All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 40

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 68
Topic starter  

நைட் லைஃப் - 40

ஒட்டு மொத்த பிரச்சனையும் முடிந்து ஒரு வழியாய் மித்திரன் ஆருத்ரா திருமணமும் சிறப்பாக நடந்து முடிந்தது. மித்திரன் வீட்டில் சொந்தங்களும் நெருங்கிய நட்புகளும் கூடியிருக்க, ஒரு அறையில் இரவு நேர சடங்கிற்காக ஆருத்ராவை அவளின் தோழிகள் தயார்படுத்திக் கொண்டு இருந்தார்கள். முதலிரவை நினைத்து பதட்டத்துடன் அமர்ந்திருக்க, அவளின் தோழிகள் ஆறுதல் கூறாமல் மேலும் அவளை வம்பிழுத்துக் கொண்டு இருந்தார்கள். 

 

“இப்போ எதுக்கு நீ இவ்வளவு பதட்டமா இருக்க? டார்க் ரோமன்ஸ் படிக்குறேன்னு பிட்டு கதைய தானே ஹாஸ்டல்ல படிப்ப.. இப்போ லைவ்ல பண்ண போற அப்பறம் என்ன?” என யுகி சீண்டிட அவளை சிவந்த முகத்துடன் முறைத்தாள் ஆரு. மித்திரன் இதற்காக தான் தீவிரமாய் காத்துக் கொண்டு இருக்கிறான் என அறிந்து இருந்தவள் கூச்சத்துடனே நெளிந்துக் கொண்டு இருந்தாள். சந்தன நிற புடவையில் மெலிதான ஒப்பனையும், கூடவே புது பெண்ணிற்கான பொலிவும் அவள் முகத்தில் போட்டி போட்டுக் கொண்டு மின்ன, மித்திரனை நினைத்தாலே அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது. மூன்று பேரும் அவளை கேலி செய்துக் கொண்டு இருக்க, ஆருத்ராவின் மாமியார் அவளுக்கு திருஷ்ட்டி கழித்து கையில் பால் சொம்பை கொடுத்து விட்டார். மூன்று பேரும் அப்பாவி போல் நடிக்கும் ஆருத்ராவை வம்பிப்லுத்து மித்திரன் அறையில் தள்ளி விட்டார்கள். 

 

“இவ அநியாயத்துக்கு இவ்வளவு வெக்கபடுவான்னு நான் நினைக்கவே இல்ல” என இனி கூற, “இவ வெறும் வாய் பேச்சு தான்.. மித்திரன் சார் நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு” என கேலி செய்தாள் யுகி. அந்நேரம் அவர்கள் எதிரில் வந்த ராகவ், “யுகி உன் கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று கூறி அவளின் கையை பிடித்து இழுத்து மொட்டை மாடிக்கு சென்றான். அவள் வரவே மாட்டேன் என்று அடம் பிடித்தாலும் அவளை இழுத்து செல்ல சாதனா சிரித்தபடியே, “அடுத்த விக்கெட் காலி” என்று இனியிடம் கூறியபடியே திரும்ப, அவளை ஆல்வின் தூக்கிக் கொண்டு வெளியே நடந்தான். அவர்கள் செயலில் முழித்தவள், “அடபாவிங்களா நான் மட்டும் தான் ஒன்டிகட்டையா?” என புலம்பியபடியே அறைக்கு செல்ல திலக் நினைவு வரவும் தனக்குள் சிரித்துக் கொண்டாள். இருவர் மனதிலும் காதல் இருந்தாலும் யாருமே அடுத்த நகர்வை எடுத்து வைக்காததனால் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

 

