All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 24

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 36
Topic starter  

அத்தியாயம் 24

நேத்ரன் வழியில் விழுந்து கிடந்த தன் அடியாளை காலால் நகர்த்தி விட்டு அகத்தியனை நோக்கி பின்பக்கமாக முன்னேறினான். அவன் தன் கையிலிருந்த ஆயுதத்தை ஓங்கி வீசிய வேளை, அகத்தியன் சட்டென்று குனிந்து விட, நேத்ரனின் கையிலிருந்த ஆயுதத்தை மேக்னா தன்னிடமிருந்த வாளால் தடுத்து நிறுத்தியிருந்தாள்.

 

மேக்னாவிடமிருந்து இப்படி ஒரு எதிர்வினையை நேத்ரன் கிஞ்சித்தும் எதிர்பார்க்கத்திருக்கவில்லை. அவன் அதிர்ச்சியோடு அவளை பார்க்கும் போதே, அவள் வாளால் அவன் கையை கிழிக்க, ரத்தம் பீறிட்டு வந்தது. வலியில் தன்னையுமறியாமல் ஆயுதத்தை கீழே போட்டிருந்தான்.

 

அதை உணர்ந்த மற்ற ஒன்பது பேர், அகத்தியனை சூழ்ந்து நிற்க, குனிந்திருந்தவன் கீழே இருந்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு பாய்ச்சலுடன் குதித்து நின்றான்.

 

தன்னிடமிருந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அவன் சுழல் காற்றாக அதிவேகத்தில் வட்டமிட, சுற்றியிருந்தவர்கள் அனைவரின் மேலும் தப்பாமல் காயம் ஏற்ப்பட்டது. வலியில் அவர்கள் மேலும் பாய்ச்சலுடன் அவனை தாக்க முற்பட்டனர்.

 

மேக்னா தன்னவனை பதட்டத்துடன் பார்த்தபடி கையிலிருந்த வாளால் அவர்களை தாக்க முயன்றாள். அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு, நேத்ரன் பின்னாலிருந்து மேக்னாவின் கழுத்தை இறுக பிடித்து, அவள் கையிலிருந்த வாளை பிடுங்கி எறிந்தான். “மேக்னா, இனி உன் புருஷன் பிழைக்க மாட்டான். பேசாம என் கூட வந்துடு, உன்னை உயிரோட விட்டுறேன்” 

 

அதைக் கேட்டதும் ஆக்ரோஷத்துடன் தன் முழங்கையால் அவன் வயிற்றில் ஓங்கி குத்தினாள். அவன் வலி தாங்க முடியாமல் அம்மா என்ற கதறலுடன் அவள் மேலிருந்த கையை எடுக்க, அந்த கையை பிடித்து முறுக்கி அவனை கீழே தள்ளி மிதித்து அவன் வயிற்றில் காலை வைத்து காளி போன்ற ஆங்காரத்துடன் நின்றாள். இப்போது ஒன்பது பேர் மேக்னாவை சுற்றி நின்றனர்.

 

“டேய், இவளை அடக்கறது ரொம்ப கஷ்டம். இரண்டு பேரையும் போட்டுடுங்கடா” என்று வலியில் கதறினான் நேத்ரன்.

 

“மோகனா, கேட்ச் இட்” என்றபடி அகத்தியன் தன் கையிலிருந்த ஆயுதத்தை அவளை நோக்கி வீச, அவள் லாவகமாக அதை பிடித்துக் கொண்டாள். சற்றுமுன் அகத்தியன் சுழன்றது போல அவளும் சுழல வாயடைத்து போனார்கள் நேத்ரனின் அடியாட்கள்.

