About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம்: 01
ஊட்டி என்றும் உதகை அல்லது உதகமண்டலம் என்று அழைக்கப்படும் ஊட்டி நீலகிரி மலையில் அமைந்துள்ள ஒரு நகராட்சி ஆகும்…
அங்கு அமைந்துள்ள ஒரு லேடீஸ் ஹாஸ்டலில் காலையில் ஒரு ரூம்மில் இருந்து… இனிமையான குரலில் காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் பெண் குரல் கேட்டது…அந்த குரலுக்கு சொந்தகாரி ஆரபி இவளுக்கு இந்த பெயர் வைத்தவர் ஒரு பாதிரியார்.
அவரை பொருத்த வரைக்கும் இசைக்கு மதம், இனம், அந்தஸ்து கிடைக்காது…தெய்வமே வணக்கும் இசைக்கு முன் ஏது பெரிது ராவணன் அரக்கன் என்று தெரிந்தும் அவன் இசைக்கு மயங்கியவர் சிவபெருமான்…அப்படிப்பட்ட கருநாடக இசையில் பயன்படும் ராகம் ஒன்றின் பெயர் தான் ஆரபி ராகம்.
ஆரபி மாநிறம், அழகிய நூதல் சதா கருணை பொழியும் மான் விழிகள், கூர் மூக்கு அதில் குட்டி தங்க மூக்குத்தி, மாம்பழ கன்னம், சிவந்த இதழ்கள்…சங்கு கழுத்து கொடி இடை, இடை வரை நீண்ட கார்குழல் மொத்தில் ஐந்தரையடி உயரத்தில் உள்ள தெய்வீக பெண்.
இவள் வளர்ந்தது எல்லாம் ஒரு தேவாலயத்திற்கு சொந்தமான இல்லத்தில் தான்…இவள் பிறக்க காரணமான இருவர் காதல் என்ற பெயரில் தங்கள் உடல் இச்சையை தீர்த்து கொண்டார்கள்…பலன் இவள் வரவு இதை எதிர்பாராத அவர்கள் யாருக்கும் தெரியாது பிள்ளையை பெற்று… தேவாலய வாசலில் போட்டு விட்டு இவளை கை கழுவி விட்டு ஓடி விட்டனர்.
அப்போது இவளை ஏந்தியது கருணை மிக்க இரு கரங்கள் அந்த கரங்களுக்கு சொந்தகாரர் மட்டுமல்ல அந்த தேவாலயத்தின் பாதிரியார் பிரான்சிஸ்…அவரும் கருணையின் மறு உரு தான் அவர் பொருத்த வரைக்கும் உயிர்கள் எல்லாம் தேவனின் பரிசு அதை அவரை பாதுகாக்க சொல்லி தந்து இருக்கிறார்.
அந்த பகுதியின் அவர் பற்றி தெரியாத யாருமே இருக்க மாட்டார்கள்…உதவி என அவரிடம் கேட்டு வருவருபவருக்கு அவர் இல்லை என்று ஒரு போதும் சொல்வது இல்லை…தன்னால் முடிந்தளவு உதவி செய்வார் அதனால் அவருக்கு அங்கே வசிக்கும் அனைவரிடமும் மதிப்பு, மரியாதை இருக்கு.
ஆரபிக்கு மற்ற பிள்ளைங்களை போல தந்தை, தாய் எல்லாம் பிரான்சிஸ் தான்…அவர் தனக்கு பிடித்த இசையை அவளுக்கு கற்று கொடுக்க இயற்கையாகவே இசை ஞானம் உள்ளவள் அவள் அதை கற்று கொண்டாள்…பிறப்பில் எந்த மதம், ஜாதி, அந்தஸ்து என தெரியாது தான் ஆனால் இப்போ ஆரபி கிறிஸ்தவ இல்லத்தில் வளர்ந்தால் கிறிஸ்தவ மதம்.
அவள் இசையில் பட்டம் பெற அவளுக்கு ஊட்டியில் உள்ள ஸ்கூலில் டீச்சர் வேலை கிடைத்தது…வழமையான இல்லங்களின் சட்டம் போல தான் அவள் வளர்ந்த இல்லத்திலும்.
