All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (07)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 7

 

 

 

கல்லூரியில் B . SC in Computer Science இறுதி வருடத்திற்கான படிப்புகள் நடந்து கொண்டு இருந்தது...

 

இமாயாவின் கவனம் முழுவதும் படிப்பில் இருந்தது..பார்த்தீபனின் நினைப்பு கூட அவளுக்கு இல்லை..ப்ரான்க் செய்வது என்ற பெயரில் அவளை ஏமாற்றிய தோழிகளிடம் பேசுவதை தவிர்த்திருந்தாள்...

 

அதே சமயம் கல்லூரியில் நடந்தவற்றை வீட்டில் இசைகவியிடம் கூறிவிடுபவள் தன் தோழிகள் செய்ததையோ தெரியாத ஒருவனிடம் வாக்குவாதம் நடந்ததை தமக்கையிடம் ஒப்புவிக்கவில்லை அவள்...

 

வகுப்பில் அந் நேரத்திற்கான பாடம் முடிந்ததுக்கு மணியும் அடித்ததொடு மேசையில் இருந்த புத்தகங்களை பையில் எடுத்து வைத்துவிட்டு அடுத்த பாடத்திற்கான புத்தகத்தினை எடுத்து வைத்தாள்..

 

திவ்யா தயங்கி நின்று “ இமாயா நாங்க எல்லாரும் கென்டின் போக போறோம் நீயும் வர்றீயா? ” அவள் கேட்டாள்..

 

அவளை கண்டுகொள்ளாத அலைபேசியை எடுத்து பார்த்துக் கொண்டு இருந்தாள்...

 

“ இமாயா என்கூட பேசேன்டி? ” அதற்கும் அவளிடம் இருந்து பதில் இல்லை..திவ்யா கவலையுடன் அவ்விடத்தை விட்டு அகன்றாள்..

 

தலையை ஆட்டி விட்டு அலைபேசி பார்த்து முடித்தாள்..அதன் பிறகு அடுத்த பாடத்திற்கான மணி அடித்ததும் வெளியே சென்றவர்கள் கொஞ்ச கொஞ்சமாக வகுப்பிற்கு வந்து சேர்ந்தார்கள்...

 

புரோஃபஸர் வரும் வரைக்கும் அனைவரும் பேசிக் கொண்டு இருந்தார்கள்..அந்த கணம் திடீர் என்று வகுப்பிற்கு ஒருவன் நுழைத்தான்..

 

மிதமான கருமை நிறத்தில் ஆறடி உயரமும் பழுப்பு நிற ஷர்ட், நீல நிற டெனிம் ஃபேன்ட் அணிந்து புன்னகையற்ற முகத்துடன் காற்றில் அசைந்த கேசத்தை கரத்தால் பின்னால் தள்ளிவிட்டு ஒரு பேராசிரியருக்கு உரிய தோற்றத்தில் கையில் இருந்த புத்தகத்தை அவன் மேசை முன்  வைத்துவிட்டு ஃபேன்ட் பாக்கெட்டில் கரத்தினை நுழைத்து மேசையில் சாய்ந்தவாறு மாணவர்கள் அனைவரையும் ஒரு பார்வை கூரியதாக படிந்து உடனே அவன் விழிகள் இயல்புக்கு மாறியது..

 

புதிதாக வகுப்பில் நுழைந்த பேராசியரை விழிகள் சுருங்க தலை சரித்து பார்த்தாள் இமாயா...

 

“ குட் மார்னிங் ஸ்டூடன்ட்ஸ்! திஸ் இயர் ட்ராவல் உங்களின் கல்வி வாழ்க்கையில் ரொம்ப முக்கியமா கட்டமாக இருக்கும்..நான் உங்க கிளாஸ்க்கு புதுசா பாடம் எடுக்க வந்து இருக்குற புரொஃபஸர் பார்த்தீபன் திஸ் இயர் நீங்க எல்லாரும் படிக்க போகும் Artificial Intelligence, Machine Learning, மற்றும் Final Year Project நானே உங்களுக்கு வழிகாட்டியா இருக்க போறேன்..

 

என்னோட சேர்ந்து சக்ஸஸ் ஆஹ் நீங்க எல்லாரும் ட்ராவல் பண்ண போறீங்க சோ பாடத்திலிருந்து ஸ்டார்ட் பண்ணலாம் டவுட்ஸ் இருந்தா அப்ப அப்போ கேட்டுருங்க ஸ்டூடன்ட்ஸ் ” என்றானே பார்க்கலாம்..இமாயாவின் விழிகள் சற்று அதிர்ந்து இயல்புக்கு மாறியது..காரணம் பேராசிரியர் பார்த்தீபனும் அவளுடன் அலைபேசியில் கதைத்தவனும் ஒன்றாயிற்றே..

