All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 7

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
Topic starter  

அத்தியாயம்: 7

 

India today.

 

அதன் முதல் பக்கத்தில் கொட்டை எழுத்தில் எழுதப் பட்டிருந்தது.

 

JET industryயில் ஊழியர் உயிரிழப்பு. அலட்சியம் காட்டுகிறதா நிறுவனம்? என்ற தலைப்புச் செய்தி இடம் பெற, அந்த இரும்பு ஆலையின் புகைப்படம்‌ போட்டு, அதற்கு அதன் MD யான ப்ரஜித்தின் புகைப்படத்தையும் போட்டு, கீழே இன்ங் தீரும் வரை ஏதேதையோ எழுதி வைத்திருந்தார் அந்த பத்திரிக்கையாளர். 

 

அதை விளைவு இப்போது ப்ரஜித்தை சுழல் நாற்காலியில் அமர வைத்து, சுற்றி சுற்றி கேள்வி கேட்டனர் நிர்வாக இயக்குனர்கள். 

 

அனைத்தையும் காதில் வாங்கியவன் பதிலை மட்டும் கூறாது இருக்க, அவனின் தந்தை இந்தர் அவனை காய்ச்சு காய்ச்சு என கத்திவிட்டு சென்றார். 

 

'போய்ட்டானுங்களா...' என்ற ரீதியில் தலையைச்‌சுற்றிப் பார்த்தவன், அனைவரும் சென்றதை உறுதி படுத்தி விட்டு, இளவேந்தனை அழைத்தான்.

 

"ஷப்பா!!! எதுவுமே கேட்காம கேட்ட மாறி நடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு. " என்றபடி ப்ரஜித் தன் காதில் இருந்த பஞ்சு போன்ற பட்டை வெளியே எடுத்துப் போட்டு, "டீ எடுத்திட்டு வாங்க வேந்தன். சூடா." என்க, இளாவிற்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. 

 

'சஜித்தின் கனவை சீர்குலைப்பதில் எத்தனை ஆர்வம் இவனுக்கு.' என மனம் பொருமிய படி அவன் கேட்டதை எடுத்துவர, 

 

ப்ரஜித் செய்தித்தாளில் இருந்த தன் புகைப்படத்தை உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தான். 

 

"பத்திரிக்கைல போட நல்ல ஃபோட்டவ நம்மக்கிட்ட கேட்டிருந்தாலே எடுத்துக் குடுத்திருப்போம். ஏந்தா இந்தமாறி ஸ்டில்ல போட்டு என்ன கோமாளியாக்குறானுங்களோ!. அடுத்த முறை பேப்பர்ல போடுறதுக்கு, வீட்டுல நல்ல ஸ்டெயிலா கண்ணாடிய கலட்டி கைல வச்ச மாறி ஒரு ஸ்டில் இருக்குமே அத எடுத்துக் குடுத்திடு வேந்தன். " என உத்தரவு போட்டான்.

 

அப்பொழுது யுனியன் லீடர் தன் இரு உதவியாளர்களுடன் உள்ளே வந்தார். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டு.

 

ப்ரஜித், 'உங்களுக்கு இதுவர செஞ்சதே அதிகம். இதுக்கு மேல ஒன்னும் கிடையாது.' என்பது போல் பேச, அவர்கள் ஸ்டெய்க் செய்யப் போவதாகச் சொல்லிச் சென்றார். 

 

அவர்கள் தலை மறைந்ததும் உடனே அந்தச் செய்தியை ஒரு யூட்யூப்பருக்கு சொல்லி புரலிகளை பரப்ப உத்தரவிட்டான்.