படித்து பட்டம் பெற்று வேலை கிடைத்ததும் அந்த இல்லத்தை விட்டு போய் விட வேணும்…அடுத்து வரும் நபர்களை காக்க அந்த இடம் உதவும் அதற்காக அவர்களை சட்டென கை கழுவி அனுப்ப மாட்டார்கள்…பாதுகாப்பான இடத்திற்க்கு தான் அனுப்புவார்கள்.
பாதர் பிரான்சிஸ் அப்படி அவள் தங்க அவளை பாதுகாப்பான இடத்தை விசாரித்து தான்… இந்த லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விட்டு இருந்தார்… இதுவும் ஒரு கருணை இல்லம் நடத்தும் ஹாஸ்டல் தான்…
ஆரபிக்கு இங்கே தங்க விருப்பம் இல்லை அவள் அழுத அழுகையில் அந்த இல்லம் நனைந்தது…ஆனால் பிரான்சிஸ் சிஸ்டர் கேத்தரின் அவளுக்கு விதிமுறைகளை எடுத்து சொன்னார்கள்.
நீ இப்போ ஒரு நிலைக்கு வந்து விட்ட இனி உன்னாலே முடிந்தளவு உன் போல உள்ள இவர்களுக்கு உதவி செய்…அது தான் நீ தேவனுக்கு செய்யும் பிரதிபலன் அவர் உன்னை காத்து எங்க கரம் சேர்த்தது போல… இவர்களுக்கு நீ மட்டுமல்ல இங்கே இருக்கும் மற்ற பிள்ளைகளும் வழிகாட்டிகளாக இருக்க வேணும் .
இது உன் தாய் வீடு நீ எப்போ வேணும் என்றாலும் வரலாம் தங்கலாம் ஆனால் நிரந்தரமாக இல்லை…அது போல உனக்கு என்ன உதவி வேணும் என்றாலும் எங்க கிட்ட தாராளமாக கேட்கலாம் என்று அவளை சமாதானப்படுத்தி இருந்தார்கள்.
ஆரபிக்கு இந்த காயத்ரி மந்திரம் கற்று கொடுத்தது பாதர் தான் அவருக்கு கர்த்தரும், சிவனும் ஒன்று தான்…எந்த பேதமும் காட்ட மாட்டார் அது போல ஆரபி சர்ச்சில் பியான் ஞாயிறு ஆராதனையின் போது வாசிப்பாள்.
ஆரபி தங்கி இருந்த அறையில் அவளின் உயிர் தோழி ராதிகாவும் தங்கி இருந்தாள்…அவர்கள் நட்பு ஸ்கூலில் ஆரம்பித்த நட்பு பிறகு காலேஜ் வரை தொடர்ந்து… ஹாஸ்டல் வரை வந்து உள்ளது ஆரபி அன்பில் நல்ல குணத்தில் கவரப்பட்டு நட்பு கொண்டவள்.
நடுத்தர வர்க்கத்து பெண் தந்தை பேங்கில் வேலை பார்க்கிறார் தாய் இல்லதரசி ஒரு தங்கை உண்டு...இவளுக்கு ஊட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரண்ட்டில் அசிஸ்டெண்ட் மேனேஜர் வேலை கிடைத்தது இருக்கு…ஆரபி சங்கீதம் கற்க போக இவள் மேனேஜ்மெண்ட் கோர்ஸ் படிக்க போனாள்.
அவளுக்கு இங்கே வேலை கிடைக்க ஆரபி கூட தங்க வேணும் என்று இங்கே வந்து சேர்ந்தாள்…இப்போ தன் குடும்பத்தை பார்க்க தன் ஊரான மதுரைக்கு போய் இருக்கிறாள்…பல தடவை இவளையும் வர சொல்லி இருக்கிறாள்.
ஏன் அவள் குடும்பமே ஆரபியை வற்புறுத்தி அழைக்கும்… ஆரபி அன்பா ஏதும் காரணம் சொல்லி மறுத்து விடுவாள்…காரணம் அந்த உறவுகள் போல இல்லை என்று மனம் ஏங்க தொடங்கி விடும் அதுவே தவறான பாதைக்கு இட்டு செல்லும்.