இழையினியை தூக்கிக் கொண்டு சென்ற ஆல்வின் அவனின் காரில் கிடத்தி அவளை அங்கிருந்து கடத்திக் கொண்டு சென்றான். அழகாய் அடர் நீல நிற புடவையில் இருந்தவளை நாள் முழுதும் ரசித்தவன் பொறுமையிழந்து அவளை தூக்கி வந்து விட்டான். “ஒரு தமிழ் பொண்ணு கிட்ட வாழ்க்க முழுக்க சிக்க போறேன்னு எவனாவது போன வருஷம் சொல்லி இருந்தா அவன் முகத்த பேத்து இருப்பேன்.. ஆனா உன்ன பாத்த அப்பறம் எல்லாமே மாறிடுச்சு” என வசனம் பேச, அவனை ஏற்ற இறக்கத்துடன் பார்த்த இனி, “என்ன தவிர வேற அசிஸ்டன்ட் புடிச்சிட்டின்களா? டயலாக் எல்லாம் பலமா வருதே.. ஆமா நான் எப்போ உங்க கூட வாழ்க்க முழுக்க இருக்க போறேன்னு சொன்னேன்?” என புருவத்தை ஏற்றினாள். 

 

அவளின் ஒவ்வொரு செயலும் அவனை அவளிடம் கட்டி இழுத்தது. புடவையில் அவளை கண்டதுமே விழுந்து விட்டான். காரை ஓரமாக நிப்பாட்டிய ஆல்வின், “கேரமல், நிஜமா நான் பிளட் ஆகிட்டேன்.. எத்தனையோ பொண்ணுங்க ஹாட்டா டிரஸ் பண்ணி பாத்து இருக்கேன்.. ஆனா திஸ் சேரி இஸ் சம்திங்.. அதுவும் அந்த கேரமல் இடுப்பு இருக்கே” என்றவன் பார்வை அதனை தேடிட அவன் தோளிலே லேசாக குத்தியவள், “ஆல்வின் சும்மா இருங்க” என அதட்டினாள். “ப்ளீஸ் கேரமல் எனக்கு எஸ் சொல்லு.. நம்ம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்.. உன்ன நான் ஜேர்மன் கூட்டிட்டு போறேன்.. இந்த டேட்டிங் அவுட்டிங் இதுக்கு எல்லாம் என்னால வெயிட் பண்ண முடியாது.. உனக்காக தான் நான் திரும்ப ஜேர்மன் போகாம இங்கயே இருக்கேன்” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூற அவளுக்கு தான் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமாக இருந்தது. 

 

“வீட்டுலையும் ஓகே சொல்லிட்டாங்க தான்.. பட் கொஞ்ச நாள் லவ்வர்ஸா இருப்போம்.. அப்பறம் கல்யாணத்தை பத்தி பேசலாம்” என்றிட, அவள் கன்னத்தில் முத்தமிட்டான் ஆல்வின். அவளின் ஆசையை புரிந்துக் கொண்டவன் அவளுக்காய் காத்திருந்தான். 

 

யுகியை தரதரவென்று மொட்டை மாடிக்கு இழுத்து சென்ற ராகவ் அவளை ஒரு இடத்தில் நிற்க வைக்க அவளோ அவனை பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள். “சத்தியமா என்னால முடியலை.. தெரியாம உன்ன வேணாம் சொல்லிட்டேன்.. அதுக்காக என்ன பழி வாங்காத டி.. புத்தி கெட்டு போய் சொல்லிட்டேன் போதுமா.. எனக்கும் உன் மேல லவ் இருக்கு” என கெஞ்சாத குறையாக கூறினான். 

 

தாய்லாந்தில் இருந்து வந்ததில் இருந்தே அவள் பின்னே அவன் சுற்றிக் கொண்டு இருக்க, அவளோ அவனுக்கு போக்கு காட்டிக் கொண்டு இருந்தாள். சாதாரணமாய் காதலை நிராகரித்து இருந்தாள் கூட அவளுக்கு அவன் மீது இவ்வளவு கோவம் இருந்திருக்காது. ஆனால் அவள் மனம் நோகும்படியாக பேசி வார்த்தைகளை விட்டதனால் அவனை கடுப்பேற்றிக் கொண்டு இருக்கிறாள். “ப்ளீஸ் என்ன பாரு” என அவள் முகத்தாடையை அவன் பக்கம் திருப்ப அவனை பயங்கரமாய் முறைத்தாள். “சாரி.. இப்போ எனக்கு உன் மேல பீலிங்க்ஸ் இருக்கு போதுமா?” என்றிட அவனின் கையை வெடுக்கென்று தள்ளி விட்டவள், “எனக்கு இப்போ இல்ல” என வீம்பாக கூறினாள்.