 

"ஸார் இதெல்லாம் நம்ம கம்பெனியோட நல்ல பேர பாதிக்கும் ஸார். ஏற்கனவே நம்ம shares, stock market ல அடி மாட்டு விலைக்கி வந்திடுச்சி. இப்படியே போன கம்பேனி... "

 

"திவாலாகிடும்னு சொல்றியா வேந்தா!. " என்றவன் எழுந்து நின்று தன் கோர்ட்டை சரி செய்தபடி, 

 

"I don't care. உனக்கு ஏதும் கவலயா இருக்கா வேந்தன்?. " என நக்கலாக கேட்டவன் முதலாளி என்பதால் நேருக்கு நேராக முறைக்க முடியாது அல்லவா?. 

 

"அப்ப உன்னோட பாஸ்க்கு கூப்பிட்டு சொல்லு‌. கம்பேனி கைமாறப்போறத."

 

"எனக்கு அவர எப்படி கான்டாக் பண்றதுன்னு தெரியாது ஸார்."

 

"இனி தெரியும். நியூஸ் போயிருக்குல. உன்னத்தா கூப்பிடுவான். கம்பேனியோட அவல நிலமைய நல்லா புரியுற மாறி எடுத்துச் சொல்லு." என்று விட்டு கதவு வரைச் சென்றவன். 

 

"நீ சொல்லலன்னாலும் இனி இங்க நடக்குறத நியூஸ் பேப்பர் மூலமா தலைப்புச் செய்தியா‌ தெரிஞ்சுப்பான்." என்றவன் சஜித்தை வெளியே இழுக்கும் வண்ணம் தன் ஆட்டத்தை ஆடத் தொடங்கினான். 

 

அதன் ஆரம்பமாக தினம் ஒரு செய்தி JET industry பற்றி வெளி வரத் தொடங்கியது. இதுவரை அந்நிறுவனத்தைப் பற்றி புரலியாகக் கூட செய்திகள் கசியாது இரும்புக் கோட்டையால் பாதுகாக்கப்பட்ட கம்பெனியின் சுவற்றில் ஓட்டை விழுந்தால் என்னாகும். பலவீனத்தை உபயோகித்து எதிரிகள் பலர் அந்த சுவற்றை இடிக்க புல்டவுசருடன் காத்திருந்தனர். 

 

சில நாட்கள் சென்றிருக்கும்.

 

ப்ரஜித், " நாலாது யூனிட்ல வேல ஏ இன்னும் முடியாம இருக்கு.? நாளைக்கி டெலிவரி எடுக்கனும். இன்னும் ப்ராசஸ் போக்கிட்டு இருக்கு. ஏன்?" எனத் தன் வேக நடையுடன் தொழிற்சாலையை சுற்றிப் பார்த்தபடி வினவ.

 

இளா, "இல்ல சார். ஸ்டெய்க் காரணமா யாரும் வரல." என்றபடி அவனின் பின்னாலேயே ஓடினான். 

 

இளவேந்தன் தந்த பதிலில் சட்டென நின்றவன் திரும்பி அவனை கூர்ந்து பார்க்க, 

 

"மூண்ணாள்ல அந்த யூனிட்டுக்கு வேல பாக்க யாரும் வரல ஸார்... அதா.." என இழுக்க.

 

"ரீசன் சொல்ல நா என்ன ஸ்கூல் வச்சா நடத்திட்டு இருக்கேன். வேல முடியனும் வேந்தன். வெளியூர் ஆட்கள வேலைக்கி வைங்க. அவங்க கேக்குறத விட சம்பளம் அதிகமா குடுங்க. எனக்கு வேலை முடியனும்." என்றான். 

 

அப்போது தாயும் மகளுமாக ஸ்மித்தாவும் துகிராவும் வந்திருப்பதாக தகவல் வந்தது. 

 

பேக்டரி விசிட்டில் இருந்தவன் அதை முழுமையாக முடிக்காது உடனடியாக தன் அலுவலகம் திரும்பினான் இளவேந்தனுடன். 

 

"வெல்கம் ஆன்டி. " என சந்தோஷமாகவே தன் அத்தையை வரவேற்றவன், 

 

"துகி எங்க?" என்றான்.