 

அவனுமே தன் அத்தை மகளா இவள்? இல்லை புரூஸ்லியின் வாரிசா? அகத்தியனை எப்படி தாக்குவது என்று தான் பலவிதமாக யோசித்தானே தவிர, மேக்னாவிடமிருந்து எதிர் தாக்குதல் வரும் என்றோ, அவள் சண்டை போடுவாள் என்றோ அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை. புடவையிலேயே இந்த குதி குதிக்கிறாளே என்று தோன்றும் போதே அவன் கண்கள் பளிச்சிட்டன.

 

“டேய் குதிக்கறிவளோட புடவையை பிடிச்சி உருவுங்கடா? அப்போ தான் அடங்கி போய் மூலையில உட்காருவா?” என்று நேத்ரன் சொன்னதும் ஒருவன் எட்டி மேக்னாவின் புடவை முந்தாணையை பிடிக்க வர, அகத்தியன் கையிலிருந்த கத்தி அவன் கரத்தை பதம் பார்த்திருந்தது.

 

“என் மனைவி மேல கையை வச்சு பாருங்கடா, ஒருத்தனும் உயிரோட இங்கிருந்து போக மாட்டிங்க. உங்களை எல்லாம் துண்டு துண்டா வெட்டி சுறாவுக்கும் திமிங்கலத்துக்கும் படையல் போட்டுடுவேன்” என்று கர்ஜித்தான் அகத்தியன்.

 

எல்லாரும் அதிர்ந்து போய் அகத்தியனை பார்க்க, “இவ்ளோ நேரம் நான் சும்மா இருந்தது, என் மோகனா சண்டை போடற அழகை பார்க்க தான்டா” என்றவன் மனைவியிடம் திரும்பி,

 

“மோகி நீ தூரமா போய் நில்லு, நான் இவனுங்களை பார்த்துக்கிறேன்”

 

“இல்ல அகன், நானும்”

 

“சொன்னதை செய் மோகனா” என்றான் அதட்டலாக

 

முதன்முறையாக அவன் அதட்டவும் முகமும் மனமும் சுணங்க, சற்று தள்ளி சென்றாள்.

 

அகத்தியன் இப்போது பம்பரமாக சுழன்று ஒவ்வொருவராக அடித்து, அவர்களை கையிலிருந்த ஆயுதத்தை பிடுங்கி கடலில் வீசினான். தன் பாக்கெட்டிலிருந்த பிஸ்டலை எடுத்து அவர்களை நோக்கி குறிபார்த்தான்.

 

அடியாட்கள் கைகளை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு, “ஐயோ சார் எங்களை சுட்டுடாதீங்க. நாங்க சாதாரண மீன் பிடிக்கிறவங்க. கொஞ்சம் அதிகமா காசு கிடைக்கும்னு வந்துட்டோம்” என்று அலறினர்.

 

‘அடச்சே இவனுங்களை கூட்டிட்டு வந்ததுக்கு பதிலா துப்பாக்கி சுட தெரிஞ்ச ரவுடிங்களை இறக்கி இருக்கலாம். ஹார்பர்ல இருந்த ஆபிசருக்கு சந்தேகம் வரக்கூடாதுனு மீனவர்களா இருந்தாலும் வாட்டசாட்டமா இருக்கறானுங்களே இவனுங்களை கூட்டிட்டு வந்தது தப்பா போச்சு’ என்று நினைத்த நேத்ரன் பேரம் பேச ஆரம்பித்தான்.

 

“அகத்தியன், ஆரம்பத்துல இருந்தே நீ எனக்கு தொல்லை கொடுத்துட்டு இருக்கே. இனியாவது நீ என் வழியில குறுக்கிடாதே, நானும் உன் வழியில குறுக்கிடமாட்டேன். எங்களை விட்டுடு. நாங்க போயிடுறோம். நீ உன் ஹனிமூனை கன்டினியூ பண்ணு”

 

அகத்தியன் மேக்னாவையும் அவள் பக்கவாட்டில் இருந்த கயிற்றையும் மாறி மாறி பார்த்தான். அந்த பார்வையில் ஏதோ புரிய, அவள் கயிற்றை எடுக்க சென்றாள்.

