All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 16.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 6 months ago
Posts: 50
Topic starter  

தேடல் - 16

 

இரு பெண்களும் வீட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு பேசிககொண்டிருக்க, அப்போது அவர்களின் வீட்டு தொலைபேசி அடித்ததில், வைத்தீஸ்வரி அதை எடுக்க எழும்ப, 

 

அதை கண்ட தெய்வானை “வைத்தீஸ்வரி கால் வலிக்குன்னு சொன்ன தான.. நீ உக்காரு நான் பாக்குறேன்” என்று கூறி அழைப்பை ஏற்றார்.

 

மறுமுனையிலிருந்து “நான் உலகநாதன் பேசுறேன்.. தெய்வானை அம்மா இருக்காங்களா”

 

“அட சொல்லுங்க சமந்தி.. நான் தான் பேசுறேன்.. என்ன விஷயம்”

 

“அது வந்துமா.. எப்படி சொல்லுறதுன்னு தெரியல.. இப்படியொரு விஷயத்த நாங்களே எதிர்பார்க்கல.. உங்கள ஏமாத்தினதுக்கு எங்கள மன்னிச்சிடுங்க”

 

“என்ன சம்பந்தி சொல்லுறீங்க.. எனக்கு ஒன்னும் விளங்கல”

 

“நீங்க என்னோட பொண்ணு.. உங்க வீட்டுக்கு மருமகளா வருவான்னு நினைச்சிட்டுருக்கீங்க.. ஆனா, அவ நம்ம எல்லாரையும் ஏமாத்திட்டு யாரையோ காதலிக்கிறேன்னு சொல்லி அவன்கூடவே ஓடி போயிட்டா” என்க 

 

அதை கேட்டு அதிர்ந்தவர் “என்ன இப்படி சொல்லுறீங்க.. இதெல்லாம் முன்னாலயே சொல்லுறது இல்லையா.. கல்யாணமே வேண்டாம்ன்னு சொன்னவன் உங்க பொண்ண பிடிச்சி கட்டிக்குறேன்ன்னு சொன்னான்.. இப்போ நான் என் பையனுக்கு என்ன பதில் சொல்லுவேன்” 

 

“புரியுதுமா.. இப்போ என்னால மன்னிப்பு தவிர வேற எதுவும் கேட்க முடியாது.. மன்னிச்சிடுங்கமா தம்பிக்கு பிடிச்ச பொண்ணு சீக்கிரமே தேடி வரும் கவலைப்பாடாதீங்க.. நான் வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்து விட, 

 

பாவம், அவருக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை, தன் மகனிடம் எப்படி இதை பற்றி கூறுவது அவன் எப்படி எடுத்து கொள்வான் என்று அவனை நினைத்து வருந்தியவாறே வைத்தீஸ்வரி அருகில் அமர்ந்தார்.

 

அவரின் வாடிய முகத்தை கண்ட வைத்தீஸ்வரி “என்னாச்சி அண்ணி.. யாரு பேசுனா.. என்ன சொன்னாங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க”

 

“அது ஆதி ஒரு பொண்ண பிடிச்சிருக்குன்னு சொன்னான்ல.. அவ வீட்டிலிருந்து தான் கூப்பிட்டாங்க” என்க,

 

அதில் முகம் கருத்தவர் “என்ன சொன்னாங்க”

 

“அவங்க வீட்டு பொண்ணு யாரையோ காதலிச்சு அவன் கூட ஓடி போயிட்டாளாம்.. அதுக்கு மன்னிப்பு கேட்டாங்க” என்க,

 

அதை கேட்ட வைத்தீஸ்வரின் முகமோ இக்கல்யாணம் நடக்காது என்பதையறிந்து ‘எப்படியாவது பேசி தன் அண்ணன் மகனை தன் மகள் கழுத்தில் தாலி கட்ட வைக்க வேண்டுமென்று’ அவரின் ஆசையை நிறைவேற்ற திட்டத்தை போட்டவரின் உள்ளமோ சந்தோசத்தில் குதிக்க,

 

அவற்றை வெளியே காட்டாமல் சோகமாக “என்ன அண்ணி சொல்லுறீங்க.. இதெல்லாம் முன்னாலேயே நல்ல விசாரிச்சுருக்கலாம்ல.. இப்போ பாருங்க இதுனால என் மருமகன் மனசு எம்புட்டு பாடுப்படும்..”