 

"வந்திட்டு இருப்பா. நா இப்பதா கேள்விப்பட்டேன். மறுபடியும் டைவர்ஸ் கேட்டு அப்பீல் பண்ணிருக்கியாமே. " என்ற ஸ்மித்தாவின் முகத்தில் அத்தனை ஆனந்தம். 

 

"எஸ் ஆன்டி. அப்ப அப்ளே பண்ணும் போது ஒன் இயர் ஆகலன்னு டைவர்ஸ் குடுக்கல. இப்பத்தா வர்ஷம் ஆச்சே, இனியும் அந்த உறவ தொடருறதுல எனக்கு விருப்பம் இல்ல. " என்றவன் ரிபேக்காவிற்கு விவாகரத்து கேட்டு நோட்டிஸ் அனுப்பி உள்ளான்.

 

அவர்களின் சம்பாசனை காதில் விழுந்தாலும், 'நமக்கு என்ன!' என்பது போல் இருந்த இளாவின் மனம் ஸ்மித்தா அடுத்து கூறியதைக் கேட்டு முள்‌ குத்தியது போல் வலியைத் தந்தது.

 

"நல்ல விசயம் தான். அவள சட்டப்படி விரட்டி விட்டாத்தான துகிய கல்யாணம் பண்ணிக்க முடியும்." என்க, இளவேந்தனின் விழிகள் கீபோர்டில் இருந்து மெல்ல உருண்டு கண்ணாடி கதவை வெறித்தது. 

 

அங்கும் ஒரு கையில் உயர் தர ஹேன்ட் பேக், மறு கையில் சில ஃபைல்களுடன், பென்சில் ஹீல் என்று சொல்லப்படும் ஊசியான முனைகளை உடைய உயரமான செருப்புடன் ஒரு இளம் யுவதி வந்து கொண்டிருந்தாள்.

 

காதில் பறவையின் சிறகில் இருந்து எடுத்த இறகை கம்மல் என்ற பெயரில் அணிந்திருந்தாள். தலையில் மஞ்சள் வண்ணத் தொப்பி, ஸ்லீவ்லெஸில் முட்டி வரை மட்டுமே இருக்கும் அவளின் உடை... ம்... ம்... 

 

நீங்கள் இருவாச்சி (hornbill) பறவையை பார்த்ததுண்டா. மஞ்சள், வெள்ளை, கருப்பு என்ற வண்ணத்தில் இருக்கும். அதே பறவைக்கு கால்கள் முளைத்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நடந்து வந்தாள் துகிரா. 

 

ஜீரோ சைஸ் என்று உடலில் இருக்கும் எலும்புகள் தெரியும் அளவிற்கு மெலிந்த தேகம். அந்த எலும்பைச் சுற்றி இருவாச்சி பறவையை மாடலாகக் கொண்டு உடை தைத்து, போர்வை போர்த்தி விட்டனர் போலும்.  

 

F TV அழகிகளைப் போல் வித்தியாசமாக இருக்கும் அவளின் உடைகளும் அலங்காரமும். 

 

உதட்டுச் சாயம், கண் மை, முகப் பூச்சி, காதில் கழுத்தில் உடலில் அணியும் ஆடைகளையைக் கூட கலைந்து விட்டு அவளை எடை மெஷினில் நிறுத்தினால் வெறும் 45 கிலோ தான் காட்டும். மேலே சொன்ன அனைத்தையும் போட்டுக் கொண்டு எடைப் பார்த்தால் 60+ கிலோ எனக் காட்டும். 

 

குழந்தை முகம் பார்க்க வெகுளியாக இருக்கும் துகிரா நவநாகரீக மங்கையானாலும் ஸ்மித்தாவையும் அவரின் மகன் ஜனார்தன் போலும் அல்லாது தப்பி பிறந்து விட்டாள் அந்த வீட்டில். 

