All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 11

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 46
Topic starter  

அத்தியாயம் 11 

 

குமாரின் அன்னையிடம் கூறியபடியே பவித்ரா தன் கணவன் சரவணனிடம் சஞ்சனாவிற்கு வந்த வரன் பற்றிக் கூற, அவரும் குமாருக்கு தெரிந்த குடும்பம் என்றால் பயம் இல்லையெனக் கூறியிருந்தார். சஞ்சனாவிற்கு எப்படியும் ஆறு மாதத்தில் அவள் திருமணம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன்பாகவே அது நடப்பதில் பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க. ஒரு நன்னாளில் அவள் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு சென்றார்கள் தாங்கள் எப்போதும் காட்டும் ஜோதியரிடம்.

 

 பத்துக்கு எட்டு பொருத்தம் அமோகமாகப் பொருந்தி இருக்க, ஜோதியரும் திருமணம் முடிந்தால் பெண்ணும் மாப்பிள்ளையும் சிறப்பாகவே வாழ்வார்கள் என ஆருடம் கூற, மகிழ்வுடனேயே திரும்பி வந்தார்கள் இருவரும் வீட்டிற்கு. வந்தவர்கள் சக்தியையும் அழைத்து விஷயத்தைக் கூற, அவனுக்கும் மகிழ்வு தான்.

அதற்குப் பின் வேலைகள் வேகமாகவே நடந்தேறின. குமாருக்கு அழைத்த சக்தி, ஜாதகம் நன்றாகப் பொருந்தி இருப்பதாகக் கூறிவிட்டு திருமணத்திற்கு மேற்கொண்டு பேசலாமெனக் கூறியவன், தன் தாய் பவித்ரா அவன் தாயிடம் பேச விரும்புவதாகக் கூற, குமாரும் தன் அன்னையிடம் தொலைபேசியைக் கொடுத்தான்.அதை வாங்கி பேசியவருக்கோ அளவிட முடியாத மகிழ்வு.

 பவித்ராவும் அவரிடம், அவர்தான் இந்தத் திருமண பேச்சை முன்னெடுத்தார். அதனால் அவரே முன் நின்று அனைத்தையும் பார்க்க வேண்டும் என்று கூற. அது தனக்கு கிடைத்த கௌரவமாக நினைத்துக் கட்டாயமாக முன் நின்று அனைத்தையும் செய்வதாக ஒப்புக்கொண்டார் குமாரின் அன்னையும். 

பின் பவித்ரா,

"குமார் அம்மா.நீங்கத் தான் இந்தச் சம்பந்தத்தை எங்களுக்குக் கொண்டு வந்தீங்க. இதைப் பற்றிப் பேச ஆரம்பிச்சு எங்க வீட்டுக்கு வந்தீங்க. அதனால நீங்களே அவங்களுக்கு தகவலைத் தெரிவியுங்கள். எங்களுக்கு மாப்பிள்ளையைப் பாக்கணும் முதல்ல. அவங்களும் வந்து பொண்ண பார்க்கணும். எப்ப? என்னன்னு? கேட்டுச் சொல்லுங்க.

 அவங்களுக்கு எப்ப வசதியா இருக்குமோ அப்பப் போய் முதல்ல பையன பார்ப்போம். அதுக்கப்புறம் அவங்க வந்து பொண்ண பார்க்கட்டும். என்ன சொல்றீங்க." எனக் கேட்க, 

"சரி சக்தி அம்மா. நீங்கச் சொல்றபடி செய்திடலாம். என் மருமக தான் வந்து பொண்ண பாத்துட்டாலே முதலிலேயே. அதனால நாம முதல்ல பையனைப் பார்த்து விடுவோம். உங்களுக்கு எல்லாம் திருப்தியா இருந்தா அதுக்கு அப்புறமா அவங்கள வந்து பொண்ணு பார்க்கச் சொல்லுவோம்.அதுக்கப்புறம் மேற்கொண்டு என்னன்னு பேசி முடிவு எடுப்போம். ஆனா அவங்க கொஞ்சம் சீக்கிரமா திருமணத்தை நடத்தணும்னு எதிர்பார்ப்பாங்க போலையே."

