சஞ்சாரம் – 04
ஐஸ்கீறீமுடன் வந்த பிரஜன் அவளருகே இரட்டை சோபாவில் அமர்ந்தான்.
“ஹாய் மிஸ் பௌலோமி” என்றவாறே அருகே வந்தான் சங்கர்.
“ஹலோ சங்கர், இருங்கள்” முன்னே இருந்த ஆசனத்தை கை காட்டினாள்.
தனக்கு ஐஸ் கிரீமை எடுத்துக் கொண்டு காபியை பிரஜனுக்கும் சங்கருக்குமாய் நகர்த்தியவள் “சொல்லுங்கள் சார், என்ன பேச வேண்டும்?” விசாரித்தாள்.
சங்கர் அருகே இருந்த பிரஜனை திரும்பி பார்க்க அவன் முகம் எதுவித உணர்ச்சியுமின்றி இருந்தது. சற்று தயங்கி “உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னதாய் ஞாபகம்” நினைவுபடுத்தினான்.
பிரஜனுக்கு பிடிக்காவிட்டாலும் அவளை சங்கடத்தில் ஆழத்த விருப்பமின்றி எழப் போக அவனை தடுத்தாள் பௌமி. “என் உதவிக்காக எடிட்டர் அனுப்பி வைத்த ஆள். அவருக்கு தெரியாதது இல்ல. தாராளமா நீங்க சொல்லலாம்.”
“நான் சிஐடி அண்டர்கவர் ஆபரேஷன்ல இருக்கிறேன்.”
“உங்களை எப்படி நம்புவது?”
“பத்திரிகை இல்லையா? நியாமான சந்தேகம்”
“மிஸ்டர் சிவகுமாரின் ஃபோன் இப்போது உங்களிடம்தானே இருக்கு. அதில் என் இலக்கத்தை டயல் செய்யுங்கள்”
அதை நேற்றிரவே ஆராய்ந்து பார்த்துவிட்டாள் “அந்த இலக்கத்தை யார் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம்.”
“இந்த பத்திரிகைகாரங்களை” என்று பல்லைக் கடித்தவன் “சரி பீனிக்ஸ் பற்றி சொன்னால் நம்புவீர்களா?” கேட்டான்.
இத்தனை நேரம் சலனமின்றி அவர்கள் உரையாடலை கவனித்த பிரஜனின் விழிகள் கத்தியின் கூர்மையுடன் அவனை நோக்கியது.
“உங்களை கொல்ல ஆள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். அந்த கொலையாளி பெயர் பீனிக்ஸ்.”
“நேற்று பார்ட்டியில் நின்ற யாரும் இதை கண்டு பிடிக்க முடியும். எனக்கும் தெரியும்”
“அவன் இங்கே வந்து சரியாய் பதினான்கு நாள். அது மட்டுமில்லை நேற்று பார்ட்டியில் கூட நின்றிருக்கின்றான்.”
“கைது செய்து விட்டீர்களா?” ஆர்வமாய் கேட்க, திரும்பி அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான் பிரஜன்.
‘என்னை கைது செய்வதில் இவளுக்கு ஏன் இத்தனை ஆர்வம் ’
அவன் நினைத்தையே சங்கர் கேள்வியாய் கேட்டான்.
“ஒரு கணக்கு இருக்கு அதான்”
“பீனிக்ஸ் ஒன்றும் அடுத்த தெருவில் இருக்கும் ரவுடி இல்ல. உலக அளவிலான புரோஃபெசனல் கில்லர். இப்படி உங்கள் அருகில் இருந்தால் கூட கைது செய்ய முடியாது” என்று பிரஜனை கை காட்டினான்.
பௌமி வியப்புடன் கண்ணை விரித்து பிரஜனைப் பார்க்க அவன் கண்ணில் சிறு மின்னல் மின்ன சிறு சிரிப்புடன் தோளைக் குலுக்கினான்.
“அவனை நேரில் பார்த்தவர்கள் இல்லை. அப்படியே ஒரு ஆபரேசன் செய்தாலும் மேக்ஸிமம் உடல்தான் கிடைக்கும். சோ உங்கள் கணக்கு எப்பவுமே அன்செட்டில்தான்”
அவள் மீண்டும் கேள்வி கேட்க முயல, சற்று முன்னே வந்த பிரஜன் “ஈஸி லவ் இத நான் ஹன்டில் பண்ணவா?” அவளிடம் அனுமதி கேட்டான்.
