All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

VSV45 கனலை அணைக்க வா கவியே

 

VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 13
Topic starter  

அனைவருக்கும் வணக்கம் மக்களே...

கதை: கனலை அணைக்க வா கவியே...

இதுதான் நம்ம கதையோட தலைப்பு.கதையிலிருந்து சிறு முன்னோட்டம்.

நாயகன் :தேவ் ஆச்சார்யா 

நாயகி: ஆராதனா 

நாயகனின் தோழன்: ரிஷிவர்தன்

நாயகியின் தோழி : வந்தனா

 



டீசர் 1:

தேவ்வும் ரிஷியும் பேசியபடி அறைக்குள் நுழைந்தார்கள்.

தேவ் சாய்வாக நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்.நேற்று இரவிலிருந்து அவசர சிகிச்சை பிரிவில் பணி.விழிகள் ஓய்வுக்கு ஏங்கியது.ரிஷி கைகளை கழுவியவாறு "ஆரா வந்துருக்கா டா குழந்தையோட" என்றான்."ம்ம்ம்' என்றானே தவிர வேறு எதுவும் பேச வில்லை.ரிஷி அவனருகில் வந்து"என்ன மச்சான் தூக்கம் வருதா" என்றான் அவன் தோள் தொட்டு."ம்ப்ச்,இல்ல டா"என்றவன் எழுந்து சென்று கைகளை கழுவி முகத்தை நீரால் அடித்துக்கழுவினான். " அந்தக் குழந்தை அவளோட குழந்தை ன்னு உனக்குத் தோணுதா" என்றான் தீடீரென. ஒரு நிமிடம் ரிஷிக்கு  ஒன்றும் புரியவில்லை  என்ன சொல்கிறானென்று."என்னடா சொல்ற" என்றான் ."ஆரா எப்படியிருக்கா" என்றான் .ஒரு நிமிடம் விழி சுருக்கி அவனைப் பார்த்தான் ரிஷி " நல்லா இருக்கா டா,ஹஸ்பண்ட் வரலப்போல " என்றான்.அவனை நன்றாக முறைத்தான் தேவ்."ஏன்டா இவ்ளோ பாசமா பாக்குற" என்றான்."ஒன்னுமில்ல, நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல" என்றான். " "ஓஹோ சரி சரி,அந்தக் குழந்தை அவளோடதா இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும்  உனக்கு  ஓவர் கான்பிடன்ஸ் மச்சான், அந்தக் குழந்தை அவளோடது இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்? அப்புறம் இன்னொன்னு உனக்கு என்ன வயசாச்சி தெரியுமா, இப்படியே போனா நேரா எல்லாரும் உன்னோட அறுபதாம் கல்யாணத்துக்குத் தான் வருவாங்க,  ஏற்கனவே நம்ம புரபஷன்ல செட்டில் ஆகுறதுக்குள்ள  சொட்ட விழுந்துடும் டா இதுல நீ வேற ரொம்ப லேட் பண்ற டா" என்றான்."வந்தனா என்ன சொன்னா" என்றான் தேவ்."ஒன்னும் பேசிக்கல சாயந்திரம் தான் பேசணும் ஆமா ,ஏதுனாலும் ஃபீல் பண்றியா டா"என்றான்."என்ன ஃபீல் பண்ணனும் "என்றான்."அதானே எங்க நீ ஃபீல் பண்ணிட்டாலும்"என நொடித்துக்கொண்டே தன் பையை எடுத்துக்கொண்டிருந்தாதல் தேவ்வின் முகத்தில் வந்து போன உணர்வை பார்க்கவில்லை ரிஷி.

