All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

காலம் தாண்டிய பயணம் -10

 

VSV 28 – காலம் தாண்டியும் காதலை தேடி
(@vsv28)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 22
Topic starter  

 

 

காலம் தாண்டிய பயணம்-10

 

 

நிகழ்காலத்திலிருந்து பதிமுன்று வருடங்களுக்கு முன்...  

 

வருடம் இரண்டாயிரத்து பன்னிரெண்டு... 

 

 

அங்கே பைரவன் கோட்டையில் காலப்பயணம் செய்வது குறித்த ஆராய்ச்சிக்குத் தேவ் மித்ரன் வந்து இதோடு நான்கு மாதங்கள் கடந்திருந்தது.

 

எந்த வித முன்னேற்றமும் இல்லை... கோயில் சிற்பங்கள் தொடர்பான ஆராய்ச்சி என்று தான் உள்ளே நுழைந்திருந்தான். 

 

ஊர் தலைவர் காசிநாதனின் அனுமதியின் பெயரில் அவரது பண்ணை வீட்டில் தான் இப்போதைக்கு வசிக்கிறான். 

 

உணவும் அவனுக்கு அங்கிருந்தே கிடைப்பதால் ஒன்றும் பிரச்சனை இருக்கவில்லை... 

 

தேடும் பொருள் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் தான் அவனுக்கு... 

 

முன்பொரு நாள், இங்கே சற்றுத் தொலைவில் இருக்கும் குகை ஒன்றுக்கு ஆராய்ச்சிக்காக வந்தபொழுது அவன் கையில் கிடைத்த ஓலைச்சுவடியே அவனை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருந்தது. 

 

ஓலைச்சுவடியில் குறிப்பிடப் பட்டிருந்தபடி பைரவன் கோட்டையில், கோயிலைச் சல்லடையாக ஆராய்ந்துவிட்டான் தான் ஆனால் இன்று வரை அவனுக்குப் பெரிதாய் தகவல் ஒன்றும் கிடைத்துவிடவில்லை... 

 

இதற்கிடையில் குமரவேலின் தொல்லை வேறு… முடிந்து விட்டதா இல்லையா என்று தினமும் அவன் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறார். 

 

சீக்கிரம் கிடைத்துவிட்டால் பெரிய தொகைக்கு வியாபாரம் பேசலாம் என்பது அவர் எண்ணம், அவருக்கு அவர் பிரச்சனை... 

 

இதோ இப்போதும் விடாமல் அழைபேசியில் அவர் தொல்லையைத் தான் சகித்துக் கொண்டிருந்தான் மித்ரன். 

 

ஒரு கட்டத்தின் பின் அவனுக்கும் அடங்காமல் கோபம் வர "சார் நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு சீக்கிரம் எப்படி சார் கண்டுபிடிக்கிறது... நானே இங்க கொண்டு வந்து மறைச்சி வெச்சிருக்கிற போல, எடுத்துட்டு வாங்குறீங்க... சார் யூ நோவ் இட்ஸ் டைம் கன்சியூமிங் ஒர்க்" என்றவன் சிறு அமைதிக்குப் பின் மீண்டும் "சீக்கிரமே உங்களுக்கு அப்டேட் பண்ணுறேன் சார்" என்று அழைப்பைத் துண்டிக்க, அவன் காதிலோ வண்டி வருவதற்கான சத்தம்... 

 

அத்தனை நேரம் இருந்த எரிச்சல் மொத்தமும் காணாமல் போயிருக்க, முகத்திலோ ஒரு மந்தகாசப் புன்னகை... 

 

யாரின் வருகை என்பது அவன் அறியாததா??? 

 

முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்துச் சற்று கோபத்தைக் கொண்டு வந்தவனோ அப்படியே அந்த மெத்தையில் அமர்ந்திருக்க, இதோ வந்துவிட்டாள் அவன் தேவதை… 

 

"என்ன சாரே, பசில மூஞ்சி புல்லா சிவந்துடிச்சு போல, வாங்க சாப்பிடலாம்" என்றவள் மேசையின் மீது அவனுக்கான உணவை வைக்க, அவனோ அப்படியே அமர்ந்திருந்தான். 

 

 

அவனருகே வந்தவளோ "என்ன சார் ரொம்ப தான் முறுக்கிக்கிறீங்க, பசிச்சா சாப்புடுங்க இல்லட்டி போங்க" என்றவள் நகரப் போக, அவள் கரம் அவன் கரத்தினுள் சிக்குன்றிருந்தது. 

 

அவள் திரும்பி அவனைப் பார்க்க, அவன் முறைப்பில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் அவள் கரம் மட்டும் அவன் பிடியில்... 

 

அவன் அருகில் அமர்ந்தவளோ "இப்போ என்ன ஆகிடிச்சினு இப்படி உக்காந்திருக்கீரு, அவன் நான் பொறந்த நாளுல இருந்து தான், எம்பொஞ்சாதினு பினாத்திட்டு திரியிறான். நானே கண்டுக்க மாட்டேன் உமக்கு என்ன?" என்றாள் சர்வ சாதாரணமாக... 

 

அதில் மீண்டும் அவன் முறைப்பு காரம் ஏற, அவன் முகத்தைக் கையில் ஏந்தியவளோ "நான் உங்க பொஞ்சாதி தேவ், எவனும் எதுவும் சொல்லிட்டு போறான், இதுக்கெல்லாமா கோச்சிப்பீங்க" என்று அவன் கன்னம் கிள்ளி முத்தமிட, அவனுக்கோ அத்தனை நேரம் கட்டுப்படுத்திய புன்னகை சட்டென உதட்டில் விரிந்திருந்தது. 

 

 

"எப்படிடி இப்படி இருக்க நீ?  எல்லாத்துலயும் ஆசால்ட்டு… அப்படியே அள்ளிக்கலாம் போல இருக்க அள்ளிக்கட்டுமா???" என்றவன் அவளை மெத்தையில் சரிக்க, 

 

அவன் கையில் அடி ஒன்றை வைத்து எழுந்தமர்ந்தவளோ "எங்க வீட்டுல ஒரு நாள் உங்கள வாழ விடணும் அப்போ புரியும், எப்பபாரு மரியாதை மரியாதைனு சாவுற அண்ணன்... பொண்ணுனா இப்படி பொண்ணுனா அப்படினு புதுசா ரூல்ஸ் போடுற அண்ணி அதுகூடவே ஒட்டிட்டு வந்த பெருசாலி... விளக்குமாருக்கு பேரு பட்டுகுஞ்சம் எங்குற கணக்கா அதுக்கு பேரு முரட்டு காளையாம் சகிக்கல… இப்படி இதுக்களுக்குள்ள தினம் சிக்கி, அதுக வாயடைச்சு வாழ்ந்தா மத்தது எல்லாம் ஆசால்ட்டு தான்" என்றாள் கோபமும் எரிசலும் கலந்த குரலில்... 