அடுத்து தன்னை போல தானே!. இங்கே எத்தனை புள்ளைங்க அன்பு,பாசம், குடும்பம் கிடைக்காது இருக்கிறாங்க…அப்போ அதை தான் மட்டும் அனுபவிப்பது அவளுக்கு குற்றணர்ச்சியாக இருந்தது…அதனால் அவர்கள் அழைப்பை மறுத்து விடுவாள் உண்மை ராதிகாவுக்கு மட்டும் தெரியும்.
ஆரபி காயத்ரி மந்திரம் சொல்லி முடிய எழுந்தவள் மணி பார்த்தாள் ஏழுமணியாகி இருந்தது…அது பெரிய அறை இல்லை தான் ஆனால் தாராளமாக இருவர் தங்கலாம்…இரண்டு கட்டிலில் ஒரு துணி வைக்கும் கபோர்ட் இருந்தது.
ஒரு சின்ன மேஜை ஒரு நாற்காலி ஒரு மூலையில் சின்ன தட்டு போல மரத்தால் மாட்டி…அதில் தான் இயேசு,மாதா படம் கூடவே சிவன்பார்வதி குடும்ப படம் கூடவே இசை, கல்வியின் அரசி கலைவாணியின் படமும் இருந்தது.
அதற்க்கு முன்னால் ஒரு கேண்டில் ஸ்டாண்ட், ஒரு விளக்கு இருந்தது மதங்களை தாண்டியது அவர்களின் நட்பு…அடுத்து சின்ன மரதடுப்பு இருந்தது… துணி மாற்றுவதற்காக சுவரில் துணிகள் போட வால் ஹேங்கர் இருந்தது….வாஷ்ரூம் எல்லாம் அறையோடு சேர்ந்தது இல்லை பொதுவாக இருந்தது .
ஆரபி காலையில் ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள் அவள் வளர்ந்த இல்லத்தின் பழக்கம்…காலையில் ஆறுமணிக்கு திருப்பலி தொடங்கி விடும் அனைவரும் கட்டாயமாக பங்குபற்ற வேணும்.
அந்த பழக்கத்தில் அவள் ஐந்து மணிக்கு எழுந்து குளித்து விட்டு முதலில் ஐெபம் பண்ணி விட்டு… பிறகு காயத்ரி மந்திரம் சொல்லி முடிய மணி ஆறாகி விடும் …அதற்க்கு பிறகு ரெடியாகி சாப்பாட்டு ரூம்க்கு போவாள்.
காலை ஆறுமணி தொடக்கம் ஏழு வரை காபி டைம்,எட்டு தொடக்கம் ஓன்பது வரை டிபன் டைம்…அது வேலை பார்க்கும் பெண்கள் ஹாஸ்டல் என்பதால் மதியம் பெரிதாக யாரும் இருக்க மாட்டார்…காலையிலே மதியத்திற்கு சாப்பாடு வாங்கி கட்டி கொண்டு போய் விடுவார்கள்.
ஆரபி மர தடுப்புக்கு பின்னே போய் துணி மாற்றி கொண்டு வந்தாள்…அவள் வேலை செய்யும் ஸ்கூல் நடுத்தர வர்க்க பிள்ளைங்க படிக்கும் பாடசாலை…அங்கே ஆசிரியர்களுக்கு மாணவர்கள் போல சீருடை உண்டு .
சாம்பல் வண்ண காட்டன் சாரி கரை மெரூன் கலரில் ஆண்களுக்கு மெரூன் கலர் சட்டை பேண்ட் சாம்பல் வண்ணம்… இரு சேட் உடைகள் ஸ்கூல் நிர்வாகம் கொடுக்கும்..தேவை பட்டவர்கள் தங்கள் சொந்த செலவில் வாங்கி கொள்ளலாம்.