This topic was modified 2 weeks ago 2 times by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 13
Topic starter  

வணக்கம் நட்பூக்களே 🙏

நம்ம கதையோட முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அத்தியாயம்:1

டெல்லி விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொணடிருந்தது. எத்தனை தலைபோகும் வேலைகள் இந்த மனிதர்களுக்கு.நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.விமானத்திற்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தது.அவற்றை பார்த்தவாறே ஆராதனா, தன் ஒரு கையில்  பயணப் பைகளுடனும் மறுகையில் சூர்யாவுடனும் பார்வையை சுழல விட்டபடி தன் விமானத்திற்கான அறிவிப்பை பார்த்து அந்த பகுதியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்.

" அம்மூ பசிக்குது"என்றான் சூர்யா .தன் கைப்பையில் இருந்து சிறிய டப்பாவில் உள்ள வெட்டிய ஆப்பிளை அவனுக்கு எடுத்துக்கொடுத்தாள்.அவன் தலையை வாஞ்சையாக வருடி சிறு முத்தம் பதித்தாள்.எதையோ யோசித்திருந்தாள்.பின் தன் அலைபேசி எடுத்து தன் தோழி வந்தனாவிற்கு அழைத்தாள்,"ஹலோ! வந்தனா நானும் சூர்யாவும் ஏர்போர்ட் வந்துட்டோம் ,உன் அட்ரஸ் லொகேஷன் ஷேர் பண்ணு டி நாங்களே வந்திடுறோம்" என்றாள்.

"இங்க எனக்கு ஒரு வேலையும் இல்லை,சோ  நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன் டி"என்றாள் வந்தனா. ஆராதனாவிற்கு இப்போது இருக்கும் ஒரே உறவு உயிர்த்தோழி வந்தனா மட்டுமே.ஆராதனா டெல்லியிலுள்ள பிரபல மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவராக இருக்கிறாள்.

சிறிது நேரத்தில் அவள்  தன்னுடைய விமானத்திற்கான அறிவிப்பு வரவே  சூர்யாவுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.சில வருடங்கள் கழித்து இப்போது தான் சென்னைக்குச் செல்கிறாள்.சிறிது நேரத்தில் சூர்யா உறங்கி விடவே, அவள் ஜன்னலோரம் கடந்து செல்லும் மேகங்களைப் பார்த்தாள்.அந்த மேககங்களிடையே மெல்லிய பனிப்படலமாக அவன் முகம் தோன்றியது.எத்தனை காதலுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.அத்தனையும் கானல் நீரானதே.இநத காதல் தான் எத்தனை பொல்லாதது.எத்தனை புத்திசாலிகளையும் கோழையாக்கி விடுகிறது .ஆம் ஆராதனா மிகவும் துடிப்பான திறமையான பெண்.அவள் இருக்கும் இடமும் கலகலப்பாக இருக்கும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாள்.எந்த நிலையிலும் கலங்காத பெண்.அவள் அப்பா நந்தன்- தாய் சந்திரா இருவரும் வங்கியில் உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.இருவரும் காதலித்து

அவர்களது வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்களுடைய மூத்த மகள் நிவேதா  ,இளையவள் ஆராதனா . இருவரும் அவர்களது இளவரசிகளே.அவர்களுடனான அவள் வாழ்க்கை செர்க்கமாக இருந்தது.ஆனால் இன்று???

அவனுடனான கடைசி சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.தன் காதலுக்காக இறைஞ்சிய தருணம் அவள் கண்முன் நின்றது.

அன்றோரு நாள் மாலை நேரத்தில் நன்கு மழை அடித்துப்பெய்துக்கொண்டிருந்து.சற்றே ஆள் அரவமற்ற இடம்.அவன் கத்திக்கொண்டிருக்கிறான்.

"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா  இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல "என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,

"ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க "என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள், "ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு  நினைக்கிறியா?  "ம்ம்.." என  தன் தாடையை தடவியபடி"இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா"என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான். 

" பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்"

என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன்  வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.கீழே விழுந்ததில் முழங்கையும் ,உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது . அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக  ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை ,அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து "ஹோ" வென வெடித்து அழுதாள்.தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்." ஏன் இப்படி ஆனேன்"என மனதினுள் போராடினாள்

உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.அன்றுதான் அவனை கடைசியாக சந்தித்தது.   