 

‘ ஃபோன்ல பேசுன வாய்ஸ் அண்ட் புரொஃபஸர் வாய்ஸ் ஒரே போல இருக்கே.. இருந்தாலும் பார்த்துக்கலாம்..’ என்று மனதில் நினைத்து அப்படியே விட்டுவிட்டால்..எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற தைரியமான உள்ளம் அவளிடத்தில் இருந்தது..

 

பாடத்தினை விளக்க துவங்கினான் பார்த்தீபன்..

 

விஷ்ணு தேவனின் கரத்தில் சிறிய காகித துண்டில் இசைகவியின் அலைபேசி எண் எழுதப்பட்டு உள்ளங்கையில் இருந்தது..

 

அவளின் அலைபேசி எண்ணை இமைக்காமல் பார்த்திருந்தவன் அவளுக்கு இக் கணமே அழைத்து பேசுவதற்கு அவனுக்கு அவசரம் எதுவும் இல்லை ஆனால் இன்றாவது மாலை நேரத்தில் ரேடியோவில் ஒலிப்பரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாளா ? என்கிற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது..

 

இருந்தும் பொறுமையுடன் காத்திருந்துவிட்டு அவளிடம் பேசி விடலாம் என்று நினைத்தான்..

 

ஜனார்த்தனி அவன் அருகில் வந்து அமர்ந்தாள்..“ என்ன ப்பா சின்ன பேப்பர்ல எழுதி இருக்குற ஃபோன் நம்பரையே பார்த்துட்டு இருக்க..பிஸ்னஸ்ல யாராவது இல்ல உன் மனசுக்கு நெருக்கமானவங்களா சொல்லுடா ? ” அவன் தோளில் இடித்து சகோதரனின் வாய்வழியாக கேட்க ஆர்வமானாள்..

 

“ பிஸ்னஸ்னு இல்ல ஜானு அம்மா..சின்ன பேப்பர் எனக்கு ரொம்பவும் முக்கியமானது..கால் பண்ணி பேசுறதுக்கான நேரம் எனக்கு அமையவே இல்ல ” அவளைப் பார்த்து சிரித்தான்..

 

“ அப்ப எனக்கு ஒரு நாத்தனாரை கூட்டிட்டு வரப் போறேன்னு சொல்லு அப்புறம் நம்ம குட்டீஸ்க்கு ஒரு அத்தை வரப் போறாங்க சரிதானே? ” என்று அவள் கேட்டதும்..புன் முறுவலுடன் தமக்கையின் தோளில் கரத்தினை போட்டு அவள் கன்னத்தில் முத்தம் ஒன்றினை பதித்தான்..

 

“ என்னை புரிஞ்சி வைச்சி இருக்குற என் ஜானு அம்மாக்கு பேரன்புகள்! ” என்றான் அன்பு கலந்த குரலில் அவன் சொன்னான்..

 

“ நீ  எனக்கு எப்பவும் அதே மூனு வயசு குழந்தை தான் ப்பா..உன்னை பத்தி தெரிஞ்சிக்காம இருந்தா இத்தனை வருஷகாலமா உன்கூட இருந்துக்க முடியாதே! சந்தோஷம் மிகுதியாக இருந்தா அது கடவுளுக்கே பொறுக்காது போல அப்பா நம்ம கூடவே இருந்து இருக்கலாம்..” வில்லியம் தேசாப்பின் நினைவு அவளுக்கு வந்துவிடவும் தமக்கை அணைத்துக் கொண்டான் அவன்...

 

“ யாரும் இந்த பூமில நிலைச்சு இருக்க மாட்டாங்க ஜானு அம்மா இதுல அப்பா மட்டும் விதிவிலக்கா என்ன ? தாய் அன்பு உணராத நான் அந்த தாய்மையை உணர வச்சது நீயும் அப்பாவும் தானே ” என்றான்..

 

விழிநீர் கசிந்தது அவள் விழிகளில் “ அப்பாவோட தாய்மை நம்மலை பெத்த தாய்க்கு கூட ஈடாகாது தேவா, பிள்ளை மனசு தாயை தேட கூடாது , பாசத்துக்காக அவங்க ஏங்க கூடாதுன்னு பார்த்து பார்த்து செஞ்ச ஒவ்வொரு செயலும் அவரோட பாசமும் அன்பும் அக்கறையும் என்னைக்குமே நிகரில்லாதது தான் நம்ம அப்பா கிரேட் பர்சன் இல்ல ” தமக்கையின் கண்ணீரை துடைத்துவிட்ட அவன் கரங்கள்..

