All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 36

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 36

 

எப்பொழுதும் கந்தல் துணியாவது, கம்பியில் பறப்பது போன்ற புகைப்படம் வரும். இம்முறை வெறும் கம்பி மட்டுமே இருந்தது. 

 

அந்தக் கம்பியும் தரையில் விழுந்து முறிந்து கிடந்தது. 

 

"புயல், மழை, பூகம்பம், சுனாமி இப்படி உலகத்துல இருக்குற அத்தன பேரழிவும் ஒரே நேரத்துல. ஒரே இடத்த தாக்குனா எப்படி இருக்குமோ!, அந்த நிலைமைல தா நா இருக்குறேன்." என்ற அர்த்தத்தில் அவளின் இன்ஸ்டா பக்கத்தில் போட்டிருந்த பதிவைப் பார்த்து முதல் ஆளாக அழைத்தான் இளா. 

 

"அத்தா...ன்...." எனச் சிணுங்கியபடி பில்லிங் கவுண்டரை விட்டு நகர்ந்து வந்தாள்.

 

அது மாலை நேரம் என்பதால், சஜித்தின் சாக்லேட் கடைக்குள் தஞ்சமடைந்துவிட்டாள்.  

 

மற்றவரின் கவனத்தை கவராது இருக்க, மேனேஜரின் அறைக்குள் சென்று நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அதை ஆட்டியபடியே பேசத் தொடங்கினாள். 

 

"என்ன பண்ண? ரிபேக்கா எதுக்காக உன்ன திட்டினா? மீட்டிங்ல சொதப்பிட்டியா?" என்றான் சிரித்தபடி.

 

"இல்ல. ஆனா, ஆமா."

 

"என்ன இல்ல, என்ன ஆமா?"

 

"மீட்டிங் சக்சஸ். ஸ்கூல் டேஸ்ல பரிச்ச நேரத்துல கைல பிட் எழுதி வப்போமே அது மாறி எழுதி வச்சி, எந்த இடத்துலயும் உலறாம சொல்ல வந்தத தெளிவா சொல்லிட்டேன். கான்ட்ராக்ட் பேப்பர் கூடக் கையெழுத்திட்டாச்சி." 

 

"அப்ப எது இல்ல.?"

 

"இன்னைக்கி நடந்த மீட்டிங்ல எனக்கு எப்பெல்லாம் பயம் வந்ததோ, அப்பெல்லாம் என்ன சப்போட் பண்ற மாறி என்ன ஒரு ஹன்சம், மிஸ்டர் கூல் இருந்தாரு. அவரு என்ன பாராட்ட வேற செஞ்சாரு அத்தான். ஆளு செம்...மையா இருந்தாரு. ஹீரோ கணக்கா ஸ்டெயில்லா. நட, பேச்சு எல்லாமே அவ்ளோ சூப்பரா இருந்தது." என ப்ரஜித்தை ரசித்துப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தாள். 

 

'அடிப்பாவி ரிபேக்கா கிட்ட அவ்ளோ வாங்கியும், அவளோட புருஷன அப்படி வர்ணிச்சிட்டு இருக்கியே!.' உங்க மைண்ட் வாய்ஸ்.

 

"அக்சலி அந்த ஹீரோவ துகிரா தான் கூட்டீட்டு வந்தா. என்னோட அஞ்சாவது க்ளைண்டா." 

 

"சூப்பர்.! அப்பக்கூடிய சீக்கிரம் உனக்கு ஜாப் கண்பார்ம் ஆகப்போதுன்னு சொல்லு." 

 

"அது தான் இல்ல. அந்த வாய்ப்ப ரிபேக்கா மேம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதுவும் கன்னத்துல கைநாட்டு வச்சி." 

 

"வாட்!... கைநாட்டா?." 

 

"ஆமா, கை நாட்டு தான், அந்தக் காலத்துல எழுதப் படிக்கத் தெரியாதவங்க இன்க்ல கட்டைவிரல தொட்டு, காகிதத்துல வப்பாங்களே!. அதுக்கு பேரு தான கை நாட்டு."

 

"உங்கிட்ட நா விளக்கம் கேட்டேனா?."

 

"ஆனா, அந்த மாறிக் கட்டைவிரல் ரேகைய என்னோட கன்னத்துல இன்க் தொடாம வச்சிட்டாங்களே!."

 

"நீ கூட்டீட்டு வந்த ஆள் சரியில்லாம இருந்திருக்கும்."