 

"உனக்கு ஏன்டி இந்த விபரீத ஆசை... என்ன ஆள விடுப்பா, அந்தக் குடும்பத்துல தப்பி பிறந்துட்டியேனு உன்ன கடத்திட்டு போகப் பிளான் பண்ணுனா, நீ என்ன மாட்டி விடப் பாக்கறியா?"  என்று அவள் கன்னத்தில் கடித்து வைத்தான். 

 

அவளோ "நான் மட்டுமில்ல, என் இனிக்குட்டியும் தங்கம், அவளை என்ன மாதிரி தான் நான் வளர்ப்பேன்" என்று சிலாகித்துக் கூறியவளை அணைத்துப் பிடித்தவனோ "வளர்க்கலாமே அப்படியே நமக்கொரு வாண்டையும் பெத்து வளர்க்கலாம்" என்றவன் அவனிதழ்களை அவள் கன்னத்தில் அழுந்தப் பதித்தான். 

 

"தேவ் வர வர உங்க  சேட்டை ரொம்ப அதிகமாகுது ஒட்ட நறுக்க போறேன் பாருங்க" என்று வெட்கத்தை மறைக்க, கண்டுகொண்ட கள்வனோ "அடடே என் ஜான்சி ராணி பொண்டாட்டிக்கு வெட்கம் எல்லாம் வருதே!" என்று அதிர்ச்சி பாவனையுடன் மீண்டும் அவளுடன் இணைய, இந்த முறை அவளும் அவனை அணைத்துக்கொண்டாள். 

 

கணவனவனை மறுக்க எந்த மனைவியால் தான் முடியும்... 

 

ஆம் கணவனே தான்... போன மாதம் அவர்களது திருமணம் சிறப்பாக நடந்து முடிந்திருந்தது,  அதுவும் பைரவன் முன்னிலையில்... 

 

____

 

 

யாழியின் தாயோ  யாழினி பிறந்ததும்  இறந்திருக்க, தந்தை வீரபாகு மட்டுமே அவர்களுக்கு... 

 

வீரபாகு ஒரு முற்போக்குவாதி ஆனால் அவரது தங்கை அப்படி இல்லை, பிற்போக்கின் உச்சகட்டம் அவர்... 

 

பிறந்தது பெண் என்பதால் வீரபாகுவின் தங்கையோ பெண் குழந்தையின் சுமை தன் மீது விழுந்து விடுமோ எனப் பயந்து, உஷாராக முதல்  மகன் காசிநாதனை பொறுப்பில் எடுக்க, அவரோ  முழுவதுமாக அவரது அத்தையின் வார்ப்பாய் தான் வளர்ந்தார்.

 

ஆரம்பம் முதல் அத்தையும் கைப்பவை தான் அவர். ஆனாலும் தாய் இறந்த பிறகு இன்னும் அவரடிமை ஆகிப்போனார்.

 

தான் ஆண் என்ற கர்வமும் மரியாதைக்காக என்னவென்றாலும் செய்யும் குணமும் அவரிடம் ஊரிப்போனது  என்னவோ அத்தையின் கைகாரியம் தான். 

 

திருமணமும் அத்தை மகளைத் தான் கட்டிக்கொண்டார்.

 

வள்ளி அப்படியே தாயை உரித்து வைத்திருக்க, பிறகு சொல்லவும் வேண்டுமா?

 

யாழினி காசிநாதான் இருவருக்கும் வயது இடைவெளி அதிகம் கிட்டத்தட்ட இருபது வருடங்கள். அது அவர்களை இன்னும் தள்ளி நிறுத்தி இருந்தது. 

 

சாதாரண அண்ணன் தங்கைக்கான பாசம் கூட அவர்களிடத்தில் இருந்ததில்லை... 

 

 

 

அதுவும் கொண்டிருக்கும் கொள்கை மாறுபாடு இன்னும் தள்ளித் தான் நிறுத்தியிருந்தது. 

 

காசிநாதனின் குணங்களை வீரபாகு அவர் இருக்கும் வரை மாற்ற எத்தனையோ போராடிப் பார்த்தார் ஆனால்  முடியவில்லை... 

 

மகனைத் திருத்த முடியாமல் போக,  மகளை அவரது விருப்பம்போல அவரது எண்ணங்களுடன் வளர்த்துவிட்டார். 

 

முடியும் வரை படிக்கவும் வைத்தார். இதோ யாழினி பண்ணிரெண்டாம் தேர்வும் எழுதி, நல்லா பெறுபேரும் பெற்றிருக்கிறாள்.

 

மகள் படிப்பதில் என்றும் வீரபாகுவிற்குப் பெருமை தான் ஊரில் அத்தனை பேச்சுகள் வாங்கினாலும் தனக்குப் பின் தனது பெண் சொந்தக்காலில் நிற்பாள் என்ற எண்ணமே அவர் நெஞ்சை நிறைத்திருந்தது.

 

 

படிப்பு முடிந்தது தான் தாமதம் வள்ளி திருமணப் பேச்சை ஆரம்பித்துவிட்டார். 

 

வள்ளியின் தம்பி முரட்டுக்காளையுடன் யாழினிக்கு திருமணம் எனச் சிறிய வயதிலேயே பேசி வைத்தது தான்.  

 

அது முழுக்க முழுக்க காசிநாதன் வள்ளி தாம்பதியினரின் முடிவு...

 

தந்தை இருக்கும் வரை அதற்கு மறுப்பு இருக்க, இதோ இப்போது அவர் இறந்து ஆறு மாதங்கள் ஆகிறது… 

 

இனி தடை எதென அவர்கள் திருமண ஏற்பாட்டை ஆரம்பித்திருந்தனர். 

 

ஆனால் யாழினி அதற்கு அடங்குபவளா? முடியாது என்று எப்போதும் அவள் மறுப்பதுதான் வீட்டினர் தான் காதில் வாங்கிக்கொள்வதில்லை... 