 

“ நீ அதே ஏழு வயசு குழந்தைனே அடிக்கடி நிரூபிக்குற ஜானு அம்மா..” அவளை சீண்டிய சகோதரனின் தோளில் அடித்தாள் தமக்கை..

 

இவர்களை தூரத்தில் இருந்தவாறு மணியம்மையும் தனுஷும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்..

 

‘ தப்பு பண்ணிட்டேன் ஐயா! ’ புடவை முந்தானையில் கண்ணீரை துடைத்தவர் உள்ளே சென்றுவிட்டார்..

 

தனுஷ் அவரை யோசனையுடன் நோக்கினான்..

 

“ தேவா நீ நாளைக்கு வீட்டுக்கு கிளம்புறீயா ? ” அவள் கேட்க..

 

“ நாளைக்கு கிளம்பியே ஆகணும்..விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் இன்னொரு பிரான்ச் ஓபன் பண்ணனும்.. நீயும் வாயேன் ஜானு என் வீட்டுல இருந்து  உனக்கும் பிளைட்ல போக வசதியாகவும் இருக்கும் ” என்றான்..

 

“ நீ சொல்ல முன்னமே நானும் இதை தான் சொல்ல நினைச்சேன் நீயே சொல்லிட்ட கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் வர்றீயா தேவா ” அவள் அழைக்க..

 

“ குட்டீஸ் எங்கே ? ” நீள்விருக்கையில் இருந்து எழுந்து அவளிடம் கேட்டபோது “ யாதவன் தூங்குறான் மத்த ரெண்டு பேரும் வாணி கூட இருப்பாங்க டா..யாதவனையும் அவள் கிட்ட  பார்த்துக்கு சொல்லிட்டு நாம கிளம்பலாம்..”

 

“ சரி டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வந்துர்றேன் ” என்று சொல்லிவிட்டு அவன் நகர்ந்தான்..

 

வீட்டின் கொள்ளை புறத்தில் பிள்ளைகளை விளையாட விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள் சத்தியவாணி..

 

“ வாணி ” அவளை அழைத்தபடி வந்தாள் ஜனார்த்தனி..

 

“ வாங்க ஜானு அக்கா ” சிமெண்ட் கல் மீது அமர்ந்திருந்தவள் எழுந்து நின்றாள்..

 

“ எழுந்து நிக்க அவசியம் இல்ல வாணி உக்கார்ந்துக்கோ.. நானும் தேவாவும் கடை தெரு பக்கம் போயிட்டு சில திங்ஸ் வாங்க போகணும் அது வரைக்கும் பசங்கள பார்த்துக்க முடியுமா டா..” அவள் கேட்டபோது முடியாது என்று சொல்ல விரும்பாதவள் “ சரி அக்கா நீங்க போயிட்டு வரும் வரைக்கும் பசங்கள பார்த்துக்குறேன்..” என்றாள்..

 

சரியென அவள் சென்றுவிட..விஷ்ணு தேவனும் உடை மாற்றி வந்தவுடன் இருவரும் காரில் புறப்பட்டு விட்டனர்..

 

பார்த்தீபனை கண்டதில் இருந்து மாணவர்களிடையே மெல்லிய கிசு கிசுப்பாக பரவியது..

 

திவ்யாவிற்கு பார்த்தீபன் யார் என்று புரிந்தது.. அவர்களின் கல்லூரியின் ஐந்து வருடத்திற்கு முன்னர் இருந்த சீனியர் , அவனின் வயது இருபத்திஎட்டு ஆகும்..

 

இமாயாவை வைத்து விளையாட எண்ணி மாணவர்களில் ஒருவனிடம் கேட்ட போது அவர்கள் கொடுத்த அலைபேசியின் எண் பார்த்தீபனுடையது..

 

திவ்யா செய்த தேவையில்லாத வேலையால் பார்த்தீபனிடம் சிக்கிக் கொண்டது இமாயாவாயிற்றே..

 

அடிக்கடி இமாயாவை பார்த்துக் கொண்டு இருந்தாளே தவிர அவளிடம் உண்மையினை கூறிவிட நினைக்கவில்லை அவள்..

 

பாடத்தை கற்பித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் விழிகள் இமாயா மீதே அவனின் அழுத்தமான பார்வை அவளை அறிந்து கொண்டதை உணர்த்தியது..

 

எழுதிக் கொண்டிருந்த அவளின் கரம் நின்றதோடு இமை உயர்த்தி பார்த்தவளின் விழிகளில் வீழ்ந்தது பார்த்தீபனின் பார்வையே!

 

அவனை ஆராய்ச்சியை நோக்கியவள் ஒன்றை உறுதி செய்து மனதிற்குள் சிரித்துக் கொண்டாள் அவள்..