 

"ம்... அப்படித்தான் நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேருக்குள்ள ஏதோ வாய்க்காத் தகராறு இருக்கும் போல. அதுனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க. எனிமிஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆக முடியாதா அத்தான். சன்டே அந்த ஹீரோ மீட் பண்றதா சொன்னாரு. தமிழ்ல பேசுன ஹன்சம் ஹைய நா பாக்க முடியாதா!." எனச் சோகமாகச் சொல்ல,

 

"யாரு அது.?" என்றான் யோசனையுடன்.

 

"துகி ஃப்ரெண்டுன்னு தான் நினைச்சேன். ஆனா அது அவளோட ரிலேட்டிவ்வாம். அந்த ரிலேட்டிவ்வும் infinity sportswear Ltd ஓனராம்.!" என வாயைப் பிளந்தாள்.

 

"என்ன! ப்ரஜித் சார் அங்க வந்தாரா!. உன்னப் பாக்கவா?"

 

பாவம் அவனுக்கு அதிர்ச்சி போலும். 

 

ஏனெனில் இன்று காலை ஒரு முக்கியமான மீட்டிங் இருந்தது.

 

ப்ரஜித்தின் வேலைகளால் இரும்புத் தொழிற்சாலை நிலை குலைந்திருக்கிறதே! அதனால், குழுமத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கூடி டெல்லியில் ஆலோசனை நடத்தினர். 

 

ப்ரஜித் அங்குச் சென்றிருக்கிறான் என்று நினைத்த இளாவிற்கு, கோகோவைப் பார்க்க வந்தது அதிர்ச்சி தானே.

 

"ஆமா, அத்தான்." என்றவள் நடந்ததை கூறி முடித்தாள்‌. 

----------

ரிபேக்காவின் அறையில், கோகோ ப்ரஜித்திற்கு புகழாரம் சூட்டிக் கொண்டிருக்க, "அவன உனக்கு எப்படி, எப்பருந்து தெரியும்?" என்று ரிபேக்கா இடைமறித்துக் கேள்வி கேட்டாள். 

 

ஆனால், அது அவளின் காதைச் சென்றடையவில்லை. 

 

ஒரு பெரிய நிறுவனத்தை, தன் ராஜமாதாவிற்கு வாடிக்கையாளராகத் தானே அழைத்து வந்த பெருமிதத்தில், காதுகள் அடைத்துக் கொண்டன. வாய் மட்டும் ஓயாது ப்ரஜித்தை புகழ, ஆத்திரத்துடன் எழுந்தவள்,

 

"உனக்கு அவனத் தெரியுமா?" என்றபடி அவளை நெருங்கி வர, 

 

"ம்... தெரியுமே." 

 

"எப்பருந்து?" 

 

ரிபேக்காவின் சுருதி ஏறிக் கொண்டே சென்றது.

 

"இன்னைக்கி காலைல துகி அறிமுகம் செஞ்சி வச்சா." என்க, 

 

"அதுக்கு முன்னாடி வேற எங்கயும் நீ அவனப் பாத்தது இல்ல?" என்றபோது விழிகளை உயர்த்தி யோசித்தவள்,

 

"இல்ல மேம்." என்று தந்த பதில் ரிபேக்காவிற்கு திருப்தியாகவும், நிம்மதியாகவும் இருந்திருக்க வேண்டும். 

 

இத்தனை ஆண்டுகளாக நேருக்கு நேர் நின்று மனிதர்களைச் சமாளித்து, எடை போடும் அவளின் புத்தி, கோகோ பொய் சொல்லவில்லை என்றது. 

 

"குட்... இனியும் உனக்கு அவனத் தெரியாது. அப்படித்தான் நீ நடத்துக்கனும். மீறிப் பாக்குறேன் பேசுறேன்னு அவனோட பக்கத்துல நீ இருக்கக் கூடாது. ஓகே." என்று விட்டுத் திரும்பினாள். 

 

அப்படியே விட்டிருந்தால் எதுவும் விபரீதமாக நடக்காது, கை நாட்டும் வாங்காது தப்பித்திருப்பாள். ஆனால், அவளின் வாய் அவளுக்குச் சூனியம் வைத்து விட்டது. 

 

"ஆனா, மேம் நா அவர் கூட வர்ற நாளைக்கு மீட்டிங் பிக்ஸ் பண்ணிருக்கேன். அவரோட show roomம சுத்திப் பாக்க என்ன இன்வைட் பண்ணிருக்காரு." என்றபோது கோகோ ரிபேக்காவின் காளி அவதாரத்தைக் காண நேர்ந்தது. 