 

இவளும் தான் சொல்லிவிட்டேன் இனி உங்கள் பாடு என்பதாய் நாட்களைக் கடத்த, அவர்களோ ஒரு மாதம் முன்பு நிச்சயம் என்று வந்து நிற்க, வெகுண்டெழுந்து விட்டாள்... 

 

வள்ளி எத்தனை பேசியும் அவள் தலையசைக்கவில்லை... வள்ளியின் பேச்சு அவளிடம் எப்போதும் எடுபடாது... 

 

நிச்சயத்துக்கு வந்த அத்தனை பேர் முன்னிலையிலும் "இந்தாரு வள்ளி அண்ணி, எனக்கு இன்னும் பதினெட்டு ஆவல அதுக்குள்ள கல்யாணம் அது இதுனு ஏதாச்சும் பேச்சு வந்திச்சு உன் தம்பியோட சேர்ந்து நீயும் கம்பி எண்ணனும் சொல்லிப்புட்டேன்" என்று ஒரே போடாகத் தைரியமாய் சொல்லிவிட்டாள்.  

 

அதன் பின் அவர்களே அவளது பிறந்தநாள் அன்று திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று பேசி முடித்திருந்தனர். 

 

 

இது யாழினிக்கு தெரியாமல் போனது என்னவோ அவர்களின் அதிஷ்டம்... 

 

நிச்சய விடயம் கேள்விபட்ட தேவ் மித்ரனோ கோபத்தில் கொதிக்க தொடங்கி இருந்தான். 

 

தன்னவளை இன்னொருவன் பெண் பார்ப்பதா என்ற கோபம் அவனுக்கு... 

 

இந்த ஊருக்கு வந்த அன்று அவள்மீது காதலில் விழுந்தவன் அவன்...  

 

இந்த இடைப்பட்ட நாளில் அவள் மனதையும் கவர்ந்து, இருவரும் காதலில் திலைத்திருக்க, அவனால் இதனைப் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை... 

 

தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அவன் கோபத்துடனே சுற்ற,  அவன் கோயிலில் இருக்கும் நேரம் அவன் முன்னே வந்தவளது கையில் அவளது தாயின் தாலி... 

 

அவள் அதிரடியில் அவன் தான் மிரண்டு விட்டான்... அவன் பார்வையை கண்டவளோ "என்ன தேவ் கல்யாணம்னு சொன்னதும் முகத்தில பயம் தெரியுது... ஏமாத்தலாம்னு நினைப்போ, வெட்டிப் போட்டுடுவேன்" என்று மிரட்ட, இவன் தான் இன்னும் முழிக்க வேண்டி இருந்தது.

 

அவன் முழியில், அவள் சிரித்தே விட்டாள். 

 

அவள் தன்னை கேலி செய்ததை உணர்ந்தவன், இப்போது அவளே எண்ணாத ஒன்றை நடத்தி இருந்தான்.

 

ஆம் தாலியை அவள் கழுத்தில் கட்டி அவளை மனைவியாக்கி இருந்தான். 

 

இப்போது அதிர்வது அவள் முறை ஆகிற்று!

 

கோபத்துடன் சுற்றும் அவனைச் சீண்டவே அவள் தாலியைக் காட்டி திருமணம் என்று மிரட்டியது... ஆனால் அவனோ அதனை நடத்தி இருந்தானே!! 

 

மித்ரனும் செய்ய வேண்டும் என்றெல்லாம் எண்ணவில்லை... அந்த நேரம் அவனது மனநிலை, கோயிலில் தன்னவள் நீட்டிய தாலி, முன்னே வீற்றிருக்கும் பைரவன் இவை எல்லாம் அவனை உந்த, தாலியைக் கட்டிவிட்டான். 

 

அதிர்ச்சியுடன் நின்றவளைக் கண்டவனுக்குப் புன்னகை... 

 

"என்ன மேடம் சைல்ட் மேரேஜ் பண்ணிட்டேன்னு என்னயும் போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுப்பீங்களா?" என்று குறும்புடன் அவன் வினவ, அவளோ "இன்னும் ஒரு மாசத்துல உங்க பொஞ்சாதி சைல்ட் இல்லையே ஆஃபிஸர் சார்" என்று வெட்கத்துடன் அவனை அணைத்திருந்தாள். 

 

 

இதோ திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருக்க, இன்றும் அதே அணைப்புடன் மெத்தையில் படுத்திருந்தனர் இருவரும்...

 

 

இன்றும் கோபம் என்று நடிப்பைத் தொடரும் கணவனின் பொய் கோபம் பற்றி அவள் அறியாததா??? 

 

அணைப்பை இன்னும் இறுக்கிய மித்ரனோ  "யாழ், போயிடுடி" என்றான் கிறக்கத்துடன்... 

 

உரிமை இல்லாத நேரம் வேறு ஆனால் இப்போதுதான் முழு உரிமை இருக்கிறதே அவனுக்கு... 

 

இந்த ஒருமாதம் கடத்தியே அவனுக்கு அத்தனை அவஸ்த்தை... 

 

இப்போதும் அவளை எடுத்துக்கொள்ளச் சொல்லி ஒவ்வொரு அணுவும் போராட, அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தவனோ எழுந்து கொண்டான். 

 

யாழினியின் கண்ணில் குறும்பு மின்ன அவளையே பார்த்திருந்தாள். 

 

"என்ன உசுப்பேத்தாம வந்து சாப்பாடு போடுடி" என்றவனின் குரலில் இன்னும் அவளுக்கான உணர்வுகள் மீதமிருந்தது.

 

அவள் சிறிய பெண் என்று எவ்வளவோ மனதில் பதிய வைத்தாலும் அவளோ காதல் ராட்சசியாய் அவனை ஆட்டிப் படைத்தாள். 

 

கண்களை வேறு பக்கம் திருப்பியவனது மனமோ 'என் கண்ணுக்கு மட்டும் சின்னப்பொண்ணா தெரியவே மாட்டேங்கிறாளே ராட்சசி' என்று செல்லமாய் திட்டிக்கொண்டது. 

 

அவன் முகத்தில் தெரிந்த வெட்கம் மனைவியவளுக்கு புன்னகையைக் கொடுக்க "அது சரி தேவ் உங்களுக்கு வயசாகிடுச்சுல அப்போ அப்படிதான் இருக்கும்... கல்யாணமாகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் வேடிக்கை மட்டும் தானா?" என்று கேட்டவளோ எழுந்து கொள்ளப் பார்க்க அது முடிந்தாள் தானே!!! 

