All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

சில்லாஞ்சிருக்கியே - 17 (இறுதி அத்தியாயம்)

 

VSV 25 – சில்லாஞ்சிருக்கியே
(@vsv25)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 25
Topic starter  

சில்லாஞ்சிருக்கியே - 17 (இறுதி அத்தியாயம்)

 

விமானத்தில் சென்னை வந்து இறங்கியவர்கள் கார் பிடித்து செங்கோட்டை வந்து இறங்கினார்கள். ஊர் எல்லையில் காரை நிறுத்தியவன் தமிழிடம்,

“ஓய் அங்க பாரு” என்று ராக்காயி தேநீர் கடையை காண்பிக்க அவள் முகம் அவ்வளவு பிரகாசம் ஆனது. 

கடை முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு அழகாக இருந்தது. ராக்கயி பாட்டியுடன் தமிழை சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை கடையின் முகப்பு படமாக வைத்து அதில் “ராக்காயி தேநீர் கடை” என்று அழகாக பெரிதாக எழுத பட்டிருந்தது. கடையின் முன் இருந்த பழைய மேஜைகளுக்கு பதில் புதிதான அழகான நாற்காலிகள் மற்றும் மேஜைகள் போடப்பட்டிருந்தது. 

மொத்தத்தில் கடையே புதிதாக இருந்தது. அதனை பார்க்க பார்க்க தமிழின் மனதில் மகிழ்ச்சி பெருகியது. க்ளாராவிடம் அது தமிழின் கடை என்று கூறி காண்பித்தான். 

“அப்போ வாங்க போய் காபி குடிச்சுட்டு வருவோம்” என்று கூற தமிழோ,

“வாங்க அத்தை” என்று அழைத்து சென்றாள். தேன்மொழியும் நேத்திரனும் கடையை கவனித்துக் கொண்டிருந்தனர். 

“ஹே தமிழு.. ஹாய் யாஷ் ப்ரோ.. ட்ரிப் எல்லாம் எப்படி பேஷா” என்று விசாரித்தவன் க்ளாராவை பார்த்து,

“வாங்க பெரியம்மா” என்று வரவேற்றான். தமிழ் கடைக்குள் சென்று பார்க்க அனைத்துமே புதுப்பிக்க பட்டிருந்தது. டீ பாய்லர் மட்டும் பழசு. அது ராக்காயி பாட்டியின் நினைவாக இருக்க.வேண்டும் என்பது தமிழின் ஆசை என்று நேத்திரன் கூறிட அதனஜ் மட்டும் மாற்றாமல் விட்டான்.

“வாவ் செமையா இருக்கு” என்றவள் நெகிழ்வோடு கடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சிறிது நேரத்தில் மூவரும் கிளம்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரூத்ரமூர்த்தியின் சமாதிக்கு புறப்பட்டனர்ம் 

அங்கு கால் வைக்கவே க்ளாராவுக்கு சிறிது தயக்கமாக இருந்தது. தன் கணவனை காவு வாங்கிய நிலம் அல்லவா. தன் திருமணத்தைப் பற்றி மகனை பற்றி கூறி மன்னிப்பு வேண்டிவிட்டு சம்மதம் வாங்கிவிட்டு வருவதாக சென்ற மனிதர் கடைசியில் வராமலே போய்விட மனைவியாக அவரின் மனம் எவ்வளவு வேதனையை அடைந்திருக்கும். அதுவும் மனைவியாக இருந்து அவரின் முகத்தைக் கடைசியாக ஒரு முறைக் கூட பார்க்க முடியாமல் போன காயம் இன்னுமே அவருக்குள் இருந்தது. அவர் கைகளில் அழுத்தம் கொடுத்த யாஷோ,

 

“வாங்க மா” என்று அழைத்து சென்றான் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ருத்திரமூர்தியின் சமாதிக்கு. வெகு நாட்களாக அடக்கி வைத்த அழுகையை கிரிஷ்ணமூர்தியின் சமாதியில் அழுது தீர்த்தார் கிளாரா. தமிழ் தடுக்க போக அவளை தடுத்த யாஷோ,

 

“வேணாம் சில்லு. அவங்க அழுகட்டும்” என்றான். வெகு நேரமாக அழுதவர் பிறகு அவரே நிதானத்திற்கு வந்தார். பிறகு மூவரும் எழுந்து வீட்டிற்கு வந்தனர். நேத்திரன், தேன்மொழி மற்றும் மஞ்சுளா மூவரிடமும் கிளாரா நன்றாக பேசினார். 