 

அது இளாவின் கல்லூரிக் காலம். படிப்பை ஐஐடி சென்னையில் படித்துக் கொண்ருந்தான். டெல்லியின் நடைபெற்ற ஒரு போட்டிக்காக அவன் கல்லூரி சார்பில் சென்றிருந்தான். 

 

அப்போது போட்டி நடக்கும் கேம்பஸ்ஸில் எஸ்கலேட்டரில் இறங்கி வந்து கொண்டிருந்தவனை தன் தோழி என நினைத்து துகிரா இளாவின் கரத்தை இறுக பற்றி இறங்கி இழுத்துச் சென்றாள். 

 

சிறிது தூரம் சென்ற பின் தான் தெரிந்தது கரத்திற்கு சொந்தக்காரன் ஆண் என்று. 

 

"I am extremely sorry. It's my mistake. Very sorry..." என இரு காதையும் பிடித்துக் கொண்டு அவள் கேட்ட மன்னிப்பில் இளா மயங்கி விட்டான். அந்த நொடியே மனம் அவனை தனித்து விட்டு விட்டு அவளின் பின் சென்று விட்டது. 

 

அதைத் தேடிப் பிடித்து அவளின் பயோடேட்டாவை அறிந்து என பல ஃபீல் வொர்க்குகள் எல்லாம் செய்து அவளுக்காகத் தான் இந்த JET குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தான். பின் சஜித்தின் திறமையால் கவரப்பட்டான். அவ்வ போது அலுவலகம் வரும் துகிராவை மனத்துலாபாரத்தில் ஏற்றி வைத்து அதற்கு நிகராக தன் காதலை யாருக்கும் தெரியாது இத்தனை ஆண்டுகள் அடுக்கி வைத்து, துகிராவையும் தன்னை ஸ்டேட்டஸ்ஸையும் சரி சமமாக்க முயன்று வருகிறான்.

 

தன் காதலை கடந்த கால காதல் என்று சொல்லி கத்தரிப்பது போல் ஸ்மித்தாவின் பேச்சு இருக்க, மனம் ஊமையாய் அழுதது. 

 

"ஹாய் ப்ரஜி. " என்றபடி வந்தவள்

 

"என்ன talk போய்கிட்டு இருக்கு. "

 

"உங்க கல்யாணத்தப் பத்தி தான்." என்ற அன்னைக்கு தன்‌ மறுப்பை தெரிவித்து இளாவின் மனதை குளிர்வித்தவள், அடுத்த நொடியே பாலை மணலில் தள்ளி விட்டாள். 

 

"மாம் நா எத்தன தடவ சொல்றது. எனக்காக ஹஸ்பெண்டா வர்ற தகுதி சஜித் கிட்ட மட்டும் தா இருக்கு. அவனத் தவிர வேற யாரையும் நா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்." என்க, ஸ்மித்தா மகளை முறைத்தார். 

 

ப்ரஜித் இலகுவானவன். பேச பழக ஏன் இவர் கூறுவதை காதில் கேட்க என அவனை ஏமாற்றுவது கூட எளிது என்பது அவரின் எண்ணம். 

 

ஆனால் சஜித் அப்படி அல்ல. ப்ரஜித் வர்ணித்தது போல் இரும்பு மனிதன். யாரும் அவனை அத்தனை சுலபமாக நெருங்கி விட முடியாது. 

 

ஈசி டார்கெட்டாக ப்ரஜித் இருக்கையில் ஏன் இருப்பதிலேயே கடினமான அவனை உருக்க வேண்டும்.  

 

"ப்ரஜி நீங்க ஆன்டிக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கிங்களாமே, சஜிய கொண்டு வந்து நிப்பாட்டுறேன்னு. ப்ளீஸ் எனக்காகவும் அவன கூட்டீட்டு வாங்க. நா சஜிய பாத்து மூனு வர்ஷம் ஆச்சி." என கண்களால் கெஞ்ச, ப்ரஜித்தின் மூளை வேறு ஒரு கணக்குப் போட்டது. 

