All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 23

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 36
Topic starter  

அத்தியாயம் 23

அகத்தியனும் மேக்னாவும் இப்போது தங்களை அகனாகவும் மோகனாங்கியாகவுமே உணர்ந்தனர். அன்றைய நினைவுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருந்தனர். 

 

“நாம இப்போ இருக்கற நிலையை அப்படியே ஓவியமா வரையணும் போல இருக்கு. அதே சமயம் என் ஓவியமே உயிரோட கைகள்ல இருக்கும் போது விட்டு விலகவும் மனசு வரல” என்றான் ஆழ்ந்த குரலில்

 

“அப்போ என்னை விட்டு விலகாம உங்க ஓவியத்தை வரையுங்க”

 

சற்று நேரம் யோசித்தவன், அவளை அணைத்தவாறு அழைத்துக் கொண்டு சென்று ஓவியம் வரைவதற்கு தேவையான பொருட்களை கொண்டு வந்து மேக்னாவை ஒரு கையில் அணைத்தபடி, மறுகையில் இருவரும் நிலவை பார்த்தபடி நின்றிருந்த கோலத்தை ஓவியமாக வரைந்தான்.

 

இடையிடையே அகனின் விரல்களும் இதழ்களும் மேக்னாவின் மேனியில் ஓவியம் வரையவும் மறக்கவில்லை. மேக்னா அகத்தியனின் கைப்பாவையாகவும் ஒவியப்பாவையாகவும் நின்றிருந்தாள்.

 

அதே சமயம் நேத்ரனும் அவன் ஆட்கள் பத்து பேரும் அவர்கள் இருந்த கப்பலுக்குள் நுழைந்து மறைவான இடத்தில் நின்று கொண்டனர்.

 

அகன் தன் ஓவியத்தில் ஆழ்ந்து இருந்ததால் மேக்னா சுற்றும் முற்றும் பார்த்தாள். கடலுக்குள் சுறா ஒன்று குதித்து விளையாட, அதை கண்ட மேக்னா, அகனிலிருந்து விலகி சுறாவை ஆவலாக பார்க்க தொடங்கினாள். அதன் வாயிலிருந்த மீன் நழுவி கப்பலுக்குள் விழுந்து விட, அது தண்ணீர் இல்லாமல் தத்தளிக்க தொடங்கியது.

 

மீனின் உயிரை காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் போட நினைத்தவள், அதை நோக்கி சென்றாள். குனிந்து அதை கையில் எடுக்க, அதுவோ கையில் சிக்காமல் வழுக்கிக் கொண்டு சென்றது. அதனோடு ஊர்ந்த நிலையில் நகர்ந்து எப்படியோ மீனை கையில் எடுத்தவள் கண்களில் யாருடைய கால்களோ அவசரமாக மறைவது போல தோன்றியது.

 

யோசனையோடு கையில் இருந்த மீனை கடலுக்குள் போட்டு விட்டு, இடையில் கை வைத்துக் கொண்டு அகனை முறைத்தபடி நின்றாள். அப்போது தான் ஓவியத்தை வரைந்து முடித்தவன், அவள் இடையை தன் இருகைகளால் அழுந்தப் பற்றி தன்னை நோக்கி வேகமாக இழுத்து அவள் இதழ்களில் தன் இதழ்களை அழுத்தமாக பதித்தான். சட்டென்று அவனை உதறித்தள்ளி விலகி நின்றாள்.

 

“என்னாச்சு மோகி? திரும்பியும் என் மேல கோபமா? முடியலடி. உன்னை சமாதானம் செய்யவே எனக்கு பல ஜென்மம் ஆச்சு. இப்பவும் நீ முறுக்கிட்டு திரிஞ்சா எப்படி? எனக்கு உன்னை சமாதானம் செய்யற அளவுக்கு பொறுமை இல்ல மோகி. என்ன நடந்தாலும் இன்னைக்கு இந்த சுறா உன்னை முழுங்காம விடாது” என்றபடி அவளை வேகமாக இழுத்து மீண்டும் அவளை நெருங்க முயற்சித்தான்.