ஆரபி புடவை அணிந்தவள் தன் நீண்ட கூந்தலை கொண்டை போட்டு அதை கொண்டை வலை போட்டு பின் குத்தினாள்…கழுத்தில் ராதிகா வற்புறுத்தி அவள் சம்பளத்தில் சீட்டு போட்டு வாங்க வைத்த மெல்லிய தங்க செயின் சின்ன சிலுவையோடு இருந்தது….இடது கையில் கறுப்பு பட்டி வாட்ச் மறுகை வெறுமையாக தான் இருந்தது.
காதில் சின்ன பூ தோடு இவ்வளவு தான் அவள் அலங்காரம் ஆனால் இறைவன் அள்ளி கொடுத்த அழகை மறைக்க முடியுமா? ஆரபி சாப்பிட்டு விட்டு மதியம் கட்டி கொடுத்த சாப்பாட்டு எடுத்து கொண்டு கிளம்ப போக பாப்பா என அழைப்பு கேட்டது.
அவள் திரும்பி பார்க்க அங்கே சமையல் வேலை செய்யும் வள்ளி நின்று இருந்தார்…ஆரபி முகம் மலர்ந்தது.
ஆரபி “ வள்ளி அக்கா எப்போ வந்தீங்க உங்க பெண்ணுக்கு இப்போ சரியாகி விட்டதா? டெலவரி டேட் எப்போ என சொன்னாங்களா? என கேட்டாள்.
வள்ளி “ அந்த கடவுள் போல நீயும் ராதிகா பாப்பாவும் எனக்கு பணம் கொடுத்து உதவி செய்தீங்க இல்லை என்றால் என் பெண்ணின் நிலமை…
மாப்பிள்ளைக்கு என்னால் பதில் சொல்லி இருக்க முடியாது தலை பிரசவம் பார்க்க அழைத்து வந்ந இடத்தில் கொஞ்சம் நான் அஜாக்கிரதை இருந்தால் என் பெண்ணு விழந்து விட்டாள்…மாத கடைசி கையில் பணம் வேற இல்லை நாங்க குப்பத்து ஆளுங்க சட்டென பணத்தை யார் கிட்ட போய் கேட்க முடியும்.
தர்ம ஆஸ்பத்திரி என்றாலும் இப்போ எல்லாம் மருந்து மாத்திரைக்கு பணம் வாங்குகிறாங்க..நான் சமையல் வேலை பார்க்கும் ஆளு என்னை நம்பி யாரு பணம் கொடுப்பாங்க …நீயும் ராதிகா பாப்பாவும் என்னை நம்பி பணம் கொடுத்தீங்க மா .
இப்போ என் பெண்ணும்,பேர குழந்தையும் நல்லா இருப்பதாக டாக்டரையா சொன்னார்…நீங்க இரண்டு பேருமே நல்லா இருக்க வேணும் மா “என்றாள்.
ஆரபி “ என்ன வள்ளி அக்கா பெரிய வார்த்தை எல்லாம் பேசி கொண்டு… எங்க கிட்ட இருக்கும் போது ஆபத்தில் தந்து உதவுவது தான் கடமை ஏன் நீங்க எங்களுக்கு உதவ மாட்டீங்களா? என கேட்டாள்.
வள்ளி “என்ன கேள்வி பாப்பா நிச்சயமாக என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்வேன்…ஆனால் இப்போ உங்களை போல யாரு பாப்பா நினைக்கிறாங்க “என கேட்டார்.
ஆரபி “ நீங்க சொல்வது ஒரு விதத்தில் உண்மை தான் மனிதாபிமானம் செத்து விட்டது…சரி அக்கா உங்க பெண்ணை ஜாக்கிரதையாக பார்த்து கொள்ளுங்க எனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆகிவிட்டது நான் கிளம்புகிறேன் “என சொல்லி விட்டு போனாள்.
வள்ளி மனதில் உன் நல்ல மனசுக்கு உனக்கு மகராஜன் புருஷனாக வருவான் என வேண்டி கொண்டார்…அவர் வாக்கு உண்மையாக போவதை அவர் கூட அறிந்து இருக்கவில்லை.
மலர் பூக்கும்…
Latest Post: மயக்கம் 13 Our newest member: Vanitha R Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page