இதோ நான்காண்டு கழித்து இப்போது தான் சென்னைக்குத் திரும்புகிறாள்.விதி மீண்டும் இங்கு இழுத்து கொண்டு வந்திருக்கிறது அவளை.உள்ளம் இன்றும் தகித்துக் கொண்டுதான் இருக்கிறது அவளுக்கு பார்ப்போம்....

கனல் அணையுமா?.....

 

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


 

 

 

 

 


 

This post was modified 5 days ago 2 times by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 16
 

சூப்பர் 👌 👌 👌 👌 👌 


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 13
Topic starter  

@vsv11  thank you


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 13
Topic starter  
வணக்கம் மக்களே 🙏
இதோ  நம்ம கதையோட அடுத்த அத்தியாயத்தோட வந்துட்டேன் பா.படிச்சு பாருங்க உங்க கருத்துக்களை சொல்லுங்க.கதையின் போக்கில் ஏதேனும்  குறையிருப்பின் மன்னிக்கவும் 
 
அத்தியாயம் 2:
விமானம் தரையிரங்கியது. அவள் தன் உடைமைகளை எடுத்துக்கொணடு சூர்யாவையும் ஒரு கையில் பிடித்தவரே வந்தாள்.சற்று நேரத்தில் அவளது அலைபேசிக்கு அழைப்பு வந்தது எடுத்து  "ஹலோ சொல்லுங்க நேத்ரன்" என்றாள்  "ரீச் ஆகிட்டயா" எனக்கேட்டான். "இல்லபா இப்பதான் வெளிய வர்றேன் வந்தனா வந்துடுவா ,நான் வீட்டுக்குப் போய் கால் பண்றேன்,பாய்"  என வைத்து விட்டாள்.
 
நேத்ரன் அவளோடு பணிபுரியும் டாக்டர் மட்டுமல்ல அவளது நலவிரும்பியும் கூட.அவளது பக்கபலமாக இருந்து அவளுக்கு பாதுகாப்பு கொடுத்தது நேத்ரனும் டாக்டர் விக்டரும் தான்.தன் தந்தைக்கு அடுத்தபடி அவளுக்கு  தைரியத்தையும்உத்வேகத்தையும் கொடுத்தது டாக்டர் விக்டர்தான்.
 
பத்து நிமிடத்தில் வந்தனா வந்துவிட்டாள்."ஹாய் டி ஆரா எப்படி இருக்க, ஹப்பா.. இப்பவாவது இங்க வரனும்னு உனக்கு தோணிச்சு பாரு, வா! வா! ஏன் டி இப்படி இளச்சு போய்ருக்க "என மூச்சு விடாமல் வந்தனா பேசிக்கொண்டே போக,"இரு இரு கொஞ்சம் மூச்சு வாங்கு டி , எல்லாம் இங்கேயே பேசி முடிச்சுடலாமா?  இல்ல வீட்டுக்குப் போய் பேசலாமா?மிதுனா குட்டி எங்க ? வீட்ல விட்டுட்டு வந்துட்டியா?" என்றாள் ஆராதனா. "ஆமா டி , அப்பாவும் பொண்ணும் ஜலக்கீரீடை ல பிசியா இருக்காங்க " என்று சிரித்தபடி சூர்யாவின் கன்னம் கிள்ளி "ஹலோ பப்ளி பாய் எப்படி இருக்க டா?" என்றாள். "மேன் டீக் ஹூம் ஆன்டி " எனக்கூறி அழகாகச்சிரித்தான்.அவனதுகொழுக் மொழுக் கன்னங்களோடு அவன் கண்களும் விஷமச் சிரிப்பை சிந்தியது. அதனை ரசித்தவாறே  தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அவனைப் பொய்யாக முறைத்தாள், பின் " அடேய் மினி சைஸ் ஷாருக்கான் ஒழுங்கா தமிழ்ல பேசுடா, எனக்கு இந்தி மாலும் நஹீ டா " என்றாள் வந்தனா.உடனே அவன் ஆராதனாவிடம் "அம்மூ ஆன்டி தப்பு தப்பா ஹிந்தி பேசுறாங்க " என புகார் வாசித்தான்.
அதென்னவோ சிறு வயதிலிருந்தே அவளுக்கும் ஹிந்தி மொழிக்கும் தகராறு வெடிக்கும்.பன்னிரெணடாம் வகுப்பு வரை மூன்றாவது மொழிப் பாடம் தான் ஆனால் அதை படிப்பதற்குள் வீட்டையே இரண்டாக்கி விடுவாள்.எப்படியோ இது வரை தன் வேலையில் சமாளித்துக்கொண்டு வருகிறாள்.அப்படியும் ஏதாவது சமாளிக்க முடியாமல் போகும் போது அவளின் காதல் அடிமை காப்பாற்றி விடுவான்.அவளது காதல் அடிமை வேறு யாருமல்ல அவளிற்கு தாலி கட்டிய பாக்கியவான் ரிஷிவர்தன் தான்.
 