 

“பொண்ணுக்கு கல்யாணம் பிடிக்காம ஓடி போயிட்டு.. அவங்களுக்கே இப்போ தான் தெரியும் போல.. பாவம் அவங்களையும் குத்தம் சொல்ல முடியாதுல”

 

“அதுவும் சரி தான் அண்ணி.. தலைக்கு வந்தது தலைப்பாவோட போச்சுன்னு நினைச்சி சந்தோசப்பட்டுக்குவோம்.. ஒருவேளை கல்யாணம் வரை வந்து தாலி கட்டுற நேரத்துல பொண்ணு ஓடி போயிருந்தா.. எல்லாருக்கும் தான் அவமானம்..

 

விட்டு தள்ளுங்க என்னோட மருமகனுக்கு ஏத்த பொண்ணு இவயில்ல போல.. வீட்டுல முறைபொண்ண வச்சிட்டு வெளிய பொண்ணு தேடுனா இதான் நிலமை” என்க,

 

அப்போது நண்பர்களுடன் வீட்டிற்கு வந்த ஆதி, அவர்கள் இருவரும் பேசுவதை முழுதாக கேட்டாலும் கேட்காதது போல் “என்ன அத்தை.. எங்க அம்மா தனியாயிருக்கும் போது பிரைன் வாஷ் பண்ணி கோல் போட பாக்குறீங்களா” என்று கேட்டு, நண்பர்களுடன் அவரகருகில் அமர்ந்தான்.

 

“ஆமா ஆமா.. உங்க அம்மா சின்ன குழந்தை அதான் சாக்லேட்ல மயக்கம் மருந்து கலந்து கொடுத்து.. என் இஷ்டத்துக்கு ஆட்டி வைக்குரனாக்கோம்.. போடா இவனே”

 

அதில் சிரித்தவன், தன் அன்னை வாடிய முகத்தை கண்டு “என்னாச்சிமா.. என் டல்லாயிருக்கீங்க.. அத்தை பேசினத நினைச்சி குழப்பிக்குறீங்களா” என்க,

 

அதை கேட்டு வைத்தீஸ்வரி முறைக்க, தெய்வானையோ “வந்ததுமே அவள வம்பு பண்ணலன்னா உனக்கு தூக்கம் வராதாதுல.. அவ என்ன ஒன்னும் பண்ணல.. முத நீங்க வந்த விஷயத்த சொல்லுங்க”

 

“நான் சொல்லுறேன்.. முத நீங்க ஏதோ என்கிட்ட சொல்ல நினைக்கிறீங்க அத சொல்லுங்க”

 

“அது வந்துபா.. நீ ஒரு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னியே அந்த பொண்ணு வீட்டுல கால் பண்ணினாங்க”

 

“என்னவாம்”

 

“அந்த பொண்ணு யாரையோ லவ் பண்ணி அவன் கூடவே ஓடி போயிடுச்சாம்.. அதான் அந்த பொண்ணு அப்பா கால் பண்ணி நமக்கு தெரியப்படுத்திட்டு..

 

உனக்கு பிடிச்ச பொண்ணு சீக்கிரமே உன்ன தேடி வரும்ன்னு சொல்லி மன்னிப்பு கேட்டாரு” 

 

“அவரு மன்னிப்பு தேவையில்ல.. நான் ஆசைப்பட்ட பொண்ணு எனக்கு கிடைச்சாச்சு.. சும்மாயில்ல நான் தாலி கட்டுன பொண்டாட்டியா” என்க,

 

இவன் கூறியதை, இருவருமே அதிர்ந்து விட்டார்கள்.

 

வைத்தீஸ்வரியோ “என்னடா உளருற..”

 

“உண்மையா தான் அத்த சொல்லுறேன்.. நான் ஆசைப்பட்ட.. அதே மகிழ் தான் இப்போ என்னோட பொண்டாட்டி” 

 

அதை நம்பாத, அவனின் அத்தையோ அவனின் நண்பர்களை பார்க்க, அவர்களும் அவன் கூறுவது உண்மை என்று தலையாட்டினர்.

