.."என்று அங்கு நின்று கொண்டிருந்த பூமாதேவி கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறிய தென்றல் எதையெதையோ சொல்லி அவர்களை சமாளித்து அவர்களை மட்டும் கோவிலுக்கு போக சொல்லியவள் அவர்களிடம் அப்படியே இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் கேட்டுக் கொண்டாள்.
"என்னமோ போ தென்றல் என்னென்னமோ சொல்லி என்கிட்ட சமாளிக்கிற.. நீயும் கோவிலுக்கு வருவேன்னு நானும் என் குடும்பத்தில் இருக்கிற எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டோம் பரவால்ல உனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்த்தாலே நல்லா தெரியுது நல்லா ஓய்வெடு.. ரெண்டு நாள் எங்க போக போற இங்கேயே இருக்கலாமே.."
"இல்லம்மா நான் வந்த ஊர்ல எனக்கு தெரிஞ்ச அக்காங்க இருக்காங்க.. என்னதான் இருந்தாலும் அவங்க கூட தான் நான் சின்ன வயசுல இருந்து பழகிக்கிட்டு இருந்தேன்.. என் தாத்தா சாகறதுக்கு முன்னாடி தான் இங்கே இருக்கிறது தெரிஞ்சு வந்தேன்.. வந்த இடத்துல எனக்கு உங்களோட பழக்கமும் கிடைச்சிருச்சு இந்த வீட்டுக்கு வேலை செய்ற பாக்கியமும் எனக்கு கிடைச்சிருக்கு.. அதுக்காக என்னை வளர்த்து விட்டவங்களை என்னால மறக்க முடியாதில்ல அம்மா.. கோவில் பூஜை இருக்கிறதால என்னால வீட்லயும் எந்த வேலையும் செய்ய முடியாது.. அதனால நான் போயிட்டு வரதுக்கு எனக்கு அனுமதி கொடுங்க அம்மா.."
"எங்க எல்லாரையும் பார்த்து பார்த்து நீ கவனிச்சிக்கும்போது உன்னை நாங்க பாத்துக்க மாட்டோமோ தென்றல்.."என்று ஆற்றாமையாக சீதா கேட்க, அவருக்கு ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தவள் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
அவளை இதற்கு மேலும் கட்டாயப்படுத்த முடியாது என்று அரை மனதாக அவளை வீட்டிலேயே விட்டுவிட்டு குடும்பத்தில் இருந்த அனைவரும் கிளம்ப, சுரேகா அவளை எகத்தாளமாக பார்த்தபடி சிரித்துக்கொண்டு அவளையே பரிதாபமாக பார்த்தபடி நின்ற ரேணுகாவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றாள்.
செல்லும் அவர்களை சொல்ல முடியாத ஒரு வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்த தென்றல் தன் மனம் எந்த இடத்திற்கு சென்றால் நிம்மதி அடையுமோ இடத்திற்கு கிளம்ப ஆயத்தமானாள்.
கோவிலில் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த விஷ்ணு தன் குடும்பத்தில் இருந்த அனைவரும் வந்துவிட்டார்களா என்று பார்க்க, யாரையும் காணவில்லை.
'இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இந்நேரம் எல்லாரும் கோவிலுக்கு வந்திருக்கணுமே!!'என்று மனதுக்குள் நினைத்தபடி அங்கிருந்த பெண்களை பார்த்துக் கொண்டிருந்தவன் தன் மனதை கவர்ந்த அந்தப் பெண் இங்காவது இருக்கிறாளா? என்று அவளைப் பார்க்க மாட்டோமா! என்ற நப்பாசையுடன் தன் விழிகளை கூர்மையாக்கி தேடிக் கொண்டிருந்தான்.
"பிரகல்யா கன்ஸ்ட்ரக்சன் ஆஃப் கம்பெனி.."என்று பொன்னிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெயரைத் தாங்கி பிரம்மாண்டமாக மின்னிக் கொண்டிருந்தது அந்த நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் செழுமையே சொல்லியது அது பல கோடிகளை விழுங்கிய கட்டிடம் என்று.
அந்த கட்டிடத்தில் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, புதிதாக ஆரம்பித்திருக்கும் தொழிலுக்கு ஆன்லைனில் வந்திருந்த விண்ணப்பங்களை சரி பார்த்துக் கொண்டிருந்தார் அந்த கம்பெனியில் பல வருடங்களாக வேலை பார்க்கும் மேனேஜர் சண்முகம்.
வந்திருந்த அனைத்து விண்ணப்பங்களையும் நமது நாயகி பிரகல்யாவிற்கு அப்படியே அனுப்பி விட, மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த பிரகல்யா தன் மேனேஜர் அனுப்பிய விண்ணப்பங்கள் அனைத்தையும் வரிசையாக அதே நேரம் நொடிக்கு நொடி ஒவ்வொன்றையும் பரபரவென பார்த்துக் கொண்டே வந்தவள் அதிலிருந்து தகுதியானவர்களை நிமிடங்களில் கண்டுபிடித்து அவர்களை மட்டும் வர சொல்லி மெயில் அனுப்பும் படி சண்முகத்திற்கு மெசேஜ் ஒன்றை தட்டி விட, அவளது மெசேஜ் வந்ததும் எப்போதும் போல அவளை ஆச்சரியமாக பார்த்தார் சண்முகம்.
தான் அத்தனை பேரையும் பார்வையிட்டு அதற்கு தகுதியானவர்களாய் இருப்பார்களா? என்று யோசித்து யோசித்து பல மணி நேரம் அதற்கு என நேரம் செலுத்தி அவளுக்கு மெயில் செய்ய, அவளோ அரைமணி நேரம் கூட எடுத்துக் கொள்ளாமல் தகுதியானவர்களை கண்டுபிடித்து அனுப்பியதை ஆச்சரியமாக பார்த்தார்.
அவள் கம்பெனிக்கு எம்டியாக பொறுப்பேற்றுக்கொண்ட போது முதன்முதலாக சண்முகம் இப்படி அனுப்பியதும் அப்பொழுதும் இதே போல் தான் அவள் விரைவாக மெயில் அனுப்பினாள்.
தான் அத்தனை நேரம் செலுத்தி அவளுக்கு மெயில் செய்திருக்க,அவள் உடனே அதுவும் சிலரை மட்டும் சில நிமிடங்களில் நேர்காணலுக்கு வர சொல்லி இருப்பதை கண்டு அவருக்கு உள்ளுக்குள் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
'இத்தனை வருஷமா இந்த கம்பெனியில் வேலை பார்க்கிறேன் எனக்கு தெரியாதா? இந்த வேலைக்கு தகுதியானவர்கள் யார் யார்ன்னு.. இந்த பொண்ணு இப்ப வந்துட்டு ஏதோ தெரியாத ஆளுங்களை எல்லாம் வர சொல்லி எனக்கு மெயில் பண்ணிருக்கு.. நான் இதைப் பத்தி பேசினா என்கிட்ட பேசாதீர்கள் என்று சொல்லி என்னையே எதிர்த்து பேசுது.. வர்ற எல்லாரும் அந்த பொண்ண ஏமாற்றும் போது கண்டிப்பா என்கிட்ட வந்து அறிவுரை கேட்கும்..'என்று அனுபவஸ்தர் கர்வமாக எண்ணிக் கொண்டிருக்க, அவரது கர்வம் மொத்தமும் அழிந்து போனது.
அவள் தேர்வு செய்திருந்த அத்தனை பேரும் நேர்காணல் செய்த போது தகுதியானவர்களாக இருந்தார்கள்.
வந்திருந்தவர்களில் ஒருவரை கூட அவர்களால் மறுத்து பேசி இயலாத அளவிற்கு அத்தனை பேரும் அந்த வேலைக்கு பர்ஃபெக்டாக பொருந்தி போனார்கள்.
அந்த நொடி முதல் அவள் மீது மரியாதை கொண்ட சண்முகம் இப்போது வரை அவளை அதே ஆச்சரியம் மாறாத பார்வையோடு தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
பிரகல்யா சொன்னது போலவே அந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு மெயில் அனுப்ப, அதில் ஒருத்தியாக அப்ளை செய்திருந்த சுரேகாவிற்கும் மெயில் வர அதைக் கண்டு அவளடைந்த பரவசத்திற்கு வார்த்தையே இல்லாமல் போக, அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதற்காக தன் விஷ்ணு அத்தானை தேடி ஓடினாள்.
கூடவே தென்றல் வராத சந்தோஷமும் ரேணுகா தன்னை அண்ணி என்று அழைத்த சந்தோசமும் இப்பொழுது தனக்கு இந்த வேலை கிடைக்க வேண்டும் என்று நெடு நாட்களாக அவள் ஏங்கிக் கொண்டிருந்த பிரகல்யா கம்பெனியில் வேலை கிடைக்க, அன்று அவள் அடைந்த உவகைக்கு எல்லையில்லாமல் போனது.
வீட்டில் தனியாக சோர்ந்து போய் அமர்ந்திருந்த தென்றல் பூமாதேவியிடம் சொன்னது போலவே அவளுக்கு மிகவும் பிடித்த இடத்திற்கு தனது பயணத்தை மேற்கொண்டாள்.
இங்கு தனது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு வந்து விட்டார்களா? என்று பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு அவர்களது வீட்டில் உள்ள கார் வந்து நிற்க, அவர்களைக் கண்டும் காணாதது போல் திரும்பி கொண்டான்.
பார்வையை வேறு பக்கம் அவன் திருப்பிக் கொண்ட போதும் கவனம் முழுவதும் இங்குதான் இருந்தது.
காரிலிருந்து அனைவரும் இறங்க, அதில் ஒரே ஒருத்தி மட்டும் காணாமல் போகவும்
அவள் வந்திருக்கிறாளா! என்று தென்றலை தேடிப் பார்க்க, தென்றல் காணாமல் போக அவன் மனது சந்தோசம் அடையாமல் அதற்கு நேர் மாறாக எதையோ இழந்தது போல் கவலை கொண்டது.
காரில் வரும் பொழுதே தனக்கு வந்த மெயிலைக் கண்டு காரிலிருந்த அனைவரிடமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த சுரேகா காரை விட்டு இறங்கியதுதான் தாமதம் விஷ்ணு எங்கே இருக்கிறான் என்று தேடிப்பார்த்தவள் கோவிலுக்கு பக்கத்தில் அவன் நிற்பதை கண்டதும் கோவில் என்பதையும் மறந்து வேகமாக ஓடி சென்று அவனை தாவி அணைத்துக்கொள்ள அதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தது இரு கண்கள்.
அத்தியாயம் ஆறு:
காரிலிருந்து இறங்கிய தன் குடும்பத்தை பார்த்த விஷ்ணு கண்கள் தென்றல் எங்காவது தென்படுகிறாளா? என்று பார்க்க, அவள் வந்ததற்கான அடையாளம் சிறிதுமில்லாமல் போக அவனது மனம் ஏனோ சோர்ந்து போனது.
அவனோ தன் மனதிற்கு பிடித்தவளை எங்காவது கண்டு விட மாட்டோமா! என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பெண்ணும் அவனது கண்களில் இத்தனை நாளாக சிக்காமல் போக, இப்பொழுது தென்றலும் தன் பார்வையில் தெரியாமல் போக ஏனோ அவனையும் அறியாமல் அவனது மனம் மிகவும் சோர்ந்துப் போனது.
அவன் தன்னை பற்றி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் தான் சந்தோஷமாக ஓடிவந்து அவனை அணைத்துக் கொண்டாள் சுரேகா.
"அத்தான் உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் சொல்லட்டுமா! இத்தனை நாளா நான் எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருந்த பிரகல்யா கன்ஸ்ட்ரக்ஷன்ல எனக்கு வேலை கிடைச்சிருச்சு.."எனவும் தன் சிந்தனைக்குள் உழன்றபடி இருந்த விஷ்ணு சுரேகா சொன்ன நிறுவனத்தின் பெயரை கவனிக்காமல் போனான்.
அவள் அணைத்துக் கொண்டதை அவன் பெரிதாக ஒன்றும் எடுத்துக்கொள்ளவில்லை.
எப்பொழுதாவது அவள் சந்தோசப்படும் பொழுது இப்படி தான் ஓடி வந்து அணைத்துக் கொள்வாள் என்று அவனுக்கும் அவன் குடும்பத்தில் இருந்த அனைவருக்கும் தெரியும் என்பதால் யாரும் அதை பொதுவாக பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படித்தான் எப்பொழுதும் அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள, சுரேகா அதை அவன் காதல் அணைப்பு என்று தவறாக எடுத்துக் கொண்டாள்.
முன்பெல்லாம் விஷ்ணுவிடம் பேசும்பொழுது அவனிடம் அவளுக்கு பெரிதாக எந்த ஒரு உணர்வும் தோன்றியது கிடையாது.
தன் மாமன் மகன் தானே தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்ற நினைப்பு மட்டும் தான் இருந்ததே தவிர அவள் மனதில் காதல் இருக்கிறதா? என்று கேட்டிருந்தால் நிச்சயம் இல்லை என்றுதான் அடித்து சொல்லியிருப்பாள்.
எப்பொழுது தென்றலிடம் ரேணுகா அவள் தனக்கு அண்ணியாக வரவேண்டும் என்று சொன்னாளோ, அப்பொழுதுதான் சுரேகாவின் மனதில் விஷ்ணுவின் மீதான போராட்டம் மனதுக்குள் ஆரம்பமாகியது.
விஷ்ணுவை எக்காரணம் கொண்டும் தென்றலிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணமே அவளை இப்படியெல்லாம் செய்ய வைத்திருக்க, அப்பாவி பெண்ணவள் அதுதான் காதல் என்று தவறாக எடுத்துக் கொண்டது தான் விதி.
விஷ்ணுவை அணைத்தப்படி நின்ற சுரேகாவை இரு கண்கள் எரிச்சலுடன் பார்க்க, அதையெல்லாம் இருவருமே கவனிக்கும் நிலைமையில் இல்லை.
"என்ன அத்தான் நான் பேசிகிட்டு இருக்கேன் நீங்க எதுவும் சொல்லாமல் இருக்கீங்க.."
"ம்ம்..என்ன சொல்லனும்னு நீ எதிர்ப்பாக்குற சுரேகா.. உனக்கு இந்த வேலை கிடைச்சதுல எனக்கும் ரொம்ப சந்தோஷம்தான்.."
"நான் ஆசைப்பட்டது மாதிரியே இந்த வேலை கிடைச்சிடுச்சு அத்தான்.."
"ஓ அப்படியா.. எப்ப வேலைக்கு சேர போற.."என்றவன் குரல் உள்ளிருந்து ஒலித்தது.
அவனது குரலில் கொஞ்சம் கூட ஒட்டாத் தன்மையுடன் இருப்பதைக் கண்ட சுரேகா,"என்னாச்சு அத்தான்.. எதுக்காக இப்படி இருக்கீங்க? உங்களுக்கு உடம்பு எதுவும் சரியில்லாமல் போயிருச்சா! வேணும்னா ஹாஸ்பிடல் போயிட்டு வரலாமா.." என்று அவன் ஒரு மாதிரியாக இருப்பதைக் கண்டு சுரேகா பாவமாக கேட்க, அவள் அப்படி கேட்டதும் விஷ்ணுவுக்கு மனதுக்குள் சுரேகாவிற்கு துரோகம் செய்கிறோமோ! என்று ஒரு குற்ற உணர்வு.
அதையெல்லாம் தன் மனதுக்குள்ளயே வைத்துக் கொண்டவன் " இப்ப எதுக்கு பெரிய மனுஷி மாதிரி பேசிக்கிட்டு இருக்க சுரேகா.. அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல நீ கவலைப்படாத.. இப்போ உனக்கு என்ன உன் கூட வந்து கோயில்ல சாமி கும்பிடுறேன் போதுமா.." என்றவனை ஒட்டாத ஒரு பார்வை பார்த்த சுரேகா எதுவும் பேசாமல் அமைதியாக அங்கிருந்து நகர்ந்தாள்.
தன்னுடன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவள் திடீரென அங்கிருந்து விலகி செல்லவும் ஒன்றும் புரியாத விஷ்ணு தன் நண்பன் கார்த்திக்கை பார்க்க, அவனும் இவனை தான் விசித்திரமாக தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
" இப்ப எதுக்குடா இப்படி ஒரு பார்வை பார்த்துகிட்டு இருக்க? அப்படி என்ன நடந்து போச்சு.. "
" உனக்கு என்ன ஆச்சு மச்சான்?அந்த பொண்ணு அதுக்கு ரொம்ப பிடிச்ச கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை கிடைச்சிடுச்சுன்னு வந்து உன்கிட்ட சொன்னா நீ சம்பந்தமே இல்லாம உள்ள வந்து சாமி கும்பிடறேன்னு சொல்ற அதுவும் அவ கூட சேர்ந்து அவ என்ன சொல்றா நீ என்ன சொல்ற! உனக்கு என்ன ஆச்சு? "
"ப்ச்..இதுக்கும் காரணம் அந்த பொண்ணு தான்டா.. அவளை எப்படா நேர்ல பாப்போம்னு என் மனசு ஏங்கி தவிக்குது.. அவளை ஒரு தடவை நேரில் பார்த்துட்டா மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் போலருக்கு.." என்றதும் அவனை மேலும் பேச விடாமல் அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்ற கார்த்திக் பல பெண்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்கு அவனை இழுத்து விட்டவன் அவனோடு சேர்ந்து காமெடி செய்கிறேன் என்ற பெயரில் அங்கிருந்து பெண்களிடம் வண்ட வண்டையாக திட்டு வாங்க ஆரம்பித்தான்.
" அம்மா எனக்கு தென்றல் இங்க வராம இருக்கிறது என்னவோ மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு.. " என்றார் லட்சுமி.
அவர் சொல்வது தான் பூமாதேவி மனதிலும் அத்தனை நேரம் ஓடிக் கொண்டிருந்தது.
" இந்த திருவிழா நடக்குறதுக்கு அத்தனை ஏற்பாடுகளையும் செஞ்சது அந்த பொண்ணு தான் இப்ப அந்த பொண்ணு இங்க வராம போனது எனக்கும் கூட மனசுக்கு ஒரு மாதிரி ரொம்ப கஷ்டமா தான் இருக்கு.. "
" இங்க பாரு பூமா.. மத்த விஷயங்கள் எல்லாத்தையும் அப்புறமாக பேசிக்கலாம் இப்ப கோயிலுக்கு போகலாம் எல்லாரும் நமக்காக தான் காத்துகிட்டு இருக்காங்க.." என்ற கணவனின் சொல்லுக்கு அமைதியாகிப் போன பூமா மனதுக்குள் நெருடல் இருந்தாலும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவர் பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்ய சொன்னார்.
கோவிலின் வாசலில் நண்பனோடு கூத்தடித்துக் கொண்டிருந்த பேரனை கண்ட பூமா மனதுக்குள்ளையே அவனை திட்டி விட்டு கண்டும் காணாமல் செல்ல, தனது குடும்பத்திற்கும் தனக்கும் சிறிதும் சம்பந்தமே இல்லை என்பது போல் தனியாக நின்று கொண்டிருந்த மகனை கண்டதும் சீதாவிற்கு மனம் வலித்தது.
" ஏண்டா மச்சான் உன் குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் சாமி கும்பிட உள்ள போறாங்க நீ ஏன் போகாம இப்படி வெளியில நிக்கிற!" என்ற கார்த்திக்கை கேலியாக பார்த்தான் விஷ்ணுவரதன்.
" யாருடா இங்க கடவுள்.. இந்த கடவுள் உண்மையாலுமே இருக்காருன்னு சொன்னா என் மனசுல இருக்க அந்த பொண்ண என் கண்ணு முன்னாடி வர சொல்லி சொல்லு இப்பவே கடவுள் இருக்காருன்னு நான் ஒத்துக்கிட்டு அவருக்கு என்னன்ன பண்ணனுமோ அத்தனையும் பண்றேன்.. அத விட்டுட்டு சும்மா கடவுள் இருக்காரு போய் சாமி கும்பிடு அத பண்ணு இத பண்ணுன்னு சொல்ற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. எல்லா வருஷமும் எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்லனாலும் என் குடும்பத்தில் இருக்கவங்களுக்காக சாமி கும்பிட வந்தேன் ஆனா இப்ப அவங்களே என்ன ஒதுக்கி வச்சிட்டு சாமி கும்பிட போய்ட்டாங்க அப்புறம் என்ன?நான் எதுக்காக போகணும்?அவங்களே கும்பிட்டுகட்டும் நான் போக தேவையில்லை.." என்றவன் கோவிலை விட்டு வெளியேறி விட்டான்.
" எப்படி இருக்கீங்க அம்மா? " என்று சிறிதாக கட்டப்பட்டிருந்த அந்த ஓட்டு வீட்டுக்குள் நுழைந்த தென்றல் அங்கு வயதின் காரணமாக சோர்ந்தப்படி படுத்திருந்த வயதான பெண்மணியை பாவமாக பார்த்தபடி அவரிடம் நலம் விசாரித்தாள்.
தென்றலை கண்டதும் அவருக்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது போலும்!!
அத்தனை நேரம் சோம்பலாக படுத்திருந்தவர் தென்றலை கண்டதும் தனது சோகம் அனைத்தும் நீங்கியவராக எழுந்து அமர்ந்தவர் அவளை அணைத்து உச்சி நுகர்ந்தார்.
" இப்பதான் என்னை பாக்குறதுக்கு உனக்கு நேரம் கிடைத்ததாமா.. நான் ஒருத்தி உயிரோடு இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? " என்று அவர் செல்லமாக சலித்துக் கொள்ள, அவர் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு தென்றல் மனதில் இருந்த கவலைகள் மொத்தமும் கலைந்து போக எதுவும் பேசாமல் அமைதியாக படுத்திருந்தாள்.
அவள் அமைதியாக இருப்பதைக் கண்ட அந்த பெண்மணி அவள் மனதுக்குள் தீராத சோகம் இருப்பதை கண்டு கொண்டவராக அதற்கு மேலும் அவளை தொந்தரவு செய்யாமல் அவள் தலையை மென்மையாக வருடி கொடுக்க அவரது சுகமான வருடலில் நீண்ட நெடிய நாட்களுக்கு பிறகு தென்றலது கண்கள் மெது மெதுவாக சொப்பனத்திற்கு சென்றது.
" என்னம்மா நீங்க எல்லாரும் இப்படி குடும்பமா வந்து இருக்கீங்க உங்க பேரனை மட்டும் காணும்.. நான் வரும்போது கூட தம்பியை கீழ பார்த்தேனுங்க அம்மா.. அவர் முகம் ஒரு மாதிரி இருந்தது ஏனுங்க இங்க வராம தனியா போயிட்டார்..", என்று ஊரில் உள்ள ஒருவர் கேட்க அவருக்கு பதில் சொல்ல முடியாமல் தன் மகனை பார்த்தார் பூமா.
" அது ஒன்னும் இல்லங்க இன்னைக்கு எங்க சொந்தக்காரங்க எங்களுக்கு ரொம்ப முக்கியமானவங்க ஒருத்தவங்க வர்றாங்க அவங்களை கூட்டிட்டு வருவதற்காக நான் தான் என் பையனை வெளியே நிக்க சொல்லி சொன்னேன்.. இதுல உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா..? " எனவும் அந்த கேள்வி கேட்டவர் அவசரமாக இல்லை என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து வெளியேறினார்.
" வர வர உன் பையன் பண்ற விஷயம் எதுவுமே எனக்கு சுத்தமா பிடிக்கலை கணேசன் கொஞ்சம் உன் பையன் கிட்ட நீ பேசினா நல்லா இருக்கணும்னு எனக்கு தோணுது.. " என்று பல வருடங்களுக்கு பிறகு மகனிடம் ஒட்டாமையாக பேசினார் பூமா.
" என்ன தென்றல் நீ ஆசைப்பட்டது மாதிரியே உங்க ஊர்ல போய் ரெண்டு நாள் எங்க எல்லாரையும் விட்டுட்டு இருந்துட்டு வந்த இப்பவாவது உனக்கு சந்தோஷமா இருக்கா?" என்ற லட்சுமிக்கு ஒரு சிரிப்பை பதிலாக கொடுத்தாள் தென்றல்.
" ஏதாவது கேட்டா இப்படி சிரிச்சு சிரிச்சு எங்க எல்லாரையும் ஏமாத்திடு தென்றல்.. " என்று சலித்துக் கொண்டார் சீதா.
" திருவிழா எல்லாம் எப்படி போச்சுங்க அம்மா எல்லாரும் சந்தோஷமா இருந்தீங்களா.. "
" எங்களுக்கு என்ன? வழக்கம் போல என் மகன் தான் பிரச்சனை பண்ணினான் மற்றபடி எந்த பிரச்சினையும் இல்லை.. "
சீதா அவரது மகனைப் பற்றி பேசியதும் தென்றல் முகத்தில் அதுவரை இருந்த சிரிப்பு காணாமல் போக, அமைதியாக அவளது வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சீதா மனதிற்குள் எதையோ நினைத்தவராக, அவளை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல் அவரது வேலைகளை பார்க்க அவரும் சென்று விட்டார்.
போனில் பேசியபடியே கீழே இறங்கி வந்த விஷ்ணு பார்வையில் விழுந்தாள் தென்றல்.
இரண்டு நாட்களாக அவளை பார்க்காமல் இருந்தவனுக்கு இப்பொழுது அவள் பார்வையில் பட அவனுக்கு ஏனோ அவள் மீது கோபம் கோபமாக வந்தது.