 

“மன்னிச்சுருங்க அக்கா.” என்று மஞ்சுளா நடந்த விஷயத்திற்கு மன்னிப்பு வேண்ட,

 

“விடுங்க. நீங்க என்ன செய்வீங்க” என்று அணைத்துக் கொண்டார். அன்றைய நாள் ஓய்வில் கழிய மறுநாள் இலஞ்சி குமரர் திருக்கோவிலில் எளிமையான திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான் நேத்திரன். 

 

முதன்முறையாக பட்டு வேஷ்டி சட்டை அணிந்திருந்த யாஷோ பேரழகனாக திகழ்ந்தான். அவனை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அரக்கு நிறத்தில் பட்டு புடவை அணிந்திருந்தாள். இருவருமே ஒருவரையொருவர் கண்களில் நிரப்பியபடி நிற்க,

 

“இப்படியே நின்னா என்ன அர்த்தம்? கல்யாணம் பண்ண வேணாமா? வாங்க” என்றபடி நேத்திரன் செல்ல அவனை இழுத்துக் கொண்டு மறைவான இடத்திற்கு சென்றான் யாஷ்.

 

“ப்ரோ ப்ரோ நான் உங்க ஆளு இல்ல. ச்சி கருமம் நான் அந்த மாதிரி டைப் இல்ல” என்று பதறி போய் கூற,

 

“அட சைக் புத்திய பாரு” என்றவன் அவன் கைகளில் ஒரு பட்டுவேஷ்டி சட்டையை கொடுத்து அணிய சொன்னான். அதனை புரியாமல் பார்த்த நேத்ரனோ,

 

“ப்ரோ எனக்கெதுக்கு?” என்று அவன் கேட்க யாஷோ,

 

“துணை மாப்பிளை ப்ரோ. போட்டு வா” என்றிட அவனோ,

 

“ஆமால்ல.. இதோ வரேன்” என்றவன் வெளியே வர அங்கு தமிழும் தேன்மொழிக்கு அவளை போன்றே பட்டு அணிவித்து அழைத்து வந்தாள். குட்டி பையன் மகிழும் பட்டுசட்டையில் ஜொலித்தான். தேன்மொழியை பட்டுபுடவையில் கண்டவன் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இப்பொழுது,

 

“இப்படியே நின்னா என்ன அர்த்தம்? வாங்க ப்ரோ” என்று அழைத்து செல்வது யாஷின் முறையாயிற்று. கிளாராவும் மஞ்சுளாவும் சிறியவர்களின் லூட்டிகளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். தேன்மொழியின் அருகில் வந்த நேத்ரனோ,

 

“தேனு அங்க பாரு” என்று வாசலை காண்பிக்க அவளும் பார்க்க அவள் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அவளின் தாயும் தந்தையும் நின்றிருந்தனர். ஆனால் அவர்களை அழைக்க மன வரவில்லை. திரும்பிக் கொண்டாள். நேத்திரனோ,

 

“ஹே என்ன.. போய் கூட்டிட்டு வா” என்க,

 

“இவ்வளவு நாள் நான் இருக்கேனா செத்தேனான்னு கூட பார்க்க வரலை தானே. எனக்கு அவங்க தேவையில்ல” என்றாள் தீர்க்கமாக.