 

ஆதி “அம்மா.. சில பல விஷயங்கள் நடந்து போச்சு.. எல்லாத்தையும் சொல்லுறேன் நல்லா கேளுங்க” என்று கூறி இதழ் குவித்து ஊதியவனோ “அம்மா.. நான் மகிழ லவ் பண்ணினது போல அவளும் என்ன லவ் பண்ணியிருக்கா.. அவ வீட்டுல பாத்த மாப்பிளை நான் தான்னு தெரியாம.. ராத்திரியோட ராத்திரியா அங்கிருந்து சென்னை வந்தவ.. ஒரு கோவிலுக்கு வந்து எனக்கு கால் பண்ணினா.. ‘இப்போ நான் கோவியிலுக்கு வெளிய நிக்கிறேன் உடனே வந்து என்னோட கழுத்துல நீ தாலி கட்டணும்ன்னு’ சொல்லி நான் பேசுறது கூட கேட்காம கால் கட் பண்ணிட்டா.. சரி நேருல போய் பேசிக்கலாம்ன்னு போனேன்.. அதுக்குள்ள அவளுக்கு ஆக்சிடென்ட்..” என்று கூறி மீதி ஹர்ஷாவிடம் கூறியதை கூறினான்.

 

அதை கேட்ட அன்னையோ “அந்த பொண்ணு இப்போ எப்படிடாயிருக்கா.. நான் வந்து பாக்கலாமா”

 

“அதான் சொன்னேனே சில விஷயத்த மறங்துட்டா.. மத்தப்படி ஷீ ஸ் ஆல்ரைட்.. அப்புறம் இப்போ பாக்க முடியாது.. நான் அவள கூட்டிட்டு டெல்லி போகலாம்ன்னு இருக்கேன்.. போயிட்டு நேரா இங்க தான் உன் மருமகள கூட்டிட்டு வருவேன்.. அப்புறம் பாக்கலாம்”

 

“எதுக்குடா இப்போ.. அந்த பிள்ளை இருக்கிற நிலமைக்கு அலைய வைக்குற” 

 

“அவ இங்க இருந்தா எதாவது திங்க் பண்ணி ஸ்ட்ரெஸ் பண்ணிப்பா.. ஒரு ஒன் வீக் தான்.. அப்புறம் இந்த விஷயம் அவ வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டாம்.. நேரம் வரும்போது நானே பேசிக்கிறேன்.. அது மட்டுமில்ல நாங்க டெல்லிலிருந்து வந்ததும் அவகிட்ட பழச ஞாபகப்படுத்துற எதுவும் கேட்காம நார்மலா தான் பேசணும்”

 

“புரியுதுடா.. அந்த மாதிரி எந்த விஷயமும் கேட்டு கஷ்டப்படுத்த மாட்டேன்” என்க,

 

அத்தை புறம் திரும்பியவன் “அத்தை.. நானும் தாராவும் எப்போவும் ப்ரெண்ட்ஸ் மட்டும் தான்.. உங்கள நான் கஷ்டப்படுத்திருந்தா என்ன மன்னிச்சிடுங்க அத்தை.. சீக்கிரமே தாராக்கு பொருத்தமானவன உங்க கண்ணு முன்னாடி கூட்டிட்டு வருவேன்.. அவன் எப்படியிருந்தாலும் ஏத்துக்கணும் இல்லன்னா தாராக்காக எந்த எல்லைக்கும் போவேன்” என்று இறுதி வார்த்தையை அழுத்தம் கூட்டி கூறிவிட்டு நண்பர்கள், 

 

இருவரையும் பார்த்தவன் பெற்றவர்களிடமிருந்து விடை பெற்று நண்பர்களுடன் வெளியே வந்தான்.

 

அவனின் பார்வையின் அர்த்தம் வைத்தீஸ்வரிக்கு புரிந்ததோ இல்லையோ அருகிலிருந்த தெய்வானை, மகனின் பார்வை மற்றும் கூற்றையும் உணர்ந்து கொண்டு ‘அனைத்தையும் நல்லபடியாக நடத்தி கொடு’ என்று கடவுளிடம் வேண்டுதலை வைத்துவிட்டார்.

