All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

VSV45 கனலை அணைக்க வா கவியே

Page 2 / 2
 

VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம் :9


 

வந்தனாவையே பாவமாக பார்த்தபடி நின்றிருந்தாள் ஆராதனா.

அவளருகே வந்த வந்தனா அவளின்  தோளினைத் தொட்டு, " இங்க பாரு ஆரா... சிம்பிளா சொல்லனும்ன்னா பின்னாடி கஷ்டப்படாதே... அவ்வளவுதான் சொல்லுவேன்.நீ பச்சை மண்ணு இல்ல‌, புரிஞ்சு நடந்துக்க..." எனக்‌கூறி நகர்ந்தாள்.

வந்தனாவின் அறிவுரை மனதில் பதிந்தாலும் அறிவு ஏற்க மறுத்தது.

வாரங்கள் மாதங்கள் ஆகின.ஆராதனாவும் தன் ஆய்வறிக்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

அதை மீறி தேவ் விடம் அநாவசியமாக பேசவில்லை.அவனும் அவளின்  சிகிச்சை முறைகள் சம்பந்தமான அவளது ஆர்வத்தை கண்டு அவளுக்கு உதவினான்.

தன்னிடம் சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளின் சிகிச்சை முறை பற்றியும் உடல் நிலைக்கேற்ப சிகிச்சை தருவது எவ்வாறு என்று விளக்கினான்‌.

அன்று வேறு மருத்துவமனையில் அவசரமாக ஒரு குழந்தையின் சிகிச்சைக்கு அவனை அழைத்திருந்தனர்.

மாலை மங்கத் துவங்கிய நேரம் அவனது அலைபேசி அலறியது, " ஹலோ.. மம்.. சொல்லுங்க சார்…அப்படியா…சரி ஓகே… …நான் வர்றேன் சீக்கிரமே…இல்ல சார்…நோ ப்ராப்ளம்….” எனக்கூறி அலைபேசியை வைத்தான்.

எதிரே இருந்த ஆராதனா ஏதோ குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.அவள் கிளம்பினால்தான் அவன் கிளம்ப முடியும் எனவே, “ஆராதனா, ஒரு எமர்ஜென்சி….. பி.எம்.ஹாஸ்பிட்டல்ல ஒரு கான்ஜெனிட்டல் ஹார்ட் டீசிஸ்(congenital heart disease) கேஸ் ,சோ நம்ம மீதிய நெக்ஸ்ட் வீக் பாக்கலாம்…” என்றவாறே கிளம்ப தயாரானான் .

“சார்….” எனத் தயங்கிவாறே நின்றாள்.

அவன் திரும்பி என்னவென்பது போல் பார்த்தான். “தப்பா நினைக்காதீங்க சார்…இந்த கான்ஜெனிட்டல் கேஸ்க்கு நானும் உங்க கூட வந்து அபசர்வ் பண்ணலாமா...? தீசிஸ்க்கு இன்னும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கும்...சோ...இப் யூ டோன்ட் மைண்ட் ?..“ எனத் தான் கேட்க நினைத்தவற்றை தயங்கி தயங்கி கேட்டுவிட்டு ஏதேனும் திட்டி விடுவானோ என மிரண்டு பார்த்தாள்‌.

அவனும் அவளது ஆர்வத்தை பார்த்து கொண்டு தான் இருக்கிறான்.சிறு சிறு நுணுக்கமான விஷயங்களையும் நன்றாக கிரகித்துக் கொள்கிறாள்.

“ அன்னிசியா ஃபீல் ‌பண்ணுனீங்கன்னா வேணாம் சார்” என‌ அவசரமாக முடித்தாள் .

” நோ …நோ…நாட் லைக் தட்,நீ ஹாஸ்டல்ல பர்மிஷன் கேக்கனும்…. அப்புறம் ரிட்டர்ன் லேட்டானா உனக்கு கஷ்டமாகும்.. அதான் யோசிச்சேன்….” என்றான்.

“ நான் பர்மிஷன் வாங்கிட்டு ஆட்டோல வந்துடுறேன் சார்.. பக்கம் தானே சார். உங்களுக்கு டைமாகும்.. நீங்க கிளம்புங்க…நா வந்து ஜாயின் பண்ணிக்குறேன்..” என்றாள்.

சிறு தயக்கத்துடன்,

“ ஓகே…பாத்து வா” என்று கூறிவிட்டு சென்றான்.

அவளும் ஹாஸ்டல் வார்டனிடம் அனுமதி பெற்று அந்த மருத்துவமனைக்கு சென்று விட்டாள்.

அங்கு அவன் அவசர சிகிச்சை பிரிவில் சில மருத்துவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தான்.

இவளுக்குத்தான் “எப்படி உள்ளே செல்வது…” எனத் தயக்கத்துடன் நின்றிருந்தாள்.

அவளை கண்ட தேவ் அவளை உள்ளே வருமாறு அழைத்து அவளை அறிமுகப்படுத்தினான். அங்கிருப்பவர்களுக்கு அவள் இருப்பதில் விருப்பமில்லையென்றாலும் தேவ்விற்க்காக சரி என்றனர்.

தேவ் குழந்தையின் பரிசோதனை மாதிரிகளை பார்த்து விட்டு குழந்தையை பரிசோதித்தான். கான்ஜெனிட்டல் (cogential) பாதிப்பில் பல வகை உள்ளது அதில் எந்த வகையான பாதிப்பு என்பதை தெளிவாக கூறி குழந்தையின் அறுவை சிகிச்சை பற்றி விவாதித்தான். ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்யலாம் , என்று பரிந்துரைத்துவிட்டு, அங்கிருந்த மூத்த மருத்துவர்களிடம் சிலவற்றை தெளிவுபடுத்திவிட்டு கிளம்பத் தயாரானான், அப்போது தான் ஆராதனா என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்பதை கவனித்தான்.

அவள் குறிப்புகளை எடுத்து முடித்து நிமிர்ந்தாள்.

அவளைத்தான் அவனும் பார்த்தான், அவளருகே வந்து ,” எல்லாம் நோட் பண்ணிக்கிட்டயா?..., நெக்ஸ்ட் கிளாஸ் ல மத்த ஸூடுடண்ட்ஸ்க்கு செமினார் ரெடி பண்ணிடு“ என்றான்.

“சரி சார்” என்றாவது மணியைப் பார்த்தாள், ஒன்பதரையை நெருங்கியது.

வெளியில் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.இதமான மெல்லிய மண்வாசனையுடன் கூடிய தென்றல் வீசியது.

இரவினை ரம்மியமாக்கும் இதமான‌ சூழ்நிலை நிலவியது.

வேகமாக இருவரும் கிளம்பி கீழே வந்தனர்.

ஆராதனா, “ ரொம்ப நன்றி சார்.ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருந்தது, கிளம்புறேன் சார்” என வேகமாக திரும்ப ,தேவ் ,”எப்படி போவ?... மழை பிடிக்கும் போலவே?...” என்றான்.

“கேட் பக்கமே ஆட்டோ நிறைய இருந்தது சார்…..போயிடுவேன்.இங்கயிருந்து ரண எடுத்துக் கொண்டு அவள் முன் நிறுத்தி, ”உள்ளே ஏறு” என்றான்.
 
 "இல்ல சார்…” என்று அவள் ஆரம்பிக்கும் முன்,” ஏறுன்னு சொன்னேன் “ என்றான் அழுத்தமாக.
 
 
படக்கென காரின் முன் கதவை திறந்து உள்ளே அமர்ந்தாள்.
 
அவன் அவளின் பின்னிருந்து அவன் துடைத்துக் கொண்ட பூந்துவலையை எடுத்துக் கொடுத்து , ” கொஞ்சம் ஈரமா தான் இருக்கு அட்ஜஸ் பண்ணிக்கோ…குளிரில் நடுங்குது உனக்கு “ எனக் கொடுத்தான்.
 
அவளும், “ பரவாயில்ல சார்…. தாங்க்ஸ் “ என குளிரில் நடுங்கியபடி வாங்கி முகத்தை துடத்துக் கொண்டாள்
.சற்று முன் அவன் துடைத்த வாசனை அதில் மிச்சமிருந்தது‌.
மிச்சத்தை உள்வாங்கிக் கொண்டது அவளது நாசி.
 