 

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது தேனு. அவங்க என்ன செய்வாங்க. இங்க இருக்குற எல்லாரும் ஊருக்கு கட்டுபட்டே வாழ்ந்து பழகிட்டாங்க. உன் மேல பாசம் இருக்குறதுனால தான் இப்போ கூப்பிட்டதும் வந்து நிக்குறாங்க.” என்று அனுப்பி வைக்க அங்கே ஒரு பாச போராட்டம் நிகழ்ந்து சமாதனம் ஆகி ஒருவழியாக சிரித்தபடி வந்தனர். முருகனை பிறகு திருமண மந்திரங்கள் ஓதப்பட்டு ஐயர் தாலி எடுத்து கொடுக்க பெரியவர்களின் ஆசியோடு யாஷ் தமிழின் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தான். மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தாலியை வாங்கியவள் அவளின் மன்னவனின் மனைவியானாள். 

 

அதன்பிறகு மீண்டும் ஐயர் மந்திரங்கள் ஓதி இன்னொரு தாலியை நேத்திரனின் கையில் கொடுக்க நேத்திரனோ அதிர்ச்சியாக பார்த்தான். தமிழோ,

 

“அன்னைக்கு அவசரமா நடந்து முடிஞ்சுருச்சு. இன்னைக்கு சாமி முன்னாடி நிம்மதியா தாலி கட்டு” என்றிட தேன்மொழியை ஏறிட்டான். அவளும் அவளது சம்மதத்தை தெரிவிக்க தன் மனைவிக்கு பெரியவர்கள் முன்னிலையில் ஆசி வாங்கி தாலி கட்டி மீண்டும் மனைவியாக்கிக் கொண்டான். மகிழுக்கு என்ன புரிந்ததோ அழகாக கைத்தட்டி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த அதனைக் கண்டு அனைவர்க்கும் மகிழ்ச்சியே. 

 

அவ்வாறே மணமக்கள் ருத்திரமூர்த்தி மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் சமாதிக்கு சென்று ஆசி பெற்றுவிட்டு வீட்டிற்கு வந்தனர். பேசி சிறிது அரட்டையடித்தபடியே பகல் பொழுது கழிய இரவு நேத்திரன் வீட்டில் நேத்திரன் மற்றும் தேன்மொழிக்கும்  தமிழின் வீட்டில் யாஷ் மற்றும் தமிழுக்கும் முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. மஞ்சுளா மற்றும் கிளாரா இருவரும் மகிழோடு யாஷ் தங்கியிருந்த வீட்டில் தங்க முடிவு செய்தனர். 

 

தமிழோ அப்பொழுது தான் குளித்து முடித்து வந்தவள் புடவைக் கட்டிக் கொண்டிருந்தாள். பின்னே ஏதோ சத்தம் கேட்டது.

 

'இதென்ன மாடு கழனி தண்ணியை உரியுற போல ஒரு சத்தம்' என்று நினைத்தபடி திரும்ப சுவற்றில் சாய்ந்து நின்றபடி அவளின் பாதி மறைத்து பாதி மறைக்காத அங்கங்களை கண்களால் ரசித்த யாஷின் இதழ்கள் காபியை ருசித்துக் கொண்டிருந்தது. அவனைப் பார்த்தவள்,

 

"இங்க என்ன பண்றீங்க நீங்க? இன்னும் மணி பத்து ஆகலை" என்று புருவம் இடுக்கி கேட்க,

 

"இயற்கை அழகை ரசிக்கலாமேன்னு.." என்றவன் இழுக்க,

 

"எதேய்.." என்றபடி அதிர்ந்து திரும்பினாள். அவனோ,

 

"ஐ மீன்.. ஜன்னல் வழியா அங்க நிலா தெரியுது பாரு. அந்த இயற்கையை ரசிக்கலாமேன்னு நினைச்சு ரூமுக்குள்ள வந்தேன். ஆனா வேற ஒரு இயற்கை அழகை ரசிக்க வேண்டியதா போயிருச்சு." என்றவன் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்துவிட்டு உதடுமடித்து சிரிக்க, அவன் சிரிப்பில் தன்னை பார்த்தவளுக்கு அப்பொழுது தான் முந்தானையை இன்னும் அணியாமல் கையில் வைத்திருப்பது புரிய, அவசரமாக தன்னை முந்தானைக் கொண்டு போர்த்தினாள். அதில் அவனோ சத்தமாக சிரித்தான். 