" சரி நான் அப்புறம் பேசுறேன் கார்த்திக் போனை வை எனக்கு ஒரு என்டர்டைன்மென்ட் கிடைச்சிடுச்சு.. " அந்த பக்கம் கார்த்திக் என்ன சொன்னான் என்று கூட கேட்காமல் அழைப்பை துண்டித்து விட்டான்.
சமைத்துக் கொண்டிருந்த தென்றலிடம் வந்தவன் " என்னோட ரூமுக்கு ஒரு கப் காபி எடுத்துக்கிட்டு வா கூடவே கொஞ்சம் ஸ்னாக்ஸ் எடுத்துக்கிட்டு வா.. " என்றவன் பார்த்த பார்வையில் தென்றலுக்கு முதுகு ஜில்லிட்டுப் போனது.
' கடவுளே இவர் இப்ப வந்து எதுக்கு என்கிட்ட டீ கேக்குறார்.. வழக்கமா அவங்க அம்மா கிட்ட தானே எல்லாத்தையும் கேட்பாங்க.. அவங்க ரூமுக்கு வேற வர சொல்றாங்க.. வழக்கமா இங்க தான் உட்கார்ந்து டீ குடிப்பாங்க இப்ப கூப்பிடுறதுக்கு காரணம் என்னன்னு தெரியலையே.. நீங்க தான் என்னை காப்பாத்தணும் கடவுளே.."என்று அவசரமாக கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்து விட்டு சமைத்துக் கொண்டிருந்த வேலையை பாதியில் விட்ட தென்றல் அவன் சொன்னது போலவே டீ போட ஆரம்பித்தாள்.
அவன் சொன்னது போலவே தேநீர் கலக்கிக் கொண்டு கூடவே ஸ்னாக்ஸும் எடுத்துக் கொண்டு அவனது ரூமுக்கு செல்ல, அவளை தடுத்து நிறுத்தினாள் சுரேகா.
" ஏய் நில்லு எங்க டீ எடுத்துட்டு போற யாருக்கு டீ? "
" சின்ன ஐயா தான்மா டீயும் ஸ்னாக்ஸும் எடுத்து வர சொல்லி சொன்னாங்க.. "
"எங்க?"
" அவங்க ரூமுக்கு கொண்டு வர சொல்லி சொல்லிட்டு போனாங்க அம்மா.. "
" என்னடி உனக்கு பழசெல்லாம் மறந்து போச்சா? என்னமோ வயசான ஆள் மாதிரி என்னை பார்த்து அம்மா அம்மானு கூப்பிடுற உன்னை மேடம்னு கூப்பிட சொல்லித்தானே சொல்லிருக்கேன்.. நான் இவ்வளவு தூரம் சொல்லியும் என்னை கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் பெரியவங்க மாதிரி அம்மானு சொல்லி கூப்பிடுறியே உன்ன என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு.. "
" ஐயோ சாரிங்க மேடம் ஏதோ தெரியாமல் வாய் தவறி சொல்லிட்டேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க.."
" கண்டிப்பா உனக்கு இதுக்கு தண்டனை கிடைக்கும் அதுக்கு முன்னாடி நானே என் அத்தான் கிட்ட இந்த டீயை கொண்டு போய் கொடுத்துட்டு வந்து உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்.. " என்றதும் தான் தென்றலுக்கு மூச்சு வந்தது.
அவனுடைய அறைக்கு தனியாக எப்படி போகப் போகிறோம் என்று பயந்து கொண்டிருந்தவளுக்கு உதவி செய்வது போல சுரேகா டீயை எடுத்துக்கொண்டு செல்கிறேன் என்று சொன்னதும் அவளுக்கு அவ்வளவு ஒரு நிம்மதியை கொடுத்தது.
விஷ்ணுவரதனிடம் டீயை கொடுப்பதற்கு பதிலாக சுரேகாவை சமாளித்துக் கொள்வது அவளுக்கு பெரிய விஷயமாக படவில்லை.
டீயை கொண்டு வரும் தென்றலிடம் என்ன பேச வேண்டும்? என்று மனதுக்குள் நினைத்து பார்த்துக் கொண்ட விஷ்ணு, அவளிடம் தான் கேட்கும் கேள்வியில் அவள் இனிமேல் இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது என்று மனதுக்குள் சூழ் உரைத்துக் கொண்டான்.
கதவு தட்டும் சத்தம் கேட்க, தென்றல் தான் வந்து விட்டாள் என்று பார்க்க அங்கு டீயை கொண்டு வந்த சுரேகாவை கண்டதும் அவன் முகம் சுருங்கிப் போனது.
டீயை அங்கிருந்த மேஜை மீது வைத்த சுரேகா இடுப்பில் இரு கைகளை வைத்துக்கொண்டு விஷ்ணுவை முறைத்து பார்த்தாள்.
" என்ன அத்தான் உங்களுக்கு டீ வேணும்னு சொன்னா நான் போட்டு தர மாட்டேனா? அப்படியே இல்லாட்டியும் உங்க அம்மா இல்ல எங்க அம்மா யார்கிட்டயாவது கேட்க வேண்டியதுதானே!! வேலைக்காரி கிட்ட கேட்டீங்க அது ரொம்ப சரிதான் ஆனா அவ கிட்ட எதுக்கு ரூமுக்கு எடுத்துட்டு வர சொல்லி சொன்னீங்க? இந்த ரூமுக்குள்ள உங்களுக்கு அப்புறம் உள்ள வர உரிமை எனக்கு மட்டும் தான் இருக்கு அதை நான் வேற யாருக்கும் விட்டு தர மாட்டேன்.. நான் இவ்வளவு உரிமையா உங்க மேல இருக்கும்போது நீங்க ஏன் என்கிட்ட கேக்காம அந்த வேலைக்காரிகிட்ட டீ கேட்டீங்க? "
" நீ எப்போ இந்த வீட்டு வேலைக்காரியா மாறிப்போன சுரேகா.. நான் தென்றல் கிட்ட தானே டீ எடுத்துட்டு வர சொல்லி சொன்னேன் அவளுக்கு எவ்வளவு திமிர் இருந்தா உன்கிட்ட கொடுத்துவிடுவா!" என்று அவன் போட்ட சத்தத்தில் சுரேகா உடல் கிடுகிடுவென நடுங்கிப் போனது.
எப்பொழுதும் அவளிடம் சந்தோஷமாக பேசும் விஷ்ணு இப்பொழுது தனது இன்னொரு முகத்தை காட்ட அதை பார்க்க முடியாமல், தவித்துப் போன பெண்ணவள் அவனை கண்டு மிகவும் பயந்து தான் போனாள்.
" இல்ல அத்தான் அது வந்து அந்த தென்றல் தான் அவளுக்கு வேலை இருக்குதுன்னு சொல்லி உங்ககிட்ட கொடுக்க சொல்லி சொன்னா.. " என்று சிறிதும் மனசாட்சி இல்லாமல் பழி மொத்தத்தையும் தூக்கி தென்றல் மீது போட்டாள்.
அவள் சொன்னதை கேட்ட விஷ்ணு கண்கள் கோபக்கனலை கக்க,அதன் விளைவு சுரேகா கொண்டு வந்த டீ மொத்தமும் அங்கிருந்த சுவர் மீது பட்டு அந்த அறை முழுவதும் தெறித்தது.
கப் உடையும் சத்தத்தில் சுரேகா உடல் இன்னும் பயத்தில் நடுங்கியது.
" நான் சொன்னது மாதிரி இந்த வீட்டு வேலைக்காரியை எனக்கு இப்பவே டீ போட்டு எடுத்துக்கிட்டு வர சொல்லி சொல்லு.. கூடவே கையில கொஞ்சம் எலிக்கு வைக்கிற அந்த விஷ மருந்தையும் சேர்த்து எடுத்துட்டு வர சொல்லி சொல்லு.. " என்றதும் சுரேகா அதிர்ந்து போனாள்.
அவளது அதிர்ந்த முகத்தை கண்ட விஷ்ணு புருவத்தை ஏற்றி இறக்க, அத்தனை பயத்திலும் அவனது அந்த செயலில் சுரேகாவிற்கு மனதுக்குள் சற்றே காதல் எட்டிப் பார்த்து தான் விட்டு சென்றது.
அதற்கு மேலும் அங்கு நிற்க பயந்து கொண்டு கிடுகிடுவென கீழே இறங்கி வந்தவள் தென்றலிடம் விஷ்ணு சொன்ன விஷயத்தை சொல்லிவிட்டு ஒரே ஒரு நிமிடம் அவளை பரிதாபமாக பார்த்துவிட்டு தனது அறைக்கு ஓடிவிட்டாள்.
சுரேகா தேனீர் எடுத்துக் கொண்டு சென்றதும் நிம்மதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்த தென்றல் சுரேகா பதட்டமாக வரவும், என்னவோ என்று பார்த்துக் கொண்டிருந்தவளிடம் சுரேகா சொன்னதைக் கேட்டு இப்பொழுது நடுங்க ஆரம்பித்தது அவள் தான்.
இனி தப்பிக்க வேறு வழியே இல்லை என்பது போல் விஷ்ணு சொன்னது போல் ஒரு கையில் தேநீரையும் மறுக்கையில் எலி பாசனத்தையும் எடுத்துக்கொண்டு அவனது அறையை நோக்கி சென்றாள்.
அத்தியாயம் 7 :
" சார் உள்ளே வரலாமா? " என்று அனுமதி கேட்டாள் தென்றல்.
" உள்ள வா.. " என்று விஷ்ணுவின் குரல் உள்ளிருந்து ஒலிக்க, சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போல் உயிரை கையில் பிடித்துக் கொண்டு நுழைந்தாள் மங்கை.
அந்த அறை முழுவதும் தேநீர் படிந்த படி இருப்பதை கண்டவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த மேஜை மீது தேநீரை வைத்தாள்.
அவனைப் பார்ப்பதற்கு கூட மிகவும் பயம் கொண்டவள் குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து வெளியேற நினைக்க, அவளை தடுத்து நிறுத்தினான் விஷ்ணு.
"ஏய்! எங்க வெளிய போற? உன்னை யார் வெளியே போக சொல்லி சொன்னா!"
" இல்லங்க சார் எனக்கு அடுப்படில்ல கொஞ்சம் வேலை இருந்தது.. நீங்கள் டீ எடுத்துக்கிட்டு வர சொல்லவும் அப்படியே எல்லாத்தையும் போட்டுட்டு வந்துட்டேன்.. வீட்ல இருக்க எல்லாருக்கும் சாப்பாடு தயார் பண்ணனும்.."
"ஓ.. நீ இல்லனா என் குடும்பத்தில் இருக்க யாரும் சாப்பிடாமல் பட்டினி கிடக்க போவது கிடையாது.. அவ்வளவு வொர்த் எல்லாம் நீ கிடையவே கிடையாது.. ரூம் எப்படி அசிங்கமா இருக்கு கிளீன் பண்ணு.."
" கோபப்படாதீங்க சார்.. வேலை எல்லாத்தையும் முடிச்சிட்டு வந்து கிளீன் பண்ணிடுறேன்.."
"நான் சொல்றத கேக்காம என்னையே எதிர்த்து பேசுறியா? வாய மூடிட்டு சொன்னத செய்.."எனவும், அதற்கு மேலும் எந்த காரணமும் சொல்லி மறுத்து பேச முடியாத தென்றல் கண்களில் வழிந்த கண்ணீரை அவனுக்கு காட்ட விரும்பாமல் முகத்தை திருப்பி கொண்டு வேலைகளை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் வேலை செய்வதை பார்த்தபடியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து டீயை பருக ஆரம்பித்தான் விஷ்ணு.
அவன் பார்வை தன்னை தொடர்வதை தன் உள்ளுணர்வால் புரிந்து கொண்ட தென்றலுக்கு உடம்பு முழுவதும் கூசுவது போலிருக்க, விரைவாக இங்கிருந்து செல்ல வேண்டும் என்று அனைத்து வேலைகளையும் நிமிடங்களில் முடித்து விட்டாள்.
அவள் வேலை செய்யும் வரை அமைதியாக இருந்த விஷ்ணு அவள் வேலையை முடித்ததும் வாய் திறந்தான்.
" சும்மா சொல்லக்கூடாது நீ போட்ட டீ பிரமாதமா இருக்கு.. " எனவும் குனிந்த படி இருந்த தென்றல் நிமிர்ந்து ஒரு கணம் அவனை பார்த்தாள்.
" என்னடா எப்பவும் உன்னை திட்டிக்கிட்டே இருக்கவன் இப்ப பாராட்டி பேசுற மாதிரி தோணுதா? "
....
" தோணனும் டி தோணும்.. உன்னாலே என் குடும்பத்தை இன்னைக்கு இழந்துட்டு நான் தனியா நிக்கிறேன்.. நீ மட்டும் ரொம்ப சந்தோசமா என் வீட்டில் இருந்துகிட்டு என் குடும்பத்துல உரிமை எடுத்துக்கிட்டு சந்தோஷமா இருப்பியா?நெவர் நான் இருக்கிற வரை உன்னை நிம்மதியா இருக்க விட மாட்டேன்.. உன்னை எப்படியெல்லாம் பழிவாங்க போறேனு மட்டும் பொறுத்திருந்து பார்.. சரி அத அப்புறம் பாத்துக்கலாம் இப்போ உனக்காக கொண்டு வந்த அந்த எலிபாசனத்தை எடுத்து நீயே குடி.. " எனவும் அவனை நிமிர்த்து பார்த்த தென்றல் பார்வையில் உணர்வு சிறிதுமில்லை.
அவளது அந்த பார்வை அவனது அடி மனது வரை சென்று தாக்கியது.
ஏனோ அவனையும் அறியாமல் அந்த பார்வை அவன் கண்களை கலங்க வைத்தது.
மனம் தடுமாறுவதை சமநிலைப்படுத்திக் கொண்ட விஷ்ணு தலைய இரு பக்கமும் ஆட்டி மனதை ஒருமைப்படுத்திக் கொண்டான்.
" நீ என்ன பண்ணாலும் என்ன பார்வை பார்த்தாலும் நான் கொஞ்சம் கூட அதுக்கெல்லாம் மயங்க மாட்டேன்.. அந்தப் பார்வைக்கு மயங்கர ஆள் நான் கிடையாது.. ஒழுங்கு மரியாதையா நான் சொன்னதை செய்.. இல்லன்னா இப்பவே இந்த வீட்டை விட்டு ஓடி போயிரு உன் மூஞ்சியை பார்க்கும்போது எனக்கு அவ்வளவு அருவருப்பா இருக்கு.. "
" எதுக்காக சார் உங்களுக்கு என் மேல் இவ்வளவு கோபம்? நான் இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து எப்ப பார்த்தாலும் என் மேல இவ்வளவு கோபப்பட்டுக்கிட்டே இருக்கீங்க? எனக்கும் உங்களுக்கும் என்ன பகை எதுக்காக என்னை காயப்படுத்தி அதுல சந்தோஷப்பட நினைக்கிறீங்க!" என்று மனதுக்குள் இருந்த விஷயத்தை வாய் விட்டே தைரியமாக கேட்டுவிட்டாள் தென்றல்.
" வாரே வா என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துடுச்சா? "
" உங்களை எதிர்த்து பேசறதுக்கு தைரியம் எல்லாம் தேவையில்லை சார் என் மேல எந்த தப்பும் இல்லை.. நீங்க கேட்டது போல டீ போட்டு கொடுத்துட்டேன் எலி மருந்து கொண்டு வந்துட்டேன்.. நீங்க கேட்டதை செய்ய மட்டும் தான் எனக்கு உரிமை இருக்கு.. நான் இந்த வீட்டு வேலைக்காரி தானே தவிர உங்க அடிமை கிடையாது.. நான் சொன்னது மாதிரி நானா இந்த வீட்டை விட்டு போக முடியாது உங்களுக்கு வேணும்னா நீங்களே பெரிய அம்மாகிட்ட சொல்லி என்னை வீட்டை விட்டு அனுப்பிடுங்க அதுக்கப்புறம் நான் எந்த மறுப்பும் சொல்லாமல் வீட்டை விட்டு போயிடறேன்.. " என்றவளை கொலை வெறியோடு முறைத்து பார்த்தான் விஷ்ணுவர்தன்.
" உனக்கு இவ்வளவு திமிரு எங்கிருந்து வந்துச்சு? என்னை எதிர்த்து பேசுற அளவுக்கு துணிஞ்சு வந்துட்ட இல்ல.. சரி அப்ப அந்த எலி மருந்தை நானே குடிக்கிறேன்.. கீழ போயிட்டு வீட்ல இருக்க எல்லார்கிட்டயும் நீ தான் அந்த மருந்தை எனக்கு கொண்டு வந்தேன்னு மட்டும் சொல்லிடு போதும்.."என்றவன் அத்தோடு நில்லாமல் எலி மருந்தை கையில் எடுக்க, அதிர்ந்து போன தென்றல் அவன் உயிருக்கு முன்பாக தனது உயிர் பெரிதாக படாமல் போக,நொடியும் தாமதிக்காமல் அவன் ஆசைப்பட்டது போலவே அந்த மருந்தை அவள் வாயில் ஊற்றிக் கொண்டாள்.
" ஐயோ தென்றல் என்ன காரியம் பண்ணிட்ட? " என்று சத்தம் போட்டபடியே அவளிடம் விரைந்து வந்தார் லட்சுமி.
பயந்தபடி வந்த சுரேகா அங்கு லட்சுமி நிற்பதை கவனிக்காமல் அவசரமாக தென்றலிடம் விஷ்ணு சொன்ன விஷயத்தை சொல்லி விட்டு ஓடி விட, அவள் பக்கத்தில் காய்கறிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த லட்சுமியும் அவள் சொன்னதை கேட்டு விட, தயங்கியபடி நின்ற தென்றலை அவர்தான் தைரியமாக "தான் இருக்கிறேன்" என்று சொல்லி அவளை அனுப்பி வைக்க, அவர் இருக்கும் தைரியத்தில் மேலே வந்த தென்றலுக்கு ஏற்பட்ட கதி தான் பரிதாபம்.
வெளியே நின்று விஷ்ணு என்ன செய்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தவர் விஷ்ணு தென்றலை விஷத்தை குடிக்க சொன்னதும் அதற்கு அவள் எதிர்த்து பேசியதையும் கேட்டு மனதுக்குள் அவளது தைரியத்தை மெச்சி கொண்டபோது தான் அவரையும் மீறி இந்த விஷயம் நடந்து விட்டது.
" ஐயோ தென்றல் அவன் ஒரு லூசு.. அவன் சொன்னான்னு போய் விஷத்தை குடிச்சுட்டியே உனக்கு என்ன பைத்தியமா?" என்றவர் அரை மயக்கத்தில் இருந்தவள் கன்னத்தை தட்ட, அவளிடமிருந்து எந்த விதமான அசைவும் இல்லாமல் போக, மிகவும் பயந்து போன லக்ஷ்மி சத்தம் போட்டு வீட்டில் இருந்த அனைவரையும் அழைத்து விட்டார்.
" என்ன மன்னிச்சிடு தென்றல் வரமாட்டேன்னு சொன்ன உன்னை வலுக்கட்டாயமாய் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது நானும் எங்க அம்மாவும் தான்.. இந்த பாவி இப்படிப்பட்ட ஒரு மோசமானவனா இருப்பான்னு நாங்க யாருமே எதிர்பார்க்கல.. உனக்கு எதுவும் ஆகாது நான் ஆக விடமாட்டேன்.." என்றவருக்கு தன்னால்தான் அவளுக்கு இந்த நிலைமை என்று மனதிற்குள் குற்ற உணர்ச்சிக்கு ஏற்பட்டது.
" பாவி எப்படிடா உன்னால இப்படி எல்லாம் பேச முடியுது.. இந்த குடும்பத்துல இப்படி ஒரு வாரிசு.. நினைச்சாலே எங்க எல்லாருக்கும் கேவலமா இருக்கு இந்த பொண்ணுக்கு ஏதாவது ஆனா நம்ம குடும்பப் பெயர் என்ன ஆகும்? நம்மள நம்பி நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணை இந்த நிலைமைக்கு நீ ஆளாக்கி அவளை இங்க கொண்டு வந்துட்டியே உனக்கே நல்லா இருக்கா? யாராவது வேகமா வாங்க அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகப் போகுது.. " என்றவர் விஷ்ணுவை பார்க்க கூட பிடிக்காமல் முகத்தை திருப்பிக் கொண்டார்.
லட்சுமியின் சத்தத்தைக் கேட்டு அனைவரும் ஓடி வர, தென்றலுக்கு நிம்மதியான உறக்கம் வர இனிமேல் எந்தவிதமான கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டாம் என்று தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டவள் அதை திறக்க விரும்பவில்லை.
" என்னாச்சு லட்சுமி? தென்றல் ஏன் இப்படி கண்ணை மூடி மயங்கின மாதிரி கிடக்குது.. ஏதாவது பிரச்சனையா எதுக்காக நீ இப்படி சத்தம் போட்டு எல்லாரையும் கூப்பிடுற.. " என்று பதட்டமாக சீதா கேட்க, அவரை கண்ணீருடன் பார்த்த லட்சுமி நடந்த அனைத்தையும் சொல்லி முடிக்க சீதா தன் மகனை அருவருப்பாக பார்த்தார்.
லட்சுமியின் சத்தத்திற்கு ஓடி வந்திருந்த இந்திரனும் கணேசனும் கூட லட்சுமி சொன்னதே கேட்டு அதிர்ச்சியாக தான் விஷ்ணுவை பார்த்திருந்தார்கள்.
அவன் கோபக்காரன் என்று தெரியுமே தவிர ஒரு உயிரை எடுக்குமளவிற்கு இவ்வளவு கொடுமைக்காரன் என்பது தெரியாமல் போனதை நினைத்து பெரிதும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
லட்சுமி சொன்னதைக் கேட்ட கணேசன் நொடியும் தாமதிக்காமல் விஷ்ணு கன்னத்தில் அறைந்தவர் " உன்கிட்ட வந்து பேசிக்கிறேன் அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆச்சு உன்னை உயிரோடு கொளுத்திடுவேன்.. " என்று அவனை எச்சரிக்கை செய்தவர் தென்றலை தூக்கிக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தார்கள்.
மாடிக்குச் செல்ல முடியாமல் கீழேயே நின்று கொண்டிருந்த பூமா மாரியப்பன் இருவரும் தென்றல் ( காற்று)போல் ஒரு இடம் இல்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த தென்றல் இப்பொழுது சிறிதும் அசைவில்லாமல் கணேசன் தூக்கி வருவதை கண்டவர் என்னவென்று கேட்க, அவருக்கு நின்றுக் கூட பதில் சொல்லாமல் தென்றலை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து விட்டார்கள்.
ஆண்களுடன் லட்சுமி முன்னே செல்ல, சீதா மட்டும் பின்தங்கி விட்டார்.
பூமாதேவியிடம் மேலே நடந்த விஷயத்தை சொல்ல, தலையைப் பிடித்து படி சோபாவில் அமர்ந்து விட்டார்.
மாரியப்பனுக்கு விஷ்ணுவின் மீது கோபம் தாங்க முடியவில்லை.
" பாவி இந்த குடும்பத்துல இப்படிப்பட்ட வம்சத்துல இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட ஜென்மம் வந்து பிறந்துருக்கு.. இவன் இவ்வளவு கேவலமான குணம் கொண்டவன்னு இப்பதான் எனக்கு தெரியுது.. அவனை எல்லாரும் பார்த்து பார்த்து தானே வளர்த்தோம் அப்புறம் எந்த இடத்தில் இந்த மாதிரி மாறி போனான்.. இவ்வளவு ஒரு கேவலமான குணம் கொண்ட ஒருத்தன் நம்ம குடும்பத்தில் பிறந்ததை நினைத்து முதன் முதலாக எனக்கு அருவருப்பா இருக்கு.. கடவுளே அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது.. " என்றவர் மனைவி பக்கத்தில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தார்.
சுரேகா, விஷ்வா கூட தென்றல் நிலைமையை நினைத்து சிறிது பரிதாபப்பட்டார்கள்.
ரேணுகா அந்த இடத்திலேயே கதறி விட்டாள்.
மாடிப்படியில் இருந்து கீழே இறங்கி வந்த விஷ்ணுவை கண்டு கோபமாக பூமா அவர் பக்கத்தில் வர, அவர் வருவதை கண்டும் காணாதது போல் விரைவாக வீட்டை விட்டு வெளியேறி விட்டான்.
" மேடம் நீங்க சொன்னது போலவே இன்னும் ஒரு வாரத்தில் இன்டர்வியூக்கு ஆளுங்க எல்லாரையும் வர சொல்லி சொல்லியாச்சு.." என்றார் மேனேஜர் சண்முகம்.
"ஓகே சார்.. எப்பவும் போல எல்லாத்தையும் நீங்க பாத்துக்கங்க.. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் அடுத்த ஒரு வருஷத்துக்கு இந்தியா வரமாட்டேன்.. முக்கியமான விஷயமா அமெரிக்கா வரை போறேன் எல்லா விஷயத்தையும் எனக்கு மெயில் பண்ணுங்க.. என்னோட கையெழுத்து தேவைப்பட்டா அதுக்கு நான் பர்மிஷன் உங்களுக்கு தரேன்.. ரொம்ப அவசரம்னு சொல்லும்போது என்னோட அண்ணா கிட்ட கையெழுத்து வாங்கிக்கோங்க.. கம்பெனியை பாத்துக்குங்க சார் நான் போயிட்டு வரேன்.." என்று தன் வயதுக்கு மரியாதை கொடுத்து பேசும் பெண்ணை புன்னகையுடன் பார்த்த சண்முகம் "சரிங்க மேடம்.." என்ற ஒற்றை வார்த்தையில் புன்னகையுடன் பதிலளித்தார்.