பெண்ணணவளுக்கு இதயம் தாளம் தப்பி துடித்தது.
 
அவனை மெதுவாக பார்த்தாள் அவனோ ஃஎப் எமை ஏதோ சரிசெய்து கொண்டிருந்தான்.
 
“இவன் என்ன இப்படி இருக்குறான்?...திரும்ப கூட‌ மாட்டேன்றான்….. ரொம்ப…….நல்லவன்‌ டா நீ…..” என் மனதினுள் செல்லமாக அவனை ரசித்தவாறே சொல்லிக் கொண்டாள்.

 
ஏன் வேற‌ என்ன இப்ப நீ எதிர்பாக்குற……. ரொம்ப ஆசைப்பட்டு அசிங்கப்படாதே….
இவ்வோளோ தூரம் பண்ணுறான் இதுவே உனக்கு அதிகம்……. இந்த நேரத்தை மட்டும் ரசிச்சுக்கோ……” என நினைத்தவாறே அமர்ந்திருந்தாள்.
 
ஏதோ கேட்க திரும்பிய தேவ் அவளின் தோற்றம் கண்டு விழி பிதுங்கினான்‌.
வெள்ளை உடை மழை நீரில் அவளின் உடலோடு ஒட்டி அவளின் அங்க வளைவுகளை அழகாக எடுத்துக் காட்டியது.
 
அவளளோ தன் ஆடையின் நிலையை பற்றி சிந்திக்கும் நிலையில்லை.
 
அவளது ஷாலோ கழுத்தோடு ஒட்டி இருந்தது.
 
அவனுக்கு தான் அவளிள் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை.
 
முதல் முறை ஒரு அந்நிய பெண்ணின் அருகிலே அமர்ந்து அவளது அனுமதியின்றி அவளது அழகினை அளவிட்டு கொண்டிருந்தான்‌.
 
அப்போது  எப்.எம்மில் 
தீடீரென   ஸ்வர்ணலதா தன் தேன் மதுரக்குரலில் பாடிய,

“பொன்னி… பொன்னி… நதி நீராட வரணும்….

என்னை என்னை தினம் நீ ஆள வரணும்…

பெண் மனசு காணாத இந்திரஜாலத்தை…..

அள்ளித்தர தானாக வந்துவிடு….

என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்துவிடு….

அன்பே ஓடி வா……அன்பால் கூட வா….
அன்பே ஓடி வா……அன்பால் கூட வா….
ஓ…ஓ… பைங்கிளி…”

எனப் பாடல் ஒலித்தது
 
அவளோ சட்டென இப்போது நன்றாக  அவனைப் பார்த்தாள்.
 
அவனும் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவளது முகத்தில் பார்வையைப்  பதித்தான்.
 
அவளது நெற்றியில் வழிந்த நீரானது நாசியில் இறங்கி..., உதடுகளை தொட்டு...., கழுத்திலிறங்கியதை பார்த்து கொண்டே இருந்தான்.
 
இரவின் மெல்லிய வெளிச்சத்தில் அவளது முகத்திலிருந்த நீர் சிறு சிறு வைரமாக மின்னியது.
 
அவனது  பார்வையில் இருந்த வித்தியாசத்தைக் கண்டு திகைத்தாள் ஆராதனா.
 
கூடவே பாடல் வேறு அவளை இம்சித்தது.
 
மனம் விரும்பிய வரின் அருகாமை  தந்த இதத்தை ரசிக்கவும் முடியாமல் தவிர்க்கவும் முடியாமல் மனம் தடுமாறியது..
 
அப்போதும் அவளது  உடை அவன் கண்களுக்கு விருந்தளித்து கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.
 
முதல் முறை ஆணவனுக்கு ஆராவின் உதடுகளை தொட்டு பார்க்க ஆசை தோன்றியது.
 
உணர்வுகள் அவனது கட்டுக்குள் அடங்க மறுத்து அவனை வேறு உலகத்தில் தள்ளியது.
 
அவளை நோக்கி நகர்ந்து கையை நீட்டிவிட்டான்.
 
சட்டென சுதாரித்த ஆராதனா, “ சார்” எனக் கூறி பின்னால் நகர்ந்தாள்.
 
அவனின் மோகவலை சட்டென்று அறுந்தது.
 
”என்ன காரியம் செய்ய துணிந்து விட்டேன், தன்னை நம்பி வந்த பெண்ணை தொடத் துணிவது எத்தகைய கேடுகெட்ட செயல், காதலில்லாமல் ஒரு பெண்ணை தொட போய் விட்டேனே...கட்டுப்பாடு அனைத்தும் கண் நேரத்தில் காற்றில் பறக்க விட்டு விட்டேனே”, என அவனுள்  இருந்த நல்லவன் இடித்துரைத்தான் .
 
தன் மீதே அவனுக்கு கோபம் வந்தது . இருப்பினும் சமாளித்துக்கொண்டு,”டோர் லாக் சரியா ஆகல… அதான்… செக் பண்ணினேன்” என சற்று தடுமாறிக் கொண்டே வேறு புறம் திரும்பினான் .
 
அவனாலும்‌ அவளது நிலையை எடுத்துரைக்க சங்கடப்பட்டுபோனான். அவள்  புறம் திரும்பாமல் காரை இயக்கினான்..
 
அவளுக்கு புரிந்தது அவன் மனம் சில நிமிடங்கள் அவளருகில் தடுமாறியதும் பின் அவளருகில் ஒரு வேகத்தில் வந்ததும், அதனால்தான் அவளை நேருக்கு நேர் காண முடியாமல் வேறு புறம் திரும்புகிறான் என.  அதுவும் ஒரு காரணம் தான்.. ஆனால் உண்மையில் திரும்பிய காரணம் வேறல்ல வா...
 
அவளுக்கும் என்ன பதில் சொல்வது என தெரியவில்லை.
“ஓ..ஓ.. ஓகே சார்… சரியா லாக்  ஆகிருக்கு.நீங்க காலேஜ் வெளி கேட்டுலயே நிறுத்திருங்க, நான் போய்க்கிறேன்” என்றாள்.
 
மனதினுள் “உனக்கு மட்டும் தான் எல்லா உரிமையும் உண்டு, நான் உனக்கானவளா இருந்திருந்தா இப்ப உனக்கு நான் ஏன் தடை சொல்லப் போறேன்…. இன்னும் நான் உனக்கானவளா ஆகலயே,ஆகறதுக்கு நீ ஒத்துக்க மாட்டேங்குற.பின்ன எந்த உரிமையில் பக்கத்துல வர, நானும் இழைஞ்சிருந்தேன்னா நீ அதுக்கு என்ன பேர் வைப்ப….?” என மனதினுள் பெரும் போராட்டமே நடந்து கொண்டிருந்தது..
 
கல்லூரி வாயிலில் காரை நிறுத்தினான்.
மழை சற்று பலமாகவே தூறிக்கொண்டிருந்தது.
 
காரினை திறந்து இறங்கினாள், “ தேங்க் யூ சார்… குட் நைட்” எனக் கூறியவள்.திரும்பி நடக்கும் முன், “ஆராதனா!...” என்றழைத்தான்.
 
அவள் திரும்பி, “ சார்…” என்றாள்.
 
கையிலிருந்த பூந்துவாலையை அவளிடம் கொடுத்து ,  "மேல நல்லா கவர் பண்ணிட்டு போ” என்றான் அவளைப் பார்க்காமலே.
 
“சார் ஷால் இருக்கு தலையில் சுத்திட்டு போயிடுவேன்” என்றது அந்த மங்குனி.
 
அந்த ஷாலே பெயருக்கு தான் இருந்தது உடலை சுற்றினாலும் அவளின் வனப்புகள் அப்பட்டமாக தெரியும் என அந்த தத்திக்கு புத்தியில் உரைக்கவில்லை.
 
அவன் இறங்கி வந்து அவளது கண்களை ஆழ்ந்து பார்த்து கொண்டே தன்னை மறந்து அவளுக்கு போர்த்தி விட்டான்.
 
அவள் நிமிர்ந்து அவனை ‌பார்த்தாள். அவனது பார்வை அவளை வாரிச் சுருட்டி கொண்டு சுனாமியாக இதயத்தை தாக்கியது.
 