 

“அதெப்படி முடியும் நேத்ரன்? நீ சின்ன சின்னதா இல்லீகல் பிசினஸ் பண்ணிட்டு இருந்தே, போலீஸ்ல மாட்டினாலும் ஈசியா வெளியே வந்துடுவ. அதனால நான் நீ செய்யற எல்லா பிசினஸையும் தடுத்து நேர்வழியில கொண்டு போய்ட்டு இருந்தேன். நீயும் உன் பேமலியும் நான் உங்க பிசினஸை தட்டி பறிக்கறதா நினைச்சிட்டு இருந்தீங்க. நீங்க நேர்மையா இருந்திருந்தா, நான் ஏன் உங்க விஷயத்துல தலையிட போறேன்? நீ சாதாரண மீன்பிடி கான்ட்ராக்ட் மட்டும் செஞ்சா நான் ஏன் உன் வழியில குறுக்கிட போறேன்? மீனை எக்ஸ்போர்ட் பண்றேன் பேர்வழினு நீ இல்லீகலா கடல்வழி போதை மருந்து பிசினஸ் பண்றதால தான் உனக்கு கான்டிராக்ட் கிடைக்காம செஞ்சிட்டு இருந்தேன்.

 

இப்போ ரீசன்டா நீ பொண்ணுங்களையும் கடத்தறதா தகவல் வந்துச்சு. அதுக்கப்புறமா உன்னை விட்டு வைக்க முடியுமா சொல்லு? திலீப்கிட்ட எவிடன்ஸ் கலெக்ட் பண்ண சொல்லியிருக்கேன். ஸ்டாராங்கானா எவிடன்ஸ் கிடைச்சதும் கல்யாணம் பண்ணாமலே நீ மாமியார் வீட்டுக்கு போக வேண்டியது தான்”

 

“அகத்தியன், யு ஆர் எ சீட். மேக்னாவை கல்யாணம் பண்ணிக்க நான் மணமேடையில உட்கார்ந்திருந்தப்போ நீ என்ன சொன்ன? நியாபகம் இருக்கா?”

 

“ஏன் இல்லாம நல்லாவே நியாபகம் இருக்கு? நான் மோகனாவுக்காக உங்க வீட்டை தேடிட்டு இராத்திரி நேரத்துல வரும்போது உன் ஆளுங்க இரண்டு சின்ன பொண்ணுங்களை கார்ல கடத்தி கூட்டிட்டு போற மாதிரி தெரிஞ்சது. அதைப்பத்தி தான் அன்னைக்கு உன் கிட்ட விசாரிச்சேன். நீ அதெல்லாம் ஒண்ணுமில்லனு பேசி மழுப்பிட்டு, என்கிட்ட டீல் பேசினே. அப்போதைக்கு என் வேலை முடியனும்னு நானும் ஒத்துக்கிட்டேன்”

 

“அன்னைக்கு ஒத்துக்கிட்டு, நீ என்கிட்ட கொடுத்த வாக்கை மீறி என்னை போலீஸ்ல மாட்டிவிட பாக்கறனு தெரிஞ்சுக்கிட்டேன். அதனால தான் நான் உன்னை கொலை செய்ய முடிவு செஞ்சேன்” என்றவன் திருமண நாளன்று அவர்களுக்குள் நடந்து உரையாடலை மீண்டும் நினைவுப்படுத்தினான்.