"ஓஹோ அப்படியா சொல்றீங்க.? இங்க காயத்ரி கர்ப்பமா இருக்கா.ஒன்னு அவளுடைய பிரசவத்துக்கு அப்புறமா திருமணத்தை வைக்கணும். அப்படி இல்லன்னா அவளோட பிரசவத்துக்கு முன்னாடியே திருமணத்தை நடத்திடனும்.."என்று யோசனையாக கூறிய பவித்ராவிடம், "நாம முதல்ல அவங்க வீட்ல பேசுவோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு தெரிஞ்சிக்கிட்டு. அதுக்கப்புறம் முடிவு எடுத்துக்கலாம்."எனக் குமார் அம்மா கூற அதற்குச் சரி என்று ஒப்புக்கொண்டார் பவித்ரா.

 

சொன்னபடியே குமாரும் அவனின் அம்மாவும் தங்களின் மருமகளின் இல்லத்திற்கு சென்று. சக்திவேல் பற்றியும் அவன் குடும்பத்தைப் பற்றியும் கூறிவிட்டு அவன் தங்கைக்குப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறியவர்கள், லட்சுமியின் தம்பிக்கு அவள் பொருத்தமாக இருப்பாள் என்று கூறி அவள் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பற்றியும் கூறியவர்கள். அவர்கள் குடும்பத்தையும் பற்றியும் நல்ல விதமாகவே எடுத்துக் கூற. கேட்டிருந்தட் லட்சுமியின் அன்னைக்கு மிகுந்த ஆனந்தமாகவே இருந்தது.

"ஆமா சம்மந்தி அம்மா. லட்சுமி அன்னைக்கு வந்து எங்க கிட்ட சொன்னா. நீங்க அவங்க வீட்டுக்குப் போய்ப் பேசினதையும் சொன்னா. எங்களுக்காக நீங்கப் போய்ப் பேசினது ரொம்ப சந்தோஷம். நீங்களே அவங்க வீட்ட பத்தி சொல்லும்போது தப்பாவா போயிட போகுது."என்று மகிழ்வுடன் கூறியவர் 

"நீங்களே முன் நின்று நடத்திக் கொடுங்க இந்தத் திருமணத்தை.." என்று அவரும் இவர்களையே முன்னிறுத்த அதில் பெரும் மகிழ்வும், பெருமையும் குமாரின் அன்னைக்கு. 

 

"நான் தம்பி கிட்ட பேசுறேன். அவன் எப்போ வர முடியும் என்று கேட்கிறேன். அதுக்கு அப்புறம் நாம மேற்கொண்டு பேசலாம்." எனக் கூறியவர் அவர்கள் முன்னிலையே மகனுக்கு அழைத்து இப்படி சம்பந்தம் வந்திருப்பதாகக் கூற அவனும் அந்த வார இறுதியில் வருவதாக ஒப்புக்கொண்டான்.

"இந்த வார இறுதியிலா.? அதற்கு இன்னும் மூணு நாள் தான் இருக்கு. . சரி நல்ல விஷயத்தை ரொம்ப நாள் தள்ளிப் போடக் கூடாது. நான் சக்தி வீட்டுக்குத் தகவல் சொல்லிடுறேன் இந்த வார இறுதியிலேயே அவங்க வந்து முதல்ல பையனைப் பார்க்கட்டும் அதுக்கப்புறம் மறுநாள் நாம போய்ப் பொண்ண பார்ப்போம் என்ன சொல்றீங்க.?" எனக் கேட்க, தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் கணவரிடமும் ஒரு வார்த்தை கேட்டு விட்டுச் சம்மதம் கூறினார் அவர்.

"அவங்கள ஒரு அஞ்சு மணிபோல வரச் சொல்லிவிடுகிறோம். அதற்கு முன்னையே நாங்களும் வந்துடறோம். சரிதானே." என அவர்களிடம் கூறிவிட்டு. தங்கள் வீட்டை நோக்கிச் சென்றார்கள் குமாரும் அவன் அன்னையும்.

 

இரு விட்டார்களுமே பொறுப்பைத் தன்னிடம் கொடுக்க, சொன்னபடியே பவித்ராவிடம் பேசிய குமாரின் அன்னை வேக வேகமாக அனைத்திற்கும் ஏற்பாடு செய்தார். 

