All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

எழுந்திடும் காதல் காவியம் - டீசர்

 

VSV 14 – எழுந்திடும் காதல் காவியம்
(@vsv14)
Member Author
Joined: 4 weeks ago
Posts: 6
Topic starter  

“இவளுக்குச் சொந்தத்தில் மாப்பிள்ளைப் பார்க்க வேண்டாம்டா. அந்நியத்திலேயே முடிப்போம்” என்று சொன்னார் உமாராணி. 

 

நீரஜ்,“ஏம்மா?”

 

“அவ அப்பா, அம்மாவை இழந்துட்டு நின்னப்போ, சொந்தக்காரங்களில் ஒருத்தராவது நாங்க அவளைப் பார்த்துக்கிறோம்ன்னு வந்தாங்களா? அவளை வளர்க்கிறப் பொறுப்பை நாம எடுத்துக்கிட்டப் பிறகாவது ஒரு எட்டு வந்து பார்த்துட்டுப் போனாங்களா?” எனப் பொருமினார். 

 

“ம்ஹ்ம்” என்று அவரது மகனும் அதை ஆமோதிக்க,

 

உமாராணி,“இனிமேலும் அவளுக்கு யாரோட சகவாசமும் வேண்டாம். கல்யாணம் பண்ணிட்டுப் போய் நிம்மதியாக இருக்கட்டும்” 

 

“ஆமாம்மா. அதையும் நாமளே அவளுக்கு நல்லபடியாக செஞ்சு அனுப்பி வச்சிடுவோம். அப்போ தான், சித்தி, சித்தப்பாவோட ஆத்மா சாந்தி அடையும்” என்று கூறி விட்டு அங்கேயிருந்து அகன்றான் நீரஜ். 

 

பிரஹாசினியின் பெற்றவர்களைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்திருந்தவரோ, அவளுக்குச் சீக்கிரம் ஒரு நல்ல வரன் அமையும் வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு வேலைகளைப் பார்க்கப் போய் விட்டார் உமாராணி.       

       

                ----------------------------------

 

அந்த இல்லத்திற்குள் நுழைந்ததும், அதனை ஒரு சுற்றுப் பார்வையால் அளந்து கொண்டிருக்க, அவனுடைய இந்தச் செயலைக் கண்ணுற்ற அவனது அன்னை சோமசுந்தரி,”என்னத் தேடிட்டு இருக்கிறடா?” என அவனிடம் வினவினார். 

 

“ஒன்னும் இல்லைம்மா. சும்மா நம்ம வீட்டோட கலைநயத்தைப் பார்த்துட்டு இருந்தேன்” 

 

அதைக் கேட்டுப் புன்னகைத்தவர்,”இதெல்லாம் நீ பார்த்துக் கட்டச் சொன்னது தான? அப்போ ரசிக்கத் தான் தோனும்” என்றார். 

 

திவ்யன்,“மாடியில் ஒரு ரூம் எடுத்துக் கட்டனும்மா”

 

அவனை யோசனையாகப் பார்த்து விட்டு,”ஏன்டா? இதுவே நமக்குப் போதுமே?” எனக் கேட்கவும், 

 

“நமக்குப் போதும் தான்ம்மா. ஆனால், எதிர்காலத்துல கண்டிப்பாகத் தேவைப்படும்” என்றவனைப் புரியாமல் பார்த்தார் சோமசுந்தரி. 

 

கருத்து திரி : 


   
ReplyQuote

You cannot copy content of this page