வந்தனா தன்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்திருந்தாள் அதில் மூவரும் வந்தனா - ரிஷிவர்தன் வீட்டிற்குச் சென்றனர்.வந்தனாவின் மனம் முழுக்க ஆராதனாவின். தீடீர் வருகையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது.ஆராதனாவின் மனமோ எவ்வளவு நாள் இங்கு தங்க வேண்டி வருமோ என யோசித்தது. அனைவருக்கும் ஓவ்வொரு சிந்தனை..
 
நாற்பது நிமிட பயணத்தில் தான் என்ன செய்ய வேண்டுமென ஒரளவு யோசித்து வைத்திருந்தாள்
சட்டென சிந்தனை தடை பட கார் நின்றது அவர்களது வீட்டில் .காரை அதன் இடத்தில் நிறுத்தி விட்டு காலிங் பெல்லை அடித்தாள். வேகமாக கதவை திறந்த ரிஷி "எத்தனை தடவ சொல்றது வந்துட்டன்னா போன் கால் பண்ணு கதவை  திறக்கிறேன்னு இப்பதான் மிதுவ கஷ்டப்பட்டு தூங்க வைச்சேன்.எழுந்தான்னா தூங்க மாட்டா."எனக்கூறி கதவை நன்றாக திறந்தான்."முதல்ல  பையை எல்லாம் பிடிங்க" என்றபடி பைகளை அவன் கையில் திணித்தாள்." உள்ள வா ஆராதனா எப்படி இருக்க?" என்றபடி பைகளை வாங்கி அறைக்குள் சென்று வைத்தான்.ஆராதனா " நல்லா இருக்கேன் ரிஷி "என்றபடி "ஏன்டி எல்லா வேலையும் அவர் தலையில் கட்டுற" என்றாள். உடனே அவனை சற்று திமிராக பார்த்தபடி "அவர் தானே ஆசை பட்டு என்னைய கட்டினார், இதெல்லாம் செய்யலாம் தப்பில்லை "என்று அவனை ஆழ்ந்து பார்த்தபடி கூறினாள் மற்ற ஆண்களாய் இருந்தால் ,"என்னடி திமிரா" என எகிறுவார்கள்.ஆனால் இவன் தான் தன் காதலையும் மொத்த அன்பையும் அவளுக்கு ஆடிமை சாசனமாக எழுதிக் கொடுத்திருக்கிறானே பின் எங்கிருந்து ஈகோவும்  ,தான் ஆண்  எனக்கு கீழ்தான் நீ என்ற அகம்பாவமும் வரும்.அதனால்தான் ஒரு காலத்தில் அவள் விரட்டி விரட்டி விட்டாலும் அவளது காதலைப்பெற காத்திருந்து அவளை கரம் பிடித்தான் .அவளும் லேசுபட்டவள் அல்லவே அவனுடைய காதலை ஒரு நாளும் தவறாக பயன்படுத்த மாட்டாள். அவளுடைய கர்வம் ,திமிர் இருக்கும் ஒரே இடம் அவனது காதலிலும் அன்பிலும் மட்டுமே.அவர்களுக்கு திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அவளது திமிரும் அவனது
அன்பும் நிறைந்த காதலுக்கு சாட்சி தான் குழந்தை மிதுனா.ஓரு வயது ஆகப்போகிறது, அழகாக தத்தி தத்தி நடை பயிலும் தேவதை.
 