 

அவன் நெஞ்சில் கைவைத்து நிறுத்தியவள், “நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்க? கப்பலை ஓட்றவங்க, கேப்டன், இப்படி யாரும் நாம இருக்கற இடத்துக்கு வரமாட்டாங்கனு தானே சொன்னீங்க”

 

“ஆமா சொன்னேன். இப்பவும் சொல்றேன், அவங்க யாரும் வெளியே வரமாட்டாங்க பயப்படாதே மோகி. போன ஜென்மத்துல நம்மோட முதலும் கடைசியுமான கூடலுக்கு சாட்சியா இருந்த அதே நிலவு தான் இந்த ஜென்மத்துலயும் நமக்கு சாட்சி. அதுக்கப்புறம் நம்ம தனிமைக்கு நடுவுல இந்த நிலவையும் வரவிடமாட்டேன் மோகி. இன்னைக்கு ராத்திரி மட்டும் தான் உனக்கு இயற்கையை ரசிக்கறதுக்கு வாய்ப்பு. நாளையிலிருந்து நம்மோட அறையை விட்டு வெளிய வர்றதுக்கு உனக்கு நேரம் கிடைக்காது” என்று ரகசியம் போல அவள் காதில் மீசை உரச கூறியவன் அப்படியே அவள் காதை தன் இதழ்களால் வருடினான்.

 

அதில் சிலிர்க்க தொடங்கிய தன் மனதையும் உடலையும் அடக்கியவள், “அப்போ அங்கே மறைவா நின்னுட்டு ஃப்ரீ ஷோ பார்த்துட்டு இருக்காங்களே, அதுக்கு என்ன சொல்ல போறீங்க?” 

 

“மோகி, என்ன சொல்றே? யாரும் வர்றதுக்கு வாய்ப்பில்லையே” என்றவன் உடனே போனை எடுத்து கேப்டனிடம் பேசிவிட்டு மேக்னாவை ஆழ்ந்து பார்த்தபடி மெல்லிய குரலில் கேட்டான்.

 

“மோகி, நிஜமா தான் சொல்றீயா? நீ யாரை எங்கே பார்த்தேனு திரும்பி கைக்காட்டாம எனக்கு முத்தம் கொடுக்கறது போல கிட்ட வந்து என் காதுல சொல்லு?”

 

மேக்னாவும் அகத்தியனின் உயரத்திற்கு  கால் பெருவிரலில் எட்டி நின்று, அவன் கன்னத்தில் முத்தமிடுவது போன்ற பாவனையில் நின்று “நமக்கு பின்னாடி ஸ்விம்மிங் ஃபூல் போறதுக்கு வழியிருக்கில்ல, அங்கே மறைவா சிலர் நின்னுட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. நான் மீனை எடுக்க குனியறப்போ யாரோடதோ கால் தெரிஞ்சது. உடனே காலை மறைச்சது போலவும் இருந்துச்சு. நான் சொன்னது போல கப்பலை ஓட்றவங்க தானே வந்திருக்காங்க?”

 

இல்லை என்பது போல அகன் தலையாட்ட, மேக்னாவின் இதழ்கள் அவன் கன்னத்தில் உரசி சென்றது. அதை உணர்ந்தும் ரசிக்க முடியாத நிலையில் இருந்தான்

 

“பின்ன யாரு?”

 

“யாருனு தெரியல மோகி. ஆனா நேத்ரனா இருக்க வாய்ப்பிருக்குனு தோணுது” என்றான் அவள் கன்னத்தில் இதழ்பதித்தபடி

 

“நேத்ரனா? எதுக்கு? என்னை கல்யாணம் பண்ண முடியலனு பழி வாங்க வந்திருப்பானா?” என்றாள் அவன் நெஞ்சில் தலைசாய்த்து

 

“அதுவும் ஒரு காரணம், முக்கியமான காரணம் வேற இருக்கு”

 

“என்ன காரணமோ? ஆக மொத்தம் நம்மளை யாரும் நிம்மதியா வாழவே விடமாட்டாங்களா அகன்? நாமளே இப்போ தான் நம்ம லைஃப்பை ஸ்டார்ட் செய்ய போறோம். மறுபடியும் பிரச்சனையா? நாம வாழ்க்கையில ஒண்ணா சேரவே முடியாதா? நடுகடல்ல இப்படி மாட்டிக்கிட்டோமே, எப்படி தப்பிக்க போறோம்? ஒருவேளை தப்பிக்க முடியலைனா? இந்த முறையும் நம்மால ஒண்ணு சேர முடியலைனா இறப்புலயாவது ஒண்ணு சேரணும் அகன்” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணீர் விட்டாள் மேக்னா

 

அவள் முதுகை ஆதுரமாக வருடியவன் “மோகி, ரிலாக்ஸ். இதை மேக்னாவா எமோஷனலா பாக்காதே. மோகனாங்கியா பாரு. உன்னோட நாட்டுக்குள்ள ஊடுருவன பகைவர்களை எப்படியெல்லாம் தாக்கணும்னு உனக்கு ஏற்கனவே தெரியும். தனியாவே சமாளிச்சவ நீ. கூட நான் இருக்கேன். நமக்கு எதுவும் ஆகாது

 