"தலையை மறைக்குறது முக்கியமில்ல… அதுக்கு முன்ன ….” அவளருகே குனிந்துஃபுல்லா கவர் பண்ணு , உன் டிரஸ் என்ன கலர்?... எந்த நிலமையில நீ இருக்கன்னு பாரு…..“ எனக் கூற அவனது மூச்சுக்காற்று வெப்பமாக அவளது காதோரம் தாக்க மேனி சிலிர்த்து அடங்கியது.
 
அப்போதுதான் தன் நிலையை பற்றி தெரிந்து தலையில் நன்றாக அடித்துக் கொண்டாள்.
 
இப்போது அவளிடமிருந்து தேவ் விலகி காரில் சென்று அமர்ந்து காரினை இயக்கியவாறே அவளைப் பார்த்தான்.
 
அவள் அவனது பூந்துவாலையை உடலை சுற்றிலும் நன்றாக போர்த்தியவாறு அவனைப் பார்த்தாள்.
 
அவனும் அவளை பார்த்து சிறு தலையசைப்புடன் காரினை கிளப்பிச் சென்றான்.
 
அவளோ அவனது பூந்துவலாலையை தன்னை சுற்றி இறுக்கி அணைத்தவாறே அதில் அவனது வாசத்தை நுகர்ந்து ‌மழையில் நனைந்து கொண்டே விடுதிக்கு வந்தாள்.
 
வந்தனாவோ, "என்னடி எங்க போய்ட்டு வர, சாப்ட்டியா?...ஃபோனும் எடுக்கல…. சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்…டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா…” எனக்கூறி ஏதோ எழுதிக்கொண்டு இருந்தாள்.
 
அவளைப் பார்த்து, “ ஒரு எமர்ஜென்சிகேஸ் தேவ் சாரோட பி.எம் ஹாஸ்பிட்டல் வரைக்கும் போயிட்டு வர்றேன், தீசீஸ்க்கு ரிலேட்டடா இருந்தது. போகும் போது ஆட்டோல போனேன் வரும்போது அவர் டிராப் பண்ணினார்” என்றாள்.
 
ஆராதனா தலையை துவட்டி கொண்டு இருந்தாள்.அவள் முன் வந்த வந்தனா அவளை பார்த்து,” பாத்து டி .. ஏமாந்து போகாதே…ஆசையை வளத்துக்காதே…அவ்வோளோ தான் சொல்லுவேன்..” எனக்கூறி தூங்கச் சென்றாள்.
ஆராதனாவிற்கும்‌ புரிந்தது தன் தோழியின் அக்கறை.சற்று முன்னிருந்த மோன நிலை அவளை விட்டு விலகி ஓடியது.
 
இங்கு தேவ்வோ‌ தன் உடையினை மாற்றி வந்து கட்டிலில் விழுந்தான். அவனது மனக்கண்ணில் ஆராதனாவின் செம்பவள உதடுகளும், நீண்ட மான்விழிகளும் அருகில் வந்து அவனை இம்சித்தன.அவன் கைகள் நீண்டு அருகிலிருந்த தலையணையை எடுத்து முகத்தில் புதைத்து கொண்டது.
  • .

This post was modified 3 weeks ago 3 times by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம் 10

தெளிவான நீரோடை போல இருந்த தேவ்வின் வாழ்வில் சிறு கல்லெறிந்து கலங்கியது போல் இருந்தது ஆராதனா வின் மேல் வந்த சிறு சலனம்.

மனம்‌ முழுவதும் முதல் முறையாக ஒரு தடுமாற்றம்.

" இல்லை இது வேண்டாம்" என மனதில் ஒரு உறுதியான முடிவினை எடுத்த பிறகுதான் தேவ்வால் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்ல முடிந்தது.

தேவ் -ஆராதனா நிலை திரிசங்கு நிலையிலிருக்க , அங்கு வந்தனா ரிஷியின் மனதில் ஆழப் பதிந்து கொண்டு இருந்தாள்.

அவளது தைரியம், தெளிவான சிந்தனை, எப்படிப்பட்ட வேலையில் இருந்தாலும் மற்றவருக்கு ஓடிப்போய் உதவும் குணம், எளிமையான தோற்றம் ‌ என ஒவ்வொரு விடயத்திலும் அவள் பால் அவன் மணம் சென்று கொண்டிருந்தது.

எத்தனையோ அழகான பெண்களிடம் பேசி பழகி நட்பு பாராட்டி  இரவு விருந்தில் கூட கலந்து கொண்டிருக்கிறான் ரிஷி, அதுவும் அளவோடுதான்.

அவர்களிடம் தோன்றாத ஒரு உரிமையுணர்வு வந்தானா விடம் மட்டுமே தோன்றியது.

அவனால் தன் மனதினை பூட்டி வைக்க முடியவில்லை.உடைத்துஅவளிடம் கூற நேரம் பார்த்து கொண்டு இருந்தான்.

ஏதோ ஒரு வகையில் அவனை ஈர்த்து கொண்டு இருந்தாள்.

மருத்துவமனை வளாகம் ஒரு பக்கம் இருக்க ,சிறிது தூரம் தள்ளி தான் கல்லூரியும் இருக்கும்.

வகுப்பினை‌

தவிர்த்து‌ மற்ற நேரங்களில் ‌தேவ்வும்,ரிஷியும் மருத்துவமனை வளாகத்தில், தங்களுடைய அறையில் புறநோயாளிகளைப் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.

வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே 

வகுப்புகள் என்பதால் மீதி நேரம் புற நோயாளிகளுக்கான பார்வை நேரத்திலோ அல்லது ஏதேனும் அறுவை சிகிச்சையிலலோ இருப்பார்கள்.

ஒரு நாள் ‌ மாலை நேரத்தில் ‌வந்தனா மட்டும் ஆய்வறிக்கைக்காக நோயாளிகளின் புள்ளி விபரங்கள் சரி பார்க்க‌ ரிஷியினை‌ பார்க்க‌ச்‌‌சென்றாள்.

” மே ஐ கம் இன் சார்?....” என்றாள்.

” எஸ்…,கம் இன்..” என்றான் ரிஷி.

“ சார் இந்த ஸ்டாடிஸ்டிகல் ரிப்போர்ட் கரெக்டா வந்துருக்கான்னு பாருங்க சார்” என்றாள்.

ஏனெனில் எந்த ஒரு ஆய்வறிக்கைக்கும் புள்ளி விபரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இது சரியாக இருந்தால்தான் அவளால் அடுத்தடுத்து செய்ய முடியும்.எனவே தான் நேரம் காலம் பார்க்காமல் கடந்த ஒரு வாரமாக இந்த புள்ளி விபரங்களை மிகச் சரியாக தயாரிக்க படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறாள்.

அவனும் பார்த்து கொண்டே தான் இருக்கிறான் இந்த ஒரு வாரமாக அவனை கேள்விகளை கேட்டும், சந்தேகங்களால் அவனை திணறடித்தாள்.

இப்போது கடைசியாக ஒருவழியாக முடித்து கொண்டு வந்திருக்கிறாள். அதனை வாங்கி பார்த்தவன் சில நிமிடங்களில்,

” ஃபெர்பக்ட்,வந்தனா …வெரி குட்.இத நீ தாராளமா மெயின் காப்பி போட்டுக்கலாம்,

ஃபர்தரா என்ன புரோசீட் பண்ணனுமோ பண்ணிட்டு எனக்கு ஒரு சாஃப்ட் காபி அனுப்பிரு” என்றான்.

அவள் முகம் இப்போது தான் தெளிந்தது.தான் மிகவும் பிரயத்தனப்பட்டு செய்த ஒன்று மிகச் சரியாக வந்த திருப்தி அவளிடத்தில்.

.” ஓகே சார்…. தாங்க்யூ” என்றாள்

அவனோ,‌” இப்ப‌‌தான் உன் ‌முகம் டென்ஷன் இல்லாம இருக்கு,ஒரு வாரமாக ரொம்பவே டென்ஸ்டா இருந்த,ஹோப் யூ ஃபீல் ரிலாக்ஸ்ட்” என்றான்.