 

“நேத்ரன், நீ தப்பான வழில போற மாதிரி தெரியுது. அந்த சின்ன பொண்ணுங்களை உன் ஆளுங்க எங்க கூட்டிட்டு போறாங்க? உண்மையை சொல்லு” என்றான் அகத்தியன் மிரட்டலாக

 

“என் ஆளுங்க சின்ன பொண்ணுங்களை கூட்டிட்டு போறாங்களா? எனக்கு தெரியாதே, என்னனு நான் விசாரிக்கறேன், ஒருவேளை வழிமாறி வந்த பசங்களுக்கு உதவி பண்ணி இருப்பானுங்க” என்று திணறினான் நேத்ரன்

 

“சின்ன சின்னதா டிரை பண்ணி இப்போ பெரிசா ஹூயுமன் டிராப்பிக்கிங் வரைக்கும் போய்ட்ட மாதிரி தெரியுது நேத்ரன். என் சந்தேகம் மட்டும் நிஜம்னு தெரிஞ்சது உன்னையும் உன் கூட இருக்கறவங்களையும் சும்மா விட மாட்டேன்”

 

“அகத்தியன்! பழைய பகையை மனசுல வச்சிட்டு சும்மா என் மேல பழி போடாதீங்க. நான் எந்த பொண்ணுங்களையும் கடத்தல. என் ஆளுங்க கிட்ட என்ன விஷயம்னு விசாரிக்கறேன், வேறே எதாவது பிரச்சனையா இருக்கும், அப்படி அந்த பொண்ணுங்க அவனுங்க கிட்ட இருந்தா அவங்களை விட்டுட்ட சொல்றேன்”

 

“உனக்கு எதுக்கு அவ்ளோ கஷ்டம். நான் கமிஷனர்கிட்ட பேசறேன். போலீஸ் வந்து விசாரிக்கட்டும். உன் மேல தப்பில்லைனு தெரிஞ்ச பின்னாடி நீ மணமேடைக்கு போகலாம்” என்றபடி அகத்தியன் போனை எடுக்க,

 

அவன் கரத்தை பிடித்து தடுத்த நேத்ரன் “நான் மணமேடைக்கு போகல, நீங்களும் மேக்னாவும் தானே விரும்பறீங்க. நீங்க மணமேடைக்கு போங்க”

 

“ஏன், என் மேல என்ன திடீர் கரிசனம்?”

 

“கரிசனம்லாம் இல்ல, சுயநலம். உங்க காதல் நிறைவேறதுக்கு நான் ஹெல்ப் பண்றேன் இல்ல. நீங்களும் எனக்கு ஹெல்ப் பண்ணனும்”

 

“என்ன பண்ணனும்?”

 

“இந்த விஷயத்தை இத்தோட விட்டுடணும்”

 

“சின்ன பொண்ணுங்களை கடத்தியிருக்க, அதை அப்படியே விட்டுடணுமா?”

 

“நான் தான் யாரையும் கடத்தலனு சொல்றேன் இல்ல. போலீஸ் வந்து இப்போ விசாரிச்சா நல்லாவா இருக்கும்? நான் தப்பே செய்யலைனாலும் ஊர்உலகம் என்னை தப்பா தானே பேசும். இந்த விஷயத்தை விட்டுடுங்க ப்ளீஸ். அதுக்கு உபகாரமா என் அத்தை பொண்ணு மேக்னாவை நீங்களே கல்யாணம் பண்ணிக்கோங்க. போங்க போய் மணமேடையில உட்காருங்க”

 

“எனக்கு இந்த டீல் பிடிச்சிருக்கு நேத்ரன். நீ விட்டு கொடுக்கலனாலும் நான் என் மோகனாவை தட்டி தூக்கிட்டு போக தான் போறேன். ஏன்னா ஷி இஸ் மைன்! இருந்தாலும் என் மோகி கல்யாண கோலத்துல மணமேடை வரைக்கும் வந்துட்டா. இந்த முறையாவது எங்க கல்யாணம் சிக்கல் இல்லாம சாத்வீகமான முறையில எல்லார் ஆசிர்வாதத்தோடவும் நடக்கறதுக்கு இது ஒரு வாய்ப்பு, அதனால இதுக்கு நான் சம்மதிக்கிறேன்” என்று தோள்களை குலுக்கினான் அகத்தியன்.