முதல்ல நாம தப்பிக்கிற வழிய பார்க்கணும். எத்தனை பேரு இருக்காங்க என்னென்ன ஆயுதம் வச்சிருக்காங்கனு தெரியாம நாம ரியாக்ட் பண்ணவும் முடியாது. துப்பாக்கி வச்சிருந்தா அவ்வளவு தான். அதனால நீ இங்கே எல்லா இடத்திலயும் நின்னு போஸ் கொடு, நானும் உன்னை வரையறேன். நாம சந்தேகப்படறது அவங்களுக்கு தெரியக்கூடாது. இயல்பா இருந்துட்டே அவங்களை கண்காணிக்கனும், எத்தனை பேரு இருக்காங்க? எந்தெந்த ஆயுதம் வச்சிருக்காங்கனு எல்லாம் பார்த்துட்டு தான் நாம களத்துல இறங்கணும்”

 

மேக்னாவிற்கு அகத்தியனின் பேச்சில் தெளிவும் தைரியமும் வந்திருந்தது “சரி ஆயுதங்களை வச்சிருக்கிற மாதிரி போஸ் கொடுக்கறேன். அப்போ தான் நாம எதிர் தாக்குதல் செய்யவும் வசதியா இருக்கும்”

 

“பிரில்லியண்ட், நானும் அதையே தான் யோசிச்சேன் மோகனா. படம் வரைய போஸ் கொடுக்கறதுக்குனு நானே சில ஆயுதங்களை இங்கே வைக்க சொன்னேன். அதையெல்லாம் கொண்டு வரச் சொல்லி கேப்டனுக்கு போன் பண்றேன்” என்றபடி போனை எடுத்தான்.

 

அடுத்த பத்து நிமிடங்களில் கேப்டன் இரண்டு நபர்களுடன் வந்து சில கற்கால ஆயுதங்களை வைத்து விட்டு, “என்ன சார்? எதாச்சும் பிரச்சனையா?” என்று கேட்டார்.

 

“இல்ல கேப்டன். என் மனைவியை விதவிதமான போஸ்ல வரையணும்னு ஆசைப்படறேன், அவ்வளவு தான். அப்புறம் நாங்க விளையாட்டா கொஞ்ச நேரம் வாள் சண்டை கூட போடுவோம். நீங்க என்னவோ ஏதோனு நினைச்சு பயந்து வெளியே வரவேண்டாம். எங்களுக்கு பிரைவசி வேணும்”

 

“புரியுது சார், நியூலி மேரிட் கப்பிள். டிபரண்டா உங்க ஹனிமூனை பிளான் பண்ணியிருக்கீங்க. என்ஜாய். நீங்களா போன் பண்ணி கூப்பிடாம நாங்க யாரும் வெளியே வர மாட்டோம்” என்று அகத்தியனை வணங்கி விட்டு வேலையாட்களுடன் சென்றார்.

 

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த நேத்ரன் மற்றும் அவன் வேலையாட்களுக்கு அவர்கள் பேசுவது கேட்கவில்லை என்றாலும், ஆயுதங்களை கொண்டு வரவே, எச்சரிக்கை உணர்வுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

 

“அவங்க மூவ் என்னனு தெரியாம நீங்க யாரும் உங்களை எக்ஸ்போஸ் பண்ண வேண்டாம்” என்றான் நேத்ரன் மெல்லிய குரலில்.

 

அகத்தியன் வில்லை மேக்னாவிடம் கொடுத்து விட்டு, கடல் நீரில் துள்ளி விளையாடும் மீனை காட்டி, “மோகி, நீ அந்த மீனை சரியா குறிபார்த்து, அம்பு விடணும்” என்று விட்டு அவசரமாக அவுட் லைன் வரைய தொடங்கினான்.

 

“என்ன பாஸ் இவரு, பொண்டாட்டியை ஹனிமூன் கூட்டிட்டு வந்துட்டு, இப்படி படம் வரைஞ்சிட்டு இருக்காரு. இன்னைக்கு லைவ்வா நல்ல சீன் இருக்கும்னு நினைச்சிட்டு வந்தேன்” என்றான் ஒருத்தன்.

 

அவன் மண்டையில் ஓங்கி ஒரு குத்து குத்திவிட்டு, அவன் கத்த தொடங்கும் முன் வாயை பொத்திய நேத்ரன், “முட்டாள், நான் அவங்க பர்ஸ்ட் நைட் முடியறதுக்குள்ள அவனை போட்டு தள்ளலாம்னு வந்தா, நீ சீன் பார்க்க வந்தியா?” என்று மெல்லிய குரலில் அவனை திட்டி விட்டு,

 

“சரியான நேரம் பார்த்து ரெண்டு பேரையும் அட்டாக் பண்ணனும். ஒரே அடில அகத்தியன் உயிர் மட்டும் உடனே போயிடணும். மேக்னாவை கொஞ்சம் ருசி பார்த்துட்டு, வழக்கம் போல செஞ்சிடுவோம்” என்றான்.