 

அவள் தான் அவன் கட்டுக்குள் இருந்தாளே... 

 

"என்னடி நான் வயசானவனா உனக்கு பிச்சிடுவேன் ராஸ்கல்... சின்னப்பொண்ணு பாவம்னு விட்டு வெச்சா ரொம்ப தான், இன்னைக்கி நமக்கு ஃப்ர்ஸ்ட் டேயே நடக்கப் போகுது, யாருக்கு வயசாகிடுச்சுனு பார்க்கலாமா?" என்றவன் அவள் இதழ்களைத் தன் இதழ் கொண்டு அழுத்தமாக மூடி இருந்தான். 

 

அவளுக்கு அவன் உணர்வுகள் முன்னுரிமையாய் இருக்க, தன்னையே கொடுக்க முன் வந்திருந்தாள். 

 

கணவன் என்று அவன்மீது அத்தனை நம்பிக்கை அவளுக்கு... 

 

அவன் காதலில் இத்தனை நாள் திளைப்பவளுக்கு அவனைவிட வேறேது முக்கியமாய் இருந்திட முடியும். 

 

முத்தம் முற்று பெற அவளை நோக்கியவன் "என்னடி என்ன டெம்ப்ட் பண்ணுறியா?" என்றவன் அவள் நாசி நுனியை கடித்து வைக்க, "ஆஆ" என்றபடி அவளது நாசியை தடவியவளோ கோபமாய் அவன் இதழ்களைக் கொய்திருந்தாள். 

 

 

அதன் பின் மொத்தமாய் அவள் அவனுள்... மீள முடியாத மீள நினைக்காத சுழளுள் இருவரும்... 

 

என்னதான் உணர்வுகளின் பிடியில் இருந்தாலும் அவன் செயல் அவளைக் காயப்படுத்தாத வகையிலே இருந்தது.

 

 

இருப்பதேழு வயது ஆண்மகனின் உணர்வுகளை வெறும் பதினெட்டு வயது கூடப் பூர்த்தி அடையாத பாவையால் சமாளித்திட முடியுமா என்பதே அவனின் பயம்... 

 

அந்த எண்ணமே அவனுள் அத்தனை மென்மையை கொடுத்திருக்க, மஞ்சத்தில் பூவாய் அவளை வருடிக் கொண்டாடினான். 

 

இணைவின் இறுதியில் அவன் நெஞ்சில் சுகமாய் அவள் துயிலில் இருக்க, அவனோ அவளது கேசத்தை வருடிக் கொடுத்துக்கொண்டிருந்தான். 

 

அப்படியே படுத்திருந்தவன் அவளிடம் அசைவு தெரியவும் "யாழ், இந்த மாசமே எப்படியும் அந்தப் பொக்கிஷத்த கண்டுபிடிச்சிடுவேன்"  என்றான். 

 

அவளும் "ம்ம்ம்ம்" என்றபடி அவனுடன் ஒன்ற, 

 

மீண்டும் அவனே "சீக்கிரமே நம்ம வீட்டுக்குப் போயிடுவோம்...  நீ அதுக்கப்பறம் நிறைய படிக்கணும். நமக்குன்னு ஒரு வீடு, நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா, அதுவும் உன்ன மாதிரியே செம்ம வாயாடியா பெத்து கொடுத்துடுடி. அப்பறம் உனக்கு என்ன எல்லாம் ஆசையோ எல்லாம் ஒவ்வொன்னா நிறைவேத்தி வெச்சு என் செல்லத்த கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன்" என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு அணைப்பில் இறுக்கிக்கொண்டான்.  

 

அவள் இந்த முறையும் "ம்ம்ம்ம்" கொட்ட, "என்னடி வெறும் ம்ம்ம்ம் எங்கிற" என்றவன் வலிக்க அவள் கன்னத்தில் கடித்து வைக்க, 

 

"ஷ்ஷ்ஷ்" என்று முகத்தைச் சுழித்தவளோ அவனை அணைப்பிலிருந்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்து "இப்போ என்ன தேவ் வேணும் உங்களுக்கு, இதையே தான் எப்பவும் சொல்லுறீங்க, புதுசா சொல்லுற போல டெய்லி அதையே படிச்சா தூக்கம் வராம என்ன பண்ணும்" என்றவள் அவன் மீசை முடியை நீவி அதில் முத்தமிட்டாள். 

 

"அப்போ வேற பாடம் படிக்கணும்கிற?" என்று அவன் கேள்வியோடு அவளை நெருங்க, அவளோ பட்டென எழுந்தவள் மெத்தையை விட்டுத் தள்ளி நின்றபடி "இன்னைக்கு கோட்டா முடிஞ்சிது பாவம் புள்ளைன்னு ஒத்துக்கிட்டது தப்புனு இப்போ புரியுது... இதுல மீண்டுமா? இனிமேல் வந்தா அடிதான்" என்றாள். 

 

அதில் அவனுக்கு உல்லாசம் பெறுக, 'டைம் ட்ராவெல்லாவது ஒன்னாவது, இவள இப்படியே கூட்டிட்டு ஓடிடலாமா' என்ற எண்ணத்துக்கே போய்விட்டது அவன் மனம்... 

 

அதே குதூகலத்துடன் தலைக்கு ஒரு கரத்தைக் கொடுத்து ஒருங்களித்துப் படுத்தவனோ "நாம நாளைக்கே இங்க இருந்து போய்டலாமாடி?" என்று கேட்ட, அவளோ "அப்போ வந்த வேலை என்னாகிறதாம் ஆஃபிஸர்?" என்று நக்கலாய் கேட்டு வைத்தாள். 

 

அவனோ "யாழ், ஐ எம் சீரியஸ், நிஜமாவே உன்ன கூட்டிட்டு போய்டணும்னு தோணுதுடி... சேர்ந்து வாழாதவரை ஓகே ஆனா இனிமேல் எல்லாம் உன்ன பிரிஞ்சிருக்க முடியாதுடி... போய்டலாமா?" என்றவன் பேச்சில் தெரிந்த உறுதி அவளுக்குப் புரிந்தது.

 

 

"இங்க பாருங்க தேவ், நீங்க வந்த வேலையை முடிக்காம இங்க இருந்து நாம போகப்போறதில்லை... நிச்சயம் சீக்கிரம் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, கடைசி முயற்சியா அந்தக் கிணத்துல பார்க்கணும் சொன்னீங்கல்ல,  வர்ற ஞாயிறு அதப் பார்த்துடலாம்" என்றாள். 