அவள் அதற்கு பதிலேதும் சொல்லாமல் பேச்சை கத்திரித்தாள்,” ஓகே சார், தாங்க் யூ,நான் மெயில்ல சாஃப்ட் காபி அனுப்பிடுறேன்” என்றவாறே வாயிலை ‌நோக்கி திரும்பும்‌முன்

“ வந்தனா …ஒரு‌ நிமிஷம்” என நிறுத்தினான் ரிஷி.

அவளோ திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

“ நான் நேரடியாகவே சொல்லிடுறேன்.நான் உன்ன மனப்பூர்வமா விரும்புறேன்.லைப் லாங்கா நீ என் கூட இருக்கனும் ன்னு ஆசைப்படுறேன். அதுக்காக நான் உன் பின்னாடி சுத்தி உன்ன தொந்தரவு பண்ணிட்டு இருக்க மாட்டேன்.டேக் யுவர் ஓன் டைம்.” என‌ சொல்லிக்கொண்டே இருக்கும்போது அவள் ஏதோ பேச வர அவளை கையமர்த்தி,” இரண்டு நிமிஷம் நா சொல்றத முழுசா கேட்டுட்டு பேசு” என்றான்.

“ இப்ப இல்லன்னாலும்‌ லைப்ல கல்யாணம் பண்ணனும்னு நினைச்சின்னா என்னோட‌ ரிக்வஸ்ட கன்சிடர் பண்ணு,பொத்தாம் பொதுவா முடியாது ன்னு சொல்லிடாத" என முடித்தான்.

அவளோ ,”இது சரி வராது சார்….நாட் இன்ட்ரெஸ்டட்” எனக் கூறி அவனை வலிக்கச் செய்தாள்.

ஆனால் அவனோ சுருக்கென்று குத்திய வலியை பொருட்படுத்தாமல்,

“ இப்ப இன்ட்ரெஸ்ட் இல்லன்னா… பின்னாடி இன்ட்ரெஸ்ட் வரும் வந்தனா" என்றான்.

அவளோ,

“ கொஞ்சமாவது டாக்டர் மாதிரி பிகேவ் பண்ணுங்க,விடலப் பையன் மாதிரி பேசிட்டு இருக்காதீங்க” என்றாள். 

" ஏன் விடலைப் பையனுக்கு மட்டும் தான் காதல் வரணுமா,டாக்டர்ஸ்க்கெல்லாம் வரக்கூடாதா என்ன?....” என்றான்.

“ சார்…ப்ளீஸ்… இதோட‌ இந்த டாபிக்க விட்டுருங்க,இனிமே வேண்டாம் , அப்புறம்….அப்புறம்‌….

ஒரு ரெக்வஸ்ட் உங்க புரோபோசல அக்சப்ட் பண்ணல்ன்னு இன்டர்னல்ஸல கம்மி பண்ணிடாதீங்க “ என்றாள் அவசரமாக.

அவனுக்கு ‌சிறிது‌

சினம்‌ வந்துவிட்டது உடனே ரிஷி,

“ அந்த அளவுக்கு சீப்ஃபா பிகேவ் பண்ணமாட்டேன்.

புரபஷன் வேற‌ பெர்சனல் வேறன்னு எனக்கு நல்லாவே தெரியும் ‌நீ கவலைப்படாத.எப்பயும்‌போல பேசு. ஏதும் டவுட்ஸ்ன்னாலும் தயங்காம கேளு” என்றான்.

“ ம்ம் “ என மட்டும் அவனை நோக்கி கூறிவிட்டு வெளியேறினாள்.

இவ்வளவு நேரம் ‌அவனிடம் விறைப்பாக பேசினாலும் ‌அறையினை விட்டு வெளியே வந்ததும் சிறு படபடப்பு வந்தது.கோடிக் கணக்காண சொத்துகளுக்கு அதிபதி இந்த மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியே அவனுடைய தந்தையினுடையது. அவன் தன்னிடம் காதலைக் கூறுவது போலித்தனமாக இருந்தது.

“ சும்மா டைம்பாஸுக்கு சொல்லிருப்பாரு , இதெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காத வந்தனா” எனத் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு விடுதியை நோக்கி செனறாள்‌.

அதன் பின்னர் வந்த நாட்களில் அவனும் வந்தனாவை தொந்தரவு செய்ய வில்லை அவளும் வெறுப்பைக் காட்ட வில்லை.விலகி நின்றாள் அவ்வளவே.

ஆராதனாவின்  பார்வை மட்டும் கொஞ்சமும் மாறவில்லை.

அவன் செல்லும் இடங்களில் எல்லாம் அவளது கண்கள் அவனை பின் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அவனும் கவனித்தான் அவளது பார்வையை.

அது கூட அவனுக்கு ஒரு வித எரிச்சல் தரவே அவளை தனியாக அழைத்து ,"இது போல எல்லா இடத்திலும் என்னையே  பார்க்காதே.. ,‌இனி இப்படி நடந்தா ....நா  வேற‌விதமா ஆக்ஷ்ன் எடுக்க வேண்டிவரும்" என எச்சரிக்கை விடுத்தும் அவளைத் திட்டியும் அவனது  பலவீனத்தை அழகாக மறைத்துவிட்டான்.

அவளுக்கோ கண்கள் எல்லாம் கலங்கி விட்டது.

தவறென்று நன்றாக தெரியும் ஆனாலும் அவனை ரசிப்பது மட்டுமே பிறவிப் பயன் போல் செய்து கொண்டிருந்தாள் அவள்.

 அவளும் "சாரி... சார் ..... இனிமேல் இப்படி பண்ணமாட்டேன், உங்களுக்கு தொந்தரவு கொடுக்க மாட்டேன் " எனக் கூறி விட்டு விறுவிறுவென வகுப்பினை நோக்கி சென்றாள்‌.

அங்கு ஒரு அறையிலிருந்த டாக்டர் விக்டருக்கு இவையனைத்தும் கேட்க நேர்ந்தது .

ஆனால் பாவம் ஆராதனாவிற்கு தெரியவில்லை அடுத்தமுறை அவனுடான அவளுடைய சந்திப்பு , அவளுக்கு பலத்த அடியினை கொடுக்க காத்துக்கொண்டிருக்கிறதென்பதை.

அப்போது வந்தனாவின் வார்த்தை எவ்வளவு உண்மையாக இருக்கும் என்பதை உணர்வாள்.

ஆம்! காலம் அவளுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்க தயாராகிவிட்டது.

யாரின் மேல் தவறு என்று பிரித்தறிய முடியாத நிலை ஏற்படும்.

 

 

 

 

 

This post was modified 2 weeks ago 4 times by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

அத்தியாயம் 11:

 

ஏனோ ஆராதனாவின் மனம் சோர்ந்து போய் இருந்தது தன்னை தானே முயன்று சமாதானம் செய்து கொண்டாள்.

அவனுக்கு விருப்பமில்லையேல் அவளால் என்ன செய்ய முடியும் .

முதலில் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டு ...பின்னர் பார்த்துக் கொள்ளலாம் எனத் தன்னை தேற்றிக்கொண்டு பாடத்தில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

எவ்வளவு பட்டாலும் மனம் அவனையே சுற்றியது.

அதனை கவனமாக தன் முகத்தில் காட்டாமல் இருந்தாள்.

அவளது பாராமுகம் தேவ்வினை ஏதோ செய்தது.

”ரொம்ப திட்டிட்டோம் போலவே...., பாக்கவே மாட்டேங்குறாளே... “ என நினைத்தான்.

அவனது மனசாட்சி அவனை காறி உமிழ்ந்து,

” வேண்டாம் ன்னு தானே அவள திட்டுன, அப்புறம்….. எதுக்கு அவ பாக்கல,திரும்புல ன்னு என்ன புலம்புற…இது சரியா வராது….உன் முடிவுல உறுதியா இரு...” என மதில் மேல் பூனையாக யோசித்தான்.

டாக்டர் விக்டர் ஆராதனா மற்றும் வந்தனாவின் மேல் மிகுந்த மதிப்பு வைத்திருப்பவர் ,எனவே அவர் தேவ் ஆராதனா உரையாடலை கேட்க நேர்ந்தால் அவளை அழைத்து படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறி தன் புதிய வீட்டு  முகவரி மற்றும் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் மருத்துவமனையின் பெயரினை அவளுக்கு தந்துவிட்டு ஏதேனும் உதவி தேவையெனில் தயங்காமல் தன்னை அணுகுமாறு கூறிவிட்டு டெல்லிக்கு மாற்றலாகி சென்றுவிட்டார்.