 

“பாஸ், அவங்க உங்க அத்தை பொண்ணாச்சே? அகத்தியனை போட்டு தள்ளிட்டு, நீங்களே அவங்களை கல்யாணம் பண்ணிக்கலாமே”

 

“இந்நேரம் அகத்தியன் என்னை பத்தி முழுசா சொல்லி இருப்பான். அதனால இனி அவ எனக்கு யூஸ் ஆக மாட்டா. அவங்களை வாட்ச் பண்ணிட்டே இருங்க. நாம இருக்கறது அவங்களுக்கு தெரியக்கூடாது. அப்படி தெரிஞ்சிட்டா, அவன் கிட்ட இருந்து நம்மால உயிர் தப்பிக்க முடியாது. புரிஞ்சதா?”

 

அனைவரும் சம்மதமாக தலையை ஆட்டியபடி தங்கள் ஆயுதங்களை தயாராக வைத்திருந்தனர்.

 

அகத்தியன் மேக்னாவை முதலில் மீனை குறிபார்க்கும்படி செய்து, அதனை முழுமூச்சாக வரைந்து கொண்டிருப்பதை பார்த்ததும், பின்னாலிருந்து அகத்தியனை தாக்க சொல்லி முதலில் ஒருவனை நேத்ரன் அனுப்பினான்.

 

மேக்னா பக்கவாட்டாக நின்றுக் கொண்டு கடலில் துள்ளி குதிக்கும் மீனை பார்த்துக் கொண்டிருக்க, நேத்ரனின் அடியாள் வலிமையான ஆயுதம் ஒன்றை தலைக்கு மேல் உயர்த்தி பிடித்தபடி அகத்தியனின் பின்பக்கமாக மெல்ல சத்தமில்லாமல் நடந்து வந்தான். 

 

நத்தை போல ஊர்ந்து அகத்தியனுக்கு மிக அருகில் வந்தவன், அகத்தியனின் தலையை பிளக்கும் விதமாக தன் கையிலிருந்த கூர்மையான ஆயுதத்தை பலமாக ஓங்க, அதே சமயம் சரியாக அவன் நெஞ்சில் வில் பாய்ந்திருந்தது. அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க, அகத்தியன் அதே பொஷிசனில் வரைந்துக் கொண்டிருந்தான். 

 

பக்கவாட்டில் நின்றிருந்த மேக்னா “சாரி அகன், குறி தப்பிடுச்சு, மீன் அந்தப் பக்கமாக போயிடுச்சு. அம்பு எங்கே விழுந்ததுனே தெரியல. இருங்க பாக்கறேன்” என்று குனிந்து தேடினாள். ஆக அம்பு எதிர்பாராமல் அவன் மேல் பட்டிருக்கிறது என்று உணர்ந்தவன் வலியில் கத்தவும்  முடியாமல் மெல்ல கீழே சரிந்தான்.

 

“மோகி, போகட்டும் விடு, நான் ஆல்மோஸ்ட் வரைஞ்சுட்டேன். நீ இரண்டு கையில வாளை பிடிச்சுட்டு நில்லு” என்று அகத்தியன் வேறு சார்ட்டை மாட்டினான்.

 

மேக்னாவும் கேப்டன் கொண்டு வந்து கொடுத்திருந்த வாளில் இரண்டை எடுத்துக் கொண்டு அகத்தியன் சொன்ன மாதிரி போஸ் கொடுக்க, அவன் மீண்டும் வரைய தொடங்கினான்.

 

“என்னடா நடக்குது? போனவன் ஆளை காணோம். இவன் என்னடான்னா இன்னொரு படம் வரைய ஆரம்பிச்சுட்டான். இனிமேலும் என்னால பொறுமையா இருக்க முடியாது. எல்லாரும் அவங்க அவங்க ஆயுதங்களை எடுத்துக்கிட்டு என்னை பாலோ பண்ணிட்டு வாங்க. நாம பத்து பேர் இருக்கோம். அவன் ஒருத்தன் தான். ஒருத்தர்கிட்ட மிஸ் ஆனாலும் இன்னொருத்தர் அவனை போட்டுடணும். புரியுதா?” என்றபடி நேத்ரன் தன் ஆயுதத்தை எடுத்துக் கொண்டு முன்னே செல்ல மற்ற ஒன்பது பேரும் அவனை பின் தொடர்ந்தனர்.

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page