அவரது புன்னகைக்கு பதில் புன்னகை சிந்திய பிரகல்யா அவளது உடமைகளை எடுத்துக் கொண்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறியவள் காரில் ஏறி அமர, அதுவரை அவள் முகத்தில் இருந்த புன்னகை காணாமல் போனது.
காரை அவளாகவே ட்ரைவ் செய்ய ஆரம்பித்தாள்.
இதற்கு முன்பு விஷ்ணுவரதனோடு அந்தக் காரில் பயணம் செய்த தருணங்கள் எல்லாம் அவளது மனக்கண்ணில் வந்து போக மனம் வெந்து போனது.
" எனக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? வாழ்க்கையில நான் எப்பவுமே தனியா தான் இருக்கணுமா.. என்னோட விஷ்ணு எப்ப என்கிட்ட வர போறான்.. " என்று வாய் விட்டு புலம்பி கொண்டவள் காரை யாரும் ஃபாலோ செய்கிறார்களா? என்று பார்த்துக் கொண்டவள் யாரும் பின் தொடரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அந்த ஆசிரமத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தாள்.
" பிரகல்யா குழந்தைகள் காப்பகம்" என்று மின்னிய அந்த காப்பகத்துக்குள் தனது காரை செலுத்தினாள்.
அந்தக் காப்பகத்துக்குள் காரை செலுத்தி உள் நோக்கிச் செல்ல அவள் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.
அவள் கார் வருவதை கண்டதும் அங்கிருந்து காவலாளி வேகமாக ஓடி வந்து அவளது கார் கதவை திறந்து விட்டார்.
அந்த காப்பகம் இயங்குவது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது.
ஏனெனில், அனாதையாக தூக்கி எறிந்து விட்டு செல்லும் குழந்தைகளும் உடல் நலம் குன்றிய குழந்தைகளும் பிறந்த பொழுதே தன் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் தான் அங்கு இடம்.
பெரும்பாலும் அப்படி ஒரு காப்பகம் இருப்பது யாருக்கும் தெரியாமல் தான் போனது.
அந்தக் காப்பகத்தை நடத்தி வருவது கூட பிரகல்யா தான்.
அவளது சொந்த பணத்தில் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு படிப்பு, உணவு, அவர்கள் உடலுக்கு தேவையான உபகரணிகள் என்று இன்னும் பல இதரன வகைகள் என்று பலவற்றை சொல்லிக்கொண்டே செல்லலாம்.
அவளைக் கண்டதும் அந்த காப்பகத்தில் பல வருடங்களாக வேலை செய்யும் சாந்தி அவளிடம் வந்தவர் அவளிடம் நலம் விசாரிக்க, அவருக்கு ஒரு புன்னகையோடு பதிலளித்த பிரகல்யா பதிலுக்கு அவரது நலத்தையும் விசாரித்துவிட்டு காப்பகத்தில் உள்ள குழந்தைகள் பற்றியும் விசாரித்தவள் கண்ணீரோடு அந்த நபரை பற்றி விசாரிக்க, அவளது வேதனையை கண்டு தான் அந்த வேதனையை அனுபவித்தது போலவே சாந்தி
அவளிடம் சில விஷயங்களை சொல்ல, கண்களை மூடி அவர் சொல்வதை எல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்ட பிரகல்யா கண்களில் கண்ணீர் இல்லாமல் வழிந்து கொண்டு சென்றது.
" இதுக்கு மேல அந்த கடவுள் விட்ட வழிதான்.. நான் ஒரு முக்கியமான விஷயமாக வெளியில் போறேன்.. அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க.. என்னால அடுத்து திரும்ப எப்ப இங்க வர முடியுமோன்னு உறுதியாக சொல்ல முடியாது.. என்னோட போன் லைன் கூட உங்களுக்கு கிடைக்காது.. பத்திரமா பாத்துக்கோங்க மேடம் உங்களுக்கு ஏதாவது உதவி வேணும்னா சண்முகம் சார் கிட்ட தயங்காம கேளுங்க.. " என்றவள் அதற்கு மேலும் அங்கேயே நிற்க முடியாமல் காரை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டாள்.
அங்கு அவள் நிற்கும் ஒவ்வொரு நொடியும் அவளது உயிரை கத்தியால் குத்தி எடுப்பது போல் மிகவும் வலிக்க, அந்த வேதனையை தாங்க முடியாமல் அந்த இடத்தை விட்டு பல மைல்கள் அப்பால் தனது பயணத்தை தொடர்ந்தாள்.
ஏர்போர்ட்டில் அமர்ந்து சில விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்த பிரகல்யா அமெரிக்கா விமானம் புறப்படுவதற்கான அறிவிப்பு வர, தனது கண்ணீரை யாருக்கும் தெரியாமல் சுண்டி எறிந்த பிரகல்யா எப்போதும் போல் அனைத்தையும் மறந்து அமெரிக்கா நோக்கி பறக்க தயாரானாள்.
பிளைட்டில் அமர்ந்தவள் தன் கையில் அணிந்திருந்த அந்த மோதிரத்தை வருடி கொடுத்தாள்.
" நீ எப்பவுமே ரொம்ப ஸ்வீட் தான் ராகுல்.. " என்று வாய் விட்டு மெதுவாக சொல்லிக் கொண்டவள் மனம் முழுவதும் இப்பொழுது அவளது ராகுலை நினைத்து தான்.
அவன் தான் அவளது அனைத்து கவலைகளுக்கும் ஒரே மருந்து.
ராகுல் நினைவில் எப்பொழுதும் போல் விஷ்ணுவை மறந்த பிரகல்யா மனம் நிறைந்த தித்திப்புடன் ராகுலுடன் தனது வருங்காலத்தை நினைத்து சந்தோஷமாக கண்களை மூடிக்கொள்ள பயணமும் (எங்கே நோக்கி அந்த பயணம்)சந்தோஷமாக அமைந்தது.
அத்தியாயம் எட்டு:
" டாக்டர் இப்ப அந்தப் பொண்ணு எப்படி இருக்கா?"என்று பதட்டமாக லட்சுமி மருத்துவரிடம் கேட்க, அவரை முறைத்து பார்த்தார் அந்த மருத்துவர்.
" என்ன லட்சுமி மேடம் வீட்ல எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் அதுக்காக இப்படியா ஒரு பொண்ணு எலி மருந்து குடிக்கிற அளவுக்கு பார்த்துகிட்டு இருப்பீங்க.. உங்க வீட்ல வேலைக்காரங்க எல்லாருக்கும் எவ்வளவு மரியாதை கொடுப்பீங்க! உங்க வீட்ல வேலை பாக்குற ஒரு பொண்ணுக்கு இந்த நிலைமைங்கிறத என்னால ஏத்துக்க முடியல.. சரியான நேரத்துக்கு கொண்டு வந்ததால அந்த பொண்ணை சீக்கிரம் எங்களால காப்பாற்ற முடிஞ்சுது.. இன்னொரு தடவை அந்தப் பொண்ணு இந்த மாதிரி ஏதாவது செஞ்சா உயிருக்கு ஆபத்தா முடியும் பாத்துக்கோங்க.." என்றதும் தான் மூவருக்கும் நிம்மதியாகி போனது.
" அந்தக் கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்.. நம்ம வீட்ல வேலை பாக்குற பொண்ணுக்கு ஏதாவது ஒன்னு ஆகி இருந்தா நம்ம குடும்ப பெயர் என்னவாகிருக்கும்.. " என்றார் கணேசன்.
அண்ணனை முறைத்து பார்த்த லட்சுமி அவரிடம் பேசக்கூட விரும்பாமல் கண்ணை மூடி கடவுளிடம் நன்றி சொல்லிக்கொண்டார் மனதிற்குள்.
இரண்டு நாட்களுக்கு பிறகு அன்று மீண்டும் தனது வீட்டிற்கு வருகை தந்திருந்தான் விஷ்ணுவரதன்.
இந்த இரண்டு நாட்களாக அவன் வீட்டிற்கு வராமல் போனதை யாரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை.
அவனுக்காக வருத்தப்பட்டு வேதனைப்படும் சீதா கூட இந்த முறை அவனுக்காக வருத்தப்படவில்லை.
தனது குடும்பம் தான் இரண்டு நாட்கள் ஆகியும் வீட்டிற்கு வராமலிருந்ததைப் பற்றி கவலைப்படாமல் அவரவர் வேலைகளை பார்ப்பதைக் கண்டு அவனுக்கு கோபம் ஏறிப்போனது.
இருக்கையில் அமர்ந்து செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த பூமாதேவியிடம் " என்ன அப்பத்தா நான் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருந்தீங்க போலருக்கு.. " என்றான் நக்கலாக.
அவனை ஒரு முறை நிமிர்ந்து பார்த்த பூமா மீண்டும் செய்தித்தாளில் ஆழ்ந்து விட்டார்.
" என்ன அப்பத்தா உங்களுக்கு ஒரு பேரன் இருக்க விஷயம் ஞாபகம் இருக்கா இல்லையா? அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இந்த வீட்ல இருக்க எல்லாரும் என்ன ஒதுக்கி வச்சிருக்கீங்க! ஒருத்தன் வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு அவனுக்கு என்ன ஆச்சுன்னு ஒரு போன் அடிச்சு கூட இந்த குடும்பத்தில் கேட்க யாருமில்ல? அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்டேன்னு எல்லாரும் மொத்தமா என்னை தலை முழுகிற அளவுக்கு ஒதுக்கி வச்சிருக்கீங்க.."
" போதும் வாய மூடு விஷ்ணு.. உன் மேல எல்லாரும் ஏற்கனவே கோவத்துல இருக்காங்க.. அந்தக் கோபத்தை அதிகரிக்கிற மாதிரி பேசி பேசி உன் மேல நீயே வெறுப்ப வர வைக்காத.. " என்றார் சீதா.
" நான் அப்படி என்ன பண்ணுனேன்.. இந்த வீட்டு வேலைக்காரி கிட்ட எப்படி நடந்துக்கணும் நீங்க தான் தெரியாம இருந்தீங்க.. நான் ஒன்னும் அவள அதை குடிக்க சொல்லி சொல்லல நான் குடிக்கிறேன்னு சொன்னதுக்கு அவதான் அதை எடுத்து குடிச்சிட்டா.. " என்றான் சர்வ சாதாரணமாக.
அதுவரை அவனிடம் பேசக்கூடாது என்று பொறுமை காத்த பூமாவுக்கு அதுவரை இருந்த பொறுமை பறந்து போக, அவன் கன்னத்திலேயே பளார் என ஒரு அறை விட்டார்.
மொத்த குடும்பமும் அங்கு தான் கூடியிருந்தது.
இரண்டு நாட்கள் ஓய்வில் இருந்த தென்றல் அன்று தான் வேலைகளை பார்க்க மீண்டும் ஆரம்பித்திருந்தாள்.
தன்னால் அந்த குடும்பத்தில் பிரச்சனை வேண்டாம் என்று அவள் அந்த வீட்டை விட்டு வெளியேற நினைக்க அவளைப் போக விடாமல் சத்தியம் வாங்கி தடுத்து விட்டார் பூமா.
தென்றல் குணமாகி வீட்டிற்கு வந்ததும் பூமா ஒரே வார்த்தையாக அந்த வீட்டில் இருக்கும் யாரும் விஷ்ணுவிடம் பேசக்கூடாது என்று கண்டிஷன் போட்டு விட்டார்.
எப்போதும் போல அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுரேகாவிற்கு ஒரு முறைப்பை பரிசாக கொடுத்தார்.
இதுவரை ஒரு முறை கூட தன்னை திட்டி பேசாத தனது அப்பத்தா இப்பொழுது தன்னை கைநீட்டி அடித்ததும் விஷ்ணுவிற்கு ஆத்திரம் தாங்கவில்லை.
" உங்களுக்கு உங்க மகனோட பையன விட இந்த வீட்டு வேலைக்காரி ரொம்ப முக்கியமா போய்ட்டா இல்ல.. அவளுக்காக என்னையே கைநீட்டி அடிக்கிற அளவுக்கு நீங்க மாறிட்டீங்க.. அதை எதிர்த்து கேள்வி கேட்க கூட எனக்குன்னு இந்த வீட்ல யாரும் இல்லாத போது நான் எதுக்கு இந்த வீட்ல இருக்கணும்.. இவ்வளவு பிரச்சனைக்கு காரணமான இந்த வீட்டு வேலைக்காரி இங்கேயே இருக்கட்டும் நான் போறேன்.. முன்னாடி போனது போல திரும்ப வந்துடுவேன்னு மட்டும் நினைக்காதீங்க யாரும்.. இந்த வீட்டை விட்டு இப்ப போற நான் இனிமே இந்த பக்கமே வரமாட்டேன்.. " என்றவன் கோபமாக தனது அறைக்கு சென்று தனது பொருட்களை எல்லாம் பையில் அடுக்க ஆரம்பித்தான்.
" போதும் நிறுத்துங்க அம்மாச்சி..நீங்க அத்தானை அடிச்சதுக்கு கூட அவங்க மேல உள்ள தப்பு தான்னு நான் பொறுத்துக்கிட்டேன்.. ஆனா இந்த ஒரு சின்ன தப்புக்காக அவங்க இந்த வீட்டை விட்டு போறத என்னால ஏத்துக்க முடியாது.. அவர் இல்லாத இந்த வீட்ல இனிமே நானும் இருக்க விரும்பலை.. நானும் அவர் கூடவே போறேன்.. எல்லா பொண்ணுங்கள மாறி கல்யாணமானதும் நான் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் என் அம்மா வீடு புருஷன் வீடு ரெண்டும் இதே வீடு தான்..இந்த வீட்ல நான் ரொம்ப சந்தோசமா இருக்கலாம்னு ஆசைப்பட்டேன்.. ஆனா நம்ம நினைக்கிற எதுவுமே நம்ம விருப்பத்துக்கு நடக்கிறது கிடையாது.. எப்போ என்னோட வருங்கால புருஷனுக்கு இந்த வீட்ல இடம் இல்லையோ அப்ப நானும் இங்கே இருக்கிறதுல்ல இனி அர்த்தம் இல்லை.. எனக்கு எல்லாரையும் விட என் அத்தான் தான் ரொம்ப முக்கியம்.. இந்த வீட்டு வேலைக்காரி இங்கேயே சந்தோஷமா இருக்கட்டும் நானும் என் அத்தானும் போறோம்.." என்று கோபமாக அவளதறைக்கு சென்று அவளும் தனது உடமைகளை அடுக்க ஆரம்பித்தாள்.
" எப்ப என் தங்கச்சி இந்த வீட்டை விட்டு போறேன்னு சொன்னாளோ அப்பவே எனக்கும் இந்த வீட்ல இருக்குறதுக்கு விருப்பமில்லை.. இந்த வீட்ல சில விஷயங்களில் நான் தலையிடுவது கிடையாது.. அந்த வேலைக்காரப் பொண்ணு பேர் கூட எனக்கு தெரியல.. அந்தப் பொண்ணை என் மச்சான் கூட சேர்த்து வச்சு பேசினதுக்காக இப்ப வரைக்கும் நான் ரேணுகா கூட பேசுறது கிடையாது.. எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியம் என்னோட தங்கச்சி தான்.. என் தங்கச்சி இல்லாத இந்த வீடு எனக்கும் இனி தேவை இல்லை.. நானும் இந்த வீட்டை விட்டு போறேன்.. " என்றான் விஷ்வா.
அவன் அப்படி சொன்னதும் அவனை அதிர்ச்சியாக பார்த்த ரேணுகா கண்கள் நீர் கோர்க்க, அவனையே தவிப்புடன் பார்த்திருந்தாள்.
என்னதான் அவள் மீது கோபம் கொண்டு இத்தனை நாட்கள் வரை விஷ்வா அவளிடம் பேசாமல் இருந்தாலும் இத்தனை நாட்களாக தன்னை உருகி உருகி காதலித்தவளை தண்டிக்க விரும்பாமல், பார்வையாலேயே அவளை தன்னோடு வருமாறு சொல்ல அதற்காகவே காத்துக் கொண்டிருந்தார் போன்று " விஷ்வா அத்தான் இல்லாத வீட்ல இனிமே நானும் இருக்க மாட்டேன்.. "என்று அவள் பங்குக்கு அவளும் கிளம்ப ஆரம்பித்தாள்.
வீட்டில் அனைவரும் வீட்டை விட்டு கிளம்ப, அதை அவர்கள் பெற்றோர்களால் தாங்கிக் கொள்ள இயலுமா?
நால்வரின் பெற்றோர்களும் அவர்களது பெற்றோர்களிடம் மன்றாட ஆரம்பித்தார்கள்.
"அம்மா..விஷ்ணு செஞ்சது ரொம்ப பெரிய தப்பு தான் அதுக்காக அவன இந்த வீட்டை விட்டு நீங்க அனுப்புறது எனக்கு புடிக்கல.. என் பையன் மேல தப்பு இருந்ததால தான் நானும் இத்தனைனாளும் பேசாம அமைதியா இருந்தேன்.. நீங்க எப்படி உங்க பிள்ளைங்க உங்க கூட இருக்கணும்னு ஆசைப்படுறீங்களோ அதே மாதிரி நானும் என் பிள்ளை கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன் அதுல எந்த தப்பும் இல்லைன்னு தான் நினைக்கிறேன்.. எங்க பிள்ளைங்க இல்லாத இந்த வீட்ல இனிமே நாங்களும் இருக்க விரும்பலை.." என்று கணேஷன் பூமா தலையில் பெரிய இடியை இறக்க, கண்களை மூடி அமர்ந்து விட்டார் பூமா.
மாரியப்பன் தன் வீட்டில் வேலை செய்யும் யாரோ ஒரு பெண்ணிற்காக தன் மொத்த குடும்பத்தையும் இழக்க விரும்பாதவராக அவரும் தன் பங்கிற்கு பூமாதேவியிடம் பேச ஆரம்பித்தார்.
அனைவரும் பேசுவதை அமைதியாக கேட்ட பூமாதேவி மனதுக்குள் சில முடிவுகளை எடுத்தவராக, அத்தனை நேரம் அமைதியாக இருந்தவர் வாய் திறந்து பேச ஆரம்பித்தார்.
" இங்க பாருங்க இந்த குடும்பத்துல இருக்க யாரும் பிரிஞ்சு போக அவசியம் கிடையாது.. நான் தென்றல் தாத்தாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்துருக்கேன்.. அவர் இந்த வீட்ல வேலை பார்த்த வரைக்கும் ரொம்ப விசுவாசமா தான் இருந்துருக்கார்.. அப்படிப்பட்டவரோட பேரப்பொண்ணு இப்ப அனாதையா நிக்கும் போது அவளை இந்த வீட்டை விட்டு என்னால அனுப்ப முடியாது.. இந்த பிரச்சனைக்கு இரண்டு முடிவு இருக்கு.. "என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி குறுக்கிட்டார்.
" எல்லாரும் பேசுறாங்கன்னு நீங்க எதுக்காக இப்ப தேவை இல்லாமல் இவங்க எல்லாருக்கும் விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்கீங்க அம்மா.. விருப்பம் இருக்கவங்க இருக்கட்டும் இல்லாதவங்க போகட்டும்.. அதுக்காக நீங்க இப்படி எல்லார்கிட்டயும் இறங்கி பேசுவது எனக்கு பிடிக்கலை.. "
" கொஞ்ச நேரம் அமைதியா இரு லட்சுமி.. இது நான் பேச வேண்டிய நேரம் பேசாமல் அமைதியா இருந்தா பல பிரச்சினை உருவாகும்.. " என்று கையை உயர்த்தி மகளை தடுத்தவர் அங்கேயே ஒரு ஓரமாக கண்ணீர் வடித்தபடி நின்று கொண்டிருந்த தென்றலை பார்த்து பேச ஆரம்பித்தார்.
" வந்தாரை வாழவைக்கும் குடும்பம் தான் இந்த குடும்பம்.. என்னோட மாமியார் எனக்கு அப்படி சொல்லி தான் இத்தனை வருஷம் இந்த வீட்ல வழி நடத்தி இருக்காங்க.. இப்ப அவங்க இல்லாம இருக்கலாம் ஆனா அவங்க சொன்ன விஷயம் இல்லாமல் போகக்கூடாது.. என் மாமியார் விருப்பப்படி இந்த குடும்பத்துக்கு வந்த யாரும் பாதியிலேயே போகக்கூடாது அது அவங்களுக்கு நான் செய்ற துரோகம்.. இந்த வீட்ல வேலை செய்ற எல்லாரையும் ஆரம்பம் முதல் சரிசமமா தான் நடத்திக்கிட்டு இருக்கோம்.. பாவம் அந்த பொண்ணு தென்றல் இங்க இருக்க எல்லாருக்கும் சேவகம் தான் பண்ணிக்கிட்டு இருக்காள்.. இந்த குடும்பத்துல அவளால இத்தனை பேருக்கு பிரச்சனை என்கிற போது அவ இனிமே இந்த வீட்டில் இருக்க வேண்டாம்.." என்றதும் அவரை தவிப்புடன் பார்த்தாள் தென்றல்.
அவளது பார்வையை உணர்ந்து கொண்டு கண்களாலேயே அவளை அமைதியாக இருக்கும் படி செய்கை செய்தார் பூமா.
அவர் பேச ஆரம்பித்த பொழுது இளையவர்கள் நால்வரும் தங்களது அறையில் இருந்து பொருட்களோடு அங்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.
தனது பேரப்பிள்ளைகள் மகள் மகன் மருமகள் மருமகன் என அனைவரையும் பார்த்தவர் கண்களில் முதன்முதலாக கண்ணீர் வழிந்தது.
" இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் எப்பவும் ஒத்துமையா சந்தோஷமா இருக்கிறது தான் எனக்கு ரொம்ப முக்கியம்.. என்னால இப்ப இந்த குடும்பம் பிரியிறது எனக்கு பிடிக்கல.. அதனால நான் இப்ப என்ன சொல்ல வரேன்னு கேட்டா இந்த குடும்பத்தில் இருக்க நீங்க எல்லாரும் ஒத்துமையா இருங்க.. அத்தனை பிரச்சனைக்கும் காரணமான தென்றல் இந்த வீட்டை விட்டுப் போகட்டும்.. " என்றதும் தான் அவரை ஓடிவந்து அணைத்து கட்டிப்பிடித்துக் கொண்டாள் சுரேகா.
" எனக்கு தெரியும் என்னோட அம்மாச்சிக்கு எப்பவுமே நாங்க எல்லாரும் தான் முக்கியம்.. போயும் போயும் ஒரு வேலைக்காரிக்காக அவங்க எங்க எல்லாரையும் ஒதுக்கி வைக்க விரும்ப மாட்டாங்க.. இப்பவாவது உங்களுக்கு புரிஞ்சுதே இந்த வேலைக்காரியால் தான் இந்த வீட்டிலே இவ்வளவு பிரச்சனையும்.. காசு கொடுத்தா இந்த மாதிரி ஆயிரம் வேலைக்காரர்கள் நமக்கு வேலை செய்ய வருவாங்க.. இந்த பொண்ணு இங்கிருந்து போனவுடனேயே நான் வேற ஒரு ஆளை இந்த வீட்ல வேலை செய்ய ஏற்பாடு பண்றேன் அம்மாச்சி.. அத பத்தி கவலைப்படாம நீங்க சந்தோசமா அவளை இந்த வீட்டை விட்டு அனுப்பி வைங்க.. " என்றதும் அவளைக் கண்டு வருத்தமான ஒரு புன்னகை சிந்திய பூமா அவளை தன்னிலிருந்து பிரித்து விட்டார்.
தன்னை பார்த்துக் கொண்டிருந்த பேரனை சொல்ல முடியாத வேதனையுடன் பார்த்தார்.
" உன்னை நான் நல்லபடியா தான் வளர்த்தேன் விஷ்ணு.. ஆனா எந்த இடத்தில என்னோட வளர்ப்பு தப்பா போச்சுன்னு எனக்கு தெரியல.. இப்ப கூட நீ பண்ண தப்பு உனக்கு புரியலை நீ வீட்டை விட்டு போறேன்னு சொன்ன உடனே இங்க இருக்க எல்லாரும் நீ பண்ண தப்ப பொருட்படுத்தாமல் உன்னை விட்டு கொடுக்காம உன் கூடவே வீட்டை விட்டு வரேன்னு சொல்லும் போது எனக்கு சந்தோசமா தான் இருக்கு.. இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் கடைசி வரை இதே போல ஒத்துமையா இருங்க.. " என்றவர் அங்கிருந்த அனைவரையும் ஒரு முறை தன் கண்களில் கண்டு மனமார மனதுக்குள் ரசித்துக் கொண்டார்.
அங்கேயே ஒரு ஓரமாக அழுது கொண்டிருந்த தென்றல் பக்கத்தில் வந்தவர் அவள் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து வந்திருந்தார்.
" இந்த பிரச்சனை எல்லாத்துக்கும் காரணமான தென்றல் கூடவே நானும் இந்த வீட்டை விட்டு போறேன்.. " என்றதும் அங்கு ஒரு சின்ன துரும்பு விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு நிசப்தம் நிலவியது.