 

'எது நீ அவனப் போய்ப் பாக்கப் போறியா!' என்ற கோபத்தில் அவளின் கன்னத்தை இறுகப் பற்றிய ரிபேக்கா, "நீ யாரையும் பாக்க போகக் கூடாது. முக்கியமா அவன் இருக்குற பக்கம் நீ திரும்பக் கூடக் கூடாது. யூ காட் இட் இடியட்." எனக் கத்த, ஏன் என்று புரியாதபோதும் சரியெனத் தலையசைத்தாள். 

 

இல்லை, ரிபேக்காவே அசைய வைத்தாள்.

 

"5 அடி... குறைஞ்சது அஞ்சி அடி அவன விட்டுத் தூரமாத்தா நீ நிக்கனும். அவனே உம்பக்கத்துல வந்தாலும் நீ..." 

 

'விலகிச் செல்ல வேண்டும்.' என்று கன்னத்தின் அழுத்ததைக் கூட்டி, பார்வையால் கூறிவிட்டுத் திரும்ப, கோகோ, மந்திரித்து விட்ட சிறுமிபோல் நின்றாள்.

 

அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்த இளவேந்தனின் சிரிப்புச் சத்தம், பல கிலோமீட்டரைத் தாண்டிக் கேட்டது. 

 

"உங்களுக்குச் சிரிப்பா இருக்கா!. எனக்குக் கன்னத்துல வலி. கை ரேக பதியுற அளவுக்கு அண்ணாக்கிட்ட அடி வாங்கிருக்கேன் தான். ஆனா ஒரு விரல் மட்டும் பதியுற அளவுக்கு மோசமான அனுபவம் இது தான்." 

 

'எல்லாத்தையும் சொல்றா. ஆனா, சத்யாவ பத்தி மட்டும் இளாக்கிட்ட வாயத் திறக்க மாட்டேக்கிறா.'  

 

"ஆவி புகுந்தா மாறின்னு கேள்வி பட்டிருக்கேன். ஏ நம்ம ஊர்ல பாத்தும் இருக்கேன். ஆனா இன்னைக்கி ரிபேக்கா மேம பிடிச்ச ஆவி ரொம்ப பயங்கரமான காட்டேரி. ஆமா, உங்களுக்கு ப்ரஜித் சார தெரியுமா?" என்றபோது, அறையைக் கடந்து சென்ற சஜித்தின் காதில் ப்ரஜித்தின் பெயர் கேட்டது. சில நொடிகள் நின்று அவர்களின் சம்பாசனைகளைக் கேட்கத் தொடங்கினான். 

 

"ம்..."

 

"எப்படி?" 

 

"அவர்ட்ட தா நான் பீஏவா வேல பாக்குறேன்." 

 

"ஓ!!..." என ஆச்சர்யத்தைக் காட்டியவள், 

 

"அப்ப உங்க ஆஃபிஸ் வந்தா, அந்த ஹன்சம், கூல், ஸ்டைலிஸ் ஹைய நா சைட் அடிக்கலாமா." என ஆசையுடன் கேட்க,

 

"முடியாதே..." 

 

"ஏ..." 

 

"அவருக்குக் கல்யாணம் ஆகிடுச்சே." 

 

"ஆயிடுச்சா!!”

 

“ம்…"

 

“என்னால நம்பவே முடியல, என்னோட ஹீரோக்கு கல்யாணமாகிடுச்சின்னு. ஒரு ஹன்சம் ஹைய நா இழந்திட்டேன். ஏ இத எங்கிட்ட சொல்லல?" எனச் சண்டைக்குச் சென்றாள்.

 

"அது ஒரு விசயமே கிடையாது. அதவிட வேற‌ முக்கியமான மேட்டர் ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. அந்த ஹீரோ தான் உன்னோட ராஜமாதா ரிபேக்காவோட ஹஸ்பெண்ட்." என்றபோது கோகோவிற்கு பெருத்த அதிர்ச்சி. 

 

"நிஜம்மா அவங்க ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட் அண்டு வைஃப்பா.?"

 

"ஏ உனக்கு இப்படியொரு சந்தேகம்.?"

 

"அதுக்கான சிம்டம்ஸ் தெரியவே இல்லயே. எனிமிஸ் மாறில நடந்துக்கிட்டாங்க."

 

"அதுனால தா அவங்களுக்கு டைவர்ஸ்ஸும் ஆகப்போது." என்றபோது நிஜமாகவே கோகோ வருந்தினாள். 

 

தன் ராஜமாதா, பிஸ்னஸ் லைஃப்பில் நட்சத்திரமென ஜொலித்துக் கொண்டிருக்க, பர்ஸ்னல் லைஃப்பில் தோற்றுக் கொண்டிருக்கிறாரா என்று ரிபேக்காவிற்காக வருந்தினாள்.