 

 

அவனோ புன்னகையுடன் "சரிங்க பொண்டாட்டி" என்று எழுந்து அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டவன் "உனக்காகவே சீக்கிரம் கண்டு பிடிக்கிறோம்... அடுத்த வாரம் வர்ற உன் பிறந்தநாள் அன்னைக்கு இங்க இருந்து நாம போறோம்" என்றவனின் குரலில் அத்தனை உறுதி... 

 

 

அவனுக்கு ஒரு அடி வைத்தவளோ "என்ன இது விடுங்க என்ன? ஆளப்பாரு" என்று உதட்டைச் சுழிக்க, அவனோ சத்தமாய் சிரித்துவிட்டான். 

 

 

"ஐயோ, சத்தம் போடாதீங்க" என்று அவன் இதழைக் கை கொண்டு மூட அதிலும் ஒரு முத்தத்தை வைத்தான் கள்வன். 

 

 

"அடி தான் தேவ் வாங்க போறீங்க, சேட்டை அதிகமா இருக்கு" என்றவள் மீண்டும் அவன் நெஞ்சில் கை வைத்தபடி அமைதியாய் இருக்க, அவளின் தேவ்வோ என்னவென்று கண்களாலேயே வினவினான். 

 

 

"நாம போய்ட்டு கொஞ்ச நாள்ல இங்கேயே திரும்பி வந்துடலாமா தேவ், இனிக்குட்டிய பிரிஞ்சு என்னால இருக்க முடியாதே! அவளும் இருக்க மாட்டா தேவ்" என்க, அவனோ "சீக்கிரமே வந்துடலாம்டா, அப்படி இல்லனா டோல்ல நம்ம கூடக் கூட்டிட்டு போய்டலாம் சரியா நீ கவலைப்படாத" என்றவன் ஆறுதலாய் அணைத்திருக்க, அப்படியே கடந்த நொடிகள் அவன் அணைப்பைக் கணவனின் உரிமையாக மாற்றியது. 

 

 

ஏகாந்த தனிமை, கூடவே புது மனைவியின் நெருக்கம்... சற்று முன்னர் அறிந்து கொண்ட அவள் மென்மையென இப்படி அனைத்தும் தேவ் மித்ரனை படுத்தி வைக்க, அவன் ஆதிக்கம் அவளிடம் அதிகரிக்கவே செய்தது. 

 

 

சிறிது நேரம் தன்னைக் கொடுத்து நின்றிருந்தவள் நேரம் செய்வதை உணர்ந்து "குளிச்சிட்டு வாங்க தேவ் சாப்பிடலாம்" என்று பின்னால் இருக்கும் குளியலறைக்குள் அவனைத் தள்ளியவள், அவளும் உள்ளே இருக்கும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

 

நிகழவிருக்கும் அவர்களது பிரிவை அறிந்து கொண்டாலும் விதியால்  வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

 

 

 

இப்படியே இரண்டு நாட்கள் கடந்து அவர்கள் எதிர்பார்த்த ஞாயிரும் வர, அடுத்த நாள் அவளது பிறந்தநாள் என்கிற நிலை... 

 

 

இன்று கிடைக்கிதோ இல்லையோ நாளை இங்கிருந்து செல்வது என்று அவர்கள் உறுதியாக முடிவெடுத்திருந்தனர்.  

 

 

 

இதோ இன்று கோயிலின் பின் கிணற்றுக்கு அருகில் தேவ், யாழினியின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்தான். 

 

 

அடுத்த சில வினாடிகளில் அவளும் வந்து விட, "சாவி எடுத்தியா யாழ்?" என்று கேட்டவன் கையை உயர்த்த, அமோதிப்பாய் தலை அசைத்தவளோ அவன் நீட்டிய கரத்தில் சாவியை வைத்திருந்தாள். 

 

அந்தக் கிணறு பல வருடம் பாவனையில் இல்லை என்பதால் மூடித்தான் வைக்கப்படிருந்தது. 

 

 

மித்ரன் பலம் கொண்டு முயற்சித்தே அதனைத் திறக்க முடிய, அதற்கே கலைத்துவிட்டான் அவன்... 

 

 

அவனைப் பார்த்து நமட்டு சிரிப்புடன் "வயசாகிடுச்சு சொன்னா யாரு கேக்குறா? இப்போ பாருங்க இந்தச் சின்ன வேலைக்கே மூச்சு வாங்குது" என்றவள் வசதியாய் எட்ட நின்று கொண்டாள். 

 

 

அவனோ "உனக்கு, வாயில வாஸ்து சரி இல்லைடி நாளைக்கு என்கூட ஊருக்கு வருவல்ல அப்போ வெச்சிக்கிறேன் உன்ன" என்றவன்  உள்ளே இறங்க அவனுடன் அவளும் இறங்கினாள். 

 

 

 

 

இங்கே இப்படி இருக்க, அங்கே காசிநாதன் வீட்டிலோ வள்ளி வசை பாடிக்கொண்டிருந்தார். 

 

 

"ஊருல இல்லாத பெரிய இவளத் தான் உங்க அப்பா வளர்த்து விட்டிருக்காரு... பொண்ணுனா எப்படி பேசணும்னு கொஞ்சம் கூட இது இல்லை, போலீஸுக்கு போவாளாமே! கால ஒடச்சு அடுப்புல வெச்சிருக்கணும் சிறுக்கிக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்" என்று எகிறிக்கொண்டே பேச, காசிநாதனோ அமைதியாகவே இருந்தார். 

 

 

அவருக்கோ இப்போது அவசரமாய் அதுவும் அவளுக்கே தெரியாமல் நடத்தவிருக்கும் இந்தத் திருமண ஏற்பாட்டில் சிறிதும் விருப்பம் இல்லை.

 

 

அது தங்கை மேலுள்ள பாசம் என்று நினைத்தால் அது தான் தவறு...

 

 

எங்கே திருமண ஏற்பாடு செய்து, அதனை வேண்டாமெனச் சபை நடுவே சொல்லித் தனது மானத்தை வாங்கி விடுவாளோ என்ற பயம் அவருக்கு...