" இவ்வளவு பெரிய தண்டனை இங்க யாருக்கும் வேண்டாம் அத்தை.. யாரும் இந்த வீட்டை விட்டு போக வேண்டாம் இதுக்கு வேற ஏதாவது ஒரு வழி இருந்தா சொல்லுங்க.. நீங்க இல்லாம இந்த குடும்பத்தை யோசிச்சு கூட பாக்க என்னால முடியல.. " என்றார் நல்ல மருமகளாக சீதா.
அவரை புன்னகையோடு பார்த்த பூமாதேவி " அதைத்தான் சொல்ல வரேன் சீதா கொஞ்சம் அமைதியா இரு.. இங்க இருக்க எல்லாரும் அவங்க அவங்க துணை அவங்களை விட்டு போயிடுவாங்களான்னு பயம்.. அதனாலதான் இத்தனை பிரச்சனைக்கும் இங்கே அடிதலமா அது அமைஞ்சு போச்சு.. இனி பிரச்சனை வேண்டாம் நீங்க எல்லாரும் விரும்பினால் தென்றல் என் கூடவே இருப்பாள்.. என்னோட பேரன்களும் பேத்திகளும் விரும்புனது மாதிரியே அவங்க அவங்களே கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருங்க.. கல்யாணத்துக்கு அப்புறம் விஷ்ணுவுக்கு தேவையான எல்லாத்தையும் சுரேகா பண்ணட்டும்.. விஷ்வாவுக்கு அவன் பொண்டாட்டி அதே மாதிரி என்னோட மகள் மருமகனுக்கும் மருமகள் மகனுக்கும் பணிவிடை பண்ணட்டும்.. உங்க யாரோட கண்ணுலையும் படாத படி நானும் என் வீட்டுக்காரரும் இருக்க இடத்தில இந்த தென்றல் எங்க கூட இருந்து கொஞ்ச நாள் சேவகம் பண்ணட்டும்.. உங்க கல்யாணம் முடிஞ்சு கொஞ்ச நாளிலேயே அந்த பொண்ணுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி இந்த வீட்டை விட்டு அனுப்பி வச்சிடுறேன்.. " என்றதும் அங்கிருந்து அனைவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
" இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம் அம்மா.. இங்கே இருக்க எல்லாருக்குமே அவங்க அவங்க பிரச்சனைக்கு தீர்வு கிடைச்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.. அவங்க அவங்க விரும்புனத மாதிரி அவங்க அவங்க துணையை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கே இருந்தாலும் சரி தனியா கூட்டிட்டு போனாலும் சரி.. ஆனால் நானும் என் வீட்டுக்காரரும் எப்பவும் உங்க கூட தான் இருப்போம் அம்மா.. அதோட தென்றல் எனக்கும் ஒரு பொண்ணு மாதிரி தான் இவங்க எல்லாருக்கும் முன்னாடி அவளுக்கு கல்யாண ஏற்பாடு பண்ணி இவங்க யாரு கண்ணுலையும் படாத மாதிரி அவளை அனுப்பி வச்சிடறேன்.. அந்த பொண்ணு இந்த குடும்பத்திலிருந்து பட்ட கஷ்டம் எல்லாம் போதும்.. அந்தப் பொண்ணு செத்த பிழைத்து வந்திருக்கிறாள்.. நம்ம குடும்பத்துல ஒரு பொண்ணு இருந்திருந்து , இந்த மாதிரி ஒரு நிலைமை வந்தால் நம்ம பார்த்துக்கிட்டு சும்மா இருப்போமா? யாரோ ஒரு பொண்ணுன்னு தானே எல்லாரும் அவளை இவ்வளவு கஷ்டப்படுத்தி இங்க வேடிக்கை பாக்குறாங்க.. என் பிரண்டு ஜமுனா பையன் ரொம்ப நல்லவன்.. நான் பெத்த பிள்ளைகள் கூட நான் சொல்றதை கேட்குமோ என்னவோ? அந்தப் பையன் நான் சொல்ற எதையும் மீறவே மாட்டான் இவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சா அடுத்த வாரத்திலேயே என்னோட தத்து பொண்ணு தென்றலுக்கும் கல்யாணம்.." என்றவர் யாரும் மறுத்து பேசும் முன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார்.
செல்லும் அவரை தடுத்து நிறுத்தினான் விஷ்ணு.
" நில்லுங்க அத்தை யாரை கேட்டு நீங்க எங்களுக்கு கல்யாணம் பண்ற முடிவு எடுத்தீங்க? "
" யார கேட்கணும் விஷ்ணு.. நீ நான் தூக்கி வளர்த்த பையன் சுரேகா என்னோட பொண்ணு விஷ்வா என்னோட பையன் ரேணுகா என்னோட மருமகள் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நான் யார்க்கிட்ட அனுமதி வாங்கணும்.. "
" என்கிட்ட கேட்காம.. " என்ற விஷ்ணுவை தடுத்து நிறுத்தினார் சீதா.
" போதும் வாயை மூடு விஷ்ணு.. உன்னால இந்த வீட்ல வந்த குழப்பம் எல்லாமே போதும் இதுக்கு மேல உன்னால ஒரு பிரச்சனை இந்த வீட்ல வந்தா அதுக்கப்புறம் என்ன உயிரோட நீ பார்க்க முடியாது.. உங்க அம்மா மேல உனக்கு மரியாதை இருந்தா வாயை மூடிக்கிட்டு அமைதியா பெரியவங்க செய்ற வேலைக்கு ஒத்துழை.. " எனவும் அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாத விஷ்ணு அங்கிருந்து அனைவரையும் வெறுப்புடன் பார்த்துவிட்டு என்னவோ செய்து கொள்ளுங்கள் என்று அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்.
அவன் ஒருவனுக்கு அந்த செய்தி எரிச்சலாக இருந்தாலும் மற்ற அனைவருக்கும் தங்கள் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சி தான்.
விஷ்வாவிற்கு கூட ரேணுகா மீது இருந்த கோபம் மறைந்து போக, தங்கைக்கு அவளுக்கு பிடித்த மணமகனோடு திருமணம் நடக்கப் போவதை நினைத்தும் அதேசமயம் அவனுக்கும் மனதுக்குள் தன் வருங்கால மனைவியை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதை நினைத்து சந்தோஷம் தான்.
பிள்ளைகள் வீட்டை விட்டு போகிறேன் என்றதும் பயந்து கொண்டிருந்த பெரியோர்களும் அவர்களது திருமண பேச்சைக் கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார்கள்.
முதலில் சிறு பிரச்சனை வந்தாலும் அதை ஒன்றுமே இல்லை என்பது போல் மாற்றிவிட்டார் லட்சுமி.
மொத்த வீடும் அவர்களது திருமண பேச்சை கேட்டு சந்தோஷத்தில் மிதக்க, அங்கு ஒரு புறா கண்ணீரில் அழுக அதற்கு காரணமானவன் எப்படியாவது தன் மனதிற்கு பிடித்த அந்த பெண்ணை பார்த்து விடமாட்டோமா! அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டோமோ என்ற ஏக்கத்தில் வீட்டை விட்டு வெளியில் நடந்து கொண்டிருந்தான்.
ஒரு பக்கம் தன் மனதுக்கு மிகவும் பிடித்த அந்தப் பெண்ணை பார்க்க மாட்டோமா? என்கிற ஏக்கம், மற்றொரு பக்கம் தென்றல் கண்களில் இருந்த சோகம் வருத்தம் அவன் மனதை தாக்க, இன்னொரு பக்கம் சுரேகாவிற்கு துரோகம் செய்கிறோமோ? என்ற பயம் எல்லாம் சேர்ந்து அவனை ஒரு வழி செய்தது.
அத்தியாயம் 9:
" எதுக்காக அம்மா நீங்களாவே இப்படி ஒரு முடிவு எடுத்து எல்லார் முன்னாடியும் பேசிட்டு வந்துட்டீங்க.."என்றாள் தென்றல்.
" எப்பவுமே என்னோட அம்மா யாரு முன்னாடியும் தலை குனிந்து நிற்கக்கூடாது தென்றல்.. எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியம் என்னோட அம்மா தான்.. அவங்களுக்கு ஒரு பிரச்சனைன்னு வரும் போது நான் பார்த்துகிட்டே சும்மா இருக்க மாட்டேன்.."
" ஒத்துக்குறேன்மா நான் இந்த வீட்ல வேலை செய்ற பொண்ணு தான்.. இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் எனக்கு ரொம்ப முக்கியத்துவம் தர்றீங்கன்னு எனக்கு புரியுது.. எல்லா வீட்டுலயும் வேலைக்காரர்களுக்கு இது போல் மதிப்பு கிடைச்சா அவங்க எல்லாருமே அதிர்ஷ்டசாலி தான்.. நானும் ஒரு வகையில் அதிர்ஷ்டசாலி தான் அதனால தான் இந்த வீட்ல வேலைக்கு சேர்ந்திருக்கிறேன்.. அன்னைக்கு நான் விஷம் குடிக்கலைன்னா அந்த விஷத்தை எடுத்து விஷ்ணு சார் குடிச்சாலும் குடிச்சிடுவாங்கன்னு பயந்து போய் தான் நான் குடித்தேன்.. அதுவே இப்ப இவ்வளவு பிரச்சினையாகும்னு தெரிஞ்சிருந்தா நான் கண்டிப்பா அவங்க ரூமுக்கு போயிருக்கவே மாட்டேன்.. நா அங்க போனதுக்கு இன்னொரு காரணம் நீங்க என் கூட இருந்தது தான்.. எனக்குன்னு ஒரு மனசு இருக்கு அந்த மனசுக்குள்ள ஆசை இருக்குனு உங்களுக்கு ஏம்மா தெரியாமல் போச்சு.. "
" நீ பேசுறத எல்லாம் கேட்கும் போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தென்றல்.. உன்கிட்ட கேக்காம உன் வாழ்க்கைக்கு இப்படி ஒரு முடிவு எடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது தான்.. ஆனா நான் சொன்னது போல உன்னையும் என் மகளாக தான் பார்க்கிறேன்.. அதனாலதான் உன்கிட்ட கூட கேட்காம இந்த முடிவு எடுத்தேன் உனக்கு விருப்பமில்லைன்னு சொன்னா இப்ப கூட இந்த கல்யாணத்தை நான் நிறுத்திடுவேன்.. "எனவும் எப்போதும் தன்னால் ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அதை தாங்கிக் கொள்ளாதவள் இப்பொழுதும் தன்னால் ஒரு பிரச்சனை வருகிறது என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா என்ன?
அவளுக்கு பிடித்தாலும் பிடிக்காமல் போனாலும் வேறு வழி இல்லாமல் அவர் சொன்னது போல அந்த திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.
!!!
அமெரிக்கா
" என்ன ராகுல் என்ன அப்படி பாக்கற.. " என்றாள் பிரகல்யா.
" யூ ஆர் சோ பியூட்டிஃபுல்.. " என்றான் ராகுல்.
" தேங்க்யூ ராகுல்.. நீயும் பார்க்க ரொம்ப அழகா இருக்க.. " என்றவள் அவனைக் கண்ணாரக் கண்டு மனதுக்குள்ளேயே ரசித்தாள்.
" ஓகே பார்ட்டிக்கு அரை மணி நேரம் தான் இருக்கு கிளம்பலாமா? " என்று ராகுல் கேட்க, அதற்கு சரி என்று வாய் திறந்து சொல்வதற்கு உள்ளாக அவளது செல்போன் இசைத்தது.
யாரென்று பார்த்தவள் திரையில் மின்னிய கார்த்திக்கின் எண்ணை கண்டதும் யோசனையாக அதை பார்த்தவள் ராகுலிடம் பார்வையாலேயே கெஞ்சி அகன்றாள்.
" சொல்லுங்க அண்ணா எதுக்காக எனக்கு போன் பண்ணி இருக்கீங்க.. நான்தான் உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாமே எல்லாரையும் விட்டு ரொம்ப தூரமா வந்துட்டேன்னு உங்க கிட்ட சொல்லிட்டேனே! அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் என்னை தொந்தரவு பண்ணிட்டு இருக்கீங்க? "
" உன் பேச்சுல இருக்க கோபம் ஆதங்கம் எல்லாம் எனக்கு புரியுது அகல்யா.. நீ விஷ்ணுவை விட்டு போனதும் நான் அப்படியே விட்டுவிடுவேன் என்று நினைத்தாயா? விஷ்ணுவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க உனக்கு தெரியுமா தெரியாதா?" என்றதும் அந்தப் பக்கம் கனத்த மவுனம்.
" ஹலோ லைன்ல தான் இருக்கியா? பதில் சொல்லு உனக்கு தெரியுமா தெரியாதா எல்லாம் தெரிஞ்சும் அமைதியா இருக்கியா காரணம் என்ன? "
" எனக்கு எல்லாமே தெரியும் அண்ணா.. நான் அவருடைய வாழ்க்கையிலருந்து விலகி போனது போனதாக இருக்கட்டும்.. என்னால அவர் வாழ்க்கையில் மறுபடியும் பிரச்சினை வேண்டாம்.. அவர் யாரை வேணா கல்யாணம் பண்ணிக்கட்டும் என்னமோ பண்ணட்டும்.. அதை பத்தி எல்லாம் கொஞ்சம் கூட கவலையே கிடையாது.. எனக்கு என்னோட ராகுல் மட்டும் போதும் அவன் கூட என் வாழ்க்கையை நான் நல்லபடியா வாழ்கிறேன்..என் வாழ்க்கையில் சில விஷயங்களை மறந்துட்டு முன்னேறி போகணும்னு நினைக்கிறேன்.. யார் வேணும்னாலும் யார் கூட வேணும்னாலும் கல்யாணம் பண்ணிக்கட்டும் சேர்ந்து வாழட்டும் என அத பத்தியெல்லாம் கவலை கிடையாது இனிமே எனக்கு போன் பண்ணாதீங்க கார்த்திக் அண்ணா.. " என்றவள் அவன் பதிலுக்காக காத்திருக்காமல் அலைபேசியை அணைத்து விட்டாள்.
அங்கிருந்த நாற்காலியில் தொய்ந்து அமர்ந்து விட்டாள் பெண்ணவள்.
' எப்படி விஷ்ணு என்னை விட்டுட்டு நீங்க வேறொரு கல்யாணம் பண்ண தயாரானிங்க.. என் மேல நீங்க வச்ச பாசம் எல்லாம் அவ்வளவுதானா? எது எப்படியோ இனிமே உங்களுக்கும் எனக்கும் இடையில எதுவுமில்லை எனக்கு என் ராகுல் மட்டும் போதும் நீங்க யார வேணாலும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாயிருங்க எப்பவும் உங்க வாழ்க்கையில் இனிமேல் நான் குறுக்க வரமாட்டேன்..' என் மனதுக்குள் சொல்லிக் கொண்டவளுக்கு துக்கம் தாங்க இயலவில்லை.
*****
" உன்ன மாதிரி ஒரு பொண்ண நான் பார்த்ததே இல்லடி.. இந்த வீட்ல உன்னால எவ்வளவு பிரச்சனை இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் நீதான் அது நல்லாவே தெரியும் அப்படி தெரிஞ்சும் இந்த வீட்டை விட்டு போகாமல் இங்கேயே இருக்கிறாயே அப்போ உனக்கு மனசுக்குள்ள எவ்வளவு நெஞ்சழுத்தம்?" என்றாள் சுரேகா.
" நீங்க காபி கேட்டதால தான் உங்க ரூமுக்கு நான் கொண்டு வந்தேன் இனிமே என்னால உங்க குடும்பத்தில் எந்த பிரச்சினையும் வராதுன்னு லட்சுமி அம்மா சொல்லிட்டாங்க.. எப்படி இருந்தாலும் நீங்க ஆசைப்பட்டது மாதிரி உங்க மாமாவை தானே கல்யாணம் பண்ணிக்க போறீங்க அப்புறம் எதுக்கு தேவை இல்லாம என்கிட்ட வம்பு பண்றீங்க மேடம்.."
" என்னடி உனக்கு வர வர திமிர் கூடிக்கிட்டே போகுது மறுபடி மறுபடி என்னை எதிர்த்து பேசிட்டு இருக்க.. " என்றவளை ஆயாசமாக பார்த்த தென்றல் அங்கு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரேணுகாவை அவள் உதவிக்காக பார்க்க, கண்களை மூடி திறந்த ரேணுகா சுரேகாவிடம் பேச்சை கொடுத்து அவளை தன் பக்கம் திசைதிருப்ப இதுதான் வாய்ப்பு என்று அங்கிருந்து நழுவி வந்து விட்டாள் தென்றல்.
தப்பித்தோம் என்று அவள் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இரு கரங்கள் அவளை பிடித்து ஒரு அறைக்குள் இழுக்க, பயத்தில் கத்த போனவள் வாயை இறுக்கமாக மூடினான் விஷ்ணுவரதன்.
அவனது செயலில் அவள் கண்கள் இரண்டும் வெளியே வந்து விடுமளவிற்கு பயத்தில் விழிக்க, அவளது கண்களையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனதுக்குள் பூகம்பம் தான்.
அவளது கண்கள் அவனிடம் ஏதோ சேதி சொல்ல முயல அவனது மனது அதை உணர விடாமல் தடுக்க, வழக்கம்போல அந்த கோபமும் தென்றல் மீது தான் திரும்பியது.
" ஏன் எப்ப பாத்தாலும் என் கண்ணு முன்னாடி வந்து தேவையில்லாமல் என்னை எரிச்சல் ஏத்துறடி.. உன்ன தான் என் பார்வையிலே படக்கூடாது இந்த வீட்ல இருக்க எல்லாரும் சொல்லி வச்சிருக்காங்கல்ல அப்புறம் எதுக்கு என் கண்ணு முன்னாடி வந்து என்னை தொல்லை பண்ற.. " என்றவன் அவள் கண்களை பார்ப்பதை தவிர்த்து விட்டு கேட்டான்.
" என்னடி நான் பேசிகிட்டே இருக்கேன் நீ பதில் சொல்லாமல் அமைதியா இருந்தா அதுக்கு என்ன அர்த்தம்?இவன் எல்லாம் ஒரு ஆளு இவனுக்கெல்லாம் நான் பதில் சொல்லணும்னு நினைக்கிறியா!" எனவும் அவனிடமிருந்து விடுபட போராடிக் கொண்டிருந்த தென்றல், அவன் தன் வாயிலிருந்து கையை எடுப்பது போல் தெரியாமல் போக வேறு வழி இல்லாமல் அவன் கையை கிள்ளி விட்டாள்.
"அவுச்" என்று கத்தியபடி கையை தேய்த்து விட்டவன் அவளை முறைத்து பார்த்தான்.
" என்ன மன்னிச்சிடுங்க சார்.. நீங்கதான் என் வாயில வச்ச கையை வெளியில எடுக்காம என்கிட்ட பேசிக்கிட்டே இருந்தீங்க அப்புறம் நான் எப்படி உங்களுக்கு பதில் சொல்ல முடியும்? "
" வாய மூடு உன்கிட்ட பேசவே எனக்கு பிடிக்கல முதல்ல என் ரூமை விட்டு வெளியே போ.. " என்றான் அவள் கண்களை பார்க்க முடியாமல்.
அவனது செயலில் தென்றல் பேந்த பேந்த
விழித்தபடி ஒன்றும் புரியாமல் அவனது அறையை விட்டு வெளியேற அதை பார்த்து விட்டார் லட்சுமி.
மனதுக்குள் யோசனையாக அந்த இடத்தை விட்டு அகன்றார்.
கல்யாண வேலைகளை பார்ப்பதற்காக நால்வரின் பெற்றோர்களும் அவரது பிள்ளைகளின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவர்களது குடும்ப ஜோசியரிடம் சென்றார்கள்.
விஷ்ணுவின் ஜாதகத்தை எடுத்து பார்த்த ஜோசியர் யோசனையாக அவனது பெற்றோரை பார்த்தார்.
அவரது பார்வை புரியாமல் கணேசன் சீதா பார்க்க அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் இருவருக்கும் தலையில் இடி விழுகாத குறை தான்.
பெண்ணைப் பெற்ற இந்திரன் லக்ஷ்மி தம்பதியருக்கு கூட அவர் சொன்னதை கேட்டு கடும் அதிர்ச்சி தான்.
அவர் சொன்னதை நம்ப முடியாமல் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்திக்கொள்ள கணேசன் கேட்க, அவரது கண்களைப் பார்த்து 100% தான் சொன்னது சரிதான் என்பது போல் மீண்டும் சொன்னதையே சொன்னார் ஜோசியர்.
பல வருடங்களாகவே அவர்களது குடும்ப ஜோசியராக இருக்கும் அவர் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்று உணர்ந்து கொண்ட பெரியவர்களுக்கு அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதிர்ச்சியோடு வீடு வந்து சேர்ந்தார்கள்.
நடக்கும் விஷயங்களில் எல்லாம் சிறிதும் ஆர்வம் காட்டாத விஷ்ணு அவனது ரைஸ் மில்க்கு சென்று விட, விஷ்வா அவனது ஆபிசுக்கு செல்ல வீட்டில் இருந்தது பெண்கள் இருவருமே.
சுரேகா ரேணுகா இருவரும் தங்கள் பெற்றோர்கள் ஜோசியரை பார்க்கப்போவதாக சொல்லிவிட்டு சென்றதும் இருவரும் தங்களது வருங்காலத்தை நினைத்து கல்யாண கனவுகளோடு காத்திருக்க எப்பொழுதடா தங்கள் பெற்றோர்கள் வருவார்கள் திருமண தேதியை சொல்வார்கள் என்று பசலை நோய் வந்தது போல் ஏங்கிப் போயிருந்தார்கள்.
" என்னடி ரெண்டு பேரும் வச்ச கண் வாங்காமல் இப்படி வாசப்படியையே பார்த்துட்டு உக்காந்து இருக்கீங்களே என்ன சங்கதி? " என்றார் பூமா.
" அதுவா அம்மாச்சி கல்யாணம் பத்தி முடிவு பண்றதுக்காக ஜோசியரை பார்க்க போன எங்க அப்பா அம்மாவையும் சுரேகா அப்பா அம்மாவையும் பார்த்துகிட்டு இருக்கோம் எப்ப வந்து கல்யாண தேதி சொல்ல போறாங்கன்னு ரொம்ப ஆர்வமா இருக்கோம் நாள் வேற ரொம்ப இல்லை அதுக்குள்ள எல்லா வேலையும் முடிக்கணும்.. " என்று படபடவென பேசியவளை புன்னகையோடு பார்த்தார்கள் மாரியப்பன் பூமாதேவி தம்பதியர்.
" ரொம்ப அவசரப்படாத ரேணுகா.. உனக்கு இன்னும் படிப்பு முடியல அதுக்குள்ள என்ன கல்யாணத்துக்காக அவசரம்.. சுரேகா வேலைக்கு போகணும்னு ஆசைப்படுறா அவளும் வேலைக்கு போகட்டும் கொஞ்ச நாள் ஆகட்டும்.. " என்று கிண்டலாக கேட்க, அவரைக் கண்டு சிணுங்கியபடி தனது அறைக்கு ஓடிவிட்டாள் பெண்ணவள்.
" என்ன அம்மாச்சி உங்க பேரனுக்கும் எனக்கும் கல்யாணம் நடக்கிறது உங்களுக்கு சுத்தமா பிடிக்கல போலருக்கு.. எப்பவாவது எதையாவது குதர்க்கமாக பேசுவதே உங்களுக்கு வேலையா போச்சு.. " என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரைப் பார்ப்பதற்காக ஊரிலிருக்கும் தலைவர்கள் வர, அவளை முறைத்துப் பார்த்த பூமாதேவி அவளிடம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று வந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார்.
" எல்லாரும் வாங்க வந்து உட்காருங்க என்ன விஷயமா வந்துருக்கீங்க? " என்று பூமாதேவி வயதில் பெரியவராக இருந்த போதும் அவரது குடும்பத்திற்கே உரிய பணிவுடன் கேட்க, அவர் ஒரு மடங்கு பணிந்து பேச வந்திருந்தவர்கள் அவரைவிட ஆஸ்தி அந்தஸ்தில் பெரியவராக இருந்த பொழுதிலும் அவர் கொடுத்த பணிவுக்கு மூன்று மடங்கு பணிவுடன் திரும்பி பேச ஆரம்பித்தார்கள்.
வீட்டிற்கு வந்தவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த தென்றல் அவர்களுக்கு எப்பொழுது போல் தேநீர் கலந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.
அங்கு வந்திருந்தவர்களுக்கு உடலுக்கு ஆளாளுக்கு ஒவ்வொரு பிரச்சனை உண்டு.
அவர்கள் வந்த புதிதில் அவரவருக்கு உள்ள உடல் பிரச்சினையை சொல்லி தேநீர் வேண்டாம் என்று மறுத்து விட, அதை மனதில் வைத்துக் கொண்டு அவரவருக்கு தகுந்தாற் போன்று தேநீர் வார்த்து எடுத்துக் கொண்டு வந்தாள் தென்றலைப் போல் குணம் கொண்ட தென்றல்.
அவள் கொடுத்த தேநீரை வந்திருந்தவர் யாவரும் வாங்கி அவரவர் சுவைக்கு ஏற்ப போட்டு தந்ததை பருகி ரசித்தார்கள்.