 

"ரொம்ப சிரிக்காதீங்க. அப்படி ஒன்னும் முழுசா மறைக்காம எல்லாம் நிக்கல. மறைச்சு தான் நிக்குறேன்" என்றபடி முந்தானையை நேர்த்தி செய்தாள். அவனோ,

 

"கரெக்ட் தான். என்ன செய்றது.. சில நேரம் முழுசா பார்க்குறதவிட மறைக்கப்பட்ட அழகை பார்க்கிறது தான் இன்னும் ரசனையா தோணுது" என்றவன் பெருமூச்சு விட அவளோ,

 

"போய் வேற வேலை இருந்தா பாருங்க போங்க" என்றவள் அவனுக்கு முகம் காட்டாமல் திரும்பி நின்று சிரித்துக் கொண்டாள். அதனை கண்ணாடியில் பார்த்துவிட்டவன்,

 

"சும்மா சொல்லக் கூடாது.. செம ஹாட் தான்" என்க அவளோ, "இல்ல புரியல..." என்றபடி முறைக்க,

“முறைக்காதடி. காபியை மட்டும் சொல்லல. உன்னையும் சேர்த்து தான் சொன்னேன்” என்றவன் அவளை தன்னை நோக்கி இழுக்க அவனின் மீது மோதி நின்றாள் பெண்ணவள்.

 

“ஐயோ டைம் ஆகலை இன்னும்” என்று அவன் அவனை விலக்க அவன் பிடியோ உடும்பு பிடியாக இருந்தது. 

 

“டைம் எல்லாம் முக்கியம் இல்ல. ஆரம்பிக்குறத எப்போ ஆரம்பிச்சா என்ன. லெட்ஸ் ஹேவ் பன்.. உனக்கு எதாவது ஒரு கட்டத்துல கம்போர்ட்டபிலா பீல் ஆகலைனா யு கேன் ஸ்டாப் மீ ஒகே” என்றவன் பெண்ணவளை முத்தமிட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக முற்றுகையிட ஆரம்பித்தான். ஆரம்பித்த சில நிமிடத்தில் அவள் அவனை தடுக்க,

 

“என்னாச்சு? ஆர் யூ ஒகே?” என்று பதறி கேட்டான் யாஷ். தமிழோ,

 

“அதெல்லாம் ஒகே தான். ஒரு டவுட்டு?” என்று கேட்க,

 

“இந்த நேரத்துல என்ன டவுட்டு உனக்கு.. சரி சொல்லு என்ன” என்றான். அவளோ,

 

“இல்ல நாம பண்பொழி முருகன் கோவிலுக்கு போயிருந்தப்போ எனக்கு சில்லாஞ்சிருக்கியேன்னு பெயர் வச்சதுக்கு காரணம் இருக்குன்னு சொன்னீங்கல.. அது என்ன காரணம்” என்று கேட்க,

 

“பாவி. இப்போ ஏன் டி நீ அதை எல்லாம் யோசிக்குற” என்று அவன் முறைக்க அவளோ,

 

“ப்ளீஸ் சொல்லுங்க” என்றாள்.

 

“அது உன்ன இந்த ஊருக்கு வந்த உடனே பார்க்கும் போது அந்த சாங் தான் ஓடுச்சு. அதுமட்டுமில்ல “சிருக்கி” அப்படிங்குறதுக்கு “கற்றாழை”ன்னு சொன்னேன்ல.. அது என்ன செய்யும் பேசிக்கா” என்று கேட்டான்.

 

“உடம்பு சூட்டை தணிக்கும்.”

 

“ஹான் அதே தான். என் உடம்புல ஏற்படுற சூட்டை தணிக்க போறது நீ தானே. அதான் அப்படி சொன்னேன்” என்றவன் கண்ணடிக்க,

 

“ச்சீ புத்திய பாருங்க..”