தலை சாய்த்து பார்த்தவள் “ஷுயர்” என்றாள்.
சங்கர் புறம் சாய்ந்து “கோப்ரேட் வித் மீ” அவன் கண்களையே ஊன்றி பார்த்து முகத்திற்கு முன்னால் விரல்களை சுண்டினான். சட்டென கண்கள் ஒளி மங்கி ஒருவித மயக்கத்திற்கு சென்றாலும் மனோவசியத்தை எதிர்த்து போராடுவது பிரஜனுக்கு புரிந்தது.
“ஷ் ரிலாக்ஸ், இது உண்மை என்பதை உறுதிப்படுத்த மட்டுமே. நெள டெல் மீ, உங்கள் உண்மையான பெயர், வேலை என்ன?” அவன் குரல் மந்திர ஸ்தாயியில் ஒலித்தது. பௌமியும் முன்னே சாய்ந்து ஆர்வத்துடன் நடப்பதை கவனித்தாள்.
“என்னோட பெயர், சிவசங்கர நாராயணன் தம்பி, சிபிஐயில் வேலை செய்கிறேன்.” பதில் சொல்லமால் இருக்க போராடினான் சங்கர்.
“ஒகே” மீண்டும் ஒருதரம் சுண்டி விட்டு பின்னே வந்தவன் பௌமியிடம் கூறினான் “யெஸ் லவ், அவர் உண்மையைதான் சொல்கிறார்”.
“யார் நீ” சினந்தான் சங்கர்.
“ரிலாக்ஸ் மேன், ஜஸ்ட் பொழுதுபோக்காய் பழகியது. சமயத்திற்கு உதவுது” காலின் மேல் கால் போட்டு ஒரு கையை பௌமியின் பின்னால் நீட்டி அமர்ந்தான்.
மறுத்து பௌமி ஏதோ சொல்ல வர “அப்படியே எதிரியாய் இருந்தாலும் பத்தோடு பதினொன்று அவ்வளவுதான்” ஒற்றை கண்ணடித்து அவள் பின்னால் நீண்டிருந்த கையால் தோளை தட்டிக் கொடுத்தான்.
‘யாருடா இவன்?’ என்பது போல் பார்த்து வைத்தான் சங்கர்.
“சரி சொல்லுங்கள், நான் என்ன செய்ய முடியும்?”
“ஹிப்னோசிஸைதான் நானும் பிடிக்க முயற்சிக்கிறேன். உங்கள் அப்பா நிச்சயமாய் ஏதோ பெரிய ஆதாரத்தை சேகரித்து இருக்கிறார். அதனால்தான் அவரை வெளிப்படையாக துரத்தியிருகின்றார்கள். உன்னிடம் ஏதாவது சொன்னாரா?”.
அவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவள் கேட்டாள் “என் அப்பா காணமல் போய்விட்டார் தெரியுமா?”.
ஆமோதித்து தலையாட்டினான் “அதன் பிறகுதான் சிபிஐ இதில் இன்வோல்வாக தொடங்கியதே. உங்கள் அப்பா காணாமல் போனது தொடர்பாய் இன்னும் ஒரு முறைப்பாடும் கிடைக்கவில்லை. இன்றே அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுத்து விடுங்கள். இன்ஸ்பெக்டர் நாராயணன் கடைசியாய் உங்கள் அப்பாவை தான் சந்தித்து இருக்கிறார். அது தொடர்பாய் உங்களுக்கு ஏதாவது தெரியுமா?”
“நீங்கள் அவரைத் தேடினீர்களா? ஏதாவது லீட் கிடைத்ததா?” பதிலுக்கு கேட்டாள்.
“இல்ல கடைசியாய் அந்தக் கம்பனியில் வேலை செய்யும் ஒருவரை சந்திக்க சென்றிருக்கின்றார். ஆனால் அது யார் எப்படி தொடர்பு கொண்டார் எதுவித தகவலும் இல்ல. போன் மெயில் லேன்ட் லைன் எல்லாம் பார்த்தாகிவிட்டது”
“யூ மீன் விசில்ப்லோவேர்... நோ, தேடுறேன் தகவல் கிடைத்தால் சொல்கிறேன்.”