முதலாமாண்டு முடிந்து இரண்டாம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பு தொடங்கியது.

வெற்றிகரமாக வந்தனா மற்றும் ஆராதனா தங்களுடைய ஆய்வறிக்கையை சமர்பித்தனர்.

வாய் மொழித் தேர்வில் இருவரும் அருமையாக பதிலளித்து மருத்துவக் கல்லூரி டீன் களின் பாராட்டைப் பெற்றனர்.

ரிஷி வெகுவாக வந்தனாவைப் பாராட்டினான்.வந்தனா அதனையும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.அவளது இந்த அலட்டலில்லாத குணம் அவனை இன்னும் இன்னும் பிடித்தது.

தேவ் ஒரு மெச்சுதல் பார்வையுடன் நகர்ந்து விட்டான்.ஆராதனாவிற்கு சிறிது ஏமாற்றமே , ஏதாவது ஒரு வார்த்தை கூறுவான் என்று எதிர்பார்த்தாள்‌ ,அவனோ வெறும் பார்வையுடன் சென்று விட்டான்.

ஏனோ அவளுக்கு அவன் சாதரணமாகக் படிப்பு விஷயமாகக்கூட சரியாக பேசாமலிருப்பதுஒரு வித அழுத்தத்தை கொடுத்தது.

இப்படியே மூன்று மாதங்கள் சென்றது.

ஆராதனாவின் அக்காவிற்கு திருமணம் முடிந்து முதல் வருடம் திருமண நாளைக் கொண்டாடினார்கள்.

ஆராவும் மகிழ்ச்சியாக தன் அம்மா, அப்பா,அக்கா மற்றும் மாமாவுடனும் அவர்களின் கைக்குழந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி விட்டு விடுதிக்கு திரும்பியிருந்தாள்.

வந்தனாவோ, “ என்னடி அக்காவோட முதல் வருஷ கல்யாண நாளை நல்லா செலிப்ரேட் பண்ணியாச்சா? குட்டி பையன் எப்படியிருக்கான்?...”

என்றாள்.

"ம்ம்... நல்லா செலிப்ரேட் பண்ணினோம் டி, பாவம் மாமா ஆசிரமத்தில படிச்சு வளர்ந்துனால அவங்களுக்குன்னு சொந்தம் ன்னு யாருமில்லை அதனால அவர் வளர்ந்த ஆசிரமத்திலயே போய் செலிப்ரேட் பண்ணிட்டு வந்தோம்.அக்காவும் மாமாவும் செம ஹேப்பி ,எனக்கும் ரொம்பவே சந்தோஷமா இருக்கு . எங்க அக்கா.. மாமா… இப்படியே ஹேப்பி கப்பிள்ஸா இருக்கனும் டி....குட்டி பையன் நல்லா இருக்கான் . எல்லாரையும் ஃநைட் ட்யுட்டி செய்ய வைக்கிறான் டி, குட்டி வாலு” என‌ கண்கள் மின்ன நெகிழ்ச்சியுடன் ‌கூறினாள்.

அவளின் தலையை வருடி விட்டு தூங்கச் சென்றாள் வந்தனா.

சொன்னபடியே வந்தனாவை காதல் என்னும் போர்வையில் ‌தொந்திரவு செய்யாமல் இருந்தான் ரிஷி.

அவளுக்கே சந்தேகம் வந்துவிட்டது , "தன்னிடம் உண்மையாகவே ரிஷி தன் காதலைக் கூறினானா?..... அல்லது ஏதேனும் கனவு கண்டிருப்பேனா?” என்று.

ஏனெனில் அந்த அளவு சிறு பார்வையில் கூட கண்ணியத்தை கடைப்பிடித்தான் ரிஷி.பின்னாளில் அந்த கண்ணியத்தை உடைக்க போகிறவனே அவன்தான் எனப் புரியவில்லை அவனுக்கு.

ஒரு மாதம் கடந்த நிலையில் ஆராதனாவின் அலைபேசி அலறியது அவளது அக்கா அழைத்திருந்தார், “ஹலோ!...சொல்லுக்கா,

எப்படியிருக்க? நல்லாயிருக்கியா, குட்டி பையன் என்ன பண்றான்?....தூங்க விடுறான?..” என மடமடவென பேசிக் கொண்டே இருந்தாள்.

அவள் தமக்கையோ ஒரு பெருமூச்சுடன், ”இங்க பாரு ஆராதனா இப்போதைக்கு உன் கிட்ட பேச நேரமில்லை ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லத்தான் கூப்பிட்டேன் .நாள கழிச்சு உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க.அம்மா அப்பாவோட தீடீர் ஏற்பாடு.நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் மாமாவும் சொல்லி பார்த்தார் இப்ப வேணாம் நீ படிச்சு முடிச்சப்பறம் பாத்துக்கலாம் ன்னு.ஆனா ரெண்டு பேரும் பிடிவாதமா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நிக்குறாங்க.ஏன்னா உனக்கு பின்னாடி நேரம் சரியில்லை இப்பவே பண்ணனும் இல்லன்னா ஆறு வருஷத்துக்கு மேலதான் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிருக்காங்களாம்.அதனாலதான் இந்த ஏற்பாடு.இன்னும் கொஞ்ச நேரத்துல அம்மா ஃபோன் பண்ணுவாங்க .நீ என்ன பேசனுமோ பேசிடு டி” என‌ வைத்து விட்டாள் .

"என்ன தீடீரென்னு... இப்படி  யோசிக்கக் கூட நேரம் கொடுக்காம...." என‌ நினைத்துக் கொண்டிருக்கும்போதே அடுத்து அவளது அலைபேசி அலறியது.

எடுத்துப் பார்த்தாள் அவளது தந்தையின் எண் ஒளிரியது.

இரண்டு மூன்று முறை அடித்து ஓய்ந்தது அவளது அலைபேசி.

அதனை எடுக்காமல்... தந்தையிடம் என்ன சொல்வது... ஏது சொல்வது எனக் குழப்பம் அவளுள். 

இன்னும் அவளின் காதலை ஏற்கவில்லை தேவ்.அப்படியிருக்கும் போது எப்படி "தேவ்வை விரும்புகிறேன்..." எனக் கூறுவது.

அவளால்‌ ஏதும் செய்ய இயலாத‌ கையறு நிலை.பின்‌  சற்று தன்னை ‌சமன்படுத்திக் கொண்டு அவளது தந்தைக்கு அழைத்தாள்.

பரஸ்பர‌ நல விசாரிப்புக்குப் பின்னர் நேரடியாக அவளது தந்தை விஷயத்தைக் கூறினார், “ ஆரா ம்மா …அப்பா ஒரு விஷயத்தை பண்ணினா உங்க ரெண்டு பேரோட‌ நல்லதுக்குத்தான்னு நினைச்சேன்னா உடனே கிளம்பி வா. உனக்கு நல்ல  வரன் வந்திருக்கு மா.மாப்பிள வீட்டுல நீ படிச்சு முடிக்கறது, வேலைக்கு போறதெல்லாம் பிரச்சினை இல்லை ன்னு சொல்லிட்டாங்க மா.நல்ல குடும்பம், நல்ல வசதி,ஒரே பையன் பார்க்கவும் ‌நல்ல இருக்கான்.அவனும் டாக்டரா தான் இருக்கான்.இத விட‌ பெத்தவங்களுக்கு  வேற‌…என்ன‌ வேணும்……சொல்லு.முடியாதுன்னு சொல்லிடாதம்மா உன்னைய நம்பி அவங்கள வரச்சொல்லிட்டேன்..” என்றார்.

ஆராதனாவோ, ” அப்பா ஏன்‌ இப்படி கொஞ்சம் கூட டைமே கொடுக்காம தீடிர்ன்னு ஏற்பாடு பண்ணிருக்கீங்க?....நான் ‌இன்னும்‌ படிக்கனும் பா. ப்ளீஸ் வேண்டாமே…. இப்ப கல்யாணம் …” எனக் குரல் தழுதழுக்க கூறினாள் .