 

 “அப்படிலாம் சொல்ல கூடாது.. அது எப்படி லவ் உடனே போகும்.. உனக்கும் என் மேல லவ் இருக்குன்னு தெரியுது.. என் மேல கோவத்துல தான் இப்படி பன்றன்னு புரியுது.. இதுக்கு தண்டனையா லைஃப் லாங் கூட இருந்தே என்ன பணிஷ் பண்ணேன்” என ஆசையாக கூறி அவளை நெருங்க அவன் நெஞ்சின் மீது கை வைத்து தள்ளி விட்டவள், “அந்த ஆசை எல்லாம் எனக்கு இல்ல.. வேற பொண்ண பாத்துக்கோங்க..” என வெடுக்கென்று கூறிட ராகவ் மனம் வாடியது. இத்தனை மாதங்கள் கெஞ்சியும் அவள் மனம் இறங்கவில்லையே, மெய்யாக காதல் போய் விட்டதோ என்று யோசித்தான். “சாரி யுகித்தா, எனக்குன்னு யாருமே இல்ல.. குடும்பம் இல்லாதனால வாழ்க்கை முழுக்க இப்படியே வாழ்ந்தரலாம்ன்னு நினைச்சேன் அதான் உன்ன அப்போ வேணாம்ன்னு சொன்னேன்.. எனக்குன்னு யாராவது இருந்தா என்னால அவங்களுக்கு பிரச்சனை வரும் தான் நான் லவ் பத்தி யோசிச்சதே இல்ல.. ஆனா நீ லவ் சொன்னப்போ எனக்கும் ஆசை வந்துச்சு.. ஆனா இப்போ அதை நானே கெடுத்துட்டேன்.. மேபி குடுத்து வைக்கலையோ என்னவோ” என வருத்தத்துடன் பேசி முடிக்கும் முன்பே அவன் இதழை அவள் இதழால் மூடியிருந்தாள் யுகி. அவனை சற்று அலைய விட்டு பாப்போம் என்று இருந்தவளுக்கு அவனின் வருத்தத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

 

“புடிக்காம தான் உங்க கூடவே இருக்கேனா?” என்று முத்தத்தை நிறுத்தி விட்டு கேக்க, “கிஸ் பண்ணி முடிச்சிட்டு உன் லவ் சொல்லு” என்று கூறி அவள் பின்னங்கழுத்தை பிடித்தவன் ஆழமாய் அவளின் இதழை தீண்டினான்.  

 

ஒவ்வொரு ஜோடியும் காதல் உலகில் மூழ்கி இருக்க, முதலிரவை கொண்டாட வேண்டியவனோ கன்னத்தில் கை வைத்து மெத்தையில் அமர்ந்திருந்தான். ஆருத்ரா உள்ளே வந்ததும் அவளை பாய்ந்து அணைக்க, அவனை தள்ளி விட்டவள், நகைகளை கழட்ட வேண்டும் என்று காரணம் கூறி கண்ணாடி முன்பு நின்று கழட்டவே நேரமெடுத்துக் கொண்டு இருந்தாள். இத்தனை மாதம் பொருத்திருந்தவனுக்கு ஒரு ஐந்து நிமிடம் பொறுக்க முடியவில்லை. 