 

வெளியே காரில் ஏறிய சசியோ “டேய்.. ஒருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி கதைய சொல்லாதடா.. அப்புறம் யார்கிட்ட.. என்ன பேசினோம்ன்னு மறந்து உளரிடுவேன்”

 

“மச்சான்.. மகிழ் ஹர்ஷாக்கு நான் தான் அவங்க வீட்டுல பாத்த மாப்பிளைன்னு தெரியாது.. ஆனா, நம்ம வீட்டுக்கு தெரியுமே.. ரெண்டு பேருக்குமே ஒரே கதை தான் பட் கொஞ்சம் மாடிபை பண்ணியிருக்கேன்.. அவ்வளவு தான்.. கொஞ்ச.. நாள் தான்டா எப்படியும் உண்மை தெரியதான் போகுது.. அதுவரை கரெக்ட்டா பெர்பார்ம் பண்ணிடு மச்சான்”

 

“கடவுளே” என்று நொந்த சசியை கண்டு இருவரும் சிரித்து, பின் மருத்துவமனைக்கு சென்றனர்.

 

************

 

டெல்லிக்கு தான் போவதற்கு செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் செய்து முடித்துவிட்டு தான் ‘மகிழை பார்த்து கொள்வதாக’ கூறி நண்பர்கள் இருவருடன் ஹர்ஷாவையும் அனுப்பிவிட்டு தன்னவளை காண அறைக்குள் வந்தவன், 

 

அவள் தீவிரமாக யோசிப்பதை உணர்ந்து “இப்போ என்ன உனக்கு.. எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமா.. அப்போ என்மேல உனக்கு நம்பிக்கயில்ல.. நம்பிக்கை இல்லாம நீ என்கூட இருக்கவே வேண்டாம்.. நாளைக்கு உன் ப்ரெண்ட் ஹர்ஷாகூடவே நீ போகலாம்..”

 

குரல் கேட்டு திரும்பியவள், ஆடவனின் பேச்சில் பதறி “அய்யோ தீரா.. என்ன இப்படிலாம் பேசுறீங்க.. நான் எதுவுமே தெரிஞ்சிக்கவே விரும்பல.. ஆனா தனியா இருந்தா என் மூளை என்னோட பேச்சை கேட்க மாட்டிக்கு.. நான் என்ன பண்ணட்டும்” என்று உதடு பிதுக்கி கூறியவளை, கண்டு புன்னகைத்தவனோ “சாரி மகிழ்.. நீ எதாவது திங்க் பண்ணி.. உனக்கு எதாவது ஆயிடுமோன்னு ஹார்ஷா பேசிட்டேன்”

 

“ம்ம்.. நீங்க என்னோட பக்கத்துலயே இருந்தா நான் எதுவுமே யோசிக்க மாட்டேன்.. பிளீஸ் எங்கூடவே இருக்கீங்களா” என்க,

 

அனைத்தும் ஞாயபகம் வந்தாலும் தன் அருகிலிருக்க சொல்லி கேட்பாளா? இல்லை தன்னை அறுவெருப்பாளா? என்று சிந்தித்தவனின் கரத்தை இழுத்து தன்னருகில் அமர்த்தி, அவன் கையோடு கை கோர்த்து தோலில் சாய்ந்தவளோ “தீரா.. ஒரு உண்மைய சொல்லட்டுமா”

 

“ம்ம்”

 

“நான் முத தடவ கண் விழிக்கும் போது பாக்க வந்தீங்களே.. எனக்கு உங்கள ஞாபகமில்லேனாலும் என் மனசுக்குள்ள எனக்கானது எனக்கு திரும்பி கிடைச்ச போல உங்கள பாத்ததும் சொல்ல முடியாத ஃபீலிங்ஸ்.. மூளை மறந்தாலும் மனசு மறக்கல போல அதுனால எனக்கானவர் நீங்க தான்னு சொல்லிட்டேயிருந்துச்சு

 

அப்படியே உங்க கண்ணுல எனக்காக தெரிஞ்ச காதல பாத்ததும் மனசு சொல்லுறத நம்ப ஆரம்பிச்சுட்டேன்.. இருந்தாலும் என் மூளை எதையோ யோசிக்க வச்சி என்ன குழப்புது” என்று கூறி கண்ணீர் வடிக்க,