" நிஜமாலுமே நீ ரொம்ப நல்லா தேநீர் வார்க்கிறாய் அம்மா.. எங்களுக்கு பூமாதேவி அம்மா வீட்ல எந்த பேச்சுக்கும் சோலி இல்லாமல் போனாலும் உன் தேநீர் குடிக்கவே ஒரு காரணம் சொல்லி வாரம் வந்து போகலாம் போல இருக்கு அவ்வளவு அற்புதமா இருக்கு.. உன் கையால போடுற தேநீரை இவ்வளவு அபாரமா இருக்கும் பொழுது உன் கையால் சாப்பிடற இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லோருக்குமே தினம் தினம் விருந்து தான்.. " என்று சிலாகிக்க, அவர்களை எரிச்சலுடன் பார்த்தாள் சுரேகா.
' வந்துட்டானுங்க வேல பொழப்பு இல்லாம.. இவள் ஏற்கனவே சும்மாவே ஆடுவா அவளை இன்னும் மேலும் மேலும் என் அம்மாச்சி ஆட்டி வைக்க என் அம்மா கூட சேர்ந்து ஆடுவாங்க. போதாக்குறைக்கு வந்திருக்க இவனுங்க பேசினதையும் கேட்டு இனிமே இவள் ஆட்டம் பெரும் ஆட்டமா தான் இருக்கும் அப்படி இவ என்ன வசிய மருந்து வச்சி எல்லாரையும் மயக்கி வச்சிருக்காளோ.. ' என்று மனதுக்குள் திட்டியபடி வந்திருந்தவர்களை வாங்க என்று பெயருக்கு அழைத்து வைத்திருந்தவள் யார் வீட்டிற்கு வந்தாலும் உடனே எழுந்து செல்லக்கூடாது என்று பூமாதேவி கட்டளைக்கிணங்கி வேறு வழியில்லாமல் அவ்வளவு நேரம் முள்ளில் மீது அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தவளுக்கு அதுக்கு மேலும் உட்கார முடியாமல் போக ஏதோ ஒரு காரணம் சொல்லிவிட்டு அவளது அறைக்கு ஓடிவிட்டாள்.
" நிஜமாய் இந்த பொண்ணு கையால ஒரு நாள் விருந்து சாப்பிடனும் பெரியம்மா நாங்க எல்லாரும் இன்னொரு நாள் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரலாமா? " என்று அனுமதி கேட்டவரை புன்னகையுடன் பார்த்த பூமாதேவி " அதுக்கு என்ன தாராளமா வாங்க.. " என்றவர் தென்றலை நிமிர்ந்து பார்க்க, அவளும் புன்னகையோடு சம்மதமாய் தலையசைத்தாள்.
" உண்மையாலுமே நீங்க ரொம்ப கிரேட் தான் பூமாதேவி அம்மா.. உங்க வீட்ல வேலை செய்ற பொண்ணா இருந்தாலும் அந்த பொண்ணு கிட்ட அனுமதி கேட்டு அதனால சமைக்க முடியுமானு தெரிஞ்சதுக்கப்புறம் எங்களை வர சொல்லி சொல்றீங்க பாத்தீங்களா! உங்கள பாத்து தான் நாங்களும் வரவர எங்க வீட்ல வேலை பாக்குற எல்லா வேலைக்காரர்களுக்கும் மரியாதை கொடுக்க ஆரம்பித்திருக்கோம்.. நாங்க எல்லாரும் அவங்களை ஒரு வார்த்தை மரியாதையா பேச அவங்களுக்கும் தன்னை மனுஷனா மதிச்சு தன்னையும் மரியாதையா நடத்துவது தான் நினைச்சு எங்களோட குடும்பத்துல ஒருத்தவங்க மாதிரி அக்கறை எடுத்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்றாங்க.. மனுஷங்களை எப்படி மனுஷங்களா நடத்துவதுன்னு உங்களை பார்த்து தான் கத்துக்கணும் அப்ப நாங்க போயிட்டு வரோம்மா.. போயிட்டு வரோம் ஐயா.. போயிட்டு உன் கையால சீக்கிரம் விருந்த சாப்பிட இந்த வீட்டுக்கு மறுபடியும் சீக்கிரமே வரோம் தென்றல்.. "என்று அனைவரிடமும் வந்திருந்தவர்கள் சொல்லிவிட்டு செல்ல, அவர்கள் அனைவரையும் புன்னகையோடு வாசல் வரை வழியனுப்ப அவர்கள் பின்னாடியே சென்றாள் தென்றல்.
" இந்தப் பொண்ணு ஏங்க என் மகளுக்கோ இல்ல மகனுக்கோ பிறக்காமல் போனது.. இவள் மட்டும் இந்த குடும்ப பொண்ணா இருந்திருந்தால் இந்த குடும்பமே ரொம்ப புண்ணியம் செய்திருக்கும்.. இந்த குடும்ப பெயரை காப்பாற்ற இந்த வீட்டு பொண்ணுங்க கூட இவ்வளவு முயற்சி பண்ண மாட்டாங்க எல்லாத்துக்கும் மேல நம்ம வீட்ல வேலை பாக்குற இந்த பொண்ணு நம்ம எல்லாரும் மேலேயும் எவ்வளவு அக்கறை வச்சு பார்த்து கவனிக்க அதனால தான் இன்னைக்கு நம்ம குடும்பத்துக்கு இவ்வளவு மரியாதை பேர் எல்லாமே இருக்கு.. என்னோட காலத்துக்கு அப்புறம் இந்த பொண்ணுங்க இந்த குடும்பத்தை என்ன பண்ண போறாங்கன்னு எனக்கு தெரியலை.. " என்று கவலையாக பூமாதேவி சொல்ல, மாரியப்பன் மனைவியை யோசனையாக பார்த்தார்.
அத்தியாயம் 10 :
" இப்ப எதுக்காக என்னை பாத்துகிட்டு இருக்கீங்க?"
" எனக்கு என்னமோ நம்ம பேரப்பிள்ளைகள் சொல்றது மாதிரி நீ இந்த பொண்ணு தென்றலுக்கு ரொம்ப தான் இடம் கொடுக்கிறது மாதிரி எனக்கு தோணுது.. "
" என்னங்க நீங்க? இத்தனை வருஷம் என் கூட வாழ்ந்தும் என்னை பத்தி நீங்க கொஞ்சம் கூட புரிஞ்சுக்கல.. இவ்வளவுதான் நம்ம வாழ்ந்த வாழ்க்கையா? "
" அப்படி கிடையாது தேவி.. என்னதான் வேலைக்காரர்களுக்கு மரியாதை கொடுத்தாலும் அவங்களை எந்த இடத்தில வைக்கணுமோ அந்த இடத்தில் தான் வைக்கணும்.. நம்ம பேரப்பிள்ளைகளை விட நீ அந்த பொண்ணு தென்றல் மேல தான் ரொம்ப பாசமா இருக்கிற மாதிரி எனக்கு தோணுது.. "
" உங்களுக்கு எப்படி தோனினாலும் நினைச்சுக்கோங்க நீங்க சொல்றது மாதிரி நம்ம குடும்பத்துல இருக்க எல்லாரையும் விட எனக்கு அந்த பொண்ணு தான் ரொம்ப முக்கியம்.. "
" அதை தான் ஏன்னு கேக்குறேன்.. " எனவும் கணவனை வேதனையாக பார்த்தார் தேவி.
" என்ன பதில் சொல்றது ஏன்னு கேட்டா அந்த பொண்ணு ரொம்ப நாளா நம்ம வீட்டுல வேலை பார்க்கிறது.."என்றவர் ஏதேதோ சொல்லி சமாளிக்க, மனைவியை நம்பாமல் மாரியப்பன் பார்த்துக் கொண்டிருக்க அதற்குள் குடும்பத்தில் உள்ள அனைவரும் வந்து விட்டார்கள்.
"எல்லாரும் வாங்க.. போன விஷயம் என்ன ஆச்சு? ஜோசியர் என்ன சொன்னார்? எப்ப கல்யாணம் வச்சுக்கலாம்னு சொன்னார்.. ஒரு மாசம் தான் இருக்குதுன்னு சொன்னாரா? அடுத்த மாசம் வேற கார்த்திகை வருது மழைக்காலம் வேற நம்ம ஐப்பசி மாசத்துலையே இரண்டு கல்யாணத்தையும் ஒன்றாக வைக்கிறது ரொம்ப நல்லது.. ஐப்பசி மாசம்னா இன்னும் வெறும் இருபது நாள் மட்டும் தான் இருக்கு அதுக்குள்ள கல்யாண ஏற்பாடுகள் எல்லாம் பண்ணனும்.." என்றார் மாரியப்பன்.
" இல்லப்பா அதுக்கான அவசியம் இப்போதைக்கு தேவையில்லை நமக்கு.. " என்ற கணேசன் முகம் ஜோசியர் சொன்னதிலிருந்து ஒரு மாதிரியாக இருந்தது.
" ஏன்பா என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா? "
" அது வந்து ஜோசியர் என்ன சொன்னார்ன்னா அப்பா.. " என்று அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அவரை தடுத்து நிறுத்தினார் லட்சுமி.
" அண்ணா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க அப்பாகிட்ட நான் பேசிக்கிறேன்.. ஒன்னும் பிரச்சனை இல்லப்பா சுரேகா ஜாதகத்துக்கும் விஷ்ணு ஜாதகத்துக்கும் இப்போதைக்கு நேரம் சரியில்லையாம் இவங்க ரெண்டு பேருக்கும் இப்போதைக்கு கல்யாணம் பண்ண கூடாது.. அதனால ஒரு வருஷம் கல்யாணத்தை தள்ளிப் போட சொல்லி சொல்லிருக்காங்க.. ரேணுகாவும் இன்னும் படிப்பை முடிக்கலை அவளும் படிப்பை முடிக்கட்டும் எல்லாத்தையும் யோசிச்சு பார்த்தா ஒரு வழியா அடுத்த வருஷம் நம்ம கல்யாண ஏற்பாடுகளை பார்த்துக்கொள்ளலாம்.. "என்றார் லட்சுமி பூமாதேவியை பார்த்துக் கொண்டே.
" சரி சரி எது நடந்தாலும் அது ரொம்ப நல்லதுக்கு தான்.. இந்த விஷயம் பத்தி நம்ம அப்புறம் பேசலாம் பிள்ளைகளுக்கு இந்த விஷயத்தை சொல்லிடுங்க பொண்ணுங்க ரெண்டு பேரும் ரொம்ப ஆர்வமா இருந்தாங்க அவங்களுக்கு தான் இப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.. " என்றார் பூமாதேவி.
இந்த விஷயத்தை பெண்கள் இருவரிடமும் சொல்லும் பொழுது அவர்கள் இருவருக்குமே கோபம் தாங்க இயலவில்லை.
அவர்கள் சொன்னதும் ஆயிரம் கோபம் வந்தாலும் பெரியவர்கள் சொன்னதை நினைத்து ஜோசியர் சொன்னதையும் யோசித்துப் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இப்போதைக்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று பெண்கள் இருவரும் அமைதியாகி போனார்கள்.
திருமணம் தள்ளிப்போனதை நினைத்து விஷ்வா கூட சற்று வருத்தப்பட்டான் தான்.
அத்தனை பேரும் வருத்தமாக இருக்க சந்தோஷமாக இருந்த ஒருவன் விஷ்ணுவரதன் மட்டுமே.
அவன் இருக்கும் மனநிலைக்கு இப்பொழுது சுரேகாவை திருமணம் செய்து கொண்டு அவளை ஏதாவது சொல்லி விடுவோமோ! என்று மனதளவில் மிகவும் பயந்து கொண்டிருந்தவனுக்கு திருமணத்தை தள்ளிப் போட்டதால் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு தன் மனதிற்கு பக்குவம் வந்து விடும் என்று அவனாகவே நினைத்துக் கொண்டான்.
திருமணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளி போட்டதை நினைத்து அவன் மனதிற்குள் சொல்ல முடியாது நிம்மதி உருவானது.
அதே நிம்மதியுடன் தென்றலை பார்த்து பேச வேண்டும் என்று அவன் மனம் ஆழிப்பேரிலையாக அவன் மனதை ஆர்ப்பரிக்க, நொடியும் தாமதிக்காமல் அவள் எங்கே என்று தேடிப் பார்த்தவன் பின்புறமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதை கண்டவன் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா? என்பதை பார்த்தவன் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வேக வேகமாக அவளது அருகில் சென்றான்.
" ஏய் நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.. " என்றதும் தோட்டத்தை பெருக்கிக் கொண்டிருந்த தென்றல் அவனது குரலை கேட்டு மிகவும் பயந்துவிட்டாள்.
" எதுக்கு சார் இப்ப என்கிட்ட பேசணும்னு என்னை கூப்பிடுறீங்க நான் எதுவும் பண்ணல சார்.." என்றவள் எங்கே மீண்டும் தன்னால் பிரச்சினை வந்து விடுமோ! என்று அவனிடம் ஒவ்வொரு வார்த்தைகள் பேசும் பொழுது திக்கி திணற கண்களில் கண்ணீரே வந்து விட்டது.
தன்னிடம் பேசும் பொழுது அவள் பயந்து கொண்டு பேசுவதையும் அவளது கண்களில் கண்ணீர் வருவதையும் கண்ட விஷ்ணுவுக்கு
ஒரு மாதிரியாகிப் போனது.
" இங்க பாரு என்னையும் அறியாம உன்னை நான் நிறைய தடவை காயப்படுத்திருக்கேன்.. என்கிட்ட பயந்து பயந்து பேசும் பொழுதே தெரியுது நான் உன்னை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கேன்னு உன்கிட்ட மனசு விட்டு பேசணும்னு என் மனசு ரொம்ப தவிக்குது.. நான் வீட்டுக்கு பக்கத்துல இருக்க கோயில் குளக்கரையில் உனக்காக சாயங்காலம் காத்துகிட்டு இருக்கேன்.. வந்துடு ஏதாவது காரணம் சொல்லிட்டு கண்டிப்பா வந்து உனக்காக எவ்வளவு நேரம் ஆனாலும் அங்கேயே இருப்பேன்.. " தென்றல் மனதுக்குள் பயந்து கொண்டாலும் வேறு வழியில்லாமல் வெளியில் அவனுக்கு தலையை அசைத்து வைத்தாள்.
முதன்முதலாக தன் மனதில் வெறுப்பு என்னும் ஆயுதத்தை கலைந்து விட்டு அவளை பார்த்த விஷ்ணுவிற்கு அவள் தலையை ஆட்டிய விதத்தைக் கண்டு மனதுக்குள் சின்ன சலனம்.
தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டவன் ரைஸ் மில்லுக்கு கிளம்பி சென்றான்.
" வாங்க தம்பி கணக்கு வழக்கு எல்லாம் உங்ககிட்ட கொடுக்கட்டுமா? " என்றார் கணக்குப்பிள்ளை.
"வேண்டாம் கணக்குப்பிள்ளை இதெல்லாம் அப்புறம் பாத்துக்குறேன்.. எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலையிருக்கு என்னை கொஞ்ச நேரம் யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம் நான் ஒரு முக்கியமான வேலையா வெளில போறேன் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம் நான் இங்கே இருக்கிறதாவே சொல்லிடுங்க.." என்றவன் மேஜையின் இலுப்பறையை திறந்து கையில் பணத்தை எடுத்துக்கொண்டு அவன் ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்த அந்த நிறுவனத்திற்கு சென்றான்.
" நீங்கதானே எங்களுக்கு போன் பண்ணி இருந்தீங்க.. வாங்க சார் நீங்க சொன்னது போலவே இங்க வேலை பாக்குற ஆள் உங்களுக்கு தேவையான உதவி செய்வார்.. " என்றான் அந்த நிறுவனத்தை நடத்துபவன்.
" ஓகே சார் நீங்க போங்க இனிமே நான் பார்த்துக்கிறேன்.. " என்ற விஷ்ணு அவன் எதற்காக அங்கு வந்தானோ அதைக் கண்டவன் மனதுக்குள் அடக்க முடியாத வேதனையோடு அந்த இடத்தை விட்டு அகன்றான்.
" விஷ்ணு சார் என்னை கோவில் குளக்கரைக்கு வர சொல்லிருக்கார் பெரிய அம்மா.. " என்றாள் பூமாதேவியிடம்.
" எதுக்காக வர சொல்லி இருக்கான்னு தெரியலையே.. ஏற்கனவே அவனால நீ செத்து பிழைச்சு வந்துருக்க மறுபடியும் ஏதாவது சொல்லி அதனால உனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்னால் தாங்க முடியாது தென்றல்.. உன்னை நம்பி இரண்டு ஜீவன் இருக்கு அவங்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன் உன்னை என் பொறுப்பில் தான் நான் இங்க வச்சிருக்கேன்.."
" கவலைப்படாதீங்க அம்மா போன தடவை அவருக்கு எதுவும் ஆயிடக் கூடாதுன்னு பயத்துல தான் நான் விஷத்தை குடிச்சிட்டேன் இப்ப எனக்குன்னு இரண்டு உயிர் இருக்கிறது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நான் இல்லாட்டி அவங்க இல்லாமல் போயிடுவாங்க அவங்களுக்காக கண்டிப்பா உயிரோட இருப்பேன்.. அவர் வர சொன்ன இடத்துக்கு நான் போகலாட்டி அதுக்கும் தேவை இல்லாமல் வந்து என்கிட்ட பிரச்சனை பண்ணுவார் போயிட்டு வரலாமா? "
"ஹ்ம்.. இதுக்கு மேலயும் காலத்தை கடத்த வேண்டாம் தென்றல்.. அவன் மனசுல என்னதான் இருக்குதுன்னு தெரிஞ்சுக்கோ எதுக்காக அவன் இப்படி உன் மேல கோபப்படுறான்னு எனக்கும் தெரியல.. கையில போன் எடுத்துக்கோ எதுவா இருந்தாலும் எனக்கு அடுத்த நிமிஷம் போன் பண்ணிடு.. வீட்ல யார்கிட்டயும் சொல்ல வேண்டாம் நான் பேசுகிறேன் லட்சுமி கிட்ட மட்டும் சொல்லிட்டு போ.." என்றதும் அவருக்கு சம்மதமாய் தலையை அசைத்த தென்றல் அவர் சொன்னது போலவே லட்சுமியிடம் சொல்லி விட்டுச் செல்ல,அவரும் சரி என்று சொன்னார்
" இவளை எதுக்காக அத்தான் வர சொல்லி சொல்லி இருப்பாங்க.. நல்ல வேளையா இந்த தென்றல் அம்மாச்சி கிட்ட பேசுறத எதார்த்தமா நான் கேட்டுட்டேன்.. இவங்க எல்லாரும் பேசுறத பாத்தா ஏதோ இவங்க எல்லாரும் ஒரு திட்டம் தீட்டி இருப்பாங்க போலருக்கே.. என்னோட அத்தான் எனக்கு மட்டும்தான் சொந்தம் அவர யாருக்காகவும் எதுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் அதுவும் குறிப்பா இந்த வீட்டு வேலைக்காரிக்கு கண்டிப்பா விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.. என்னோட விஷ்ணு அத்தான் எனக்கு மட்டும்தான் சொந்தம் அவர் காதல் அன்பு எல்லாம் எனக்கு மட்டும்தான்.. " என்று சொல்லிக் கொண்ட ரேணுகா தென்றலுக்கு தெரியாமல் அவளை பின் தொடர ஆரம்பித்தாள்.
விஷ்ணுவரதன் சொன்னது போலவே அவளுக்காக கோவில் குளக்கரையில் காத்திருக்க, அவனை அங்க கண்டதும் பதட்டமான தென்றல் பயமாக அவன் பக்கத்தில் சென்றாள்.
" என்ன மன்னிச்சிடுங்க சார் நீங்க வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?வீட்ல எல்லா வேலையும் முடிச்சு வச்சுட்டு அவசர அவசரமா தான் கிளம்பி வந்தேன் அப்படியும் லேட்டாயிடுச்சு என்னை மன்னிச்சிடுங்க தயவு செஞ்சு இதுக்கும் என்னை திட்டாதீங்க சார் ப்ளீஸ்.. " என்றதும் அவளை முறைத்து பார்த்தான் விஷ்ணு.
" என்னமோ உன்னை திட்டறதுக்காகவே நான் பிறந்தது மாதிரி பேசுற! நீ இந்த மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றது தான் எனக்கு உன் கிட்ட சுத்தமா பிடிக்காது.. எல்லாத்துக்கும் மேல என் வீட்ல இருக்க எல்லாரும் உன்கிட்ட என்னதான் இருக்கோ இப்படி தூக்கி வச்சு பேசுறாங்க சரி தொலைஞ்சு போ.. " என்றவன் அங்கிருந்த படிக்கட்டில் அமர, ஆசிரியரை கண்ட மாணவி போல் பவ்யமாக நின்று கொண்டிருந்தாள் தென்றல்.
குளக்கரையின் படிக்கட்டின் மீது அவர்களுக்கு தெரியாமல் நின்று கொண்டிருந்த சுரேகா அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்று அவர்களுக்கே தெரியாமல் காதை தீட்டி வைக்க ஆரம்பித்தாள்.
" இப்ப எதுக்காக நின்னுகிட்டு இருக்க சும்மா உட்காரு.. " என்றதும் காது கேட்காதவள் போல் அப்படியே நின்று கொண்டிருந்தாள்.
அவள் அப்படி நின்று கொண்டிருப்பதை கண்டதும் விஷ்ணுவிற்கு எரிச்சல் தான் வந்தது.
அவனைப் பொறுத்தவரை ஒரு முறை சொன்னால் அதை அப்படியே செய்ய வேண்டும் மீண்டும் மீண்டும் சொல்ல வைத்தால் அவனுக்கு கோபம் வந்து விடும்.
தென்றலுக்கோ அவன் ஒருமுறை சொன்னதும் தான் அமர்ந்து விட்டால் அதற்கும் கோபம் கொண்டு திட்டுவானோ! என்று பயந்து கொண்டு நிற்க,அதை தவறாக எடுத்துக் கொண்டான் விஷ்ணு.
" ஏன் உனக்கு காது அவிஞ்சு போச்சா? உன் நடிப்பை எல்லாம் என் வீட்ல இருக்க பெரியவங்க நம்புவாங்க நான் நம்ப மாட்டேன்.. ரொம்ப சீன் போடமா ஒக்காரு.." என்றவனை வேதனையுடன் பார்த்தாள் தென்றல்.
" ஏன் தான் சார் நான் எது பண்ணாலும் அத நடிப்புன்னு சொல்றீங்க! நான் நிஜமாலுமே இப்படித்தான் சார் நீங்க சொன்னவுடனேயே நான் உட்கார்ந்தா அதுக்கும் கோபம் கொண்டு என்னை திட்டுவீங்க அதுக்கு தான் நின்னுகிட்டு இருந்தேன்.. உங்களை நான் என்னதான் சார் பண்ணேன் உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனை நான் உங்க வீட்ல வேலை பாக்குற ஒரு வேலைக்காரி உங்க வீட்ல இருக்க எல்லாரும் என்னை அவங்க வீட்ல ஒருத்தரா நினைக்கிறதுக்கு நான் என்ன சார் பண்ண முடியும் அதுக்கு நீங்க தான் சார் உங்க குடும்பத்துல இருக்கவங்ககிட்ட பேசணும்.. அப்படி இல்லாட்டி உங்களுக்கு நான் இருக்குறது பிடிக்கலைன்னு தானே நான் எலி பாசனம் குடிச்சேன்.. நான் விஷம் குடிச்சு என் உயிரை விட போனத கூட நீங்க நம்பாம நான் நடிக்கிறேன்னு சொன்னா நான் என்னதான் சார் இதுக்கு மேலயும் பண்ண முடியும்.."
" ரொம்ப ஓவரா பேசாத நீ இந்த மாதிரி பேசுறது கூட எனக்கு எரிச்சல் தான் வருது.. " என்றதும் தென்றலுக்கு தலையில் அடித்துக் கொள்ளாத குறை தான்.
" இதுதான் சார் எங்க கிராமத்துல வேண்டாத பொண்டாட்டிக்கு கைபட்டாலும் குத்தம் கால் பட்டாலும் குத்தம்ன்னு சொல்லுவாங்க அந்த மாதிரி இருக்கு நீங்க சொல்ற எல்லாமே.. "
"ஓ அப்ப நீ என் பொண்டாட்டியா? அதனாலதான் உன்னை நான் எப்ப பார்த்தாலும் குறை சொல்லி திட்டிக்கிட்டே இருக்கேனே.. உனக்கு மனசுக்குள்ள இந்த ஆசை வேற இருக்கா! என்னோட மனைவின்னா அது அவ ஒருத்தி மட்டும் தான் என் மனசுக்குள்ள இருக்க அவ மட்டும் தான்.. அவள் மட்டும் என் கண்ணுல பட்ட அடுத்த நிமிஷம் அவளுக்கு பிடிக்கலைன்னாலும் பரவாயில்லைன்னு அவ கழுத்துல தாலிய கட்டி என் மனைவியாக்கியிடுவேன்.." என்றவனை தென்றல் புரியாமல் பார்க்க, அவன் சொன்னதைக் கேட்டு சுரேகாவின் உலகம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து போனது.
' அப்போ அத்தானுக்கு என்னை பிடிக்கலையா! என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது எல்லாம் வெறும் நடிப்பு மட்டும் தான் அத்தனையும் கண் துடைப்பு.. அவர் மனசுல வேற யாரோ ஒருத்தங்க இருக்காங்க அது இந்த தென்றலாய் ஏன் இருக்கக்கூடாது..' என்று மனதுக்குள் அவளாக நினைத்துக் கொண்டவள் அதற்கு மேலும் அந்த இடத்திலேயே இருக்க முடியாமல் நெருப்பின் மீது நிற்பது போல் இருக்க வேகமாக அழுது கொண்டே தன் வீட்டிற்கு சென்று விட்டாள்.