 

“எவ்ளோ நேரம் ஆரு?” என பரபரக்க, “அட சும்மா இருங்க மித்து கழட்ட வேணாமா” என சிலுப்பிக் கொண்டாள். “வந்ததுல இருந்து சும்மா தானே இருக்கேன்.. நீ தான் ஒன்னும் பண்ண விடலையே..” என மனதில் புலம்பியவன், “ஆரு மா.. நான் வேணும்ன்னா ஹெல்ப் பண்ணவா?” என ஆசையாக கேட்டு எழ, அவனை பார்வையாலே அடக்கினாள். பதட்டத்துடன் உள்ளே வந்தவளுக்கு அவனின் அவசரத்தை கண்டு வேடிக்கையாக இருந்தது. தன் சரிபாதியிடம் தன்னை கொடுக்க அவளுக்கு தயக்கம் கொஞ்சமும் இல்லை. தாய்லாந்தில் நடந்ததை நினைத்து பார்த்தவளுக்கு அப்பொழுது தான் ஒரு சந்தேகம் வந்தது. உடனே அவனருகில் வந்து அமர்ந்தவள், “மித்து எனக்கு ஒரு சந்தேகம்” என்றிட ஆர்வமாய் அவளின் கையை பிடித்துக் கொண்டவன், “அதை எல்லாம் விளக்குறதுக்கு தானே நான் இருக்கேன்” என குழைவாக அவளருகே நெருங்க, “ஹென்றிய எப்படி கண்டு புடிச்சிங்க? அதை நீங்க சொல்லவே இல்லையே?” என கேள்வி கேட்க மித்திரனுக்கு புஸ்சென்று இருந்தது. அவளை கடுப்புடன் பார்த்தவன், “இப்போ அதுதான் முக்கியமா.. லைட் ஆப் பண்ற நேரத்துல இந்த கேள்வி எல்லாம் தேவையா?” என்றிட, “எனக்கு தேவை” என்றாள். 

 

தன் நிலையை நினைத்து நொந்தவன், “அன்னிக்கு வீட்டுல பாம் வெடிச்சதுல அப்போ ஹென்றி மட்டு உசாரா பின்னாடி வந்தான்.. அந்த நேரம் அவன் போன் பாத்துட்டே பொறுமையா வரான்னு நினைச்சேன், ஆனா அந்த பாம் பத்தி தெரிஞ்சதும் தான் அவன் மேல டவுட் வந்துச்சு. அதை குறிப்பிட்ட மீட்டர் தூரத்துல இருந்தா தான் ஆக்டிவேட் பண்ண முடியும். சுத்தி வெளிய சந்தேகபடுற மாதிரியான ஆளுங்களும் இல்ல சோ வீட்டுக்குள்ள தான் கெஸ் பண்ணி அவனை பத்தி விசாரிச்சோம்.. அதுவும் இல்லாம அவனும் ரோகனும் அடிக்கடி மீட் பண்ணிப்பாங்க.. ரோகன் போன் ட்ராக் பன்னதுலே இவன் தான் வாங்ன்னு தெரிஞ்சிது” என்றிட யோசனை உடனே தலையசைத்தாள். 

 

“ஆமா அப்போ அவன் தான் கிங்ன்னு எப்படி கண்டு புடிச்சிங்க?” என அடுத்த கேள்வி கேக்க, “மனுசன சோதிக்குறாலே” என புலம்பியவன், “கிங் போல இதுக்கு முன்ன ரோகன் கிட்ட பேசி இருக்கான், வாங் அண்ட் கிங் லோகேசன் ஒரே இடத்துல காட்டுச்சு.. அவன் பண்ண தப்பே கிங்கா கல்கத்தா மினிஸ்டர் கிட்ட அறிமுகமாகி சிதம்பரம் கிட்ட வாங்கா பேசி இருக்கான்.. அங்க தான் சந்தேகம் வந்து அவன் தான் இவன்னு கண்டு புடிச்சோம்.. இப்போ அவன் எங்க கஸ்டடில இருக்கான்.. அவனை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கோம்.. அவன் பேர யூஸ் பண்ணி மத்த கேங் புடிக்க போறோம் போதுமா? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா?” என கடுப்புடனே கேட்டான். அதில் சிரித்தாலும் அவனை மெச்சும் பார்வை பார்த்தாள். 