 
"ஆராதனா நீயும் சூர்யாவும் அந்த ரூம்ல பிரஷ் ஆகிட்டு வாங்க நான் வாஷிங் மெஷின் போட்டுட்டு வந்துடுறேன் " எனக்கூறி தங்களுடைய அறைக்குள் சென்றாள் ‌.இருவருடைய கண்களிலும் அழகிய காதல் இழையோடியதைப் பார்த்து அவளுக்கு நிறைவாக இருந்தது.சிறு சிரிப்புடன் தன் அறைக்குச் சென்றாள். சூர்யா  "அம்மூ மிது பாப்பாக்கூட விளையாடனும்" என்றான்."அவ தூங்குறா பா கொஞ்ச நேரம் கழிச்சு விளையாடலாம்"என்றாள்.
 
 
தன் அறைக்குள் நுழைந்தவுடன் பின்னிருந்து கதவை சாத்தினான் ரிஷி அவளை பின்னால் இருந்து அணைத்தபடியே அவள் தோளில் தன் தாடையை வைத்து அழுத்தி "உன் பிரண்ட் வந்தாச்சு இனி என்னையெல்லாம் கண்டுக்கவே மாட்ட" என்றபடி தன் அடர்ந்த மீசையினால் அவள் கன்னத்தைக்கூச செய்தான். உடனே அவள் அவன் மீசையை பிடித்திழுத்து
"ஹலோ டாக்டர் சார் கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க ,என்ன புரியுதா "என்று அவன் சில்மிஷங்களை உள்ளுக்குள் ரசித்தவாறே அதட்டினாள். அவன் அடர்ந்த  மீசையில் அளவில்லா காதல் அவளுக்கு. "அப்போ கபி கபில்லாம் கிடையாதா இனி " என ஏக்கத்துடன் அவள் கன்னம் ,கழுத்து வளைவு என முத்தமிட்டுக் கொண்டே கேட்டான்.  "ஷ்ஷ்  ‌...நீங்க நகருங்க ப்ளீஸ், இப்படியே வேற எதுக்கு அடி போடுறீங்க ன்னு தெரியும் , கிளம்புங்க டாக்டர் சார் டியூட்டிக்கு நேரமாச்சு புரியுதா "என்றபடி துவைக்க வேண்டிய துணிகளை கையில் எடுத்துக் கொண்டு பால்கனிக்கு செல்ல முயலும் போது அவளின்  இடையைப் பிடித்து சட்டென சுவற்றில் சாய்த்து "நல்லவே புரியுது மேடம் "என்றபடி அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு விலகியிருந்தான்.இப்போது பெண்ணும் தடுமாறி போனாள் ‌.இதுதான் அவனுடைய தினசரி வாடிக்கைஇது அவனுக்கு அவளை தவிக்க விட்டு இவன் சட்டென்று முத்தமிட்டு விலகிவிடுவான்.இன்னொரு மிட்டாய் கிடைக்காதா என ஏக்கத்துடன் பார்க்கும் குழந்தையாய் அவள்,அவனை பார்த்து தவித்துப் போவாள்.பின் அவளே சென்று அவளுக்கு தேவையானதை அவனிடமிருந்து எடுத்துக் கொள்வாள்.அவனும் அதைத்தானே எதிர்பார்ப்பான்.அவள் மீது அளவு கடந்த காதலும் மோகமும் உண்டுதான் ஆனால் சட்டென்று தன்னை நிதானித்துக்கொள்வான்.அவள்தான் ஆச்சர்யமாக பார்ப்பாள். சில சமயம் அன்பு மிகுதியால் "அடேய் ரொம்ப நல்லவன் டா நீ" என்று கூறி அவன் இரு கன்னம் பற்றி கிள்ளி முத்தமிடுவாள்.
 