 

விஷ்ணு தேவன் இசைகவியின் குரலை கேட்கவே ஸ்டீரியோ ஆடியோ பிளேயரை உயிர்ப்பித்து விழிகள் மூடி சீட்டில் தலை சாய்த்து அமர்ந்தபோது அவன் செவியில் கண்ணீர் என்று கேட்ட குரல் காயத்ரி உடையது..

 

“ ப்ச்..இசையோட வாய்ஸ் இல்லையா? ” அலைபேசியில் அவளின் எண்ணை ஒவ்வொன்றாக அழுத்தி அழைப்பு விடுத்திருந்தான்...

 

ரேடியோ ஸ்டேஷன் செல்ல மனமில்லாமல் அலுவலகத்திலே இருந்து விட்டாள் இசைகவி..

 

நகைகளின் பொருட்களின் விற்பனை , அதனால் ஏற்பட்ட வருமானம் அனைத்தும் அடங்கிய கோப்புகளை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்..

 

அக் கணம் அவளின் அலைபேசி அலறியது..யார் ? புது அலைபேசி எண்ணா? என்றெல்லாம் அவள் பார்க்கவில்லை அழைப்பு ஏற்று செவியில் வைத்துவிட்டாள்..

 

“ ஹலோ! ” அவளின் குரல் கேட்டதுமே அவன் மேனி சிலிர்த்துப் போனது..

 

“ ஈட்ஸ் இஸ்பிக்கிங் ஆர்ஜே இசை? ”

 

“ யா..என்ன விஷயம் சொல்லுங்க சார் ? ” அவளின் சார் அழைப்பில் அவனின் முகம் உவப்பான பாவனையை காட்டியது..

 

“ கால் மீ விஷ்ணு! நோ சார்..” அவனின் குரலின் வித்தியாசத்தை கவனியாதவள் “ சொல்லுங்க? ” சாரும் அல்லாமல் விஷ்ணு அல்லாமல் அவள் மொட்டையாக கேட்டாள்..

 

“ விஷ்ணியாஸ் டெக்ஸ்டைல்ஸ் ஓனர் விஷ்ணு தேவன் பேசுறேன் இசை.. உங்களுக்கு என்னை தெரியாம இருக்கலாம், பார்க்காமலும் சந்திக்காமலும் இருக்கலாம் தினமும் உங்களோட குரலை கேட்கும் உங்க  ரசிகன் நான் கடந்த ரெண்டு நாட்களாக உங்க குரலை மிஸ் பண்றேன்..நீங்க ப்ரோக்ராம் நடத்தாதுக்கான காரணம் தெரிஞ்சிக்கலாமா? ”

 

“ பர்சனல் இஷூஸ் விஷ்ணு சார்..என் குரலை கேட்டு ஆசைப்பட்டு கேட்டதற்கு நன்றி..என்னால முடிஞ்சால் இனி வர்ற நாட்கள்ல ப்ரோக்ராம்ல ஜாயின் பண்ணிக்கிறேன் விஷ்ணு சார்..” என்றாள் அவள்..

 

அவனுடன் கதைத்த இந்த மூன்று நிமிடங்களில் மனப்பாரம் குறைந்தது போல் எண்ணினாள் இசை.. அதே சமயம் அவளின் உதடுகள் அழகாக கன்னம் வரைக்கும் புன்னகை விரிந்தது..

 

இவனின் குரலில் ஏதோ ஒரு மாயம் ஒன்று இருப்பதை அவளால் உணர்வின் மூலம் உணர முடிந்தது..

 

“ தேங்க் யூ சோ மச்..ஐ லுக் பார்வர்ட் டூ ஹியரிங் யுவர் ஸ்வீட் வொயிஸ்..”

 

விழியோரம் சுருங்க அவன் உதட்டில் புன்னகை துளிர்த்தது..யார் என்றே தெரியாத அந்நிய நபர் , அவள் குரலை கேட்டு அலைபேசியிலே அழைப்பு விடுத்த முதல் ஆண் நபர் அவள் மகிழ்ச்சியில் உச்சியில் இருந்தாள்..

 

“ நன்றி விஷ்ணு சார்..”

 

“ வெல்கம் டேக் கேர் இசை..” அழைப்பை துண்டித்து இருந்தனர்..‘ உன்னை சீக்கிரம் மீட் பண்றேன்

இசை ’ மனதில் எண்ணினான்..

 

இருவரின் சந்திப்பும் வெகு அருகிலே நடைபெறும் என்பது இருவருக்கும் வியப்பை கொடுக்கும்..

 

 

 

தொடரும்...

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

@vsv4  சூப்பர் 👌👌👌👌👌


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11 மிக்க நன்றி விழி சிஸ் 💖💖💖💖🥰🥰🥰🤗


   
ReplyQuote

You cannot copy content of this page