All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா? -02

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Member Author
Joined: 1 month ago
Posts: 5
Topic starter  

அத்தியாயம் -02

 

ஆரபி ஸ்கூலுக்கு வந்து வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு நிமிர… குட் மார்னிங் ஆரபி என சொல்லி கொண்டு வந்தார்…அந்த ஸ்கூல் வைஸ் பிரின்சிப்பால் புனிதா அவருக்கு மட்டுமல்ல பிரின்சிபால் நேசனுக்கு கூட ஆரபியை ரொம்ப பிடிக்கும்.

 

காரணம் கொடுக்கும் ஊதியத்துக்கு உண்மையாக உழைக்கும் பெண்…அதை விட எந்த வம்பு தும்புக்கும் போகாது இருப்பவள்.

 

ஆரபி “ குட் மார்னிங் மேம் உங்க மூட்டு வலி இப்போ எப்படி இருக்கு மேம் …டாக்டர் கிட்ட காட்டினீங்களா? என கேட்டாள்…சின்ன புன்னகையோடு 

 

புனிதா “ இது தான் ஆரபி உறவு இல்லை என்றால் கூட மற்றவர்களின் நலனில் அக்கறை கொள்வது…அதனால் தான் உன்னை நேசிக்காது யாரும் இருப்பது இல்லை…டாக்டரிடம் காட்டினேன் மா மருந்து எல்லாம் தந்து இருக்கிறார்…வயது போகிறது தானே!. அப்பாே கண்ட கண்ட நோய்களும் வரும்” என்றார்.

 

ஆரபி “ அப்படி சொல்ல முடியாது மேம் நம்ம முன்னோர்கள் எல்லாம் வயது போனாலும் எப்படி ஆரோக்கியமாக வாழ்தாங்க…காரணம் அவங்க உணவு முறை அது தான் அவங்களை நூறு வயதை தாண்டி ஆரோக்கியமாக வாழ வைத்தது.

 

ஆனால் இப்போ நம்ம உணவு முறை மாற தான்.. கண்ட கண்ட நோய்கள் வந்து கூடவே இருபது வயதில் கூட சாவு வருகிறது “ என்றாள்.

 

புனிதா “ நீ சொல்வது உண்மை தான் மா நானும் அவரும் வேலைக்கு போவதால் சாப்பாடு பாதி எடுப்பது கடையில் தான்…மூத்தவன் காலேஜ், பெண் பிளஸ் டூ உனக்கு தெரியும் தானே!. அவங்களுக்கு பிடித்து பாஸ்ட் புட் அயிட்டம் தான் நீ சொன்னது போல இனி அதை எல்லாம் குறைக்க வேணும்” என்றார்.

 

ஆரபி “ அது தான் மேடம் சரி ஓகே மேம் பிரேயர் தொடங்க போகிறது…பசங்க எல்லாம் ரெடியா? என பார்க்க வேணும் நான் வரேன் மேம் “ என சொல்லி விட்டு போனாள்.

 

ஆரபி சங்கீத ஆசிரியை என்பதால் அவளுக்கு பீரி பீரியட் என்பது குறைவு தான் …அந்த ஸ்கூலில் மற்ற பாடங்களுக்கு தான் அதிக  ஆசிரியர்கள் இருக்கிறார்கள்….சங்கீதம்,ஓவியம் ,நடனம் அனைத்துக்கும் ஆசிரியர்கள் ஒருவர் வீதம் தான் இருக்கிறார்கள்.

 

காலை பிரேயரில் கட்டாயமாக தமிழ் தாய்வாழ்த்து  இருக்கும் அதற்க்கு பிறகு சரஸ்வதி துதி பாடலில் சில வரிகள் பாடுவார்கள்…ஒவ்வொரு வாரமும் ஒரு வகுப்பு என்று இந்த பிரேயரில் பங்கேற்பார்கள். 