" நீங்க என்ன சார் பேசுறீங்க? நீங்க என்ன பேசுறீங்கன்னு சத்தியமா எனக்கு புரியல! என்கிட்ட எதுக்கு இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க நான் சொன்னது ஒரு சாதாரண பழமொழி தான் இதுல எந்த உள்ளர்த்தமும் இல்லை தயவு செஞ்சு இதுலயும் குத்தம் கண்டுபிடிக்காதீங்க.. "
" உன்கிட்ட பேச நினைத்தேன் பாரு என்ன சொல்லணும் இனிமே உன்கிட்ட என்ன பேச கிடக்கு போய் தொலை.. " என்றவன் எதற்காக அவளை வர சொன்னோம் என்பதையும் முழுவதாக மறந்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
செல்லும் அவனையே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
" அவருக்கு என்கிட்ட என்னதான் பிரச்சனைன்னு எனக்கு ஒன்னும் தெரியல.. ஆக மொத்தத்துல அவருக்கு என்னை ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தா தான் சந்தோசம் கிடைக்கும் போல இருக்கு பரவாயில்ல அதனால கூட சந்தோஷமா இருந்தா எனக்கும் சந்தோஷம்தான்.. " என்று வாய்விட்டு புலம்பி கொண்டிருக்க அவளது அலைபேசி இசைத்தது.
யார் என்று எடுத்து பார்த்தவள் பூமாதேவி எண் ஒலிக்கவும் அதை ஆன் செய்து காதில் வைத்தவள் விஷ்ணு சொன்ன அனைத்தையும் சொல்ல, அந்த பக்கம் கேட்ட பூமாதேவிக்கு தலையை பிய்த்துக் கொள்ளாத குறைதான்.
" இந்தப் பையனை எந்த நேரத்தில் தான் என் மருமகள் பெற்றெடுத்தாளோ.. எப்ப பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்கான்.. " என்று அங்கு நின்று கொண்டிருந்த லட்சுமியிடம் புலம்ப, ஒரு மர்ம புன்னகையுடன் தாயைப் பார்த்த லட்சுமி கண்ணை சிமிட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.
பூமாதேவியிடம் ஃபோனை பேசிவிட்டு அழைப்பை துண்டித்த தென்றல் கோவில் வரை வந்துவிட்டதால் அப்படியே செல்லாமல் சற்று நேரம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு சென்றால் மனதுக்கு நிம்மதி கிடைக்கும் என்று சாமி கும்பிடுவதற்கு கோவிலுக்குள் நுழைந்தாள்.
அத்தியாயம் பதினொன்று:
" அத்தான் இப்ப கூட நீங்க என்கிட்ட பேச மாட்டீங்களா!! நீங்க கூப்பிட்டவுடனேயே கொஞ்சம் கூட யோசிக்காம உங்க பின்னாடியே இந்த வீட்டை விட்டு நான் வெளில வர தயாராக இருக்கும் போதே உங்களுக்கு தெரியலையா? உங்க மேல நான் உயிரையே வச்சிருக்கேன்னு.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்னு உங்களுக்கும் தெரியும் அப்படி தெரிஞ்சு இருந்தும் கூட எதுக்கு என்னை இப்படி தள்ளி வச்சு கஷ்டப்படுத்துறீங்க என்கிட்ட பேசினா என்ன உங்களுக்கு பிரச்சனை? " என்றாள் ஆற்றாமையாக ரேணுகா.
அவள் பேசுவதையெல்லாம் கேட்டுக் கொண்டே தனது லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஷ்வா அவளை தலையை நிமிர்த்தி கூட பார்க்கவில்லை.
அவனது அந்த செயல் ரேணுகாவை மனதளவில் பெரிதும் உதாசீனப்படுத்தியது.
" உங்களுக்கு என்னை பிடிக்கலையா அத்தான்? நான் என்ன பண்ணுனா உங்களுக்கு பிடிக்கும் என்ன வேணும்னாலும் சொல்லுங்க உங்களுக்கு பிடிச்சது மாதிரி என்னை நான் மாத்திக்கிறேன் என் வாழ்க்கையே நீங்க மட்டும் தான் உங்களுக்காக நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்.. ஆனா நீங்க என்னை வெறுத்துட்டா அதுக்கப்புறம் நான் சத்தியமா உயிரோடவே இருக்க மாட்டேன் அத்தான்.. " என்று மனமுடைந்து பேசிய ரேணுகாவை பார்த்த விஷ்வா லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அவளது அருகில் வந்தான்.
" உனக்கு என்ன தாண்டி பிரச்சனை? எதுக்கு எப்ப பார்த்தாலும் ரம்பம் மாதிரி அறுத்துகிட்டே இருக்க!"
" நான் பேசுறது கூட உங்களுக்கு பிடிக்கலையா அத்தான்.. அதனாலதான் என்னை இப்படி எல்லாம் வெறுத்துப் போகிற அளவுக்கு பேசுறிங்களா! ஒருவேளை நீங்க வேற யாரையாவது காதலிக்கிறீர்களா அத்தான்.. " என்றாள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு.
அவள் கையைப் பிடித்து தன் பக்கத்தில் இழுத்த விஷ்வா அவள் தலையோடு தன் தலையை வைத்து மூக்கோடு மூக்கு உரசினான்.
" அடியே மக்கு பொண்டாட்டி நீதான் நான் காதலிக்கிற என் காதலி.. உன்கிட்ட ஒவ்வொரு தடவையும் உன்னை காதலிக்கிறேன்னு ஒவ்வொரு முறையும் நான் சொல்ல முடியாது.. சுரேகா என்னோட தங்கச்சி நம்ம ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் காதலிச்சு ஒண்ணா இருக்குறதை பார்க்கும்போது அவ மனசு கஷ்டப்படாதா? அவளும் விஷ்ணுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிஞ்சுகிட்டு என்னைக்கு சேர்ந்து வாழ ஆரம்பிக்கிறாங்களோ அதுவரை நான் இப்படித்தான் உன்னை விட்டு விலகிருப்பேன்.. அதுக்காக நான் உன்னை காதலிக்கலன்னு அர்த்தம் கிடையாது உன் மேல உயிரையே வச்சிருக்கேன் ஆனா என் தங்கச்சிக்கு அப்புறம் தான் யாராயிருந்தாலும் அது நீயா இருந்தாலும் கூட.. எனக்கு என்னோட தங்கச்சியை எந்த அளவுக்கு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும் ஒருவேளை என் தங்கச்சிக்கும் உன் அண்ணனுக்கும் கல்யாணம் நடக்கல என் தங்கச்சி ஆசைப்பட்டது அவளுக்கு கிடைக்கலன்னா நானும் உனக்கு கிடைக்க மாட்டேன்.. அதுக்கப்புறம் நீ என் மேல வருத்தப்பட்டு ஒன்னும் ஆகப் போவது கிடையாது அதனால உங்க அண்ணன் கிட்ட பேசி அவன் மனச எப்படியாவது மாத்தி சுரேகா கிட்ட நல்லபடியா பழக வைக்கிறது உன்னோட பொறுப்பு.. " எனவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த ரேணுகா முகத்தில் ஏமாற்றத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவளது மனதில் என்ன இருக்கிறது என்பது கண்ணாடி போல அவளது முகம் பிரதிபலிக்க, அவளை வருத்தமாக பார்த்த விஷ்வா அவள் மனம் தான் பேசுவதை கேட்டு வேதனைப்படும் என்று தெரிந்தாலும் உள்ளதை மறைக்க விரும்பாமல் மனதில் உள்ளதை அப்படியே உளறி விட்டான்.
அத்தனை நேரம் ஒரு அண்ணனாக பேசியவன் இப்பொழுது ஒரு காதலனாக மாறிப்போனான்.
அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் அவள் தலை மீது தாடை வைத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவன் எதுவும் பேசவில்லை.
ரேணுகாவிற்கும் அந்த அணைப்பு தேவைப்பட,அவளும் எதுவும் பேசாமல் அந்த நிமிடத்தை தனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சேமித்துக் கொண்டிருந்தாள்.
' அத்தான் நீங்க எனக்கு வேணும் அத்தான்.. எப்ப ரேணுகா அந்த தென்றல் கூட உங்களுக்கு கல்யாணம் நடக்கணும்னு சொல்லி சொன்னாளோ அப்பவே என் மனசுல உங்க மேல இருந்த அன்பு எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சு.. சத்தியமா நீங்க இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பாக்க முடியாது அத்தான் என்னை ஏமாத்திடாதீங்க.. கண்டிப்பாக ஏதாவது செஞ்சு உங்களை என் வசம் நான் தக்க வச்சிக்குவேன் உங்களை யாருக்கும் நான் விட்டுக் கொடுக்கவே மாட்டேன் நான் உயிரோட இருக்க வரை நான் மட்டும் தான் உங்க பொண்டாட்டி என்னோட புருஷன் நீங்க மட்டும்தான் இந்த ஜென்மத்துக்கு..நான் யாருக்காகவும் அதை விட்டு தர மாட்டேன்..' என்ற சுரேகா எப்படி விஷ்ணுவை தன் வசப்படுத்த வேண்டும் என்பதை சிந்திக்க ஆரம்பித்தாள்.
" அம்மா தென்றல்.. கொஞ்சம் தண்ணி கொண்டு வாமா ரொம்ப களைப்பா இருக்கு.. " என்றார் மாரியப்பன்.
" இதோ வரேன்னுங்க ஐயா.. " என்ற தென்றல் கையில் தண்ணீர் சொம்பை எடுத்துக் கொண்டு வேகமாக அவரிடம் ஓடி வந்தாள்.
" உன்னோட முகத்துல டெய்லியும் காலையில முழிச்சுட்டு போனாலே அந்த பொழுது எனக்கு ரொம்ப அருமையான பொழுதாக தான் இருக்குதும்மா.. நெஜமாலுமே நீ ரொம்ப அதிர்ஷ்டசாலியான பொண்ணுதான்.. இன்னைக்கு நேரமே என்னை எழுப்பி விட்டு நீ எனக்கு தேநீர் கொடுக்கவும் காலையிலேயே உன் முகத்தில் தான் முழிச்சிட்டு ஒரு விஷயமா வெளியில போனேன்.. நான் நினைச்சது மாதிரியே எனக்கு அந்த விஷயம் நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு.. அதுக்கு உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.. " என்றதும் அங்கு அமர்ந்து வேலைக்கு செல்வதற்காக பிரிபரேஷன் செய்து கொண்டிருந்த சுரேகா முகம் அவர் சொன்னதும் இஞ்சி தின்ற குரங்கு போல் மாறியது.
" என்னங்க ஐயா! இது பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க.. எல்லாமே பூமாதேவி அம்மாவோட ராசி தான் உங்களுக்கு இப்படி நல்லது நடக்குது நானெல்லாம் ஒரு சாதாரண வேலைக்காரி தான்.. " என்று தன்னடக்கமாக பேசிய தென்றலை பெருமையாக பார்த்தார் மாரியப்பன்.
" எனக்கே பல தடவை தோனி இருக்கு பூமா எதுக்காக நீ இந்த பொண்ணை எப்ப பாத்தாலும் தூக்கி வச்சு பேசிக்கிட்டு இருக்கேன்னு.. இந்த பொண்ணு கிட்ட பேசும்போது தான் நீ இந்த பொண்ணை எதுக்காக கொண்டாடுறேன்னு காரணம் தெரியுது.. ஏ சுரேகா உங்க அம்மாச்சி சொன்னது போல நானும் சொல்றேன் இந்த பொண்ணுக்கிட்ட இருந்து நிறைய விஷயம் நீங்க கத்துக்க வேண்டியது இருக்கு.. ஒரு நல்ல பெண்ணுக்கு உள்ள பண்புகள் எல்லாமே தென்றல் கிட்ட இருக்கு அது அத்தனையும் நீங்க கத்துக்கிட்டா உங்களுக்கு நல்லது தான்.. உங்களுக்கு புகுந்த வீடு வேற இல்ல இருந்தாலும் இந்த வீட்ல நீங்க இருந்தாலும் இந்த குடும்பத்தோட மானம் மரியாதை எல்லாத்தையும் நீ தான் இந்த குடும்பத்தோட மருமகளா இருந்து வரும் காலத்தில் காப்பாற்ற போற.. உன்னோட அம்மா என்னோட மருமகள் இந்த பொண்ணு தென்றல் இவங்க எல்லார்கிட்டயும் இருந்து நிறைய விஷயம் கத்துக்கிட்டால் தான் இந்த குடும்பத்தை உன்னால கையில் எடுத்து திறம்பட நடத்த முடியும்.. மாரியப்பன் வம்சம் எப்பவுமே விருட்சமாக அசைக்க முடியாத ஆலமரமா தான் இருக்கணும் அந்த ஆலமரத்துக்கு எப்பவுமே வேர் ரொம்ப பலமா இருக்கணும் விஷ்ணு இந்த குடும்பத்தோட மரம்னு சொன்னா நீ அவனோட ஆணிவேரா இருந்து இந்த குடும்பத்தோட மரியாதையை காப்பாத்தணும்.. " என்றதும் பூவாக மலர்ந்தது சுரேகா முகம்.
அவர் ஆரம்பத்தில் தென்றலோடு அவளை ஒப்பிட்டு பேசுவதை கண்டு கோபம் வந்தாலும், அந்த வீட்டு மருமகளாக அவளைக் கொண்டு அவர் பேசியதை கேட்டு அவளுக்கு சந்தோஷம்தான்.
" என்ன தாத்தா நீங்க இதெல்லாம் சொல்லனுமா? கண்டிப்பா இந்த குடும்பத்துக்கு எந்த ஒரு கெட்ட பெயரும் வராது.. இந்த குடும்பத்தோட மருமகளா நான் எப்பவுமே இந்த குடும்பத்துக்கு ஒரு கலங்கம் வர விடவே மாட்டேன்.. " என்றாள் தென்றலை பார்த்துக் கொண்டே.
" தென்றல் எனக்கு ஒரு காபி எடுத்துக்கிட்டு என்னோட ஆபீஸ் ரூமுக்கு வா.. " என்ற விஷ்ணு அவனது கணக்கு வழக்கு பார்க்கும் அறைக்குச் செல்ல, தென்றல் பூமாதேவியை பார்க்க அவரோ சம்மதமாக கண்ணை மூடி திறந்தார்.
காபியை கையில் எடுத்துக் கொண்ட தென்றல் விஷ்ணு ஆபீஸ் ரூமுக்கு செல்ல, செல்லும் அவளையே எரிப்பது போல் பார்த்தாள் சுரேகா.
இப்பொழுது கூட அவளிடம் இருந்து தட்டிப் பறித்துக் கொண்டு அந்த காப்பியை அவள் வாங்கிக் கொண்டு செல்ல முடியும் தான்..
ஏற்கனவே ஒரு முறை இதேபோல் செய்து அவள் அவமானப்பட்டது நினைவு வர, வேறு வழியில்லாமல் வெறுப்புடன் தென்றலை பார்த்து விட்டு தனது வேலையில் மும்மரமானாள்.
"சார் உள்ள வரலாமா?" என்று அவனது அறை வாசலில் நின்று அவள் அனுமதி கேட்க,உள்ளே கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணு " உள்ள வா.. " என்று குரல் கொடுத்ததும் உள்ளே சென்றவள் மேஜை மீது காபியை வைத்து விட்டு அங்கிருந்து வெளியேற நினைக்க, அவளை நிமிர்ந்து பார்க்காத விஷ்ணு அவள் வெளியில் செல்வதை அவள் அரவம் மூலம் உணர்ந்து கொண்டவன் " எங்க போற? சேர்ல உக்காரு அப்புறம் போலாம்.. " என்றவன் தீவிரமாக கணக்குகளை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் சொல்வதற்கு எதிர்ப்பேச்சு பேச முடியாமல் வேறு வழியில்லாமல் அங்கேயே அவனுக்கு முன்பாக அமர்ந்தாள்.
அவன் கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்க தென்றல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அலை அலையாய் காற்றில் பறந்த சிகையும் காற்றில் அலைபாய்ந்து கொண்டிருந்த அவனது கண்களும் காப்பியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்த அவனது இதழ்களும் அவளுக்கு ரசனையை கொடுத்தது.
' நான் இந்த குடும்பத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கும் என்னை பிடித்திருக்கும் தானே சார்.. ஏழையாய் பிறந்தது என்னோட தப்பா இல்லை இந்த வீட்டுக்கு வேலைக்காரியா வந்தது என்னோட தப்பா? நானும் படிச்சிருந்தா கண்டிப்பா ஏதாவது வேலைக்கு போய் இருந்திருப்பேன் உங்களுக்கும் என்னை பிடித்து இருக்கும் தானே!!' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் பார்வை அவன் மீது ஏக்கமாக படிந்தது.
" என்னை சைட் அடிச்சது போதும் வேற ஏதாவது வேலை இருந்தால் போய் பாரு போ.. " என்றதும் உயிரே போனது போல் பதறி எழுந்து விட்டாள் மங்கை.
அவள் எழுந்த வேகத்தில் கையில் இருந்த பீங்கான் தட்டு கீழே விழுந்து சிதறியது.
அதன் சத்தத்தில் அவளை நிமிர்ந்து பார்த்த விஷ்ணு குடித்துக்கொண்டிருந்த காபி கோப்பையை நிதானமாக மேஜை மீது வைத்தவன் அவள் பக்கத்தில் வந்தான்.
அவன் பக்கத்தில் வரவும் பயந்து போன தென்றல் பின்னால் நகர்ந்து சுவரின் மீது இடித்துக் கொள்ள, அவளுக்கு குறுக்காக இரு கைகளையும் வைத்த விஷ்ணு பார்வை அவளது முகம் முழுவதும் வலம் வர ஆரம்பித்தது.
எப்பொழுதும் போல அலைபாய்ந்து கொண்டிருந்த அவளது கண்கள் அவனுக்குள் பெரும் பூகம்பத்தை உண்டு பண்ணியது.
" ஏண்டா வாழ்க்கையில முதல் முதலா ஒரு வேலைக்கார பெண்ணாகவும் ஏழையாகவும் பிறந்தோம்னு வருத்தப்படுறியா?" என்று அவள் மனதில் இருந்ததை அட்சரம் பிசகாமல் அவனுக்கு கேட்டது போல் தெளிவாக கேட்க, அவனை விழிகள் விரிய எப்படி என்பது போல் பார்த்தாள் நங்கை.
" என்னடா இவன் எப்படி நம்ம மனசுல இருக்க விஷயத்தை சரியா கண்டுபிடிச்சு கேட்கிறான்னு உனக்கு ஆச்சரியமா இருக்கா? உன் பார்வை என்ன சொல்லுதுன்னு எனக்கு நல்லாவே தெரியுது.. " எனவும் அவசரமாக தன் கண்களை தாழ்த்திக் கொண்டாள் தென்றல்.
" நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லு இப்படி மௌனமா இருந்தா அதுக்கு என்ன அர்த்தம்? "
" இல்லங்க சார் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் நான் எதுவும் நினைக்கல.. "
" சரி அப்புறம் வேற என்ன நெனச்ச? எதுக்காக என்னையே வச்ச கண்ணு வாங்காமல் அப்படியே உரிச்சு சாப்பிடுவது மாதிரி பார்த்துகிட்டு இருந்தா!"
" இல்லங்க சார் நான் சும்மாதான் பார்த்தேன்.. "
" இல்ல நீ பொய் சொல்ற பொய் சொல்ற இந்த வாய்க்கு கண்டிப்பா தண்டனை உண்டு.. " என்றவன் அவளது இதழ்களை தன் பெரு விரலால் வருடி கொடுக்க, சிலிர்த்து போய் நின்று கொண்டிருந்தாள் தென்றல்.
அவனது வருடல் அவளுக்கு சொல்ல முடியாத ஒரு உணர்வைத் தர,அதை கண்மூடி ரசித்துக்கொண்டிருந்தாள்.
அவளது காதில் ஈயம் காச்சி ஊத்தியது போலிருந்தது அடுத்து அவன் கேட்ட சொல்.
" எப்படியாவது என்னை வளைச்சு போட்டு என் ஒட்டுமொத்த சொத்தையும் ஆட்டையர் போட தானே இப்படி எல்லாம் பிளான் பண்ற! நான் கூட உன்னை நல்ல பொண்ணு உன்னோட கற்பு விஷயத்துல ரொம்ப கட்டுப்பாடாக இருப்பேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன் ஆனா நீ இப்படி நான் தொட்டதும் உருகி போகுற! அப்ப இத்தனை நாள் என்கிட்ட காத்துக்கிட்டு இருந்தது என்னோட செயலுக்காக தானா? இத நீ என்கிட்ட வாய்விட்டு கேட்டிருந்தா நானே அப்பவே என்னால முடியாதுன்னு உன்கிட்ட உறுதியாக சொல்லி இருப்பேனே??பாவம் நீயும் தேவையில்லாமல் உன் மனசுல தேவையில்லாத ஆசை எல்லாத்தையும் வளர்த்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது!! சுச்சு சுச்சு நீ உண்மையாலுமே ரொம்ப பாவம்.. என்கிட்ட எதிர்பார்த்து காத்துகிட்டு இருந்த எதுவும் உனக்கு என்கிட்ட இருந்து கிடைக்காமல் போனது நினைச்சு கண்டிப்பா உனக்கு வேதனையாக தான் இருக்கும் ஆனால் என் வாழ்க்கையில நான் அவ ஒருத்தியை தவிர வேற யாரையும் நேசிக்கவும் மாட்டேன் தொடவும் மாட்டேன்.. ஒருவேளை வீட்ல சொன்னது போல இந்த ஒரு வருஷத்துல அவ எனக்கு கிடைக்காமல் போனால் கண்டிப்பா சுரேகாவை ஒருவேளை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் கண்டிப்பா அவளுக்காக என் மனசை மாத்திக்கிட்டு அவகூட சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுவேனே தவிர உன்னை மாதிரி ஒரு வேலைக்காரியோட சந்தோசமாய் இருப்பேன்னு மட்டும் கனவுல கூட நினைக்காதே!!" என்றவன் கூடை தனலை அவள் தலையில் மொத்தமாக கொட்டி விட்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட்டான்.
அந்த இடத்திலேயே தொய்ந்து அமர்ந்து விட்டாள் தென்றல்.
' ஏழையாய் பிறந்தது என்னோட தப்பா? இல்லை நீங்க எவ்வளவு என்னை காயப்படுத்தியும் இந்த பாலாப்போன மனசு உங்க மேல ஆசைப்பட்டது என் தப்பா? மனசுல ஏற்படுற ஆசைக்கி பணக்காரங்க ஏழைன்னு யாரை தெரியும் அதுக்கு காதலிக்க மட்டும் தானே தெரியும்? உங்கள பத்தி தெரிஞ்சிருந்தும் உங்க மேல ஆசைப்பட்ட எனக்கு நல்லா செருப்படி கொடுத்துட்டீங்க சார்.. போயும் போயும் என்னை உங்க உடம்பிற்காக அலையிறேன்னு சொல்லிட்டீங்களே சார்! நல்லா இருங்க நல்லாவே இருங்க.. " என்று மனதுக்குள் முணுமுணுத்து கொண்டவள் அவன் மீது ஆசைப்பட்ட தன் மனதை கேவலமாக திட்டிவிட்டு அங்கிருந்த தட்டை சுத்தப்படுத்திவிட்டு காபி கோப்பையுடன் சமையல் கட்டிற்குள் நுழைய, அங்கேயும் அவளை தொந்தரவு செய்ய வந்து விட்டான் விஷ்ணு.
" உன்னால தாண்டி இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் இன்னைக்கு என் கூட பேசாம நான் இந்த வீட்ல இருந்தாலும் என்னை ஒதுக்கி வைத்து வேடிக்கை பாக்குறாங்க.. நானும் இந்த குடும்பத்தை விட்டு போனா என் வீட்டோட மானம் மரியாதை எல்லாம் போயிடும் எல்லாத்துக்கும் மேல எதுக்காக ஒரு வேலைக்காரி உனக்காக நான் இந்த வீட்டை விட்டு போகணும்? இந்த வீட்ல இருக்க எல்லாருமே உன்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக இல்லை துரத்தி அடிக்க வைக்கிறேன் அப்படி அடிக்க வைக்கல என் பேரு விஷ்ணுவரதன் கிடையாதுடி.. இன்னிலிருந்து ஞாபகம் வச்சுக்கோ ஒவ்வொரு நொடியும் உனக்கு இந்த வீட்ல நரகம் மட்டும் தான் ஏன்டா இந்த வீட்டுல நம்ம வேலை செய்றோம்கிற அளவுக்கு நீ நொந்து இந்த வீட்டை விட்டு போகிற அளவுக்கு நான் உன்னை டார்ச்சர் பண்ணல என் அப்பாவுக்கு நான் பிறக்கலடி.. " என்றவன் அவளது கன்னத்தை செல்லமாக தட்டி விட்டு அங்கிருந்து செல்ல, கண்களில் நீர் மறைக்க அவனையே பார்த்தபடி வேதனையுடன் நின்று கொண்டிருந்தாள் தென்றல்.