இந்த வார இறுதியில் பையனைச் சென்று பார்க்கும் நிகழ்வும் ஆரம்பமானது. வீட்டிலிருந்து நான்கு முப்பது மணிக்குக் கிளம்பினார்கள். சக்தி அவன் மனைவி வைஷ்ணவி மற்றும் தங்கை மகள் மஞ்சரியுடன் இரு சக்கர வாகனத்தில் செல்ல. அவன் தாய் பவித்ரா தந்தை சரவணன் மற்றும் காயத்ரியை ஒரு ஆட்டோவில் அனுப்பிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து இவர்கள் சென்றார்கள். 

இவர்கள் சென்ற நேரம் குமார் வீட்டிலிருந்து யாரும் வராமல் வீட்டு ஆட்களாக மூவர் மட்டுமே இருந்தார்கள்.

வந்தவர்களை அமர வைத்துவிட்டு குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் சற்று ஒல்லியான உடல்வாகுடன் உயரமாக இருந்த ஒருவன். 

"வாங்க. நான் அரவிந்த். என்னைத் தான் நீங்கப் பார்க்கவந்திருக்கீங்க." என்றான் சிரிப்புடன் தண்ணீரை அனைவருக்கும் கொடுத்தபடி தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டு. அவனை யாரோ என நினைத்தவர்களுக்கு அவன் பேசிய விதமும் எந்த அலட்டலும் இல்லாமல் வந்தவர்களை உபசரித்து, தண்ணீர் கொடுத்த விதமும் அனைவரையும் கவர, புன்னகையுடனேயே எடுத்துக் கொண்டார்கள் தண்ணீரை அனைவரும்.

"குமார் வீட்ல இருந்து இன்னும் யாரும் வரலையா.?" எனப் பவித்ரா மெதுவாகப் பேச்சை ஆரம்பிக்க. மகன் தண்ணீரை கொடுத்து விட்டுப் பேசியதை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த அவனின் தாய் 

"நாலு மணிக்கே வரேன்னு சொன்னாங்க. என்னவோ தெரியவில்லை இன்னும் காணோம்."என்று கூறியபடியே வாசலைப் பார்க்க, அந்நேரம் சரியாக அவர்களும் உள்ளே வந்து கொண்டு இருந்தார்கள். 

"வாங்க, வாங்க எல்லாரும்.

வரக் கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு." எனக் கூறியபடியே ஏற்கனவே வந்து அமர்ந்திருந்த அவர்களை வரவேற்றபடி உள்ளே வந்த குமாரின் அன்னை பவித்ராவின் அருகில் அமர்ந்து கொண்டார். 

"வாங்க சம்மந்தி. வாங்க மாப்பிள்ளை." என அரவிந்தனின் தாயும் தங்களின் சம்மந்தியையும் மருமகனையும் வரவேற்க அன்னையோடு சென்று நின்று கொண்டாள் லட்சுமி.

 

வந்தவர்கள் அனைவரும் அங்கிருந்து நீள் இருக்கையில் அமர்ந்திருக்க குமரனின் குடும்பம் வந்தபிறகு வைஷ்ணவி மஞ்சரியுடன் கீழே விரித்து இருந்த பாயில் அமர, அவர்களோடு காயத்ரியும் அமர முற்பட்டவளுக்கு கீழே அமர்வதற்கு சிரமமாக இருந்தது. அதைப் பார்த்து இருந்த அரவிந்த், 

"நீங்க வேணா மேலே உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குச் சேர் கொண்டு வரேன்."என்றபடி ஒரு நாற்காலியை அவளுக்குப் போட, அவள் வயிற்றைப் பார்த்த அரவிந்தனின் தாய் 

"ஏழு மாசமா.? எட்டு மாசமா.? எனக் கேட்க

"இல்ல, இல்ல அஞ்சு மாசம் தான் ஆகுது." எனக் கூறினார் பவித்ரா. "அப்படியா ஆனா வயிறு ரொம்ப பெருசா இருக்கேயென அரவிந்தனின் தாய் யோசனையாகக் கேட்க.

"ஆமா வயிறு கொஞ்சம் பெருசா தான் இருக்கு."என்று குமரனின் தாயும் கூற

"ரெட்டை பிள்ளையோ.?" என அவர் மறுபடியும் கேட்க.

"இல்லை, இல்லை ஒரு குழந்தை தான்." என்றார் அவரும். 