 

"ரிப்பேக்கா சொல்ற மாறி எதுக்கும் நீ ப்ரஜித்த அஞ்சடி விட்டுத் தள்ளி இருக்குறது நல்லது. இல்லன்னா உன்னோட மண்ட உடைஞ்சிடும். ஜாக்கிரதை." என்று நடக்க இருப்பதை முன் கூட்டியே கணித்து ஜோதிடம் சொல்லி விட்டு வைக்க, கோகோ ப்ரஜித்தை பற்றி இணையத்தில் தேடினாள்‌.

 

இணையம் ப்ரஜித்தின் வரலாற்றைக் கூற, அந்தப் பெயர்களுக்கு இடையேயிருந்த சஜித்ரேவன் பெயரைப் புருவ முடிச்சுடன் பார்த்தாள். 

 

முதல் முறை அந்தப் பெயரை உச்சரிக்கிறாள். 

 

"சஜித்ரேவன்..." என்று சத்தமாகச் சொல்லும்போது அதைக் கேட்டபடி நின்றிருந்தவனுக்கு சிலிர்த்தது. 

 

இருவரின் திறமைகளையும் இணையம் எடுத்துக்காட்ட, சிறு வியப்புடன் அதை வாசித்துத் தெரிந்து கொண்டாள். 

 

"ப்ரஜித் சார் ஃபோட்டோ நெட்ல இருக்கு. ஆனா, சஜித் சார் ஃபோட்டோ இல்லயே." என்றபடி, சாய்வு நாற்காலியில் முன்னும் பின்னும் ஊஞ்சலாடிக் கொண்டு, பல தளங்களுக்குச் சென்று நோண்டிப் பாத்தாள். 

 

நிஜ உருவமே கண்முன் நிற்கும்போது, ஏன் நிழலின் பின் அழைக்கிறாய் என்பதுபோல் அவளின் முன் வந்து நின்றான் சஜித். 

 

"என்ன பண்ணிட்டு இருக்க.?" என்று அவனின் குரல் கேட்டதும், ஊஞ்சலாடிய நாற்காலியிலிருந்து திடுக்கிட்டுக் கீழே விழுந்து விட்டாள். 

 

"ஐய்யோ! அம்மா... ஏ சத்யா பயங்காட்டுற?. பாரு இதயம் படபடன்னு அடிச்சிக்கிது." எனப் பரிதாபமாகக் கூறியபடி எழுந்து நின்றவளை முறைத்தான் அவன். 

 

ஏனெனில் பதறி விழும் முன் அவளின் ஃபோன் பாதுகாப்பாய் மேஜை மீது இருந்தது. அது JET குழுமத்தைப் பற்றி அவள் தேடிக் கொண்டிருக்கிறாள் என்றது.  

 

"இது பீக் ஹவர்ஸ். கவுண்டர்ல இல்லாம காலாட்டிட்டு இருக்க."

 

"அது... ஒரு கால் பேசிட்டு வந்தேன். சாரி..." என்றாள் சின்னக் குரலில். 

 

அவன் அதை ஏற்கவும் செய்யாது நிராகரிக்கவும் செய்யாது அவளை உற்றுப் பார்த்தபடி நிற்க, அவனைக் கடந்து உடனேயே வெளியேறினாள்.

 

போனவள் அதை வேகத்தில் திரும்பிவந்து, 

 

"சட்ட பட்டன முழுசா போடாத சத்யா. உனக்கு அது நல்லா இல்ல. ஏதோ கலெக்டர் உத்யோகம் பாக்குறமாறி." என்றவள் அவன் அணிந்திருந்த டீசர்ட்டில் இரண்டு பட்டன்களை கழற்றி விட்டுவிட்டு, அதில் தெரிந்த முடிக் கற்றையையும், டட்டோவையும் பார்த்துத் திருப்தியுடன் சென்றாள். 

 

அவளின் செயலில் சில கணங்கள் மயங்கி இருந்தவனை, மின்னஞ்சல் வந்திருப்பதாகச் சொல்லிய சத்தம் கலைத்தது. 

 

அவன் ‌காலையில் கேட்டிருந்தானே, அவரின் வங்கி பரிவர்த்தனைகள் வேண்டுமென்று. 

 

அது வந்திருக்க, அதைப் படித்துப் பார்த்தவனின் உதடுகள்,  

 

"It's a time to game." என்றன. 

 

மயக்கம் தொடரும்...

 

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 37

https://kavichandranovels.com/community/postid/1280/

 


   
ReplyQuote

You cannot copy content of this page