அத்தியாயம் 12:
" அப்பா பக்கத்து கிராமத்துல இருக்க தேங்காய் தோப்பு நல்ல விலைக்கு வருது.. அதை வாங்கி போடலாம்னு இருக்கேன்.. "என்றான் விஷ்ணு.
" நல்லதுப்பா அப்படியே பண்ணிடு.. இன்னைக்கு விக்கிற விலைவாசிக்கு எதுவும் வாங்க முடியாது போலருக்கு.. ஏதாவது இது மாதிரி சேர்த்து வைத்தால் தான் பிற்காலத்தில் எல்லாருக்குமே உதவும்.. "
" ஐ அம் சாரிப்பா.. இந்த தென்னந்தோப்பு முழுவதும் என்னோட சம்பாத்தியத்தில் தான் வாங்குறேன்.. இதுல இருந்து வர்ற மொத்த பணமும் டிரஸ்ட்க்கு மட்டும் தான் போகும் நம்ம வீட்டுக்கு ஒரு பைசா கூட வராது.. "என்ற மகனை பெருமையாக பார்த்தார் கணேசன்.
" சரிப்பா நான் தோப்புக்கு போய் எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வரேன்.. " என்றவன் அவரிடம் தோப்புக்கு செல்வதாக சொல்லிவிட்டு எப்பொழுதும் போல் அவனது மனம் கவர்ந்தவள் அங்காவது இருக்கிறாளா? என்பதை கண்டுபிடிக்க தேடிச்சென்று விட்டான்.
" தென்றல் இங்க பாரு இதுவரைக்கும் நான் உன்கிட்ட உன் மனச கஷ்டப்படுத்த மாதிரி நிறைய விஷயம் பேசிருக்கேன்.. அதெல்லாம் மனசுல வச்சுக்காம தயவு செஞ்சு மறந்துடு தென்றல்.. என் தாத்தா சொன்னது மாதிரி நான் இந்த குடும்பத்துக்கு வருங்காலத்தில் மருமகளா வரப்போகிறேன்.. அப்படி நான் இந்த வீட்டுக்கு மருமகளா வரும் பொழுது உனக்கு அடுத்து உன் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் எல்லாருமே இந்த வீட்ல பரம்பரை வேலைக்காரர்களாக இருக்கலாமே! நான் சொல்றது ரொம்ப சரிதானே ரேணுகா? நீ எதுவும் சொல்லாம அமைதியா இருக்க ஏதாவது சொல்லு.. "
"இல்லை சுரேகா.. என்னதான் இருந்தாலும் அவ இந்த வீட்டு வேலைக்காரி அவ கூட பேசுறதுக்கு கூட ஒரு தகுதி வேணும்னு நான் நினைக்கிறேன்.. நீ இந்த வீட்டோட மருமகளா இருந்துட்டு இவள் எல்லாம் ஒரு ஆளுன்னு இவளுக்கு மரியாதை கொடுத்து பேசுறியே? எனக்கு அத நினைச்சா தான் ஆச்சரியமா இருக்கு இவ கூட எல்லாம் பேசுறது எனக்கு பிடிக்கலை.."
" அப்படி இல்ல ரேணுகா யார் யாரை எங்கெங்கே வைக்கணும்னு நம்ம வீட்ல இருக்க யாருக்கும் சுத்தமா தெரியல நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்ததும் முதல் வேலையா இவளை இந்த வீட்டிலிருந்து ஓரம் கட்டி வேலைக்காரர்கள்னா எப்படி இருக்கணும்னு இவளுக்கு சொல்லிக் கொடுக்கிறது தான் என்னுடைய முதல் வேலை.. "
" சரி சுரேகா எனக்கு இன்னும் கொஞ்சம் வேலையிருக்கு.. இன்னைக்கு சாயங்காலம் விஷ்வா அத்தான் நம்ம எல்லாரும் வெளியில போலாம்னு சொல்லி சொல்லி இருக்காங்க அதுக்கு பிளான் பண்ணலாம்னு இருக்கேன்.. நீ போய்ட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துட்டு வாயேன்.. "
" இல்லடி ரேணு.. எனக்கு ஆபீஸ் போயிட்டு வந்தது ஒரு மாதிரி டயர்டா இருக்கு.. நான் ஆசைப்பட்ட கம்பெனில எனக்கு வேலை கிடைச்சது நினைச்சு ரொம்ப சந்தோஷமா இருந்தாலும் வேலை அங்க ரொம்ப அதிகமா இருக்குதுடி.. நீயும் எப்படியும் அண்ணன்கூட தனியா போனாதான் சந்தோஷமா இருக்கும் உங்க ரெண்டு பேருக்கும் இடையில நந்தி போல வந்து நான் வந்து டிஸ்டர்ப் பண்ண விரும்பலை.. இங்கே நிற்கிறதே இந்த பொண்ணுதான் எப்பவும் யாருக்கு இடையில போகணும்னு தெரியாம எப்ப பார்த்தாலும் வந்து தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும் இதே மாதிரி நம்மளும் இருக்கக்கூடாது இல்லையா? அண்ணன் கூட என்ஜாய் பண்ணிட்டு வா இல்லை இல்லை வாங்க அண்ணியாரே.. " எனவும் ரேணுகா முகம் அவள் சொன்னதை கேட்டு வெட்கத்தில் சிவந்து போக, அவள் கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்து விட்டு தனது அறைக்கு சென்றாள் சுரேகா.
அவள் அங்கிருந்து சென்றதும் அதுவரை ரேணுகா முகத்திலிருந்த புன்னகை தொலைந்துப் போனது.
" என்ன மன்னிச்சுடு தென்றல் உன் மனச கஷ்டப்படுத்துவது மாதிரி நான் பேச வேண்டியதா போயிடுச்சு.. சுரேகா பத்தி தெரிஞ்சு தான் உன்கிட்ட முன்னாடியே நான் இந்த உதவியை உன்னிடம் கேட்டேன்.. சுரேகா இந்த வீட்ல சந்தோஷமா இருந்தாதான் நான் விஷ்வா அத்தான் கூட சந்தோஷமா இருக்க முடியும்.. அவ சந்தோசமா இருக்கணும்னா அதுக்கு ஒரே வழி உன்னை நான் திட்டிக்கிட்டே இருக்கிறது மட்டும்தான்.. சத்தியமா சொல்றேன் தென்றல் உன்னை நான் என் மனசார திட்டவே இல்லை எனக்கு வேற வழி தெரியல்ல எனக்கு என் அத்தானை எவ்வளவு பிடிக்கும்னு உன்னை தவிர இந்த வீட்ல வேற யாருக்கும் தெரியாது என் மனசுல இருக்க அத்தனை ஆசையையும் உன்கிட்ட மட்டும் தான் சொல்லிருக்கேன் தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடு என்னை தப்பா எடுத்துக்காத நீ தான் எனக்கு உதவி செய்யணும்.. "
" ஐயோ என்ன ரேணுகா மேடம் இது? நீங்க இந்த வீட்டோட எஜமானி நான் இந்த வீட்டோட வேலைக்காரி என்கிட்ட போய் உதவி எல்லாம் கேட்டுட்டு இருக்கீங்க என்னை எப்படி வேணும்னாலும் நீங்க திட்டலாம் ஏன்னா நான் உங்க வீட்டு வேலைக்காரி தானே? எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இருக்கக் கூடாது சரி இதுக்கு மேல நம்ம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க கேட்டது மாதிரி நான் உங்களுக்கு உதவி செஞ்சுட்டேன் எனக்கு வேலை இருக்குது நான் போறேன்.. " என்று
பட்டும் படாமல் பேசிவிட்டு செல்லும் தென்றலை வேதனையுடன் பார்த்தாள் ரேணுகா.
' என்ன மன்னிச்சிடு தென்றல் என்னோட சுயநலத்துக்காக உன்னை நான் காயப்படுத்துகிறேன்.. ஆனா எனக்கு வேற வழி தெரியல எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப முக்கியம் என்னுடைய விஷ்வா அத்தான் தான் அவருக்கு முக்கியம் அவரோட தங்கச்சி அவளுக்கு பிடிக்காதது இந்த உலகத்திலேயே உன்னை மட்டும் தான் உன்னை காயப்படுத்தினா அவள் சந்தோஷப்படுவாள். அவள் சந்தோஷப்பட்டா விஷ்வா அத்தான் சந்தோஷப்படுவார் அவர் சந்தோஷப்பட்டா நானும் சந்தோஷப்படுவேன்..' என்று அந்த நிமிடம் தன் சுயநலத்திற்காக தெரிந்தே ஒரு புறாவை துடிக்க துடிக்க காயப்படுத்த தயாரானாள்.
" அம்மாடி தென்றல் நைட்டுக்கு தேவையான சாப்பாடு எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டியா? "
"பண்ணிட்டேன் பெரியம்மா.. எல்லாருக்கும் பிடிச்சது மாதிரியே இட்லியும் தேங்காய் சட்னியும் கூடவே கொஞ்சம் வெண்பொங்கலும் அதுக்கு சாம்பாரும் வச்சிருக்கேன்.. வேற ஏதாவது செய்யட்டுமா?"
" இல்லை இதுவே போதும்.. " என்ற லட்சுமி அவள் தயாரித்த உணவுகள் அனைத்தையும் மேஜையில் அடுக்கினார்.
அப்பொழுதுதான் வீட்டிற்குள் நுழைந்த விஷ்ணு தான் தேடிப்போன விஷயம் எப்போது போல் நடக்காமல் போனதை நினைத்து கோபத்தில் வந்தவன் அவனது கோபத்திற்கு வடிகாலாக எப்போதும் போல் வரும் வழியில் சிக்கிய ஒருவரை திட்டி தீர்க்க ஆரம்பித்தான்.
எப்போதும் போல் தனது கோபத்தை வாசலிலேயே விட்டுவிட்டு வீட்டுக்குள் சந்தோஷமாக வருவது போல் நுழைந்தான்.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததுமே சாப்பாடு மீது உணவு அடைந்து கொண்டிருந்த லட்சுமி கண்ணில் பட," ஹாய் அத்தை இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? " எனவும் அவனை புன்னகையுடன் பார்த்த லட்சுமி " இன்னைக்கு உனக்கு பிடிச்ச இட்லியும் சாம்பார் கூடவே வெண் பொங்கல் கூட இருக்கு எல்லாமே உனக்கு பிடிச்சது தான் கண்ணா.. "எனவும் அவரது பின்னால் நின்று கொண்டிருந்த தென்றலை பார்த்தவன் அவளை கஷ்டப்படுத்த வேண்டும் என்பதற்காகவே " அத்தை எனக்கு இன்னைக்கு என்னவோ இதெல்லாம் சாப்பிட பிடிக்கலை.. எனக்கு இப்ப சுடச்சுட சப்பாத்தியும் அதுக்கு தொட்டுக்க சென்னா மசாலாவும் வேணும் கூடவே கொஞ்சம் ஆனியன் ரைத்தா இருந்தா கூட ஓகே தான்.. " என்றவனை அன்பு மேலோங்க பார்த்தார் லட்சுமி.
" ஓகே கண்ணா நீ சொன்னது மாதிரியே உனக்கு தேவையான சாப்பாடு எல்லாத்தையும் உன் அத்தை கையாள இன்னிக்கு நானே ரெடி பண்றேன்.."
" எதுக்கு அத்தை வீட்டு வேலையெல்லாம் நீங்க பாத்துக்கிட்டு இருக்கீங்க நீங்க இந்த வீட்டோட மகாராணி இந்த வீட்ல வேலை பாக்குறதுக்கு தான் இதோ உங்க பின்னாடி நிக்கிற அந்த வேலைக்காரிக்கு நம்ம சம்பளம் கொடுக்கிறோம்.."
" அதெல்லாம் எனக்கு தெரியும் கண்ணா எனக்கு என்னவோ இன்னைக்கு என் கையால உனக்கு சாப்பாடு செஞ்சு கொடுக்கணும்னு ஆசையா இருக்கு.. வீட்ல உன்னை ரொம்ப அதிகமா திட்டி கஷ்டப்படுத்துறது என்னவோ நான் தானே எனக்கு தோணுது அதனாலதான் இன்னைக்கு என் கையால உனக்கு நான் சாப்பாடு செஞ்சு தரப் போறேன் அதை சாப்பிட்டு எப்படி இருக்குன்னு நீ சொல்ற!"
" இல்லை வேண்டாம் அத்தை இப்ப எனக்கு என்னவோ ஒரு மாதிரி இருக்கு சாயங்காலம் தான் வரும்போது கடையில ஒரு பச்சி டீ குடிச்சிட்டு வந்தேன் அந்த பஜ்ஜி என்னவோ எனக்கு வயித்துக்குள்ளே நிக்குது நீங்க கஷ்டப்பட்டு இதையெல்லாம் செய்ய வேண்டாம் இருப்பதை நான் சாப்பிட்டு போய் படுக்கிறேன் இருங்க நான் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வரேன்.. " என்றவன் அவருக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தென்றலை எதிரியை பார்ப்பது போல் முறைத்து பார்த்து விட்டு சென்றான்.
"என்னம்மா நீங்க? அவர் ஏதோ ஆசைப்பட்டு கேட்டது மாதிரி தெரிந்தது ஒரு அரை மணி நேரம் கொடுத்தால் நான் இப்பவே ரெடி பண்ணிட்டு வந்துடறேன்.."
" நீ சும்மா இரு தென்றல் அவன் ஒன்னும் சாப்பிட ஆசைப்பட்டு அதை கேட்கல.. அப்படி அவன் ஆசைப்பட்டு கேட்டு இருந்தா கண்டிப்பா நானே என் கையால அவன்கிட்ட சொன்னது மாதிரி செஞ்சு கொடுத்திருப்பேன். அவனுக்கு தேவை உன்னை கஷ்டப்படுத்தி பார்க்கணும் அதுக்குத்தான் அவனுக்கு சுத்தமா பிடிக்காத சப்பாத்தி அதுக்கு சுத்தமா தொட்டு கூட பார்க்காத சென்னா மசாலா எல்லாம் கேட்கிறான்.. அவனை தூக்கி வளர்த்த எனக்கு தெரியாதா? அவனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காதுன்னு.. அவனோட வயசு தான் என்னோட அனுபவம் தென்றல் அவன் எதுக்காக இதையெல்லாம் கேட்கிறான்னு எனக்கு தெரியாதா? அவன் உன்னை கஷ்டப்படுத்தனும் அதுக்காக தான் இதையெல்லாம் செய்ய சொல்றான்.." என்றவருக்கு பதில் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாகிவிட்டாள்.
அனைவரும் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்டு முடித்ததும் சிறிது நேரம் அமர்ந்து அன்றைய நாளில் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பேச வேண்டும் என்பது அந்த வீட்டில் எழுதப்படாத சட்டம்.
நேரமின்மை என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் அனைவரும் இப்படியே விட்டால் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதே அரிதாகிவிடும் என்று பூமாதேவி ஆரம்பம் முதலே இப்படி ஒரு பழக்கத்தை அங்கு வழக்கப்படுத்தியிருந்தார்.
" அம்மா உங்ககிட்ட இன்னைக்கு ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்.. என் மகனை எப்ப பார்த்தாலும் நீங்க திட்டிக்கிட்டே இருப்பீங்க தானே இன்னைக்கு என் மகன் செஞ்ச காரியத்தை உங்க கிட்ட சொன்னா கண்டிப்பா அவனை நீங்க பாராட்டுவீங்க.. " எனவும் பூமாதேவி கணேசன் என்ன சொல்லப் போகிறார் என்பதை ஆர்வமாக பார்க்க அவரோடு சேர்ந்து மொத்த குடும்பமும் அவரைத்தான் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது.
கணேசன் காலையில் விஷ்ணு சொன்னதை சொல்ல, அவர் சொன்னதை நம்ப முடியாமல் பார்த்தார் பூமாதேவி.
" பரவாயில்லையே என் பேரனுக்கு இப்பவாவது கொஞ்சம் நல்ல புத்தி வந்ததே! நல்ல விஷயம் தான் விஷ்ணு கண்ணா இதே போல நீ நல்ல விஷயங்கள் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இரு நம்மகிட்ட நிறைய இருக்கு இல்லாதவங்க கிட்ட எடுத்து கொடுக்குறதுல தப்பு கிடையாது இதே போல நீ நல்ல செயல் செய்தால் உன்னை இந்த குடும்பத்தில் இருக்க யாரும் எதுவும் சொல்ல மாட்டோம்.. கண்டிப்பா நீ கூடிய சீக்கிரம் மாறிடுவேன்னு எனக்கு நம்பிக்கை வந்துடுச்சு இதே மாதிரி இரு கண்ணா.. " என்றதும் அவருக்கு ஒரு சின்ன புன்னகையை பதிலாக கொடுத்தான் விஷ்ணுவரதன்.
" பாத்திங்களா அம்மாச்சி எப்ப பாத்தாலும் என் அத்தானையும் திட்டிக்கிட்டே இருப்பீங்க இப்ப எங்க அத்தான் எல்லாருக்கும் நல்லது பண்றார் இப்பவும் எப்பவுமே அவர் நல்லவர் தான்.. அவரை எப்பவுமே கெட்டவர் மாதிரி நீங்க தான் திட்டிக்கிட்டே இருக்கீங்க நீங்க மட்டும் இல்ல எல்லாரும் திட்டிக்கிட்டே தான் இருக்கீங்க இது எல்லாத்துக்கும் காரணம் இந்த வீட்டோட அந்த வேலைக்காரி தான்.. " என்ற சுரேகாவை கண்டு இருபக்கமும் தலையாட்டினார் பூமா.
" அதானே பார்த்தேன் நீ இன்னும் ஒன்னும் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்கும்போது ஏதாவது சொல்லுவேன்னு பார்த்தேன் நல்லா பேசிகிட்டு இருக்கும் போது எதுக்கு தேவையில்லாம இப்ப அந்த பொண்ணு தென்றலை வம்புக்கு இழுத்துக்கிட்டு இருக்க!" என்று அவளை அடக்கினார்.
" அம்மா நானும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. நம்ம பசங்க கல்யாணம் இப்போதைக்கு நடக்காதுன்னு தெரிஞ்சு போச்சு அதனால நான் ஜோசியர் கிட்ட கூடவே தென்றல் பெயரையும் ராசியையும் வச்சு கேட்டேன் அவர் இவளுக்கு இப்போ நேரம் நல்லா இருக்கு இன்னும் ரெண்டு மாசத்துக்குள்ள இவளுக்கு கல்யாணம் பண்ணலன்னா அதுக்கப்புறம் கல்யாணம் பண்ண அஞ்சு வருஷம் ஆகும்னு சொல்லிட்டார்.. நான் இதைப் பத்தி ஜமுனா கிட்ட கூட பேசிட்டேன் அவளும் தென்றலோட நல்ல குணம் எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு அடுத்த வாரமே நம்ம வீட்டுக்கு பொண்ணு பாக்க வர்றதா சொல்லி இருக்கிறாள்.. அந்தப் பையன் ராஜேஷ் ரொம்பவே நல்ல பையன்..நம்ம வீட்டிலேயே நம்ம குடும்பத்துல ஒரு ஆளா இருந்த தென்றல் அதிகபட்சம் இன்னும் இரண்டு மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணி அடுத்த வீட்டுக்கு போயிடுவா அதுவரைக்கும் அவளை யாரும் எதுவும் சொல்லாம இருங்க இந்த வீட்ல இருக்க எல்லாரையும் நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.. " என்றதும் அங்கிருந்த ஒருவனைத் தவிர அனைவருக்கும் அத்தனை சந்தோஷமாக இருந்தது.
"வாவ் சூப்பர்.. இவ எப்ப இந்த வீட்டை விட்டு போவானு எல்லாரையும் விட ரொம்ப ஆர்வமா காத்துக்கிட்டு இருந்தது நான் தான் இந்த விஷயத்தை நீங்க முதலிலேயே சொல்லி இருந்தால் நானே சந்தோஷப்பட்டு இருப்பேன்.. அவளோட கல்யாணத்துக்கு தேவையான மொத்த செலவையும் நம்மளே பார்த்துக்கொள்ளலாமா.." என்ற சுரேகாவை விசித்திரமாக பார்த்தார் லட்சுமி.
" அதுக்கு என்ன? சுரேகா தாராளமா பண்ணலாம்.. "
" கங்கிராஜுலேஷன் தென்றல் கூடிய சீக்கிரமே இன்னொரு வீட்டுக்கு நீ மருமகளா போகப் போற.. இப்பவும் எனக்கு உன்னை சுத்தமா பிடிக்காது தான் அதுக்கு காரணம் இந்த வீட்ல இருக்க எல்லாரும் உன்னையும் எங்களோட ஒப்பிட்டு பார்க்கிறதுதான்.. ஆனா ஒரு பொண்ணா கல்யாண கனவு எப்படி இருக்கும்னு எனக்கு நல்லாவே தெரியும் அதனால ஒரு பொண்ணா உன்னோட வாழ்க்கை நல்லபடியா அமையனும்னு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.. " என்ற சுரேகா தென்றல் கையை வலுக்கட்டாயமாக பிடித்து குலுக்கி விட, அவளைக் கண்டு உயிர்ப்பில்லாமல் ஒரு புன்னகையை கொடுத்தாள் தென்றல்.
" சூப்பர் கங்கிராஜுலேசன் தென்றல்.. " என்ற ரேணுகா அவளை அணைத்து விடுவித்தாள்.
வீட்டிலிருந்த அனைவரும் அவளுக்கு ஆளாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க, பூமா " ரொம்ப சந்தோசமா இருக்கு தென்றல் உனக்கு ஒரு நல்லது நடக்காதான்னு, நான் ஏங்காத நாள் கிடையாது.. இந்த வீட்ல இருக்க எல்லாரையும் பார்த்து பார்த்து கவனிச்சுக்கிட்ட உன்னை இந்த ரெண்டு மாசமும் நாங்கள் எல்லாரும் பார்த்து பார்த்து கவனிச்சுக்க போறோம்.. எங்க வீட்டு பொண்ணுங்களுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைப்போமோ அதேபோல உனக்கும் ஒன்னு விடாமல் எல்லா சீர் வரிசையும் செஞ்சுதான் கல்யாணம் பண்ணி கொடுப்போம் கவலைப்படாத.. உனக்கு எப்பவுமே அம்மா வீடு இதுதான் உனக்குன்னு யாரு இல்லன்னு எப்பவும் நீ நினைக்க கூடாது நாங்க எல்லாருமே உனக்காக இருக்கோம்.. " என்றவர் வாய் ஒன்று பேச கண் அவளிடம் வேறொன்று பேசியது.
" ரொம்ப நன்றிங்க அம்மா.. " என்றாள்.
" வாழ்த்துக்கள் தென்றல் கூடிய சீக்கிரமே இன்னொருத்தருக்கு நீங்க மனைவியாக போறீங்க போலருக்கு ரொம்ப ரொம்ப வாழ்த்துக்கள்.. " என்றான் விஷ்ணு.
அவன் அழுத்தி சொன்ன விதத்தில் தென்றலுக்கு உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் அதை காட்டிக் கொள்ளாமல் " ரொம்ப நன்றிங்க சார் நான் இல்லாம போனா இந்த வீட்ல ரொம்ப சந்தோசமா இருக்க முதல் ஆள் நீங்கதான் நீங்க எதிர்பார்த்தது போலவே நான் இந்த வீட்டை விட்டு போக போறேன் சந்தோஷமா இருங்க.. " என்று தைரியமாக சொல்லியவள் யாரையும் பார்க்க முடியாமல் அவளுக்கென்று இருக்கும் அறைக்கு சென்று விட்டாள்.
செல்லும் அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த விஷ்ணுவரதன் கண்களில் தெரிந்தது என்ன?
அத்தியாயம் 13 :
" அம்மா எல்லாரும் கிளம்புங்க ரொம்ப லேட் ஆயிடுச்சு.. படம் சீக்கிரம் ஆரம்பிச்சுடுவாங்க எல்லாரும் வாங்க.."என்று குடும்பத்தில் இருந்த அனைவரையும் அவசரப்படுத்திக் கொண்டிருந்தாள் சுரேகா.
முதல் மாதம் சம்பளம் வந்த மகிழ்ச்சியில் அதை கொண்டாடும் விதமாக குடும்பத்திலிருந்த அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துக் கொண்டு செல்வதற்காக தான் இத்தனை ஆர்ப்பாட்டமும்.
" கொஞ்ச நேரம் இரேன்டி எல்லாரும் ரெடியாயிட்டு அப்புறம் தானே வரணும்.. அதுக்குள்ள எதுக்கு இப்படி காது அடைக்கிறது மாதிரி மொத்த வீட்டுக்கும் சேத்து ஒத்த ஆளா கத்திக்கிட்டு கிடக்குற? " என்று மகளை சாடினார் லட்சுமி.
" லூசு போல பேசாம சீக்கிரம் கிளம்புங்கம்மா அப்புறம் படம் ஆரம்பிச்சுடும்.. " என்ற சுரேகா குடும்பத்திலிருந்த அனைவரையும் மிகவும் சிரமப்பட்டு படத்திற்கு போக, ஒத்துக்கொள்ள வைத்தாள்.
நால்வரின் பெற்றோர்களும் இளையவர்களை மட்டும் படத்திற்குச் சென்று வரும்படி பணிக்க, அனைவருடனும் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஆசையாக இருக்கிறது என்று பெண்கள் இருவரும் பெரியவர்கள் தலையில் கூடை ஐசை கொட்டி அவர்களையும் தங்களோடு படத்திற்கு வருவதற்கு ஒப்புக்கொள்ள வைத்தவர்கள் இதோ இப்பொழுது படத்திற்கு செல்வதற்கு குடும்பமாக ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்.