 

 

 

அவர் அமைதியாகவே இருப்பதை உணர்ந்த வள்ளியோ "என்னங்க யோசனை, கல்யாணத்த பண்ணி வெச்சா காளை அவளை வழிக்குக் கொண்டு வந்துடுவான். நீங்க யோசிக்காம இருங்க, மிரட்டியாச்சும் பண்ணி வெச்சிடுவோம்" என்றவருக்கு எப்படியாவது திருமணத்தை முடித்து விடும் முனைப்பு தான். 

 

 

காசிநாதனோ தோளில் இருந்த துண்டை உதறியவரோ "எல்லாம் சரியா நடக்கணும்... நீ என்ன செய்வியோ தெரியாது என் மரியாதை எனக்கு முக்கியம் காளைக்கு யாழினிய கட்டித் தர்றதா வாக்குக் கொடுத்திருக்கேன், நாளைக்கு எல்லார் முன்னுக்கும் என்னால தலகுனிஞ்சி நிற்க முடியாது பாத்துக்கோ" என்றார் பெருமூச்சுடன்... 

 

 

 

"அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நீங்க கவலைய விடுங்க, அவளை நாளைக்கு காலைல தயார் படுத்துறது என் வேலை. பிரம்ம முக்கூர்த்தம்ல…  எல்லாம் ஏற்பாட்டையும் இரவே முடிச்சிடுவோம், சரியா முகூர்த்த நேரத்துக்கு நான் அவளைக் கூட்டிட்டு வறேன்" என்றார். 

 

 

"ம்ம்ம், சின்னது எதையும் இன்னைக்கி உளறி வைக்கப் போகுது பார்த்துக்க" என்று அவர் சொல்ல, 

 

வள்ளியோ "அவ கெட்டது பாத்தாதுனு  சின்னதையும்  சேர்த்து கெடுத்து வெச்சிருக்கா. இந்த வயசுலேயே அவளைப் போலப் பேசுது... அத்தைக்கு கல்யாணமா நான் கேக்குறேன்னு நிக்கிது... நேத்து நான் சொல்லுறேன் அத்தைகிட்ட சொல்லவே கூடாதுனு சொல்லுவேன்னு அடம்பிடிக்கிறா சின்னக்கழுத! அதான் கைல சூடு போட்டுப் படுக்க வெச்சிருக்கேன்... வலில எதையும் சொல்ல மாட்டா, கூடவே இனிமேல்  ஒரு பயம் இருக்கும்ல அந்தச் சிறுக்கி மாதிரி இவளும் பேசமாட்டால்ல" என்றார் பெரிய நல்ல காரியம் செய்து பதக்கம் வாங்கிய நிமிர்வுடன்... 

 

ஐந்து வயதுக் குழந்தைக்குச் சூடு வைத்ததை பெருமையாகப் பேசும் இரக்கமற்ற தாய் அவர், அவரிடம் வேறு என்ன நல்ல குணத்தை கண்டிட முடியும்?

 

 

 

இங்கே இப்படி இருக்க, அங்கே நீரினுள் இறங்கிய மித்ரன் இன்னும் மேலே வந்திருக்கவில்லை... 

 

உள்ளே இறுதிப் படியில் அமர்ந்து நீரினுள் காலை விட்டபடி உள்ளே பார்த்திருந்த யாழினியோ "தேவ் சீக்கிரம் வாங்க, யாராச்சும் வந்துடப் போறாங்க" என்கவும் சரியாக அவன் மேலே வரவும் சரியாக இருந்தது. 

 

அவனை ஆர்வமாகப் பார்த்தவளோ "கிடைச்சுதாங்க" என்று கேட்க, அவனோ இடம் வலமாய் தலையசைத்தவன் அங்கே அவளுக்கு அருகே படியிலேயே அமர்ந்தான். 

 

"சரி விடுங்க, வேற என்ன பன்றதுனு யோசிப்போம்" என்றவள் அவள் புடவை முந்தானை கொண்டு அவன் தலையைத் துவட்ட, அவனும் அவளுக்கு வாகாய் கொடுத்து அமர்ந்திருந்தான். 

 

மனம் முழுவதும் தேடல் தானே... அப்படி ஒன்று இல்லை என்று ஒரு மனம் சொல்லி அவனைத் தேற்றினாலும் இன்னொரு மனம் இருந்தால் என்று கேள்வியை எடுத்துக்கொடுக்க, ஒரு பெருமூச்சு அவனிடம்... 

 

"யாழ், நாம இங்க இருந்து போகலாம்டி, விழுந்துடாம பார்த்து எழுந்துக்கோ" என்றவன் எழுந்து அவள் எழுவதற்காகக் கரத்தை நீட்டினான். 

 

அவளோ அவன் கரத்தைப் பார்த்து முறைந்தவள் "நான் இங்கயே பொறந்து வழந்தவளாக்கும் அப்படி ஒன்னும் விழமாட்டேன்" என்று முகத்தைத் திருப்பியபடி எழுந்து இரண்டு எட்டு மேலே வைத்திருக்க, காலில் இருந்த ஈரமும், பாசி படிந்திருந்த படியும் அவளைப் பழிவாங்க, சட்டெனக் கால்கள் சறுக்கிவிட்டது அவளுக்கு... 

 

பிடிப்பதற்கு பிடிமானம் தேடியவள் அருகில் இருந்த சுவற்றை பற்ற, அவள் போதாத நேரத்துக்கு அதுவும் வழுக்க, அவள் இப்படி விழுவாள் என்று தெரியாமல் முதல் படியில் நின்றிருந்த தேவ் மித்ரனின் மீது அவள் விழ, இருவருமாய் நீருக்குள் விழுந்திருந்தனர். 

 

என்ன நடந்ததென்று உணரும் முன்னரே இருவரும் நீருக்குள்...

 

வெளியே வரவே சில வினாடிகள் பிடித்தது. 

 

இருவரும் ஒரு சேர வெளியே வர, அவளைக் கண்டவன் சிரித்துவிட்டான். 

 

அவளோ "தேவ்" என்று சிணுங்க, மீண்டும் அவனிடம் சிரிப்பு... 

 

"போங்க தேவ் நான் போறேன்" என்றவள் படியை நோக்கிச் செல்லப்பார்க்க, "மறுபடியும் விழப்போறியா என்ன? இரு போவோம்" என்று அவளை எட்டிப் பிடித்து நீருக்குள் சற்று ஆழத்துக்கு அதுவும் அவனது கழுத்து வரை நீர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றவன், அவளைத் தூக்கி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்திருந்தான். 