 

“இதை அன்னைக்கு சொல்லிருந்தா செருப்பால அடிசுருப்ப தானே” என்க 

 

“கண்டிப்பா” என்றாள்.

 

“நல்லவேளை சொல்லல. சரி இனிமே எந்த டவுட்டா இருந்தாலும் காலைல கேளு” என்றவன் தனது பணியை தொடங்கினான்.

______________________

 

அங்கு நேத்திரனின் வீட்டில் 

குளித்து கிளம்பிய தேன்மொழி நேத்திரன் அன்று வாங்கி கொடுத்த பட்டு புடவையை உடுத்தி, தன்னை தானே ரசித்தவள் மல்லிகை சாரத்தை சூடி நெற்றி வகுட்டில் குங்குமமும் வைத்துக் கொண்டவள், அவன் வாங்கி கொடுத்த வளையல் சகிதம் அனைத்தும் அணிந்திருந்தவள் அவனின் வருகைக்காக காத்திருந்தாள் சிறு பதற்றத்துடன். அவளை வெகு நேரம் காக்க வைக்காமல் அவனும் வந்து சேர்ந்தான். தான் எடுத்து கொடுத்த புடவையை கட்டி கதவினை திறந்தவளை பார்த்தவனுக்கு ஒரு நொடி உணர்வுகள் அனைத்தும் குவிந்தாலும் அவள் முகத்தில் இருந்த பதற்றம் புருவம் சுருக்க வைத்தது. உணர்வுகளை தனக்குள்ளே புதைத்தவன்,

 

“என்னாச்சு ஹனி?” என்றான்.

 

காரணமே இல்லாமல் அவள் கண்கள் கலங்க அறைக்குள் சென்று நிலைகண்ணாடியின் முன் நின்று அழுதுக் கொண்டிருந்தாள். அவளின் பின்னே வந்தவன் பின்னிருந்து அணைத்துக் கொண்டான். அதில் ஆறுதல் மட்டுமே இருந்தது. கதவை திறந்ததும் பார்த்த கணம் தோன்றிய காமம் எதுவும் இல்லை. அவளும் உணர்ந்தாள் தான் அதனை. 

 

"என்னாச்சு?" என்றான். அவளிடம் மௌனமே. அவளை தன் புறம் திருப்பியவன்,

 

"இங்க பாருட்டி.. உன்னை சும்மா பார்த்துட்டு மட்டுமே என்னால இருக்க முடியாது தான். அது எனக்கே தெரியும்.. ஆனா நீ மனப்பூர்வமா இந்த விஷயங்கள் எல்லாம் வேணும்னு நினைக்குரியா இல்லையான்னு.. உன் முகத்துல இருக்குற உணர்ச்சிகளை வச்சு என்னால கண்டுபிடிக்க முடியும்.. எதுக்கு இப்படி டென்ஷன்.. அதுக்காக உன்கிட்ட வராமயே இருக்குற அளவுக்கு நான் ஒன்னும் அவ்ளோ நல்லவன் இல்ல.. நானும் மனுஷன் தானே.. எனக்கு தோணும் போது உன்னை நெருங்குவேன்.. ஆனா உனக்கு விருப்பம் இல்லன்னு உன் முகத்துல சின்ன ரியாக்ஷன் தெரிஞ்சா கூட நான் அப்படியே விலகிடுவேன்.. நீ முழு மனசா என்கிட்ட வரணும்னு தான் நான் விருப்பப்படுவேனே தவிர.. ஒருபோதும் நான் மட்டும் சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்க மாட்டேன்.. " என்றான் அவளின் கண்களை ஆழ பார்த்து. அவளோ,

 

"இப்போ நானா தானே ரெடி ஆகியிருக்கேன்.. இப்போ என் முகத்துல உங்களுக்கு எந்த ஒரு உணர்வும் தெரியலையா" என்று பாவமாக கேட்டவளை பார்த்து சிரித்தவன்,

 