 

இதை எல்லாம்ஆரபி வந்த பிறகு வந்த மாற்றங்கள் முதலில் பாட்டு ஒரு பாடம் என கற்க வந்த புள்ளைங்க… இப்போ ஆரபியால் சந்தாேஷமாக கற்று கொள்ள வருகிறார்கள்…அவள் கதையை கூட பாட்டிலில் சொல்லும் பழக்கம் உள்ளவள்.

 

ஆரபி ஸ்கூல் முடிய வழமை போல இயற்கையை ரசித்து கொண்டு நடந்து பஸ் ஸ்டாப் வந்தாள்…அவள் ஸ்கூல் இருப்பது இரண்டு பஸ் ஸ்டாப் தள்ளி… அவள் வளர்ந்த இல்லமும் இப்போ இருக்கும் லேடீஸ் ஹாஸ்டலும் கொஞ்சம் அக்கம்பக்கம் தான்.

 

ஆரபி தன்னிடம் உள்ள சாவியால் கதவை திறக்க வர கதவு திறந்நது இருந்தது…ஆரபிக்கு புரிந்தது ராதிகா வந்து விட்டாள் என்று அவள் கதவை திறந்து கொண்டு உள்ளே ராது என அழைத்து கொண்டு போனாள்.

 

சத்தம் இல்லை ஒரு வேளை குளிக்க போய் விட்டாள் என நினைத்தவள்…திரும்ப சப்பிரைஸ் என சத்தம் போட்டவாறே ஆரபியை கட்டி அணைத்தாள் ராதிகா.

 

இது சின்ன வயது முதல் தொடரும் பழக்கம் ஆரபி இப்படி தீடிரென வந்து சத்தம் போடாதே… சில நேரம் வேறு ஆளுங்க என்றால் பயந்து விடுவாங்க என்று சொன்னாள் கூட கேட்க மாட்டாள்….ஆரபி அவளை சந்தோஷமாக கட்டி அணைத்தவள்.

 

ஆரபி “ எப்போ பாரு உனக்கு விளையாட்டி தான் எருமை வயதாகியும் இந்த பழக்கம் உன்னை விட்டு போகவில்லை… ஒரு நாள் ஒருத்தர் கிட்ட மாட்ட போகிற அப்போ தெரியும் …சரி எப்போ டி வந்த இன்று வருவதாக என் கிட்ட நீ சொல்லவே இல்லை” என கேட்டாள்.

 

ராதிகா “ஆரு செல்லம் நான் சொன்னது உன் மூளையை டச் பண்ணவில்லை என்று நினைக்கிறேன்…இது சப்பிரைஸ் டி அப்படி என்றால் நீ நினைக்காததை செய்வது அது தான் இது” என்றாள்.

 

ஆரபி “ ம் நம்பி விட்டேன் உண்மையை சொல்லு “ என்றாள்...ராதிகா அவள் கன்னத்தை கிள்ளியவள்.

 

ராதிகா “ ஆரு குட்டி உன் கிட்ட மட்டும் என் பொய் எடுபட மாட்டேன் என்கிறது …நம்ம தாடிக்கார தாத்தா அது தான் டி மிஸ்டர் திருவள்ளுவர் கூட சொல்லி இருக்கிறார் என்ன தெரியுமா? ‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்’ அது தான் இந்த ராது அவர் சொல்லும் வழியை பின்பற்றுகிறேன் “ என்றாள்.

 

ஆரபி “ அது எல்லாம் ஆபத்தில் இருக்கும் போது தான் அவர் சொன்னது…அதுவும் ஒரு உயிரை காக்க சொன்னது உன்னை போல ஆளுங்க அதை வேற மாதிரியாக எடுத்து கொள்வீங்க என அவர் கண்டாரா …சரி சொல்லு என்ன விஷயம் சொல்லாமல் கொள்ளாது வந்து இருக்க.

 

என்ன அம்மா உன்னை பெண்ணு பார்க்க வர சொல்லி விட்டாங்களா? அது தான் அவங்க கிட்ட சொல்லாது வந்து விட்டாயா? என கேட்டாள்.