 

 

அவளோ "என்ன?" இதழ்கள் நடுங்க கேட்க, அவள் கன்னத்தைப் பற்றியவன் "ரொம்ப டென்ஷனா இருக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டுமா?" என்றான் அவள் இதழில் வழியும் நீர் துளிகளைப் பார்த்தபடியே! 

 

அவளுக்கும் அந்த நேரம் வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, பதில் பேச முடியாமல் போனது. 

 

அவனோ மனைவியின் நாணத்தை சம்மதம் என்று கருதியவன் தாகம் எடுக்கும் தன் இதழ்களுக்கு ஈரமாய் அவள் இதழ்களை அருந்தினான். 

 

இருவரும் அப்படியே கண்மூடி முத்தத்தில் திலைத்திருக்க, தேவ் மித்ரனோ ஏதோ மாற்றத்தை உணர்ந்தவன் மனைவியை விட்டு விலக, அங்கே கிணற்றினுள் இருந்த நீர் மட்டம் குறைந்து அவர்கள் இடைவரை ஆகியிருந்தது. 

 

அவனோ கேள்வியுடன் சுற்றி முற்றி பார்க்க, அந்தக் குகை அவன் கண்ணில் பட்டது... 

 

உண்மையில் அதிர்ச்சி தான் அவனுக்கு, சற்று முன் அவன் நீருக்கடியில் தேடி இருந்தபோது இப்படியொரு குகை அவன் கண்ணில் படவே இல்லையே! 

 

எப்படி என்று யோசித்தவனுக்கு தெரியவில்லை, சற்று முன் தன் மனைவி பிடிமானதுக்கான சுவற்றைப் பற்றிய நேரம் தான் ரகசிய குகைக்கான வாயில் திறக்கப்பட்டது என்பதை... 

 

யாழினியையும் அழைத்துக்கொண்டு அதனுள் நுழைய, அங்கே ஒரு கதவு அதுவும் அதில் சாவியுடன் இருக்க, திறக்க முயற்சித்தான் மித்ரன்... 

 

பல நூற்றாண்டுகள் அப்படியே இருப்பதால் பூட்டு இறுகிப் போயிருந்ததோ என்னவோ திறக்க முடியவில்லை... 

 

இன்னும் பலம் கொண்டு முயற்சிக்க  மூன்றாவது முயற்சியில் கதவு திறந்து கொள்ள, உள்ளே நுழைந்தவர்களது கண்ணில் மித்ரன் தேடி வந்த பொக்கிஷம் விருந்தானது. 

 

 

"தேவ்" என்று யாழினி அழைக்க, அவனோ பதில் எதுவும் சொல்லாம அங்கிருந்த பெட்டியைத் திறக்க, ஓலைச்சுவடியில் குறிப்பிட்டிருந்தது போல் அங்கே அந்தக்கல்லும் அதனுடன் ஒரு முத்து மாலையும் இருந்தது. 

 

கண்களில் மின்னலுடன் மனைவியைப் பார்த்தவன், அதனைக் கையில் எடுத்துக்கொண்டான். 

 

அடுத்த சில வினாடிகளில் இருவரும் வெளியேறி இருந்தனர். 

 

மித்ரனோ "யாழ் இன்னைக்கு நைட் நாம இங்க இருந்து போய்டலாம், சரியா இரவு ஒரு மணிக்கு, மெய்ன் ரோட் பக்கம் வந்துடு நான் அங்க தான் நிற்பேன்... அப்பறம் அங்க இருந்து ரெண்டு பெரும் சென்னை போய்டலாம்" என்றான் அவளிடம் தெளிவாக, அவளும் சம்மதமாய் தலையசைத்திருக்க, இருவரும் தத்தமது வீடு நோக்கிச் சென்றிருந்தனர். 

 

 

இப்படியே நேரம் கடக்க, இரவு பன்னிரெண்டு மணி ஆகி இருந்தது.  

 

வீட்டில் பெரிதாக அலங்காரம் இல்லை என்பதால் அவளுக்கு விடயம் இப்போதும் தெரிந்திருக்கவில்லை... 

 

அங்கே பின் பக்கத் தோட்டத்தில் தான் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. 

 

வீட்டுக்கு வந்தது முதல் இனியாவுடனே இருந்ததில் இதனை எல்லாம் கவனிக்க முடியாமல் போனது அவளால்... 

 

குழந்தையும் தூங்கும் வரை "வலிக்கு அத்த" என்று அவளைக் காயத்தில் ஊதி விடச் சொல்லி அத்தையிடம்  அனுசரணையாகச் சாய்ந்து கொள்ள, யாழினிக்கு தான் மனது வலித்தது. 

 

குழந்தை இனியாவுடனே இருந்தவள் நள்ளிரவாகியும் தூங்க கூட இல்லை... 

 

சரியாகச் செல்ல வேண்டிய நேரம் நெருங்கியதும், தூங்கும் இனியாவின் கன்னத்தில் இதழ் பதித்தவள்  "அத்தை சீக்கிரமே இனிக்குட்டி கிட்ட வந்துடுவேன் எதுக்கும் பயப்படாம இருக்கணும் சரியா பட்டுக் குட்டி" என்று  மீண்டும் மறு கன்னத்தில் முத்தம் பதித்தவள், மெல்ல வீட்டை விட்டு வெளியேறி இருந்தாள். 

 

அவளுக்குக் காவலுக்கென்று வைக்கப்பட்டிந்தவனும் தூங்கி இருக்க,  பின்னே தோட்டத்தில் இருந்ததால் வள்ளிக்கு இது தெரியாமல் போனது.

 

 

நெடுநேரமாகக் காத்திருந்தும் யாழினி வாராமல் போக, தேவ் மித்ரன் அங்கே ஊரின் வெளியே பிரதான வீதியில் இவளுக்கான காத்திருந்தான். 

 

அன்று அவனைத் தேடி ஊர் எல்லையைத் தாண்டிச் சென்ற யாழினியைத்தான் மார்த்தாண்டன் கவர்ந்து சென்றிருந்தான். 

 

 

 

 

அந்த நேரம் மார்த்தண்டனின் மீது பாய்ந்த நாய், அந்த மண்டைடோட்டு மாலையிலிருந்த ஒரு மண்டையோட்டை கவ்வி இழுந்திருக்க, இதை அறியாமல் யாழினியுடன் கடந்த காலத்துக்கே சென்றிருந்தான் மார்த்தாண்டன். 