"இல்லையே.. நமக்காக இவ்ளோ செஞ்சிருக்கான்.. இவனுக்காக நாம ஏன் நம்மள கொடுக்க கூடாதுங்குற தியாகம் தான் தெரிஞ்சுது.. எனக்கு தேவை தியாகம் இல்ல டி.. ஒருவேகத்துல நீ ரெடி ஆகி இருந்தாலும் உன்கிட்ட ஒரு பயம் இருக்கு.. இதை கூட என்னால புரிஞ்சுக்க முடியாதா.. உன் மனசார நீ உன்னை என்னைக்கு எனக்கு கொடுக்குரியோ.. அன்னைக்கு நீ சிக்குன.. அதுவரை உனக்கு விடுதலை.. இப்போதைக்கு அப்பப்போ நான் உனக்கு கொடுக்குற கிஸ், ஹக் இது போதும் எனக்கு.." என்று கூறி செல்ல எத்தனித்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி,

 

"அப்புறம் நான் ப்ரெஷ் ஆகிட்டு வறதுக்குள்ள இந்த புடவையை கழட்டிட்டு வேற புடவை போட்டுக்கோ.. இதுல ரொம்ப அழகா இருக்க.. இப்படி எல்லாம் என்னை சோதிக்க கூடாது என்ன.. கண்ட்ரோல் லாஸ் ஆகுது டி.. புரிஞ்சுக்கோ.. ஐம் பாவம்" என்றவன் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொள்ள இன்னும் இன்னும் அவன்பால் ஈர்க்கப்பட்டாள் பெண்ணவள். அவன் திரும்ப வந்து பார்க்கும் பொழுதும் அவள் அதே புடவையிலேயே இருக்க அவனோ கேள்வியாக பார்த்தான். அவள் கண்களில் அப்பொழுது இருந்த பதற்றம் இப்பொழுது இல்லை. மாறாக வெட்கம் தான் குடிக் கொண்டது. 

 

“மனுஷன் ஓரளவுக்கு தான் பொறுமையா இருப்பேன். நீ ரொம்ப சொதிக்குற. அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்” என்றிட அவளோ,

 

“உங்களை நான் பொறுமையா இருக்க சொல்லவே இல்லையே” என்று கூறியவள் தலையை தாழ்த்திக்கொள்ள அவளை நெருங்கியவன்,

 

“நிஜமாவே உனக்கு ஒகே வா அப்போ” என்று கிறக்கமான குரலில் கேட்க அவளோ,

 

“நீங்க மட்டும் என்னை காலேஜ் படிக்கும் போது காதலிக்கல. நானும் உங்களை காதலிச்சேன். எனக்கு தான் கூச்சம் சொல்ல முடியல. ஆனா நீங்க சொல்வீங்கன்னு வெயிட் பண்ணேன். அதுக்குள்ள என்னென்னவோ நடந்துருச்சு” என்று அவள் கூற அவள் கூற்றில் நேத்ரனோ இன்பமாய் அதிர்ந்தபடி பார்த்தான். 

 

“சரி இப்போ எதுக்கு இதை சொல்ற” என்றான் சிரித்தபடி.

 

“மாங்கா மாங்கா.. எனக்கும் ஒகே தான்னு சொல்ல வரேன் புரியுதா?” என்று கேட்க அதில் சத்தமாக சிரித்தவன்,

 

“அப்போ ஆரம்பிக்கலாம்னு சொல்றியா” என்று கேட்க, அவளும் ஹ்ம்ம் என்க அதன் பின் அவ்வறையில் அவளது “ஹ்ம்ம்” என்ற முனகல் மட்டுமே கேட்க தொடங்கியது.  

_____________________________

 

இவ்வாறு இரு ஜோடிகளின் இல்லறமும் நல்லறமாக அரங்கேற காலமுழுவதும் இதே மகிழ்வோடு இவர்கள் திளைத்திருக்க வாழ்த்துவோமாக 

 

முற்றும்… 

 


   
ReplyQuote

You cannot copy content of this page