மேற்கொண்டு கேட்க முற்பட்டவரை "அம்மா." என்று அழைத்த அரவிந்த். அவரை மேலும் கேள்வி கேட்காதபடி நிப்பாட்டி விட்டு. காயத்ரி அமர நாற்காலியை எடுத்துப் போட்டுவிட்டு ஒரு மேஜை விசிறியையும் அவளுக்கு ஏற்றபடி திருப்பி வைத்தான். அவள் காற்று இல்லாமலும் உட்கார முடியாமலும் சிரமப்படுவதை பார்த்துவிட்டு.

 

அவன் செயல் வந்திருந்தவர்கள் அனைவருக்குமே மகிழ்வை ஏற்படுத்தியிருந்தது. இப்படி ஒவ்வொன்றையும் கவனித்து செய்பவன் கண்டிப்பாகத் தங்கள் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வர. அவர்கள் வந்து பெண்ணைப் பார்த்துவிட்டு அவர்களுக்குப் பிடித்திருந்தால் மேற்கொண்டு பேசலாமெனச் சம்மதம் கூறி கிளம்பினார்கள் அங்கிருந்து அனைவரும்.

 

மறுநாளே அரவிந்த் வீட்டிலிருந்து வந்திருந்தார்கள் பெண் பார்ப்பதற்கு. வந்தவர்களுக்குக் காபி கொடுத்த சஞ்சனா நிமிர்ந்து அரவிந்தனை பார்க்க, அவனும் அவளைத் தான் பார்த்துக்கொண்டிருந்தான். பார்த்ததுமே பிடித்துப் போனது இருவருக்கும். அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள வாய்ப்பு கொடுத்தார்கள் பெரியவர்கள். வீட்டின் பின்பக்கம் இருந்த கிணத்தடியில் நின்றிருந்தவளை புன்னகையுடன் பார்த்தவனை பார்த்தவள்,

"எனக்குக் கல்யாணத்துக்கு அப்புறமா வேலைக்குப் போகணும்.."என்றாள் கோரிக்கையுடன். 

"போலாமே." என்றான் அவனும். "சென்னையில வேலை கிடைச்சிருமா.?"

"கிடைச்சிடும். திறமை இருந்தா கண்டிப்பா கிடைச்சுடும்." என்றான் மேலும் 

"திறமை எல்லாம் நிறையவே இருக்கு." என்றாள் ரோஷத்துடன்.

"தெரிஞ்சுக்கிறேன் நானும் போகப் போக." என்றான் புன்னகையுடன்.

"ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிக்கும்போது. சீக்கிரமாவே வாழ்க்கையில முன்னேறலாம்." என்று அவளை ஆழ்ந்து பார்த்துக் கூற. தன்னை வேலைக்கு அனுப்புவதில் அவன் சம்மதித்ததிலேயே மனம் மகிழ்ந்திருந்தவள் இருவரும் சேர்ந்து வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் செல்லலாம். என அவன் கூறியது அவள் மனதை நிறைத்தது. 

 

இரு விட்டரும் அவர்களின் பரஸ்பர சம்மதத்தை தெரிந்து கொண்டு திருமண வேலைகளை மும்முறமாகவே ஆரம்பித்து இருந்தார்கள். இன்னும் மூன்று மாதத்தில் திருமணம் என்றும் அதற்கு ஒரு நாள் முன்பு நிச்சயதார்த்தம் என்றும் முடிவாகி இருந்தது. 

 

காயத்ரியின் பிரசவத்தில் லேசான சிக்கல் இருந்தது. குழந்தையோடு வயிற்றில் சிறு கட்டி வளர்ந்து கொண்டு இருந்தது அதனாலேயே அவள் வயிறு சற்று பெரிதாகவே காணப்பட்டது. அதைப் பற்றிய பயமோ ஆபத்தோ இல்லை என்றாலும் அவளுக்கு இரண்டாம் பிரசவம் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தார்கள்.அப்போதுதான் குழந்தையோடு சேர்த்து வயிற்றில் இருக்கும் கட்டியையும் அகற்ற முடியும் என்பதையும் கூறிவிட்டு, அவள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி இருந்தார்கள்.

 

திருமண வேலைகள் ஜருராக நடந்து திருமண நாளும் அழகாக விடிந்தது. 