 

“வாவ்.. செம்ம மித்து.. பயங்கர பிரில்லியன்ட் நீங்க.. ஆன்.. அப்பறம்..” என ஆருத்ரா மேலும் கேக்க வர அவளை மெத்தையில் சரித்தவன், “இதுக்கு அப்பறம் உன் வாய்ல இருந்து என் பேரு மட்டும் தான் வெளிய வரணும்.. என்ன ரொம்ப சோதிச்சிட்ட.. அதுக்கு பனிஷ்மென்ட் குடுக்கணும்” என்று கூறி அவள் கைகளை தலைக்கு மேல் அழுத்தி பிடித்தவன், கழுத்தில் முத்தமிட ஆரம்பிக்க, கண்களை அகல விரித்தாள் ஆரு. ஒற்றை கையால் அவளின் கைகளை அழுத்தி பிடித்தவன் அவளை நிமிர்ந்து பார்த்து, “ஐ லவ் பொண்டாட்டி” என காதலாக கூறியவன் அவள் நெற்றியில் இதழ் பதிக்க, அதனை கண் மூடி அனுபவித்தாள். மூடிய அவளின் இமைகளுக்கு குட்டி முத்தம் ஒன்றை பரிசாக கொடுத்தவன், சிவந்த கன்னங்களை மீசை குத்த முத்தை கொடுத்து மேலும் சிவக்க வைத்தான். கண்கள் மூடி கவணவன் கையில் உருகியவளை கண்டு மந்தகாசு புன்னகை ஒன்றை சித்தியவன், “கண்ணை திறந்து பாரு பொண்டாட்டி.. ஒரு நிமிஷம் கூட நீ கண்ண மூடக் கூடாது.. இதான் உனக்கு பணிஷ்மெண்ட்” என்றிட மெல்ல அவள் இமைகளை திறந்தாள். அவனுக்கு கீழ் மெத்தையில் இருப்பதை நினைக்கவே உடலெல்லாம் சிலிர்க்க அவளால் அவனை பார்க்கவே முடியவில்லை. கூச்சத்தில் கீழ் உதட்டை கடிக்க, அதனை விரல்களால் பிரித்தவன், “இனிமேல் அது என்னுது.. சாரி பொண்டாட்டி நீ கடிக்க கூடாது” என்று கூறி அவளின் உதட்டை சுவைக்க ஆரம்பித்தான். 

 

அவனின் முத்தத்தில் கிறங்கியவள், கைகளை விடுவித்து அவன் கழுத்தில் மாலையாக போட்டுக் கொண்டாள். இருவர் உடலும் ஒன்றோடு ஒன்று உரச, ஆடைகள் தடையாக மாறியது. முத்தத்தை அவள் கழுத்திற்கு இறக்கி சென்றவன், அவளை முழுதாய் தன்னவள் ஆக்கிக் கொள்ளும் வேளையில் மூழ்கி இருவர் உயிரும் ஒன்றாய் கலக்க செய்தான். காதலுடன் கூடிய இல்லறம் இனிதாய் துவங்க இருவரும் ஒருவருக்குள் ஒருவர் ஒன்றினார்கள். மித்திரன் சொன்னது போலவே ஆருத்ரா வாயில் இருந்து அவன் பெயரை மட்டுமே மந்திரமாய் ஒலிக்க செய்தான். 

 

விடிய விடிய புதுவித உணர்வுகளில் திளைத்திருக்க ஆருவின் கெஞ்சல் மொழிகள் அடங்கவே இல்லை. அவளின் சிறு சிறு சத்தமும் அவன் செவிக்கு தேனாக இனிக்க அதனை மீண்டும் மீண்டும் மீட்டினான். அவர்களின் இனிமையான இல்லற வாழ்க்கை இனிதே துவங்கியது. 

 

ஹென்றியை பிடித்ததோடு மித்திரனின் தேடல் முடியவில்லை. அவனுக்கு பின்னால் இருக்கும் மிகப்பெரிய கூட்டத்தை ஹென்றியை வைத்து பிடிக்க நினைத்தான். அவனின் வேட்டை இனிதே துவங்கும்.

                        சுபம்✨

கருத்து திரி :

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/


   
ReplyQuote

You cannot copy content of this page