 

ராதிகா “ என்னை யார் என நினைத்த நான் ராதிகா டி.. முடியாது என்றால் முஞ்சிக்கு நேராக சொல்லி விட்டு ராஜநடை போட்டு வருவேன்…

 

அது வேற ஒன்றுமில்ல டி என் மேனேஜர் சொட்டை இருக்கு தானே அது தான்… இந்த வேலை வேணும் என்றால் நாளைக்கு காலையில் நீ ஊட்டியில் நிற்க வேணும்… என  இந்த ராதிகாவுக்கே கட்டளை போட்டு விட்டது அது தான் அவசரமாக வந்தேன் “என்றாள்.

 

ஆரபி “ ஏய் பெரிவங்களுக்கு மரியாதை கொடுக்க வேணும் என்று உனக்கு எத்தனை தடவை சொல்வது… சரி ஏதோ அவசரம் போல அது தான் உன்னை வர சொல்லி இருக்கிறார்” என்றாள்.

 

ராதிகா “ அப்படி தலை போகும் வேலை இல்லை டி யாரோ பெரிய  கோடீஸ்வர் வருகிறாராம்…அதற்க்கு ஸ்டாப்ஸ் எல்லாம் வர வேணும் என சொல்லி விட்டார் அதுவும் அந்த கிழவன் பழைகால ராஜாவாம் “ என்றாள்.

 

ஆரபி “ ஏய்!. விளையாடதே என்ன ராஜா கதை எல்லாம் சொல்லி கொண்டு இருக்க…வர வர உனக்கு விளையாட்டு ஜாஸ்தியாக போய் விட்டது…ஒரு விஷயத்தை சீரியஸாக எடுத்து கொள்ள தெரிகிறதா? விளையாட்டு இருக்க வேணும் அது ஒரு அளவுக்கு உன் வேலை விஷயத்தில் காட்டாதே!. என்றாள். 

 

ராதிகா “ ஏய்!. கூல் ஆரூ குட்டி நான் உண்மையை தான் சொல்கிறேன்…மேனேஜர் சொட்டை அப்படி தான் சொன்னது ஏதோ ராஜ வம்சம் ஆள் நம்ம ஹோட்டலை பார்க்க வருவதாக சொன்னார் “ என்றாள். 

 

ஆரபி “ ராது ஒரு வேலை உங்க ஹோட்டலை அவர் வாங்க வருகிறாரோ தெரியாது …அப்போ உன் வேலை நான் பாதரிடம் சொல்லி வேற வேலை பார்த்து வைக்க சொல்லட்டுமா? என கவலையாக கேட்டாள். 

 

ராதிகா “ நோ டென்சன் அப்படி ஏதும் எனக்கு மட்டுமல்ல எந்த ஸ்டாப்ஸ்க்கும் தகவல் வரவில்லை...வந்தால் கூட எனக்கு கவலை இல்லை வேலைக்கா பஞ்சம்? அது தான் நீ பாதர் இருக்கிறீங்க பிறகு என்ன கவலை” என கேட்டாள். 

 

அவள் அப்படி தான் எதனையுமே சீரியஸாக எடுத்து கொள்ள மாட்டாள்…பின் விளைவுகளை பற்றி கூட யோசிக்க மாட்டாள். ஆனால் ஆரபி நான்கு விஷயங்களை அலசி தான் முடிவு எடுப்பாள்…ஆனால் விதி அந்த நான்கு விஷயங்களை கூட அலச முடியாத நிலையில் கொண்டு அவளை நிறுத்தி இருந்தது. 

 

ஆரபி “ சரி விடு அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் எப்படி இருக்கிறாங்க…நான் வாங்கி அனுப்பி பொருள் எல்லாம் அவங்களுக்கு பிடித்து இருந்ததா? என கேட்டாள். 