" அம்மா இதுல எல்லாருக்கும் குடிக்கிறதுக்கு தண்ணி கொஞ்சம் கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் வச்சிருக்கேன் அப்புறம் அங்க இருக்க ஸ்னாக்ஸ் எல்லாம் நல்லா இருக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் அதனால உங்க எல்லாருக்கும் தேவையான உருளைக்கிழங்கு சிப்ஸ்,பிரெஞ்ச் ப்ரைஸ், கொஞ்சம் மக்காச்சோளம், நவதானியம் எல்லாத்தையும் சேர்த்து வச்சிருக்கேன் சாப்பிட்டு முடிச்சிடுங்க தேவையில்லாம அங்க எதையும் வாங்கி சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்க வேண்டாம்.." என்று அவர்கள் மீதிருந்த அக்கறையில் பேச அவளை எரிச்சலாக பார்த்தாள் சுரேகா.
" உனக்கு எப்ப பார்த்தாலும் வேற வேலை பொழப்பே இருக்காதா? எப்ப பார்த்தாலும் நல்ல பேரை வாங்கறதுக்கு ஏதாவது செஞ்சுக்கிட்டே இருக்கணுமா! இன்னைக்கு ஒரு நாலாவது வெளியில நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு அதுவும் எங்க குடும்பத்துல இருக்க எல்லாருடையும் சேர்ந்து சாப்பிடலாம்னு ஆசைப்பட்டு ப்ளான் போட்டா அதை கெடுக்கிறது மாதிரி இப்படி எல்லாத்தையும் கொண்டு வந்து கொடுக்குறியே நல்லா இருக்கா! உனக்கு வயித்தெரிச்சல்டி உன்னையும் படத்துக்கு கூட்டிட்டு போகாம தனியா விட்டுட்டு நாங்க மட்டுமே எங்க குடும்பத்துல இருக்க எல்லாரோடையும் ஒண்ணா போறது பாத்துட்டு உனக்கு வயித்தெரிச்சல் தாங்க முடியல அதனால தானே இந்த மாதிரி எல்லாம் பண்ணி நாங்க வெளியில சாப்பிடக்கூடாதுன்னு பிளான் பண்ணி வச்சிருக்க.. உனக்கு ஏன் தான் இவ்வளவு கேவலமான புத்தி.. " என்றவளை கண்ணீரோடு பார்த்தாள் தென்றல்.
அவள் உதடு அவளிடம் எதையோ சொல்ல துடிக்க அதை சிரமப்பட்டு தன் வாய்க்குள்ளையே போட்டுக் கொண்டவள், கண்களில் தாரைதாரையாக கண்ணீர் வடித்தது தன் நிலைமையை நினைத்து.
" ஆமா அப்படித்தான் நல்லா ஒப்பாரி வச்சு அழு.. எங்க குடும்பத்துல இருக்க எல்லாரும் ஒண்ணா சந்தோசமா வெளில போற நேரம் இப்படி ஒப்பாரி வச்சு அழுதுக்கிட்டு நின்னேன்னா காரியம் வெளங்குனது மாதிரி தான்.. உன்னை தான் எங்க முன்னாடி வரக்கூடாதுன்னு சொல்லி நாங்க எல்லாரும் சொல்லி வச்சிருக்கோம்ல அப்புறம் எதுக்கு தேவையில்லாம எங்க முன்னாடி வந்து தேவையில்லாம தொந்தரவு பண்ற.. நாங்க போனதுக்கப்புறம் உக்காந்து நல்லா ஒப்பாரிவை கத்தி அழு கதறி அழு நாங்க வந்து கேட்க மாட்டோம்.. " என்றதும் தென்றல் தனக்கு அழுவதற்கு கூட சுதந்திரம் இல்லையே என்று அதற்கும் தன் மனதுக்குள்ளையே கண்ணீர் வடித்துக் கொண்டவள் வெளியில் கண்களை துடைத்து விட்டு ஒரு புன்னகை பூத்தாள்.
அவளது செயலைக் கண்டு அவளை திட்டிக் கொண்டிருந்த சுரேகாவிற்கு கூட ஒரு மாதிரியாகிப் போய்விட்டது.
" எப்ப பாத்தாலும் அவளை ஏதாவது சொல்லலாட்டி உனக்கு தூக்கமே வராதுல்ல சுரேகா.. உன்கிட்ட பல தடவை சொல்லியிருக்கேன் தேவையில்லாம எப்பவும் யாரையும் எடுத்தறிந்து பேச கூடாதுன்னு எத்தனை வாட்டி சொன்னாலும் அதைக் கேட்காமல் எப்ப பார்த்தாலும் அந்த பொண்ணு மனச கஷ்டப்படுத்துறாத மாதிரி ஏதாவது சொல்லிக்கிட்டே இரு.. உங்க மேல உள்ள அக்கறையில் அந்த பொண்ணு இவ்வளவையும் ரெடி பண்ணி கொடுத்தது தென்றலோட தப்புதான்.. நீ வார்த்தைகளை ரொம்ப கொட்டுற சுரேகா.. ஒரு நாள் இது எல்லாத்துக்கும் நீ அல்ல முடியாம தடுமாறி நிக்க போற அப்ப நீ என்ன பண்றன்னு நானும் பாக்குறேன்.. " என்றதும் எதற்கும் கலங்காத சுரேகாவிற்கு பூமாதேவி அப்படி பேசியதும் கண்கள் கலங்கிவிட்டது.
" இப்ப நீ எதுக்கு தேவையில்லாமல் அழுதுகிட்டு இருக்க சுரேகா இவங்களுக்கு வேற வேலை பொழப்பே இல்ல அமைதியா இரு.. " என்று கடுப்பாக சொன்னான் விஷ்வா.
அவள் அழுவதை கண்டதும் விஷ்ணுவிற்கு எரிச்சலாகிப் போனது.
" உங்களுக்கு எப்பவுமே அடுத்தவங்க தான் முக்கியம் இல்லையா? போயும்போயும் இவளுக்காக எப்ப பாத்தாலும் இந்த வீட்ல இருக்க எல்லாரையும் ஏதாவது சொல்லி சாடிக்கிட்டு இருக்கிறது தான் உங்களுக்கு வேலையா அப்பத்தா.. ஆசை ஆசையா படம் பாக்குறதுக்காக கிளம்பிகிட்டு இருந்தவளை இப்படி சொல்லி அழுக வச்சிட்டீங்க பாத்தீங்களா? "
" எப்ப இருந்து இந்த குடும்பத்துல இருக்கிற எல்லாரும் என்ன எதிர்த்து பேச ஆரம்பிச்சீங்க! நீங்க எல்லாரும் என்கிட்ட பேசறது இதுதான் கடைசியாக இருக்கணும் மறுபடி மறுபடியும் சொல்றேன் வீட்ல இருக்க யாராவது என்னை எதிர்த்து பேசுற மாதிரி இருந்தா முன்னாடியே சொல்லிடுங்க அந்த நிமிஷமே நானும் என் கணவரும் இந்த வீட்டை விட்டு போகிறோம்.. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருங்க.. " என்ற பூமா கணவரை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றார்.
அழுது கொண்டிருந்த சுரேகாவை ஒரு வழியாக சமாதானப்படுத்தி அவள் ஆசைப்பட்டது போலவே வீட்டிலிருந்த அனைவரும் படம் பார்ப்பதற்கு செல்ல, தென்றல் அவர்களுக்காக தான் சமைத்து கொடுத்த பொருளை சுரேகா மனம் கஷ்டப்படும் என்பதற்காக வைத்து விட்டு செல்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
லட்சுமியும் சீதாவும் அவளையும் தங்களோடு படத்துக்கு வரும்படி அழைக்க, அங்கும் தன்னால் ஏதாவது பிரச்சினை வரும் என்பதற்காக வேண்டாம் என்று முழுமையாக மறுத்துவிட்டாள்.
அவர்கள் அனைவரையும் தன் காரில் அழைத்துக் கொண்டு சென்ற விஷ்ணு வீட்டில் யாருமில்லை தென்றல் மட்டும் தனியாக இருக்கிறாள் என்பதை தெரிந்து வைத்திருந்தவன் அவளிடம் இதை விட்டால் மனதில் இருப்பதை தெரிவிக்க வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று அனைவரையும் இறக்கி விட்டவன் தனக்கு தலைவலி என்று ஒரு பொய்யை சொல்லிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு வந்தான்.
சுரேகாவிற்கு விஷ்ணு மீது சந்தேகம் தோன்ற, தனது போனை அவனுக்கே தெரியாமல் காரில் வைத்து விட்டு அவன் அங்கிருந்து கிளம்பியதும் வேண்டுமென்றே போனை வைத்து மறந்து விட்டது போல் தானும் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொல்ல, அனைவரும் அவளை முறைத்து பார்த்தார்கள்.
" ஏண்டி எங்க எல்லாரையும் வலுக்கட்டாயமா படத்துக்கு கூட்டிட்டு வந்தது நீதான் இப்ப நீயே வீட்டுக்கு போறேன்னு சொல்லும்போது இங்கே எங்களுக்கு என்ன வேலை உன்னோட சந்தோஷத்துக்காக தான் நாங்க எல்லாரும் இங்க படம் பார்க்க வந்தோம். உனக்கே வேணாம்னு சொல்லும்போது நாங்க மட்டும் எதுக்கு இங்க இருந்து இந்த படத்தை பார்க்க போறோம் வாங்க எல்லாரும் வீட்டுக்கு போகலாம்.. " என்றார் லட்சுமி.
தன் தலையில் அடித்துக் கொண்ட சுரேகா " ஐயோ மக்கு மம்மி.. நான் விஷ்ணு அத்தான் கூட சேர்ந்து படம் பார்க்கலாம்னு சந்தோஷமா இங்க வந்தேன் ஆனா அத்தான் அவருக்கு தலை வலிக்குதுன்னு நம்ம எல்லாரையும் விட்டுட்டு போயிட்டார் அவருக்கு அங்க என்ன பண்ணுதுன்னு தெரியாம இங்க எப்படி என்னால சந்தோசமா படம் பார்க்க முடியும்னு நீயே சொல்லு? எனக்கு எல்லாத்தையும் விட அத்தான் தான் ரொம்ப முக்கியம்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் அதோட நீங்க எல்லாரும் இங்கே இருக்கும் போது வீட்டில் அத்தான் மட்டும் தனியா இருப்பாங்க.. நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சதிலிருந்து அத்தான் கூட பேச எனக்கு நேரமில்லை இன்னக்கி ஒரு நாளாவது நாங்க மனசு விட்டு கொஞ்சம் பேசுகிறோம் எல்லாரும் படம் பார்த்து முடிச்சுட்டு மெதுவா வீட்டுக்கு வாங்க.. " என்றவள் வேறு வழி இல்லாமல் தன் மனதில் இருந்ததை சொல்லிவிட்டு, ஆட்டோவை பிடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தவள் தன் தாயிடம் சொன்னது போலவே விஷ்ணுவிடம் சேர்ந்து நேரம் செலவழிக்க போவதை எண்ணி சந்தோஷமாக வர, அங்கு யாருக்காக தன் ஆசைகளை விட்டுவிட்டு வந்தாளோ அவன் அவள் தலையில் இடியை இறக்கப் போவதை அறியவில்லை அந்த பாவை.
" ஹலோ மேடம் நான் சண்முகம் பேசுறேன்.. எனக்கு உங்களோட முக்கியமான கையெழுத்து ஒன்னு தேவைப்படுது.. அந்த கையெழுத்து இருந்தால் தான் என்னால மேற்கொண்டு ஆர்டர் கொடுக்க முடியும்.. கண்டிப்பா உங்களோட கையெழுத்து எனக்கு தேவைப்படுது மேடம் இப்ப நான் என்ன பண்ணட்டும்.. " என்றார் மேனேஜர் சண்முகம்.
" நான்தான் உங்ககிட்ட சொல்லிட்டு வந்தேன் அங்கிள் நான் அமெரிக்கா போக போறேன் என்னால ஒரு வருஷத்துக்கு இடையில வர முடியாதுன்னு இப்ப திடீர்னு வந்து கையெழுத்து கேட்டால் நான் என்ன பண்றது சொல்லுங்க? "
" நீங்க சொல்லிட்டு போனது எனக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு மேடம் ஆனா எனக்கு வேற வழி இல்லை இப்போ உங்க கையெழுத்து எனக்கு அவசியம் தேவை தான்.. " என்றதும் அந்த பக்கம் பேசிக் கொண்டிருந்த பிரகல்யா என்ன செய்வது என்பது போல் சிறிது நேரம் சிந்திக்கலானாள்.
" சரி அப்படியே அது எல்லாத்தையும் எனக்கு பார்வேர்ட் பண்ணுங்க நான் ஏதாவது பண்ண பார்க்கிறேன்.. "
" சரிங்க மேடம் ஆனா எனக்கு உங்க கையெழுத்து போட்ட பேப்பர் நாளைக்குள்ள வேணும் அப்பதான் என்னால அடுத்தடுத்து மூவ் பண்ண முடியும்.. "
" நான் ட்ரை பண்றேன் அங்கிள்.. " என்று அழைப்பை துண்டித்த பிறகு என்ன செய்யலாம் என்பது போல் யோசித்துக் கொண்டிருந்தாள்.
' இந்நேரம் நான் மட்டும் விஷ்ணுவை கல்யாணம் பண்ணியிருந்தா யாருக்கும் பயந்து இத்தனை தூரம் வராமல் அவர் கூடவே சந்தோஷமாக அவரது குடும்பத்தில் இருந்து இருப்பேன் இல்லையா? தனியா பிறந்து வளர்ந்த எனக்கு கூட்டுக் குடும்பத்தில் சேர்ந்து வாழணும்னு ஆசைப்பட்டதுக்கு கடவுள் எனக்கு ஒரு நல்ல தண்டனையை கொடுத்துவிட்டார் காலம் முழுக்க நான் எப்பவுமே தனியா தான் இருக்கணும் போல இருக்கு.. கடவுளே எனக்கு ஏன் தான் அடிக்கடி இப்படி ஒரு நினைப்பு வருது..' என்று தன்னைத் தானே திட்டிக்கொண்டாள்.
அவள் சிந்தனையை தடை செய்வது போல் அதற்கு வந்து விட்டான் ராகுல்.
எப்போதும் போல் அவனை கண்டதும் அவளுக்கு சகலமும் மறந்து போக, மற்றவற்றை மறந்து அவனிடம் ஆழ்ந்து போனாள்.
தனக்கென்று அந்த வீட்டில் ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்து தனக்கு பிடித்தமான நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
அவளுடைய பெரும் பொழுதுபோக்கு ஒன்றே ஒன்று மட்டும்தான்.
அது அவளுடைய நாவல். நாவல் என்றால் அவளுக்கு அத்தனை விருப்பம்.
எப்பொழுதுமே வேலைகளை முடித்ததும் சும்மா இருக்கும் நேரம் நேரத்தை போக்குவதற்காக நாவலை எடுத்து கையில் வைத்துக் கொள்வாள்.
சில விஷயங்களை மறப்பதற்கு அவளுக்கும் அது பெரும் உதவியாக இருந்தது.
அவளது அறை வீட்டின் கடைக்கோடியில் இருக்கிறது என்பதால் வீட்டின் முகப்பில் என்ன நடக்கிறது என்பது அவளுக்கு தெரியாது.
அத்தோடு அவர்கள் அனைவரும் வெளியில் செல்லும் பொழுது கதவையும் சாத்தி பூட்டிவிட்டு சென்று விட்டார்கள் என்பதால் பூட்டிய வீட்டிற்குள் அதற்கு மேலும் பூமாதேவி வீட்டிற்குள் யார் வரப் போகிறார்கள்? என்ற எண்ணத்தில் தைரியமாக தனது அறைக்கு வந்து விட்டாள்.
அவள் வாசித்துக் கொண்டிருந்த நாவலில் கூட, அதில் இருக்கும் ஹீரோயின் அத்தனை கஷ்டங்களையும் பட்டு இறுதியில் தான் விரும்பியவனோடு சேர முடியாமல் இறந்து விடுகிறான்.
'தன் வாழ்க்கையில் தான் அத்தனை சோகம் இருக்கிறது.. நாவலை வாசித்தலாவது சற்று மனதில் இருக்கும் பாரம் நீங்கும் என்று நாவலை எடுத்தால் அதில் இருப்பதை படித்துவிட்டு அவளுக்கு இன்னும் மனதில் பாரம்தான் ஏறி போனது.. ஆக மொத்தத்தில் எங்கும் யாருக்கும் வாழ்க்கையில் நிம்மதியே கிடையாது'என்று அவள் தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்த நேரம் தான் விஷ்ணு வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
காரை நிறுத்திய விஷ்ணு நேராக சென்றது என்னவோ தென்றல் இருந்த அறைக்கு தான்.
அவளது அறை கதவை வெளியில் நின்று அவன் தட்ட, சிறிது நேரம் தனது யோசனைக்குள் ஆழ்ந்து போயிருந்த தென்றலுக்கு வெளியில் அவன் கதவு தட்டிய சத்தம் கேட்காமல் தான் போனது.
தான் கதவைத் தட்டியதும் சில நொடிகள் கடந்தும் அவள் கதவை திறக்காமல் இருப்பதைக் கண்டு விஷ்ணுவின் கோபம் ஏகத்துக்கும் எகிறிப்போனது.
" ஏய் நான் வெளியில் கதவை தட்டிக்கிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம உள்ள உட்கார்ந்து என்னடி பண்ணிட்டு இருக்க?" என்றவன் குரலைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட, கையில் வைத்திருந்த புத்தகத்தை நழுவ விட்டபடி பதறி அடித்துக் கொண்டு எழுந்தாள் தென்றல்.
வெளியில் கேட்ட விஷ்ணுவின் குரலை கண்டதும் அவளது மனம் அடித்துக் கொண்டது.
' இந்நேரத்துக்கு இவர் படம் இல்லையா பார்த்துக்கிட்டு இருக்கணும் எதுக்காக சம்பந்தமே இல்லாம வந்து என் ரூம் கதவை தட்டி கிட்டிருக்கிறார் ஏதாவது பிரச்சனையை உண்டு பண்ண போறாரோ கடவுளே நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்..' என்று அவசர அவசரமாக கடவுளிடம் பிரார்த்தனை வைத்துவிட்டு, நாவலை தலையணைக்கு அருகில் ஒளித்து வைத்தவள் முகத்தை சாதாரணமாக வைத்துக் கொண்டு கதவை வந்து திறந்தாள்.
அவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவளை முறைத்து பார்த்தவன் " உள்ள என்ன படுத்து தூங்கிட்டு இருக்கியா? நான் எவ்வளவு நேரம் கதவை தட்டிக்கிட்டு இப்படி வெளியில் நிற்கிறது கதவை திறக்க மாட்டியா? " என்றவன் அவளது அனுமதி இன்றி அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அந்த அறைக்குள் நுழைந்தான்.
தனது அறைக்குள் தன் அனுமதியின்றி அவன் நுழைவதை கண்டதும் தென்றலுக்கு கோபமாகிப் போனது.
" உங்களுக்கு என்ன வேணும் சார்? எதுவாயிருந்தாலும் வெளியில நின்னு கேளுங்க இப்படி யாருமே இல்லாத நேரம் நீங்க என் ரூமுக்குள்ள வந்தா பார்க்கிறவங்க என்னை தப்பா பேச மாட்டாங்க.. உங்களுக்கு தான் என்னை கண்டாலே சுத்தமா பிடிக்காது அப்புறம் எதுக்கு இங்கே உள்ள வர்றீங்க உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் கிச்சனுக்கு வந்து செஞ்சு தாரேன்.. " என்றவள் அவனை அங்கிருந்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவே வேண்டுமென கோபமாக பேசினாள்.
" எனக்கு தேவையானது கிச்சன்ல இல்ல இங்க தான் இருக்கு.. " என்றவனை புரியாத புதிராக பார்த்தாள் தென்றல்.
ஆட்டோவில் வந்து இறங்கிய சுரேகா ஆட்டோவிற்கான பணத்தை கொடுத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய அங்கு விஷ்ணுவின் கார் நிற்பதை கண்டதும் சந்தோஷமாக வீட்டிற்குள் நுழைய வீடு இன்னும் திறக்கப்படாமல் பூட்டி இருப்பதைக் கண்டு யோசனையானவள் ' இது விஷ்ணு கார் தானே எங்க போனாருன்னு தெரியலையே! அவரோட கார் இங்கதான் நிக்குது ஆனால் கதவு பூட்டி இருக்குது எங்க போயிருப்பார்..' என்று யோசித்துப் பார்த்தவள் ஒருவேளை தென்றல் இருக்கும் அறைக்குச் சென்று இருப்பானோ? என்று சந்தேகமாக அங்கு சென்றாள்.
அவள் நினைத்தது போலவே அப்போதுதான் விஷ்ணு தென்றல் வாசலுக்கு வெளியில் நின்று சத்தம் போட்டு அழைப்பதை கண்டு கோபமானவள் அவனை அழைப்பதற்காக வாயை திறக்க அதற்குள் தென்றல் கதவை திறக்க, அவளை உள்ளே தள்ளிவிட்டு உள்ளே சென்ற விஷ்ணுவை கண்டதும் மனம் அடித்துக் கொள்ள சத்தம் போடாமல் அந்த அறை வாசலில் நின்று அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை கேட்பதற்காக பக்கத்தில் போனவளுக்கு
தலையில் இடியை இறக்கினான் விஷ்ணுவரதன்.
" என்ன சார் நான் கேட்டுகிட்டே இருக்கேன் உங்களுக்கு என்ன வேணும் தயவுசெய்து வெளியில போங்க யாராவது பாத்தா தப்பாயிடும்.." என்ற தென்றலை முதன்முறையாக அவளது பார்வையை தவிர்க்காமல் நேருக்கு நேராக அவன் பார்க்க, அவனது நேரடி பார்வையில் அவனது முகத்தை பார்க்க முடியாமல் தனது தலையை தாழ்த்திக் கொண்டாள்.
" எனக்கு எதுவும் வேண்டாம் எனக்கு நீதான் வேண்டும்.. " என்றவனை அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்த்த தென்றல் அவன் கேட்டது உண்மைதானா? என்று நம்ப முடியாமல் சந்தேகமாக அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் தென்றல்.
அவளது விழி வழியே அவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவள் சொல்லாமலேயே படித்தவன் " உன் காதுல விழுந்தது 100% உண்மைதான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன்.. உனக்கு விருப்பம் இருந்தாலும் சரி விருப்பம் இல்லாட்டியும் சரி நீ என்னை கல்யாணம் பண்ணி தான் ஆகணும்.. நான் விரும்புற பொண்ணு என் கண்ணுல படும் வரையும் நீ எனக்கு மனைவியா இருக்கணும்.. அவ எனக்கு கிடைக்க அஞ்சு வருஷம் ஆகலாம் இல்லாட்டி பத்து வருஷம் கூட ஆகலாம் அதுவரைக்கும் இந்த வீட்ல இருக்க எல்லாரையும் என்னால சமாளிக்க முடியாது.. இன்னும் கொஞ்ச நாள் விட்டா இந்த வீட்ல இருக்க எல்லாரும் உனக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வச்சிடுவாங்க போலருக்கு.. ",
"நல்லவேளை ஜோசியர் கிட்ட முன்னாடியே நான் பணத்தை கொடுத்து ஒரு வருஷத்துக்கப்புறம் தான் எனக்கு கல்யாணம் பண்றதுக்கு கிரகம் இருக்குன்னு பொய் சொல்ல சொல்லி கல்யாணத்தை ஒரு வருஷத்துக்கு தள்ளி போட்டுட்டேன்.. ஆனா உன் விஷயத்துல என்ன பண்ணி எனக்கு இந்த கல்யாணத்தை நிப்பாட்டுறதுன்னு தெரியல.. என்னால சுரேகாவை கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது.. என் மனசுல அவ ஒருத்தி மட்டும் தான் இருக்கா அவ ஒருத்திக்கு மட்டும் தான் என் வாழ்க்கையில் இடம்.. அவள் என் கண்ணுல விழுந்து அடுத்த நிமிசமே உன்னையும் என் வாழ்க்கையில் இருந்து துரத்தி விட்டுடுவேன்.. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த வீட்டுக்கு எஜமானி ஆகலாம்னு ஆசைப்படதே ஆனா எனக்கு மனைவியா இந்த வீட்டில இருக்கிற வரைக்கும் நீ இந்த சொத்து எல்லாத்தையும் அனுபவிக்கலாம்.. இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ்.. இந்த கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கலைன்னா அதுக்கப்புறம் நான் செத்துப் போயிடுவேன் ஜாக்கிரதை.." என்றவன் வீட்டில் யாருமில்லையே என்கிற தைரியத்தில் அவளது பதிலுக்காக காத்து அங்கேயே அமர்ந்து விட்டான்.
இங்கு வெளியில் நின்று கொண்டிருந்த சுரேகாவின் இதயம் நின்று துடித்தது.
சத்தமே இல்லாமல் இரு பெண்களின் இதயத்தை உயிரோடு கொளுத்தி விட்டு உள்ளே சந்தோஷமாக அமர்ந்திருந்தான் பூமாதேவி மாரியப்பனின் குடும்ப வாரிசு.
Currently viewing this topic 1 guest.
Latest Post: கள் விழி மயக்கம் - 25 Our newest member: Suba Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page