 

நடந்ததை ஒரு முறை சொல்லி காட்டிய நேத்ரன், “நீ என் அத்தை பொண்ணையும் கட்டிக்கிட்டு என்கிட்ட கொடுத்த வாக்கை மறந்துட்ட. என்ன பாக்கற? கமிஷனர் கிட்டயும் ஹார்பர்லயும் நான் ஹூயுமன் டிராபிக்கிங் பண்றதா என் மேல நீ கம்ளெய்ண்ட் கொடுத்தது எனக்கு தெரியாதுனு நினைச்சியா? உன் ஆளுங்கள விட்டு என்னை வேவு பாக்க அனுப்பியிருக்க” என்றான் குற்றம் சாட்டும் விதமாக

 

“நீதான் யாரையும் கடத்தலயே எதுக்கு கோபம்? நீ என்கிட்ட சொன்னது நிஜம் தானானு கன்பார்ம் பண்ணிக்க நான் என் ஆளுங்களை அனுப்பினேன். மடியில கனம் இல்லனா எதுக்கு பயம்?” என்று புருவம் சுருக்கினான் அகத்தியன்

 

“கனம் இருக்கே. உன் ஆளுங்க நாங்க பேசிட்டு இருந்ததை பார்த்துட்டானுங்க. கடல்ல கிடைக்கிறத வச்சு வருஷம் பூரா எக்ஸ்போர்ட் பண்ணா கிடைக்கிற அமெளன்ட்டை விட, ஒரு பொண்ணை வெளிநாட்டுல வீட்டு வேலைக்கு அனுப்பினா பலமடங்கு கிடைக்கும். உன்கிட்ட போராடறதை விட்டுட்டு ஹாயா பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். 

 

நீ எப்படியோ மோப்பம் பிடிச்சிட்ட, மேக்னாவை விட என் பிசினஸ் தான் முக்கியம்னு அவளை நான் விட்டு கொடுத்தேன். நீ அப்பவும் சும்மா இருக்காம உளவுதுறை மாதிரி என்னையே பாலோ பண்ணிட்டு இருந்தே. 

அதான் உன்னை போட்டு தள்ளிட்டா எல்லா பிரச்சனையில இருந்தும் ஃப்ரீ ஆயிடலாம்னு முடிவு பண்ணேன்.  

 

என் வேலை ஈசியா முடியற மாதிரி, நீ உன் பொண்டாட்டிய கூட்டிட்டு தனியா கப்பல்ல ஹனிமூன் கிளம்பினதை பார்த்ததும், நானும் பின்னாடியே மீன் பிடிக்க வர்றது போல வந்துட்டேன். என்ன ஆனாலும் இன்னைக்கு உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என்று பேசிக்கொண்டே  அகத்தியனின் மேல் சீறி பாய்ந்த நேத்ரன் அவன் கையிலிருந்த பிஸ்டலை பிடுங்க முயற்சித்தான்.

 

அகத்தியனின் குறிப்பை உணர்ந்து, அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மற்ற அடியாட்களின் காலை எல்லாம் நீண்ட கயிற்றில் கட்டியிருந்தாள் மேக்னா. 

 

அகத்தியனும் நேத்ரனும் உருண்டு புரண்டதில் பிஸ்டல் வானை நோக்கி வெடிக்க, சத்தம் கேட்டு கேப்டனும் மற்ற வேலையாட்களும் பதறிக் கொண்டு வெளியே வந்தனர்.

 

அங்கே ஆட்கள் கட்டப்பட்டிருப்பதையும், அகத்தியனை யாரோ தாக்குவதையும் புரிந்துக் கொண்ட கேப்டன், உடனே நிலைமையை சமாளிக்க தன்னுடைய பிஸ்டலில் நேத்ரனின் காலை குறிபார்த்து சுட்டார்.

 

அதில் அவன் பிடி சற்றே விலக, அகத்தியன் சுதாரித்துக் கொண்டு எழுந்து நேத்ரனை நைய புடைத்தான். 