அவளுடைய தந்தையோ பிடிவாதமாக, “ என் மேல் மரியாதை வைச்சிருந்தா உடனே கிளம்பி வா,இல்லனா உன் இஷ்டம்"  என‌ வைத்துவிட்டார்.

அந்த “ உன் இஷ்டம் “ என்ற வார்த்தையிலேயே வரவேண்டும் என்ற‌மறைமுக கட்டளையிருந்தது.

அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் தன் சொல்லை மீறமாட்டாள் என.

தொப்பென அமர்ந்தாள் நாற்காலியில்.அடுத்து அவள் கிளம்ப வேண்டும்..அவளுக்கோ மனம் முழுவதும் தேவ்வின் நினைவு.

எவ்வளவோ அவமானம் பட்டாகி விட்டது.

கடைசியாக ஒரு முறை பேசிப் பார்க்கலாமா? எனத் தோன்றியது.

வந்தனாவின் அறிவுரையெல்லாம் காற்றில் பறக்க விட்டு தேவ்வினை நேரில் காணச் சென்றாள்.

முகம் வெளிறிப் போய் நடை தடுமாறியது.

மனமோ, ” மீண்டும் அவமானப்படத் தயாராகி விட்டாயா” எனச் சாடியது .

மாலை நேரம் கருமேகங்கள் சூழல தொடங்கியது வானம் பெயர்ந்து கீழே விழுமளவு இருள் சூழ்ந்து வந்தது ‌.

ரிஷியின் அறைக்கு அனுமதிப் பெற்று சென்றாள்.

“ குட் இவ்னிங் சார்…தேவ் சார….பாக்க அவரோட ரூமுக்கு போனேன் ஆனா…காணோம்.. எங்க இருக்கார் சார்” எனத் தொண்டை கமறக் கேட்டாள்.

அவளது முகத்தை பார்த்த ரிஷி ஏதோ சரியில்லை என நினைத்து “அவன் பின்னாடி இருக்குற லேப் பில்டிங்க்கு போணும்‌ன்னு சொன்னான்.மே பீ அங்க இருக்கலாம் மா,ஏன்‌?...ஏதாவது முக்கியமா கேக்கனுமா “ என்றான்.

“ ம்ம். ஆமா… சார் கேக்கனும்” என்றாள்.

” பார்த்து சீக்கிரம் ஹாஸ்டல் போயிடு மா,லேப் பில்டிங் கொஞ்சம் தூரம் போகனும் யாரையும் துணைக்கு கூட்டிட்டுப் போ மா” என்றான்.

அந்தக் கட்டிடம் விடுதியில் இருந்து சற்று அதிக தூரத்தில் உள்ளது…

“தேங்க்‌யூ சார்” எனக் கூறி விட்டு அவனிருக்கும் கட்டிடத்திற்குள் சென்றாள்…

அங்கிருந்த அறை ஒன்றில் தேவ் ஏதோ மிகத் தீவிரமாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.

சற்று நேரத்தில் வேகமாக கீழே இறங்கி வந்தான்.

அவளோ மறுபக்கத்தில் இருந்து வருவதற்குள் காரை இயக்க அமர்ந்து விட்டான்.

வேகமாக ஓடி வந்த ஆராதனா அவனின் காரின் முன்னால நின்றாள்.

“ சார் சாரி. சார் அர்ஜன்டா உங்க கிட்ட பேசணும்….. முடியாதுன்னு சொல்லிட்டாதீங்க” என‌ கண்கள் கலங்க கேட்டாள்.

அவனோ மிகவும் அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான்.இவள் வந்து நிற்கவும் கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.

"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல “என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,

“ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க “என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள்.

“ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு நினைக்கிறியா? “ம்ம்..” என தன் தாடையை தடவியபடி”இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா”என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்.

“ பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்...”என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன் வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.

அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.

கீழே விழுந்ததில் முழங்கையும், உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது .

அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.

அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை. அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.

அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.

எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து “ஹோ” வென வெடித்து அழுதாள்.

தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.

அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்.

” ஏன் இப்படி ஆனேன்”என மனதினுள் போராடினாள்

உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.

அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.

அவள் நனைந்தபடி வரவும் வந்தனா வாயிலேயே நின்றிருந்தாள்.

“ஏய் ஆரா …எங்கடி போன எவ்வளவு நேரம் உன்னய தேடுறது.உங்க அப்பா ஃபோன் பண்ணினார் டி…” என‌த் தயங்கி நிறுத்தினாள்.

ஆராதனா சலிப்புடன் ,” அதான் நாளைக்கு கிளம்பறேன் டி” என அவளுடைய தந்தை வீட்டிற்கு வரச் சொன்னதே நினைத்து கூறினாள்.

ஆனால் வந்தனாவோ ,

"இல்ல‌ஆரா இன்னிக்கே நீ கிளம்பனும்‌..ஏன்னா ….உன் மாமா கடைக்குப்‌போய்ட்டு வரும்போது லாரி மோதி ஸ்பாட் அவுட் டி…..”என்றாள்.

” என்னடி... என்னடி... சொல்ற மாமாக்கு என்ன ஆச்சு ,காலையில் கூட..
அய்யோ!... கடவுளே!..... நான்‌ஒரு பைத்தியம் நான் ஒரு பைத்தியம்” எனத் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஆராதனாவிற்கு குற்ற உணர்வு மேலோங்கியது.

முக்கியமான நேரத்தில் கூட தான் எப்படி இருந்திருக்கிறோம் என.

"ஆரா..! ஏய் ஆரா.. ! என்னடி… என்ன …ஆச்சு?... ஏன்டி ஒரு மாதிரி இருக்க‌ …கையில என்னடி இரத்தம், சொல்லேன் டி” என்றாள்.

“ இல்லடி நான்‌ கிளம்புறேன் , அப்புறமா... சொல்றேன் டி” என கொட்டும் மழையில் கிளம்பினாள் தன் ஊருக்கு.

இனி திரும்ப வரவே மாட்டாள் என இருவருக்கும் தெரியவில்லை பாவம்.

ஊருக்குச் சென்றவள் தன் மாமாவின் இறுதி காரியத்தை முடித்து விட்டு அமர்ந்தாள்.

” அம்மாடி வந்து ரொம்ப நாளாச்சு காலேஜ் போலயா? …” எனக் கேட்டார் தந்தை.

அவளோ அவரை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் பார்வையில் தலை குனிந்தார் அவளது தந்தை.

பின் ஆராவே,” நான் இனிமேல் அங்க போகல டெல்லியில இருக்குற காலேஜ் ல ரிஜாய்ன் பண்ணப்போறேன்.டாக்டர் விக்டர் கிட்ட பேசிட்டேன். அவரும் இன்னும் மூணு மாசம் கழிச்சு திரும்ப செகண்ட் இயர் ஜாய்ன் பண்ணிக்கோ ன்னு சொல்லிட்டார்.இனி நீங்க எனக்காக பண்ற ஒரே விஷயம் நான் டெல்லிக்கு போய் சேந்தத யாருகிட்ட யும் சொல்லாதீங்க. இப்ப‌ லீவு விட்டுருப்பாங்க காலேஜ் ல, நம்ம போய் பார்மாலிட்டீஸ் முடிச்சிட்டு ஹாஸ்டல் வெகேட் பண்ணிட்டு வந்துடுலாம். டீன் ‌கிட்டயும் நான் டெல்லிக்கு போறத யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம்‌ன்னு சொல்லிடுங்க பா” என்றாள்.

ஏனோ அவளுக்கு அத்தனை துக்கமாக இருந்தது.

யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.

வந்தனாவின் முகத்தில் விழிப்பதற்கும் சங்டமாக இருந்தது எனவே அவளிடம் கூட தகவல்களை சொல்ல வேண்டாம்‌ முடிவெடுத்து கிளம்பி விட்டாள்.

 டெல்லியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு ஆண்டு முடித்து மேற் கொண்டு இதயநோய் சம்பந்தமாக சிறப்பு படிப்பினை தேர்ந்தெடுத்து படித்துக் கொண்டிருந்த நேரத்தில்,தங்ககளுடையதெய்வம் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பும் போது ஆராதனாவின் பெற்றார், தமக்கை மற்றும் குழந்தை சூர்யா சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மூவரும் இறந்தனர். குழந்தை சூர்யா மட்டும் கொஞ்சம் காயங்களுடன் தப்பினான்.