மாம்பழ நிற பட்டுடுத்தி தன்னவனை அசத்திக்கொண்டிருந்தாள் வைஷ்ணவி. பட்டு வேட்டி சட்டையில் மனைவியின் கண் பார்வையிலிருந்து அகலாமல் கம்பீரத்துடன் சுற்றி கொண்டிருந்தான் சக்தி. இருவரின் பார்வை பரிமாற்றம் மட்டும் யாருக்கும் தெரியாமல் நடந்தேறிக் கொண்டுதான் இருந்தது. திருமணம் நன்றாக முடிந்து அனைவரையும் சாப்பிட பந்திக்கு அனுப்பி விட்டு வந்தவனை புகைப்படக்காரர் பிடித்துக் கொள்ள, மனைவி மற்றும் தங்கை மகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டான். மூவரும் நின்றிருந்தது அவ்வளவு அழகாக இருந்தது பார்ப்பதற்கு.

 

இவர்களின் காதல் பார்வைகளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த வேல்முருகன் தாத்தாவிற்கு இப்படி தன் பேத்தி கணவன், மகன் அல்லது மகள் என அவளுக்கென்று ஒரு குடும்பத்துடன் விரைவிலேயே புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என நினைத்தவர்க்கு கண்ணில் நீர் கட்டிக் கொண்டது. யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டார். அவரையே கவனித்துக் கொண்டிருந்த அவரின் சரி பாதிக்கு அது தெரிந்தே இருந்தது. 

"ஷ்.! என்ன இது.? வந்த இடத்துல கண்ணைக் கசக்கிக்கிட்டு. யாரும் பாத்தா என்ன நினைப்பாங்க. கண்ணைத் தொடைங்க முதல்ல. அதெல்லாம் உங்க பேத்தி சீக்கிரமே நமக்கு ஒரு கொள்ளுப் பேத்தியையோ, பேரனையோ பெற்றுக் கொடுப்பா. கண் குளிர பார்க்கத் தான் போறோம் நாம." என்றார் அவரைத் தேற்றும் விதமாக.

 

"ஏன் கௌசிமா.? வந்துட்டு போற சொந்த பந்தங்களை பார்த்துப் பேசிக்கிட்டு தானே இருந்தே. நீ எப்போ என்னைப் பார்த்த.? நான் யாருக்கும் தெரியாமல் தான கண்ண தொடச்சேன். அது உன் கண்ணில் பட்டிருச்சா."எனச் சிரிப்புடன் கேட்டவரை பார்த்தவர். 

"உங்க கவனம் பூரா உங்க பேத்தி மேல இருந்தா. என் கவனம் பூரா உங்க மேல தான் இருக்கும்."

என்றவரை பார்த்தவருக்கு மனது நிறைந்து போனது மனைவியின் அன்பில். 

திருமணம் முடிந்து சஞ்சனாவை அவள் புகுந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு வீட்டிற்கு வந்தவர்களுக்கு அவ்வளவு அயர்வு. அவரவர் அறைகளில் சென்று அடைந்து கொண்டார்கள் உறக்கத்திற்காக. அறைக்குள் வந்து உடை மாற்றிக் கொண்ட வைஷ்ணவி. வீட்டிலிருந்த சில சொந்தங்களுக்குத் தேவையானவற்றை செய்து கொடுத்துவிட்டு மஞ்சரியுடன் ஐக்கியம் ஆகினாள். தன்னை தேடி வராத மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான் சக்தி. மஞ்சரியுடன் விளையாடிக் கொண்டிருந்த மனைவியைப் பார்த்துப் பார்க்க வேதனையாக இருந்தது அவனுக்கு. ஒரு குழந்தைக்காக அவள் ஏங்கும் ஏக்கம் புரியாமல் இல்லை அவனுக்கு அந்த ஏக்கம் அவனுக்குமே இருந்தது.

இரவு உணவு முடிந்து சொந்தங்கள் அனைவரும் விடைபெற்றுச் செல்ல, அறைக்குள் வந்தவள். அன்றைய வரவுச் செலவுகளை எழுதிக் கொண்டிருந்த கணவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் குளியலறை நோக்கிச் சென்றாள் இரவு உடையை எடுத்துக்கொண்டு.