 

“என்னாச்சு அகத்தியன் சார்? எப்படி இவ்வளவு பேர் வந்தாங்க? உங்களை எதுக்கு தாக்கறாங்க?”

 

“சொல்றேன் சார், முதல்ல எல்லாரையும் பிடிச்சு கட்டி வைக்கணும். இந்தியன் நேவி போர்ஸ் டிபார்ட்மென்ட் அண்ட் ஹூமன் டிராப்பிக்கிங் டிபார்ட்மென்ட்க்கு போன் பண்ணி உடனே கப்பல்ல வரச்சொல்லுங்க” என்றான்

 

கேப்டன் போனை எடுத்து அவர்களுக்கு அழைத்து விவரங்களை கூறிக் கொண்டிருக்கும் போது, அகத்தியன் நேத்ரனோடு வந்த ஆட்களை பார்த்து பேசினான்.

 

“நீங்க எல்லாரும் நிஜமாவே மீன் பிடிக்கறவங்க தானே. அது உண்மைனா நீங்க அப்ரூவரா மாறணும். இவன் என்ன சொல்லி உங்களை கூட்டிட்டு வந்தானோ அதை அப்படியே ஆபிசருங்க கிட்ட சொல்லணும், அதுமட்டுமில்ல இப்போ இவன் பேசினது எல்லாத்தையும் நேர்ல பார்த்த ஐவிட்னஸ் நீங்க தான். இதையும் நீங்க கோர்ட்ல சொல்லணும்.  அப்படி சொன்னா, உங்களை இந்த கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வர நான் உதவி செய்வேன். இல்லனா, எங்களை கொலை செய்ய முயற்சி செஞ்சதால கொலைமுயற்சி கேஸ், ஆட்கடத்தல் பிசினஸ்ல ஈடுப்பட்டதால இன்டர்நேஷனல் இல்லீகல் கேஸ்னு காலத்துக்கும் ஜெயில்ல கலி திங்க வேண்டியது தான். என்ன சொல்றீங்க?”

 

“சார் நாங்க ஏழு பேரும் ரெகுலரா மீன் பிடிக்கறவங்க தான். பணம் காசு பத்தாம எப்பவாவது அடியாள் வேலைக்கு போவோம். அத தவிர எங்களுக்கு எதுவும் தெரியாது சார். தயவு செஞ்சு எங்களை விட்டுடுங்க. இந்த நேத்ரன் பொண்ணுங்களை வெளிநாட்டுக்கு கடத்தறது பத்தி எல்லாம் எங்களுக்கு தெரியாது. இதோ நெஞ்சுல காயம் பட்டிருக்கே, இவன் கிட்ட தான் நேத்ரன், சரியான நேரம் பார்த்து ரெண்டு பேரையும் அட்டாக் பண்ணனும். ஒரே அடில அகத்தியன் உயிர் மட்டும் உடனே போயிடணும். மேக்னாவை கொஞ்சம் ருசி பார்த்துட்டு, வழக்கம் போல செஞ்சிடுவோம்னு சொல்லிட்டு இருந்தான். எங்களுக்கு அப்போ சரியா புரியல. இப்போ தான் புரியுது” என்றான் ஒருவன்

 

அவன் சொன்னதன் அர்த்தம் அகத்தியனுக்கு நன்றாக புரிய, வெகுண்டெழுந்தவனாய், தன் ஷூ காலில் நேத்ரனின் வயிற்றில் எட்டி உதைத்தான். “எவ்வளவு நெஞ்செழுத்தம் இருந்தா, என் மோகனாவை இப்படி சொல்லியிருப்பே. உன்னை கொல்லாம விட மாட்டேன்டா” என்று இடைவிடாமல் அவன் வயிற்றில் உதைத்துக் கொண்டே இருக்க, நேத்ரன் வலியில் கதறினான்.