இறக்கும் முன் ஆராவின் தந்தை அவளது அலைபேசி எண்ணை மருத்துவருக்கு கொடுத்து தகவல் அளிக்கக் கூறிவிட்டு உயிரிழந்தார்.

அதனை கேள்வியுற்று துடிதுடித்து போய் வந்து சேர்ந்த ஆராதனா மூவரின் உடலைக் கண்டு கதறினாள்.

டாக்டர் விக்டரும், டாக்டர் நேத்ரனும் தான் அவளின் கூட இருந்து அவளுக்கு தேவையானதை செய்து விட்டு குழந்தை மற்றும் ஆராதனாவுடன் டெல்லி சென்றனர் ‌.

This post was modified 2 weeks ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
Topic starter  

 


அத்தியாயம் 12:


வந்தனாவோ ஆராதனாவிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனாள்.

 ஆராவின் தாயின் அலைபேசி எண்ணும் தெரியவில்லை, தந்தையின் அலைபேசியும் வேலை செய்யவில்லை.

ஆராவின் பெற்றோர் மற்றும் தமக்கை உயிருடன் இருந்த போது ஒரிரு முறை அவளின் அன்னையிடம் நேரில் சென்று “ஆரா ஏன் இப்படி செஞ்சா?...,எங்க இருக்கான்னு சொல்லுங்க..? “எனக் கேட்டாள்.

ஆராவின் பெற்றோரோ அவளது முடிவினைக் கூறி “அவளை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்…” என தெரிவித்திருக்கிறாள் என்றும், “ஏன்?... தீடீரென இப்படி முடிவெடுத்தாள் என தெரியவில்லை...”எனக் கூறி மிகவும் வருந்தினார்கள்.


வந்தனாவோ மிகவும் உடைந்து போய் விட்டாள். அவளது முடிவிற்கு சரியான காரணம் தெரியாவிட்டாலும், தேவ்வினால் ஏதாவது காயப்பட்டிருப்பாளோ என யூகித்தாள் .

வந்தனாவோ மேற்படிப்பை முடித்துவிட்டு அங்கேயே பயிற்சி மருத்துவராக பணியாற்றினாள்.

இவ்வாறு ஒரு வருடம் கடந்தது.ரிஷியோ இப்போது அவளை விட்டு பிடிக்க எண்ணவில்லை.
அதிரடியாக வந்தனாவின் தாய் மூலம் அழகான காய் நகர்த்தி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தான்.

அரைமனதாகத்தான் திருமணத்திற்கு சம்மதித்தாள்.அவளால் ஆராவின் செயலை ஏற்க முடியவில்லை . முதலில் முடியாது என்று தான் மறுத்தாள், ரிஷிக்கும் தனக்கும் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகம்,இதனால் ரிஷிக்கும் அவனது பெற்றோருக்கும்  மனக்கசப்பு வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள்.

ஒருநாள் ரிஷியோ, ”இங்க பாரு வந்தனா.. எப்படியும் நீ யாரையாவது கல்யாணம் பண்ணிக்கத் தான் போற…..அது ஏன் நானா இருக்கக்கூடாது.அப்பா அம்மா கிட்ட எப்படி பேசனுமோ அப்படி பேசி சம்மதம் வாங்கிடுவேன்.உன்னோட சம்மதம் மட்டும் எனக்கு போதும் டி…என்னய ரொம்பவே காய வைக்கிற வந்தனா… இதுக்கு மேல கெஞ்ச முடியாது டி…என்ன‌ உன் காலுல விழனுமா?..”எனக்கூறி அவளின் பாதங்களை பிடிக்கவே குனிந்து விட்டவனை கைப்பிடித்து தடுத்து, ”ஏன் இப்படி பண்றீங்க? என்ன விட அழகான... வசதியான‌.. பொண்ணுங்க இருக்காங்க” என்றாள் .

அவன் அவளை முறைத்து விட்டு கோபத்துடன் சென்றுவிட்டான்.

ஒரு வாரத்திற்கு அவன் கண்ணிலேயே படவில்லை.

அப்போது தான் வந்தனா மிகவும் தவித்துப் போனாள்.

அவளுக்குமே அவனை பிடித்தது தான்.ஆனால் அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல அவள் விரும்பவில்லை.

ஏமாற்றம் அடைந்தால் அதனை தாங்கக்
கூடிய மனபலம் அவளிடம் இல்லை என்பதே உண்மை.

ஆனால் ரிஷியோ வெகு சீக்கிரத்தில் தன் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவளது தாயாரை வைத்து வந்தனாவை தன் சரிபாதியாக ஏற்றுக்கொண்டான்.

ஆனால் திருமணத்திற்கு பின் அவனது அன்பை மட்டுமல்ல அவனது பெற்றோரின் அன்பையும் பெற்றாள்.

நன்றாக கலகலப்பாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின்னும் அதே இயல்புடன் இருக்கின்றார்களா? என்றால் ,”ஆம்..”
என்பது சந்தேகமே.

ஆனால் வந்தனாவை பொறுத்தவரை அவளது கூட்டிலிருந்து வெளிவரத் செய்து அவளை கலகலப்பாக மாற்றியது ரிஷியும் அவனது பெற்றோரும்தான்.

அந்தவகையில் வந்தனா மிகவும் அதிர்ஷ்டசாலியே!... இப்படி ஒரு குடும்பம் அமைவதற்கு....இப்படி ஒரு காதல் நாயகன் கிடைப்பதற்கு.....

அதன் பின்னர் வந்தனா, சில வருடங்களுக்கு ஆராதனாவினுடய தொடர்பிலேயே இல்லை .அவளது அலைபேசியும் பழுதாகி விட்டால் ஆராவின்‌ பெற்றோருடைய எண்கள் கூட‌ அழிந்து போனது.

எனவே அவர்கள் சிறிது காலம் டெல்லியில் இருந்தது , பின்னர் இங்கு வந்து அவர்கள் இறந்ததோ வந்நனாவிற்கு தெரியவில்லை. 

அதே சமயம் அளவிற்கு அதிகமாக கோபமும் வந்தனாவிற்கு ஆராதனா மேல் இருந்தது.

எனவே தன் கல்யாணத்திற்கு கூட‌ ஆராதனாவை தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கவில்லை.

திருமணத்திற்கு பின் அவளை ராணியாக உணரவைத்தான் ரிஷி.

அவளை தன் கூட்டிலிருந்து வெளியே வரவைத்தான்‌ . அவளது இயல்பினை அழகாக மாற்றியமைத்தான்.

ரிஷியின் தாய் தந்தையோடு இருக்கும் தருணங்களை நேசிக்க ஆரம்பித்தாள் வந்தனா.

அழகிய திருமண பந்தத்தில் அடுத்த அடியினை எடுத்து வைத்தார்கள் இருவரும்…

ஆம்!....அழகியலாக மலர்ந்த காதலுக்கு சாட்சியாக அழகிய பெண் குழந்தையை ஈன்றறெடுத்தாள் வந்தனா.

நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் ஆராதனா மற்றும் சூர்யாவின் வருகை....

ஆராதனாவும்  தேவ்வும் தத்தம் நினைவலைகளிலிருந்து வெளிவந்தனர்.


தேவ் அடுத்த சில நாட்களில் சிகிச்சையை தொடங்குவதற்குண்டான ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.

இடையில் அவரது தாய்

” என்னப்பா… லயவர்ஷினிக்கு என்ன பதில் சொல்றது?....” என்று அனத்தினார்.

“ எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க மா” என சலிப்புடன் கூறினான்.

அவருக்கோ எப்படியாவது இந்த திருமணத்தை நடத்தி விட வேண்டும் என ஆதங்கம்‌.


ஆராதனா சூர்யாவுடன் தேவ்வினுடைய‌ மருத்துவமனைக்குச் சென்றாள்.

அவனின் பிரத்தியேக அறையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.

உள்ளே வந்த தேவ் ,” ஹாய் சூர்யா ஹவ் ஆர் யூ?...” என்றான்.

“ ஐ‌யம்‌ ஃபைன் டாக்டர் “ என்றான்.