 

அவள் வந்ததையும், பார்த்ததையும், சென்றதையும் பார்த்தவன் லேசான சிரிப்புடன் தன் வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். குளித்து வந்தவள் இன்னும் எழுதிக் கொண்டிருக்கும் சக்தியைப் பார்த்தபடி 

"எப்ப முடியும் இது.?" என்றாள் 

"எது.?" என்றவனின் கேள்விக்கு. "இதோ.! நீங்க எழுதிட்டு இருக்கீங்களே இதுதான்." என்றாள் கண்களால் புத்தகத்தைக் காட்டியபடி "இதுவா.? இது முடிய இன்னும் நேரமாகும்." என்றவனை பாவமாகப் பார்த்தவளை பார்த்தவன்.

"என்ன ஆச்சு.?" 

"தூங்கணும்."

"தூங்கு."

"நீங்களும் வாங்க."

"இப்பதான் கண்ணுக்குத் தெரிகிறனா நானு.?"

"ஐயோ.கோச்சிக்கிட்டீங்களா.?" என்றாள் அவனின் அருகில் நெருங்கி அமர்ந்தபடி.

"கோச்சுக்கலாம் இல்ல. ஆனா கும்முனு இருந்த பொண்டாட்டி அலங்காரத்தை எல்லாம் கலைப்பதற்கு முன்னாடி நம்ம கிட்ட வரலையேன்னு கொஞ்சம் ஏக்கமா இருந்தது."என்றவனை பார்த்தவள் "நீங்க என்னைக் கூப்பிட்டு இருக்கலாம் இல்ல."

"எப்படி கூப்பிடுறது.?வீட்ல தான் ஆளா இருந்தாங்களே."

"பாத்திங்களா. உங்களுக்கே அது தெரிஞ்சிருக்கு. அதனால தான் நானும் அவங்களை கவனிக்க வந்துட்டேன்."

"ம்ம் புரியுது இருந்தாலும் கொஞ்சம் வருத்தம் தான்."

என்றவனைப் பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்பது புரியவில்லை. 

அவளின் பார்வையை பார்த்தவன் அதற்குமேல் தாங்காமல் அனைத்தையும் மூடி வைத்துவிட்டு "சரி வா… படுக்கலாம்…" என்றபடி அவன் கைகளில் அவளுக்கு இடம் கொடுக்க. கைகளிலிருந்து அவன் மார்பில் சாய்ந்தவள். 

"சஞ்சனாவுக்கும் நல்லபடியா கல்யாணம் முடிஞ்சது சந்தோஷம் தான்…" என்றவள் சிறிய அமைதிக்கு பிறகு

"ஆனாலும் நான் ஒன்னு சொல்லுவேன். நீங்கக் கோவிச்சுக்க கூடாது. என்னை தப்பா நினைக்க கூடாது" என்று பீடிகை போட. மனைவியின் மனதில் இருந்தவற்றை அறிந்தவன் 

"ம்ம்." என்ற ஒற்றை சொல்லோடு அவளை ஊக்கினான்.

"அடுத்த மாசமே அவ கர்ப்பம் ஆயிட்டா என்னை வச்சி செஞ்சிருவாங்கல்ல.அதை நினைச்சாலே பயமாவும் கவலையாகவும் இருக்கு." என்று கூறியபடியே கணவனை நிமிர்ந்து பார்த்தவள், அவன் நெற்றியை சுருக்கியபடி இவளையே கூர்ந்து பார்ப்பதை பார்த்துவிட்டு 

"அச்சோ. அவள் குழந்தை உண்டாவது எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். அதுல நான் எந்தப் பொறாமையும் படல. படவும் மாட்டேன். குழந்தை பெற்று அவ நல்லா இருக்கட்டும் என்னோட சோகம் அவளுக்கும் வேண்டாம்."என்று வேக வேகமாகக் கூற, மனைவியை அறிந்தவன் அவளை இறுக்கி பிடித்து. 

 

"எனக்குத் தெரியும்டி…" என்றான்.

 

அந்த ஒற்றை வார்த்தை அவளுக்கு யானை பலத்தோடு கண்ணீரையும் வரவழைக்க. அவன் மார்பில் புதைந்தவளுக்கு அழுகையில் உடல் குலுங்கியது. அவளின் அழுகையை போக்க முனைந்தவன். காலையிலிருந்து தனக்கு போக்கு காட்டிக் கொண்டிருந்த மனைவியை ஆக்ரசிக்க தொடங்கினான். தன் காதலால். 

 

 

விரைவில் தீருமா இவர்களின் வலி. பொறுத்திருந்து பார்ப்போம் நாமும்...


   
ReplyQuote

You cannot copy content of this page