 

கேப்டனும் மேக்னாவும் தான் அகத்தியனை பிடித்து நிறுத்தினர். “மிஸ்டர் அகத்தியன், அவனுக்கு எதாவது ஆயிட்டா? அப்புறம் எப்படி அவன் செஞ்ச தப்பை நிருபிக்கிறது. ப்ளீஸ் கூல்டவுன்”

 

அதன் பின்னரே அகத்தியன் தன்னை முயன்று கட்டுபடுத்திக் கொண்டு திரும்பி கடலை வெறித்தபடி நின்றான். மேக்னாவும் அருகே வந்து அவன் கரத்தை பற்றிக் கொண்டு அவன் தோளில் சாய்ந்து நின்றாள்.

 

இருவரும் சுதாரிக்காமல் போய் இருந்தால் என்னவெல்லாம் அசம்பாவிதம் நடந்திருக்கும்? நினைக்கும் போதே இருவர் நெஞ்சிலும் நீர் வற்றி போனது.

 

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தார்களோ தெரியாது. கேப்டன் பலமுறை அழைத்திருப்பார் போலும். அகத்தியனின் அருகே வந்து அவன் முன்னால் கையசைத்தார். அதில் சுயநினைவுக்கு வந்தவனாய், “சொல்லுங்க கேப்டன்” என்றான்

 

“நேவி போர்ஸ் ஆபிசர்ஸ் அன்ட் ஹூயுமன் டிராபிக்கிங்ல இருந்து ஆளுங்க வந்திருக்காங்க. வாங்க நடந்ததை சொல்லுங்க” என்றார் கேப்டன்.

 

அகத்தியன் தனக்கு பின்னால் நின்றிருந்தவர்களை திரும்பி பார்த்தான். வந்திருந்தவர்களில் தன்னுடைய பால்ய நண்பனும் இருக்க, சிநேகமாக, “அபிமன்யூ” என்றபடி அவனிடம் சென்றான். இருவரும் ஆரதழுவிக் கொண்டனர். “சொல்லு அகத்தியன், என்ன நடந்துச்சு?” என்று அபிமன்யூ விசாரிக்க, அகத்தியன் நடந்தது அனைத்தையும் கூறி முடித்தான்.

 

“வெரிகுட். நீங்க உங்க உயிரையும் தற்காத்துக்கிட்டு, நாட்டுக்கு துரோகம் செய்யற இந்த துரோகிகளையும் பிடிச்சு கொடுத்திருக்கீங்க. வெல்டன். இது சம்மந்தமா யார் எல்லாம் இன்வால்வ் ஆகியிருக்காங்கனு நாங்க தீவிரமா விசாரிச்சு, அவங்களோட முகத்திரையை கிழிச்சு தக்க தண்டனை வாங்கி கொடுப்போம்” என்றான் அபிமன்யூ

 

“அபி, நேத்ரனோட சேர்த்து அவனோட கூட்டாளிங்க இதுல மூணு பேர் தான். மத்த ஏழு பேரும் அடியாளுங்க. அப்ரூவரா மாற ரெடியா இருக்காங்க. அவங்களை கொஞ்சம்”

 

“புரியுது அகத்தியன், நான் பார்த்துக்கிறேன்” என்ற அபிமன்யூ தன்னுடன் வந்தவர்களுக்கு தொடர்ந்து ஆணைகளை பிறப்பிக்க, அவர்கள் நேத்ரனோடு சேர்த்து பத்து பேரையும் கைது செய்து தாங்கள் வந்திருந்த கப்பலுக்கு ஏற்றி சென்றனர்.

 

நேத்ரனும் அவன் ஆட்களும் வந்த கப்பலும், சிறிய படகும் சாட்சிக்காக படமெடுத்துக் கொண்டு, அதனையும் கரைக்கு கொண்டு போக முடிவு செய்தனர்.