 

அந்த நாயோ அந்த மண்டையோட்டை மித்ரனை தேடிக் கொண்டு போய்ச் சேர்க்க, அதனை அவன் பார்த்துக்கொண்டிருந்த வேளையில் தான் மகிழின் குடும்ப வாகனம் அங்கே மரத்தில் மோதி இருந்தது. 

 

அதன் பின்னர் தான் மகிழின் குடும்பத்துடன் மித்ரன் மருத்துவமனை விரைந்தது. 

 

 

இது எதுவுமே அறியாத வள்ளியோ காலை முகூர்த்த நேரத்துக்கு முன்பே எழுந்தவர் எல்லாம் தயாராக இருக்கிறதா என்று கவனித்தபடி வெளியே மூடி இருந்த யாழினியின் அறையைப் பார்த்து நிம்மதி அடைந்தார். 

 

அவர் அறியாத ஒன்று இவளை வைத்து அவர் கதவை வெளியே தாழிடும் முன்னரே அவள் இனியாவின் அறைக்குச் சென்றிருந்தாள் என்பதை... 

 

எல்லா வேலையும் முடிய, முகூர்த்ததுக்கு  சரியாக அரைமணி நேரம் இருக்கையில் அவளைத் தயார் படுத்தவென்று உள்ளே நுழைந்த வள்ளிக்கோ அங்கே அவள் இல்லை என்றதும் பதற்றம் தொற்றிக் கொள்ள,  சட்டெனக் கணவனிடம் விடயத்தைச் சொல்லி இருந்தார். 

 

அவ்வளவு தான் அங்கே கூட்டம் கூடி விட்டது. 

 

கிராமங்களில் ரகசியம் பரவுவதை விட வேகமாக எதுவும் இருக்கக்கூடுமா என்ன?? 

 

இதோ எது நடக்கக் கூடாது என்று காசிநாதன் எண்ணினாரோ அதுவே நடந்து விட்டது. 

 

ஊர் மக்களின் முன்னும், முரட்டுக் காளையின் முன்னும் தலை குனிந்து நின்றிருந்தார் அவர்... 

 

மனம் முழுக்க, செய்து கொடுத்த சத்தியம், அவரது மரியாதையென இவையே ஓட, அங்கிருப்பவர்கள் எல்லாம் அவரைக் கீழிறக்கி பார்ப்பது போலவே தோன்றியது. 

 

கூட்டத்தின் இடையே அத்தனை சலசப்பு... 

 

அவருக்கோ அங்கே நிற்கவே முடியவில்லை...

 

முரட்டுக் காளையின் தாயான காசிநாதனின் அத்தை விடாமல் அத்தனை பேசினார். 

 

அவரது மகனை ஏமாற்றி விட்டதாக விடாமல் ஒரே ஆர்ப்பாட்டம். 

 

காசிநாதனோ அவமானத்தில் மண்ணில் புதைந்து விடும் அளவுக்குக் குனிந்தபடி நின்றிருக்க, அவர் கண்களில் விழுந்தது என்னவோ அவரின் முழங்கால் உயரமிருந்த இனியாள் தான்... 

 

 

தன் மூத்த அண்ணனின் கால்களைக் கட்டிக்கொண்டு நடப்பதை பயத்துடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். 

 

அவர் மனதிலோ எந்தத் தந்தையாகப்பட்டவருக்கும் தோன்றாத எண்ணங்கள் அணிவகுக்க, சட்டென்று அவர் மனதில் ஒரு ஸ்திரம், எதிலிருந்தோ தப்பித்து விட்டதை போல் ஒரு பெருமூச்சு நன்றாக நிமிர்ந்து முரட்டுக் காளையையும் தன் அத்தையையும் பார்த்தவரோ அவர் மனதில் தோன்றிய வார்த்தைக்கு உயிர் கொடுத்திருந்தார். 

 

 

அங்கே உள்ளவர்கள் முகத்தில் அதிர்ச்சி,  இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்தவர்களின் பேச்சுக்கள் சட்டெனத் தடைப்பட்டது. 

 

சிலர் "அதான நம்ம காசி மானஸ்தன் ஆச்சே சொன்ன சொல்லுக்குப் பரிகாரம் பண்ணாம இருப்பானா?" என்று அவருக்கு இன்னும் தூபம் ஏற்றினர். 

 

சிலருக்கு என்ன பேசவேன்றே தெரியவில்லை... 

 

இன்னும் சிலரோ, நடப்பது எதுவும் தெரியாமல் அனைவரையும் பார்த்துக் குண்டுக் கண்கள் திருதிருக்க, விழித்தபடி நின்ற இனியாளை கவலையுடன் பார்த்தனர். 

 

வள்ளி கூட அதற்கு எதிர்ப்பு சொல்லவில்லை, சொல்லிவிட்டால் தானே அதிசயம்...

 

என்னவென்றே தெரியாத, பருவம் கூட அடைந்திராத ஐந்து வயது பிஞ்சு குழதைக்கும் முப்பது  வயது எருமை முரட்டு காளைக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டது.

 

அவர்களின் கொள்கை இப்படி கீழ்த்தரமாக நடக்க வைத்ததை எண்ணி சிறிதும் கவலை இல்லை அந்த ஜென்மங்களிடம்... 

 

 

எதுவும் தெரியாமல் பலியாக்கப்பட்டது என்னவோ இனியாள் தான்... 

 

வள்ளியோ யாழினி மீதிருந்த கோபம் அத்தனையும் இனியாவிடமே காட்டினார். 

 

பெண் குழந்தைகளையே விரும்பாத அவருக்குப் பெண்ணாய் வந்து பிறந்தது என்ன அவள் குற்றமா? 

 

 

இப்படி பதிமூன்று வருடங்களுக்கு முன் நடந்த ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட சிலந்திவலை தான்... 

 

 

______________________

 

 

ஐந்தாம் நூற்றாண்டு... 

 

 

அங்கே மணலில் மயங்கிக் கிடந்த மித்ரன் கண்களைத் திறக்க முயன்றும் முடியாமல் போனது.

 

சிறுது நேரத்திலேயே அவன் கன்னங்கள் ஏதோ குளிர்மையை உணர, இமைதட்டி கண்களைத் திறந்தவனுக்கு முன்னே தெரிந்த உருவத்தையும் அங்கே நிகழ்வதையும் கண்டு கோபத்தில் கண்கள் சிவந்தது.

 

 

 

 

காதலைத் தேடும்...

 

இப்படிக்கு, 

உங்கள் VSV-28

 

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page