” ம்ம்…குட்” என அவனது தலை முடியை லேசாக கலைத்து விட்டு சிரித்தான்.

“ அகெய்ன் சில டெஸ்ட் எடுத்து பாத்துட்டு லாம்” எனக்கூறி அவளையும் சூர்யாவையும் கீழ் தளத்திலுள்ள ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே பார்பதற்கு அழைத்துச் சென்றான்.

” நாங்களே போய்கிறோம் சார்…” என ஆராதனா கூறியதற்கு ‌, “ ஏன்?... நா வர்றதுல உனக்கு என்ன பிரச்சினை? “ எனக்கூறி வாயை அடைத்தான்.

அதன் பின்னர் ஆராதனா எதுவும் பேசவில்லை.

அந்த நேரம் ஆராவின் அலைபேசி சிணுங்கியது.

எடுத்துப் பார்த்ததில் டாக்டர் நேத்ரனின் எண் ஒளிர்ந்தது .

எடுத்து உடனே,” வெரி சாரி நேத்ரன் உங்ககிட்ட பேச முடியல , கொஞ்சம் பிசியா இருந்தேன்” என்றாள்.


“ இட்ஸ் ஓகே ஆரா…டேக் கேர்…சூர்யா எப்படி இருக்கான்?நார்மலா இருக்கானா? ஹார்ட் பம்பிங் செக் பண்ணுனியா?சர்ஜரி கன்பர்ம் பண்ணியாச்சா?....” என அடுக்கடுக்காக கேட்டான்.


ஆராதனாவோ,” இல்ல இனி தான் எல்லாம் டிசைட் பண்ணனும், இப்ப டெஸ்டெல்லாம் திரும்ப எடுக்கறாங்க.சோ இரண்டு மூணு நாள்ல கன்பார்ம் பண்ணிருவாங்க பா” என பதிலளித்தாள்.


“ ஓகே ஆரா , பாத்துக்கோ.யூ டூ டேக் கேர் ‌ஆஃப் யுவர் ஹெல்த் டூ.நான் இன்னும் டென் டேஸ்ல அங்க வருவேன்.‌‌ கொஞ்சம் வேலயிருக்கு அது முடிச்சிட்டு டெல்லி ரிட்டர்ன் ஆயிடுவேன்” எனக் கூறினான்.


அவளும் “ சரி வரும்போது இன்பார்ம் பண்ணுங்க.இங்கயே ஸ்டே பண்ணிக்கலாம், பை..” எனக்கூறி அழைப்பைத் துண்டித்து விட்டு திரும்பினாள் தேவ்வோ அவளையேப் பார்த்து கொண்டு இருந்தான்.

அவளோ அதனை கண்டுகொள்ளாமல்,  "ரிசல்ட்ஸ் இன்னிக்கே பாத்துடலாமா?‌….வேற ஏதும் டெஸ்ட் இருக்கா?... ஹார்ட்  பம்பிங்யெல்லாம் செக் பண்ணனும்ல..” எனக் கூறினாள் ‌.

அவனது மண்டையில் "யாரது நேத்ரன்..?” என்றக் கேள்வியே ஓடிக் கொண்டிருந்தது.

அதனைப் பற்றி காட்டிக்கொள்ளாமல் , "எஸ் ..இன்னிக்கே எல்லா ரிசல்ட்ஸூம் பாத்துடலாம். ஹார்ட் பம்பிங் நாளைக்கு சாயங்காலம் செக் பண்ணி பாக்கலாம்.வேற ஏதாவது தொந்தரவு அவனுக்கு இருக்கா? மூச்சு திணறல், பேசும்போது மூச்சு வாங்குறது,திடீர்ன்னு அதிகமா வேர்க்கறதுன்னு ஏதாவது இஷ்யுஸ் இருக்கா இல்ல இருந்திருக்கா…?” எனக் கேட்டான்.

ஆராதனாவோ, “இப்ப கொஞ்ச நாளா எந்த ப்ராப்ளமும் இல்ல ஆனா கொஞ்ச நாள் முன்னாடி ஓடி விளையாடும் போது கொஞ்சம் மூச்சு திணறல் இருந்தது, மயங்கியும் விழுந்து ட்டான் .”எனத் தெரிவித்தாள்.

“ம்ம்…சரி டெஸ்ட் ரிப்போர்ட் பாத்துட்டு சொல்றேன்‌‌ " எனக் கூறி விட்டு அவனறைக்குச் சென்று விட்டான்.

அவளும்‌ சூர்யாவும் பரிசோதனை அறையிலுருந்து மெதுவாக நடந்து அவனது அறைக்குச் சென்றார்கள்.

அனைத்து ரிப்போர்ட்களையும் பார்த்து விட்டு  "ஹார்ட்க்கு ஃப்ளட் போற இடத்தில கொஞ்சம் ப்ளாக் இருக்கு ,அப்பறம் வால்வ் மஸில்ஸ் கொஞ்சம் திக்கான இருக்கு….சோ இரண்டையும் சரி பண்ணனும். பண்ணிடலாம்.... கவலப்படாதே ஃபுயூச்சர்ல அவன் நார்மல் லைப் லீட் பண்ணலாம். ஒன் இயர் கம்பீளிட் ரெஸ்ட் எடுக்கனும்… டேப்லட்ஸ் கொஞ்ச வருஷத்துக்கு கண்டின்யூ பண்ணனும். சர்ஜரி டேட் நீ டிசைட் பண்ணி சொல்லு… பத்து நாள்ல கூட பண்ணிடலாம்…வேற ஏதும் கேட்கனுமா?.....” எனத் தெளிவாக சூர்யாவின் உடல்நிலை குறித்து விளக்கினான்.

ஆராதனா ஒரு பெருமூச்சுடன்,  " ரொம்ப தாங்க்ஸ் சார்...அப்பறம் திரும்பவும் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அப்ராக்ஸிமேட்டா சர்ஜரி காஸ்ட் எவ்வளவு ஆகும்.ஏன்னா நான் அதுக்கு ஏத்த மாதிரி அரேஞ் பண்ணனும், சொல்லுங்க ப்ளீஸ்….” என்றாள்.

அவனோ இந்த முறை சரியான தொகையைக் கூறி ,” நீ சர்ஜரிக்கு அப்பறம் கூட பே பண்ணிக்கலாம் அவசரமில்ல….” என்றான்.

"எல்லாருக்குமே இந்த ஆப்ஷன் இருக்கா? ….” எனக் கூறினாள் ‌.

அவள் கூற வருவது புரிந்தது அவளுக்கு மட்டும் இவ்வாறு சலுகை அளிக்கிறானா? என்ற எண்ணத்தில் கேட்டாள்.

அவளது முகத்திற்கு அருகில் வந்தவன் அவளது கண்களைப் பார்த்தவாறே , "முடியாதவங்களுக்கு சாரிட்டி மூலமா கூட ஏற்பாடு ‌பண்ணுவோம்..” என அழுத்தமாக கூறினான்.

அவளோ அவனை விட அழுத்தமாக “ என்னால கட்ட முடியும் சார்…. ஆப்ரேஷன்க்கு முன்னாடியே பே பண்ணிடுவேன் சார்…. நாளைக்கு எப்ப வரணும் சார்…சர்ஜரி டேட் நாளைக்கு சொல்லிடுறேன்” எனக் கூறினாள்.

” ஈவ்னிங் நாலு மணிக்கு வந்துடு” எனக் கூறி விட்டு ,“நேத்ரன் யாரு?...” என்றான்.

”ஒட்டு கேட்டீங்களா?” என்றாள்.

“அது.. என் வேலயில்ல காதுல விழுந்துச்சு…” என நக்கலாக கூறி விட்டு அவளைப் பார்த்தான்.


“ அதே உங்களுக்கு தேவையில்லாதது  தான் சார், நான் கிளம்புறேன் “ எனப் பேச்சை கத்திரித்து சூர்யாவுடன் கிளம்பிச் சென்றாள்.


அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.

அவளிடம நிறையவே மாற்றங்கள், அனைத்தும் வாழ்வில் அடிபட்டதால் வந்தது எனப் புரிந்தது. கைகளை கட்டி அவள் சென்ற பாதையை வெறித்து கொண்டிருந்தான்.

This post was modified 5 days ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page