 

“அகத்தியன் நீயும் எங்களோடவே வந்து கம்ளெய்ண்ட் கொடுத்தா கேஸ் இன்னும் ஸ்டாராங்கா இருக்கும்”

 

“டேய், நான் ஹனிமூன் வந்திருக்கேன்டா. அவனுங்க தான் அதுல மண் அள்ளி போட்டானுங்கனா, நீயுமா?” என்றான் அகத்தியன் சலிப்புடன்

 

“ஓகே உன் நிலைமை எனக்கு புரியுது. உன் டிரீம் கேர்ளை கண்டுபிடிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டேனு கேள்விப்பட்டேன். இவங்க தானா அது?” 

 

“ஆமாடா, பல பிரச்சனைக்கு நடுவுல இப்போ தான் சேர்ந்தோம். என் பிளான் மொத்தம் சொதப்பிட்டானுங்க” என்றான் எரிச்சலாக

 

“நீ இங்கேயே கம்ளெய்ணட் எழுதி கொடு, நான் இன்வெஸ்டிகேஷன் ஸ்டார்ட் பண்ண சொல்லி லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கறேன். நீ வந்தபின்னாடி மத்த பார்மாலிட்டீஸ் பாத்துக்கலாம்”

 

“தேங்க்யூ அபி”

 

“இட்ஸ் ஓகே, என்ஜாய். வில் மீட் யூ சூன்” என்று விட்டு அபிமன்யூ கிளம்பி சென்றான். (Its ok. enjoy! will meet you soon)

 

அனைவரும் கிளம்பி சென்று வெகுநேரமாகியும் மேக்னா எதுவும் பேசாமல் தன் தோளிலேயே சாய்ந்தபடி கடலையே வெறித்துக் கொண்டிருக்கவும் அவளின் தலையை வருடியபடி, “பயந்துட்டியா மோகி” என்றான் மிருதுவான குரலில்

 

“ஆமா அகன். இந்த நேத்ரன் இவ்வளவு மோசமானவான இருப்பான்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. சின்ன வயசுல ரொம்ப நல்லவனா தான் இருந்தான். எப்படி மாறினான்னு தெரியல”

 

“பிறக்கும் போது எல்லாருமே நல்லவங்க தான் மோகனா. அவங்க வளர்ற சூழ்நிலையும் பழகற ஆட்களும் தான் அவங்களோட நடத்தையை தீர்மானிக்குது. நேத்ரனுக்கு எப்பவுமே தப்பான ஆளுங்களோட சகவாசம் தான். உன்னோட அத்தை மாமா அவனை திருத்தறதை விட்டுட்டு, அவனோட சேர்ந்து ஆடுனாங்க. இவன் படிப்படியா முன்னேறி இப்போ ஆள்கடத்தல் வரைக்கும் வந்திருக்கான்”

 

“இவனுக்கு போய் என் அப்பா என்னை கட்டி வைக்க பார்த்தாரே”

 

“விடு மோகனா. அவருக்கு அவனை பத்தி முழுசா தெரியாது”

 

“இல்ல அகன், எனக்கு என்னவோ கோபமே அடங்கல. இந்த நேத்ரன் உங்களை கொன்னு, என்னை கடத்தி வெளிநாட்டுக்கு விக்கிற அளவுக்கு பிளான் பண்ணி இருக்கான். நாம மட்டும் அலர்ட்டாகாம இருந்திருந்தா” சொல்லும் போதே அவள் உடல் கோபத்தாலும் பதட்டத்தாலும் நடுங்கியது.

 

“அது தான் எதுவும் தப்பா நடக்கலையே மோகி” என்று அவள் கரம் பற்றி இழுத்து அணைத்து அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான். ஆனாலும் அவள் பதட்டம் குறையவில்லை. அவன் கைகளுக்குள் மழையில் நனைந்த கோழி குஞ்சாக அவள் உடல் நடுங்க தொடங்கியது.

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page