“கம்பனியில் முற்று முழுதாய் தேடிட்டேன் ஒரு தகவலும் இல்ல. நான் வருவதற்குள் சுதாகரித்துவிட்டார்கள். பழைய ஆட்களை அவர்களே வேலையில் இருந்து அனுப்பிவிட்டார்கள். இதில் தானாக போனவர்களை கண்டு பிடிக்க முடியல”
“கஷ்டம்தான் இப்போது அந்த தேவராஜின் ஆள் நாயர் என்னை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறான். நீங்கள் என்னை சந்தித்தற்கு அவர்களிடம் என்ன காரணம் சொல்லப் போகின்றீர்கள்.”
சிறு முறுவலுடன் பார்த்தான் சங்கர் “சமாளிப்போம் இதற்கு கூடவா சிபிஐயில் பயிற்சி கொடுக்க மாட்டார்கள். எனக்குத் தெரியும், அந்த விசில்ப்லோவேர் நிச்சயமாய் உங்களை அணுகியிருப்பார்.”
“அப்படி என்னை தொடர்பு கொண்டால் நிச்சயம் சொல்கிறேன்” சலனமின்றி சொன்னாள் பௌமி. ஏனோ அடக்கப்பட்ட கோபம் தொனித்தது அவள் குரலில்.
மெல்லிய ஆச்சரியத்துடன் அவளைக் கவனித்தான் பிரஜன். தன்னிடம் சொன்ன தகவலில் ஒரு வீதம் கூட சங்கரிடம் சொல்லவில்லை.
“ஈஸி லவ்” அவள் தோளில் தட்டிக் கொடுத்தவன் சங்கரிடம் கூறினான். “நாங்களும் ஆதாரத்தை தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். கண்டு பிடித்தால் எப்படியும் நீங்கள்தான் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆனால் உங்களுடன் சேர்ந்து வேலை செய்ய ஒரு காரணம் வேண்டுமில்லையா?”
தன் கூற்றை கிரகித்துக்கொள்ள இடம் கொடுத்த பிரஜன் சொன்னான் “பௌமியின் அப்பாவை கண்டு பிடிக்க உதவி செய்தால், ஆதாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு எதுவித ஆட்சேபனையும் இல்ல”
“ஏன் போலீசிடம் போகவில்லை”
“சிம்பிள், ஹிப்னோசிஸின் ஆள் போலீசில் இருக்கு. இல்லாவிட்டால் நாராயணன் இறந்திருக்க மாட்டார்” என்ற பிரஜன் விசாரித்தான் “அந்த இன்ஸ்பெக்டர் நாராயணன் எங்கே தங்கியிருந்தார். அவர் குடும்பம் எங்கே? எதாவது தெரியுமா?”
“மனைவி அம்மா வீட்டோடு போவிட்டார்கள், தங்கிருந்த இடத்தை தோரோவா செக் செய்து பார்த்திட்டேன்” என்று நீண்ட மூச்சை விட்டான் சங்கர்.
“பரவாயில்ல என் பார்வை வித்தியாசம்” என்று புன்னகைத்தான் பீனிக்ஸ்.
“உங்களைப் பார்த்தால் வெறும் பத்திரிகை மாதிரி தெரியல. இன்டெலிஜென்ஸில் வேலை செய்கின்றீர்களா?” சந்தேகத்துடன் கேட்ட சங்கரை பார்த்து புருவத்தை உயர்த்தி கண்ணை மூடித் திறந்தான் பிரஜன்.
“இன்டெலிஜென்ஸ் அதைவிட புள்ளிககளை இணைக்க தெரிந்த ஒருவன். சில புள்ளிகளை இணைக்கமால் விடுவது தான் நல்லது” அவன் குரலில் மெல்லிய எச்சரிக்கை இதற்கு மேல் என்னை பற்றி விசாரிக்கதே என்பது போல்.
சிறு யோசனையாய் பார்த்தவன் நாராயணன் விலாசத்தை கொடுத்து விட்டு எச்சரித்தான் “ஜாக்கிரதை அந்த இடம் இன்னும் கண்காணிப்பில் இருக்கு. மேலிடத்தில் பேசி மீதி விபரங்களை இன்னும் ஐந்து நாளில் வேண்டி தருகிறேன்”
அவன் போய்விட பௌமியை நோக்கிய பிரஜன் ஒரே ஒரு கேள்வி கேட்டான் “ஏன்?”