 

'எனக்காடா கல்யாணத்த லாக் டவுன் மாறி ஒரு நாள் முன்னாடி சொன்ன, இரு நா உனக்கு எப்படி மேரேஜ் பண்ணி வைக்கிறேன்னு பாரு.' என கங்கனம் கட்டிக் கொண்டவன், வந்தமர்ந்த இடம் இந்தர் சித்தாரா வீட்டில். 

 

"மாம் டாட், துகிரா இந்த வீட்டு மருமகளா வர்றதப் பத்தி நீங்க என்ன நினைக்கிறிங்க.?" என்றான் இரவு உணவின் போது. 

 

" எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. ஸ்மித்தா மாறி கிடையாது துகி. She is a brilliant girl." எனத் தன் செல்ல சீமாட்டியை பாராட்டினார் இந்தர். 

 

"Dad's ரூட் க்ளாயர். நீங்க என்ன சொல்றிங்க.?"

 

"நீ துகிராவ கல்யாணம் பண்ணிட்டா ரிபேக்கா...." என சித்தாரா கலங்க... 

 

"மருமகன்னு தா சொன்னேன். நா மேரேஜ் பண்ணிக்க இல்ல. சஜித்க்கு. " என்றபோது இருவருக்கும் புறை ஏறியது.

 

"நீங்க ஓகே சொன்னா ஆறு மாசத்துல அவனுக்கு கல்யாணம்னு நியூஸ் குடுத்திடலாம்."

 

"என்ன உலறுற ப்ரஜித். சஜி எங்க இருக்கான்னே தெரியாது. ஆறு மாசத்துல கல்யாணமாம்." எனத் திட்ட.

 

"அவனுக்கு இன்னும் உங்க ரெண்டு பேர் மேலயும் பாசம் இருக்கு. நீங்க ரெண்டு பேரும் சேந்து 'இத நீ செய்'னு உத்தரவு போட்டா மீறிடுவானா என்ன." என்க இந்தர் யேசித்தார். 

 

" நீங்க டிவி சேனல் முன்னாடி 'வா கண்ணா'ன்னு கூப்பாட்டா அடுத்த நொடி உங்க பக்கத்துல தா நிப்பான் உங்க அரும புள்ள. அதுக்காகவாது அவனுக்கு ஒரு கல்யாணத்த அறிவிப்போம். யாரு பொண்ணு, நம்ம துகி தான. சின்ன வயசுல இருந்து ஒன்னா தா வளர்ந்தோம். அவள பிடிக்காம போய்டுமா என்ன." என தாயை லாக் செய்தவன், 

 

"அனுஜித் வசம் நம்ம ஸ்டீல் இன்டஸ்டீஸ் share குவியுறதா ஒரு நியூஸ். நம்ம வசம் கம்பெனி இருக்கனும்னா நம்ம சைடு ஸ்ட்ராங்கா இருக்

கனும். ஸ்மித்தா ஆன்டி பேர்ல இருக்குறது ப்ளஸ் துகி பேர்ல இருக்குறதுன்னு தலைமை நம்ம கிட்ட இருக்கும்." என இந்தரையும் மடக்கி விட்டான். 

 

மயக்கம் தொடரும்....


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 1 month ago
Posts: 32
 

சஜித் எங்கே போனானோ பட் சஜித் கோகோக்கு தான் துகி வேந்தனுக்கு புரியுது.. இரண்டு ஜோடிகளும் எப்படி காதலை சொல்லுதுன்னு பார்பாபோம்..👌👌👌


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 1 month ago
Posts: 45
Topic starter  

@vsv4 நன்றி சிஸ் 🥰🥰🥰


   
ReplyQuote

You cannot copy content of this page