 

அவள் கூறும் ஒவ்வொரு வார்த்தையில் குற்றயுணர்சியில் துடித்தவன், அவளின் கண்ணீரை உணர்ந்து பதறி,

 

அவள் கன்னம் பற்றி துடைத்து “ஏய் மகிழ்.. நான் உன்கூடவே தான் இருப்பேன்.. நீ தேவையில்லாம திங்க் பண்ணி ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதடா.. எல்லாமே சரியாயிடும்” என்று கூறியவனின் மூச்சு காற்று பெண்ணவளின் மேல் பட, அதை கண்கள் மூடி அனுபவித்தவளின் இதழ்கள் துடித்து ஆடவனின் நெருக்கதில் வயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க, பெண்ணவளின் கன்னங்கள் அவளரியாமலே சிவப்பேறியது, அதில் தன்னை இழந்தவன் பெண்ணவளின் துடிக்கும் இதழ்கள் நோக்கி குனிய, மகியும் மெல்ல கண்களை திறந்து அவனின் நெருக்கத்தை ரசித்தாள்.

 

இருவரின் இதழ்களுக்கும் இடையில் ஒரு இஞ்சு இடைவெளியில் ஆடவனின் மூளையில் “மதி” என்று பூமியின் குரல் கேட்க, சட்டென்று மகியிடமிருந்து விலகி தான் செய்த செயலை நினைத்து தனக்குள் நொந்தவன், தலையை கோதி தன் உணர்வுகளை அடக்கி, எதுவுமே நடக்காதது போல் “மகிழ் டைம் ஆயிடுச்சு சாப்பிட்டு டேப்லெட் போடணும்” என்று கூறி, அவளுக்காக சாப்பாடை தட்டியில் எடுத்து வைக்க, 

 

அவனை போல், அவளால் வெட்கத்தை மறைக்க முடியாமல் இதழ் கடித்து மறைத்தாலும், அவளின் கன்னங்கள் சிவப்பேறி அவளின் அவனுக்கு காட்டி கொடுத்தது, இருப்பினும் அதை கண்டும் காணாதது போல் பெண்ணவளுக்கு உணவு ஊட்டிவிட்டு மருந்தகளையும் உட்கொள்ள வைத்தவன்,

 

அவள் உறங்கும் வரை அவளை விட்டு நகராமல் தலையை கோதிவிட, பெண்ணவளும் அவனின் அரவணைப்பில் சுகமாக தூக்கத்தை தழுவினாள்.

 

அவள் உறங்கியதும் சாப்பிட மனமில்லாமல் பழரசத்தை மட்டும் குடித்தவாறு ஜன்னலை வெறித்தவனின் கண்ணில் பெண்ணவளின் தலையணை அடியிலிருக்கும்,

 

அவள் பெற்றோர்களுக்கு எழுதியதென்று என்று ஹர்ஷா கொடுத்த கடிதம்பட, அதை எடுத்து படித்தவனின் கண்களோ அனைத்தையும் நினைத்து கலங்க, இறுதியாக இருந்த வரிகளில் அவனின் பார்வை கேள்வியாக சுருங்கியது, 

 

“என்னைக்காவது கோவம் குறைஞ்சி என்ன தேடி வரும் போது உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தருவேன்” என்ற வரிகளை மாறி மாறி படித்தவன் ‘என்ன சர்ப்ரைஸாயிருக்கும்’ என்று சிந்திக்க,

 

அவனின் மூளையோ ‘ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் குழந்த பிறக்கும்ல அத சொல்லியிருப்பா போல’ என்க, மனமோ ‘வேற ஏதோ இருக்கு’ உரைத்ததில், எதையும் கேட்கும் நிலையில் இல்லாமல் குற்றயுணர்ச்சியில் துடித்தவன் அக்கடிதத்தை தான் டெல்லிக்கு கொண்டு செல்லும் பையில் வைத்துவிட்டு சோஃபாவில் கண்கள் மூடி சாய்ந்தான்.

 

                      தேடல் தொடரும்..

 

இப்படிக்கு 

VSV42😍😍

 

 

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page