 
கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ரிஷி  மற்றொரு அறையில் குளித்து, உணவு உண்டு கிளம்பி விட்டான் மருத்துவமனைக்கு கிளம்பி விட்டான்.அவனும் வந்தனாவும் ஒரே இடத்தில் தான் வேலை பார்க்கிறார்கள். " வேதா ஹாஸ்பிட்டல்"
 
 
அது அவனின் தாத்தா வேதாச்சலத்தின் மருத்துவமனைதான்.
 
"வேதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் அண்ட் சயின்ஸ்",
 
"வேதா ஹாஸ்பிட்டல்ஸ்" 
 
"வேதா ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட்"
 
என மருத்துவ துறையில் கொடி கட்டிப் பறந்தவர்.ரிஷியின் தந்தை வெங்கடேஷ் தாய் ஜானகி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்வகள். அவனது தந்தையும் அவர் தந்தை யின் மருத்துவமனையின் கிளைகளை விரிவு படுத்தி அனைத்து வசதிகளளையும் மேம்படுத்தி  உலகத் தரம் வாய்ந்ததாக உருவாக்கியுள்ளார்.தங்கை வித்யா.ஏரோநாட்டிகல் படித்து பிரபல ஏ .ஆர் ஏரோநாட்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருக்கிறாள், திருமணம் இப்போது வேண்டாம் என உறுதியாக இருக்கிறாள்.
வந்தனாவின் பெற்றோரும் ரிஷியின் பெற்றோரும் மாறி மாறி இங்கு வந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள்.இப்பொழுது இரு வீட்டாரும் வர முடியாத சூழ்நிலை.எனவே கீதாம்மா பார்த்துக்கொள்கிறார்.வீட்டு வேலை மற்றும் குழந்தையையும் நன்றாகவே பார்த்துக்கொள்வார்.
 
ஆராதனா "இன்னிக்கு உனக்கு டியூட்டி இல்லையா"எனக்கேட்டவாறு சாப்பிட அமர்ந்தாள் ."இல்லை இன்னிக்கு போகல"என்றாள்.சிறிது நேரம் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
 
ஆராதனா "ரிஷி கிளம்பிட்டாரா?"என்றாள்.
 
"ம்ம் கிளம்பிட்டார் டி,என்ன ஏதாவது வேணுமா?"என்றாள்.
 
ஆராதனா "ம்ம்" என்று கூறி பிறகு சிறு தயக்கத்துடன்
 
"தேவ் இங்கதான் இருக்காரா?" எனக்கேட்டாள்.
 
சாப்பிட்டுக்கொண்டிருந்தவள் சட்டென்று சாப்பிடுவதை நிறுத்தி அவளை முறைத்தாள்.
 
"ஏன் அப்படி பார்க்குற" என்றாள்.
 
"நத்திங்" எனக்கூறி அவளை‌ பார்வையால் அளவிட்டாள்.
 
ஆராதனா என்ன நினைக்கிறாள் எனப் புரியவில்லை அவளுக்கு ,எதுவாயினும் அவளே சொல்லட்டும் என இருந்தாள்.
 
 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
This post was modified 2 hours ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே
This post was modified 54 minutes ago by VSV 45 – கனலை அணைக்க வா கவியே

   
ReplyQuote

You cannot copy content of this page