“அப்பா இவர்களிடமும் உதவி கேட்டார். ஆனா சட்டம் அது இது என்று மறுத்துவிட்டார்கள். சரியான நேரத்தில் உதவியிருந்தால் அவர் காணமால் போய் இருக்க மாட்டார்” என்றாள் மெல்லிய சினத்துடன்.
அவள் கையை தட்டிக் கொடுத்த பிரஜன் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி “நிச்சயமாய் அப்பாவைக் கண்டு பிடிப்போம். ஒகே ஐ ப்ராமிஸ்” என்றான்.
மேல் கீழாய் தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் பௌமி.
*****
பௌமியின் பிளாட்,
கையில் இரண்டு கப்புடன் வந்த பௌமி ஒன்றை பிரஜனுக்கு கொடுத்து விட்டு தானும் பருகத் தொடங்கினாள்.
அவன் லப்பில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க அருகே அமர்ந்து எட்டிப் பார்த்தாள் “என்ன பார்கிறீங்க?”
“நாளை நாங்க போக வேண்டிய இடத்தை பற்றி பார்கிறேன்”
“ஜோன் தந்த விலாசமா”
“ஹ்ம்ம் மூணார்”
“இடம் எப்படி, பஸ்ஸில் போகலாமா?”
“பியுட்டிபுல் பிளேஸ் ஆனா பஸ் வேண்டாம்” என்றான்.
“ஏன்?”
“நாங்கள் போகும் வேலைக்கு கஷ்டம் அங்கே போய் தேட வேண்டி வரலாம்” சாய்ந்து அமர்ந்து தேநீரை பருகினான்.
வட்டக் கழுத்து வெள்ளை டீசேர்ட்க்கு மேல் கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து கருப்பு நிற பண்ட் என்று இருந்தவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள் பௌமி.
ஏதோ கேட்கத் திரும்பியவன் அவள் பார்வையில் புன்னகைத்து தொண்டையை செருமினான். சட்டென மயக்கத்தில் இருந்து மீண்டவள் வாயிலிருந்த தேநீர் வழியாமல் இருக்க சிரமபட்டாள்.
அவன் சிறு சிரிப்புடன் மறுபுறம் திரும்பவே “லூசு பௌமி” தலையில் தட்டிக் கொண்டாள்.
“போவோமா?” நிலைமையை இலகுவாகக் கேட்டான்.
“மூணாரா, திங்க்ஸ் எடுத்து வைக்கலையே” ஆச்சரியத்துடன் கேட்கவே “இல்லை அந்த இன்ஸ்பெக்டர் நாராயணன் வீட்டிற்கு” என்று பதிலளித்தான் “மூணாருக்கு நாளை புறப்படுவோம்”.
இருவரும் லிப்ட்க்காக காத்திருக்கும் போது போனில் டாக்ஸி புக் செய்ய போனவளை தடுத்தான் “என்னோட கார் இருக்கு அதில் போவோம்”.
“ஹ்ம்ம் பெரிய ஆள்தான்” விளையாட்டாய் கேலி செய்தவள் தயக்கத்துடன் கேட்டாள் “உங்களை ஒன்று கேட்கலாமா?”
“ஷூயர் எனிதிங்”
லிப்ட் வரவே இருவரும் உள்ளே சென்றார்கள். அந்த லிப்டின் அதிர்வுடன் போட்டி போட்டுக் கொண்டு அதிர்ந்தது பௌமியின் இதயம்.
பௌமி எதையோ கேட்க தடுமாறுவது பிரஜனுக்கு தெளிவாய் புரிய கண்களில் விளையாட்டுத்தனம் மின்ன அருகே கையூன்றி “என்ன பௌமி பேயை பார்த்தியா? இல்ல, என்னோட முகம் பேய் மாதிரி இருக்கா?”
“உப் பிரஜன்” அவன் தோளில் அடித்தவள் “இல்ல நீங்க என்னை என்னை”
அவள் தடுமாற்றத்தை வியப்புடன் பார்த்தவன் “ஈஸி லவ், என்ன என்று சொல்லு” விசாரித்தான்.
“நீங்க என்னை ஹிப்னோடைஸ் செய்தீங்களா?” கண்ணனை இறுக மூடிக் கொண்டு கேட்டுவிட்டாள்.
மெல்லிய அதிர்வுடன் நோக்கினான் பிரஜன்.