 

ராதிகா “ பிடித்து இருந்ததா நீ அப்பாவுக்கு வாங்கி அனுப்பிய சேர்ட் அம்மாவுக்கு புடவை தாருவின் சுடி…..எல்லாம் உடனே போட்டு பார்த்து என் பெண்ணு சென்னையி்ல் இருந்து அனுப்பி இருக்கா.. என்று எங்க தெரு முழுக்க தம்பட்டம் அடிக்காத குறையாக சொல்லி விட்டாங்க. 

 

அதில் எனக்கு வேற ஒரு குட்டு பாரு எங்களுக்கு பிடித்ததை தேடி தேடி எடுத்து அனுப்பி இருக்கு புள்ள என்று…சரி இரு உனக்கு அவங்க அனுப்பியதை எடுத்து வருகிறேன் என போய்…தன் டிராவில் பேக்கில் இருந்ததை எடுத்து வந்து கொடுத்தாள். 

 

பட்டு புடவை ஒன்று ஒரு ஹேண்ட் பேக் கூடவே ஸ்நாக்ஸ் வகை மதுரை மல்லி வாடாது இலையில் கட்டி அனுப்பி இருந்தார்கள்…ஆரபி அதை ஆசையாக தன் நெஞ்சோடு அணைத்து கொண்டாள்…அதை ராதிகா நெகிழ்ச்சியாக பார்த்தாள். 

 

ஆரபி உண்மையான அன்புக்கு அவள் அடிமை…அதை தடவி பார்த்தவள். 

 

ஆரபி “ எல்லாம் ரொம்ப அழகாக இருக்கு டி ராது இதை மட்டும்… என நிறுத்தி இழுத்தாள். 

 

ராதிகா “ உன் கூட இத்தனை வருஷம் பழகும் எனக்கு தெரியாதா? நான் வந்ததும் அம்மா தனியாக நம்ம பசங்களுக்கு அனுப்பி ஸ்நாக்ஸை… சிஸ்டர் கேத்ரின் கிட்ட கொடுத்து விட்டு தான் வருகிறேன்..இது உனக்கு சாப்பிடு பாரு மெலிந்து போய் இருக்க.

 

சரி நீ போய் ப்ரெஷ்-அப் செய்து விட்டு வா.. நான் போய் காபி எடுத்து வருகிறேன்” என சொல்லி சாப்பாட்டு ரூம்க்கு போனாள். 

 

ராதிகா காபி எடுத்து வர இருவருமே ராதிகா அன்னை சுகந்தி அனுப்பிய பலகாரங்களை சாப்பிட்டு…. காபி சாப்பிட்டு விட்டு தங்கள் மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தனர். 

 

மறுநாள் இருவருமே வேலைகளுக்கு கிளம்பினார்கள்…ராதிகா சொன்னது போல வந்தது கிழட்டு ராஜா அல்ல… ராஜாவின் தோழன் என சொல்லி கொண்டு ஒருவன் வந்தான். 

 

ராதிகா அவள் மேனேஜர் கூடவே ஹோட்டல் ஸ்டாப் கையில் பொக்கேவோட வரவேற்க்க நின்றனர்…மேனேஜர் தன் கையில் பூமாலை வைத்து இருக்க ராதிகாவை தான் பொக்கே கொடுத்து வரவேற்க்க சொன்னார்…

 

அவளும் சரி என அவர் அருகே நிற்க பாரின் கார் கூடவே வேற இரண்டு கார்கள் வந்து நின்றது…அனைவருமே ஆவலாக பார்க்க கார்ட் போல உள்ள ஒருவன் வந்து கார் கதவை திறந்து விட இறங்கினான் ஒரு இளைஞன். 

 

அவனை அனைவருமே ஆவென்று பார்த்து கொண்டு இருக்க… வெல்கம் பிரின்ஸ் என சொல்லி மேனேஜர் மாலை போட போனார்…அவன் தன் வலது கையை உயர்த்தி தடுத்தவன் அழகான ஆங்கிலத்தில். 

 

அவன் “ ஸாரி நான் நீங்க எதிர்பார்த்த பிரின்ஸ் நான் இல்லை” என்றான். 

மலர் பூக்கும்…


   
ReplyQuote

You cannot copy content of this page